அன்புடையீர்,
அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்கிழமையுடன் சேர்ந்த பிரதோஷம் என்றதொரு சிறப்பான நாளும் கூட. இதனை ’சனிப்பிரதோஷம்’ என்று சொல்லி பல்வேறு கோயில்களில், மிகச்சிறப்பாகக் கொண்டாடியும் வருகிறார்கள். இவ்வாறு பிரதோஷம் என்பது சனிக்கிழமைகளில் அவ்வப்போது வருவது சகஜம் மட்டும்தானே ..... இதில் என்ன ஆச்சர்யம் என உங்களில் சிலர் கேட்கக் கூடும்.
என்னைப்பொறுத்தவரை இதே 30.12.2017 சனிப்பிரதோஷத்தன்று புதையல் போல, கிடைப்பதற்கு அரிய கீழ்க்கண்ட கலர்ஃபுல் காமதேனுவானது, எனது நெருங்கிய நட்பு வட்டத்தில் ஒருவரால் அனுப்பப்பட்டு, என் கைகளுக்குக் கிடைத்த நன் நாளாகும். என் பார்வையில் ‘காமதேனு’வாகவே தெரியும் ஒருத்தரால் இந்த காமதேனு எனக்குக் கிடைத்தது மேலும் சிறப்பானதாகும்.
கற்பக விருக்ஷம், காமதேனு, அக்ஷயபாத்திரம் போன்றவை, அள்ள அள்ளக் குறையாமல், நாம் மனதில் நினைக்கும் எதையும், அடுத்த நொடியில் தந்தருளக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தவை எனச் சொல்லுவார்கள்.
எனக்குக் காமதேனுவையும் பிடிக்கும். நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் அவர்களையும் மிகவும் பிடிக்கும். இதுபோல எனக்கு, என் மனதுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதைக் குறிப்பறிந்து, இதுபோன்றதொரு கிடைப்பதற்கு அரிய, மிகப்பெரிய பொக்கிஷமான ‘காமதேனு-பெரியவா’ படத்தினை, எங்கோ கஷ்டப்பட்டுத் தேடிப்பிடித்து, வாங்கி எனக்கு அனுப்பி வைத்துள்ள இவர்களையும் நான் ஒரு ‘காமதேனு’வாக நினைப்பதில் வியப்பில்லைதானே!
இந்த வண்ணப் படத்தின்
நீளம் = 45 Cms. [ஒன்றரை அடி]
அகலம் = 30 Cms. [ஒரு அடி]
இவ்வளவு பெரிய, கிடைப்பதற்கு அரிதான ஓர் அழகிய படத்தினை, மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கி, அதனை கசங்காமல், மடங்காமல், சர்வ ஜாக்கிரதையாக, இதை விட மிகப்பெரிய, 47 Cm. X 36 Cm. CLOTH LINED COVER இல் வைத்து, அதன் மேல் மிகமிக அழகான, மணிமணியான தன் கையெழுத்துக்களால் என்னுடைய To Address + அவர்களுடைய From Address, அலைபேசி எண்கள் ஆகியவற்றை மிகத்தெளிவாக எழுதி, அந்தக் கவரில் இங்கும் அங்குமாக பல்வேறு PACKING GUM-TAPES ஒட்டி Desk To Desk Courier [DTDC] Service Registration No. H05760848 இன் மூலம், ஏராளமாக பணம் செலவழித்து, அவர்கள் தற்சமயம் வாழ்ந்துவரும் ஹைதராபாத்திலிருந்து ..... திருச்சியில் உள்ள எனக்கு அனுப்பி வைத்து என்னை பிரமிக்கச் செய்து மகிழ்வித்துள்ள ’காமதேனு’ அவர்கள் யார் தெரியுமா?
திருமதி. ஜெயஸ்ரீ அவர்கள்
புத்தாண்டுப் பரிசு போல மிக அழகான ’காமதேனு-பெரியவா’ படத்தினை எனக்கு அனுப்பி வைத்த ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஜெயஸ்ரீ அவர்கள் பற்றி நான் என்னுடைய
கீழ்க்கண்ட பதிவுகளில்
ஏற்கனவே எழுதி சிறப்பித்துள்ளது
தங்களில் பலருக்கும் நினைவிருக்கலாம்.
http://gopu1949.blogspot.in/ 2017/05/blog-post_7.html
’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் மதிப்புரை
’பாவை விளக்கின் ஒளிச்சிதறல்கள்’ - மின்னூல் மதிப்புரை
http://gopu1949.blogspot.in/ 2017/05/blog-post_16.html
‘டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் மதிப்புரை
‘டெளரி தராத கெளரி கல்யாணம்’ - மின்னூல் மதிப்புரை
அடியேனும் இந்த ஜெயஸ்ரீ அவர்களும் எங்களுக்குள் நேரில் சந்தித்துப் பேசும் சந்தர்ப்பம் ஏதும் இதுவரை ஏற்படாமல் இருப்பினும், ஒருவருக்கொருவர் மிக நல்ல நட்புடன் கூடிய நலம் விரும்பிகளாகவும், ஆத்மார்த்தமான பிரியமுள்ளவர்களாகவும், கடந்த சில ஆண்டுகளாகவே அன்றாடத் தொடர்பு எல்லைக்குள் பழகி வருபவர்களாகவும், இருப்பதற்குக் காரணமே அந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் அனுக்கிரஹம் மட்டுமே என நான் இங்கு மிகவும் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் சொல்லி மகிழ்கிறேன்.
ஜெயஸ்ரீ அவர்கள் ............
01) ஓர் மிகச் சிறந்த சிறுகதை, நெடுங்கதை, தொடர்கதை எழுத்தாளர்
02) பத்திரிகை எழுத்தாளர்
03) கருத்தாழம் கொண்ட கவிதைகள் படைக்கும் மிகச்சிறந்த கவிஞர்
04) சிறப்பான கட்டுரைகள் + ஹைகூ எழுதக்கூடியவர்
05) மிகச் சிறந்த ஓவியர்
06) மிக இனிய குரல் வளம் கொண்டவர்
07) மிகச் சிறந்த பாடகி
08) வலைப்பதிவர்
09) நன்கு படித்தவர்
10) அன்பானவர்
11) பண்பானவர்
12) நாகரீகமானவர்
13) மனித நேயம் கொண்டவர்
14) பக்தி சிரத்தையுடன் ஆன்ம விசாரங்களில் அடிக்கடி ஈடுபடுபவர்
15) இனிய இல்லத்தரசி
16) மிகவும் அறிவாளி
17) மென்மையானவர்
18) மேன்மையானவர்
19) அமைதியானவர்
20) அடக்கமானவர்
21) விநயத்தில் சிறந்தவர்.
சாக்ஷாத் அந்தக் கலைவாணி சரஸ்வதிதேவி போல, அனைத்துத் தனித்தன்மைகளும், தனித்திறமைகளும் இவரிடம் ஒருங்கே அமைந்திருப்பினும், விநயத்தில் சிறந்து விளங்கும் இவர்கள், என்னை அடிக்கடி மிகவும் வியப்பளித்து வருகிறார்கள்.
ஜெயஸ்ரீ அவர்கள் தன் கைப்பட வரைந்துள்ளதோர் ஓவியம் என்னுடைய http://gopu1949.blogspot.in/ 2017/05/blog-post_7.html பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று குருவாரம் (வியாழக்கிழமை)
இந்த ஸ்பெஷல் பதிவினை வெளியிட நேர்ந்துள்ளது
எனக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துகள். உங்களுக்கும் திருமதி ஜெயஶ்ரீ அவர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் நட்புத் தொடர்ந்து சிறப்பாக வெற்றி நடைபோடவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குGeetha Sambasivam January 4, 2018 at 12:02 PM
நீக்குவாங்கோ, வணக்கம். இந்தப்பதிவுக்கான தங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - VGK
இந்தக் காமதேனு ஓவியம் எங்க வீட்டிலேயும் இருந்தது. வீடு மாற்றும்போது விட்டு வந்த சிலவற்றில் இதுவும் ஒன்று. :)
பதிலளிநீக்குGeetha Sambasivam January 4, 2018 at 12:03 PM
நீக்கு//இந்தக் காமதேனு ஓவியம் எங்க வீட்டிலேயும் இருந்தது. வீடு மாற்றும்போது விட்டு வந்த சிலவற்றில் இதுவும் ஒன்று. :)//
பொதுவாகக் காமதேனு ஓவியப் படங்களும், காமதேனு கொலு பொம்மைகளும் பலரது வீடுகளிலும் இருக்கலாம். இது சம்திங் ஸ்பெஷல். சமீபத்தில் ஹைதராபாத் ஓவியர் ஒருவரின் கற்பனையில், வித்யாசமாக வரையப்பட்டு, ஹைதராபாத்தில் டிஸம்பர் 2017 இல் நடைபெற்ற மஹா ஸ்வாமிகளின் ஆராதனை நிகழ்ச்சியில் முதன்முதலாக வெளியிடப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. - VGK
ஆகா.. இப்படியெல்லாம் அன்பின் உறவுகள் பூர்வ ஜன்ம புண்னியத்தின் அடையாளம்..
பதிலளிநீக்குதாங்கள் பெற்ற காமதேனுவை நாங்களும் காணச் செய்தீர்கள்..
மகிழ்ச்சி அண்ணா..
துரை செல்வராஜூ January 4, 2018 at 12:09 PM
நீக்குவாங்கோ பிரதர், வணக்கம்.
//ஆகா.. இப்படியெல்லாம் அன்பின் உறவுகள் பூர்வ ஜன்ம புண்ணியத்தின் அடையாளம்..//
ஆஹா, மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அதே.... அதே ! பூர்வ ஜன்ம புண்ணியத்தின் அடையாளம் மட்டுமே.
//தாங்கள் பெற்ற காமதேனுவை நாங்களும் காணச் செய்தீர்கள்.. மகிழ்ச்சி அண்ணா..//
அனைவருக்கும் தரிஸன பாக்யம் கிடைக்கட்டுமே என்பதால் மட்டுமே ...... மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. - அன்புடன் VGK
கீதாக்காவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... மீதான் 1ஸ்ட்டூஊஊஊ:)...
பதிலளிநீக்குபுது வருசத்தில பதிவுகள் போடத் தொடங்கிட்டார் கோபு அண்ணன்... வாழ்த்துக்கள்...
ஹாஹாஹா, அதிரடி! எங்கள் ப்ளாகில் செகண்ட் கணக்கில் முன்னாடி வருவீங்க! ஆனால் இங்கே முடியாதே! ஜாலிலோ ஜிம்கானா! டோலிலோ கும்கானா! :))))))
நீக்குவாங்கோ அதிரா. தங்களின் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள். - அன்புடன் கோபு அண்ணன்.
நீக்குஅழகான ஜெயஸ்ரீ அக்காவைப்பாக்காமலே( நேரில:)) காமதேனு எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டங்கள்:)...
பதிலளிநீக்குஅழகிய படம்... அந்தக் குட்டிக் கண்ணனுக்குப் பக்கத்தில கொழுவி விடுங்கோ.
athira மியாவ் January 4, 2018 at 12:48 PM
நீக்கு//அழகான ஜெயஸ்ரீ அக்காவைப்பாக்காமலே [நேரில:)] காமதேனு எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டங்கள் :)...//
’கண்டங்கள்’ = Continents
’கண்டனங்கள் = Protests
சரி .... சரி .... ஏதோ ஒன்று !
உங்களையும் நான் நேரில் பார்க்காமலேயே ஸ்வீட்-சிக்ஸ்டீன் என்றெல்லாம் ஏதேதோ பிரமாதமாகச் சொல்லி, கதை விடுவது இல்லையா? ..... அதுபோலத்தான் இதுவும் என ஏதும் நினைத்து, தப்புக்கணக்குப் போட்டு விட வேண்டாம் ... அதிரா!
’அழகான ஜெயஸ்ரீ அக்கா’ என நீங்களே சொல்லி விட்டதில், அப்படியே நான் சொக்கிப்போனேன். :) மிக்க நன்றி.
//அழகிய படம்... அந்தக் குட்டிக் கண்ணனுக்குப் பக்கத்தில கொழுவி விடுங்கோ.//
கொழுவி = ??????
அன்புள்ள
......அதிஸய
.........அதிரஸ
............அல்டாப்
...............அழும்பு
..................அழுத்த
.....................அயோக்ய
........................அந்தர்பல்டி
...........................அ தி ர டி
..............................அ தி ரா !
இங்கு தன் பின்னூட்டத்தில் என்ன சொல்லியுள்ளார்கள் என்பதை, தயவுசெய்து எனக்கும் மற்றவர்களுக்கும், தமிழில் விளக்கிக் கூறிடுமாறு, பலமொழிப் புலவரான ’நெல்லைத் தமிழன் - ஸ்வாமீ’ அவர்களை நான் இங்கு ரிக்வெஸ்ட் செய்து கேட்டுக்கொள்கிறேன்.
- VGK
"பலமொழிப் புலவரான" - அட ராமா. எனக்கு தமிழைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகத் தெரியாது. உங்களுக்காவது வடமொழி தெரியும்.
நீக்கு'கொழுவி விடுங்கோ' என்பதன் அர்த்தம், அந்தப் படத்துக்குப் பக்கத்தில் வைங்கோ என்று நினைக்கிறேன். 'கொழுவி' என்பதற்கு, 'சார்ந்து' என்று பொருள். (அதனால்தான் கணவனுக்கு கொழு'நன் என்று பெயர். "கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை")
மற்றபடி, கோபு சார்... 'அதிரா' அவர்களின் தமிழுக்கு அர்த்தம் கேட்டு, இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் என்னை இழக்கவைத்துவிடாதீர்கள். அதிரா அவர்களின் செக்ரெட்டரி ஏஞ்சலினைக் கேட்டால் ஓரளவு புரியலாம்.
ஒரு தடவை அதிரா கிட்ட 'யான் என்று தூய தமிழ் உபயோகப்படுத்துகிறீர்களே' என்று வியந்து கேட்டதற்கு, 'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.
நெல்லைத் தமிழன் January 7, 2018 at 1:18 PM
நீக்கு//"பலமொழிப் புலவரான" - அட ராமா. எனக்கு தமிழைத் தவிர வேறு எதுவும் உருப்படியாகத் தெரியாது. உங்களுக்காவது வடமொழி தெரியும்.//
எனக்கும் பிற மொழிகள் எதுவும் தெரியாது ஸ்வாமீ. தமிழே தடவல்தான். அதிராவுடன் பழகி அந்தத் தமிழிலும் எனக்கு ஒரே குழப்பமாகிப்போய் விட்டது. ஆங்கில அறிவு கொஞ்சமாக மட்டுமே உண்டு. ஹிந்தி + சமஸ்கிருதம் ... தட்டுத்தடுமாறி எழுத்துக்கூட்டி படிக்க மட்டும் முடியும். பேசவோ எழுதவோ தெரியாது, ஸ்வாமீ.
//'கொழுவி விடுங்கோ' என்பதன் அர்த்தம், அந்தப் படத்துக்குப் பக்கத்தில் வைங்கோ என்று நினைக்கிறேன். 'கொழுவி' என்பதற்கு, 'சார்ந்து' என்று பொருள். (அதனால்தான் கணவனுக்கு கொழு'நன் என்று பெயர். "கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை")//
மிகவும் அருமையான விளக்கமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)
//மற்றபடி, கோபு சார்... 'அதிரா' அவர்களின் தமிழுக்கு அர்த்தம் கேட்டு, இருக்கும் கொஞ்ச நஞ்ச முடியையும் என்னை இழக்கவைத்துவிடாதீர்கள்.//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இதனாலேயே, (இந்த அதிராவின் தமிழினாலேயே) எனக்கும் என் முடிகள் கொட்ட ஆரம்பித்து விட்டன, ஸ்வாமீ.
அதற்கு உதாரணமாக இதோ இந்த என் பதிவுக்குப்போங்கோ, ப்ளீஸ்ஸ்ஸ்.
http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html
அங்கு பதிவின் நடுவில் கிரஸரை வைத்துக்கொண்டு, Ctrl + F ஆகிய பட்டன்களை ஒரே நேரத்தில் அமுக்கவும். Top right corner இல் ஒரு Box தோன்றும். அதில் Athira என டைப் அடியுங்கோ. Enter போடுங்கோ. அதில் 20 இடங்களில் ‘Athira’ என்ற பெயர் தோன்றுவதாக ஒரு அறிவிப்பு வரும். அவை அனைத்தும், பின்னூட்டப்பகுதியில் High Light ஆகி உங்களுக்குக் காட்சியளிக்கும். அவற்றை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்து மகிழவும்.
//அதிரா அவர்களின் செக்ரெட்டரி ஏஞ்சலினைக் கேட்டால் ஓரளவு புரியலாம். //
முன்பெல்லாம் (உங்களின் அறிமுகத்துக்கு முன்பெல்லாம்) அப்படித்தான் நான் ஏஞ்சலின் அவர்களை மெயிலில் தொடர்புகொண்டு கேட்டு, விளக்கம் பெறுவது உண்டு.
//ஒரு தடவை அதிரா கிட்ட 'யான் என்று தூய தமிழ் உபயோகப்படுத்துகிறீர்களே' என்று வியந்து கேட்டதற்கு, 'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.//
நல்ல தமாஷ் ! இதேபோல, ஒருமுறை ‘கச்சான்’ என்ற சொல்லினை அதிரா பயன் படுத்தி என்னை பயமுறுத்தியிருந்தாள். நாம் நம் விசேஷ நாட்களில் அணிந்துகொள்ளும் பஞ்சகச்சமாக்கும் என நினைத்து, நான் பயந்தே போனேன். பிறகு ஏஞ்சலின் அவர்கள் மூலம், அதிரா பாஷையில் ’கச்சான்’ என்றால் ’நிலக்கடலை’ என்பதைப் புரிந்துகொண்டேன். :)))))
@ நெல்லை தமிழன் அன்ட் கோபு அண்ணா ..நான் நேத்தே சொல்லியிருப்பேன் :) இன்னும் எனக்கான சேலரி பேங்கில் வராமையே இருந்ததா :) அதான் யோசிச்சேன் வேலையை ரிசைன் பண்ணுவோமான்னு :)
நீக்குநிறையபேருக்கு ட்ரான்ஸ்லேஷன் சேவை தேவைப்படுவதால் மறுபரிசீலனை செஞ்சி ஓடிவந்தேன் :)
கமிங் டு கொழுவி என்பது மியாவின் தடாலடி ஸ்பெல்லிங் மிஸ்டேக் கொளுவி என்பதே =கொளுவி · hook.சரியான சொல் .இப்படி ழ வரவேண்டிய இடத்தில ள போடுவதும் ள வரவேண்டிய இடத்தில ழ போடுவதும் எங்களுக்கெல்லாம் பழகிப்போச்சு .பூனையால் என் தமிழ் சீர்ப்பட்டது என்னவோ உண்மைதான் என்பேன் .
அந்த படத்தை நான் சொன்னமாதிரி frame போட்டு , பிறகு சுவற்றில் ஆணி அடித்து மாட்ட சொல்றாங்க மியாவ்
@நெல்லை தமிழன் ..ஒருரகசியம் சொல்லணும் ..அன்னிக்கு அந்த //யான் // விஷயத்தில் யானும் மெர்சலாகிட்டேன் :) பின்ன எங்கிருந்து வந்தது இந்த தமிழ் ஞானம்னு தலை கிறுகிறுத்துச்சி தெரியுமோ :)) அப்புறம் தானே விளங்காம பூஸ் அது ஜா னு சொன்னதும்தான் தெளிவடைந்தேன் ஹாஹாஹா
நீக்குAngel January 7, 2018 at 9:09 PM
நீக்கு//அந்த படத்தை நான் சொன்னமாதிரி frame போட்டு, பிறகு சுவற்றில் ஆணி அடித்து மாட்ட சொல்றாங்க மியாவ்//
ஆஹா, ’HOOK கொக்கி வளையம்’ விஷயம் இப்போது நன்கு, பசுமரத்தில் ஆணி அடித்தது போலப் புரிந்து விட்டது. மிக்க நன்றி.
@நெல்லைத்தமிழன்///'ஜான்' என்று தானே கண்டுபிடித்த தமிழ்வார்த்தை அது என்று சொல்லி எனக்கு மயக்கம் வர வைத்தார்.///
நீக்குஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...
பார்த்தீங்களோ இதுக்குத்தான் யான்:) செக் வச்சிருக்கிறேன்:) அவ வந்துதான் இப்போ எனக்கே தெளிவாச்சூஊஊ ஹா ஹா ஹா:) அது ளு வரோணுமாக்கும்:)... அதுக்குள் நெல்லைத்தமிழனுக்கு கொழுந்தியா நினைப்பு வேற வந்திட்டுதே கர்ர்ர்ர்ர்ர்:))...
என்ன நடக்கிறது பார்க்கலாம் என ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தேனாக்கும்:)).. கொளுவி எண்டால் மாட்டி விடுதல்:) இது வேற மாட்டி விடுதல்... :) மாட்டி என்பதற்கும் ரெண்டு அர்த்தம் இருக்காக்கும்:) இன்னொன்று அகப்படல்.. மாட்டுப்படல் எனவும் வரும்:)... இப்போ புரியுது மீக்கு டமில்ல டி என்பது:))..
மனம் போல மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஜீவி January 4, 2018 at 1:32 PM
நீக்குவாங்கோ ஸார், நமஸ்காரங்கள் ஸார்.
//மனம் போல மகிழ்ச்சி.//
தங்களின் அன்பு வருகையால் எனக்கு என் மனம் முழுவதும் இப்போது ஒரே மகிழ்ச்சி, ஸார்.
அன்புடன் கோபு
மதிப்பான பரிசு.வாழ்த்துகள் இருவருக்கும்.
பதிலளிநீக்குஆச்சி ஸ்ரீதர் January 4, 2018 at 2:18 PM
நீக்குவாங்கோ ஆச்சி, வணக்கம்.
//மதிப்பான பரிசு. வாழ்த்துகள் இருவருக்கும்.//
தாங்கள் அன்றொரு நாள் எனக்கு அனுப்பி வைத்த பரிசுப் பொருட்கள் என் நினைவுக்கு வந்து, என்னை இப்போதும் மிகவும் மகிழ்விக்கின்றன. :)
இணைப்பு: http://gopu1949.blogspot.in/2015/01/20.html
தலைப்பு:- ’அன்பு நிரம்பி வழியும் காலிக்கோப்பை’
அன்புடன் கோபு
காமதேனு படம் அனுப்பி, அதன் மூலம் உங்கள் தளத்தில் இரண்டாவது இடுகை இந்த வருடத்தில் இடம்பெறச் செய்துவிட்டார். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇப்போல்லாம், நீங்க இடுகை இடணும்னா, ஏதேனும் உங்களுக்கு அனுப்பணும் போல இருக்கே? முதல் பதிவு, டயரி வரவு, இரண்டாம் பதிவு காமதேனு படம் வரவு :-)
நெல்லைத் தமிழன் January 4, 2018 at 3:08 PM
நீக்கு//காமதேனு படம் அனுப்பி, அதன் மூலம் உங்கள் தளத்தில் இரண்டாவது இடுகை இந்த வருடத்தில் இடம்பெறச் செய்துவிட்டார். வாழ்த்துகள்.//
இந்த வருடத்தில் இதுவே என் முதல் இடுகையாகும், ஸ்வாமீ. வாழ்த்துகளுக்கு என் நன்றிகள், ஸ்வாமீ.
//இப்போல்லாம், நீங்க இடுகை இடணும்னா, ஏதேனும் உங்களுக்கு அனுப்பணும் போல இருக்கே? முதல் பதிவு, டயரி வரவு, இரண்டாம் பதிவு காமதேனு படம் வரவு :-)//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. ஏதோ அதுபோல சென்ற ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டு துவக்கத்திலும், அடியேன் பதிவுகள் வெளியிடுமாறு அமைந்துபோய் உள்ளது. அவ்வளவுதான் விஷயம்.
அன்புடன் கோபு
31-12-2017 ம் ஆண்டின் விசேஷம் எனக்குத்தெரிந்தவரை வார முடிவு மாத முடிவு ஆண்டு முடிவு மூன்றும் ஒரே நாளில் வாழ்துகள் கோபு சார்
பதிலளிநீக்குG.M Balasubramaniam January 4, 2018 at 4:33 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//31-12-2017 ம் ஆண்டின் விசேஷம் எனக்குத்தெரிந்தவரை வார முடிவு மாத முடிவு ஆண்டு முடிவு மூன்றும் ஒரே நாளில்//
ஆஹா, நல்லதொரு கண்டுபிடிப்பு.
//வாழ்த்துகள் கோபு சார்//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
- கோபு
மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குப.கந்தசாமி January 4, 2018 at 5:09 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//மிக்க மகிழ்ச்சி.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் கோபு
கோபு அண்ணாவுக்கு புத்தாண்டில் இன்னும் நிறைய பரிசுகள் கிடைக்கணும்னு வாழ்த்துகிறேன் :)
பதிலளிநீக்குபடம் அழகா இருக்கு நல்லநட்புக்களை உங்களுக்கு இறைவன் அருளியிருக்கிறார் .
frame போட்டு வையுங்க .எங்க ஊரில் இப்படி பெரிய atlas அளவிலான படங்களா இருந்தாலும் ரோல் மாதிரி உருளை கார்ட்போர்ட் வடிவில் பாக்கேஜ் இருக்கும் அதில் போட்டனுப்பும்போது நசுங்காது .
அழகா பத்திரமா வந்து சேர்ந்ததே படம் அதுக்கே ஜெயஸ்ரீ அக்காக்கு நன்றி சொல்லணும்
PaperCrafts Angel January 4, 2018 at 6:12 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//கோபு அண்ணாவுக்கு புத்தாண்டில் இன்னும் நிறைய பரிசுகள் கிடைக்கணும்னு வாழ்த்துகிறேன் :) //
அடாடா ..... இப்படி மேலும் மேலும் பரிசுகள் கிடைத்துக்கொண்டே இருந்தால் அவற்றை பத்திரமாக வைக்கவும், பாதுகாக்கவும் இடம் வேண்டாமா? *அதனால் இதுவே போதும்.*
’பொக்கிஷம்’ என்ற தலைப்பில் தொடர்பதிவு எழுதுமாறு எனக்கு நீங்கள் அன்புக் கட்டளையிட்டபோது, நான் 12 பகுதிகளாகப் பிரித்து, சின்னத் தொடராகவே, என் வலைத்தளத்தில், ஒர் தொடர்பதிவு எழுதியிருந்தேன் என்பது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.
அதன் முதல் பகுதியின் முன்னுரையிலேயே http://gopu1949.blogspot.in/2013/03/1.html இதுபோன்று தொடர்ச்சியாக பரிசுகள் பொக்கிஷமாக கிடைத்து வரும் என் போன்றோருக்கு, இவற்றால் ஏற்பட்டு வரும் தர்ம சங்கடங்களை, மிகவும் நகைச்சுவை மேலிட எழுதியுள்ளேன். அதன் மொத்த பின்னூட்ட எண்ணிக்கைகள் 139 என காட்டுகின்றது. அதில் உள்ள பலருடைய பின்னூட்டங்களும் அவர்களுக்கான என் பதில்களுமே மிகச்சிறந்த பொக்கிஷங்கள் ஆகும். :)))))
*’போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’. Richness is not .... Earning More, Spending More Or Saving More But RICHNESS IS WHEN YOUR NEED NO MORE !* என்ற கொள்கையுடையவன் .... உங்கள் கோபு அண்ணா.
//படம் அழகா இருக்கு.//
மிகவும் சந்தோஷம்.
//நல்ல நட்புக்களை உங்களுக்கு இறைவன் அருளியிருக்கிறார்.//
அது என்னவோ மிகவும் உண்மைதான். அதுவும் இந்தப்பதிவுலகின் மூலம் கிடைத்துள்ள (உங்களைப் போன்ற) ஒருசில நட்புக்கள் விலை மதிப்பற்றவைகளாகும்.
//frame போட்டு வையுங்க.//
OK .... Agreed. I am also thinking about it.
//எங்க ஊரில் இப்படி பெரிய atlas அளவிலான படங்களா இருந்தாலும் ரோல் மாதிரி உருளை கார்ட்போர்ட் வடிவில் பாக்கேஜ் இருக்கும் அதில் போட்டனுப்பும்போது நசுங்காது.//
ஏழை நாடான எங்கள் இந்தியாவிலும் அது போல ஒருவேளை இருக்கலாம். அதற்காகவே அலைந்து திரிந்து விசாரித்துப் பார்த்தால் மட்டுமே தெரியவரும்.
//அழகா பத்திரமா வந்து சேர்ந்ததே படம் அதுக்கே ஜெயஸ்ரீ அக்காக்கு நன்றி சொல்லணும்.//
கரெக்ட். ஒரு பொருளை பேக் செய்து, பத்திரமாக சர்வ ஜாக்கிரதையாக வேறொருவருக்கு அனுப்புவது என்பதே ஒரு மிகப்பெரிய கலைதான். அந்தக்கலையிலும் திறமைசாலியாக உள்ளார்கள் ..... அந்தக் கலைவாணியான உங்கள் ஜெயஸ்ரீ அக்கா அவர்கள். :))
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
- அன்புடன் கோபு அண்ணா. :)
ஆஹா...நட்பென்றால் இதுவன்றோ நட்பு எங்கள் அனைவருக்குமே காமதேனுவின் அருள் கிடைத்து விட்டதே
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 4, 2018 at 6:26 PM
நீக்குவாங்கோ, வணக்கம். நல்லா இருக்கீங்களா? உங்களைப் பார்த்தே பல நாட்கள் ஆச்சு. :)
//ஆஹா... நட்பென்றால் இதுவன்றோ நட்பு.//
மிகச்சரியாகச் சொல்லியுள்ளீர்கள். ஏதோ நான் செய்துள்ளதோர் பாக்யம் இந்த இவர்களின் நட்பு. :)
//எங்கள் அனைவருக்குமே காமதேனுவின் அருள் கிடைத்து விட்டதே.//
இந்தக் காமதேனுவை இங்கு தரிஸிக்கும் எல்லோருக்குமே அருள் கிடைத்து மிக்க மகிழ்ச்சியுடன் + மன நிம்மதியுடன் வாழட்டும்!
அன்புடன் கோபு :)
பெரிப்பா வாழ்த்துகள்..ஜெயஸ்ரீ மாமி உங்களுக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குhappy January 4, 2018 at 6:34 PM
நீக்குவாடா என் செல்லமே ..... ஹாப்பி! நீ எப்படி இருக்கே? உங்கள் ஊரில் உள்ள ஆடுகள், மாடுகள், நாய்கள், கழுதைகள், குதிரைகள், குரங்குகள் எல்லாம் எப்படி உள்ளன? :)
//பெரிப்பா வாழ்த்துகள்.. ஜெயஸ்ரீ மாமி உங்களுக்கும் வாழ்த்துகள்.//
மிக்க நன்றிடா, தங்கம்.
அன்புடன் பெரிப்பா
[அடடா, நான் உன்னோடு டூஊஊஊஊ காய்ய்ய்ய் விட்டதையே மறந்துவிட்டு பதில் அளித்துள்ளேன், பாரு. உன் ரோஜா மாமி செளக்யமா? ஏன் இந்தப் பக்கமே வரக்காணும்? உடனே அனுப்பி வை. பிறகுதான் உன்னோடு நான் ‘சேத்தி + பழம்’ விடுவேன். :) ]
டூஊஊஊஊஊஊஊ எல்லாம் மெயில்லதான் செல்லுபடி ஆகுமாக்கும்...
நீக்குபெரிப்பா நீங்களே ப்ரொபைல் படத்துல கொத்து..கொத்தா...ரோஜாவை பூக்க வச்சிருக்கேளே....அது போறாதா...))))
happy January 7, 2018 at 5:51 PM
நீக்கு//டூஊஊஊஊஊஊஊ எல்லாம் மெயில்லதான் செல்லுபடி ஆகுமாக்கும்...//
ஓஹோ .... அப்படியா! [உன் மீது பெரிப்பாவுக்கு செம கோபமாக்கும்]
//பெரிப்பா நீங்களே ப்ரொபைல் படத்துல கொத்து.. கொத்தா... ரோஜாவை பூக்க வச்சிருக்கேளே.... அது போறாதா...))))//
நிஜ ரோஜா போல, படத்து ரோஜாவுக்கு ஓர் இயற்கை அழகோ அல்லது மணமோ (வாஸனையோ) இருக்க முடியுமா? சர்க்கரை என்று ஒரு பேப்பரில் எழுதி அந்தப்பேப்பரை நாக்கால் நக்கினால் இனிக்குமா?
ஏதோ என் நினைவை விட்டு என்றும் நீங்காத அந்த அழகிய பட்டு ரோஜாவை என் ப்ரொபைல் படத்தில், கொத்துக்கொத்தாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். அது பொறுக்கவில்லையா உனக்கு? :(
உன்னோடு இன்னும் நான் டூஊஊஊஊஊ மட்டுமே.
நட்பூ. நட்பைக் கொண்டாடுவதில் நீங்கள் சிறப்பூ.
பதிலளிநீக்குஸ்ரீராம். January 4, 2018 at 6:43 PM
நீக்குவாங்கோ, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ’ஜெயஸ்ரீ’ ராம் ! வணக்கம்
//நட்பூ. நட்பைக் கொண்டாடுவதில் நீங்கள் சிறப்பூ.//
:) ’பூ’ப்’பூ’வாய்ப் ’பூ’த்திருக்கும் மணமுள்ள, மனதுக்கு இதமான தங்களின் இந்தக் கருத்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸ்ரீராம்.
அன்புடன் VGK
ரொம்ப அற்புதமான படம் கோபால் ஸார் தயவுல எங்க எல்லாருக்குமே அற்புத அனுபவம் கிடைத்தது வாழ்த்துகள் மேடம்& ஸார்..
பதிலளிநீக்குஆல் இஸ் வெல்....... January 4, 2018 at 7:15 PM
நீக்கு//ரொம்ப அற்புதமான படம். கோபால் ஸார் தயவுல எங்க எல்லாருக்குமே அற்புத அனுபவம் கிடைத்தது வாழ்த்துகள் மேடம் & ஸார்..//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.
அன்புடன் VGK
கிஷ்ணாஜி..படம் ரொம்ப அழகா இருக்குது...உங்க சந்தோஷத்த எல்லாரு கூடவும் பகிர்ந்து கொள்வது அதவிட அழகா இருக்குது...
பதிலளிநீக்குஏற்கனவே இங்க கமெண்ட் போட்டேன் எரர் வந்திட்டுது
shamaine bosco January 4, 2018 at 7:22 PM
நீக்குவாங்கோ ஷம்மு, வணக்கம்.
//கிஷ்ணாஜி..படம் ரொம்ப அழகா இருக்குது...உங்க சந்தோஷத்த எல்லாரு கூடவும் பகிர்ந்து கொள்வது அதவிட அழகா இருக்குது...//
பள்ளியில் தமிழ் படிக்கும் வாய்ப்பே இல்லாமல், வட மாநிலங்களிலேயே பிறந்து, வளர்ந்து, படித்துள்ள எங்கட ஷம்மு, தன் சுய ஆர்வத்தினால் மட்டுமே தென்னிந்திய மொழியான தங்கத் தமிழைக் கற்றுக்கொண்டு, இப்போதெல்லாம் இவ்வளவு அழகாகத் தமிழில் எழுதுவதுதான், எனக்கு எல்லாவற்றையும்விட மிக அழகாகத் தெரிகிறது. :)))))
//ஏற்கனவே இங்க கமெண்ட் போட்டேன் எரர் வந்திட்டுது//
’எரர் ஈஸ் ஹூமன்’ எனச் சொல்லுவார்கள். ஸோ.....டோண்ட் வொர்ரி.
ஏனோ இங்கு இதுவரை ’ரோஜா’ பூக்கவே இல்லை !
ஸோ ... ஐ ஸ்டார்டெட் வொர்ரியிங் நெள !!
பிரியத்துடன் கிஷ்ணாஜி
என்னது... 'எரர் ஈஸ் ஹூமன்'ஆ? அதுக்காக பழமொழியிலும் தப்பு விடலாமோ? To err is human. நான் தேவன் இல்லை என்பதால் மன்னிக்கவில்லை கோபு சார்.
நீக்குநெல்லைத் தமிழன் January 7, 2018 at 7:34 PM
நீக்கு//என்னது... 'எரர் ஈஸ் ஹூமன்'ஆ? அதுக்காக பழமொழியிலும் தப்பு விடலாமோ?//
நான் சொல்லியுள்ள இது நிச்சயம் தவறு மட்டுமே. ஏதோ ஒரு எதுகை மோனைக்காக தமிழில் அப்படிச் சொல்லிவிட்டேன். ஆழ்ந்து கவனித்தால் அதன் அர்த்தமே மாறிவிடுகிறது.
தாங்கள் சொல்லியுள்ள ’To err is human’ என்பதே மிகச் சரியான பழமொழியாகும்.இதற்கான பொருள்:
’தவறுவது மனித இயல்பு ஆகும்’ என்பது.
அதுபோலவே நானும் இந்த இடத்தில் தவறியுள்ளது
ஓர் மனித இயல்பாக எடுத்துக்கொண்டு மன்னிக்க வேண்டுகிறேன்.:)
//To err is human. நான் தேவன் இல்லை என்பதால் மன்னிக்கவில்லை கோபு சார்.//
நீர் தேவன் இல்லை என்றாலும், பல மொழிப் (பழமொழிப்) புலமைகள் வாய்ந்த ’நக்கீரர்’ என்பதை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
தேவன் மன்னிக்காவிட்டாலும், என் மீது தனிப் பிரியமும், மரியாதையும் கொண்டுள்ள எங்கட தேவதை ’ஷம்மு’ என்னை மன்னித்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. :)))))
அன்புடன் கோபு
வாழ்த்துகள் கோபூஜி.. ஹாப்பி நியூ இயர்
பதிலளிநீக்குசிப்பிக்குள் முத்து. January 4, 2018 at 7:29 PM
நீக்குவாங்கோ மீனா-மெஹர்-மாமி, செளக்யமா?
நீ இதுவரை உன் வாழ்க்கையில் நேரில் சந்தித்துள்ள இரு பிரபல பதிவர்களும் இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுத்துள்ளார்கள் ..... கவனித்தாயா?
//வாழ்த்துகள் கோபூஜி.. ஹாப்பி நியூ இயர்//
மிக்க மகிழ்ச்சி மீனா, வெரி வெரி ஹாப்பி நியூ இயர்.
பிரியமுள்ள கோபூஜி
காமதேனு அனுப்பி வைத்த காமதேனு...... தலைப்பே அமர்க்களமா இருக்கு...படமும் பகிர்வும் அழகோ அழகு... வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஸ்ரீனி வாசன் January 4, 2018 at 7:46 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//’காமதேனு அனுப்பி வைத்த காமதேனு......’ தலைப்பே அமர்க்களமா இருக்கு... படமும் பகிர்வும் அழகோ அழகு... வாழ்த்துகள்..//
தலைப்பைப் பாராட்டியுள்ள, தனித்தன்மை வாய்ந்த தங்களின் பின்னூட்டம் அதைவிட அமர்க்களமாக உள்ளது. :) மிக்க நன்றி.
அன்புடன் கோபு
உங்களுக்கு மிகவும் பிடித்த படத்தைத் தேடிப் பிடித்துத் தேர்வு செய்து அனுப்பி உங்களை மகிழ்வித்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இரண்டாவது பதிவு எழுத வைத்தமைக்கு நன்றியும் கூட. தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் என்ற வேண்டுகோள் உங்களுக்கு!
பதிலளிநீக்குஞா. கலையரசி January 4, 2018 at 10:07 PM
நீக்கு//உங்களுக்கு மிகவும் பிடித்த படத்தைத் தேடிப் பிடித்துத் தேர்வு செய்து அனுப்பி உங்களை மகிழ்வித்த ஜெயஸ்ரீ அவர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! இரண்டாவது பதிவு எழுத வைத்தமைக்கு நன்றியும் கூட. தொடர்ந்து நீங்கள் எழுத வேண்டும் என்ற வேண்டுகோள் உங்களுக்கு!//
வாங்கோ மேடம், வணக்கம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும், நன்றிக்கும், வேண்டுகோளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
நன்றியுடன் கோபு
திருமதி ஜெயஸ்ரீ அறிமுகம் அருமை. உங்கள் எழுத்தின் மூலமாக அவருக்கு சிறப்பு செய்துள்ள விதம் நன்று.
பதிலளிநீக்குDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 5, 2018 at 7:26 AM
நீக்குவாருங்கள் முனைவர் ஐயா, வணக்கம்.
//திருமதி ஜெயஸ்ரீ அறிமுகம் அருமை.//
அருமையான கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி.
//உங்கள் எழுத்தின் மூலமாக அவருக்கு சிறப்பு செய்துள்ள விதம் நன்று.//
ஏதோ நம்மால் முடிந்த ஓர் சின்ன நன்றி நவிழ்தல் மட்டுமே.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
அழகிய நட்பு...
பதிலளிநீக்குAnuradha Premkumar January 5, 2018 at 10:09 AM
நீக்குவாங்கோ ... வணக்கம். தங்களின் பெயரைப் படிக்கும் போதெல்லாம் நான் எனக்குள் மானஸீகமாக நமஸ்கரித்துக்கொள்வது என் வழக்கம்.
தமிழில் ‘அனுஷம்’ என்று சொல்லப்படும் நக்ஷத்திரமே, வடமொழியில் ‘அநுராதா’ என்று அழைக்கப்படுகிறது.
அந்த ‘அனுஷம்’ என்ற ‘அநுராதா’ நக்ஷத்திரத்தில் அவதரித்துள்ள மஹான் தான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா அவர்கள்.
இன்று நம் நாடான இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில், ஒவ்வொரு மாதமும், அனுஷ நக்ஷத்திரத்தன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கான விசேஷ பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
அந்த அவதார புருஷரான மாபெரும் ஞானி அவர்கள்தான் மேற்படி காமதேனு உடம்பின் அனைத்துப்பகுதிகளிலும் வியாபித்திருப்பதாக இந்தப் படம் ஓர் ஓவியரால் சித்தரித்து வரையப்பட்டுள்ளது.
//அழகிய நட்பு...//
தினமும் ‘திருப்பாவை’ பற்றி ஒவ்வொரு பாசுரமாக எழுதிக்கொண்டும், அதற்கான அர்த்தம் சொல்லிக் கொண்டும் வரும் ‘ஆண்டாள்’ போன்ற தங்களின் வாயிலாகச் சொல்லியுள்ள ‘அழகிய நட்பு’ என்ற சொற்களுக்கு தனி மகத்துவம் உள்ளது என்பதை, கோபாலகிருஷ்ணனான நானும் நன்கு உணர்ந்து கொண்டேன்.
தங்களின் வருகைக்கும், அழகிய நட்புடன் எழுதியுள்ள இரு சொற்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
எனது இரு வார்த்தை மறுமொழிக்கு...
நீக்குதங்களால் மட்டுமே இத்தைகைய இனிய மறுமொழி கொடுக்க இயலும்...
பெயர் காரணம் அறிந்து தன்னியன்..னானேன் ....நன்றி பல...
என் தளத்தில் ‘திருப்பாவை’ யை தினமும் வாசிக்கிறீர்களா...மிக மகிழ்ச்சி...
கோபால்ஜி வாழ்த்துகள். இதுக்கு மேல என்ன சொல்லணும்னு தெரியல.. இருவருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குப்ராப்தம் January 5, 2018 at 10:16 AM
நீக்குவாங்கோ மை டியர் சாரூஊஊஊஊ, வணக்கம்மா.
//கோபால்ஜி வாழ்த்துகள். இருவருக்கும் வாழ்த்துகள்//
எங்கள் இருவர் சார்பிலும், மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, சாரூ.
//இதுக்கு மேல என்ன சொல்லணும்னு தெரியல..//
இதற்கு மேல் நீ ஒன்றும் இங்கு சொல்ல வேண்டாம். உனக்கு அங்கு இருக்கும் நெருக்கடிகளில் இவ்வளவு சொன்னதே எதேஷ்டமாகும். :))
28.01.2017 அன்று உனக்குப் பிறந்துள்ள இரட்டைக்குழந்தைகளான என் பேரன் பேத்தி இருவருக்கும் தமிழ் பஞ்சாங்கக் கணக்குப்படி, வரும் 18.01.2018 வியாழக்கிழமை, தை மாத, திருவோண(ம்) நக்ஷத்திரத்தில் காது குத்தி, அப்த பூர்த்தி ஆயுஷ்ஹோமம் செய்யப்பட வேண்டும். அங்கு, நீ தற்சமயம் போயிருக்கும் வெளிநாட்டில் அதற்கெல்லாம் வசதி இருந்தால் செய்யவும். இல்லாவிட்டால் அன்று, வீட்டிலேயே பால் பாயஸம் செய்து, வீட்டில் உள்ள பெருமாள் படத்திற்கு, விளக்கு ஏற்றி, கோலமிட்டு, நைவேத்யம் செய்து விட்டு, குழந்தைகள் இருவருக்கும் கொஞ்சம் அந்தப் பாயஸத்தை ஊட்டி விடவும். குழந்தைகள் இருவருக்கும் அன்று புது டிரஸ் போட்டுவிட்டு, போட்டோ எடுத்து எனக்கு மெயிலில் அனுப்பி வைக்கவும்.
உன் குழந்தைகளின் தமிழ் பிறந்த நாள் சமயம் (அதாவது 18th, 19th & 20th of January, 2018 ஆகிய மூன்று நாட்களும்) நான் சேலத்தில் ஒரு கல்யாணத்தில் மிகவும் பிஸியாக இருப்பேன்.
நீ எனக்கு மெயிலில் அனுப்பப்போகும் உன் குழந்தைகள் படத்தையும், உன் படத்தையும் 20.01.2018 இரவுதான், திருச்சிக்குத் திரும்பி வந்து என்னால் பார்க்க முடியும்.
என் செல்லப்பெண்ணான உனக்கு என் ஆசீர்வாதங்கள். என் பேரன் + பேத்தி இருவருக்கும் என் அட்வான்ஸ் பிறந்த நாள் நல்வாழ்த்துகள். 珞
பிரியமுள்ள கோபால்ஜி :)
கற்பக விருக்ஷம், காமதேனு, அக்ஷயபாத்திரம் போன்றவை, அள்ள அள்ளக் குறையாமல், நாம் மனதில் நினைக்கும் எதையும், அடுத்த நொடியில் தந்தருளக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தவை எனச் சொல்லுவார்கள்.
பதிலளிநீக்குஇன்னானமோ சொல்லிகினிக. பொறவால ஒரு மாடு படம் போட்டீக... இதயும் ஒங்கட ஆளுக. ஸாமியா கும்புட்டு போடுவீகளா.. எனிக்கு சரியா வெளங்கிகிட ஏலல..மாப்பு...மாப்பு...குருஜி....
mru January 5, 2018 at 10:32 AM
நீக்குவாம்மா ... முருகு. வணக்கம். நல்லா இருக்கிறாயா? உன் வீட்டினர் எல்லோரும் நலமா?
**கற்பக விருக்ஷம், காமதேனு, அக்ஷயபாத்திரம் போன்றவை, அள்ள அள்ளக் குறையாமல், நாம் மனதில் நினைக்கும் எதையும், அடுத்த நொடியில் தந்தருளக் கூடிய அபூர்வ சக்தி வாய்ந்தவை எனச் சொல்லுவார்கள்.** - VGK
//இன்னானமோ சொல்லிகினிக. பொறவால ஒரு மாடு படம் போட்டீக... இதயும் ஒங்கட ஆளுக. ஸாமியா கும்புட்டு போடுவீகளா..//
ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! எங்கள் மத நம்பிக்கைப்படி, இவ்வுலகில் உள்ள அனைத்து உயிரினங்களிலும், ஆத்ம ஸ்வரூபியாக இருப்பவன் .... ஆண்டவன் ஒருவனே.
ஆத்ம ஞானம் அடைந்துள்ள + அடைய முயற்சிக்கும், ஒருசிலரால் மட்டுமே இதனை நன்கு உணர முடியும்.
அவ்வாறு அனைவரும் உணர்ந்து விட்டால், பிறகு உலகில் யார் மீதும், எது மீதும், யாருக்கும் பகையோ, வெறுப்போ, துவேஷமோ வளராமல், சண்டை சச்சரவுகள் இல்லாமல், போட்டி பொறாமைகள் அழிந்துபோய், எங்கும் எதிலும் அமைதியும், ஆனந்தமும் மட்டுமே நிலைத்து நிற்கும்.
மேலும் இதனால், எந்த ஒரு ஜீவனும், யாராலும் கொல்லப்படாமல் சுதந்திரமாக இருக்கவும் வழிவகுக்கும்.
//எனிக்கு சரியா வெளங்கிகிட ஏலல..மாப்பு...மாப்பு...குருஜி....//
மிகச் சாதாரணதொரு இல்வாழ்க்கையிலேயே நீ இன்னும் வெளங்கிக்கிட வேண்டியவைகள் ஏராளமாக உள்ளன. :)
அப்படியிருக்கும் போது இதுபோன்ற மிக உயரிய தத்துவங்களெல்லாம் லேஸில் எல்லோருக்கும் வெளங்கிக்கிட ஏலாதுதான். அதனால் உனக்கு மாப்பு ஏதும் என்னிடம் கிடையாது, முருகு.
நானும் உன்னைப்போலவே தான் ...... முருகு. என்னாலும் எல்லாவற்றையும் வெளங்கிக்கிட ஏலவில்லை. அதனால் கவலைப்படாமல் நாம் வழக்கம்போல ஜாலியாக இருப்போம் .... முருகு :)))))
நமக்குத் தெரியாத + புரியாத விஷயங்களில் நாம் நம் மண்டையை உடைத்துக் கொள்வதில் எந்தப் பிரயோசனமும் இல்லை. :)))))
அன்புடன் குருஜி .... கோபு
படமும் ,உங்கள் நட்பின் உயர்வும் அருமை. வாழ்த்துகள் இருவருக்கும். நட்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அன்புடன்
பதிலளிநீக்குகாமாட்சி January 5, 2018 at 11:25 AM
நீக்குவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//படமும், உங்கள் நட்பின் உயர்வும் அருமை. வாழ்த்துகள் இருவருக்கும். நட்பை அழகாக எழுதியிருக்கிறீர்கள். அன்புடன்//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான உயர்வான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - அன்புடன் கோபு
கோபால் சார் வணக்கம்.. யாருன்னு நினைவு இருக்கா... 5...6.. வருஷமா வலைப்பதிவுலேந்து வாலண்டியரி ரிடையர் மெண்ட் எடுத்துண்டு எல்லாத்துலேந்தும் ஒதுங்கி இருந்தேன்
பதிலளிநீக்குஇந்த காமதேனு என்னை இங்க இழுத்தஉ வந்துட்டா..))))
தெய்வீக அழகோட படம் அம்சமா இருக்கு
பாத்துண்டே இருக்கலாம்போல இருக்கு
பாத்ததுமே அனுப்பியவர் பெற்றுக்கொண்டவர்களை வாழ்த்தவும் பாராட்டவும் தோணித்து.. அதான் வந்துட்டேன்
பழய நண்பர்கள் நிறயபேரு வந்து கமெண்ட் போட்டிருக்காங்க.. புது நண்பர்களும் நிறய பேரு வந்தஇருக்காங்க..
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்....
குறையொன்றுமில்லை. January 5, 2018 at 6:27 PM
நீக்கு//கோபால் சார் வணக்கம்..//
வாங்கோ மாமி, நமஸ்காரங்கள். நீங்க செளக்யமா இருக்கேளா?
//யாருன்னு நினைவு இருக்கா...//
நன்னாக் கேட்டேளே ..... என்னிடம் போய் இப்படியொரு கேள்வியை ! தாங்கள் மும்பையில் இருந்தபோது, நாம் போனில் பேசியுள்ளோம். மெயில்களில் பேசியுள்ளோம். 2-3 வலைத்தளங்கள் வைத்துக்கொண்டு, 2012 முடிய பிரமாதமாக எழுதி அசத்தி வந்தீர்களே. உங்களை என்னால் [எங்களால்] மறக்க முடியுமா?
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இன்று வெள்ளிக்கிழமை சாயங்காலமாக, இங்கு அருகில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாத ஸ்வாமி கோயிலுக்குப் போய் மும்முறை பிரதக்ஷணங்கள் செய்துவிட்டு இப்போதுதான் ஆத்துக்குத் திரும்பி வந்தேன். அப்போது, அந்தக் கோயிலில் உங்களை நான் நினைத்துக் கொள்ளும்படியாக ஆனது.
ஜாடையில் அப்படியே அச்சு அசலாக உங்களைப் போலவே ஒரு மாமி என் கண்களில் இன்று மட்டும் தென்பட்டார்கள். ஆனாலும் பிறகு உற்று நோக்கியதில் அது தாங்கள் இல்லை எனத் தீர்மானித்துக்கொண்டே, இப்போது நான் ஆத்துக்குத் திரும்பி வந்தேன். இங்கு வந்து என் மெயிலைப் பார்த்தால் தாங்கள் என் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளீர்கள். உண்மையிலேயே எனக்கு இந்த மிகச்சிறிய சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சாக்ஷாத் ஸ்ரீ ஆனந்தவல்லீ அம்பாளின் திருவிளையாடலாகத்தான் இருக்கும் இது. ஏற்கனவே இந்த அம்பாளுக்கும் எனக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் பற்றி, அம்பாள் படத்துடன் சில பதிவுகள் நான் வெளியிட்டுள்ளேன்.
இணைப்பு இதோ:
1) http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html
2) http://gopu1949.blogspot.in/2012/03/5.html
//5...6.. வருஷமா வலைப்பதிவுலேந்து வாலண்டியரி ரிடையர் மெண்ட் எடுத்துண்டு எல்லாத்துலேந்தும் ஒதுங்கி இருந்தேன்//
தெரியுமே. 2012-ம் ஆண்டு கடைசி நாள்கூட (31.12.2012) தாங்கள் ஒரு பதிவு வெளியிட்டுள்ளீர்கள். அதன்பின் உங்களைக் காணோம் என்று எங்களில் நிறைய பேர்கள் உங்களைத் தேடினோம். வெளிநாட்டுக்கு வழக்கம்போலப் போய் இருப்பீர்களோ என்னவோ என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். பதிவர்களில் சிலர் என்னிடம்கூட போன் செய்து, உங்களைப்பற்றி அக்கறையுடன் விசாரித்தார்கள். அவர்களுக்கு உங்களின் போன் நம்பரை நான் கொடுத்தேன். நான் நேரிடையாக முயற்சித்தும் என்னால் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள இயலவில்லை.
ஆனாலும், சமீபத்தில் ஓராண்டுக்கு முன்பு தங்களைக் கோவையில் நேரில் சந்தித்ததாக, எனக்கு நெருக்கமானதோர் பெண் பதிவர், என்னிடம் சொல்லியிருந்தா. அவள்கூட இங்கு ஒரு பின்னூட்டம் இட்டு இருக்கிறாள். இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். :)
//இந்த காமதேனு என்னை இங்க இழுத்தஉ வந்துட்டா..))))//
மிகவும் சந்தோஷம். :))))) இந்தக் ’காமதேனு’வும் இதை எனக்கு அனுப்பிவைத்துள்ள ’காமதேனு’வும் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்திருப்பினும், இப்போது உங்களின் இந்த திடீர் வருகை மூலம் என்னால், மேலும் அது உறுதியாக உணரப்பட்டு விட்டது. :)))))
//தெய்வீக அழகோட படம் அம்சமா இருக்கு. பாத்துண்டே இருக்கலாம்போல இருக்கு//
ஆமாம். இதனைத் தங்கள் வாயிலாகக் கேட்க, மிகவும் சந்தோஷமாகவும், மேலும் அந்த தெய்வீக அழகுக்கு அழகு சேர்த்தார்ப்போலவும் உள்ளது. மிக்க மகிழ்ச்சி.
//பாத்ததுமே அனுப்பியவர் பெற்றுக்கொண்டவர்களை வாழ்த்தவும் பாராட்டவும் தோணித்து.. அதான் வந்துட்டேன்.//
வெரி குட். மிகவும் சந்தோஷம்.
//பழய நண்பர்கள் நிறயபேரு வந்து கமெண்ட் போட்டிருக்காங்க.. புது நண்பர்களும் நிறய பேரு வந்தஇருக்காங்க..//
அதெல்லாம் அப்படித்தான். யாரோ வருவார் ..... யாரோ போவார் ..... வருவதும், போவதும், அவர்கள் சொல்லுவதும் ...... எனக்கே சமயத்தில் புரியாது. :)))))
//அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்....//
நீண்ட இடைவெளியான சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் தங்களின் திடீர் வருகைக்கும், அதே பாசத்துடன் கூடிய அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு
லக்ஷ்மி அம்மா எப்படி இருக்கிங்க.ரொம்ப சந்தோஷம் happy to see Here
நீக்குலக்ஷ்மி அம்மா உங்களை நிறையபேர் முகப்புத்தகத்தில் கூட தேடினாங்க . .இங்கே அதிரா தேடினாங்க
நீக்குரொம்ப ஹாப்பியா இருக்கு உங்களை பார்க்க
அன்புள்ள லக்ஷ்மி மாமி, வணக்கம்.
நீக்குஉங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய இன்னொரு விஷயம் நான் இப்போது சொல்லப்போகிறேன்.
முன்பெல்லாம், தங்கள் பிள்ளை ’கோவா’வில் இருந்த சமயம், அவர் வீட்டுக்குத் தாங்கள் சென்று, சுமார் ஒரு மாதம் தங்குவது வழக்கம் உண்டு அல்லவா !
அப்போது உங்கள் பிள்ளை குடியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் ஒரு கிறிஸ்டியன் ஃபேமிலி இருந்தார்கள் அல்லவா !!
அவர்கள் வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த ஷாமைன் (ஷம்மு), அவளின் கணவர் பாஸ்கோ, அவளின் வயதான மாமியார், மாமனார் எல்லோரிடமும் தாங்கள் பேசிப்பழகியுள்ளது நினைவு இருக்குதா?
அந்த ஷம்முவும் ஓர் தமிழ் பதிவராக இருந்தவர் மட்டுமே. எனக்கு பதிவுலகம் மூலம் அவளும் மிகவும் நெருங்கிய சிநேகிதியாகும்.
இன்று என்னுடன் அவள் மெயிலில் பல விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த போது உங்களைப்பற்றியே நிறைய விஷயங்கள் கேட்டுக்கொண்டு இருந்தாள். உங்களை இங்குள்ள உங்களின் Profile Photo மூலம் அடையாளம் கண்டு பிடித்து இருக்கிறாள்.
இந்தப் பதிவுக்கு அவளும் மேலே பின்னூட்டம் கொடுத்திருக்கிறாள்.
அவளுக்கு நான், தங்களின் மெயில் ஐ.டி.யைக் கொடுத்துள்ளேன். தங்களுடன் அவள் ஒருவேளை மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என நினைக்கிறேன். இது ஜஸ்ட் உங்கள் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு
பேரன்புமிகுந்த எழுத்துச் சிந்தாமணி உயர்திரு கோபு அவர்கட்கு,
பதிலளிநீக்குமடல் பெட்டியில் "காமதேனு அனுப்பி வைத்த காமதேனு " தலைப்பைப் பார்த்து அட..டா....என்ன விஷயமாயிருக்கும்? என்ற ஆவலில் படித்துப் பார்த்தால்,
ஒரு குழந்தை தன் தாயிடம் பள்ளியின் முதல் நாள் அனுபவத்தைச் சொல்லும் அழகில் நீங்கள் தங்களது வலைப்பூவில் பதிவிட்டிருப்பதைக் கண்டதும், இந்தக் கலியுகத்தில் இப்படி ஒரு குழந்தை மனம் கொண்டவர், எத்தனையோ வியக்க வைக்கும் சாதனைகள் படைத்து விட்டு, அதையும் தாண்டி.....காஞ்சி முனிவருக்கு தான் வரைந்த ஓவியத்தை
அவரது கண்களுக்குச் சமர்ப்பித்த பாக்கியம் அடைந்தவர் ....இந்தச் சசிறு விஷயத்தை வியாபித்து எழுதி இருப்பது என்னுள் தங்களின் உயர்ந்த மனத்தை ஸ்படிகமாக
காட்டுகிறது. இதற்கும், இத்தனைக்கும் நான் தகுதியற்றவள் என்று உணர்ந்திருந்தாலும்......ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அனுக்கிரஹம் தான் என்பதை படித்ததும்
"காமதேனு பெரியவா" எனக்கு கிடைத்ததே அந்தக் கருணையின் கைங்கர்யம் தானே என்று புளங்காகிதம் அடைகிறேன். தங்களின் ஒவ்வொரு எழுத்தும் உங்கள்
மனத்தின் உண்மையை உளியாய் செதுக்கி இருக்கிறது. உங்கள் வலைப்பூவில் புத்தம்புது பூவாக காமதேனு பெரியவா இதழ்விரித்து பூத்திருப்பது கண்டு
மனம் சிலிர்க்கிறது. ஆம்....எங்கும் வியாபித்திருக்கிற அந்த அருள் மழை உங்கள் வலைப்பூவில் பொழிந்து கொண்டிருக்கிறதே, என்னிடமும் அந்த ஓவியம் இருக்கிறது.வலைப்பூவும் இருக்கிறது என்ன இருந்து என்ன பயன் ? . இப்படி அருமை அறிந்திருந்தும் அத்தனை கண்களுக்கும் அறிவிக்கத் தெரியவில்லையே.
இந்த ஓவியம் சென்ற மாதம் தான், பெரியவா மஹாஸ்வாமி ஆராதனா உற்ஸவத்தில் வெளியான திரு உருவம். வரைந்தவர் இங்கே ஹைதராபாத்தில் தான் இருக்கிறாராம்.
நாமெல்லாம் அறிந்திருக்கும் பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர் ராஜன் அவர்கள் 14/12/2017 அன்று இங்கு வந்திருந்து பெரியவா பற்றி சொற்பொழிவு ஆற்றிவிட்டு இந்தப் படத்தை அந்தக் கோவிலில் சமர்ப்பணம் செய்து விட்டுச் சென்றார். இதையெல்லாம் கண்டு உணரும் பெரும் பேறு நானும் பெற்றேன். முப்பது முக்கோடி தெய்வங்கள் , தேவதைகள் குடி கொண்டிருக்கும் காமதேனு உடம்பில் சர்வமும் பெரியவா வியாபித்திருக்கும் இந்தத் திருப்படம் எனக்கும் வேண்டுமே என்று உள்ளார்ந்த ஆவலோடு எண்ணிக் கொண்டேன். அவர் கருணை செய்தார். எனக்கு கிடைத்ததும், பெரியவாளின் அசீர்வாதம் பூரணமாகக் கொண்ட உங்களுக்கும் அனுப்பி வைத்தால் 2018 இல்....ஒரு நினைவுப் பரிசாக ஆகுமே என்ற எண்ணம் இன்று ஒரு பதிவைப் போட்டு பலருக்கும் காமதேனு பெரியவாளை பார்க்கும் பாக்கியம் கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதெல்லாம் அவரின் கடாக்ஷம் அன்றி வேறென்னவாக இருக்க இயலும். நீங்கள் எழுதி இருக்கும்.21பேறுகள் பெற்ற அவள் யாரோ?..என்னை நான் என்னுளே தேடிக்கொண்டிருக்கிறேன். நானோ அன்ன விசாரத்தை விட்டு ஆத்ம விசாரத்தை கண்டுணர கருணைக்கடலருகே கசங்காது காத்திருக்கும் காகிதக்கப்பல்.
தொட்டதை பொன்னாக்கி, தொட்டதும் பொன்னாகும் அற்புத மணி சிந்தாமணியாய் அந்தக் கருணைகடல் உங்களை இந்த இணையக் கடலருகே கலங்கரை விளக்காய் நிற்க வைத்திருக்கிறார். வழியறியாது தவிக்கும் பெரிய கப்பல்களுக்கு தங்களின் வலைப்பூவே வழிகாட்டும் விழிகாட்டி.தங்களின் இந்தப் பாராட்டுக்கள் எனக்குள் மிகுந்த பாரத்தை ஏற்றி வைக்கிறது. உங்களது எழுத்துத் திறமை இந்த இணைய உலகமே அறிந்தது. உங்களது வலைப்பூவின் மூலம் எனது தேவதை காமதேனு பெரியவா உலா வருகிறார் என்பதில் எனக்கு அதீத மகிச்சியே,.எனது ஒவ்வொரு நாளின் மணித்துளிகளும் ..."பெரியவா சரணத்தில் " கரைந்து கொண்டிருப்பதால்.....அந்தப் புண்ணியரின் புகழ் பாடும் உங்களையும் நமஸ்கரிக்கிறேன். கள்ளமில்லா வெள்ளை உள்ளம் கொண்ட நீங்கள் இருவரும் உங்கள் பிள்ளைகளின் குடும்பமும் சீரும் சிறப்போடும் அனைத்துப் பேறுகளும் பெற்று நீடூழி வாழ மனமார பிரார்த்தித்துக் கொண்டு ,.
எல்லாமே அனுஷத்தின் மகிமைகள்.
வேண்டும் ஆசிகள்,.
ஜெயஸ்ரீ ஷங்கர்.
பேரன்புக்குரிய ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ அவர்களுக்கு, வணக்கம்.
நீக்குகாமதேனு பொழிந்து தள்ளும், வற்றாத அமிர்தம் போன்ற ஞானப்பாலாக, தாங்கள் ஏராளமான தகவல்களைத் தாராளமாக மேலே பொழிந்து தள்ளி மகிழ்வித்துள்ளீர்கள். :)
மற்றவர்களைப்போல, தங்களுக்கும் வரிக்குவரி, இங்கேயே பதில் அளிக்கணும் என்ற ஆசைதான் எனக்கும்.
இருப்பினும் இதற்கான பதில்களாக பல விஷயங்களை நான் தங்களுடன் மின்னஞ்சல் மடலாக பகிர்ந்துகொண்டு விட்டதால், இனி அதை மீண்டும் இங்கு ஒரு முறை எழுத வேண்டாம் என நினைத்து விட்டுவிட்டேன்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான, ஆத்மார்த்தமான, ஆழமான, அகலமான, நீளமான மிக நீண்ட கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் கோபு
ஜெயஸ்ரீ ஷங்கர் January 6, 2018 at 12:03 AM
நீக்குதங்களின் மேற்படி பின்னூட்டத்தில்
11-12 வரிகளில் வரும்
’இந்தச் சசிறு விஷயத்தை’ என்பதை
’இந்தச் சிறு விஷயத்தை’ எனவும்
18-ம் வரியின் இடையில் வரும்
‘புளங்காகிதம்’ என்ற சொல்லை
’புளகாங்கிதம்’ என்றும்
மாற்றிக்கொண்டு படித்து நானும்
புளகாங்கிதம் அடைந்து விட்டேன்.
அதனால் கவலைப்படாதீங்கோ. :)
அன்புடன் கோபு
காமதேனு வந்த நேரம் உங்களது வாழ்வில் எல்லா வளமும் பெருகட்டும் வாழ்த்துகள். இந்த புத்தாண்டு செய்தியாக உங்கள் பதிவுகள் இனி தொடர்ந்து வரும் எனத் தெரிகிறது. மகிழ்ச்சிதான்.
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ January 6, 2018 at 3:47 AM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம் ஸார்.
//காமதேனு வந்த நேரம் உங்களது வாழ்வில் எல்லா வளமும் பெருகட்டும் வாழ்த்துகள்.//
மிக்க மகிழ்ச்சி, ஸார். இந்தப்பதிவினில் உள்ள முதல் படத்தினை பார்வையிடும் அனைவர் வாழ்விலும் எல்லா வளமும் பெருகக்கூடும் என்ற நம்பிக்கை எனக்குள் உண்டு. லோக க்ஷேமத்திற்காக மட்டுமே இதனை இவ்வளவு ஒரு அவசரமாக வெளியிட நேர்ந்துள்ளது. தங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
//இந்த புத்தாண்டு செய்தியாக உங்கள் பதிவுகள் இனி தொடர்ந்து வரும் எனத் தெரிகிறது. மகிழ்ச்சிதான்.//
ஆறரை மாத இடைவெளிக்குப்பின் 31.12.2017 அன்று நான் ஓர் பதிவு வெளியிட தாங்களே காரணமாக இருந்துள்ளீர்கள். நாளைய தினமான 07.01.2018 என்னை ஓர் பிரபல பதிவர் சந்திப்புக்கு அழைத்துப் போவதாகவும் சொல்லியுள்ளீர்கள் என்னும் போது, என்னுடைய அடுத்த பதிவு வெளியீட்டுக்கும், ஒருவேளை தாங்களே காரணமானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. பார்ப்போம்.
தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியளிக்கும் விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.
நாளைக்கு மதியம் 3 மணி சுமாருக்கு உங்களைத் தொலைபேசியில் நான் தொடர்பு கொள்கிறேன். நமது பயணத் திட்ட நேரங்களை, நாம் அப்போது நமக்குள் இறுதி முடிவு செய்துகொள்வோம். - அன்புடன் VGK
அழகான படம். இடைவெளி க்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் January 6, 2018 at 5:18 AM
நீக்குவாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.
//அழகான படம். இடைவெளி க்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி வெங்கட். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு + பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புடன் கோபு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதிலளிநீக்குகாமதேனு பற்றிய சில தகவல்கள்:
’காமதேனு’ (சமஸ்கிருதம்) कामधेनु, [kaːməˈd̪ʱeːnʊ], Kāmadhenu), என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும். இந்து தொன்மவியல் அடிப்படையில் கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக இந்த காமதேனு உயிரினம் சித்தரிக்கப்படுகிறது. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர்.
இதற்கு நந்தினி, பட்டி என இரு மகள்கள் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், மார்பும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றார்கள்.
இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.
காதி என்ற மன்னரின் புதல்வர் விஸ்வாமித்ரர் பெரும் மன்னர். ஒருநாள் பிரம்மரிஷி வஸிஷ்டர் ஆசிரமத்திற்கு பெரும் படையுடன் வந்தார். மன்னரை மகிழ்விக்க வஸிஷ்டர் தேவலோக பசுவான காமதேனுவின் துணையால் வந்தோர் அனைவருக்கும் அறுசுவை உணவிட்டார். உண்டு மகிழந்த மன்னர் விஸ்வாமித்தரருக்கு காமதேனுவின் மகிமை புரிந்தது. அதனை தன்னுடன் கொண்டு செல்ல எத்தனித்தார்.
அப்போது வசிஷ்டர் உத்தரவினை ஏற்று ஏராளமான படைகளை உருவாக்கி காமதேனு மன்னர் படையை எதிர்த்தது.
மன்னர்களால் பெரும் உயர்வினை அடைய இயலாது என்று உணர்ந்து தன் மன்னர் பட்டத்தினை துறந்து துறவியானார் என்று கதை உள்ளது.
common ஆன தேனை பாட்டில் பாட்டிலாக அனுப்பினாலும் போதாதென்று தான் காமதேனுவையே அனுப்பினார் போலும் அன்புச் சகோதரி. படம் அழகென்றால் அதை வாத்தியார் எடுத்துக்காட்டி பாராட்டு மழை பொழிந்தது இன்னும் அழகு. வாழ்க்கையைக் கொண்டாடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். எனது இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துகளும்...என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.
பதிலளிநீக்குRAVIJI RAVI January 10, 2018 at 3:08 PM
நீக்குவாங்கோ வாத்யாரே, வணக்கம். நலம். நலமறிய ஆவல். BSNL-இல் சம்பள உயர்வு போராட்டங்கள் நீடித்து வரும் நிலையிலும்கூட, தங்களின் இன்றைய அபூர்வ வருகை ஆனந்தம் அளிக்கிறது. :)
//common ஆன தேனை பாட்டில் பாட்டிலாக அனுப்பினாலும் போதாதென்று தான் காமதேனுவையே அனுப்பினார் போலும் அன்புச் சகோதரி. படம் அழகென்றால் அதை வாத்தியார் எடுத்துக்காட்டி பாராட்டு மழை பொழிந்தது இன்னும் அழகு. வாழ்க்கையைக் கொண்டாடுவதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான்.//
உங்களின் மேற்படி வரிகள், நம்ம வாத்யார் படமான ’இதயக்கனி’ யில் வரும் ‘இன்பமே உந்தன் பேர் பெண்மையோ’ பாடலில் வரும் சில வரிகளான ‘சர்க்கரைப் பந்தல் நான் .... தேன் மழை சிந்த வா’ என்ற வரிகளை என் நினைவுக்குக் கொண்டுவந்து என்னை மகிழ்வித்தன, ஸ்வாமீ.
https://www.youtube.com/watch?v=9dQA4H4i4QQ
//எனது இனிய புத்தாண்டு 2018 நல்வாழ்த்துகளும்... என்றும் அன்புடன் உங்கள் எம்.ஜி.ஆர்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வாத்யாரே.
அன்புடன் கோபு
காமதேனுவில் விதம், விதமாக மகா பெரியவாள் திரு உருவங்கள். மிக வித்தியாசமான கற்பனை.
பதிலளிநீக்குஎங்கள் வீட்டில் ஒரு பெரிய காமதேனு படம் இருந்தது. ஆனால் அதில் எல்லா தெய்வங்களின் உருவங்களும். அந்தப் படத்தை எங்கள் சம்பந்தியின் சஷ்டியப்த பூர்த்திக்கு FRAME செய்து பரிசளித்து விட்டோம்.
வலை உலக நண்பர்கள் உங்களுக்கு அளித்த பரிசுகளை ஒரு கண்காட்சியாகவே வைக்கலாம் போல இருக்கிறது. நாங்களும் (நானும், எங்க ஆத்துக்காரரும்) திருச்சி வர ஒரு PLAN போட்டிருக்கிறோம். எப்ப நிறைவேறுமோ தெரியலை.
Jayanthi Jaya January 11, 2018 at 10:27 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்.
//காமதேனுவில் விதம், விதமாக மகா பெரியவாள் திரு உருவங்கள். மிக வித்தியாசமான கற்பனை.//
ஆமாம்.
//எங்கள் வீட்டில் ஒரு பெரிய காமதேனு படம் இருந்தது. ஆனால் அதில் எல்லா தெய்வங்களின் உருவங்களும். அந்தப் படத்தை எங்கள் சம்பந்தியின் சஷ்டியப்த பூர்த்திக்கு FRAME செய்து பரிசளித்து விட்டோம்.//
வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)
//வலை உலக நண்பர்கள் உங்களுக்கு அளித்த பரிசுகளை ஒரு கண்காட்சியாகவே வைக்கலாம் போல இருக்கிறது.//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இந்தக் ‘காமதேனு’ மட்டும் தானே. அதையே வீட்டினில் கண்காட்சியாக எங்கே வைப்பது? எப்படி வைப்பது? என்று யோசித்துக்கொண்டே இருக்கிறேன்.
மீதியெல்லாம் அநேகமாக Eatables only. அதனால், அவற்றால் எனக்கு ஏதும் பிரச்சனையே இல்லை. :)
//நாங்களும் (நானும், எங்க ஆத்துக்காரரும்) திருச்சி வர ஒரு PLAN போட்டிருக்கிறோம். எப்ப நிறைவேறுமோ தெரியலை.//
மெதுவாக, உங்களுக்கு எப்போ செளகர்யமோ அப்போ வாங்கோ, போதும்.
இந்தப்பதிவுக்கு வருகை தந்துள்ளதற்கு, என் நன்றிகள்.
அன்புடன் கோபு அண்ணா
//வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)//
பதிலளிநீக்குஅஹஹாஹாஹா!
பொண்ணை கொடுத்த சம்பந்தி கிட்ட கறப்பதா? குடுப்பது மட்டுமே. பொண்ணை எடுத்தவர்களிடமும் எதுவும் கேட்பதில்லை. திருமணத்தின் போதே கேட்கவும் இல்லை, கறக்கவும் இல்லை.
Jayanthi Jaya January 12, 2018 at 6:52 PM
நீக்கு**வெரி குட். மிகவும் சந்தோஷம். சம்பந்தியிடம் கொடுத்துள்ளதால் தேவைப்படும்போது, தேவைப்படுவதை, நாம் கறந்து கொள்ள செளகர்யமாக இருக்குமே, என நினைத்திருப்பீர்களோ என்னவோ! :)** - கோபு அண்ணா
//அஹஹாஹாஹா!
பொண்ணை கொடுத்த சம்பந்தி கிட்ட கறப்பதா? குடுப்பது மட்டுமே. பொண்ணை எடுத்தவர்களிடமும் எதுவும் கேட்பதில்லை. திருமணத்தின் போதே கேட்கவும் இல்லை, கறக்கவும் இல்லை.//
கோச்சுக்காதீங்க ஜெயா. தாங்கள் தங்கள் சம்பந்திக்குக் கொடுத்த அன்பளிப்பு ‘காமதேனு’ என்று எழுதியிருந்ததால் ‘கறக்க’ என்ற சொல்லை ஓர் நகைச்சுவைக்காக மட்டுமே நான் எழுதியிருந்தேன்.
உங்களைப்பற்றி எனக்குத் தெரியாதா ஜெயா! மேலும் நீங்கள் கோபு அண்ணாவின் அன்புத் தங்கச்சி ஆச்சே. நம் இருவருக்குமே கொடுக்க மட்டுமே தெரியும். கறக்கச் சொன்னாலும் கறக்கத் தெரியாது.
இதனால்தான் இன்று நாம் இருவரும் மிகவும் மனமகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் வாழ முடிகிறது.
எல்லாம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹம் மட்டுமே.
நல் வாழ்த்துகள், ஜெயா ! இனிய பொங்கல் + கணு நல்வாழ்த்துகளும்.
எனக்காகவும், என்னை நினைத்துக்கொண்டும், தயவுசெய்து கணுப்பிடி வையுங்கோ ஜெயா. :)
அன்புடன் கோபு அண்ணா
மிக்க நன்றி, ஐயா.
பதிலளிநீக்குPeriyava has come to your house as Kamadenu to fulfill all your wishes.
பதிலளிநீக்குMaha Periyava has selected an auspicious day....Sani Pradosham to bless you and your family.
Periyava has come to your house as Kamadenu to fulfill all your wishes.
பதிலளிநீக்குMaha Periyava has selected an auspicious day....Sani Pradosham to bless you and your family.