அன்புடையீர் ! அனைவருக்கும் வணக்கம்.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப்புத்தாண்டு 2018 பிறக்க உள்ளது.
புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில நாட்கள் முன்பே என் அருமை நண்பரும், பெருமைக்குரிய 'எனது எண்ணங்கள்’ http://tthamizhelango. blogspot.com/ வலைப்பதிவருமான திருச்சி தி. தமிழ் இளங்கோ அவர்கள் என்னை சந்திப்பதும், புத்தாண்டுக்கான நாட்குறிப்புப் புத்தகம் (DIARY) கொடுத்துவிட்டுச் செல்வதும் வழக்கமாக வைத்துக்கொண்டிருக்கிறார். இது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக நடைபெற்று வருவதை நினைக்க, எனக்கே மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது.
25.12.2013 அன்று என் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து 2014-ம் ஆண்டுக்கான புதிய டைரியை முதன் முதலாகக் கொடுத்துச் சென்றார்.
25.12.2014 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2015-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/ 2014/12/9.html
25.12.2015 அன்று என் இல்லத்திற்கு வருகை தந்து 2016-ம் ஆண்டுக்கான புதிய டைரியைக் கொடுத்துச் சென்றார். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: https://gopu1949.blogspot.in/ 2015/12/100-2015.html
அதே போல 29.12.2016 வியாழக்கிழமை மாலை சுமார் 5.45 மணிக்கு திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு நேரில் விஜயம் செய்து, 2017-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய DIARY கொடுத்துவிட்டுப் புத்தாண்டு நல் வாழ்த்துகள் சொல்லி மகிழ்வித்திருந்தார்கள். அதுபற்றி என் பதிவினில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இணைப்பு: http://gopu1949.blogspot.in/ 2016/12/blog-post.html தலைப்பு: யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே !
இன்று 31.12.2017 ஞாயிறு இரவு 7 மணி சுமாருக்கு என் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் என் இல்லத்திற்கு திடீர் வருகை தந்து, வழக்கம்போல 2018-ம் ஆண்டுக்கான புத்தம் புதிய டைரி ஒன்றையும், நான்கு மாதுளம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கி புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லிச் சென்று மகிழ்வித்துள்ளார்கள்.
இன்று ( 31.12.2017 - ஞாயிறு இரவு ) சுடச்சுட எடுக்கப்பட்ட படங்கள் :-
2014 முதல் 2018 வரை தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளாக, நேரில் வருகை தந்து எனக்குப் புத்தாண்டு வாழ்த்துகளும் சொல்லிப் புது வருட நாட்குறிப்புப் புத்தகமும் (DIARY) கொடுத்துச்செல்லும், அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவுலக நட்புகள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு + தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
[ வை. கோபாலகிருஷ்ணன் ]
ஆவ்வ்வ்வ்வ்வ் மீதான் 1ச்ட்டூஊஊஊஊஊஊஊஉ:)
பதிலளிநீக்குஅடடா என் கண்ணையே என்னால நம்ப முடியவில்லையே... ஆஹா.. மிரட்டி வெருட்டியது வேர்க் பண்ணத் தொடங்கிட்டுதுபோல 2018 இல்:).. முதலில் வெல்கம் கோபு அண்ணன்... அடுத்துத்தான் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇளங்கோ அண்ணனுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. அப்போ எங்களுக்கெல்லாம் டயறி இல்லையோ என அவரைக் கேட்டுச் சொல்லுங்கோ:)..
பதிலளிநீக்குஅந்த சுட்டி.. குட்டிக் கண்ணன் உங்கள் வீட்டுச் சுவரில் இருப்பவரோ?.. அழகு. குட்டிக் கண்ணன் கோபு அண்ணனின் தோளில் கை போட்டு இருப்பதைப்போல இருக்கு படத்தில்.
அப்ப்போ இனிமேல் கொமெண்ட்ஸ் எதுவும் மெயிலில் அனுப்ப மாட்டீங்கள் என நம்புகிறோம்... இனி நேரடியாகவே கொமெண்ட்ஸ் போட வேண்டும் என மேன்மை தங்கிய, பெரு மதிப்புக்குரிய, அன்பான, அறிவான பண்பான ... பிரித்தானிய நீதிபதி அவர்கள்[அது நாந்தேன்ன்:)] ஆணையிடுகிறார்:).
பதிலளிநீக்குஎமது புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா.
பதிலளிநீக்குதொடர்ந்து 5 வருடங்களா !! fantabulous !!
பதிலளிநீக்குஇளங்கோ அண்ணா உங்களுக்குத்தான் முதலில் நன்றி சொல்லணும் :) இன்னிக்கு வெளியே அழைச்சிட்டு வந்திட்டீங்க கோபு அண்ணாவை .
கோபு அண்ணா ஹாப்பியா இருக்கு இப்படி நண்பர் தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் புத்தாண்டு பரிசு தருவதை பார்க்கும்போது ..
பதிலளிநீக்குஅப்படியே நாட்காட்டி டைரி படங்கள் போட்டது போல நாளைக்கு முதல் பதிவும் வரணும் உங்கள் ப்லாகில் :) .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ,இளங்கோ அண்ணாவுக்கும் மற்றும் இங்கு வருகை தரும் தரப்போகும் அனைவருக்கும்
பதிலளிநீக்குஅங்குமிங்கும் தலையை அசைத்துப்பார்த்தேன் திரும்பிப்பார்த்தேன் ஆனா ஒரு நொறுக்கு பாக்கெட் கூட கண்ணில் படலியே :)
பதிலளிநீக்குThank you very much. My New tear Greetings.
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார்.
பதிலளிநீக்குகுட்டிக் கிருஷ்ணன் கொள்ளை அழகு
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் கோபு சார். தமிழ் இளங்கோ சாருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிச்சுக்கறேன்.
பதிலளிநீக்குஅஅதிரடியான அவர் வந்ததனால மேக்கப் போட்டு நீங்க ரெடியாகலை போலிருக்கே.
பிறகு வருகிறேன்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்ஐயா
பதிலளிநீக்குபுத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா!
பதிலளிநீக்குசுவரில் பின்னணியில் இருந்து முன்னுக்கு வந்த க்ருஷணர் படம் அருமை!
மூத்த வலைப்பதிவர் திரு V.G.Kஅவர்களுக்கு எனது வணக்கம் மற்றும் உளங்கனிந்த 2018 - ஆங்கிலப் புத்தாண்டு – நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமீண்டும் வலைப்பக்கம் உங்களைக் கொண்டு வந்து இந்த 2018 ஆம் ஆண்டிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களோடு செல்போனில் பேசும் போதெல்லாம், பதிவுகள் எழுதாவிட்டாலும் பரவாயில்லை, உங்கள் மீது பிரியமுள்ள வாசகர்களின் பதிவுகளிலாவது நேரடியாக உங்கள் பின்னூட்டங்களை எழுதுங்கள் என்று சொல்லி வந்தேன். எனது பதிவு ஒன்றிலும்
// நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. //
என்று எழுதினேன்
.
நேற்று உங்களை நேரில் பார்த்த போதும் இதனையே சொன்னேன். மேலே உள்ள பதிவர்களின் பின்னூட்டங்களிலும் இதே கருத்துக்களை காண்கிறேன். இனி தொடர்ந்து எழுத வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்..
கோபு சாருக்கு வணக்கம். மிகவும் மகிழ்ச்சி! கோபு சாரை டயரி கொடுத்து மீண்டும் வலைப்பக்கம் கொண்டு வந்த இளங்கோ சாருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். கோபு சாருக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்! தொடர்ந்து வலைப்பூவில் எழுதக்கூடிய உற்சாகத்தையும், மனநிலையையும் இந்த ஆண்டு கொடுக்க வேண்டும். புத்தாண்டில் புத்துணர்ச்சியுடன் நீங்கள் வலம் வர வேண்டும் என வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குவணக்கம் கோபு சார் நலமா ? உங்களை பதிவுகளை தான் தேடினேன் திரும்பியவுடன் பிறகுதான் தெரிந்தது நீங்கள் பதிவுகள் தருவதை தற்பொழுது நிறுத்தியுள்ளிர்கள் என்று மீண்டும் உங்கள் வலைப்பூவில் உங்களை கண்டத்தில் பெரு மகிழ்ச்சி
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நட்பைப் போற்றும் திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் அதை மகிழ்ந்து பகிரும் உங்களுக்கும் இனிய காலை வணக்கங்கள்,
பதிலளிநீக்குஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நட்புகளுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்களையும் தமிழ் இளங்கோ அவர்களையும் மீண்டும், ஆண்டு முடிவில் ஒருசேரப் பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.
பதிலளிநீக்குநீங்களும் நீண்ட விடுமுறைக்குப் பிறகு, aptஆக புத்தாண்டில் முதல் பதிவு வெளியிட்டுள்ளீர்கள். வருக வருக என்று வரவேற்கிறேன்.
மாதுளம்பழம், உங்கள் வீட்டில் மனைவி காபி தயாரித்துக்கொடுத்ததால் (எல்லா வருடங்களிலும்), தமிழ் இளங்கோ அவர்கள் கொடுத்த symbolic பழமாக இருக்குமோ? (மாது உளம் பழம்)
நாட்குறிப்புப் புத்தகம் தந்தார் சரி. 'நீங்கள் அதை எதற்கு உபயோகப்படுத்தினீர்கள் (கடந்த காலங்களில்)?
ஒவ்வொரு படமாக (அந்த அந்த ஆண்டில்) பார்த்துக்கொண்டுவரும்போது, இந்த ஆண்டு, நீங்கள் இளந்தாடி முகத்தோடு பார்ப்பதற்கு (வைதீக நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துகொண்டிருப்பதில் பிஸியாக இருப்பதால் இருக்கும்) கொஞ்சம் திடுக் என்றுதான் இருக்கிறது.
உங்களிருவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நீங்கள் எதைச் சொன்னாலும் சரி, எழுதினாலும் சரி அதில் ஓர் அலாதியான நேர்த்தி இருக்கும்.
பதிலளிநீக்குஇந்த ஆங்கில ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை அன்பர்களுக்கு ஒரு பின்புல தகவல்களோடு சொன்னதும் வை.கோ. பதிவு என்றால் படங்கள் இல்லாமல் இருக்காது என்னும் வழக்கத்தை மீண்டும் புதுப்பித்திருப்பதும் இந்த ஆண்டு தொடக்கத்திற்கான நேர்த்தி.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்களின் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் கோபு சார்!
இந்த புதிய ஆண்டு மகிழ்வோடு அமைய எனது வாழ்த்துக்களும்...ஐயா...
பதிலளிநீக்குபோன வாரம் திருச்சி வந்து...மலைக்கோட்டை ஏறிய போது உங்கள் நினைவு வந்தது....
உங்கள் இருவரையும் கண்டதில் மகிழ்ச்சி. இவ்வாறான பழக்கங்கள் நட்பினை மேம்படுத்தும். மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்.
பதிலளிநீக்குஇங்கு வருகை தந்து கருத்தளித்து மகிழ்வித்துள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பதிலளிநீக்குநேரமின்மையால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதில் அளிக்க இயலவில்லை. மன்னிக்கவும்.
அன்புடன் கோபு (VGK)
அன்புள்ள கோபு ஸார் ,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களின் இந்தப் பதிவைக் கண்டதும், தங்களின் நட்பு வட்டம்....பெரிய
பாதுகாப்பு வளையம் போலிருக்கு. இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.
நன்றி.
வாழ்க வளமுடன்
ஜெயஸ்ரீ ஷங்கர்
ஜெயஸ்ரீ ஷங்கர் January 10, 2018 at 2:35 PM
நீக்குஆஹா! வாங்கோ ’ஸ்ரீ’ மேடம். ’ஜெயஸ்ரீ’ என்ற உங்கள் பெயரைப் பார்க்கும் போதெல்லாம், நான் என்னுடைய, ஒரு சிறுகதையில் எழுதியுள்ள கதாநாயகி பெயரே, எனக்கு ஏனோ உடனடியாக நினைவுக்கு வந்து விடுகிறது. :)
அந்தக் கதைக்கான இணைப்பு இதோ:
http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html
-=-=-=-=-
மேற்படி சிறு கதைக்கான விமர்சனப்போட்டியில் பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களைப் படிக்க இதோ இணைப்புகள்:
முதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-02-03-second-prize-winners.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-03-03-third-prize-winner.html
-=-=-=-=-
//அன்புள்ள கோபு ஸார், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...//
மிக்க மகிழ்ச்சி ‘ஸ்ரீ’ மேடம். :)
//தங்களின் இந்தப் பதிவைக் கண்டதும், தங்களின் நட்பு வட்டம்....பெரிய பாதுகாப்பு வளையம் போலிருக்கு.//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை மேடம். சிலரிடம் மட்டும் எனக்குக் கொஞ்சம் அட்டாச்மெண்ட். :) அதுபோல சிலருக்கு என் மீது மிகவும் கூடுதலான அட்டாச்மெண்ட். :)) அம்புட்டுதான்.
//இதற்கெல்லாம் கொடுப்பினை வேண்டும்.//
ஆமாம். அந்தக் கொடுப்பினை எனக்கும் கொஞ்சூண்டு இருப்பதால்தான், இதற்கு அடுத்து 2018-புத்தாண்டின் முதல் பதிவாக -o- ’காமதேனு’ அனுப்பி வைத்த ‘காமதேனு’ -o- என்ற தலைப்பினில் ஓர் பதிவினை என்னால் வெளியிட முடிந்துள்ளது. அதற்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2018/01/blog-post.html
//நன்றி.//
இது தங்களுக்கு நான் சொல்லவேண்டிய வார்த்தையாகும். என் மனம் நிறைந்த இனிய அன்பு ‘நன்றிகள்’.
//வாழ்க வளமுடன் - ஜெயஸ்ரீ ஷங்கர்//
இந்த ‘வாழ்க வளமுடன்’ என்ற வார்த்தைகளைப் பற்றி, எனக்கு மிகவும் பிடித்தமான ‘தென்கச்சி கோ. சாமிநாதன்’ அவர்கள், நகைச்சுவையாக ஓர் விஷயம் சொன்னார். அதனைக் கேட்டதும், குப்புன்னு நான் சிரித்து விட்டேன். :)))))
இப்போதும் அதை நினைத்து எனக்குள் சிரித்து மகிழ்ந்தேன். :)))))
பிரியத்துடன் கோபு
முதற்கண் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தாங்கள் திரும்பவும் பதிவுலகம் வந்ததில் பெருமகிழ்ச்சி. எனது மடிக்கணினி செயலிழந்துவிட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக வலைப்பக்கமே வர இயலவில்லை. இப்போது புதிதாய் மடிக்கணினி வாங்கி இன்று தான் நான் முதல் பதிவு போட்டிருக்கிறேன். தங்களது புதிய பதிவுகளை படித்து கருத்து இடுவேன்.
பதிலளிநீக்குவே.நடனசபாபதி January 13, 2018 at 5:59 PM
நீக்குவாங்கோ ஸார், வணக்கம்.
//முதற்கண் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார். தங்களுக்கும் என் ஆங்கிலப்புத்தாண்டு + பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் இங்கு ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறேன்.
//தாங்கள் திரும்பவும் பதிவுலகம் வந்ததில் பெருமகிழ்ச்சி.//
ஒருசில பதிவர் சந்திப்புகள் + எதிர்பாராத பரிசுகள் கிடைத்த விஷயங்களைப் பதிவிட நேர்ந்துள்ளது.
//எனது மடிக்கணினி செயலிழந்துவிட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக வலைப்பக்கமே வர இயலவில்லை.//
தாங்கள் மடியாக வைத்திருந்த மடிக்கணினி விழுப்பாக ஆகிவிட்டதோ :)))))
//இப்போது புதிதாய் மடிக்கணினி வாங்கி இன்று தான் நான் முதல் பதிவு போட்டிருக்கிறேன்.//
மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள். தங்கள் பதிவினைப் பார்த்ததற்கு அடையாளமாக தமிழ்மண வோட் அளித்துள்ளேன். என் தற்போதைய வழக்கம்போல மின்னஞ்சல் மூலம் கருத்தளித்தும் விட்டேன்.
//தங்களது புதிய பதிவுகளை படித்து கருத்து இடுவேன்.//
மிகவும் சந்தோஷம். சமீபத்தில் 2018-ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஏதோ 2-3 பதிவுகள் மட்டுமே தங்களின் வருகைக்காகக் காத்துள்ளன.
அன்புடன் VGK