என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 8 ஜனவரி, 2018

’ஹனிமூன்’ வந்துள்ள பதிவர்!

அன்புடையீர், 

அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.

திருச்சி ஹோட்டல் 
’அஜந்தா’வில் அகப்பட்ட 
‘ஹனிமூன்’ தம்பதியினர் :)
^பெருமாள் சந்நதியில் 
எங்களுக்குள் ஓர் கட்டிப்பிடி வைத்தியம் ! :)^


^அசந்துபோய் சற்றே அமர்ந்த நிலையில்^


^அங்குள்ள கல்வெட்டுச் செய்தி^
இதே நாளில் (05.12.1966) சம வயதினரான
நாங்கள் இருவரும் ’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ ஆக
துள்ளித் திரிந்துகொண்டு இருந்திருப்போம். ^அவர் அன்புடன் எனக்கு அளித்த சரக்குகள்!^
மேற்படி ’சைட் டிஷ்’ விபரங்கள் கீழே மிகத்தெளிவாக :)


  
^அடியேன் அவருக்கு அளித்த முக்கனிகள்^


அடியேன் அவருக்கு அளித்த 
‘எங்கெங்கும்.. எப்போதும்.. என்னோடு..!’
என்ற நூல் அன்பளிப்பு.

 


^சிற்றுண்டி சாலையில் 
சூடான, சுவையான தூள் பக்கோடா + 
ஸ்ட்ராங்க் ’காஃபி’க்காகக் காத்திருந்தபோது^

 

^ நான் ஆவலுடன் எதிர்பார்த்த அவை, ஒருவழியாக 
வந்து சேர்ந்து, எனக்கு ஓர் பேரெழுச்சி ஏற்பட்ட போது^

 

முத்தான மூவரில் 
முதலில் ஒருவர் மட்டும் சற்றே
சதைப் பத்தானவராகத் தெரிகிறாரோ? 


^அவர்களுக்குள் சரக்குகள் பரிமாறி 
’சியர்ஸ்’ சொல்லிக்கொண்டபோது^ 


மேற்படி இனிய பதிவர்கள் சந்திப்பு 

நிகழ்ந்த நாள் மற்றும் நேரம்: 
07.01.2018 ஞாயிறு
பிற்பகல் 5.30 முதல் 7 மணி வரை

நிகழ்ந்த இடம்:
’ஹோட்டல் அஜந்தா’
திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகே.

ஹனிமூன் வந்துள்ள இளம் பதிவர்:
திரு. ’இராய செல்லப்பா யக்ஞசாமி’ அவர்கள்

அவரின் வலைத்தளங்கள்:


இவர், இதுவரை நான் நேரில் சந்தித்துள்ள 
42-வது பதிவராகும்.

என்னுடைய மற்ற சந்திப்புகள் பற்றிய 
முழு விபரங்களை, அரிய படங்களுடன் அறிய
இதோ சில இணைப்புகள்:

சந்தித்த வேளையில் .....


பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் .....

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html

பகுதி-2 க்கான இணைப்பு:

பகுதி-3 க்கான இணைப்பு:


^பகுதி-3 க்கான இணைப்பு:^

பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:
பகுதி-6 க்கான இணைப்பு:
பகுதி-7 க்கான இணைப்பு:

புதுக்கோட்டை via மலைக்கோட்டை

மீண்டும் ஓர் இனிய சந்திப்பு

யானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே .... !

முனைவர் ஐயாவுடன் ‘ஹாட்-ட்ரிக்’ சந்திப்பு

சிலுக்கு ஜிப்பா + ஜரிகை வேஷ்டியுடன் 81+ வயது இளைஞர்

2017 >>>>> 2018 வாழ்த்துகள்

40 மற்றும் 41 ஆவது பதிவர்களை நான் சந்தித்தது
ஜீவி - புதிய நூல் - அறிமுகம் - பகுதி-6


நேற்றைய சந்திப்பில் என்னுடன் கலந்துகொண்டு மகிழ்வித்த எனது அருமை நண்பர் + பிரபல பதிவர் திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

நேற்றைய எங்களின் சந்திப்பு பற்றிய, மேலும் சூடான சுவையான விஷயங்களை, தகுந்த படங்களுடன், தனக்கே உரித்தான தனிப்பாணியில், நம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் தனது வலைத்தளத்தின், விரைவில் வெளியிடுவார் என நம்புகிறேன்.
என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


78 கருத்துகள்:

 1. இம்முறை மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)).. ஓஓஓஓஓ லலலலாஆஆஆஆஆஆஆஆஆஆ:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athiraமியாவ் January 8, 2018 at 3:05 PM

   வாங்கோ அதிரா, வணக்கம்.

   //இம்முறை மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:))..//

   இம்முறை மட்டுமல்ல. எத்தனையோ முறை நீங்கதான் ஃபஸ்ட்டூலே வந்திருக்கீங்கோ.

   அதற்காக இதோ http://gopu1949.blogspot.in/2017/06/8-of-8.html இந்தப்பதிவிலே, பம்பர் பரிசுகளாக வாங்கிக் குவித்துள்ளீர்கள்.

   அதிலுள்ள 153 பின்னூட்டங்களில் மேலிருந்து கீழே மூன்றாவதில் ஓர் அருமையான, அழகான CERTIFICATE கூட என்னிடமிருந்து வாங்கியிருக்கீங்கோ. அடிக்கடி அதனைப் படித்துப்பார்த்து நான் சிரித்துக்கொண்டே இருக்கிறேன். :)

   //ஓஓஓஓஓ லலலலாஆஆஆஆஆஆஆஆஆஆ:)) //

   இம்முறை யாரையும் பாட்டுவிடாமல், பாட்டுப்பாடிக் காட்டியுள்ளது, தங்கள் தங்கமான மனதினில் கரைபுரண்டு ஓடிடும் (தேம்ஸ்) மகிழ்ச்சியைக் காட்டுகின்றது. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, அதிரா.

   அன்புடன் கோபு அண்ணன்

   நீக்கு
 2. கேக் எவ்வளவு கிடைத்தது (புதுவருட அன்று இரவு) என்று எழுதாமல் விட்டுவிட்ட செல்லப்பா சார், ஏதோ ஒரு பின்னூட்டத்தில் 'திருச்சியிலிருந்து' என எழுதியிருந்தார். 'கப்' என்று அவரைப் பிடித்துவிட்டீர்களே.

  திருமழபாடியிலிருந்து நண்பர் வந்ததனால், உங்கள் முகத்தையும் மழ மழவென்று பளிச்சென்று வைத்திருக்கிறீர்கள். புதிய படம் பார்த்து மகிழ்ச்சி.

  'நான் சொன்னதுபோலவே நடந்தது அறிந்து சந்தோஷம் (ஏதேனும் வரவு இருந்தால்தான் இங்கு பதிவு வரும்போலிருக்கு. முதலில் டயரி, இரண்டாவது காமதேனு படம், மூன்றாவது நொறுக்ஸ்/முறுக்ஸ்)

  தமிழ் இளங்கோ, செல்லப்பா சார் இருவரும் பரிமாறிக்கொள்வதில் இருக்கும் படம் 'பிள்ளையாரா'? ரொம்பத் தெளிவாத் தெரியலையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///முதலில் டயரி, இரண்டாவது காமதேனு படம், மூன்றாவது நொறுக்ஸ்/முறுக்ஸ்)///

   ஹா ஹா ஹா இது கோபு அண்ணனுக்கே நினைவிருக்குமோ தெரியாது:)).. இவருக்குப் புகையுதூஊஊஊஊஊஊ ஹா ஹா ஹா:))

   நீக்கு
  2. நெல்லைத் தமிழன் January 8, 2018 at 3:27 PM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //கேக் எவ்வளவு கிடைத்தது (புதுவருட அன்று இரவு) என்று எழுதாமல் விட்டுவிட்ட செல்லப்பா சார், ஏதோ ஒரு பின்னூட்டத்தில் 'திருச்சியிலிருந்து' என எழுதியிருந்தார்.//

   அவர் ஒரு ’உலகம் சுற்றும் வாலிப ன்/ர்)’ ஆக இருப்பதனால், பின்னூட்டமிடும் போது, தான் இப்போது எந்த ஊரில் இருக்கிறேன் என்பதைத் தெளிவாக எழுதிவிடுவார். அது அவரிடம் எனக்கும் பிடித்துள்ளதோர் விஷயமாகும்.

   //'கப்' என்று அவரைப் பிடித்துவிட்டீர்களே.//

   ஒருவேளை ஒரு ’கப்’ காஃபிக்காக அவரை நான் ’கப்’பென்று பிடித்திருப்பேனோ என்று ஒருவேளை நீங்கள் நினைத்து விட்டீர்களா? :)

   ஆக்சுவலாக, அவரே என்னைத்தேடி என் இல்லத்திற்கு வருவதாகத்தான் இருந்தார். உலக மஹா சோம்பேறியான நான், போகவர ஆட்டோ பேசிக்கொண்டு, அவரைத்தேடி அங்கு போனது ..... அது ஒரு மிகப்பெரிய கதை. :)

   //திருமழபாடியிலிருந்து நண்பர் வந்ததனால், உங்கள் முகத்தையும் மழ மழவென்று பளிச்சென்று வைத்திருக்கிறீர்கள். புதிய படம் பார்த்து மகிழ்ச்சி.//

   திருமழபாடிக்காரர் நம்ம ஊர் (உள்ளூர்) நம்ம ஆளு ஆச்சே ! அவருக்காக என்று இல்லை. ஷேவிங் செய்து ஒரு வாரம் ஆச்சு. அரிப்பெடுத்து விட்டது. மேலும் எனக்கு வலது பக்கம் ஷேவிங் செய்து முடித்து விட்டு, இடது பக்கம் ஷேவ் செய்வதற்குள், வலது பக்கம் மீண்டும், முள்ளு முறுக்குபோல எனக்கு முடி முளைத்து விடும். அதே நேரம், வழவழன்னு, சும்மா பருப்புத் துவையல் போல,
   ஸில்க் போல ஸ்மூத் ஆகும் வரையும், எனக்கு முழுத் திருப்தி ஏற்படும்வரையும், நான் விடவே மாட்டேன். இதற்காக மூன்று வித உபகரணங்களை நான் உபயோகித்து வருகிறேன். (1) பேட்டரியில் இயங்கி நுனிப்புல் வெட்டும் டிரிம்மர் (2) பேட்டரியில் இயங்கி அடிப்புல் வெட்டும் மற்றொரு ட்ரிம்மர் (3) ஃபைனலாக புது ப்ளேடு + நார்மல் ரேஸர். எது செய்தாலும் (அது ஷவர வேலையாக இருப்பினும்) எனக்கு அதில் ஒரு PERFECTION + FULL SATISFACTION ஏற்பட வேண்டும், ஸ்வாமீ. :)

   //'நான் சொன்னதுபோலவே நடந்தது அறிந்து சந்தோஷம் (ஏதேனும் வரவு இருந்தால்தான் இங்கு பதிவு வரும்போலிருக்கு. முதலில் டயரி, இரண்டாவது காமதேனு படம், மூன்றாவது நொறுக்ஸ்/முறுக்ஸ்) //

   அப்படியெல்லாம் இல்லை ஸ்வாமீ. பதிவர் சந்திப்புக்கள் எப்போது நடந்தாலும் நான் இதுவரை பதிவிட்டு வந்துள்ளேன். அதுபோலத்தான் இந்த மூன்று பதிவுகளில் இரண்டு, பதிவர் சந்திப்பாக அமைந்துள்ளது என்பதை தயவுசெய்து கவனிக்கவும்.

   ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ படம் மட்டும், லோக க்ஷேமத்திற்காகவும், தரிஸிக்கும் அனைவருக்கும் புண்ணியம் கிடைக்கட்டும் என்றதொரு நல்லெண்ணத்திலும், இந்த ஆண்டின் முதல் பதிவாக நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ளேன். இதில் வரவு செலவு கணக்கெல்லாம் பார்ப்பவன் அல்ல நான்.

   //தமிழ் இளங்கோ, செல்லப்பா சார் இருவரும் பரிமாறிக்கொள்வதில் இருக்கும் படம் 'பிள்ளையாரா'? ரொம்பத் தெளிவாத் தெரியலையே.//

   திரு. செல்லப்பா ஸார், திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்குக் கொடுத்துள்ளதும், எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது போலவே ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் + காரமாக இருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

   திரு. தமிழ் இளங்கோ அவர்கள் திரு. செல்லப்பா ஸாருக்குக் கொடுத்துள்ளது மிகவும் ஒஸ்தியான 2018க்கான டயரி என்று கேள்வி. அதன் மேல் அட்டை, பிள்ளையார் படமாக இருக்கலாம். டயரியைத் தவிர திரு. ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி வெளியிட்டிருந்த ’ஆரண்ய நிவாஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலை விலை கொடுத்து வாங்கி பரிசாக அளித்துள்ளார்.

   மேற்படி ‘ஆரண்யநிவாஸ்’ என்ற சிறுகதைத் தொகுப்பு நூலினை, பிறருக்குப் பரிசளிக்க வேண்டியே, 5-6 பிரதிகளாக விலை கொடுத்து வாங்கித்தள்ளியுள்ள ஒரே ஆசாமி, இந்த உலகிலேயே, நம் திரு. தமிழ் இளங்கோ அவர்கள்
   ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். :)

   அன்புடன் கோபு

   நீக்கு
  3. நண்பர் நெல்லைதமிழன் அவர்களுக்கு வணக்கம்.

   // தமிழ் இளங்கோ, செல்லப்பா சார் இருவரும் பரிமாறிக்கொள்வதில் இருக்கும் படம் 'பிள்ளையாரா'? ரொம்பத் தெளிவாத் தெரியலையே.//

   திரு இராய.செல்லப்பா தம்பதியினர் , V.G.K அவர்களுக்கு கொடுத்த ஸ்வீட் காரம் பை போன்றே எனக்கும் தந்தனர். நான் இராய.செல்லப்பா அவர்களிடம் கொடுத்தது 'GOOD DAY' பிஸ்கட் பாக்கெட், திருப்பதி வெங்கடாசலபதி படம் போட்ட 2018 வருட தமிழ் டைரி மற்றும் ஆரண்யநிவாஸ் என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் ஆகியவை.

   நீக்கு
  4. கோபு சார்... அப்போ சுடச் சுட பொங்கல் பதிவு வருது என்று சொல்லுங்க.

   முதலில் சாப்பிடும் மேஜையைப் பார்த்து இது மதுராவா அல்லது ராமா என்று யோசித்தேன். அப்புறம் செல்லப்பா சார் தங்கிய ஹோட்டலின் உணவகமாக இருக்கும் என்று நினைத்தேன்.

   பதிவில் படங்கள் வெளியிட்டால், அதனைக் கூர்ந்து பார்க்கவேண்டாமோ?

   இந்த நொறுக்ஸ் எல்லாம் உங்கள் வீட்டு போலீசின் கண்ணில் படாமல், உங்கள் மேசை டிராயருக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லை செக்யூரிட்டி செக்கில் மாட்டிக்கொண்டுவிட்டதா?

   நீக்கு
  5. நெல்லைத் தமிழன் January 9, 2018 at 11:50 AM

   வாங்கோ ஸ்வாமீ, வணக்கம்.

   //கோபு சார்... அப்போ சுடச் சுட பொங்கல் பதிவு வருது என்று சொல்லுங்க.//

   அது எப்படி நான் உறுதியாகச் சொல்ல முடியும்? ஒருவேளை, பொங்கல் நேரம், நீங்க இங்கே திருச்சிக்கு எங்காத்துக்கு வந்து, எங்காத்து சமையல் அறையிலேயே, எங்களுக்கெல்லாம் அக்கார அடிசல் செய்து கொடுத்து அசத்த நினைத்துள்ளீர்களா? :)

   வரும் பிப்ரவரி மாதத்தில், உலகப்புகழ் பெற்றதொரு V.V.I.P. எழுத்தாளர் cum பதிவரை நான் சந்திக்கும் சந்தர்ப்பம் கிட்டலாம் என எனக்குத் தோன்றுகிறது.

   அந்தப் பதிவர் சந்திப்பினை நான் வெளியிடும் வரை ‘அவர் யார்?’ என்பதை சொல்லாமல் சஸ்பென்ஸில் வைத்துக்கொள்ள நினைக்கிறேன்.

   //முதலில் சாப்பிடும் மேஜையைப் பார்த்து இது மதுராவா அல்லது ராமா என்று யோசித்தேன். அப்புறம் செல்லப்பா சார் தங்கிய ஹோட்டலின் உணவகமாக இருக்கும் என்று நினைத்தேன். //

   எங்கள் வீட்டருகே உள்ள ’மதுரா ஹோட்டல்’ அல்லது ‘ராமா கஃபே’ என்றால் இப்படியா காத்து வாங்கிக்கொண்டு இருக்கும். ஆர அமர உட்காரவோ பேசவோ முடியாமல், எப்போதுமே ஜே ஜே என்று கூட்டமாக அல்லவா இருக்கும். :)

   //பதிவில் படங்கள் வெளியிட்டால், அதனைக் கூர்ந்து பார்க்கவேண்டாமோ?//

   நிச்சயமாக ...... ஆனால் தங்களைப் போல ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க யாருக்குமே, இப்போதெல்லாம் பொறுமையோ நேரமோ இருப்பது இல்லை. [Including myself]

   //இந்த நொறுக்ஸ் எல்லாம் உங்கள் வீட்டு போலீசின் கண்ணில் படாமல், உங்கள் மேசை டிராயருக்குப் போய்ச் சேர்ந்ததா? இல்லை செக்யூரிட்டி செக்கில் மாட்டிக்கொண்டுவிட்டதா?//

   எங்கள் வீட்டு போலீஸார் வசம், நான் அப்படியே அனைத்தையும் சப்ஜாடாக ஒப்படைத்து விட்டேன். அவர்கள் பார்த்து, ஆராய்ச்சியும் விநியோகமும் செய்துகொள்வார்கள். நமக்கும் அதற்கும்தான் இப்போதெல்லாம் சம்பந்தம் ஏதும் இல்லையே, ஸ்வாமீ. :(

   நீக்கு
 3. முக்கனி என்றாலே மா, பலா, வாழைதான். இப்போ மாம்பழ, பலாப் பழ சீசன் இல்லையே. ஒருவேளை, வாழைப்பழமும், மற்ற இரண்டு பழங்களின் படங்களும் கொடுத்துவிட்டீர்களா? படத்துல சாத்துக்குடி இருப்பதுபோல்னா எனக்குத் தெரியுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத் தமிழன் January 8, 2018 at 3:29 PM

   //முக்கனி என்றாலே மா, பலா, வாழைதான்.//

   அது எனக்கும் தெரியுமாக்கும். இங்கு ’முக்கனி’ என்றால் ஏதோ இந்த சீஸனில் கிடைக்கும் மூன்று விதமான பழங்கள் என்று அர்த்தமாக்கும். :)

   //இப்போ மாம்பழ, பலாப் பழ சீசன் இல்லையே. ஒருவேளை, வாழைப்பழமும், மற்ற இரண்டு பழங்களின் படங்களும் கொடுத்துவிட்டீர்களா? படத்துல சாத்துக்குடி இருப்பதுபோல்னா எனக்குத் தெரியுது.//

   ’நக்கீரர்’ ஆன உமது கண்பார்வை படு ஷார்ப். வாழைப்பழங்கள், சாத்துக்குடி பழங்கள் + பேரீச்சைப்பழ பாக்கெட் ஆகிய முக்கனிகள் என்னால், ஏதோ எத்கிஞ்சித் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன.

   அதுவும் போகும்வழியில், ஆட்டோவில் அமர்ந்தபடியே வாங்கியவைகளாகும். :)

   நீக்கு
 4. அடடே.. செல்லப்பா ஸாருடன் சந்திப்பா? கூட இளங்கோ ஸாருமா? இனிமைதான், இளமைதான்! சியர்ஸ்....!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். January 8, 2018 at 3:34 PM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்! வணக்கம்.

   //அடடே.. செல்லப்பா ஸாருடன் சந்திப்பா? கூட இளங்கோ ஸாருமா? இனிமைதான், இளமைதான்! சியர்ஸ்....!//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. ‘கிக்’கும் அதிகம்! :)

   அன்புடன் கோபு

   நீக்கு
 5. அருமை.. அருமை.. அருமையான சந்திப்பு... நல்ல சூப்பரா இருக்குது மிக்ஸர் பார்க்க... தனியே ஒளிச்சு வச்சு மொறு மொறு எனச் சாப்பிடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athiraமியாவ் January 8, 2018 at 4:02 PM

   //அருமை.. அருமை.. அருமையான சந்திப்பு...//

   மிகவும் சந்தோஷம்.

   //நல்ல சூப்பரா இருக்குது மிக்ஸர் பார்க்க... தனியே ஒளிச்சு வச்சு மொறு மொறு எனச் சாப்பிடுங்கோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//

   ஆமாம். பார்க்க நல்லாத்தான் சூப்பரா இருக்குது அதிரா ..... ஆனாலும் எங்கட அதிராவுக்குக் கொடுக்காமல் சாப்பிடத் தோன்றாததால் அதனை நான் இன்னும் பிரிக்காமல் அப்படியே வைத்துள்ளேன். உடனே புறப்பட்டு வாங்கோ ..... நாம் பகிர்ந்து சாப்பிட்டு மகிழ்வோம். :) எப்போ வருவீங்கோ? வரும்போது உங்க செக்ரெடரியையும் மறக்காமல் கூட்டிட்டு வாங்கோ, ப்ளீஸ்.

   நீக்கு
 6. அந்தப் பக்கோடா பார்க்கவோ மொறு மொறு எனச் சாப்பிடத் தூண்டுது... நீங்க ச்ச்ச்சும்மாவே உயரம்தானே இதில வேறு உயர்ந்த காலணி போட்டுக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athiraமியாவ் January 8, 2018 at 4:03 PM

   //அந்தப் பக்கோடா பார்க்கவோ மொறு மொறு எனச் சாப்பிடத் தூண்டுது...//

   ஆக்சுவலாக இது கூகுள் பக்கோடா. அங்கு சப்ளை செய்யப்பட்டது இன்னும் ஜோராகவே இருந்தது. உங்களை நான் நினைத்துக்கொண்டே கொரித்ததாலோ என்னவோ, என் தட்டு இரண்டே நிமிடங்களில் காலியாகி விட்டது. :( ........... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். :)

   //நீங்க ச்ச்ச்சும்மாவே உயரம்தானே//

   ஆமாம். நான் ஆறு அடிக்கு ஓரிரு செண்டிமீட்டர் கம்மி. [ அதாவது 178 Cms. ]

   //இதில வேறு உயர்ந்த காலணி போட்டுக்கொண்டிருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்:))//

   உங்களைப்போல ஹை ஹீல்ஸ் எல்லாம் நான் அணிவது இல்லை. அதெற்கெல்லாம் எனக்கு அவசியமும் இல்லை.

   ‘உயர்ந்த’ என்பதற்கு High Quality என்ற இன்னொரு அர்த்தமும் உள்ளது. அதைச் சொல்றீங்களோ என்னவோ. :))

   பொதுவாக என் பாத அளவு மிகவும் பெரியது, அதிரா. குதிகால் பின் பகுதியிலிருந்து, கட்டைவிரல் நகம் + சதை வரை, சுத்தமாக 12 அங்குல நீளம். எனக்கு 14 சைஸ் செருப்பு தான் சரியான அளவாக உள்ளது. ஆனால் எந்தக் கடைகளிலும் 12-13 சைஸுக்கு மேல் இங்கு கிடைப்பது இல்லை.

   மும்பை போனபோது அங்குள்ள மிகப்பெரிய சப்பல் பஜார் என்பதில் உள்ள ஆயிரக்கணக்கான கடைகளில் நான் ஏறி இறங்கியும் எனக்கு என் கால் சைஸுக்கு செருப்பு கிடைக்கவே இல்லை. வெறுத்துப்போனேன்.

   பொதுவாக ஜெர்மானியர்களின் கால் பாதங்கள், என் கால் பாதங்கள் போல பெரியதாக இருக்கும் என்று கேள்விப்பட்டுள்ளேன். எனக்கான ரெடி-மேட் செருப்புகள் ஜெர்மனியில் ஒருவேளை கிடைக்குமோ என்னவோ. இதைப்பற்றி யாரிடமாவது கேட்டுச் சொல்லுங்கோ, ப்ளீஸ்.

   நான் இங்குள்ள செருப்புக்கடைகளில், என் கால் அளவைக்கொடுத்து, புதிதாகச் செய்யச் சொல்லி வாங்கிக்கொள்வேன். ஒவ்வொரு முறை நான் ஆர்டர் கொடுக்கும்போதும், இரண்டு இரண்டு ஜோடிகளாகச் செய்யச் சொல்லி ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொண்டு விடுவேன். எப்போதும் ஒரு ஜோடி என்னிடம் ஸ்பேராக இருக்கும்.

   நீக்கு
 7. பார்த்தேன். படித்தேன். பரவசமானேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி January 8, 2018 at 4:22 PM

   வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

   //பார்த்தேன். படித்தேன். பரவசமானேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.

   நீக்கு
 8. முன்னெல்லாம் பதிவர் சந்திப்பு எனில் போண்டா! இப்போ சூடான பக்கோடா! அருமையான பொழுதாகக் கழிந்திருக்கும். கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள். பக்ஷணங்கள் கண்ணையும், மனதையும் கவர்ந்து இழுக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam January 8, 2018 at 5:13 PM

   வாங்கோ, வணக்கம்.

   //முன்னெல்லாம் பதிவர் சந்திப்பு எனில் போண்டா! இப்போ சூடான பக்கோடா!//

   உருளைக்கிழங்கு + வெங்காயம் போட்ட, குட்டியூண்டு போண்டாக்கள் சுடச்சுட இருந்தால் சாப்பிட ஜோராக இருக்கும். அதுபோலவே குட்டியூண்டு சைஸ் உளுத்தம் போண்டா சூடாக இருந்து, தொட்டுக்கொள்ள நல்ல தேங்காய் சட்னியும் இருந்தால் ஒரு, ஒரு டஜன் வரை மிகச் சுலபமாகச் சாப்பிடலாம்.

   இவைகளே, சூடு (சொரணை) இல்லாமல், மந்தியாக ஆறிப்போய், அதுவும் சாத்துக்குடி சைஸுக்கு இருந்தால், ஒன்று கூட சாப்பிட முடியாது.

   அதுபோல இந்த பட்டணம் பக்கோடா என்று ஒன்று உண்டு. அது சகிக்காது. மென்னியைப்பிடிக்கும். மாவு மாவாக உதிறும். அதை என்னவோ சிலர் மிகவும் கொண்டாடிக் கொண்டு வருகிறார்கள்.

   இவற்றுடன் ஒப்பிடும்போது, சூடான + சுவையான, இந்த தூள் பக்கோடா என்பது எவ்வளவோ மேல் என்று சொல்லலாம்.

   //அருமையான பொழுதாகக் கழிந்திருக்கும். கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள். பக்ஷணங்கள் கண்ணையும், மனதையும் கவர்ந்து இழுக்கின்றன.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 9. பதிவு மிக மிக சுவாரஸ்யம். அசத்தி விட்டீர்கள் கோபு சார். வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. rajalakshmi paramasivam January 8, 2018 at 5:58 PM

   வாங்கோ மேடம், வணக்கம். செளக்யமா?

   //பதிவு மிக மிக சுவாரஸ்யம். அசத்தி விட்டீர்கள் கோபு சார். வாழ்த்துக்கள் சார்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. பதிவர்கள் மூவரையும் இங்கே சேர்ந்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனோ சாமிநாதன் January 8, 2018 at 6:42 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //பதிவர்கள் மூவரையும் இங்கே சேர்ந்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம். :)

   நீக்கு
 11. அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்! நேற்று (07.01.18) திருச்சி, ஹோட்டல் அஜந்தாவில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பினை, நேற்று சுடச்சுட சாப்பிட்ட மொறு மொறு பக்கோடாவைப் போலவே, இன்று சுடச்சுட இந்த பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி. வலைப்பதிவர் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிதானே.

  என்னை, எப்போதும், நான் இப்போது இருக்கின்ற ஊர்ப் பெயரோடு, எங்களது சொந்த ஊர்ப் பெயரையும் சேர்த்து திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ என்று அழைக்கின்றவர் நீங்கள் ஒருவர்தான்; அதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்..

  உங்கள் பதிவினில், ஹோட்டல் அஜந்தாவில் உள்ள திறப்புவிழா கல்வெட்டைப் பார்த்ததும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அந்நாளைய மூத்த தலைவர்கள் நினைவில் வந்தார்கள்.

  இந்த சந்திப்பினைப் பற்றி நீங்களே எழுதி விட்டதாலும், அய்யா திரு இராய.செல்லப்பா அவர்களும் எழுதுவார் என்பதாலும், நான் எழுதுவதற்கு தேவை இருக்காது என்று நினைக்கிறேன்.

  நீங்கள் இந்த பதிவினில் நீங்கள் குறிப்பிட்ட, வலைப்பதிவர் சந்திப்பு பதிவுகளில், நான் உங்களோடு சந்தித்த நிகழ்வுகளை மட்டும், மீண்டும் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ January 8, 2018 at 6:47 PM

   //அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம்!//

   வாங்கோ ஸார், வணக்கம்.

   //நேற்று (07.01.18) திருச்சி, ஹோட்டல் அஜந்தாவில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பினை, நேற்று சுடச்சுட சாப்பிட்ட மொறு மொறு பக்கோடாவைப் போலவே, இன்று சுடச்சுட இந்த பதிவினை பகிர்ந்தமைக்கு நன்றி.//

   என் உடல்நிலையில், நான் முன்புபோல கவனமில்லாமல் இருந்திருந்தால், எனக்கு வைப்பதாக இருந்த ஒரு முழுப் ப்ளேட் பக்கோடாவே எனக்குப் பத்தாது. நல்லவேளையாக இருவருமாக சேர்ந்து ஒரு ப்ளேட் மட்டும் வாங்கிக்கொண்டு, நமக்குள் இருவருமாக அதையே ஷேர் செய்துகொண்டது ஒருவிதத்தில் நல்லாப்போச்சு. [ நம் நெல்லைத்தமிழன் - ஸ்வாமீ க்காக இது இங்கே குறிப்பிட்டுச் சொல்லப் பட்டுள்ளது :) ]

   //வலைப்பதிவர் சந்திப்பு என்றாலே மகிழ்ச்சிதானே.//

   அது என்னவோ உண்மைதான். நம்மையும் அறியாமல் எலிகள்போல [வடை, போண்டா, பக்கோடா மேல் உள்ள பிரியத்தினாலோ என்னவோ] சந்திப்பு என்கிற வலையில் போய், அவ்வப்போது வசமாக நாமும் மாட்டிக்கொண்டு விடுகிறோம். :)

   //என்னை, எப்போதும், நான் இப்போது இருக்கின்ற ஊர்ப் பெயரோடு, எங்களது சொந்த ஊர்ப் பெயரையும் சேர்த்து திருச்சி, திருமழபாடி, திரு. தி. தமிழ் இளங்கோ என்று அழைக்கின்றவர் நீங்கள் ஒருவர்தான்; அதிலும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான்..//

   பெயரை மறந்தாலும் ஊரை மறக்கக்கூடாது அல்லவா ! தாங்கள் மட்டுமே மற்ற ஒருசில பதிவர்கள் போல அரசியல் கலப்பேதும் செய்யாமல், என் பெயரை V.G.K. என்று அழைத்து வருகிறீர்கள். அதிலும் எனக்கு மகிழ்ச்சியே.

   //உங்கள் பதிவினில், ஹோட்டல் அஜந்தாவில் உள்ள திறப்புவிழா கல்வெட்டைப் பார்த்ததும், திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் அந்நாளைய மூத்த தலைவர்கள் நினைவில் வந்தார்கள்.//

   ஆமாம். எனக்கு நம் ஊர் தியாகி டி.எஸ். அருணாசலம் அவர்களையும், அவர் பெயரிலேயே பல்லாண்டுகளாக இருந்துவரும் ‘அருணாசல மன்றமும்’ நினைவுக்கு வந்தது.

   //இந்த சந்திப்பினைப் பற்றி நீங்களே எழுதி விட்டதாலும், அய்யா திரு இராய.செல்லப்பா அவர்களும் எழுதுவார் என்பதாலும், நான் எழுதுவதற்கு தேவை இருக்காது என்று நினைக்கிறேன். //

   அப்படியெல்லாம் சொல்லி ஒதுங்கப்பார்க்காதீர்கள். நீங்கள் எழுதும் தனிப் பாணியே, படிக்க மிகச் சுவையாகவும், விஷங்களைத் தெளிவாகச் சொல்வதாகவும் இருக்கும். அதனால்தான் நான் மிகச் சுருக்கமாக (வேடிக்கையாக எழுதி) என் பதிவினை முடித்துக்கொண்டுள்ளேன்.

   மேலும் தாங்களும், திரு. இராய செல்லப்பா அவர்களும் மட்டுமே, தனிமையில் அமர்ந்து, உங்களுக்குள் பதிவுல விஷயங்கள் பற்றி, விரிவாக ஏதேதோ அலசி ஆராய்ந்து பேசிக்கொண்டு இருந்தீர்கள். அதே நேரம் நானும், திருமதி. இராய செல்லப்பா அவர்களும் எங்களுக்குள் குடும்ப விஷயங்களை மட்டும் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தோம். அதனால், இந்த முக்கியமான சந்திப்பு பற்றிய உங்களின் பதிவினை, மற்றவர்களைப்போல நானும் ஆவலுடன் படிக்கக் காத்துக் கொண்டு இருக்கிறேன். :)))))

   //நீங்கள் இந்த பதிவினில் குறிப்பிட்ட, வலைப்பதிவர் சந்திப்பு பதிவுகளில், நான் உங்களோடு சந்தித்த நிகழ்வுகளை மட்டும், மீண்டும் பார்வையிட்டு மகிழ்ந்தேன்.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
  2. அன்புள்ள V.G.K அவர்களுக்கு, நானும் இந்த வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய எனது பதிவினை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.

   நீக்கு
  3. தி.தமிழ் இளங்கோ January 9, 2018 at 10:26 PM

   //அன்புள்ள V.G.K அவர்களுக்கு, நானும் இந்த வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றிய எனது பதிவினை எழுதி வெளியிட்டு இருக்கிறேன்.//


   அன்புள்ள தமிழ் இளங்கோ ஸார். வணக்கம்.

   http://tthamizhelango.blogspot.com/2018/01/blog-post_9.html

   மேற்படி இணைப்பினில் பார்த்துப் படித்து மகிழ்ந்தேன். என் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அனுப்பியும் இருந்தேன்.

   அதனை அப்படியே இங்கு கீழே கொடுத்துள்ளேன்:

   -=-=-=-=-

   இந்தத் தங்களின் பதிவினில், மிகத் தெளிவான படங்களுடன், தெவிட்டாத நினைவலைகளைக் கிளப்பி மகிழ்வித்துள்ளீர்கள்.

   தாங்கள் அந்த ’அஜந்தா ஹோட்டலின் முன்புறம் உள்ள மிகப் பெரிய பெயர் பலகையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை, நானும் தூரத்திலிருந்து பார்த்தபடியே, எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன். :)

   தாங்கள் ஓர் பத்திரிகை நிரூபர் cum புகைப்படக் காரராக ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் உங்களுக்கு உள்ளன. :)

   தங்களின் தனிப் பாணியில் படிப்பதில்தான் எனக்கும் ஓர் தனி இன்பமாக உள்ளது.

   அங்கு நானும் உங்களுடன் கூடவே இருந்தும்கூட, நான் சரிவர காதில் வாங்கிக்கொள்ளாத பல விஷயங்களை, நீங்கள் சேகரித்துக்கொடுத்துள்ளது அழகோ அழகு!

   நம் திரு. ஜீவி ஸார் அவர்களின் முதல் பின்னூட்டம், தங்களின் இந்தப் பதிவினை மேலும் ஜொலிக்கச் செய்துள்ளது.

   அன்புடன் + நன்றியுடன் VGK

   -=-=-=-=-

   நீக்கு
 12. வாவ் !! அருமையான சந்திப்பு .. அந்த நொருக்சில் தூள் பகோடா பார்க்கவே காரகரமொருப்பா இருக்கு .
  நல்ல நட்புக்கள் அழகிய சந்திப்பு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angel January 8, 2018 at 7:26 PM

   வாங்கோ, வணக்கம். ’தேவதை’யின் வருகை மகிழ்வளிக்கிறது.

   //வாவ் !! அருமையான சந்திப்பு .. அந்த நொருக்சில் தூள் பகோடா பார்க்கவே காரகரமொருப்பா இருக்கு. நல்ல நட்புக்கள் அழகிய சந்திப்பு.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு
 13. திரு ராயப்பா செல்லப்பா அவர்களைத் துணைவியாருடன் சந்தித்து அளவிளாவிய விபரம் அறிந்து மகிழ்ச்சி. இனிய சந்திப்பு. திரு இளங்கோ சார் அவர்களும் சந்திப்பில் கலந்து கொண்டமையறிந்து கூடுதல் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஞா. கலையரசி January 8, 2018 at 8:42 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //திரு. இராய. செல்லப்பா அவர்களைத் துணைவியாருடன் சந்தித்து அளவிளாவிய விபரம் அறிந்து மகிழ்ச்சி. இனிய சந்திப்பு. திரு இளங்கோ சார் அவர்களும் சந்திப்பில் கலந்து கொண்டமையறிந்து கூடுதல் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிகவும் நன்றி.//

   தங்களின் அன்பான வருகைக்கும், மகிழ்ச்சியான + கூடுதல் மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

   நன்றியுடன் கோபு

   நீக்கு
 14. ஆஹா முப்பெரும் பதிவர்கள் சந்தித்து இருக்கிறீர்கள்... சந்திப்பு பற்றி உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி.

  தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...சந்தோஜமான பதிவர் சந்திப்புகள் தொடரட்டும் மொறு மொறு பக்கோடா போல எங்களுக்கும் சுவையான. பதிவு கிடைக்கும்...படங்கள் கூடுதல் சிறப்பு...

   நீக்கு
  2. வெங்கட் நாகராஜ் January 8, 2018 at 9:58 PM

   வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

   //ஆஹா முப்பெரும் பதிவர்கள் சந்தித்து இருக்கிறீர்கள்... சந்திப்பு பற்றி உங்கள் பதிவு கண்டு மகிழ்ச்சி. தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜி.

   நீக்கு
  3. ஸ்ரத்தா, ஸபுரி... January 9, 2018 at 10:01 AM

   வாங்கோ ... வணக்கம்.

   //ஆஹா...சந்தோ(ஜ) ஷமான பதிவர் சந்திப்புகள் தொடரட்டும். மொறு மொறு பக்கோடா போல எங்களுக்கும் சுவையான பதிவு கிடைக்கும்... படங்கள் கூடுதல் சிறப்பு...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)

   நீக்கு
 15. இங்க மொதல்ல ஒரு கமெண்ட் போட்டேன்

  போகலயே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy January 9, 2018 at 10:11 AM

   வாடீம்மா..... என் செல்லக்குட்டி, ஹாப்பி பெண்ணே!

   //இங்க மொதல்ல ஒரு கமெண்ட் போட்டேன்
   போகலயே//

   அதற்கு நான் என்ன செய்வது?

   நீ உம்மாச்சியை வேண்டிக்கொண்டு சரியாகப் போட்டிருக்க மாட்டாயோ என்னவோ? அதனால் போகலயோ என்னவோ?

   நீக்கு
 16. பதிவர்சந்திப்பு படங்கள் எல்லாம் ஜோராதான் இருக்கு..அஜந்தா ஹோட்டலில் சந்திப்புனு சொன்னேள்..அங்க. வெங்கடேச பெருமாள் எங்கேந்து வந்தார்

  பகவான் படம்தான் ஆனாகூட. நீங்கள்ளாம் பெருமாள் பக்கத்துல செருப்பு காலோட நிக்கறேள். தப்பு...தப்பு...ஸாமி கண்ணை குத்தும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. happy January 9, 2018 at 10:23 AM

   //பதிவர் சந்திப்பு படங்கள் எல்லாம் ஜோராதான் இருக்கு..//

   நேரில் இருப்பதைவிட படங்களில் ஓரளவு எல்லாமே ஜோராகத்தான் இருக்கும். அதிலும்கூட ஜோராக இல்லாதவற்றை நாங்க, பதிவினில் வெளியிடவே மாட்டோமே. :)))))

   //அஜந்தா ஹோட்டலில் சந்திப்புனு சொன்னேள்.. அங்க.. வெங்கடேச பெருமாள் எங்கேந்து வந்தார்.//

   அவர்தான் ‘தூணிலும் இருப்பார் .... துரும்பிலும் இருப்பார்’ ஆச்சே .... அஜந்தா ஹோட்டலில் இருப்பதில் என்ன ஆச்சர்யம்?

   மேலும் தினமும் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம ஜபம் (அதுவும் லோகத்தில் உள்ள அனைவரின் க்ஷேமத்திற்காகவும் வேண்டிக்கொண்டு) செய்துவரும் பக்தனான உன் பெரிப்பாவே அங்கு வர இருக்கிறார் என்பதால், அந்தப் பெருமாளும் ஒருவேளை அங்கு, திடீரெனத் தோன்றியிருப்பாரோ என்னவோ !

   //பகவான் படம்தான் ஆனாகூட நீங்கள்ளாம் பெருமாள் பக்கத்துல செருப்பு காலோட நிக்கறேள். தப்பு... தப்பு... ஸாமி கண்ணை குத்தும்.//

   பகவான் மிகவும் உயர்ந்தவர். உயர்ந்த உள்ளமும் கொண்டவர். அதனால் எங்களைவிட நல்ல உயரமாக மேடை மேல் ஏறிக் காட்சியளிக்கிறார்.

   பகவானாகிய அவர் பக்தர்களாகிய எங்களின் தூய மனதைத்தான் (எங்கள் முதுகு வழியாக எக்ஸ்-ரே எடுத்துப்) பார்ப்பாரே தவிர, கீழே குனிந்து நாங்கள் அணிந்திருக்கும் பாதரக்ஷைகளையும், எங்களின் குதிகால்களையும் பார்க்கவே மாட்டார்.

   மேலும் அவருக்குத்தெரியும் ...... இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று. :)))))

   ஸாமி கண்ணைக் குத்தாது. ’கொழுப்பு எடுத்த குந்தாணி’ ஆன உன்னைத்தான் கும்மாங்குத்து குத்தும். :)

   அன்புடன் பெரிப்பா

   நீக்கு
  2. இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று. :))))) -- அருமையான சிரிக்க வைக்கும் பதில். நல்லா ரசிக்கும்படி கேள்வியை எதிர்கொண்டு பதில் சொல்லியிருக்கீங்க கோபு சார்.

   நீக்கு
  3. //நெல்லைத் தமிழன் January 9, 2018 at 9:42 PM

   இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று. :))))) -- அருமையான சிரிக்க வைக்கும் பதில். நல்லா ரசிக்கும்படி கேள்வியை எதிர்கொண்டு பதில் சொல்லியிருக்கீங்க கோபு சார்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி .... ஸ்வாமீ. :))))

   - சிரித்தபடி கோபு

   நீக்கு
 17. கோபூஜி... உங்கள தேடிவந்து எத்தனை பேரு சந்திக்கறாங்க.. அதையும் சுவாரசியமா எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்றிங்க.. யான் பெற்ற இன்பமா.... படங்களும் பதிவும் நல்லா இருக்குது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிப்பிக்குள் முத்து. January 9, 2018 at 12:12 PM

   வாங்கோ மீனா-முன்னா-மெஹர்-மாமி, வணக்கம்.

   //கோபூஜி... உங்கள தேடிவந்து எத்தனை பேரு சந்திக்கறாங்க..//

   திருச்சியிலேயே இருந்துகொண்டு, என் ஊரை விட்டு நான் எங்கும் நகராமல், இதுபோல இதுவரை 42 பதிவர்களை, சந்திக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

   ரோஜா-ராஜாத்தி, சாரூ, ஷம்மு, ஹாப்பி, முருகு, நீ என (நம் முன்னா பார்க் நண்பர்கள்) என்னை வந்து பார்க்காதவர்கள் எத்தனையோ பேர்கள் இருக்கீங்களே என்பதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு. உன் கல்யாணத்திலாவது நாம் எல்லோரும் ஒன்றாகக் கூடி கும்மி அடிப்போம் என ஆசையாக நினைத்திருந்தேன். அதுவும் இல்லாமல், நீ எங்களில் யாரையுமே அழைக்காமல், கப்பு-சிப்புன்னு உன் கல்யாணத்தை முடித்துக்கொண்டு விட்டாய். உன் சூழ்நிலை அது போல ஆகிவிட்டது.

   சரி ..... நம் ஹாப்பி பொண்ணு கல்யாணத்திலாவது நாம் எல்லோரும் கூடி கும்மி அடிக்க முடியுதான்னு பார்ப்போம். :)

   //அதையும் சுவாரசியமா எங்க எல்லாருடனும் பகிர்ந்து கொள்றிங்க.. யான் பெற்ற இன்பமா.... படங்களும் பதிவும் நல்லா இருக்குது..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மீனா.

   அன்புடன் கோபூஜி

   நீக்கு
 18. ஆஹா மறுபடி உடனுக்குடன் ஒரு பதிவா... பதிவர் சந்திப்பும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீனி வாசன் January 9, 2018 at 12:19 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆஹா மறுபடி உடனுக்குடன் ஒரு பதிவா...//

   எதையுமே உடனுக்குடன் செய்யணும். இல்லாவிட்டால் அது ‘ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்ற கதையாகிவிடும்.

   [ ‘பாலாறு முன் பருகுவோம் ...
   பால் ஆறும் முன் பருகுவோம்’

   - கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் எப்போதோ சொன்னது. ]

   //பதிவர் சந்திப்பும் படங்களும் ரொம்ப நல்லா இருக்கு..//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
 19. ஆஹா அருமையான சந்திப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Premkumar January 9, 2018 at 12:24 PM

   வாங்கோ அநுராதா-ஆண்டாள் அவர்களே! வணக்கம்.

   //ஆஹா அருமையான சந்திப்பு...//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   இன்றைய ஆண்டாள் பாசுரமும், அதன் விளக்கத்தில் வரும் குட்டிக் கிருஷ்ணன் + யசோதா சந்திப்பும்கூட, தாங்கள் மேலே சொல்லியுள்ளது போல ‘ஆஹா அருமையான சந்திப்பு’ மட்டுமே. :)))))

   திருப்பாவை 25
   தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! ...

   ’ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர .....’ சூப்பர் !

   - VGK

   நீக்கு
 20. மூவரையும் ஒரே இடத்தில் கண்டதில் மகிழ்ச்சி. மினி பதிவர் சந்திப்புக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University January 9, 2018 at 12:27 PM

   வாங்கோ முனைவர் ஐயா, வணக்கம்.

   //மூவரையும் ஒரே இடத்தில் கண்டதில் மகிழ்ச்சி. மினி பதிவர் சந்திப்புக்கு பாராட்டுகள்.//

   மிக்க மகிழ்ச்சி. தங்களின் அன்பு வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   நீக்கு
 21. காலைலயே ஒரு மெண்ட் தட்டிவிட்டேன் அதுக்கு என்ன கோபமோ சண்டி தனம் பண்ணுது.. விட்டுடுவோமா நாங்கல்லாம் யாரு......கோபால்ஸார் ரசிகர்களாக்கும்.....


  ளதிவும் படங்களும் நல்லா இருக்குது..வாழ்த்துக்கள் சந்தித்த பதிவர்களுக்கு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆல் இஸ் வெல்....... January 9, 2018 at 12:46 PM

   வாங்கோ, வணக்கம்.

   //காலைலயே ஒரு மெண்ட் தட்டிவிட்டேன் அதுக்கு என்ன கோபமோ சண்டி தனம் பண்ணுது..//

   கமெண்டில் உள்ள ’க’ வைத் தங்களிடமே பதுக்கி வைத்துக்கொண்டு ’மெண்ட்’டை மட்டும் தட்டிவிட்டதால், அதற்குக் கடுப்பாகிக் கோபம் வந்து சண்டித்தனம் செய்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

   //விட்டுடுவோமா நாங்கல்லாம் யாரு...... கோபால்ஸார் ரசிகர்களாக்கும்.....//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா. இப்படித்தான் நம் ’முன்னா பார்க்’ ஓனர் முன்னா, என் பரம ரஸிகை எனச் சொல்லிக்கொண்டிருந்தாள். அவளின் அக்காவுக்குக் கல்யாணம் ஆனதற்கே, எங்கட கோபூஜிதான் காரணம் என்றெல்லாம் சொல்லி, அவளின் அக்கா கல்யாணத்திற்கு உங்களையும் என்னையும் அழைத்துவிட்டு, தன் சொந்தக் கல்யாணத்திற்கு அழைக்காமல் விட்டுவிட்டாள்.

   அவளின் அக்கா கல்யாணத்திற்காவது, நீங்கள் நேரில் போக நேர்ந்தது. எனக்கு அந்தப் பிராப்தமும் இல்லாமல் போய் விட்டது. :(

   //ளதிவும் படங்களும் நல்லா இருக்குது..வாழ்த்துக்கள் சந்தித்த பதிவர்களுக்கு....//

   ’ளதிவும்’ = ’பதிவும்’ தானே ! மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   நீக்கு
  2. ஆஹா...அவங்க வீட்டு கல்யாணத்துல நான் கலந்து கிட்டதுகூட உங்க கவனத்துக்கு வந்தாச்சா...நீங்க 1000--- கண்ணுடையாரா....1000--- காதுடையாரா.......

   நீக்கு
  3. ஆல் இஸ் வெல்....... January 10, 2018 at 6:13 PM

   //ஆஹா...அவங்க வீட்டு கல்யாணத்துல நான் கலந்து கிட்டதுகூட உங்க கவனத்துக்கு வந்தாச்சா... நீங்க 1000--- கண்ணுடையாரா....1000--- காதுடையாரா.......//

   எல்லோரையும் போல இரண்டே இரண்டு கண்களும், இரண்டே இரண்டு பாம்புச் செவிகளும் மட்டுமே கொண்டவன் நான்.

   நான் நேரிடையாகக் கேட்காவிட்டாலும், எப்படியோ சுத்தியடிச்சு என் கவனத்திற்கு அனைத்துச் செய்திகளும் வந்து சேர்ந்துவிடும்.

   நம் பதிவுலக நட்புக்கள் சிலருக்கு, ஒவ்வொரு சிறுசிறு விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்ளாவிட்டால், அவர்களின் மண்டையே வெடித்து விடும். நான் என்ன செய்யட்டும்?

   எல்லாவற்றையும் காதில் வாங்கி, மண்டையில் ஏற்றிக்கொண்டு, சமயத்தில் இதுபோல பயன்
   ப-டு-த்-தி விடுவேன். :) ஆஹ்ஹாஹ்ஹா !

   நீக்கு
 22. பதிவு வந்தாச்சு சூப்பர் பார்த்தேன் ,படித்தேன், அறிந்தேன், மகிழ்ந்தேன்.ரொம்ப சந்தோஷமா இருக்கு கோபு சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூ விழி January 9, 2018 at 4:32 PM

   வாங்கோ ’மழை ஆடிய மங்காத்தா’ அவர்களே! வணக்கம். தங்களின் அபூர்வ வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

   //பதிவு வந்தாச்சு சூப்பர் பார்த்தேன், படித்தேன், அறிந்தேன், மகிழ்ந்தேன்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   //ரொம்ப சந்தோஷமா இருக்கு கோபு சார் //

   எனக்கும் தான். பனி மழையிலும், பணி மலைகளிலும் மாட்டிக்கொண்டிருந்தாலும், தாங்கள் இங்கு வந்து எட்டிப்பார்த்துள்ளது என்னை மேலும் குளிர்விக்கின்றது. மீண்டும் என் நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 23. //அவருக்குத்தெரியும் ...... இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று. // :)))))
  இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன் சார்.

  தன்னை சுற்றி உற்சாக அலைகளை தவழவிட மிகச் சிலரால் மட்டுமே முடியும்.... தாங்கள் அதில் முன்னணி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிலாமகள் January 9, 2018 at 10:43 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   **அவருக்குத்தெரியும் ...... இந்த பூலோகத்தில் உள்ள மனிதர்கள், தங்கள் பாதரக்ஷைகளைக் கழட்டி வைத்தால், அவைகள் உடனே காணாமல் போய் விடும் என்று.** - கோபு

   //:))))) இன்னும் சிரித்துக் கொண்டு இருக்கிறேன் சார். //

   ஏதோவொரு Timely Joke போல, என் மனதில் Flash ஆனது. அதனால் எழுதினேன். அது தங்களை இந்த அளவு சிரிக்க வைக்கும் என நானே எதிர்பார்க்கவில்லை. :)))))

   //தன்னை சுற்றி உற்சாக அலைகளை தவழவிட மிகச் சிலரால் மட்டுமே முடியும்.... தாங்கள் அதில் முன்னணி!//

   ஒரு முன்னணிப் பதிவரின், ஆத்மார்த்தமான இந்தச்சொற்கள், என்னைச் சுற்றி மிகப்பெரிய உற்சாக அலைகளை இப்போது தவழவிட்டுள்ளன. தன்யனானேன்.

   தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், உற்சாகமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 24. அன்புள்ள கோபு ஸார் ,
  நமஸ்காரங்கள்.
  தங்களது இந்தப் பதிவையும் படித்தேன். ஆஹா....நட்பைக் கொண்டாடுவதில்
  உங்களுக்கு இணை நீங்களும் உங்களோடு நட்பாக இருப்பவர்களும் தானோ..?
  அதனால் தான் சிந்தாமணி என்றேன்...! ஒரு நிகழ்வை அப்படியே அடுத்தவர்
  படிப்பவர் கண்களுக்கு காட்சியாக்கித் தருவதில் தான் தங்களின் எழுத்தின்
  வெற்றி உள்ளதோ. தேன் கூட்டில் தேனீக்கள் தேடியோடி வருவதில் காரணம்
  இருக்கிறது. நண்பர்களோடு நீங்கள், அஜந்தா ஹோட்டல், கிராண்ட் இனிப்பு,
  காரம், புத்தகங்கள், பரிசுகள் பழங்கள்...என்று ஒரு சந்திப்பு அமர்க்களப் பட்டதை
  விருந்தாக்கி விட்டீர்கள்.தங்களின் வலைப்பூவில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது...
  அழகோ அழகு.

  நன்றி,
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜெயஸ்ரீ ஷங்கர் January 10, 2018 at 2:29 PM

   //அன்புள்ள கோபு ஸார், நமஸ்காரங்கள்.//

   வாங்கோ அன்புள்ள ‘காமதேனு-ஜெயஸ்ரீ’ மேடம், நமஸ்தே! ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்கிரஹத்தில் எப்போதுமே மகிழ்ச்சியுடனும், மன நிம்மதியுடனும் நீங்கள் வாழணும் என வாழ்த்தி மகிழ்கிறேன்.

   //தங்களது இந்தப் பதிவையும் படித்தேன்.//

   அப்படியா! இந்தப் பதிவையும் படிச்சுட்டேளா!! வெரி குட்.

   //ஆஹா.... நட்பைக் கொண்டாடுவதில் உங்களுக்கு இணை நீங்களும் உங்களோடு நட்பாக இருப்பவர்களும் தானோ..? அதனால் தான் சிந்தாமணி என்றேன்...!//

   ’சிந்தாமணி’யைப் பற்றி நான் கேள்விப்பட்டுள்ளது:- ’சிந்தாமணி’ என்பது ஒரு அபூர்வமான வஸ்துவாகும். ’சிந்தாமணி’ யால் எதை நாம் உரசினாலும், ’சிந்தாமணி’ மேல் எது வந்து விழுந்து தானே உரசிக்கொண்டாலும், அது அப்படியே தங்கமாகிப்போய் ஜொலித்து விடுமாம். இதில் உள்ள முக்கியமான இன்னொரு விஷயம்: ஒரு ‘சிந்தாமணி’யால், மற்றொரு ‘சிந்தாமணி’யை உரசினால் அந்த இரண்டு ‘சிந்தாமணிகளும்’ ஒன்றுக்கொன்று தங்கமாக மாறாதாம்.

   மிகச் சாதாரணமானவனான என்னைப்போய் ‘சிந்தாமணி’ என்று இங்கு புகழ்ந்து சொல்லி விட்டீர்கள். அது என்னை இன்னும் நீங்கள் நேரில் சந்திக்காததால் (உரசிப்பார்க்காததால்) ஏற்பட்டுள்ள ஓர் தவறாக இருக்குமோ என்னவோ.

   எனினும் ‘சிந்தாமணி’க்கும் எனக்கும் ஓர் சிறிய தொடர்பு உண்டு. திருச்சியில், ’பேரரிஞர் அண்ணா’ சிலை நிறுவப்பட்டுள்ள பகுதிக்கு ‘சிந்தாமணி’ என்றுதான் பெயர். அண்ணா சிலைக்குக் கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் உள்ள சில பகுதிகள் கீழச் சிந்தாமணி என்றும், அண்ணா சிலை முதல் காவிரிக்கரை வரை உள்ள மேற்குப் பகுதிகள் ’மேலச் சிந்தாமணி’ அல்லது ’மேட்டுச் சிந்தாமணி’ என்றும் இன்று வரை அழைக்கப்பட்டு வருகின்றன.

   காவிரிக்கரை அருகேயுள்ள மேலச் சிந்தாமணியில் 1960-1961 ஆகிய ஓரிரு ஆண்டுகள் நாங்கள் ஒரு வாடகை வீட்டினில் குடியிருந்தோம். அப்போது அங்கேதான், என் தந்தைக்கும் தாய்க்கும் 60-ம் கல்யாணம் என்று சொல்லப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா, அந்த வீட்டிலேயே, மிக எளிமையான முறையில் (வைதீக கார்யங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு) நடைபெற்றது எனக்கு இன்னும் நன்கு நினைவில் உள்ளது. அப்போது என் வயது 11+ மட்டுமே.

   //ஒரு நிகழ்வை அப்படியே அடுத்தவர் படிப்பவர் கண்களுக்கு காட்சியாக்கித் தருவதில் தான் தங்களின் எழுத்தின் வெற்றி உள்ளதோ.//

   ஏதேதோ என்னைப்பற்றி, எனக்கே தெரியாத, பல செய்திகளைத் தாங்கள் அள்ளித் தெளித்து அமர்க்களமாகச் சொல்கிறீர்கள். கேட்க, எனக்கும் சந்தோஷமாகத்தான் உள்ளது. :)

   //தேன் கூட்டில் தேனீக்கள் தேடியோடி வருவதில் காரணம் இருக்கிறது.//

   அது என்ன காரணமோ? தங்கள் திருவாய் மலர்ந்து சொன்னால், நானும் தெரிந்துகொள்ள ஏதுவாகுமே!

   சுயநலமுள்ள மனிதர்களில் சிலரால், அந்த இனிமையான தேன் கூட்டுக்கும், தேனீக்களுக்கும் கடைசியில் ஏற்பட்டு வரும் கதி தங்களுக்குத் தெரியாதது அல்ல. :)

   இந்த பிரபஞ்சத்தில் பகவான் ’ஸ்ரீ கிருஷ்ணன்’ ஒருவனைத்தவிர எதுவுமே, என்றுமே, சாஸ்வதம் இல்லை என்பதும் உங்களுக்கே நன்கு தெரியும்.

   //நண்பர்களோடு நீங்கள், அஜந்தா ஹோட்டல், கிராண்ட் இனிப்பு, காரம், புத்தகங்கள், பரிசுகள் பழங்கள்...என்று ஒரு சந்திப்பு அமர்க்களப்பட்டதை விருந்தாக்கி விட்டீர்கள்.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சொல்லின் செல்வி நீங்கள்!! நான் பதிவிட்டுள்ள சந்திப்பு அமர்க்களங்களையே ஒரு ‘விருந்து’ எனக் ’காமதேனு’வான தாங்கள் சொல்லியுள்ளதே எனக்குத் தங்கள் கையால் விருந்தளித்தது போன்றதோர் மகிழ்ச்சியை அளித்துள்ளது. :)

   //தங்களின் வலைப்பூவில் ஒரு தாமரை மலர்ந்திருப்பது... அழகோ அழகு.//

   தங்களின் பின்னூட்டம் என்ற அபூர்வமாகப் பூக்கும் தாமரைதானே! அது எப்போதுமே மிகவும் அழகோ அழகுதான். :)))))

   //நன்றி, ஜெயஸ்ரீ ஷங்கர்.//

   அன்புடன் + நன்றியுடன் கோபு

   நீக்கு
  2. மேலேயுள்ள என் பதிலில் ஓர் வார்த்தையில் எழுத்துப்பிழையாகி உள்ளது. இப்போதுதான் கவனித்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.

   ’பேரரிஞர் அண்ணா’ = தவறு

   ’பேரறிஞர் அண்ணா’ = சரி

   நீக்கு
 25. உங்களுடனான எனது சந்திப்பு - சிந்திப்பு நிலையில்தான் இருக்கிறது...நீங்களோ அரைசதம் சந்திப்புகளை நெருங்கிக்கொண்டும், அதனை சுவாரசியமாகப்பதிவிட்டுக்கொண்டும் இருக்கிறீர்கள்...கலக்குங்க வாத்யாரே...இதயங்கள் ஹனி-ஆன மூன்_று பேரும் சந்தித்தால் அதுவே ஹனி_மூன் போலத்தான் இருந்திருக்கும்...வெரைட்டியான நொறுக்ஸ் நமது திருச்சியில் பெயர்போன ஒன்று..."சுவை(கோ)-ஆன" ஒரு பதிவு. மகிழ்ச்சி வாத்யாரே...என்றும் உங்கள் எம்.ஜி.ஆர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI January 10, 2018 at 3:35 PM

   வாங்கோ வாத்யாரே ! வணக்கம்.

   //உங்களுடனான எனது சந்திப்பு - சிந்திப்பு நிலையில்தான் இருக்கிறது...//

   அதனால் என்ன? ஒருவரைப்பற்றி சிந்திப்பது, அவரை நேரில் சந்திப்பதை விட, மிகவும் இனிமையானதாகும். இது என் சொந்த அனுபவமாகும். :)))))

   //நீங்களோ அரைசதம் சந்திப்புகளை நெருங்கிக்கொண்டும், அதனை சுவாரசியமாகப்பதிவிட்டுக்கொண்டும் இருக்கிறீர்கள்...கலக்குங்க வாத்யாரே...//

   என் வீட்டை விட்டோ, என் ஊரை விட்டோ நகராமலும், நகர விரும்பாமலுமே இத்தனை சந்திப்புக்களை நான் சந்திக்க நேர்ந்து விட்டது.

   ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் ஓர் சுவாரஸ்யம் இருக்கத்தானே செய்யும். அவ்வப்போது எதையாவது கலக்கிக்கொண்டே இருக்கத்தானே வேண்டியுள்ளது. இதுபோல அவ்வப்போது பதிவிட்டுக் கலக்காவிட்டால், சந்திப்பு நடந்ததே நாளடைவில் மறந்துபோய் விடும் ஆபத்தும் உண்டல்லவா! அதனால் மட்டுமே இதுபோன்ற சில பதிவுகள். :)

   //இதயங்கள் ஹனி-ஆன மூன்_று பேரும் சந்தித்தால் அதுவே ஹனி_மூன் போலத்தான் இருந்திருக்கும்...//

   தங்களுக்கே உரித்தான மிக அழகான சொல்லாடல். பாராட்டுகள் .... வாத்யாரே

   //வெரைட்டியான நொறுக்ஸ் நமது திருச்சியில் பெயர்போன ஒன்று..."சுவை(கோ)-ஆன" ஒரு பதிவு. மகிழ்ச்சி வாத்யாரே...என்றும் உங்கள் எம்.ஜி.ஆர்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வேடிக்கையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 26. குருஜி...வந்து போட்டன்லா...நீங்க ஆர சந்திச்சுபோட்டாலும் இன்னா இன்னா துன்னுகிடுவீகன்னு சொல்லி போடுவிக.. இங்கியும் தூளு பக்கோடா காபி படம் இருக்குது.. அது ஏனுங்க குருஜி காயிய போயி பித்தள வட்டை...வோட்டால...கொடுக்கறாக..கசந்து போயிடுமுல்ல
  ஒங்கட ஒடம்பு நெறய ஷுகர வச்சுகிட்டு இம்பூட்டு பலவாரம்லா துன்னுகுட கோடாது..சொல்லிபோட்டேன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mru January 11, 2018 at 12:21 PM

   //குருஜி...வந்து போட்டன்லா...//

   நீ இன்னும் வந்து போடலையேன்னு மிகவும் நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். வாம்மா முருகு, செளக்யமா நல்லா இருக்கிறாயா? ஏதேனும் விசேஷம் உண்டா? :)))))

   //நீங்க ஆர சந்திச்சுபோட்டாலும் இன்னா இன்னா துன்னுகிடுவீகன்னு சொல்லி போடுவிக.. இங்கியும் தூளு பக்கோடா காபி படம் இருக்குது..//

   நாம் அவ்வப்போது சுடச்சுட துன்னுக்கிடுவதை, சுடச்சுட பதிவினில் சொன்னால்தானே அதனை வாங்கி நமக்குக் கொடுத்தவருக்கும் ஓர் மகிழ்ச்சி ஏற்படும். பிறகு என்றால் சாப்பிட்ட நமக்கே அது மறந்து போயிடும் இல்லையா? வாயில் உள்ள, பற்களால் கடித்துச் சுவைத்து, நாக்கின் வழியே ருசித்து, தொண்டைக்குள் செல்லும் வரை மட்டுமே எதிலும் ஓர் இன்பம் இருக்கும். அதன் பின் அந்த இன்பம் மறந்துபோகும் / மறைந்து போகும். இப்போது ஒன்றை சாப்பிடும் போது இதற்கு முன்பு நாம் என்ன சாப்பிட்டோம் என்பதே சுத்தமாக மறந்து விடுகிறது அல்லவா!

   பதிவில் ஏற்றி விட்டால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது நமக்கு மறக்கவே மறக்காது. அதனால் மட்டுமே அனைத்தையும் பதிவினில் கொண்டு வந்து கொண்டு இருக்கிறேன், முருகு.

   //அது ஏனுங்க குருஜி காயிய போயி பித்தள வட்டை...வோட்டால...கொடுக்கறாக..கசந்து போயிடுமுல்ல.//

   இன்றிலிருந்து ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ‘எவர் ஸில்வர்’ என்ற பாத்திரங்களே தமிழ்நாட்டில் உள்ள யார் வீட்டிலும் இருந்தது இல்லை. மண் பாண்டங்கள், பித்தளை, வெங்கலம், அலுமினியம், ஈயம், செம்பு ஆகிய உலோகங்களில் செய்த பாத்திரங்களை மட்டுமே நாங்கள் எல்லோரும் உபயோகித்து வந்தோம். மிகச்சில கோடீஸ்வரர்கள் வீடுகளில் மட்டும் அப்போது வெள்ளிப்பாத்திரங்கள் உபயோகப்படுத்தி வந்துள்ளனர்.

   இப்போதும் மிகப்பெரிய ஸ்டார் ஹோட்டல்களில், தங்கினால் வெள்ளித்தட்டு, வெள்ளி டவரா, வெள்ளி டம்ளர், வெள்ளி ஸ்பூன் ஆகியவற்றில் தான் உணவளிக்கிறார்கள்.

   உதாரணமாக மும்பையில் உள்ள ‘தாஜ் ஹோட்டலை’ச் சொல்லலாம். இந்த ஹோட்டலில் ஒரு புருஷன்-பொஞ்சாதி ஒரு நாளைக்குத் தங்க ரூம் வாடகை மட்டும் ரூபாய் ஒரு லக்ஷம் வாங்குகிறார்கள். அங்கு நாம் ஒவ்வொரு வேளையும் சாப்பிடும் உணவுக்கும், இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள்.

   நீயும், மிகப்பெரிய தொழிலதிபரான உன் கணவரும், இந்த மும்பைக்கு ஹனிமூனாகப் புறப்பட்டுப் போய், இந்த நான் சொல்லியுள்ள தாஜ் ஹோட்டலில் ஒரு இரண்டு மாதங்கள் மட்டும், ஜாலியாகத் தங்கிவிட்டு வாங்கோ. மொத்தமாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஒன்றும் செலவாகி விடாது. மிகவும் மலிவோ மலிவு தான். ’எஞ்ஜாய் த லைஃப்’ முருகு. :)

   போகும்போது நம்மிடம் எதைக்கொண்டு போகப் போகிறோம்? பிறக்கும் போது அழுகையைக் கொண்டு வருகிறோம். போகும் போது அதையும் பிறரிடம் கொடுத்துவிட்டு, “நீங்கள் எல்லோரும் அழுங்கடா” எனச் சொல்லி விட்டு நாம் கிளம்பி விடுகிறோம்.

   அதனால், நீ பணம்-காசுகளைக் கணக்குப் பார்த்துக்கொண்டு இருக்காமல், மும்பை தாஜ் ஹோட்டலில் போய்த் தங்க இன்றே ப்ளேன் டிக்கட் புக் செய்து விடவும்.

   //ஒங்கட ஒடம்பு நெறய ஷுகர வச்சுகிட்டு இம்பூட்டு பலவாரம்லா துன்னுகுட கோடாது.. சொல்லிபோட்டேன்..//

   நான் ஒன்றும் அங்கு அதிகமாகத் துன்னவில்லையாக்கும். கூகுளில் தேடி படத்தில் முழுப் ப்ளேட் பக்கோடாவைக் காட்டியுள்ளேன். அம்புட்டுதான். :)

   இந்தியாவில் இன்று 75% க்கும் அதிகமானோருக்கு ஒடம்பு நெறெய ஷுகர் உள்ளது. சிலருக்கு இது தெரியும். பலருக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாமல் உள்ளது. அதுதான் விஷயம்.

   இதற்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால் BP (Blood Pressure) அதிகமாகி விடும். இருக்கும் வரை வாய்க்குப் பிடித்ததைக் கொஞ்சமாகத் தின்போம். நடப்பது நடக்கட்டும். நாம் என்ன 100 வயது வரை வாழ்ந்து விடப் போகிறோமா என்ன?

   அன்புடன் குருஜி கோபு

   நீக்கு
  2. "இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள்" -கோபு சார், இப்போல்லாம் பாரம்பர்ய உணவு, மண்பானையில் செய்தது, இயற்கை உணவு என்று ஜல்லியடித்து, நம் பாக்கெட்டில் ஓட்டை விழப்பண்ணிவிடுகிறார்கள். அவங்க என்ன ஸ்பெஷலாப் பண்ணறாங்கன்னு பார்த்தா, நம்ம அம்மா அந்தக் காலத்துல வச்சிருந்த குமுட்டி அடுப்பில், மண் பாத்திரத்தில் உணவைச் சமைத்து, நமக்கு வாழை இலையில் போட்டுவிட்டு, காசு மாத்திரம் 'தாஜ்' லெவல்ல வாங்கிடறாங்க. இதைப்பத்தி யோசிக்காத ஜனங்கள், 'ஆஹா இயற்கை உணவு' என்று போலி மகிழ்ச்சியோட, 'காசை' கரியாக்குறாங்க.

   இப்படித்தான் நான், சேலத்தில், 'இயற்கை உணவு' என்று ஒரு இடத்தில் போய், நிறைய பணம் கொடுத்து லஞ்ச் சாப்பிட்டேன். அவங்க போட்டது எதுவும் எனக்கு ருசியாவே இல்லை. (கண்டங்கத்திரி தொகையல், பச்சைக் காய்கறி என்று போட்டால், யாருக்கு சாப்பிடமுடியும்). அப்புறம் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடுதான்.

   நீக்கு
  3. நெல்லைத் தமிழன் January 11, 2018 at 2:53 PM

   **இது போன்று உணவு பரிமாறப்படும் வெள்ளிப் பாத்திரங்களுக்கும் எக்ஸ்ட்ரா காசு வசூலித்து விடுவார்கள்* -கோபு.

   //இப்போல்லாம் பாரம்பர்ய உணவு, மண்பானையில் செய்தது, இயற்கை உணவு என்று ஜல்லியடித்து, நம் பாக்கெட்டில் ஓட்டை விழப்பண்ணிவிடுகிறார்கள். அவங்க என்ன ஸ்பெஷலாப் பண்ணறாங்கன்னு பார்த்தா, நம்ம அம்மா அந்தக் காலத்துல வச்சிருந்த குமுட்டி அடுப்பில், மண் பாத்திரத்தில் உணவைச் சமைத்து, நமக்கு வாழை இலையில் போட்டுவிட்டு, காசு மாத்திரம் 'தாஜ்' லெவல்ல வாங்கிடறாங்க. இதைப்பத்தி யோசிக்காத ஜனங்கள், 'ஆஹா இயற்கை உணவு' என்று போலி மகிழ்ச்சியோட, 'காசை' கரியாக்குறாங்க.//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா! இவை எல்லாமே ஷேர் மார்க்கெட் பிஸிநெஸ் போலத்தான் இருக்கும் போலிருக்குது. :))))) நாம்தான் இங்கெல்லாம் போய் ஏமாறாமல், ’காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொள்ளாமல்’, மிகவும் சுதாரிப்பாக இருக்கணும்.

   //இப்படித்தான் நான், சேலத்தில், 'இயற்கை உணவு' என்று ஒரு இடத்தில் போய், நிறைய பணம் கொடுத்து லஞ்ச் சாப்பிட்டேன். அவங்க போட்டது எதுவும் எனக்கு ருசியாவே இல்லை. (கண்டங்கத்திரி தொகையல், பச்சைக் காய்கறி என்று போட்டால், யாருக்கு சாப்பிடமுடியும்). அப்புறம் அந்தத் திசைக்கே ஒரு கும்பிடுதான்.//

   சேலத்தில் மட்டுமல்ல. எல்லா ஊர்களிலும் இதுபோல சில உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

   திருச்சியில் செயல்படும் சிறுதானிய உணவகம் பற்றி ஓர் பதிவில்கூட ஒருவர் ‘தலைவாழை விருந்து’ என்ற தலைப்பில் எழுதியிருந்தார்.

   http://thalaivazhaivirundhu.blogspot.in/2014/05/blog-post_22.html

   என்ன இருந்தாலும், நாம் அடிக்கடி விரும்பிச் சாப்பிடும் ஸ்பெஷல் ஆனியன் ரவா, பேப்பர் ரோஸ்ட், பூரி மஸால் போலெல்லாம் வரவே வராது .... ஸ்வாமீ :)))))

   நீக்கு
  4. சாருக்கு மதுரா மீது என்ன கோபம்னு தெரியலையே. பாரம்பர்ய சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ராமா கஃபே ஐட்டங்களை மட்டும் சொல்லியிருக்கீங்களே.

   'நீங்கள் கொடுத்துள்ள லிங்கைப் போய்ப் பார்க்கிறேன் (உணவுப் பதிவுகளைப் பற்றி நீங்க எப்பயும் மறக்கறதில்லை போல - என்னப்போலவே :-) )

   நீக்கு
  5. பதிவைப் பார்த்துவிட்டேன். உங்கள் ஊரில் சாப்பிடவேண்டிய ஹோட்டலின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது. எப்போ நேரம் வருமோ தெரியலை (நான் எங்க பயணம் போனாலும், எழுதி வச்சுக்கிட்டு அந்த அந்த இடங்களுக்கு சாப்பிடப் போவேன். இதில் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த வெளி ஆண்டாள் சன்னிதியின் முன் உள்ள பஜ்ஜி, வடை கடையும் உண்டு)

   நீக்கு
  6. நெல்லைத் தமிழன் January 11, 2018 at 4:26 PM

   //சாருக்கு மதுரா மீது என்ன கோபம்னு தெரியலையே. பாரம்பர்ய சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் ராமா கஃபே ஐட்டங்களை மட்டும் சொல்லியிருக்கீங்களே.//

   எனக்கு வெளியிட ஹோட்டல்களுக்குச் சென்றால், சாப்பாடு (MEALS) சாப்பிடவே பிடிக்காது, ஸ்வாமீ. மதிய சாப்பாட்டு வேளையாகவே இருப்பினும், டிபன் ஏதும் கிடைக்குமா? என்ன டிபன் வகையறாக்கள் உள்ளன என்றுதான் நான் கேட்பது வழக்கம். அப்படியும் டிபன் இல்லை என்று சொன்னார்களால், தயிர் சாதம் + ஊறுகாய் மட்டும் தனியாகக் கிடைக்குமா? என்று கேட்கும் ஆசாமி நான். இருப்பினும் சாப்பாடுதான் வேண்டும் என அடம் பிடிக்கும் (எதிர்பார்த்து வந்திருக்கும்) ஆசாமிகளுடன் நான் போகும்போது அவர்களுக்காக நான் என்னை அட்ஜஸ்ட் செய்து கொள்வதும் உண்டு.

   'நீங்கள் கொடுத்துள்ள லிங்கைப் போய்ப் பார்க்கிறேன் (உணவுப் பதிவுகளைப் பற்றி நீங்க //எப்பயும் மறக்கறதில்லை போல - என்னப்போலவே :-) ) //

   எப்போதோ எங்கேயோ படித்த ஞாபகம் வந்தது. இன்று இப்போது கொஞ்சம் கஷ்டப்பட்டு Search போட்டு தேடிக்கண்டு பிடித்தேன்.

   நீக்கு
  7. நெல்லைத் தமிழன்January 11, 2018 at 4:29 PM

   //பதிவைப் பார்த்துவிட்டேன். உங்கள் ஊரில் சாப்பிடவேண்டிய ஹோட்டலின் எண்ணிக்கை ஒன்று கூடிவிட்டது. எப்போ நேரம் வருமோ தெரியலை (நான் எங்க பயணம் போனாலும், எழுதி வச்சுக்கிட்டு அந்த அந்த இடங்களுக்கு சாப்பிடப் போவேன். இதில் வெங்கட் அவர்கள் எழுதியிருந்த வெளி ஆண்டாள் சன்னிதியின் முன் உள்ள பஜ்ஜி, வடை கடையும் உண்டு)//

   வாழ்க ! வாழ்த்துகள். உங்களைப் போலவே ..... உங்களுக்கு அண்ணனாக மற்றொரு பதிவரும் உண்டு. அவரும் ஊர் ஊராகச் சுற்றி, பல இடங்களில், பலவற்றை வாங்கிச் சாப்பிட்டு வந்த, தன் அனுபவத்தை அடிக்கடி சுவையான பதிவுகளாகக் கொடுக்கக்கூடியவர் மட்டுமே.

   பெங்களூரைச் சேர்ந்த திரு. சுரேஷ் குமார் என்பவர்.

   http://www.kadalpayanangal.com/

   நீக்கு
  8. மேலேயுள்ள என் முதல் பதிலில் ஓர் வார்த்தையில் கொஞ்சம் எழுத்துப் பிழை ஆகிவிட்டது. அதனை இப்போதுதான் நான் கவனித்தேன். தவறுக்கு வருந்துகிறேன்.

   சொன்னார்களால் = தவறு

   சொன்னார்களானால் = சரி

   நீக்கு
  9. கோபு சார்... கடல் பயணங்கள் தளத்தையும் இன்னும் பிற தளங்களையும் படித்து, பிடித்திருந்தால் அதனைக் குறித்துவைத்துக்கொள்வேன். சில சமயம் அவங்க சொன்னதுபோல் நமக்கு அந்த உணர்வு வராது.

   திருவல்லிக்கேணி புகழ் பெற்ற ஒரு மெஸ்ஸுக்கு என் மனைவியோடு போய், அவளை ரொம்பவே கட்டாயப்படுத்தி (படுத்திதான்) ரெண்டுபேரும் சாப்பிட்டோம். சாப்பாடு நல்லா இருந்தாலும், சுத்தம், இடம் எல்லாம் அவளுக்கு இஷ்டமாயில்லை. இதுபோல் மைலாப்பூர் ஜன்னல் கடையும், கார்னரில் இருக்கும் பத்திரிகைக் கடையில் ரோஸ் மில்கும், ராயர் மெஸ்ஸும். திருவானைக்காவில் நெய்தோசை கடையிலும் (பார்த்தசாரதி?) எங்களுக்கு அவ்வளவு பிடிக்கவில்லை. ருசி என்பது அவரவர் நாக்குக்கு ஏற்றவாறு மாறுபடும். பசியும் இருக்கணும்.

   எனக்கு, நான் நிறைய இடங்களில் சாப்பிட்டுள்ளதால், ஓரளவு ருசி ஷார்ப்பாக ஆகிவிட்டது.

   நீக்கு
  10. நெல்லைத் தமிழன் January 12, 2018 at 8:26 PM

   //ருசி என்பது அவரவர் நாக்குக்கு ஏற்றவாறு மாறுபடும். பசியும் இருக்கணும்.//

   மிகவும் கரெக்ட்டாகச் சொல்லியுள்ளீர்கள். சபாஷ்!

   //எனக்கு, நான் நிறைய இடங்களில் சாப்பிட்டுள்ளதால், ஓரளவு ருசி ஷார்ப்பாக ஆகிவிட்டது.//

   உங்களுக்கு எல்லாவற்றிலும், உங்கள் ருசி படு ஷார்ப் தான் என்பதில் எனக்குக் கொஞ்சம் பொறாமையே உண்டு.

   கதைகள், கவிதைகள், சமையல் என எதையுமே விட்டு வைப்பது இல்லையே. தினமும் நூற்றுக்கணக்கான வலைத்தளப் பதிவுகளுக்குச் சென்று ஆயிரக்கணக்கான கருத்துக்களை அள்ளித்தெளித்து வருகிறீர்களே ! :)))))

   உலகளவில் மிகப்பிரபலமாகக் கொடிகட்டிப் பறந்துவரும் கவிஞர்கள் + கவிதாயினி களுடன் கூட இலக்கிய சர்ச்சைகள் செய்து வருகிறீர்களே!

   உங்களின் அன்றாடப் போக்குகள் எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக்கொண்டுதான் நானும் இருக்கிறேன், ஸ்வாமீ.

   மொத்தத்தில், மூனில் முதன்முதலாகக் கால் பதித்த ’நீல் ஆம்ஸ்ட்ராங்க்’ நினைவுதான் எனக்கு அவ்வப்போது வந்துகொண்டு உள்ளது. :)))))

   வாழ்க! வாழ்த்துகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 27. தலைப்பும் படங்களும்
  உற்சாகமாய் பின்னூட்டமிடும் பதிவர்களும்
  எம்முள்ளும் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்கிறார்கள்

  மாதமிருமுறை திருச்சியைக் கடக்கையில் எல்லாம்
  நானும் இந்தப் பட்டியலில் இடம் பெறும் நாள்
  குறித்துச் சிந்தித்தபடியே கடந்து கொண்டிருக்கிறேன்

  மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்களுடன்
  (தற்சமயம் சென்னையில்/ புத்தகச் சந்தையில்
  பதிவர்களைச் சந்திக்கும் எண்ணம் உள்ளது )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ramani S January 11, 2018 at 5:27 PM

   வாங்கோ Mr. S. RAMANI Sir, வணக்கம்.

   //தலைப்பும் படங்களும், உற்சாகமாய் பின்னூட்டமிடும் பதிவர்களும், எம்முள்ளும் சந்தோஷச் சாரலைத் தூவிச் செல்கிறார்கள்.//

   அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தங்களின் இன்றைய அன்பான அபூர்வ வருகை இப்போது என்னுள் சந்தோஷச் சாரலைத் தூவிக் கொண்டுள்ளது. :)

   //மாதமிருமுறை திருச்சியைக் கடக்கையில் எல்லாம் நானும் இந்தப் பட்டியலில் இடம் பெறும் நாள் குறித்துச் சிந்தித்தபடியே கடந்து கொண்டிருக்கிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி, ஸார். எனக்கும் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் என் மனதில் உண்டு. அதற்கான பிராப்தம் விரைவில் அமையட்டும்.

   //மனம் கவர்ந்த பதிவு .... வாழ்த்துக்களுடன் .... (தற்சமயம் சென்னையில் / புத்தகச் சந்தையில் பதிவர்களைச் சந்திக்கும் எண்ணம் உள்ளது )//

   ஆஹா, அந்த சந்திப்பு இனிமையாக அமைய என் வாழ்த்துகள். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஸார்.

   அன்புடன் VGK

   நீக்கு
 28. ஒரு வேண்டுகோள் அண்ணா. அப்படியே மாதம் ஒரு சிறுகதையாவது எழுதி வெளீயிடுங்களேன்.

  வழக்கம் போல் பதிவு அருமையோ அருமை.

  நாங்களும் திருச்சிக்கு ஒரு ‘மினிமூன்’ வர வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எப்பொழுது நிறைவேறுமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi JayaJanuary 11, 2018 at 10:31 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம். எப்படி இருக்கேள்? செளக்யமா?

   //ஒரு வேண்டுகோள் அண்ணா. அப்படியே மாதம் ஒரு சிறுகதையாவது எழுதி வெளீயிடுங்களேன்.//

   நல்ல கதையா இருக்கே .... நீங்க இதுபோலச் சொல்வது. :)

   //வழக்கம் போல் பதிவு அருமையோ அருமை.//

   மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி, ஜெயா.

   //நாங்களும் திருச்சிக்கு ஒரு ‘மினிமூன்’ வர வேண்டும் என்று தான் நினைக்கிறோம். எப்பொழுது நிறைவேறுமோ?//

   உங்களை நான் நேரில் சந்தித்தும் கிட்டத்தட்ட நான்கு வருஷங்கள் ஆச்சு. உங்கள் முகமே எனக்கு மறந்து போனாலும், நீங்க கொடுத்துச்சென்ற அந்த நெய் மணம் கமழ்ந்த சீர் அதிரஸமும், சீர் லாடும், சீர் முறுக்கும் இன்னும் என் நினைவுகளில் அப்படியே உள்ளன. இப்போது நினைத்துப் பார்த்தாலும் என் நாக்கில் நீர் ஊறுகிறது. :)

   இதோ அந்த நம் சந்திப்பினைச் சொல்லும் இனிய பதிவுகளில் சில:

   http://gopu1949.blogspot.in/2014/03/blog-post_29.html
   பனை [ பண ] விசிறி

   http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
   அண்ணா வீடு எங்கே ... இன்னும் கொஞ்சம் தூரம் ...

   அன்புடன் கோபு அண்ணா

   நீக்கு