மலரும் நினைவுகள்
என்னை வரவேற்ற எழுத்துலகம்
ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனம் அகில இந்திய அளவில்
1999 இல் சிறுசேமிப்பு பற்றிய கட்டுரைப்போட்டி அறிவித்திருந்தது.
நிபந்தனை: திருமணம் ஆகி 25 ஆண்டுகள்
நிறைவு பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
கட்டுரைத்தலைப்பு:
”25 ஆண்டு கால இல்வாழ்க்கையில் உங்களுக்கு ஏற்பட்ட
சுகங்களும் சோகங்களும் -
அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்/சமாளித்தீர்கள் ?”
என் மனைவி பெயரில் கலந்துகொண்ட என் கட்டுரை,
பரிசளிப்பு விழா நடைபெற்ற நாள்: 27 07 1999
AT "HOTEL FEMINA" TIRUCHI JUNCTION
-o-o-o-o-o-
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தபோது
-o-o-o-o-o-
National Award [ Medal + Certificate] at Mumbai on 18.12.2004
-o-o-o-o-o-
என்னால் முதன் முதலாக எழுதப்பட்ட “தாயுமானவள்” சிறுகதை,
06.11.2005 தினமலர்-வாரமலரில்,
என் புகைப்படத்துடனும் சுயவிபரக்குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது.
தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுப்பரிசினை வென்றது.
நூற்றுக்கணக்கானவர்களின் பாராட்டுக்களை நேரிலும்,
தபால் மூலவும், தொலைபேசி மூலமும் பெற்றுக்கொடுத்தது.
அதுமட்டுமல்ல;
என்னுடன் ஒரே அலுவலகத்தில் ஒரே துறையில்,
வேறு பிரிவில் பணியாற்றி, ஆனால் ஒருவருக்கொருவர்
அதிக அறிமுகம் இல்லாது இருந்து வந்த,
பிரபல எழுத்தாளர் திரு. ரிஷபன் அவர்களின்
கருணைப்பார்வையை என் மீது விழச்செய்தது.
அதன் பிறகு அவரின் தொடர்ச்சியான தூண்டுகோலும்,
அவர் தொடர்ந்து அளித்த வந்த உற்சாகங்களுமே
நான் சோர்வில்லாமல் தொடர்ந்து எழுதக் காரணமாக அமைந்தது.
பொதுவாக நாம் எல்லோரும் படைப்பாளிகள் என்றாலும்
திரு ரிஷபன் அவர்கள், தன் படைப்புகளை மட்டுமின்றி,
பல படைப்பாளிகளையும் உருவாக்கும்
தனித்திறமை படைத்தவர் என்பது என் கருத்து.
போட்டி பொறாமை நிறைந்த எழுத்துலகில்
இப்படியும் ஆங்காங்கே சில தங்கமான மனிதர்கள்!
திரு ரிஷபன் அவர்களுக்கு இதன் மூலம் என் நன்றி கலந்த
வணக்கங்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o--o-o-o-o-o-
NATIONAL AWARD -- FIRST PRIZE For my entry in Poster + Slogan Contest of
Indian National Suggestion Schemes Association [ INSSAN ].
Mr. N.K.Punwani, CEO M/s. Tata Group of Companies is presenting this Prestigious
National Award [Gold Medal + Certificate] at Jamshedpur on 03.02.2007
-o-o-o-o-o-
தேசிய விருதுக்கான பத்திரமும் பதக்கமும்
-o-o-o-o-o-
லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” இதழ் 2006 ஆம் ஆண்டு நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற
என் “அஞ்சலை” சிறுகதை இடம்பெற்றுள்ள புத்தகம்
-o-o-o-o-o-
சென்னையைச் சார்ந்த ”ஸ்ரீ சங்கர பக்தஜன ஸபா” 2007 ஆம் ஆண்டு
”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்”
என்ற தலைப்பில் பள்ளிச்சிறுவர்கள் இரண்டரை மணி நேரம்,
பங்குபெற்று நடிக்கும் விதமாக நாடகம் எழுதித்தர,
போட்டிஅறிவிப்பு ஒன்று வெளியிட்டிருந்தது.
அதில் நான் கலந்து கொண்டதில்,
வந்திருந்த 500க்கும் மேற்பட்ட படைப்புக்களில், என்னுடைய படைப்பு அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசு க்குத் தேர்வாகி,
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில்
03.10.2007 அன்று நடைபெற்ற மிகப்பெரிய விழாவில்
ரூபாய் 5000 ரொக்கப் பரிசளிக்கப்பட்டது.
இந்த என் சாதனையைப் பாராட்டி, திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம்
பாராட்டு விழா ஒன்று 16.10.2007 அன்று ஏற்பாடு செய்திருந்தது.
அதில் பட்டிமன்றங்கள் பலவற்றில் நடுவராகத்தோன்றுபவரும், புகழ்பெற்ற தமிழ்ப் பேராசிரியருமான திரு. சோ. சத்தியசீலன் அவர்கள்
திருக்கரங்களால் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டது.
-o-o-o-o-o-o-
தொழிலகப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில்
தமிழ் சிறப்பு வாக்யத்திற்கு (SLOGAN) முதல் பரிசு 26.05.2008 அன்று
Mr.S.Rathinam, Dy. Chief Inspector of Factories அவர்களால் வழங்கப்பட்டது
-o-o-o-o-o-
தொழிலகப்பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில்
தமிழ் கவிதைக்கு இரண்டாம் பரிசு
26.05.2008 அன்று Mr.S.Rathinam, Dy. Chief Inspector of Factories
அவர்களால் வழங்கப்பட்டது
-o-o-o-o-o-
38 ஆண்டுகளுக்கு மேல் நான் பணியாற்றிய
BHEL ஐப்பற்றி அடியேன் எழுதியக்கவிதை,
BHEL House Journal ஆன "BHEL KIRAN 2008" இல் வெளியிடப்பட்டது.
2009 ஆம் ஆண்டு என் பணி ஓய்வுக்குப்பிறகு,
இந்த என் கவிதை, BHEL நிர்வாகத்தால்
இசை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு CD ஆக,
தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்
ஆகிய ஐந்து மொழிகளிலும்,
அதுதவிர தனியாக பில்லங்குழல் இசையிலும் வெளியிடப்பட்டு,
இந்தியாவில் உள்ள அனைத்து BHEL
யூனிட்களுக்கும், வழங்கப்பட்டுள்ளது.
இதை BHEL நிர்வாகம் எனக்களித்த மிகப்பெரிய
அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.
அங்கீகாரமாக எண்ணி மகிழ்கிறேன்.
BHEL Song | Muziboo
நம் ஆலை ஓர் ஆலயம் [கவிதை]
பாரத மிகுமின் தொழிலகமே
பாரினில் நல்ல எழிலகமே
இதில் உழைப்பவர் நாங்கள் அரை லட்சம்
பலனில் பிழைப்பவர் உலகில் பல லட்சம்
தரத்தினில் நாங்கள் தங்கமென்று
தரணியில் புகழை எட்டிவிட்டோம்
இந்தியத் திருநாட்டின் ஆலை இது
நெஞ்சில் நவரத்தினம் பதித்த மாலை இது
ஜாதி மத இன மொழி நிற பேதமின்றி
அனைவரும் பழகிடும் பசுஞ்சோலை இது
சோதனை பலவும் பார்த்து விட்டோம்
சாதனை பலவும் புரிந்து விட்டோம்
வேதனை என்றும் பட்டதில்லை
வெற்றிகள் எட்டாமல் விட்டதில்லை
அனுதினமும் திட்டங்கள் பல தீட்டிடுவோம்
அனைவரும் ஒன்றுபட்டு செயலாற்றிடுவோம்
உழைப்பினில் கவனம் செலுத்திடுவோம்
உற்பத்தி இலக்கினை எட்டிடுவோம்
உலகச்சந்தையில் போட்டியிட்டு
உன்னத ஆணைகள் பெற்றுவிட்டோம்
மின்னொளிச் சாதனச் சந்தையிலே
என்றும் முன்னனியாகத் திகழ்கின்றோம்
நம் நிறுவனத்தின் நல்ல வளர்ச்சி போலவே
நாமும் இன்று வளர்ந்து விட்டோம்
வி சா ல மா ன ஆலையில் உழைத்தே, நாம்
வி லா ச மு ள் ள வ ர் ஆகி உள்ளோம்
வளரட்டும் நம் ஆலை - வாழட்டும் நம் மக்கள்
மலரட்டும் நம் வாழ்வு - மகிழட்டும் நம் மனது
இன்றுபோல் என்றும் நாம்
இன்புற்று வாழ்ந்திடுவோம்
தாய்போல் நம்மை வளர்த்த
நம் ஆலையை
தலையால் வணங்கிடுவோம்
ஓர் ஆலயமாய்.
-oOo-
-o-o-o-o-o-
சுபம்
என் மன வலி தீர ஒரு மருந்து சொல்லுங்க...........
பதிலளிநீக்குபடிக்க படிக்க
பதிலளிநீக்குபார்க்க பார்க்க
மணமும்
விழியும்
ஒரு சேர விரிகின்றன
ஆர்வத்தால்
ஆச்சர்யத்தால்
பெருமையால்
சந்தோஷத்தால்
அருமையான மாமனிதர் ஐயா நீங்கள்
நீங்கள் சாதாரணமானவர் இல்லை
பதிலளிநீக்குசாதனை புரிந்தவர் மட்டும் இல்லை
சாதனை புரிந்து கொண்டிருப்பவரும் கூட
இந்தப் பதிவை படிக்கையில்
இப்படித்தான் தங்கள் பதிவின் தலைப்பில்
குறிப்பிடவேண்டும் என நினைத்துக்கொண்டேன்
படங்களும் பதிவும் அருமை
சிறப்பான சாதனைகள்.
பதிலளிநீக்குI second Sri Ramani
பதிலளிநீக்குசாதனைகள்...ஆச்சர்யப் பட வைக்கின்றன. பிரமிக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குஎல்லாப் புகழும் உங்களுக்கே!
பதிலளிநீக்குஉங்கள் எழுத்துத் திறமைக்கே..
கலைமகள் உங்களுக்கு அள்ளிக் கொடுத்ததை நீங்கள் எங்களோடு பகிர்ந்து மகிழ்கிறீர்கள்.
மென்மேலும் வளர்க.. என அன்பால் வாழ்த்துகிறேன்.
சாதனைகள் வியக்க வைக்கின்றன.
பதிலளிநீக்குபகிர்தலுக்கு மகிழ்ச்சி மற்றும் நன்றி
தொடர் வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎல்லாத் துறையிலும் உங்கள் சாதனைகள் மிளிர்கிறது…. வாழ்த்துகள்… இந்த அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் திருமண நாளான இன்று எங்களுடன் பகிர்ந்து எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். மிக்க நன்றி.
பதிலளிநீக்குமுத்திரை பதித்த முத்தான
பதிலளிநீக்குமுழுத்திறமைகளுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தபோது//
பதிலளிநீக்குஐயா- அத்தனை எழுத்துக்களையும் பதிவேற்றினால் பயனுள்ளதாக அமையும்.
சில தங்கமான மனிதர்கள்! திரு ரிஷபன் அவர்களுக்கு இதன் மூலம் என் நன்றி கலந்த வணக்கங்களை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன். //
பதிலளிநீக்குரிஷபன் அவர்களுக்கு எங்களின் வணக்கங்களும் நன்றிகளும்.
மிகப் பயனுள்ள விழிப்புணர்வு கொடுத்த தங்களின் பகைப்படப் பகிர்வுகளுக்கு நன்றி ஐயா.
பதிலளிநீக்குayyaa thangkalin anubavam en vayathu pola irukkirathu.. thankalin thotar varukai ennai melum merukerrum ena nambukiren.///
பதிலளிநீக்குகலைவாணியின் முழு அருளையும் பெற்று கதை, கட்டுரை, கவிதை என் எல்லவகை எழுத்திலக்கியத்திலும் முத்திரை பதித்த தங்களின் பகிர்வுகள் எங்களை பெருமை கொள்ள செய்தது சார்.( Being in communication with such a legend.) Thank you very much Sir.
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - எழுத்துத் திறமை தங்களின் வாழ்வில் பெரும் பங்கு வகித்திருக்கும் என எண்ணுகிறேன். நிறைவான குடும்பம் - பொறுப்பான பணி - மனமகிழும் எழுத்து - கடவுளீன் கருணை இன்று போல் என்றும் இருக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅருமையான நினைவுகள் சார்...
பதிலளிநீக்குஅலுவலகம்,குடும்ப வாழ்க்கை,எழுத்து என சாதித்துக் கொண்டிருக்கும் சகாப்தம் நீங்கள்...
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்" என்பர். இவ்வமயம், VGK என்னும் சகாப்தத்திற்கு தூண்டுகோலாய் அமைந்த உயர்திரு.ரிஷபன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பினை அளித்தமைக்கு நன்றி சார்...
அன்புடன்,
ராணி கிருஷ்ணன்.
அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு, என்னை வாழ்த்தியுள்ள அனைத்துத் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நீக்குஎன்றும் அன்புடன் தங்கள்,
vgk
my belated congrats to you for winning the gold medal!!!
பதிலளிநீக்குLeelagovind said...
பதிலளிநீக்கு//my belated congrats to you for winning the gold medal!!!//
Thank you very much, Madam.
vgk
ஐயா அனைத்து பட்டங்களுக்கும் ,பதக்கங்களுக்கும் வயதில் சிறியவளாக இருந்தாலும் என்னுடைய வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் .....
பதிலளிநீக்குதங்க நெக்லஸ் பெற்றதற்கும் அதன் தலைப்பு அம்மாவின் பெயரை வைத்து விருது பெற்றமைக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா...
Thank you very much for your kind visit & valuable comments, Mrs. VijiParthiban Madam.
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகை+வணக்கங்கள்+வாழ்த்துகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன.
என் துணைவியாருடன் கூட தங்களுக்கு நன்றி, நன்றி, நன்றி.
அன்புடன்,
vgk
குடத்திலிட்ட விளக்காய் பிரகாசிக்கிறது அண்ணா நீங்கள் பெற்ற பரிசுகளும் அவார்டுகளும் ரொக்கங்களும்....
பதிலளிநீக்கு25 வருடம் நிறைவாய் வாழ்ந்தவர்களால் தான் அனுபவ பாடங்களை அனாயசமாக தரமுடியும் என்ற நம்பிக்கையை மிக அழகாக மெய்ப்பித்து இருக்கீங்க. மன்னியின் பெயரால் நீங்க எழுதிய கட்டுரைக்காக மன்னிக்கே தங்க நெக்லஸ் கிடைத்துவிட்டதே.. அபாரம் அபாரம்....
ஒரே துறையில் பணிபுரிந்து வேறு பிரிவில் இருந்தாரா ரிஷபன். அட அட அட.... என் மனதை கவரும் பதிவர்களில் ரிஷபனும் ஒருவர்....
அவருடைய நல்ல மனசை நீங்க சரியான சமயத்தில் வெளிப்படுத்தி உங்க அன்புநன்றிகளை ரிஷபன் அவர்களுக்கு பகிர்ந்தது மிக அற்புதமான விஷயம்.. அற்புத மனிதனாச்சே ரிஷபன்.... உங்க இருவருக்குமே மிக மிக பெருந்தன்மையான குணங்கள் அண்ணா...
தாயுமானவள் சிறுகதைக்கு கிடைத்த அங்கீகாரமும் பரிசும்..
நேஷனல் அவார்ட் மெடலும் பாராட்டும் ஸ்லோகனுக்கு....
உலகளாவிய போட்டியில் “ அஞ்சலை “ சிறுகதை....
ஆதிசங்கரரின் வாழ்வும் வாக்கும்.. அதற்கு உலகளாவிய போட்டியில் மூன்றாவது பரிசும்...
தொழிலக பாதுகாப்பு விழிப்புணர்வு ( முதல் பரிசு )
எல்லாத்துக்கும் மணிமகுடம் வைத்தது போல BHEL கவிதை ஆஹா அது ஐந்து மொழிகளிலும் இசையுடன் இயற்றி இந்திய அளவில் கொடுத்தது உங்களுக்கு மட்டுமல்ல அண்ணா எங்களுக்கும் சந்தோஷம் கலந்த பெருமை....
சாதித்தவர் ஓய்வதில்லை...
சாதனைகளுக்கு முடிவுமில்லை....
சாதனைகள் தொடரட்டும்...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு...
அன்புச் சகோதரி மஞ்சு, வாருங்கள், வணக்கம்.
பதிலளிநீக்கு//25 வருடம் நிறைவாய் வாழ்ந்தவர்களால் தான் அனுபவ பாடங்களை அனாயசமாக தரமுடியும் என்ற நம்பிக்கையை மிக அழகாக மெய்ப்பித்து இருக்கீங்க. மன்னியின் பெயரால் நீங்க எழுதிய கட்டுரைக்காக மன்னிக்கே தங்க நெக்லஸ் கிடைத்துவிட்டதே.. அபாரம் அபாரம்....//
இந்த தங்க நெக்லஸை விட மிகப்பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? அதை முதன்முதலாக அணிந்து அழகு பார்த்தது யார் தெரியுமா?
அப்போது எனக்கு வயது 49, மன்னிக்கு வயது 45. முதன் முதலாக நாங்கள் எங்கள் வாழ்க்கையில் தாத்தா/பாட்டி என்ற பிரமோஷன் வாங்கிய நாள்: 18.07.1999.
ஆசைக்கும் அருமைக்கும் அன்று முதல் இன்று வரை எங்களுக்கு ஒரே ஒரு பேத்தி மட்டுமே. அந்தக்குழந்தை பிறந்த நாள் 18.07.1999.
குழந்தை ... அதுவும் முதல் பேத்தி பிறந்தாள் என்ற மகிழ்ச்சியில் நான் ஒரு அழகான தொட்டிலும், கைகளுக்கு தங்க வளையல்கள், மாதுளை முத்துக்கல் வைத்த குட்டியூண்டு மோதிரம், தங்க அரணா, வெள்ளிக்கொலுசு, காப்புகள், குழந்தைக்கான புதிய ஆடைகள், விளையாட்டு பொம்மைகள் என அனைத்தையும் ஆசை ஆசையாக வாங்கிக்கொண்டு வீடு திரும்பினேன்.
வீடு திரும்பிய எனக்கு, 27.07.1999 அன்று தங்க நெக்லஸ் பரிசளிப்பு விழா என்று கடிதம் வந்திருந்தது மேலும் மகிழ்ச்சியளித்தது.
பேத்தி பிறந்த ஒன்பதாம் நாள் தங்க நெக்லஸ் பரிசு கிடைத்தது. பதினோராம் நாள் குழந்தைக்கு புண்ணியாஹாவாசனம்.
குழந்தைக்குத் தொட்டில் இட்டு, பெயர் சூட்டும் விழாவும் அன்றே. மற்ற நகைகளுடன் அந்த நெக்லஸும் அவளுக்கே முதன்முதலாக அணிவிக்கப்பட்டது. இன்றும் கூட அது குழந்தைகள் நகைகளுடனேயே பத்திரமாக வைக்கப் பட்டுள்ளது.
இவ்வாறு அந்தப் பரிசின் மதிப்பு மிகமிகக் கூடி எங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்தது. இப்போது நினைத்தாலும் பரம சந்தோஷமாக உள்ளது. மறக்க முடியாத பரிசல்லவா!
விளையாட்டுப்போல நாட்கள் ஓடி விட்டன. அந்த எங்களின் அருமைப்பேத்திக்கு இப்போது 12 முடிந்து 13 வயதாகிறது.
தொடரும்....
VGK to மஞ்சு தொடர்ச்சி.....
நீக்கு2]
//ஒரே துறையில் பணிபுரிந்து வேறு பிரிவில் இருந்தாரா ரிஷபன். அட அட அட.... என் மனதை கவரும் பதிவர்களில் ரிஷபனும் ஒருவர்....
அவருடைய நல்ல மனசை நீங்க சரியான சமயத்தில் வெளிப்படுத்தி உங்க அன்புநன்றிகளை ரிஷபன் அவர்களுக்கு பகிர்ந்தது மிக அற்புதமான விஷயம்.. அற்புத மனிதனாச்சே ரிஷபன்.... உங்க இருவருக்குமே மிக மிக பெருந்தன்மையான குணங்கள் அண்ணா... //
ஆம் ... பதிவர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் என் அருமை நண்பர். நலம் விரும்பி. எழுத்துலக வழிகாட்டி, மிகச்சிறந்த எழுத்தாளர், மிகவும் நல்ல மனிதர், என் எழுத்துலக மானஸீக குருநாதர், அவ்வப்போது எனக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்தவர். எனக்கு வலைப்பூ ஒன்றை துவங்கிக் கொடுத்தவரும் அவரே.
அவரைப்பற்றி ஆங்காங்கே என் பதிவுகளில் நான் தெரிவித்திருப்பேன். உதாரணமாக இந்த இரண்டு இணைப்புகளில் காணலாம்.
http://gopu1949.blogspot.com/2011/07/blog-post_21.html
முன்னுரை என்னும் முகத்திரை
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
”தாயுமானவள்” இறுதுப்பகுதி 3/3 யின் இறுதிபாகத்தில்
தொடரும்..... vgk
VGK to மஞ்சு தொடர்ச்சி.....
நீக்கு3]
//எல்லாத்துக்கும் மணிமகுடம் வைத்தது போல BHEL கவிதை ஆஹா அது ஐந்து மொழிகளிலும் இசையுடன் இயற்றி இந்திய அளவில் கொடுத்தது உங்களுக்கு மட்டுமல்ல அண்ணா எங்களுக்கும் சந்தோஷம் கலந்த பெருமை....//
ஆமாம். இதை BHEL திருச்சி மட்டுமல்லாமல், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள அனைத்து BHEL தொழிலகங்களுக்கும், அலுவலகங்களும் அனுப்பி வைத்தார்கள். எல்லா BHEL Library களிலும் இன்றும் வைக்கப்பட்டுள்ளன.
திருச்சியில் மட்டும், கம்பெனி நடத்தும் அனைத்து விழாக்களிலும் அந்த சமயம் இவை ஒலிபரப்பப்பட்டு வந்தன.
மேலும் முதல் ஒரு மாதத்திற்கு மட்டும், BHEL Tiruchi Unit இல் உள்ள ஆயிரக்கணக்கான LOCAL TELEPHONE CONNECTION இல் RING TONE க்குப்பதிலாக இந்த நான் எழுதிய பாடல் ஒலிபரப்பப்பட்டன.
மதிய இடைவேளையில் இங்குள்ள பல கேண்டீகளிலும், இந்தப்பாடலை ஒலிபரப்பி வந்தனர்.
ஓய்வுபெற்ற நான் இவைகளையெல்லாம் என் நண்பர்கள் வாயிலாகக் கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
தொடரும் ... vgk
VGK to மஞ்சு தொடர்ச்சி ....
பதிலளிநீக்கு4]
//சாதித்தவர் ஓய்வதில்லை...
சாதனைகளுக்கு முடிவுமில்லை....
சாதனைகள் தொடரட்டும்...
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள் அண்ணா பகிர்வுக்கு...//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான விரிவான மனம் திறந்த பாராட்டுக்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள், சகோதரி.
பிரியமுள்ள,
VGK.
Great & Greatest VGK Sir. Namaskarram.நல்ல ஒரு கலை+ கவிதை+கதை மற்றும் எல்லா புகழும் ஒரே இடத்தில் இருக்கிற உங்களை நான் வாழ்த்த வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் நானும் வாழ்த்துகிறேன். மேலும் மேலும் ஆஸ்கார் போன்ற விருதுகள் பெறவேண்டும்.
பதிலளிநீக்குVijiskitchencreations November 2, 2012 7:45 AM
பதிலளிநீக்கு//Great & Greatest VGK Sir.//
நான் என்றும் மிகச்சாதாரணமானவன் தான், மேடம்.
எனினும் தங்களின் Great & Greatest வருகைக்கும் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
//Namaskaaram.//
என் மனமார்ந்த ஆசிகள்.
//நல்ல ஒரு கலை+ கவிதை+கதை மற்றும் எல்லா புகழும் ஒரே இடத்தில் இருக்கிற உங்களை நான் வாழ்த்த வார்த்தைகள் இல்லை.இருந்தாலும் நானும் வாழ்த்துகிறேன். மேலும் மேலும் ஆஸ்கார் போன்ற விருதுகள் பெறவேண்டும்.//
சந்தோஷம் மேடம். அன்பான வாழ்த்துகளுக்கு நன்றியோ நன்றிகள்.
அன்புள்ள
VGK
பிரமித்துப்போகிறேன் சார்! எப்படி சார் இத்தனையையும் சாதித்துவிட்டு தங்களால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது! தோல்வியை அறிந்தவர்களால் மட்டுமே வெற்றியின் உண்மையான சந்தோஷத்தை ருசிக்க முடியும் அதுவும் இவ்வளவு எளிமையாக. தங்களது சாதனை தொடரட்டும் சார்! 25 ஆண்டு காலத்திற்கும் மேலான இல்வாழ்க்கையை பற்றிய கட்டுரையில் பரிசினை வென்றது, குறிப்பிட வேண்டிய நேரத்தில் ரிஷபன் சாரை பற்றியும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததும் நெகிழச்செய்கிறது சார்!
பதிலளிநீக்குதங்களது BHEL-ஐ பற்றிய கவிதையின் மூலம் தங்களது 38 ஆண்டுகால உழைப்பிற்கு மரியாதை செலுத்துவதாகவும், தாங்கள் குறிப்பிட்டது போல் அங்கீகாரம் கொடுத்தது போலும் BHEL நிர்வாகம் செய்தது சொல்ல வார்த்தைகள் இல்லை சார்! சந்தோஷிக்கிறேன்!
யுவராணி தமிழரசன் November 29, 2012 8:18 AM
நீக்கு//பிரமித்துப்போகிறேன் சார்! எப்படி சார் இத்தனையையும் சாதித்துவிட்டு தங்களால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது!
தோல்வியை அறிந்தவர்களால் மட்டுமே வெற்றியின் உண்மையான சந்தோஷத்தை ருசிக்க முடியும் அதுவும் இவ்வளவு எளிமையாக.
தங்களது சாதனை தொடரட்டும் சார்!................//
அன்புள்ள யுவராணி, தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சென்ற வாரம் 19-25.11.2012 தாங்கள் வலைச்சர ஆசிரியர்.
இந்த வாரம் 26.11...2.12.2012 திரு. ரிஷபன் அவர்கள்.
நினைத்தாலே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பிரமித்துப்போகிறேன் சார்! எப்படி சார் இத்தனையையும் சாதித்துவிட்டு தங்களால் இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது! தோல்வியை அறிந்தவர்களால் மட்டுமே வெற்றியின் உண்மையான சந்தோஷத்தை ருசிக்க முடியும் அதுவும் இவ்வளவு எளிமையாக. தங்களது சாதனை தொடரட்டும் சார்! 25 ஆண்டு காலத்திற்கும் மேலான இல்வாழ்க்கையை பற்றிய கட்டுரையில் பரிசினை வென்றது, குறிப்பிட வேண்டிய நேரத்தில் ரிஷபன் சாரை பற்றியும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்ததும் நெகிழச்செய்கிறது சார்!
பதிலளிநீக்குதங்களது BHEL-ஐ பற்றிய கவிதையின் மூலம் தங்களது 38 ஆண்டுகால உழைப்பிற்கு மரியாதை செலுத்துவதாகவும், தாங்கள் குறிப்பிட்டது போல் அங்கீகாரம் கொடுத்தது போலும் BHEL நிர்வாகம் செய்தது சொல்ல வார்த்தைகள் இல்லை சார்! சந்தோஷிக்கிறேன்!
அன்புள்ள யுவராணி,
நீக்குஒரே பின்னூட்டம் இருமுறை வந்துள்ளது போலிருக்கிறது. ஒன்று மட்டும் ஸ்பேமில் இருந்தது. இப்போது தான் அதனை வெளிக்கொணர்ந்தேன். மிக்க நன்றி. அன்புடன் VGK
ஸ்ரீ ராம் சிட்சின் முதல் பரிசு தங்க நெக்லெஸ் வாங்கினீங்களா. அப்பலேந்தே எழுத்து பயணம் தொடங்கிட்டீங்களா?,தொடர்ந்து தேசீயவிருதுக்கான பத்திரம்,பதக்கம் வென்றிருகீங்க. நீங்க பெல் பற்றிய கவிதை 5 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா. உங்களை அஷ்டாவதானின்னோ, தசாவதானின்னோ கூட சொல்ல முடியாது அதையும் தாண்டிசதாவதானின்னு சொல்லலாம் போல அவ்வளவு சாதிச்சிருக்கீங்க. நீங்க என் நண்பர் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கிறது.
பதிலளிநீக்குபூந்தளிர் January 15, 2013 at 5:55 AM
நீக்கு//ஸ்ரீ ராம் சிட்சின் முதல் பரிசு தங்க நெக்லெஸ் வாங்கினீங்களா?//
ஆமாம் இரண்டாவது படத்தில் உள்ள அதே நெக்லஸ் தான்.
சுமார் 10 கிராமுக்கு மேல் இருக்கும். இன்னும் அது என்னிடம் அப்படியே உள்ளது.
//அப்பலேந்தே எழுத்து பயணம் தொடங்கிட்டீங்களா?//
கட்டுரையில் அது தான் என் முதன்முதல் பயணம்.
//தொடர்ந்து தேசீயவிருதுக்கான பத்திரம்,பதக்கம் வென்றிருகீங்க.//
ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சிக்ள்.
//நீங்க பெல் பற்றிய கவிதை 5 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா?//
ஆம், நான் எழுதியது தமிழில் மட்டுமே. உங்களுக்கு மெயிலில் அதை அனுப்பி வைக்கிறேன்.
5 மொழிகளிலும், புல்லாங்குழலிலும் மொழியாக்கம் செய்து இசை அமைத்து, CD ஆக்கி பெருமைப்படுத்தியுள்ளதெல்லாம் நான் பணியாற்றிய BHEL நிர்வாகம் மட்டுமே.
//உங்களை அஷ்டாவதானின்னோ, தசாவதானின்னோ கூட சொல்ல முடியாது அதையும் தாண்டி சதாவதானின்னு சொல்லலாம் போல அவ்வளவு சாதிச்சிருக்கீங்க.//
ஆஹா, நீங்க சொல்லித்தான் நான் ‘சதாவதானி’ என்ற ஒரு வார்த்தையை இப்போது கற்றுக்கொண்டேன். நன்றி. நீங்களே ஒருவேளை சதாவதானியாகக்கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன். யாரு கண்டா. இப்போ வெறும் பூந்தளிர் தான்.
”போகப்போகத்தெரியும் .. இந்தப்பூவின் வாஸம் புரியும்” !;)
//நீங்க என் நண்பர் என்று நினைக்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கிறது.//
ஆஹா, மிக்க நன்றி நண்பீஈஈஈஈஈ [தோழி]
பிரியமுள்ள
VGK
என்ன சார் இப்படி சிரிக்க வைக்குரீங்க. சதம்னா 100 இல்லியா? அதான் சதாவதானின்னு சொன்னேன். நீங்க இமயமலை, நான் சாதா பரங்கி மலை. ஹா ஹா ஹா(இதுக்கு எந்த ர, ற வரும்? டௌட்டூஉ
பதிலளிநீக்குபூந்தளிர் January 15, 2013 at 8:52 PM
பதிலளிநீக்கு//என்ன சார் இப்படி சிரிக்க வைக்குறீங்க.//
நான் உங்களை சிரிக்க வைக்கிறேனா? நீங்களா சிரித்து விட்டு என் மீது அபாண்டமாகப் பழியைப்போடுறீங்களே! இது நியாயமா?
//சதம்னா 100 இல்லியா? அதான் சதாவதானின்னு சொன்னேன்.//
ஆமாம் இல்லே! சதம்ன்னா நூறு தான். எனக்கும் தெரியும். கிரிக்கெட்டிலே கூட சதம் அடித்தார் என்று சொல்லுவாங்களே!
இருந்தும் உங்கள் வாயால் அதைக்கேட்கணும்னு ஒரு ஆசை எனக்கு.
//நீங்க இமயமலை, நான் சாதா பறங்கி மலை.//
ஆமாம் நான் இமயமலை போலத்தான் என்று சொல்லுவார்கள். என் எடை 93 கிலோ. இடத்தைவிட்டு நகராத சோம்பேறி என்ற பெயர்களும் எனக்கு உண்டு தான்.
இமயமலை நகர்ந்தால் அது பிறருக்கு ஆபத்து அல்லவோ! அதனால் அது [அனாவஸ்யமாக எங்கும்] நகர விரும்புவது இல்லை.
//ஹா ஹா ஹா(இதுக்கு எந்த ர, ற வரும்? டௌட்டூஊ//
ஆங்காங்கே என் பதில்களில், உங்களின் ’ர’ ’ற’ பிரச்சனைகளுக்கு நான் திருத்தங்கள் கொடுத்துக்கொண்டு தான் வருகிறேன். அதனால் ஒன்றும் கவலைப்படாதீங்கோ. நாம் சொல்லும் விஷயங்கள் பிறருகுப் புரிந்தால் போதும். எழுத்துப்பிழைகள் எனக்கும் கூட அவசரத்தில் ஏற்படுவது உண்டு தான். பொண்ணு பதில் போண்ணு என்று போட்டிருக்கிறேன் பாருங்கோ. தலையில் குட்டிக்கொண்டு விட்டேன்.
அப்போ நீங்க சென்னையில் உள்ள பறங்கி மலைப்பகுதியைச் சேர்ந்தவராக இருப்பீங்க்ளோன்னு ஒரு டவுட் வந்ததூஊஊஊ.
ஆனால் அது இல்லைன்னு எனக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்க தான் தமிழ்நாட்டுப்பக்கமே வந்தது இல்லைன்னு சொல்லியிருக்கீங்களே.
தமிழ்நாட்டுப்பக்கமே வராத நீங்கள் ‘ர’ ’ற’ இவற்றில் எது வேண்டுமானாலும் போடலாம் தான். ;)))))
பிரியமுள்ள
VGK
மலரும் நினைவுகள் பகுதி 3 படித்ததும் தோன்றியது
பதிலளிநீக்குI AM NO WHERE
BUT I AM NOW HERE TO KNOW ABOUT A GREAT MAN WITH SO MANY LAURELS.
இதுக்கு மேல ஒண்ணும் சொல்லத் தெரியல.
இவ்வளவு பெரிய மனிதரிடம் ரொம்ப CASUAL ஆ ஜோக் அடிச்சுண்டிருக்கேன்.
JAYANTHI RAMANI February 13, 2013 at 3:03 AM
நீக்குவாங்கோ வணக்கம்.
//மலரும் நினைவுகள் பகுதி 3 படித்ததும் தோன்றியது
I AM NO WHERE
BUT I AM NOW HERE TO KNOW ABOUT A GREAT MAN WITH SO MANY LAURELS.
இதுக்கு மேல ஒண்ணும் சொல்லத் தெரியல.//
மிக்க நன்றிம்மா !
//இவ்வளவு பெரிய மனிதரிடம் ரொம்ப CASUAL ஆ ஜோக் அடிச்சுண்டிருக்கேன்.//
நீங்கள் Casual ஆக ஜோக் அடித்துக்கொண்டு, என்னுடன் ஒருவித வாத்சல்யத்துடன் பழகி வருவதால் மட்டுமே, உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
நான் எப்போதுமே ஒரு குழந்தை உள்ளம் கொண்டவன்.
குழந்தைகளின் குறும்புத்தனங்களை மிகவும் ரஸிப்பவன்.
உங்களுடைய குறும்புத்தனங்களும் வால் தனங்களும் மட்டுமே எனக்கு உங்களின் மேல் ஓர் தனி பிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நான் மிகச் சாதாரணமானவன் தான்.
இந்த மேற்படி SO MANY LAURELS எல்லாம் கூட அவைகளாகவே மிகவும் Casual ஆகவே என்னை வந்தடைந்தன.
அதனால் தாங்கள் எப்போதும் போல ஜாலியாக கேஷுவலாகவே இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. அப்ப வாலை சுருட்டிக்கொள்ள தேவையில்லை.
பதிலளிநீக்குதங்கள் சித்தம் என் பாக்கியம்
JAYANTHI RAMANI February 15, 2013 at 11:25 PM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//நன்றி. அப்ப வாலை சுருட்டிக்கொள்ள தேவையில்லை.//
தேவையே இல்லை.
வாலின், வாலுக்கு [சுருட்டிக்கொள்ளாத நீண்ட வாலுக்கு] என் நன்றியோ நன்றிகள்.
//தங்கள் சித்தம் என் பாக்கியம்//
கேட்கவே மகிழ்ச்சியாகவும், மனதுக்கு மிகுந்த ஆறுதலாகவும் உள்ளதும்மா. சந்தோஷம். ;)))))
தங்க நெக்லஸ் பரிசு கிடைத்த விபரம் அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குரிஷ்பன் சார் நட்பும் கிடைத்தவிபரம் அறிந்து கொண்டேன்.
உலகத்தமிழ் எழுத்தாளர் உறுப்பினர் விஷ்யம் எல்லாம் கேள்விப்பட்டு மலைப்பாய் இருக்கிறது எவ்வளவு உழைப்பு!
தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்
ஆகிய ஐந்து மொழிகளிலும்,
அதுதவிர தனியாக பில்லங்குழல் இசையிலும் வெளியிடப்பட்டு,
இந்தியாவில் உள்ள அனைத்து BHEL
யூனிட்களுக்கும், வழங்கப்பட்டுள்ளது.//
மிகவும் மகிழ்ச்சியான செய்தி.
வெற்றி சிகரம் நீங்கள், எளிமையாக இருக்கும் நிறைகுடம்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வணக்கங்கள்.
கோமதி அரசு March 23, 2013 at 5:41 PM
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
//தங்க நெக்லஸ் பரிசு கிடைத்த விபரம் அறிந்து கொண்டேன்.
ரிஷ்பன் சார் நட்பும் கிடைத்தவிபரம் அறிந்து கொண்டேன்.
உலகத்தமிழ் எழுத்தாளர் உறுப்பினர் விஷ்யம் எல்லாம் கேள்விப்பட்டு மலைப்பாய் இருக்கிறது எவ்வளவு உழைப்பு!//
இந்தப்பதிவுக்குத் தங்களின் வருமை மிகவும் சந்தோஷம் அளிக்கிறது.
*****தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம்
ஆகிய ஐந்து மொழிகளிலும், அதுதவிர தனியாக பில்லாங்குழல் இசையிலும் வெளியிடப்பட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து BHEL
யூனிட்களுக்கும், வழங்கப்பட்டுள்ளது.*****
//மிகவும் மகிழ்ச்சியான செய்தி. வெற்றி சிகரம் நீங்கள், எளிமையாக இருக்கும் நிறைகுடம். வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். வணக்கங்கள்.//
தஙளின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், ஆத்மார்த்தமான பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த அன்பான இனிய நன்றிகள்.
தங்களுடைய இலக்கிய வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருக்கிறது.
பதிலளிநீக்கு:))))
பதிலளிநீக்குகுருஜி இவ்ளோ பரிசுக பதக்கங்க கூடவே தங்க நெகலேசு வேர எவ்ளோ பாராட்டுகள் சந்தோசம் பிச்சுகிது.
பதிலளிநீக்குநம் ஆலை ஒர் ஆலயம் கவிதை நல்லா இருக்கு. இதை பகிர்த்தது போல ஸ்ரீராம்சிடஸுல என்ன எழுதி இருந்தீங்கன்னு பகிர்ந்திருக்கலாமே.இவ்வளவு பரிசுகளும் பாராட்டுகளும் சேர வேண்டிய இடம் அறிந்துதான் சேர்ந்திருக்கு
பதிலளிநீக்குநீங்கள் எழுதிய கவிதைக்கு இதைவிட அதிகபட்ச அங்கீகாரம் நிச்சயமாய் கிடைக்காது...
பதிலளிநீக்குபாராட்டுகள் சார்!தொடரட்டும் இன்னும் பல பரிசுகள்!
பதிலளிநீக்குஏ....அப்பாடியோ எவ்வளவு பிரபலமானவர் நீங்கனு இப்பதான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா கூட எந்த பந்தாவும் இல்லாம சின்ன பொண்ணான என்னையும் ஃப்ரெண்டா சேத்துகிட்டீங்களே..பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கு
பதிலளிநீக்கு@ Happy
நீக்குவாங்கோ, வணக்கம்.
எல்லா வயதினரும் என்னுடன் இன்றும் நட்புடன் பழகி வருவது, என்னை மனதளவில் எப்போதும் இளமையாக வைத்து வருகிறது. அதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. :)
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
அப்பப்பா எவ்வளவு திறமைகள். படங்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொண்டது. சந்தோஷம். பின்ட்டனூட்ங்களைப் படிக்கும்போது எல்லோருடைய பாராட்டுக்களையும் படிக்கும்போது நிறைவாக இருக்கு. வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... October 29, 2016 at 10:49 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அப்பப்பா எவ்வளவு திறமைகள். படங்களுடன் விஷயங்களை பகிர்ந்து கொண்டது. சந்தோஷம். பின்னூட்டங்களைப் படிக்கும்போது எல்லோருடைய பாராட்டுக்களையும் படிக்கும்போது நிறைவாக இருக்கு. வாழ்க வளமுடன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.
Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.
பதிலளிநீக்கு- Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)
Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true
நினைத்து நினைத்து மகிழவும் பெருமிதம் கொள்வதற்கான தருணங்கள்..உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் தொடர்பில் இருப்பதனால் எங்களுக்கும்..வாழ்த்துக்களுடன்..
பதிலளிநீக்குYaathoramani.blogspot.com February 16, 2020 at 4:25 AM
நீக்குவாங்கோ ரமணி சார், வணக்கம்.
//நினைத்து நினைத்து மகிழவும் பெருமிதம் கொள்வதற்கான தருணங்கள்.. உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் தொடர்பில் இருப்பதனால் எங்களுக்கும்.. வாழ்த்துக்களுடன்..//
02.07.2011 அன்றே தாங்கள் மிகச் சிறப்பாக, என் மனதை வருடும் விதமாக ஓர் பின்னூட்டம் கொடுத்திருப்பினும், எட்டு வருஷங்கள் + எட்டு மாதங்கள் கழித்து மீண்டும் இன்று வருகைதந்து வாழ்த்தியுள்ளதை நினைக்க மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும், உற்சாகமாகவும் உள்ளது. மிக்க நன்றி, ரமணி சார்.
என்றும் அன்புடன்
கோபு