என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 2 ஜூலை, 2011

மலரும் நினைவுகள் - பகுதி 4 [ நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள் ]


மலரும் நினைவுகள்

நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்

நான் எழுதி வெளியிட்ட முதல் சிறுகதைத்தொகுப்பு நூல் 
“தாயுமானவள்” - வானதி பதிப்பக வெளியீடு - 2009
விழுப்புரம் மாவட்டம், தியாகதுருகம், பழனியம்மாள் அரங்கநாதன் தமிழிலக்கிய அறக்கட்டளை, 
பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் 
திருக்குறள் பேரவையினால்
முதல் பரிசுக்குத்தேர்வாகி 28.02.2010 அன்று 
நடந்த விழாவில் கெளரவிக்கப்பட்டது.

-o-o-o-o-o-


வெளியிடப்பட்ட முதல் சிறுகதைத்தொகுப்பு நூலின் முன் / பின் அட்டைப்படங்கள்

-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-
நான் எழுதி வெளியிட்ட இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நூல் 
“வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்”  திருவரசு புத்தக நிலையம் வெளியீடு - 2009 
திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் [District Collector] திரு. தா.சவுண்டையா I.A.S. அவர்களால் 17.01.2010 அன்று பாராட்டி, மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது.


-o-o-o-o-o-
இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு நூலின் அட்டைப்படம்

-o-o-o-o-o-
17.01.2010 அன்று, திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு சார்பாக 
திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களால், பொற்கிழியுடன்

 சிந்தனைப்பேரொளி”  


என்ற விருதும் வழங்கப்பட்டது.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-o-  


நான் எழுதி வெளியிட்ட மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூல் 

“எங்கெங்கும்.. எப்போதும்.. என்னோடு” [மணிமேகலைப் பிரசுர வெளியீடு - 2010 ]

சமீபத்தில் “நம் உரத்த சிந்தனை” என்ற தன்னம்பிக்கையூட்டும் 
தமிழ் மாத இதழ் நடத்திய போட்டியொன்றில், 

முதல் பரிசுக்குத்தேர்வாகி,

15.05.2011 அன்று சென்னையில் நடந்த விழாவில் 

கலைமாமணி டெல்லி கணேஷ் அவர்களால் பரிசளித்துப் பாராட்டப்பட்டது.


-o-o-o-o-o-
மூன்றாவது சிறுகதைத்தொகுப்பு நூலின் மேல் அட்டைப்படம்.

-o-o-o-o-o-


========================o o o o o o o o o o o o o o o o o o o o========================


சுபம்


64 கருத்துகள்:

 1. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.

  அடுத்த முறை சென்னை செல்லும்போது உங்கள் புத்தகங்கள் அனைத்தும் வாங்கிவிடுவேன்.

  பதிலளிநீக்கு
 2. மலரும் நினைவுகள் மணம் வீசுகிறது..
  வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றிய அறிமுகம் அருமை. மனதுக்கு பிடித்தமான பல்வேறு பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு நேரத்தை செலவிடுகிறீர்கள் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. அழகு...அருமை....உங்கள் கதையின் அட்டை படங்கள்.

  பதிலளிநீக்கு
 5. தாங்கள் நிஜமாகவே சாதனை படைத்திருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 6. யார்..யாரோ மலரும் நினைவுகள் எழுதுகிறார்கள்..இதுவல்லவோ மலரும் நினைவுகள்!!

  பதிலளிநீக்கு
 7. சிந்தனைப் பேரொளிக்கு ஜெயஹோ!

  பதிலளிநீக்கு
 8. இவற்றையெல்லாம் நான் படிக்க வேண்டுமே சார்!எங்கு கிடைக்கும் என்று கூற முடியுமா?

  பதிலளிநீக்கு
 9. சிந்தனைப்பேரொளி” ஐயாவுக்கு எங்களின் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அந்தப்புத்தகங்களைப் பதிவிட்டால்
  புத்தகம் படிப்பதை மறந்துவிட்ட பலருக்கு பயனளிக்குமே. காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 11. அருமை. தங்கள் சாதனைகளுக்கு தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 12. உங்களது எல்லாப் படைப்புகளையும்
  படிக்க ஆசையாய் இருக்கிறேன்
  ஐயா .............
  எத்தனையோ பல சாதனைகளை செய்துவிட்டு இன்னும் சாதாரணமானவன் என்று கூறும் உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும் ஐயா
  ஒருவேளை உங்களுக்கு சாதனைகள் கூட சாதரணமாக தெரிகிறதோ ?
  உங்களைப் போன்றோர்களின் வழிகாட்டுதல் என்னை மாதிரி சிறியோனுக்கு என்றும் தேவை
  பகிர்ந்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 13. இந்த வலைப்பூவின் மதிப்பு மேலும் பெருகிவிட்டது சார்.

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துகிறேன்.நலமுடன் வாழ்க பல்லாண்டு.

  பதிலளிநீக்கு
 15. இன்னும் மேன்மேலும் பல நூல்கள் எழுதி எங்கள் எல்லோரையும் மகிழ்விக்க உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.....

  நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாவ்... அடுத்த முறை ஊருக்கு போகும் போது தேடி பார்க்கிறேன் சார்... நன்றி பகிர்ந்து கொண்டமைக்கு...

  பதிலளிநீக்கு
 17. அன்பின் வை.கோ - தங்களீன் கைவண்ணத்தில் வெளி வந்த நூல்கள் பெற்ற பரிசுகள் -நினைத்து நினைத்துப் பார்த்து மகிழ்க. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 18. உங்களையும் உங்கள் படைப்புகளையும் பார்க்கும்போது ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டே போகிறது சார்...

  "நிறைகுடம் தளும்பாது" என்று சான்றோர் பற்றிக் கூறக் கேட்டிருக்கிறேன்...

  "மலரும் நினைவுகளில்" பார்க்கவும் முடிகிறது...எங்களுக்கு உங்களது ஆசிகள் எப்போதும் வேண்டும் சார்...

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.

  பதிலளிநீக்கு
 19. தேர்ந்த எழுத்தாளர் உங்களுடன் இந்த வலைத்தளம் மூலம் எளிதில் பேசுவதில் பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, உற்சாகத்துடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்த்தி மகிழ்வித்த என் அன்புக்குரிய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   என்றும் அன்புடன் தங்கள்,
   vgk

   நீக்கு
 20. iam very proud getting a friend like you..bright and intelligent!!

  பதிலளிநீக்கு
 21. Leelagovind said...
  //Iam very proud getting a friend like you..bright and intelligent!!//

  Thanks a Lot Madam for your kind entry to this post & valuable comments offered.

  I am only an ordinary man.

  Not so bright or intelligent as you mentioned.

  I too feel very happy to have friendship with you.

  With kind regards & Best Wishes,

  vgk

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. you say you are an ordinary man. but your are a man with extra-ordinary qualities.which make all your readers proud of you. you are a man if wits and wisdom imbibed in you.
   அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உம்மிடம் உள்ளது. அவைகளே எழுத்துக்களாக எழுச்சி பெற்று எல்லோர் கையிலும் புத்தகமாக தவழுகிறது. பாராட்டுகிறேன் மனம் திறந்து .

   நீக்கு
  2. அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உம்மிடம் உள்ளது. அவைகளே எழுத்துக்களாக எழுச்சி பெற்று எல்லோர் கையிலும் புத்தகமாக தவழுகிறது. பாராட்டுகிறேன் மனம் திறந்து
   you say you are an ordinary man.
   Yes I agree but you are an ordinary man with extraordinary qualities.
   Keep going .

   நீக்கு
  3. Pattabi Raman February 6, 2013 at 2:33 AM
   அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உம்மிடம் உள்ளது. அவைகளே எழுத்துக்களாக எழுச்சி பெற்று எல்லோர் கையிலும் புத்தகமாக தவழுகிறது. பாராட்டுகிறேன் மனம் திறந்து //

   ஏதேதோ மனம் திறந்து சொல்லுகிறீர்கள். அதற்கெல்லாம் நான் தகுதியானவன் தானா என எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை சார். எனினும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   //you say you are an ordinary man. Yes I agree but you are an ordinary man with extraordinary qualities. Keep going .//

   Thanks for your EXTRAORDINARY appreciations,. Sir.

   vgk

   நீக்கு
  4. Pattabi Raman February 6, 2013 at 2:31 AM

   WELCOME TO YOU HERE, AGAIN, SIR.

   //you say you are an ordinary man. but your are a man with extra-ordinary qualities.which make all your readers proud of you. you are a man if wits and wisdom imbibed in you.//

   Thanks for your EXTRAORDINARY appreciations,. Sir.

   I am also very proud of having excellent and sincere readers of my Posts Sir.

   //அனைத்தையும் கூர்ந்து கவனிக்கும் ஆற்றல் உம்மிடம் உள்ளது. அவைகளே எழுத்துக்களாக எழுச்சி பெற்று எல்லோர் கையிலும் புத்தகமாக தவழுகிறது. பாராட்டுகிறேன் மனம் திறந்து .//

   ஏதேதோ மனம் திறந்து பாராட்டுகிறீர்கள். அதற்கெல்லாம் நான் தகுதியானவன் தானா என எனக்கே தெரியவில்லை என்பதே உண்மை சார்.

   எனினும் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, சார்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 22. அன்புள்ள வை.கோ. அவர்களுக்கு,
  இன்றுதான் நீங்கள் அனுப்பிய எல்லா இணைப்புகளையும் ரசித்துப் படித்து முடித்தேன். இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் உங்களது நட்பு ப்ளாகர் மூலம் கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம்.
  ஓய்வு பெற்றபின் வாழ்க்கையை எப்படி இனிமையாக, பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உங்கள் எழுத்துக்களே சாட்சி.
  என் புதிய பதிவுகளை நீங்கள் கேட்டுக் கொண்டார்போல ஈமெயில் செய்கிறேன்.
  என் வலைத்தளத்திற்கு வருகை தந்து என்னை கௌரவித்ததற்கு நன்றி.
  அன்புடன்,
  ரஞ்ஜனி

  பதிலளிநீக்கு
 23. அன்புள்ள வை.கோ. அவர்களுக்கு,
  இன்றுதான் நீங்கள் அனுப்பிய எல்லா இணைப்புகளையும் ரசித்துப் படித்து முடித்தேன். இவ்வளவு சாதனைகள் படைத்திருக்கும் உங்களது நட்பு ப்ளாகர் மூலம் கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம்.
  ஓய்வு பெற்றபின் வாழ்க்கையை எப்படி இனிமையாக, பயனுள்ளதாக அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு உங்கள் எழுத்துக்களே சாட்சி.
  என் புதிய பதிவுகளை நீங்கள் கேட்டுக் கொண்டார்போல ஈமெயில் செய்கிறேன்.
  என் வலைத்தளத்திற்கு வருகை தந்து என்னை கௌரவித்ததற்கு நன்றி.
  அன்புடன்,
  ரஞ்ஜனி  சொல்ல மறந்து விட்டேன்! நானும் திருச்சி தான். பிறந்த ஊர் ஸ்ரீரங்கம்.

  பதிலளிநீக்கு
 24. Respected Ranjani Narayanan Madam,

  WELCOME!

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  தாங்களும் திருச்சியில் பிறந்தவர்கள் தான் என்பது கேட்க என் மகிழ்ச்சி அதிகரிக்கிறது.

  எல்லா வளங்களும் நலன்களும் பெற்று தாங்கள் நீடூழி வாழ என் அன்பான ஆசிகள்.

  பிராப்தம் இருப்பினும் அடிக்கடி வலைப்பதிவினில் சந்திப்போம்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 25. சிந்தனை பேரொளி ஐயா அவர்களே இத்தனை சாதனைகள் படைத்துவிட்டு நான் சாதரணமானவன் என்று சொல்லி இன்னும் உங்களுடைய புகழை மேம்படுத்திக்கொள்ளும் பெருமிதம் அருமை ஐயா .... வாழ்த்துக்கள் ஐயா..... எனக்கு இதை பார்க்க கொடுத்த உங்களுக்கு நன்றி ஐயா.... மலரும் நினைவுகள் வாழ்க....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Mrs. VijiParthiban Madam,

   நான் என்றுமே மிகச்சாதாரணமானவன் தான். என்னுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு இது பற்றி நன்றாகத் தெரியும்.

   தங்களின் அன்பான வருகையும், அழகான கருத்துக்களும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றன. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 26. உங்களுடைய சிறுகதை புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா... நீங்கள் உங்களுடை கதைகள் அனைத்தும் வலை பதித்துள்ளீர்களா ஐயா.... ஏனென்றால் படிக்க ஆர்வமாக இருக்கிறேன் ஐயா... உங்கள் சாதனைகள் மென்மேலும் வளர வேண்டும் ....

  பதிலளிநீக்கு
 27. Mrs. VijiParthiban Madam,

  தங்களின் மீண்டும் வருகைக்கு நன்றிகள்.

  நான் இதுவரை வெளியிட்டுள்ள மூன்று சிறுகதைத் தொகுப்பு நூல்களையும், என் சொந்த செலவில் ஒவ்வொன்றிலும் முன்னூறு [300 copies in each] பிரதிகள் வீதம், பிரசுரம் செய்தவர்களிடமிருந்து நானே வாங்கிக்கொண்டு, என் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும், என் கையொப்பமிட்டு சந்தோஷத்துடன் அன்பளிப்பாகத்தான் கொடுத்துள்ளேன்.

  உங்களை என்றைக்காவது நான் நேரில் சந்திக்க நேர்ந்தால் கடைசியாக வெளியிடப்பட்ட நூல் மட்டும் அது போல தங்களுக்கும் தரப்படும்.

  இந்தக்கதைகளில் பெரும்பாலானவைகள் நான் என் வலைத்தளத்தில் கொண்டு வந்துள்ளேன். இன்னும் கொண்டுவர வேண்டியவை சுமார் பத்து மட்டும் இருக்கும்.

  அதுபோல வலைத்தளத்தில் என்னால் கொண்டுவரப்பட்டு இதுவரை அச்சிட்டு நூல் வடிவம் பெறாதவைகளும் கூட உள்ளன.

  அதற்கான இணைப்புகளைத்தான் தாங்கள் கேட்டுக்கொண்டபடி, தங்களுக்கு அவ்வப்போது மெயில் மூலம் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறேன்.

  இந்தக் கீழ்க்கண்ட பதிவினில் என் முதல் நூலான “தாயுமானவள்” என்பதில் உள்ள கதைகள் பற்றிய இணைப்புகள் விபரமாக உள்ளன.

  http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html

  தங்கள் ஆர்வத்திற்கு மிக்க நன்றி.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 28. வாவ் எல்லாம் சாதனைகளும் பெற்ற வை.கோ ஸார் ஒரு சல்யூட். உங்களை வலைபூ வழி நான் நட்பு பெற்றதற்க்கு கடவுளுக்கு நன்றி. உங்களுக்கும் என் நன்றி.

  பதிலளிநீக்கு
 29. Vijiskitchencreations November 2, 2012 7:49 AM
  //வாவ் எல்லாம் சாதனைகளும் பெற்ற வை.கோ ஸார் ஒரு சல்யூட். உங்களை வலைப்பூ வழி நான் நட்பு பெற்றதற்கு கடவுளுக்கு நன்றி. உங்களுக்கும் என் நன்றி.//

  மிகுந்த ஆவலுடன் ஒவ்வொன்றையும் பார்த்து படித்துக் கருத்துக்கூறியுள்ள தங்களுக்கும் நான் ஓர் ராயல் சல்யூட் வைக்கிறேன்.

  தாங்கள் மட்டும் என்ன! அவ்வப்போது மிகச்சுவையான பதிவுகள் அல்லவா தந்து அசத்துகிறீர்கள்!! ஒவ்வொன்றும் அல்வா போன்றவை அல்லவா! தங்கள் நட்பு எனக்கு வலைப்பூ வழியே எனக்குக் கிடைத்துள்ளதும் மிகவும் சந்தோஷமாகவே உள்ளது.

  எனக்கும் கொஞ்சூண்டு ’கிச்சன்’ அனுபவங்கள் உண்டு. அவைபற்றி நகைச்சுவையாக ஒரு மிகப்பெரிய பதிவு வெளியிட்டுள்ளேன். நேரம் கிடைத்தால் படித்து விட்டு கருத்துக்கூறுங்கள்.

  இணைப்பு இதோ:

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

  “உணவே வா .. உயிரே போ” [நகைச்சுவை அனுபவக் கட்டுரை]

  அன்புடன்,
  VGK

  பதிலளிநீக்கு
 30. தங்களது நூல்களைப்பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார்!!! நிச்சயம் தேடிப்பார்த்து வாங்கி விடுவேன்!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யுவராணி தமிழரசன் November 29, 2012 8:48 AM
   //தங்களது நூல்களைப்பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார்!!! //

   வாங்கோ யுவராணி. சந்தோஷம்.

   //நிச்சயம் தேடிப்பார்த்து வாங்கி விடுவேன்!!!!//

   அதெல்லாம் ஒன்றும் சிரமப்படாதீங்கோ.

   பெரும்பாலன சிறுகதைகள் என் வலைத்தளத்திலேயே வெளியிட்டு விட்டேன். இன்னும் வெளியிட வேண்டியவை ஒரு பத்துக்குள் இருக்கலாம்.

   அவசியம் தேவையென்றால் தங்களை நேரில் சந்திக்கும் போது நானே அவற்றின் ஒவ்வொரு பிரதிகளை என் கையொப்பமிட்டு நினைவுப்பரிசாகத் தருகிறேன்.

   அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 31. பணி ஓய்வு காலத்தை எவ்வளவு அர்த்தத்துடன் பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டீர்கள். க்ரேட். இவ்வளவு சாதனைகள் செய்துவிட்டு நான் சாதாரணனமனவன்னு எப்படி சொல்ரீங்க?ராமாயணத்துல வரும் இல்லியா அனுமனின் பலம் அவருக்குத்தெரியாதாம். மத்தவங்களுக்குத்தான் தெரியுமாம். அதுபோல உங்க பலம் உங்களுக்குத்தெரியலியா? என்களுக்கெல்லாம் நல்லாவே தெரியுது.உங்களிடம் பொதிந்து கிடக்கும் திறமைகளுக்கு ஒர் ராயல் ஸல்யூட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 6:00 AM

   //பணி ஓய்வு காலத்தை எவ்வளவு அர்த்தத்துடன் பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டீர்கள். க்ரேட்.//

   வேறு வழி? எதிலாவது நம்மை நாம் ஈடுபடுத்திக்கொண்டால் தானே, நம் மூளை துருப்பிடிக்காமல் இருக்கும்? உங்களின் பின்னூட்டங்களும் So Great ! [ஸோஓஓஓஓ கிரேட்டூஊஊ]

   //இவ்வளவு சாதனைகள் செய்துவிட்டு நான் சாதாரணமானவன்னு எப்படி சொல்றீங்க?//

   என்னைவிட அதிக சாதனைகள் படைத்துள்ள ஒரு சிலருடன் என்னை ஒப்பிட்டுப்பார்த்தேன். அதனால் மட்டுமல்ல, நான் இன்னமும் மிகச்சாதாரணமானவன் மட்டுமே.

   //ராமாயணத்துல வரும் இல்லியா .. அனுமனின் பலம் அவருக்குத்தெரியாதாம். மத்தவங்களுக்குத்தான் தெரியுமாம். அதுபோல உங்க பலம் உங்களுக்குத்தெரியலியா?//

   அந்த ஸ்ரீ ஹனுமார் எங்கே நான் எங்கே? போதுமே உங்களின் மிகைப்படுத்தப்படும் பாராட்டுக்கள்.

   ஒருபதிவர் இதுவரை ஹனுமாரைப்பற்றியே 50 பதிவுகளுக்கு மேல் எழுதியுள்ளார்கள். அங்கே போய்ப்பாருங்கோ ஹனுமனின் பலம் என்னவென்று உங்களுக்கே தெரியும்.
   இதோ இங்கே ஒரே ஒரு உதாரண இணைப்பும் கொடுத்துள்ளேன். போய்ப் பாருங்கோ. அதில் உள்ள என் பின்னூட்டங்களையும் படியுங்கோ.

   http://jaghamani.blogspot.com/2011/10/blog-post_15.html

   //எங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியுது.//

   உங்களுக்கெல்லாம் தெரியாத விஷயம் உலகிலுண்டோ?

   //உங்களிடம் பொதிந்து கிடக்கும் திறமைகளுக்கு ஒர் ராயல் ஸல்யூட்//

   சலாம் மாலே கும். மாலே கும் சலாம் ... மேடம்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 32. வை. கோ. சார் உங்க பதிவுகளுக்குப்பிறகு நான் விரும்பி படிக்கும் தளம் இராஜ ராஜேஸ்வரிம்மா வோடதுதான். அங்க போனாலே பக்தி மணம் தூக்கலா இருக்கும். அழகழகானகோவில், கடவுள்கள் படங்களுடன் நிறைய தகவல்களுடன் தேடிதேடி பகிர்ந்து கொள்கிறார்கள்.அங்கயும் அடிக்கடி போயிட்டுதான் இருக்கேன்.

  பதிலளிநீக்கு
 33. பூந்தளிர் January 15, 2013 at 8:55 PM

  //வை. கோ. சார் உங்க பதிவுகளுக்குப்பிறகு நான் விரும்பி படிக்கும் தளம் இராஜ ராஜேஸ்வரிம்மா வோடதுதான்.//

  இங்கே தான் நீங்க தப்புப்பண்ணுறீங்கோ.

  *உங்க பதிவுகளுக்குப்பிறகு* என்று நீங்க எழுதியிருப்பது எனக்குப்பிடிக்கலை.

  காலையில் தினமும் எழுந்தவுடன் முதல் வேலையாக என்னைப்போல நீங்களும் இந்தப்பதிவரின் பதிவினைத்தான் பார்க்கணும்.

  பிறகு தான் பல்லே தேய்க்கணும். இது தான் உங்களுக்கு என் அன்பான வேண்டுகோள். OK யா?

  //அங்க போனாலே பக்தி மணம் தூக்கலா இருக்கும். அழகழகானகோவில், கடவுள்கள் படங்களுடன் நிறைய தகவல்களுடன் தேடிதேடி பகிர்ந்து கொள்கிறார்கள்.அங்கேயும் அடிக்கடி போயிட்டுதான் இருக்கேன்.//

  எது சொன்னாலும் கற்பூரம் போல டக்குன்னு பிடிச்சுக்கிறீங்கோ.
  Very Good Girl. Thank you very much. Keep on going there that too daily.

  ஆனால் எனக்கு சேர்த்தே நீங்க அங்கே வேண்டிக்கணும். அதை மறந்துடாதீங்கோ ... ப்ளீஸ்.

  பிரியமுள்ள
  VGK

  பதிலளிநீக்கு
 34. அன்பு வைகோ சார்
  உடனே பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி. பத்மா கஃபே இல்லை என்றால் ஏதோ மாதிரி இருக்கிறது.
  பரவாயில்லை .எதுதான் நிலைத்திருக்கிறது. அதென்ன நீங்களா என்று கேட்கிறீர்கள்.??
  எனக்குத் தெரிந்த சில பதிவுகளுக்குச் செலவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.
  அதுவும் நாலு மணிநேரமாவது மும்ம்முரமாகப் படித்தால்
  தான் முடியும்.
  கண்சிகித்சைக்குப் பிறகு கண்கள் சீக்கிரம் களைப்படைகின்றன.
  அதற்காக கணினியிலிருந்து கட்டாயத்தின் பேரில் விலகிவிடுவேன்.

  எதுக்கோ தெரியுமோ எதனோட வாசனைன்னு சொல்வார்களே. அது நான் தான்னு வைத்துக் கொள்ளுங்கள்:)
  விண்டோசீட் தான் இல்லைன்னு சொல்லிவிட்டீர்கள் ஒரு ஓரமா நின்னு பார்க்கிறேன்.
  அப்படியே உங்கள் அற்புதப் படைப்புகளையும் பரிசாக வாங்கிக் கொள்கிறேன்.மிக மிக நன்றி சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வல்லிசிம்ஹன் February 6, 2013 at 2:16 AM
   //அன்பு வைகோ சார்
   உடனே பதில் அளித்ததற்கு மிகவும் நன்றி.//

   வாங்கோ மேடம். வணக்கம். சந்தோஷம். முடிந்தவரை உடனுக்குடன் பதில் கொடுத்து விடுவது என் வழக்கம். இருப்பினும் பல்வேறு சோதனைகள் குறுக்கிடும் போது அதுபோல முடியாமல் போவதும் உண்டு தான்.

   // பத்மா கஃபே இல்லை என்றால் ஏதோ மாதிரி இருக்கிறது.
   பரவாயில்லை .எதுதான் நிலைத்திருக்கிறது.//

   எதுவும் சாஸ்வதும் இல்லாத உலகம் தான். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் புரிந்து கொண்டவர்களுக்கு மட்டும் சுகமே.

   //அதென்ன நீங்களா என்று கேட்கிறீர்கள்.??//

   புரியவில்லை. தங்களின் அபூர்வ வருகை என நான் எழுதியுள்ளதைச் சொல்கிறீர்களோ?

   //எனக்குத் தெரிந்த சில பதிவுகளுக்குச் செலவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். //

   நானும் அதுபோலவே தான் மேடம். எல்லோருடைய பக்கமும் என்னாலும் போக முடிவது இல்லை.

   யார் யாரிடம் பதிவுகளையும் தாண்டி ஓர் பிரியம் எனக்கு ஏற்படுகிறதோ, அவர்கள் பதிவுகளுக்கு மட்டுமே சென்று வர முயற்சிக்கிறேன். .

   //அதுவும் நாலு மணிநேரமாவது மும்ம்முரமாகப் படித்தால்
   தான் முடியும்.//

   ஆமாம். எனக்கும் 24 மணி நேரமும் போதவில்லை. மனைவி மக்களிடம் ’கம்ப்யூட்டர் அடிமை’ என்ற திட்டு வாங்க வேண்டியுள்ளது. .

   //கண்சிகித்சைக்குப் பிறகு கண்கள் சீக்கிரம் களைப்படைகின்றன.
   அதற்காக கணினியிலிருந்து கட்டாயத்தின் பேரில் விலகிவிடுவேன்.//

   அது தான் நல்லது. கண்களைப் பார்த்துக்கோங்கோ. அது தான் மிகவும் முக்கியம்.

   எனக்கு கணினி பக்கம் போகாவிட்டால் மட்டுமே, என் கண்கள் குளமாகிவிடுகின்றன.

   எப்போதாவது மட்டும் நீங்கள் சொல்லும் களைப்பு எனக்கும் வருவது உண்டு..

   //எதுக்கோ தெரியுமோ எதனோட வாசனைன்னு சொல்வார்களே. அது நான் தான்னு வைத்துக் கொள்ளுங்கள்:)//

   அப்படியெல்லாம் தயவுசெய்து சொல்லாதீங்கோ .... ப்ளீஸ்.

   //விண்டோசீட் தான் இல்லைன்னு சொல்லிவிட்டீர்கள் ஒரு ஓரமா நின்னு பார்க்கிறேன். //

   நான் அவ்வாறு சொல்லவில்லையே. உங்களுக்காகவே ALREADY RESERVED EXCLUSIVELY FOR YOU என்று தான் சொல்லியுள்ளேன்.

   //அப்படியே உங்கள் அற்புதப் படைப்புகளையும் பரிசாக வாங்கிக் கொள்கிறேன்.மிக மிக நன்றி சார்.//

   சந்திக்கும் நாளில் கட்டாயமாகத் தருகிறேன். நான் ஒருவேளை மறந்தாலும் நீங்க ஞாபகப்படுத்தி [படுத்தி] வாங்கிக்கோங்கோ.

   அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்.

   நீக்கு
 35. சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

  உங்கள் முகப்புப்பக்கத்தில் போட்டிருக்கும் இந்த வரிகளை முதலில் ரப்பர் போட்டு மொத்தமாக அழித்து விடுங்கள்.

  அனுமனுக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். அது போலத்தான் நீங்களும். தயவு செய்து கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் நல்ல சிந்தனைகளை, கருத்துக்களை பதிந்து வைத்து விடுங்கள், எங்களுக்கு வழி காட்ட.

  I AM REALLY ASTONISHED.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 13, 2013 at 3:09 AM

   வாங்கோ, வணக்கம்.

   *****சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.*****

   //உங்கள் முகப்புப்பக்கத்தில் போட்டிருக்கும் இந்த வரிகளை முதலில் ரப்பர் போட்டு மொத்தமாக அழித்து விடுங்கள்.//

   நான் சாதாரணமானவன் மட்டுமே என்பதை என்றும் நான் நினைத்துப் பார்க்கவே விரும்புகிறேன்.

   அதை ஒருபோதும் மறக்க விரும்புவது இல்லை. ஏனெனில் அது தான் உண்மையும் கூட.

   //அனுமனுக்கு தன் பலம் தெரியாது என்பார்கள். அது போலத்தான் நீங்களும்.//

   அனுமன் நான் இங்கே என்றால், அவரின் முக்கியமான சக்தியாகிய ‘வால்’ உங்களிடம் மட்டுமே. அப்படியென்றால் என்னவென்று உங்கள் மகளிடம் கேட்டுப்பாருங்கோ. உங்களின் வால்தனத்தை குழந்தை அழகாகவே எடுத்துச்சொல்லுவா.

   //தயவு செய்து கொஞ்சம் சிரமம் பார்க்காமல் உங்கள் நல்ல சிந்தனைகளை, கருத்துக்களை பதிந்து வைத்து விடுங்கள், எங்களுக்கு வழி காட்ட//.

   ஆகட்டும் தாயே ..... அது போல ..... நாம நினைச்சது நடக்கும் .... மனம் போலே!

   // I AM REALLY ASTONISHED. //

   I too astonished with your very kind and valuable comments, Madam.

   Thanks a Lot. 'All the Best ...... Be Happy !' "Have a very Nice Day !!"

   நீக்கு
 36. அடேயப்பா...நீங்கள் சாதாரணமானவரா...சாதனைத்திலகம்...எத்தனை பரிசுகள்...பட்டங்கள்..பிரமித்து விட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu March 3, 2014 at 10:23 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அடேயப்பா...நீங்கள் சாதாரணமானவரா... சாதனைத்திலகம்... எத்தனை பரிசுகள்... பட்டங்கள்.. பிரமித்து விட்டேன்.//

   தங்களின் சாதனைமிக்க வருகைக்கும், பிரமிக்க வைக்கும் கருத்துக்களுக்கும் இந்த மிகச் சாதாரணமானவனின் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் [சாதாரண] கோபு

   நீக்கு
 37. எழுத்துலக சாதனைகள் மலைக்க வைக்கின்றன. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 38. பதில்கள்
  1. எப்பூடி இப்பூடில்லாம் எமுதி பரிசா வாங்கி குவிச்சுப்போட்டே இருக்கினிங்க. ரியலி க்ரேட்.

   நீக்கு
 39. எவ்வளவு புக்ஸ் எவுவளவு பரிசு பாராட்டுகம். நீங்க எழுதியிருக்கும் புஸ்தகங்கள எல்லாம் புஸ்தக கடைகளில் கிடைக்குமா.

  பதிலளிநீக்கு
 40. உங்களுக்கு கிடைக்கவேண்டிய நியாயமான அங்கீகாரமே கிடைத்துள்ளது...நெஞ்சார்ந்த மகிழ்ச்சி...வாழ்த்துகள்...வாத்யாரே...

  பதிலளிநீக்கு
 41. சாதனை நாயகருக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 42. இன்றுதான் ( மிக மிக ) தாமதமாய் வாசித்தேன் . எத்தனையோ பேர் எழுதுகிறார்கள் ஆனால் பரிசுகள் பெறக்கூடிய தரமிகு படைப்புகளை இயற்ற சிலரால் மட்டுமே முடியும் . அந்த ஆற்றல் உங்களிடம் இருக்கிறது ; மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொ.ஞானசம்பந்தன் June 12, 2016 at 8:49 PM

   வாங்கோ ஐயா, வணக்கம்.

   //இன்றுதான் ( மிக மிக ) தாமதமாய் வாசித்தேன்.//

   அதனால் என்ன? எனக்கு மிகவும் சந்தோஷமே.

   //எத்தனையோ பேர் எழுதுகிறார்கள் ஆனால் பரிசுகள் பெறக்கூடிய தரமிகு படைப்புகளை இயற்ற சிலரால் மட்டுமே முடியும். அந்த ஆற்றல் உங்களிடம் இருக்கிறது ; மேன்மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன்.//

   எல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் மட்டுமே காரணம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஊக்கமளிக்கும் கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   நீக்கு
 43. இந்த மூன்று நூல்களுக்கும், நம் அன்புக்குரிய பதிவர் திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் விமர்சனம் எழுதி தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://honeylaksh.blogspot.in/2016/05/blog-post.html

  பதிலளிநீக்கு
 44. இதில் உள்ள மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ‘எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு’ என்பதைப் படித்துவிட்டு, நம் அன்புக்குரிய பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் விமர்சனம் எழுதி தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://tthamizhelango.blogspot.com/2013/09/blog-post_10.html

  பதிலளிநீக்கு
 45. ஒருவிஷயம் நல்லா புரிஞ்சுக்க முடியுது... இதுபோல பரிசுகளையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து நீங்க எழுதுறதில்ல.... அப்படி பலபேருக்கு படிச்சு ரசிச்சு பாராட்டும்போதும் பரிசுகள் கிடைக்கும்போதும் மனது சந்தோஷப்படத்தான் செய்யும் நம்ம எழுத்தால சில பேரையாவது சந்தோஷப்படுத்து முடிகிறதேன்னு உற்சாகமாகத்தான் இருக்கும் அதையும் மறுப்பதற்கில்லை.... உங்கள் எழுத்துப் பணிகள் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... November 2, 2016 at 11:08 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒருவிஷயம் நல்லா புரிஞ்சுக்க முடியுது... இதுபோல பரிசுகளையோ பாராட்டுகளையோ எதிர்பார்த்து நீங்க எழுதுறதில்ல.... அப்படி பலபேருக்கு படிச்சு ரசிச்சு பாராட்டும்போதும் பரிசுகள் கிடைக்கும்போதும் மனது சந்தோஷப்படத்தான் செய்யும் நம்ம எழுத்தால சில பேரையாவது சந்தோஷப்படுத்து முடிகிறதேன்னு உற்சாகமாகத்தான் இருக்கும் அதையும் மறுப்பதற்கில்லை.... உங்கள் எழுத்துப் பணிகள் தொடரட்டும்...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பரிசுகளையோ பாராட்டுக்களையோ விட, என் எழுத்துக்களால் மட்டுமே, நான் இன்று மிக அதிக எண்ணிக்கையில் தங்களைப்போன்ற நண்பர்களையும், நலம் விரும்பிகளையும் பெற்றுள்ளதுதான், எனக்கு மாபெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்துவதாக உள்ளது. :)

   நீக்கு
 46. Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  பதிலளிநீக்கு
 47. இதில் உள்ள முதல் சிறுகதைத் தொகுப்பு நூலான ‘தாயுமானவள்’ என்பதைப் படித்துவிட்டு, நம் மதிப்புக்குரிய "ஊஞ்சல்” வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் விமர்சனம் எழுதி தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://unjal.blogspot.com/2017/02/1.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 48. இதில் உள்ள இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ‘வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்’ என்பதைப் படித்துவிட்டு, நம் மதிப்புக்குரிய "ஊஞ்சல்” வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் விமர்சனம் எழுதி தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://unjal.blogspot.com/2017/02/2.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு
 49. இதில் உள்ள மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ‘எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’ என்பதைப் படித்துவிட்டு, நம் மதிப்புக்குரிய "ஊஞ்சல்” வலைப்பதிவர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் விமர்சனம் எழுதி தனிப்பதிவாக வெளியிட்டுள்ளார்கள்.

  அதற்கான இணைப்பு:

  http://unjal.blogspot.com/2017/03/blog-post.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  பதிலளிநீக்கு