என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 2 ஜூலை, 2011

மலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ]


மலரும் நினைவுகள்

”காலங்களில் அவள் வஸந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை”

என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அதிலும் அந்த "ஓவியம்" ஆகிய அவள் மேல் 
எனக்கு ஒரு தனிப்பிரியமே உண்டு. 

-o-o-O-o-o-

ஓவியங்களில் 
என் சின்னச்சின்ன ஆசைகள்ஒருசில கைவேலைகளில் எனது ஆர்வம்சலவைத்தாளான ரூபாய் நோட்டுக்களுக்கும் பஞ்சமில்லை, 
என் கற்பனைக்கோ, கை வேலைகளுக்கோ பஞ்சமில்லை.
இதுவரை எவ்வளவு பேர்களுக்கு 
இதுபோல ரூபாய் நோட்டுக்களால் ஆன மாலைகள் 
அணிவித்திருப்பேன் தெரியுமா! 
எடுத்துரைத்தால் எண்ணிலடங்காது!

[ இந்த மாலையில் உள்ளது மொத்தமே 
வெறும் 1000 ரூபாய்கள் மட்டும் தாங்க ]

Rs.  5 x 20 = 100 x  5 = 500
Rs. 10 x 25 =250 x 2 = 500
Total: Rs. 1000-o-o-o-o-o-o-o-o-o-
நாற்பது 5 ரூபாய் தாள்களில் [மொத்தம் ரூ. 200] செய்யப்பட்ட மொய் விசிறி.

-oOo-


{ மொய் கொடுக்க நிச்சயிக்கப்படும் தொகை அதிகமாக அதிகமாக 
50, 100, 500 அல்லது 1000 ரூபாய் சலவை நோட்டுக்கள், 
விசிறி செய்ய பயன் படுத்தப்படும். }

0===================================-o-o-o-o-0-o-o-o-o-=================================0


”கலைகளிலே அவள் ஓவியம்”


முறையாக ஓவியம் கற்காவிடினும், சிறு வயது முதல் ஓவியங்கள் வரைவதில் எனக்கு இயல்பாகவே மிகவும் ஆர்வம் அதிகம்.  
பள்ளியில் படிக்கும் போது, ஒவ்வொரு ஆண்டும் 
ஓவியப்போட்டிகளில் முதல் பரிசினைத்
தட்டிச்செலவது என் வழக்கம்.  

என் சிறுவயதில், வரலக்ஷ்மி விரத நோன்பு நேரங்களில் 
என் வீட்டுச் சுவற்றிலும், கலசச்சொம்பிலும் 
வரலக்ஷ்மி அம்மன் படம் அழகாக வரைந்து, வர்ணம் கொடுத்து, 
பார்க்க வரும் அனைவரையும் அசத்துவதுண்டு  


 1980 இல் நான் வரைந்து பார்த்த 
ஒருசில ஓவியங்களும், கேலிச்சித்திரங்களும்1980 இல் நான் வரைந்த,  கலைஞர் +  எம்.ஜி.ஆர் [கேலிச்சித்திரங்கள்]

-o-o-o-o-o-இந்திராகாந்தி, ஜகஜீவன்ராம், 
மொரார்ஜி தேசாய், ராஜ்நாராயணன், 
சரண்சிங், சஞ்சய் காந்தி 
 கேலிச்சித்திரங்கள்

-o-o-o-o-o-Pencil sketch of a lady


-o-o-o-o-o-Pencil sketch of a full furnished girl

-o-o-o-o-o-தலைவிரித்து ஆடுகிறாளோ? 

-o-o-o-o-o- காதோடு.....தான் ..... நான் .....பேசுவேன்

-o-o-o-o-o-


இனிமே, உட்கார்ந்தா சறுக்குப்பாறை 
இருக்கிற ‘பார்க்’கா பார்த்து உட்காரணும்.


[இது 02.03.1980 தேதியிட்ட ‘கல்கி’ யில் அட்டைப்பட ஜோக்காக வந்தது.
 அதைப்பார்த்து மகிழ்ச்சியில் எழுச்சியுடன் 
1980 இல் நான் வரைந்தது] 

-o-o-o-o-o-சிரிக்கிறாரா, தும்மல் போடப்போகிறாரா?

-o-o-o-o-o-

இந்த ஸ்ரீ ஆஞ்சநேயர் படம் 
24.01.2005 அன்று என்னால் வரையப்பட்டு, 
51 பிரதிகள் கலர் ஜிராக்ஸ் + லாமினேஷன் செய்யப்பட்டு, விரும்பி வேண்டிக்கேட்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

கையால் வரையப்பட்ட படத்திற்கு மகிமையும் சக்தியும் அதிகம் என்று சொல்லி பலர் பூஜை அறையில் வைத்து, வாலில் சந்தனம் குங்குமம் இட்டு வழிபட்டு வருகின்றனர். 


o=====================================ooooOoooo==================================o

-o-o-o-o- சுபம் -o-o-o-o-

o=====================================ooooOoooo==================================o
மேலும் ஒருசில சுகமான அனுபவங்கள் இருப்பினும், 
தகுந்த படங்களை தேடிக் கண்டுபிடித்து 
சேர்க்க முடியாமல் போனதால் 
இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

[ போதும்...போதும்...இதுவே எதேஷ்டம்...  ஜாஸ்தி...  ரொம்ப அதிகம்
 என்று நீங்கள் முணுமுணுப்பது என் காதில் விழுகிறது. ]
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்
02.07.2011

-o-o-O-o-o-105 கருத்துகள்:

 1. அட..இப்பத் தான் ஒண்ணு பார்த்தேன்..பழசெல்லாம் கமெண்ட் போட முடியவில்லைன்னு இதுக்குப் போட்டுட்டு திரும்பினா..அதுக்குள்ள இன்னொண்ணா?..அண்ணா..என்னண்ணா..ஏதாவது கின்னஸ் போட்டியா இது?
  உம்முடைய பன்முகத் திறமையைப் பார்த்து அசந்து விட்டேன்.. நீர் போன ஜன்மத்தில லியனார்டோ டாவின்ஸியா..என்கிட்ட மட்டும் காதொடு சொல்லுங்க...யார்ட்டயும் சொல்ல மாட்டேனாக்கும்...
  இப்படிக்கு,
  கமெண்ட் போட்டே கை ஒடிந்து,மலைத்து நிற்போர் சங்க உறுப்பினன் ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 2. கை வண்ணம் இங்கு கண்டேன்..
  என்று பாடத் தோன்றுகிறது..
  உங்களுக்கு இருக்கும் திறமைகள் பலப்பல. அத்தனைக்கும் சொந்தக்காரராய் இருக்கும் உங்களுக்கு திருஷ்டி சுற்றிப் போட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. அந்த கரன்ஸீ நோட்டு கலை அற்புதம்! அவருக்கு முன் நாம் ரிடய்ர்ட் ஆகக் கூடாதா என்று ரொம்பவும் selfish ஆக சிந்தித்த காலம் ஒன்று உண்டு!

  பதிலளிநீக்கு
 4. கேலிச்சித்திரங்கள், அதுவும் முக்கியமாக எம்.ஜி.ஆர், ஜகஜீவன்ராம் கோட்டோவியங்கள் அருமை! பன்முகக் கலைஞர் நீங்கள் என்பது இப்போது தான் தெரிகிறது! மொய்ப்பணம் இப்படியும் வைக்கலாம் என்று இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 5. சார்... அபாரம் உங்க திறமை.. ஓவியங்கள் அருமையா இருக்கு

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் பன்முக திறமை உள்ளவர் என தெளிவாகிறது ஐயா
  மீண்டும் தமிழ்மண தரிசனம்
  எல்லா பதிவுகளிலும் வாக்களித்துவிட்டேன்

  பதிலளிநீக்கு
 7. மீண்டும் மீண்டும் பார்த்தேன். வேறு தளத்திற்கு வந்து விட்டோமோ என்று சந்தேகம். வை.கோ. சாரின் வலை மாதிரி இல்லையே என்ற குழப்பம். பின்னர் போன மாத, பதிவு பார்த்து தான் தெளிந்தேன். இரண்டு நாட்களில் இத்தனை பதிவுகளா? அசாத்திய முயற்சி உங்களுக்கு,
  தங்கள் கைவண்ணம் என்னை அசரவைக்கிறது.பன்முகத் திறமையாளர் நீங்கள்.
  என் கவிதைக்கு ஒரு படம் வேண்டும் வரைந்து தருவீர்களா ?

  பதிலளிநீக்கு
 8. ரூபாய் நோட்டுக்கள் தங்கள் கைவண்ணத்தால் மதிப்புகூட்டப்பட்டு மிளிர்கின்றன.

  பதிலளிநீக்கு
 9. கைகளினால் வ்ரைந்த படங்களுக்கு அனுபூதி அதிகம். பாரிஜாத தரூமூல வாசின்னாகிய அனுமனின் படம் சிலிர்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
 10. கார்ட்டூன் படங்கள் ஆச்சரியப் பட வைத்தன.
  ஒரே நாளில் இத்தனை பதிவுகள் பார்த்து மலைத்துப்போனேன்.
  அது சரி தங்களின் வாடிக்கையான திறமை அள்விட முடியுமா என்ன!

  பதிலளிநீக்கு
 11. அடேயப்பா மலைக்க வைக்கிறீர்கள் வைகோ சார். கேலிச்சித்திரங்கள் உயிர்ப்போடு இருக்கின்றன. சகலகலாவள்ளவர்க்கு எனது பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 12. எப்பவும் போல இன்னிக்கும் அருமை. பதிவும்..படங்களும்.

  பதிலளிநீக்கு
 13. இன்னும் எத்தனை திறமைகளை ஒளித்து வைத்திருக்கிறீர்கள் சார்...? பிரமிப்புதான் கூடுகிறது. ரூபாய் நோட்டுகள் விசிறி மொய் அழகிய ஐடியா. வித்யாசமான சிந்தனைகள்.

  பதிலளிநீக்கு
 14. அதான பார்த்தேன், VGK sir எப்படி இவ்வளவு updatedஆக இருக்கிறார் என்று. இவ்வளவு creativity உள்ள கலைஞருக்கு என்றும் வாழ்க்கை இனிமைதான். அருமையான பகிர்வுகள்.

  பதிலளிநீக்கு
 15. காட்டுன் படங்கள், ஜோக்ஸ் அனைத்தும் அருமையோ அருமை.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 16. நல்ல கலக்கல் நகைச்சுவை கூடவே படங்களும்
  உங்களுக்குள் இப்படி ஒரு திறமையா
  எழுத்து மட்டும் அல்ல ஓவியம் வரைவதும் உங்களுக்கு அழகாக வருகிறது
  ரியலி கிரேட் அய்யா

  பதிலளிநீக்கு
 17. பழைய நினைவுகளே ஒரு சுகமான அனுபவமே. நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 18. புதுப்பரிமாணம். உங்கள் நாப்பழக்கம் மட்டும் தான் இதுவரை தெரிந்திருந்தேன். பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 19. முதலில் உங்களின் இனிய திருமண நாளான இன்றைக்கு உங்களுக்கும்,உங்களின் துணைவியாருக்கும் எனது நமஸ்காரங்கள்.

  அந்த சலவை நோட்டு மாலைகளைக் கண்ணுற்றதும் அடடா ...’மிஸ்’ பண்ணிட்டோமே என்றிருந்தது.

  ஓவியங்கள் ச்சும்ம்மா ’நச்’சென்றிருந்தன..

  பதிலளிநீக்கு
 20. //kgg339 commented on your story 'மலரும் நினைவுகள் - பகுதி 6 [ கலைகளிலே அவள் ஓவியம் ]'

  'very good articles.'

  Here is the link to the story: http://ta.indli.com/story/505329//

  Thank You Very Much
  vgk

  பதிலளிநீக்கு
 21. பொதுவாக எழுத்துநயமிகுந்தால் ஓவியம் வரைய வராது. தாங்கள் பல கலைகளிலும் கைதேர்ந்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள் பல.

  பதிலளிநீக்கு
 22. காட்டூன்களைத் தொடர்ந்து வரையலாம். எல்லாமே க்ளாஸ்.

  பதிலளிநீக்கு
 23. classical artist,romantic story writer,captivating poet.!!!!wat not!! no doubt he is an all rounder ....!!!!

  பதிலளிநீக்கு
 24. classical artist,romantic story writer,captivating poet.!!!!wat not!! no doubt he is an all rounder ....!!!!

  பதிலளிநீக்கு
 25. ஓவியம்.... கலைப் பொருட்கள் செய்வது... இன்னும் பலப்பல... நீங்கள் தொடாத துறை எது....

  தில்லியில் கல்யாணங்களில் குதிரை மேல் ஊர்வலம் வரும் எல்லா மாப்பிள்ளைகளும் இப்படித்தான் ரூபாய் நோட்டு மாலை அணிந்து வருவார்கள்... :)

  பதிலளிநீக்கு
 26. நீங்கள் பன்முக திறமை உள்ளவர் என தெளிவாகிறது ஐயா

  பதிலளிநீக்கு
 27. திருமணநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. மலரும் நினைவுகள் அனைத்தையும் பார்த்து விட்டு மகிழ்ந்தேன் சார். உங்கள் குடும்ப விழாக்களில் எடுத்த புகைப்படங்களும், எழுத்துலகில் நீங்கள் பரிசு பெற்ற புகைப்படங்களும், அலுவலகத்தில் எடுத்த புகைப்படங்களும், உங்கள் சிறுகதை தொகுப்புகளின் புகைப்படங்களும், துபாயில் வாரிசுகளுடன் எடுத்த புகைப்படங்களும், நீங்கள் வரைந்த ஓவியங்கள் என அனைத்துமே பிரமாதம் சார்.
  உங்கள் சிறுகதை தொகுப்புகளை படிக்க வேண்டும் என ஆவலாய் உள்ளது.
  குட்டி நாராயணன் அழகாக இருக்கிறான். சுற்றிப் போட சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
 29. தங்கள் கதைகளில் சின்னச் சின்ன விஷயங்களைக் கூட
  மிக அழகாகச் சொல்லிப் போகும் சூட்சுமம் குறித்து வியந்து போயிருக்கிறேன்
  இது எப்படி சாத்தியம் என பலமுறை யோசித்தும் பார்த்திருக்கிறேன்
  தங்களது நிறைவான வாழ்வு மற்றும் நுண்கலைகளில் உள்ள பாண்டித்தியம்
  இவைகளால்தான் இது சாத்தியமானது என தற்போது
  புரிந்து கொண்டேன் .மனத்தை குளிர்வித்துபோகும் ஓவியங்கள்
  தங்கள் பதிவைத் தொடர்வதை பாக்கியமாகக் கருதுகிறேன்

  பதிலளிநீக்கு
 30. மிக அருமை. உங்கள் பன்முகத் திறமை கண்டு வியந்தேன் கோபால் சர்..:)

  பதிலளிநீக்கு
 31. ஐயா வைகோ அவர்களே
  கலைகளிலே அவள் ஓவியம்-உம்
  கரங்கள் வரைந்து காவியம்
  இலைநிகர் என்றன படங்களே-மேலும்
  எழுத வேண்டா தடங்கலே

  வண்ணப் படங்கள் கண்ணைக்
  கவர்ந்தன நன்றி
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 32. நீங்கள் நிச்சயமாக சாதாரணமானவரே அல்ல!!
  சாதனையாளர்!!

  பதிலளிநீக்கு
 33. உங்கள் அனைத்து ஓவியங்களையும் கண்டு மகிழ்ந்தேன். இப்பொழுதும் வரைவதை தொடர்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
 34. இனிமை இதோ ..இதோ...
  நான்தான் சகலகலா வல்லவன்

  என்ற பாட்டும் பாடிவிடுங்கள். அதுமட்டும் ஏன்குறை?
  என்றும் வாழ்வில் இனிமை ந்றையப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி July 5, 2011 at 1:59 PM

   //இனிமை இதோ ..இதோ...
   நான்தான் சகலகலா வல்லவன்

   என்ற பாட்டும் பாடிவிடுங்கள். அதுமட்டும் ஏன்குறை?//

   எனக்கு அவ்வளவா பாட்டுப்பாட வராது. அதனால் நீங்களே பாட்டுப்பாடி எனக்கு தயவுசெய்து அனுப்பி வைக்கவும். இதனால் தங்களின் இனிய குரலையாவது கேட்கும் பாக்யம் எனக்குக் கிட்டட்டும்.

   //என்றும் வாழ்வில் இனிமை நிறையப் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள்.//

   அதையும் செய்யுங்கோ, ப்ளீஸ்.

   இப்படிக்கு VGK

   நீக்கு
 35. பனை விசிறி கேள்விப்பட்டு இருக்கேன்... இந்த பண விசிறி / மாலை சூப்பர்'ங்க...:) கேலிச்சித்திரங்கள் அருமை

  பதிலளிநீக்கு
 36. கோபாலகிருஷ்ணன் சார்,உங்கள் சாதனைகளை பார்த்து பிரமிப்பாய் இருக்கிறது.எத்தனை பரிசுகள்,பட்டங்கள்,....வாழ்த்த எனக்கு தகுதியில்லை சார் அதனால் வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 37. ஓவியமும்..கரண்சி காவியமும் அருமையிலும் அருமை...
  rajeshnedveera

  பதிலளிநீக்கு
 38. அன்பின் வை.கோ - மற்றுமொரு திறமை. ஓவியம் - கை வேலைப்பாடு - ரூபாய் நோட்டுகளில் மொய் விசிறிகள் - 1000 ரூபாய் மொய் எழுதும் தாராள மனம் - பல் வேறு துறைகளிலும் - திறமையைக் காட்டும் வை.கோ வாழ்க ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 39. அடுத்த "மலரும் நினைவுகளில்" மலரப் போகும் ஆச்சரியம் என்னவாக இருக்கும் என மனம் மலைக்கத் தொடங்கி விட்டது...

  அன்புடன்,
  ராணி கிருஷ்ணன்.

  பதிலளிநீக்கு
 40. ரூபாய் நோட்டுக்கள் அழகாக விசிறியாக அடுக்கியிருக்கிறீர்கள். புதுமையாகவும் இருக்கிறது.
  கேலிச் சித்திரங்கள் மிக அழகு. இன்னும் தொடர்ந்து வரையலாமே! இப்போது அரசியல் தலைவர்கள் பல்கி பெருகி குடும்பத்தோடு ஆட்சி செய்கிறார்களே!
  ஆஞ்சநேயர் படம் மிக அருமை. பாராட்ட வார்த்தைகளே இல்லை. எனக்கும் அப்படி வரைய ஆசையாய் இருக்கிறது. அனால் ஆஞ்சநேயரின் அழகையும், பொலிவையும் கெடுக்கவும் அருள்பார்வை கெடுதுக்கொள்ளவும் நான் விரும்பவில்லை ஹ.ஹ.....ஹா.....உங்களை போன்ற நல்ல ஓவியருக்கே விட்டுவைக்கிறேன்.
  அருமையான ப்ளாக். உங்கள் பதிவுகளை பின்தொடருவதில் மிக மகிழ்ச்சி. ஆஞ்சநேயர் சஞ்சீவி கோலம் பற்றி நீங்கள் வேறொரு இடத்தில் தந்த தகவல் பற்றி ஒரு கேள்வி கேட்டிருந்தேன். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே, மிக்க நன்றி. தாங்கள் நோட்டில் எழுதிய கோலத்தை உங்கள் ப்ளாகில் போடுகிறீர்களா? இதற்குமுன் பார்த்ததில்லை என்பதால், எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. Pleaes provide me the link to that also.

  பதிலளிநீக்கு
 42. நல்ல கற்பனை வளம் ...

  சில கார்டூன்கள் அந்தக்காலத்து மாலியின் கார்டூன்களை நினைவு படுத்துகிறது...

  கோவில்களில் தான் ருபாய் மாலை பார்த்திருக்கிறேன். மிக நன்றாக செய்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களை என்னுடன் மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டு, என்னைப்பாராட்டி வாழ்த்தியுள்ள என் அன்புக்குரிய அனைத்துத் தோழர்களுக்கும், தோழியர்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் தங்கள்,
   vgk

   நீக்கு
 43. sir its very interesting to see your caricatures and pencil sketching..my elder son is good in drawing caricatures and cartoons..so i am interested in such arts but here i cant enjoy to the fullest bcoz of tamil language..

  பதிலளிநீக்கு
 44. Leelagovind said...
  //Sir its very interesting to see your caricatures and pencil sketching..my elder son is good in drawing caricatures and cartoons..so i am interested in such arts but here i cant enjoy to the fullest bcoz of tamil language..//

  Respected Madam,

  WELCOME!

  Thank you very much for your kind & very first visit to my blog and offering valuable comments.

  I have released 6 posts on 03.07.2011 [in connection with the completion of our 39th Wedding Day] with full of photos, regarding the Sweet Memories of my

  [1] My personal Family life & Celebration of 60th Birth Day.
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/1.html

  [2] My official life & Retirement:
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/2.html

  [3] Success in my writing field
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/3.html

  [4] Specific Awards earned for my Short Story Books Published:
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/4.html

  [5] My 45 days Visit to UAE & Participated as Chief Guest in Dubai Tamil Sangham Annual Day:
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/5.html

  & [6] My interest in some art work in General:
  Link:
  http://gopu1949.blogspot.in/2011/07/6.html [This Post just you have seen].

  You may just go through all the other 5 posts [pictures alone] if possible. Now you may be able to understand something with my short explanations given above, in English.

  Thank you once again, Madam.

  vgk

  பதிலளிநீக்கு
 45. thanks for the efforts taken to send the links..hmmmm..no need of calling me madam.just call me leela;))

  பதிலளிநீக்கு
 46. Leelagovind said...
  //thanks for the efforts taken to send the links..hmmmm..no need of calling me madam.just call me leela;))//

  Thanks Madam.

  Sorry, Thank you Leela! ;)

  With Best Wishes.

  vgk

  பதிலளிநீக்கு
 47. முகவும் அருமை. இங்கே வடக்கே இது போன்ற மாலைகளை மாப்பிளைக்கு போட்டு விட்டு குதிரையில் ஏற்றுவார்கள். தாங்கள் செய்த மாலையும் விசிறியும் மிக அருமை.

  தங்களின் வண்ண படங்கள் அழகை பேசுகின்றன. அதனுடன் தாங்கள் பேசியது கொஞ்சம் வேடிக்கையாகவும், காண கட்சிதமகவும் இருந்தது.

  எனது நெஞ்சார்ந்த நமஸ்காரங்கள்

  பதிலளிநீக்கு
 48. அன்புள்ள ரியா மேடம்,

  வாங்கோ! வாங்கோ!! .... வருக! வருக!! வருக!!!

  தாங்கள் தமிழிலேயே பின்னூட்டம் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
  நீங்கள் தமிழ் பேசும் பெண்மணி [தமிழச்சி] தான் என்பதை நான் இப்போது முழுவதுமாக நம்புகிறேன்.

  தங்களுக்கு முன் பின்னூட்டமிட்டுள்ள திருமதி லீலா கோவிந்த் அவர்கள் எனக்கு என்ன எழுதியிருக்கிறார்கள் பாருங்கோ:

  sir its very interesting to see your caricatures and pencil sketching..my elder son is good in drawing caricatures and cartoons..so i am interested in such arts but here i cant enjoy to the fullest bcoz of tamil language..

  மேற்படி லீலாவின் பின்னூட்டத்தினாலும், தாங்கள் என் மற்றொரு LATEST பதிவுக்கு இன்று முதன்முதலாக வருகை தந்து ஆங்கிலத்தில் பாராட்டி எழுதியிருந்ததாலும், தங்களுக்குத் தமிழ்மொழி தெரியுமோ தெரியாதோ என சந்தேகம் வந்தது.

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான தமிழ்மொழிக் கருத்துக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அநேக ஆசீர்வாதங்கள்.

  அன்புடன்
  கோபு [vgk]

  பதிலளிநீக்கு
 49. ஐயா இந்த பதிவை நான் நேற்று இரவே பார்த்துவிட்டேன் ... என்னால் கருத்து தெரிவிக்க நேரமில்லை .... வருந்துகிறேன் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Good Morning Mrs. VijiParthiban Madam! WELCOME !!

   அதனால் என்ன? வருந்தாதீர்கள். நேற்று இரவே பார்த்தாலும் இன்று காலை ஓடி வந்து கருத்தளித்து விட்டீர்களே, சபாஷ்!
   தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   நீக்கு
 50. அற்புதமான உங்களுடைய கைவேலைகள் அருமை... அதிலும் பணமாலை ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்... இது நல்ல ஒரு மொய் செய்வதற்கு ஏற்ற வழி சூப்பர் யோசனை ....

  அனைத்தும் அருமை ஐயா உங்கள் ஓவியங்கள் நல்ல இருந்தது.... தலைவிரிக்கோலம் கொண்டவளும், காதோடுபேசுவதும் எனக்கு ரொம்பவே பிடித்தது..... அனைத்தும் அருமை ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அதிலும் பணமாலை ம்ம்ம்ம்ம்ம் சூப்பர்...//

   தங்களின் இந்தக்கருத்துக்களால் அந்த நான் செய்த பணமாலையின் மதிப்பு மேலும் பல மடங்கு உயர்ந்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

   இதே என் கருத்தினைத்தான் உங்களின் அன்பான அக்கா அவர்களும் மேலே சொல்லியிருக்கிறார்கள் .... பாருங்கள்.

   *****
   இராஜராஜேஸ்வரி July 2, 2011 6:31 PM
   ரூபாய் நோட்டுக்கள் தங்கள் கைவண்ணத்தால் மதிப்புகூட்டப்பட்டு மிளிர்கின்றன.
   *****

   //தலைவிரிக்கோலம் கொண்டவளும், காதோடுபேசுவதும் எனக்கு ரொம்பவே பிடித்தது..... //

   அந்த என் இளமைக் காலத்தில், நான் ஓவியம் முறையாகக் கற்காமலும், ஓவியம் வரைவதில் எனக்கு ஒரு Maturity ஏற்படாமலும் இருந்தபோதே நீங்கள் சொல்லும் இவை இரண்டையும் நான் வரைந்து முடித்ததும், எனக்கே மிகவும் பிடித்துத்தான் இருந்தன. திருப்தியாக உணர்ந்தேன். அவற்றைப் பார்த்த பலரும் என்னை வெகுவாகப் பாராட்டினார்கள்.

   தங்களின் பாராட்டுக்களும் இப்போது எனக்கு மிகவும் மகிழ்வளிக்கின்றன.

   என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 51. ஸ்ரீ ஆஞ்சநேயர் படம் Very Super... Nice Your Work....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //VijiParthibanJuly 19, 2012 9:33 PM
   ஸ்ரீ ஆஞ்சநேயர் படம் Very Super... Nice Your Work....//

   தங்களின் அன்புள்ள அக்கா, மேலே தன் கருத்தினை வலியுறுத்திச் சொல்லியிருப்பதை கவனியுங்கள்:

   *****
   இராஜராஜேஸ்வரி July 2, 2011 6:34 PM
   கைகளினால் வ்ரைந்த படங்களுக்கு அனுபூதி அதிகம். பாரிஜாத தரூமூல வாசின்னாகிய அனுமனின் படம் சிலிர்க்க வைக்கிறது.
   *****

   Thanks a Lot .... for both of you ! ;)))))

   அன்புடன்
   vgk

   நீக்கு
 52. Iam very impressed by your cartoon caricatures sir...you should start doing it again...

  பதிலளிநீக்கு
 53. Thank you very much, Mr Ashok Sir.

  Even now I am doing something Sir.

  You may just see some pictures drawn by me, for some of my short stories, in the following Links:

  http://gopu1949.blogspot.in/2011/10/1-of-4.html
  ”மனதுக்குள் மத்தாப்பூ”
  [என் ஓவியத்துடன் கூடிய காதல் காவியம்]

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_634.html
  கொட்டாவி - சிறுகதை

  http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_09.html
  ஏமாற்றாதே ..... ஏமாறாதே !

  Sir, Please go through those stories & see my art work there and offer your comments. Kindly Let me know whether the picture I have drawn is an opt one for the given story.

  Yours,
  vgk

  பதிலளிநீக்கு
 54. Sir thank you very much for pointing the links ..all your drawings are wonderful..especially the caricature..
  if you don't mind one request..if you add google translation we would enjoy more..just suggestion sir

  பதிலளிநீக்கு
 55. //UnknownOctober 5, 2012 3:56 AM
  Sir thank you very much for pointing the links ..all your drawings are wonderful..especially the caricature..
  if you don't mind one request..if you add google translation we would enjoy more..just suggestion sir//

  Sir. Thanks for your kind visit here & for your valuable comments & suggestions.

  But I am not fit enough to add 'Google Translation" in my Blog. No such knowledge for me, for the time-being.

  However I shall try with the help of some of my friends, as soon as possible.

  Till such time you may very well use the following Link for any translation from Tamil to English.

  . http://translate.google.com/?sl=ta&tl=en&js=n&prev=_t&hl=en&ie=UTF-8&layout=2&eotf=1&text=&file=#ta|en|

  With Best Wishes,
  VGK

  பதிலளிநீக்கு
 56. Thank you very much for the link sir..in the previous comment i forgot to login from google, so the post published as unknown..once again my appreciations for all your drawings..:)

  பதிலளிநீக்கு
 57. Lakshmi October 5, 2012 5:59 AM
  Thank you very much for the link sir..in the previous comment i forgot to login from google, so the post published as unknown..once again my appreciations for all your drawings..:)

  THANK YOU VERY MUCH, MRS. LAKSHMI MADAM.

  MY e-mail ID: valambal@gmail.com I am at Tiruchi Tamilnadu

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thats fine..my son studying in NIT trichy and daughter completed her engineering from Sastra tanjore..

   நீக்கு
  2. LakshmiOctober 5, 2012 7:21 AM
   Thats fine..my son studying in NIT trichy and daughter completed her engineering from Sastra tanjore..//


   I am so happy to hear this, Madam.
   Thanks for sharing these sweet News.
   vgk

   நீக்கு
 58. எல்லாமே சூப்பர். நல்ல படங்கள். எனக்கும் ஒவியங்கள் ரொம்ப பிடிக்கும் ஆனல் அவ்வளவாக வரைய வராது. என் மகளுக்கும் ட்ராயிங் என்றால் ரொம்ப பிடிக்கும். நல்ல கலை உங்க எல்லா பென்சில் ஸ்கெட்சஸ் சூப்பர். டைம் இருக்கும் போது மீண்டும் வரையலாமே டோண்ட் மிஸ் இந்த கலையை, எனக்காக ஒரு நல்ல ஒவியம் டைம் கிடைக்கும் போது வரையுங்க. என் அப்பாவும் வரலஷ்மிக்கு வீட்டில் கலச சொம்பில் வரைவார் அவரும் நன்றாக வரைவான். இப்ப அதையும் மிஸ் பன்னிட்டேன்.

  பதிலளிநீக்கு
 59. Vijiskitchencreations November 2, 2012 7:56 AM
  //எல்லாமே சூப்பர். நல்ல படங்கள்.//

  மிக்க நன்றி, மேடம். மேலும் நான் வரைந்த நிறைய படங்கள் என் சேமிப்புக்கிடங்கில் இல்லாமல் போய் விட்டது. அவ்வப்போது யார் யாருக்கோ விரும்பிக் கேட்டவர்களுக்குக் கொடுத்து விட்டேன். தக்க பாதுகாப்பு இல்லாமல் அலட்சியத்தில் சில காணாமலே போனதும் உண்டு.

  //எனக்கும் ஒவியங்கள் ரொம்ப பிடிக்கும் ஆனல் அவ்வளவாக வரைய வராது. என் மகளுக்கும் ட்ராயிங் என்றால் ரொம்ப பிடிக்கும்.//

  வரைய வராவிட்டாலும், ஓரளவு ரசிக்கத் தெரிந்தாலே போதும்.
  தங்கள் மகளுக்கு ஓவியம் வரைய தொடர்ந்து பயிற்சி அளியுங்கள். முறைப்படி கற்க ஏற்பாடு செய்துகொடுங்கோ.

  //நல்ல கலை உங்க எல்லா பென்சில் ஸ்கெட்சஸ் சூப்பர். டைம் இருக்கும் போது மீண்டும் வரையலாமே டோண்ட் மிஸ் இந்த கலையை, எனக்காக ஒரு நல்ல ஒவியம் டைம் கிடைக்கும் போது வரையுங்க.//

  நன்றி. இப்போதும் சில படங்களைப் பார்த்தால் உடனே அதை அப்படியே வரைய ஆசைப்படுவதுண்டு.

  சந்தோஷமான [Happy Mood] மனநிலை மட்டுமே தேவை. இன்றும் அவ்வப்போது வரைந்து கொண்டு தான் வருகிறேன். அதனால் மனம் ஒரு நிலைப்படுகிறது. மனதுக்கு நல்ல Concentration கிடைக்கிறது.

  //என் அப்பாவும் வரலஷ்மிக்கு வீட்டில் கலச சொம்பில் வரைவார் அவரும் நன்றாக வரைவார்.//

  கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது, மேடம்.

  //இப்ப அதையும் மிஸ் பண்ணிட்டேன்.//

  அடடா! வருத்தமாக உள்ளது. இழந்த சிலவற்றை கஷ்டப்பட்டுத்தான் மறக்க வேண்டியுள்ளது.

  மனதை எப்போதும் சந்தோஷமாகவே வைத்துக்கொள்ளுங்கள்.
  அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 60. முறையாக பயிற்சி பெறாவிடினும் தங்களுக்குள் தாங்கள் கண்டறிந்து தாங்களே ஊக்குவித்து ஒவியங்களிலும் அன்றே இத்தனை புதுமை காட்டி அசத்தி இருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு உதாரனம் சார்! யாமறிந்து தங்களிடம் "பார்க்கலாம், முயற்சிக்கிறேன்" என்பதை விட "செய்வேன் முடிப்பேன்" என்கிற ஒரு நம்பிக்கையையே உணர முடிகிறது சார்! தங்களது அறிமுகமும் நட்பும் கிடைத்தமைக்கு யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை! பதிவுலகிற்கு நன்றி!!! இத்தகைய [ஊக்குவிக்கும், நம்பிக்கையளிக்கும்] பதிவுகளை பகிரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யுவராணி தமிழரசன் November 29, 2012 8:32 AM
   //முறையாக பயிற்சி பெறாவிடினும் தங்களுக்குள் தாங்கள் கண்டறிந்து தாங்களே ஊக்குவித்து ஒவியங்களிலும் அன்றே இத்தனை புதுமை காட்டி அசத்தி இருப்பது எங்களுக்கெல்லாம் ஒரு உதாரண்ம் சார்! யாமறிந்து தங்களிடம் "பார்க்கலாம், முயற்சிக்கிறேன்" என்பதை விட "செய்வேன் முடிப்பேன்" என்கிற ஒரு நம்பிக்கையையே உணர முடிகிறது சார்! //

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், யுவராணி.

   //தங்களது அறிமுகமும் நட்பும் கிடைத்தமைக்கு யாருக்கு நன்றி சொல்வது என்று தெரியவில்லை! பதிவுலகிற்கு நன்றி!!! இத்தகைய [ஊக்குவிக்கும், நம்பிக்கையளிக்கும்] பதிவுகளை பகிரும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்!//

   மிகவும் சந்தோஷம், யுவராணி. பதிவுலகின் மூலம் எனக்கும் தங்களைப் போன்ற ஒருசிலரின் அறிமுகம் கிடைத்தது எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளது. பார்ப்போம்.

   அன்புடன் vgk

   நீக்கு
 61. கார்டூன் / கேலிசித்திரங்கள் எளிதாக தோன்றும் ஆனால் வரைவதற்கு சிரமமானது. தங்களின் சித்திரங்கள் என் மனதைக் கவர்ந்தன.

  பதிலளிநீக்கு
 62. கலாகுமரன் January 11, 2013 2:02 AM
  //கார்டூன் / கேலிசித்திரங்கள் எளிதாக தோன்றும் ஆனால் வரைவதற்கு சிரமமானது. தங்களின் சித்திரங்கள் என் மனதைக் கவர்ந்தன.//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆறுதலான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 63. ஓவியம் வரைவதிலும் திறமை சாலியா. அப்படின்னா உங்களுக்குத்தெரியாத விஷயம்ன்னு ஏதானும் விட்டு வச்சிருக்கீங்களா. பதிவுலகிலும் கலக்குரீங்க.இதுக்கெல்லாம் பின்னாடி உங்க கடுமையான உழைப்பும் இருக்கு. ஆர்வமும் இருக்குன்னு நல்லாவே புரிஞ்சுக்க முடிகிறது.இது போலவே இன்னொரு வலைப்பூவிலும் சென்று பார்த்தேன். ஒரு அம்மா . அவங்களும் கிட்டத்தட்ட 65 வயசுக்காரங்கதான், குறையொன்றுமில்லை, தமிழ் விரும்பின்னு ரெண்டு தலைப்புல வலைப்பூ எழுதி வராங்க. மலரும் நினைவுகள் தொடங்கி அவங்களும் ரொம்ப சுவாரசியமா எழுதுராங்க.பயணக்கட்டுரை, சிறு கதை சமையல்குறிப்பு, காமெடிகள் என்று வெரைட்டியாக எழுதுராங்க வயசானாத்தான் அனுபவம் வருமோ.உங்க வலைப்பூவுக்கு அடுத்து அந்த அம்மா வலைப்பூ பக்கமும் அடிக்கடி போயி பார்ப்பேன். இன்னும் போயி பார்க்க நிறைய வலைப்பூக்கள் பாக்கி இருக்கிறது.ஒன்னு ஒன்னாக பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 6:12 AM

   //ஓவியம் வரைவதிலும் திறமை சாலியா.//

   திறமைசாலியாவது வெங்காயமாவது. ஏதோ கொஞ்சம் எப்போதாவது கிறுக்குவேன். சிலர் நல்லா வரைஞ்சுருக்கேன்னு சொல்லுவா, அவ்வளவு தான்.

   //அப்படின்னா உங்களுக்குத்தெரியாத விஷயம்ன்னு ஏதானும் விட்டு வச்சிருக்கீங்களா.//

   அட அது நிறையவே இருக்குதுங்க. உதாரணமாக “பூந்தளிர்” என்று புறப்பட்டிருக்கும் இந்தப்போண்ணு யாரு, எந்த ஊரு, உண்மையான பெயர் என்ன? எங்கே பொறந்தாங்கோ, எங்கே வளர்ந்தாங்கோ, எங்கே படிச்சாங்கோன்னு ஒண்ணுமே தெரியாதே எனக்கூஊஊஊ.

   அதனால் கற்றது கைமண் அளவு தாங்க, ஆனால் கல்லாதது உலகளவு மைனஸ் கைமண் அளவாக்கும் ;)

   //பதிவுலகிலும் கலக்குறீங்க.//

   கலக்குறீங்கோ இல்லை. கலக்கினேனுங்கோ. இப்போ கொஞ்சம் இடைவெளி கொடுத்திருக்கேங்கோ. பிறர் பதிவுகளைப் படிச்சு பின்னூட்டம் கொடுக்கவே நேரம் இல்லீங்கோ.

   //இதுக்கெல்லாம் பின்னாடி உங்க கடுமையான உழைப்பும் இருக்கு. ஆர்வமும் இருக்குன்னு நல்லாவே புரிஞ்சுக்க முடிகிறது.//

   என்னவோ சொல்றீங்கோ. சரி.

   நல்லாவே புரிஞ்சுக்கிட்டீங்கோ.

   கடுமையான உழைப்பும் ஆர்வமும் மட்டும் இருந்தால் போதுங்களா? உங்களை மாதிரி சிலர் வருகை தந்து
   உற்சாகம் கொடுத்தால் தானே மகிழ்ச்சியாக உள்ளது.

   மகிழ்ச்சியோ மகிழ்ச்சிங்கோ. ;)

   >>>>>

   நீக்கு
  2. //இன்னும் போயி பார்க்க நிறைய வலைப்பூக்கள் பாக்கி இருக்கிறது.ஒன்னு ஒன்னாக பார்க்கணும்.//

   நீங்க எங்க போவீங்களோ போக மாட்டீங்களோ எனக்குத் தெரியாது. நான் சொல்லும் ஒருவரோட பதிவுக்கு நீங்க தினமும் போகணும். தினமும் இங்கே போயிட்டு வந்தீங்க என்றாலே கோயிலுக்குப்போன புண்ணியம் மிகச்சுலபமாக உங்களுக்குக் கிடைச்சுடும்.

   நீங்க ஏற்கனவே போயிக்கிட்டு தான் இருக்கீங்கோ. ஆனால் தினமும் விடாமல் போய் வரணும். எனக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டு வரணும். சொல்லிட்டேன்.

   எங்கே சொன்னேன் என்கிறீர்களா? இங்கே எல்லோருக்கும் தெரியும்படிச் சொல்ல முடியுமா? வழக்கம் போல மெயிலில் தான் நான் சொல்லுவெனாக்கும். ;)))))

   >>>>>>

   நீக்கு
  3. //இது போலவே இன்னொரு வலைப்பூவிலும் சென்று பார்த்தேன். ஒரு அம்மா. அவங்களும் கிட்டத்தட்ட 65 வயசுக்காரங்கதான், குறையொன்றுமில்லை, தமிழ் விரும்பின்னு ரெண்டு தலைப்புல வலைப்பூ எழுதி வராங்க.//

   அவங்க எழுத்துக்கும், அனுபவத்திற்கும், சுறுசுறுப்புக்கும், ஆர்வத்திற்கும் அவங்களுக்கு வெறும் 16 வயது தானுங்க.
   அவங்களுக்கு இரண்டு வலைத்தளமே போதாதுங்க.

   //மலரும் நினைவுகள் தொடங்கி அவங்களும் ரொம்ப சுவாரசியமா எழுதுறாங்க.பயணக்கட்டுரை, சிறு கதை சமையல்குறிப்பு, காமெடிகள் என்று வெரைட்டியாக எழுதுறாங்க //

   அவங்களும் நானும் அலைபேசி, மின்னஞ்சல், சுட்டி முதலியவற்றில் பேசி ரொம்ப நாள் ஆச்சு. நடுவிலே சிங்கப்பூருக்கு வேறு போய்ட்டாங்கோ. ரொம்ப ரொம்ப நல்லவங்க.

   அவங்களை நான் ரொம்ப விசாரித்ததாகச் சொல்லுங்க.
   என்னை ஞாபகம் வெச்சுருக்காங்களோ என்னவோ? ;))

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 64. சார், உங்களுக்கு வலைப்பூ தளத்தில் தெரியாதவங்கன்னு யாருமே கிடையாதா? எல்லாரையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. எல்லார் பக்கமும் போயி பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்துரீங்க. நல்லா இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 8:59 PM


   //சார், உங்களுக்கு வலைப்பூ தளத்தில் தெரியாதவங்கன்னு யாருமே கிடையாதா?//

   தெரிஞ்சவங்களை விட தெரியாவங்கதான் ஜாஸ்திங்கோ.

   //எல்லாரையும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க.//

   அப்படி இல்லீங்கோ. எல்லோரைப்பற்றியும் கொஞ்சூண்டு தெரிஞ்சு வைத்துள்ளேன். அம்புட்டுத்தான்.

   //எல்லார் பக்கமும் போயி பின்னூட்டம் கொடுத்து உற்சாகப்படுத்துறீங்க. நல்லா இருக்கு.//

   அப்படியெல்லாம் இல்லீங்கோ. ஏதோ கொஞ்சூண்டு பேர்களை மட்டும் தான் போய்ப்பார்க்க முடியுது. எல்லோர்ப்பக்கமும் முன்புபோல என்னால் போக முடிவதில்லை.

   வயசாச்சோன்னோ! ;)

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 65. அட அது நிறையவே இருக்குதுங்க. உதாரணமாக “பூந்தளிர்” என்று புறப்பட்டிருக்கும் இந்தப்போண்ணு யாரு, எந்த ஊரு, உண்மையான பெயர் என்ன? எங்கே பொறந்தாங்கோ, எங்கே வளர்ந்தாங்கோ, எங்கே படிச்சாங்கோன்னு ஒண்ணுமே தெரியாதே எனக்கூஊஊஊ.

  ஹா ஹா ஹா . வெரும் சாதாரணப்பொண்ணுங்க இது. நத்திங்க் டு ஸ்பெஷல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் January 15, 2013 at 9:01 PM

   ****அட அது நிறையவே இருக்குதுங்க. உதாரணமாக “பூந்தளிர்” என்று புறப்பட்டிருக்கும் இந்தப் பொண்ணு யாரு? எந்த ஊரு? உண்மையான பெயர் என்ன? எங்கே பொறந்தாங்கோ? எங்கே வளர்ந்தாங்கோ? எங்கே படிச்சாங்கோ? ன்னு ஒண்ணுமே தெரியாதே எனக்கூஊஊஊ****

   //ஹா ஹா ஹா . வெறும்ம் சாதாரணப்பொண்ணுங்க இது. நத்திங்க் டு ஸ்பெஷல்.//

   சமத்தா பதில் கொடுத்திட்டீங்கோ. நானும் சாதாரணமானவன் தானே, அதனால் இதை என்னால் மிகவும் ரஸிக்க முடியுது.

   NOTHING TO SPECIAL வாழ்க!

   என ஸ்பெஷலாக வாழ்த்துகிறேன்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 66. JACK OF ALL SUBJECTS, MASTER OF NONE அப்டின்னு சொல்லுவா.

  ஆனா நீங்க இப்படி MASTER OF ALL SUBJECTS ஆ இருக்கீங்களே.

  உங்களுக்கு ‘ஐடியா திலகம்’ என்ற பட்டப் பெயரை வழங்குகிறேன்.

  வாழ்த்துக்களுடன்

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 13, 2013 at 3:20 AM

   வாங்கோ, வணக்கம்.

   JACK OF ALL SUBJECTS, MASTER OF NONE அப்டின்னு சொல்லுவா.
   ஆனா நீங்க இப்படி MASTER OF ALL SUBJECTS ஆ இருக்கீங்களே.
   உங்களுக்கு ‘ஐடியா திலகம்’ என்ற பட்டப் பெயரை வழங்குகிறேன்.

   வாழ்த்துக்களுடன்
   ஜெயந்தி ரமணி//

   வால், வாலுடன் கொடுத்த பட்டத்தால், பாராட்டு என்ற கற்பனை வானத்தில் பறந்து மகிழ முடிகிறது. தொடர்ந்து காற்று [பின்னூட்டங்கள்] வீசினால் தான் பட்டத்தால் தொடர்ந்து பறந்திட முடியும்.

   அன்பான தங்களின் வருகைக்கும், பட்டமளிப்புக்கும் நன்றிங்கோ!

   நீக்கு
 67. வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான, மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசை போடுவது மனித சுபாவம்.

  ஆனால் இப்படி அசை போட நல்ல நிகழ்வுகள் நடக்க இறைவன் அருள் வேண்டும். இன்று போல் உங்களுக்கு என்றும் அந்த இறையருள் வற்றாத ஜீவநதி போல் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI February 13, 2013 at 3:28 AM


   //வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான, மகிழ்ச்சியான நிகழ்வுகளை அசை போடுவது மனித சுபாவம்.

   ஆனால் இப்படி அசை போட நல்ல நிகழ்வுகள் நடக்க இறைவன் அருள் வேண்டும். இன்று போல் உங்களுக்கு என்றும் அந்த இறையருள் வற்றாத ஜீவநதி போல் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

   ஜெயந்தி ரமணி//

   தங்களின் மீண்டும் வருகைக்கும், இறையருள் வற்றாத ஜீவநதி போல் எனக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற தங்களின் பாசமுள்ள பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ;)

   நீக்கு
 68. மொத்தமாக நீங்கள் ஒரு சகலகலாவல்லவர்.எத்தனை திறமைகள் உங்களிடம்....என்றும் இப்படியே வாழ்க்கை தொடர இறைவன் அருள்வாராக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu March 3, 2014 at 10:31 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மொத்தமாக நீங்கள் ஒரு சகலகலாவல்லவர்.எத்தனை திறமைகள் உங்களிடம்....என்றும் இப்படியே வாழ்க்கை தொடர இறைவன் அருள்வாராக.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விசேஷமான பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 69. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  பொழுது போகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் June 15, 2014 at 8:19 AM

   //உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

   மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

   பொழுது போகிறது!//

   My Dear DD Sir,
   உற்சாகம் அளிக்கும் முன் தகவல் கொடுத்துள்ளதற்க்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 70. இந்த பதிவு வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ..வாழ்த்துகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி June 15, 2014 at 9:48 AM

   //இந்த பதிவு வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது ..வாழ்த்துகள்..!//

   உற்சாகம் அளிக்கும் முன் தகவல் கொடுத்துள்ளதற்க்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

   நீக்கு
 71. ரூபாய் நோட்டுக்களில் மாலை,மொய் விசிறி அருமை. நல்ல கற்பனை. சிறுகதைகளை வியந்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.
  எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri June 15, 2014 at 11:54 AM

   வாங்கோ, வணக்கம். இன்றைய 15/06/2014 வலைச்சர அறிமுகம் மூலம் வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

   என் வலைத்தளத்திற்கு தங்களின் முதல் வருகை எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   //ரூபாய் நோட்டுக்களில் மாலை,மொய் விசிறி அருமை. நல்ல கற்பனை. சிறுகதைகளை வியந்து படித்துக் கொண்டு இருக்கிறேன்.//

   தங்களின் அன்பான முதல் வருகைக்கும், அழகான, அருமையான, வியப்பளிக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   //எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. பாராட்டுக்கள்.//

   அடடா ! தன்யனானேன். எப்படியோ ஒருவழியாகப் பாராட்டியுள்ளீர்கள். அதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   நீக்கு
 72. அம்ம்மாடி !!! எவ்வளவு அழகிய சித்திரங்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் !!!

  மூக்கு பொடி மாமா !!இந்திராகாந்தி, ஜகஜீவன்ராம்,
  மொரார்ஜி தேசாய், ராஜ்நாராயணன், அதுவும் அந்த பண விசிறி சூப்பர் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angelin June 15, 2014 at 7:16 PM

   வாங்கோ நிர்மலா, வணக்கம்மா.

   //அம்ம்மாடி !!! எவ்வளவு அழகிய சித்திரங்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் !!!//

   இப்போதும்கூட நிறைய மிஸ் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கீங்க ! நானும் உங்களை என் பதிவுகள் பக்கம் மிகவும் மிஸ் பண்ணிக்கிட்டே தான் இருக்கிறேன். ;(

   //மூக்கு பொடி மாமா !!இந்திராகாந்தி, ஜகஜீவன்ராம்,
   மொரார்ஜி தேசாய், ராஜ்நாராயணன், அதுவும் அந்த பண விசிறி சூப்பர் !!!//

   மிகவும் சந்தோஷம் நிர்மலா. மிக்க நன்றி !

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 73. அந்த பென்சில் ஸ்கெட்ச் :)) அண்ணா அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் :)
  இந்திரா காந்தி ஜெகஜீவன்ராம் கார்ட்டூன் பென்சில் ஓவியங்கள் ..மிக தத்ரூபம் .. கண்ணை கொள்ளை கொள்ளுது அழகிய ஆஞ்சநேயர் ஓவியம் !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Angelin June 15, 2014 at 7:20 PM

   வாங்கோ நிர்மலா, மீண்டும் வணக்கம்.

   //அந்த பென்சில் ஸ்கெட்ச் :)) அண்ணா அது யாருன்னு கண்டுபிடிச்சிட்டேன் :)//

   அடடா, சும்மாவே இருக்க மாட்டீங்களே ! வீண் ஆராய்ச்சிகளெல்லாம் இப்போ எதற்கு ? ;)))))

   //இந்திரா காந்தி ஜெகஜீவன்ராம் கார்ட்டூன் பென்சில் ஓவியங்கள் ..மிக தத்ரூபம் ..//

   எனக்கும் அவை இரண்டும் + மொரார்ஜி தேசாயும் மிகவும் தத்ரூபமாக வந்துள்ளதில் மகிழ்ச்சியே.

   // கண்ணை கொள்ளை கொள்ளுது அழகிய ஆஞ்சநேயர் ஓவியம் !!//

   மிக்க நன்றி, நிர்மலா. அவ்வப்போது இதுபோல வருகை தந்தால் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் தெரியுமா? ;)

   அத்திப்பூத்தாற்போல ஆகிவிட்டது இப்போதெல்லாம் தங்களின் வருகை.

   வலைச்சரமும் வலைச்சர ஆசிரியர் அவர்களும் வாழ்க !

   பிரியமுள்ள கோபு அண்ணா

   நீக்கு
 74. தங்களுக்குள் இப்படி ஒரு ஓவியரும் ஒளிந்திருக்கிறாரா? ஓவியத்தில் என்னை மிகவும் கவர்ந்தது விசிறி ஓவியமே?

  பதிலளிநீக்கு
 75. ஓஹ்ஹோ.. ஓவியம் வரயரதுலயும் கில்லாடியா? சூப்பரு. ரூவா நோட்டு மால லாம் கண்ண கட்டுதே. உங்களுக்கு தெரியாத வெசயமே கெடயாதோ.

  பதிலளிநீக்கு
 76. பன்முக வித்தகரோ. கோட்டோவியம் எல்லாமே.நல்லா இருக்கு. கரன்சி மாலை யாரெல்லாம் கொடுத்து வச்ச அதிர்ஷ்டசாலிகளோ காதோடுதான் நான் பேசுவேன் படமே பேசுது.

  பதிலளிநீக்கு
 77. வாத்யார்னாலே பன்முகத்திறமைகள்தான்...நோட்டுல மாலயா...இது ரொம்ப நல்லருக்கே...

  பதிலளிநீக்கு
 78. ஒவியங்கள் அனைத்துமே தத்ரூபமாக இருக்கு. ஓவியக்கல்லூரி சென்று பயிற்சி பெற்றதுண்டா. பண விசிறி உங்க கற்பனைத்திறனை சொல்லுது...பின்னூட்டத்திலும் எல்லாரும் பாராட்டி இருக்காங்க...ரொம்ப சந்தோஷமாக இருக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... November 14, 2016 at 11:25 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒவியங்கள் அனைத்துமே தத்ரூபமாக இருக்கு.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //ஓவியக்கல்லூரி சென்று பயிற்சி பெற்றதுண்டா.//

   இல்லை. முறைப்படி ஓவியம் கற்க வேண்டும் என்ற ஆசை மனதில் நிறைய இருந்தும் எனக்கு வசதி வாய்ப்புகள் அன்று இல்லை.

   //பண விசிறி உங்க கற்பனைத்திறனை சொல்லுது...//

   சந்தோஷம். :)

   //பின்னூட்டத்திலும் எல்லாரும் பாராட்டி இருக்காங்க...ரொம்ப சந்தோஷமாக இருக்கு...//

   தங்களின் அன்பான வருகைக்கும், அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   இதற்கு உடனடியாக பதிலளிக்க ஏனோ விட்டுப்போய் உள்ளது. தாமதத்திற்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 79. Muthuswamy MN தங்களின் ஓவிய கலை தெரியும். இன்றுதான் தங்களின் கதை எழுதும் ஆற்றல் பற்றி அறிந்தேன். நமஸ்காரம்.

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour during 1965 to 1980 - Now he is at Mumbai)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  பதிலளிநீக்கு