16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?
நாற்று நிரூபன்
அசாதாரணமான வை. கோபால்கிருஷ்ணன்
சந்திரவம்சம்
===============================================================
மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் என்னை இந்தத் தொடர்பதிவிட அன்புக்கட்டளையிட்டுள்ளார்கள்
மிகச்சாதாரணமான, மிகச்சாமான்யனான என்னை அசாதாரணமானவன் என்றெல்லாம் ஏதேதோ சொல்லி அழைத்திருக்கிறார்கள்.
அவர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், பிரியத்திற்கும், பாசத்திற்கும் முதற்கண் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு கேள்விகளுக்கும் 300 பதில்கள் தர வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. இருப்பினும் 3 மட்டுமே என்று ஏதோ கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், எனக்கும் வேலை மிச்சமாகி, நீங்களும் என் மீது வெறுப்புக்கொள்ளாமல் தப்பிக்கவும் நேர்ந்துள்ளது.
============================================================
1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
உண்மையிலேயே அப்பாவித்தங்கமணியானவளும், சூதுவாது ஏதும் தெரியாதவளும், போதுமென்ற மனம் கொண்டவளும், என் மீது அளவு கடந்த பிரியம் வைத்துள்ளவளுமான என் மனைவி.
நோயற்ற வாழ்வு
மன நிம்மதி
2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?
பேச்சுத்துணைக்கே ஆள் இல்லாமல் தன்னந்தனியாக, என் வீட்டிலோ அல்லது வேறு எங்காவது ஓரிடத்திலோ, அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் தங்குவது.
(இதுவரை அதுபோல ஒரு நாள் கூட நான் தங்கியது கிடையாது)
உழைக்காமல் கிடைக்கும் செல்வம்
தட்டமுடியாமல், ஏதோவொரு சூழ்நிலையில், கட்டாயப்படுத்தப்பட்டு, பிறர் வீட்டில் சாப்பிடும்படி நேரிடுவது.
3) பயப்படும் மூன்று விஷயங்கள்
இயற்கையின் சீற்றங்கள்
தேவையில்லாத ஆனால் தவிர்க்க முடியாத பயணங்கள்
[விபத்துக்களைப்பற்றி அடிக்கடி வரும் செய்திகளைப்படிப்பதனால்]
நாம் ஈடுபட்டு, மணமகன் அல்லது மணமகள் பற்றி பரிந்துரை செய்து, திருமணமும் செய்து வைத்த தம்பதி கடைசிவரை ஒற்றுமையாக இல்வாழ்க்கை வாழ்ந்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி, நமக்கும் நல்ல பெயரை வாங்கித்தரவேண்டுமே என்ற பயம்.
4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை வித்தியாசம் தெரியாதபடி ஒரே அளவில் வெளியிட்டு, அதன் மூலம் பாமர மக்களைப் பரிதவிக்கச் செய்துள்ள பிரகஸ்பதிகளின் அறிவற்ற செயல்.
ஒரு 20 ஆண்டுகளுக்கு முன்பு, வெகு அழகாக, உபயோகிப்பாளர்களுக்கு மிகவும் செளகர்யமாக வடிவமைக்கப்பட்டிருந்த உள் நாட்டுக்கடிதங்களை [Inland Letters] உருப்படியில்லாமல் மாற்றியுள்ள பிரகஸ்பதிகளின் அறிவற்ற செயல்.
எங்கும் எதிலும் இன்று வேரூன்றிப்போய் உள்ள ஊழலும் லஞ்சமும் முற்றிலும் ஒழிந்துவிடும் என்று நினைக்கும் அப்பாவி மக்களின் நம்பிக்கைகள்.
5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
தூசி முதல் தூசி துடைக்கும் துணி வரை
காஃபி டவரா டம்ளர் முதல் கணிணி வரை
ஏ. சி. ரிமோட் முதல் டி.வி ரிமோட் வரை அனைத்து அடசல்களுமே!
6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
நகைச்சுவைக்கதைகள் படிக்கும் போது
சினிமாவில் வரும் நகைச்சுவைக்காட்சிகள் பார்க்கும் போது
நகைச்சுவையாகவும், மிமிக்ரி செய்தும் பேசும் நண்பர்களுடன் பழகும்போது
7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
வாசித்தல்
யோசித்தல்
பதிவு செய்தல்
8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
ஒரு பெருந்தொகையை நிரந்தரவைப்பாக ஒதிக்கி, அறக்கட்டளை போல ஒன்றை உருவாக்கி, சிறந்த தமிழ் நூல்களுக்கு ஆண்டுதோறும் பரிசளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.
தோட்டத்துடன் கூடிய பெரியதொரு மாளிகை போல வீடு கட்டி, அதில் பல அறைகள் அமைத்து, அனைத்து வசதிகளும் செய்து, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குடும்பத்தார் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒன்றாக ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ வழிசெய்ய நினைக்கிறேன்.
நாம் மறைந்தாலும், நம் பெயர் என்றும் நிலைத்து நிற்குமாறு, ஏதாவது ஒரு பெரிய சாதனையோ அல்லது சமுதாயத்திற்கு பயன்படும் நற்செயலோ செய்திட வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.
9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
எந்தவொரு Table work ஐயும், ஒரு மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, மிகச்சிறப்பாக, முழு ஈடுபாட்டுடன், முழு மனதுடன், எனக்கே ஒரு திருப்தி ஏற்படும் வகையில், நிறைவாக, விரைவாக செய்திட முடியும்.
எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களில் இரவு பகல் பாராமல் தூக்கமின்றி, ஓய்வின்றி தொடர்ந்து செயல்பட முடியும்.
கற்பனை உலகில், எல்லை ஏதும் இல்லாமல், எனக்கு மனதிற்குப் பிடித்தவர்களுடன், வானம் தாண்டியும், அடிக்கடி சஞ்சரிக்கவும் இன்புறவும் முடியும்.
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
கதாநாயகி கதாநாயகன் மட்டுமல்லாமல் பலரும் குழுவாக ஆடிப்பாடும், அர்த்தமற்ற, இனிமையற்ற, அசிங்கமான, கர்ணகடூரமான தற்கால சினிமா பாடல்கள்.
தெருவில் ஒலிபெருக்கி கட்டி காட்டுக்கத்தல் கத்தும் ஆன்மீகமோ அரசியலோ எந்த நிகழ்ச்சியாக இருப்பினும்.
வாகனங்களில் எழுப்பபடும் பேரிரைச்சல்கள், ஏர் ஹாரன் சப்தம் முதல் வானத்தில் இடி இடிக்கும் சப்தம் வரை
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
ஓவியங்கள் வரைவது பற்றிய முறையான கல்வி
வேற்று கிரஹங்கள், வின்வெளி, கோள்கள், துணைக்கோள்கள், ராக்கெட்கள் பற்றிய விஞ்ஞான அறிவியல் கல்வி
கம்ப்யூட்டர் பற்றிய அனைத்துத் தொழில்நுட்பங்கள், பயன்பாடுகள்
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
நல்ல சுவையான சுத்தமான சுகாதாரமான தயிர் சாதம் + மாவடு ஊறுகாய்
முறுகலான ஸ்பெஷல் ரவா தோசை + கெட்டிச்சட்னி
நல்ல கோதுமையில் செய்த சூடான உப்பலான பூரி +
உருளைக்கிழங்கும் வெங்காயமும் போட்ட மஸால்
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
சின்னச்சின்ன ... ஆசை; சிறகடிக்கும் ... ஆசை
முத்துமுத்து ஆசை; முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத்தொட்டு .... முத்தமிட ஆசை
என்னை இந்த பூமி சுற்றிவர ஆசை ....
தேடினேன் ..... வந்தது; நாடினேன் ... தந்தது;
வாசலில் நின்றது; வாழ......வா என்றது!
என் மனத்தில் ஒன்றைப்பற்றி ....
நான் நினைப்பதெல்லாம் வெற்றி
நான் ....... மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவர் மாம்பழம் வேண்டுமென்றார்!
அதைக் கொடுத்தாலும் வாங்கவில்லை....
இந்த கன்னம் வேண்டுமென்றார் .....
ஹொய்ன ஹொய்னஹோ ஹொய்னா...
ஹொய்ன ஹொய்னஹோ ஹொய்யா...
14) பிடித்த மூன்று படங்கள்?
சிந்து பைரவி
அந்த ஏழு நாட்கள்
வறுமை நிறம் சிகப்பு
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூன்றுவிஷயம்?
அன்று: சுவாசிக்க காற்று; குடிக்க குடிநீர்; ஜாடிக்கு ஓர் மூடி
நேற்று: உண்ண உணவு; உடுக்க உடை; இருக்க இருப்பிடம்
இன்று: AC Room + PC / Laptop + Mobile Phone
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்கள்?
திருமதி. ராஜி (கற்றலும் கேட்டலும்)
திருமதி. கோவை2தில்லி
திருமதி. ரமாரவி [RAMVI] {MADURAGAVI}
-o-o-o-o-o-o-o-
நாம் மறைந்தாலும், நம் பெயர் என்றும் நிலைத்து நிற்குமாறு, ஏதாவது ஒரு பெரிய சாதனையோ அல்லது சமுதாயத்திற்கு பயன்படும் நற்செயலோ செய்திட வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.//
பதிலளிநீக்குசாதனைகள் பல புரிய வாழ்த்துக்கள்.
@தோட்டத்துடன் கூடிய பெரியதொரு மாளிகை போல வீடு கட்டி, அதில் பல அறைகள் அமைத்து, அனைத்து வசதிகளும் செய்து, வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குடும்பத்தார் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒன்றாக ஒரே கூட்டுக்குடும்பமாக வாழ வழிசெய்ய நினைக்கிறேன். //
பதிலளிநீக்குஎங்களுக்கும் அது போல ஆசையுண்டு.
அது பேராசை என்கிறார்கள். 2000 வருட பிற்போக்குத்தனம் இருப்பதாக எள்ளி நகையாடுகிறார்கள் வெளிநாட்டு மகன்கள்.போய் இந்தியா ரோடுகளையும், ஹார்ன் சத்தத்தையும் கேட்டுப் பாருங்கள் என்கிறார்கள்.
தட்டமுடியாமல், ஏதோவொரு சூழ்நிலையில், கட்டாயப்படுத்தப்பட்டு, பிறர் வீட்டில் சாப்பிடும்படி நேரிடுவது.//
பதிலளிநீக்குகஷ்ட்ட்டம் தான்.
இரவு பகல் பாராமல் தூக்கமின்றி, ஓய்வின்றி தொடர்ந்து செயல்பட முடியும்.
பதிலளிநீக்குகற்பனை உலகில், எல்லை ஏதும் இல்லாமல், எனக்கு மனதிற்குப் பிடித்தவர்களுடன், வானம் தாண்டியும், அடிக்கடி சஞ்சரிக்கவும் இன்புறவும் முடியும்.//
அழகான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
///நாம் மறைந்தாலும், நம் பெயர் என்றும் நிலைத்து நிற்குமாறு, ஏதாவது ஒரு பெரிய சாதனையோ அல்லது சமுதாயத்திற்கு பயன்படும் நற்செயலோ செய்திட வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.
பதிலளிநீக்கு/// இது நடக்க நானும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ... நல்ல பகிர்வு ஐயா ...
மிகவும் அழகான அருமையான பதில்கள்.
பதிலளிநீக்குநன்றி சார் என்னை தொடர்பதிவிட அழைத்ததற்க்கு. உங்க வாழ்த்துக்களுடன் தொடர்கிறேன்.
வணக்கம் அய்யா
பதிலளிநீக்குவழமை போலவே
இந்த பதிவும் கலக்கல்
எதிலும் தனித்து நிற்கும்
உங்க்ளின் ரசனி இந்த பதில்களிலும்
நிதர்சனமாய் நின்றது
தங்கள் ரசனை, முதிர்ந்த அனுபவம், ஆர்வம், ஆசை என அனைத்தையும் அறியத் தந்தன பதில்கள். சுவாரஸ்யமான பதிவு. நன்றி.
பதிலளிநீக்குபல விஷயங்கள் எனக்கும் ஒத்துப் போகின்றது.
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்.
பதிலளிநீக்குஇயற்கையின் சீற்றங்களுக்கு எல்லோருக்குமே பயம் இருக்கும். எனக்கும்!
பதிலளிநீக்குபயணத்தில் வெறுப்பு- டிராவலோஃபோபியா?!!
மணமகன் மணமகள் பற்றி கவலை உங்களைப் புரிய வைக்கிறது.
புரியாத மூன்றில் முதல் இரண்டும்- ஆமாம், ஆமாம்.
//"தோட்டத்துடன் கூடிய பெரியதொரு மாளிகை போல வீடு கட்டி, அதில் பல அறைகள் அமைத்து,...................."//
எனக்கும், எங்களுக்கும் இந்த எண்ணங்கள் இருந்தன. அருமையான யோசனை. ஒவ்வொரு அறையில் சமையலறையும் இணைத்தும் தேவைப் பட்டால் பொதுச் சமையலும் என்றெல்லாம் நாங்களும் விஸ்தாரக் கனவு கண்டதுண்டு. கனவு மட்டும்தான். நடப்பது அசாத்தியம். எல்லோருக்குமே இந்த ஆசை இருக்கலாம் என்று படுகிறது. கூட்டுக் குடும்பத்தின் அருமை தெரிந்தவர்கள் அனைவரும் விரும்பும் யோசனை.
//"நாம் மறைந்தாலும், நம் பெயர் என்றும் நிலைத்து நிற்குமாறு........"//
பதிலளிநீக்குஇருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.
//"செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்"//
முதலாவது உங்கள் கைவண்ணங்களை முந்தைய பதிவுகளில் பார்த்த போதே தெரிந்தது.
//"முறுகலான ஸ்பெஷல் ரவா தோசை + கெட்டிச்சட்னி
"//
ஆஹா....
இரவு பகல் பாராமல் தூக்கமின்றி, ஓய்வின்றி தொடர்ந்து செயல்பட முடியும்.
பதிலளிநீக்குகற்பனை உலகில், எல்லை ஏதும் இல்லாமல், எனக்கு மனதிற்குப் பிடித்தவர்களுடன், வானம் தாண்டியும், அடிக்கடி சஞ்சரிக்கவும் இன்புறவும் முடியும்.//
அழகான வரிகள். பாராட்டுக்கள்......
அருமையான பகிர்வு .
பதிலளிநீக்கு//நல்ல கோதுமையில் செய்த சூடான உப்பலான பூரி + உருளைக்கிழங்கும் வெங்காயமும் போட்ட மஸால்//
இதுவும் என்னுடைய all time favorite!!!
15-ம் கேள்விக்கான பதில், முக்கால மாற்றங்களை அழகாக சித்தரிக்கிறது.எல்லாம் சுவையாக இருந்தாலும், குறிப்பிட்ட கேள்வி பதில் என்னைக் கவர்ந்தது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சார் ! அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குதங்கள் படைப்புகள் போலவே
பதிலளிநீக்குஇந்தப் பதிவும் எந்தவித குழப்பமும் இல்லாமல்
தெளிவாக இருக்கிறது
நீங்கள் விரும்பியவைகளையெல்லாம் அடைய
மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ஐயா உண்மையில் நீங்கள் வித்தியாசமானவர்தான்...!!
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்
பதிலளிநீக்குஉங்கள் பதில்களில் தெரிந்தது உங்கள் தனித்தன்மை
வாழ்த்துக்கள் அய்யா
உங்களைப்பற்றி நிறைய தகவல்களை தந்தமைக்கு
அனைத்தும் முத்தான மூன்றுகளே..
பதிலளிநீக்குஎளிமையான அருமையான மனசைத் தொடும் மூன்று முடிச்சுகளில் வசமாய் சிக்கிக் கொண்டேன்
பதிலளிநீக்குகேள்வி பதில்கள் மிக அருமை.
பதிலளிநீக்குமுக்கியமாக பதினைந்தாம் கேள்விக்கு அளித்த பதில் இன்றைய காலகட்டத்தை
தெளிவாக விளக்குகிறது.பகிர்விற்கு நன்றி.
என்னை தொடர அழைத்தமைக்கு நன்றி.கூடிய விரைவில் எழுதுகிறேன்
பொறாமையாய் இருக்கிறது உங்களைப் பார்த்து.
பதிலளிநீக்குஅனைத்தும் முத்தானவை.
பதிலளிநீக்குஎளிமையான பதிலகள் - பெரும்பாலும்.
பதிலளிநீக்குகூட்டுக்குடும்பத்தில் வாழும் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நம்புகிறீர்களா?
அத்தனையும் தெளிவான உறுதியான கருத்துக்கள்.
பதிலளிநீக்குஅருமை ஸார்! அற்புதம்! மூன்று முடிச்சுகளில் உங்கள் முகம் நன்றாகத் தெரிகிறது...
பதிலளிநீக்குஅன்பின் வை.கோ - தெளிவான பதில்கள் - இவ்வயதிலும் - சற்றே தெரிந்த மூன்றினை மேன் மேலும் கற்று - அத்துறையிலும் பெயர் பெற விரும்புவது - நன்று நன்று. ( 11 ) . முதல் கேள்விக்கான பதில் ஆத்மார்த்தமான சிந்தனையில் - நாற்பதாண்டு கால இல்வாழ்வில் - இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த பதில். மிக்க மகிழ்ச்சி. ஏழாவது கேள்வி வாசித்து யோசித்துப் பதிவு செய்ய விருப்பமா ? நன்று - ராமல்க்ஷ்மியின் மறுமொழியினையும் வழி மொழிகிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குwow!!!!very very excellent your knots.
பதிலளிநீக்குcongratulation"
i have a internet problem now.
so !i couldn't daily your said pls.
மூன்று முடிச்சு.... முடிச்சே இல்லை உங்கள் பதில்களில்.... அத்தனையும் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. சுவையான பதில்கள்.
பதிலளிநீக்குஎன் துணைவியையும் தொடர அழைத்தமைக்கு மிக்க நன்றி.
இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை தந்து, அரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அருமை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்குஇண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன் vgk
அனைத்துமே சுவாரசியமான பதில்கள் சார்.
பதிலளிநீக்குதாமதமாய் பின்னூட்டமிடுவதற்கு வருந்துகிறேன்.
நல்ல கேள்விகளும் மிகவும் அழகான பதில்களும் கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குதொடர் பதிவு எழுத உங்களை அழைக்க பல பதிவர்கள் வரிசையில் வந்துகிட்டு இருக்காங்க
பதிலளிநீக்குமுத்தான் மூன்று கேள்விகளும், அதற்கு சத்தான் மூன்று பதில்களும் அருமை.
பதிலளிநீக்குரசித்து படித்தேன்.
நன்றி.
நல்ல கேள்விகள நச்சுனு பதில்கள் எல்லாமே நல்லாருக்குது
பதிலளிநீக்குமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் நகைச்சுவையான கதைகள, அருமையான ஓவியங்கள், அளவுக்கு அதிகமான நட்பு வட்டங்கள். மூன்றெழுத்துனு சொன்னதால இதுக்கு மேல சொல்ல முடியலை.
பதிலளிநீக்குஅருமை...பல என்னுடைய ரசனையுடன் ஒத்துப் போவது மகிழ்ச்சி
பதிலளிநீக்குஇரசித்தேன்!
பதிலளிநீக்குசுவாரசியமான பதிவு. உங்கள் விருப்பங்கள் ரசனைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன. முதலில் மனைவிக்கு மரியாதை...சூப்பர்.. அவங்க படிச்சாங்களா
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 11:53 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சுவாரசியமான பதிவு. உங்கள் விருப்பங்கள் ரசனைகள் மிகவும் சிறப்பாக இருக்கின்றன.//
சந்தோஷம். :)
//முதலில் மனைவிக்கு மரியாதை...சூப்பர்.. அவங்க படிச்சாங்களா//
இல்லை. என் பதிவுகள் எதையுமே அவங்க படிப்பது இல்லை. நானும் படிக்கச்சொல்லி வற்புருத்துவதும் இல்லை.
தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.