”மனம் கவர்ந்த முன்னுரைகள்” என்ற தலைப்பில் திருமதி மனோ சுவாமிநாதன் அவர்கள் எழுதியிருந்தார்கள்.
அதன் தொடர் பதிவு ஒன்றை வெளியிடுமாறு எனக்கு அன்புக்கட்டளை இட்டிருந்தார்கள்.
இந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:
1. திரு.வை.கோபாலகிருஷ்ணன்[ வை.கோபாலகிருஷ்ணன்]
Reference:
இந்த தொடர்பதிவில் பங்கேற்குமாறு நான் அன்புடன் அழைக்கும் தோழமைகள்:
1. திரு.வை.கோபாலகிருஷ்ணன்[ வை.கோபாலகிருஷ்ணன்]
2. திரு.மோகன்ஜி [வானவில் மனிதன்]
3. திருமதி. நிலாமகள் [பறத்தல் பறத்தல் நிமித்தம்]
4. திருமதி.சாகம்பரி [மகிழம்பூச்சரம்]
4. திருமதி.சாகம்பரி [மகிழம்பூச்சரம்]
==========================================================
முன்னுரைக்கு முதலில் ஓர் முன்னுரை:
என் வீட்டைச்சுற்றி நடந்து போகும் தூரத்தில் மிகப்பெரியதும் இல்லாமல் மிகச்சிறியதும் இல்லாமல் ஒரு சிவாலயம் உள்ளது. ஸ்ரீ ஆனந்தவல்லி ஸமேத ஸ்ரீ நாகநாதர் கோயில் என்று பெயர். இதில் பிள்ளையார், முருகன், ஸ்வாமி, அம்பாள், அறுபத்துமூன்று நாயன்மார்களின் திரு உருவச்சிலைகள் அவர்களின் பெயர்கள்+பிறந்த நக்ஷத்திரங்கள், குருபகவான் தக்ஷிணாமூர்த்தி சந்நதி, மயில் மீது வள்ளி தேவசேனாவுடன் அமர்ந்திருக்கும் சுப்ரமணியஸ்வாமி சந்நதி, கெஜலக்ஷ்மி சந்நதி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ சண்டிகேஸ்வரர், நவக்கிரஹங்களை சுற்றி வர பாதை, ஸ்ரீ சூர்யன், ஸ்ரீ சந்திரன், ஸ்ரீ ஹனுமன் இவர்களுக்கும் தனி சந்நதி, மூலவர் உற்சவர் என அனைத்தும் உண்டு. பிரதோஷ நாட்களில் ஸ்வாமி புறப்பாடு, நவராத்திரி ஒன்பது நாட்களும் விசேஷ அலங்காரங்களில் அம்பாள் புறப்பாடு என்று அனைத்து விசேஷ நாட்களிலிலும் வெகு விமரிசையாக எல்லாமுமே நடைபெறும்.
அதுபோலவே வீட்டின் அருகிலேயே ஒரு மகமாயீ (மாரியம்மன்) கோயில், ஒரு பெருமாள் கோயில், ஒரு கருப்பர் கோயில், ஒரு மிகப்பெரிய நந்தி கோயில், ஹனுமார் கோயில் தவிர ஆங்காங்கே பல பிள்ளையார் கோயில்கள் என அனைத்தும் உண்டு.
என் வீட்டின் பூஜை அறையில் உள்ள உம்மாச்சிகளை வணங்கினாலோ, இந்த என் வீட்டின் அருகே உள்ள உம்மாச்சி கோயில்களுக்கு சென்றாலோ அந்த உம்மாச்சிகளிடமிருந்து எனக்கு ஒரு நல்ல வரவேற்பும், திவ்ய ஸ்பெஷல் தரிஸனமும் தரப்படுகிறது. மன நிம்மதி தருவதாக ஒரு சந்தோஷம் ஏற்படுகிறது.இந்தக்கோயில்களில் அலங்காரங்கள், அபிஷேகங்கள் முதலியனவற்றை நிம்மதியாக எந்தவித அவசரமோ துரத்தலோ இன்றி வெகு நேரம் கண்டு களிக்க முடிகிறது.
மிகவும் பிரபலமான பணக்கார கோயில்களுக்கு சென்று வந்தால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட, இந்த நமக்கு அருகிலேயே உள்ள கோயில்களில் அதிக சந்தோஷமும், அதிக மன நிம்மதியும் கிடைப்பதாக எனக்கு ஓர் எண்ணம் ஏற்படுகிறது. இந்த உம்மாச்சிகளுடன் அன்றாடம் பார்த்துப்பழகி, மனமுருகி வேண்டி, உரிமையெடுத்துக் கொண்டு ஒருவித அந்நியோன்யத்தை ஏற்படுத்திக்கொண்டு விட்டதே இதற்கு முக்கியக் காரணமாகும்.
அதுபோலவே மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்தவித அறிமுகமோ,விளம்பரமோ, பிரபலப்படுத்த வேண்டிய அவசியமோ தேவைப்படாது. அது தானாகவே வாசகர்களை சுலபமாகச் சென்றடைந்து விடுவதுண்டு. அவர்களெல்லாம் திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி உம்மாச்சிகள் போல ஏற்கனவே பிரஸித்தி பெற்று விட்டவர்கள். பக்தர் கூட்டங்கள் போல வாசகர் கூட்டங்கள் இவர்களுக்கு மிக அதிகம்.
எங்கள் திருச்சி மாவட்டத்தில் எவ்வளவோ பிரபல எழுத்தாளர்கள் இருந்துள்ளனர். இப்போதும் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையுமே எனக்குத்தெரியும் என்றோ அறிமுகம் உண்டு என்றோ சொல்லவதற்கில்லை. ஓரளவுக்கு ஒரு சிலரை மட்டும் அறிந்து தெரிந்து வைத்துள்ள எனக்கு, அவர்களில் ஒரு சிலரின் சமீபத்திய நூல் வெளியீடுகள் மூலம், அவர்களின் எழுத்துத்திறமையை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அதைப்பற்றி இந்தப்பதிவினில் நான் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
சிறுகதைத்தொகுப்பு நூல்கள்
முதலில் நம் வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் மிகவும் பழக்கமான திரு. ரிஷபன் அவர்கள் இதுவரை வெளியிட்டுள்ள பல சிறுகதைத்தொகுப்பு நூலகளில் நான் இதுவரை படிக்க வாய்ப்பு கிடைத்தவை கீழ்க்கண்ட ஏழு மட்டுமே:
”கதையின் தலைப்போ, ஆசிரியர் பெயரோ மறந்து போனாலுங் கூட, முழுக் கதை வரிகளும் நினைவில் வராமல் போனாலும் ஏதேனும் ஒரு நிகழ்வை, வரியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதே ஒரு நல்ல சிறுகதையின் அடையாளம்” என்கிறார் திரு ரிஷபன் தன் சிறுகதைத்தொகுப்பான “மனிதம்” முன்னுரையில்.
”சிறுகதைக்கான கவன ஈர்ப்புத் தீர்மானம் நிறைவேற்ற யாராவது முனைந்தால் என் போன்ற சிறுகதை ஆர்வலர்கள் துணை நிச்சயம் இருக்கும்” என்கிறார், தன் சிறுகதைத்தொகுப்பான “சூர்யா” வின் முன்னுரையில்.
”காலமெனும் ஜீவ நதியில் பெரும் மரக்கட்டைகளும் கூடவே சிறுசிறு துண்டுகளும் போகும்.
இலக்கிய நதியிலும் குறு நாவல், சிறுகதைகள் என பலப்பல ரகங்கள்.
எழுதக்கடினமானது “சிறுகதை வடிவம்” என்பார்கள். சொல்ல வந்த கருத்தை ‘நச்’ சென்று மனதில் பதியும்படி சொல்லி விட்டால் அதுவே படைப்பின் வெற்றி. அந்தக் கருத்தும் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமைந்தால் அது எழுத்தின் வெற்றி” என்கிறார், ”நாளை வரும்” என்ற தன் சிறுகதைத்தொகுப்பு நூலில்.
”கண்டேன் சீதையை” - இதை மிகச்சிறிய கதைக்கு உதாரணமாகச் சொல்லலாம். இரண்டே வார்த்தைகளில் நிறையத் தகவல்களைச் சொல்லிவிடுகிறது” என்கிறார் “பூஞ்சிறகு” என்ற தன் சிறுகதைத்தொகுப்பு நூலில்.
இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற இவரின் “ஏன்” என்ற சிறுகதை ப்ரெஞ்சு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழின் எல்லா வார, மாத இதழ்களிலும் இவரின் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 12 குறுநாவல்களும் பிரசுரமாகியுள்ளன.
”ஆயிரம் வாசல் இதயம்; அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்” என்று கவிஞர் பாடினார்.
உதயமாகிற எண்ணங்கள் நம் வாழ்வை வளப்படுத்துவதாய் அமைய நூல் வாசிப்பு அவசியம்” என்கிறார், கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உள்ள இவர், தன் “சிந்தனைச்சிறகுகள்” என்ற நூலில்.
22 எழுத்தாள நண்பர்களிடமிருந்து அவரவர்களுடைய மிகச்சிறந்த படைப்பு ஒன்றினைப்பெற்று, தொகுப்பாக வெளியிட்டு “பிரியத்தின் சிறகுகள்” என்று மிகப்பொருத்தமான தலைப்புக்கொடுத்துள்ளார், திரு ரிஷபன்.
நினைத்துப்பாருங்கள், இது என்ன அவ்வளவு சுலபமான காரியமா என்று!
ஒவ்வொரு கதையும் படிக்கும்போது .... அடடா ..... அதை படித்து அனுபவித்தால் மட்டுமே புரியும். என்னால் இங்கு அவற்றை எழுத்தில் எடுத்துரைப்பது மிகவும் கடினம்.
பிரியத்தின் சிறகுகளாக தங்களை மாற்றிக்கொண்டு உதவி, ஒத்துழைப்புக்கொடுத்துள்ள எழுத்தாள நண்பர்கள்:
(1) பா. உஷாராணி (2) பட்டுக்கோட்டை ராஜா (3) ஜெயந்தி சங்கர் (4) மதுமிதா (5) ஸ்ரீவத்ஸன் (6) மணிகா (7) பி.ஆர்.பார்த்த் சாரதி (8) தரன் (9) திருமயம் பெ. பாண்டியன் (10) நந்தன் (11) சுப்ரமணியன் ரவிச்சந்திரன் (12) கிருஷ்ணா (13) வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் (14) நிலா (15) கே.பி.ஜனார்த்தனன் (16) மானா. பாஸ்கர் (17) அஸ்வினி (18) ரஜினி பெத்துராஜா (19) சோம. வள்ளியப்பன் (20) ஹரணி (21) மதுமிதா (சந்தான கிருஷ்ணன்) (22) ரிஷபன்.
”இத்தோழமைக் கூட்டுக்குள் பிரியத்தின் சிறகசைத்து, உள் வர வேண்டிய நண்பர்கள் இன்னும் இருக்கிறார்கள். அடுத்த தொகுப்பில் அவர்களின் சிறகசைப்புகள்......” என்று முடிக்கப்பட்டுள்ளது இதன் முன்னுரை.
-o-o-o-o-o-o-o-
திரு. மழபாடி ராஜாராம் அவர்கள் திருச்சியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர். ”எழுத்தில் மனித உள்ளத்தை அப்படியே வடித்துக்காட்டும் சக்திமிக்க எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் இவர். வாசகர்களின் உளவியல் பாங்கை துல்லியமாக அறிந்து கொண்டு சிறுகதை இலக்கிய உலகில் தமக்கென தனி இடத்தைப்பெற்றவர்” என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மார்ச் 1991 இல் வெளியிட்டுள்ள இந்த இவரின் ”இமயங்கள் சரிவதில்லை” என்ற சிறுகதைத்தொகுப்பு நூலில்.
-o-o-o-o-o-o-
திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த திரு. இந்திரஜித் அவர்களால் டிஸம்பர் 2009 இல் வெளியிடப்பட்டுள்ள சிறுகதைத்தொகுப்பு நூல் “செவலக்காளை”.
இலக்கியத் திறனாய்வாளரான திருச்சி திரு. வீ.ந.சோமசுந்தரம் தன் அணிந்துரையில் ”ஒவ்வொரு கதையின் முடிவும் அதிர்ச்சி அளிப்பன, திகைக்க வைப்பன, வியக்க வைப்பன; இச்சிறுகதைகள் மனித வாழ்வின் உன்னதங்களை தொட்டுச்செல்கின்றன” என்று கூறியுள்ளார்கள்.
-o-o-o-o-o-o-o-
”அவள் பெயர் மலர் தான்; என்றாலும் அந்த மலரை சிதைத்த வெறியர்களை கணக்கு முடிக்கும் தீரமும், உரிய நேரத்தில் கொடூரத் தன்மையைக் கைவிட்டு, சரணடைந்து சிறை சென்றவளின் வீர தீர வரலாற்று இலக்கியம்” என்கிறார் தன் அணிந்துரையில் சங்கொலி சோலை-இருசன் அவர்கள்.
“சுதந்திரப் பொன்விழா ஆண்டின் நினைவாக பாரத நாட்டுச் சிப்பாய்களின் முதல் சுதந்திர எழுச்சி “மோகனா” கதையில் சொல்லப்பட்டுள்ளதாகச் சொல்கிறார், அணிந்துரை எழுதியுள்ள திரு. மா.சொக்கையன் அவர்கள். வீர நங்கைகள் பற்றிய வரலாற்றைச் சொல்லும் சிறுகதைத்தொகுப்பு .
ஆற்று நீரும் வேற்று நீரும் இல்லாவிட்டால் என்ன? ஊற்று நீரால் விவசாயம் செய்வோம் என்று கூறியவாறே சாதித்துக்காட்டியவரின் கதை. நம்பிக்கை வைத்து நல்லபடி உழைத்தால் நல்லதே நடக்கும் என்பதைப் பொருந்தக் காட்டுவது “பொன் கொழிக்கும் மண்” என்கிறார் அணிந்துரை எழுதியுள்ள திரு. அயிலை தமிழ்ச்செழியன் அவர்கள்.
தஞ்சை மாவட்டம் அம்மன்பேட்டையில் பிறந்த திரு. ந. விவேகானந்தன் அவர்கள் திருச்சியில் வாழ்பவர். மூத்த எழுத்தாளர். பல சிறுகதைத் தொகுப்பு நூல்கள் எழுதி, பல்வேறு பரிசுகளும் பாராட்டுக்களும் பெற்ற்வர்.
சிறுகதைகள் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமல்ல. சமுதாயத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்று கொள்கையாகக்கொண்டு, சிறுகதைகள் எழுதுவதாகச் சொல்கிறார், திரு. ந. விவேகானந்தன் அவர்கள்.
-o-o-o-o-o-o-o-o-
கட்டுரைத்தொகுப்பு நூல்கள்
சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், புரட்சிக்கருத்துக்கள் கொண்டவர் மற்றும் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கத்தலைவர் என்ற பலமுகங்களைக் கொண்டவர் திரு. வை. ஜவஹர் ஆறுமுகம் அவர்கள்.
”ஆறாவது அறிவு என்ற இந்த நூலிலும் எனது எழுத்து வீச்சு, நடையழகு சொற்பிரயோகம் வெகு சாதாரணமாகவே இருக்கும். வாசகர்களுக்குப்புரியாத மொழியில் ஞானத்தை வெளிப்படுத்தும் அறிவு ஜீவிகளின் மேதாவித்தனங்கள் எனக்குக் கைவராத கலை” என்கிறார் தன் நுழைவாயில் பகுதியில் திரு. வை. ஜவஹர் ஆறுமுகம் அவர்கள்.
”ஆனால், ஆறாவது அறிவு இருந்து என்ன பயன்? கையில் கிடைத்த இந்தத் தாம்புக்கயிற்றின் மூலம் கிணற்றிலிருந்து நீர் தூக்குவதை விட்டு, மனிதன் தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான்!
இயற்கையை அழிக்கவும், மரபுகளை மீறவும் நமது ஆறாவது அறிவு பயன்படலாமா? மற்ற உயிரினங்கள் இயற்கைக்குக் கட்டுப்பட்டு வாழுகின்றன. நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த வரம்பு மீறிய சிந்தனைகளுக்கும் நமது ஆறாவது அறிவுமே காரணம் என்று தோன்றுகிறது.” என்கிறார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருவரங்கம் பிரேமா நந்தகுமார் அவர்கள்.
”பெண் என்னும் தேவ ரகசியம்” என்ற திரு. வை. ஜவஹர் ஆறுமுகத்தின் சமீபத்திய கட்டுரை நூல் வெளியீட்டுக்கு, சமூகத்தில் போராடி, இலக்கிய உலகில் தலை நிமிர்ந்து நிற்கும் பெண்மணியான திருமதி. சரசுவதி இராமநாதன் தனது அணிந்துரையில் எழுதியுள்ளவற்றில் சில வரிகள்:
“அன்புச் சகோதரர், சமுதாய ஆர்வலர், அனுபவம் நிறைந்த பத்திரிகையாளர் ஜவஹர் ஆறுமுகம் எழுதியுள்ள “தேவ ரகசியம்” கையெழுத்துப்பிரதியை ஊன்றிப்படித்தேன்.
வாக்கு மூலத்தில் அவர்,
பெண் மென்மையானவளா, கடினமானவளா?
குளிர்ந்த நீரா, காட்டுத்தீயா?
உணர்ச்சிவசப்படுகிறவளா, அழுத்தமானவளா?
அறிவாளியா, அப்பாவியா?
தலைமை ஏற்பவளா, பின்பற்றுகிறவளா?
ஆக்குகிறவளா, அழிப்பவளா?
இன்பத்தைத்தருபவளா, துன்பத்திற்குக்காரணமானவளா?
என்று வினவி,
“இவை எல்லாமுமாக இருப்பவளே பெண்”
என்று முடித்திருப்பது மிகச்சரியான கருத்தோட்டாம்”
என்று சொல்லுகிறார்.
மேலும்,
“தாயிடமும் மனைவியிடமும் தோற்றுப்போவதில் இகழ்ச்சி ஏதுமில்லை”, ”தகுதியுள்ள பெண்களுக்கு உரிமைகள் தானாகவே வந்து சேரும்”,
”ஆணும் பெண்ணும் இணக்கமாக வாழும் இந்த பூமியும், நமது இல்லமும் நிகரில்லாத சொர்க்கமாக இருக்கும்”
என்பவை ஆசிரியரின் முத்தாய்ப்பான வரிகள்” என்றும் குறிப்பிடுகிறார்.
-o-o-o-o-o-o-o-o-o-o-
கவிதைத்தொகுப்பு நூல்கள்
”இந்தியாவே உன்னை சுவாசிக்கிறேன்”
ஆசிரியர்: திருச்சி பா. ஸ்ரீராம்
“உங்களிடம் நான் விரும்புவது ஒன்று தான். இந்த நூல் அல்ல! எந்த நூலாயினும் வாங்கிப் படியுங்கள். தயவுசெய்து குப்பையில் இட்டு விடாதீர்கள்! நூல்களே இந்த உலகின் வாழ்வு! வயது வரம்பு இல்லாமல் நாம் வாழ்கிறோம். நாம் வாழ்வதற்குக் காரணமான நூல்கள் மட்டும் என்ன பாவம் செய்தது? ஏன் இந்த தண்டனை? இனியேனும் விடுக” என்கிறார் நூலாசிரியர் திரு. ஸ்ரீராம்.
-o-o-o-o-o-o-
நெத்திச்சுட்டி - கவிதை நூல்
ஆசிரியர்: கவிஞர் அ. கெளதமன், திருச்சி
ஒரு சிறுபெண் விழாக்காலத்தில் தன் நெற்றியில் அணிந்து மகிழும் நெற்றிச் சூடியைப்போல இந்தக் கவிதைத் தொகுப்பு அமைந்துள்ளதாகச் சொல்லுகிறார் திருச்சி கவிஞர் அ. கெளதமன் அவர்கள்.
“ஒவ்வொரு பாடலுக்கும் உரை எழுதத்தூண்டுகிற உயிரோட்டமான உணர்ச்சி மிகு வரிகள்; சிந்தனையைத்தூண்டுகிற செங்கரும்புச்சுவை வரிகள்; மனிதனை மாமனிதனாய் உயர வைக்கும் நன்மொழிகள்” என்கிறார் அணிந்துரை எழுதியுள்ள சென்னை கார்முகிலோன் அவர்கள்.
-o-o-o-o-o-o-o-
புலன் விழிப்பு - கவிதை நூல்
ஆசிரியர்: திருச்சி பா. சேது மாதவன் அவர்கள்
திரு. வெ. இறையன்பு மற்றும் திரு. சுஜாதா போன்ற பிரபலங்கள்
பாராட்டியுள்ள இவரின் ஒரே ஒரு கவிதையை நீங்களும் படியுங்களேன்.
திண்ணையில் உள்ள அப்பா
வீட்டிற்குள் வந்தார்
புகைப்படமாய்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல உள்ளதல்லவா!
-o-o-o-o-o-o-
பாறையின் கதவுகள் - கவிதை நூல்
ஆசிரியர்: திருச்சி கொள்ளிடம் காமராஜ்
இவரின் ஒரு கவிதை:
வெட்டவெட்ட
துளிர்த்துக்கொண்டேயிருக்கிறது
காதல் மரம்
திரையிசைக்கவிஞர் வசந்த ராஜா சொல்லுகிறார்:
இவரின் சிறந்த கவிதைகளுள் என்னைத்திறந்த ஓர் கவிதை,
இவர் மீட்டிய
“வீணை”
இன்றும் அது என் நரம்புகளில்
அதிர்ந்து கொண்டே இருக்கிறது!
நான் தீராத போதையுடன் திரிகிறேன் கிறுகிறுத்து
-o-o-o-o-o-o-o-
”அம்மா .... உன் உலகம்”
கவிதை நூல்
ஆசிரியர்: திருமதி தனலெட்சுமி பாஸ்கரன் அவர்கள்
நெய்வேலி பாரதிக்குமார் தனது அணிந்துரையில்
”என்னுடைய அகராதியில் அற்புதம் என்ற சொல்லுக்கு நேராக
தனலட்சுமி பாஸ்கரன்” என்று கூறியுள்ளார்.
இவருடைய பெரும்பாலான கவிதைகள் நல்ல தரம் வாய்ந்தவைகளாகவே உள்ளன. இவரின் இந்தக்கவிதை நூலைப்பற்றி ஏற்கனவே நம் ஆரண்ய நிவாஸ் இராமமூர்த்தி அவர்கள் தனது பதிவில் வெளியிட்டிருந்தார். அதையும், அதற்கு நான் கொடுத்திருந்த பின்னூட்டத்தையும் தயவுசெய்து படித்துப்பார்த்தால், உங்களுக்கே இவரின் சிறப்புகள் பற்றித் தெரியவரும்.
-o-o-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-o-o-
//“உங்களிடம் நான் விரும்புவது ஒன்று தான். இந்த நூல் அல்ல! எந்த நூலாயினும் வாங்கிப் படியுங்கள். தயவுசெய்து குப்பையில் இட்டு விடாதீர்கள்! நூல்களே இந்த உலகின் வாழ்வு! //
பதிலளிநீக்குநல்ல புத்தகத்தை காட்டிலும் நம்பிக்கையுள்ள நண்பன் இவ்வுலகில் இல்லை.....
"முன்னுரை என்னும் முகத்திரை" - முக்கிய முத்திரை
”ஆயிரம் வாசல் இதயம்; அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்”//
பதிலளிநீக்குஅருமையான முன்னுரைத் தொகுப்புகளுக்குப் பாராட்டுக்கள்.
”பெண் என்னும் தேவ ரகசியம்” நூலுக்கு சரசுவதி இராமநாதன் தனது அணிந்துரையில் எழுதியுள்ளவற்றில் சில வரிகள்:
பதிலளிநீக்குமனம் நிறைந்தது.
முன்னுரை என்னும் முகத்திரை"
பதிலளிநீக்குமுத்திரை பதித்த பகிர்வு. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இரசனையான பதிவு. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுன்னுரை பற்றிய
பதிலளிநீக்குமுகவுரை அமர்க்களம் அய்யா
முன்னுரை என்னும்
முதலுரையை
முத்துரையாக
பதித்துரைத்தமைக்கு
பணிவான நன்றி
இரசனையான பதிவு.
பதிலளிநீக்குமுன்னுரைக்கு முன்னுரை பிரமாதம்.
பதிலளிநீக்குநீங்கள் குறிப்பிட்டுள்ள புத்தகங்களை நான் வாங்குவதற்க்காக தயாரித்து வைத்துள்ள பட்டியலில் சேர்த்துக்கொண்டு விட்டேன்.கூடிய விறைவில் வாங்கி படித்துவிடுவேன். நன்றி.
முன்னுரை என்னும் முகத்திரை
பதிலளிநீக்குமுறையாய் வந்த அகவுரை
பொன்னெனப் பொலியும் தெளிவுரை
போற்றியே தந்தேன் என்னுரை
புலவர் சா இராமாநுசம்
முன்னுரை என்னும் முகத்திரை"
பதிலளிநீக்குதங்களின் 111 வது பதிவு. வாழ்த்துக்கள்.
நூல்களின் முன்னுரைக்கு முன் நீங்கள்
பதிலளிநீக்குகொடுத்திருந்த முன்னுரை அற்புதம்
அந்த அந்த காலனியில் உள்ள கோவில்களை
அப்பகுதி மக்களே சிரத்தையுடன் பார்க்காவிடில்
யார்தான் பார்ப்பார்கள்
விளக்கமும் அறிமுகப் படுத்திய விதமும்
புதுமையாகவும் படிக்கத் தூண்டும்படியாகவும் இருந்தது
நல்ல பதிவு வாழ்த்துக்கள்
திருச்சி வாழ் எழுத்தாளர்களுக்கு தங்களின் வித்தியாசமான முன்னுரைகள் அன்பான சமர்ப்பணங்களாய் மனதிற்கு நிறைவைத் தந்தன.
பதிலளிநீக்குஎழுதக்கடினமானது “சிறுகதை வடிவம்” என்பார்கள். சொல்ல வந்த கருத்தை ‘நச்’ சென்று மனதில் பதியும்படி சொல்லி விட்டால் அதுவே படைப்பின் வெற்றி. அந்தக் கருத்தும் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமைந்தால் அது எழுத்தின் வெற்றி” என்ற திரு.ரிஷபனின் கருத்து அருமையானதொன்று! முன்பெல்லாம் சிறுகதைகள் வாழ்க்கைக்கு நல்லனவற்றைச் சொல்லிக்கொடுப்பதாகவே அமைந்தன!
”ஆனால், ஆறாவது அறிவு இருந்து என்ன பயன்? கையில் கிடைத்த இந்தத் தாம்புக்கயிற்றின் மூலம் கிணற்றிலிருந்து நீர் தூக்குவதை விட்டு, மனிதன் தூக்குப்போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொள்கிறான்! இயற்கையை அழிக்கவும், மரபுகளை மீறவும் நமது ஆறாவது அறிவு பயன்படலாமா?"
இதுவும்கூட அற்புதமான கருத்து. பெண்மையைப்பற்றிய திரு,ஜவஹர் ஆறுமுகத்தின் மதிப்பீடும் அழகு!
வித்தியாசமான முன்னுரைகள் தொகுத்து வழங்கியதற்கு இனிய நன்றி!!
நல்ல அறிமுகங்கள். உங்களையும் ரிஷபனையும் தெரியும் எங்களுக்கு! மற்றவர்கள் புதியவர்கள். ஸ்ரீராம், அதிலும் பா. ஸ்ரீராம் என்ற பெயரும் அடுத்ததுவே கவுதமன் என்ற பெயரும் 'எங்களுடன்' ஒரு சொந்த உணர்வை ஏற்படுத்தியது!
பதிலளிநீக்குசிறுகதை தொகுப்புகளை நிறையவே ப்டிக்கிறீர்களென்று நன்றாகத் தெரிகிறது. படித்து அனுபவித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். வலையில் வருவது தவிர அண்மைக் காலமாய் சிறுகதை தொகுப்பெல்லாம் படிக்கவில்லை. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு//என் வீட்டின் பூஜை அறையில் உள்ள உம்மாச்சிகளை வணங்கினாலோ, இந்த என் வீட்டின் அருகே உள்ள உம்மாச்சி கோயில்களுக்கு சென்றாலோ அந்த உம்மாச்சிகளிடமிருந்து எனக்கு ஒரு நல்ல வரவேற்பும், திவ்ய ஸ்பெஷல் தரிஸனமும் தரப்படுகிறது.//
பதிலளிநீக்குஆமாம்! அடிக்கடி சந்திப்பதால், ஆண்டவனுக்கும் நமக்கும் ஒரு விதமான அந்நியோன்னியம் ஏற்பட்டு விடுகிறது. நான் கூட என் அலுவலகம் உள்ள தெருவில் அமைந்துள்ள இஷ்டசித்தி விநாயகரை ’வாய்யா, போய்யா,’ என்று கோபத்தில் கடிந்து கொள்வதுண்டு. :-)
//மிகவும் பிரபலமான பணக்கார கோயில்களுக்கு சென்று வந்தால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட, இந்த நமக்கு அருகிலேயே உள்ள கோயில்களில் அதிக சந்தோஷமும், அதிக மன நிம்மதியும் கிடைப்பதாக எனக்கு ஓர் எண்ணம் ஏற்படுகிறது.//
இதுவும் உண்மை. நான் பிரசித்தி வாய்ந்த கோவில்களுக்குப் போவதை நிறுத்தியே விட்டேன். உதாரணம், சபரிமலை, திருப்பதி......
திரு.ரிஷபன் அவர்களது முன்னுரையில், சுருக்கமாகச் சிறுகதைகள் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிற நுணுக்கங்கள் உன்னிப்பாகக் கவனித்துப் பின்பற்றத்தக்கவை. அதை, கனகச்சிதமாக இங்கே பொருத்தமாக எடுத்துப் போட்டிருக்கிற உங்களுக்கு மிக்க நன்றி!
நல்ல அலசல். அருமையான இடுகை!
திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
பதிலளிநீக்கு"முன்னுரை என்னும் முகத்திரை" -கலக்கல்..வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குமுத்திரை பதித்த முன்னுரைகள்...அருமை
பதிலளிநீக்குதமிழ்வாசியில் இன்று:
அட்ரா சக்க சி.பி யின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - இரண்டாம் பாகம்!
உங்கள் முன்னுரையில் குறிப்பிட்ட திருச்சி நந்தி கோயில் தெருவிலும் பர்மாபஜார் மாரியம்மன் கோயில் பக்கமும், செயின்ட் ஜோசப்பில் படித்த 3 வருடமும், பின்னாளில் இலால்குடி காட்டூரில் வசித்த 14 வருடமும் கணக்கின்றி சுற்றியிருக்கிறேன். மகிழ்ச்சியாக இருந்தது.
பதிலளிநீக்குரிசபன் மற்றும் பலரின் புத்தகங்களின் முன்னுரை பற்றிய பதிவு அருமை.
///மிகவும் பிரபலமான பணக்கார கோயில்களுக்கு சென்று வந்தால் கிடைக்கும் சந்தோஷத்தைவிட, இந்த நமக்கு அருகிலேயே உள்ள கோயில்களில் அதிக சந்தோஷமும், அதிக மன நிம்மதியும் கிடைப்பதாக எனக்கு ஓர் எண்ணம் ஏற்படுகிறது./// உண்மை தான் ,அது மட்டுமல்லாது சாமிகள் எல்லாம் ஒன்று தானே.
பதிலளிநீக்குமூச்சு வாங்குகிறது..யப்பாடி!
பதிலளிநீக்குசுவையான தொகுப்பு ஐயா.
வாழ்வியல் அனுபவங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடியது வாசிப்பு அனுபவம் மட்டுமே..
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு..
யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்தகங்களையும் படித்து அதற்கு முன்னுரைகளையும் நச்சென்று தெளிவாக எழுத்து வைத்தமை அழகு..
பதிலளிநீக்குஅயரச் செய்கிறீர்கள் உமது உழைப்பால். :))
யப்பா.. அசாதாரணம்தான்.. கோபால் சார். இவ்வலவு புத்தகங்களையும் படித்து அதற்கு முன்னுரைகளையும் நச்சென்று தெளிவாக எழுத்து வைத்தமை அழகு..
பதிலளிநீக்குஅயரச் செய்கிறீர்கள் உமது உழைப்பால். :))
முன்னுரைக்கு எழுதிய முத்தான உரை. நன்றாக இருந்தது. :-)
பதிலளிநீக்குமுகத்திரையை விலக்கி அகத்திரையை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டீர்கள்.. உங்கள் அன்பு பரிமளிக்கிறது..
பதிலளிநீக்குபுத்தக அட்டைகளுடன் வித்தியாசமாய் இதிலும் உங்கள் தனித்துவத்தைக் காட்டி விட்டீர்கள்
நல்ல முகத்திரை உங்கள் முன்னுரை. அதிலும் மிகவும் சந்தோஷம் அளித்தது ரிஷபன் அவர்களின் சிறுகதை தொகுப்புகள் பற்றிய செய்தி. அடுத்த முறை தமிழகம் வரும்போது வாங்க வேண்டிய புத்தகங்களில் அவருடையது உண்டு.....
பதிலளிநீக்குநல்ல பகிர்வுக்கு நன்றி.
ரிஷபனுடைய இந்தப் பரிமாணம் இதுவரை அறியாதது. பதிப்பக விவரங்கள் கொடுத்திருந்தால் உபயோகமாக இருந்திருக்கும் என்றாலும், சென்னைப் பயணத்தில் தேடிப்பார்க்கப் போகிறேன். ரிஷபன் புத்தகங்கள் மூன்றில் 'சிறகு' வருகிறதே? பிடித்த சொல்லோ? ஒரு அவசர ரோர்ஷேக் பரிசோதனையில் இவர் ஒரு விடுதலை விரும்பி என்று படுகிறது.
பதிலளிநீக்குஅறிமுகத்துக்கு மிகவும் நன்றி கோபாலகிருஷ்ணன்.
முன்னுரை என்றால் புத்தகத்தைப் பற்றிய கருத்து இல்லையோ? (ஹிஹி.. நான் முன்னுரையே படிக்கறதில்லீங்க.. எத்தனை இழந்திருக்கிறேனோ தெரியாது). இந்தப் புத்தகங்களில் உங்களைக் கவர்ந்தவை/ஏற்க முடியாதவை என்று ஏதேனும் உண்டா?
தொகுப்பில் உங்கள் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள்.
அணிந்துரையும் முன்னுரையும் ஒன்று தானா? வேறுபாடு உண்டா?
பதிலளிநீக்குமலர் என்பது அவள் (நல்ல திரைக்கதைக்கான கரு போல இருக்கிறதே?), நெத்திச் சுட்டி (எத்தனை அற்புதமான பெயர்!) இரண்டும் படிக்கத் தூண்டுகின்றன.
//மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்தவித அறிமுகமோ,விளம்பரமோ, பிரபலப்படுத்த வேண்டிய அவசியமோ தேவைப்படாது. அது தானாகவே வாசகர்களை சுலபமாகச் சென்றடைந்து விடுவதுண்டு. அவர்களெல்லாம் திருவனந்தபுரம் மற்றும் திருப்பதி உம்மாச்சிகள் போல ஏற்கனவே பிரஸித்தி பெற்று விட்டவர்கள். பக்தர் கூட்டங்கள் போல வாசகர் கூட்டங்கள் இவர்களுக்கு மிக அதிகம்.//
பதிலளிநீக்குபிரபலமடையாத திருச்சி மாவட்ட எழுத்தாளர்களை நன்கு அறிமுகப்படுத்தியிருக்கீங்க ஐயா. பகிர்வுக்கு நன்றி.
இந்த என் பதிவுக்கு அன்புடன் வருகை புரிந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி, உற்சாகப்படுத்தியுள்ள என் அன்பு சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கிறேன்.
பதிலளிநீக்குஇண்ட்லியில் எனக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் vgk
சுய தம்பட்டம் சற்றுமில்லாத ரிஷபன் சாரை சரியானபடி கௌரவப் படுத்தியிருப்பதற்கு பாராட்டுகள். பதிவிற்கான உங்கள் முன்னுரையும் அழகு... ரசித்தேன்.
பதிலளிநீக்குவாருங்கள் திருமதி “நிலாமகள்” மேடம், வணக்கம்.
நீக்கு//சுய தம்பட்டம் சற்றுமில்லாத ரிஷபன் சார்//
சபாஷ் மேடம்!
மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
என் மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்
VGK
ரிஷபன் சாரின் புத்தகங்களை அடுத்த முறை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தோம்.
பதிலளிநீக்குமுன்னுரைகளை பற்றிய தொகுப்பு பிரமாதம் சார்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். அன்புடன் VGK
நீக்குரிஷபன் இவ்வளவு புத்தகங்களை வெளியிட்டிருக்கும் எழுத்தாளர் என்பது எனக்குத் தெரியாது. அவரின் வலைத்தளம் மூலம் தான் எனக்கு அவரைத் தெரியும். இந்த அறிமுகத்திற்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குதங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.
நீக்குஎன் அருமை நண்பரும், நலம் விரும்பியும், எழுத்துலகில் என் மானஸீக குருநாதருமான திரு. ரிஷபன் அவர்களைப்பற்றி, மேலும் சில பதிவுகளின் நான் குறிப்பிட்டுள்ளேன்.
இணைப்புகள் இதோ:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post.html ஐம்பதாவது பிரஸவம் [”மை டியர் ப்ளாக்கி” + குட்டிக்குழந்தை ”தாலி”] நகைச்சுவை அனுபவங்கள்.
http://gopu1949.blogspot.in/2011/12/3-of-3.html
தாயுமானவள் இறுதிப்பகுதியின் - இறுதியில்
அன்புடன்
VGK
புத்தகம் படிக்கும் பழக்கம் மறைந்து போனது வருத்தத்தை தூண்டுகிறது.
பதிலளிநீக்குஅப்பாடியோ இவ்வளவு புக்ஸா படிக்கிறீங்க. அதுதான் இவ்வளவு எழுத்து திறமை வந்திருக்கு.
பதிலளிநீக்கு//அதுபோலவே மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு எந்தவித அறிமுகமோ,விளம்பரமோ, பிரபலப்படுத்த வேண்டிய அவசியமோ தேவைப்படாது. அது தானாகவே வாசகர்களை சுலபமாகச் சென்றடைந்து விடுவதுண்டு. //
பதிலளிநீக்குஎன்னை மாதிரி கத்துக்குட்டி எழுத்தாளர்கள் என்ன செய்வது என்று சொல்லுங்களேன் அண்ணா.
அடடா! இதையெல்லாம் படிக்கும் போது எனக்கும்(!) என் சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் வெளியிட வேண்டும் என்ற ஆவல் பன் மடங்காகிறது.
மோதிரக் கையால் (உங்க கைதான் அண்ணா) சீக்கிரம் குட்டுப் பட வேண்டும் என்ற ஆசை அதிகமாயிட்டே இருக்கு.
நெறய நெறய பொஸ்தவம்லா படிப்பீங்க போல. அதாங்காட்டியும் சூப்பரா எளுத வருதுபோல
பதிலளிநீக்குநீங்கள் அறிந்த பல எழுத்தாளர் பெயர்களை மட்டும் இங்கே தெரிந்து கொள்ள முடிந்தது. அவர்களில் திரு. ரிஷபன் சார. திரு மழபாடி ராஜாராம். திரு. இந்திரஜித். திரு வீ. ந. சோமசுந்தரம். திரு மா . சொக்கய்யன். திரு. நா. விவேகானந்தன். . திரு. வை. ஜவகர் ஆறுமுகம்.. திருச்சி. திரு. பா. ஸ்ரீராம். கவிஞர். .அ. கௌதமன். திருச்சி .திரு. சேது மாதவன்.. இன்னும் பலரையும் அறிய தந்தீர்கள். நன்றி.
பதிலளிநீக்குஇவ்வளவு நூல்களா...நான் வெறும் 4 தான் இதுவரை வெளியிட்டிருக்கேன். இவிங்களுக்கு உங்களுக்கு முன்னால நான் அம்பேல்...
பதிலளிநீக்குஅற்புதம்! பல நூல்களின் அறிமுகம் புதுமை!
பதிலளிநீக்குபல நூல்களையும் பிரபல எழுத்தாளர்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குஸ்ரத்தா, ஸபுரி... January 11, 2017 at 1:05 PM
நீக்கு//பல நூல்களையும் பிரபல எழுத்தாளர்களையும் தெரிந்துகொள்ள முடிந்தது.//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.