என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 20 ஜூன், 2014

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது !


 ’அன்புள்ள ஆச்சி ’ 

திருமதி thirumathi bs sridhar அவர்கள்

வலைத்தளம்:


ஆச்சி ஆச்சி


அம்மாவின் நினைவில்


[இடமிருந்து வலம்]

1] ஆச்சியின் மூத்த பெண் அம்ருதா

2] ஆச்சியின் கணவர்

3] ஆச்சியின் இரண்டாவது குழந்தை யக்சிதாஸ்ரீ

4] அன்புள்ள ஆச்சி என்றழைக்கப்படும் பரமேஸ்வரி


ஆச்சி குடும்பத்தாருடன் அடியேன் 



ஹரியானாவில் இருக்கும் 
நம் அன்புக்குரிய பதிவர் ஆச்சி
அவரின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன்
இன்று 20.06.2014 வெள்ளிக்கிழமை திருச்சியில்
என் இல்லத்திற்கு அன்புடன் வருகை தந்து 
மிகவும் மகிழ்வித்தார்.


ஆச்சி தந்த அன்புப்பரிசு 


ஆச்சிக்கு அடியேன் தந்த நினைவு நூல்

எங்கெங்கும் ....
எப்போதும் ....
என்னோடு ....



வில்லினில் அம்பேற்றி குறிவைத்து தாக்கும்
ஆச்சியின் மூத்த குழந்தை அம்ருதா 


அன்புள்ள ஆச்சி,

குடும்பத்துடன் எங்கோ விழுப்புரத்திலிருந்து 
மதுரை செல்ல நினைத்த தாங்கள் 
என்னை சந்திப்பதற்காக மட்டுமே 
திருச்சியில் இறங்கி  வந்ததாகச் சொன்னதில் 
மிகவும் மகிழ்ந்தேன் / நெகிழ்ந்தேன்.


நம் சந்திப்பில் நாம் எவ்வளவு 
பெரிய சந்தோஷங்களைப் 
பகிர்ந்துகொள்ள முடிந்தது !

மிக்க நன்றிம்மா !!

வாழ்க ! வாழ்க!! வாழ்க !!!

பிரியமுள்ள கோபு 

63 கருத்துகள்:

  1. மகள் போலும் ஆச்சியின் மற்றும் குடும்பத்தினர் அன்பிலும், மழை தரும் ராகமாம் அம்ருதவர்ஷிணி பெயரைக்கொண்ட பேத்தியின் பாச 'மழை'யிலும் நனைந்த தங்களின் தற்போதைய திருஉருவத்தை காணக்கிடத்ததில் மகிழ்ச்சி! வலை சொந்தத்தின் பாச 'வலை'யில் நன்றாக மாட்டிக்கொண்டீர்களா? தொடரட்டும் இந்த மகிழ்ச்சிகள்!

    பதிலளிநீக்கு
  2. ஆச்சியையும் அவரது குடும்பத்தினரையும் தங்கள் இல்லத்தில் கண்டதில் மிகவும் மகிழ்ச்சி. சந்திப்பின் மகிழ்வு அனைவரது முகங்களிலும் பிரதிபலிக்கிறது. குழந்தைகளுக்கு என் ஆசிகள். சுடச்சுட படங்களோடு பதிவிட்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோபு சார்.

    பதிலளிநீக்கு
  3. தங்கள் முகத்தில் எவ்வளவு சந்தோசம் குதூகலிக்கின்றது ! வாழ்த்துக்கள் ஐயா அன்பின் வரவு கண்டு ஆனந்தக் கூத்தாடும் இவ்வுள்ளம் மகிழ்ந்திருக்கக் காரணமான வலைத்தள சொந்தங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  4. சந்திப்பில் பெரிய சந்தோஷங்களைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சி .. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. பதிவர்களைச் சந்திப்பது என்றோலே
    அன்று தீபாவளிதான்

    பதிலளிநீக்கு
  6. ஆச்சியின் தரிசனம் உங்கள் மூலம் காணக் கிடைத்தது சந்தோஷம்.... அவர்களின் பாலோவர்களில் நானும் ஒருவன்.. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. //கன்னியாகுமரி அம்மனின் மூக்குத்தி ஒளி கப்பலுக்கு வழிகாட்டி கரை சேர்த்தாற்போல கதை ஆசிரியரின் கிராமத்து முதியவரின் சமயோசிதமான நடவடிக்கைகள் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என உணரவைக்கின்றன..
    //
    அருமை! பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்குப் பாராட்டுகள்! தொடரட்டும் பரிசு மழை!

    பதிலளிநீக்கு
  8. பதிவர் சந்திப்பு மகிழ்வளிக்கும் விஷயம்தான். பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  9. பதிவர்களின் பாசமும் அன்புத் தொடர்பும் இத் தொடர்பின் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. தொடருட்டும் அன்பின் வலிமை. படங்கள் அழகான படங்களுடன் பதிவு அமைந்திருக்கின்றது

    பதிலளிநீக்கு
  10. ஆச்சியை அவர்கள் குடும்பத்தோடு சந்தித்தது குறித்து மகிழ்ச்சி. நான் அவர்களை 2012ல் தில்லியில் உலக புத்தக கண்காட்சியில் தான் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது இரண்டாம் குழந்தை வயிற்றில்....:)

    தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ADHI VENKAT June 21, 2014 at 1:09 PM

      //ஆச்சியை அவர்கள் குடும்பத்தோடு சந்தித்தது குறித்து
      மகிழ்ச்சி. நான் அவர்களை 2012ல் தில்லியில் உலக புத்தக
      கண்காட்சியில் தான் முதன்முதலில் சந்தித்தேன். அப்போது இரண்டாம் குழந்தை வயிற்றில்....:)

      தொடரட்டும் பதிவர் சந்திப்புகள்.//

      வாங்கோ, வணக்கம்.

      குறிப்பாக நம் ஆச்சி தங்களைப்பற்றி என்னிடம் விசாரித்தார்கள். இங்கு தான் [ஆதி] இருக்கிறார்களா என்றும் கேட்டார்கள்.

      “திருமதி ஆதி வெங்கட் அவர்களை சந்திக்க விருப்பமானால் சொல்லுங்கோ, நானே காரில் கூட்டிச்செல்கிறேன். அடுத்த அரை மணி நேரத்தில் அவர்களை ஸ்ரீரங்கத்தில் நேரில் சந்திக்கலாம்” என்றேன்.

      அதற்கு “வேண்டாம் சார், நாங்கள் இப்போது மதுரைக்குச் செல்ல வேண்டும். ஏதோ திருச்சி என்ற ஊர் வந்ததும் ஒரே மகிழ்ச்சியாகி உங்களைப்பார்க்கணும் போல ஒரு ஆசை ஏற்பட்டது. உடனே இறங்கி விட்டோம், என்றார்கள்.

      நேற்று காலை விழுப்புரத்திலிருந்து மதுரைக்குச்செல்ல பஸ்ஸில் புறப்பட்டுள்ளனர். திருச்சி பஸ்தான் கிடைத்ததாம். நேராக மதுரை செல்லும் பஸ் கிடைக்கவில்லையாம். அதுவும் நன்மைக்கே என நினைத்துக்கொண்டார்களாம்.

      நடுவில் பெரம்பலூர் வந்ததும் எனக்கு ஃபோன் செய்தார்கள்.

      ”உங்களை சந்திக்க ஆவலாக உள்ளது. நேரில் வந்தாலும்
      வருவேன்” என்று சொன்னார்கள். என்னால் நம்பவே
      முடியவில்லை.

      ஹரியானாவிலிருந்து அடிக்கடி ஃபோன் செய்து என்னுடன் தமாஷாக விளையாட்டாகப் பேசுவார்கள். அதுபோல ஏதோ விளையாடுகிறார்கள் என்று தான் முதலில் நான்
      நினைத்துக்கொண்டேன்.

      ”கட்டாயம் வாங்கோ, திருச்சி வந்ததும் எங்கு இருக்கிறீர்கள் எனச்சொல்லுங்கோ, நானே என் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன்” என்று சொன்னேன்.

      பிறகு 12 மணி சுமாருக்கு நான் ஃபோன் செய்து பேசினேன்.

      மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் இருப்பதாகவும்,
      உச்சிப்பிள்ளையாரைப்பார்த்து விட்டு, கீழே இறங்கி ஃபோன் செய்வதாகவும் சொன்னார்கள்.

      பாவம் ..... நல்ல வெயிலில் இரண்டு சின்னக் குழந்தைகளுடன் உச்சிப்பிள்ளையார் கோயிலுக்குச் சென்று வந்துள்ளார்கள்.

      பிறகு நான் ஃபோன் செய்து, தாயுமானவருக்கும், கீழே
      மாணிக்க விநாயகருக்கும் இடையே யானை கட்டியுள்ள
      இடம் அருகே ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கும். அங்கு வந்து
      நின்ற பின் ஃபோன் செய்யுங்கோ என்றேன்.

      அதன்படி ஃபோன் செய்தார்கள். உடனே ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு அங்குபோய் நான் அவர்களை என் வீட்டுக்குக் கூட்டி வரும்முன் ஆட்டோவை நேராக மதுரா ஹோட்டலில் நிறுத்தச்சொல்லி UNLIMITED FULL MEALS WITH CURD வாங்கி அவர்கள் எல்லோரையும் சாப்பிட வைத்தேன்.

      பிறகு என் வீட்டுக்கு அழைத்து வந்து A.C. ரூமில் ஜில்லென்று குழந்தைகளுடன் அமரச்சொல்லி, ஜூஸ் முதலியன கொடுத்து வழக்கம்போல உபசரித்தேன். நீண்ட நேரம் ஜாலியாகப் பலவிஷயங்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

      சமையல் கட்டில் நுழைந்த ஆச்சி இங்கு தான் அடை செய்து பதிவு வெளியிட்டீர்களா எனக்கேட்டார்கள். ஆமாம் என்று சொன்னதைவிட மிகப்பெரிய வேடிக்கை என்னவென்றால், நேற்று காலை டிபனும் எங்கள் வீட்டில் அடை தான். அதில் நிறைய அடைகள் மூடி வைக்கப்பட்டிருந்தன. அதில் கொஞ்சம் அவர்கள் டேஸ்ட் செய்யவும் எங்களால் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி.

      அப்போது தற்செயலாக என் வீட்டுக்கு என் பெரிய அக்காவும், அவளின் கடைசி பெண்ணும், [சிங்கப்பூரில் இருப்பவள் - இங்கு இப்போது லீவுக்கு வந்துள்ளவள்] அவளின் இரு பெண் குழந்தைகளும் வந்திருந்தனர். ஆச்சியின் குழந்தைகள் இருவர், சிங்கப்பூர் குழந்தைகள் இருவர் என வீடே மிகவும் கலகலப்பாக ஜகத்ஜோதியானது. வெள்ளிக்கிழமையில் நான்கு கன்யாப் பெண் குழந்தைகள் ;))))) எதிர்பாராத வருகை.

      பிறகு ஆச்சி குடும்பத்தினர் எங்களையும் என் பெரிய அக்கா அவர்களை விழுந்து நமஸ்கரித்து விட்டு புறப்பட ஆயத்தம் ஆகினர்.

      பிறகு நம் வாடிக்கையான ஆட்டோக்காரர் ஏழுமலையை வரவழைத்து, அவர்களை ஆட்டோவில் ஏறச்சொல்லி, ஆட்டோ ஏழுமலையிடம் ”இவர்களை ஜாக்கிரதையாக பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு என்னிடம் வந்து சொல்லிவிட்டு அதற்கான பணத்தை என்னிடம் வாங்கிக்கொள்” என்றேன். அவரும் அதுபோலவே செய்தார். கும்பல் இல்லாத பஸ்ஸில் பொறுப்பாக ஏற்றி விட்டு விட்டேன், சார் என்றார்.

      செளகர்யமாக மதுரை போய்ச் சேர்ந்து விட்டார்களா என ஆச்சியுடன் நான் பேசி அறிந்து கொண்டேன்.

      அன்புக்கும் பிரியத்துக்கும் அடையாளமான ஆச்சியை, இதுபோல சற்றும் எதிர்பாராமல், நேற்று நான் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
    2. ஆஹா.அன்பும் அருமையும் போட்டி போடுகின்றன.ஆச்சி அவர்களின் பதிவுகள் பார்த்ததில்லை. அவர்கள் முகத்தில் மலரும் அன்பைப் பார்த்தால் மிக அன்பு பெருகிறது. மிக நன்றி வை கோஜி.

      நீக்கு
  11. அன்பின் வை.கோ - வீட்டிற்கு வரும் பதிவர்களை உபசரித்து மகிழ்வதில் தங்களுக்கு ஈடு இணை கிடையாது - எங்களுக்குத் தெரியும். நாங்கள் தங்கள் உப்சரிப்பினை ஏற்று மகிழ்ந்தவர்கள். அனுபவித்தவர்கள் - ஆச்சியை - ஆட்டோவில் ஏற்றி - ஆட்டோ டிரைவரிடம் அவர்களைப் பேருந்தில் ஏற்றி அனுப்பி விட்டு ஆட்டோ சார்ஜினை தங்களிடம் வந்து வாங்கிக் கொள்ளச் செய்த செயல் நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  12. அஹா அடுத்த பஸ்ஸோ ட்ரெயினோ ஃப்ளைட்டோ பிடிச்சு நானும் ஹைதராபாத்திலிருந்து திருச்சிக்கு வரேன் கோபு சார்.

    படங்களில் பொங்குது பாசம்.. :)

    பதிலளிநீக்கு
  13. விருந்து உபசரிப்பதில் உங்களை மிஞ்ச முடியாது! அருமையான பகிர்வுக்கு நன்றி! உங்கள் கதைகளுக்கான பதிவுகள் என் டேஷ் போர்டில் வரவில்லை! அதனால் தொடர்ந்து படிக்க முடியவில்லை! நானும் அந்த பக்கம் வரும்போது தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  14. மதுரை செல்லும் வழியில் உங்களை சந்திப்பதற்காகவே திருச்சியில் இறங்கி உங்கள் இல்லம் வந்த பதிவர் ஆச்சியின் அன்பை என்னவென்று சொல்வது. அனைத்து பதிவர்களும் இளைப்பாறும் தங்கள் இல்லம் மற்றும் உள்ளம் வாழ்க! ஆச்சிக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  15. பதிவர் சந்திப்பு..... அதுவும் உங்களைச் சந்திப்பதென்றாலே ஒரு மகிழ்ச்சி தான்....

    தொடரட்டும் சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு
  16. பதிவர் சந்திப்பு அருமை.
    தொடர வேண்டும் இன்று போல் என்றும்.
    திருச்சி என்றால் வை.கோ சார் நினைவு எல்லா பதிவர்களுக்கும் வருவது உண்மை. மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  17. தங்களின் அன்பான மனம் கண்டு பெரிதும் அகமகிழ்கிறேன்.. சக பதிவர்களை அன்போடு வரவேற்று, உபசரிக்கும் தங்கள் உளப்பாங்கு பெரிதும் போற்றுதலுக்குரியது.. அனைவராலும் விரும்பப்படும் உயர்ந்த உள்ளம் படைத்த தங்களை சந்திக்க, பதிவர்கள் அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள்!

    பதிலளிநீக்கு
  18. ஆச்சி பற்றி இன்றே அறிந்தேன். அவர் பதிவுகளையும் படித்தது இல்லை. இப்படி அன்புள்ள அநேக நண்பர்கள் கிடைப்பது ஒரு வரம். வாழ்த்துகள். இதே போல் என்றும் தொடரவும் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  19. தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்த ஆச்சியும் அவர்களின் குடும்பத்தினரும் நல்லபடியாக திரும்ப ஹரியானா போய்ச்சேர்ந்துவிட்டதாக 28.06.2014 அன்று தகவல் கிடைத்தது.

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  20. இந்த பக்கத்திற்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவம் .

    நாங்கள் மதுரை பஸ்டான்ட் போவதற்குள் போஸ்ட் பப்ளிஷ் பன்யதாக சொன்னது ஆட்சரியம் .

    எங்களை நல்லபடியாக கவனித்து அனுப்பியதை மறக்க முடியாது ,

    அன்பான குடும்பம் என்று உங்க வீட்டில் அனைவரும் பிரதிபலித்தனர் .(ஆட்டோகாரர் வரை)

    உங்கள் அக்கா சோ ஸ்மார்ட் .உங்களை விட இளைமை .

    என் பெண்ணிற்கு குட்டி ஹேன்ட் பேக் ம் அதில் புது 20 rs பணமும் வைத்துக் கொடுத்திர்களே அதை மறந்துடிங்க போல ,(என் பொக்கிசங்களில் ஒன்றாக வைத்திருக்கிறேன் ,).

    மாமியின் குழந்தைத்தனமான பாசமும் ,உங்கள் மீதான அன்பும் அக்கறையும் நெகிழவைத்தது .

    கணினியில் 4,5 பக்கங்கள் ஓப்பனில் இருந்ததும் ,கிளிக் பன்யதும் விளம்பர பலகைபோல எழுத்துக்கள் பெரிதாக வந்ததில் எனக்கு குறுஞ்சிரிப்பு வந்தது .

    எங்கள் சந்திப்பிற்கு காரணமான கணினி நீதானா ,என்று பார்வையிட்டேன் .

    ஆட்டோக்காரர் எதும் சொன்னாரா (உங்களைப் பற்றி டிஸ்கஸ் பண்ணிகிட்டோம்னு )

    பின்னுட்டம் தந்த அனைவருக்கும் நன்றிகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridharJuly 6, 2014 at 8:33 AM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //இந்த பக்கத்திற்கு இவ்வளவு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவம்.//

      மகளிடமிருந்து ஃபோனோ, தபாலோ தகவலோ வரவில்லையே என்றால் ஒரு பாசமுள்ளதந்தை வருந்தக்கூடும் தான்.

      இருப்பினும் அவளுடைய சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்படியோ என தன் மனதை அவர் சமாதானம் செய்துகொள்ளவும் கூடும்.

      மதுரையிலிருந்தும் பிறகு ஹரியானாவிலிருந்தும் ஃபோனில் பேசிவிட்டீர்களே !

      இதற்கெல்லாம் மன்னிப்பு எதற்கு ஆச்சி?

      ஆச்சியை முதன்முதலாக நேரில் பார்த்ததும், எனக்கு ஒரு சொந்த மகள் பிறந்திருந்தால், நம் ஆச்சி போலவே தான் கும்முன்னு, ஜிம்முன்னு இருந்திருப்பாள் என மனதில் நினைத்துக்கொண்டு மகிழ்ந்தேன். ;)

      >>>>>

      நீக்கு
    2. VGK to ஆச்சி [2]

      //நாங்கள் மதுரை பஸ்ஸ்டாண்ட் போவதற்குள் போஸ்ட் பப்ளிஷ் பண்ணியதாக சொன்னது ஆச்சரியம் .//

      தாங்கள் குடும்பத்துடன் என் இல்லத்திற்கு வருகை தந்ததும் ஆச்சர்யம் தானே ஆச்சி.

      தாங்கள் திருச்சி மாவட்ட எல்லையைத் தாண்டுவதற்குள் பதிவினை COMPOSE செய்து விட்டேன்.

      >>>>>

      நீக்கு
    3. VGK to ஆச்சி [3]

      //எங்களை நல்லபடியாக கவனித்து அனுப்பியதை மறக்க முடியாது ,//

      அடடா, அவசரத்தில் அன்று ஆச்சியை நான் சரியாகவே கவனிக்கவே முடியவில்லை என்பதே உண்மை. ;)

      ஏதோ அதிர்ஷ்டவசமாக என் குடியிருப்புப்பகுதியின் கீழேயே ‘மதுரா ஹோட்டல்’ அமைந்திருந்ததால் .... நான் பிழைத்தேன்.

      என் வீட்டிலேயே தங்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்று தான் நானும் ஆசைப்பட்டேன். அன்று வேறு விருந்தினர்களும் எதிர்பாராமல் வருகை தந்து விட்டதால், அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்ததில், சமையல் வேலைகள் ஓடவில்லை. காலை டிபன் அடையுடன் அப்படியே எல்லாம் ஸ்தம்பித்து நின்று போய்விட்டன.

      அதனால் மட்டுமே தங்களை நேராக ஹோட்டலுக்கு அழைத்துப் போகும் படியாகிவிட்டது. ;(

      தவறாக ஏதும் நினைக்கக்கூடாதூஊஊஊஊஊ.

      >>>>>

      நீக்கு
    4. VGK to ஆச்சி [4]

      //அன்பான குடும்பம் என்று உங்க வீட்டில் அனைவரும் பிரதிபலித்தனர் .(ஆட்டோகாரர் வரை)//

      வெளியிலிருந்து வருகை தந்து பார்ப்போர் அனைவருக்கும் இதுபோலவேதான் நாங்கள் எப்போதும் காட்சியளிப்போம். ;)))))

      >>>>>

      நீக்கு
    5. VGK to ஆச்சி [5]

      //உங்கள் அக்கா சோ ஸ்மார்ட் .உங்களை விட இளமை .//

      அவள் எப்போதுமே ஸ்மார்ட்டோ ஸ்மார்ட் தான். மஹா மஹா கெட்டிக்காரி. 6 பிள்ளைகள் + 2 பெண்கள் ஆக மொத்தம் 8 குழந்தைகள் அவளுக்கு. அனைவருக்கும் திருமணம் ஆகி 8 சம்பந்திகள் வந்து, ஏராளமான பேரன் பேத்திகள் + கொள்ளுப்பேரன்கள் [அநிருத் + ஆதர்ஷ்] இருவரும் பிறந்தாச்சு. என்னைவிட 10 வயது பெரியவள் அவள். அவளுக்கு எதிலும் அளவில்லா ஆசை உண்டு. என் மீது தனி பிரியம் உண்டு. நான் தேசீய விருது வாங்க மும்பைக்குச் செல்லும் போதும் என்னுடன் கூடவே வந்திருந்தார்கள். ஆச்சியை நானும் பார்த்துவிட்டுத்தான் போவேன் என அடம் பிடித்து அமர்ந்திருந்தாள். ஆச்சி மதுரை போய்ச்சேர்ந்த பிறகே இவள் என் இல்லத்தைவிட்டுப் புறப்பட்டுச்சென்றாள். என்னிடம் அரட்டை அடிப்பதில் இன்றும் அவளுக்கு அவ்வளவு ஒரு பிரியம். என்னை முதல் முதலாகப் பள்ளிக்குக் கொண்டுபோய் விட்டவளும் அவளே தான். அதைப்பற்றி நகைச்சுவையாக நான் ஏற்கனவே இதோ இந்தப்பதிவுகள் இரண்டிலும் எழுதியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2012/03/2.html

      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      என் பெரிய அக்கா போட்டோ இதோ இந்தப்பதிவினில் உள்ளது:

      http://gopu1949.blogspot.in/2011/07/2.html

      [கார் அருகே அரக்குக்கலர் மடிசார் புடவையுடன் ஹாரத்தி எடுக்கிறார்கள்.]

      >>>>>

      நீக்கு
    6. VGK to ஆச்சி [6]

      //என் பெண்ணிற்கு குட்டி ஹேன்ட் பேக் ம் அதில் புது 20 ரூபாய் பணமும் வைத்துக் கொடுத்திர்களே அதை மறந்துட்டீங்க போல ,(என் பொக்கிசங்களில் ஒன்றாக வைத்திருக்கிறேன் ,).//

      போங்கோ ஆச்சி. குழந்தைகள் இருவருக்கும் இன்னும் ஏதேதோ நான் தந்திருக்கணும். அன்று சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமையவில்லை. என்னால் எங்கும் வெளியே கடைவீதிப்பக்கமும் செல்ல முடியாமல் போய்விட்டது. முன்கூட்டியே தங்கள் வருகையைப் பற்றிச் சொல்லியிருந்தால் நானும் தயார் நிலையில் இருந்திருப்பேன்.

      >>>>>

      நீக்கு
    7. VGK to ஆச்சி [7]

      //மாமியின் குழந்தைத்தனமான பாசமும், உங்கள் மீதான அன்பும் அக்கறையும் நெகிழவைத்தது.//

      ஹைய்யோ ! கரெக்ட் ஆச்சி. தாங்கள் இதை ஒரே ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து இங்கு சொல்லியிருப்பது என்னையும் நெகிழ வைத்து விட்டது.

      உண்மையிலேயே அவளும் எனக்கு [பாசமுள்ள அன்பும் அக்கறையும் அதீதப்பிரியமும் உள்ள] ஒரு குழந்தை போலவே தான்.

      மொத்தத்தில் இயக்குனர் சிகரம் K, பாலச்சந்தரின் ‘சிந்து பைரவி’ திரைப்படத்தின் கதாநாயகன் சிவக்குமாருக்கு மனைவியாக வரும் சுலக்‌ஷணா போன்றவள். ;)))))

      என் VGK-03 'சுடிதார் வாங்கப்போறேன்’ கதையிலும் என் மனைவியின் அபூர்வ குணாதிசயங்களைப்பற்றியும், என் ஆசைகள் + எதிர்பார்ப்புகள் பற்றியும் கொஞ்சூண்டு மட்டும் சொல்லியுள்ளேன்.

      http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html

      மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரமல்லவா !

      எனக்கும் அந்த வரம் கிடைத்துள்ளதில் மகிழ்ச்சியே.

      >>>>>

      நீக்கு
    8. VGK to ஆச்சி [8]

      //கணினியில் 4,5 பக்கங்கள் ஓப்பனில் இருந்ததும் ,கிளிக் பண்ணியதும் விளம்பர பலகைபோல எழுத்துக்கள் பெரிதாக வந்ததில் எனக்கு குறுஞ்சிரிப்பு வந்தது.//

      நான் கணினி முன் இருக்கிறேனோ இல்லையோ என் கணினி எப்போதும் 24 மணி நேரமும் பெரும்பாலும் ON LINE இல் OPEN ஆகவே தான் இருக்கும். OFF செய்து ON செய்வதற்கெல்லாம் எனக்குப் பொறுமை இருப்பது இல்லை. ;))))) அது ஆச்சிக்கே ஏற்கனவே தெரிந்ததோர் விஷயம் தானே ! ;))))))

      >>>>>

      நீக்கு
    9. VGK to ஆச்சி [9]

      //எங்கள் சந்திப்பிற்கு காரணமான கணினி நீதானா ,என்று பார்வையிட்டேன்.//

      ஆச்சி ஆசையுடன் பார்வையிட்டதை நானும் ஆவலுடன் பார்த்து மகிழ்ந்தேன். ;)))))

      >>>>>

      நீக்கு
    10. VGK to ஆச்சி [10]

      //ஆட்டோக்காரர் எதும் சொன்னாரா (உங்களைப் பற்றி டிஸ்கஸ் பண்ணிகிட்டோம்னு )//

      இல்லை ...... ஏதும் சொல்லவில்லை. அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று வண்டியை கவனமாக ஓட்டிச் செல்வார். அதனால் தான் அவரை என் ஆஸ்தான வித்வானாக [ஆட்டோக்காரராக] வைத்துக்கொண்டுள்ளேன். அவர் இல்லாவிட்டால் வேணுகோபால் என்ற பெயரில் வேறு ஒருவர். இருவரும் இல்லை என்றால் என் லோக்கல் பயணத்தை சற்றே ஒத்திப்போட்டு விடுவேன். எங்கள் பயணம் 10 கிலோமீட்டருக்கு மேல் என்றால் CALL TAXI வரவழைத்துக்கொள்வேன்.

      அவருக்கு ..... அவர் மகளின் படிப்புக்கும், திருமணத்திற்கும் என்னால் முடிந்த பண உதவிகள் பல செய்துள்ளேன். [ கடனாக அல்ல .... தர்மமாகவே தான் ] அந்த நன்றி விஸ்வாசம் அவருக்கு என்னிடம் எப்போதுமே உண்டு.

      >>>>>

      நீக்கு
    11. VGK to ஆச்சி [11]

      //பின்னுட்டம் தந்த அனைவருக்கும் நன்றிகள் .//

      அனைவர் சார்பிலும் ஆச்சிக்கு என் அன்பு நன்றிகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      தங்களின் அன்புக்கணவரையும் குழந்தைகளையும் நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும். ;) வாழ்க !

      மனமார்ந்த ஆசிகளுடன்
      என்றும் பிரியமுள்ள
      கோபு [VGK]

      நீக்கு
    12. VGK to ஆச்சி [12]

      ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் ஆச்சி. அன்று என் வீட்டுக்கு நீங்க வந்தபோது ஒரு பெண் + அவளின் இரு பெண் குழந்தைகள் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார்களே ........

      அந்தப்பெண் தான் என் பெரிய அக்காவின் கடைசிக்குழந்தை. [எட்டாவதுக் குழந்தை]

      அவளுடைய இரண்டாவது பிரஸவத்திற்கு உதவிகள் செய்ய [2-3 ஆண்டுகளுக்கு முன்பு] என் பெரிய அக்கா முதன் முதலாக விமானத்தில் ஏறி சிங்கப்பூர் சென்று வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

      என் பெரிய அக்காவின் மூத்த பிள்ளையின் மூத்த பெண் தான் [அநிருத் + ஆதர்ஷ் இன் அம்மா] என்னுடைய மூன்றாவ்து மருமகள். அதை நான் அன்னிக்கே உங்களிடம் நேரில் சொல்லியிருந்தேன்.

      அதற்கு, நீங்க கூட ”சுடிதார் வாங்கப்போனதும் அந்தப்பெண்ணுக்குத்தானே?” என்று கேட்டீர்கள் ;)))))) ]

      நீக்கு
  21. அன்பின் வை.கோ

    அருமையான மறுமொழிகள் - ஆச்சி வருகிறார் என்ற வுடனேயே வரவேற்பதற்கான அனைத்து முன்னேற்பாடு களையும் செய்து - மனம் மகிழ ஆச்சியினையும் அவர் குடும்பத்தினரையும் மனம் மலர வரவேற்று மகிழ்வித்து - மகிழ்ந்தது தங்களின் விருந்தோமபலைப் பிரதி பலிக்கிறது.

    தங்களின் பதிவர் வட்டம் பெரியது. வரவேற்கும் பண்பு சிறந்தது - விருந்தோம்பலில் பெயர் பெற்றவர் - எத்தனை எத்தனை மறுமொழிகள் - சுடச் சுட மறுமொழிகள் - திக்குமுக்காட வைக்கிறீர்களே

    விருந்தினர் வந்து விட்டாரென்றாலே மற்ற அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு உபசரிப்பதையே முக்கிய பணியாகக் கருதி மகிழ்விக்கும் தங்களின் அருஞ்செய்லைப் பாராட்டுகிறோம்.

    கணினியில் ஒரு மணித்துளி கூட விரயம் செய்யாமல் செய்திகள் அனுப்பும் சிறந்த செயல் - என்ன சொல்லிப் பாராட்டுவது - தெரியவில்லையே.

    நடந்த உபசாரத்தினை நினைத்து நினைத்து மகிழ்கிறேன்

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mail message from அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் to me on 07.07.2014 at 13.36 Hrs.

      அன்பின் வை.கோ,

      கீழ்க்கண்ட மடல் தங்கள் பார்வைக்கு வர வில்லை என ஒரு ஐயம் - அதனால் மறுபடியும் அனுப்புகிறேன்.

      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      அன்புள்ள திரு வை.கோ அவர்களே,

      தங்களின் விருந்தினர்களை உபசரித்து மகிழும் அரிய குணம் பிரமிக்க வைக்கிறது - அனைத்திலும் முக்கியமானது 12 மறுமொழிகள் 27 நிமிடங்களில் - இந்த வேகம் எங்கிருந்து வந்தது - 1.19, 1.26, 1.28, 1.29 , 1.31, 1.33, 1.35, 1.36. 1.37. 1.38. 1.40, 1.44, 1.45 - இப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் சிந்தித்து, தட்டச்சு செய்து , கணினியினை வேலை வாங்கி - மறுமொழிகளை அள்ளி வீசியது பிரமிக்க வைக்கிறது - ஆச்சியும் விருந்துபசாரத்தினைப் பார்த்து பிரமித்திருப்பார்கள்.

      நல்வாழ்த்துகள்
      நட்புடன் சீனா

      நீக்கு
    2. cheena (சீனா) July 6, 2014 at 2:02 PM

      அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வாருங்கள், வணக்கம்.

      இந்த ஒரு பதிவுக்கு மட்டுமே தாங்கள் மூன்று முறை வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். அதைத்தவிர மெயில் மூலம் விட்டுப்போன நிறைய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

      //அனைத்திலும் முக்கியமானது 12 மறுமொழிகள் 27 நிமிடங்களில் - இந்த வேகம் எங்கிருந்து வந்தது - 1.19, 1.26, 1.28, 1.29 , 1.31, 1.33, 1.35, 1.36. 1.37. 1.38. 1.40, 1.44, 1.45 - இப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் சிந்தித்து, தட்டச்சு செய்து , கணினியினை வேலை வாங்கி - மறுமொழிகளை அள்ளி வீசியது பிரமிக்க வைக்கிறது - //

      சிலருக்கு சிலரிடத்தில் மட்டும் எப்போதும் அன்பும், பாசமும், பிரியமும், வாத்ஸல்யமும் ஏற்படுவது உண்டு. அதற்கெல்லாம் காரணம் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டம். ஏதோ ஜன்ம ஜன்மமாகத் தொடர்ந்து வரும் ஓர் உன்னத உறவாக இருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

      அத்தகைய நட்புக்களுக்கு நான் மறுமொழிகள் இடும்போது, காலம், நேரம், எண்ணிக்கை, மணித்துளிகள் எதுவும் கணக்கே பார்ப்பது இல்லை. சிலருக்கு நான் விடியவிடிய பின்னூட்டங்கள் கொடுத்துக்கொண்டே சுத்தமாகத் தூக்கமில்லாமல் கழித்த இரவுகள் ஏராளம் உண்டு என்பதும் தங்களுக்கே தெரிந்த விஷயம் தான்.

      அவர்கள் சிலரின் மேல் உள்ள அன்பு எனக்குள் ஆறாகப்பெருகி, குற்றால அருவி போல பின்னூட்டங்களை என்னை அறியாமல் கொட்ட வைக்கின்றன என்பதே உண்மை. இவையாவும் எனக்கே தெரியாமல் என் விரல்கள் நடத்திவரும் அனிச்சை செயல் ஆகும்.

      தாங்களாவது இதையெல்லாம் மதிப்பீடு செய்து, பாராட்டிக் கருத்தளித்துள்ளதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஐயா.

      மிக்க நன்றி, ஐயா.

      என்றும் அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  22. தங்களின் அன்பான பதில்களில் மகிழ்கின்றேன் ,சீனா சாரும் நான் சொல்ல நினைப்பதையும் தெரிவித்துள்ளார்.


    கீபோர்ட் பிரச்சனையால்தான் தாமதம் ,


    மாமிக்கும் ,அக்கா மாமிக்கும் எனது விசாரிப்புகளை சொல்லிடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. thirumathi bs sridhar July 6, 2014 at 5:55 PM

      வாங்கோ ஆச்சி, வணக்கம்.

      //தங்களின் அன்பான பதில்களில் மகிழ்கின்றேன் ,//

      சந்தோஷம். மகிழ்ச்சிக்கு நன்றிகள்.....ம்மா.

      //சீனா சாரும் நான் சொல்ல நினைப்பதையும் தெரிவித்துள்ளார்.//

      நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள் இன்னும் நிறையவே சொல்லுவார். அவர் தற்சமயம், பல்வேறு குடியிருப்புக்களின், மக்கள் நல சங்கத்தில் ஓர் கெளரவப்பதவி வகிப்பதாகக் கேள்விப்படுகிறேன். அதனால் அவருக்கு முன்பு போல நேரம் கிடைப்பது இல்லை. அதனால் மிகவும் சுருக்கமாகவே ;))))) எழுதி வருகிறார்.

      //கீபோர்ட் பிரச்சனையால்தான் தாமதம்.//

      சரி, நம்புகிறேன் ..... ஆச்சி.

      //மாமிக்கும், அக்கா மாமிக்கும் எனது விசாரிப்புகளை சொல்லிடுங்கள்//

      ’மாங்காய்க்கும், வடு மாங்காய்க்கும்’ என்பது போல உணர்ந்தேன் ... ’மாமிக்கும் அக்கா மாமிக்கும்’ என்ற இதைப்படித்ததும். ;))))))

      சரிம்மா ...... சொல்லி விடுகிறேன். Thank You !

      அன்புடன் கோபு [VGK]

      நீக்கு
  23. அன்பின் வை.கோ

    நீண்டதொரு மறுமொழி - பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன். மறுமொழி இடுவதென்பதும் திறமையான செயல் தான். அருமையாக மறுமொழி இடுகிறீர்கள். பாராட்டுகள் - நல்வாழ்த்துக்ள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. cheena (சீனா) July 7, 2014 at 10:31 PM

      //அன்பின் வை.கோ //

      வாருங்கள் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே, வணக்கம் ஐயா.

      //நீண்டதொரு மறுமொழி - பொறுமையாகப் படித்து மகிழ்ந்தேன்.//

      மிக்க மகிழ்ச்சி ஐயா. தங்களின் பொறுமையான வாசிப்பு அனுபவத்தைக்கண்டு நானும் பெருமகிழ்ச்சியடைகிறேன், ஐயா.

      // மறுமொழி இடுவதென்பதும் திறமையான செயல் தான். அருமையாக மறுமொழி இடுகிறீர்கள். //

      நான் பொறுமையாகவும் முழுமையாகவும் படித்துப்பார்த்து, என் மனதுக்கும் பிடித்தமான பதிவுகளுக்கு மட்டுமே, மறுமொழி இட்டு வருகிறேன். அவ்வாறு சொல்லும் கருத்துக்களை சற்றே வித்யாசமாகச் சொல்வது என் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளேன். இதனால் என்னால் அனைவரின் பதிவுகளுக்கும் சென்று கருத்தளிக்க இயலாமல் உள்ளது. இதில் பலருக்கும் என் மேல் வருத்தம் உள்ளது.

      சிலர் தங்கள் பக்கம் என்னை இழுப்பதற்காகவே என் பதிவுகளுக்கு வந்து ஏனோ தானோ என கருத்தளித்துச் செல்வது உண்டு. மட்டறுத்தலில் அவற்றையெல்லாம் நான் DELETE செய்து குப்பைத்தொட்டிக்குக் கொண்டுபோகாமல், அவ்வப்போது வெளியிட்டு விடுவதும் உண்டு.

      நான் அவர்களின் பதிவுகளுக்குச் செல்லாமல் இருப்பதால் அவர்களே நைஸாக நாளடைவில் என்னிடமிருந்து நழுவிச்செல்வது உண்டு. நானும் ரொம்ப நல்லது என விட்டுவிடுவதும் உண்டு.

      இதைத்தவிர மெயில் மூலம் சாட் மூலமும் தங்கள் பதிவுகள் பக்கம் வருமாறு அழைப்பவர்களும் உண்டு. “நேரமிருக்கும் போது வருகிறேன்” எனச்சொல்லி நான் அவர்கள் பக்கமே செல்லாமலேயே இருப்பதும் உண்டு. உலகம் பலவிதம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம்.

      யாரையும் நானாக என் வலைப்பதிவுப்பக்கம் கருத்தளிக்க வாருங்கள் என்றெல்லாம் வெற்றிலை-பாக்கு வைத்து அழைப்பது இல்லை.

      என் சிறுகதை விமர்சனப்போட்டியில் ஒரே ஒரு முறையாவது இதுவரை கலந்துகொண்டுள்ளவர்களுக்கு மட்டும், என் புதிய வெளியீடுகள் [போட்டிக்கான கதைகள்] பற்றி MAIL மூலம் LINK அனுப்பி வைப்பது உண்டு. அதிலும் ’இது தங்களின் தகவலுக்காக மட்டுமே’ என குறிப்பிடுவது வழக்கம்.

      அதைப்பார்த்து அவர்கள் என் பதிவுகள் பக்கம் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, போட்டியில் கலந்து கொண்டாலும் சரி, கலந்து கொள்ளாவிட்டாலும் சரி, அதைப்பற்றியெல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை / கவலைப்படுவதும் இல்லை.

      போட்டி மட்டும் ஜகத்ஜோதியாக வெற்றிகரமாகவே இதுவரை நடைபெற்று வருகிறது. இதுவரையிலான 23 போட்டிகளில் மொத்தம் 112 நபர்களுக்கு பரிசு கிடைத்துள்ளன. அது தவிர ஹாட்-ட்ரிக் பரிசுகள் + போனஸ் பரிசுகள் என பலருக்கும் கிடைத்துக் கொண்டுதான் வருகின்றன.

      இதற்கே இப்போது எனக்கு நேரம் சரியாகிப்போவதாலும், என்னால் முன்புபோல பிறரின் பதிவுகள் பக்கம் அதிகமாக மேய முடியவில்லை. ;)

      ஏதோ யாரிடமாவது மனம் விட்டுப்பேசணும் போலத்தோன்றியதால், பொறுமையாக ஒவ்வொன்றையும் படித்து ரஸிக்கும் தங்களிடம் இதன் வாயிலாக இப்போது பேசியுள்ளேன்.

      //பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் மீண்டும் வருகைக்கும், என் மனதில் உள்ளதை கொஞ்சமாவது VENTILATE செய்ய உதவியதற்கும் மிக்க நன்றிகள், ஐயா.

      அன்புடன் கோபு [VGK]




      நீக்கு
  24. அன்பின் ஆச்சி - தாங்கள் சொல்ல நினப்பதை - நினைத்ததை நான் கூறி விட்டதாக எண்ணுகிறீர்கள். இது தற்செயலாக இருக்கலாம். இருவரின் சிந்தனைகளும் ஒரே திசையில் செல்வதாலும் இருக்கலாம். தவறில்லை. ந்ல்வாழ்த்துகள் ஆச்சி - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  25. விழுப்புரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் உங்களை பார்த்ததும், உங்களின் கரிசனமான உபசரிப்பும்...இதை படிக்கும் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது ஐயா.

    அன்பின் வெளிப்பாடு....அழகு...!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri February 9, 2015 at 12:52 AM

      வாங்கோ, வணக்கம்.

      //விழுப்புரத்தில் இருந்து மதுரை செல்லும் வழியில் உங்களை பார்த்ததும், உங்களின் கரிசனமான உபசரிப்பும்...இதை படிக்கும் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது ஐயா.

      அன்பின் வெளிப்பாடு....அழகு...!!!//

      :))))) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். அன்புடன் VGK

      நீக்கு
  26. அருமையான சந்திப்பு மனதை நெகிழ வைத்தது.

    பதிலளிநீக்கு
  27. அருமையான சந்திப்பு நமக்கு எப்பவோஓஓஓஓஓஓஓன்னு தோணுதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் August 26, 2015 at 1:22 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //அருமையான சந்திப்பு நமக்கு எப்பவோஓஓஓஓஓஓஓன்னு தோணுதே.//

      :))))) விரைவில் அந்தப் பிராப்தம் நமக்கும் அமைய பிரார்த்திப்போம் :)))))

      நீக்கு
  28. தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது இயற்கை தானே.

    ஒவ்வொரு பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவினைப் படிக்கும் போதும் நான் உங்களை சந்தித்தது தித்திக்கும் நினைவாக வந்து போகிறது.,

    மீண்டும் சந்திக்க விழைகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 23, 2015 at 2:58 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //தேன் இருக்கும் இடத்தைத் தேடி வண்டுகள் வருவது இயற்கை தானே.//

      இதில் தேன் யாரு? ’குண்டு’ ஸாரி ’வண்டு’ யாருன்னே எனக்குப் புரியவில்லையே, ஜெ.

      //ஒவ்வொரு பதிவர் சந்திப்பைப் பற்றிய பதிவினைப் படிக்கும் போதும் நான் உங்களை சந்தித்தது தித்திக்கும் நினைவாக வந்து போகிறது.//

      எனக்கு நீங்க தந்துவிட்டுப்போன, மிகவும் ருசியான சூப்பர் கல்யாண பக்ஷணங்களான அதிரஸமும், முரட்டு லாடும், ஐந்து சுற்று பெரிய முறுக்கும் மட்டுமே நினைவுக்கு வந்து போகிறது. உங்களை மறந்தாலும் அவற்றை என்னால் மறக்கவே முடியவில்லை. :)

      //மீண்டும் சந்திக்க விழைகிறேன்.//

      ஆஹா, நம் இருவருக்கும் அந்த பாக்யம் மீண்டும் சாதகமாக அமையட்டும். எனக்கும் மிக்க மகிழ்ச்சியே.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      நீக்கு
  29. ஒங்கூட்டுக்கு யாராச்சிம் பதிவர்கள் விசிட் பண்ணிகிட்டே இருக்காங்க. ஒரு நா அல்லாகாட்டி ஒருநா இந்த முருகும் வந்து குதிச்சுபோடும். எனக்கு ஒங்கூட்டு சாப்பாடுதா வேணும். நா சரியான சாப்ளாட்டு ரசிகை. எப்பூடி தெரியுமா வாய தொறந்தா காக்கா கொத்துற அளவுக்கு ஃபுல்கட்டு கட்டிபோடுவேன்ல.

    பதிலளிநீக்கு
  30. இனிமையான சந்தோஷமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. பதிவர் சந்திப்பு மகிழ்வளிக்கும் விஷயம்தான். பகிர்விற்கு நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  32. ஆச்சி அவங்கள பாத்துகிட்டேன்.. இனிமையான சந்தோஷமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்... ஆச்சி மேடம் முன்னா பார்க் வாங்க செம ஜாலியா இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிப்பிக்குள் முத்து. May 5, 2016 at 3:33 PM

      வாங்கோ முன்னா, வணக்கம்மா.

      //ஆச்சி அவங்கள பாத்துகிட்டேன்.. இனிமையான சந்தோஷமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்... ஆச்சி மேடம் முன்னா பார்க் வாங்க செம ஜாலியா இருக்கும்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துகளுக்கும், எங்கட ஆச்சியை தங்கள் வலைப்பக்கம் வருமாறு அழைத்துள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  33. திருமதி. ஆதி வெங்கட் அவர்களின் பின்னூட்டத்திற்கு நான் எழுதியுள்ள என் பதிலிலும், ஆச்சிக்கான என் 10-வது பதிலிலும் ஓர் ஆட்டோ ஓட்டுனரைப்பற்றி நான் பெருமையாக விவரித்து எழுதியுள்ளேன்.

    இதுவரை எப்போதும் என்னுடைய ஆஸ்தான ஆட்டோக்காரராக இருந்துவந்து, மிகுந்த நட்புடன் என்னுடன் பல்லாண்டுகள் பழகி வந்திருக்கும், ’திரு. ஏழுமலை’ (வயது சுமார் 55 to 60) என்னும் ஆட்டோ ஓட்டுனர் நேற்று (17.12.2017 - ஞாயிறு) மதியம், இரண்டாம் முறை தனக்கு ஏற்பட்ட மாரடைப்பால், திருச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தானே தன் ஆட்டோவை ஓட்டிச் சென்று, அங்கு சென்ற 10-வது நிமிடமே காலமாகிவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன்.  :(

    பதிலளிநீக்கு
  34. அட கடவுளே .இது என்ன சோதனை.மிகவும் வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது ஆச்சி.

      இப்போது சமீபத்தில் 13.12.2017 + 14.12.2017 ஆகிய இரு நாட்களும் நானும் என் மனைவியும் அவரின் ஆட்டோவில் பல இடங்களுக்கு பயணித்து விட்டு வந்தோம்.

      அதற்கு முதல்நாள் அதாவது 12.12.2017 செவ்வாய்க்கிழமையன்று தன் மாமியார் சேலத்தில் இறந்து போய்விட்டதாகவும், அதற்கு தான் சென்று வந்ததாகவும் எங்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

      மாமியார் போன ஆறாம் நாளே இவரும் இப்படி அநியாயமாகப் போய்ச் சேர்ந்து விட்டார். என்ன செய்வது? :(

      நீக்கு
    2. எல்லோருக்கும் முடிவு என்று ஒன்று உண்டுதான். அவருடைய கடமைகளை முடித்திருப்பார் என நம்புகிறேன். உங்களுக்கு எப்போதும் உதவியாக இருந்த ஆட்டோக்கார்ர் இனி இல்லை என்பது உங்களுக்கும் கஷ்டம்தான். எல்லோரையும் நண்பராகப் பாவிக்கும் உங்கள் நல்லகுணத்தை எப்போதும் மனதில் இருத்தியுள்ளேன்.

      நீக்கு
  35. நேற்று எழுதின பின்னூட்டம் காணாமல்போய்விட்டதே.

    உங்களுக்கு இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் என்று எழுதிய ஞாபகம்.

    இருந்தாலும் நம்மோடு பழகியவர்கள் மறைவது அதிர்ச்சிதான். இக்கட்டிலும், அவருக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்று தோன்றியதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லைத் தமிழன் December 19, 2017 at 2:59 PM

      //நேற்று எழுதின பின்னூட்டம் காணாமல்போய்விட்டதே.//

      அடடா ! அதுவும் ஏழுமலை போலக் காணாமல் போய் விட்டதா? :(

      //உங்களுக்கு இரண்டு ஆட்டோ ஓட்டுனர்கள் என்று எழுதிய ஞாபகம்.//

      ஆமாம். இந்த ஏழுமலை கிடைக்காவிட்டால், அந்த வேணுகோபால் என்பவரை மட்டுமே நான் ஆல்டர்நேடிவ் ஆக வைத்துக்கொண்டிருந்தேன்.

      இப்போதும், அந்த வேணுகோபாலிடம்தான் இவரைப்பற்றிய செய்திகளை முழுவதுமாக விசாரித்துக் கேட்டு, என் வருத்தத்தையும் நான் பகிர்ந்துகொண்டேன்.

      //இருந்தாலும் நம்மோடு பழகியவர்கள் மறைவது அதிர்ச்சிதான்.//

      நிச்சயமாக ..... எனக்கு இது மாபெரும் அதிர்ச்சிதான்.

      //இக்கட்டிலும், அவருக்கு மருத்துவமனை செல்லவேண்டும் என்று தோன்றியதே.//

      ஆமாம். பாவம் அவர். அவரின் வயது மிகச்சரியாக அறுபது என்பதை இப்போது நான், வேணுகோபால் மூலம் தெரிந்து கொண்டேன். ஏழுமலைக்கு ஷுகர் உண்டு, ஆஸ்த்மா போன்ற அவஸ்தைகளும் உண்டு. வண்டியில் போகும் போதே, அடிக்கடி வண்டியை ஸ்லோ செய்து, ஓரம் கட்டி, காரிக் காரித் துப்பிக்கொண்டே இருப்பார்.

      அவருக்கு இரண்டு மகள்கள் மட்டுமே. ஒருத்திக்குக் கல்யாணம் ஆகி குழந்தையும் உள்ளது. இன்னொருத்தி காலேஜில் படிக்கிறாளாம். சேலத்தில் உள்ள அவரின் மனைவி வீட்டு ஆசாமிகள் வசதியுள்ளவர்களாம். அந்தச் சின்னப் பாப்பாவுக்கும் அவர்களே, கல்யாணம் செய்து வைத்து விடுவார்கள் என வேணுகோபால் என்ற ஆட்டோ ஓட்டுனர் என்னிடம் சொன்னார். இதனைக் கேட்க என் மனதுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

      நீக்கு