கதையின் தலைப்பு
VGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள் ’
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
முத்தான மூன்றாம் பரிசினை
வென்றுள்ளவர் :
திரு. ரவிஜி
மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்
வலைத்தளம்:
mayavarathanmgr.blogspot.com
திரு. ரவிஜி
மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள்
வலைத்தளம்:
mayavarathanmgr.blogspot.com
எட்டாக் க(ன்)னிகள்’ – கனியைப்போன்று கன்னியும் இனிமையானவள்தானே என்று ஒரு இளமை ததும்பும் தலைப்பையே கதாசிரியர் தலைப்பாக வைத்துள்ளார். நல்ல துவக்கம். ஆனால் எதனால் அல்லது யாருக்கு எட்டாக்க(ன்)னி?
முதல் வரியிலேயே இது ஒரு அரசு பஸ்ஸில் நடக்கும் கதை என்பது தெரிந்துவிடுகிறது. பொதுவாகவே பாட்டுபோட்டுக்கொண்டு பளபளாவென்று இருக்கும் தனியார் பெருந்துகளில் ஏறும் கும்பல் அரசு பஸ்களில் பெரும்பாலும் இருப்பதில்லை. இருந்தாலும் கதாநாயகன் செல்லும் அந்த பஸ்ஸில் கடந்த ஒருமாத காலமாக மட்டும் ஏதோ நிமித்தமாகக் காணப்படும் இளம்பெண்கள் கூட்டம், மல்லிகை மணம், பஸ் பயணத்தை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறது..
அடுத்த கட்டம்; கண்ணில் படும் பெண்களில் எண்ணத்தை கவர்வது யார்? ‘அழகிய’ வாத்துக் கூட்டத்தின் நடுவே ‘நெட்டை’கொக்கு போல அசாதாரண உயரம். குதிரைமுகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி,எலி வால் போன்று குட்டைத் தலைமுடி என ஒரு அழகற்ற படைப்பா என்று கதாநாயகனுக்கு அனுதாபம் ஏற்படுத்தும் பெண். ஒருவேளை நம் கதையின் நாயகன் சினிமாக் கதாநாயகன் போன்ற தோற்றம் கொண்டவனோ?
நாளடைவில் அவளே வந்து அன்புடன் பேசியதில் கொஞ்சம் கொஞ்சமாக கதாநாயகனுக்கு ரசாயன மாற்றம் காரணமாக அனுதாபம் காதலாக மாறி அவள் அழகியாகவே தோன்ற ஆரம்பித்து விடுகிறாள். பஸ்ஸில் எத்தனையோ அழகுப் பெண்கள் பயணம் செய்கையில் இவள் மீது எதனால் அப்படி ஒரு ஈர்ப்பு ஏற்பட வேண்டும்? வாசகன் மனதில் முதல் கேள்வியைத் தூண்டி ஒரு ஆர்வம் ஏற்படுத்துகிறார் கதாசிரியர். இந்த இடத்தில் கதாநாயகன் 35 வயதான பெண் வாசனையே தெரியாத பிரம்மச்சாரி என்று கோடிடுகிறார். ஆனாலும் இன்னும் பெற்றோரே இன்னும் கல்யாணப் பேச்சை எடுக்கவில்லை! எது தடையாக நிற்கிறது? வாசகனின் மனத்தில் இரண்டாவது கேள்வி.
கதாநாயகன் தனது காதலை கோடிட்டுக் காட்டவேண்டுமே!? நெட்டைப் பெண் காவிரிப் பிரச்சினை குறித்துக் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கையில் ....
“பொங்கியெழும் இளமை உணர்ச்சிகளையும், ஓடிவரும் நதிநீரையும் ஒருவராலும் தடுத்துநிறுத்திவிட முடியாது. அதுகட்டுக்கடங்காமல் வெள்ளமாய்ப் பாய்ந்து வரும். தாகமும் மோகமும் தீர அனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என்ற தனது பதிலின் மூலமாக தனது தாகத்தையும், மோகத்தையும், மனதில் கனியத்துவங்கியுள்ள காதலையும் மெதுவாக வெளிப்படுத்துகிறார்.
கதாநாயகியின் பதில் வெட்கம் கலந்த புன்னகை மட்டுமே!
இங்கு மூன்றாவது கேள்வியை வாசகன் மனதில் எழுப்பிவிடுகிறார் கதாசிரியர்; “தாகமும் மோகமும் தீரஅனுபவிப்பது அனைவரின் பிறப்புரிமையே” என்று கதாநாயகன் சொல்ல என்ன காரணம்? யார் அல்லது எது அப்படி அனுபவிக்கும் வாய்ப்புக்கு குறுக்கே நின்றது அல்லது நிற்பது?
மணி கேட்பது, சில்லறை இல்லாதபோது கொடுத்து உதவுவது என ‘பஸ் ஸ்நேகிதம்’ நாளுக்கு நாள் வளர்ந்து உயரமான அந்தப் பெண்ணைப்போலவே கதாநாயகனின் மனதில் ஒரு உயரமான இடத்தை அடைகிறது.
‘பஸ் ஸ்நேகிதம்’, ‘உயரமான அந்தப் பெண்ணைப் போலவே’ இந்த வார்த்தைகள் இங்கே ஏன் பயன்படுத்தப்படுகிறது? நான்காவது கேள்வி!
அடுத்த கட்டம்தான் என்ன? காதல் கடிதம்தான்! மனதைத்திறந்து ஒரு கடிதத்தை எழுதி அடுத்த நாள் எடுத்துச் சென்றால் மனங்கவர்ந்தவள்தான் எங்கே? அடுத்த நாளிலும் வராத நிலையில் வீட்டு விலாசம், தொலைபேசி எண் எதுவுமே தெரியாத நிலையில், வேறு உடன் வரும் பெண்கள் யாரும் அதிகம் பரிச்சயமில்லாத நிலையில் என்னதான் செய்வது. இடையில் திரும்பத் திரும்பப் படித்த நிலையில் கடிதம் வேறு கசங்கிப்போய் வேறு நகல் எடுக்கும்படியாகிவிடுகிறது! காதல் கடிதம் கொடுக்கும்போது கசங்காமல் ‘பிரசன்டேஷன்’ நன்றாக இருக்கவேண்டுமே!
காதல் கடிதத்தோடு மறுநாள் பஸ்ஸில் ஏறினால், ஏறிய உடனே உயரமான பிரண்ட் கொடுக்க சொன்னாளென்று மற்றொரு பெண் ஒரு கடித்ததை கொடுக்கிறாள். ஆஹா இதென்ன பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல தனது காதல் கடிதத்தை கொடுக்கும் முன்பாக கிரீன் சிக்னல் வந்ததுபோல இருக்கிறதே என்று பார்த்தால் தலையில் இடி விழுந்ததுபோல அவளுக்கு நிச்சயதார்த்தம் என்ற செய்தியை கடிதம் தருகிறது.
அதிகமாக அழகில்லாவிட்டாலும், நல்ல உயரமான அவளை மணக்கவும் ஒருவன் முன் வந்துள்ள நிலையில் அவள் மேல் அதிகமாக ஆசை வைத்துவிட்ட கதாநாயகனுக்குத்தான் வாய்ப்பு நழுவிப்போகிறது.
சிறு இடைவெளி கொடுத்து, கிளைமாக்ஸாக காரணத்தை போட்டு உடைக்கிறார் கதாசிரியர். எழுந்து நின்றால் மூன்று அடி மூன்று அங்குலமே உள்ள கதாநாயகனை மணக்க எவள் முன்வருவாள் என்ற கேள்வியுடன் கதையை முடித்து வைக்கிறார்.
எட்டாக் க(ன்)னிகள் என்ற தலைப்பு எதனால் வந்தது என்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கும் கடைசி இருவரிகளில் பதில். ஊன்றிப் படிக்கும் வாசகனென்றால் ஓரளவுக்கு கிளைமாக்ஸ் என்ன என்பது அனுமானிக்கமுடியும். அப்படி இல்லாதவர்களுக்கு இறுதியில் உச்சந்தலையில் ஆணியை இறக்கியதைப்போன்ற உணர்வே ஏற்படும். சற்றும் தொய்வில்லாமல், ஒரு சஸ்பென்ஸுடனேயே கதையை நகர்த்தி, இறுதியில் நெத்தி அடி.
என்னதான் மனதைக்காதலிக்கின்றேன் என்று பேசிக்கொண்டாலும், உடல் அழகுதான் காதலில் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பதனை சொல்லாமல் சொல்லிவிடுகிறார் கதாசிரியர். அதனால்தான் சுமாரான தோற்றம் கொண்டிருந்தாலும், உயரமான பெண் உயரம் குறைவான கதாநாயகனுக்கு பிடித்துப் போய்விடுகிறாள். உயரம் குறைந்தவன் என்ற காரணத்தாலேயே கதாநாயகனை விடுத்து கதாநாயகி தனது சொந்தத்திலேயே மணமுடிக்க முடிவு செய்கிறாள். மனித உணர்ச்சிகள் எல்லோருக்குமே பொதுவானவைதான் என்பதனை ஆணித்தரமாக அழகாக எடுத்து சொல்லிய பாங்கு ரசிக்கத்தக்கது, பாராட்டத்தக்கது. எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சில கதைகளில் வருவதுபோல ஒரு டுவிஸ்ட் உடன் கதையை முடித்திருப்பது அருமை. அபூர்வசகோதரர்கள் அப்புவை கதாநாயகன் ஞாபகப்படுத்துகிறார். உன்னதக்கதைக்கு கதாசிரியருக்கு நன்றி. கதாநாயகனுக்காக நாமும் பிரார்த்திக்கலாம்
நன்றி!
‘எட்டிய மணி’கள் யாருக்கு எட்டியது? வயதான காலத்தில் சம்பாதித்த பணத்தை இறுதியில் எடுத்துச் செல்ல விரும்பும் கணவன். ஆயிரம் ரூபாய்களாக மாற்றி வைத்துக்கொண்டு நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் போனதும் என்ன நடந்தது என்பதனை (நகைச்)சுவைபட சொல்வதே கதை. கோலும் உடையக்கூடாது கோழியையும் அடிக்கணும் என்பதுபோல அக்கவுண்ட் பேயீ செக் அதுவும் “in favour of my beloved husband” என்று எழுதி பணத்திற்கு பதிலாக புதைத்துவிட்டு, புலம்பும் தம்பியிடம் ‘உனக்கே நான் அக்காடா’ என்கிறார். நமக்கோ கவுண்டமணி பாணியில் “அடங்கொக்கமக்கா” என்று எண்ணத்தோன்றுகிறது. money எட்டியது புத்திசாலித்தனமான மனைவிக்கு!
‘எட்டாக் க(ன்)னிகள்’ மற்றும் எட்டிய’மணி’ இரண்டுமே வேறுவிதமான ரசிக்க வைத்த கதைகள்.
அருமை! கதாசிரியருக்கு மீண்டும் நன்றி!
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்படும்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
’ VGK-21 மூக்குத்தி ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
திரு ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுக்கள் ஐயா
பதிலளிநீக்குஇனிய நண்பர் திரு. ரவிஜி அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவாய்ப்பளித்த திரு வை.கோ. ஐயா அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும், வாழ்த்திய மற்றும் வாழ்த்தவிருக்கும் அன்பு இதயங்களுக்கும் நன்றி!
பதிலளிநீக்குhttp://mayavarathanmgr.blogspot.in/2014/06/vgk.html?showComment=1402135814209#c464224319375215263
பதிலளிநீக்குதிரு ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.] அவர்கள்.
இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள
பதிலளிநீக்குதிரு. ரவிஜி மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!
திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமூன்றாம் பரிசு பெற்றுள்ள ரவிஜி மாயவரத்தான் அவர்களுக்கு இனிய பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமாயவரத்தான் ரவிஜி!
பதிலளிநீக்குபாராட்டுக்கள்!
திரு V.G.K அவர்களின் 19 – ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் மூன்றாவது பரிசினை வென்ற,மாயவரத்தான் எம்.ஜி.ஆர் எனப்படும் ரவிஜி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமூன்றாம் பரிசு பெற்ற திரு ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குதிரு ரவிஜி அவர்களுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமூன்றாம் பரிசை வென்ற திரு ரவிஜி அவர்களுக்கு சிறப்புப் பாராட்டுகள். (அவரும் BSNL ல் பணிபுரிகிறார் அல்லவா)
பதிலளிநீக்கு:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)
நீக்குபரிசு வென்ற திரு ரவிஜியவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிரு ரவிஜி வாழ்த்துகள் விமரிசனம் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு;-))))
பதிலளிநீக்கு