About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Sunday, June 29, 2014

VGK 22 / 01 / 03 - FIRST PRIZE WINNERS - 'வடிகால்’
’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு VGK 22 - ’ வ டி கா ல் 
 

 

மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 
நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  
ஐந்து 

இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 


  


மற்றவர்களுக்கு:      முதல் பரிசினை முத்தாக 


வென்றுள்ளவர்கள் இருவர்.


அதில் ஒருவர் நம்


மாயவரத்தான் எம்.ஜி.ஆர்  திரு. 


  ரவிஜி   


அவர்கள்mayavarathanmgr.blogspot.com


 

முதல் பரிசினை முத்தாக வென்றுள்ளதிரு


  ரவிஜி   


அவர்களின் விமர்சனம் இதோ:
வடிகால்’ இல்லாத வயலின் பயிர் அழிய ஏதுவாகும்!  மனித மனங்களுக்கும் அப்படித்தான்! வடிகால் அவசியம் தேவை! அதுவும் மீண்டும் குழந்தைப்பருவத்தை எட்டியிருக்கும் மூத்த மனிதர்களுக்கு…?!! வடிகால்தான் வாழ்க்கை என்றாகி விடுகிறது! அத்தகைய ஒரு மனிதர்தான் கதாநாயகர்! 

கதாசிரியர்கள், திரை வசனகர்த்தாக்கள், இசை அமைப்பாளர்கள் போன்ற அனைவரும் மகிழ்ச்சியாக, முனைப்புடன், அமைதியாக வேலை செய்யும் இரவு பதினோரு மணியளவில் ஒரு எண்பது வயது மனிதர் அழைப்பு மணியை அடித்து கதை சொல்லியின் வீட்டிற்குள் நுழைகிறார்! தூக்கம் தொலைந்த இது போன்ற இரவுப்பறவைகளுக்கு சரியான நேரம்தான். ஓப்பனிங் ஷாட் கனப்பொருத்தம்!

கதாசிரியரின் வேலைக்கு தொந்தரவாகிவிட்டதா என்று உதட்டளவில் ஒரு கேள்வி! (உண்மையில் தொந்தரவுதானே?). தனது மாப்பிள்ளையிடம் கொடுக்கப்பட்டிருந்த கதாசிரியரின் இரண்டு  சிறுகதைத்தொகுப்புகளைப் படித்திருப்பதாகவும் நன்றாக இருப்பதாகவும் சொல்கிறார்.  இவரே யாரென்று புரியாத நிலையில் கனரா பேங்க் கணபதியின் மாமனார் என்றும் சிண்டிகேட் பேங்க் சிங்காரியின் தகப்பனாரென்றும் கூறி மேலும் குழப்புகிறார். (பெயரிலும் ஒரு மோனையை வைத்திருக்கும் கதாசிரியரின் குறும்புக்கு நம் புன்னகையை பரிசாக அளித்து…..தொடர்ந்து செல்வோம்). 

பக்கத்து வீட்டுக்காரரின் பெயரே ஞாபகம் வராமல் வெங்க……..??? என்று குழப்பத்தில் இருக்கும் 48 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் கதாசிரியருக்கு ‘இதுவேறயா?’ என்று தோன்றுவதில் ஆச்சரியமில்லை.  இதில் இடையே மனைவியின் பெயர் குறித்து பல்வேறு குறிப்புகள். அதிலும் பால்காரர் அழைப்பது “கோடி வீட்டு அம்மா” என்று. வீட்டில் ‘கோடி’ ரூபாய் இருக்கிறதோ இல்லையோ வீடு அடுக்குமாடிக் கட்டிடத்தின் ‘கோடி’யில் இருப்பதனால் காரணப்பெயர்.  இந்த வரிகளில் கதாசிரியரின் மேலோட்டமான குறும்பை ரசிக்கலாம்! (வீட்டில் கோடிகள் இல்லாவிட்டாலும் வீட்டுக்கார அம்மாக்கள் கோடீஸ்வரிகள் அல்லவா?). இதுவரையில் கதாசிரியரின் ஞாபக மறதிபற்றி சற்றே பிரஸ்தாபித்தாகிவிட்டது!  கணபதியோ அல்லது சிங்காரி பற்றியோ ஞாபகம் வராத பட்சத்தில் அது குறித்து ஏன் நேர விரயம் செய்யவேண்டும்? வந்தவரை கவனிக்கலாம்!


வந்தவருக்கோ உறக்கம் வரவில்லை என்பது முதல் விஷயம்.  அடுத்தது அந்த நேரத்தில் பேச்சுத்துணைக்கு ஆள்தேவை. கதாசிரியரிடம் தான் அவரது கதைகளை ரசித்ததைப் பற்றிச் சொல்லிவிட்டு அடுத்ததாக தன்னைப்பற்றி பேசத்துவங்கிவிடுகிறார். ஏழு மகன்கள் மற்றும் நான்கு மகள்களைப்பெற்று வளர்த்து நல்ல நிலையில் அனைவரும் வாழ்ந்துவரும் நேரத்தில், யாரையும் சார்ந்த்திருக்காமல் தனது பென்ஷன் பணத்தைக்கொண்டே வாழ்ந்து வந்த போதும், மனைவியை இழந்ததும் வாழ்க்கையில் வெறுமை சூழ நிம்மதியைத் தொலைத்த நிலைக்கு ஆளாகிவிடுகிறார்!  மகன்களெல்லாம் இவரை ரயில்பயணம் கூட வேண்டாமென்று விமானத்தில் பயணம் செய்யச்சொல்லும் அளவிற்கு வசதியிருந்தும்.. பணம் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியைக் கொடுத்துவிடுமா? மனஉணர்வுகளுக்கு வடிகால் இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை?  சூடான நீராவி வெளியேற வழியில்லாமல் போனால் Pressure Cooker என்ன ஆகும்? வெடித்துச் சிதறுமே! மனைவிதான் வயதான மனிதர்களுக்கு பக்கபலம், உற்றதுணை, உண்மை வடிகால் எல்லாமே என்பதனை கதாசிரியர் மிக அருமையாக சுட்டிக்காட்டியுள்ளார்! அதனால்தானே மனைவியானவர் வாழ்க்கைத்துணை நலம் என்றழைக்கப்படுகிறார்! அதுவும் காதுகேளாத மனைவியாக இருந்தாலும் கூட உணர்வுகளைப்புரிந்துகொள்வார் என்று ஆணித்தரமாக கூறியிருப்பது வரவேற்கத்தக்க உண்மை!  மற்றவர்கள் என்னதான் மகன், மகள், மருமகள், மருமகன், பேரன், பேத்திகள் என்று மிக நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் அவரவர்களின் Daily Routine, வீடுவந்தபிறகும் கூட, ஓய்வு அடுத்தநாளுக்காக தயாராகவேண்டிய நிர்பந்தம் என எவருக்கும் வயதானமனிதர்களுடன் நேரம் செலவிட வாய்ப்பில்லாமல் (ஏன்? விருப்பமில்லாமல் என்றுகூடசொல்லலாம்) போய்விடுகிறது. அதையும் கதையின் போக்கில் அருமையாகச் சொல்லிச்சென்றிருப்பதோடு, பாம்பறியும் பாம்பின் கால் என்பதுபோல வயதானவர்களின் சிரமங்களை வயதானவர்களே அறிவர் என்பதையும் கதையின் போக்கில் தொட்டுச் செல்லும் விதம் மிக அருமை!


கதைசொல்லியிடம் உங்கள் கதை அருமை என்று சொன்னவர், மேலும் சில புத்தகங்கள் வேண்டுமா என்ற கேள்விக்கு தான் கதைகளைப்படிக்கவில்லை என்றும் அட்டையில் கண்ட ஆசிரியரைப்பற்றிய குறிப்புகளை மட்டுமே படித்துவிட்டு அவரையே வடிகாலாக தேர்ந்தெடுத்ததையும் மட்டைக்கு ரெண்டு கீத்தாக சொல்லி சற்றே எரிச்சலையும் மூட்டிவிடுகிறார்.  கடைசியாக கதாசிரியர் கொட்டாவி விட்டபிறகே கிளம்புகிறார் வந்த மகானுபாவர்! அதுவும் எங்கே என்றுபார்த்தால் வீட்டிற்கு இல்லை.  கீழே! (இங்கே ஆசிரியர் கொடுத்துள்ள படத்திலுள்ள படிக்கட்டு நாம் சுட்டியை சுழற்றும் போது நமக்கே படியிறங்கும் உணர்வைத்தருகிறது! அருமை!)


மறுநாள் நமது கதாசிரியரின் துப்பறியும் சாம்பு வேலைமூலமாக கிடைத்த செய்தியைப்பார்த்தால்… அடுத்ததாக வயதானவரிடம் மாட்டிக்கொண்டவர் அப்பாவி வாட்ச்மேன்!  அவரை எழுப்பி இரவு 12 மணிக்கு டீ வாங்கிக் கொடுத்து விடியற்காலைவரை தனது சொந்தக் கதை – சோகக்கதைகளைப் பேசி வறுத்து எடுத்துவிடுகிறார்! இது ஒரு தினசரி நிகழ்வாக இருக்கிறது. “மாடு மேச்சமாதிரியும் ஆச்சு தம்பிக்கு பொண்ணு பாத்தமாதிரியும் ஆச்சு” என்ற சொலவடையைபோல காவலுக்குக் காவல் வடிகாலுக்கு வடிகால்! இங்கே ஒரு விஷயத்தை ஊன்றிக் கவனித்தால் இதில் வாட்ச்மேனுக்கும், ஓஸி டீ, டிபன், அவ்வப்பொழுது பண அன்பளிப்பு இத்தியாதி..இத்தியாதி..ரூபத்தில் அவனது பணப்பற்றாக்குறைக்கு ஒருவடிகாலாக அந்த பெரியவர் இருக்கிறார். மறைமுகமாகப் பார்த்தால் வாட்ச்மேன் வேலை நேரத்தில் தூங்கி அவனை வேலையைவிட்டே தூக்கிவிடக்கூடிய சாத்தியக்கூறிலிருந்தும்கூட பெரியவர் அவனைக் காப்பாற்றுகிறார். வாழ்க்கை என்பதே ஒருவருவருக்கொருவர் வடிகாலாக அமைந்திருப்பதில்தான் முழுமை அடைகிறது என்பதனை மிகத்தெளிவான நீரோடை போன்ற எளிய நடையில் அமைந்(த்)த கதையில் தெளிவுபடுத்துகிறார்!  வைகோ அவர்களின் மணிமகுடத்தில் அமைந்த மற்றும் ஒரு வைரக்கல் இக்கதை என்றால் மிகையில்லை!


மொட்டைமாடியில் கட்டில், மெத்தை, டார்ச் லைட், தண்ணீர், வீட்டிற்குள் வர டூப்ளிகேட் கீ எல்லாம் கொடுத்தவரை சரிதான்! முதியவரின் மனபாரத்திற்கு வார்த்தை ஒத்தடம் கொடுக்காமல், பேரப்பிள்ளைகள் மழலைக் குரலோடு முத்தமிட்டுக்கொஞ்சாமல் தனியே ஓரங்கட்டிவிட்டால் என்ன பயன்? தனக்கும் வயதாகும் என்பதும் வடிகால் தேடி ஓடும் நிலைவரும் என்பதும், வயதானால்தானே பெரும்பாலான மனிதர்களுக்குப்புரிகிறது?  அவர்களுக்கெல்லாம் இக்கதை ஒரு சரியான சாட்டையடி!


(அந்த வயதான மனிதரை கதாசிரியரே கண்ணில் படாமல் ஓரம்கட்ட நினைத்தால் பாவம் அந்த மனிதர் எங்கேதான் போவார்? இந்த உன்னத கதைக்கே காரணகர்த்தா அவர்தானே அவருக்கும் அவ்வப்பொழுது வடிகாலாய் இருந்தால் இன்னும் சில உன்னத கதைகள் கிடைக்குமே?! என்ற எண்ணமும் சற்றே எழுகிறது. )


எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு இந்த விமர்சனப்போட்டிமூலமாக ஒரு உன்னதமான வாய்ப்பை அளித்து, கரும்புத்தின்னக் கூலியும் கொடுத்து, மிக உயர்ந்த அங்கீகாரமும் தந்துவருவதும் ஒரு உண்மை வடிகால்!

மிகவும் நன்றி!
என்றும் அன்புடன்,
விஜி
வலைப்பூ: மாயவரத்தான் எம்ஜிஆர். 


மனம் நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.
    முதல் பரிசினை முத்தாக


வென்றுள்ள மற்றொருவர் யார்?
யார் ... யார் ... யார் ... அவள் யாரோ?


ஊர் பேர் தான் தெரியாதோ ?விமர்சன வித்தகி 


கீதமஞ்சரி


திருமதி  கீதா மதிவாணன்  


அவர்கள்.


[ From திருச்சி  To ஆஸ்திரேலியா ]


என்று சொன்னால் தான் தெரியுமா ! ;)


வலைத்தளம்: கீதமஞ்சரி

geethamanjari.blogspot.inமுதல் பரிசினை முத்தாக வென்றதுடன்


தன் இரண்டாவது ஹாட்-ட்ரிக்கிலும் 


ஆறாம் [ இறுதிச் ] சுற்று வரை எட்டிப்பிடித்துள்ளசாதனை நாயகி 


விமர்சன வித்தகி


திருமதி  கீதா மதிவாணன்  


அவர்களின் விமர்சனம் இதோமூன்று பாத்திரங்களைக் கொண்டு இருபரிமாணங்களில் கதையைக் கொண்டுபோனதோடு மூன்றாம் பரிமாணத்தில் வாசகராகிய நம்மையும் சிந்திக்கத் தூண்டும்  சிறப்பான சிறுகதை. மையப்பாத்திரமாய் முதியவர். நேரடி மற்றும் மறைமுக ஆதாயம் தேடும் பக்கப் பாத்திரங்களாய் வாட்ச்மேனும் கதாசிரியரும்.

எதைச் செய்வதாக இருந்தாலும் அதில் தனக்கு ஏதேனும் ஆதாயம் உள்ளதா என்று ஆராய்வது பொதுவான மனிதகுணம். தன்னைத் தேடி வந்துள்ள முதியவரின் பேச்சுக்களுக்கு செவிசாய்ப்பதில் தனக்கென்ன ஆதாயம் என்று மறைமுகமாய்த் தேட முனைகிறது கதாசிரியரின் மனம்.

ஒருவேளை அந்த முதியவர் கதாசிரியரின் கதைகளை வாசித்து அதுகுறித்த கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தால் தொடர்ந்து அவரை சந்திக்கவும் அவருடைய பேச்சுகளுக்கு செவிமடுக்கவும் இவருக்கு ஆர்வமுண்டாகியிருக்கலாம். ஆனால் இந்த முதியவரோ இப்படி ஒரு கதாசிரியர் இருக்கிறார் என்ற தகவலை மட்டும் அவருக்குக் கிடைத்தப் புத்தகங்களின் மூலம் அறிந்துகொண்டு, தனக்குத் தூக்கம் வராத பொழுதொன்றில் அவரை சந்திக்க ந்துவிடுகிறார்.

எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துப்பணிக்கென ஏற்ற பொழுதாகத் தேர்ந்தெடுப்பவை, ஊரடங்கியபின், வ்வித புறத்தொந்தரவும் இல்லாத அமைதியான சூழலைத் தரும் இரவுநேரங்கள்தாம். அந்த நேரத்திலும் யாராவது வந்து கதவைத் தட்டி பேச்சு கொடுத்தால் எப்படியிருக்கும்அதுவும் யாரென்றே தெரியாதவர் என்றால் எரிச்சல்தான் வரும். ஆனால் ஆச்சர்யம் தரும் வகையில் எழுத்தாளருக்கு எரிச்சல் வரவில்லை.

அமைதியாக முதியவரை வரவேற்று அமரவைத்துஅப்போதைக்கு கையில் இருக்கும் வெந்நீரைத் தந்து உபசரித்து நல்லவிதமாகவே பேசுகிறார். இவருடைய சிறுகதைகளை அவர் வாசித்ததாகச் சொன்னபோது கதாசிரியரின் மனத்திலும் பேச்சிலும் இருந்த உற்சாகம் அவர் வாசிக்கவில்லை என்று தெரிந்தவுடன் மாறிவிடுவது ஒரு படைப்பாளியின் சராசரி மனநிலையே அன்றி கதாசிரியரின் தனிப்பட்ட குணமன்று. 

இந்தக் கதையில் ஒரு புதுமையான கதாசிரியரைக் காட்டுகிறார் நிஜக்கதாசிரியர் கோபு சார். அதாவது கதையில் குறிப்பிடப்படும் கதாசிரியர் ஒரு மறதிக் கதாசிரியர். எப்போதும் கற்பனை உலகில் சஞ்சரிப்பவராக இருக்கவேண்டும். அதனால்தான் நிஜ உலகின் நிகழ்வுகள் அவருக்கு அந்நியமாகிப் போய்விடுகின்றன.

பக்கத்து வீட்டிலிருப்பவர் வெங்கடேசனாவெங்கடராமனாவெங்கடரமணியாவெங்கடசுப்ரமணினாவெங்கட்ராகவனா எனக் குழம்பும் இந்தக் கதாசிரியரால் எப்படி தன் கதையின் பாத்திரங்களுக்கான பெயர்களை சரியாக நினைவு வைத்துக்கொண்டு கதையை நகர்த்திச் செல்ல இயலும்கதையின் முதல் பகுதி முழுவதும் கதாசிரியரின் இந்த மறதிக்குணம் பிரதானப்படுத்தப்பட்டிருப்பதால் எழுந்த இந்த சிந்தனைக் கேள்வியானது கதையின் மையம் வேறு என்பது அடுத்தடுத்தப் பகுதிகளில் தெரியவருகையில் அதற்கு பதில்தேடும் அவசியம் ஏதுமின்றி விலக்கித்தள்ளப்படுகிறது.

பொதுவாக கதாசிரியர்கள் தாங்கள் பார்த்தகேட்டறிந்த மற்றும் அனுபவித்த நிகழ்வுகள் மூலம் தங்கள் கதைகளுக்கான கருக்களைப் பெறுகிறார்கள். உள்ளதை உள்ளபடியோ அல்லது அப்படி நடப்பதற்கு பதில் இப்படி நடந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மாற்றியோசித்தோ தங்களது கற்பனைகளைக் கட்டவிழ்த்து கதைகளைப் புனைகிறார்கள்.

இந்தக் கதையில் வரும் கதாசிரியரும் முதியவருடன் தன் நேரத்தைச் செலவழித்திருந்தால் நிறைய கதைகளுக்கான கரு கிடைத்திருக்குமே என்றுதான் முதலில் தோன்றியது. ஆனால் பெரும்பாலான முதியவர்கள் முதுமையில் வரும் மறதி காரணமாகதாங்கள் சொன்னதையே மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருப்பார்கள் என்பது நினைவுக்கு வந்தபோதுகதாசிரியர் தன் நேரத்தை மிச்சப்படுத்தவே முதியவரைத் தவிர்த்திருக்கலாம்  என்பதும் புரிந்துபோனது. தன் கதைகளை வாசிக்காமலேயே பாராட்ட வந்துவிட்டார் என்ற எரிச்சலும் சேர, அவரை அனுப்புவதிலேயே குறியாய் இருந்து அனுப்பிவிட்டார். ஆனால் ஒரு கதாசிரியருக்கே உண்டான ஆர்வத்தூண்டல் காரணமாக, முதியவர் மூன்றாம் மாடிக்குப் போகாமல் எங்கே போகிறார் என்று கவனித்து மறுநாள் வாட்ச்மேனிடம் விஷயத்தைத் தெரிந்துகொள்கிறார்.

வாட்ச்மேனின் கதாபாத்திரம் நேரடி ஆதாயம் தேடும் பாத்திரம் என்பது அவருடைய பேச்சின் மூலமே நமக்குத் தெரிந்துவிடுகிறது. முதியவரின் வருகையால் வாட்ச்மேனின் இராத்தூக்கம் கெட்டுப்போகிறது என்றாலும் முதியவரிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் டீ, காபி, டிபன் தவிர கையிலும் தாராளமாய்ப் பணம் கிடைத்துவிடுகிறது. வாட்ச்மேனைப் பொறுத்தவரை முதியவர் தரும் தொகைக்கு ஈடாக தலையாட்டினால் போதுமானது. பரஸ்பர சந்தோஷம் இருவருக்கும் கிடைத்துவிடுகிறது.

ஒன்றுக்கு பதினோரு பிள்ளைகளைப் பெற்றிருந்தும் மனைவியை இழந்த முதியவரின் நிலை பரிதாபம்தான். முதுமையில் தனிமை என்பது மிகவும் கொடுமை. வயதான காலத்தில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் ஆதரவாய் இருந்து தங்கள் உடல், மன வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவுமான துணைகளை வாய்க்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். இருவரில் ஒருவர் பிரிந்தாலும் மற்றவரின் மீதநாட்கள் நெருப்புமீது நடப்பது போன்று தவிப்பும் வேதனையும் தரும் நாட்களே.

என்னதான் தேவையானவற்றைப் பிள்ளைகள் செய்துகொடுத்தாலும் பெற்றவர்களுடன் உட்கார்ந்து பேச நேரத்தை ஒதுக்காவிடில் என்ன லாபம்? முதியவரின் பிள்ளைகளைக் குறை சொல்வதற்கேதுமில்லை. கதாசிரியர் குறிப்பிடுவது போல் இந்த அவசரயுகத்தில் அவரவர் தேவைகளை நிறைவேற்றவே அல்லும் பகலும் அல்லாடிக்கொண்டிருக்கின்றனர். இதில் பொறுமையாக அமர்ந்து பெற்றவர்களின் பேச்சுக்கு செவிமடுப்பதென்பது கனவிலும் கைகூடாத ஒன்று.

பிள்ளைகளைப் பொறுத்தவரை பெற்றவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்தால் மட்டுமே அவர்களை திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் வயதானவர்களின் உண்மையான மகிழ்ச்சி எது என்பது எவரும் உணர்ந்தபாடில்லை. உணர்ந்தாலும் அதை செயலாக்கும் எண்ணமில்லை.

இந்த நிலையில் கதாசிரியர் குறிப்பிடுவது போல் முதியோர் இல்லங்களின் தேவை அவசியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அதற்கு முதியவர்கள் இன்னும் மனத்தளவில் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ளவில்லை என்பது உண்மை. பற்றும் பாசமும் நிறைந்த அவர்களுடைய மனம், பற்றுக்கொடியென பிள்ளைகளின் நிழலிலேயே வாழ்ந்துமடியத்தான் விரும்புகிறது. அதைத் தவறென்று சொல்ல எவராலும் இயலாது.

மிகவும் சிக்கலான ஒரு சமூகப் பிரச்சனையைக் கதையாக்கி எந்த வித தீர்வும் சொல்லாது வாசகரின் மனப்போக்குக்கு கதையைச் செலுத்தி சிந்தனையைத் தூண்டிய கதைக்குப் பாராட்டுகள். சிந்தனைக்கு சில விஷயங்கள் என்று கதையின் தொடர்ச்சியாக ஒரு சுட்டியை இணைத்துள்ளபோதிலும், அதைவாசிப்பதன் மூலம் இந்தக்கதைக்கான விமர்சனத்தின் போக்கு மாறக்கூடும் என்பதால் கதாசிரியர் விட்ட இடத்திலேயே நானும் நிறுத்திக்கொள்கிறேன்.  
மனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
    
  
VGK-17 TO VGK-22


ஜொலிக்கும் வைரமாக   

வெற்றிப் புன்னகையுடன்VGK-17 முதல் VGK-22 வரை  அடுத்தடுத்து

தொடர்ச்சியாக இந்த விமர்சனப்போட்டியில் வெற்றி பெற்று 


மேலும் ஒரு பெரிய ஹாட்-ட்ரிக் இப்போது அடித்துள்ளார்கள்

  

ஜொலிக்கும் வைரமான தன் எழுத்தாற்றலால் !


 


 
VGK-07 முதல் VGK-14 வரை அடுத்தடுத்து

தொடர்ச்சியாக இதே விமர்சனப்போட்டியில் வெற்றி பெற்று 

 ஏற்கனவே ஒரு பெரிய ஹாட்-ட்ரிக் அடித்துள்ளவர்கள் 

என்பதும் குறிப்பிடத்தக்கது.


என்னைப்போன்ற  ஒருசிலருக்கு 

வாழைப்பழம் ஒன்றோ அல்லது இரண்டோ மட்டும் 

சாப்பிட்டால் திருப்தியாகாது. 
   

அதுவும் நல்ல பசிவேளையில் 

கனிவான ருசியான மலைவாழைப்பழமோ, 

ரஸ்தாளியோ அல்லது பச்சைப்பழமோ என்றால் 

குறைந்தது ஒரு ஆறு பழங்களாவது உரித்து 

உள்ளே தள்ளினால் மட்டுமே திருப்தியாகும்.அதுபோலவே இந்த வெற்றியாளர் 


இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறு முறை, எட்டு முறை எனபரிசுகளை உரித்து உள்ளே தள்ளி 


சாதனை படைத்து வருகிறார்கள்.


 


 

விமர்சன வித்தகி திருமதி 

 கீதா மதிவாணன்  
 பற்றிய சில சிறப்புச்செய்திகள்.இதுவரை நடைபெற்றுள்ள 

சிறுகதை விமர்சனப்போட்டிகளில் 

அதிகபட்ச ஹாட்-ட்ரிக் தொகையினை கூடுதல் பரிசாக 

ஒருமுறைக்கு இருமுறையாக வென்றுள்ள 

சாதனையாளராகத் திகழ்கிறார்கள்.
இதுவரை நடைபெற்றுள்ள 

சிறுகதை விமர்சனப்போட்டிகளில் 

மிக அதிகமான தடவைகள் 

பரிசுகளை வென்றுள்ளார்கள். இதுவரை அதிகத்தொகை பரிசுபெற்றோர்

பட்டியலிலும் முதல் இடம் வகிக்கிறார்கள்.இதுவரையிலான மொத்த வாய்ப்புகள் 22ல் 

20 வாய்ப்புகளை மட்டும் பயன்படுத்திக்கொண்டு

அதிலேயே 16 தடவைகள் வெற்றி பெற்றுள்ளார்கள்.இவர்களின் வெற்றிபெற்ற 16 விமர்சனங்களில்

12 விமர்சனங்கள் முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளன


என்பதும் குறிப்பிடத்தக்கது.


-oOo-தன் வெற்றியை சிரித்த முகத்துடன்


சிறப்பாகக் கொண்டாடிக்


கொண்டிருக்கும் 
விமர்சன வித்தகி 


திருமதி 
 கீதா மதிவாணன்  
அவர்களுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுக்கள். 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
தனது தனித்திறமையான எழுத்தாற்றலால் 

இவர்கள் மேலும் மேலும் இதே போட்டியில்

தொடர்ந்து வெற்றிக்கனிகளைப்பறித்து


பெரிய ஹாட்-ட்ரிக்கிலேயே

ஒரு ஹாட்-ட்ரிக் போட்டு


சாதனை படைத்தாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லை.


அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.


அன்புடன் VGK


        மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.


நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்


சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.இணைப்பு இதோ:காணத்தவறாதீர்கள் !


அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.oooooOoooooஇந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:

 ’ தாயுமானவள் ‘ 
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:வரும் வியாழக்கிழமை *03. 07. 2014*
இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.

 *Third July .... the Sweetest Day ! * 


 
என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

32 comments:

 1. முதல் பரிசினை முத்தாக வென்றுள்ளதிரு.ரவிஜி
  அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்..!

  ReplyDelete
 2. முதல் பரிசினை வென்று தன் வெற்றியை
  சிரித்த முகத்துடன்சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும்
  விமர்சன வித்தகி திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு
  மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. முதல் பரிசு மற்றும் ஹாட்ரிக் பரிசுகள் பெற்றமைக்காக என்னை வாழ்த்தி இட்ட பதிவைப் பார்த்து உளம்பூரித்து நிற்கிறேன். நன்றி சொல்லவும் நா எழவில்லை. தங்களுடைய இதுபோன்ற ஊக்குவிப்புகள்தாம் என்னைத் தொடர்ந்து சரியான பாதையில் செலுத்திக்கொண்டிருக்கின்றன என்பது உண்மை. மிக மிக நன்றி கோபு சார்.

  விமர்சனம் எழுதுவது எப்படி என்பதை இந்தத் தொடர் போட்டிகளின் மூலம்தான் கற்றுக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக அதில் தேர்ச்சி பெற்றுக்கொண்டு வருகிறேன். இப்படியொரு போட்டியை அறிமுகப்படுத்தியதோடு பரிசுகளும் ஊக்கப்பரிசுகளும் வழங்கியும், வாழ்த்தியும் உற்சாகமளித்துக்கொண்டிருக்கும் கோபு சார் அவர்களுக்கும், பொறுப்பான பணியை ஏற்று சிறப்புற செயல்பட்டுக்கொண்டிருக்கும் நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

  விடாமுயற்சியோடு தொடர்ந்து போட்டியிட்டு வெற்றிக்கனியை எட்டிப்பிடித்துள்ள திரு ரவிஜி அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. முதல் பரிசினை வென்றுள்ள சகோதரர் ரவிஜி அவர்களுக்கும சகோதரி கீதா மதிவாணான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்! V.G.K சார் பதிவர்களின் புதுப் புது போட்டோக்கள் உங்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதிசயம்! ஒரு பெரிய ஆல்ப தொகுப்பே உங்களிடம் இருக்கும் போல.

  ReplyDelete
 5. திரு. ரவிஜி அவர்களுக்கும், சகோதரி வித்தகி கீதமஞ்சரி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 6. ரவிஜி அவர்களுக்கும் சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. முத்தான முதல் பரிசினை வென்றுள்ள சகோதரி கீதா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! ‘சிறுகதை’ விமர்சனப்போட்டியில் நீங்கள் பெற்றுவரும் வெற்றிகள் ஒரு ‘தொடர்கதை’ ஆகிவிட்டது! கலக்குங்க! கேக் புகைப்படத்தில் மெழுகுவர்த்தியின் ஒளியைவிட உங்களின் வெற்றிப் புன்னகை ஒ(மி)ளிர்கிறது! தொடர வாழ்த்துக்கள்! உங்களுடன் முதல் பரிசினை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்புகிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி! அருமை நண்பர் வைகோ அவர்களே பண்ட் டிரான்ஸ்பர் பண்ற சிரமமெல்லாம் எதுக்கு? பேசாம உங்களோட ATM CARDஐயே சகோதரிக்கு அனுப்பி வச்சிடுங்க!
  வைகோ அவர்களுக்கும் நடுவர் அவர்களுக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
  நன்றி! என்றும் அன்புடன் MGR

  ReplyDelete
 8. முதலாம் பரிசு பெற்ற திரு ரவிஜி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. முதல் பரிசை வென்ற
  திரு . ரவிஜி ரவி அவர்களுக்கும் ,
  திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
  பாராட்டுக்கள் !

  ReplyDelete
 10. முதல் பரிசினை வென்றுள்ள சகோதரர் ரவிஜி அவர்களுக்கும சகோதரி கீதா மதிவாணான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 11. முதல் பரிசினை வென்றுள்ள திரு ரவிஜி அவர்களுக்கும திருமதி கீதா மதிவாணான் அவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. எனது 1000 மாவது ஆக்கமாக நாட்டியப் பேரோளி
  வாருங்கள்
  Vetha.Elanagthilakam

  ReplyDelete
 13. முதல் பரிசினை வென்றுள்ள திரு ரவிஜி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  ReplyDelete
 14. முதல் பரிசினை வென்றுள்ள சகோதரர் ரவிஜி அவர்களுக்கும சகோதரி கீதா மதிவாணான் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. திரு. ரவிஜி அவர்களுக்கும்
  திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கும்
  இனிய நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 16. http://mayavarathanmgr.blogspot.in/2014/07/vgk.html
  திரு. ரவிஜி [மாயவரத்தான் எம்.ஜி.ஆர். ] அவர்கள்

  இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

  அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
 17. திரு ரவிஜி அவர்களுக்கும திருமதி கீதா மதிவாணான் அவர்களுக்கும் என் பாராட்டுகள்

  ReplyDelete
 18. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

  அன்புடையீர்,

  வணக்கம்.

  31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இதுவரை, 2011 ஜனவரி முதல் 2014 ஜூன் வரையிலான 42 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

  என்றும் அன்புடன் VGK

  ReplyDelete
 19. தருமதி கீதாமதிவாணன் திரு ரவிஜி வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜூன் வரை முதல் 42 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசுபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   Delete
 20. //தன் வெற்றியை சிரித்த முகத்துடன் சிறப்பாகக் கொண்டாடிக்
  கொண்டிருக்கும் //

  இன்னும் ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அது ‘அடக்கத்துடன்’.

  திரு ரவிஜி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. Jayanthi Jaya October 23, 2015 at 6:04 PM

   வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

   **தன் வெற்றியை சிரித்த முகத்துடன் சிறப்பாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் **

   //இன்னும் ஒரு வார்த்தை சேர்த்துக் கொள்ளுங்கள். அது ‘அடக்கத்துடன்’. //

   சபாஷ் ஜெயா. மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். மேலும் இவர்கள் எங்க ஊர் பொண்ணு ஜெயா. மிகவும் அடக்கமானவர்கள்தான் என்பது அவர்கள் எனக்கு எழுதியுள்ள அனைத்துக் கடிதங்களிலும் என்னால் நன்கு உணர்ந்துகொள்ளப்பட்டதே.

   மேலும் இவர்களுக்கு நம் பாஷை நல்ல அத்துப்படி ..... ஜெ. அக்கம்பக்கத்து வீடுகளில் உங்களைப் போன்ற பல மாமிகளுடன் நிறைய பழகியிருப்பதால் ..... மிகச்சரளமாக எழுதமுடிகிறது இவர்களால். குறிப்பாக இவர்களின் இந்த கீழ்க்கண்ட மூன்று விமர்சனங்களை நேரம் கிடைக்கும்போது, மீண்டும் ரஸித்துப்படியுங்கோ. உங்களுக்கே நான் சொல்ல வருவது என்ன என்று நன்கு புரியவரும்.

   http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html

   http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html

   http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html

   //திரு ரவிஜி அவர்களுக்கும் திருமதி கீதா மதிவாணான் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.

   பிரியமுள்ள கோபு அண்ணா

   Delete
 21. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

  அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2014 ஜூன் மாதம் வரை முதல் 42 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  ReplyDelete
 22. பரிசு வென்ற திருமதிகீதாமதிவாணன் திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 23. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூன் மாதம் வரை, முதல் 42 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் அல்லது சில பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  ReplyDelete
 24. திருமதி கீதாமதிவாணன் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. திருமதி கீதாமதிவாணன் திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 26. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  570 out of 750 (76%) within
  19 Days from 15th Nov. 2015 ! :)
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


  அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
  திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூன் மாதம் முடிய, என்னால் முதல் 42 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 27. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  570 out of 750 (76%) that too within
  14 Days from 26th Nov. 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூன் மாதம் வரை, என்னால் முதல் 42 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete
 28. முதல் பரிசினை வென்றுள்ள திரு ரவிஜி அவர்களுக்கும திருமதி கீதா மதிவாணான் அவர்களுக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
  So far your Completion Status:

  570 out of 750 (76%) that too within
  Four Days from 17th December, 2015.
  -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

  அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2014 ஜூன் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 42 மாத அனைத்துப் பதிவுகளிலும்,தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  ReplyDelete