About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Monday, June 23, 2014

சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் ?

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்.

இந்த நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு இதுவரை நடுவராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருபவர் யார் என்பதை நான் இதுவரை யாரிடமும் தெரிவிக்காமலேயே மிகவும் இரகசியமாகவே கட்டிக்காத்து வந்துள்ளேன். 


  

  



      


  


     


 

 

   

 


முதல் 21 கதைகளுக்கும்  விமர்சனப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து பரிசுகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. முதல் 20 கதைகளுக்கான பரிசுத்தொகைகளும் அவரவர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன. http://gopu1949.blogspot.in/2014/06/vgk-11-to-vgk-20_16.html

போட்டி 50%க்கு மேல் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையிலும், இப்போதும் நடுவர் யார் என்பது தெரிவிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது. 

இந்தப்போட்டியின் 90% கதைகளுக்கு பரிசுகள் அறிவித்தவுடன் ‘நடுவர் யார்?’ என்பதற்கான விடையினை நானே என் பதிவினில் அறிவித்து விடலாம் என நினைத்துக்கொண்டுள்ளேன்.

அதனால் VGK-36 போட்டிக்கான பரிசு முடிவுகள் வெளியீட்டின்போது நடுவர் யார் என்ற தகவலும் என்னால் என் பதிவுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்படும். 

இதனால் கடைசி நான்கு கதைகளின் விமர்சனப் போட்டிகளில்  நடுவர் அவர்களும் நம்மோடு ஒருவராகவே சங்கமித்து விடுவதுடன் மனம்விட்டுப்பேசி, விமர்சனங்களை விமர்சித்து கருத்தளித்து மகிழக்கூடும் என எதிர்பார்க்கிறேன். 

இதற்கிடையில் இந்தப்போட்டியின் நடுவர் யாராக இருக்கும் என்பது பற்றி தாங்கள் சிந்தித்து யூகம் செய்ய, ஓர் போட்டி வைத்து, சரியாக யூகித்துக் கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று ஒரு யோசனையும் எனக்குள் உதயமாகியுள்ளது. 

ஒரு புதிய போட்டி என்று அறிவிக்கும் போது அதற்கான சில நிபந்தனைகளையும் சொல்ல வேண்டும் அல்லவா !

’சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்? - யூகித்துக் கண்டுபிடியுங்கள்’  என்ற போட்டியின் மிகச்சுலபமான நிபந்தனைகள் இதோ:

VGK-31, VGK-32, VGK-33 மற்றும் VGK-34 ஆகிய நான்கு சிறுகதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.

அவர்கள் எழுதியனுப்பும் விமர்சனங்களின் இறுதியில் என் யூகப்படி இந்த சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர்: _______________________ என ஒரே ஒருவரின் பெயரை மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும்.

VGK-31 To VGK-34 ஆகிய நான்கு கதைகளுக்கான விமர்சனங்களில் ஏதாவது ஒன்றில் மட்டுமே இந்தத்தங்களின் யூகத்தினை வெளிப்படுத்தினால் போதுமானது. அது எனக்குக் கிடைத்ததும் என்னிடமிருந்து அதற்கும் சேர்த்து ஒரு STANDARD ACKNOWLEDGEMENT தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

VGK-31 முதல் VGK-34 வரை தாங்கள் அனுப்பி வைக்கும் எல்லா விமர்சனங்களிலுமே மாற்றி மாற்றி நடுவர் பெயர்கள் எழுதி அனுப்பப்பட்டால் அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும்.  ’சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்? - யூகித்துக் கண்டுபிடியுங்கள்’ போட்டிக்கு அவை எதுவுமே எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளவும். 

இந்த சிறுகதை விமர்சனப்போட்டிகளில், சிலர் சில கதைகளுக்கு தொடர்ச்சியாக விமர்சனம் எழுதி அனுப்ப இயலாத சூழ்நிலைகள் ஏற்படக்கூடும் என்பதால் மட்டுமே இவ்வாறு அடுத்தடுத்து VGK-31, VGK-32, VGK-33, VGK-34 என நான்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தாங்கள் யூகிக்கும் நடுவர் பெயராக ஒரே ஒருவரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டு, VGK-31 To VGK-34 க்கான ஏதாவது ஒரேயொரு கதைக்கான விமர்சனத்துடன் எழுதி அனுப்ப வேண்டும். 

ஒன்றிற்கு மேற்பட்ட நடுவர் பெயர்களை எழுதி இவர்களுக்குள் யாரோ ஒருவர் என எழுதி அனுப்பினால் அவைகள் யாவும் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும். போட்டிக்கு அவை எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

மிகச்சரியாக யூகித்து எழுதுபவருக்கு ரூ. 108 [ரூபாய் நூற்று எட்டு மட்டும்] பரிசளிக்கப்படும். ஒன்றிற்கு மேற்பட்டு, இரண்டு, மூன்று அல்லது நான்கு பேர்கள் வரை சரியான விடையை எழுதியிருந்தால் பரிசுத்தொகை ரூ. 108 அவர்களுக்கு சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும். 

எனினும் நான்கு பேர்களுக்கு மேல் எவ்வளவு பேர்கள் சரியான விடையை எழுதியிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ரூ. 27 வீதம் பரிசு அளிக்கப்படும்.

நடுவர் யார்? என்ற தங்களின் யூகத்தினை யாரும் பின்னூட்டமாகக் கொடுக்கக்கூடாது. அவ்வாறு பின்னூட்டமாகக் கொடுத்தால் அவைகளும் போட்டிக்கு வந்ததாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறான பின்னூட்டங்கள் என்னால் என் பதிவுகளில் வெளியிடப்படவும் மாட்டாது.

போட்டிக்கு இன்னும் எட்டு வாரங்களுக்கு மேல் உள்ளன. இருப்பினும் இப்போதே மனதில் யூகிக்க ஆரம்பித்து விடுங்கள்.  ஒரேயொரு நடுவரை யோசித்து மனதினில் முடிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

’நடுவர் அம்மாவா ?’ அல்லது ’நடுவர் ஐயாவா ?’
அவரும் ஒரு பதிவர் தானா .... இல்லையா? 
திருச்சியில் என்னோடு கூடவே இருப்பவரா ?
திருச்சியைத் தாண்டி ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருப்பவரா?
ஒருவேளை தமிழ்நாட்டைத்தாண்டி இந்தியாவுக்குள் இருப்பவரா?
ஒருவேளை இந்தியாவைத்தாண்டி வெளிநாட்டில் இருப்பவரா?
வெளிநாட்டில் என்றால் அங்கேயே வசிப்பரா + வாழ்பவரா?

என பல கேள்விகளை தங்கள் மனதில் எழுப்பி விடை காண முயலுங்கள்.


  

ஆஹா .... பேஷ்,  பேஷ் ! 

இப்போதே இப்படி ஒரேயடியாக யோசிக்க 

ஆரம்பித்து விட்டீர்களே !! சபாஷ் !!!

oooooOooooo


இதையே யோசித்துக்கொண்டு 
இந்த வார சிறுகதைப்போட்டிக்கு
விமர்சனம் எழுதி அனுப்ப 
மறந்து விடாதீர்கள் ! ;)


இந்த வார சிறுகதை 
விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:



 VGK-23 


 ’ யாதும் ஊரே யாவையும் கேளிர் ‘ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:

வரும் வியாழக்கிழமை 
26 . 06. 2014

இந்திய நேரம் 
இரவு 8 மணிக்குள்.



 





என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

80 comments:

  1. தங்களின் சிறுகதை போட்டியே அருமையான ஒன்று. அதிலும் புதுமையாய் நடுவர்கள் யாராக இருக்கும் என்பது. நன்றா எழுதுகிறீர்கள்....நன்றாக போட்டியும் வைக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. R.Umayal Gayathri June 23, 2014 at 2:39 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தங்களின் சிறுகதை போட்டியே அருமையான ஒன்று. அதிலும் புதுமையாய் நடுவர்கள் யாராக இருக்கும் என்பது. நன்றா எழுதுகிறீர்கள்....நன்றாக போட்டியும் வைக்கிறீர்கள். பாராட்டுக்கள். நன்றி.//

      தங்களின் அன்பான முதல் வருகை? க்கும், அழகான கருத்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். - VGK

      Delete
  2. ஆசையோடு வந்தேன் ஐயா...

    அனேகமாக நடுவர் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...

    இதிலும் போட்டி வைத்தது மேலும் ஒரு சிறப்பு... பாராட்டுக்கள் ஐயா...

    ஆவலுடன் காத்திருக்கிறேன் - உங்களின் ரசிகன்...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல் தனபாலன் June 23, 2014 at 3:18 PM

      வாருங்கள் என் அன்பு ரஸிகரே !

      //ஆசையோடு வந்தேன் ஐயா...//

      ஆஹா வந்திடுச்சு ! ..... ஆசையில் ஓடி வந்தேன் !! பாட்டுப்போல அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ;)))))

      //அனேகமாக நடுவர் அம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...//

      அம்மா என்றால் எனக்கும் எப்போதுமே ஆசை உண்டு.
      [ என்னைப்பெற்ற என் அம்மாவைச் சொன்னேனாக்கும் ;) ]

      //இதிலும் போட்டி வைத்தது மேலும் ஒரு சிறப்பு... /

      ஏதோ ஒரு புதுமை. அதனால் மேலும் சிலருக்கு பரிசு கிடைக்கலாமே என்ற ஒரு நல்ல எண்ணம் மட்டுமே காரணம்.

      //பாராட்டுக்கள் ஐயா...//

      மிக்க நன்றி

      //ஆவலுடன் காத்திருக்கிறேன் - உங்களின் ரசிகன்...//

      தங்களைப்போலவே நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன் ..... யாரெல்லாம் இதில் பரிசு பெறப்போகிறார்களோ என்று.

      VGK

      Delete
  3. ////இந்த நம் ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு இதுவரை நடுவராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருபவர் யார் என்பதை நான் இதுவரை யாரிடமும் தெரிவிக்காமலேயே மிகவும் இரகசியமாகவே கட்டிக்காத்து வந்துள்ளேன்.
    ////

    ஆவ்வ்வ்வ்வ் இது பெரிய சிதம்பர ரகசியம்போல இருக்கும்போல இருக்கே :).. அப்பூடியெண்டெல்லாம் நான் சொல்ல மாட்டேன்ன்ன்ன்:)..

    /////மிகவும் இரகசியமாகவே கட்டிக்காத்து வந்துள்ளேன். /////
    தொடர்ந்தும் ரகசியத்தைக் கட்டிக்காக்க என் வாழ்த்துக்கள்... பூஸோ கொக்கோ :).. ரகசியத்தை வெளியே சொல்ல விடமாட்டேன்ன் நான்ன்:) ரகசியம் எனில் அது ரகசியமாகவே பேணப்பட வேண்டும் சொல்லிட்டேன்ன்ன்ன் :).

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [1]

      தொடர்ந்தும் ரகசியத்தைக் கட்டிக்காக்க என் வாழ்த்துக்கள்... பூஸோ கொக்கோ :)..
      ரகசியத்தை வெளியே சொல்ல விடமாட்டேன்ன் நான்ன்:) ரகசியம் எனில் அது ரகசியமாகவே பேணப்பட வேண்டும் சொல்லிட்டேன்ன்ன்ன் :).//

      OK அதிரா. அது விஷயம் [வைர நகைகள் விஷயம்] நமக்குள் மட்டும் இரகசியமாகவே இருக்கும். நீங்க கவலையே பட வேண்டாம்.

      Delete
  4. ///போட்டி 50%க்கு மேல் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையிலும், இப்போதும் நடுவர் யார் என்பது தெரிவிக்கப்படாமல் மர்மமாகவே உள்ளது. ///

    இப்போ இந்த மர்மத்தைக் கண்டுபிடித்து தீர்ப்புச் சொல்ல.. இன்னொரு நடுவர் தேவைபோல இருக்கே வைரவா... :)

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [2]

      //இப்போ இந்த மர்மத்தைக் கண்டுபிடித்து தீர்ப்புச் சொல்ல.. இன்னொரு நடுவர் தேவைபோல இருக்கே வைரவா... :)//

      அதிராவையே போட்டுடட்டுமா ? [அதற்கான நடுவராக ;)]

      Delete
  5. ///அதனால் VGK-36 போட்டிக்கான பரிசு முடிவுகள் வெளியீட்டின்போது நடுவர் யார் என்ற தகவலும் என்னால் என் பதிவுகளில் பகிரங்கமாக அறிவிக்கப்படும். ///

    எலக்‌ஷன் முடிவைக்கூட இவ்ளோ ஆவலாக எதிர்பார்க்க மாட்டோம்ம் ஆனா இதை எதிர்பார்க்கிறோம்ம்..

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [3]

      //எலக்‌ஷன் முடிவைக்கூட இவ்ளோ ஆவலாக எதிர்பார்க்க மாட்டோம்ம் ஆனா இதை எதிர்பார்க்கிறோம்ம்..//

      எலக்‌ஷன் அடிக்கடி நடக்கும் அதிரா. அதில் முடிவுகளும் அடிக்கடி வழுவட்டையாகவே இருக்கும். அதில் என்ன பெரிய ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பு வேண்டிக்கிடக்குது ?

      என் இந்தப்போட்டி எப்போதாவது, அதிசயமாக, அபூர்வமாக, ஆச்சர்யமாக, எல்லோருக்குமே ஆனந்தம் அளிப்பதாக நன்கு திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு, திறம்பட நடைபெற்று வருகிறதாக்கும் .... ஹூக்க்க்க்கும்.

      எப்போதாவது வருகை தந்து ஏதாவது அலம்பலாக எழுதிவரும் தங்களுக்கு எங்கே இதன் அருமை பெருமையெல்லாம் புரியப்போகிறது? ;)

      Delete
  6. //இதனால் கடைசி நான்கு கதைகளின் விமர்சனப் போட்டிகளில் நடுவர் அவர்களும் நம்மோடு ஒருவராகவே சங்கமித்து விடுவதுடன் மனம்விட்டுப்பேசி, விமர்சனங்களை விமர்சித்து கருத்தளித்து மகிழக்கூடும் என எதிர்பார்க்கிறேன். ///

    ஆஹா அருமை... இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. நடுவரையும் விமர்சனம் எழுத வைக்கும் திறமை.. கோபு அண்ணனை விட ஆருக்கு வரும்.. அப்பூடியெண்டெல்லாம் அதிரா சொல்ல மாட்டேன்ன்ன்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ இஸ் எ குட் கேள் சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ் :).

    //இதற்கிடையில் இந்தப்போட்டியின் நடுவர் யாராக இருக்கும் என்பது பற்றி தாங்கள் சிந்தித்து யூகம் செய்ய, ஓர் போட்டி வைத்து, சரியாக யூகித்துக் கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசளிக்கலாம் என்று ஒரு யோசனையும் எனக்குள் உதயமாகியுள்ளது. ////
    அவ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்பெஷல் கிளாஸ் ஏதுக்கும் போகிறாரோ கோபு அண்ணன்?????? :).

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [4]

      //ஆஹா அருமை... இப்பூடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே.. நடுவரையும் விமர்சனம் எழுத வைக்கும் திறமை.. கோபு அண்ணனை விட ஆருக்கு வரும்.. அப்பூடியெண்டெல்லாம் அதிரா சொல்ல மாட்டேன்ன்ன்.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்.. மீ இஸ் எ குட் கேள் சின்ஸ் சிக்ஸ் இயேர்ஸ் :).//

      அதானே, ஏதாவது கொளுத்திப்போட்டுவிட்டு, பிறகு எனக்கு எதற்கு ஊர்வம்ப்ஸ்ஸ்ஸ் என சொல்லித் தப்பிப்பதில் கில்லாடி தான் ..... அதிரா !

      //அவ்வ்வ்வ்வ்வ்வ் ஸ்பெஷல் கிளாஸ் ஏதுக்கும் போகிறாரோ கோபு அண்ணன்?????? :).//

      நோ நோ அதிரா ! இதற்கெல்லாம் ஸ்பெஷல் க்ளாஸ் எதற்கு? விட்டா, நானே எல்லோருக்கும் க்ளாஸ் எடுத்து பாடம் நடத்துவேனே ! கோபு அண்ணன் திறமைகளையெல்லாம் தொடர்ந்து கவனித்தால் அதிரா அசந்து போவது நிச்சயம்.

      நானே இதை இங்கு சொல்ல ஒரே ஷைய்யா இருக்குது அதிரா ;)))))

      Delete
  7. //ஒரு புதிய போட்டி என்று அறிவிக்கும் போது அதற்கான சில நிபந்தனைகளையும் சொல்ல வேண்டும் அல்லவா !///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இதுக்குமோ??

    ///’சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார்? - யூகித்துக் கண்டுபிடியுங்கள்’ என்ற போட்டியின் மிகச்சுலபமான நிபந்தனைகள் இதோ:

    VGK-31, VGK-32, VGK-33 மற்றும் VGK-34 ஆகிய நான்கு சிறுகதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.///// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வச்சிட்டாரையா ஆப்பூஊஊஊ...

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [5]

      //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :) இதுக்குமோ??//

      இது ரொம்ப முக்கியமான போட்டியாச்சே.... அதிரா !

      ஆமாம், அது என்ன கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ? நடுவர் அவர்கள் ஒருவேளை என்னைக்கேட்கலாம். அதனால் மட்டுமே கேட்கிறேன்.

      Delete
    2. VGK >>>> ATHIRA [5A]

      *****VGK-31, VGK-32, VGK-33 மற்றும் VGK-34 ஆகிய நான்கு சிறுகதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதி அனுப்புபவர்கள் மட்டுமே இந்தப்போட்டியில் கலந்து கொள்ள முடியும்.*****

      // கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... வச்சிட்டாரையா ஆப்பூஊஊஊ...//

      ;))))) அதெல்லாம் கரெக்ட்டா வைக்க வேண்டிய நேரத்தில், வைக்க வேண்டிய இடத்தில் குறிபார்த்து கரெக்ட்டா வெச்சுடுவேனாக்கும் ! ;)))))

      Delete
  8. //மிகச்சரியாக யூகித்து எழுதுபவருக்கு ரூ. 108 [ரூபாய் நூற்று எட்டு மட்டும்] பரிசளிக்கப்படும். ///

    ஹையோ இது ஏதோ குலசாமிக்கான நேர்த்திக்கடன்போல இருக்கே... :).

    //////இதையே யோசித்துக்கொண்டு
    இந்த வார சிறுகதைப்போட்டிக்கு
    விமர்சனம் எழுதி அனுப்ப
    மறந்து விடாதீர்கள் ! ;)
    /////
    ஹா...ஹா....ஹா.... சொந்த செலவிலேயே சூனியம் வைக்கிறீங்கள்... :) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :)

    ReplyDelete
    Replies
    1. VGK >>>> ATHIRA [6]

      *****மிகச்சரியாக யூகித்து எழுதுபவருக்கு ரூ. 108 [ரூபாய் நூற்று எட்டு மட்டும்] பரிசளிக்கப்படும்.*****

      //ஹையோ இது ஏதோ குலசாமிக்கான நேர்த்திக்கடன்போல இருக்கே... :).//

      ஆமாம் அதிரா 108 என்பது மிகச்சிறப்பான எண்ணிக்கை. அது ஏனென்றால் ஒருவருக்கே பரிசு என்றால்: ரூ. 108
      இருவருக்கு பிரித்துக்கொடுக்க நேர்ந்தால்: 54 + 54
      மூவருக்கு பிரித்துக்கொடுக்க நேர்ந்தால்: 36 + 36 + 36
      நால்வருக்கு பிரித்துக்கொடுக்க நேர்ந்தால்: 27+27+27+27
      அதனால் அதை அவ்வாறு அமைத்துள்ளேன்.

      மேலும் பரிசுக்குத்தேர்வாகும் எல்லோருமே என் குலதெய்வசாமிபோலத்தானே ! ;)


      Delete
    2. VGK >>>> ATHIRA [6A]

      *****இதையே யோசித்துக்கொண்டு இந்த வார சிறுகதைப்போட்டிக்கு விமர்சனம் எழுதி அனுப்ப
      மறந்து விடாதீர்கள் ! ;)*****

      //ஹா...ஹா....ஹா.... சொந்த செலவிலேயே சூனியம் வைக்கிறீங்கள்... :)//

      என் போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவரும் எழுத்துலக ஜெம்ஸ் ஆக்கும். தங்கங்களும் வைரங்களும் வைடூர்யங்களுமாக்கும். அதெல்லாம் அவர்கள் ஒன்றும் மறக்கவே மாட்டாங்கோ. சும்மா ஒரு நகைச்சுவைக்காக எழுதியுள்ளேனாக்கும்.

      இதுவரை நடைபெற்ற 21 போட்டி முடிவுகளில் உள்ள விமர்சனங்களை என் பதிவினில் பொறுமையாகப் படித்துப்பாருங்கோ. உங்களுக்கே தெரியும் அவர்களின் நவரத்தினங்களாக ஜொலிக்கும் எழுத்துத்திறமை. ;)))))

      // மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப் :)//

      ஆஹா, இதைக்கேட்க சந்தோஷமாக உள்ளது. மீயும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப். அப்பாடா மழை பெய்து ஓய்ந்தது போல உள்ளது. இதையே முன்பெல்லாம் வெங்கலக்கடையில் யானை புகுந்தாற்போல என நாங்களெல்லாம் சொல்வது உண்டு. ;))))) சத்தியமாக அதிராவை நான் யானை என்று சொல்லவே மாட்டேன். அதிரா பூஸார் என்ற பூனை மட்டுமே. எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ். நானும் இத்துடன் எஸ்கேப்ப்ப்ப்ப்.

      அன்புடன் கோபு அண்ணன்

      Delete
  9. நடுவர் நிச்சயம் திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. பொறுமையும் திறமையும் ஒருங்கே பெற்ற ஒருவர்தான் நடுவர்! ஓகே? :))))

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம். June 23, 2014 at 4:15 PM

      வாங்கோ ... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

      //நடுவர் நிச்சயம் திறமை வாய்ந்தவர் என்பதில் சந்தேகமில்லை. பொறுமையும் திறமையும் ஒருங்கே பெற்ற ஒருவர்தான் நடுவர்! ஓகே? :))))//

      எல்லாம் ஓகே தான் ஸ்ரீராம். சந்தேகமில்லாமல் திறமை வாய்ந்த, பொறுமையும் திறமையும் ஒருங்கே பெற்ற அந்த ஒருவர் - அதாவது நடுவர் யார் என்பது தங்களுக்குத் தெரிந்திருந்தால் அதை நான் வரவேற்கிறேன் ஸ்ரீராம்.

      போட்டி விதிகளின்படி விமர்சனப் போட்டியில் கலந்து கொண்டு உங்கள் யூகிப்பைத் தெரியப்படுத்தலாம். உங்கள் யூகம் சரியாய் இருந்தால் வெற்றி பெற வாய்ப்பும் கிடைக்குமல்லவா? வாழ்த்துக்கள்.

      அன்புடன் கோபு

      Delete
  10. திறமையான நடுவரைத்தேர்ந்தெடுத்த தங்களின் திறமைக்கும் அதற்கொரு போட்டியும் வைத்த சிந்தனைக்கும் பாராட்டுக்கள்.!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி June 23, 2014 at 8:00 PM

      வாங்கோ வணக்கம்.

      //திறமையான நடுவரைத்தேர்ந்தெடுத்த தங்களின் திறமைக்கும் அதற்கொரு போட்டியும் வைத்த சிந்தனைக்கும் பாராட்டுக்கள்.!//

      என் திறமையே, திறமையானவர்களை மட்டும் அடையாளம் கண்டு என்னை எப்படியாவது அவர்களுடன் இணைத்துக்கொள்ளப்பார்ப்பது மட்டுமே. அதன்பின் என் சிந்தனையெல்லாம் அவர்களைப்பற்றி மட்டுமே இருக்கும்,
      அவர்கள் என்னிடம் பாராமுகமாக இருந்தாலும் கூட.

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள். - VGK

      Delete
  11. ஆகா நடுவரைக் கண்டுபிடிக்கவே ஒரு போட்டியா
    பேஷ் பேஷ்

    ReplyDelete
    Replies
    1. கரந்தை ஜெயக்குமார் June 23, 2014 at 8:34 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆகா நடுவரைக் கண்டுபிடிக்கவே ஒரு போட்டியா
      பேஷ் பேஷ்//

      மிக்க நன்றி.

      Delete
  12. ஆஹா... போட்டிக்குள் போட்டி...
    கலக்கல் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சே. குமார் June 23, 2014 at 8:38 PM

      வாருங்கள், வணக்கம்.

      //ஆஹா... போட்டிக்குள் போட்டி... கலக்கல் ஐயா.//

      கலக்கலான கருத்துக்களுக்கு என் நன்றிகள்.

      Delete
  13. எல்லோரும் நடுவர் யார் என்று அறிவித்து விட்டுதான் போட்டியை தொடங்குவார்கள். நீங்கள் நடுவரையே சஸ்பென்ஸில் வைத்து விட்டீர்கள். அந்த அரங்கமா நகரில் உள்ளவனுக்கு மட்டுமே தெரியும். நானும் அவர் யார் என்று அறியும் ஆவலில் இருக்கிறேன். அவருக்கு எனது பாராட்டுக்கள்! உங்களுக்கும்தான்.

    ReplyDelete
    Replies
    1. தி.தமிழ் இளங்கோJune 24, 2014 at 7:03 AM

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //எல்லோரும் நடுவர் யார் என்று அறிவித்து விட்டுதான்
      போட்டியை தொடங்குவார்கள். நீங்கள் நடுவரையே
      சஸ்பென்ஸில் வைத்து விட்டீர்கள்.//

      ;)))))

      என் வழி ............................. எப்போதுமே

      தனி வழி ! ;)))))))))))))))))))))))))))))))))))))))

      >>>>>

      // அந்த அரங்கமா நகரில் உள்ளவனுக்கு மட்டுமே தெரியும்.//

      ஆஹா, இந்த வரிகளில் ஏதோ பொடி வைத்துள்ளீர்கள்.

      அதன் நெடி ஜாஸ்தியாத் தெரிகிறது. ;)))))

      எதிலும் தன்னை எந்த விதத்திலும் சம்பந்தப்படுத்திக்கொள்ளாமல் இருந்துவரும் என் எழுத்துலக மானஸீக குருநாதர் என்னை மன்னிப்பாராக !

      >>>>>

      //நானும் அவர் யார் என்று அறியும் ஆவலில் இருக்கிறேன்.
      அவருக்கு எனது பாராட்டுக்கள்! //

      நானும் அதே ஆவலில் இருப்பேன் - நடுவர் பெயரினை நான் அறிவிக்கும் போதும், அதற்கான மிகச்சரியான விடையை யூகித்துக் கண்டுபிடித்தவர்களுக்கெல்லாம் பரிசளிக்கும் போதும்.

      //உங்களுக்கும்தான்.//

      மிக்க நன்றி, ஐயா.

      அன்புடன் VGK

      Delete
  14. திறமையான நடுவரைத்தான் தேர்வு செய்வீர்கள்.
    கதை விமர்சன போட்டி, அடுத்து நடுவர் யார் போட்டி !
    புதுமைகள் தொடர்கிறது உங்கள் பதிவில்.
    பரிசுகள் மழை பொழிந்து கொண்டே இருக்கும் போலவே!
    மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.

    ஊரிலிருந்து வந்து அம்பாளடியாளின் கேள்விகணைகளில் மாட்டிக் கொண்டு பதில் அளித்து இருக்கிறேன் பதிவில்.
    உங்களுக்கு நேரம் இருக்கும் போது பார்த்து கருத்து சொல்லுங்கள்.

    டேஷ்போர்டில் சில பிரச்சனை, நாம் வழக்கமாய் படிக்கும் பதிவர்கள் பதிவுகளை எல்லாவற்றையும் காட்ட மாட்டேன் என்கிறது. புதிதாக வந்த பதிவு மட்டும் ஒன்றே ஒன்று மட்டும் வருகிறது மற்றவை காட்ட மறுக்கிறது. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கோமதி அரசு June 24, 2014 at 5:25 PM

      வாங்கோ, வணக்கம்.

      //திறமையான நடுவரைத்தான் தேர்வு செய்வீர்கள்.
      கதை விமர்சன போட்டி, அடுத்து நடுவர் யார் போட்டி !
      புதுமைகள் தொடர்கிறது உங்கள் பதிவில்.
      பரிசுகள் மழை பொழிந்து கொண்டே இருக்கும் போலவே!
      மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.//

      தங்களின் அன்பான வருகைக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

      //ஊரிலிருந்து வந்து அம்பாளடியாளின் கேள்விகணைகளில் மாட்டிக் கொண்டு பதில் அளித்து இருக்கிறேன் பதிவில். உங்களுக்கு நேரம் இருக்கும் போது பார்த்து கருத்து சொல்லுங்கள்.//

      அதே திருமதி அம்பாள் அடியாள் அவர்களும் மற்றொருவரும் என்னையும் தொடர் பதிவிட அழைப்பு விடுத்துள்ளார்கள்.

      இன்று எங்கு திரும்பினாலும் எல்லோருடைய பதிவுகளிலும் இதையேத்தான் இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது. ;(

      எதற்குமே நேரம் இல்லை தான். இருப்பினும் தங்கள் பதிவு பக்கம் வர முயற்சிக்கிறேன்.

      //டேஷ்போர்டில் சில பிரச்சனை, நாம் வழக்கமாய் படிக்கும் பதிவர்கள் பதிவுகளை எல்லாவற்றையும் காட்ட மாட்டேன் என்கிறது. புதிதாக வந்த பதிவு மட்டும் ஒன்றே ஒன்று மட்டும் வருகிறது மற்றவை காட்ட மறுக்கிறது. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தான் இதற்கு தீர்வு சொல்ல வேண்டும்.//

      டேஷ் போர்டு பிரச்சனை உலகம் பூராவும் பெரும்பாலும் எல்லாப்பதிவர்களுக்குமே ஏற்பட்டுள்ள பிரச்சனை தான்.

      எனக்கும் இது ஏற்பட்டுள்ளது. 2-3 நாட்களாக பிறரின் பதிவுகள் வழக்கம்போல வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகத் தெரியாமல் லேடஸ்டு ஒன்றே ஒன்று மட்டுமே காட்சியளித்து வருகிறது.

      நாளடைவில் சரியாகலாம் எனச் சொல்லுகிறார்கள். பார்ப்போம். அதற்காக ஒன்றும் கவலைப்படாதீர்கள்.

      ஒருவிதத்தில் இது நிம்மதியே எனவும் தோன்றுகிறது. ;)

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  15. நல்லபோட்டி:)) வெல்பவர் யாரோ ? :)) விரைவில் பார்ப்போம்.

    நடுவருக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மாதேவி June 24, 2014 at 6:08 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்லபோட்டி:)) வெல்பவர் யாரோ ? :)) விரைவில் பார்ப்போம். //

      நீண்ட நாட்களுக்குப்பின் தங்களை இங்கு பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தங்களின் அன்பு வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      //நடுவருக்கு வாழ்த்துகள்.//

      நடுவர் சார்பில் தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  16. போட்டிகளைச் சிறப்பாக நடத்தும் தாங்கள் நடுவர் அமைப்பதிலும் போட்டி நடத்தி எங்களை நன்கு சிந்திக்கவைத்துவிட்டீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country
      June 24, 2014 at 7:31 PM

      வாருங்கள், வணக்கம்.

      //போட்டிகளைச் சிறப்பாக நடத்தும் தாங்கள் நடுவர் அமைப்பதிலும் போட்டி நடத்தி எங்களை நன்கு சிந்திக்கவைத்துவிட்டீர்கள்.//

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

      Delete
  17. நடுவர் யாரென்று யூகிக்க முயற்சிக்கிறேன் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. Seshadri e.s. June 24, 2014 at 8:05 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நடுவர் யாரென்று யூகிக்க முயற்சிக்கிறேன் ஐயா!//

      மிக்க நன்றி.

      நடுவர் யார் என்ற யூகம் ஒருவேளை தவறாயினும், விமர்சனம் வெற்றி பெறலாம். விமர்சனம் ஒருவேளை பரிசை இழந்தாலும், நடுவர் யார் என்பதில் வெற்றி கிட்டலாம். விமர்சனத்திற்கும் இதற்கும் சேர்ந்தே கூட இரு வெற்றிகளாக சேர்ந்து அமையும் சந்தர்ப்பமும் ஏற்படலாம்.

      அதனால் முயற்சி செய்யுங்கள். Trial Cost Nothing என்பார்களே. அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். - vgk

      Delete
  18. போட்டிக்குள் போட்டி...
    அவருக்கு - உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. kovaikkavi June 24, 2014 at 8:32 PM

      வாங்கோ, வணக்கம்.

      //போட்டிக்குள் போட்டி...//

      ;) ஆம். [பணப்] பெட்டிக்குள் பெட்டி போல ! ;)

      //அவருக்கும் - உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
      Vetha.Elangathilakam.//

      வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி. - vgk

      Delete
  19. நடுவர் யாரென்று கண்டுபிடிக்கவும் ஒரு போட்டி.....

    புதிது புதிதாய் யோசித்து பரபரப்பாக ஒரு பதிவை போட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. யூகித்து வைத்திருக்கிறேன். சரியா தவறா என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெங்கட் நாகராஜ் June 25, 2014 at 12:03 AM

      வாங்கோ வெங்கட் ஜி, வணக்கம்.

      //நடுவர் யாரென்று கண்டுபிடிக்கவும் ஒரு போட்டி.....

      புதிது புதிதாய் யோசித்து பரபரப்பாக ஒரு பதிவை போட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.//

      மிகவும் சந்தோஷம் ஜி ;) இதுவரை இந்த சிறுகதை விமர்சனப் போட்டிப்பக்கமே தலை வைத்துப்படுக்காத உங்களைப்போன்ற சிலர் அந்த நான்கு கதைகளில் ஏதாவது ஒன்றுக்காவது விமர்சனம் எழுதியும் நடுவர் பெயரை எழுதியும் அனுப்பக்கூடும் என்று நினைத்தும் இந்தப்பரபரப்பான போட்டியினை யோசித்து நான் வெளியிட்டுள்ளேன். ;)))))

      //யூகித்து வைத்திருக்கிறேன். சரியா தவறா என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.//

      சும்மா ஒரு ஜாலிக்கு போட்டியில் கலந்து கொள்ளுங்கள். தம்பதிப்பதிவர்களான உங்களுக்கோ நடுவர் யார் என்று சொல்ல இரண்டு தனித்தனி வாய்ப்புகள் உள்ளனவே ! ;)

      அதனால் இரண்டு விமர்சனங்களாக வந்து சேரட்டும்.

      அன்புடன் VGK

      Delete
  20. புதுமையான போட்டிகளில் தங்களுக்கு இணை தாங்களே என்பதை மறுபடியும் நிரூபிக்கும் அருமையானதோர் போட்டி. பாராட்டுகள் கோபு சார். நடுவர் யாராக இருக்குமென்று எனக்குள் ஒரு யூகம் இருக்கிறது. பார்ப்போம் என்னுடைய யூகம் சரியாக இருக்கிறதாவென்று. முடிவு தெரிந்துகொள்ள இப்போதே ஆவலா உள்ளேன். போட்டியில் கலந்துகொள்ளும் விதிமுறைகளும் ஒரு சவாலான விதிமுறைகள்தாம். பலரும் கலந்துகொண்டு பரிசுகளைப் பங்கிட்டுக்கொள்ள அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    (விரலில் காயம் பட்டதால் இரண்டுநாளாய் தட்டச்சுக்கு ஓய்வுதரவேண்டிய நிலை. பல பதிவுகளை வாசிக்க மட்டுமே முடிந்தது. அதனால்தான் தங்கள் பதிவை வாசித்தபின்பும் பின்னூட்டமிடத் தாமதமாயிற்று.)

    ReplyDelete
    Replies
    1. கீத மஞ்சரி June 25, 2014 at 6:17 AM

      வாங்கோ, வணக்கம்.

      //புதுமையான போட்டிகளில் தங்களுக்கு இணை தாங்களே என்பதை மறுபடியும் நிரூபிக்கும் அருமையானதோர் போட்டி. பாராட்டுகள் கோபு சார். //

      மிகவும் சந்தோஷம். மகிழ்ச்சி. தங்களின் பாராட்டுக்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      //நடுவர் யாராக இருக்குமென்று எனக்குள் ஒரு யூகம் இருக்கிறது. பார்ப்போம் என்னுடைய யூகம் சரியாக இருக்கிறதாவென்று. முடிவு தெரிந்துகொள்ள இப்போதே ஆவலா உள்ளேன்.//

      ஆஹா, தங்களின் யூகத்தினைத் தெரிந்துகொள்ள நானும் இப்போதே மிகுந்த ஆவலாகவே உள்ளேன்.

      // போட்டியில் கலந்துகொள்ளும் விதிமுறைகளும் ஒரு சவாலான விதிமுறைகள்தாம்.//

      இதைத்தாங்கள் புரிந்து பாராட்டியுள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ;)))))

      //பலரும் கலந்துகொண்டு பரிசுகளைப் பங்கிட்டுக்கொள்ள அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். //

      குறைந்தது 100 பேர்களாவது மிகச்சரியாக யூகிக்கக்கூடும் என நான் யூகிப்பதால் ரூ. 27 x 100 = ரூ. 2700 தனியாக இப்போதே ஒதுக்கி வைத்து விட்டேனாக்கும் ;)))))))))))))))))

      //(விரலில் காயம் பட்டதால் இரண்டுநாளாய் தட்டச்சுக்கு ஓய்வு தரவேண்டிய நிலை. பல பதிவுகளை வாசிக்க மட்டுமே முடிந்தது. அதனால்தான் தங்கள் பதிவை வாசித்தபின்பும் பின்னூட்டமிடத் தாமதமாயிற்று.)//

      அடடா, இதைக் கேட்கவே என் மனதுக்கு மிகவும் சங்கடமாக உள்ளது. திருஷ்டியாகப்போய் இருக்கும் எனவும் எனக்குத் தோன்றுகிறது. ;(

      இதில் வேடிக்கை என்னவென்றால் தங்களைப்போலவே என்னுடன் மிகுந்த வாத்ஸல்யத்துடன் இதுவரை பழகிவரும் நம் பதிவர்கள் - கதம்ப உணர்வுகள் திருமதி மஞ்சுவுக்கும், கற்றலும் கேட்டலும் திருமதி ராஜி க்கும் இதுபோலவே விரல்களில் காயம் பட்டது என்று முன்பு என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

      என் காதில் போட்டு விட்டீர்கள் அல்லவா .... விரைவில் குணமாகிவிடும். பிரார்த்திக்கிறேன்.

      பிரியமுள்ள கோபு [VGK]

      Delete
  21. அன்புள்ள ஐயா.

    வணக்கம். ரிஷபனிடம் பேசிகொண்டிருந்தேன். நிறைய செய்திகள் சொன்னார். உண்மையில் உங்களின் சிறுகதை இலக்கியத்திற்கான தொண்டு வியக்க வைக்கிறது. இவ்வளவு சரியாகவும் திட்டமிடலோடும் அழகாவும் நடத்தி அதற்கான பரிசுகளையும் வழங்கி ஒரு அமைப்பின் பணியை தனி ஒருவராக செய்கிறீர்கள். இதுபோல சிலருக்கே இது வாய்க்கும். நடுவரை யூகிக்க ஒரு போட்டி. நல்ல நலம் செழிக்கும் இத்தகைய நிகழ்வுகள் மன நிறைவாக உள்ளன. என் மனமார்ந்த வாழ்த்துகக்ள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ஹ ர ணி June 25, 2014 at 8:59 AM

      //அன்புள்ள ஐயா. வணக்கம். //

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //ரிஷபனிடம் பேசிகொண்டிருந்தேன். நிறைய செய்திகள் சொன்னார்.//

      ஆஹா, என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தீர்களா ! நிறைய செய்திகள் சொன்னாரா ? !!!!!!!!! அவற்றை அறிய
      மிகவும் ஆவலாக உள்ளதே !!!!!!

      அடியேன் அவருடன் பேசி ஒரு ஆறு மாதங்களாவது இருக்கும், ஐயா. அலுவலகத்தில் உயர் பொறுப்பினில் இருப்பதால் YEAR ENDING, ACCOUNTS CLOSING, AUDITING என எப்போதும் படு BUSY யாக இருக்கக்கூடும் என்பதால் நான் அடிக்கடி தொடர்பு கொண்டு அவரை தொந்தரவு செய்ய விரும்புவது இல்லை. என் வலைத்தளத்தில் இந்தப்போட்டி வேறு நடைபெறுவதால் நானும் எப்போதும் BUSY யாகிவிட்டதால் சுத்தமாக நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறோம். என் பதிவுகள் பக்கமும் இப்போதெல்லாம் அவர் ஏனோ சுத்தமாக வராமலேயே உள்ளார்.

      //உண்மையில் உங்களின் சிறுகதை இலக்கியத்திற்கான தொண்டு வியக்க வைக்கிறது. இவ்வளவு சரியாகவும் திட்டமிடலோடும் அழகாவும் நடத்தி அதற்கான பரிசுகளையும் வழங்கி ஒரு அமைப்பின் பணியை தனி ஒருவராக செய்கிறீர்கள். இதுபோல சிலருக்கே
      இது வாய்க்கும். //

      ஏதோ தங்களைப்போன்ற சான்றோர்களின் + என் நலம் விரும்பிகளின் பாராட்டுக்களும், வாழ்த்துகளும், நல்லெண்ணங்களுமே, எனக்கு இவ்வாறு ஒரு இலக்கியத்தொண்டு செய்யும் அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது என்று நினைக்கிறேன். மகிழ்கிறேன்.

      //நடுவரை யூகிக்க ஒரு போட்டி. நல்ல நலம் செழிக்கும் இத்தகைய நிகழ்வுகள் மன நிறைவாக உள்ளன. என் மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.//

      தங்களின் அன்பான அபூர்வமான வருகைக்கும், அழகான விரிவான கருத்துக்களுக்கும், மனம் நிறைவாக அளித்துள்ள வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

      என்றும் அன்புடன் VGK

      Delete
  22. புதுப்புது ஐடியாக்கள் அமர்க்களம்!

    ReplyDelete
    Replies
    1. கே. பி. ஜனா... June 25, 2014 at 12:52 PM

      வாங்கோ, வணக்கம்.

      //புதுப்புது ஐடியாக்கள் அமர்க்களம்!//

      தங்களின் அன்பான வருகைக்கும் அமர்க்களமான கருத்துக்களுக்கும் என் அன்பான இனிய நன்றிகள். -VGK

      Delete
  23. நடுவர் யாரோ அவர் இந்தப்போட்டிக்கும் நடுவராயிருந்தாலும் இருக்கும். போட்டிக்குள் போட்டி. புதுசு,புதுசாக போட்டிகள்.
    எல்லோருக்கும் சிந்திக்க ,பரிசுவாங்க புதுப்புது ஸமாசாரங்கள்.
    அன்புடன்

    ReplyDelete
    Replies
    1. Kamatchi June 25, 2014 at 5:05 PM

      வாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.

      //நடுவர் யாரோ அவர் இந்தப்போட்டிக்கும் நடுவராயிருந்தாலும் இருக்கும். //

      இந்த ‘நடுவர் யாரோ’ போட்டிக்கு மட்டும் நானே தான் நடுவர். இதிலாவது நடுவர் வேலையைக் கொஞ்சம் குறைக்கலாம் என்பதால் மட்டுமே ;)))))

      //போட்டிக்குள் போட்டி. புதுசு, புதுசாக போட்டிகள்.
      எல்லோருக்கும் சிந்திக்க, பரிசுவாங்க புதுப்புது ஸமாசாரங்கள். அன்புடன்//

      எல்லாம் தங்களின் ஆசீர்வாதங்கள். தங்களின் அன்பான வருகைக்கும், ஊக்கமளிக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      பிரியமுள்ள கோபு

      Delete
  24. மற்றவர்களை மகிழ்விக்க Surprise Gift தருவது வழக்கம்! நடுவர் யார் என்ற Surpriseஐ கண்டுபிடிக்கவும் ஒரு Gift! வாத்யாரே(MGR) உங்களின் புதுமைக்கு அளவே இல்லை! கலக்குங்க!

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI June 25, 2014 at 6:30 PM

      வாருங்கள் நண்பரே !

      //மற்றவர்களை மகிழ்விக்க Surprise Gift தருவது வழக்கம்! நடுவர் யார் என்ற Surpriseஐ கண்டுபிடிக்கவும் ஒரு Gift! வாத்யாரே(MGR) உங்களின் புதுமைக்கு அளவே இல்லை! கலக்குங்க!//

      உண்மையில் கலக்கப்போவது யாரு? என்பது வரும் ஞாயிறு அன்று எல்லோருக்குமே தெரிந்துவிடப்போகிறது நண்பா ....... அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவைக் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் கோபு [VGK]

      Delete
  25. புதுமையான போட்டி!
    வியக்க வைக்கும் போட்டி!
    சுமார் 100 பேர்களுக்கு வரை பரிசு பொதி! (பணம்)

    அருமை!
    நன்று!

    ReplyDelete
    Replies
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் June 25, 2014 at 9:11 PM

      வாருங்கள், வணக்கம்.

      //புதுமையான போட்டி! வியக்க வைக்கும் போட்டி!
      சுமார் 100 பேர்களுக்கு வரை பரிசு பொதி! (பணம்)
      அருமை! நன்று!//

      நன்றி, நன்றி, நன்றி ! எல்லாம், எல்லாம் வல்ல இறைநாட்டப்படி இனிதே நிறைவேற வேண்டும். பார்ப்போம். அன்புடன் vgk

      Delete
  26. இன்றைய வலைச்சர
    அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
  27. வை.கோபாலகிருஷ்ணன் June 26, 2014 at 8:58 AM

    இராஜராஜேஸ்வரி June 26, 2014 at 8:37 AM

    //இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!//

    ஆஹா, தங்களின் தங்கமான தகவலுக்கு மிக்க நன்றி.

    அடியேன் இதுவரை குறித்து வைத்துள்ள ரிகார்டுகளின்படி, இது வலைச்சரத்தில், என்னைப்பற்றிய 87வது அறிமுகமாக அமைந்துள்ளது.

    நடுவில் ஏதாவது ஒன்றிரண்டு என் கவனத்திற்கே வராமலும்கூட இருந்திருக்கலாம்.

    இன்னும் 13 தடவை இதுமாதிரி ஸ்வீட் நியூஸ் தாங்களே கொடுங்கோ. அப்போது அந்த எண்ணிக்கை ஒருநாள் 100 ஆகும்..

    100 ஆனதும் அதைப்பற்றி ஓர் சிறப்புப்பதிவு வெளியிடணும் என நினைத்துக்கொண்டுள்ளேன். ;) - vgk

    ReplyDelete
  28. 2014 ஆம் ஆண்டின் (108) வது பதிவுக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. இராஜராஜேஸ்வரி June 27, 2014 at 12:03 AM

      வாங்கோ, வணக்கம்.

      //2014 ஆம் ஆண்டின் (108) வது பதிவுக்கு வாழ்த்துகள்..!//

      தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். அதனாலேயே பரிசுத்தொகையும் ரூ.108 என அமைந்துள்ளதோ ! ;))))) வீட்டுக்கதவு எண் 108 என்று அமைந்துள்ளவருக்கே பரிசும் கிடைக்குமோ ;))))) - vgk

      Delete
  29. இப்போது தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். புதுமையான போட்டி.

    ReplyDelete
    Replies
    1. Geetha Sambasivam June 28, 2014 at 6:47 AM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்போது தான் இந்தப் பதிவைப் பார்க்கிறேன். புதுமையான போட்டி.//

      கொஞ்ச நாட்களாகவே உங்களை இந்தப்பக்கம் காணோமே என நினைத்துக்கொண்டே இருந்தேன். வந்துட்டேள். சந்தோஷமே.

      இந்தப் புதுமையான போட்டிக்கான பரிசினைப்பெறும் வாய்ப்பு தங்களுக்கு மிக மிக அதிகம் என எனக்கென்னவோ உள்ளூரத் தோன்றுகிறது. பார்ப்போம். வாழ்த்துகள். ;)))))

      அன்புடன் கோபு

      Delete
    2. ஹிஹிஹிஹ்ஹி.. தெரிஞ்சு போச்சு.. இந்தப் பதிலைப் படிச்சதும் நடுவர் யாருனு தெரிஞ்சு போச்சு.

      Delete
  30. அடடே... பிரமாதம். மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா !!

    ReplyDelete
    Replies
    1. Manjubashini Sampathkumar July 10, 2014 at 4:09 PM

      வாங்கோ மஞ்சு, வணக்கம்.

      //அடடே... பிரமாதம். மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் அண்ணா !!//

      மிகவும் சந்தோஷம் மஞ்சு. ;)))))))))))))))))))))))))))))))))))))

      Delete
  31. வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Mythily kasthuri rengan July 18, 2014 at 5:34 AM

      //வணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது //http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி!//

      தங்களின் அன்பான வருகைக்கும் இனிப்பான தகவலுக்கும் மிக்க நன்றி.

      Delete
  32. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. Dr B Jambulingam July 18, 2014 at 7:10 AM

      வாருங்கள், வணக்கம் ஐயா.

      //மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களின் பதிவைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
      www.drbjambulingam.blogspot.in
      www.ponnibuddha.blogspot.in//

      தங்களின் அன்பான வருகைக்கும், தகவலுக்கும், மகிழ்ச்சிக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி, ஐயா.

      Delete
  33. மிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..!

    நண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:
    Happy Friendship Day 2014 Images

    ReplyDelete
  34. நாலு பேரை சொல்லி இவங்கள்ள ஒருத்தர்னு சொல்லலாம்னு மனசுல ஓடினதை அப்படியே படிச்சு மண்டையில் தட்டிட்டீங்களே நியாயமா? போங்க சார். பரிசும் வேணாம் ஒண்ணும் வேணாம். ரெண்டு பக்ஷணமாவது கொடுங்க..

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை August 15, 2014 at 5:37 PM

      வாங்கோ, சார், வணக்கம்.

      //நாலு பேரை சொல்லி இவங்கள்ள ஒருத்தர்னு சொல்லலாம்னு மனசுல ஓடினதை அப்படியே படிச்சு மண்டையில் தட்டிட்டீங்களே நியாயமா? போங்க சார். பரிசும் வேணாம் ஒண்ணும் வேணாம். ரெண்டு பக்ஷணமாவது கொடுங்க..//

      எப்போது வந்தாலும் பக்ஷணம் கிடைக்கும். No problem.

      எனக்கென்னவோ தாங்கள் தான் இந்தப்பரிசினை வெல்லப் போகிறீர்களோ என்னவோ என என் உள்மனது சொல்கிறது. பார்ப்போம்.

      அன்புடன் VGK

      Delete
  35. சரி.. ஒவ்வொரு விமரிசனத்துலயும் ஒவ்வொரு பெயரையாவது அனுப்பலாமா? அதுவும் கூடாதா? ஹ்ம்ம்.

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை August 15, 2014 at 5:39 PM

      வாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றி.

      //சரி.. ஒவ்வொரு விமரிசனத்துலயும் ஒவ்வொரு பெயரையாவது அனுப்பலாமா? அதுவும் கூடாதா? ஹ்ம்ம்.//

      குழப்பம் ஏதும் இல்லாமல் எதுவும் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறெல்லாம் நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

      நடுவர் பெயர் விஷயத்தில் தாங்கள் எப்படி எழுதினாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையே இல்லை. எப்படியோ நான்கு கதைகளுக்கும் நான்கு விமர்சனங்கள் தங்களிடமிருந்து எனக்குக்கிடைத்தால் மகிழ்ச்சியே.

      நடுவருக்கான பரிசு இல்லாவிட்டாலும், தாங்கள் அனுப்பும் விமர்சனத்திற்கான நான்கு பரிசுகளைத் தட்டிச் செல்லவும் தங்களுக்கு வாய்ப்பு உண்டு.

      நடுவர் பெயரைத் தவறாக எழுதினாலும், தங்கள் விமர்சனம் நிராகரிக்கப்படாமல் நடுவர் அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

      நடுவர் யார் ? போட்டியில் பரிசு.
      விமர்சனத்திற்கான பரிசு கிடைக்க வாய்ப்பு.
      ஹாட்-ட்ரிக் அடித்தால் அதற்கான பரிசுக்கான வாய்ப்பு.
      போனஸ் பரிசு ஏதும் அறிவிக்கப்பட்டால் அதற்கான வாய்ப்பு என அனைத்து வாய்ப்புகளும் கிட்டிட VGK-31 முதல் VGK-40 வரை தொடர்ந்து விமர்சனம் அனுப்புங்கோ, ப்ளீஸ்.

      அன்புடன் கோபு

      Delete
  36. நான் இந்த விளையாட்டில் கலந்து கொள்ளவில்லை.

    ReplyDelete
  37. சரியான போட்டிக்காரர் தான். எப்படில்லாம் யோசித்து எப்படில்லாம் போட்டி வைக்கிறதோட பரிசு மழை வேர. ஊக்கபரிசு போனஸ் பரிசு முதல் ரெண்டாம் மூணாம் பரிசுகள்னு எவ்வளவு பரிசுகள். கர்ண பரம்பரையோ.??????

    ReplyDelete
    Replies
    1. பூந்தளிர் August 26, 2015 at 1:48 PM

      வாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.

      //சரியான போட்டிக்காரர் தான். எப்படியெல்லாம் யோசித்து எப்படியெல்லாம் போட்டி வைக்கிறதோட பரிசு மழை வேற. ஊக்கபரிசு போனஸ் பரிசு முதல் ரெண்டாம் மூணாம் பரிசுகள்னு எவ்வளவு பரிசுகள்.//

      தாங்கள் இந்தப்போட்டிகளில் கலந்துகொள்ள முடியாமல் போனதே என்பது மட்டுமே எனக்கு மிகவும் மனக்குறையாக இருந்தது.

      //கர்ண பரம்பரையோ.??????//

      இல்லை. இல்லவே இல்லை. என் பெயரில் மட்டுமே பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் இருக்கிறான். மற்றபடி நான் மிக மிக சாதாரணமானவன் மட்டுமே. நத்திங் ஸ்பெஷல்.

      அதுவும் நான் ‘குசேலர்’ பரம்பரையில் வந்தவன் மட்டுமேவாக்கும். :)))))

      Delete
  38. ’நடுவர் அம்மாவா ?’ அல்லது ’நடுவர் ஐயாவா ?’
    அவரும் ஒரு பதிவர் தானா .... இல்லையா?
    திருச்சியில் என்னோடு கூடவே இருப்பவரா ?
    திருச்சியைத் தாண்டி ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருப்பவரா?
    ஒருவேளை தமிழ்நாட்டைத்தாண்டி இந்தியாவுக்குள் இருப்பவரா?
    ஒருவேளை இந்தியாவைத்தாண்டி வெளிநாட்டில் இருப்பவரா?
    வெளிநாட்டில் என்றால் அங்கேயே வசிப்பரா + வாழ்பவரா?//

    அது தெரிஞ்சிருந்தா நாங்களும் பரிசு வாங்கி இருப்போமே.

    ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா தெரிஞ்சுது. என்னன்னா அண்ணாவோட கதைக்கு வர விமர்சனங்களுக்கு நடுவர்ன்னா கண்டிப்பா அவரும் அண்ணா மாதிரி ஒரு அறிவாளியாத்தான் இருக்கோணுமின்னு.

    ReplyDelete
    Replies
    1. Jayanthi Jaya October 23, 2015 at 3:08 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      **’நடுவர் அம்மாவா ?’ அல்லது ’நடுவர் ஐயாவா ?’
      அவரும் ஒரு பதிவர் தானா .... இல்லையா?
      திருச்சியில் என்னோடு கூடவே இருப்பவரா ?
      திருச்சியைத் தாண்டி ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருப்பவரா?
      ஒருவேளை தமிழ்நாட்டைத்தாண்டி இந்தியாவுக்குள் இருப்பவரா?
      ஒருவேளை இந்தியாவைத்தாண்டி வெளிநாட்டில் இருப்பவரா?
      வெளிநாட்டில் என்றால் அங்கேயே வசிப்பரா + வாழ்பவரா?**

      //அது தெரிஞ்சிருந்தா நாங்களும் பரிசு வாங்கி இருப்போமே.

      :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா :)

      //ஆனா ஒண்ணு மட்டும் தெளிவா தெரிஞ்சுது. என்னன்னா அண்ணாவோட கதைக்கு வர விமர்சனங்களுக்கு நடுவர்ன்னா கண்டிப்பா அவரும் அண்ணா மாதிரி ஒரு அறிவாளியாத்தான் இருக்கோணுமின்னு.//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவை ததும்பும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      அவர் [நடுவர்] நீங்கள் வசிக்கும் ஊரான சென்னையைச் சேர்ந்தவர்தான். ’அசோக் பில்லர்’ பக்கம் வசித்து வருபவர். அவர் வயதிலும், அனுபவத்திலும், முதிர்ச்சியான எழுத்தாற்றலிலும் உங்கள் அண்ணாவை விட பலமடங்கு அறிவாளியே தான்.

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  39. ஐயே. எனக்கும் இந்த போட்டிக்கும் ராசியே கெடயாது. வந்தமா அதிராவங்க கல கல கலக்கல் கமண்டு ரிப்ளை கமண்டு படிச்சமான்னு போயிகாட்டேருக்கேன்.

    ReplyDelete
  40. நடுவரை கண்டுபிடிக்கவும் போட்டியா? எப்படியெல்லாம் யோசிக்கறீங்க. இதுவும் நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  41. சிறுகதை விமர்சனப் போட்டியின் நடுவர் யார் என்பது பற்றிய முழு விபரங்களும், ’நடுவர் யார் யூகியுங்கள் போட்டி’யில் வெற்றி கிட்டி பரிசுக்குத் தேர்வானவர்கள் யார்-யார் என்பது பற்றியும் அறிய இதோ இணைப்பு:

    https://gopu1949.blogspot.in/2014/09/blog-post_13.html

    ReplyDelete