கதையின் தலைப்பு
VGK 20 - ’ முன்னெச்சரிக்கை முகுந்தன் ’
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
நடுவரின் குறிப்பு
தேர்வான ஒவ்வொரு விமரிசனக் கட்டுரையையும் வெளியிடும் பொழுது கதாசிரியரே எந்தக் கதைக்கான விமரிசனம் இது என்று வாசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்தக் கதையின் சுட்டியை தலைப்பிலேயே கொடுத்து விடுகிறார்.
அப்படியிருக்க தாங்கள் விமரிசிக்கும் விமரிசனத்திலும் அந்தக் கதையையே மறுபடியும் narrate பண்ணுகிற மாதிரி நீங்கள் விமரிசன வரிகளை அமைக்க வேண்டுமா?...
இது உங்கள் விமரிசங்களை வாசிக்கிற வாசக அன்பர்களுக்கு சலிப்பேற்படுத்தும் இல்லையா?..
கதாசிரியரின் கதை வரிகளை எடுத்தாண்டு சீராட்டிச் சிறப்பிப்பதோ சிந்திக்க வைப்பதோ இல்லை அந்தக் கதையைப் படித்ததினால் தனக்கு என்ன உணர்வேற்பட்டது என்பதை கதாசிரியருக்கே தெரியப்படுத்துவதோ நல்ல விமரிசனம் ஆகும் தான்; ஒப்புக்கொள்கிறேன்.
அதற்காக தாங்கள் எழுதும் விமரிசனக் கட்டுரையிலும் மீண்டும் அந்தக் கதையையே கோர்வையாகச் சொல்வது விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் குறைவு படுத்தும், இல்லையா?..
உங்கள் விமரிசனத்தை வாசிக்க வரும் அன்பர்கள் எல்லாம் எந்தக் கதைக்கு நீங்கள் விமரிசனம் எழுதுகிறீர்களோ அந்தக் கதையை அதன் வெளியீட்டு நிலையிலேயே ஏற்கனவே படித்தவர்கள் தாம். பின்னூட்டம் கூட போட்டவர்கள் தாம். அப்படியிருக்க படித்த கதையையே உங்கள் விமரிசனத்திலும் மீண்டும் படிக்க விரும்ப மாட்டார்கள், இல்லையா?..
விமரிசனங்கள் எழுதுவோர் இனி எழுதவிருக்கும் விமரிசங்களிலாவது இந்தக் குறைப்பாட்டை சீர்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி. அந்த நிலையில் உங்கள் எழுத்து அமைய வேண்டுகிறேன். அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.
விமர்சனப்போட்டியில் பங்குகொள்வோருக்கு பயனுள்ள
வழிகாட்டுதல்களை எடுத்துச் சொல்லியுள்ள
உயர்திரு நடுவர் அவர்களுக்கு முதற்கண்
என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியமுள்ள கோபு [VGK]
இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ளவர் இருவர் :
அதில் ஒருவர்
களம்பூர் திரு
G. பெருமாள் செட்டியார்
அவர்கள்
எந்த வேலையை செய்தாலும் அதற்கு முன் எச்சரிக்கை தேவைதான். இதில் தவறுவதால் ஏற்படும் சங்கடங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதாவது இருக்கும். இதில் கிடைக்கும் அனுபவங்கள் சிலருக்கு வேடிக்கையாக இருக்கும் , சிலருக்கு வேதனையாக இருக்கும். இதைத்தான் உணர்த்தியிருக்கிறார கதாசிரியர், தன்னுடைய "முன்னெச்சரிக்கை
முகுந்தன் " என்ற கதையில்.
முகுந்தன் " என்ற கதையில்.
கதாநாயகனுக்கு ஐம்பது வயது ! சில வியாதிகளுடன், ஞாபக மறதியும் வேறு ! ஞாபக மறதியினால் வரும் தொல்லைகளைப்
போக்க , கதா நாயகன் கையாண்ட யுக்திதான் " செக் லிஸ்ட் " .
போக்க , கதா நாயகன் கையாண்ட யுக்திதான் " செக் லிஸ்ட் " .
அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்தில், மறந்து போகும் விஷயங்கள் பல ! பர்சை மறப்பது , அலுவலக / மேஜை ட்ராயரின் சாவியை மறப்பது, சில முக்கியமானபைல்களை வீட்டிலேயே வைத்து விட்டு வருவது
அல்லது அதற்கு பதிலாக வேறு எதையாவது எடுத்துக் கொண்டு
வருவது போன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணம்.
இதைத் தவிர்ப்பதற்காக கதாசிரியர் தன் கதா நாயகன் மூலமாக நமக்கு கொடுத்திருக்கும்
அறிவுரைதான் " செக் லிஸ்ட் " . தான் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லாமல் , ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின் செயல்களாக
விவரித்திருக்கிறார் .
அல்லது அதற்கு பதிலாக வேறு எதையாவது எடுத்துக் கொண்டு
வருவது போன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணம்.
இதைத் தவிர்ப்பதற்காக கதாசிரியர் தன் கதா நாயகன் மூலமாக நமக்கு கொடுத்திருக்கும்
அறிவுரைதான் " செக் லிஸ்ட் " . தான் சொல்ல நினைப்பதை நேரடியாக சொல்லாமல் , ( நகைச் ) சுவையாக , கதா நாயகனின் செயல்களாக
விவரித்திருக்கிறார் .
இந்த செக் லிஸ்டில் கதாசிரியர் பட்டியலிட்டு இருப்பது :
அலுவலக அடையாள அட்டை,
வீட்டு விலாசம் + தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு,
பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ்,
அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி + அதற்கான கூடு,
மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள்,
டிபன் பாக்ஸ்,
வெற்றிலை பாக்குப்பெட்டி சுண்ணாம்பு டப்பியுடன்,
பல் குத்தும் குச்சிகள்,
காது குடையும் பஞ்சுக்குச்சிகள்,
கைக்கடிகாரம்,
பேனா, சின்ன பாக்கெட் நோட்டு,
ஆபீஸ் ஃபைல்கள்,
செல்போன், சார்ஜர்,
ஆபீஸ் டிராயர் சாவி,
குடை,
பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள் அல்லது செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீஃப்,
துணிப்பை - ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி வாங்க ,
இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு,
வேஷ்டி, துண்டு,
செருப்புகள் .
இந்த பட்டியலில், எதை தவறு என்று சுட்டிக் காட்ட முடியும் ? அல்லது தேவையற்றது என்று சொல்ல முடியும் ?
வேஷ்டியும், துண்டும் , அரைஞாண் கயிறும் சிரிப்பை உண்டாக்கலாம் !
ஆண்களுக்கே வரக்கூடிய " குடல் இறக்கம் " என்ற நோயை எளிதில் தடுக்கக் கூடிய வழி இந்த அரைஞாண் கயிற்றை உபயோகிப்பதுதான்.
இதை அறிந்ததால்தான், கதாசிரியர் இதை நாயகனின் செயலாக
விவரித்திருக்கிறார்.
வேஷ்டியும், துண்டும் பட்டியலில் இடம் பெற்றதற்கு காரணம், நாயகனின் சோகமான அனுபவம்.
" அது நடந்து முடிந்த கதை, இப்போதுதான் ஆடையெல்லாம் சீராக இருக்கிறதே, இந்த வீண் சுமை எதற்கு ? ” என்ற வாசகர்களின் கேள்விக்கு, நாயகனின் முன்னெச்சரிக்கைதான்
காரணம் என்பதுதான் பதில். இந்த வேஷ்டியும், துண்டும் இதுவரை உபயோகப்படவில்லை, ஆனால் இதற்கு மேல், கதாநாயகனுக்கோ அல்லது வேறு யாருக்கோ,
சமயத்தில் சஞ்சீவியாக உபயோகப்படலாம் அல்லவா ?
சனிக்கிழமை என்பதால், அரை நாள் மட்டும் ஆபீசில் தலையைக் காட்டிவிட்டு வீட்டுக் வந்த
கதாநாயகன், மறுநாள் சென்னை செல்ல வேண்டும், தன் மகனுக்கு
பெண் பார்ப்பதற்காக ! சாதாரணமாகவே முன் எச்சரிக்கையுடன் சும்மா இருப்பாரா?
மறுநாள் சென்னை செல்ல தேவையானதை எல்லாம் " செக் லிஸ்ட் "
போட்டு சரி பார்த்து வைத்து விட்டு, ஓட்டலில் இருந்து வந்த
உணவையும் உண்டு விட்டு உறங்க ஆரம்பிக்கிறார். அப்போது
அவருடைய எண்ணமெல்லாம், மறுநாள் காலை, 6.30க்கு புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரஸ்ஸை தவற விடக்கூடாது
என்பது தான் !
உறங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பியது, மழை ! கடிகாரத்தைப் பார்த்தார் . மணி 5.30.
அவர் எண்ணமெல்லாம், 6.30க்குள் ரயிலைப் பிடிக்க வேண்டும் என்பதுதான் ! போர்க்கால நடவடிக்கை போல , எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, புறப்பட்டு விட்டார், ரயில் நிலையத்திற்கு !
கொட்டுகின்ற மழையில், மரத்தில் இருக்கும் கிளி பொம்மையை
குறி வைத்த விஜயனைப்போல், வேறு எதைப்பற்றியும் யோசிக்காமல், கவலைப்படாமல், 6.30க்கு திருச்சியில் இருந்து புறப்படும் " பல்லவனை " பிடிப்பதற்காக,
ஸ்ரீரங்கம் இரயில் நிலையத்துக்கும் வந்து விடுகிறார், கதா நாயகன் !
இரயில் நிலையத்தில்தான் தெரிகிறது, அவர் ஞாயிறு காலை 6.30க்கு
புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை 6.30 க்கேவந்திருப்பது!
அவரைப்பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்
கடிகாரமும், வாசகர்களும் தான் !
புறப்படும் பல்லவன் எக்ஸ்பிரசுக்கு அவர் சனிக்கிழமை மாலை 6.30 க்கேவந்திருப்பது!
அவரைப்பார்த்து எள்ளி நகையாடுவது, பிளாட்பாரத்தில் இருக்கும்
கடிகாரமும், வாசகர்களும் தான் !
இதற்கு காரணம்,
" எவ்வளவு முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும், கடைசியில் கோட்டை விட்டு விட்டாயே, முன்னெச்சரிக்கை முகுந்தா, வீட்டை விட்டு புறப்படும் முன், இன்று என்ன கிழமை என்று
பார்த்துவிட்டு புறப்படக்கூடாதா ? " என்ற எண்ணம்தான் !
" எவ்வளவு முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும், கடைசியில் கோட்டை விட்டு விட்டாயே, முன்னெச்சரிக்கை முகுந்தா, வீட்டை விட்டு புறப்படும் முன், இன்று என்ன கிழமை என்று
பார்த்துவிட்டு புறப்படக்கூடாதா ? " என்ற எண்ணம்தான் !
ஆனால், கதா நாயகனின் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைக்கிறது .
" எல்லாவற்றையும் சரி பார்த்துவிட்டேன், நான் செய்வது சரியே " என்ற கதா நாயகனின் எண்ணமும், தீர்மானமும் கதாநாயகனை பாராட்ட
வைக்கிறது .
வைக்கிறது .
சிறு தவறு நடந்து விட்டது ! அதற்கு காரணம், அதீமான முன்னெச்சரிக்கையா ? அல்லது, அந்த பாழாய் போன ஞாபக மறதியா ? இதற்கு ஆறுதலாக கதா நாயகன், தனக்குத்தானே கூறிக்
கொண்ட சமாதானம், " அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த
' வீண் செலவும், வீண் அலைச்சலும் " .
கொண்ட சமாதானம், " அன்றைய ராசி பலனில், அவருடைய ராசிக்கு குறிப்பிடப் பட்டிருந்த
' வீண் செலவும், வீண் அலைச்சலும் " .
எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அடுத்த முறை கதா நாயகன் இந்த தவறைசெய்ய மாட்டார் என்று!
ஏனென்றால், " இன்றைய தேதியையும், கிழமையையும் சரி பார்த்துக்கொள் " என்ற வாசகம் அவருடைய " செக் லிஸ்டில் " சேர்ந்துவிடும் !!
ஏனென்றால், " இன்றைய தேதியையும், கிழமையையும் சரி பார்த்துக்கொள் " என்ற வாசகம் அவருடைய " செக் லிஸ்டில் " சேர்ந்துவிடும் !!
இனிப்பான இரண்டாம்
பரிசினையும் வென்று
புதிதாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
திருமதி
இரா. எழிலி
அவர்களின் விமர்சனம் இதோ:
ஒவ்வொரு படைப்பிலும் கதாசிரியர் தான் சொல்ல வந்த கருத்தை சற்றே நகைச்சுவை கலந்து, ஆனால் நச்சென்று நமது உள்ளங்களை எட்டி உணர வைக்கிறார்.
கதையின் நாயகன் முகுந்தன், ஓர் அடைமொழியுடன் “முன்னெச்சரிக்கை முகுந்தன்” என அழைக்கப்படுவதாகக் காண்பிக்கும்போது முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் நாம் அடையக்குடிய நன்மைகளை முன்னிறுத்துகிறாரோ? என்ற ஆவல் மிளிர்கிறது.
கதாநாயகன் வர்ணனை!
கதாநாயகன் 50 வயதைக் கடந்தவர். பிரஷர் மற்றும் சுகருடன், பருத்த சரீரம் கொண்டவராகவும், மறதிக்கு ஆட்பட்டவராகவும் சித்தரித்து, அதை மெருகேற்றும் விதத்தில் கதாசிரியர், கதாநாயகன் அலுவலகம் புறப்படும்முன் சரிபார்க்கும் பட்டியல் மூலமாக நம்மைச் சிரிக்க வைத்து, இப்படியும் சிலரா? என்ற சிந்தனையைத் தூண்டுகிறார். பேண்ட் ஷர்ட் அணியும் வரை சரிபார்ப்பதும், வேட்டி துண்டையும் முன்னெச்சரிக்கையாக எடுத்துச் செல்வதையும் ( அதற்குக் காரணமாய் அமைந்த நிகழ்வோடு) குறிப்பிடுவதை என்னவென்று சொல்வது?
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”
என்பது வான்புகழ் வள்ளுவர் வாக்கு. நாளை என்று எதையுமே தள்ளி வைக்காமல் எதையும் அன்றே செய்வது நன்று! A stitch in time saves nine. Think Twice before you do. Look before you leap. இவை அனைத்தும் முன்னெச்சரிக்கையை வலியுறுத்தும் பழமொழிகள்.
ஏதோ ஒரு அளவுக்கு முன்னெச்சரிக்கை அவசியம்தான். ஆனால் முன்னெச்சரிக்கையே வாழ்வாகிவிடாதே. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். நம் கதாநாயகன் அலுவலகத்தில் தம் பணியை, குறித்த நேரத்தில், எப்படி ஆற்றியிருப்பார் என எண்ணத் தோன்றுகிறது.
சனிக்கிழமை அரைநாளில் அலுவலகத்திலிருந்து வந்து, மனைவி இரண்டு நாட்களுக்கு முன்பே இவர் பயணம் மேற்கொள்ள தயாராக எடுத்து வைத்துவிட்டுச் சென்றிருந்த பொருட்களை பட்டியலிட்டுச் சரிபார்த்துவிட்டு, ஹோட்டல் உணவை ஒரு வெட்டு வெட்டி விட்டு, உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என ஜன்னல் அருகில் உறங்க, இடிமின்னலுடன் கூடிய மழையினால் வெகுண்டெழுந்து, கடிகாரத்தில் மணிபார்த்து, 5.30 மணி என்றவுடன், 6.30க்கு பல்லவன் எக்ஸ்பிரசை பிடிக்க, மிக அவசரமாய்க் கிளம்பி, முன்னெச்சரிக்கையுடன் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு, மின்சாரம் இல்லாததால் படியிறங்க நேர்ந்ததை எண்ணி நொந்து, எச்சரிக்கையுடன் கொட்டும் மழையில் முன்பு வழுக்கி விழுந்ததுபோல் விழாமல் இருக்க முன்னெச்சரிக்கையாய் வாஜ்பாய் நடை நடந்து, ஆட்டோ பிடித்து, நேரம் ஆகிவிட்ட காரணத்தால் ஶ்ரீரங்கத்தில் அதே எக்ஸ்பிரஸ்ஸைப் பிடித்துவிட எண்ணி அங்கு விரைந்து சென்று, ஒரு கப் காபி உறிஞ்சியபடி ஆசுவாசப்படுத்திக்கொண்டு போர்ட்டரிடம் சென்னை வண்டி இந்த பிளாட்பாரத்தில் தானே வரும்? ஏன் இன்னும் வரவில்லை எனக் கேட்கும்போதுதான், முன்னரே புறப்பட்டு ஞாயிறு காலைக்கு பதில் சனிக்கிழமை இரவே ஸ்டேஷனை வந்தடைந்ததை அறிந்து தன்னை நொந்து கொள்கிறார். அத்தனை அல்லலுற்று அடித்துப் பிடித்துச் செல்ல எத்தனித்தது எவ்வளவு பெரிய அவதி!
கதாசிரியர் கதாநாயகனின் முன்னெச்சரிக்கையை மட்டுமன்றி மூட நம்பிக்கையையும் வெளிச்சமிட்டுக் காட்ட, அன்றைய ராசி பலனை அவர் நினைவு கூர்வதாய் படைத்ததே எல்லாவற்றிற்கும் மகுடம். இதனாலேயே “over smartness” என்றும் விமர்சனத்திற்குரியதாய் விளங்குகிறது. .இனியாவது இப்படி ஆகிவிடுமோ என எண்ணி இதற்காக அதற்காக என்று பாதி வாழ்க்கையை பட்டியலிடுதலிலும், அதை checkசெய்வதிலும் கழிக்காமல், சிறிதளவே முன்னேற்பாடுடன் இருந்தாலே போதும். சீரிய முறையில் சிறகடித்துப் பறக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர். முன்னெச்சரிக்கை அளவோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை விளக்க, கதாநாயகனின், மாலையை அதிகாலையாக எண்ணிய குழப்பத்தைப் பயன்படுத்தி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை விளக்கிவிடுகிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!
இரா.எழிலி
புதுச்சேரி.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
இரண்டாம் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது
.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்படும்.
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
' VGK-22 - வடிகால் ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
என்னுடன் பரிசு பெற்றிருக்கும் திரு. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கும் என் பாராட்டுகள்.
பதிலளிநீக்குஎன் விமர்சனம் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்து மகிழ்வடைகிறேன். வாய்ப்பளித்த திரு வைகோ சார் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி!
வாழ்த்தும் நல்லிதயங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி!
இனிப்பான இரண்டாம் பரிசினை,
பதிலளிநீக்குசுவையான விமர்சனம் எழுதி
வெற்றி பெற்ற திருமதி. இரா. எழிலி
அவர்களுக்கு பாராட்டுக்களும் ,
வாழ்த்துக்களும் !
இனிப்பான இரண்டாம் பரிசினை வென்றுள்ள :
பதிலளிநீக்குகளம்பூர் திரு G. பெருமாள் செட்டியார் ஐயாஅவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குஇனிப்பான இரண்டாம் பரிசினையும் வென்று
புதிதாக ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திருமதி இரா. எழிலி அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள் பாராட்டுக்கள்.!
//இனியாவது இப்படி ஆகிவிடுமோ என எண்ணி இதற்காக அதற்காக என்று பாதி வாழ்க்கையை பட்டியலிடுதலிலும், அதை checkசெய்வதிலும் கழிக்காமல், சிறிதளவே முன்னேற்பாடுடன் இருந்தாலே போதும். சீரிய முறையில் சிறகடித்துப் பறக்கலாம் என்று சொல்லாமல் சொல்கிறார் கதாசிரியர்.
பதிலளிநீக்குவிமர்சனத்தில் மனம் கவர்ந்த வரிகள்..பாராட்டுக்கள்..
எழிலி அவர்களுக்கும், பெருமாள் செட்டியார் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள். தொடர்ந்து ஹாட் ட்ரிக் அடிக்கவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபட்டியல் விமர்சனமும், குறளோடு விமர்சனமும் அருமை... G. பெருமாள் செட்டியார் ஐயா அவர்களுக்கும், முனைவர் திருமதி இரா. எழிலி அம்மா அவர்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமாறுபட்ட விமர்சனங்களோடு இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள திரு.பெருமாள் செட்டியார் அவர்களுக்கும், ஹாட்ரிகப் பரிசோடு தேர்வாகியுள்ள முனைவர் திருமதி இரா.எழிலி அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குhttp://gperumal74.blogspot.in/2014/06/20.html
பதிலளிநீக்குகளம்பூர் திரு. G. பெருமாள் செட்டியார் அவர்கள்.
இந்த வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
சிறப்பான முறையில் விமர்சனங்கள் எழுதி இரண்டாம் பரிசினை வென்ற...
பதிலளிநீக்குகளம்பூர் திரு. ஜி. பெருமாள் செட்டியார் அவர்களுக்கும்
முனைவர் திருமதி. எழிலி அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
திரு பெருமாள் செட்டியர்
பதிலளிநீக்குதிருமதி எழிலி
இருவருக்கும்
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
வெற்றியாளர் முனைவர் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்கள்
பதிலளிநீக்குபரிசுபெற்றுள்ள + ஹாட்-ட்ரிக் அடித்துள்ள மகிழ்ச்சியினை அவரின் கணவர் திரு. E.S. சேஷாத்ரி [காரஞ்சன் சேஷ்] அவர்கள் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
http://esseshadri.blogspot.com/2014/06/blog-post_16.html
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
இரண்டாம் பரிசு பெறும் இரண்டு விமர்சனங்களுமே மிக அருமை. அவரவர் பாணியில் நன்றாக விமர்சித்து இருக்கும் திரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபரிசு வென்ற திருமதி எழிலிசேஷாத்ரி திரு பெருமாள் அவர்களுக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்ற திரு பெருமாள் அவர்களுக்கும் திருமதி எழிலி சேஷாத்ரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா :)
நீக்குபரிசு வென்ற திருமதி எழிலி சேஷாத்திரி திரு பெருமாளவங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி எழிலிசேஷாத்ரி திரு பெருமாள் செட்டியார் அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்..இருவேறுவிதமான விமர்சனங்கள்.
பதிலளிநீக்குஎன் மனைவி பரிசு பெற்றதில் மகிழ்வடைகிறேன்!பரிசு பெற்ற அனைவருக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்!
பதிலளிநீக்கு