’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்
கதையின் தலைப்பு
VGK 19 - ’ எட்டாக்க(ன்)னிகள் ’
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
நடுவர் அவர்களால் பரிசுக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
விமர்சனங்கள் மொத்தம்:
மூன்று
மற்றவர்களுக்கு:
முதல் பரிசினை
முத்தாக வென்றுள்ளவர்
முதல் பரிசினை முத்தாக வென்று
மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள
எட்டாக்க(ன்)னிகள் - விமர்சனம்
தலைப்பிலேயே கதையின் கருவைக் கோடி காண்பித்துள்ள வார்த்தைநயம் ரசிக்க வைக்கிறது. மேலோட்டமாக நகைச்சுவையாக இருந்தாலும் அதன் உள்ளார்ந்திருக்கும் பல நுணுக்கமான விஷயங்கள் வியக்கவைப்பனவாக உள்ளன.
முதலில் நாயகனைப் பற்றிய சுய அறிமுகம். எவ்வளவு நாசூக்காக முக்கியமாக சுட்டவேண்டியதை சுட்டாமல் இறுதிவரைத் தவிர்த்திருக்கிறார் கதாசிரியர். அதாவது தன் உயரக்குறைவை ஒரு குறையாகவே எண்ணவில்லை கதாநாயகன். மற்ற எல்லோரையும் போலவே கதாநாயகனின் சிந்தனைகளும் காதல் எண்ணங்களும் உள்ளன. கதையின் முடிச்சும் அதுதானே. முதலிலேயே அவிழ்த்துவிட முடியாதல்லவா? முப்பத்தைந்து வயது பிரம்மச்சாரியான நம் கதாநாயகனுக்கு மணமுடிக்கும் எண்ணம் வீட்டில் எவருக்கும் இல்லை என்பதிலிருந்து இவரைப் போன்றவர்களுக்கு திருமணமே நடக்காது என்ற உறுதியான நம்பிக்கை நம் சமுதாயத்தில் ஊறிப்போயிருப்பதை உணர்த்துகிறார்.
கதாநாயகியின் அறிமுகம் அசத்தல். அழகிய பெண்களின் மத்தியில் அழகற்ற பெண்ணை வர்ணிக்க, வாத்துக்கூட்டத்தில் கொக்கு என்று சிக்கனமாக ஒற்றை வரியோடு நிறுத்திக்கொண்டார். மற்றதையெல்லாம் வாசகர்களின் கற்பனைக்கே விட்டுவிட்டது சிறப்பு. பெரும்பாலும் எல்லாக் கதைகளிலும் தோழியர் மத்தியில் மிகவும் அழகாக எடுப்பாக இருக்கும் பெண்தான் கதாநாயகியாக காட்டப்படுவார். ஆனால் இந்தக் கதையில் எந்தவித சிறப்பம்சங்களும் இல்லாத நிலையில் அறிமுகமாகி இறுதியில் கதாநாயகனின் இதயத்தில் இடம்பிடித்துவிடுகிறாள்.
அசாதாரணமான உயரமாய் இருப்பதாலேயே அவள் கதாநாயகனின் கவனத்தைக் கவர்ந்துவிட்டாள் போலும். எவரையுமே புறத்தோற்றத்தால் மதிப்பிடக்கூடாது என்பதும் இக்கதையின் மூலம் விளங்கவைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு அத்தனை லட்சணமில்லாத பெண்ணாயிருப்பினும் கதாநாயகனிடத்தில் தன்மையாகவும் நட்புடனும் பழகுகிறாள். அவளுடைய தோழிகள் அவரை ‘உங்க ஃப்ரெண்டு’ என்று குறிப்பிடுவதும், பேருந்து சிநேகம்தானே என்று உதாசீனப்படுத்தாமல் தோழிகள் மூலம் தன் நிச்சயதார்த்த அழைப்பிதழைக் கொடுப்பதும் அவள் உருவம் மட்டும் உயரம் அல்ல, உள்ளமும் உயர்வானது என்று நமக்குப் புரிகிறது.
‘காதலுக்கு கண்ணில்லை’ என்பது பொதுவிதி. ஆனால் ‘பொருத்தம் உடலிலும் வேண்டும், புரிந்தவன் துணையாக வேண்டும்’ என்கிறார் அந்தக்கால கவிஞர் கண்ணதாசன். ‘புருஷன் பொஞ்சாதி பொருத்தம்தான் வேணும், பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்’ என்கிறார் இந்தக்கால கவிஞர் பிறைசூடன். எந்தக்காலமாயிருந்தாலும் உள்ளப்பொருத்தத்தோடு உடற்பொருத்தமும் இணைந்தால்தான் வாழ்க்கை ருசிக்கும் என்பது உலக நியதி. ஆனால் காதல் வயப்பட்ட இந்த பாழாய்ப்போன மனத்திடம் அந்த நியதியெல்லாம் எடுபடுமா?
தன்மீது அன்புகாட்டவும் அக்கறை கொள்ளவும் எவருமில்லாத ஏக்கத்திலிருக்கும் ஒரு மனம், தன்பால் பிரத்தியேக பிரியம்காட்டும் உள்ளத்தைத் தனக்கே தனக்கானதாக ஆக்கிரமிக்கத் துடிப்பது இயற்கைதானே. அப்படிதான் இந்த கதாநாயகனும் தனக்குப் பொருத்தமில்லாப் பெண்ணிடத்தில் ஈர்க்கப்படுகிறார். அவளுக்குக் காதல் கடிதம் எழுதவும் துணிந்துவிட்டார். நல்லவேளையாக அன்று அந்தப் பெண் வரவில்லை. இவர்கடிதத்தைக் கொடுத்திருந்து அவள் மறுத்துவிட்டால்…அவமானப்பட நேரிடலாம் அல்லது தாழ்வு மனப்பான்மை அதிகமாகி தன் வாழ்க்கையையே வெறுக்க நேரிடலாம்.
ஒருவேளை… அவள் ஏற்றுக்கொண்டிருந்தால் நம் கதாநாயகனின் வாழ்க்கை எவ்வளவு இனிமையானதாக மாறிப்போயிருந்திருக்கும்?
\\ஒட்டடைக்குச்சி போல அசாதாரண உயரம். குதிரை முகம். மோட்டு நெற்றி. அதில் சோடாபுட்டி மூக்குக்கண்ணாடி வேறு. எலி வால் போன்று குட்டையாகக் கொஞ்சூண்டு தலைமுடி மட்டுமே.\\
இப்படிப்பட்டப் பெண்ணையும் ஒருவன் திருமணம் செய்துகொள்கிறான் என்றால் அவன் புற அழகை விடவும் அக அழகை மதிப்பவனாகவும் நேசிப்பவனாகவும் இருக்கவேண்டும். அவனைப் போலவே நல்ல குணமுள்ள பெண் எவரேனும் இந்த மூன்றடி மூன்றங்குல உயரக் கதாநாயகனுக்கும் கிட்டலாம்.
எல்லாவித அம்சங்களும் நிறைவாக இருக்கும் பலரும் கூட இன்னும் திருமணச்சந்தையில் விலைபோகாமலிருக்கும் விந்தை நிகழ் காலமிது. அதனால் நம் கதாநாயகன் மனந்தளராமல் முயன்றால் நல்ல குணவதி மனைவியாய் அமையும் பாக்கியம் கூடிய விரைவிலேயே கிடைக்கும். கதாநாயகன் காதலில் உருகி கவலைப்பட்டுக்கொண்டு இராமல் அடுத்தப் பெண்ணைப் பார்க்க மனத்தை தயாராக்கிக் கொள்வதை கதையின் இறுதிவரிகளில் அழகாக உணர்த்திவிடுகிறார் கதாசிரியர். நம்பிக்கை இருந்தால் நல்லதே நடக்கும் என்று நாமும் நம்புவோம்.
------------------------------ ------------------------------ ------------------------------ -----
ஆசிரியரே நகைச்சுவையாய்
எண்ணி எழுதியிருக்கும் கதையில்
தம் விமரிசனத் திறமையால்
அனுதாப அலைகளை புரளச் செய்த
எட்டிய MONEYகள் - விமர்சனம்
ஆச்சர்யங்கள் நிரம்பி வழியும் கதாபாத்திரங்கள் மற்றும் நிகழ்வுகள் கதையின் துவக்கம் முதல் இறுதிவரையிலும்.
ஆச்சர்யம் 1 –
கணவன் தன் வாழ்நாளில் சுயமாய் சம்பாதித்த ஒரு கோடி ரூபாய்.
கணவன் தன் வாழ்நாளில் சுயமாய் சம்பாதித்த ஒரு கோடி ரூபாய்.
ஆச்சர்யம் 2 –
தான் இறந்தபிறகு தன் மனைவி எப்படி வாழ்வாள் என்ற சிந்தனையில்லாமல் மொத்தப் பணத்தையும் தன்னுடனேயே வைத்துப் புதைக்கச் சொல்லும் அளவுக்கு அவரிடமிருக்கும் பணப்பற்று.
தான் இறந்தபிறகு தன் மனைவி எப்படி வாழ்வாள் என்ற சிந்தனையில்லாமல் மொத்தப் பணத்தையும் தன்னுடனேயே வைத்துப் புதைக்கச் சொல்லும் அளவுக்கு அவரிடமிருக்கும் பணப்பற்று.
ஆச்சர்யம் 3 –
தன்னுடைய அந்த கடைசி ஆசையை மனைவி நிச்சயமாகச் செய்வாள் என்ற அவரது நம்பிக்கை.
தன்னுடைய அந்த கடைசி ஆசையை மனைவி நிச்சயமாகச் செய்வாள் என்ற அவரது நம்பிக்கை.
ஆச்சர்யம் 4 –
சாகும்போது தனக்கு எதுவும் தராமல் மொத்தப்பணத்தையும் புதைக்கச்சொல்லும் கணவரிடம் மனைவி கோபப்படாமல் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற சம்மதிப்பது.
சாகும்போது தனக்கு எதுவும் தராமல் மொத்தப்பணத்தையும் புதைக்கச்சொல்லும் கணவரிடம் மனைவி கோபப்படாமல் மகிழ்ச்சியுடன் நிறைவேற்ற சம்மதிப்பது.
ஆச்சர்யம் 5 -
அப்போதைக்கு சரி சரி என்று தலையாட்டிவிட்டு பிறகு எல்லாப் பணத்தையும் தானே அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமல் உண்மையாகவே கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கும் செயல்.
அப்போதைக்கு சரி சரி என்று தலையாட்டிவிட்டு பிறகு எல்லாப் பணத்தையும் தானே அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமில்லாமல் உண்மையாகவே கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்கும் செயல்.
ஆச்சர்யம் 6 –
பெட்டிக்குள் பணத்துக்கு பதிலாக காசோலை வைக்கும் புத்திசாலித்தனம்.
பெட்டிக்குள் பணத்துக்கு பதிலாக காசோலை வைக்கும் புத்திசாலித்தனம்.
ஆச்சர்யம் 7 –
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரே நேரத்தில் கணவனின் கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றி, கள்வரிடமிருந்து பணத்தையும் காப்பாற்றிய சமயோசிதம்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல் ஒரே நேரத்தில் கணவனின் கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றி, கள்வரிடமிருந்து பணத்தையும் காப்பாற்றிய சமயோசிதம்.
ஆச்சர்யங்கள் நிரம்பிய இக்கதையில் இறுதியாய் ஒரே ஒரு அதிர்ச்சிக்கேள்வி – புத்திசாலி அக்காவிடமிருந்து தோண்டித்துருவி ரகசியத்தைக் கண்டறிந்துகொண்ட அதிபுத்திசாலி தம்பி, பணத்தைச் சுருட்டிக்கொண்டு அக்காவைப் பரிதவிக்க விட்டுவிடுவானோ?
நாய் வைக்கோற்போரில் படுத்த கதையாக, தானும் அனுபவிக்காமல் உயிரோடு இருப்பவர்களையும் அனுபவிக்க விடாத உள்ளங்களுக்கு நல்ல உதாரணம் இந்த கதையில் வரும் கணவர் கதாபாத்திரம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதற்கு உதாரணம் மனைவி கதாபாத்திரம். இந்தக் கதை மூலம் சிரிப்பையும் சிந்தனையையும் ஒருசேர வழங்கியுள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
முதல் பரிசுக்கான தொகை
இந்த ஒருவருக்கு மட்டுமே
முழுவதுமாக வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/
http://gopu1949.blogspot.in/
காணத்தவறாதீர்கள் !
மேற்படி பதிவினில் இதுவரை ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களாக
ஒன்பது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இன்றைய இந்தவெற்றியின் மூலம்
திருமதி கீதா மதிவாணன் அவர்கள் மீண்டும்
ஹாட்-ட்ரிக் வெற்றியாளராகி உள்ளார்கள்.
அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
தொடர்ச்சியாக அடுத்தடுத்து
oooooOooooo
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
’ VGK 21 - மூக்குத்தி ‘
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
முதல் பரிசினை முத்தாக வென்று மீண்டும் ஒரு ஹாட்-ட்ரிக் அடித்துள்ள திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துகள்..
நல் வாழ்த்துக்கள்! ஹாட்ரிக்கா அடிச்சு தள்ளுங்க சகோதரி! என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே! பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன்! மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குRAVIJI RAVI June 8, 2014 at 1:07 PM
நீக்கு//நல் வாழ்த்துக்கள்! ஹாட்ரிக்கா அடிச்சு தள்ளுங்க சகோதரி! என்னோட ரெண்டாவது ஹாட்ரிக்க மகளிரணி ஒட்டுமொத்தமா காலி பண்ணிட்டீங்களே! பரோட்டா சூரிமாதிரி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து ......வரேன்! மீண்டும் மனம் திறந்த பாராட்டுக்கள்!//
‘பரோட்டாச் சூரி’ மிகவும் பொருத்தமான உதாரணம்.
ரஸித்தேன். சிரித்தேன். பலக்கச்சிரித்தேன். வெகுநேரம் நினைத்து நினைத்துச்சிரித்தேன். மிக்க நன்றி நண்பரே !
அன்புடன் VGK
ஆனால் அந்தத்திரைப்படத்தில் வரும் அந்த நகைச்சுவைக் காட்சியைப் பார்த்து ரஸித்தவர்களால் மட்டுமே, இந்தத் தங்களின் பின்னூட்டத்தையும் ரஸிக்க இயலும். vgk ;)
நீக்குமீண்டும் ஹாட்-ட்ரிக் சாதனை செய்த வெற்றியாளர் திருமதி. கீதமஞ்சரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குதிரு V.G.K அவர்களின் 19 – ஆவது சிறுகதை விமர்சனப் போட்டியில் முதலாவது பரிசினை வென்ற, சகோதரி கீதா மதிவாணன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனமார்ந்து நல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமுதல் பரிசோடு ஹாட்-ட்ரிக் பரிசும் சேர்ந்து கிடைத்ததில் மிக மிக மகிழ்ச்சி. விமர்சனம் பற்றிய நடுவர் அவர்களின் கருத்து மேலும் மகிழ்வூட்டுவதாக உள்ளது. வித்தியாசமானதொரு விமர்சனப் போட்டியின் மூலம் தொடர்ந்து எழுதும் ஊக்கம் தந்துகொண்டிருக்கும் கோபு சாருக்கு மனமார்ந்த நன்றி. கரும்பு தின்ன கூலி வாங்கிக்கொண்டிருக்கிறோம் நாங்கள். நடுவர் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் அன்பான நன்றி.
பதிலளிநீக்குபரிசுபெற்ற திருமதி.கீதா மதிவாணன், திருமதி. கீதமஞ்சரி மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குwww.killergee.blogspot.com
ஹாட்-ட்ரிக் பரிசு பெற்ற சகோதரி திருமதி. கீதா மதிவாணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவெற்றி பெற்ற சொந்தங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுதல்கள்.
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.
பதிலளிநீக்குஇந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
முதலாவது பரிசினை வென்ற, சகோதரி கீதா மதிவாணன் அவர்களைப் பாராட்டுகிறேன்.
பதிலளிநீக்குவெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குவெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாம பரிசு வாங்காட்டாலும், நம்ம வர்க்கம் (பெண்கள்) பரிசாக வாங்கிக் குவிப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.
பதிலளிநீக்குJayanthi Jaya October 16, 2015 at 8:27 PM
நீக்குவாங்கோ ஜெயா, வணக்கம்மா.
//வெற்றிபெற்ற திருமதி கீதாமதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துகள். நாம பரிசு வாங்காட்டாலும், நம்ம வர்க்கம் (பெண்கள்) பரிசாக வாங்கிக் குவிப்பது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெயா.
பரிசுபெற்ற ஒரு பெண்ணை மற்றொரு பெண்மணி வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தங்களின் வர்க்க (பெண்கள்) உணர்வு வியக்க வைக்கிறது. :) சந்தோஷம் + மிக்க நன்றி, ஜெ.
பரிசு வென்ற திருமதி கீதா மதிவாணனவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன் வாழ்த்துகள். விமரிசனம் நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு;-)))
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள் மேடம்!
பதிலளிநீக்கு