கதையின் தலைப்பு
மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,
அவர்கள் அனைவருக்கும் என்
மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
மற்றவர்களுக்கு:
நடுவரின் குறிப்பு
தேர்வான ஒவ்வொரு விமரிசனக் கட்டுரையையும் வெளியிடும் பொழுது கதாசிரியரே எந்தக் கதைக்கான விமரிசனம் இது என்று வாசிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்படி அந்தக் கதையின் சுட்டியை தலைப்பிலேயே கொடுத்து விடுகிறார்.
அப்படியிருக்க தாங்கள் விமரிசிக்கும் விமரிசனத்திலும் அந்தக் கதையையே மறுபடியும் narrate பண்ணுகிற மாதிரி நீங்கள் விமரிசன வரிகளை அமைக்க வேண்டுமா?...
இது உங்கள் விமரிசங்களை வாசிக்கிற வாசக அன்பர்களுக்கு சலிப்பேற்படுத்தும் இல்லையா?..
கதாசிரியரின் கதை வரிகளை எடுத்தாண்டு சீராட்டிச் சிறப்பிப்பதோ சிந்திக்க வைப்பதோ இல்லை அந்தக் கதையைப் படித்ததினால் தனக்கு என்ன உணர்வேற்பட்டது என்பதை கதாசிரியருக்கே தெரியப்படுத்துவதோ நல்ல விமரிசனம் ஆகும் தான்; ஒப்புக்கொள்கிறேன்.
அதற்காக தாங்கள் எழுதும் விமரிசனக் கட்டுரையிலும் மீண்டும் அந்தக் கதையையே கோர்வையாகச் சொல்வது விமரிசனங்களின் தகுதிச் சிறப்பைக் குறைவு படுத்தும், இல்லையா?..
உங்கள் விமரிசனத்தை வாசிக்க வரும் அன்பர்கள் எல்லாம் எந்தக் கதைக்கு நீங்கள் விமரிசனம் எழுதுகிறீர்களோ அந்தக் கதையை அதன் வெளியீட்டு நிலையிலேயே ஏற்கனவே படித்தவர்கள் தாம். பின்னூட்டம் கூட போட்டவர்கள் தாம். அப்படியிருக்க படித்த கதையையே உங்கள் விமரிசனத்திலும் மீண்டும் படிக்க விரும்ப மாட்டார்கள், இல்லையா?..
விமரிசனங்கள் எழுதுவோர் இனி எழுதவிருக்கும் விமரிசங்களிலாவது இந்தக் குறைப்பாட்டை சீர்படுத்திக் கொள்ள விழைகிறேன்.
உங்கள் எழுத்துக்கு நீங்களே நீதிபதி. அந்த நிலையில் உங்கள் எழுத்து அமைய வேண்டுகிறேன். அது இந்த மாதிரியான வேறு எந்த போட்டியிலும் உங்கள் வெற்றியை நிச்சயப்படுத்தும்.
விமர்சனப்போட்டியில் பங்குகொள்வோருக்கு பயனுள்ள
வழிகாட்டுதல்களை எடுத்துச் சொல்லியுள்ள
உயர்திரு நடுவர் அவர்களுக்கு முதற்கண்
என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பிரியமுள்ள கோபு [VGK]
முதல் பரிசினை முத்தாக
வென்றுள்ளவர்கள் இருவர் :
முதல் பரிசினை முத்தாக வென்றதுடன்
தன் இரண்டாம் ஹாட்-ட்ரிக் பரிசினை
நான்காம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ள
விமர்சன வித்தகி
தன் இரண்டாம் ஹாட்-ட்ரிக் பரிசினை
நான்காம் சுற்றிலும் தக்க வைத்துக்கொண்டுள்ள
விமர்சன வித்தகி
திருமதி
கீதா மதிவாணன்
கீதா மதிவாணன்
அவர்களின் விமர்சனம் இதோ:
முன்னெச்சரிக்கை முகுந்தன் என்னும் தலைப்பிலிருந்தே கதாநாயகனின் பெயரும் குணாதிசயமும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. முகுந்தனின் முன்னெச்சரிக்கை குணம் பிரதானப்பட்டிருப்பதால் அந்த முன்னெச்சரிக்கை குணத்தின் விளைவாக ஏற்படும் ஏதோ ஒரு பிரச்சனைதான் கதையின் மையமாக இருக்கும் என்ற யூகமும் ஏற்பட்டுவிடுகிறது.
முகுந்தனுக்கு இருக்கும் பிரச்சனைகள் முதலில் என்னென்னவென்று பார்ப்போம். வயது ஐம்பதுக்கு மேல், பருத்த சரீரம், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் –இத்தனையும் இருந்தாலே மனிதர்களால் நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் செயல்படுத்துவது கடினம். இந்த லட்சணத்தில் மறதியும் கைகோர்த்துக்கொண்டால்… அவ்வளவுதான். இப்படியொரு நிலையில் இருக்கும் முகுந்தனுக்கு அவருடைய மறதியால் ஏற்பட்ட முன் அனுபவங்களே அவரை முன்னெச்சரிக்கையாய் இருக்கத் தூண்டியிருக்கும் என்பதில் வியப்பில்லை.
ஒரு தடவையில் முடியவேண்டிய ஒரு காரியம் அவருடைய மறதியின் காரணமாக பல தடவைகளாக இழுத்தடிக்கப்படும்போது உடலும் உள்ளமும் ஆயாசமடைவது இயல்புதானே. பாரதி கேட்டது போல் விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்க்கப்பெறாமையால் உள்ளத்தை, தான் வேண்டியபடி செலுத்தும் வல்லமைக்குப் பழக்கிவிட்டிருக்கிறார் கதையின் நாயகன் முகுந்தன். அதுதான் முன்னெச்சரிக்கை என்னும் சூத்திரம்.
முன்னெச்சரிக்கையோடு செயல்படும்போது எவ்வளவு பிரச்சனைகள் தவிர்க்கப்படுகின்றன என்பதைக் கண்கூடாகவும் காட்டுகிறார் கதாசிரியர். அதற்கு உதாரணம், அலுவலகம் புறப்படுமுன் நம் கதாநாயகன் முகுந்தன் செய்யும் முன்னேற்பாடுகள்… அப்பப்பா.. பட்டியலை வாசிக்கும் நமக்கே களைப்புண்டாகிறதே… நித்தமும் கவனமாய் எடுத்துவைக்கும் முகுந்தனுக்கு எப்படி இருக்கும்? ஆனாலும் சளைக்கவில்லையே மனிதர்!
அந்தப்பட்டியலை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கிறேன். ஒரு பொருளாவது கூடுதலாகவோ குறைவாகவோ உள்ளதா என்று… ம்ஹூம்… காலையில் அலுவலகத்துக்குப் புறப்படுவதுமுதல் மாலை வீட்டுக்குத் திரும்பி வரும் வரை தேவைப்படும் அனைத்தையும் ஒன்றுவிடாமல் அழகாகப் பட்டியலிட்டதோடு, அந்தப் பட்டியலை கண்ட இடத்திலும் வைக்காமல் அழகாக கண்முன் பெரிய கரும்பலகையில் எழுதித் தொங்கவிட்டுள்ள சமயோசிதத்தை என்னவென்று சொல்வது? இது மறதிக்காரர்களுக்கு மட்டுமல்ல, சாதாரணமானவர்களுக்கும் மிகப் பொருந்தும்.
மறதி என்பது எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான அம்சம். வெளியூர் செல்வதற்கு முன் எதெது தேவை என்று முன்கூட்டியே அழகாகப் பட்டியலிட்டுத் தயாராக வைத்திருப்போம். கிளம்பும் தினத்தன்று பட்டியலை எங்கே வைத்தோம் என்பதை மறந்துவிடுவோம். அப்படியில்லா மல் எடுத்துக்கொண்டு போகவேண்டியவற்றை, சரிபார்க்க வேண்டியவற்றை பெரிய கரும்பலகையில் எழுதி கண்முன் தொங்கவிட்டிருக்கும் முகுந்தனைப் பாராட்டியே ஆகவேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் ஊருக்குக் கிளம்பிப் போகுமுன் கணவருக்குத் தேவையானவற்றை, அவசரத்தில் எதையாவது அவர் மறந்துவிடப்போகிறாரோ என்ற பயத்தில் பெட்டியில் எடுத்துவைத்துச் செல்லும் மனைவியின் முன்னேற்பாடுகள் ஒரு பக்கம் என்றால்… அவற்றையும் செக்லிஸ்ட் போட்டு சரிபார்க்கிறார் என்று சொல்லி முகுந்தனின் முன் ஜாக்கிரதை உணர்வின் தன்மைக்கு மேலும் வலு சேர்க்கிறார் கதாசிரியர்.
கதையின் மையப்பிரச்சனை என்னவென்றால் மறுநாள் காலை போகவேண்டிய ரயிலுக்கு முதல்நாள் மாலையே போய்விட்டார் நம் கதாநாயகன். எதற்காக? முன்னெச்சரிக்கையாக இருக்கட்டும் என்றா? இல்லை, இல்லை. சிறு குழப்பமும் அதனால் உண்டான குளறுபடியும்தான் காரணம்.
முகுந்தனுக்கு காலை மாலை வித்தியாசம் தெரியாமல் போனதற்கான காரணங்களை அழகாக வரிசைப்படுத்துகிறார் கதாசிரியர். முதல் காரணமும் முக்கியக் காரணமும் அன்று சனிக்கிழமை, அரைநாள் விடுப்பு என்பது. முழுநாள் வேலைக்குப் போய்விட்டு வந்திருந்தால் இந்த காலை மாலை குழப்பம் வந்திருக்க வாய்ப்பில்லை. சூழலுக்கு வலு சேர்க்க மழையும் சேர்ந்துகொண்டது. மழைக்காலத்தில் பொழுது விடிவதும் தெரியாது, பொழுது சாய்வதும் தெரியாது. எப்போதும் ஒருவித மந்த வானிலையுடனேயே காணப்படும். நமக்கும் சுறுசுறுப்பாய் எதையும் செய்யத் தோன்றாமல் மந்த மனநிலையுடனே காணப்படுவோம்.
உண்ட களைப்பில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் சடாரென்று முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பப்பட்டால் எப்படியிருக்கும்? மழைத்துளிகள் பட்டவுடன் வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தவருக்கு யோசிக்கவே நேரம் கொடுக்கவில்லை கடிகாரமும் வானிலையும்.
பாவம், அந்த மழையில் எவ்வளவு கஷ்டப்பட்டு கிளம்பியுள்ளார். அந்த அவசரத்திலும் கூட மெயின் சுவிட்சை நிறுத்தி, வீட்டைப் பூட்டி, பூட்டையும் இழுத்துப் பார்த்து சோதித்து, செருப்பு, சூட்கேஸ், குடை, டார்ச் போன்றவற்றைத் தவறாமல் எடுத்துக்கொண்டு, தான் செய்யவேண்டியவற்றை மிகச்சரியாக செய்து வெளிக்கிளம்பிய முகுந்தனை மீண்டுமொரு முறை பாராட்டத்தோன்றுகிறது.
இந்த இடத்தில் அது மாலைநேரமாக இருக்கக்கூடும் என்பது வாசகரால் கணிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது என்றாலும் முகுந்தனின் முந்தைய மழைக்கால அனுபவத்தின் மூலமும் இப்போதைய கனமழையின் தன்மையின் மூலமும் நம் கவனத்தைத் திசைதிருப்பி முகுந்தனுடனேயே பயணிக்க வைத்துவிடுகிறார் கதாசிரியர்.
மழைக்கால அவதியை கதாசிரியர் வர்ணிக்கும் வார்த்தைகள் நம்மை அந்த சூழலுக்கே அழைத்துப்போய் வருகின்றன. எத்தனை விதமான இடைஞ்சல்கள்! ஆனாலும் அந்த சமயத்திலும் நேரத்தை உத்தேசித்து, சமயோசிதமாக யோசித்து ஸ்ரீரங்கம் சென்றதும் முகுந்தனுடைய முன்யோசனைக்குச் சான்றுகள்.
ஒருவழியாக ரயில் நிலையம் வந்தபிறகுதான் தெரிகிறது அவர் போகவிருக்கும் பல்லவன் எக்ஸ்பிரஸ் வருவதற்கு இன்னும் முழுதாக பன்னிரண்டு மணி நேரங்கள் உள்ளன என்பது. அசடு வழிந்து நிற்கும் அவரைப் பார்த்து நிலா கண் சிமிட்டி சிரிக்கிறதாமே… சிரிக்கட்டும். அதற்கென்ன? மேகங்களுக்கு அப்பால் உயரே வசதியாக உட்கார்ந்து கொண்டு அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது. மழையில் அவதிப்படுபவருக்கு அல்லவா தெரியும் துயரம்!
என்னைக் கேட்டால் முன்னெச்சரிக்கை முகுந்தன் முதல்நாள் மாலையே ரயில்நிலையத்துக்கு வந்துவிட்டது ஒருவகையில் நல்லதுதான் என்பேன். மழையில் குளிரில் நடுங்கியபடி இரவைக் கழிப்பது சிரமம்தான் என்றாலும் 48 மணிநேரத்துக்கு நீடிக்கும் அந்த அசுர மழையில் சிக்கி அடுத்தநாள் அதிகாலையில் புறப்பட்டு, குறிப்பிட்ட நேரத்துக்குள் வரமுடியாமல் போய்விட்டால் எவ்வளவு கஷ்டம்? அத்துடன் ஒப்பிடும்போது இது ஒன்றும் பெரிய நஷ்டமில்லை அல்லவா!
எனவே அறிந்தோ அறியாமலோ முன்னெச்சரிக்கையுடன் முதல்நாளே ரயில்நிலையத்துக்கு வந்துவிட்ட முன்னெச்சரிக்கை முகுந்தனுக்கும் அவரைக் கதாநாயகனாய்க் கொண்டு நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த ஒரு சிறுகதையை சரளமான நடையில் அழகாகப் படைத்த கதாசிரியருக்கும் என் பலமான பாராட்டுகள்.
100th Post of this Year 2014
அதீதத் திறமைசாலிகளும், *வல்லமையாளர்களுமாகிய*
இவ்விரு ஹாட்-ட்ரிக் சாதனைத் திலகங்களுக்கும் நடுவே
அகப்பட்டுக்கொண்டுள்ள அடியேனின் இன்றைய பதிவு
இந்த 2014ம் ஆண்டின் 100வது பதிவாக அமைந்துள்ளதில்
ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.
*சமீபத்திய இந்த வார வல்லமையாளர்*
திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
*ஏற்கனவே சர்வ வல்லமையாளரானவர்*
திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்
இந்த மாபெரும் இரு வல்லமையாளர்களுக்கும்
நடுவில் குட்டியானையாக
அகப்பட்டுக்கொண்டுள்ள அடியேன் ....
நடுவில் குட்டியானையாக
அகப்பட்டுக்கொண்டுள்ள அடியேன் ....
முதல் பரிசினை முத்தாக வென்றுள்ள
திருமதி
இராஜராஜேஸ்வரி
அவர்களின்
வில்லுப்பாட்டு
விமர்சனம் இதோ:
வில்லுப்பாட்டு
முன்னெச்சரிக்கை முகுந்தன்
பொருளடக்கம்
1.எடுப்பு
2.அறிமுகம் -
3 கதை
4 நீதி
5 முடிப்பு - மங்களம்
எடுப்பு
வசனம்: உங்கள் அனைவருக்கும் இந்த இனிமையான நிகழ்ச்சியில் எங்கள் வணக்கத்தைச் சொல்லிக் கொள்கிறேன்.
5 முடிப்பு - மங்களம்
எடுப்பு
வசனம்: உங்கள் அனைவருக்கும் இந்த இனிமையான நிகழ்ச்சியில் எங்கள் வணக்கத்தைச் சொல்லிக் கொள்கிறேன்.
இந்த வில்லுப்பாட்டு என்ற கலை பல வருடங்களுக்கு முன்பாக தென்பாண்டி நாட்டில் தொடங்கப்பட்டது.
வேடன் தன் களைப்பு நீங்க வில்லில் இசையமைத்து பாடுவதாக அமைந்த உன்னத கலை. இதோ உங்கள் முன் கன்னி முயற்சி. முதல் பயிற்சி.
வெள்ளிக்கொம்பு நாயகனே துள்ளியிங்கே வாருமய்யா!
தெள்ளுதமிழ் வார்த்தைகளை அள்ளிவந்து தாருமய்யா!!
கந்தனுக்கு மூத்தவனை சிந்தனையிலே தான் நிறுத்தி
தந்தனத்தோம் என்றுசொல்லி வில்லெடுத்து பாடவந்தேன்!!
தானதந்தோம் என்று சொல்லியே வில்லிசைபாட - ஆமாம்
வில்லிசைபாட அருள்தருவாய் கலைமகளே!
நல்ல தமிழ் உள்ளம் இருக்க... இங்கே இருக்க... ஆமாம் இங்கே இருக்க
வில்லிசைபாட அருள்தருவாய் கலைமகளே!
நல்ல தமிழ் உள்ளம் இருக்க... இங்கே இருக்க... ஆமாம் இங்கே இருக்க
வில்லுப்பாட்டில் சொல்லப்போறோம்... முன்னெச்சரிக்கை முகுந்தன் கதை ஆமாம் முன்னெச்சரிக்கை முகுந்தன் கதை...
இப்போ நாங்க சொல்லப்போறோம்...
பையன் 1: அந்த முன்னெச்சரிக்கை முகுந்தன் கதையைக் கேட்க ஆவலா இருக்கு
பையன் 2: எனக்கும் தான் - அதை வில்லுப்பாட்டு மூலமாக சொல்லப் போறீங்க.
பையன் 1: அந்த முன்னெச்சரிக்கை முகுந்தன் யாரு?
வசனம்:
ஐம்பது வயதைத் தாண்டிட்டார் முகுந்தன்..
சுகர் பிரஷர், படபடப்பு , ஞாபக மறதி
எதையும் மறந்து விடுவோமோ என்று
முன்னெச்சரிக்கையாகவே இருப்பார்.
அஞ்சு வந்தாலும் அவசரம் ஆகாது ..
பத்துவந்தாலும் பதட்டம் ஆகாது..
பொறுமை கடலினும் பெரிது ..
அவசரத்தில் கைவிட்டால்
அண்டாச்சட்டிக்குள்ளும் கை போகாது ..
பொறுத்தார் பூமி ஆள்வார்..
பொங்கினார் காடாள்வார்
என்பதெலாம் அறியாதவரோ...
பொறுமை இல்லாதவர், படபடப்பானவர்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு..
அவசரக்காரனுக்கு அத்தனையும் தானே மட்டு..
பையன்-1: அப்போ முன் ஜாக்கிரதை முத்தண்ணாவான முகுந்தன் கதை வில்லுப்பாட்டிலயா?
பையன்-2: என்ன பொருத்தம்...
வசனம்:
ஆபீஸுக்குப் புறப்படும் முன் தனது
அலுவலக அடையாள அட்டை,
வீட்டு விலாசம், தொலைபேசி எண்களுடன் கூடிய விசிடிங் கார்டு, பஸ் சார்ஜுக்கு வேண்டிய சரியான சில்லரைகளுடன் கூடிய மணிபர்ஸ், அதில் ஒரு தனி அறையில் ரிஸர்வ் கேஷ் ஆக ஒரு ஐநூறு ரூபாய் நோட்டு, மூக்குக்கண்ணாடி, அதற்கான கூடு, மூன்று வேளைகளுக்கான மருந்து மாத்திரைகள், டிபன் பாக்ஸ், வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு, பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட், கர்சீப், ஆபீஸ் முடிந்து திரும்புகையில் காய்கறி ஏதாவது கண்ணில் பட்டால் வாங்கி வர ஒரு துணிப்பை, இடுப்பிலிருந்து அடிக்கடி நழுவிப்போகும் அரணாக்கயிறு, வேஷ்டி, துண்டு, செருப்புகள் என்று சகல சாமான்களையும் லிஸ்ட் போட்டு, வீட்டினுள் ஒரு பெரிய கரும்பலகையில் எழுதி, கண்ணில் படும்படியாக தொங்க விட்டிருப்பார்.
ஏழு மணிக்கு பஸ் பிடிக்க ஆறரை மணிக்கே ரெடியாகி லிஸ்டில் உள்ளபடி சாமான்களையும் பேண்ட், ஷர்ட், பனியன், ஜட்டி அணிந்து கொண்டுள்ளோமா, என்றும் சரிபார்த்துக்கொள்வார் .
பையன் 1: ரொம்ப ஓவர்.... சரி .. கொஞ்சம் மூச்சு வாங்கிக்கோங்க .. இந்தாங்க தண்ணீர் குடியுங்க..இந்தா இருக்கிற ஆபீசுக்கு காலையில் போய் மாலையில் திரும்ப இத்தனை பொருட்களா.. மாதக்கணக்கில் வெளிநாடு செல்பவர்கள் கூட இத்தனை சுமக்கமாட்டார்களே..
பையன் 2: நனைத்து சுமக்கும் கழுதை நினைவுக்கு வருகிறதே..!
வசனம்:
ஆபீஸில் அவருக்கு முன்னெச்சரிக்கை முகுந்தன் என்று ஒரு பட்டப்பெயரே உண்டுண்ணா பார்த்துக்கோயேன்...
பையன் 1 இருக்கட்டும் .. இருக்கட்டும்...
பையன் 2 : பேண்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு ஆபீஸ் போகும் இவருக்கு வேஷ்டி-துண்டு எதற்கு
வசனம்:
ஆமாம். அன்றொரு நாள் போதாத காலம். ஓடும் பஸ்ஸில் அவசரமாக ஏறிய இவர் போட்டிருந்த டைட் பேண்ட், ஜிப்பு முதல் கணுக்கால் வரை, டாராகக் கிழிந்து (தையல் பிரிந்து) தொடை தெரிய பயணித்ததில் (தொடை நடுங்கி) மனிதன் கூசிக்குறுகிப் போய் விட்டார். அன்று அவர்பட்டபாடு தாளம் படுமோ .. தறிபடுமோ..!
அன்று முதல் இன்று வரை, வேஷ்டியும் துண்டும், இவர் போகுமிடமெல்லாம் கூடவே தொற்றிக்கொள்ள ஆரம்பித்தன
பையன் 1 : நல்ல வேளை சொன்னீங்களே .. ஹி..ஹி...
பாட்டு:
முகுந்தன் பெற்ற பையனுக்கு பாணிகிரஹணம்
செய்ய மாம்பலத்தில் பொண்ணு
பார்க்க பிள்ளையாண்டானும் பார்யாளும்
ரெண்டு நாள் முன்பே புறப்பட்டுப் போனார்களே
அவர் மைத்துனர் இல்லத்திற்கு..பெரம்பூருக்கு... .
பையன் 1 என்னென்ன எடுத்து வைச்சாங்க அந்த அம்மா..
முகுந்தனுக்கு துணிமணிகள்,
மருந்து மாத்திரைகள்,
முன்பதிவு செய்த ரெயில் டிக்கெட் ,
மனைவி ரெடி செய்து வைத்தாங்களே
பெட்டியை செக்-லிஸ்டு போட்டு
நல்ல முகூர்த்தத்தில் தானே..
முகுந்தனுமே சரி பார்த்தார். !!
பையன் 2: ஆமாம் சரி..பார்த்தார்..
வசனம்:
சனிக்கிழமை காலை ஆபீஸில் தலைகாட்டிவிட்டு
நேரத்தோட வீட்டுக்கு வந்தார்..
பையன் 1 ஆமாம் .. வந்தார்..
ஹோட்டலிலிருந்து வந்தது ஸ்பெஷல் சாப்பாடு..
நன்னா மூக்குபிடிக்க சாப்பிட்டார்..
உண்டகளைப்பு தொண்டனுக்கும் உண்டே.. !
ஜன்னல் ஓரக் கட்டிலில் படுத்தார்
நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிப்போனார்.
பையன் 2: ஆமாம் தூங்கிப்போனார்...
வசனம்:
வெளியே மழை கொட்டோ
கொட்டென்று கொட்டித்து.
ஜன்னல் வழியே மழைச்சாரல் தெரித்தது
நம்ம ஐயா மேல்தான்..ஒரே அதிர்ச்சி.
மணி 5.30 ஆகிவிட்டது.
மேக மூட்டம்.. எங்கும் இருட்டு.
மின்னலுடன் இடி மின்வெட்டு
அவசர அவசரமாக பாத்ரூம் போனார்.. ,
பல் தேய்த்து கொப்புளித்தார்..
முகம் கழுவி, துடைத்தார்,
மெயின் ஸ்விட்ச் அணைத்தார்.. ,
வீட்டைப்பூட்டி இழுத்துப்பார்த்தார்,
காலில் செருப்பு, கையில் பெட்டி,
குடை+டார்ச் லைட்டு, எடுத்தார்.. விரைந்தார்
நம்ம அவசரத்திற்கு எதுதான் உதவுகிறது..!??
லிஃப்ட் வேலை செய்யலியே..
எரிச்சலில் படியிறங்கி வந்தார்.
இரண்டு நாளைக்கு மழை விடாதுன்னு
காதில் கேட்டார் மனம் சோர்ந்தார் ..
அந்தி பிடிச்சமழை அழுதாலும் விடாதே ...
அவருக்கு எப்போ தெரியப்போகிறது..
பையன் 2: ஆமாம்...எப்போ தெரியும்??!
பாட்டு :
குண்டும் குழியுமான சாலையில்
அருவருப்புடன் சாணியும் மிதித்து
சர்ரென்று சறுக்கினார்.. விழுந்தார்..
தோள்பட்டையில் அடிபட்டார்..எழுந்தார்
சேறும் சகதியுமாய் ஆனார்..
எலும்பும் பிசகி அவஸ்தைப்பட்டார்...ஒரு நாள்..
அதை நினைத்தார்.. கிலேசம் கொண்டார்..
தத்தி ..தத்தி நடந்தார்..மெதுவாக
ஊன்றி ..ஊன்றி நடந்தார்..
பையன் 1: அது என்ன நடை?
வாஜ்பாய் நடை..கண்கோடி வேண்டுமே ..
காண கண் கோடி வேண்டுமே..
ஆஹா மெல்லநட மெல்ல நட மேனி என்னாகும்
வாத்து நடை .. பாதம் நோகும் உந்தன்
சிங்காரம் குலைந்துவிடும்.. ஹோய்
உடை சேறாகும் ,, உடல் புண்ணாகும் ..
தொட்டுத்தான் மெல்ல எட்டி நடை போடு..
பையன் 1 ஹா.. ஹா..ஹ்..ஹா..
சிரிப்பை அடக்க முடியல்லே ..
கொஞ்சம் இருங்க சிரிச்சு முடிச்சுக்கிறேன்..
பையன் 2: போதும்..நிறுத்து ..நிறுத்து .. !
ஒரு மனுஷன் அவஸ்தை படறான்
சிரிப்பு என்ன வேண்டிக்கிடக்கிறது பாவம் அவர்...
வசனம்:
கதை நடந்த காலக்கட்டத்தில்
பாலக்கரைப்பாலம் ..பாலக்கரைப்பாலம்
என்று பாலம்
பையன் 1: ரெண்டு பாலமா...
இல்லை இல்லை ஒரு பாலம் தான் .. கட்டுமானப்பணியினால் அங்கங்கே சாலை தோண்டி டேக் டைவர்சன் .. டேக் டைவர்சன் என்று ஊரைச்சுற்றி போகவேண்டிய நிர்பந்தம் வேறு..
முன் ஜாக்கிரதைக்குப் பேர்போன முகுந்தன் ரிஸ்க் எடுக்காமல், ஆட்டோவை நேராக ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷனுக்கு விடச்சொன்னார்.
செளகர்யமாக வண்டியைப்பிடித்து விடலாம் என்று
நல்லதொரு முடிவு எடுத்தார்.
பையன் 1 ஆஹா ..ஆஹா..ஹா ..என்ன முன் எச்சரிக்கை.. இப்படித்தான் எதிலும் ஜாக்கிரதையாக இருக்கணும்
இப்போவானால் பாலம் கட்டியாகி
விட்டது நேராகவே போகலாம்..
வசனம்:
வருமுன் காவாதான் வாழ்க்கை -
எரிமுன் வைத்தூறு போல கெடும்
என்று சும்மாவா சொன்னார் வள்ளுவர் ..
வெள்ளம் வருமுன் அணை போடு
என்பது பழமொழியாயிற்றே...
வசனம்:
இங்கேதான் கிளைமேக்ஸ்.. எதிர்பாராத திருப்பம் ..
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷமாயிற்றே..
ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாதே..
சூடாகாபி குடிச்சுப்பார்த்தும் இன்னும் சன்ரைஸ் ஆகி
சூரியன் உதிக்கல்லியேன்னு கவலைப்பட்டார்..
அகலாமல் அணுகாமல் தீக்காய்வார்
போல கவனமாகஇருக்கவேண்டுமில்லையா..
திட்டமில்லாமல் ரொம்ப பக்கமாய்
போய் சுட்டுக்கிட்டார்..
இப்படித்தான் இது சூரியனா சந்திரனா என்று படித்தவர் போல தோன்றிய ஒருவரிடம் இரண்டு பேர் சந்தேகம் கேட்டார்கள்..
அவர் எனக்குத்தெரிய்ல்லீங்களே
நான் வெளியூருங்க என்கிறாராம்..
பையன் 1: சரியாப்போச்சு இந்த குழப்பமில்லாதவர்களே இருக்கமாட்டார்கள் போல இருக்குதே..
வசனம் :
ஆமாம் .. நான் கூட செல்போனில் காம்பஸ் செட் பண்ணி வைத்திருக்கிறேன்..
அப்புறம் சாவி கோர்க்கும் செயினில் ஒரு சின்ன மாலுமி காம்பஸ் மாட்டி வைத்திருக்கிறேன்.. !
எங்கே போனாலும் கூகுள் மேப்பில் சாலை வழிகளோடு திசைகளையும் குழப்பமிலாமல் அறியமுடிகிறது..
பையன் 2: நகைச்சுவை கதையில் எத்தனை பயனுள்ள செய்திகள் கிடைத்திருக்கிறது..!
போர்ட்டர் கிட்டே பல்லவன் பற்றி கேட்டார்..
சென்னைப் போக பல்லவன் நாளைக்கு தான் வரும்” அப்படீங்கறானாம் அவன்...!
ரயில்வே கடிகாரம் 19.00 என்று சிவப்புக்கலர் டிஜிட்டலில் காட்டி சிரித்ததாம்...!!
ராசி பலனில் பார்த்த வீண் அலைச்சலும், விரையமான வெட்டிச் செலவுகளும் பலித்தே பலித்துவிட்டது...!
நிலவும் நட்சத்திரங்களும் போட்டி போட்டு கைதட்டி
சிரித்ததாம் வானத்திலிருந்து அவரைப்பார்த்து..
முரசும் அதிருதில்ல.. நாம கதை கேட்டு சிரிச்ச சிரிப்பிலே ..!
வசனம் :
சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு.. வேறெந்த ஜீவராசிகளும் செய்யமுடியாத செயலாகும் இந்த சிரிப்பு . மனித இனத்திற்கே சொந்தமான சிரிப்பு,
சிறப்பானதாக அமையவேண்டும் ..
மங்களம் .. சுபமங்களம் ..
கதை கேட்டவர்களுக்கும் கேட்காதவர்களுக்கும்
வந்தவர்க்கும் வராதவர்க்கும் ..
கதை படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கும் ,
விமர்சனம் எழுதியவர்களுக்கும் எழுதாதவர்களுக்கும்
கதாசிரியர் அவர்களுக்கும், நடுவர் அவர்களுக்கும்
மங்களம் சுபமங்களம் ..!!
வாழியவே பல்லாண்டு காலம்...
முன் எச்சரிக்கை முகுந்தன்
கதை கேட்ட நீங்களெல்லாம் வாழியவே (2)
வாழிய வாழிய வாழியவே...
ஆ....ஆ....ஆ...
வணக்கம்..வணக்கம்..வணக்கம்..!
வாழிய வாழிய வாழியவே...
ஆ....ஆ....ஆ...
வணக்கம்..வணக்கம்..வணக்கம்..!
மக்கள் வாழ்வியலோடு கலந்த ஒரு விஷயம்தான் வில்லுப்பாட்டு.
சிரிப்போடு வாழ்வில் எதுவுமே அளவோடு இருக்கவேண்டும்
சிம்மாசனமிட்டு அமரவேண்டுமானால் எத்தனை நுணுக்கமான, சாமர்த்தியமான சமயோசிதமான கலகலப்பான .. என்னும் எத்தனையோ திறமைகளுடன் இந்த கதையை கதாசிரியர் படைத்திருப்பார் என எண்ணிப்பார்க்கவேண்டும் ..
உப்பு போல .. என்று நவரசங்களையும் குழைத்துக்கொடுத்து அதில் நகைச்சுவை என்னும் சொக்குப்பொடியை தூவி ஒரே ஒரு கதாப்பாத்திரம் கருத்தில்
கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை எங்குமே அதிகப்பிரசங்கித்தனமாக கதை ஆசிரியர் எள்ளளவு கூட எட்டிப்பார்க்கவில்லை..
பாத்திரத்தையே அழுத்தமாக பிரதானமாக்கி பிரமாதப்படுத்தியிருக்கிறார்..
எத்தனை கச்சிதமான வர்ணிப்பு.. வியந்து ..வியந்து ரசிக்கிறோம் ..
படங்களெல்லாம் கதைக்கு மெருகூட்டுகின்றன..
எந்த வரியும் அதிகப்படி என்று விமர்சனத்திற்காகக்கூட குறைக்கமுடியாதபடி அத்தனை வரிகளும் வைர வரிகள்..
மிகக்கடினமான இந்த வேலையை
சிரத்தையுடன் பரிசீலனை செய்து
நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள
நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.
நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி
முதல் பரிசுத்தொகை இவ்விருவருக்கும்
சரிசமமாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.
இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/
http://gopu1949.blogspot.in/
அனைவரும் தொடர்ந்து
ஒவ்வொரு வாரப்போட்டியிலும்
உற்சாகத்துடன் பங்கு கொண்டு
சிறப்பிக்க வேண்டுமாய்
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
oooooOooooo
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
'VGK-22 - வடிகால்'
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
முதல் பரிசை வென்ற வல்லமையாளர்களான கீதா மதிவாணன் அவர்களுக்கும், திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமுதல் பரிசினை திருமதி கீதாமதிவாணன் அவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் இனிய மகிழ்ச்சி.. நன்றிகள்..
பதிலளிநீக்குஇன்றைய பதிவு இந்த 2014ம் ஆண்டின் 100வது பதிவாக அமைந்துள்ளதற்கு மகிழ்ச்சியான இனிய வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்று சாதனையாளர்களாகத் திகழும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! பரிசு மழை தொடரட்டும்!
பதிலளிநீக்குமுதல் பரிசை வென்ற சகோதரிகள் இருவருக்குமே மனமார்ந்த பாராட்டுகள்! வாழ்த்துகள்! எல்லா பந்தையுமே சிக்சர் அடிக்கிற இவங்க கிட்ட எப்படி மோதுறது! என்ன ஹாட்ரிக் அடிக்கவிடாம மறுபடியும் மூணாவது பந்துல ரன் அவுட் ஆக்கிட்டாங்களே! அன்பு வைகோ அவர்களே போற போக்க பாத்தா இனி முதல் பரிசே லிஸ்ட்லேருந்து காணாம போய்டும்போல இருக்கு! சரி இருங்க மறுபடியும் ராபர்ட் புரூஸ் கதைய படிச்சுட்டு பிரஷ்ஷா வரேன்! வெற்றியாளர்களுக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குதிரு.வை.கோ. அவர்களுக்கு நடப்பாண்டின் 100ஆவது பதிவிற்கான மனமார்ந்த பாராட்டுகள்! 1000 தொட வாழ்த்துகள்! ரவிஜி...
பதிலளிநீக்குதிருமதி கீதா மதிவாணன்
பதிலளிநீக்குதிருமதி இராஜேஸ்வரி
இருவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்
ஆறு மாதங்களில் 100 பதிவா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ஐயா
முன்னெச்சரிக்கை முகுந்தன் விமர்சனத்துக்கான முதல் பரிசைப் பெற்றுள்ளமையும் அதை திருமதி இராஜராஜேஸ்வரி மேடத்துடன் பகிர்ந்து கொள்வதும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன. இதுவரை வலையுலகில் இல்லாதபடியான ஒரு சிறப்புப் போட்டியை அறிவித்ததோடு பரிசுகளும் ஊக்கமிகுப் பாராட்டுகளும் வழங்கி சிறப்பிக்கும் கோபு சார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி. வல்லமை சுட்டியையும் இணைத்து சிறப்பித்த அவருடைய பெருந்தன்மையை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. சிறந்த சிறுகதை ஆசிரியரும் பெரும் சாதனையாளருமான அவர் தன்னடக்கத்தோடு குறிப்பிட்டாலும் அவரது இதுபோன்ற சாதனைப் போட்டிகள் இதுவரை மட்டுமில்லாது இனியும் எவராலும் முறியடிக்கப்பட இயலாத ஒன்று என்றே தோன்றுகிறது. சிரத்தையுடன் வாராவாரம் பரிசுக்குரிய விமர்சனங்களை தேர்வு செய்வதோடு எழுதுபவர்களுக்கு நல்ல வழிகாட்டுதலும் வழங்கும் நடுவர் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஇந்த வருடத்தின் நூறாவது பதிவில் நானும் இடம்பெற்றுள்ளமை எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தொடர்ந்து பல நூறு பதிவுகள் வழங்கி சிறப்பிக்க இனிய வாழ்த்துக்கள் கோபு சார்.
பதிலளிநீக்குஇன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி June 15, 2014 at 9:50 AM
நீக்கு//இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..!//
உற்சாகம் அளிக்கும் முன் தகவல் கொடுத்துள்ளதற்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
http://sivamgss.blogspot.in/2014/06/blog-post_9057.html
பதிலளிநீக்குதிருமதி கீதா சாம்பசிவம் அவர்கள்
இந்த வெற்றியாளர், தான் முத்தான மூன்றாம் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அவர்களின் அந்தப்பதிவினில் நம் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய திரு. ஜீவி சார் அவர்கள் மிக நீண்ட கருத்துக்கள் சொல்லி வியக்க வைத்துள்ளார்கள்.
அவரின் அந்தக்கருத்துக்களை கீழே தனியாகக் கொடுத்துள்ளேன். அவருக்கும் என் அன்பார்ந்த இனிய நன்றிகளை இங்கு கூறிக்கொள்கிறேன்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
அன்புள்ள திரு. ஜீவி ஐயா அவர்கள் திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு அளித்துள்ள பின்னூட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. Ref. Link:
பதிலளிநீக்குhttp://sivamgss.blogspot.in/2014/06/blog-post_9057.html
ஜீவி has left a new comment on the post "மூன்றாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்???":
நானும் அந்தக் கதையை முன்னாலேயே படித்து அதற்கு பின்னூட்டமும் போட்டிருப்பது தெரிந்தது. இப்பொழுது உங்களுக்காக அந்தக் கதையை மீண்டும் படித்தேன்.
ஒரு விஷயம் தெரிந்தது.
1.முன் எச்சரிக்கை முகுந்தன் போன்ற ஒருத்தர் வை.கோ. சாருக்கு பழக்கமாகி இருக்கலாம்.
2. இல்லை, முன்னெச்சரிக்கை முகுந்தனின் குணாதிசயங்களின்
பாதிப்பு அவரில் இருந்திருக்கலாம்.
இரண்டாவது சொன்னதை யூகிக்கிற அளவுக்கு அவர் முன் எச்சரிக்கை முகுந்தனின் நடவடிக்கைகளை அனுபவித்து தன்னுள் ரசித்திருப்பது தெரிகிறது.
சரி. அதீத முன்னெச்சரிக்கையால் விளையும் நன்மைகள் அல்லது அசட்டுத்தனங்களைச் சொல்ல வேண்டும். முன் எச்சரிக்கை என்பதால் கதாநாயகனின் பெயரின் முன் எழுத்திலும் ஒரு 'மு' வருகிற மாதிரி முகுந்தன் என்று அவனுக்கு பெயர் வைத்தாயிற்று.
அடுத்தாற் போல் ஒருவனின் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நகைச்சுவையாக சொல்கிற மாதிரி
அந்த கதாபாத்திரத்தை--முகுந்தனை- உலவ விடுவதற்கு ஒரு கதை வேண்டும். அதுக்கான ஒரு கதை?... அதை யோசித்ததில் தான் இந்தக் கதை அவர் மனசில் உருவாகியிருக்கிறது.
சொல்லப் போனால் ஒரு ஒன் லைன் கதை.
அதிகாலையில் பயணிக்க வேண்டிய ரயில் பயணத்திற்காக முதல் நாள் மாலையே ரயில் நிலையத்திற்கு போய் விடுவதாக முகுந்தனை-- சாரி, அவ்வளவு முன் எச்சரிக்கை யோடு முன் எச்சரிக்கை முகுந்தன்-- இருந்திருக்கிறார் என்று காட்ட வேண்டும்.
அதை பிறர் நம்பும்படியாகவும் சொல்ல வேண்டும். என்ன செய்வது என்று யோசித்ததில் தான் கொட்டோ கொட்டென்று கொட்டிய அந்த மழையும், மழைபெய்கிற உணர்வே இல்லாமல் அடித்துப் போட்ட மாதிரியான அவரின் மதியத் தூக்கமும்.. அயர்ந்து தூங்குகிற மனுஷனை எழுப்பத்தான் அவர் படுத்த இடத்திற்கு அருகிலிருக்கிற ஜன்னலை திறந்து வைத்த சாமர்த்தியமும்.
கனத்த மழையில் தெரு வீடு எல்லாம் ஒரு சேர இருண்டு கிடக்கிறது. விழிப்பு வந்து சடாரென்று எழுந்திருந்த பொழுது
மலங்க மலங்க விழித்த நினைவுலகத்திற்கு வந்ததும்
நிகழ்வுலகத்தின் நினைப்பு தானே எவருக்கும் வரும்?..
போதாக்குறை க்கு மனுஷன் ரயிலுக்குப் போக வேண்டும் என்கிற நினைப்போடையே தூங்கியிருக்கிறார்.
அந்த நினைப்பு மனசில் உரைத்ததும் தான் வாரிச் சுருட்டிக் கொண்டு பதறி எழுந்து தயாராக வைத்திருந்த பயணப் பொருட்களை எடுத்துக் கொண்டு ரயிலடிக்கு ஜூட்!
இந்தக் கதையில் வரிக்கு வரி
கொஞ்சம் கூடப் பிசகாமல்-- கடைசியில் கூட ஸ்ரீரங்கம் ரயிலடிக்குப் போன அவனது முன் எச்சரிக்கை உணர்வை-- அழகாக இப்படி ஒரு நிகழ்வு நிஜமாக நடந்தது போலவே முகுந்தனின் நடவடிக்கைகளை வை.கோ. சார் வர்ணித்தது அழகோ அழகு!
நகைச்சுவையாய் எதையும் சொல்வதில் கைதேர்ந்தவர் ஆயிற்றே! கேட்க வேண்டுமா?மனிதர் தன் கைவண்ணத்தைக் காட்டி விட்டார்!
இப்பொழுது உங்கள் விமரிசனத்திற்கு வருவோம். அந்தக் கதைப் போட்டியின் நடுவர் குறிப்பையும் படித்தேன். நடுவர் சொல்லியிருக்கிற மாதிரி அவரவர் எழுத்துக்கு அவரவரே நீதிபதி!
கதையை நீங்களும் மறுபடியும் இன்னொரு தடவை உங்கள் விமரிசனத்தில் விவரித்ததைத் தவிர்த்து அந்தக் கதையை விமரிசிக்கறதாய் நீங்கள் எண்ணக் கூடிய வரிகளை மட்டும் ஒரு தனிக் காகிதத்தில் எழுதிக் கொள்ளுங்கள்.
இப்பொழுது உங்கள் விமரிசத்திற்கான நீதிபதியாக உங்களையே வரித்துக் கொள்ளுங்கள்.
அவ்வளவு தான்.
பி.கு: சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் பின் மாலையில் அசதியில் தூங்கி விட்டேன். சுழலும் மின்விசிறி சுழன்றபடி இருக்க தூக்கமான தூக்கம். அப்படியொரு தூக்கம். எனக்கு தொந்தரவு இருக்கக்கூடாது என்று அறையின் கதவை வேறு சாத்தி வைத்திருக்கிறார்கள்.
எதேச்சையாய் என் மனைவி என்ன இவ்வளவு நேரம் தூங்குகிறார் என்கிற யோசனையில் அறைக்கு வந்திருக்கிறார்கள். அந்த சலனத்தில் சடக்கென்று நான் விழித்துக் கொண்ட பொழுது, "காப்பி கலந்து கொண்டு வரட்டுமா?" என்று கேட்டார்கள்.
"இரு. பல் தேய்த்து விட்டு வருகிறேன்.." என்று சடக்கென்று நான் எழுந்ததைப் பார்த்து வீடு பூராவும் சொல்லிச் சொல்லி சிரிப்பான சிரிப்பு!
முகுந்தன் மட்டுமில்லை; ஒருவிதத்தில் நாம் எல்லோருமே
அப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இந்த மாலை- அதிகாலை மயக்கத்தை தத்ரூபமாக வர்ணித்திருக்கும் வை.கோ.சாரை பாராட்டத் தான் வேண்டும். //
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆத்மார்த்தமான மிக நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும், அடியேனின் சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன் கூடிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
தந்தையர் தின வாழ்த்துக்கள் ஐயா மங்கோ யூஸ் போல மனம் இனிக்க எந்நாளும் வாழ்த்துக்கள் பல கோடி வந்து குவியட்டும் தங்களின் ஆயுள் ஆரோக்கியமும் ,தன்னம்பிக்கையும் ,விடாமுயற்சிகளும் மேமேலும் சிறந்து விளங்கிட .
பதிலளிநீக்குமுதல் பரிசு பெற்ற திருமதி இராஜராஜேஸ்வரி மற்றும் திருமதி கீதா மதிவாணன் ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபலரும் மறந்து விட்ட வில்லுப் பாட்டின் மூலம் விமர்சனம் செய்திருப்பது நல்ல முயற்சி.... ரசித்தேன்.
இந்த வெற்றியாளர் ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் தான் பெற்றுள்ள இந்த வெற்றியினைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
பதிலளிநீக்குஇணைப்பு:
http://geethamanjari.blogspot.in/2014/06/blog-post_16.html
தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்
பதிலளிநீக்குபரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்குJayanthi Jaya October 23, 2015 at 2:25 PM
நீக்கு//முதல் பரிசினை வென்ற திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.//
வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ.
பரிசு வென்றவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி இராஜராஜேஸ்வரிமேடம் திருமதி கீதா மேடம் வாழ்த்துகள். வில்லுப்பாட்டு ஸ்டைலில் விமரிசனம் சூப்பர்.
பதிலளிநீக்கு;-))))
பதிலளிநீக்குமுதல் பரிசினை வென்று சாதனையாளர்களாகத் திகழும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் உளமார்ந்த பாராட்டுகள்! பரிசு மழை தொடரட்டும்!
பதிலளிநீக்கு