என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 17 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-1





பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.




பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.


பட்டியல் எண்: 1 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
50 முதல் 60 வரை




TOTAL NUMBER OF COMMENTS : 50 Each

http://gopu1949.blogspot.in/2013/05/1.html
வெயிட்லெஸ் விநாயகர்


http://gopu1949.blogspot.in/2013/06/9.html
அழுக்கு உடையுடன் ஆண்டவன்


http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html
ஏகாதஸி மஹிமை


http://gopu1949.blogspot.in/2013/09/55-2-2.html
கிளிமொழி கேட்க ஓடியாங்கோ


TOTAL NUMBER OF COMMENTS : 51 Each


http://gopu1949.blogspot.in/2013/07/20.html
பணமும் பதவியும் படுத்தும் பாடு


http://gopu1949.blogspot.in/2013/10/72.html
பளபளக்கும் பட்டுப்புடவை


http://gopu1949.blogspot.in/2014/10/blog-post.html
போட்டி பற்றியதோர் சிறப்புப் பேட்டி

TOTAL NUMBER OF COMMENTS : 52 Each


http://gopu1949.blogspot.in/2011/03/2.html
வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. [நகைச்சுவை] பகுதி-2


http://gopu1949.blogspot.in/2014/02/vgk-04-01-03-first-prize-winners.html
VGK 04 / 01 / 03 FIRST PRIZE WINNERS - காதல் வங்கி 

http://gopu1949.blogspot.in/2011/03/6.html
வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. [நகைச்சுவை] பகுதி-6


http://gopu1949.blogspot.in/2013/09/49.html
பாவ புண்ணியங்கள் + எதிர்பார்ப்புகள்


http://gopu1949.blogspot.in/2013/10/65-1-4.html
தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன்


TOTAL NUMBER OF COMMENTS : 53 Each


http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html
மறக்க மனம் கூடுதில்லையே - பகுதி 2 / 4



http://gopu1949.blogspot.in/2011/12/2-of-3.html
தாயுமானவள் - பகுதி 2 / 3

http://gopu1949.blogspot.in/2011/12/4-of-5.html
தேடி வந்த தேவதை - பகுதி 4 / 5


http://gopu1949.blogspot.in/2012/03/7.html
மீண்டும் பள்ளிக்குப்போகலாம் - நிறைவுப்பகுதி 7 / 7


TOTAL NUMBER OF COMMENTS : 54 Each


http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_11.html
வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ. [நகைச்சுவை] பகுதி-1



http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_24.html
கொஞ்சம் நாள் பொறு தலைவா ....
ஒரு வஞ்சிக்கொடி இங்கு வருவா !


http://gopu1949.blogspot.in/2011/12/2-of-5.html
தேடி வந்த தேவதை - பகுதி 2 / 5


TOTAL NUMBER OF COMMENTS : 55 Each


http://gopu1949.blogspot.in/2011/09/blog-post_30.html
ஜாதிப்பூ



http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html
ஜாங்கிரி


http://gopu1949.blogspot.in/2012/03/3.html
மீண்டும் பள்ளிக்குப்போகலாம் - பகுதி-3 / 7


http://gopu1949.blogspot.in/2013/10/71.html
அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே !



TOTAL NUMBER OF COMMENTS : 56 Each


http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா - பகுதி-1 / 2



http://gopu1949.blogspot.in/2013/08/40.html
பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு


TOTAL NUMBER OF COMMENTS : 57 Each


http://gopu1949.blogspot.in/2011/09/blog-post.html
கொட்டாவி



http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html
நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு


TOTAL NUMBER OF COMMENTS : 58 Each


http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html
மறக்க மனம் கூடுதில்லையே - பகுதி 1 / 4



http://gopu1949.blogspot.in/2015/02/3-of-6.html
சந்தித்த வேளையில் - பகுதி 3 / 6


TOTAL NUMBER OF COMMENTS : 59 Each


http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html
வடிகால் - இறுதிப்பகுதி 4 / 4



http://gopu1949.blogspot.in/2013/10/62.html
உண்மையானவன் ஒருவனே !

http://gopu1949.blogspot.in/2013/10/64.html
கசக்கும் வாழ்வே இனிக்கும்


http://gopu1949.blogspot.in/2014/01/vgk-01.html
VGK-01 ஜாங்கிரி


TOTAL NUMBER OF COMMENTS : 60 


http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html
புது முகங்கள் [கிளியின் பார்வையில்] ....

ஸ்வீட் சிக்ஸ்டீன் அதிராவுக்கு பிறந்துள்ள 
இரட்டைக்குழந்தைகள் கிசு-கிசு ச் செய்திகளுடன்










தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]



54 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஸ்ரீராம். March 17, 2015 at 1:24 PM

      வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

      //அடுத்த புதுமை? கலக்குங்க!//

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. புதுமையாகவே கலக்கிடுவோம் :)

      நீக்கு
  2. வாங்கோ சார் வாங்கோ....
    உற்சாகமாய் அடுத்த கட்டம் ஆரம்பம்....தொடர்கிறோம்...வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. R.Umayal Gayathri March 17, 2015 at 3:56 PM

      வாங்கோ, வணக்கம்.

      என்ன இப்படி திடீர்ன்னு கிரீடத்தையே மாற்றிக் கொண்டு விட்டீர்கள்? யாரோ என்னவோ புதுசா இருக்கேன்னு ஒரு நிமிடம் பயந்தே போய்ட்டேன். :)

      //வாங்கோ சார் வாங்கோ....//

      ஆஹா, தங்களின் வரவேற்பே பலமாக உள்ளது. :) மகிழ்ச்சி.

      //உற்சாகமாய் அடுத்த கட்டம் ஆரம்பம்.... தொடர்கிறோம்... வாழ்த்துக்கள்//

      சந்தோஷம். மிக்க நன்றி.

      நீக்கு
  3. சார் வாழ்த்துக்கள். இவ்வளவு ஆராய்ச்சி செய்து...உங்க பொறுமையை என்னவென்று சொல்வது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. RAMA RAVI (RAMVI) March 17, 2015 at 4:10 PM

      வாங்கோ, வணக்கம்.

      //சார் வாழ்த்துக்கள்.//

      மிக்க நன்றி.

      //இவ்வளவு ஆராய்ச்சி செய்து... //

      :)

      //உங்க பொறுமையை என்னவென்று சொல்வது!!!!!//

      பூமாதேவன் என்று சொல்லுங்கோ ... பொறுமையில் பூமாதேவி போல :)

      நீக்கு
  4. பதில்கள்
    1. thirumathi bs sridhar March 17, 2015 at 4:35 PM

      வாங்கோ ஆச்சி, நலம் தானே !

      //sir.niinga pathivulaha capton சார், நீங்க பதிவுலகக் கேப்டன்//

      பயண ஏற்பாடுகளுக்கு நடுவே இங்கும் வந்து எட்டிப்பார்த்திருப்பது வியப்பளித்தது .... அவசரத்தில் CAPTAIN என்பது CAPTON ஆயிடுச்சு போலிருக்கு. அதனால் என்ன .... ஆச்சி வந்ததே ஆச்சர்யமான விஷயம் :)

      TON கணக்கில் சந்தோஷம் ஆச்சி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பழனி. கந்தசாமி March 17, 2015 at 5:30 PM

      வாங்கோ, வணக்கம்.

      //நல்ல முடிவு. கலக்குங்க.//

      ஆஹா, ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே கலக்காகக் கலக்கிடுவோம் :)

      நீக்கு
  6. பின்னூட்டமிடுவதும் பதிவு எழுதுவது போல ஒரு கலை அல்லவோ?..
    அதற்கும் அதற்கான பயிற்சி அவசியம் அன்றோ?..
    இந்தப் பயிற்சியை ஊக்குவிக்கவும் ஒரு வழி இருக்கிறது.
    யாரோ எவரோ தனக்கு முன் போட்ட பின்னூட்டம் மாதிரியே இல்லாமல், வெறும் 'வாழ்த்துக்கள்' என் கிற ஒற்றை வார்த்தையைத் தவிர்த்தும் வழக்கமான பின்னூட்டங்களிலிருந்து விலகியிருக்கும் உங்கள் மனசுக்குப் பிடித்த பின்னூட்டங்களை மட்டும் வரிசைபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனசைக் கவர்ந்த, புதுசாக ஏதாவது செய்தி சொன்ன பின்னூட்டங்களையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
    இவற்றை மட்டும் மீண்டும் ஒத்தி எடுத்து பிரசுரியுங்கள்.
    மொத்த 735 பதிவுகளுக்கு எத்தனை தேறுகிறது என்கிற இந்த கணக்கெடுப்பு பதிவுலகின் பின்னூட்ட வளர்ச்சிக்கு மிகவும்
    பிரயோசனப்படுவதாக இருப்பது தெரியும்.
    ஊட்டமளிப்பது மட்டுமல்ல, உசுப்பி விட்டு எழுதிய பதிவை வெவ்வேறு பார்வைகளில் பார்க்கச் செய்வது பின்னூட்டங்கள் தாம் என்பது தெரியவரும்.
    வழக்கம் போல தங்கள் 'கணக்காளர் கணக்கெடுப்பு' க்கான உழைப்பு பிரமிப்பூட்டுகிறது.
    அதை மேலும் உபயோகமாக்கத் தான் இந்தப் பின்னூட்டமும்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி March 17, 2015 at 5:36 PM

      வாங்கோ சார், நமஸ்காரங்கள், வணக்கம்.

      //பின்னூட்டமிடுவதும் பதிவு எழுதுவது போல ஒரு கலை அல்லவோ?..//

      நிச்சயமாக அது ஒரு கலையே தான்.

      //அதற்கும் அதற்கான பயிற்சி அவசியம் அன்றோ?..//

      வாசித்தலில் + புரிந்து கொள்வதில் சிரத்தையான ஆர்வமும் ஈடுபாடும், எழுதுவதில் கொஞ்சம் திறமையும், பொறுமையும் இருந்தாலே போதும். பயிற்சியெல்லாம் தேவையில்லை என்பது என் அபிப்ராயம்.

      //இந்தப் பயிற்சியை ஊக்குவிக்கவும் ஒரு வழி இருக்கிறது.//

      இதை நான் முன்பே யோசித்துள்ளேன். சில பத்திரிகைகளில் ‘கேள்வி பதில்’ பகுதியில் சிறந்த கேள்விகளுக்கு பரிசு அளிக்கும் வழக்கம் உண்டு. அதே போல சிறந்த கருத்துக்களையும், விமர்சனங்களையும் பின்னூட்டமாக எழுதுவோருக்கு பரிசு அளிக்கலாமா எனவும் நான் முன்பே யோசித்தது உண்டு.

      அதன் தாக்கமே சென்ற ஆண்டு முழுவதும் நாம் என் வலைத்தளத்தினில் நடத்திக்காட்டிய ‘சிறுகதை விமர்சனப்போட்டி’யாகும்.

      http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html இந்த என் பதிவினில் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திருமதி உமையாள் காயத்ரி அவர்களுக்குமாக நான் எழுதியுள்ள பதில்களை மட்டும் தயவுசெய்து நேரமிருந்தால் படித்துப்பாருங்கோ.

      திருமதி. உமையாள் காயத்ரி அவர்களுடையது பரிசளிக்க வேண்டியதோர் பின்னூட்டம் என நான் அன்பின் திரு. சீனா ஐயாவுக்கு எழுதியுள்ளேன்.

      >>>>>

      நீக்கு
    2. வீஜீ >>>>> ஜீவீ [2]

      //யாரோ எவரோ தனக்கு முன் போட்ட பின்னூட்டம் மாதிரியே இல்லாமல், வெறும் 'வாழ்த்துக்கள்' என்கிற ஒற்றை வார்த்தையைத் தவிர்த்தும் வழக்கமான பின்னூட்டங்களிலிருந்து விலகியிருக்கும் உங்கள் மனசுக்குப் பிடித்த பின்னூட்டங்களை மட்டும் வரிசைபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் மனசைக் கவர்ந்த, புதுசாக ஏதாவது செய்தி சொன்ன பின்னூட்டங்களையும் இந்த வரிசையில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றை மட்டும் மீண்டும் ஒத்தி எடுத்து பிரசுரியுங்கள்.//

      இத்தகைய மிகச்சிறப்பான சில பின்னூட்டங்களுக்கு மட்டுமே நான் என் மறுமொழியை பதிலாக அளிக்கப் பிரியப்படுவது உண்டு. இருப்பினும் அவர்களுக்கு மட்டும் பதில் அளித்தால் அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது என்பதால் மற்றவர்களுக்கும் பதில் அளிக்க நேர்ந்துள்ளது. சில சமயம், சிலரின் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே விருப்பம் இல்லாமல் போவதால், அந்த ஒருசிலரை உத்தேசித்து, யாருக்குமே நான் பதில் அளிக்காமல் இருந்து விடுவதும் உண்டு.

      என் பதில் அவசியம் வேண்டும் என எதிர்பார்த்து பின்னூட்டம் கொடுப்பவர்களும் குறிப்பாக சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னூட்டத்தில் இல்லாவிட்டாலும் மெயில் மூலம் பதில் கொடுத்து நான் அவர்களைத் திருப்திப்படுத்துவதும் உண்டு.

      //மொத்த 735 பதிவுகளுக்கு எத்தனை தேறுகிறது என்கிற இந்த கணக்கெடுப்பு பதிவுலகின் பின்னூட்ட வளர்ச்சிக்கு மிகவும் பிரயோசனப்படுவதாக இருப்பது தெரியும்.//

      பதிவுலகின் பின்னூட்ட வளர்ச்சியை விட, நான் அனைவரையும் சமமாக நினைத்து, அனைவருடன் நட்புடன் பழகி வரவே விரும்புகிறேன். யாரையும் உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிட அவர்கள் எழுதும் பின்னூட்டத்தை ஓர் அளவுகோளாக எடுத்துக்கொள்ள எனக்கு ஆர்வம் இல்லை. யார் யார் எப்படி எப்படி என்பது என் மனதுக்கு மிக நன்றாகவே தெரியும். அது [என் மனது] அனைவரையும் மிகத்துல்லியமாகவே எடை போட்டு வைத்துள்ளது, என்பது தங்களுக்கும் நன்றாகவே தெரியும்.

      //ஊட்டமளிப்பது மட்டுமல்ல, உசுப்பி விட்டு எழுதிய பதிவை வெவ்வேறு பார்வைகளில் பார்க்கச் செய்வது பின்னூட்டங்கள் தாம் என்பது தெரியவரும்.//

      இதையும் நான் நன்கு அப்படியே ஒத்துக்கொள்கிறேன். என் சிறுகதைகளை விமர்சனம் செய்திருந்தவர்களில், ஊட்டமளித்தவர்களும் உண்டு, உசிப்பி விட்டவர்களும் உண்டு அல்லவா .... ஆனால் அது வேறு .... இது வேறு என்பதையும் நான் நன்கு அறிவேன்.

      //வழக்கம் போல தங்கள் 'கணக்காளர் கணக்கெடுப்பு' க்கான உழைப்பு பிரமிப்பூட்டுகிறது. //

      இதில் நான் கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஓர் ஆத்ம திருப்தி கிடைப்பதுடன், என்னை நானே, சுய மதிப்பீடு செய்துகொள்ள முடிந்துள்ளது.

      இந்தத்தொடர் சுமார் 15-16 பதிவுகளாக வெளியிடப்பட உள்ளது. இவற்றை நான் இப்போது வெளியிடுவது ..... இதற்கும் பலரிடமிருந்து பல பின்னூட்டங்கள் கிடைக்கும் என்பதற்காக அல்ல.

      எனக்கான ஓர் ஆவணமாக என்றும் என்னிடம் ஒரே இடத்தில் நிலைத்திருக்க மட்டுமே என்பதால் செய்ய ஆரம்பித்துள்ளேன். தேவைப்பட்டால் ஏதாவது READY REFERENCE க்கு உதவட்டுமே என்பதற்காகவும் கூட.

      அப்படியும் என்னிடமிருந்து எந்த அறிவிப்பும், அழைப்பும் கொடுக்கப்படாமல், அவர்களாகவே இங்கு வருகை தந்து தங்களின் பின்னூட்டங்களை இதுவரை 13 நபர்கள் பதிவு செய்துள்ளது, மகிழ்ச்சியாகவே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      ஆங்காங்கே நான் இணைப்புகளை கொடுத்துள்ளதுகூட, ஏற்கனவே அந்த என் பதிவினைப்படிக்காத ஒருசிலர், நேரமும் விருப்பமும் இருந்தால் இப்போதாவது படிக்கட்டுமே என்பதற்காக மட்டுமே.

      //அதை மேலும் உபயோகமாக்கத் தான் இந்தப் பின்னூட்டமும்.//

      புரிகிறது. தங்களின் அன்பான வருகைக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி. இதை நான் நடைமுறைப்படுத்த முயற்சித்தால், அது பின்னூட்டம் இடுபவர்களுக்குள் ஓர் பிரிவினையை ஏற்படுத்தி, இப்போது வருகை தருபவர்களும் வராமல் போக வழி வகுக்கக்கூடும் என்பதால், இதனை என்னால் இப்போது செயல் படுத்த இயலாது. வேறு ஏதாவது ஆரோக்யமான முறையில் பிற்காலத்தில் இதனை வேறு முறையில் செய்ய முயற்சிப்போம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  7. உங்களைப் போல பின்னுட்டம் இடுவது எனக்கு வராது! உங்களின் பின்னூட்டங்களை ரசித்து வாசித்துள்ளேன்! பதிவுகளில் அவ்வப்போது புதுமைகளை செய்து அசத்துகிறீர்கள்! பின்னூட்டங்களை வாசிப்பதே ஓர் சுகமான அனுபவம்தான்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ‘தளிர்’ சுரேஷ் March 17, 2015 at 7:04 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்களைப் போல பின்னூட்டம் இடுவது எனக்கு வராது! //

      அதனால் என்ன? ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமைகள் ஒளிந்திருக்கும். தங்களிடமும் எவ்வளவோ திறமைகள் இருக்கக்கூடும். அவை எனக்குத் தெரியாமலும், அதுபோலச் செய்ய எனக்கு வராமலும் இருக்கலாம்.

      //உங்களின் பின்னூட்டங்களை ரசித்து வாசித்துள்ளேன்!//

      மிக்க மகிழ்ச்சி.

      //பதிவுகளில் அவ்வப்போது புதுமைகளை செய்து அசத்துகிறீர்கள்! //

      அப்படியா ? மிக்க நன்றி.

      //பின்னூட்டங்களை வாசிப்பதே ஓர் சுகமான அனுபவம்தான்!//

      நிச்சயமாக. சில சமயங்களில் பதிவை விட அவை மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துவிடுவதும் உண்டுதான்.

      //வாழ்த்துக்கள்!//

      மிக்க நன்றி.

      நீக்கு
  8. உங்கள் புது முயற்சிகளுக்கு கணக்கே கிடையாது...
    தொடருங்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 17, 2015 at 8:45 PM

      வாங்கோ, வணக்கம்.

      //உங்கள் புது முயற்சிகளுக்கு கணக்கே கிடையாது...//

      என்ன இப்படிச் சொல்லிட்டீங்கோ! :)

      பல்வேறு கணக்குகள் போடாமலா இந்தப் புது முயற்சிகளை நான் மேற்கொண்டிருக்க முடியும்?

      இதில் முழுக்க முழுக்க கணக்குகள் மட்டும் தானே, நண்பா!

      //தொடருங்கள்!!!//

      நான் நிச்சயமாகத் தொடரத்தான் போகிறேன் .... தாங்கள் தொடர்ந்து வந்தாலும் வராவிட்டாலும் :)

      நீக்கு
  9. என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்றீங்க சார்!
    கிட்டத்தட்ட ஆயிரம் பதிவுகளை வரிசையாக இத்தனை பின்னூட்ட ரேஞ்ச்னு பிரிச்சு கணக்கு போடவே உழைக்கணுமே! உழைக்கறது உங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாதுரை March 17, 2015 at 9:16 PM

      வாங்கோ, வணக்கம்.

      //என்னவெல்லாம் ஆராய்ச்சி செய்றீங்க சார்!//

      என் உடல் ஒதுங்கி ஓய்வெடுக்க நினைத்தாலும், என் சிந்தனைகள் எப்போதும் ஏதாவது இதுபோல ஏதாவது ஆராய்ச்சிகள் செய்யவே விரும்புகிறது. :)

      //கிட்டத்தட்ட ஆயிரம் பதிவுகளை வரிசையாக இத்தனை பின்னூட்ட ரேஞ்ச்னு பிரிச்சு கணக்கு போடவே உழைக்கணுமே! //

      சற்றே கடினமான, சவாலான உழைப்பாகவே தான் இருந்தது என்பது உண்மையே.

      50க்கும் மேற்பட்டு கிடைத்துள்ள பின்னூட்டங்களின் அடிப்படையில் என்று மட்டும் இந்த ஆய்வினை நான் மேற்கொண்டுள்ளதால், 80% அலுப்பினை என்னால் குறைத்துக் கொள்ள முடிந்தது.

      இருப்பினும் MAJORITY CATEGORY யில்வரும் 41 to 49 Range இல், பின்னூட்டங்கள் கிடைத்துள்ள மிக அருமையான சில பதிவுகளைப் ஃபில்டர் செய்யும்படியானதில் எனக்கும் கொஞ்சம் வருத்தமே.

      உதாரணமாக தாங்கள் என் விமர்சனப்போட்டியில் முதல் பரிசு பெற்ற ‘பஜ்ஜீன்னா பஜ்ஜிதான்’ சிறுகதையின், முதல் வெளியீட்டினைச்சொல்லலாம்.

      http://gopu1949.blogspot.in/2011/07/1-of-2.html
      பகுதி-1
      43 Comments

      http://gopu1949.blogspot.in/2011/07/2-of-2.html
      இறுதிப்பகுதி-2
      46 Comments

      விமர்சனப் போட்டிக்கான கதையின் மீள் பதிவு:
      http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html
      10 Comments

      ’மூன்றாம் சுழி’யும், ’கீதமஞ்சரி’யும் முதல் பரிசினை வென்று பகிர்ந்து கொண்டதற்கான அறிவிப்புப்பதிவு:

      http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34-01-03-first-prize-winners.html
      43 COMMENTS

      மேலேயுள்ள ’பஜ்ஜி போன்ற ருசியான’ இவையெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெறப்போவது இல்லை. :(

      //உழைக்கறது உங்களுக்கு ஒரு பிரச்சினை இல்லை....//

      அது சரி ! ஏதாவது இதுபோலச் சொல்லி நீங்களும் உசிப்பி விடுங்கோ. ஏற்கனவே தாங்கள் உசிப்பி விட்டதில் என்னால் கீழ்க்கண்ட நான்கு பதிவுகளைத் தர முடிந்தது.

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
      164 COMMENTS

      http://gopu1949.blogspot.in/2013/02/2.html
      137 COMMENTS

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html
      159 COMMENTS

      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_23.html
      137 COMMENTS

      அவை என்றும் மறக்க முடியாத இனிய அனுபவங்கள். மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். :)

      நீக்கு
  10. பதில்கள்
    1. Sangeetha Nambi March 17, 2015 at 9:34 PM

      வாங்கோ, வணக்கம்.

      //What a great stats ! You got lot of patience ! Keep it up sir !//

      தங்களின் அபூர்வ வருகையும் அழகான கருத்துக்களும், தங்கள் பெயரைப்போலவே சங்கீதமாக ஒலித்து நம்பிக்கை அளிக்கிறது. :)

      மிக்க நன்றி.

      நீக்கு
  11. வித்தியாசமான முயற்சிகளில் உங்களின் தனித்தன்மையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை! வழக்கம் போலவே இதுவும் புகழ் பெறும்! இனிய வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனோ சாமிநாதன் March 17, 2015 at 9:58 PM

      வாங்கோ, வணக்கம்.

      //வித்தியாசமான முயற்சிகளில் உங்களின் தனித்தன்மையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!//

      அஷ்டாவதானியாகிய தங்களைத் தவிர வேறு யாரால் இது வித்தியாசமான முயற்சி என்றும், தனித்தன்மை வாய்ந்தவன் நான் என்றும் சொல்லி, மனம் திறந்து பாராட்ட முடியும்?

      // வழக்கம் போலவே இதுவும் புகழ் பெறும்! //

      என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம் கொடுத்து மகிழ்வித்த தாங்கள் சொன்னால் எதுவும் மிகச்சரியாகவே இருக்கும். என் எல்லாப்புகழும் தங்களுக்கே ! :)

      //இனிய வாழ்த்துக்கள்!!//

      அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  12. அடுத்தத் தொடறை அம்ர்க்களமாக ஆரம்பித்து விட்டீர்கள். பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு பெரிய வேலை. . அதை ஒரு சுவாரஸ்யமானத் தொடராக வெளிடுவது உங்களுக்கு கைவந்த கலை.
    தொடர்ந்து கலக்குங்கள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivam March 17, 2015 at 10:41 PM

      வாங்கோ, வணக்கம்.

      //அடுத்தத் தொடரை அமர்க்களமாக ஆரம்பித்து விட்டீர்கள். //

      அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

      //பின்னூட்டங்களின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது ஒரு பெரிய வேலை...//

      மிகப்பெரிய தலைவலியான வேலைதான், மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் போடுவதுபோல :)

      //அதை ஒரு சுவாரஸ்யமானத் தொடராக வெளிடுவது உங்களுக்கு கைவந்த கலை.//

      மிகவும் சந்தோஷம்.

      //தொடர்ந்து கலக்குங்கள் கோபு சார்.//

      கலக்கிடுவோம் ! :) மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  13. அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். எங்கே முன்பு போல் தொடர்ந்து நீண்டநாள் எழுதாமல் வலையுலகை விட்டு விலகி நின்று, மற்றவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டும் எழுதுவதோடு நின்று விடுவீர்களோ என்று நினைத்தேன். நல்லவேளை, மீண்டும் புதிய யுத்தியுடன், புதுமையான ரசனையோடு எழுதி வாசகர்களை மகிழ்விக்க வந்தமைக்கு நன்றி.

    மேலே ஜீவி அய்யா அவர்கள் சொன்ன கருத்தினை அப்படியே ஏற்று வழிமொழிகின்றேன்.

    உங்கள் உடல் நலனிலும் அதிகம் கவனம் வைக்கவும்; என்றாவது ஒருநாள் என்றாலும் பரவாயில்லை, அடிக்கடி இரவு அதிகநேரம் தொடர்ந்து கண்விழித்து எழுத வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 17, 2015 at 11:54 PM

      //அன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம்.//

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

      //எங்கே முன்பு போல் தொடர்ந்து நீண்டநாள் எழுதாமல் வலையுலகை விட்டு விலகி நின்று, மற்றவர்களின் பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டும் எழுதுவதோடு நின்று விடுவீர்களோ என்று நினைத்தேன்.//

      அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதும் அப்படியேதான் நினைத்துக்கொண்டுள்ளேன்.

      //நல்லவேளை, மீண்டும் புதிய யுத்தியுடன், புதுமையான ரசனையோடு எழுதி வாசகர்களை மகிழ்விக்க வந்தமைக்கு நன்றி.//

      ஏதோ கடைசியாக மனதில் தோன்றியதோர் எண்ணம். பழைய என் பதிவுகளையும், அதற்கான பின்னூட்டங்களையும் மீண்டும் ஒருமுறை வாசித்து மகிழ்ந்ததின் தாக்கம் மட்டுமே, இதுபோல என்னை எழுத வைத்துள்ளது.

      //மேலே ஜீவி அய்யா அவர்கள் சொன்ன கருத்தினை அப்படியே ஏற்று வழிமொழிகின்றேன்.//

      அவருக்கான என் பதிலே தங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

      //உங்கள் உடல் நலனிலும் அதிகம் கவனம் வைக்கவும்; என்றாவது ஒருநாள் என்றாலும் பரவாயில்லை, அடிக்கடி இரவு அதிகநேரம் தொடர்ந்து கண்விழித்து எழுத வேண்டாம்.//

      ஆகட்டும். முயற்சிக்கிறேன். தங்கள் அன்புக்கும் என் மீதான தனி அக்கறைக்கும் மிக்க நன்றி. - VGK

      நீக்கு
  14. உங்கள் சேமிப்பு ஆற்றலை நினைத்து பலமுறை வியந்ததுண்டு...

    மற்றுமொரு தொடர சிறக்க வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுக்கல் தனபாலன் March 18, 2015 at 6:59 AM

      வாங்கோ Mr. DD Sir, வணக்கம்.

      தங்களைக் காணுமே எனக் கவலை கொண்டேன்.

      //உங்கள் சேமிப்பு ஆற்றலை நினைத்து பலமுறை வியந்ததுண்டு...//

      ஆஹா, மிகவும் சந்தோஷம்.

      //மற்றுமொரு தொடர் சிறக்க வாழ்த்துக்கள்...//

      மிக்க நன்றி.

      நீக்கு
    2. நானும் சமீபத்திய பதிவிலிருந்து சேமிப்பை சேகரிக்க தொடங்கலாமா...? என்று பார்த்த போது... நாலைந்து பதிவுகளாக உங்களின் கருத்துரைகள் இல்லை... சிறிது வருத்தம்...

      தவறாயின் மன்னித்து விடுங்கள் ஐயா...

      நீக்கு
    3. திண்டுக்கல் தனபாலன் March 19, 2015 at 7:30 AM

      //தவறாயின் மன்னித்து விடுங்கள் ஐயா...//

      இதில் தவறு என் பக்கம் மட்டுமே. மன்னிப்பதானால் என்னைத்தான் தாங்கள் மன்னிக்க வேண்டும்.

      //நானும் சமீபத்திய பதிவிலிருந்து சேமிப்பை சேகரிக்க தொடங்கலாமா...? என்று பார்த்த போது...//

      நல்ல முயற்சி ...... செய்யுங்கள் ...... வாழ்த்துகள்.

      // நாலைந்து பதிவுகளாக உங்களின் கருத்துரைகள் இல்லை... சிறிது வருத்தம்...//

      இன்று நான் நிறைய நேரம் தங்களுக்காகவே ஒதிக்கி தங்களின் வருத்தத்தைப் பெரும்பாலும் குறைத்துள்ளேனாக்கும் ! :)

      நீக்கு
  15. பதிவுலகில் பலரும் செய்யாத செய்யத்துணியாத பல முயற்சிகளை செய்துகாட்டி அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள். இப்போது பின்னூட்ட சேகரிப்பெனும் மாபெரும் செயலில் இறங்கியுள்ளதைப் பார்க்க மலைப்பாக உள்ளது. எப்படி இவ்வளவு தகவல்களையும் தொகுத்து சிறப்பாக பதிவுகளாக்கி வெளியிடமுடிகிறது. அசாத்திய பொறுமையும் செய்திறன் நேர்த்தியும் பெரும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே சாத்தியம். உடல்நலனையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். இனிய வாழ்த்துகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  16. கீத மஞ்சரி March 18, 2015 at 5:55 PM

    வாங்கோ, வணக்கம்.

    //பதிவுலகில் பலரும் செய்யாத செய்யத்துணியாத பல முயற்சிகளை செய்துகாட்டி அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்.//

    இதைத் தங்கள் மூலம் கேட்பதில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)

    //இப்போது பின்னூட்ட சேகரிப்பெனும் மாபெரும் செயலில் இறங்கியுள்ளதைப் பார்க்க மலைப்பாக உள்ளது. எப்படி இவ்வளவு தகவல்களையும் தொகுத்து சிறப்பாக பதிவுகளாக்கி வெளியிடமுடிகிறது. அசாத்திய பொறுமையும் செய்திறன் நேர்த்தியும் பெரும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.//

    மிகவும் சந்தோஷம். புரிதலுக்கு நன்றி.

    // உடல்நலனையும் கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.//

    ஆகட்டும். தங்களின் அன்புக்கும் அக்கறைக்கும் என் நன்றிகள்.

    //இனிய வாழ்த்துகள் கோபு சார்.//

    நன்றி! நன்றி!! நன்றி !!!

    பதிலளிநீக்கு
  17. ஆகா! அடுத்த தொடரா? உற்சாகத்துடன் பின்னூட்டங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து எண்ணிக்கை அடிப்படையில் தொகுத்து வெளியிட்டிருப்பது இதுவரை யாரும் செய்யாத புதுமை! ஏதோ ஒரு விதத்தில் எப்போதும் தங்களை பிஸியாக வைத்துக்கொள்வதற்குப் பாராட்டுக்கள்!
    நம் எழுத்தை ஊக்குவிக்கும் பின்னூட்டத்துக்கும் அவற்றை எழுதிய பதிவர்களுக்கும் மரியாதை செய்யும் நிமித்தம், நீங்கள் தொகுக்க நினைக்கும் இத்தொடர் போற்றி வரவேற்க வேண்டிய விஷயம். இது போல் ஓரிடத்தில் சேமித்து வைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் திருப்பிப் படித்து நம் பாட்டரிக்கு எனர்ஜி ஏற்றிக்கொள்ள முடியும். நல்ல ஐடியா! பாராட்டுக்கள் கோபு சார்!
    அதிராவின் இரட்டைக்குழந்தைகள் படம் சூப்பர்! காமெண்ட் அதை விட சூப்பர்!

    பதிலளிநீக்கு
  18. Kalayarassy G March 18, 2015 at 8:58 PM

    வாங்கோ, வணக்கம்.

    //ஆகா! அடுத்த தொடரா? உற்சாகத்துடன் பின்னூட்டங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து எண்ணிக்கை அடிப்படையில் தொகுத்து வெளியிட்டிருப்பது இதுவரை யாரும் செய்யாத புதுமை! //

    அப்படியா? மிக்க மகிழ்ச்சி.

    //ஏதோ ஒரு விதத்தில் எப்போதும் தங்களை பிஸியாக வைத்துக்கொள்வதற்குப் பாராட்டுக்கள்!//

    :) சந்தோஷம்

    //நம் எழுத்தை ஊக்குவிக்கும் பின்னூட்டத்துக்கும் அவற்றை எழுதிய பதிவர்களுக்கும் மரியாதை செய்யும் நிமித்தம், நீங்கள் தொகுக்க நினைக்கும் இத்தொடர் போற்றி வரவேற்க வேண்டிய விஷயம்.//

    போற்றி வரவேற்க வேண்டியதோர் விஷயமாக தாங்கள் இதனைப் போற்றிச்சொல்லியுள்ளது எனக்கு மிகவும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிப்பதாக உள்ளது.

    //இது போல் ஓரிடத்தில் சேமித்து வைக்கும் போது எப்போது வேண்டுமானாலும் திருப்பிப் படித்து நம் பாட்டரிக்கு எனர்ஜி ஏற்றிக்கொள்ள முடியும்.//

    ஆஹா, பாட்டரிக்கு சார்ஜ் ஏற்றுதல் .... அருமையானதோர் ஒப்பீடு கரெக்ட் ... அதே .... அதே !

    //நல்ல ஐடியா! பாராட்டுக்கள் கோபு சார்!//

    மிக்க நன்றி.

    //அதிராவின் இரட்டைக்குழந்தைகள் படம் சூப்பர்! காமெண்ட் அதை விட சூப்பர்! //

    :) அதிராவை நினைத்தாலே, பொதுவாக நம் எல்லோருக்குமே உடனே ஏற்படுவது மகிழ்ச்சி மட்டுமே. :)

    தாங்கள் அதிலுள்ள கமெண்ட்ஸ்களைப் படித்துள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே !

    பதிலளிநீக்கு
  19. ஒய்வு எடுத்துக் கொண்டு அடுத்த புதிய முயற்சியில் இறங்கி விட்டீர்களா?
    வாழ்த்துக்கள். உங்களை போலவும் ஜீவி சார் போலவும் பின்னூடங்கள் கொடுக்க முடியுமா?
    உங்களை கவர்ந்த பின்னூட்டங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு March 19, 2015 at 3:29 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஓய்வு எடுத்துக் கொண்டு அடுத்த புதிய முயற்சியில் இறங்கி விட்டீர்களா? வாழ்த்துக்கள்.//

      இன்னும் நான் ஓய்வில் தான் உள்ளேன். அந்த ஓய்வினில் என் பதிவுகளை ஆய்வு செய்ததில் இந்த அடுத்த புதிய முயற்சியில் இறங்கும்படியானது என்பதே உண்மை. தங்கள் வாழ்த்துகளுக்கு என் நன்றிகள்.

      //உங்களை போலவும் ஜீவி சார் போலவும் பின்னூடங்கள் கொடுக்க முடியுமா? //

      நான் மிகச்சாதாராணமானவன் மட்டுமே. நம் ஜீவி சார் அவர்களுடன் என்னை ஒப்பிடவே கூடாது.

      அவர் அவர்தான். அவர் எந்தெந்தப்பதிவுகள் பக்கம் ஆர்வமாகப் படிக்கப்போவாரோ அங்கெல்லாம் நானும் போவேன் .... அந்தப்பதிவினைப்படிக்க அல்ல ..... அவர் எழுதக்கூடிய பின்னூட்டங்களை மட்டுமே ஆர்வமாக நான் படிக்கப் போவது உண்டு. மற்றபடி நான் அந்தப் பதிவுகளுக்குப் போய் வந்த தடயங்களே ஏதும் அங்கு இருக்காது. :)

      //உங்களை கவர்ந்த பின்னூட்டங்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்.//

      என்னைக் கவர்ந்த பின்னூட்டங்கள் என நான் ஏதும் தனியே பிரித்துத் தருவதாக இல்லை.

      பெரும்பாலான வாசகர்களைக் கவர்ந்துள்ள பதிவுகளின் இணைப்புக்களையும், அதற்குக்கிடைத்துள்ள மொத்த பின்னூட்ட எண்ணிக்கைகளையும் [சிலவற்றில் மட்டும் இந்த எண்ணிக்கை என் பதில்கள் உள்பட இருக்கும்] கொடுத்துக்கொண்டு வருகிறேன். அவற்றில் எது மிகச் சிறந்த பின்னூட்டம் என தாங்கள் எடுத்துச்சொன்னால் நானும் மகிழ்வேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      நீக்கு
  20. புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியுடன் செயல் படுத்துவது , துல்லியமாக கணக்குகள்,அதைப்பாங்குடன் தெரியப்படுத்துவது என்று எந்த விஷயங்களையும் முன்னோடியாகச் செய்வது என்பதெல்லாம் உங்களுக்கு உடன் பிறந்த கலை என்று நினைக்கிறேன். இதுவும் தொடர் பதிவுகளாகப் படிக்க,அறிய மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
    ஓய்வும் சற்று அவசியம். ஆனால் அதுவும் உங்களுக்கு எழுதிக்கொண்டே இரு என்று சொல்கிறது போலத் தோன்றுகிறது.
    எப்போதுமே உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்கள் படிக்காதிருந்ததில்லை. உங்கள் பின்னூட்டங்களும் யாவருக்கும்,எனக்கும் முதலில் எதிர்பார்க்க வைக்கும் சக்தியையும் கொண்டது. தொடருகிறேன் . அன்புடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kamatchi March 21, 2015 at 4:16 PM

      வாங்கோ, நமஸ்காரங்கள்.

      //புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றியுடன் செயல் படுத்துவது, துல்லியமாக கணக்குகள், அதைப்பாங்குடன் தெரியப்படுத்துவது என்று எந்த விஷயங்களையும் முன்னோடியாகச் செய்வது என்பதெல்லாம் உங்களுக்கு உடன் பிறந்த கலை என்று நினைக்கிறேன்.//

      இதற்கெல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் ஆசிகள் + என் நலம் விரும்பிகளின் ஊக்குவிப்புகள் மட்டுமே காரணம்.

      //இதுவும் தொடர் பதிவுகளாகப் படிக்க, அறிய மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.//

      மிகவும் சந்தோஷம்.

      //ஓய்வும் சற்று அவசியம். ஆனால் அதுவும் உங்களுக்கு எழுதிக்கொண்டே இரு என்று சொல்கிறது போலத் தோன்றுகிறது.//

      நான் என் ஓய்வினில் செய்த ஆய்வின் விளைவே இந்தத்தொடருக்கு அடிக்கல் நாட்டிவிட்டது. :)

      //எப்போதுமே உங்கள் பதிவுகளின் பின்னூட்டங்கள் படிக்காதிருந்ததில்லை. உங்கள் பின்னூட்டங்களும் யாவருக்கும், எனக்கும் முதலில் எதிர்பார்க்க வைக்கும் சக்தியையும் கொண்டது. தொடருகிறேன். அன்புடன்//

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கோர்வையான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என் பதிவுகளுக்கு அடிக்கடி வருகை தந்து பின்னூட்டம் அளித்து சிறப்பித்துள்ள தங்களின் பெயரையும் என் இன்றையப் பதிவினில் [பகுதி-5] குறிப்பிட்டுச்சொல்லி மகிழ்ந்துள்ளேன். http://gopu1949.blogspot.in/2015/03/5.html முடிந்தால் பாருங்கோ, மாமி.

      அன்புடன் கோபு

      நீக்கு
  21. இப்படியெல்லாம் பகிர்வு எழுத ரொம்ப பொறுமை வேண்டும் ஐயா...
    அருமையான முயற்சி... ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிவை சே.குமார் March 21, 2015 at 9:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இப்படியெல்லாம் பகிர்வு எழுத ரொம்ப பொறுமை வேண்டும் ஐயா... அருமையான முயற்சி... ஒவ்வொரு முயற்சியும் சிறப்பாய்... //

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் இனிய நன்றிகள்.

      நீக்கு
  22. பதில்கள்
    1. ADHI VENKAT March 22, 2015 at 7:29 AM

      வாங்கோ, வணக்கம்.

      //pullivivarangal mika arumai. thodarkiren... புள்ளி விபரங்கள் மிக அருமை.. தொடர்கிறேன்... //

      மிக்க நன்றி, மேடம்.

      {கை விரல்களில் ஏற்பட்ட சூட்டுக் காயங்கள் + கொப்பளங்கள் ஆறி வருவது அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. எதற்கும் அதிகமாக STRAIN செய்துகொள்ளாமல், கவனமாக இருங்கோ}

      நீக்கு
  23. ’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பில் ‘எனது எண்ணங்கள்’ வலைத்தளப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 27.04.2015 அன்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_27.html அதன் இறுதியில் ’சிறப்புச் செய்தி’ என்ற தலைப்பினில் என் புகைப்படத்துடன் இந்த என் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தொடரினைப்பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள்.

    அவருக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  24. பின்னூட்டங்களை பகுத்து அதனையும் பதிவாக ஆக்கியுள்ர்கள் .தொடருங்கள். புதிய முயற்சி சிறக்கட்டும். அதிலும் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  25. mageswari balachandran April 30, 2015 at 6:49 PM

    வாங்கோ வணக்கம். என்னால் சோதனைப்பதிவுகளாக 2009 + 2010ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 1+1 = 2 பதிவுகளுக்கு இன்று பின்னூட்டமிட்டுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    2011 ஜனவரியின் என் முதல் பதிவான ‘இனி துயரம் இல்லை’ என்பதிலிருந்து ஆரம்பித்து தினமும் சராசரியாக ஐந்து பதிவுகளுக்காவது பின்னூட்டம் இட்டு வந்தீர்களானால், 31.03.2015 அன்று என்னால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய போட்டியினில் கலந்துகொண்டு, வெற்றி பெற்று பரிசினையும் பெற தங்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும். முடிந்தால் முயற்சி செய்யுங்கள். ஏற்கனவே சிலர் இந்த தொடர் ஓட்டப்பந்தத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். போட்டி நிறைவுபெற இன்னும் எட்டே எட்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. முந்துங்கள். தாங்களும் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    //பின்னூட்டங்களை பகுத்து அதனையும் பதிவாக ஆக்கியுள்ளீர்கள். தொடருங்கள். புதிய முயற்சி சிறக்கட்டும். அதிலும் புகைப்படங்கள் அனைத்தும் அருமை.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. WELCOME - vgk

    பதிலளிநீக்கு
  26. மறுபடி புதிய முயற்சியிலா. எப்படியோ வாசகர்களுக்கு கொண்டாட்டம்தான்

    பதிலளிநீக்கு
  27. ஆத்ம திருப்தியுடன் , சுய மதிப்பீடு செய்துகொள்ள கிடைத்த வாய்ப்புகளாக கருத்துரைகளை தொகுத்த பாங்கு அருமை..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 10:27 AM

      வாங்கோ, வணக்கம்.

      //ஆத்ம திருப்தியுடன் , சுய மதிப்பீடு செய்துகொள்ள கிடைத்த வாய்ப்புகளாக கருத்துரைகளை தொகுத்த பாங்கு அருமை..பாராட்டுக்கள்..//

      தங்களின் அன்பான வருகை + பாராட்டுகளால் மட்டுமே ஆத்ம திருப்தி முழுமையாகக் கிடைத்துள்ளதாக உணர்கிறோம். மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  28. அடுத்த புள்ளி விவரமா? சூப்பர்.

    ஒண்ணு செய்யுங்களேன்.

    ஒரு வலைத் தளத்தை எப்படி அழகாக, அருமையாக, பிரமாதமாக உருவாக்கி, நடத்துவது என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.

    இந்த ஆராய்ச்சிக்குக் கண்டிப்பாக P.hd பட்டம் கிடைக்கலாம். நானும் டாக்டர் வை கோபாலகிருஷ்ணனின் சிஷ்யை நான் என்று சொல்லிக் கொள்கிறேனே.

    உங்களால் கண்டிப்பாக முடியும். முயற்சி செய்யுங்கள்.

    பதிலளிநீக்கு
  29. ஆராரெல்லா எதெதயோ இன்ஸ்யூர் சய்துகடுவாக. நீங்க ஒங்க மூளய மொதகா இன்ஸ்யூர் செய்துகிட்ங்க. இன்னாமா புதுசு பதுசா யோசிக்குது ஒங்கட மூளை. பொறவால ஜீ வி ஐயா கமண்டும் ஒங்க ரிப்ளை கமண்டும் ரொம்ப அர்த்தமுள்ளதா நல்லா இருந்திச்சி

    பதிலளிநீக்கு
  30. மறுபடியும் புதிய முயற்சில இறங்கியாச்சா. நடக்கட்டும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  31. அடுத்த புள்ளி விவரக்கணக்கு துவக்கம். உங்களுக்கு ரிடையர்மென்ட் தரமுடியாது. எக்ஸ்டென்ஷன் கிரான்டட்..

    பதிலளிநீக்கு
  32. பதிவுலகப்பிதாமகர் நீங்கள்! ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடும் அளவுக்கு பதிவுகளைப்பற்றி அலசியுள்ள விதம் வியக்கவைக்கிறது! சூப்பர் சார்!

    பதிலளிநீக்கு