என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 19 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-3






பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.


 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/1.html
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/2.html

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 3 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
71 முதல் 90 வரை



TOTAL NUMBER OF COMMENTS : 71

http://gopu1949.blogspot.in/2014/06/blog-post.html
சிறுகதை விமர்சனப்போட்டியின் நடுவர் யார்?
போட்டிக்குள் ஓர் போட்டி



TOTAL NUMBER OF COMMENTS : 73 Each


http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html
மடிசார் புடவை - பகுதி 2 / 2



http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html
பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?
இறுதிப்பகுதி 2 / 2 


http://gopu1949.blogspot.in/2012/03/1.html
மீண்டும் பள்ளிக்குப்போகலாம் 

பகுதி-1

http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html
சந்தித்த வேளையில் - நிறைவுப்பகுதி 6 / 6



TOTAL NUMBER OF COMMENTS : 74 Each


http://gopu1949.blogspot.in/2011/05/7-of-7.html
மூக்குத்தி - இறுதிப்பகுதி 7 / 7



http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html
முன்னெச்சரிக்கை முகுந்தன்



TOTAL NUMBER OF COMMENTS : 75 Each


http://gopu1949.blogspot.in/2011/07/1.html
மலரும் நினைவுகள் ... 

நல்லதொரு குடும்பம்


http://gopu1949.blogspot.in/2013/12/92.html
சரித்திரம் தொடர்கிறதே !



TOTAL NUMBER OF COMMENTS : 79


http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html
500வது சிறப்புப் பதிவு 

FIRST PRIZE WINNERS IN
‘ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்’

கீதமஞ்சரி அவர்களின் மிகவும்
நகைச்சுவையான விமர்சனம் !
காணத்தவறாதீர்கள் !


TOTAL NUMBER OF COMMENTS : 82 Each


http://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html
அஞ்சலை - இறுதிப்பகுதி 6 / 6


http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html
எங்கள் ப்ளாக் ... ஒட்டுமொத்தமாக எங்கள் வீட்டில்



TOTAL NUMBER OF COMMENTS : 83


http://gopu1949.blogspot.in/2013/12/100-2-2.html
வெற்றித் திருமகன் 

[G. ஸ்ரீதர் S/o. VGK]


TOTAL NUMBER OF COMMENTS : 84 Each


http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html
வை. கோபாலகிருஷ்ணன்

பெயர் காரணம் [நகைச்சுவை]


http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html
காலம் மாறிப்போச்சு - இறுதிப்பகுதி 2 / 2



TOTAL NUMBER OF COMMENTS : 85


http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html
மழலைகள் உலகம் மகத்தானது

சிறப்புப் பகிர்வு


TOTAL NUMBER OF COMMENTS : 86


http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html
ஊரைச் சொல்லவா ! 

பேரைச் சொல்லவா !!
சிறப்புப் பகிர்வு


TOTAL NUMBER OF COMMENTS : 89


http://gopu1949.blogspot.in/2014/03/vgk-06-03-03-third-prize-winner.html
THIRD PRIZE WINNER - உடம்பெல்லாம் உப்புச்சீடை



TOTAL NUMBER OF COMMENTS : 90


http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
உனக்கே உனக்காக !  
கவிதை [நகைச்சுவை]







 

தொடரும்



என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

26 கருத்துகள்:

  1. மிகவும் மகிழ்ச்சி சார். உங்கள் பதிவுகளை மறுபடியும் படிக்க முடிகிறது.

    பதிலளிநீக்கு
  2. சார், தங்களின் 500வது பதிவுக்கு நான் ஏற்கனவே பாராட்டுக்களும், வாழ்த்துகளும் தெரிவித்துப் பின்னூட்டம் கொடுத்துள்ளேன்.

    அதில் உள்ள கீதமஞ்சரி அவர்களின் விமர்சனத்தை இன்றுதான் பொறுமையாக வாசித்து மகிழ்ந்தேன். சூப்பராக நகைச்சுவையாக எழுதியுள்ளார்கள். இந்தப்பதிவினில் அதைப்பற்றிய தங்களின் நினைவூட்டலுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன். உங்கள் பொறுமை என்ன ஆச்சரியப் படுத்துகிறது. சத்தியமாக என்னால் இப்படி ஒரு சுய ஆய்வு செய்ய முடியாது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  4. இன்று மிகவும் மகிழ்ச்சி... நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  5. சகோதரி கீதமஞ்சரி அவர்களின் விமர்சனம் அமர்க்களம்...

    பதிலளிநீக்கு
  6. அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. (நான் அனுப்பிய இந்த பின்னூட்டம் ஏனோ வரவில்லை. எனவே மறுபடியும் அனுப்பி வைத்துள்ளேன்.)

    புள்ளிக்கணக்கு (கோலம் போடும் திறமை) பள்ளிக்கு உதவாது என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் புள்ளி விவரங்கள் உங்கள் பதிவுலக சாதனைகளை பறை சாற்றுகின்றன. நீங்கள் முன் தொடர்ந்து செல்லுங்கள் நானும் பின் தொடர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தி.தமிழ் இளங்கோ March 20, 2015 at 6:31 PM

      //(நான் அனுப்பிய இந்த பின்னூட்டம் ஏனோ வரவில்லை. எனவே மறுபடியும் அனுப்பி வைத்துள்ளேன்.)

      புள்ளிக்கணக்கு (கோலம் போடும் திறமை) பள்ளிக்கு உதவாது என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் புள்ளி விவரங்கள் உங்கள் பதிவுலக சாதனைகளை பறை சாற்றுகின்றன. நீங்கள் முன் தொடர்ந்து செல்லுங்கள் நானும் பின் தொடர்ந்து வருகிறேன். //

      வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. தங்களின் அந்தப் பழைய பின்னூட்டமும் எனக்குக் கிடைத்து அது உடனடியாக என்னால் வெளியிடப்பட்டுவிட்டது.

      ஆனால் பதிவு மட்டும் மாறிப்போய் அமர்ந்துள்ளது.

      அதாவது அது http://gopu1949.blogspot.in/2015/02/7.html என்ற இந்தப்பதிவினில் அது வெளியிடப்பட்டுள்ளது.

      அதனால் என்ன, அது ஒருபுறம் அப்படியே இருக்கட்டும்.
      மிக்க நன்றி, ஐயா. - VGK

      நீக்கு
    2. தவறுக்கு மன்னிக்கவும். இனிமேல் பதிவுகளைப் படித்தவுடன் உடனுக்குடன் பின்னூட்டங்களை எழுத முயற்சிக்கிறேன்.

      நீக்கு
  8. தொந்தி பற்றிய கவிதை படித்தேன். கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை.
    மப்டியில் போலீசு என்று ஓடி ஒளிந்தனர் என்பது நல்ல நகைச்சுவை. மேலும் முக்கொம்பு பேருந்தில் தொந்தி ஆசாமிகளிடம் கண்டக்டர் டிக்கெட் வாங்காதது தொந்தி என்ன ஐஸ்கிரீமா, சூடமா, சோப்பா உடனடியாக கரைவதற்கு? என்று கேட்டது
    சின்ன தொந்தி வைத்திருப்பதே பெரிய தொந்தி அடைவதற்கு அறிகுறி என்றது, அப்படியே கரைந்தாலும் மாபெரும் தொந்தி ஏற்பட தெரிந்து வைத்திருக்கும் தொழில்ரகசியம் என இப்பதிவு முழுக்க சரியான நகைச்சுவை கலக்கல்.
    நன்கு ரசித்தேன். பாராட்டுக்கள் கோபு சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Kalayarassy G March 21, 2015 at 4:00 PM

      வாங்கோ, வணக்கம்.

      //தொந்தி பற்றிய கவிதை படித்தேன். கவிதையையும் பின்னூட்டங்களையும் வாசித்த போது சிரிப்பை அடக்க முடியவில்லை. //

      தங்களின் அடக்கமுடியாத சிரிப்பொலியைக் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தேன். :)

      //மப்டியில் போலீசு என்று ஓடி ஒளிந்தனர் என்பது நல்ல நகைச்சுவை. //

      :) மிக்க மகிழ்ச்சி.

      //மேலும் முக்கொம்பு பேருந்தில் தொந்தி ஆசாமிகளிடம் கண்டக்டர் டிக்கெட் வாங்காதது; தொந்தி என்ன ஐஸ்கிரீமா, சூடமா, சோப்பா உடனடியாக கரைவதற்கு? என்று கேட்டது; சின்ன தொந்தி வைத்திருப்பதே பெரிய தொந்தி அடைவதற்கு அறிகுறி என்றது; அப்படியே கரைந்தாலும் மாபெரும் தொந்தி ஏற்பட தெரிந்து வைத்திருக்கும் தொழில்ரகசியம் என .... இப்பதிவு முழுக்க சரியான நகைச்சுவை கலக்கல். நன்கு ரசித்தேன். //

      கவிதையை மட்டுமல்லாது, நான் நம் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் + ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள் ஆகியோரின் பின்னூட்டத்திற்குக் கொடுத்துள்ள என் பதிலையும் கவனமாக மிகவும் ரஸித்துப் படித்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மேலும் என் தொந்தி குலுங்கச் சிரித்து மகிழ்ந்தேன்.

      விரிவஞ்சி ’அந்துருண்டையோ, காசோ பணமோவா கரைவதற்கு’ என்ற என் உதாரணங்களில் இரண்டை மட்டும் சுட்டிக்காட்டாமல் விட்டு விட்டீர்கள். :)

      //பாராட்டுக்கள் கோபு சார்!//

      இந்த என் தொடரால் நான் எதிர்பார்த்த பலன் தங்கள் மூலமாவது தொடர்ந்து கிடைத்து வருவதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. நன்றியோ நன்றிகள், மேடம்.

      நீக்கு
  9. அருமையான முயற்சி ஐயா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தாமத வருகைக்கு மன்னிக்கவும் கோபு சார். இந்த விமர்சனப் போட்டிகளின் சுட்டிகள் மூலம் மறுபடியும் சென்று வாசிக்கும்போது படித்து வளர்ந்த பள்ளியை மறுபடி சென்று பார்ப்பது போல் அவ்வளவு சுகானுபவமாக உள்ளது. இங்கு என்னுடைய விமர்சனத்தையும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. திரும்பிப்பார்த்தால் நான்தான் எழுதினேனா என்று எனக்கே வியப்பாக உள்ளது. அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் எழுத ஊக்கமும் உற்சாகமும் அளித்த தங்களுக்கே அப்பெருமையெல்லாம் சேரும். மனமார்ந்த நன்றிகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி March 24, 2015 at 9:41 AM

      வாங்கோ, வணக்கம்.

      //தாமத வருகைக்கு மன்னிக்கவும் கோபு சார். //

      அதனால் என்ன? இந்தத் தாமதம் என்பதெல்லாம் நம் அனைவருக்குமே மிகச் சாதாரண + சகஜமான நடக்ககூடிய விஷயம் தானே. மன்னிப்பெல்லாம் எதற்கு? வேண்டாமே ப்ளீஸ்.

      //இந்த விமர்சனப் போட்டிகளின் சுட்டிகள் மூலம் மறுபடியும் சென்று வாசிக்கும்போது படித்து வளர்ந்த பள்ளியை மறுபடி சென்று பார்ப்பது போல் அவ்வளவு சுகானுபவமாக உள்ளது. //

      ’படித்து வளர்ந்த பள்ளியை மறுபடி சென்று பார்ப்பது போல சுகானுபவம்’ என்றதும் ஒன்று எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது. அதாவது நான் எழுதிய என் பள்ளிக்கூட அனுபவங்கள் தொடரினை நான் அடிக்கடி சென்று படித்துப்பார்த்து மகிழ்வது உண்டு. எனக்கு அந்த ஞாபகம் இப்போதும்கூட வந்தது.

      ’மீண்டும் பள்ளிக்குப் போகலாம்’ என்ற தலைப்பினில் 7+1=-8 பகுதிகள் மட்டும் எழுதியிருந்தேன். ஆத்மார்த்தமாக நிறைய பேர்கள் படித்துப் பாராட்டிப் பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.

      http://gopu1949.blogspot.in/2012/03/1.html பகுதி-1

      அதுபோல இன்று நான் என் பள்ளிக்கூட அனுபவப் பகிர்வுகள் பக்கம் சென்றபோது அதன் ஒருசில பகுதிகளில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருப்பதாகத் தாங்கள் எழுதியிருந்த இரண்டு இணைப்புகளைக் காண முடிந்தது.

      அவற்றை ஏனோ நான் கீழ்க்கண்ட சமீபத்திய என் பதிவினில் கொண்டுவர மறந்துள்ளேன். விட்டுப்போய் உள்ளது என்பதை உணர்ந்து கொண்டேன்.

      என் வீட்டுத்தோட்டத்தில்..... [பகுதி-7]
      http://gopu1949.blogspot.in/2015/01/7-of-16-31-39.html

      இருப்பினும் அவற்றை இன்று மேற்படி பதிவினில் 36/2/3, 36/3/3 என புது நம்பர்கள் கொடுத்து சேர்த்தும் விட்டேன்.

      இதுபோல இன்னும் எவ்வளவு வலைச்சர அறிமுகங்கள் விட்டுப்போய் இருக்குமோ எனவும் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது.

      //இங்கு என்னுடைய விமர்சனத்தையும் தாங்கள் குறிப்பிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.//

      இந்தத் தங்களின் [ஆப்பிள் கன்னங்களும்] விமர்சனமும் [வ.வ.ஸ்ரீ.க்கான] http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13-01-03-first-prize-winners.html இதில் உள்ள கதாகாலக்ஷேம விமர்சனமும் நான் அடிக்கடி படித்துச் சிரித்து வரும் அழகான நகைச்சுவை விமர்சனங்கள் அல்லவா ! :) என்னால் எப்படி அவற்றை மறக்க முடியும்?

      Both are So Sweet !!!!!

      //திரும்பிப்பார்த்தால் நான்தான் எழுதினேனா என்று எனக்கே வியப்பாக உள்ளது.//

      உங்கள் ஒருவரால் மட்டுமே இவ்வாறு எழுத இயலும் ! :) என் வலைப்பக்கமே வராத / வரவும் விரும்பாத என் மனைவியையே நான் படிக்க வைத்து, அவளும் படித்து மகிழ்ந்த மிக அருமையான விமர்சனங்கள் என்பதும் இதில் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

      //அந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் எழுத ஊக்கமும் உற்சாகமும் அளித்த தங்களுக்கே அப்பெருமையெல்லாம் சேரும். மனமார்ந்த நன்றிகள் கோபு சார்.//

      மிகவும் சந்தோஷம் மேடம். என் சிறுகதை விமர்சனப் போட்டிகளே தங்களைப்போன்ற ஒரு சில தனித்திறமை வாய்ந்த எழுத்தாளர்களால் ( A Set of People ) மட்டுமே, வெற்றிகரமாக நடந்து முடிந்தது. நான் தான் உங்கள் எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி.

      அன்புடன் கோபு

      நீக்கு
  11. நான் கொஞ்ச நாள் காணாம போயிட்டேன் பல பதிவுகளை மிஸ் பண்ணியிருக்கேன். இப்ப அதெல்ம் படிக்க ஒரு வாய்ப்பு.

    பதிலளிநீக்கு
  12. சாதனை படைக்கும் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 9:10 PM

      //சாதனை படைக்கும் சிறப்பான முயற்சிக்குப் பாராட்டுக்கள்..//

      வாங்கோ வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  13. எல்லாம் படிச்ச பதிவுகள்தான். ஆனாலும் எத்தனை முறை படித்தாலும் அலுக்காத எழுத்துக்கள்.

    தொந்திக் கவிதை அருமை.



    பதிலளிநீக்கு
  14. எத்தர பேரு ஒங்க பதிவுகள ஒருக்கா படிச்சிகிடாலும் மருக்கா மருக்கா வந்து படிச்சு சந்தோச படுறாக. அதெல்லாமேஒங்க திறமயான எளுத்தைகளுக்கு கெடைச்ச பாராட்டுகளதா.

    பதிலளிநீக்கு
  15. உங்க பதிவு எல்லாமே ஒருமுறை படித்தாலும் மறுபடியும் படிக்கணும்போல தோணிண்டேதான் இருக்கும் பின்னூட்ட போட்டி முடிந்ததும் கண்டிப்பா எல்லா பதுவுகளையும் மறுபடி படிக்க வருவேன்.

    பதிலளிநீக்கு
  16. ரிப்பீட்டானாலும் அப்பீட் ஆகாத பதிவுகள். மகிழ்ச்சி!!

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் பதிவுகள் அல்லவா!

    பதிலளிநீக்கு