என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 25 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-9

என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.


அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்


அற்புதமான கற்பனை. இயல்பான நடை படிக்க இடைஞ்சல் இல்லாமல் 

கருத்தை அழகாகப் படிப்பவரிடம் சேர்த்தது. 

" அப்போ வண்டி புளியந்தோப்பு வராதுன்னியே; இப்போ வந்திடுச்சி பாத்தையா?" 

என்று எகத்தாளமாகத்தான் சாதாரணமாக எல்லோருக்கும் கேள்வி எழும்பும்.
அந்த மனத்தாங்கல், சோர்வு இத்தனைக்கும் இடையேயும் அந்த 

வயதானவரின் தாயுள்ளத்தை வெளிப்படுத்தியமாறு கதையை அமைத்தது 

மேலும் சிறப்பைக் கூட்டியது.

நல்ல நெறிகளை நெஞ்சில் விதைக்கும் ஒரு கதையைப் படித்த நிறைவு ஏற்பட்டது. 

மிக்க நன்றி.

ஆரம்பரப் பகுதியிலிருந்து இதுவரை தொடர்ந்து படித்து விட்டேன். 

படிப்பவரும் உங்கள் கூட இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிற மாதிரி எப்படியோ 

அந்த இயல்புச் சூழ்நிலையை கொண்டு வந்து விடுகிறீர்கள்.. 

அந்த சூட்சுமம் தான் எழுதி எழுதிப் பழகிப்போன உங்கள் எழுத்தின் வெற்றி. 

தொடர்ந்து எழுதுங்கள். தொடர்ந்து வருகிறேன். நன்றி.


எனக்கு மிகவும் பிடித்த சிறுகதைகளில் இதுவும் ஒன்று.. உங்கள் எழுத்து 

திறமைக்கு கட்டியம் கூறும் அற்புதமான படைப்பு.. 

ராஜி சொன்னது போல எப்போது படித்தாலும் திகட்டாத எழுத்து.

நிதானம் ஜெயிக்கும் என்று சொல்லி உங்கள் கதை சொல்லும் திறன் ஜெயித்து விட்டது.

உங்களுக்கு ஆனாலும் ரொம்ப லொள்ளு தான்.

உங்கள் குறும்புதான் உங்கள் பிளஸ் பாய்ண்ட்.. 

50லும் ஆசை வரும் என்று நிரூபித்து விட்டீர்கள்.. 

100 ஆண்டு காலம் வாழ்க.. என்று பின்னூட்டி வளர்க்க நாங்க ரெடி.. ஜமாய்ங்க.

எலி மாட்டிகிட்டா சுவாரசியம் போயிரும் போல இருக்கே..

இப்படி பல சுவாரசியமான தகவல்களை நீங்கள் பதுக்கி வைத்திருப்பீர்கள் 

என்று எதிர்பார்க்கவே இல்லை.. கலக்கறீங்க.. நகைச்சுவை தேவியும் 

உங்களிடம்தான் குடித்தனம் நடத்துகிறாள்..

//பொடி உபயோகிப்பாளர்களுக்கு அது ஒரு மிகப்பெரிய, அன்னதானத்திற்கும் மேலான 

ஒரு தர்மம் போலும். //

என் தாத்தா பொடி மட்டை வாங்கி வரச் சொல்லி என்னை அனுப்பியிருக்கிறார். கடையை 
நெருங்கும்போதே நெடி தாக்கும். ஒரு முறை மாவு அரைக்கப் போனபோது தவறுதலாய் 
பொடியும் கலந்து விட தோசை பயங்கர நெடி.. மிளகாய்ப் பொடிக்கு பதிலாக 

மூக்குப் பொடி தோசை!

எந்த சப்ஜெக்ட்டை தொட்டாலும் உங்கள் கை வண்ணம் மிளிர்கிறது.

எழுத்துலக பொடியன்கள் எல்லாம் நகைச்சுவையாய் எழுத 

உங்களை ஃபாலோ பண்ணனும்..

வாழ்க்கை வழுவட்டையாய்ப் போகாமல் எழுச்சியுடன் இருக்கிறது என்றால் அது உங்கள்
நகைச்சுவை என்னும் காரம், குணம், மணம் நிறைந்த எழுத்தால்தான்!

//’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள்
முணுமுணுத்தவாறே.//

கொஞ்சங்கூட மணம் குறையாமல் வளர்கிறதே.. நகைச்சுவை டப்பா!

//நீங்களே அடுத்த முதலமைச்சர் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்து விட்டது.//


இப்படி உசுப்பேத்தியே அவருக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் வரை கொண்டு போயாச்சு.. 

நகைச்சுவை திலகம் என்று உங்களுக்கு பட்டம் கொடுக்க ஆசை..

//அதாவது கல்யாணம் ஆகும்வரை இல்லாதிருந்த ’சூடு---சுரணை’ என்பதை, சாப்பாடு
விஷயத்தில் புதிதாக ஏற்படுத்தி விட்டாள். அதுவே இன்றுவரை தொடர்கிறது. //

உங்கள் எழுத்துத் திறனுக்கு இதோ மற்றும் ஒரு அடையாளம். சமையல் பற்றி இவ்வளவு 
தகவல்களுடன் அதுவும் சுவாரசியமாக எழுத முடியுமா.. பிரமிப்புதான் வருகிறது. சபாஷ்

//இவ்வாறு படுத்திருப்பவர் பலரின் இருமல், தும்மல், ஏப்பம், கொட்டாவி, குறட்டை

முதலியவற்றால், அந்தக்குடியிருப்பில் திருட்டு பயமே கிடையாது.//


நகைச்சுவை!//ஒருத்தி ஒருமுகமாக தனக்குத்தானே என்னை மிகவும் விரும்பியவள். மற்றொருத்தி 


என்னால் மட்டுமே ஒருமுகமாக விரும்பப்பட்டவள்.//


சஸ்பென்ஸ்!


//நெருக்கத்தில் அந்தப்பெண்ணைப்பார்த்ததும் நான் ஸ்தம்பித்துப்போய் நின்று விட்டேன்.//


அதிர்ச்சி!பலதரப்பட்ட உணர்வுகளோடு விளையாடும் உங்கள் எழுத்துக் கப்பலில் 


நானும் ஏறியாச்சு..

http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4_19.html

பேச்சே இல்லாமல் அப்படியே விவரங்களாய்க் கொண்டு போவது எத்தனை சிரமம்.. 

அதுவும் சுவை குன்றாமல் வாசிப்பின் சுவாரசியம் குறையாமல்.. 

கையைக் கொடுங்க.. கோபால்ஜி..
http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html

//ஒரே ஒரு நிமிடம் தயங்கினாள். ஏதோ பலமாக யோசித்தாள். ஆனாலும் பிறகு 

வாங்கிக்கொள்ள மறுத்து விட்டாள். பர்ஸை என்னிடம் ஒப்படைத்தபடியே, 

கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டதாகக்கூறி, தன் புடவைத்தலைப்பால் 

துடைத்துக்கொண்டாள்.//


ஒரு கதையை உண்மை என்றே நம்ப வைக்கிற அழகான எழுத்து. 


சுந்தர்ஜி சொன்னது போல செதுக்கித்தான் வைத்திருக்கிறீர்கள். 

உங்கள் எழுத்தில் இயல்பாகவே மனசு சொக்கிப் போகிறது.
http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html

மனம் கனக்க வைத்த முடிவு. ஆனாலும்

சுபமான முடிவு தந்த உங்களுக்கு வாழ்த்துகள்.
http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html

வாயைத் திறந்து பதில் சொல்லவே பயமாயிருக்கு கோபு சார்.

நல்ல ஹாஸ்யம் கலந்த சரளமான நடை.

வலைப்பூவை ஒரு கலக்குக் கலக்குங்க.

ப்ரமாதம் கோபு சார்.

இந்த சப்ஜெக்டெல்லாம் இப்ப யாரும் எழுதறதில்ல.

உவமைகள் எல்லாம் ஹாஸ்யம் ரொப்பப்பட்டு படு ஜோர்.

தாமதமாய் வாசிக்க வருந்துகிறேன்.

ஒவ்வொரு பாகத்தையும் அனுபவித்து ரஸிக்கிறேன் கோபு சார்.


//தேவையில்லாத ஏதோ ஒரு பொருள் துப்பவும் முடியாமல் 

விழுங்கவும் முடியாமல், வாய் முழுவதும் வியாபித்து அடை பட்டு உள்ளது போல,

அருவருப்பாகத் தோன்றியது.//


//கல்கண்டு உடைந்து கடி பட்டதா அல்லது பல்செட்டே உடைந்து தூள் தூள் ஆனதா என்று 

ஒன்றும் விளங்காமல் இருந்தது, பஞ்சாமிக்கு.//


இப்படியே உங்கள் முழுப் பதிவையும் ஹைலைட் பண்ணலாம் போல அபாரமான எழுத்து.

அபாரம் கோபு சார்.

குழந்தையில்லாதவர்கள் குழந்தைகளின் சேட்டைகளை எப்படி 

எதிர்கொள்வார்களோ அதைத் தத்ரூபமாக எழுதிவிட்டீர்கள்.

இரு பகுதியையும் சேர்த்துப் படிக்க வாய்த்தது சந்தோஷம்.

குழந்தையில்லா மனமும் கணவன் மணக்கத் தவறிய பெண்ணுடன் தொடரும் உறவும்

சித்தரிக்கப்பட்ட விதத்துக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

முன்பே ஒரு பின்னூட்டத்தில் எழுதியதாய் ஒரு நினைவு.

வெவ்வேறு ஆண்களின் ஊடான உறவுகளுக்கு பெண்கள் வெவ்வேறு 

விதமான பாகுபாட்டுடன் பிரித்துக்கொள்கிறார்கள்.

சீமாச்சு உள்ளிட்ட ஆண்கள் பலரும் இப்படித்தான் குழப்பிக் கொள்கிறார்கள்.

நல்ல சரளமான நடையும் சுவாரஸ்யமான மொழியும்.

ஜமாய்க்கிறீங்க கோபு சார். சில சமயங்களில் உடனே 

படிக்கமுடியாமல் போகிறது வருத்தம் தருகிறது.

சரளமான நடைதான் உங்கள் பலம்.

எந்த முடிவும் அது செயல்படுத்தப்படும் வரை மாறுதலுக்குட்பட்டது என்பது முதிர்ச்சி 

அடைந்தவர்கள் அறிந்ததே.

அதுவும் இதுபோன்ற உணர்வுப் ப்ரவாகத்தையூட்டும் சம்பவங்கள் நம் மனதை 

மாற்றிவிடக்கூடியவையே. 

அருமை.

புதூ டெம்ப்ளேட்டு-புதூ தீம்னு கலக்கறீக்க கோபு சார்.

ஆனாலும் மேல்சட்டை இல்லாமல் பெரிய பயில்வான் மாதிரின்னதும் ராக்கெட் விட்டதும்

கதையோட க்ளைமாக்ஸ்ஸுக்காக ரொம்பவே பில்டப் பண்ணிட்ட ஒரு குறை.

அற்புதம் கோபு சார். நான் இன்னும் வாய் விட்டுச் சிரித்துக்கொண்டிருக்கிறேன். 

இதோ என் பனியன் சட்டையையும் கழற்றி 455ம் டோக்கன் கொடுத்து எல்லா டெஸ்ட்டும் 

எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வெண்புறாக்கள்.

நிறைய இப்படி எழுதுங்கள்.சபாஷ்.சபாஷ்.

கிழவிக்கு மட்டுமான ஒரு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவள் கேட்காலேயே

நிறைவேறியது.

எல்லோருக்குமான ஒரு பிரச்சனை கேட்காமலேயே கிழவியால் தீர்த்துவைக்கப்பட்டது.

பலரால் பிரச்சினைகள் உருவாக்கப்படுகின்றன. சிலரால் பிரச்சனைகள் தீர்கின்றன.

என்றைக்கும் தேவையான ஒரு கதை கோபு சார். 

அற்புதம் படைக்கின்றன உங்கள் விரல்கள்.

உலக்கையைப் பற்றி நீங்கள் கொடுத்த வர்ணனை விக்கிபீடியாவைத் 

தூக்கிச் சாப்பிட்டுவிட்டது கோபு சார்.

இந்தக் கதை என் பாட்டிக்கபுறம் உங்களிடம்தான் கேக்கிறேன். இதேபோல் மரத்தின் மேல் 

உட்கார்ந்துகொண்டு மாமியாரைப் பருப்புத் துவையலுக்காக மிரட்டிய மருமகள் கதை

ஒன்றும் மங்கலாக நினைவில் அசைகிறது. என் அம்மாவிடம் உடனடியாகக் கேட்க 

முடியாத சூழல். 

சீக்கிரம் அதையும் சொல்கிறேன்.

இதோ ஷாஜஹான்! கொடுக்க வேண்டியதை கொடுத்திடுங்கோ கோபு சார்.

அது சரி அது எதற்காக ஒரு எக்ஸ்ட்ரா வ்யாக்யானம்? அதுதான் கொஞ்சம் போர்.

நான் போர் என்று சொன்னது உங்களின் பின்குறிப்பைத்தான். 

உலக்கை பற்றிய உங்களின் குறிப்பின் நையாண்டியை நான் வெகுவாய் ரசித்தேன்.

நல்ல க்ராஃப்ட்மேன்ஷிப் உள்ள எழுத்து உங்களது கோபு சார்.

ஒரு கதையை எப்படி வேண்டுமானாலும் ஆரம்பித்து இஷ்டப்படி 

முடிக்க எல்லோராலும் முடியாது.

படிக்கும் ஆர்வத்தைத் தக்கவைக்க உதவும் டெக்னிக். 

அதற்குள் ஒரு பாடம் சொல்லும் வியூகம்.

அசத்தறிங்க.

உங்களின் சென்ஸ் ஆஃப் ஹ்யூமருக்கு சொல்லவா வேண்டும் கோபு சார்?

நீங்க பாட்டுக்கு எலிப் பொறி வாங்க ஒரு இடுகை-

பஸ்ஸிலிருந்து வீடு திரும்ப ஒரு இடுகை-

மஸால் வடை மாட்ட ஒரு இடுகைன்னு 

எலியைக் கண்டுக்காம இப்படிப் பொறுப்பில்லாம 

ஊர் சுத்திண்டிருக்கீங்க.

உங்க மச்சினரோட சேந்து எலியைப் பிடிச்சு பக்கத்து ப்ளாட்ல விட்டுட்டோம்.

சீக்கிரம் வந்து சேருங்க வீட்டுக்கு.

ஸ்வாமி!ஊரச் சொன்னாலும் பேரச் சொல்லக் கூடாதும்பா. 

நீங்க ஊரையும் பேரையும் சேத்துச் சொல்லிப்டேளே? 

எந்த விக்னமும் வராமக் காப்பாத்துடீயம்மான்னு ஸ்ரீவாலாம்பிகாவுக்கு 

எசஞ்சு முடிஞ்சுண்டுடுங்கோன்னா.

மொத்தத்துல பிரிச்சு மேஞ்சுட்டேள். வேறென்ன சொல்றதுன்னு நேக்குத் தெரியல.

எழுச்சியும் வழுவட்டையும் சம அளவில் கலந்து பொடி தர்மம் காக்கும் பேரெழுச்சியுடன்

வழுவட்டைகளைக் கண்டிக்கும் விதமாக எழுச்சியுடன் கொண்டு செல்லும் பாங்கிற்கு ஒரு ஓ 

போடுகிறேன்.

அதே போல சுகந்த ஸ்நஃப் என்று வக்கீல்கள் எல்லாம் உபயோகிக்கும் செண்டட் பொடியும் 

புழக்கத்தில் இருந்தது. அதன் மணமும் அபாரமாக இருக்கும். இதனளவு காரமிருக்காது.

அடுத்தது அங்குவிலாஸ் பொடிமன்னன் நினைவுதான் வருகிறது. கண்காட்சிகளிலெல்லாம் 

பொடியை ஒரு பெரிய உரலில் இடிக்கும் பாவனையுடன் ஒரு மனிதர் அமர்த்தப்பட்டு எல்லாத் 

திசைகளிலும் ஒரு லுக் விட்ட படி பொடி இடிப்பார் எழுச்சியுடன்.

இவையெல்லாம் பொடிப் பொடியான பொடித்தகவல்களாலானாலும் பேரெழுச்சி தரத் தக்கவை 

என்பதை எந்த வழுவட்டையும் ஒப்புக்கொள்ளும்.

வெல் டன் கோபு சார்.

ராஜி சொன்னதை ஆமோதிக்கிறேன்.

பிரச்சினை என்னவென்றால் இரு பாலாருக்கும் பொதுவான இந்தக் கொழக்கட்டை சமாச்சாரம் 

குறித்த ஞானம் அந்தந்தப் பாலினருக்கு தனித்தனியே இருக்கும்போது உண்டாவதில்லை.

தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ளப் பண்ணும் சேஷ்டைகள் குறித்தும் எழுச்சியான ஒரு 

கதையை எதிர்பார்க்கிறேன் கோபு சார்.

சந்தடி சாக்குல துபாய் பயணத்தை ஒரு இடுகையாவே உள்ளே நுழைச்ச 

சாமர்த்தியம் பொடி விஷயம் இல்லை கோபு சார், படா விஷயம்.

என்னத்தப் புதுசா சொல்லப் போறேன் கோபு சார்?

உங்க விரல்ல சரஸ்வதி இஸ் ப்ளேயிங்.

பசி நேரத்துல ரவாலாடு-பலாச்சுளை-மிக்ஸர்-மாம்பழச் சொம்பு இதெல்லாம் சீக்கிரமா 

வீட்டுக்குக் கிளப்பி விட்டது.

அடுத்த பாகத்துல என்னென்ன தாக்குதலோ?
http://gopu1949.blogspot.in/2011/06/2-of-4_20.html

இதுவரை நீங்கள் எழுதிப் படித்தவற்றில் இந்த நாயகிக்குத் தனி இடம் என் மனதில்.


தன் மனதைச் சொல்வதில் வெளிப்படையான அணுகுமுறை-உரிமை கோரத் தயக்கம்-

ஆனாலும் விடவும் மனமில்லாமல் அன்றைய நாளுக்கான சந்தோஷத்தை கேட்காமலேயே 

எடுத்துக்கொண்டது-இறுதியில் கொடுத்த உதவியை ஏற்க மறுத்த நாசூக்கு.


அந்த நாயகிக்கும் அவளைச் செதுக்கிய உங்களுக்கும் சபாஷ்.
http://gopu1949.blogspot.in/2011/06/3-of-4_22.html

எல்லா விதமாகவும் உங்களால் எழுதமுடியும் என்பதை எல்லா நேரங்களிலும் 

நிரூபித்துவிடுகிறீர்கள்.

ஆனால் உங்களின் சௌஜன்யமான மனோநிலையில் உலகம் இல்லாதிருப்பதால் நீங்கள் 

அளிக்கும் முடிவு எல்லோருக்கும் ஒரு ஒத்தடம் போல அமைந்துவிடுகிறது.
http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4_26.html


oooooOoooooஅவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS
http://gopu1949.blogspot.in/2015/03/4.html

பட்டியல் எண்: 5 .... 70 LADIES
http://gopu1949.blogspot.in/2015/03/5.html 


அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் ...... இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES
http://gopu1949.blogspot.in/2015/03/7.html
பட்டியல் எண்: 8  ....  40 GENTS
இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 9 
பின்னூட்ட எண்ணிக்கை : 212


TOTAL NUMBER OF COMMENTS : 212
அறுபதிலும் ஆசை வரும் !
இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 212 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 202 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்தையும், அதன் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனியே காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். 1. COMMENT Nos: 202-212


 • வணக்கம்
  ஐயா

  உங்களின் பரந்த மனசு பதிவில் புரிகிறது வலைப்பூவின் ஊடாக வந்த உங்கள் அன்புச்சகோதரியை பாராட்டிய விதம் மிக அருமை தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அத்தோடு அருமையான பதிவை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி ஐயா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  1. 2008rupan August 19, 2013 at 3:39 AM

   //வணக்கம், ஐயா//

   வாங்க வணக்கம். இந்த என் பதிவு டேஷ் போர்டில் தோன்றாமல் இருந்தும், நான் தங்களுக்கு ஏதும் தகவல் எப்போதும் கொடுக்கும் வழக்கமே இல்லாமல் இருந்தும், உங்கள் பதிவுகள் பக்கம் நான் வராமலேயே இருந்தும் கூட, தாங்கள் இங்கு வருகை தந்திருப்பது எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது.

   //உங்களின் பரந்த மனசு பதிவில் புரிகிறது வலைப்பூவின் ஊடாக வந்த உங்கள் அன்புச்சகோதரியை பாராட்டிய விதம் மிக அருமை தம்பதிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அத்தோடு அருமையான பதிவை தொகுத்து வழங்கிய உங்களுக்கும் நன்றி ஐயா. -நன்றி--அன்புடன்--ரூபன்-//

   மிக்க நன்றி. முடிந்தால் இதற்கு முந்திய சிறப்புப்பதிவினையும் படித்துப்பாருங்கள். அதுவும் டேஷ் போர்டில் தோன்றவில்லை.

   இணைப்பு: http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html
  2. ரூபன்

   உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
 • ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு
  மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
  Vetha.Elangathilakam.


  1. kovaikkavi August 21, 2013 at 12:00 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஒற்றுமையான உத்தம தம்பதியினருக்கு மனமார்ந்த அன்பான இனிய நல்வாழ்த்துகள். Vetha.Elangathilakam.//

   தங்களின் அன்பான வருகைக்கும், தம்பதியினரை இனிமையாக வாழ்த்தியுள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்.

 • தாமதமான என் வாழ்த்துக்களை திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுடைய சஷ்டியப்த பூர்த்திக்குச் சென்றுவந்த நிறைவைத் தந்தது தங்களுடைய பதிவும் படங்களும். பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் வெகுசிறப்பாகச் செய்து அசத்தியிருக்கிறீர்கள் சார். தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின் அழைப்பும் புகைப்படமும் கண்டேன். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இனிய வாழ்த்துக்கள். மேலும் சஷ்டியப்த பூர்த்தி பற்றிய சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி அறியாத பல செய்திகளை அறியத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி வை.கோ.சார்.


  1. கீத மஞ்சரி August 23, 2013 at 11:27 PM

   வாங்கோ, வணக்கம்.

   //தாமதமான என் வாழ்த்துக்களை திருமதி ஜெயந்தி ரமணி அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். //

   தாமதம் ஆனால் பரவாயில்லை. இனிமேல் தான் விழாவே [28th] நடைபெறப்போகிறது.

   //அவர்களுடைய சஷ்டியப்த பூர்த்திக்குச் சென்றுவந்த நிறைவைத் தந்தது தங்களுடைய பதிவும் படங்களும். பார்த்துப் பார்த்து ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் வெகுசிறப்பாகச் செய்து அசத்தியிருக்கிறீர்கள் சார்.//

   மிகவும் சந்தோஷம்.

   //தங்களுடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின் அழைப்பும் புகைப்படமும் கண்டேன். தங்களுக்கும் தங்கள் துணைவியாருக்கும் இனிய வாழ்த்துக்கள். //

   மிக்க மகிழ்ச்சி.

   //மேலும் சஷ்டியப்த பூர்த்தி பற்றிய சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி அறியாத பல செய்திகளை அறியத் தந்துள்ளீர்கள். மிக்க நன்றி வை.கோ.சார்.//

   ;) தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

 • அன்புள்ள வைகோ ஐயா.

  வணக்கம். இதுபோன்ற பதிவிடுவதற்கு நல்ல துர்ய மனது வேணடும. அதில் உண்மை அன்பு ஒளிரவேண்டும். உங்களிட அது ஏராளமாய் குவியலாகக் கிடக்கிறது. உங்களோடு சேர்ந்து நானும் திருமதி ஜெயந்தி ரமணி அவர்களை வாழ்த்துகிறேன்.


  அளவிடற்கரிய அறுபது கண்டீர்
  ஆனந்தம் கடலெனப் பொங்கக் காண்பீர்
  இயற்கையின் வரங்களெல்லாம்
  ஈடிலா மாண்புடனே வாய்க்கக் கொள்வீர்
  உன்னதப் பெருவாழ்வு ஒளிவீசக் காண்பீர்
  ஊரும் உலகும் உங்களைப் போற்ற வாழ்வீர்
  என்றும் ஏற்றங்கள் நிறைக்கப் பெறுவீர்
  ஏற்றமுடன் எந்நாளும் இருக்கப் பெறுவீர்
  ஐயன் ஐங்கரனின் அருளை அமுதாய் உண்டு
  ஒவ்வொரு நாளும் ஓங்கி நிற்பீர்
  ஓயாத கடலையென ஆயுள் கொள்வீர்
  ஔவையுரைத்த அறம் போற்றி நிற்பீர்..


  மனம் நிறை வாழ்த்துக்கள் ஜெயந்தி அம்மா ரமணி அய்யா. வாழ்க பல்லாண்டு வாழ்கவே.


  1. //ஹ ர ணி August 24, 2013 at 12:54 AM

   வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

   //அன்புள்ள வைகோ ஐயா.

   வணக்கம். இதுபோன்ற பதிவிடுவதற்கு நல்ல துர்ய மனது வேணடும. அதில் உண்மை அன்பு ஒளிரவேண்டும். உங்களிடம் அது ஏராளமாய் குவியலாகக் கிடக்கிறது. //

   மிகவும் சந்தோஷம் ஐயா.

   //உங்களோடு சேர்ந்து நானும் திருமதி ஜெயந்தி ரமணி அவர்களை வாழ்த்துகிறேன்.//

   மிக்க மகிழ்ச்சி. ‘அ’ முதல் ‘ஒள’ வரை ஆரம்ப எழுத்துக்களால் வாழ்த்தி அசத்தியுள்ளீர்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், ஐயா.

 • சஷ்டியப்த பூர்த்தி விழா காணும் திரு. ரமணி மற்றும் திருமதி ஜெயந்தி இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்......

 • தொடர்புடைய பதிவுகள்:
 • நேரிடையான எங்கள் சந்திப்பு பற்றி
 • ஜெயந்தி ரமணி அவர்களின் பெண் குழந்தையின் திருமணம் பற்றி


 • http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html
 • ஜெயந்தி ரமணி அவர்களின் சஷ்டியப்த பூர்த்தி கல்யாணம் பற்றி


 • http://manammanamveesum.blogspot.in/2014/07/blog-post.html
 • ஜெயந்தியின் புதிய வலைத்தளத்தினில் 
 • எங்களின் அருமையான நேரடி சந்திப்பு பற்றி


 • இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
 • அன்புடன் கோபு


 •  

  தொடரும்  என்றும் அன்புடன் தங்கள்
  [வை. கோபாலகிருஷ்ணன்]

  17 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பின்னுட்டங்கள் சார். ரசித்துப் படித்தேன்.

   பதிலளிநீக்கு
  2. பின்னூட்டங்களும், பதிலும் படித்தேன். பிரபலமானவர்களின் பின்னூட்டங்கள் முதலிடம் பிடிக்கின்றன.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஸ்ரீராம். March 25, 2015 at 7:23 PM

    வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் .. வணக்கம்.

    //பின்னூட்டங்களும், பதிலும் படித்தேன். //

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

    //பிரபலமானவர்களின் பின்னூட்டங்கள் முதலிடம் பிடிக்கின்றன.//

    அப்படியெல்லாம் எதுவும் இல்லை ஸ்ரீராம். நான் பதிவிட ஆரம்பித்த முதல் 6 மாதங்களில், நான் வெளியிட்டுள்ள ஒரு சில 10% பதிவுகளை மட்டும் RANDOM ஆக முதலில் எடுத்துக்கொண்டேன்.

    அவற்றிற்கு வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களில் மீண்டும் RANDOM SELECTION ஆக சிலரை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டேன்.

    இவ்வாறு சுருக்கியுள்ள செயல்கள் பதிவின் நீளம் + பதிவின் சுவாரஸ்யம் கருதி மட்டுமே.

    தங்களின் பின்னூட்டங்களும் ஒருநாள் இந்தத் தொடரினில் இடம் பெறலாம். இங்கு இன்று இடம்பெற்றுள்ளவர்களேகூட மீண்டும் இடம் பெறலாம்.

    RANDOM + SAMPLE SELECTION FROM SOME OF MY VERY OLD ARTICLES DUE TO SPACE PROBLEM என்பதால், மேலும் சில பிரபலமானவர்கள் பெயர்கள் சுத்தமாகவே விடுபட்டும் போகலாம்.

    அனைவரும் இதனை நன்கு புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

    அன்புடன் VGK

    நீக்கு
  3. சுவையான பின்னூட்டங்க்கள் அனைத்தும் படிக்க சுவாரஸ்யம் சார்!

   பதிலளிநீக்கு
  4. இனிமையான உற்சாகம் தரும் பின்னூட்டங்கள் ஐயா...

   பதிலளிநீக்கு
  5. பிரமாதம். பின்னூட்டங்கள் பல பதிவுகளையும் திறக்கும் சாவிகளாய் இங்கு செயல்படும் அற்புதம். சுந்தர்ஜியின் பின்னூட்டம் வழியே உலக்கை அடி வா(ங்கி)சித்து வந்தேன். பல பதிவர்களுக்கும் புதுப்புது சிந்தனைக்கு வழிகாட்டியான சிறப்பான ஆக்கம். பாராட்டுகள் கோபு சார்.

   பதிலளிநீக்கு
  6. புதிது புதிதாய் யோசிக்கும் உங்கள் திறமைக்கு நமஸ்காரம்

   பதிலளிநீக்கு
  7. அருமையான தொகுப்பு. பாராட்டுகிறேன்.

   பதிலளிநீக்கு
  8. எப்படில்லாம் யோசிக்குறாங்க. வெரி இன்ட்ரஸ்டிங்

   பதிலளிநீக்கு
  9. எப்படில்லாம் யோசிக்குறாங்க. வெரி இன்ட்ரஸ்டிங்

   பதிலளிநீக்கு
  10. ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் ரசிக்கவைத்தன..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இராஜராஜேஸ்வரிOctober 18, 2015 at 8:49 PM

    //ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் ரசிக்கவைத்தன..//

    வாங்கோ, வணக்கம். தங்களின் மிகச்சிறிய சுருக்கமான கருத்தும்கூட எனக்கு ஊட்டமளித்து ரசிக்க வைக்கிறது.

    முன்பெல்லாம் எனக்கு மேலும் மேலும் பதிவிட வேண்டும் என்ற உற்சாகம் அளிக்கும் விதமான நிறைய எழுதுவீர்கள். இப்போது குறைத்துக்கொண்டு விட்டீர்கள்.

    அதனால் நானும் புதிய பதிவுகள் இடுவதையே மிகவும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

    நீக்கு
  11. நான் எங்க இருக்கேன். தெரியலயே,

   தலை ஒரேயடியா சுத்துதே.

   இப்படியும் ஒரு மனிதரா! ஆஆஆஆஆ

   பதிலளிநீக்கு
  12. ஜெயந்தி ஆண்டி கமண்டயே நானு ரிபீட்டு பண்ணிகிடுதேன் இன்னா சொல்லுதுன்னு ஏதும் வெளஙகிகிட ஏலலே.

   பதிலளிநீக்கு
  13. பின்னூட்டங்கள் படிக்க படிக்க சுவாரசியமா இருக்கு.

   பதிலளிநீக்கு
  14. படா ஆத்மி-ங்க!!! பின்னூட்டமே ஒரு ரேஞ்சா இருக்கு!!!

   பதிலளிநீக்கு
  15. வளர்க உமது புகழ்! வாழிய பல்லாண்டு! வளர்க வலையுலகம்!

   பதிலளிநீக்கு