என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-12/01/04



என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்






ஐம்பதாவது டெலிவரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா!

"தாலி" படிக்கிறபோது புரிஞ்சுக்கிட்டேன்; நீங்க படுஜாலியா எழுதுறவர்னு..! 


தூள் கிளப்புங்க! நாங்களும் பின்னாலே வந்திட்டிருக்கோமில்லே? :-))

//வ.வ.ஸ்ரீ. தன்னிடம் வருபவர்களையெல்லாம் 

“வாங்க, வாங்க! இந்தாங்க, எழுச்சியோடு பொடிபோட்டுட்டுப்போங்க” 

என்று சொல்லிப் பொடி டின்னை திறந்து நீட்டும்போதெல்லாம், 

குங்குமச்சிமிழுடன் கொலுவுக்கு அழைப்பது போல எனக்குத் தோன்றும்.//


//மாற்று ஏற்பாடு செய்யாததில் அவர்களுக்கு, அவர்களின் 

பொடி ஏறாத மூக்குக்குமேல் கோபம் கொப்பளித்து வந்ததைப் பார்த்தேன்.//


மிகவும் ரசித்தேன்! :-)


//ஓஸியிலே பொடி வாங்கி நாசியிலே போட்டால் கிடைக்கும் இன்பமே இன்பம்;//
ஹாஹா! திருட்டு மாங்காய் தான் ருசி அதிகம் என்பார்களே, அது போலவா? :-)
இயல்பான நகைச்சுவை, கோர்வையான எழுத்து - 


இவையிரண்டும் சேர்ந்து இடுகையின் சுவாரசியத்தைப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. 


இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமோ என்று கேட்கிற அளவுக்கு...! :-)

மூக்குப்பொடி ஆசாமிகள் போடுகிற தும்மலைக் கேட்டால், 

எங்கேயோ பக்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடிச்சிருச்சோன்னு பயம் வந்திரும். 

நான் நிறயாவாட்டி கேட்டிருக்கேன். :-))

ஸ்ரீமான் வழுவட்டையாரின் ஃபிளாஷ்பேக் உருக்கம்.

வழமைபோலவே படுசுவாரசியமாகச் சொல்லியிருக்கிறீர்கள். :-)

//அதை விட வேடிக்கை என்னவென்றால், பொடிப்பயல்கள் முதல் பெரியவர்கள் வரை, 

நடுநடுவே ஓஸிப்பொட்டிக்கு கைவிரலை நீட்டுபவர்களுக்கெல்லாம், 

இலவசப்பொடி வழங்கப்பட்டு வந்ததே அந்தக்கடையின் தனிச்சிறப்பு. //


ஆஹா! எங்கூரு கடையில் அந்த சலுகையெல்லாம் கிடையாது.


//அடுத்த தலைமுறை இளைஞர்கள் எல்லோருமே ஒரு வித எழுச்சியுடன் 

விளங்க வேண்டும் என்ற தொலை நோக்குத் திட்டமும், 

வியாபாரத் தந்திரமும் என்பதைப் புரிந்து கொண்டேன்//


இதைத்தான் என் பாட்டியும் சொல்லி, என்னை பொடிக்கடைக்கு அனுப்பக்கூடாது 


என்று தாத்தாவோடு சண்டை போடுவாள். :-)

//பின்னூட்டங்கள் வர தாமதமானால் அது என்னையும் வழுவட்டையாக்கி 

விடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதை தயவுசெய்து உணர்வீர்களாக!//


ஆஹா, வழுவட்டையாக இருந்துவிடாமல் உடனுக்குடன் 


பின்னூட்டம் போட வந்திருவோமில்லே..? :-)




அதிகாலையிலேயே எழுந்தருளிய வ.வ.ஸ்ரீயை இரவில் வந்து 

வழுவட்டையாக தரிசக்க வந்தமைக்கு ஷமிக்க வேணுமாய்ப் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.


உடம்பில் அங்கங்கே சில உதிரிபாகங்கள் சேட்டை பண்ணியதால், 

இழுத்துப் போர்த்தி உறங்கி, மற்றவர் உறங்கும் நேரத்தில் விழித்து வந்திருக்கிறேன். :-)

    1. //பொண்டாட்டி இல்லாமல் இருக்கவே முடியாது என்றிருந்த என்னை ‘பொண்டாட்டி’ யின் சுருக்கமான ‘பொ.............டி’ இல்லாமல் இருக்கவே முடியாது என்று ஆக்கிவிட்டது. //

    2. பொடிவைத்துப் பேசுபவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 
    3. இங்கே பொடிவைத்து எழுதியிருக்கிறீர்களே...! சபாஷ்!! 
    4. சேட்டைக்காரன்March 19, 2011 at 11:06 PM
    5. //அந்த நேரங்களிலெல்லாம் பொடியை இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு, 
    6. அவளையே ஓங்கி இழுத்துவிட்டது போல ஒரு வித இன்பம் அடைவதுண்டு”//

    7. இருக்கும் இருக்கும்! இழுக்க இழுக்க இறுதிவரை இன்பமல்லவா? 
    8. நான் பொடியை இழுப்பதைச் சொன்னேன்! :-)
    9. //நாளாகநாளாக அதே பளபளப்பான பால்குடம், பழையசோத்துப்பானையா மாறிடுமப்பா, அதே உன் கண்களுக்கு!” என்றார் வ.வ.ஸ்ரீ. அவர்கள்//

    10. வாய்விட்டு சிரித்துவிட்டேன்! இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன். :-)
    11. //இந்த எழுச்சி, புரட்சி, மகிழ்ச்சி, விரைப்பு, முறைப்பு, ஆர்வம், அட்டகாசம், அதிகாரம், ஆணவம், ஆட்டம், பாட்டம் எல்லாமே எல்லோருக்குமே ஆரம்பத்தில் கொஞ்ச நாட்களுக்குத் தானப்பா; பிறகு போகப்போக கடைசியில் ஒரு நாள் எல்லோருமே எழுச்சிகுன்றி, வழுவட்டையாகத்தான் போயாக வேண்டும், என்பது தான் இந்த உலக நியதியப்பா;//

      நிரம்ப சரி! தத்துவம்போல தொனித்தாலும், இது வாழ்க்கையின் நியதி!
    12. http://gopu1949.blogspot.in/2011/03/5_18.html
  1. அலுவலகத்துக்குள் நுழைந்ததும் வழுவட்டை போல பணியைக் கவனிக்கப்போகாமல், 
  2. முதல் வேலையாக கணினியை முடுக்கி உங்களது இடுகைக்கு வந்து விட்டேனே! :-)
  3. //எவனாவது ஏதாவது கேட்டுக்கிட்டு எப்போதாவது சிலசமயம் வருவான். 
  4. பார்த்துத் தேடித்தருவதாகவோ அல்லது நீயே தேடிக்கொள் என்று சொன்னால் போதும்//


  5. நல்ல டெக்னிக்! குறித்து வைத்துக் கொள்கிறேன்!
  6. //பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//



  7. வ.வ.ஸ்ரீயின் கற்பனையே அலாதிதான் போலிருக்குது!

  1. அடுத்தடுத்து வங்கி விடுமுறைகள் வருவதால், கொஞ்சம் பணிப்பளு அதிகமானதால் நகர முடியாத சூழல். இதோ வந்திட்டோமில்லே...?

    //எனக்கு டாக்டரைப்பார்க்க அபாய்ண்ட்மெண்ட் கிடைக்க அரை மணி ஆனதில், பொடிபோடாத என் மூக்கு, நொணநொணக்கவும், முணுமுணுக்கவும், தொணதொணக்கவும் ஆரம்பித்து விட்டது.//

    மணமணக்கும் பொடியில்லாமல் போனால் நொணநொணப்பு, முணுமுணுப்பு, தொணதொணப்பு எல்லாம் வரத்தானே செய்யும்? :-)
  2. //அவள் என்மீது காட்டிய கடைக்கண் பார்வையால், முன்னுரிமை அடிப்படையில்//
  3. அந்த ஆஸ்பத்திரி எங்கே சார் இருக்கு? சும்மா, நானும் சீக்கிரமா டாக்டரைப் பார்த்திட்டுப் போகலாமேன்னுதான்.
  4. //இனி பொடிப்பக்கமே தலை வைத்துப்படுக்கக்கூடாது, 
  5. கண்ணாலும் பார்க்கக்கூடாது என்று இறுதி எச்சரிக்கையும் கொடுத்து விட்டார்.//


  6. இதைக் கேட்டதும் உங்களுக்கு மூக்குக்கு மேலே கோபம் வரவில்லையா?
  7. //இனிமேல் பொடியே போடப்போவதில்லை என்று 
  8. [ப்ரஸவ வைராக்கியம் என்பார்களே, அது போல] சபதம் மேற்கொண்டேன்.//


  9. ஹிஹி! :-))
  10. //நான் இப்படித் தவியாய்த் தவிப்பதைப் பார்த்த என் மனைவி, தன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கண்களில் ஒத்திக்கொண்டு, வந்தது வரட்டும் என்று தானே மரஸ்டூல் ஒன்றைப்போட்டு, கோவை சரளா போல தன் புடவைத்தலைப்பை இழுத்துச்சொருகிக்கொண்டு, பரணை மீது ஏறி, பொடிட்டின்னைத் தேடி எடுத்து, தன் புடவைத்தலைப்பால் புழுதிகளைத் துடைத்து, மூடியைத்திறந்து என்னிடம் நீட்டிய பிறகு தான், எனக்குப்போன உயிர் திரும்பி வந்தது என்றால் பார்த்துக்கோயேன்” என்றார்.//
  11. அவர்கள் பெண்தெய்வம்!
  12. //கைவசம் பொடி இல்லாத இந்த வெளிநாட்டுப்பயணம் தேவை தானா 
  13. என்று ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்று விட்டேன்.//


  14. இதயம் பொடிப்பொடியாகி விட்டதோ?

  15. வழக்கம்போல சுவாரசியமாக எழுதி, அசத்தியிருக்கிறீர்கள். 
  16. கலக்கல்தான் போங்க!
  17. சார், முடிந்தால் pop-up window-வில் கமெண்ட்ஸ் போடுகிறா மாதிரி பண்ணுங்க! 
  18. இன்னும் எளிதாக கருத்துப் போட முடியும். மிக்க நன்றி ஐயா!



  1. //தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிக்ளிலும் நமக்கு ஆளுங்க இருக்கு.//
  2. இந்த வசனத்தை வ.வ.ஸ்ரீ தான் கண்டுபுடிச்சாரோ? 
  3. ஆளாளுக்கு இப்பல்லாம் இதைத் தான் சொல்றாங்க! :-)
  4. //முற்போக்குன்னா: ’ வாந்தி’, பிற்போக்குன்னா: ’பேதி’ன்னு நினைச்சுக்கோ.//
  5. ப்பூ, இவ்ளோ தானா மேட்டர்? நான் கூட என்னவோ ஏதோன்னு 
  6. நினைச்சிட்டிருந்தேனே? :-))))))
  7. //மூக்குப் பொடி போடுவோர் முன்னேற்றக் கழகம்//
  8. கேட்டதுமே பல அரசியல்வாதிகளுக்கு மூக்குலே வியர்த்திருக்கணுமே?
  9. //அறிஞர் அண்ணா அவர்கள் எழுச்சியுடன் மூக்குப்பொடி போடுவார். 
  10. நானும் அதே அண்ணன் உபயோகித்த அதே பொடியைப் போடுகிறேன்.//


  11. ஆஹா, அதுனாலே தான் அறிஞர் அண்ணா சூப்பரா பொடி வச்சுப் பேசினாரோ? :-))
  12. //மகளிருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வை ஊட்டுவோம்” 
  13. என்று வீர வசனங்கள் பேச ஆரம்பித்து விட்டார், வ.வ.ஸ்ரீ.//


  14. க்ரேட்! அரசியலை அத்துப்படியா தெரிஞ்சு வச்சிருக்காரு வ.வ.ஸ்ரீ!
  15. //மூக்குக்குப் பொடி வேண்டும்!
    முன்னேற வழி வேண்டும் !! //



  16. சபாஷ்!! மூக்குப்பொடி கைவிடேல்!
  17. //படுகுஜாலாக ஒருத்தி மட்டும் கிடைத்து விட்டால் போதும், மற்ற எல்லா பிரச்சனைகளும் ஓவர்.//


  18. அப்படி மட்டும் பண்ணினா, பொடி போடுற ப்ழக்கமில்லாதவங்களும் 
  19. கட்சியிலே சேருவாங்க!
  20. //அதாவது இந்த இடைத்தேர்தல், பொதுத்தேர்தல் பற்றிய ஏதாவது செய்திகள் வந்தாலே 
  21. வ.வ.ஸ்ரீ அவர்களுக்கு இதுபோல ஒரு அட்டாக் வருவதுண்டாம். //


  22. அதுக்குப் பேரு அக்யூட் பொலிட்டிக்கோ எலெக்ஷனோப்ஸி!
  23. எட்டு பகுதியிலே புட்டுப் புட்டு வச்சிட்டீங்க! :-))


  24. வாழ்க வ.வ.ஸ்ரீ புகழ்! வளர்க மூக்குப்பொடி பெருமை!!



வாசிக்காமல் பின்னூட்டம் இடுவதில்லை என்பதை 

ஒரு சபதமாகவே வைத்திருக்கிறேன் என்பதால், 

ஒவ்வொரு பகுதியாக வாசித்துப்பின் கருத்துச் சொல்வதாய் உத்தேசம். :-)


//டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் என்ற எந்த விதமான குறுக்கீடுகளும் இல்லாத காலம்.//


பொற்காலம் என்று சொல்லுங்க! கிட்டத்தட்ட இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த

ஒரு தலைமுறையைப் பற்றிய கதை, அதுவும் காதல் கதை என்பது ஆவலைத் தூண்டுகிறது.


//நிம்மதியாகப் படிக்கவும், படுக்கவும், குளிக்கவும் பிரைவசி இல்லாத 

அந்தக்குடியிருப்பில் காதலில் கசிந்துருக வாய்ப்புகள் மிகவும் குறைவு.//


அக்காலத்து ஸ்டோர்வாசம் குறித்து சற்றும் ஆயாசமில்லாமல், 

விபரமாக வர்ணித்து கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்கள்!


//ஒரு பழைய பாடாவதி சைக்கிளோ, ஒரு கயிற்றுக்கட்டிலோ, 

ஒரு மர பீரோவோ இவற்றில் ஏதாவது ஒன்று வைத்திருப்பவர் 

அந்தக்குடியிருப்பில் சற்று வசதியானவர் என்பதை வெளிப்படுத்தும் 

அளவுகோலாக இருந்தது.//


இதை விட நறுக்கென்று சொல்ல முடியுமா தெரியவில்லை. 


அனுபவஸ்தர்களின் எழுத்து என்பதை விடவும் அனுபவித்து எழுதியிருப்பது தெரிகிறது.


//மலைக்கோட்டையைச் சுற்றியுள்ள வீதியாகையால் கோயில் மணி சப்தங்களும், 

தேவாரம், திருவாசகம் என ஒலிபரப்பப்படும் மங்கல ஒலிகளும் 

அனைவர் உள்ளத்தையுமே உற்சாகப்படுத்தும். //


மற்றோரு சான்று! :-)



பிரமாதமாக துவங்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.



அடுத்த பகுதியை பிறகு வாசித்து கருத்து எழுதுகிறேன்.


அந்தப் பெண்ணைப் பற்றிய வர்ணனைகளை வாசிக்கும்போது, 

ஒரு வேளை அவளது புகைப்படத்தை எதிரில் வைத்துக்கொண்டு, 


பார்த்துப் பார்த்து எழுதியிருப்பீர்களோ என்று கூட தோன்றுகிறது. 


அவ்வளவு சிரத்தை தெரிகிறது.



பொதுவாக, வார்த்தைப் பரிமாற்றங்கள் 


கதையெழுதுபவர்களுக்குக் கைகொடுக்கும். 

அதுவுமின்றி, சுவாரசியமாகக் கொண்டுபோயிருப்பதிலிருந்து 


நீங்கள் எழுதுவதில் படா கில்லாடி என்று புரிகிறது. :-)


//அவள் கைப்பட்ட அந்த ரவாலாடை, அவளின் பெற்றோர்களுக்கு எதிரில், 

அப்படியே முழுவதுமாக வாயில் போட்டு, அசைபோடுவது அநாகரீகமாக 

இருக்கும் என்று எனக்குப்பட்டது. எதையும் கையில் வைத்துக்கொண்டு, 

வாயால் கடித்து எச்சில் செய்து சாப்பிடும் பழக்கமும் எனக்குக் கிடையாது. //


எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது ஒரு அழகான பெண்ணின் அருகாமை? சூப்பர்!



அடுத்த பகுதியை வாசிக்க அப்பாலிக்கா வர்றேன்.

எல்லாரும் தான் ஜவுளிக்கடைக்குப் போறோம்; 

துணியெடுக்கிறோம். 

அதை இவ்வளவு கோர்வையா, சுவாரசியமாக சொல்ல 


உங்களை மாதிரி சிலரால் மட்டும் தான் முடியுது. 

ஹாட்ஸ் ஆஃப்! 


உங்க கிட்டே ஒரு கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் சேரலாமுன்னு உத்தேசம்! :-))



குரங்குக் கூட்டத்தின் சண்டையில் விஷ பாட்டில் தட்டிக் கொட்டியது, 

அனுமார் கோயில் அமைந்த விதம் எல்லாமே இயல்பாக நடந்த நிகழ்ச்சியுணர்வில் 

கதையை நடத்திச் செல்கின்றன. அடுத்த பகுதியில், நடுநடுவே கொஞ்சம் 

கான்வர்ஷேசனோடு கதையை நகர்த்தினால், அழகாக இருக்கும்.

தொடருங்கள்..

கண்ணாம்பா பாட்டியின் முடிவு எதிர்பார்த்தது தான்; 


ஆனால் சென்ற பகுதி படிக்கும் பொழுது வேறு மாதிரி முடிப்பீர்கள் என்று நினைத்தேன்.

கண்ணாம்பா கிழவி சேர்த்து வைத்திருக்கும் சொற்ப பணத்தில் அவள் 


வேண்டுதல்களுக்கான ஏற்பாடுகள் செய்கையில் அவளின் முடிவு சம்பவிக்கும் என்று எதிர்பார்த்தேன்.

குரங்குகளின் இறப்பின் பொழுதே கோயில் கட்டிய பொழுது, 

கண்ணம்பா பாட்டி போன்ற உத்தம மானுடரின் நினைவில் கோயில் உருவாகக் கூடாதா, என்ன?... 

பாட்டி நினைவில் ஒரு அம்பாள் சந்நிதிக்கும் வழியேற்பட, வைத்த தலைப்பிற்கும் வழி சொல்லியாச்சு.


ஆனால், கதை வேறுவிதமாகப் போனது தான் எதிர்பாராதது என்றாலும் யதார்த்தமானதே. Well said.


//இரவு 11 மணிக்கு மேல்--//

//கதவின் வெளிப்புறம் யாரோ நிற்பது போல மூடியிருந்த ஜன்னல் கண்ணாடிகளில் நிழல் தெரிந்தது--//

// வெள்ளையில் வேட்டி- சட்டை--//



-- இவற்றையெல்லாம் வைத்து ஒரு முடிவுக்கு வரலாமென்றால்,

அழைப்பு மணி வேறு ஒலிக்கிறதே!!



-- ஒரு கால் அப்படி ஒலித்தது பிரமையோ?...

ஆரம்பம் ஒரு அமானுஷ்யத்தன்மையுடன் இருந்தாலும், 

போக்குக்காட்டி கதையையும் மடைதிருப்பி வடிகால்களுக்கும் வசதிபண்ணித் தந்து விட்டீர்கள்.


வயதானவர்கள் கூட இருப்பது இளசுகளுக்கு பலவிதங்களில் செளகரியமே. 


கணக்குப் போட்டுப் பார்த்தால், மாதச்சம்பளத்தில் அரைப்பங்கு 

அவர்கள் துணையாக இருப்பதால் மிச்சமாகும் என்பது தெரியும். 

பெற்றோரை நடுத்தெருக்கு அனுப்பாமல், காப்பாற்றுகிறான் என்று 

சுற்றுவட்டாரத்திலும் நல்ல பெயர். இருக்கவே இருக்கு, 

வாழ்க்கைக் கணக்கில் சேருகின்ற புண்ணிய பலனும்.


அதே மாதிரி வயதான பெற்றோர்களுக்கும் பிள்ளை,மருமகள், பேரக்குழந்தைகள் 


மத்தியில் கிடைத்த வாழ்க்கையை சந்தோஷத்துடன் வாழ்வது, 

விலைமதிப்புள்ள வைட்டமின் மாத்திரைகளை விழுங்குவதை விட சந்துஷ்டியை 

கொடுக்கிற சமாச்சாரம் என்பது தெரியவரும். 


வயதான காலத்தில் பிள்ளைகளின் கூட இருந்து பிள்ளைகளூக்கும் 

வெளியிடத்தில் பெருமை சேர்க்கும் கடமை சார்ந்த புண்ணியமும் கிடைக்கும். 

விழுகிறோமா, எழுகிறோமோ சொந்த பந்தங்களின் மத்தியில் என்கிற மனநிம்மதியும் இதில் உண்டு.


ஒருத்தருக்கொருத்தர் கொஞ்சம் விட்டுக் கொடுப்பது, 


சின்ன விஷயங்களை பெரும்போக்கில் பெரிது பண்ணாமல் அரவணைத்துச் செல்வது, 

வரட்டு கெளரவங்களை அலட்சியம் செய்வது போன்ற உப்புப் பெறாத 

சின்ன சின்ன விஷயங்களில் பெரியோர்--சிறியோர் இருசாராரும் கொஞ்சமே 

அட்ஜெஸ்ட் செய்து கொண்டால், எந்த வடிகாலுக்கும் வேலையே இல்லை. 

அப்புறம், 'நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்' பாட்டுப்பாட வேண்டியது தான்! 

அந்த சந்தோஷத்தை நினைத்தால், எந்த சொந்த இழப்புக்கும் தயாராகிற மனோபாவம் வரும்! 

வேண்டியதெல்லாம், மனசை கொஞ்சமே அட்ஜெஸ்ட் செய்துகொள்கிற மனோபாவம் மட்டுமே!

இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் ஆயிரம் தொந்தரவுகளை கிட்டத்தில் அண்ட விடாமல் 

கட்டிக் காப்பாற்றுகிற ரட்சையாகச் செயல்படுவது உறுதி!


முதியோர் இல்லங்களெல்லாம் மேற்கத்திய கலாச்சாரம். 


சென்ற தலைமுறையில் இந்த தேசத்திற்கு இதைப்பற்றிய 'அறிவே' கிடையாது.

வேண்டாத பல இறக்குமதிகளும் கூடச்சேர்ந்த இறக்குமதியே இதுவும்.


நமக்குச் சரிப்படாத இந்த கார்ப்பரேட் விவகாரங்கள், 


ஒட்டாத ஒரு அன்னியத்தன்மை கொண்டே என்றும் இருக்கும்!


அவரவர்க்குத் தேவையானதை தேர்ந்து கொள்கிற மாதிரி, 
கதையில் சொல்லியும் 

முழு திருப்திபடாது நிறைய ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள். 


எல்லாவற்றிலும் உங்கள் நல்ல நோக்கம் பளிச்சிடுகிறது. 

அதற்கான பாராட்டுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.



வழக்கம் போல் பின்னிப் பெடலெடுக்கிறீர்கள். 

அடுத்த இரு பாகங்களுக்காக டைம் பாம் ரிசர்வ் பண்ணி வைத்திருக்கிறீர்களா?

திக் திக் அண்ட் டிக் டிக்.

ரேஷன் கடைக் க்யூவில் இப்படி ஒரு அற்புதக் கனவா?

வைரமுத்து ஸ்டைலில் சொன்னால் ”இதற்காகவே க்யூவில் நிற்கலாம் போலிருக்கிறதே?”.

இன்னா சார் டபாய்க்கிறீங்கோ? அஞ்சல-சிவகுரு இன்னா பேசிருப்பாங்களோன்னு 


பதபதச்சு வந்தாங்காட்டியும் மூணு நாளக்கித் தள்ளி வெச்சு ராங் பண்ணிட்டீங்கோ.

எங்கானும் இறுதிகட்ட எலெக்ஸன் ப்ரசாரத்துக்குக் கெளம்பிட்டீங்களா சார்?

வெளிப்படையான எழுத்துன்னு உங்க எழுத்தைச் சொல்லலாம். 

அதுக்கு உங்க பெட்டர் ஹாஃப்தான் காரணம்னும் சொல்லலாம்.

இன்னுமொரு சஸ்பென்ஸுடன் இன்னுமொரு கோபு சார் தொடர்.

சுடிதார் வாங்கிவந்த அனுபவத்தை மட்டுமே ஒரு இடுகையாய் எழுதும் 

பேரெழுச்சியும் தைரியமும் கொண்ட நபர் நீங்கள் மட்டும்தான் என்று 

பி.பி.சி. இன்று தெரிவித்தது.

வடையில்லாமல் பஜ்ஜியில்லாமல் ஒரு வாக்கிங்கா? 

உங்க ஹீரோ ஜமாய்க்கறார் சார் உங்க கதைல.

என்ன அந்த வடை பஜ்ஜியை ஒரு கை பார்த்துவிட்டு 


விறுவிறுவென்று நாலு கிலோ மீட்டர் நடந்தால் 

இன்னும் நாலு வடை-பஜ்ஜி உண்டு என்று டாக்டரை விட்டு ஆஃபர் தரச் சொல்லலாம்.

யே கலக் கலக்! யே கலக் கலக் குனு கலக்கறீங்க கோபு சார். 

உங்க எழுத்தப்படிக்காம ஒருநாள் டெய்லி ஷீட் காலண்டரைக் கிழிக்க மனம் நோவுது. 


ஃபீல் பண்ண வெக்காம தெனம் எதுனாச்சும் எழுதுங்க ப்ளீஸ்.

யார் யாரோ சொல்லியும் எத்தனையோ சங்கல்ப்பித்தும் நடக்க யத்தனிக்காத 

நமது ஹீரோவை அந்தப் பெரியவரின் பேரமைதி கைத்தடி கொடுத்து 

நிரந்தரமாக நடக்கவைத்துவிட்டது கோபு சார்.

இதைத்தான்-



நடக்குமென்பார் நடக்காது


நடக்காதென்பார் நடந்துவிடும்



என்று கண்ணதாசன் பாடினாரோ?

இந்தக் கதையை 2011ல் இருப்பதால் யூகிக்க முடிந்தது. 

ஆனாலும் நீங்களும் இப்படி யோசித்தது எனக்குப் பிடித்திருந்தது கோபு சார்.

ட்விஸ்ட்டே உன் பெயர்தான் கோபு சாரா?

எல்லாக் கதைகளையுமே தன்மை ஒருமையிலேயே எழுதுவதால் 

எல்லோருமே பாத்திரத்தையும் உங்களையும் ஒன்றாக நினைத்துக் குழப்பிக் கொள்கிறார்கள் 

என்று முன் ஜாக்கிரதையாக நீங்களே அப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்லிவிட்டது ஜோர்.


மாவிலை தோரணத்தோடு அதிகாலை நாதஸ்வரம் முழங்கும் 


ஒரு கல்யாண மண்டபத்தில் நுழைந்திருக்கிறோம்.

நிறைய நேரமிருக்கிறது முஹூர்த்தத்திற்கு.

காத்திருக்கலாம். தப்பில்லை.

மூக்குத்தி பற்றிய கதையென்பதால் மூக்குத்தி சைஸிலேயே 

கதையையும் நகத்தறீங்க போலிருக்கு?

ஒரு வழியாய் உங்க தபால்பெட்டி திறந்துவிட்டது கோபு சார்.

கதை உங்க ஸ்டைல்ல வழக்கம்போல சபாஷ்.



பெரியவரையே சுத்தி வந்த பு.கொ.க.ச.பையனை முதலிலேயே படுவாப் பய 


என்று யூகிக்க முடிந்தது.


ஆனாலும் முதல் அறிமுகத்திலேயே அவனுடைய பெயரைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.

நீளமாக பு.கொ.க.ச.பையன் என்று எழுதிக் கஷ்டப்பட்டிருக்கவேண்டாம்.


ஒருவேளை ஹாஸ்யத்துக்காக நீங்க மெனக்கெட்டு அப்படிப் பண்ணிய மாதிரியும் தெரிந்தது.



நானும் பிள்ளையாருக்கு ஒரு சிதறுகாய் போட்டுவிட்டு வருகிறேன் 


உங்க தபால்பெட்டி கூகிள் புண்ணியத்துல திறந்து எழுதவழி விட்டதுக்கு.

இந்த முறை குலுக்குவதற்குப் பதில் உருக்குவது என்ற தீர்மானமா?

ஆரம்பம் ஒரு மலர் போல விரிகிறது.


ஒரு மாலையாய்த் தொடரட்டும் வரும் பகுதிகள்.

நடு ராத்திரி 11 மணிக்குக் கதவைத் தட்டியதிலிருந்து கதை கன வேகத்தில் கிளம்பி 

உங்களின் வாடிக்கையான பீடிகை ஜமாவோடு நிற்கிறது.


கதாசிரியரா அல்லது 80 வயது வாசகரா யார் கதையை நகர்த்தப் போகிறார்கள்?


வெயிலில் சுற்றிவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது பவர்கட் ஆனது போல் 


ஒரு தகிப்போடு காத்திருப்பது உங்கள் இடுகைகளுக்கு வாடிக்கையாகிப் போனது கோபு சார்.

பிள்ளையாண்டன் ஊர்லேருந்து வந்துட்டாரா? அல்லது 

உங்க ப்ளாக் பாஸ்வேர்ட் அவர் கைலேயே இருக்கா? 

டெம்ப்ளேட் கண்ணுக்கு இதம் பழசை விட.

புது டெம்ப்ளேட்டுடன் படிக்க படு பாந்தம்.



பெருங்குடும்பம் பெருங்குற்றமாய்க் கருதப்படும் இன்றைய நாளில் 


பெரியவரின் பதினோரு குழந்தை வளர்ப்பு இன்றைய கால ஐந்து குடும்பங்களின் பொறுப்பு.


சபாஷ் இந்தப் பதிவுக்கும்.

பெரியவரின் தூக்கமின்மை நம்மையெல்லாம் எழுப்பிவிட்டது 

என்பதுதான் உண்மை கோபு சார்.

இந்திய மரபு சார்ந்த உறவுகளிலும் சிந்தனைகளிலும் அவசரம் நேரமில்லை 

என்கிற தப்பித்தல் வார்த்தைகளால் விரிசல் விழுந்துள்ளது.


பணத்தால் எதையும் வாங்கிவிட முடியும் என்கிற மனோபாவம் 


பணம் வாங்க முடியாது தோற்றுப்போகும் இடங்களில்தான் ஒருவரின் சுயம் விழிக்கிறது.


இனிமையான வார்த்தைகள் மட்டுமே முதியவர்களுக்குப் போதும். 


அவர்கள் மனதும் வயிறும் குளிர்ந்துவிடும்.


அருமை கோபு சார்.

கடந்து போன தலைமுறைகளின் வாழ்க்கைமுறை 

எத்தனை விதமாய்க் கோர்க்கப்பட்டிருக்கின்றன உங்களால்?

வாஷிங்டனில் திருமணம் ஒரு பக்கமாய் மட்டுமே பார்த்தது போலத் தோன்றும். 

ஆனால் உங்களின் பார்வை எல்லாப் பக்கங்களிலும் சுழல்கின்றன கோபு சார்.

சாதாரணமாகப் பருத்திதான் புடவையாய்க் காய்க்கும்.


ஆனா இப்பல்லாம் புடவையே இடுகையாய் மாறிட்டாப் போல இருக்கு கோபு சார்.


படு ஸ்வாரஸ்யமா ஒவ்வொரு பொம்மனாட்டிகளையும் கவனிச்சு 


வசனங்களைப் பின்னுவதால் உங்களுக்கு 'நாட்டி பிக் பாய்' என்ற பட்டத்தை 

புதுச்சேரி நாட்டிபாய் சங்கத்தின் சார்பில் அளிக்கிறேன்.



வாழ்த்துகள்..

மழலை இல்லா மனதின் உணர்வுப் போராட்டமும் தியாகம் செய்த தாயின் நிலையும் 
மனதில் அப்படியே கனமாய் உங்கள் எழுத்தால் இறங்கிவிட்டது. 
ஊரில் இல்லாததால் மொத்தமும் சேர்த்து படித்தாகி விட்டது இன்று.

//விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது 
எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். 

அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண். //

Ha Ha Ha மீண்டும் படித்தேன் ரசித்தேன்

சரளமாய் கதை சொல்லும் ஆற்றல் உங்களுக்கு..

கூடவே ரசனையுடன் பயணிக்கும் சுகம் எங்களுக்கு!

பழக ஆரம்பிக்கும்போது தெரிய வராது. 

சில நாட்கள் பழகியதும் சிலர் நம்முள் ஒரு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி போய் விடுவார்கள். 

நம் பிறவியை அர்த்தப்படுத்தும் அம்மாதிரி ஜீவன்களால்தான் இன்னமும் 

வாழ்க்கைக்கு சுவாரசியம் கிடைக்கிறது.

சூப்பர் கதை.

மூக்குத்தி போலவே எழுத்தும் மெருகேறி ஜொலிக்கிறது..

இரண்டு நாட்களாக பின்னூட்டம் போட முடியாமல் ஏதோ பிரச்னை..

இன்றுதான் அதற்கு விடிவு வந்தது..

Comments Received through e-mail from Mr. RISHABAN Sir.

இதே பணத்துக்கு என் பொஞ்சாதிக்கு 10 பவுனில் இரட்டைவடம் சங்கிலி ஒன்று 


1973 இல் வாங்கிய ஞாபகம் வந்தது. 

இனிமேல் நகையைப் பார்க்கவே பணம் கேட்பார்கள்..

சரளமான நடை அழகில் சொக்கிப் போகிறேன் ..



பின்னுட்டம் போட இயலவில்லை
 
கமென்ட் பாக்ஸ் ஓப்பன் ஆகவில்லை 

ரிஷபன்

மூக்குத்தி மூக்கை அடையும் நேரம் வரை த்ரில்தான்..

ரசித்து எழுதுகிறீர்கள்.. அதனால் தான் எங்களால் ரசனையுடன் படிக்க முடிகிறது..

நல்ல ஆழமான எழுத்து.. விவரிப்பில் இம்மியும் பிசகாமல் சூழல், கதாபாத்திர வர்ணனை.. 



அற்புதம்

டோல்கேட் ஆஞ்சநேயர் கோவில் இடிக்கப்பட்டு பல நாட்களாகியும் 

இன்னமும் அந்த இடிபாடுகள் கூட அகற்றப்படவில்லை.. 

பாட்டியின் நல்ல மனசுக்கு இந்தக் கதை சரியான அஞ்சலி

//எனக்கே எங்கே போனேன், எதற்குப்போனேன், என்றைக்குப்போனேன், 

என்ன டிரஸ்ஸில் போனேன் என்பது சுத்தமாக மறந்திருக்கும்.//


நமக்கே ஞாபகம் இல்லாததை அடுத்தவர்கள் நினைவு வைத்து கேட்கும்போது 


வரும் குழப்பத்தை தெளிவாகக் காட்டி இருக்கிறீர்கள்.. 

குழப்பமே இல்லாமல் கதை ஆரம்பம்..

//ஒருவேளை இவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் காது கொடுத்துக் கேட்டாலும் கேட்கலாம், 

காது அவர்களுக்குக் கேட்கும் பட்சத்தில். 

காது கேட்காவிட்டாலுமே கூட, இவர் சொல்லுவதை சொல்லிக்கொண்டே இருக்கலாம், 

தன் மனைவிதானே, தான் சொல்லுவதை எப்படியும் புரிந்து கொள்வாள் என்ற 

எண்ணத்திலும், நம்பிக்கையிலும்.//



கதை சொல்லும் ஆற்றல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை.. 


அதுவும் சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களைக் கூட 

விட்டு விடாமல் சொல்லிப் போகிற ஆற்றல் உங்கள் ஸ்பெஷாலிட்டி.. 


ஜமாய்ங்க..

பெரியவர் மனசுல என்ன இருக்கோ.. 

ரொம்ப பேருக்கு தூக்கம் போச்சு.. 

சஸ்பென்ஸ் தாங்க முடியாம..

கதையும் அதைத் தொடர்ந்து உங்கள் கருத்துக்களும் நீண்ட நேரம் யோசிக்க வைக்கும்..

முதியவர் என்றில்லை.. மனம் விட்டு பேச ஆளற்ற தனிமை.. எவரையுமே நோகடிக்கும். 
முதியவர்களுக்கு கூடுதலாய் அதன் சோகம் தாக்கும்..

//சில சமயங்களில் “வரவர இந்த ஒன்பது கெஜம் புடவையைக் கையாள்வதே கஷ்டமாக உள்ளது. 

உடம்பில் நீட்டி முழக்கிக்கட்டுவதோ, அவிழ்ப்பதோ, துவைப்பதோ, அலசுவதோ, உலர்த்துவதோ, 

மடித்து வைப்பதோ செய்வதற்குள் போதும்போதும் என்றாகிவிடுகிரது. 

பேசாமல் எப்போதுமே இந்த சிறுசுகளைப்போல நாமும் நைட்டியில், 

காத்தாட இருந்து விடலாம் போல உள்ளது” என்பார்கள்.//

ஒரு கேரக்டராய் கூடு விட்டு கூடு மாறும் ஜாலம் 


உங்கள் பேனாவிற்கு இருக்கிறது..




அடுத்த பதிவினில் இடம்பெறப்போகும் 
பின்னூட்டங்கள் அளித்துள்ளவர்கள்: 

திருமதிகள்: ஆசியா உமர் அவர்கள், அம்முலு அவர்கள், கீதா மதிவாணன் அவர்கள், ஜலீலா கமால் அவர்கள், அமைதிச் சாரல் அவர்கள்; திருவாளர்கள்: முனைவர் குணசீலன் அவர்கள், ஸ்ரீராம் அவர்கள், D.CHANDRAMOULI அவர்கள், எல்.கே. அவர்கள், மோஹன்ஜி அவர்கள், வாஸன் அவர்கள் மற்றும் ‘அவர்கள் உண்மைகள்’ அவர்கள்.   




அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS

பட்டியல் எண்: 5 .... 70 LADIES

அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES

பட்டியல் எண்: 8  ....  40 GENTS

இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  




பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.



பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 11 க்கான இணைப்பு:






பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.


 


பட்டியல் எண்: 12 [Part : 01 of  4] 
பின்னூட்ட எண்ணிக்கை : 270
அடடா ..... என்ன அழகு !
அடையைத் தின்னு பழகு !!

TOTAL NUMBER OF COMMENTS : 
2 7 0
THE HIGHEST ONE 
IN MY BLOG HISTORY !



 

இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 270 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்தையும், அதன் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனித்தனியே நான்கு பகுதிகளாகப் பிரித்துக் காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.


  

COMMENT Nos: 201 TO 212



கோபால் சார் ஒவ்வொருவர் பக்கத்திலும் உங்க உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கும் பின்னூட்டங்களை ரசித்து படிச்சிருக்கிறேன் நீங்க என் பக்கம் ஏன் வரமாட்டிங்கறீங்க. ஒவ்வொரு பதிவும் போட்டதும் உங்க பின்னூட்டம் வந்திருக்கான்னு ஆவலுடன் எதிர் பாத்துகிட்டே இருப்பேன். உங்க பின்னூட்டம் பாத்தாதுமே மனதெல்லாம் உற்சாகமாகி பூஸ்ட் குடிச்ச தெம்பு கிடைச்சுடும். இன்னும் நல்ல விஷயங்கள் எழுதணும்னு தோணும். ஆனா நீங்க என் முதல் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் போட்டீங்க அப்புரம் வரவே இல்லே. வாங்க சார்.
  1. பூந்தளிர் January 10, 2013 8:39 PM

    //கோபால் சார் ஒவ்வொருவர் பக்கத்திலும் உங்க உற்சாகமும் ஊக்கமும் கொடுக்கும் பின்னூட்டங்களை ரசித்து படிச்சிருக்கிறேன் நீங்க என் பக்கம் ஏன் வரமாட்டிங்கறீங்க.

    ஒவ்வொரு பதிவும் போட்டதும் உங்க பின்னூட்டம் வந்திருக்கான்னு ஆவலுடன் எதிர்பாத்துகிட்டே இருப்பேன். உங்க பின்னூட்டம் பார்த்ததுமே மனதெல்லாம் உற்சாகமாகி பூஸ்ட் குடிச்ச தெம்பு கிடைச்சுடும். இன்னும் நல்ல விஷயங்கள் எழுதணும்னு தோணும்.

    ஆனா நீங்க என் முதல் பதிவுக்கு மட்டும் வந்து பின்னூட்டம் போட்டீங்க அப்புறம் வரவே இல்லே. வாங்க சார்.//

    தங்களின் இத்தைகைய நேர்மறையான ஆவலுக்கும் எதிர்பார்ப்புக்கும் மிக்க நன்றிம்மா.

    நான் தங்களின் வலைப்பக்கம் தொடர்ந்து வராமல் இருப்பதற்கான பொதுவான காரணங்களை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    1] நான் ஒருவரின் பதிவுக்குச் செல்வதானால் எனக்கு அவர்களின் புதிய வெளியீடு பற்றி மெயில் மூலம் இணைப்புக்கொடுத்து தகவல் வர வேண்டும்.

    2] இவ்வாறு இணைப்பு மெயில் மூலம் கொடுப்பவர்கள் அனைவரின் பதிவுக்கும் என்னால் சென்று கருத்தளிக்க விருப்பம் இருப்பினும், என்னால் அது நடைமுறையில் சாத்தியமில்லாமல் தான் உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    3] என் உடல்நிலை, என் கணினியின் உடல்நிலை, என் குடும்ப சூழ்நிலை, என் சந்தோஷமான மனநிலை, மின்சார சப்ளை, சம்சார குறுக்கீடுகள் இல்லாத சமயம், நெட் கனெக்‌ஷனின் ஒத்துழைப்பு போன்ற எவ்வளவோ காரணிகள் இதில் அடங்கியுள்ளன. மேலும்
    நாளுக்கு நாள் வலையுலகில் என் நட்பு வட்டமும் மிகப்பெரியதாக அமைந்து போய்விட்டது.

    4] இவையெல்லாம் என்னுடன் நெருங்கிப்பழகி வரும் பதிவர்கள் எல்லோருக்குமே தெரிவித்துள்ளேன். அவர்களில் பலரும் என்னை நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள்.

    இதைப்பற்றியெல்லாம் விரிவாக நான் என்னுடைய வெற்றிகரமான 200 ஆவது பதிவினில் ஓரளவு நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளேன்.

    தலைப்பு: “நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி”
    [இந்த வருடத்தில் நான் 2011 / 31.12.2011]

    இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    அதைப்போய் மிகவும் பொறுமையாக வாசித்துப்பாருங்கள். முடிந்தால் கருத்தும் கூறுங்கள். கருத்துக்கூறினால் மட்டுமே தாங்கள் முழுவதும் வாசித்துள்ளீர்கள் என என்னால் உணர முடியும். உங்களைப்போன்ற வளரப்போகும் எழுத்தாளர்களுக்கு அதில் நான் எழுதியுள்ள அனுபவங்களும், அதற்கு வந்து குவிந்துள்ள பின்னூட்டங்களும் பயன்படக்கூடும்.

    5] மேலும் உங்களிடம் எனக்கு ஒரு சின்ன வருத்தம் உண்டு. அதாவது தங்களின் முதல் பதிவுக்கு அழைப்பிதழ் கொடுத்து அனைத்துப்பதிவர்களின் பின்னூட்டப்பெட்டி மூலம் தகவல் அளித்திருந்தீர்கள். என்னையும் அதுபோல அழைத்திருந்தீர்கள். நானும் வந்து வாழ்த்தினேன்.

    அந்தத்தங்களின் 4 வரிகள் மட்டுமே உள்ள முதல் பதிவினில் இரண்டு எழுத்துப்பிழைகள் இருந்தன. அதையும் நான் மிகவும் நாசூக்காக உங்களுக்குப் புரியும் விதமாக என் பின்னூட்டம் மூலம் சுட்டிக்காட்டியிருந்தேன். நீங்கள் அதற்கு நன்றியும் கூறி, அந்தப் பிழைகளைத் திருத்தி விட்டதாகவும் பதில் கொடுத்திருந்தீர்கள்.

    ஆனால் இன்று இந்த நிமிடம் வரை அந்தப்பிழைகள் திருத்தப்படவே இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் பிறருக்கு எழுதும் பின்னூட்டங்களில், சிலசமயம் ஓர் அவசரத்தில் சில எழுத்துப்பிழைகள் தவிர்க்க முடியாமல் நேரிடும்.
    அது எனக்கும் கூட நேரிடும்.

    ஆனால் நாம் வெளியிடும் பதிவுகளில் இதுபோல பிழைகள் இருக்கவே கூடாது என்பது எனது எண்ணமும், விருப்பமும் ஆகும்.

    நம்மை அறியாமல் ஏற்படும் இத்தகைய எழுத்துப்பிழைகளை பிறர் சுட்டிக்காட்டிய பிறகாவது நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.

    அதுவும் இது தங்களின் முதல் பதிவிலேயே, அதுவும் வெளியிட்டுள்ள நான்கே நான்கு வரிகளிலேயே ஏற்பட்டுள்ளதும், சுட்டிக்காட்டியும் அதை நீங்கள் இதுவரை திருத்திக் கொள்ளாமல், மேலும் மேலும் பதிவுகள் கொடுப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும், நீங்கள் என்னை உங்கள் வலைப்பக்கம் வருகை தருமாறு வற்புருத்திக் கேட்டுக்கொள்வதால் மட்டுமே இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இருப்பினும் தங்களின் கருத்துக்கும் ஸ்பெஷல் அழைப்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    கோபு
ooooooooooooooooooo

  1. அடை சக்கை! பிரமாதம்!





















    1. கே. பி. ஜனா...January 11, 2013 5:29 AM
      அடை சக்கை! பிரமாதம்!//

      மிக்க நன்றி, சார்.

  2. சார் உங்களின் விவரமான பதில் பார்த்தேன்.என் முதல் பதிவில் உள்ள எழுத்துப்பிழையை நீங்கள் சுட்டிக்காட்டியதுமே போயி சரி பண்ணப்பார்த்தேன். யாரிடம் கேட்டுத்தெரிந்து கொள்வது என்று தெரியவில்லை. இப்ப உங்க பதில் பார்த்ததுமே போயி சரி செய்துவிட்டேன் சார். நீங்க கொடுத்திருக்கும் லிங்க் பக்கம் போய்ப்பார்க்கிறேன் சார். புதிய பதிவு எழுதும்போது அதை எப்படி உங்க மெயிலில் வர வழைக்கவேண்டும் என்று தெரியவில்லைசார்.
    புதுசுதானே. இனிமேலதான் ஒன்று ஒன்றாக தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களைபொன்ற பெரியோர்களின் வழிகாட்டல் வேண்டும் சார். எல்லாருக்குமே எல்லாமே தெரிந்திருக்காது இல்லியா? தெரியாதவைகளை கேட்டுத்தெரிந்துகொள்ள ஆர்வமாகத்தான் இருக்கிறேன் .யாரிடம் கேட்பது என்பதில் தான் சிறு குழப்பம்.என் பின்னூட்டத்தையும் மதித்து விவரமாக பதில் சொல்லியதற்கு ரொம்ப, ரொம்ப நன்றி சார்.





















    1. //புதிய பதிவு எழுதும்போது அதை எப்படி உங்க மெயிலில் வர வழைக்கவேண்டும் என்று தெரியவில்லை சார்.//

      என் மின்னஞ்சல் முகவரி: valambal@gmail.com

      கட்டாயம் ஏதும் இல்லை. விருப்பம் இருந்தால் உங்கள் புதிய வெளியீடு பற்றி தகவல் கொடுக்கவும். புதிய பதிவுக்கான LINK மட்டும் கொடுத்தால் போதுமானது.

      அன்புடன் VGK

  3. சார் நீங்க கொடுதிருந்த லிங்க் உங்க 200-வது பதிவு போயி படிச்சுப்பார்த்து பின்னூட்டமும் கொடுத்திருக்கிறேன் சார். பிரமிப்பா இருக்கு. உங்க கிட்ட நிறைய கத்துக்கணும். நன்றிகள்.















    1. //பூந்தளிர் January 11, 2013 7:54 AM//

      வாருங்கள், வணக்கம்.

      //சார் நீங்க கொடுதிருந்த லிங்க் உங்க 200-வது பதிவு போயி படிச்சுப்பார்த்து பின்னூட்டமும் கொடுத்திருக்கிறேன் சார்.//

      நன்றியம்மா. பார்த்தேன். அதனை வெளியிட்டுள்ளேன். அதற்கான பதிலும் பிறகு கொடுப்பேன்.

      //பிரமிப்பா இருக்கு. உங்க கிட்ட நிறைய கத்துக்கணும். நன்றிகள்.//

      ஏன் ... என்ன பெரிய பிரமிப்பு? நான் சாதாரணமானவன் தான். எனக்குத் தெரிந்ததை நிச்சயமாகக் கற்றுக்கொடுப்பேன்.

      அன்புடன்
      VGK


  4. ஆஹா தலைப்பே நச்னு இருக்கு..எவ்வளவு பொறுமையாக எழுதிருக்கீங்க,பாராட்டுக்கள் ஐயா!!

    //[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்; அதனால் நான் இப்போது நரகத்தில்]// ஆஹா இதை ஆன்dண்டி பார்த்தாங்களா??

    உங்கள் கைவண்ணத்தில் அடை கமகமக்குது,எனக்கும் செய்து தாருங்கள்...












    1. S.Menaga January 11, 2013 11:32 AM

      வாங்கோ Ms. S Menaga Madam, வணக்கம்.

      //ஆஹா தலைப்பே நச்னு இருக்கு..//

      சந்தோஷமம்மா.

      //எவ்வளவு பொறுமையாக எழுதிருக்கீங்க, பாராட்டுக்கள்
      ஐயா!!//

      பெண்களைப்போல அவ்வளவாக பொறுமையில்லாத ஆண்களுக்காக பிரத்யேகமாக எழுதப்பட்டது அல்லவா? அதனால் பொறுமையாக எழுத வேண்டியதாகி விட்டது.
      தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி.

      *****[என் அம்மா இப்போது சுவர்க்கத்தில்;அதனால் நான் இப்போது நரகத்தில்]*****

      //ஆஹா இதை ஆன்dண்டி பார்த்தாங்களா??//

      இல்லை. அவர்கள் என் பதிவுகள் பக்கமே வரமாட்டாங்கோ. ரொம்ப நல்லவங்க. நீங்களும் கம்முனு இருங்கோ. மாட்டி விட்டுடாதீங்கோ ... ப்ளீஸ். ;)))))

      //உங்கள் கைவண்ணத்தில் அடை கமகமக்குது, எனக்கும் செய்து தாருங்கள்...//

      என் வீட்டுக்கு ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு வாங்கோ. நிச்சயமாக செய்து தருவேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், யார் குறிப்பிடாத ஒரு விஷயத்தை கருத்தாக எடுத்துச்சொன்னதற்கும், பாராட்டி உற்சாகப்படுத்தியுள்ளதற்கும், என் மனமார்ந்த நன்றிகள்.

      அன்புடன்
      VGK

  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் சார்.

  6. faiza kader January 14, 2013 at 1:53 AM
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகள் சார் ....

    ரொம்பவும் சந்தோஷம். நன்றி. உங்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துகள்.


 








 
தொடரும்

என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

20 கருத்துகள்:

  1. அற்புதமான.. ஆச்சர்யமான தொகுப்பு.. பிரமிப்பில் நான்

    பதிலளிநீக்கு
  2. பின்னூட்டங்களின் தொகுப்பு பிரமாதம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான ரசனையான தொகுப்பு...
    சிரத்தையுடன் செய்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. //அடுத்த பதிவினில் இடம்பெறப்போகும்
    பின்னூட்டங்கள் அளித்துள்ளவர்கள்:

    திருமதிகள்: ஆசியா உமர் அவர்கள், அம்முலு அவர்கள், கீதா மதிவாணன் அவர்கள், ஜலீலா கமால் அவர்கள், அமைதிச் சாரல் அவர்கள்; திருவாளர்கள்: முனைவர் குணசீலன் அவர்கள், ஸ்ரீராம் அவர்கள், D.CHANDRAMOULI அவர்கள், எல்.கே. அவர்கள், மோஹன்ஜி அவர்கள், வாஸன் அவர்கள் மற்றும் ‘அவர்கள் உண்மைகள்’ அவர்கள்.//

    அட
    இதுவும்
    நல்ல
    டெக்னிக்தான்!

    பதிலளிநீக்கு
  5. ஆஹா, படிப்பதற்கே ரெண்டு நாளாகும்போல இருக்கே?

    பதிலளிநீக்கு
  6. சேட்டையான பின்னூட்டங்களை ரசித்தேன் ஐயா... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. ஆஹா...பொறுமையாக தொகுத்துள்ளீர்கள் ஐயா...சுவாரஸ்யம்.
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  8. 270..ஆஹா. அற்புதம். வாழ்த்துக்கள் சார்..

    பதிலளிநீக்கு
  9. அட...
    அடை பற்றிய தங்களின் இந்தப் பதிவினில் எனது பின்னூட்டமும் இருக்கின்றது.
    199-ஆவது பின்னூட்டம் என்னுது.
    200-ஆவது பதில் பின்னூட்டம் உங்களது.

    பதிலளிநீக்கு
  10. அ. முஹம்மது நிஜாமுத்தீன் March 29, 2015 at 9:27 PM

    வாருங்கள் நண்பா .... வணக்கம்.

    //அட... அடை பற்றிய தங்களின் இந்தப் பதிவினில் எனது பின்னூட்டமும் இருக்கின்றது. 199-ஆவது பின்னூட்டம் என்னுது. 200-ஆவது பதில் பின்னூட்டம் உங்களது.//

    ஆமாம். நானும் மீண்டும் இப்போது போய்ப் படித்துப்பார்த்து மகிழ்ந்தேன். நல்ல நகைச்சுவையாகவே எழுதியுள்ளீர்கள். இதோ:

    //NIZAMUDEEN January 10, 2013 at 7:39 PM

    **2-3 நிமிடங்களுக்கு நன்றாக ஓட விட்டு,**

    அப்படியே விட்டால் தெரு வாசல் தாண்டி ஓடி விட்டால் என்ன செய்வது? சிறு கயிறு, சணல், நூல் ஏதாவது கொண்டு கட்டிவிடலாமா? //

    அன்பான வருகைக்கும் அழகாக நினைவாக ஆர்வமாகச் சுட்டிக் காட்டியுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  11. ஒரு காலத்தில் சேட்டைக்காரன் கொடி கட்டிப் பறந்தார்.

    பதிலளிநீக்கு
  12. இதுபோல வித்தயாசமாக யோசித்து உங்களால மட்டும்தான் பதிவு போடமுடியும்.

    பதிலளிநீக்கு
  13. ஊக்கமளிக்கும் அருமையான கருத்துரைகளின் பகிர்வுகள்
    உற்சாகம் அளித்தன..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:41 PM

      //ஊக்கமளிக்கும் அருமையான கருத்துரைகளின் பகிர்வுகள் உற்சாகம் அளித்தன..பாராட்டுக்கள்.//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
      .

      நீக்கு
  14. படிக்கப் படிக்க சுவாரசியம்.

    மீண்டும், மீண்டும் படிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 30, 2015 at 7:05 PM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //படிக்கப் படிக்க சுவாரசியம். மீண்டும், மீண்டும் படிப்பேன்.//

      மிக்க நன்றி, ஜெயா. அப்படியே மீண்டும் மீண்டும் கொஞ்சூண்டு பின்னூட்டம் கொடுத்துக்கொண்டு, ஒரு ‘டச்’ வைத்துக்கொள்ளுங்கோ, ஜெ.

      நீக்கு
  15. எத்தர வாட்டி படிச்சிகிட்டாலும் அலுப்பே வல்லியே. மருக்கா மருக்கா படிபிச்சே இருன்னு சொல்லுது.

    பதிலளிநீக்கு
  16. எத்தனை தரம் படித்தாலும் அலுக்காத பதிவு. மீண்டும் மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  17. சிறந்த தொகுப்பு!! நடுவரும் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி..

    பதிலளிநீக்கு
  18. என்னவென்று சொல்வதம்மா! என்னை வென்று செல்லுதம்மா!

    பதிலளிநீக்கு