என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 27 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-11



என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.


அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்


இன்னமும் கழித்து கட்டாமல் இருக்கும் , வெண்கலப் பானைகளை 
(பருப்பு உருளி, பாயச உருளி, வெண்கல உருளி..), 
எடுத்து பார்க்கவேண்டும் என்று தோணிற்று.

உணவு வகைகளை ருசித்து சாப்பிட முடிவதே ஓர் வரம்.

அப்படி சாப்பிடுபவர்களுக்கு , ருசியாக சமைத்து பறிமாற விரும்பும் 
குடும்பத்து பெண்கள் அமைந்த இல்லம் , சொர்க்கமே.


நீங்கள் விவரித்தாற் போல், எல்லா விதமான அடுப்புகளிலும், நிதானமாக , 

செய்த சமையல் பண்டங்களின் சுவை பற்றி , அதிகம் யாரும் கவலைப்படுவதில்லை. 
ஒரே குக்கரில் எல்லாவற்றையும் , சேர்த்து வேக வைத்து, பர பரவென்று, முடித்து, 
சமயலறையிலிருந்து, மீள வேண்டும், என்ற அவசரத்தில் செய்யும் பண்டங்கள், 
சுவை ...மட்டமே.

இப்போதெல்லாம், சமையல் அறைகளை நவீனமாக கட்டி விட்டு, 

அது அழுக்காகக் கூடாது என்று, சொற்ப சமையல் செய்வது , பேஷன் ஆகி விட்டது.

எனக்கு தெரிந்த ஒருவர் வீட்டில்,நான்கு நாட்கள் நங்கவேண்டிய கட்டாயம். 

மிக பணக்கார குடும்பம், இருவரும் டாப் ப்ரொபெஷனல்ஸ், பள பள. 
ஆனால், தங்கி இருந்த எங்களுக்கு , என்ன உணவு கொடுப்பது என்பதே அவர்களுக்கு டென்ஷன். 
என்னையே , ஏதாவது தயார் செய்யுங்கள் என்று வேண்டினார்கள். 
அந்த பள பள , அல்ட்ரா மாடர்ன் , உபகரணங்களை ,பயன்படுத்தி , 
நான் செய்ய வேண்டிய கட்டாயம். 

அந்த பெண்மணி, என் கூடவே இருந்து , ஏதாவது சிந்தி விடக்கூடாது என்று, கவலைப்பட்டார்கள்.! 
அந்த டென்ஷனில், இனிமேல் செய்ய கூடாது என்று, மறுவேளையில் இருந்து , 
ஓட்டல் சாப்பாடு வாங்கி , சமாளித்தோம்.


பதிவில் குறிப்பிட்டுள்ள, காய்கறிகள், வடாம் வகைகளை , 

சுவைத்த நினைவுகள்,அவைகளை நானே தயாரித்த காலம், எல்லாம் 'Nostalgic" Sir!

இப்போதெல்லாம் செய்தாலும் சாப்பிட , யாருக்கும் தைரியமில்லை. ;-).

சமையலை ஒரு கலை என்ற கண்ணோட்டத்தோடு, செய்தால் , சுவை கூடுகிறது.

உங்கள் பதிவுகளில், நான் மிகவும் ரசித்தவைகளில், இதுவும் ஒன்று. எனக்கு பிடித்த டாபிக்.

பின்னூட்டம் நீளுகிறது, நிற்க!.

நமஸ்காரம்.



உங்கள் பதிவு படிக்கும் போது கூடவே பின்னூட்டங்களும் படித்துக்கொண்டே 
எதற்கு வந்தோம் என்பதே ஞாபகம் வரும்போது
கூடவே எழுந்து போகும்படி ஏதாவது அவசியம். 

இப்படியே கண்ணாமூச்சி விளையாட்டுதான். 

இப்படி ஒரு பதிவை எப்படி இவ்வளவு கோர்வையாக, ஸ்வாரஸ்யமாக எழுதியிருக்கிறீர்கள்
என்று மலைப்பு தட்டுகிறது.

இரண்டாவது திருச்சி,மாயவரம்,கும்பகோணம் என்ற காவிரிக்கரை
வாசிகளுக்குத்தான் இவ்வளவு, பக்குவமும்,பாங்கும், பழையன இருத்தலும்.முடியும்.

இப்போ எதுவும் சாப்பிட முடியாவிட்டாலும், நினைத்தாலே
ருசிக்கிரது, கூடவே மணக்கிறது. சாப்பிட்ட திருப்தியும் உண்டாகிரது.

சாப்பிடும்போது பக்கத்தில்,கிண்ணத்தில் உருக்கின நெய் கரண்டி-
-முட்டையுடன் இருக்க வேண்டும் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்.

எங்கப்பா இப்படித்தான் இருந்தார். காவேரி வாஸராக இருந்தவர்.
எனக்கு நீங்கள் லிங்க் கொடுத்ததால் இவ்வளவாவது எழுத முடிந்தது. 
அருமையிலும் அருமையான பதிவு. 

யாராவது கூப்பிட்டால் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரலாம்போலுள்ளது.
மானஸீகமாகத்தான்.


மிகவும் அருமையான நடை. 

கதையை விட்டு கொஞ்சமும் வெளிவர முடியாதபடி செய்துவிட்டது. நன்றி ஐயா

இந்த பகுதி மிகவும் அருமையாக இருந்தது. 

என்னுடைய மனோதத்துவ சிந்தனைகள் நிறைய ஆச்சரியங்களை கிளப்பிவிட்டன. 

சில விசயங்களை நியாயப்படுத்திக் கொள்ள முடிகிறது. நன்றி சார்.

இது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது. 

கதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.

நடை பயணம் சென்று எடை குறைந்தோர் சிலரே, காரணம் இப்போது புரிகிறது சார். 

கடை இருக்கும் வீதியில் நடை கொண்டு எடை குறைப்பது இயலாத காரியம். 

எனக்கென்னவோ ரூட் இதற்காகவே போடப்பட்டதாய் தோன்றுகிறது. 

நகைச்சுவை இழையோடும் எழுத்து நடை எடை கூடிவிடுகிறது.

நம்முடைய சில சங்கல்பங்களுக்கு பின்னே சற்றும் சம்பந்தமில்லாத மனிதர்கள் தூண்டுகோலாக இருப்பார்கள். 

அது போன்ற வினாடிகளை நாம் யாருக்காவது தோற்றுவித்திருந்தால் வாழ்க்கையின் அர்த்தம் அதுதான். 

இதுதான் இந்த கதை எனக்கு சொன்ன நீதி. நன்றி சார்.

நகை வியாபாரம் , கத்திரிக்காய் வியாபாரமாகிவிட்டது. 

இரண்டு கிராம் என்றாலே பார்வை மாறிவிடுமே. 

அருமையான நடை கதாபாத்திரத்தை உணர வைக்கிறது.

எனக்கென்னவோ இந்த கதை rightல சிக்னல் கொடுத்து leftல திரும்புகின்ற மாதிரி 

முடிவு சொல்லப்போகுது என்று தோன்றுகிறது சார்.

கதையல்ல அறிவுரை. 

நம்மிடம் நேர்மையான மனம் இருந்தால் தீமை செய்பவன் சொல்வதுகூட நல்லதாகிவிடும். 

இதுபோல நிறைய பேர் சொல்வது ஒன்று நோக்கம் வேறாக திரிகின்றனர். நன்றி சார்.

இது போன்ற வாழ்வியல் கதைகள் சொல்லும் விசயம் ஒன்றுதான், 

ஒவ்வொரு உயிருக்கும் முடிந்தவரை வாழ உரிமை உண்டு. விருப்பமும் உண்டு. 

அதை நாம் கெடுக்காமல் இருந்தால் போதும். நன்றி சார்.

வயதான காலத்தில்தான் துணை தேவை. 

உண்மையான கருத்து சார். 

பாட்டிகள்கூட சமாளித்துக் கொள்கிறார்கள் தாத்தாக்கள்தான் பாவம். 

முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு பெரியவரும் இதைத்தான் சொன்னார்.

வயதாகிறது என்பது ஒரு transformation . 

அந்த மாற்றத்தினை ஏற்றுக்கொண்டு ஒரு நதிபோல 

கடலில் கலக்கும்வரை ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். 

ஒப்புக்கொள்ளாத பலர் தேங்கிவிடுகிறார்கள். 

தங்களின் கைவண்ணத்தில் இந்த கதை முதியோர்களின் உளவியல் பிரச்சினையை சுட்டுகிறது சார்.

நாத்தனார்களுக்கு ஒரு பயம் இருக்கும்போல , பிறந்த வீட்டில் மரியாதை குறைந்துவிடும் என்று. 

அதுதான், இந்த அல்லி தர்பார் போல. 

இது சகஜமான வார்த்தைகளில் கதை முழுக்க வெளிப்படுகிறது. நன்றி சார்.

ஏற்கனவே பார்த்திருந்தால்கூட மறந்திருப்போம். 

கடைசிவரைக்கும் தெரியவில்லை என்று காட்டிக்கொள்ளமலே கட்த்திவிடுவோம். 

சமயத்தில் நம்மை யார் என்று நினைவு படுத்திக்கொள்ளாதவர்முன் வேற்று கிரகவாசி போல் நின்றிருப்போம்.

நகைச்சுவையுடன் நீங்கள் விவரிக்கும் அழகில், நான் அசடு வழிந்த கதைகள் 

எல்லாம் நினைவிற்கு வந்துவிட்டன சார். தொடர்ந்து வருகிறேன் நன்றி சார்.
http://gopu1949.blogspot.in/2011/06/1-of-4.html




  1. மன்னிக்கவும் VGK சார். வடிகால் பகுதியை நான் நேற்றே படித்துவிட்டேன் - 
  2. அலைபேசி உதவியுடன் படித்ததால் உடனேயே கருத்துகூற முடியவில்லை. 
  3. வயதானவர்களின் எதிர்பார்ப்புக்களை பிரதிபலிக்கும் உண்மையான கதை சார். 
  4. இதை முதியோர் இல்லத்திலிருக்கும் ஒரு பெரியவரும் ஒப்புக் கொண்டார். 
  5. அவர் கூறியது -" வயதாகிறது என்பதை நாம் ஒப்புக் கொள்ளும் முன்பே 
  6. நம்மை சுற்றியுள்ளவர்கள் உணர்ந்துவிடுகிறார்கள். 
  7. குடும்பத்தினருடன் நமக்கு பேச நிறைய விசயம் இருப்பதை உணரும்போது நமக்கு வயதாகிவிட்டது என்று புரிகிறது. 
  8. ஆனால், நம்முடன் பேச அவர்களுக்கு நேரமில்லை. 
  9. நமக்காக உருவாக்கினாலும் ஆறாவது விரல் போல் ஒட்டாமல் - சங்கடமாக இருக்கிறது. 
  10. இங்கே பேசவும் சிரிக்கவும் ஆறுதல் கூறவும் நிறைய இருக்கின்றனர். 
  11. முடிந்தபோது வீட்டிற்கு சென்று பார்த்து வருகிறேன்." 
  12. அவரிடம் விருப்பு வெறுப்பு எதுவும் இல்லை சார். 
  13. ஒரு அலை கடமையாக கரைக்கு வந்து திரும்புவதைப்போல வாழ்க்கையை எடுத்துக் கொள்கின்றார். 
  14. நம்மைப் போன்றவர்கள் சென்று பேசினால் ஆர்வமாக பேசுகிறார்கள். 
  15. அதுவே ஒரு திருப்தியாக சில சமயம் அமைந்துவிடுகிறது. 
  16. இதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று தோன்றியது நன்றி சார்.
  1. இன்னும் ஒன்று சார். 
  2. இதுபோல முதியோர் இல்லம் செல்வதை ஆண்கள்தான் விரும்புகின்றனர். 
  3. பெண்கள் விரும்புவதில்லை. 
  4. முதியோர் இல்லத்தை எதிர்ப்பதைவிட அதை value addedஆக செய்ய முயற்சிக்கலாமா என்றுகூட தோன்றுகிறது.
  5. நான் முதியோர் இல்லத்தை ஆதரிப்பதாக தவறாக எண்ண வேண்டாம், சார். 
    http://gopu1949.blogspot.in/2011/06/4-of-4.html
  6. முதியோர் பற்றி நான் ஏற்கன்வே எழுதிய கட்டுரையை முடிந்தால் சென்று பாருங்கள். http://mahizhampoosaram.blogspot.com/2011/01/blog-post_20.html
  1. புரிந்து கொள்ளுதல்கள் உறவுகளை வலுவாக்கும் உரம். 
  2. கவுத்திட்டதா சொல்லுவாங்களே அது இதுதானா? நல்ல கதை VGK சார்.
  3. அனுபவ கருத்துக்கள் ஆங்காங்கே அழகாய் தெளிக்கப்பட்டிருக்கிறன.... 
  4. கதைக்கும் மேலே சில விசயங்களை அழுந்தச் சொல்கிறது. நன்றி VGK சார்.
  5.  
  6. //பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் 

ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், 

அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள். //

அருமையான வர்ணனை.


கதை மிக அருமையா வருகிறது .தொடருங்கள் .




முடிச்சிட்டீங்க அண்ணா.. அஞ்சலைக்கும் தினம் மகனை பார்த்த திருப்தி..

மல்லிகாவிற்கும் குழந்தை ஏக்கம் தீர்ந்து விட்டது.

அஞ்சலையின் தாய் பாசம் அதை வெளியே சொல்ல முடியாமல் அவள் படும் அவஸ்தை,

அழகா எழுத்தில வடிச்சிரிக்கீங்க அண்ணா..

கதை ஆறுதல் பரிசு பெற்றதிற்கு பாராட்டுக்கள் அண்ணா..!
http://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html



கதையின் முடிவை ஒரு எதிர்பார்ப்போடு கொண்டு போய் 

ரொம்ப அருமையா முடிசிட்டீங்க..
http://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html
    பர்சை காலி பண்ணுவதில் குறியாக இருக்கும் மனைவிகள்தான் இக்காலத்தில் அதிகம். 

    அந்த வகையில் அண்ணன் ரெம்ப ரெம்ம்..ப கொடுத்து வைத்தவர்தான்.. 

    இல்லைன்னா இப்படி சிந்தனை கதை, நகைசுவை கதையா எழுத முடியுமா.. 

    அண்ணியும் நல்ல அதிஷ்ட சாலிதான். 

    மாமனார் வாங்கும் சுரிதார்க்கு சொந்தமாகும் மருமகளும் அதிஷ்டசாலிதான்.:)

    நேர்ல பார்த்த மாதிரி கதைய கொண்டு போறீங்க..

    கதையின் வரிகளில் உங்கள் பேச்சு, மூச்சு, சிந்தனை அனைத்திலும் 

    நகைச்சுவை தெரிகிறது அண்ணா.

    சுடிதார் வாங்க போன அனுபவம் நல்ல நகைசுவையா ரசனையோட சொல்லி இருக்கீங்க அண்ணா. 

    ரசித்து படித்தேன் . சின்ன சின்ன ஆசை.. சில சமயம் நிராசையா போயிடுது ..


    மிகுந்த சந்தோஷம். :) 

    மேலும் மேலும் வெற்றி குவிய இறைவனை வேண்டுகிறேன்.

    அன்புடன், ஷக்தி


    ஆஹா.............. அப்படியே ஆத்தோடு அடிச்சுக்கிட்டுப் 

    போறதுபோல் நடை அட்டகாசம்.

    மிகவும் ரசித்தேன். 

    மீண்டும் படித்தேன் ரசித்தேன்.

    இனிய பாராட்டுகள்.

    சூப்பர் போங்க!!!!! 

    உங்க மருமகள் கொடுத்து வச்சவுங்க.



    கால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, 

    போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் 

    பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ 

    என்ற விசாரத்துடன்,/// 

    இதைப் படித்தவுடன் அடக்கமுடியாமல் சிரித்தேன் கோபால் சார்..:))

    Getting small gifts for the jewel purchase or clothes purchase is a very big thing back home. 

    We are all very silly, we all want to grab it because some thing is offered free to us. 

    When we can buy some thing expensive for Rs.10000 we can surely 

    afford to buy 300 rs suitcase by ourselves, but it is human tendency 

    not to give up on those small gifts... intresting...

    When we think good for others, 

    only good things will happen for us... 

    nice story...

    Thanks a lot sir for sharing it with us...





    வாவ்.... சூப்பர் முடிவு... 

    எல்லாரும் இப்படி உறவுக்கு முக்கியத்துவம் குடுத்து அனுசரித்து வாழ பழகி கொண்டால் 

    எல்லாம் இன்ப மயமே...;)
      http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html



      கதையின் முடிவும் ஐஸ்கிரிம் சாப்பிட்டது மாதிரி 

      ஜில்லுன்னு இருக்கு கோபால் சார்.. 

      நான் வலைபதிவுக்கு புதியவள்.

      எனக்கும் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசை. 

      உங்களைமாதிரி பெரியவர்களின் ஆசிர்வாதங்கள் தேவை.
      http://gopu1949.blogspot.in/2011/06/2-of-2.html






      முதல் இரண்டு பத்திகளுக்கும்

      கடைசி இரண்டு பத்திகளுக்கும் தான்


      எத்தனை முரண். மிக அழகாக


      மிக அழகான கதை சொல்லியிருக்கிறீர்கள்.

      வாழ்த்துக்கள்

      எலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து
      சொல்லிப் போவது மிக அருமை.

      மொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும்
      மிக இயல்பாக கலந்து கொள்வதால்
      தொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது.

      நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

      லஞ்சுக்குள் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டு
      அவசர வேலையாக சென்று விட்டஸ்ரீ மான் வ.வ.ஸ்ரீயை
      அரசு அலுவலங்களில் ஓய்வு பெரும் வயதில்
      இடை நிலைப் பணிகளில் பணியாற்றும்
      அதிகாரிகளின் ஒட்டுமொத்த பிரதி நிதிபோல
      மிக அழகாகச் சித்தரித்துப் போகிறீர்கள்.

      தொடர் மிகச் சிறப்பாகப் போகிறது.

      தொடர வாழ்த்துக்கள்

      புள்ளி வைத்து போடப்படுகிற
      அழகான கோலம் போல
      தாங்கள் பொடிவைத்துப்போட்ட பதிவு
      உண்மையில் அருமையிலும் அருமை.

      வல்லவன் கையில் புல் மட்டுமா ஆயுதம்
      ஒரு சிட்டிகை பொடி கூட பேராயுதமே என
      இப்பதிவின் மூலம் நிரூபித்துள்ளீர்கள்.
      நல்ல பதிவு. தொடர வாழ்த்துக்கள்.

      தங்களுடைய பதிவை மிகவும் ரசித்துப் படித்தேன்.
      தங்கள் விவரிக்கிற முறையைக் கொண்டு
      தாங்கள் எழுதவேண்டியவைகளும்
      நாங்கள் ரசித்துப் படிக்கவேண்டியவைகளும்
      இன்னும் ஏராளம் உள்ளது எனத் தெரிந்து கொண்டேன்.
      தொடர்ந்து தாங்கள் நிறைவான வாழ்வு வாழவும்
      தொடர்ந்து விரிவான பதிவுகள் தரவும் வேண்டும் 

      என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.

      யாதோவை மிகச் சரியாக புரிந்து
      தங்கள் பாணியில் எழுதப்பட்ட
      மிகச் சிறந்த படைப்பு.
      தொடர வாழ்த்துக்கள்

      வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில்
      எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம்
      நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது..
      சிலர் ஜெயித்த நிலையிலும்
      சிலர் தோற்ற நிலையிலும்
      அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்..
      அது தெரிந்து என்ன ஆகப் போகிறது ..
      இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி
      காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது.
      கதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும்
      நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை

      கதையை துவங்கிய விதமும் தொடர்ந்த விதமும்
      முடித்த விதமும் அருமை.
      இறுதி ட்விஸ்ட் மிக மிக அருமை.
      எதிர்பார்த்து இருந்தபடி பெரியவர் ஏமாந்திருந்தால்
      ரொம்ப சங்கடப்பட்டிருப்போம்.
      நல்ல பதிவு அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

      வழக்கம்போல் கதாபாத்திரங்களின் அறிமுகமும்

      சூழலை விவரித்துள்ள விதமும் அருமை.

      என்னால் மனக்கண்ணில் இடத்தையும்
      கதாபாத்திரங்களையும் உணர முடிகிறது.
      எழுத்தாளரின் வெற்றி என்பது அதுதானே!

      யதார்த்தமான கதை.
      எளிமையான நடை.
      மனத்திற்குள் ஒரு
      நெருடலை ஏற்படுத்திப்போகும் முடிவு.
      மொத்தத்தில் சூப்பர் பதிவு.
      தொடர வாழ்த்துக்கள்

      //கனவு ஞாபகம் ...
      அவர்களையும் எழுப்பி குழப்ப விரும்பவில்லை//

      எங்கோ பார்த்ததை அங்க அடையாளங்களுடன் 

      விசாரிப்பதை சொல்லிச்செல்லும் விதம் ....

      ஆங்காங்கே இயல்பாக நகைச் சுவை இழையோட 

      எழுதியுள்ளதை திரும்பத் திரும்ப வாசித்தேன்.

      நல்ல பதிவு.  தொடர வாழ்த்துக்கள்.

      நீங்கள் புடவைகளை வர்ணிக்கிற விதம் கண்டு
      அசந்து போனேன்.

      எந்த கதையானாலும் அந்த சூழலை
      மிகச் சரியாக கண்முன் கொண்டுவந்து
      நிறுத்திவிடுகிறீர்கள்.

      நல்ல துவக்கம்.

      (எங்களுக்கும் எடுத்த புடவை மற்றும்
      டிசைன் பிடிக்காமல் எந்த பிரச்சனையும்
      வந்துவிடக்கூடாதே என்கிற பயம்
      இப்போதே வந்துவிட்டது)

      ஐம்பதாவது பதிவும் அதற்கான முன்னுரையும்
      மிக அருமை.


      உண்மையில் தங்கள் பதிவுக்குள் வரும்போதும் சரி 

      படித்து முடித்து வெளியேறும் போதும் சரி

      மனதிற்குள் ஒரு இனம் புரியாத மகிழ்வும்

      சந்தோஷமும் பெருகி வழிகிறது.

      அதற்கு தங்கள் எழுத்துத் திறமை மட்டும்
      காரணமாய் இருக்கமுடியாது.

      தங்களிடம் இயல்பாக அனைவரையும்
      மகிழ்வித்துப் பார்கவேண்டும் என்கிற அவாவும்
      அடி நாதமாய் இல்லையெனில் இவ்வளவு
      சிறப்பாக எழுத்து அமையாது.

      நல்ல பதிவு.
      தொடர வாழ்த்துக்கள்.

      "பொடி " விஷயம் என நினைத்தது

      எவ்வளவு தவறு என உங்கள்

      பொடித்தயாரிப்பு விளக்கங்களைப்
      படித்த பின்புதான் தெரிந்தது.

      பொடித் தயாரிப்பு மட்டும் இல்லை ....
      பதிவுக்காகவும் எவ்வளவு தெரிந்து கொண்டு
      எழுதவேண்டியுள்ளது!

      அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

      அழகாக இயல்பாகச் செல்கிறது கதை.

      ஆனாலும் இடைவேளை என
      குழந்தை கைமாறும் இடத்தை
      விரிவாகச் சொல்லாமல்
      மறைத்துச் சென்றுள்ளதில்
      ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தை
      தவிர்க்க இயலவில்லை.

      அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

      தங்குதடைகளற்ற ஆற்று நீரோட்டம்போல
      தெளிவான நடைமட்டும் அல்ல கதையும் கூட.
      நல்ல கதையைப் படித்த நிறைவு.
      தொடர வாழ்த்துக்கள்

      போகிற போக்கில் கொஞ்சம் கை நனைத்து

      போகிற போக்கைப் பார்த்தால்


      நடையால் எடைக்குறைப்பு


      நடக்கிற சாத்தியமாகப் படவில்லை.


      ஆனாலும் உங்கள் எழுத்து நடை
      எங்களை நன்றாக ரசித்து சிரிக்க வைப்பதால்
      எங்கள் எடை (மனச்சுமை) நிச்சயம்
      குறைந்துவிடும் என நினைக்கிறேன்
      நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

      அருமை அருமை

      இப்படித்தான் வாழ்வில் ஏதோ ஒரு நொடியில்
      அல்லது ஏதோ ஒரு நிகழ்வில்
      நம்முடன் தொடர்புகொண்டவர்கள்
      நம்மிடம் மிகப் பெரிய பாதிப்பை
      ஏற்படுத்திப் போய்விடுகிறார்கள்.

      மனிதர்கள் மட்டும் அல்ல ....
      சில படைப்புகளும் கூட !
      தரமான பதிவு.
      தொடர வாழ்த்துக்கள்

      மிக மிக அருமை.
      இன்றைய காலகட்டத்தில் உள்ள
      பரவலான ஒரு பிரச்சனையை
      கதை கருவாகக் கொண்டு
      சிறுகதையின் எல்லை மீறாமல் அதை தெளிவாக
      ரசிக்கும்படியாக சொல்லிவிட்டு
      (அதிகம் பிரச்சாரம் இல்லாமல்
      சொல்லி முடித்துவிட்டு)
      பின்னால் இத்துடன் இது முடியவில்லை
      "அப்ப நீங்க " என்பது போல்
      தனியாக அது குறித்து அக்குவேறாக
      ஆணிவேறாக அலசி இருப்பது
      என்னை மிகவும் கவர்ந்தது.

      இதை ஒரு பரிசோதனை முயற்சி
      எனக்கூடச் சொல்லலாம்.

      மனங்கவர்ந்த பதிவு

      தொடர வாழ்த்துக்கள்



      அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

      பட்டியல் எண்: 4  .... 60 GENTS
      http://gopu1949.blogspot.in/2015/03/4.html

      பட்டியல் எண்: 5 .... 70 LADIES
      http://gopu1949.blogspot.in/2015/03/5.html 


      அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சம் வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

      பட்டியல் எண்: 7 ....  50 LADIES
      http://gopu1949.blogspot.in/2015/03/7.html

      பட்டியல் எண்: 8  ....  40 GENTS
      http://gopu1949.blogspot.in/2015/03/8.html


      இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  





      பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

      இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

      பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

      என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

      எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

      10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
      அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

      11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
      அதாவது 220 பதிவுகள்.

      41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
      அதாவது 367 பதிவுகள்.

      50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
      அதாவது 126 பதிவுகள். 

      பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

      1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

      2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

      3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

      4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

      5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

      என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

      இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

      இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.







      பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
       பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:
      பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:
      http://gopu1949.blogspot.in/2015/03/9.html
      பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:





      பின்னூட்ட எண்ணிக்கைகளில்
      பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
      இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

      பட்டியல் எண்: 11 
      பின்னூட்ட எண்ணிக்கை : 226

      My 12th AWARD 
      FOR THE YEAR 2012
      WHICH IN TURN, I HAVE SHARED IT WITH 
      108 BLOG FRIENDS
      WITH THEIR NAMES, PROFILE PHOTOS
      BLOG NAME + BLOG ID 

      TOTAL NUMBER OF COMMENTS : 226









      இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 226 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்தையும், அதன் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனியே காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.

      COMMENT  Nos: 198 to 226





      1. MAIL MESSAGE:

        பன்னீர்செல்வம் மகேந்திரன்
        pmkv2002@gmail.com
        30 Aug (2 days ago) to me

        அன்புநிறை வை.கோ ஐயா...

        முதலில் தாமதத்திற்கு மன்னிப்பு கோருகிறேன்...

        விடுமுறையில் இந்தியா வந்திருப்பதால் என்னால்
        வலைப்பக்கம் வர முடியவில்லை ஐயா..

        வந்து பார்த்தால் தங்கள் கையால் எனக்கு இரண்டு விருதுகள்...
        என்ன பேறு பெற்றேன் ஐயா...

        என் மகிழ்ச்சியை அளவிட அளவு முறைகளே இல்லை ஐயா...

        என்றும் என்றென்றும் தங்களின் அன்பிற்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா...

        அன்பன்
        மகேந்திரன்




        1. வாருங்கள் வசந்த மண்டபம் திரு.பன்னீர்செல்வம் மகேந்திரன் அவர்களே! வணக்கம்.

          மின்னஞ்சல் மூலம், தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

          அன்புடன்,
          vgk

      2. This comment has been removed by the author.

      3. This comment has been removed by the author.



      1. This comment has been removed by the author.















        1. வந்தனோபசார இனிய மகிழ்ச்சியான வாழ்த்துகள்... க்கு
          மிக்க நன்றிங்கோ !

      2. This comment has been removed by the author.















        1. அஷ்டோத்ரம் என்ன .....

          சஹஸ்ரநாம அர்ச்சனையே செய்யத் தயாராகத் தானே இருந்தேன் / இன்னும் இருக்கிறேன்.

          ஏனோ ஏற்க மறுத்து விடுகிறார்கள், என் அம்பாள்.

          நான் என்ன செய்ய?

          இங்கு வந்து மீண்டும் இனிய வாழ்த்துகள் அளித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

          ...........
          ...



      3. அன்பின் வை.கோ

        தாங்கள் என்னை விட மூத்தவராக இருந்தும் நான் தங்களை வை.கோ என அன்புடன் அழைப்பது - அனைத்துப் பதிவர்களையும் ஒரே மாதிரி அழைக்கும் எனது பழக்கத்தின் அடிப்படையில் தான்.

        ஆனால் நீங்களோ உங்கள் வழக்கப் படி சீனா அய்யா என அழைக்கிறீர்கள். இனிமேல் நானும் வை.கோ அய்யா என அழைக்கட்டுமா ?

        விருது வழங்குவதில் புதுமை படைத்த வை.கோ - 108 பதிவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் படம், பெயர், வலைத்தள முகவரி, என அறிமுகப் படுத்து விருது வழங்கியமை - தங்களின் பெருந்தன்மையினையையும் - கடும் உழைப்பினையும் வெளிப் படுத்துகிறது.

        தங்களுக்கு விருது வழங்கியவருக்கு தாங்கள் தெரிவித்த நன்றியும் படங்களும் சிறப்பானவை.

        நீண்ட பதிவுகள் இடுவதும் - அழகிய படங்கள் இணைப்பதும் - தங்களூக்குக் கை வந்த கலை.

        விருது அளித்தமைக்கு நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

        நல்வாழ்த்துகள் வை.கோ
        நட்புடன் சீனா















        1. அன்பின் சீனா ஐயா, வாருங்கள், வணக்கம்.

          //தாங்கள் என்னை விட மூத்தவராக இருந்தும்//

          அப்படியா ... மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
          என் பிறந்த தேதி 08..12..1949 [62 முடிந்து 63 ஓடுகிறது]
          உடல்வாகிலும், உருவத்திலும் மட்டுமே ஒருவேளை நான் தங்களைவிட பெரியவனாக இருப்பேனோ என்னவோ! ;)))))

          //நான் தங்களை வை.கோ என அன்புடன் அழைப்பது - அனைத்துப் பதிவர்களையும் ஒரே மாதிரி அழைக்கும் எனது பழக்கத்தின் அடிப்படையில் தான்.//

          மிகவும் மகிழ்ச்சி தான் ஐயா. தாங்கள் எப்போதும் போல தங்களின் வழக்கப்படி அவ்வாறே என்னை அழைத்துக் கொள்ளலாம்.

          அதில் ஓர் அன்பும், பிரியமும், அந்நோன்யமும் கலந்துள்ளதை நான் அறிவேன்.

          //இனிமேல் நானும் வை.கோ அய்யா என அழைக்கட்டுமா?//

          வேண்டாம் ஐயா. வழக்கத்தினை மாற்ற வேண்டாமே ஐயா.

          //விருது அளித்தமைக்கு நன்றிகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.//

          தங்களின் அன்பான வருகையும், அழகான விரிவான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்விக்கிறது.

          விருதினை ஏற்று சிறப்பித்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

          அன்புடன்
          VGK

      4. தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.















        1. வாருங்கள் Ms. ஆர்.வி.ராஜி அவர்களே! வணக்கம்.

          தங்களின் அன்பான முதல் வருகையும், அழகான மனமார்ந்த வாழ்த்துகளும் எனக்கு என் மனதில் “எண்ணங்கள் ஆயிரம்” என்பதை நினைவு படுத்துகிறது. அது சரியா? ;)))))

          அன்புடன்
          VGK
      5. மிக்க நன்றி சார்.உங்கள் நல்ல உள்ளத்தின் பின் நாங்கள் எல்லாம் எம்மாத்திரம். ஆறு வாரங்கள் விடுமுறையில் நின்ற காரணத்தினால் எதுவுமே பார்க்க முடியவில்லை . மிக்க நன்றி சார். விருது பெற்ற மற்றைய எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துகள். உங்கள் இனிப்புகள் பார்க்கும் போதே வாய் ஊறுகின்றது















        1. வாருங்கள் Mrs. சந்திரகெளரி Madam, அன்பான வணக்கங்கள்.

          தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துகளுக்கும், பகிர்ந்து கொண்ட விருதினை ஏற்றுக்கொண்டு சிறப்பித்துள்ளதற்கும், எழுத்தாளர்கள் அனைவரையும் வாழ்த்தியுள்ளதற்கும், இனிப்புகளைப்பற்றி இனிமையாகக் கூறியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

          அன்புடன்,
          vgk

      6. Dear Gopu sir.. I am exptremly sorry for the late reply i am doing here.. My heartfull thanks, thanks, thanks 1000 thanks for supporting fellow bloggers a lot.. Though i am late.. this award is soo special to me sir.. Thank you ooooooo much... regards- Riya















        1. My Dear Riya,

          Welcome! How are you? How is your New Project?

          Thanks for your kind visit here and sharing this award with me. So s w e e t and I am also very Happy for your 1000 thanks.

          Please note that I have shared 3 awards with you.

          The other 2 are in the following Links:

          http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html [Sl. No. 43]

          http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-20 [Sl. No. 35]

          This is just for your information, only.

          OK Riya .... Thanks a Lot.

          Yours,
          VGK
      7. After seeing an enlarge picture of my profile in this post I thought I should change it :) But belive me I am not as old as the lady in my new profile :))))).
        Thank you Sir for always giving encouraging comments in my blog...















        1. Welcome Ms. LATHA Madam,

          I am very very happy to see you again here.

          The old emblem so far shown in your profile itself, was so cute and also beautiful only. Because it is your own hand made talented item .... Is it not?

          The new one you have changed / created, now,
          is also Very Nice.

          The new one looks like a "Thanjavur Head Shaking Doll" to me.

          என் பார்வைக்கு அதுவும் “தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை” போல மிகவும் அழகாகவே உள்ளது.

          என் மனமார்ந்த சந்தோஷங்களும் நன்றிகளும். ;)))))

          என்றும் அன்புடன்
          VGK
      8. போலி டாக்டர்களை நம்பி எந்தவொரு சிகித்சையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.


        பணம் அதிகம் செலவானாலும், நல்ல ஒரிஜினல் டாக்டரிடம் போய் பல்லைக் காட்டுங்கள் ..... ஹி ஹி .. ஹி .. என்ன நான் சொல்லுவது, புரிகிறதா?



        பணம் இன்று போகும் !
        நாளை வரும் !!

        இதற்கு உண்டான லின்க் எடுத்து தாங்க லேபிள் போட்டு வைத்திருந்தீன்கன்னா தேட இலகுவாக இருந்திருக்கும் கொஞ்சம் சீக்கீரம்
        jaleela1970@gmail.com anuppungka















        1. To Mrs. Jaleela Kamal Madam,

          தாங்கள் கேட்டிருந்த் லிங்க் இதோ:


          தலைப்பு:

          பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?

          http://gopu1949.blogspot.in/2011/08/blog-post_07.html பகுதி-1

          http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2.html பகுதி-2

          அன்புடன்
          VGK
      9. Its been sometime since I heard from you .Hope everything is ok. Really miss your comments. Sorry if I am troubling you on your busy schedule. Take care.















        1. latha September 26, 2012 1:24 PM

          //Its been sometime since I heard from you .Hope everything is ok. Really miss your comments. Sorry if I am troubling you on your busy schedule. Take care.//

          Welcome Ms. LATHA Madam. Thanks for your repeated arrival here.

          I have given you a separate mail today [27th]. Please go through the same.

          With kind regards & Best Wishes....

          GOPU
      10. இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள் .
        டஜன் கணக்கில் விருதுகள் பெற்று
        நூற்றுக்கணக்கில் விருதுகள் அளித்து
        விருதுகளுக்குப் பெருமைகள் சேர்த்ததற்குப்
        பாராட்டுக்கள்..

        உற்சாக வாழ்த்துகள்..















        1. //இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 12:22 AM

          இந்த 2012 என்ற ஆண்டில் அளிக்கப்பட்டுள்ள 12 ஆவது விருதுக்கு வாழ்த்துகள்.

          டஜன் கணக்கில் விருதுகள் பெற்று நூற்றுக்கணக்கில் விருதுகள் அளித்து விருதுகளுக்குப் பெருமைகள் சேர்த்ததற்குப்
          பாராட்டுக்கள்..

          உற்சாக வாழ்த்துகள்..//

          தங்களின் அன்பான வருகை + பாராட்டுக்கள் + வாழ்த்துகள் + விருதினை ஏற்று சிறப்பித்துள்ளது + அனைவர் தளத்திற்கும் ஓடோடிச் சென்று தகவல் அளித்தது ஆகிய அனைத்துக்கும்
          என் மனமர்ந்த நன்றிகள்.
      11. பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்...

      12. விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..















        1. இராஜராஜேஸ்வரி January 29, 2013 at 10:11 PM

          //பன்னிரண்டாவது விருதுக்கு இனிய வாழ்த்துகள்...//

          மிகவும் சந்தோஷம். மிக்க நன்றீங்க !

          -=-=-=-=-=-

          இராஜராஜேஸ்வரிJanuary 29, 2013 at 10:11 PM

          //விருதுபெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்..//

          மிகவும் மகிழ்ச்சி + நன்றிகள்.
      13. ஒரே ஆண்டில் 12 விருதுகள்.
        என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
        108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா.















        1. Chokkan Subramanian September 23, 2014 at 10:05 AM

          வாங்கோ, வணக்கம்.

          //ஒரே ஆண்டில் 12 விருதுகள். என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 108 பேருக்கு அளித்தது இன்னும் மிக பெரிய விஷயம்.வாழ்த்துக்கள் ஐயா.//

          தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK



        2.  

          தொடரும்



          என்றும் அன்புடன் தங்கள்
          [வை. கோபாலகிருஷ்ணன்]

      20 கருத்துகள்:

      1. அஹா ! பின்னூட்டங்களுக்கு ஒரு பதிவா. வித்யாசமான பதிவர் சார் நீங்கள்.

        படிக்கவே சுவாரஸ்யமா இருக்கு. மிக அருமையான முயற்சி. :) நன்றியும் அன்பும் :)

        பதிலளிநீக்கு
      2. பின்னூட்டங்களின் தொகுப்பு அந்த நாள் நினைவுக்கு அழைத்துச்சென்று மகிழ்விக்கிறது! அருமையான தொகுப்பு! வாழ்த்துக்கள்!

        பதிலளிநீக்கு
      3. மிக அருமை.. என்னுடைய பின்னூட்டத்தை குறிப்பிட்டதற்கு நன்றி சார்..

        பதிலளிநீக்கு
      4. அருமையான தொகுப்பு ஐயா...
        மிகுந்த சிரத்தையுடன் தொகுக்கிறீர்கள்...
        வாழ்த்துக்கள்.

        பதிலளிநீக்கு
      5. மறுபடியும் வாசிப்பதே இனிய சுகம் - மலரும் நினைவுகள் போல...

        பதிலளிநீக்கு
      6. எழுத்துக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கிறது ஐயா... கவனிக்கவும்...

        பதிலளிநீக்கு
      7. சிறந்த பின்னூட்டங்களையும் 226 பின்னூட்டங்கள் கிடைத்த பதிவின் பகிர்வும் சுவைதான் சார்!

        //எழுத்துகள்....................................... கவனிக்கவும்//

        பதிலளிநீக்கு
      8. பின்னூட்டங்கள் ஓஹோ! ஆஹா!!! அனைத்தும் அருமை! நிஜமாகவே பின் ஊட்டம்தான்!!!!

        பதிலளிநீக்கு
      9. என்னுடைய பின்னூட்டங்களைத்
        திரும்பப் படிக்கையில் உன்மையில் மிகுந்த
        சந்தோஷமாக இருக்கிறது

        காரணம் மனதில் பட்டதை
        மிகச் சரியாகப் பின்னூட்டமிட்ட திருப்தி
        அப்போதை விட இப்போது அதிகம் ஏற்படுகிறது

        பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

        பதிலளிநீக்கு
      10. இந்தப் பதிவுகளை ஒரே மூச்சில் படிக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமா படிச்சா ஆயுசு பத்தாதுபோல இருக்கு. இதுதான் இருதலைக்கொள்ளி எறும்பின் கதை.

        பதிலளிநீக்கு
      11. நானும் கொஞ்சம் சமையலில் ஆர்வம் உள்ளவன். ஆனாலும் பளபளா கிச்சனில் என்னால் சமையல் செய்யமுடியாது.

        பதிலளிநீக்கு
      12. இந்த பதிவில் எதுமே படிக்க முடியல எழுத்தெல்லாம் ஒண்ணு மேல ஒண்ணா விழுந்து ருக்கு.

        பதிலளிநீக்கு
      13. மல்ர்ந்த பின்னூட்டங்கள் மனம் மகிழ்வித்தன...

        பதிலளிநீக்கு
        பதில்கள்
        1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:43 PM

          //மலர்ந்த பின்னூட்டங்கள் மனம் மகிழ்வித்தன..//

          ’புதிதாக மலர்ந்த பின்னூட்டங்கள் மட்டும் மனம் மகிழ்வித்தன’ என்று இருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.

          எனினும் மிக்க நன்றி, மேடம்.

          நீக்கு
      14. எனக்குக் கூட உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும்ன்னு தோணறது. ஆனா எப்படி கொடுக்கறதுன்னு எனக்குத் தெரியல.

        விருது எப்படி கொடுக்கறதுன்னு ஒரு பதிவு போடுங்கோ.

        அதை படிச்சுட்டு எனக்கு யாராவது ஒரு விருது கொடுக்க மாட்டாங்களா? ஹிஹிஹிஹிஹிஹிஹிஹி

        பதிலளிநீக்கு
      15. எனக்குகூட இந்த பதிவு பொடி எளுத்துலதா வருது. படிச்சிகிட ஏலலே. மொபைல் நெட் யூஸ் பண்ணுரதால பொடி எளுத்த பெரிசு பண்ண ஏலலே.

        பதிலளிநீக்கு
      16. வீட்ல டெஸ்க்டாப் லாப்டாப் எல்லாம் இருந்தாலும் எனக்கு கிடைக்காது மொபைல் நெட் தான் யூஸ் பண்ணவேண்டி இருக்கு அதில் பலவித பிரச்சினைகள் சமாளிச்சுண்டுதான் கமண்ட் போடவேண்டி இருக்கு .

        பதிலளிநீக்கு
      17. அதிகபட்ச விருதுகள்...பின்னூட்டங்கள் பின்னியெடுக்க வேறுகாரணம் வேணுமா???

        பதிலளிநீக்கு
      18. இப்போது பின்னூட்டங்களைத் திரும்பப் படிக்கும் எண்ணம் மேலோங்குகிறது!நன்றி!

        பதிலளிநீக்கு