என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 31 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/04/04


இந்தப்பதிவின் இறுதியில் 
ஓர் மிகச்சுலபமான போட்டி 
அறிவிப்பு உள்ளது.
காணத்தவறாதீர்கள் !
கலந்துகொள்ள மறவாதீர்கள் !!


வானமே எல்லையாக ஜொலிக்கும் சாதனையாளர் !


 

நான் என் வலைத்தளத்தினில் வெளியிட்டுள்ள பெரும்பாலான பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக வருகை தந்து, ஒவ்வொரு பதிவுக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறைய கருத்துகளை நிறைவாகவும், அழகாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும்,    பின்னூட்டமிட்டு, தொடர் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர் நம் ‘மணிராஜ்’ வலைத்தளப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி  அவர்களே என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு பதிவு செய்துகொள்கிறேன். 

அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய ஸ்பெஷல் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
  

   

  


உடல்நலக்குறைவினால், 08.11.2014 அன்று நான் வெளியிட்டதோர் பதிவுக்கும், 21.12.2014 க்குப்பிறகு இன்று 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள 65 பதிவுகளுக்கும் மட்டும், அவர்கள் வருகை தந்து கருத்தளிக்க முடியாமல் போய்விட்டது என்பதை நினைக்க எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

இதுவரை என் மிக அதிகமான பதிவுகளுக்கு வருகை தந்துள்ளவர் மற்றும் என் ஒவ்வொரு பதிவுக்கும் மிக அதிகமான எண்ணிக்கைகளில் பின்னூட்டங்கள் கொடுத்துள்ளவர் என்ற பெருமை இவர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. 

This Madam has offered their 
Very Valuable Comments for all my 
684 Posts out of 750 ! 


பின்னூட்டங்களைப்பற்றியே ஓர் தொடர் எழுத ஆரம்பித்துவிட்டு, இவர்களைப்பற்றி நான் எதுவுமே குறிப்பிடாமல் இருந்தால் அது மிகவும் நன்றிகெட்டச் செயலாகும் என்பதை நான் நன்கு அறிவேன். எனக்கு இதுவரை கிடைத்துள்ள சுமார் 28000 பின்னூட்டங்களில், இவர்கள் எனக்கு இதுவரை அளித்துள்ள பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை மட்டுமே சுமார் 2000 To 2500 இருக்கக்கூடும். 

இவர்கள் என் பதிவுகளுக்குத் தந்துள்ள பின்னூட்டங்கள் அத்தனையும் எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள பொக்கிஷங்களாக நான் என்றுமே எப்போதுமே இனிமையாக நினைப்பவைகள் மட்டுமே. 

இவர்கள் வாரி வழங்கியுள்ள பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும், அத்தனையும் எனக்குக் கற்கண்டாக இனிப்பதாலும் மட்டுமே, இவர்களின் பின்னூட்டங்களை இதுவரை நான் தனியாகப் பிரித்து இந்த என் தொடரினில் எங்கும் பிரசுரிக்க இயலவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். 


விரைவில் அவர்களின் உடல்நலம் பரிபூரண குணமாகி வலையுலகுக்கு வழக்கம்போலத் திரும்பிவந்து, விட்டுப்போய் உள்ள இந்த என் 66  பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் அளித்து, தன் அழகிய செந்தாமரைகளை மலரச்செய்து மகிழ்வித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது. 

விரைவில் அவர்கள் முற்றிலும் உடல்நலம்பெற்று மீண்டும் வலையுலகுக்கு மீண்டுவர, நாம் அனைவரும் பிரார்த்தனைகள் செய்வோமாக! 


 நினைவூட்டுகிறேன் !

 


திருமதி. 

 இராஜராஜேஸ்வரி 

அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்.

பதிவுலகில் காலடி எடுத்து வைத்து சுமார் நான்கு ஆண்டுகளுக்குள், கண்ணைக்கவரும் ஏராளமானப் படங்களுடன் 1514 பதிவுகள் வெளியிட்டுள்ளார்கள். 

21.01.2011 முதல் 31.12.2014 வரையிலான முதல் 1441  நாட்களுக்குள் 1504  பதிவுகள் வெளியிட்டு மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள்.

சமீபத்தில் 2014 பொங்கல் பண்டிகை முதல் 2014 தீபாவளி பண்டிகை வரை தொடர்ச்சியாக நாற்பது வாரங்கள் என் வலைத்தளத்தினில் நடத்தப்பட்ட ‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ அனைத்திலும், மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு, கீழ்காணும் பல வெற்றிகளை எட்டி மாபெரும் சாதனைகள் புரிந்துள்ளார்கள்.
1] 
ஹாட்-ட்ரிக் வெற்றியாளர்களில் முதல் இடம் 
[ஏழு முறை ஹாட்-ட்ரிக் வெற்றிகள்]2] 

ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் வரிசையில்

இரண்டாம் இடம்

 

3] 

என் சிறுகதை விமர்சனப் போட்டி பற்றி 

இவர்கள் அளித்துள்ளதோர் சிறப்புப் பேட்டி
4]
 ’தனக்குத்தானே நீதிபதி’ என்ற 
‘போட்டிக்குள் போட்டி’யில் வெற்றி
5]

 ’நடுவர் யார்? யூகியுங்கள்’ என்ற 

‘போட்டிக்குள் போட்டி’யில் வெற்றி6]

’ஜீவீ + வீஜீ விருது’

பெற்ற சாதனையாளர்

7]

’கீதா விருது’ 

பெற்ற சாதனையாளர்

8]

’ஸ்ரீ ராஜராஜேஸ்வரி விருது’ 

பெற்ற சாதனையாளர்


எழுத்துலக + வலையுலக 

சாதனை நாயகியும்,

ஆன்மீக அறிவுக்கோர் 

அத்தாட்சியும் அத்தாரிட்டியுமான 

இவர்களுக்கு

என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்,

அன்பான இனிய நல்வாழ்த்துகள். நலமுடன் நீடூழி வாழ்க !  

 


 

 

அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 


பட்டியல் எண்: 4  .... 60 GENTS


பட்டியல் எண்: 5 .... 70 LADIES

மேலும் அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாக வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும்கூட இரண்டு (By Random Selection) தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES

பட்டியல் எண்: 8  ....  40 GENTS
இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  
பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, என்னிடம் சேமித்து வைத்துக்கொண்டுள்ளேன்.
 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:

பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 10 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 11 க்கான இணைப்பு:


பட்டியல் எண்: 12/01/04 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 12/02/04 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/120204.html
பட்டியல் எண்: 12/03/04 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2015/03/120304.html

பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள 
என் பதிவுகளைப் பற்றிய
 பட்டியல் இப்போதைக்கு 
இத்துடன் இன்றுடன் 
இனிதே நிறைவடைகிறது.


 


பட்டியல் எண்: 12 [Part : 4 of  4] 
பின்னூட்ட எண்ணிக்கை : 270
http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
அடடா ..... என்ன அழகு !
அடையைத் தின்னு பழகு !!
TOTAL NUMBER OF COMMENTS : 
2 7 0
THE HIGHEST ONE 
IN MY BLOG HISTORY !


 
இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 270 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 

200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்திற்குப்பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனித்தனியே, இத்துடன் கடந்த நான்கு பதிவுகளில் காட்டி வருகிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.


  


COMMENT Nos: 255 TO 270 1. angelin  January 19, 2013 at 10:03 AM //test comment//

 2. மிக்க நன்றி, நிர்மலா. தங்கள் Test Comment கிடைத்துள்ளது.

 3. ஆனால் நான் சொன்ன பிரச்சனைகள் மட்டும் இன்னும் நீடிக்கின்றன.

 4. பார்ப்போம். நன்றி.  பிரியமுள்ள கோபு

 5. ஆஹா!படிக்கும்போதே அடை சாப்பிடும் ஆவல் பெருகுகிறதே!


 6. குறிப்புகளும் வர்ணனைகளுமாக வாசனை தூக்குகிறதே!
 7. மொறு மொறு அடைக்கு வெல்லம் உருக்கிய நெய்!!!!!!!!
 8. நான் இப்போதே கிளம்பி திருச்சி வர சித்தமாக இருக்கிறேன் :-)

  பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்

 9. raji January 21, 2013 at 6:30 AM

  வாங்கோ என் அன்புமகள் செள.ராஜி அவர்களே! வணக்கம்.

  செளக்யமா சந்தோஷமாக இருக்கீங்களா?

  உடம்பு இப்போது முற்றிலும் தேவலாமா?


  //ஆஹா!படிக்கும்போதே அடை சாப்பிடும் ஆவல் பெருகுகிறதே! 10. குறிப்புகளும் வர்ணனைகளுமாக வாசனை தூக்குகிறதே!

 11. மொறு மொறு அடைக்கு வெல்லம் உருக்கிய நெய்!!!!!!!!// 12. தங்களின் இந்த அபூர்வ வருகையே எனக்கு மொறு மொறு 
 13. அடையுடன் வெல்லம் + உருக்கிய நெய் தொட்டுக்கொண்டு 
 14. சாப்பிட்ட மகிழ்ச்சியை அளிக்கிறதும்மா. சந்தோஷம்! ;)))))


 15. //நான் இப்போதே கிளம்பி திருச்சி வர சித்தமாக இருக்கிறேன் :-)//
 16. வாங்கோ ப்ளீஸ் ..... அகம் மகிழ்ந்து அன்புடன் வரவேற்க நாங்களும் காத்திருக்கிறோம்மா.
 17. //பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.//
 18. அன்பான வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிம்மா.
 19. //தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.//
 20. அதனால் பரவாயில்லை.
 21. உங்களின் சூழ்நிலை தான் எனக்கும் நன்றாகவே தெரியுமே.

  தங்களின் அன்பான வருகைக்கும், ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும் 
 22. என் மனமார்ந்த  நன்றிகள். வாழ்க!
 23. பிரியமுள்ள கோபு

 24. புத்தாண்டில் அடைமழையாய் சான்றிதழ்களும் பரிசுகளும் வென்ற சுவை நிறைந்த அடை படைப்புக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

  1. இராஜராஜேஸ்வரி January 28, 2013 at 11:35 PM

   //புத்தாண்டில் அடைமழையாய் சான்றிதழ்களும் பரிசுகளும் வென்ற சுவை நிறைந்த அடை படைப்புக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//

   வாங்கோ, என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய மேடம் !

   தாங்கள் தாமதமாக வருகை தந்திருப்பினும்,
  2. எனக்கு மிகவும் பிடித்த ’புளிச்சமா’ அடையைச் சுடச்சுட எடுத்து  
  3. ‘தோசை மிளகாய்ப்பொடி + எள் மணத்துடன் உள்ள நல்ல சமையல்
  4.  நல்லெண்ணெயில் கலந்து, ருசிப்பது போன்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.

  5. ரொம்பவும் சந்தோஷமாக உள்ளது ;)))))


   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் மேடம்..

 • Such a lively post Sir:) As if some one is directly talking :)


  1. Harini M August 24, 2013 at 7:46 AM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //Such a lively post Sir:) As if some one is directly talking :)//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த  இனிய அன்பு நன்றிகள், மேடம். Thanks a Lot.

 • Hilarious post, loved all your instructions and cautions about using mixie, gas stove, great read
  1. Harini M October 19, 2013 at 11:35 AM

   வாங்கோ மேடம் வணக்கம். தங்களின் மீண்டும் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.

   //Hilarious post, loved all your instructions and cautions about using mixie, gas stove, great read//

   மிக்க நன்றி. தாங்கள் ஏற்கனவே 24.08.2013 அன்று ஒரு கமெண்ட் கொடுத்துள்ளீர்கள். அதை நான் இப்போது தான் கவனித்தேன்.

   கமெண்ட்ஸ் எண்ணிக்கை 200 வரை மட்டுமே நேரிடையாகக் காட்சியளிக்கின்றன.

   அதற்கு மேல் வரும் கமெண்ட்ஸ்களை நான் வேறு ஒரு முறையில் சென்று பார்த்து பதில் அளிக்க வேண்டியதாக உள்ளது.

   தங்களின் இந்த கமெண்ட் எண்: 263 + என் பதில் எண்: 264. இவைகளை என் பதிவினில் நேரிடையாகப் பார்ப்பது இயலாத காரியம்.

   //Harini M August 24, 2013 at 7:46 AM
   Such a lively post Sir:)As if some one is directly talking :)//

   தங்களின் அன்பான வருகைக்கும் 2 கமெண்ட்ஸ்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். சந்தோஷம்.

   இதே போல நம் திருச்சியைப்பற்றிய ஓர் சிறப்புப்பதிவு, நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன். நேரம் இருக்கும் போது படித்துப்பாருங்கள்.

   http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

   அன்புடன் கோபு

 • வணக்கம்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

 • வணக்கம்
  வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
  http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_27.html?showComment=1388106172450#c4072647375032658530
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
 • வணக்கம் சார், வாழ்க வளமுடன்.
  இன்றைய வலைச்சரத்தில் இந்த பதிவு.
  http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_27.html?showComment=1388105779571#c1927188437863207263

 • உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

  வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)
  1. திண்டுக்கல் தனபாலன் April 30, 2014 at 6:58 AM

   //உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

   மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

   அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

   அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

   வலைச்சர தள இணைப்பு : சமையலில் நளபாகம் :)//

   தங்களின் அன்பான உடனடித் தகவலுக்கு மிக்க நன்றி
   Mr. DD Sir.

   அன்புடன் கோபு [VGK]

 • வணக்கம்!
  இன்றைய வலைச்சரத்தின் வாசமிகு மலரானீர்.
  வாழ்த்துக்கள்!
  ஒட்டகத்து தேசத்தின் ஒளி நிலவு!
  திருமதி.மனோ சாமிநாதனின் பார்வை வெளிச்சம்
  பட்டுவிட பட்டிதொட்டி எங்கும் பரவட்டும் புகழொடு உமது
  படைப்புகள் யாவும்.

  நட்புடன்,
  புதுவை வேலு,
  www.kuzhalinnisai.blogspot.com

  (இன்றைய எனது பதிவு
  "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்"
  சிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்
  குழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்
  படரட்டும்!
  (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

 •  


  POSITION AS ON 31.03.2015 .... 11 A.M. (I.S.T) 

  -oOo-  MY BLOG FOLLOWERS 

   380

   

  MY BLOG VIEWERS

   3,07,363

   

  TOTAL NUMBER OF COMMENTS 
  SO FAR RECEIVED and PUBLISHED
   27,427   FOLLOWERS IN GOOGLE PLUS 

   399   VIEWERS IN GOOGLE PLUS  

   31,94,497 

       
  { இது என் 750வது பதிவாக அமைந்துள்ளதில் மகிழ்ச்சி ! }
  டும் டும் .... டும் டும் .... 
  டும் டும் .... டும் டும் .....


  மீண்டும் ஓர் மிகச்சுலபமான பரிசுப்போட்டி அறிவிப்பு

  02.01.2011 முதல் 31.03.2015 வரை நான் வெளியிட்டுள்ள அனைத்துப்பதிவுகளுக்கும் [மீள் பதிவுகள் உள்பட சுமார் 750] ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளவர்களுக்கு + இனி புதிதாகப் பின்னூட்டம் இடுபவர்களுக்கு ஓர் சிறப்புப்பரிசு அளிக்கப்பட உள்ளது.

  மேற்படி போட்டிக்கான ஒருசில எளிய நிபந்தனைகள்:

  என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் தங்களுடைய சற்றே மாறுபட்ட பின்னூட்டம் 15 வார்த்தைகளுக்குக் குறையாமல் இடம் பெற வேண்டும். 

  ’அட’ ’ஆஹா’ ‘அருமை’ ’அசத்தல்’ ’பாராட்டுக்கள்’ ‘வாழ்த்துகள்’ ’படித்தேன்’ ‘ரசித்தேன்’ என்ற ஓரிரு வார்த்தைகளுக்குள் மட்டும் இல்லாமல், அந்தந்த பதிவுகளுக்கு சற்றேனும் சம்பந்தம் உள்ளதாகவும், சற்றே சுவையான, மாறுபட்ட, வித்யாசமான கருத்துக்கள் கொண்ட பின்னூட்டமாகவும் அவை அமைந்தால் போதுமானது. 

  பிறர் கொடுத்துள்ள பின்னூட்டங்களையே COPY and PASTE செய்து தங்களின் பின்னூட்டமாக அளித்தல் கூடவே கூடாது.

  என்னுடைய அனைத்துப்பதிவுகளிலும் 
  தங்களின் பின்னூட்டங்கள்
  இடம்பெற வேண்டிய 
  இறுதி நாள்: 31.12.2015 

  இன்னும் முழுசாக ஒன்பது மாதங்கள் 
  அதாவது 275 நாட்கள் உள்ளன. 

  தினமும் சராசரியாக மூன்று பதிவுகள் என 
  முயற்சித்தாலே போதும் .....

  மிகச்சுலபமாக வெற்றியினை எட்டி 
  பரிசினைத் தட்டிச் செல்லலாம்.

  என் பதிவு ஒன்றுக்கு ஏற்கனவே தாங்கள் பின்னூட்டம் கொடுத்திருந்தால், மீண்டும் அதே பதிவுக்குப் பின்னூட்டம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறு மீண்டும் புதிதாகக் கொடுத்தாலும் தப்பேதும் இல்லை. தாராளமாகக் கொடுக்கலாம். :)

  இவ்வாறு என் அனைத்துப்பதிவுகளுக்கும் முழுவதுமாகப் பின்னூட்டம் கொடுத்துள்ளவர்கள் 31.12.2015க்குள் எனக்கு மெயில் மூலம் அதற்கான தகவல் அளிக்க வேண்டும். 

  மெயிலில் Subject என்ற இடத்தில் 100% பின்னூட்டங்கள்  எனக் குறிப்பிடவும். என் மெயில் விலாசம்: valambal@gmail.com 

  இவ்வாறு வெற்றிகரமாக என் அனைத்துப் பதிவுகளையும் படித்து, சிரத்தையுடன் பின்னூட்டங்களும் அளித்திருந்து, எனக்கு 31.12.2015க்குள் மெயில் மூலம் தகவலும் அளிக்கும் ஒவ்வொருவருக்கும், அவற்றை நான் சரிபார்த்து உறுதி செய்துகொண்டபின், குறைந்தபட்சம்  ரூ. 500 [ரூபாய் ஐநூறு] பரிசுத்தொகையாக அனுப்பி வைக்கப்படும். 

  இதில் கலந்துகொண்டு வெற்றி பெறுவோர் எண்ணிக்கை ஒருவேளை பத்து நபர்களோ அல்லது அதற்குக்குறைவாகவோ அமையுமானால் இந்த அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகையை இரட்டிப்பாக (அதாவது ரூ. 1000 என) நான் நிர்ணயித்து அளிக்கவும் இதில் அதிக வாய்ப்புகள் உள்ளன.

  பதினோரு நபர்களுக்கு மேல் நூற்றுக்கணக்கானோர் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடினாலும், ஒவ்வொருவருக்கும் ரூ. 500 வீதம் பரிசுத்தொகை நிச்சயமாக என்னால் அளிக்கப்படும்.

  மேற்படி பரிசுத்தொகைகள் என் *வழக்கப்படி* வெற்றிபெற்ற தங்களின் வங்கிக்கணக்குக்கு நேரிடையாக அனுப்பி வைக்கப்படும்.

  ஏற்கனவே சென்ற ஆண்டின் (2014) சிறுகதை விமர்சனப்போட்டிகளில் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்பட்ட + பரிசுத்தொகைகள் அளிக்கப்பட்ட விபரங்கள் இதோ இந்தப்பதிவுகளில் உள்ளன: 

  (*வழக்கப்படி*)


  இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றியாளர்களாகப்போகும் தங்களிடமிருந்து, 2016ம் ஆண்டு ஜனவரி முதல் வாரம், தங்களின் வங்கிக்கணக்கு விபரங்களை நான் அதற்கான மிக எளிமையான சிறிய படிவத்தினை மெயில் மூலம் தங்களுக்கு அனுப்பி பெற்றுக்கொள்வேன். 

  வங்கி விபரங்களை சரிவர 15.01.2016க்குள் எனக்கு அனுப்பி வைக்கும் வெற்றியாளர்களுக்கு, 31.01.2016க்குள் பரிசுத்தொகைகள் அனுப்பி வைக்கப்படும்.

  ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு மேற்படி பரிசினை மிகச்சுலபமாகப் பெறலாம். 

  இவ்வாறு பரிசு பெற்ற வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் என்றாவது ஒருநாள் என் பதிவினில் சிறப்பித்து வெளியிடப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

  பெரும்பாலானவர்கள் இந்த எளிய + அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு, இதில் கலந்துகொண்டு பரிசு பெற என் இனிய நல்வாழ்த்துகள்.

  என்றும் அன்புடன் தங்கள்
  VGK 


   

  Today is 31st March .... 
  The Financial Year Ending Day !


  To all of you !

  என்றும் அன்புடன் தங்கள்
  [வை. கோபாலகிருஷ்ணன்]
  31st March, 2015

  138 கருத்துகள்:

  1. புதுமையிலும் புதுமையாய்
   கருத்துகளுக்கு கெளரவமாய்
   வை கோ ஐயா
   வைத்தார் ஒரு போட்டி...!!

   இராஜேஸ்வரி அம்மா விரவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். அவர்களின் கோவில் பதிவுகள் மீண்டும் வலம் வர வேண்டும்.

   கருத்தை கணக்கு வைத்து
   கருத்துக்கு போட்டி வைத்து
   பொருளாளர் வங்கி ஐயா
   பொருள் கொடுக்க காத்திருக்கார்
   சகோக்கள் சரமாரி கடுத்திடுக.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சகோக்கள் சரமாரி கருத்திடுக

    நீக்கு
   2. R.Umayal Gayathri March 31, 2015 at 5:35 PM

    வாங்கோ, வணக்கம்.

    //இராஜேஸ்வரி அம்மா வி ரை வி ல் குணமடைய பிரார்த்திக்கிறேன். //

    மிக்க நன்றி.

    //சகோக்கள் சரமாரி கருத்திடுக//

    ”சகோக்கள் சரமாரி கருத்திடுக” எனச்சொல்லிவிட்டு நீங்க எஸ்கேப் ஆனால் எப்படி? நீங்க போட்டியில் கலந்துகொண்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?

    போட்டியில் கலந்துகொள்ள தயவுசெய்து முயற்சி செய்யுங்கள்.

    ஆனால் நான் யாரையும் வற்புருத்திக் கட்டாயப்படுத்தப் போவது இல்லை. கலந்துகொள்வதோ கலந்து கொள்ளாததோ அவரவர்கள் இஷ்டம் + செளகர்யப்படி மட்டுமே.

    தங்களின் அன்பான முதல் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    நீக்கு
  2. கரும்பு தின்ன கூலியா? உங்க பதிவுகளை படிக்க பரிசா? நல்லது சார்...
   திருமதி இராஜேஸ்வரி மேடம் சீக்கிரமே குணமாக என்னுடைய பிரார்த்தனைகள்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. RAMA RAVI (RAMVI) March 31, 2015 at 6:42 PM

    வாங்கோ, வணக்கம்.

    //கரும்பு தின்ன கூலியா? உங்க பதிவுகளை படிக்க பரிசா? நல்லது சார்... //

    இந்த என் சிறிய தொடரின் அனைத்து 15 பகுதிகளுக்கும் வருகை தந்து கருத்தளித்துள்ளவர் என்ற பெருமை இந்த நிமிடத்தில் தங்களை மட்டுமே சேர்கிறது. எனவே இந்தப்புதுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறக்கூடியவரும் நீங்களாகவே இருக்கலாம் என்றும் எனக்கு என் மனதுக்குள் தோன்றுகிறது. முயற்சி செய்யுங்கோ, ப்ளீஸ்.

    //திருமதி இராஜேஸ்வரி மேடம் சீக்கிரமே குணமாக என்னுடைய பிரார்த்தனைகள்..//

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, மேடம்.

    நீக்கு
  3. மன மகிழ்வுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கே. பி. ஜனா... March 31, 2015 at 7:16 PM

    வாங்கோ, வணக்கம்.

    //மன மகிழ்வுடன் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்...//

    மிக்க நன்றி, சார்.

    நீக்கு
  4. COMMENT FROM SRIRAM 20.03 Hrs. / 31.03.2015
   =========================================

   ஸ்ரீராம். has left a new comment on your post "ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/...":

   ராஜராஜேஸ்வரி மேடத்துக்கு வாழ்த்துகள்.

   நாங்களும் அவர்களை மிஸ் செய்கிறோம்.

   போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம் ! வாங்கோ, வணக்கம்.

    //ராஜராஜேஸ்வரி மேடத்துக்கு வாழ்த்துகள். //

    அவர்கள் சார்பில் என் நன்றிகள்.

    //நாங்களும் அவர்களை மிஸ் செய்கிறோம்.//

    ஆம். நாம் எல்லோருமே தான் :(

    //போட்டியில் கலந்துகொள்பவர்களுக்கும் எங்கள் வாழ்த்துகள்.//

    மிக்க நன்றி, ஸ்ரீராம்.

    நீக்கு
  5. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் திருமதி ராஜராஜேஸ்வரி உடல் நலமடைந்து மீண்டும் தினம் ஆன்மீகப் பதிவுகள் தர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. rajalakshmi paramasivam March 31, 2015 at 9:58 PM

    வாங்கோ, வணக்கம்.

    //போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள்//

    சந்தோஷம். அப்போ நீங்க !!!!!

    //திருமதி ராஜராஜேஸ்வரி உடல் நலமடைந்து மீண்டும் தினம் ஆன்மீகப் பதிவுகள் தர வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.//

    மிக்க நன்றி, மேடம்.

    நீக்கு
  6. இந்த வாரம் ராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு நலம் விசாரித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். தற்சமயம் நலமே என்று பதில் தந்திருந்தார்கள். உங்கள் பதிவு எப்போதும் போல் பளபளக்கிறது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மோகன்ஜி March 31, 2015 at 10:10 PM

    வாங்கோ, வணக்கம்.

    //இந்த வாரம் ராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு நலம் விசாரித்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். தற்சமயம் நலமே என்று பதில் தந்திருந்தார்கள்.//

    இதைக் கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது. தகவலுக்கு மிக்க நன்றி.

    //உங்கள் பதிவு எப்போதும் போல் பளபளக்கிறது.//

    அப்படியா ! மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    நீக்கு
  7. நித்தமொரு பதிவும் கொடுத்துக்கொண்டு மற்றவர் பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டமிட்டுக்கொண்டு எப்படிதான் நேரத்தை நிர்வகிக்கிறாரோ என்று இராஜேஸ்வரி மேடத்தைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டு. அவர்களுக்கு உடல்நலமில்லை என்ற செய்தி வருத்தமளிக்கிறது. விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் பதிவுலகில் பழைய சுறுசுறுப்புடன் இயங்கிட என் பிரார்த்தனைகள். அவர்கள் தங்களுடைய பதிவுகளனைத்துக்கும் பின்னூட்டமிட்டிருப்பதும் இங்கு தாங்கள் அவரை சிறப்பித்திருப்பதும் மகிழ்வளிக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

   மீண்டுமொரு புதுமையான போட்டி அறிவிப்பின் மூலம் தாங்கள் ஒரு சாதனை மன்னர் என்பதை நிருபித்துவிட்டீர்கள். பாராட்டுகள் கோபு சார்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கீத மஞ்சரி April 1, 2015 at 4:50 AM

    வாங்கோ, வணக்கம்.

    //நித்தமொரு பதிவும் கொடுத்துக்கொண்டு மற்றவர் பதிவுகளுக்கும் தவறாமல் பின்னூட்டமிட்டுக்கொண்டு எப்படிதான் நேரத்தை நிர்வகிக்கிறாரோ என்று இராஜேஸ்வரி மேடத்தைப் பற்றி நினைத்துக் கொள்வதுண்டு.//

    ஆமாம். நானும் இதேபோலவே நினைத்து அடிக்கடி ஆச்சர்யப்படுவது உண்டு.

    //அவர்களுக்கு உடல்நலமில்லை என்ற செய்தி வருத்தமளிக்கிறது.//

    ஆமாம். இதைப்பற்றி அவர்களின் ஓர் பதிவினிலேயேகூட சொல்லியுள்ளார்கள்.

    http://jaghamani.blogspot.com/2015/01/blog-post_7.html

    //விரைவில் பூரண நலம் பெற்று மீண்டும் பதிவுலகில் பழைய சுறுசுறுப்புடன் இயங்கிட என் பிரார்த்தனைகள். //

    மிக்க நன்றி, மேடம்.

    //அவர்கள் தங்களுடைய பதிவுகளனைத்துக்கும் பின்னூட்டமிட்டிருப்பதும் இங்கு தாங்கள் அவரை சிறப்பித்திருப்பதும் மகிழ்வளிக்கிறது. இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். //

    தங்களின் மகிழ்ச்சிக்கும், மனமார்ந்த பாராட்டுகளுக்கும் என் நன்றிகள்.

    //மீண்டுமொரு புதுமையான போட்டி அறிவிப்பின் மூலம் தாங்கள் ஒரு சாதனை மன்னர் என்பதை நிருபித்துவிட்டீர்கள். பாராட்டுகள் கோபு சார்.//

    இதில் என் சாதனை ஏதும் இல்லை. நான் சாதனை மன்னரும் அல்ல. சாதாரணமானவன் மட்டுமே. என் பதிவுகள் பலராலும் படிக்கப்பட வேண்டும்; அவ்வாறு அவர்கள் படித்ததற்கு அத்தாட்சியாக பின்னூட்டம் இட வேண்டும் என்ற சின்னச்சின்ன ஆசைதான் இதற்குக் காரணம்.

    இதில் எவ்வளவு பேர்கள் பொறுமையுடன் கலந்துகொள்வார்களோ ! ஒன்பது மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால், அதுபற்றி போகப்போகத்தான் தெரியக்கூடும்.

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    நீக்கு
  8. இராஜேஸ்வரி அம்மா விரைவில் வருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...!

   அட...! இந்தப் போட்டியும் சுவாரஸ்யத்தையும் தரும்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. திண்டுக்கல் தனபாலன் April 1, 2015 at 7:58 AM

    வாங்கோ, வணக்கம்.

    //இராஜேஸ்வரி அம்மா விரைவில் வருவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது...!//

    நம் நம்பிக்கைகள் விரைவில் பலிக்கட்டும். மிகவும் சந்தோஷமே.

    //அட...! இந்தப் போட்டியும் சுவாரஸ்யத்தையும் தரும்...//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி Mr. DD Sir

    நீக்கு
  9. இராஜேஸ்வரி அம்மா விரைவில் குணமடைவார்கள்... பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா..உண்மையாய் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது. அதிகப் பின்னூட்டம் வாங்கிய பகுதியில் நானும் பின்னூட்டமிட்ட ஞாபகம் இருக்கிறது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ezhil April 1, 2015 at 6:28 PM

    வாங்கோ, வணக்கம்.

    //இராஜேஸ்வரி அம்மா விரைவில் குணமடைவார்கள்//

    மிகவும் சந்தோஷம். கோவை மாநகரிலிருக்கும் சமூக சேவகியான தங்கள் மூலம் இந்த இனியதோர் செய்தியினைக் கேட்பது மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    //பின்னூட்டத்திற்கு இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா//

    மிகச்சிறிய ஆராய்ச்சி மட்டுமே மேற்கொண்டேன். அதுவும் நான் CASUAL ஆக ஒரு RANDOM ஆகச் செய்தது மட்டுமே. இருப்பினும் அது என்னவோ பெரிய ஆராய்ச்சி போல தோற்றம் பெற்றுவிட்டது.

    //உண்மையாய் உங்கள் உழைப்பு வியக்க வைக்கிறது.//

    அவசர அவசரமாக எப்படியோ ஆரம்பித்த இந்தத்தொடர் எப்படியோ ஒருவழியாக, நல்லபடியாக முடிந்ததில் எனக்கும் வியப்பாகத்தான் உள்ளது.

    //அதிகப் பின்னூட்டம் வாங்கிய பகுதியில் நானும் பின்னூட்டமிட்ட ஞாபகம் இருக்கிறது.//

    இந்த HIGHEST NUMBER OF COMMENTS வாங்கியுள்ள ‘அடடா என்ன அழகு ! அடையைத் தின்னு பழகு!!’ என்ற பதிவினில் உள்ள 270 பின்னூட்டங்களையும் மூன்று முறை தேடி அலசிப்பார்த்து விட்டேன். ஏனோ அதில் தங்கள் பெயர் இடம் பெறவில்லை.

    -=-=-=-=-=-

    இருப்பினும் தாங்கள் என் சில பதிவுகளுக்குப்பின்னூட்டம் அளித்துள்ளீர்கள் என்பது மட்டும் எனக்கும் மிக நன்றாகவே ஞாபகம் உள்ளது.

    உதாரணமாக ......

    164 பின்னூட்டங்கள் கிடைத்துள்ள
    ’என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! பகுதி-1’

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

    ezhil February 4, 2013 at 10:35 AM
    அருமையா வீட்டின் அக, புற அழகை விவரித்துவிட்டீர்கள் ஐயா... ஆர்வமாக ஜன்னல் கதையைத் தேடினால் பொசுக்கென்று அடுத்த வாரம் என்றுவிட்டீர்களே....

    வை.கோபாலகிருஷ்ணன் February 5, 2013 at 11:58 PM
    ezhil February 3, 2013 at 9:05 PM

    வாருங்கள் Mrs. Ezhil Madam, வணக்கம்.

    தங்களின் பெயரே தூய தமிழில் எழில் கொஞ்சுவதாக உள்ளது. மகிழ்ச்சி.

    //அருமையா வீட்டின் அக, புற அழகை விவரித்துவிட்டீர்கள் ஐயா... //

    மிக்க நன்றி.

    //ஆர்வமாக ஜன்னல் கதையைத் தேடினால் பொசுக்கென்று அடுத்த வாரம் என்றுவிட்டீர்களே....//

    ஜன்னல் கதை என்பதால் அது அவ்வளவு ஈஸியாக முடியாது அல்லவா! தங்கள் ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

    -=-=-=-=-=-

    137 பின்னூட்டங்கள் கிடைத்துள்ள
    ’என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார் ! பகுதி-2

    http://gopu1949.blogspot.in/2013/02/2.html

    ezhil February 10, 2013 at 5:43 PM

    பெற்றோர்கள் வாழ்ந்த இடத்திலேயே வீடு அமைந்ததில் மகிழ்வு, ஒரு மனிதனின் வாழ்வில் வீடு ஒரு உறவு போல் முக்கிய பங்கு கொள்வது பகிர்வில் புரிந்தது. நீங்கள் கூறியபடி வயதான காலத்தைக் கருத்தில் கொண்டு சிறியதாய் இருந்தாலும் வசதியான இடத்தில் வீட்டை அமைப்பது புத்திசாலித்தனம். ஜன்னல் கதையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...

    வை.கோபாலகிருஷ்ணன் February 12, 2013 at 12:01 AM
    ezhil February 10, 2013 at 4:13 AM

    வாங்கோ, வணக்கம்.

    //பெற்றோர்கள் வாழ்ந்த இடத்திலேயே வீடு அமைந்ததில் மகிழ்வு, ஒரு மனிதனின் வாழ்வில் வீடு ஒரு உறவு போல் முக்கிய பங்கு கொள்வது பகிர்வில் புரிந்தது.

    நீங்கள் கூறியபடி வயதான காலத்தைக் கருத்தில் கொண்டு சிறியதாய் இருந்தாலும் வசதியான இடத்தில் வீட்டை அமைப்பது புத்திசாலித்தனம் .

    ஜன்னல் கதையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஐயா...//

    தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் , என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

    -=-=-=-=-

    http://gopu1949.blogspot.in/2015/03/7.html

    சமீபத்திய மேற்படி என் பதிவினில்கூட தங்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    -=-=-=-=-

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், இனிய நினைவலைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    VGK

    நீக்கு
  10. திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் விரைவில் பூரண நலம்காண பிரார்த்திக்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 1, 2015 at 9:56 PM

    வாங்கோ நண்பரே, வணக்கம்.

    //திருமதி. ராஜராஜேஸ்வரி அம்மா அவர்கள் விரைவில் பூரண நலம்காண பிரார்த்திக்கிறேன்.//

    மிக்க நன்றி, நண்பா.

    நீக்கு

  11. மீண்டும் மழை!

   பரிசு மழை!

   யாரெல்லாம் நனையப் போகிறா(றீ)ர்கள்?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் April 1, 2015 at 9:57 PM

    //மீண்டும் மழை!

    பரிசு மழை!

    யாரெல்லாம் நனையப் போகிறா(றீ)ர்கள்?//

    தெரியவில்லையே ! நீங்க நனைய முதலில் முயற்சி செய்யுங்கள், நண்பரே !! :)

    தங்களின் அன்பான வருகைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நீக்கு
  12. ஆஹா.... மீண்டும் உங்கள் தளத்தில் ஒரு போட்டி..... மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.....

   திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வெங்கட் நாகராஜ் April 2, 2015 at 12:00 PM

    வாங்கோ வெங்கட்ஜி, வணக்கம்.

    //ஆஹா.... மீண்டும் உங்கள் தளத்தில் ஒரு போட்டி..... மகிழ்ச்சியாக இருக்கிறது. போட்டியில் பங்கு பெறப் போகும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.....//

    தங்கள் வாழ்த்துகளுக்கு அனைவர் சார்பிலும் மிக்க நன்றி.

    //திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகளும்.....//

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

    நீக்கு
  13. ஆஹா! வாத்யாரே! மறுபடியும் கிளம்பிட்டீங்களா! அடி பின்னுங்க! ஆமா நீங்க கணக்கதியாரியாக வேல பாத்து - ரிட்டையராகிட்டீங்கன்னு நெனச்சுகிட்டிருக்கேன்! இந்த எக்கச்சக்கமான கணக்கயெல்லாம் பாத்தா....சர்வீஸ் எக்ஸ்டன்ஷன் குடுத்துட்டமாதிரி தெரியுதே! கலக்குங்க! சகோதரி ராஜராஜேஸ்வரி விரைவில் பூரணகுணமடைய எனது வேண்டுதல்களும்! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. RAVIJI RAVI April 2, 2015 at 9:12 PM

    வாங்கோ வாத்யாரே, நலமாக உள்ளீர்களா ? உங்களைப் பார்த்தே பல நாட்கள் [வருஷங்கள்] ஆச்சு. :)

    தங்களின் அபூர்வ வருகைக்கு மிக்க நன்றி.

    //ஆஹா! வாத்யாரே! மறுபடியும் கிளம்பிட்டீங்களா! அடி பின்னுங்க!//

    இந்தப் போட்டியில் கலந்துகொண்டு அடி பின்ன வேண்டியது நீங்க மட்டுமே. நான் அல்ல.

    //ஆமா நீங்க கணக்கதியாரியாக வேல பாத்து - ரிட்டையராகிட்டீங்கன்னு நெனச்சுகிட்டிருக்கேன்! இந்த எக்கச்சக்கமான கணக்கயெல்லாம் பாத்தா....சர்வீஸ் எக்ஸ்டன்ஷன் குடுத்துட்டமாதிரி தெரியுதே! கலக்குங்க! //

    அங்கு நான் உழைத்தது போதும் ஸ்வாமி ! இந்த எக்கச்சக்கமான கணக்கெல்லாம் உங்களுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளனவாக்கும் ! :)

    //சகோதரி ராஜராஜேஸ்வரி விரைவில் பூரணகுணமடைய எனது வேண்டுதல்களும்! //

    மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

    //என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்//

    வாழ்க ! அன்புடன் VGK

    நீக்கு
  14. நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வாசித்த நிறைவு போல், நிறைவுப் பகுதியும் நிறைவாகத் தான் இருக்கிறது; குறை ஒன்றும் இல்லை, கோபு சார்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஜீவி April 4, 2015 at 3:42 PM

    வாங்கோ, வணக்கம். நமஸ்காரங்கள்.

    //நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வாசித்த நிறைவு போல், நிறைவுப் பகுதியும் நிறைவாகத் தான் இருக்கிறது; குறை ஒன்றும் இல்லை, கோபு சார்!//

    தங்களின் மூலம் இதனைக் கேட்பது, எனக்கு ஓர் தனியான மகிழ்ச்சியளிக்கிறது.

    தாங்கள் இந்தத்தொடரின் முதல்பகுதியில் ஒருசில ஆலோசனைகள் சொல்லியிருந்தீர்கள்.

    அவற்றை அப்போது ஏனோ உடனடியாக ஏற்றுக்கொண்டு என்னால் அதற்கு செயல் வடிவம் கொடுக்க இயலவில்லை. ஏனெனில் இந்த என் தொடரை ஏற்கனவே என் மனதில் ஓர் படமாக வரைந்து கொண்டுவிட்டேன். அவ்வாறு அழகாக என் மனதில் வரைந்துவிட்டதோர் ஓவியத்தில் மேலும் கைவைக்க எனக்கு ஏனோ மனம் இடம் தரவில்லை.

    இருப்பினும் பிறகு யோசித்தேன். நான் பதிவிட ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளில் ஒரு 10 % பதிவுகளை மட்டும், தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு வருகை தந்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்துள்ள ஒருசிலரின் பின்னூட்டங்களையாவது RANDOM ஆகத் தேர்ந்தெடுத்து, வெளியிடலாமே என நினைத்தேன். அதுவே ஏராளமான எண்ணிக்கைகளாகத் தோன்றி என்னை மலைக்க வைத்துவிட்டன.

    பிறகு அன்றுமுதல் இன்றுவரை ஓரளவு தொடர்ச்சியாக என் பதிவுகள் பக்கம் அடிக்கடி வருகை தந்து கருத்தளித்துள்ளவர்களை மட்டும் துணிந்து நீக்கிக்கொண்டேன் ..... அதுவும் அன்புள்ள அவர்கள் என் மீது கோபம் ஏதும் கொள்ளவே மாட்டார்கள் என்ற அசைக்க முடியாததோர் நம்பிக்கையில்.

    அப்படியும் சுமார் 46 நபர்கள் அளித்திருந்த சுமார் 300 பின்னூட்டங்களை நான் வெளியிடும்படியாக ஆனது. இது மொத்தம் எனக்குக் கிடைத்துள்ள பின்னூட்டங்களில் ஒரு விழுக்காடு [சதவீதம்] மட்டுமே. Just only 1% of the Total Number of Comments.

    இந்த 46 நபர்களிலும் சரிபாதி நபர்கள் இப்போது பதிவுலகில் இல்லாமல் சற்றே ஒதுங்கியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். நானும் ஒதுங்கிக்கொள்ளும் முன்பு இந்தத் தொடரினை எப்படியாவது வெளியிட்டுவிடவேண்டும் என்ற ஆவலில் மட்டுமே இதனை இவ்வளவு அவசரமாகச் செய்து முடித்துள்ளேன். இது எனக்கு என்றுமே ஓர் இனிய நினைவலைகளாகவும், முக்கிய ஆவணமாகவும் இருக்கக்கூடும்.

    >>>>>

    நீக்கு
   2. இந்த Random Selection Comments போக நிறைய பதிவுகளில் தங்களின் ஆழமான கருத்துக்கள் என்னை மிகவும் மகிழ்வடையச் செய்துள்ளன.

    என் சிறுகதைகளை சப்ஜாடாக விட்டுவிட்டு, மற்ற பதிவுகளை மட்டுமே எடுத்துக்கொண்டு தங்களின் பின்னூட்டங்களை மட்டும் ஓர் மிகச்சிறிய ஆராய்ச்சி செய்தேன்.

    உதாரணமாக சிலவற்றை மட்டும் இங்கு வெளியிட விரும்புகிறேன். இவைகளும் ஆங்காங்கே என் கண்களில் பட்ட RANDOM SELECTIONS மட்டுமே.

    என் எழுத்துக்களுக்கு அவ்வப்போது ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள பின்னூட்டங்களில் தங்களுடைய பின்னூட்டங்களுக்கும் ஓர் தனிச்சிறப்பான இடம் உண்டு என்பதையும் மிகப்பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    நீக்கு
   3. காலம் மாறிப்போச்சு [அனுபவம்]
    http://gopu1949.blogspot.in/2011/08/2-of-2_31.html

    ஜீவி September 4, 2011 at 1:13 PM

    //காலம் மாறிப்போச்சு! இருப்பினும் பிள்ளையார் காப்பாற்றுவார்!! //

    -- இது தான் வை.கோ.சாரின் ஸ்டைல்!

    நல்ல மனசிலிருந்து வெளிப்பட்ட நம்பிக்கை வரிகள் வெளிப்பூச்சுகள் இன்றி பளிச்சென்று தெரிந்தன.

    'பிள்ளையார் காப்பாற்றுவார் என்று நம்பிச் செயல்படுவதில் எந்தக் காலத்திலும் எந்த மாற்றமும் இல்லை' என்பதைத் தான் உங்கள் பாணியில எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள்!

    >>>>>

    நீக்கு
   4. காவேரிக்கரை இருக்கு .... கரைமேலே ____ இருக்கு
    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

    ஜீவி December 29, 2011 at 10:11 AM

    காவேரிக் கரை இருக்கு
    கரைமேலே கோயிலிருக்கு
    கோயிலிலே தெய்வமிருக்கு
    தெய்வத்திற்குத் தான் சக்தி இருக்கு.

    >>>>>

    நீக்கு
   5. சுவானுபவா 2012 கலை நிகழ்ச்சிகள்
    http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html

    ஜீவி March 20, 2012 at 5:32 PM

    விசாக ஹரி!-- கேட்கவே வேண்டாம்.. அவரது கதா காலட்சேபம் அவையில் அல்லது தொலைக்காட்சி முன் உட்கார்ந்து அவர் முகபாவம் பார்த்து நாமும் அதே உணர்வுகளைப் பெறும் பேறு பெற்று ரசித்துக் கேட்டு ஆனந்தம் அடைய வேண்டிய ஒன்று. சொல்லும் சொல்லுக்கேற்பவான உணர்வுகள் அவரை ஆட்கொண்டு, அந்த உணர்வுகளின் ஆளுகையில் அந்த உணர்வுகளே அவராகிப் போவார். இந்த பாணி இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி இதுவரை யாரும் பெற்றதில்லை.

    அப்படியானவரின் கதா காலட்சேபத்தின் ஒரு பகுதியை கேட்டு அனுபவித்து மிகச் சிறப்பாக கோர்வையாக வழங்கியிருக்கிறீர்கள். நேர்த்தியான நேரேஷன்! படிப்பதற்கு சுகமாக இருந்தது!

    மகாராஜா அம்பரீஷ் என்னும் விஷ்ணு பக்தரின் சரிதம் கேட்கும் பொழுதெல்லாம் நான் நினைத்துக் கொள்வது ஒன்றுண்டு.

    அப்படியான அடக்கம் கொண்டுள் ளோரை எதிர் கொள்ளும் பொழுது எதிராளிக்கும் அந்த அடக்கம் வர வேண்டுமென்பது. பணிவு என்னும் பண்பு கொண்டோரைப் பார்க்கும் பொழுதெல்லாம் பார்ப்போருக்கும் அவரின் அந்தப் பணிவு பற்றிக் கொள்ள வேண்டும். இந்தக் கதையிலிருந்து இதுவே நாம் பெறும் பாடமாகத் தெரிகிறது.

    அடுத்த பகுதியையும் (கேட்க) வாசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கொடுங்கள், கோபால்ஜி!

    >>>>>

    நீக்கு
   6. சுவானுபவா 2012 கலை நிகழ்ச்சிகள் - இறுதிப்பகுதி-2
    http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-2-of-2.html

    ஜீவி March 21, 2012 at 5:22 PM
    //என் பேனாவை... தனியாக பத்திரப்படுத்திக் கொண்டேன்.//

    -- இந்த வரிகளைப் படிக்கும் முன் இதைத்தான் சொல்ல நினைத்தேன்.

    இந்த மாதிரி நான்கு பேனாக்கள் நான் வைத்திருக்கிறேன்.

    பேனா வைக்கும் தனிப் பெட்டியில் வைத்து, அததில் அவரவர் பெயர் எழுதி..

    >>>>>

    நீக்கு
   7. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - சிறிய தொடர்
    http://gopu1949.blogspot.in/2012/03/1.html

    ஜீவி March 10, 2012 at 6:29 PM

    எழுத்து என்று வந்து விட்டால் எதையும் அனுபவித்து எழுதறது தான் உங்க வழக்கம்ன்னு எல்லா நேரங்களிலும் தெரியறது. அதான் வேணும். அது வரமும் கூட.

    உங்கள் பள்ளி நாட்கள் பற்றிய விவரிப்புகளும் அவ்வாறே இருந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆறு பகுதிகள் என்றால் கேட்கவே வேண்டாம். சிரிப்பும் கும்மாளமும் தான். கூடச் சேர்ந்து கும்மி அடிக்கறதுக்கு நிறைய சுவாரஸ்யங்கள் தட்டுப்படும்ன்னு இப்பவே தெரியறது.

    தகர ஸ்லேட்டை விட மா ஸ்லேட் தான் எழுதறத்துக்கு சுகமா இருக்கும். அதுவும் பழுப்பு நிறத்தில் நுனியில் மட்டும் வெள்ளையாய் பால் குச்சின்னு ஒரு பல்பம் இருக்குமே, அதுனாலே எழுதினா எழுத்தும் பால் வெள்ளைலே இருக்கும் இல்லையா? அடடா! பல்பங்களிலும் எத்தனை வகை?.. குண்டா மூணு பட்டையோட, ஒவ்வொரு பட்டைக்கும் ஒரு கலர்ன்னு மூணு கலர்லே, எந்தக் கலர் வேணுமோ அந்தக் கலர்ப் பக்கம் திருப்பி எழுதற மாதிரி இருக்குமே, அந்த பல்பம் தான் பல்பங்களின் ராஜா இல்லையா?

    ஜமாயுங்கள். தொடர்கிறேன்.

    >>>>>

    நீக்கு
   8. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-2
    http://gopu1949.blogspot.in/2012/03/2.html

    ஜீவி March 10, 2012 at 7:27 PM

    //இந்த மடிசார் அந்த மடிசாரிடம் என்னை ஒப்படைத்து விட்டு வெளியே போக முயற்சிக்கும். நான் கண்களில் கண்ணீருடன் செய்வதறியாது என் அக்காவை ஏக்கத்துடன் பார்ப்பேன்.//

    படப்பிடிப்பாய் எழுத்துக்களை எழுதுவது என்றால் இது தான்!

    //சற்று குண்டாக இருப்பார். வெயில் ஏறஏற அவர் முகம் சிவந்து ஜொலிக்க ஆரம்பித்து விடும். //

    ஹஹ்ஹஹா..

    //குழந்தையின் கடுக்கன்களும் மூக்குத்தியும் காணாமல் போய் விடுமோ என்று அஞ்சி, அவனின் பெற்றோர்கள் அவனின் பள்ளிப்படிப்பையே நிறுத்தி விட்டார்களோ என்னவோ! //

    என்ன ஒரு சந்தேகம்!

    //செம்பருத்திப்பூக்களை நிறைய பறித்து வந்து தன் மேஜையில் வைத்துக்கொண்டு, அடிக்கடி அவற்றை ஒவ்வொன்றாக மென்று சாப்பிடுவார்.//

    என்ன ஒரு ஆப்ஸர்வேஷன்! அதுவும் இன்றும் நினைவில் நிற்கிற மாதிரி!

    ஜோர்! தொடருங்கள். தொடர்கிறேன்.

    >>>>>

    நீக்கு
   9. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-3
    http://gopu1949.blogspot.in/2012/03/3.html

    ஜீவி March 13, 2012 at 12:35 AM

    'நாளையும் தொடரும்' என்கிற வரியைக் கட்டக் கடைசியில் பார்த்த பிறகு தான் எல்லாத்தையும் இன்னும் கொட்டித் தீர்க்கவில்லை, இன்னும் பாக்கி வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்தது.

    இந்தப் பகுதியில் அவ்வளவு ரசனைகள். அத்தனையையும் அந்த வயசிலேயே ஏற்பட்டதா, இல்லை, அந்த வயசு நினைவுகளை இந்த வயசில் அசை போட்டதால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. எப்போ ஏற்பட்டால் என்ன?.. தான் ரசித்ததை மற்றவர்களும் ரசிக்க வைக்க உங்களால் முடிகிறது. எழுத்தின் தாத்பரியமே அது தானே?..

    நன்றி, கோபு சார்!

    >>>>>

    நீக்கு
   10. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-4
    http://gopu1949.blogspot.in/2012/03/4.html

    ஜீவி March 13, 2012 at 12:49 AM

    தாங்கள் வளர்ந்து ஆளாகிய விதம் தெரிகிறது, கோபால்ஜி!

    படிப்பதற்கு வெறும் வார்த்தைக் கோர்வைகள் தான்! ஆனால் அத்தனைக்குள்ளும் ஒளிந்திருக்கும் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கும் ஒளிகாட்டும் தீபமாய் சுடர்விடுகிறது!

    அதுவும் சாதாரண நிலையிலிருந்து வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் என்றால், அவர்கள் சமூகத்திற்கு தரும் சேதியே தனி! அந்தத் தனித்துவம் தங்களிடம் தாராளமாய் குடிகொண்டிருக்கிறது..

    நல்ல அனுபவங்களை தன்னுள் தானே என்று விழுங்கிக் கொள்ளாமல் மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. நன்றி எதற்கென்றால் பகிர்ந்தவை பாடமாய் இருப்பதால் தான்!

    >>>>>

    நீக்கு
   11. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-5
    http://gopu1949.blogspot.in/2012/03/5.html

    ஜீவி March 16, 2012 at 8:29 PM

    //அந்த அம்பாள் வழக்கம்போல் அன்று என்னைப்பார்த்து புன்னகை புரிந்ததோடு சரி. //

    ஏதேதோ சொந்த வியாகூலங்களைப் பற்றி எழுதிக் கொண்டு வருகையில் இடையில் அதுவாக வந்து விழுந்த மிகுந்த அர்த்தம் உள்ள ஒரு வரி!

    //இந்த நடந்த உண்மைகளை அப்படியே ஆரம்பத்திலேயே ஒத்துக்கொண்டால், தேர்வுக் கண்காணிப்பாளராக அன்று வந்திருந்த, அந்தப் பசுபதி வாத்யாரை மாட்டி விட்டதாக ஆகுமே என பாஷாவும் கணேசனும் கொஞ்சம் தயங்கியுள்ளார்கள். //

    இத்தனை ரகளைகளுக்கும் நடுவே, அந்த பாஷா + கணேசனும் நல்ல கேரக்டர்கள் தான் என்று தெரிகிறது பாருங்கள்!

    //பிறகு அந்த நல்ல மனிதரான சற்குணம் வாத்யார் என்னைத் தனியே அழைத்து, ஆறுதல் கூறினார்.//

    எல்லா வாத்தியார்களுக்கும் அவர்கள் பெயர்களுக்கு முன் தாங்கள் போட்டிருந்த 'திரு', சிறு வயதில் தனக்குக் கல்வி கற்பித்த உயாத்தியார்களிடம் தாங்கள் காட்டும் மரியாதையைத் தெரியப்படுத்துகிறது என்றால், பரமசிவம் சாருக்கு நீங்கள் போட்டிருக்கிற 'திரு' ரொம்பவும் அர்த்தம் நிறைந்ததாகப் பட்டது.

    >>>>>

    நீக்கு
   12. மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - பகுதி-7
    http://gopu1949.blogspot.in/2012/03/7.html

    ஜீவி March 15, 2012 at 11:53 PM

    //எப்போதும் எந்த வயதிலும் ஏதாவது படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுவே நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும், மன நிம்மதியையும் தரும். அப்போது தான் நம் வாரிசுகளே நம்மை மதிப்பார்கள். நாமே நம் வாரிசுகளுக்கு ஓர் முன்னுதாரணமாகவும் திகழலாம்.

    நாம் கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு. ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். படிப்பறிவு + அனுபவப்பட்டறிவு இரண்டுமே வாழ்க்கைக்கு மிகவும் தேவை தான். //

    நல்ல செய்தியைக் கொடுத்திருக்கிறீர்கள். 'அனுபவப்பட்ட ஒரு மனிதனின் வார்த்தைகள்; கேளுங்கள்' என்பதற்காகத் தான் இதற்கு முன் எழுதிய ஆறு பகுதிகளும் போலிருக்கு.

    மனத்தில் பட்டதை மற்றவர்களும் தெரியப்படுத்த வேண்டும் என்கிற ஆர்வத்தில் பொறுமையாக ஏழு அத்தியாங்கள் எழுதியமைக்கு வாழ்த்துக்கள்.

    >>>>>

    நீக்கு
   13. இயற்கை அழகில் ’இடுக்கி’ இன்பச் சுற்றுலா
    http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html

    ஜீவி March 17, 2012 at 9:01 PM

    சிறு வயது நினைப்பில் தோய்ந்த பள்ளிக் கால நினைவுகளை, ஒரு சுற்றுலாவுடன் நிறைவு செய்யும் எண்ணம் உங்கள் மனத்தில் தோன்றியது ரொம்பவும் அருமை! சொகுசு பஸ்ஸில் கூட்டிச் சென்று, இயற்கையின் பச்சைக் கம்பள விரிப்பில் இளைப்பாற வைத்து, ஒன்று பாக்கியில்லாமல் என்று அறுசுவை விருந்தை அள்ளிப் பருக வைத்து.. உங்கள் மனம் போல் எல்லாமே நிறைந்த அனுபவம் ஆகிவிட்டது.

    மிக்க நன்றி, கோபு சார்!

    >>>>>

    நீக்கு
   14. ஜான்பேட்டா .... ஸ்பெஷல் கேரக்டர்
    http://gopu1949.blogspot.in/2012/04/1-of-2.html

    ஜீவி April 6, 2012 at 5:28 AM

    //ஜான் பேட்டா’ வுக்கு பதிலாக சற்றே செல்லமாக ‘ஜான் டப்பா’ என்று சமயத்தில் அவரை அழைப்பதுண்டு.//

    //இரண்டு கைகளையும் பல்ப் ஹாரன் அடிப்பதுபோல காட்டினால் பத்து ரூபாய் என்று புரிந்து கொண்டு..//

    //ஆடையோ கோடையோ, குளிரோ, மழையோ, பனியோ எதையும் பொருட்படுத்தாத சரீரம் அவருக்கு//

    //கம்பெனியை கூட்டிப் பெருக்குவதிலிருந்து, பானையில் குடிதண்ணீர் பிடித்து வைப்பதிலிருந்து, கம்பெனிக்குள் சுற்றும் எலி, பெருச்சாளி, மரப்பல்லி, கரப்பான்பூச்சிகளை அடித்து வெளியேற்றுவதிலிருந்து, ஒட்டடை அடிப்பதிலிருந்து எல்லாமே அவர் வேலைகளே. அந்தக்கம்பெனிக்கு வாட்ச்மேனும் அவரே. வெளி வேலைகளுக்குச் செல்வதும் அவரே. மொத்தத்தில் ஆல்-இன்-ஆல் அழகிரி ஜான்பேட்டாவே.//

    -- ஜான் பேட்டாவை இப்படியும் அப்படியும் புரட்டிப் புரட்டி இவ்வளவு டேட்டாஸ் கொடுத்தும் படிப்பவர்கள் அவரை வேறு ஏதானும் மாதிரி நினைத்து விடுவார்களோ என்று பயந்து இதுவரை விவரித்ததில் திருப்திபடாமல் கட்டக் கடைசியாக,

    //ஒரேயடியாக ஓர் எடுபிடி ஆசாமி என்றும் அவரைச் சொல்லிவிட முடியாது.//

    - என்று சொல்லியிருக்கிறீர்களே, இந்த வரிகளே, அடுத்த பகுதிக்கு அச்சாரம் மட்டுமில்லை, அட்சர லட்சம் பெறும்!

    ஜான் பேட்டாவின் சகலகலாவல்லமைகள் சொல்லி முடிந்ததும், அடுத்தாப்லே,

    அந்த டீக்கடை நாயர்! சரியா?..

    >>>>>

    நீக்கு
   15. ஜான்பேட்டா .... ஸ்பெஷல் கேரக்டர்
    http://gopu1949.blogspot.in/2012/04/1-of-2.html

    ஜீவி April 6, 2012 at 5:42 AM
    //பழைய எழுத்தாளர் எஸ்.வி.வி அவர்களின் “வாழ்க்கையே வாழ்க்கை” என்ற நூலைப ரசித்துப் படித்த..//

    ரொம்ப நாளைக்கு முன்னாடியே எஸ்.வி.வி.யின் நகைச்சிறப்பை கோபால்ஜியில் பார்த்து மனம் மகிழ்ந்து சொல்லி விட்டேன்! இப்பொழுது, திரு. இளங்கோ அவர்களும் அவரையே நினைவு கொண்ட பொழுது மகிழ்ச்சி பிடிபடவில்லை.

    ஆனந்தவிகடன் தாத்தா இருகரம் நீட்டி வரவேற்க காத்திருப்பதாக நினைவில் பிரமை! கேட்டுக் கொண்டீர்களா, கோபால்ஜி! (புனைப்பெயர் கூட ரெடி)

    >>>>>

    நீக்கு
   16. ஜான்பேட்டா .... ஸ்பெஷல் கேரக்டர் .... இறுதிப்பகுதி-2
    http://gopu1949.blogspot.in/2012/04/2-of-2.html

    ஜீவி April 15, 2012 at 12:48 AM
    //ஜான்பேட்டாவிடம் இதுபோன்ற பேங்க் வேலைகள் எல்லாவற்றையும் ஒப்படைத்தபின், அவரும் பேங்குக்குக் கிளம்பிய பின், என்னிடம் அந்தக் கேஷியர் இது பற்றி புலம்பிக் கொண்டிருப்பார்.

    ”அவன் மிகவும் நல்லவன் தான். நாணயமானவன் தான். சாமர்த்தியமான ஆசாமி தான். இருந்தாலும் பண விஷயம் ஹேண்ட்பேக் போன்ற எதுவும் எடுத்துச்செல்லாமல், வேஷ்டித்தலைப்பில் இவ்வளவு பணத்தையும் முடிந்து கொண்டு, அந்த பெல்லும் பிரேக்கும் இல்லாத பாடாவதி சைக்கிளில் செல்கிறான். சொன்ன பேச்சே கேட்பதில்லை” என என்னிடம் புலம்புவார்.//

    அந்த கேஷ்யரின் மன நிலையை அந்த கேஷ்யர் உங்களிடம் கவலைப் பட்டுச் சொன்ன மாதிரியே நீங்கள் இப்பொழுது எங்களிடம் சொல்லும் பொழுது, அதை அச்சு அசலாக இப்பொழுது உணர முடிகிறது. ஜான்பேட்டா பேங்கில் பணத்தைக் கட்டி ரசீது வாங்கி முடிக்கும் வரை
    தன் பொறுப்பு முடியவில்லை என்கிற மாதிரி தன் கவலையாக அதைக் கட்டிச் சுமந்திருக்கிறார் அந்த கேஷ்யர். எவ்வளவு மானியான மனிதர்கள் என்று நெட்டுயிர்க்கத் தான் முடிகிறது!

    இந்த இடத்தில் தான் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு ஆசை. அந்த கேஷ்யர் இந்தக் கவலையை உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொழுது உங்கள் உணர்வு எப்படி இருக்கும்?..

    அ) கேஷ்யர் பாடு, ஜான் பேட்டா பாடு. ஏதோ கூட வேலைசெய்கிற தோஷத்திற்கு சொல்கிறார். கேட்டுக் கொள்வோம். அல்லது கேட்டுக்கற மாதிரி பாவனையாவது பண்ணுவோம்.

    ஆ) ஜான் பேட்டா வழக்கம் போல் எல்லாவற்றையும் சரியாக முடித்துக் கொண்டு வருவான். இந்த மனுஷன் கிடந்து ஏன் இப்படிக் கவலைப் படுகிறார்?..

    இ) ஆனாலும் இந்த கேஷ்யருக்கு இதே வேலையாப் போச்சு. ஆ,ஊன்னா இதான். தன் கவலையைத் தான் சுமக்க வேண்டியது தானே? இன்னொருத்தன் தோளில் அதை ஏன் ஏற்றுகிறார்?..

    உ) ஆனாலும் இந்த ஜான்பேட்டாவுக்கு இத்தனை அழுத்தம் கூடாது. ஒழுங்கா முடித்து விட்டுத் தான் வருவான். கேஷ்யருக்கு ஆறுதலா அவனும் தான் அவர் கிட்டே ஒரு வார்த்தை சொல்லி விட்டுப் போனால் என்னவாம்?..

    ஊ) இந்த மேனேஜர் தான் கொஞ்சம் கறாராக இவன் கிட்டே இருந்தால் என்னவாம், காசை வாங்கிக் கொண்டதற்கு கையெழுத்துப் போட்டுப் போன்னு ஜான் பேட்டா கிட்டே கண்டிஷனா சொல்லக் கூடாதா, என்ன?.. நாளைக்கு ஒண்ணுன்னா, அவனவன் ஒதுங்கிண்டிடுவான். பண விஷயம்ன்னா, யாரானும் ஜவாப்தாரியா இருக்க வேண்டாமோ?.. பாவம் கேஷ்யர்!... என்ன பணம் இவர் கொடுத்தார், இவன் என்ன பணம் அவர் கிட்டே வாங்கிண்டான்ங்கறதுக்கு என்ன அத்தாட்சி?.. ஒரு சீட்டு, நாட்டு கிடையாதா?.. இதென்ன, ஆபீசா சந்தை மடமா? ஜான் பேட்டா சூரன்! கொடுத்த வேலையைச் சரியாத் தான் முடிப்பான்.. இருந்தாலும், பண விஷயம் இல்லையா,சுவாமி!

    'அ'விலிருந்து 'ஊ'வரை.. எது உங்கள் சாய்ஸ் கோபால்ஜி?.. உங்கள் எழுத்தைப் படிப்பது உங்களைப் படிக்கிற மாதிரி. அவ்வளவு வெளிப்படையானது. எனக்குத் தெரியும். என்ன சொல்வீர்கள், என்று.
    இருந்தாலும் நீங்களும் சொல்லிட்டால், ஒரு அல்ப திருப்தி. அதுக்காகத் தான்!

    --0--

    இப்பொழுது தான் நேரம் கிடைத்தது. இரண்டாம் பகுதியையும் படித்து விட்டேன். நினைவுகள் என்பது நூல் நுனிமுனையைப் பற்றி இழுப்பது போலத் தான். சில பேருக்கு அந்த நுனி மட்டும் கிடைத்து விட்டால், ஆற்றொழுக்கு மாதிரி ஒன்றன் பின் ஒன்றாக போட்டி போட்டுக் கொண்டு அதுக்கென்று பிரத்தேயகமாக பிரயத்தனப்படாமல் வரிசைக் கிரமமாக நினைவுக்கு வரும்.

    அந்த சிலரில் நீங்களும் ஒருவர் என்று அடிச்சுச் சொல்லலாம்.

    ரிடையர் ஆன காலத்தில் வாசல் திண்ணையின் ஒரு மூலையில் உட்கார்ந்து தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருக்கலாம். இல்லை, தன்னைப் போல இன்னொருவரைப் பக்கத்தில் உட்கார வைத்து பொழுது போக்குக்குக்காக பழைய நினைவுகளை ஏனோதானோ வென்று பேசிக் கொண்டிருக்கலாம். இதெல்லாம் எல்லோரும் முடியும்.

    ஆனால், இதையெல்லாம் எழுத்தில் வடித்துச் சொல்லி, பிறருக்கு இருக்கும் ஆயிரத்தெட்டு வேலைகளுக்கிடையில் கொஞ்சம் கூட சலிப்புத் தட்டாமல் படிக்க வைத்து, அவர்களும் புரிந்து பாராட்டி மகிழ வேண்டுமானால், சத்தியமாக அது லேசுப்பட்ட காரியம் இல்லை.

    அந்த லேசுப்படாத செயல் மிகமிக லேசாக இயல்பாக உங்களுக்குக் கைவந்திருக்கிறது.

    தானும் சந்தோஷப்பட்டு பிறரையும் சந்தோஷப்படுத்துவது இறைவன் கொடுத்த வரம். அதற்காகத் தான் நன்றி சொல்லத் தோன்றுகிறது.

    மிக்க நன்றி, கோபால்ஜி!

    >>>>>

    நீக்கு
   17. ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் .. நாடகம் [பகுதி-1]
    By வை. கோபாலகிருஷ்ணன்
    http://gopu1949.blogspot.in/2012/04/1.html

    ஜீவி April 16, 2012 at 1:00 AM

    இணையப் பதிவுகளில் இதுவரை யாரும் நாடகம் எழுதி நான் படித்ததில்லை. அப்படி ஒரு எண்ணம் எனக்கிருந்தது.

    நீங்கள் தொடங்கி வைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ooooo

    ஸ்ரீராம். April 16, 2012 at 6:08 AM

    பட்டு - கிட்டு பேரைச் சொல்லி தொடங்கியிருக்கே ஒரு லட்டு...(பதிவு)

    //ஜீவி said...
    இணையப் பதிவுகளில் இதுவரை யாரும் நாடகம் எழுதி நான் படித்ததில்லை.//

    ஜீவி சார்...அப்பாதுரை நாடகம் பதிவு எழுதி இருக்கிறார்.

    ooooo

    ஜீவி April 16, 2012 at 6:49 AM

    ஸ்ரீராம், தகவலுக்கு நன்றி. அங்கு போய் படித்துப் பார்க்கிறேன்.

    >>>>>

    நீக்கு
   18. ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் .. நாடகம் [பகுதி-15]
    By வை. கோபாலகிருஷ்ணன்
    http://gopu1949.blogspot.in/2012/04/15.html

    ஜீவி April 27, 2012 at 11:35 PM

    ஸ்ரீ சங்கர ஜயந்தி திருநாளோடு தொடர் நாடகப் பதிவும் நிறைவு கொண்டுள்ளது பொருத்தம். குழந்தைகள் நாடகமாய்ப் போடுகிற மாதிரி, அவர்கள் மனத்தில் பதிந்து இலயிக்கிற மாதிரி எளிமையாய் இருந்தது விசேஷம்.

    >>>>>

    நீக்கு
   19. நாடக ரஸிகர்களுக்கு நன்றி அறிவிப்பு
    http://gopu1949.blogspot.in/2012/05/blog-post.html

    ஜீவி May 4, 2012 at 2:17 AM

    கோபால்ஜி சார்! உங்களுக்கு ரொம்ப ரொம்ப பெரிய மனசு! 'வாங்க, பறக்கலாம்' என்று நீங்கள் கூப்பிடும் பொழுதே மனசு ரெக்கை கட்டிக் கொண்டு பறக்க ஆரம்பிச்சாச்சு..

    ஆனா எதுக்கு இங்கே கொண்டு வந்து ஒரு விமானத்தை இறக்கியிருக்கீங்கன் னும் தெரிலே. எதுக்கானும் இருக்கட்டும்!

    ஆனா, நான் சொல்ற பறத்தலுக்கு மட்டும் எந்த விமானமும் தேவையில்லே.. இதுலே இருந்த இடத்திலிருந்தே பறக்கற வித்தையைச் செய்யலாம்; மனசை மட்டும் லேசாக்கி தங்கிட்டேயிருந்து கழட்டி விட்டாப் போதும். நீங்க கூட அடிக்கடி இப்படிப் பறக்கறதாலே, நான் சொல்லணும்ன்னு இல்லே, இல்லையா?..

    நீங்க சொன்னது தான்; அதே காரணங்கள் தான். அத்தனைக்கும் நடுவே பதிவெழுதறது; படிக்கறதுங்கற ரெண்டு காரியத்தை ஓரளவு செஞ்சாலும் இந்த பின்னூட்டம் போடறதை மட்டும் அப்பவே செஞ்சாத் தான் ஆச்சு; தள்ளிப் போட்டோமோ தொலைஞ்சோம். சேர்ந்து போய்ட்றதா?.. பிராக்ட்டிகலா முடிலே சார்! 'ரொம்ப அருமை சார்' 'பிரமாதம் சார்'ன்னு போட்டுட்டு ஓடிடலாம்ன்னா மனசு கேக்கலே சார்! இந்த வயசில் இவ்வளவு சிரமம் எடுத்திண்டு எழுதியிருக்கார்; அவர் எழுதினதிலேந்து ரெண்டொரு வரியை எடுத்துச் சொல்லி பாராட்டணும்ன்னு தோணும். இதனாலே தான் டிலேன்னு தெரியறது; தெரிஞ்சி என்ன பிரயோஜனம்?.. பழக்கத்தை விட முடியலேயே சார்!

    உங்களோட 'பகவத்பாதாளின்' பக்கங்களை தொடர்ந்து படிச்சேன்.

    தத்துவார்த்தமாக நிறைய பேச வேண்டியிருக்கு. எனக்கு எப்பவுமே அத்வைதம்ன்னா, உடனே விசிஷ்டாத் வைதத்தையும், துவைதத்தையும் பக்கத்லே எடுத்து வைச்சிக்கணும். முரண்லாம் எடுத்து ஒதுக்கி வைச்சிட்டு, ஒத்து வரதையெல்லாம் ஒண்ணாச் சேத்து சொல்லணும். சொல்லணும்ன்னு தோண்றதே தவிர நிகழ்த்திக் காட்டணும்ங்கறது கனவா இருக்கு. நனவாக்க முடியாததுக்குக் காரணம், நீங்க சொல்லியிருக்கீங்களே, அதே காரணங்கள் தான்! பார்க்கலாம்.. ஒரு பெரியவர் இப்படிச் சொல்லிச் சொல்லியே நிறைய காரியங்களை சாதிச்சிருக்கார்! அந்த நம்பிக்கை தான்!

    எத்தனை 'சார்'கள்! எத்தனை 'மேடம்'கள்! ஒரு படையேனா திரண்டிருக்கு! இந்த பதிவுக்கு ஒண்ணோ ரெண்டோ பின்னூட்டம் போட்ட என்னையும் இந்த லிஸ்ட்லே சேர்த்திருக்கறதைப் பார்த்தா, கூச்சமா இருக்கு, சார்! சபை மரியாதை தான்; ஒப்புக்கறேன். இருந்தாலும் அந்த மரியாதை தெரிஞ்சவர் கிட்டே மரியாதையா ஒத்துக்கணும், இல்லையா?.. அதனாலே தான் உங்க பெரிய மனசுக்கு நன்றி சொன்னேன்..

    மனம் நெகிழ்ந்த நன்றி, கோபால்ஜி!

    அப்படித்தான் இருக்கும். அப்பப்ப முடிஞ்சப்போ வாங்களேன்!

    >>>>>

    நீக்கு
   20. அடடா ........... என்ன அழகு!
    ’அடை’யைத்தின்னு பழகு !!
    http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

    ஜீவி December 23, 2012 at 2:18 PM

    வை.கோ. சார்! ஜாமாய்ச்சிருக்கீங்க.. சாங்கோபாங்கமான விவரிப்புக்கு சபாஷ்! எந்த இடத்திலும் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று செயல்முறை விளக்கத்தை ரொம்பவும் அக்கரை எடுத்துக்கொண்டு தயாரித்திருக்கிறீர்கள்.

    ஒரு இடத்தில் கோட்டை விட்டு விடுவீர்களோ என்று எதிர்பார்த்தேன். அந்த தொப்புள் கீறல் இடம்.

    நீங்களாவது விடறதாவது! அந்தத் 'தொ' கீறலில் எண்ணைய் விடுகிற வரை போனதுமல்லாமல், 'சொர்' என்ற சப்த ஸ்வரத்தையும் சொல்லி, ஆனந்தமாக வேகும் என்று முடிந்திருந்ததைப் பார்த்த பொழுது 'ஐயோ,பாவம், அந்த அடை' என்றிருந்தது. 'மொறுமொறு' என்று வேகிறதைப் பார்த்து நமக்குத் தான் ஆனந்தம். அதுக்கோ, சூட்டில் வெந்து தணியும் மேனியெல்லாம்! இல்லையா?.. டூ இன் ஒன்னாக உபயோகிக்க தோசைத் திருப்பியைத் திருப்பி நட்ட நடுவில் கீறிய பொழுது, இந்தப்பக்க அகலப்பகுதி கைமூட்டில் பட்டுச் சுட்டுக் கொண்ட சொந்த அனுபவமும் உண்டு! அதனால் இந்த நடுக்கீறலுக்காகவே தனியாக ஒரு சின்ன ஸ்பூன் வைத்துக் கொள்ளலாம் என்பது என் சஜஷன்.

    அடுத்தாற் போல், அந்த வெல்ல காம்பினேஷன். அடை வயிற்றில் கொஞ்சம் அதிக நேரம் அடைகாத்து ஜீரணம் ஆகிற சமாச்சாரம். மேல் வயிற்று மேல் பாகம் நிறைய தடவைகள் சுருங்கி விரிந்து நசுக்கிக் கூழாக்கி உள்ளே வந்து சேர்ந்ததை நொதநொதக்க வைக்க வேண்டும். அதனால் வாய் கிரைண்டர்லேயே உமிழ்நீரில் முக்குளிக்கிற மாதிரி அதிக நேரம் அரைத்து உள்ளே அனுப்பி வைப்பது உசிதம். அடையை வைத்து வயிற்றை அடைத்தால் அந்தக் காரம் கடாமுடா பண்ணும் என்பதால் தான் அனுசரணை யாக வெல்லம். வெல்ல கெமிஸ்டிரி நன்றாக வேலை செய்யும்.

    நமக்குத் தான் காஸ் சிலிண்டர், மின்சாரம் என்று கவலை. வெளி நாடுகளில் நோ ஒர்ரி! அதனால் அந்தக் கவலைகளும் இல்லை.

    ஒன்று செய்திருக்கலாம், நீங்கள். ஒரு அறிவிப்பு செய்திருக்கலாம். 'இந்த அடைக் கட்டுரையில் ஓரிடத்தில் அடைக்கும், அடை வார்த்தலுக்கும் சம்பந்தமில்லாத ஒரு வரி இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு விருது..' என்று ஏதாவது ஏற்பாடு பண்ணியிருக்கலாம். அடைக்குச் சம்பந்தமில்லாத ஒரு வரியையும் இண்ணு இடுக்கில் சேர்த்திருத்திருக்கலாம். வரிக்கு வரி, தலை முதல் வால் வரை ஒரு வார்த்தை தப்பாமல் படிக்கற ஒரு அனுபவம் வாசித்தோருக்குக் கிட்டியிருக்கும்.

    அப்போ, இதுவரையிலான இந்த 136 பின்னூட்டக் கணக்கும் கூடியிருக்குமோ, இல்லை குறைந்திருக்குமோ என்பது உங்கள் யூகத்திற்கு.

    அன்புடன்,
    ஜீவி

    >>>>>

    நீக்கு
   21. என் வீட்டு ஜன்னல் கம்பி ..
    ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
    [மிகச்சிறிய தொடர்]
    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

    ஜீவி February 4, 2013 at 10:57 AM

    ஜன்னலைத் தொட்டு எத்தனை சமாச்சாரங்கள்?.. அத்தனையிலும் பதிந்திருக்கும் பாசாங்கற்ற உங்கள் உள்ள உயர்வு!

    பதிவுக்கு கொடுத்திருக்கும் தலைப்புக்கு ஒரு ஸ்பெஷல் கங்கிராட்ஸ்! இப்படியெல்லாம் கவித்துவமாக மட்டுமில்லை, சட்டென்று யோசித்துத் தீர்மானிக்க உங்களால் தான் முடியும், வைகோ சார்! பிரமாதம். வாழ்த்துக்கள்!

    >>>>>

    நீக்கு
   22. என் வீட்டு ஜன்னல் கம்பி ..
    ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
    [மிகச்சிறிய தொடர்] பகுதி-2
    http://gopu1949.blogspot.in/2013/02/2.html

    ஜீவி February 11, 2013 at 12:36 PM
    கட்டக் கடைசியில் காணப்பெறும் அந்தக் குழந்தையும் அழகு; அதன் குறும்புச் சிரிப்பும் அழகு!

    >>>>>

    நீக்கு
   23. என் வீட்டு ஜன்னல் கம்பி ..
    ஒவ்வொன்றாய் கேட்டுப்பார்
    [மிகச்சிறிய தொடர்] இறுதிப்பகுதி-3
    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

    ஜீவி February 17, 2013 at 8:02 PM

    "எங்கிட்டே என்னத்தைக் கேக்கறது?.." என்றது ஜன்னல் கம்பி.

    "கொசு வலைக்கதவுகளுக்கு அப்பாலே என்னை நிறுத்திட்டாங்க. வெயிலோ, மழையோ, குளிரோ எல்லாம் பழகிப்போச்சு. கறுத்துப் போயிட்டேன். பெயிண்ட் அடிச்சு குளிப்பாட்டுவாங்கன்னாலும், அது கூட தற்காலிக ரிலீப் தான். தூசி தும்பட்டை வருமென்று எந்நேரமும் கதவு சாத்தல் வேறே. சந்தேகம் இருந்தா முதல் பதிவில் எனக்கு மேலே பாருங்க. ஆரம்பத்திலே இருந்த அந்த தூசி அலர்ஜியும் இப்போ பழகிப் போச்சு.

    என்னேரமும் கோபுர தரிசனம். இதில் என்னேரமுங்கறது தான் உருப்படியா எனக்குக் கிடைச்ச பாக்கியம். நீட்ட வாக்கில் நிக்க வைச்சிருந்தாங்கன்னா இன்னும் அந்த பாக்கியம் கூடியிருக்கும்.

    என் கையில் இல்லாததுக்கெல்லாம் குறைப்பட்டு என்ன பிரயோசனம். சொல்லுங்க..

    >>>>>

    நீக்கு
   24. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய மெகா தொடர் - நிறைவுப்பகுதி - பகுதி எண்: 108
    http://gopu1949.blogspot.in/2014/01/108.html

    ஜீவி January 11, 2014 at 6:11 AM

    //இன்னும் ஆயிரக்கணக்கான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசையிருப்பினும், இப்போதைக்கு இத்துடன் முடித்துக்கொள்கிறேன். //

    எடுத்துக் கொண்ட விஷயத்தில் சிரத்தையுடன் ஆசை கூடிச் செய்வது பாக்கியம். அந்த அனுபவம் உங்களுக்கு வாய்த்தது நீங்கள் பெற்ற செல்வம். அந்த செல்வத்தை வாரி வழங்கியிருப்பது 'ஊருணி நீர் நிறைந்தற்றே' செயல். இப்பொழுதைக்குத் தான் நிறைவு செய்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. செளகரியப்பட்ட பொழுது தொடருங்கள். வாசித்து ஜென்மம் கடைத்தேறக் காத்திருக்கிறேன். மிக்க நன்றி, கோபு சார்.

    oooooOooooo

    நீக்கு
   25. அன்புள்ள திரு. ஜீவி சார்,

    வணக்கம். நமஸ்காரங்கள்.

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஆழமான கருத்துக்களுக்கும், அவ்வப்போது எனக்குத் தாங்கள் கொடுத்துள்ள ஊக்கம் + உற்சாகம் ஊட்டிடும் பின்னூட்டங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், சார்.

    இந்த என் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தொடரினை நான் 31.03.2015 அன்றே முடித்துக்கொண்டும்கூட, இப்போதுதான் என் மனதுக்கும் ஓரளவு நிம்மதியாக என்னால் உணரமுடிகிறது. :)

    பிரியமுள்ள கோபு

    நீக்கு
   26. மேலும் ஒன்று இன்று என் கண்களில் பட்டது - vgk

    அழகு நிலையம்
    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_17.html

    ஜீவி November 19, 2011 at 2:49 PM

    நமச்சிவாயம் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து ராஜாப்பாவுக்கு உதவியது அவர் அன்றாட வேலையில் ரொம்ப சாதாரணமான ஒன்று. ஆனால் ராஜாப்பாவிற்கோ அது அசாதாரண உதவி; அவர் வாழ்க்கைப் பாட்டிற்கே வழிவகுத்தது மாதிரி ஆயிற்று. நமச்சிவாயம் மாதிரி எத்தனை பேர் இருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது.

    பள்ளிகளில் பழைய மாணவர்களின் சந்திப்பு என்று ஏற்பாடு செய்வார்கள்; ஒன்றாகப் படித்த பழைய நட்புகள் வெவ்வேறு துறைகளில் வீசி எறியப் பட்டு பல வருடங்கள் கழித்து அவர்கள் ஒருத்தருக்கொருத்தர் சந்தித்து மகிழ்ச்சியில் திளைப்பதே தனி அனுபவம் தான். நமச்சிவாயம்- ராஜப்பா சந்திப்பு அப்படியான ஒரு சந்திப்பை எனக்கு நினைவுபடுத்தியது.

    நல்ல கதை என்பதை விட நல்ல நோக்கமுள்ள கதையைச் சொன்னமைக்கு பாராட்டுகள், கோபு சார்!

    நீக்கு
   27. மேலும் ஒன்று இப்போது என் கண்களில் பட்டது - vgk

    தாயுமானவள் .... 1
    http://gopu1949.blogspot.in/2011/12/1-of-3.html

    ஜீவி December 4, 2011 at 11:13 AM

    தாயுமானவர் சன்னதி தெரியும்; தாயுமானவனும் தெரியும். தந்தையுமானவளும் தெரியும்; கணவர் காலமான பின் பொறுப்பாக குடும்ப பாரத்தைச் சுமந்த அப்படியான தாய்மார்களையும் பார்த்திருக்கிறேன். தாயுள்ளம் பெண்களுக்கேச் சொந்தமான பொழுது, இதுவென்ன 'தாயுமானவள்' என்று பார்த்தேன்.

    பெற்றெடுக்காத தாயில்லா குழந்தைக்கு தாயுமானவளாய் ஆன ஒரு பெண்ணின் கதை போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்.

    படக்காட்சி போன்ற வர்ணனைகளில் நீங்கள் திளைக்கும் பொழுது படிப்பவர் உள்ளம் தித்திக்கிறது.

    வர்ணனைகளின் நடுவே அவரவரைப் படம் பிடித்துக் காட்டி விடுவதும் உங்களின் தனியான சிறப்பு தான். பாராட்டுகள்.

    நீக்கு
   28. மேலும் ஒன்று இப்போது என் கண்களில் பட்டது - vgk

    என் உயிர்த் தோழி
    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post.html

    ஜீவி December 11, 2011 at 10:03 PM

    அவர்கள் நிச்சயம் அந்தப் படத்திற்கு இப்படி ஒரு கதையை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.. வாழ்ந்த வயதில் 'கட்டுபெட்டி'யாக இருந்தாலும், பிற்காலத்தில் காலத்திற்கு ஏற்றமாதிரி தன்னை மாற்றிக் கொண்ட பாட்டியை அவர்களுக்குப் பிடித்து விட்டது போலும்!

    'பாட்டி நீட்டிய காலை தன் கைகளால் மெதுவாகப் பிடித்து அமுக்கி விட்டுக்கொண்டிருந்தாள்'-- நீங்களும் இப்படி ஒரு வரியை இடையில் சேர்த்து, படத்திற்கு உரிய கதையாக்கி அந்த ஒரே ஒரு பரிசையும் பெற்று விட்டீர்களே!

    பாட்டி மறக்க முடியாத பாத்திரப் படைப்பு தான்! வாழ்த்துக்கள்!

    நீக்கு
   29. மேலும் ஒன்று இப்போது என் கண்களில் பட்டது - vgk

    முன்னெச்சரிக்கை முகுந்தன்:
    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html

    ஜீவி December 28, 2011 at 6:57 PM

    //பல் குத்தும் குச்சிகள், காது குடையும் பஞ்சுக்குச்சிகள், கைக்கடிகாரம், பேனா, ஆபீஸ் ஃபைல்கள், செல்போன், சார்ஜர், ஆபீஸ் டிராயர் சாவி, குடை, பஸ்ஸில் படித்துக்கொண்டே போக ஏதாவது வார இதழ்கள், செய்தித்தாள்..//

    .. என்று படித்துக் கொண்டே வருகையில், பேண்ட், பெல்ட், பனியன், ஜட்டி, ஷர்ட்.. என்று வந்த பொழுது 'குபுக்'கென்று வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

    அந்த ரிசர்வ் கேஷ் சமாச்சாரத்தை தனியாக பேண்ட்டின் பெல்ட் அணியும் இடத்தில் இருக்கும் பாக்கெட்டில் பதுக்கி வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கும் உண்டு. பிக்பாக்கெட்டில் பறி கொடுக்காமல் இருக்கத்தான்.

    அந்த வேஷ்டி-துண்டுக்கான காரணம் சொன்னதும் போகிற போக்கில் (படித்துக் கொண்டு போகிற போக்கில் தான்) இன்னொரு புன்முறுவலை வரவழைத்தது.

    ஐம்பது வயதுக்கு மேலானாலே இப்படித்தான். முன்னெச்சரிக்கையாக அவர் எடுத்துக் கொள்ளும் பல ஐட்டங்கள் தேவையானது தான்.

    வங்கி, ரயில் ரிசர்வேஷன்-- இந்த மாதிரி இடங்களில் கூட "பேனா இருக்கா, சார்?" என்று கேட்கும் பிரகிருதிகளைப் பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரியான ஒரு அலட்சியத்துடன் பிறரை எதிர்பார்க்கும் நபர்கள், இந்த மாதிரியான முகுந்தன்களிடமிருந்து பாடம் பெற வேண்டும்.

    நகைச்சுவை என்று சொல்லாத போதே, உங்கள் எழுத்தில் நகைச்சுவை தெறிக்கும். இப்போதோ 'நகைச்சுவை கதை' என்று நீங்களே சொல்லி விட்ட பொழுது, கேட்க வேண்டுமா, ஹஹ்ஹாஹ்களுக்கு?.

    வாழ்த்துக்கள், கோபு சார்!

    நீக்கு
   30. அதிலேயே மேலும் ஒன்று இப்போது என் கண்களில் பட்டது - vgk

    முன்னெச்சரிக்கை முகுந்தன்:
    http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_26.html


    ஜீவி December 28, 2011 at 10:44 PM

    'எழுத்தும் தெய்வம்; இந்த எழுதுகோலும் தெய்வம்' என்று சொன்னார் மஹாகவி.

    அவளின் பரிபூர்ண ஆசிக்கு ஏங்கி, அந்த தெய்வத்தை நாமிருவரும் சேர்ந்து வணங்குவோம்.

    அன்பையும் பிரியத்தையும் மனிதர்களுக்குள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் ஆசி நல்கி கைப்பிடித்து எழுத வைக்க அன்னையின் அருளே அவசியம்.

    அதை வேண்டி கலைமகள் தாயின் பாதார விந்தங்களே சரணம் என்று அடிபணிவோம்.

    அன்புடன்,
    ஜீவி

    நீக்கு
   31. இன்று என் கண்களில் பட்ட மற்றொன்று - vgk

    ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]
    http://gopu1949.blogspot.in/2012/04/12.html

    சுந்தர்ஜி April 23, 2012 at 10:44 AM

    நீங்கள் எழுதிக்கொண்டிருக்கும் விஷயங்கள் அனைத்தையும் கவனித்து வருகிறேன்.

    உங்கள் எழுத்தின் மேல் நான் கொண்டிருந்த காதல் வார்த்தைகளைக் கடந்தது.

    ஆனால் சமீப காலமாக நீங்கள் தொட்டுவரும் ஆன்மீக தத்வ விசாரங்கள் உங்கள் எழுத்தின் மேல் பெரிய மரியாதையை உண்டு பண்ணிவிட்டன.

    இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றைக்கும் மனிதகுலத்துக்கு வழிகாட்டியாய் இருக்கக்கூடிய போதனைகளும், ஞானமும் நிரம்பித்ததும்பும் சுனையாய் உங்கள் எழுத்தை நான் பார்க்கிறேன்.

    வணங்குகிறேன் விஜிகே.

    நீக்கு
   32. இன்று என் கண்களில் பட்ட மற்றொன்று - vgk

    நீ .. முன்னலே போனா .. நா பின்னாலே வாரேன் !
    http://gopu1949.blogspot.in/2011/10/15.html

    ஜீவி October 27, 2011 at 8:58 PM
    முதல் பாராவே அட்டகாசம். உங்களையும் ஒருவராக கதையின் உள் நுழைத்துக் கொண்டது வாகா கதையை சுவாரஸ்யத்துடன் சொல்ல கிடைத்த வாய்ப்பாகி விட்டது. அங்கங்கே உங்களுக்கு கைவந்த நகாசிட்ட 'நறுக்' கலகல. கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்திருக்கிறீர்கள் என்றும் யூகிக்க முடிந்தது. தொடருங்கள்; தொடர்கிறோம்.

    நீக்கு
   33. இன்று என் கண்களில் பட்ட மற்றொன்று - vgk

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post.html
    ஜாங்கிரி

    ஜீவி November 7, 2011 at 10:57 AM

    என்ன ஒரு அருமையான கதை!

    உழைப்பவனுக்கு அவன் உழைப்பின் பலனை அனுபவிக்கக் கொடுத்து வைத்திருக்காது! அறுவடை செய்த விவசாயி அத்தனை நெல்லையும் மூட்டை கட்டி, டவுனுக்கு வண்டி கட்டிப்போய் மண்டியில் வந்த விலைக்கு மூட்டைகளைப் போட்டு வருகிற காசை வயிற்றுப் பாட்டிற்குத் தேற்றினால் போதும் என்றிருக்கும்! அவன் பொங்கிச் சாப்பிடுவதற்கு குறுணை தான் பாக்கியிருக்கும்.

    வறுமையின் நிறத்தை பளிச்சென்று எடுத்துக் காட்சி சொன்ன கதை!

    வாழ்த்துக்கள்.

    நீக்கு
   34. இன்று என் கண்களில் பட்ட மற்றொன்று - vgk

    http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_10.html
    அமுதைப்பொழியும் நிலவே .... !

    ஜீவி November 10, 2011 at 2:23 PM
    அந்த கடைசிப் பாரா வெல்டிங் - அந்த கனவு அமுதா பெயரை இங்கே கண்முன் கொண்டு வந்து சேர்த்தது, கதைபண்ணும் கற்பனையின் சிறப்பு.

    நீக்கு
  15. மார்ச் எனபதால் பணிச்சுமை அதிகமாக இருந்தது. அதனால் சமீபமாக உங்கள் பதிவு எதையும் வாசிக்கவில்லை. இனி வருவதற்குத் தடையேதுமில்லை. ராஜி மேடம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். மீண்டும் ஒரு போட்டி அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. இன்னும் ஒன்பது மாதங்கள் இருப்பதால் கண்டிப்பாகப் போட்டியில் பங்கு பெறுவேன். புதிது புதிதாகப் போட்டி அறிவித்துப் பதிவுலகில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதற்குப் பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Kalayarassy G April 4, 2015 at 10:19 PM

    வாங்கோ, வணக்கம்.

    //மார்ச் எனபதால் பணிச்சுமை அதிகமாக இருந்தது. அதனால் சமீபமாக உங்கள் பதிவு எதையும் வாசிக்கவில்லை.//

    புரிந்துகொண்டேன். மேலும் இன்று 04.04.2015 சனிக்கிழமையாக இருந்தும், வங்கியின் வேலை நேரங்களில் மாற்றம் செய்து, கூடுதலாக இரண்டு மணி நேரங்கள் வங்கி செயல்படும் என்ற அறிவிப்பினையும், செய்தித்தாள் மூலம் தெரிந்துகொண்டேன். உடனே உங்கள் ஞாபகம் தான் எனக்கு வந்தது.

    //இனி வருவதற்குத் தடையேதுமில்லை.//

    மிகவும் சந்தோஷம்.

    //ராஜி மேடம் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    //மீண்டும் ஒரு போட்டி அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி.//

    உங்களை நம்பித்தான் போட்டியே அறிவித்துள்ளேன். :)

    //இன்னும் ஒன்பது மாதங்கள் இருப்பதால் கண்டிப்பாகப் போட்டியில் பங்கு பெறுவேன்.//

    இந்தப் போட்டி அறிவிப்பு மிகவும் எளிதாக இருப்பதுபோலத் தோன்றினாலும், சற்றே வாசிப்பு ஆர்வமும், புரிந்துகொள்ளும் திறமையும், பின்னூட்டம் எழுதும் பொறுமையும், அதற்கான நேரமும் இருப்பவர்களால் மட்டுமே இதில் கலந்துகொள்ள இயலக்கூடும்.

    ”கண்டிப்பாகப் போட்டியில் பங்கு பெறுவேன்” என்று தாங்கள் சொல்லியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி.

    கலந்துகொள்பவர்களுக்கு இரட்டிப்பாக [Rs.500*2=Rs.1000] பரிசளிக்கத்தான் வேண்டியிருக்கும் என நான் இப்போதே யூகிக்கிறேன். அதில் எனக்கும் இரட்டிப்பு சந்தோஷமே. :)

    //புதிது புதிதாகப் போட்டி அறிவித்துப் பதிவுலகில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்குவதற்குப் பாராட்டுக்கள்!//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான + அறிவித்துள்ள போட்டிக்கு ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    நன்றியுடன் கோபு

    நீக்கு
  16. சந்தர்ப்ப சூழல்களால் கடந்த மூன்று மாதங்களாக வலைப்பக்கங்களுக்கு வருகை தர இயலவில்லை. இன்னுமொரு போட்டியா? முடிந்த அளவு முயற்சிக்கிறேன். நன்றி ஐயா!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Seshadri e.s. April 5, 2015 at 11:41 AM

    வாங்கோ, வணக்கம்.

    //சந்தர்ப்ப சூழல்களால் கடந்த மூன்று மாதங்களாக வலைப்பக்கங்களுக்கு வருகை தர இயலவில்லை. //

    அதனால் பரவாயில்லை. ஒவ்வொருவருக்கும் இதுபோல எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கக்கூடும்தான். என்னால் நன்கு புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் எனக்கும்கூட முன்புபோல அதிகமாக வலைப்பக்கம் வரமுடியாத சூழ்நிலைகள் / நெருக்கடிகள் ஆரம்பித்துள்ளன.

    //இன்னுமொரு போட்டியா? முடிந்த அளவு முயற்சிக்கிறேன். நன்றி ஐயா!//

    கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். மிக்க நன்றி.

    நீக்கு
  17. கிழக்கே உதிக்கும் சூரியன் என்றாவது மறக்கலாம் உதிக்க... ஆனால் அண்ணா வலைப்பதிவில் இத்தனை க்ருத்தியமாக பதிவுகளும் போட்டிகளும் கொடுத்து உற்சாகமாக வலம் வரும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்..

   எங்கும் எப்போதும் இராஜேஸ்வரியின் பதிவுகளும் பின்னூட்டங்களும் உற்சாகப்படுத்தும்படியாகவே இருக்கும்... அவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..

   தொடரட்டும் அண்ணா உங்கள் எழுத்துப்பயணம்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Manjubashini Sampathkumar April 9, 2015 at 4:44 PM

    வாங்கோ மஞ்சு, வணக்கம்.

    //கிழக்கே உதிக்கும் சூரியன் என்றாவது மறக்கலாம் உதிக்க... ஆனால் அண்ணா வலைப்பதிவில் இத்தனை க்ருத்தியமாக பதிவுகளும் போட்டிகளும் கொடுத்து உற்சாகமாக வலம் வரும் உங்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்..//

    நீண்ண்ண்ட நாட்களுக்குப்பின் மஞ்சுவின் வருகை என் மனதுக்குச் சற்றே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அன்பு வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

    //எங்கும் எப்போதும் இராஜராஜேஸ்வரியின் பதிவுகளும் பின்னூட்டங்களும் உற்சாகப்படுத்தும்படியாகவே இருக்கும்//...

    என் போன்றே தங்களின் உணர்வுகளும் இவ்வாறு வெளிப்பட்டிருப்பது எனக்கு வியப்பும் மகிழ்ச்சியும் அளிக்கின்றது. அதுவும் இதனை என் அன்புக்குரிய மஞ்சுவின் மூலம் கேட்கும் போதே எனக்கு ஓர் தனி உற்சாகம் ஏற்படத்தான் செய்கிறது. :)

    //அவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்..//

    தங்களின் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுக்கு, அவர்களின் சார்பில் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மஞ்சு.

    //தொடரட்டும் அண்ணா உங்கள் எழுத்துப்பயணம்....//

    என் எழுத்துப்பயணம் தொடர பிராப்தம் இருந்தால் பிறகு பார்ப்போம் மஞ்சு.

    இதுவரை என் பழைய பதிவுகளுக்கு மிகவும் உற்சாகம் அளித்துவந்துள்ள உங்களைப்போன்றவர்களின் கருத்துக்கள் தற்சமயம் என் பதிவுகளில் இடம்பெறாமல் இருப்பதனால், எனக்கு புதிய பதிவுகள் எழுதி வெளியிடும் உற்சாகமே குறைந்துவிட்டது.

    இப்போதைக்கு உங்களைப்போலவே நானும் நீண்ட ஓய்வினில் மட்டுமே .................... !

    பிரியமுள்ள கோபு அண்ணா

    நீக்கு
  18. திருமதி ராஜராஜேஸ்வரியின் உடல்நலம் இன்னமும் சீராகவில்லை என்பதை அறிந்து வருத்தமாய் இருக்கிறது. தொடர்ந்து அவர் பதிவிட்டு வரும்படி அவர் உடல் நலம் சீரடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Geetha Sambasivam April 12, 2015 at 6:33 PM

    வாங்கோ, வணக்கம்.

    //திருமதி ராஜராஜேஸ்வரியின் உடல்நலம் இன்னமும் சீராகவில்லை என்பதை அறிந்து வருத்தமாய் இருக்கிறது. தொடர்ந்து அவர் பதிவிட்டு வரும்படி அவர் உடல் நலம் சீரடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கும், மனதுக்கு ஆறுதல் அளிக்கும் பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

    நீக்கு
  19. தொடர்ந்து புதுமையான போட்டிகளை அறிவிப்பதில் உங்களை மிஞ்ச எவராலும் முடியாது. அனுபவித்து எழுதுவதோடு இல்லாமல் அனைவரையும் கௌரவிப்பதிலும் உங்களுக்கு ஈடு இணை இல்லை. தொடர்ந்த வேலைகளினாலும், பயணங்களினாலும் உங்கள் பதிவுகளுக்கு வரத் தாமதம் ஆகிவிட்டது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Geetha Sambasivam April 12, 2015 at 6:35 PM

    வாங்கோ, வணக்கம்.

    //தொடர்ந்து புதுமையான போட்டிகளை அறிவிப்பதில் உங்களை மிஞ்ச எவராலும் முடியாது.//

    அதெல்லாம் ஒன்றும் இல்லை மேடம். இது ஏதோ மிகச்சுலபமான போட்டி போலத்தான் தோன்றும். ஆனால் இதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, என் அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவது என்பதற்கு, நிறைய வாசிப்பு அனுபவமும், புரிந்துகொள்ளும் பக்குவமும், ஓரளவாவது எழுதக்கூடிய திறமையும், பொறுமையும், நேர அவகாசமும் உள்ள தங்களைப்போன்ற ஒருசிலரால் மட்டுமே முடியும். :)

    //அனுபவித்து எழுதுவதோடு இல்லாமல் அனைவரையும் கௌரவிப்பதிலும் உங்களுக்கு ஈடு இணை இல்லை.//

    அனைவருமே தங்களின் மிகச்சிறந்த பின்னூட்டங்களால் என்னை அவ்வப்போது மகிழ்வித்து, என் எழுத்துக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வந்த தெய்வங்கள் அல்லவா ! அவர்களை கெளரவிக்க வேண்டியது என் கடமையல்லவா !!

    //தொடர்ந்த வேலைகளினாலும், பயணங்களினாலும் உங்கள் பதிவுகளுக்கு வரத் தாமதம் ஆகிவிட்டது.//

    அதனால் பரவாயில்லை.

    நானும் இந்தப்போட்டிக்காக யாரையும் தனிப்பட்ட முறையில் கட்டாயப்படுத்தவோ, நிர்பந்திக்கவோ, வற்புருத்தவோ விரும்பவில்லை. அதனால் தங்களுக்கும் நான் இதுபற்றி தனித்தகவல் ஏதும் கொடுக்கவில்லை.

    இன்னும் 8-9 மாதங்கள் இருப்பதால் எப்படியும் மிகச் சிலராவது இந்த என் புதுமைப்போட்டியில் அவர்களுக்கே உள்ள ஆர்வத்தினால் கலந்துகொண்டு, வெற்றிவாகை சூடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

    மொத்தம் 750 பதிவுகளில் ஒரு 10% மீள் பதிவுகளாகவே இருக்கக்கூடும். அதனால் அவற்றிற்கு [பதிவினைத் திரும்பப் படிக்காமலேயே கூட] பின்னூட்டம் எழுதுவதும் தங்களைப்போன்றவர்களுக்கு [அதாவது சமீபத்தில் நடைபெற்ற என் சிறுகதை விமர்சனப்போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தவர்களுக்கு] மிகச் சுலபமாகவே இருக்கக்கூடும்.

    மேலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் பற்றி நான் வெளியிட்டிருந்த மெகா தொடரின் 108+17=125 பதிவுகளில் பலவற்றிற்கு தாங்கள் ஏற்கனவே கருத்தளித்துள்ளதால், அவற்றிற்கு மீண்டும் தாங்கள் கருத்தளிக்க வேண்டிய அவசியமே இருக்காது. அவற்றில் தாங்கள் வருகை தராத + கருத்தளிக்காத பதிவுகளுக்கும் மட்டும் பின்னூட்டமிட்டால் போதுமானது.

    தங்களைப்போன்ற வெகு சிலருக்கு மட்டுமே இதுபோலெல்லாம் பல ADVANTAGES இதில் இருப்பதால், தாங்களும் கலந்துகொண்டு, ரூ 500 அல்லது ரூ. 1000 பரிசினைப்பெறுவீர்கள் என நான் நம்புகிறேன்.

    என் வலைத்தளத்தின் ஆரம்ப முதல் பதிவுக்கான இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

    முடிந்தால், விருப்பம் இருந்தால் வரிசையாக தினமும் 4-5 பதிவுகள் வீதம் தொடர்ந்து பின்னூட்டம் அளித்துக்கொண்டே வாங்கோ. தங்கள் சுறுசுறுப்புக்கும் ஆர்வத்திற்கும் ஆறே மாதத்திற்குள் வெகு சுலபமாக முடித்து விடுவீர்கள். இதில் கட்டாயம் ஏதும் இல்லை. தங்கள் செளகர்யப்படி மட்டுமே.

    இந்தப்புதுமைப் போட்டியில் வெற்றிபெற இப்போதே என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். - VGK

    நீக்கு
  20. அன்பு நண்பரே!

   வணக்கம்!
   மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
   இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
   நட்புடன்,
   புதுவை வேலு
   www.kuzhalinnisai.blogspot.com

   சித்திரைத் திருநாளே!
   சிறப்புடன் வருக!

   நித்திரையில் கண்ட கனவு
   சித்திரையில் பலிக்க வேண்டும்!
   முத்திரைபெறும் முழு ஆற்றல்
   முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


   மன்மத ஆண்டு மனதில்
   மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
   மங்கலத் திருநாள் வாழ்வில்!
   மாண்பினை சூட வேண்டும்!

   தொல்லை தரும் இன்னல்கள்
   தொலைதூரம் செல்ல வேண்டும்
   நிலையான செல்வம் யாவும்
   கலையாக செழித்தல் வேண்டும்!

   பொங்குக தமிழ் ஓசை
   தங்குக தரணி எங்கும்!
   சீர்மிகு சித்திரைத் திருநாளே!
   சிறப்புடன் வருக! வருகவே!

   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. yathavan nambi April 14, 2015 at 5:25 PM
    //அன்பு நண்பரே! வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன், புதுவை வேலு www.kuzhalinnisai.blogspot.com//

    வாங்கோ, வணக்கம். புத்தாண்டை வரவேற்று தாங்கள் பொலிவுடன் எழுதியுள்ள கவிதை நன்றாக உள்ளது. தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    //முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!//

    ஆஹா ! நம்பிக்கை அளிக்கும் நல்ல வரிகள். :)

    வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே.

    - VGK

    நீக்கு
  21. பின்னூட்டம் எப்பிடி இருக்கணும்னு ப்ரமாதமா சொல்லி இருக்கீங்க. :) நங்குன்னு கொட்டு வைச்சது மாதிரி இருக்கு :)

   வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
   என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

   இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Thenammai Lakshmanan April 14, 2015 at 7:42 PM

    வாங்கோ, மேடம். வணக்கம்.

    //பின்னூட்டம் எப்பிடி இருக்கணும்னு ப்ரமாதமா சொல்லி இருக்கீங்க. :)//

    மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    // நங்குன்னு கொட்டு வைச்சது மாதிரி இருக்கு :) //

    அடடா ! நான் வேறு சிலரைக் குட்ட நினைக்கும் போதெல்லாம் நீங்க குறுக்கே வந்து உங்கத் தலையை நீட்டிடுறீங்கோ. :)

    சகலகலாவாணியான / அஷ்டாவதானியான உங்களைப்போய், மிகச்சாதாரணமானவனான நான்போய் நங்குன்னு கொட்டு வைச்சுட முடியுமா?

    அப்படியே நான் ஒருவேளை ஆசைப்பட்டு நங்குன்னு கொட்டு வைத்தாலும் ..... அப்புறம் என் கை வலிக்காதா ? :)

    //வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!//

    சந்தோஷம். ததாஸ்து. அப்படியே ஆகட்டும் !

    //இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)//

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் சித்திரைத்திருநாள் + மன்மதத் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகள், மேடம்.

    அன்பான தங்களின் வருகைக்கும், தேன் சொட்டிடும் இனிய நகைச்சுவை மிக்க கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.

    அன்புடன் கோபு

    நீக்கு


  22. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ராமலக்ஷ்மி April 14, 2015 at 10:45 PM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !//

    தங்களின் அன்பான அபூர்வ வருகைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் சொல்லியுள்ளதற்கும், என் மனம் நிறைந்த இனிய நன்றிகள், மேடம்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு + சித்திரைத்திருநாள் நல்வாழ்த்துகள்.

    நீக்கு
  23. தொடர்ந்தும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தனிமரம் April 15, 2015 at 3:29 PM

    வாருங்கள், வணக்கம்.

    //தொடர்ந்தும் பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா!//

    தங்களின் அன்பான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    கீழ்க்கண்ட பதிவினில் தங்களின் முதல் வருகையை எனக்குள் நினைத்துப்பார்த்து மகிழ்ந்தேன்.

    http://gopu1949.blogspot.in/2015/01/11-of-16-61-70.html

    அன்புடன் VGK

    நீக்கு
  24. இந்தப்பதிவினில் அறிவிக்கப்பட்டுள்ள என் புதிய புதுமைப்போட்டியில் பங்கு பெற ஆர்வம்கொண்டு, முயற்சி செய்து, இதுவரை என் முதல்பதிவுக்கு http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html புதிதாக வருகை தந்து கருத்தளித்து, வெற்றிக்கான முதலடி எடுத்துவைத்துள்ள

   1] முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
   [மன அலைகள்]

   2] திருமதி ஷக்திபிரபா அவர்கள்
   [மின்மினிப்பூச்சிகள்]

   3] திருமதி கீதா மதிவாணன் அவர்கள்
   [கீதமஞ்சரி]

   4] திருமதி ஜெயந்தி ஜெயா அவர்கள்
   [மனம் மணம் வீசும்]

   5] திரு. Thulasidharan thillaiakathu அவர்கள்
   [Thillaiakathu Chronicles]

   ஆகியோருக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகள். தொடர்ந்து வருகை தந்து வெற்றிபெற வாழ்த்துகள்.

   அன்புடன் VGK

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மேற்படி ஐந்து நபர்களைத்தொடர்ந்து ஆறாவது நபராக ‘பூந்தளிர்’ வலைச்சரப் பதிவர் திருமதி. சிவகாமி அவர்கள், மிக நீண்ட இடைவெளிக்குப்பின், என் வலைப்பதிவுகள் பக்கம் வருகை தந்து, மேற்படிப் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

    அவர்களையும் இருகரம் கூப்பி வரவேற்று, போட்டியில் வெற்றிபெற வாழ்த்தி மகிழ்கிறேன். :)

    VGK

    நீக்கு
   2. மேற்படி ஆறு நபர்களைத்தொடர்ந்து ஏழாவது நபராக ‘அசைபோடுவது....’ வலைப்பதிவர் அன்பின் திரு. சீனா ஐயா அவர்கள், என் வலைப்பதிவுகள் பக்கம் வருகை தந்து, மேற்படிப் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

    அவர்களையும் இருகரம் கூப்பி வரவேற்று, போட்டியில் வெற்றிபெற வாழ்த்தி மகிழ்கிறேன். :)

    அன்புடன் VGK

    நீக்கு
   3. மேற்படி ஏழு நபர்களைத்தொடர்ந்து எட்டாவது நபராக 'Viji's Craft & I love Craft’ வலைப்பதிவர், என் அன்புக்குரிய விஜி [திருமதி. விஜயலக்ஷ்மி கிருஷ்ணன்] அவர்கள், என் வலைப்பதிவுகள் பக்கம் வருகை தந்து, மேற்படிப் போட்டியில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

    அவர்களையும் இருகரம் கூப்பி வரவேற்று, போட்டியில் வெற்றிபெற வாழ்த்தி மகிழ்கிறேன். :)

    Thank you Viji :) All the Best !! :)

    அன்புடன் VGK

    நீக்கு
  25. நேத்து நான் போட்ட கமெண்ட டாடா போச்சா காக்கா உழ் போச்சா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பூந்தளிர் April 23, 2015 at 10:13 AM

    வாங்கோ பூந்தளிர், செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா? தொடர்புகொண்டு பல வருஷங்கள் ஆகிவிட்டதே ! உங்களை நான் நினைக்காதே நாளே இல்லை. நல்லவேளையாக இப்போதாவது வந்து விட்டீர்களே !! சந்தோஷமாக உள்ளது.

    //நேத்து நான் போட்ட கமெண்ட டாடா போச்சா காக்கா உழ் போச்சா//

    அது எனக்குக் கிடைக்கவே இல்லையேம்மா. மீண்டும் முடிந்தால் எழுதுங்கோ. அனுப்பும் முன்பு அதை உங்களிடம் தற்காலிகமாக வேறு எங்காவது சேமித்து வைத்துக்கொண்டு பிறகு அனுப்புங்கோ, ப்ளீஸ்.

    மற்றவை பிறகு .... மெயிலில் பேசிக்கொள்வோம்.

    பிரியமுள்ள கோபு

    நீக்கு
   2. ஆமா ஸார் ரெண்டு வுஷமா லாங் லூவ்ல போயிட்டு வந்ததுமே உங்கள பாக்கத்தான் வந்தேன். போட்டி வைக்கறது பரிசு கொடுப்பது என்று ரொம்ப பிசியா இருக்கீங்க. ஆக்டிவா இருப்பது நல்லது தானே. உங்க எல்லா பதிவுகளையும் ஒரே இடத்தல பாக்க முடியுமா.

    நீக்கு
   3. இன்று உஙுக மெயிலுக்கு பதில உனுப்பிட்டேன். பார்த்தூ ச்சா மொபைலேநு தமிழ் டைப் பன்ரேன. நெரய தப்பு வரும. நல்லா பழகின பிறகு தப்பில்லாம எழுதரேன் ஓக்கேவா?

    நீக்கு
   4. பூந்தளிர் April 24, 2015 at 11:07 AM

    வாங்கோ அன்புக்குரிய சிவகாம சுந்தரி, வணக்கம்மா.

    //ஆமா ஸார் ரெண்டு வருஷமா லாங் லீவிலே போயிட்டு வந்ததுமே உங்கள பார்க்கத்தான் வந்தேன். போட்டி வைக்கறது பரிசு கொடுப்பது என்று ரொம்ப பிசியா இருக்கீங்க.//

    May 2013 to March 2015 வலைத்தளத்தினில் மிகவும் பிஸியாகவே இருந்தேன். இரவெல்லாம் தூக்கமில்லாமல் இருந்து வந்தேன். இப்போது அப்படியெல்லாம் இல்லை. இந்தப்போட்டியை அறிவித்து விட்டேன். போட்டியில் கலந்து கொண்டுவருவோர் தரும் பின்னூட்டங்களை மட்டும் தினமும் வெளியிட்டு வருகிறேன். புதிய பதிவுகள் ஏதும் தராமல் நிறுத்தி வைத்துள்ளேன். போட்டி முடிய இன்னும் 8 மாதங்களுக்கு மேல் உள்ளது. அதனால் நான் வலையுலகில் வழக்கமான பிஸியில் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

    //ஆக்டிவா இருப்பது நல்லது தானே.//

    அதுவும் நல்லதுதான். வலைத்தள வேலைகளைத் தவிர மற்ற எவ்வளவோ குடும்ப சொந்த வேலைகளில் இப்போதும் நான் மிகவும் ஆக்டிவாத்தான் இருந்து வருகிறேன். :)

    //உங்க எல்லா பதிவுகளையும் ஒரே இடத்தல பார்க்க முடியுமா?//

    என் வலைத்தளத்தின் வலது பக்கம் ஓரமாக வாங்கோ. ஒரு INDEX போல இருக்கும் பாருங்கோ. அதில் March 2015 இல் நான் வெளியிட்டுள்ள 15 பதிவுகள் தனித்தனியே 'ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தலைப்பில் இருக்கும் பாருங்கோ.

    அதன் கீழே வாங்கோ.

    சின்னச்சின்ன முக்கோணங்களுடன்
    February (15)
    January (24)
    2014 (238)
    2013 (142)
    2012 (116)
    2011 (200)
    2010 (1)
    2009 (1)
    என இருக்கும் பாருங்கோ.

    அதில் 2011 (200) என்பதற்கு முன்னால் உள்ள முக்கோணத்தைக் க்ளிக் பண்ணுங்கோ. அது உடைந்து December (13) to January (22) என வரிசையாகக் காட்சியளிக்கும் பாருங்கோ. அதில் January (22) என்பதற்கு முன்னால் உள்ள முக்கோணத்தை மீண்டும் க்ளிக் பண்ணுங்கோ.

    அதில் நான் ஜனவரி 2011இல் வெளியிட்டுள்ள 22 பதிவுகளும் தனித்தனியே காட்சியளிக்கும் பாருங்கோ. அதில் கடைசியாகக் கீழேயுள்ள ‘இனி துயரம் இல்லை’ என்ற தலைப்பில் ஆரோவை வைத்து மீண்டும் க்ளிக் செய்யுங்கோ. அந்தப்பதிவு இப்போ ஓபன் ஆகிவிடும். அது தான் தாங்கள் இந்தப்போட்டியில் கலந்துகொள்ள முதலில் பின்னூட்டம் கொடுக்க வேண்டிய பதிவாகும்.

    நூல்கண்டில் நூலின் நுனி இப்போது உங்களுக்குக் கிடைத்துவிட்டது. இனி சுலபமாக நூலைப் பிரித்துக்கொண்டு தங்களால் செல்லமுடியும் தானே :)

    முதல் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுத்து SEND போட்டபிறகு, பின்னூட்டப்பெட்டியின் அடியே இடதுபுற ஓரமாக உள்ள NEWER POST என்பதைக் க்ளிக் செய்தாலே ஆடோமேடிக் ஆக என் அடுத்த பதிவு உங்களுக்குக் காட்சியளிக்கும். நான் சொன்ன இவைகள் உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

    முதல் பதிவின் இணைப்பினையும் மேலும் சில இதர சில விபரங்களையும், தங்களுக்கு மெயிலில் இன்று தனியாக ஸ்பெஷலாக அனுப்பியுள்ளேன்.

    போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, வெற்றியும் பரிசும் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள கோபு

    நீக்கு
   5. பூந்தளிர் April 24, 2015 at 11:12 AM

    //இன்று உங்க மெயிலுக்கு பதில் அனுப்பி விட்டேன். பார்த்தாச்சா?//

    பார்த்து விட்டேன். அதற்கு மிக நீண்ட பதிலும் கொடுத்துவிட்டேன்.

    //மொபைலிலிருந்து தமிழ் டைப் செய்கிறேன். நிறைய தப்பு வரும்.//

    தப்பு வந்தால் வரட்டும்! :) அதில் தப்பேதும் இல்லை. :)

    என் சினேகிதி ‘அதிரடி அதிரா’ வின் பின்னூட்டங்களெல்லாம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும். அதுபோல நினைத்து படித்து மகிழ்ந்துகொண்டேன். :)

    எழுத்துப்பிழைகள் எல்லோருக்குமே சகஜம்தான். அதுவும் மொபைல் மூலம் என்றால் ரொம்பவும் கஷ்டமாகத்தான் இருக்கும். எனக்கும் அப்படித்தான்.

    //நல்லா பழகின பிறகு தப்பில்லாம எழுதுகிறேன். ஓக்கேவா?//

    ஓக்கே .... ஓக்கே .... நோ ப்ராப்ளம் அட் ஆல். நீங்க எப்படி எழுதினாலும் ஓக்கே ... நான் அவற்றை சுலபமாகப் புரிந்துகொள்வேன். கவலையை விடுங்கோ.

    பிரியமுள்ள கோபு

    நீக்கு
  26. தாமத வருகை என் வருகை, வருந்துகிறேன். தாங்கள் என் தளம் வந்துள்ளீர். எப்படி விட்டேன் என்று தெரியவில்லை. இனி தொடர்வேன். போட்டியில் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. mageswari balachandran April 26, 2015 at 7:52 PM

    வாங்கோ, வணக்கம்.

    //தாமத வருகை என் வருகை, வருந்துகிறேன்.//

    அதனால் என்ன, பரவாயில்லை மேடம்.

    //தாங்கள் என் தளம் வந்துள்ளீர். எப்படி விட்டேன் என்று தெரியவில்லை.//

    மற்ற எல்லோருடைய தளங்களுக்கும், எல்லோரும், எல்லா நேரங்களும் போய்வருவது என்பது இயலாத காரியம்தான், என்பதை நானும் நன்கு அறிவேன்.

    //இனி தொடர்வேன். போட்டியில் கலந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். நன்றி.//

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களால் முடியுமானால் அவசியமாக போட்டியினில் கலந்துகொள்ளுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். WELCOME !

    VGK

    நீக்கு
  27. அடேங்கப்பா எவ்ளோ நீண்ட பதிவு....

   தலையை சுற்றுகிறது..

   எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க அண்ணா...

   பர்ஃபெக்‌ஷன் என்பதற்கு சரியான உதாரணம் நீங்கள் தான்...

   இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமும் சக்தியும் நீண்ட ஆயுளையும் தர வேண்டிக்கொள்கிறேன்.

   மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா இராஜேஸ்வரி... கோயில்களே இல்லாத இந்த ஊரில் உங்கள் வலைக்கு வந்தாலே கோயிலுக்கு வந்தது போல் ஒரு தெய்வீகம் உணர்ந்ததுண்டு....

   மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா மீண்டும்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Manjubashini Sampathkumar April 27, 2015 at 9:57 PM

    வாங்கோ மஞ்சு, வணக்கம்மா. தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது. :)

    //அடேங்கப்பா எவ்ளோ நீண்ட பதிவு....//

    ஆமாம், மஞ்சு. இவைகளே மிகவும் நீண்டு விட்டன. இத்தனைக்கும் மஞ்சுவின் மிக நீண்ண்ண்ண்ண்ட பின்னூட்டங்களை நான் இந்தத் தொடரின் எந்தப்பகுதியிலுமே கொண்டுவரவில்லையாக்கும் ! :)

    //தலையை சுற்றுகிறது..//

    ஏன் என்னாச்சு? அம்ருதாஞ்சன் தடவிக்கோங்கோ ! :) அல்லது அவரைவிட்டு தடவிவிடச்சொல்லுங்கோ !!

    ஒருவேளை இந்தத்தங்களின் ’தலைசுற்றல்’ அப்படி வேறு ஏதாவது ஸ்வீட் நியூஸ் தருவதாக இருக்குமோ? :))))) If so my Heartiest Congratulations to you :) நல்ல பச்சரிசி வடுமாங்கா இங்கே நம்ம ஊர் திருச்சியிலேயே கிடைக்குது. வாங்கி அனுப்பட்டுமா? [ மஸக்கைக்காரிகளுக்கு வாய்க்கு மிகவும் பிடிக்கும் என்பார்களே :) ]

    //எவ்வளவு மெனக்கெட்டு இருக்கீங்க அண்ணா... பர்ஃபெக்‌ஷன் என்பதற்கு சரியான உதாரணம் நீங்கள் தான்...//

    அடடா, என்னென்னவோ சொல்றீங்களே, மஞ்சு. ரொம்பவும் ’ஷை’யாக இருக்கு .. (அதிரா பா’ஷை’யில்) :)

    //இறைவன் உங்களுக்கு ஆரோக்கியமும் சக்தியும் நீண்ட ஆயுளையும் தர வேண்டிக்கொள்கிறேன்.//

    மிகவும் சந்தோஷம் மஞ்சு. எங்களின் இன்றையத் தேவையும் அதே .. அதே ...... சபாபதே !

    //மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா இராஜேஸ்வரி... கோயில்களே இல்லாத இந்த ஊரில் உங்கள் வலைக்கு வந்தாலே கோயிலுக்கு வந்தது போல் ஒரு தெய்வீகம் உணர்ந்ததுண்டு.... //

    மிகச்சரியாகப் பளிச்சின்னு சொல்லிட்டீங்க மஞ்சு.

    //மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா மீண்டும்...//

    அவர்கள் சார்பிலும் மஞ்சுவுக்கு என் மகிழ்ச்சிகள் + நன்றிகள்.

    நீக்கு
  28. ’பின்னூட்டம் எழுதுவது’ என்ற தலைப்பில் ‘எனது எண்ணங்கள்’ வலைத்தளப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள் 27.04.2015 அன்று ஓர் பதிவு வெளியிட்டுள்ளார்கள். அதன் இணைப்பு:
   http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_27.html அதன் இறுதியில் ’சிறப்புச் செய்தி’ என்ற தலைப்பினில் என் புகைப்படத்துடன் இந்த என் ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’ என்ற தொடரினைப்பற்றி சிறப்பித்துச் சொல்லியுள்ளார்கள்.

   அவருக்கு என் மனம் நிறைந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   அன்புடன் VGK

   பதிலளிநீக்கு
  29. yathavan nambi May 1, 2015 at 11:09 AM

   அன்பான வணக்கங்கள். தங்களுக்கும் என் இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1) நல்வாழ்த்துகள்.

   நட்புடன் VGK

   பதிலளிநீக்கு
  30. அருமையான நீண்ட பதிவு. நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. Saratha J May 7, 2015 at 9:40 AM

    வாங்கோ, வணக்கம்.

    //அருமையான நீண்ட பதிவு.//

    மிக்க மகிழ்ச்சி. தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

    //நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய வலைப்பூவையும் பார்வையிட வாருங்கள்.//

    ஆகட்டும். அழைப்புக்கு நன்றி. முயற்சிக்கிறேன்.

    நீக்கு
  31. மார்ச் 31 க்குப் பிறகு இடுகையைக் காணோமே சார்..

   துளசிதரனின் குறும்படத்தில் நடித்த கோபால கிருஷ்ணன் சார் நீங்களோ என நினைத்தேன். :)

   பதிலளிநீக்கு
  32. Thenammai Lakshmanan May 12, 2015 at 11:04 AM

   வாங்கோ, வணக்கம்.

   //மார்ச் 31 க்குப் பிறகு இடுகையைக் காணோமே சார்..//

   :) 2013 மே முதல் 2015 மார்ச் வரை, இரவு சரியான தூக்கம்கூட இல்லாமல், தொடர்ச்சியாக 23 மாதங்களில் 413 பதிவுகள் கொடுத்துள்ளதால் [at the rate of 18 Posts per month] மிகவும் களைத்துப்போய் விட்டேன். உடல்நிலையும் சற்றே சரியில்லாமல் என்னுடன் ஒத்துழைக்க மறுக்கிறது.

   அதனால் என் புதிய பதிவுகளுக்கு நீண்ட இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளேன். முடியும்போது பிறர் பதிவுகள் பக்கம் போய் எட்டிப்பார்த்துப் படித்து வருவதோடு சரி.

   இதற்கிடையில் என்னை சுமார் 4-5 வாரங்களுக்கு தொடர்ச்சியாக வலைச்சர ஆசிரியராக நியமிக்க தீவிர முயற்சிகள் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான சில பூர்வாங்க வேலைகளிலும் நான் ஈடுபட வேண்டிய நிர்பந்தமும் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. :)

   //துளசிதரனின் குறும்படத்தில் நடித்த கோபால கிருஷ்ணன் சார் நீங்களோ என நினைத்தேன். :) //

   ஆஹா, தாங்கள் சொன்னபிறகு இப்போதுதான் அங்கே போய் http://thillaiakathuchronicles.blogspot.com/2015/05/POET-THE-GREAT-SHORTFILM-EXPERIENCE-PART1.html பார்த்துவிட்டு, படித்துவிட்டு கருத்தளித்துவிட்டு, வந்தேன்.

   அந்தத்திரைக்கதைக்கு எழுத்தாளராகவும் இருந்து, இரட்டை வேடத்திலும் நடித்திருக்கும் நான், அங்கு புகைப்படத்தில் எங்கே இருக்கிறேன் என்று என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு தத்ரூபமாக வேஷமிட்டு நடித்திருக்கிறேனோ என்னவோ :)))))

   அதனை தாங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளதற்கு என் நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   பதிலளிநீக்கு
  33. ஊட்டமளிக்கும் பின்னூட்டம் என்றதும் ஏதோ ஒருவர் இட்ட பின்னூட்டமாக இருக்குமென வந்தேன். பதிவு இத்தனை நீளமாகச் சென்றதில் இருந்து தங்கள் நினைவாற்றலை எண்ணி வியந்தேன்.இராஜேஸ்வரி அவர்கள் விரைவில் வலையுலகம் வர நானும் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் ஐயா. தொடருங்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சசி கலா May 12, 2015 at 12:22 PM

    வாங்கோ, வணக்கம்.

    //ஊட்டமளிக்கும் பின்னூட்டம் என்றதும் ஏதோ ஒருவர் இட்ட பின்னூட்டமாக இருக்குமென வந்தேன். பதிவு இத்தனை நீளமாகச் சென்றதில் இருந்து தங்கள் நினைவாற்றலை எண்ணி வியந்தேன்.//

    தங்களின் அன்பான வருகைக்கு மிகவும் சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி.

    //இராஜேஸ்வரி அவர்கள் விரைவில் வலையுலகம் வர நானும் காத்திருக்கிறேன்.//

    காத்திருப்போம்..... காத்திருப்போம்..... காலமெல்லாம் காத்திருப்போம்..... :)

    //வாழ்த்துக்கள் ஐயா. தொடருங்கள். //

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம். - vgk

    நீக்கு
  34. 750 ஆவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா.
   இந்த பதிவிற்கு 101ஆவது பின்னூட்டமாக என்னுடையது என நினைக்கிறேன். (மொய்) ஹஹ.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சசி கலா May 12, 2015 at 12:24 PM

    வாங்கோ, மீண்டும் வருகைக்கு மீண்டும் மகிழ்ச்சியுடன் வணக்கங்கள்.

    //750 ஆவது பதிவிற்கும் வாழ்த்துக்கள் ஐயா.//

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

    //இந்த பதிவிற்கு 101ஆவது பின்னூட்டமாக என்னுடையது என நினைக்கிறேன். (மொய்) ஹஹ.//

    :))))) ஆம். தாங்கள் 101வதாக மொய் கொடுத்தது அப்போது உண்மைதான். மிக்க மகிழ்ச்சி.

    சகோதரியிடமிருந்து சகோதரனுக்கு சீர் (மொய்ப்பணம்) கிடைத்தால் அதனுடன் குறைந்தது ஒரு ரூபாயாவது சேர்த்து எதிர்மரியாதையாக திருப்பி அளிக்கும் வழக்கம் எங்கள் பக்கம் உண்டு. அதுபோல தங்களின் 101ஐ நான் 102 ஆகவோ 104 ஆகவோ ஆக்கி பதில் கொடுத்துள்ளேன் என நினைக்கிறேன்.

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி. :) - vgk

    நீக்கு
  35. அன்புடையீர்,

   அனைவருக்கும் வணக்கம்.

   இன்று 01.06.2015 திங்கட்கிழமை முதல் 05.07.2015 ஞாயிறு வரை தொடர்ச்சியாக 35 நாட்களுக்கு (5 வாரங்களுக்கு) வலைச்சர ஆசிரியர் பணியினை ஓர் சவலாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.

   முதல் நாளான இன்றைய வலைச்சரத்தில் என் சுய அறிமுகம் பற்றி மட்டும் பதிவிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு: http://www.blogintamil.blogspot.in/2015/06/blog-post.html

   நாளை முதல் தொடர்ச்சியாக தினமும் மற்ற பிரபல பதிவர்களில் சிலர் மட்டும் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட உள்ளார்கள்.

   இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

   வலைச்சரத்தினில் ஈடுபாடும், என் வலைச்சரப்பணிகளை காணும் ஆர்வமும், நேர அவகாசமும் உள்ளவர்கள் மட்டும், தினமும் வலைச்சரப்பக்கம் வருகை தந்து கருத்தளித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

   என்றும் அன்புடன் தங்கள்
   VGK

   பதிலளிநீக்கு
  36. அடேங்கப்பா கரும்பு திண்ண கூலி கொடுக்கும் உங்களை என்ன சொல்ல?நானும் முயற்சி செய்கிறேன்.

   என் அருமை தோழி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் நலம்பெற என் பிரார்த்தனைகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. viji June 2, 2015 at 3:44 PM

    வாங்கோ விஜி, வணக்கம்மா.

    //அடேங்கப்பா கரும்பு தின்னக் கூலி கொடுக்கும் உங்களை என்ன சொல்ல? நானும் முயற்சி செய்கிறேன்.//

    முயற்சி செய்யுங்கோ விஜி. திறக்குறள் போல இரண்டு வரிகளிலோ, நாலடியார் போல நான்கு வரிகளிலோ, தங்கள் செளகர்யப்படி தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டம் எழுதி அனுப்புங்கோ, போதும். ஏற்கனவே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா தொடர் உள்பட சுமார் 200 பதிவுகள்வரை தங்களின் பின்னூட்டங்கள் என் பதிவுகளில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன. அவற்றிற்கெல்லாம் மீண்டும் பின்னூட்டம் ஏதும் எழுதவே வேண்டாம். அதற்கெல்லாம் Just ஒரு :) ஸ்மைலி மார்க்கினை மட்டும் பின்னூட்டமாகக் கொடுங்கோ போதும். நான் புரிந்துகொள்வேன். தாங்கள் ஆரம்பிக்க வேண்டிய முதல் பதிவு 02.01.2011 அன்று நான் வெளியிடுள்ள ‘இனி துயரம் இல்லை’ என்பதாகும். அதற்கான என் இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2011/01/blog-post.html

    போட்டிக்கு கடைசிநாள் 31.12.2015 என்பதாலும், இன்னும் சுமார் 200 நாட்கள் உள்ளதாலும், தினமும் 5 பதிவுகள் என எடுத்துக்கொண்டு, ஆரம்பித்து பின்னூட்டமிட்டு வந்தால் சுலபமாக முடித்து வெற்றியும் பரிசுப்பணமும் பெறலாம். [பரிசுத்தொகை அநேகமாக 500*2=1000 இரட்டிப்பாக ரூ 1000மாகத்தான் இருக்கும் :) .... எனக்கும் நம் விஜி இதில் கலந்துகொண்டு பரிசு பெறப்போவதில் இரட்டிப்பு மகிழ்ச்சியே]

    போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    //என் அருமை தோழி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் நலம்பெற என் பிரார்த்தனைகள்.//

    Thanks a Lot VIJI. Bye for now.

    Yours affectionately,
    GOPU

    நீக்கு
  37. போட்டி விவரம் படிச்சுட்டு...i am stunned. Modi ought to retain you as his publicist. பாராட்டுக்கள் சார்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அப்பாதுரை June 5, 2015 at 11:13 AM

    வாங்கோ அன்புக்குரிய அப்பாதுரை சார், வணக்கம்.

    //போட்டி விவரம் படிச்சுட்டு...i am stunned. Modi ought to retain you as his publicist. பாராட்டுக்கள் சார்!//

    தங்களின் அன்பான வருகைக்கும் வழக்கமான மிகவும் வேடிக்கையான பாராட்டுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    VGK

    நீக்கு
  38. Congrats on your 750 th post.. All posts are really nice..
   Thanks for your lovely comment & sorry for the late reply..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. sripriya vidhyashankar June 7, 2015 at 4:43 AM

    வாங்கோ, வணக்கம்.

    //Congrats on your 750 th post.. All posts are really nice.. //

    மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி.

    //Thanks for your lovely comment & sorry for the late reply..//

    :) மிக்க மகிழ்ச்சி. தாமதமான பதில் .... அதனால் என்ன? பரவாயில்லை மேடம். தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி.

    நீக்கு
  39. இந்தப் பதிவை இடுவதற்குத் தேவையான உழைப்பை கற்பனை செய்தால் தலை சுற்றுகிறது. இப்படியும் ஒருவர் கணக்குகளை விரல் நுனியில் வைத்திருக்க முடியுமா என்று ஆச்சரியப்படுகிறேன். இந்த குணம் வைகோ வின் இரத்தத்திலேயே கலந்திருக்கவேண்டும். எனக்கு இவ்வாறு கணக்குகள் வைத்திருக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுகிறேன்.

   வாழ்க வைகோ அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க தொண்டு உள்ளம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

    அன்புடையீர்,

    வணக்கம்.

    வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

    HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

    VERY GREAT ACHIEVEMENT !! :)

    என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

    தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. தங்களின் இந்த சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், (On or before 10.10.2015) தங்களை நேரில் சந்தித்து என்னால் அளிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் அன்புடன் VGK

    நீக்கு
  40. Mail message from Dr. Palani Kandaswamy Sir to me (VGK) today (02.09.15)

   -=-=-=-=-=-

   DrPKandaswamyPhD 10:21 (1 hour ago) to me

   பார்க்க:
   http://swamysmusings.blogspot.com/2015/09/blog-post.html

   -=-=-=-=-=-

   பதிலளிநீக்கு
  41. திரு பழனி கந்தசாமி அவர்கள் செய்துள்ள சாதனை மலைக்க வைக்கிறது. முதல் பரிசுக்குத் தேர்வாகும் அவருக்குப் பாராட்டுக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஞா. கலையரசி September 3, 2015 at 8:19 PM

    வாங்கோ மேடம், வணக்கம்.

    //திரு பழனி கந்தசாமி அவர்கள் செய்துள்ள சாதனை மலைக்க வைக்கிறது.//

    ஆம் மேடம். வயதில் முதியவரான [80 Years over] அவரின் சுறுசுறுப்பு + ஆர்வம் + ஈடுபாடு இவற்றுடன் கூடிய சாதனை என்னையும் மலைக்கத்தான் வைக்கிறது.

    //முதல் பரிசுக்குத் தேர்வாகும் அவருக்குப் பாராட்டுக்கள்!//

    இதில் முதல் பரிசு / இரண்டாம் பரிசு / மூன்றாம் பரிசு என்ற பாகுபாடெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ஆர்வம் காட்டி கலந்துகொள்வோர் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே இதுவரை இருந்து வருவதால், 31.12.2015க்குள் முடிக்கும் அனைவருக்குமே தலா ரூ. 1000/- [ரூபாய் ஆயிரம்] வழங்கப்பட உள்ளது.

    [That is ...... Double the Prize Amount as committed above]

    அதனால் இவரை நாம் முதல் பரிசுக்குத் தேர்வானவர் என்று சொல்லாமல், முதன் முதலாக இந்தப் பரிசுக்குத் தேர்வானர் என்று அழைப்போம் :)

    தங்களின் அன்பான வருகைக்கும், பாராட்டுகளுக்கும் என் சார்பிலும் அவர் சார்பிலும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி மேடம்.

    நன்றியுடன் கோபு

    நீக்கு
  42. :)))))))))))))))))))))))))))))))))))))))))

   திரு பழனி கந்தசாமி சார் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பிரியமுள்ள ‘பூந்தளிர்’ சிவகாமி அவர்களுக்கு:

    அன்புடையீர்,

    வணக்கம்.

    வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

    HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

    VERY GREAT ACHIEVEMENT !! :)

    என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

    தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் பெண்கள் அணியில் முன்னணியில் வந்துள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என்றும் இன்பமுடன் வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

    பிரியமுள்ள கோபு

    நீக்கு
  43. நன்றி நன்றி சொல்ல வார்த்தை இல்லை. சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

   பதிலளிநீக்கு
  44. 750 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

   ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் பற்றி
   ஊக்கமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 6:43 PM

    //750 ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்

    ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் பற்றி
    ஊக்கமான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..//

    வாங்கோ, வணக்கம்.

    தங்களின் அன்பான வருகைக்கும் ஊக்கம் தரும் பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

    நீக்கு
   2. அன்புக்கும் மரியாதைக்குமுரிய திருமதி. இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கு .......

    வணக்கம்.

    வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

    HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

    VERY GREAT ACHIEVEMENT !! :)

    என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

    தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றி பெற்றுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நன்றியுடன் VGK

    நீக்கு
  45. சிறுகதை விமர்சனப் போட்டிக்குப் பின் இன்னும் ஒரு போட்டி.

   இதுக்கு அப்புறம் என்ன போட்டி இருக்கப் போகிறதோ தெரியலையே.

   இப்படித்தான் நானும் பரிசு வாங்கணும்.

   பதிலளிநீக்கு
  46. அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா.

   வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

   HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

   REALLY A VERY GREAT ACHIEVEMENT !! :)

   என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

   தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, ஜெ.

   மிகப் பொறுமையுடன் கூடிய தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றி பெற்றுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம், தனியே ஒதிக்கீடு செய்யப்பட்டு, தயார் நிலையில் என்னிடம் பத்திரமாக உள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   தங்களின் விருப்பம் + செளகர்யம் எப்படியோ அப்படியே அதனைத் தாங்கள் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், என்னிடமிருந்து CLAIM செய்து சகல உரிமைகளுடன் பெற்றுக்கொள்ளலாம்.

   மீண்டும் என் நல்வாழ்த்துகள் + நன்றிகள்.

   பிரியமுள்ள,
   கோபு அண்ணா

   பதிலளிநீக்கு
  47. இத்தர பேருங்க இந்த போட்டில கலந்துகிட்டு கெலிச்சிருகாங்களா. நானும் வந்துகிட்டேருக்கேன்ல.

   நீங்க ஒருநாளுல எத்தன மணிக்கூரு கம்ப்யூட்டருல வேல பாப்பீக. ஒறக்கம் சோறு தண்ணிலா எப்ப. இல்ல நானு ஒரு பதிவுக்கு கமண்டு கொடுத்துபிட்டு அடுத்த பதிவுக்குள்ளார போகாங்காட்டியும் கமண்டு பப்லீஷ் ஆகிபோட்டதே.

   பதிலளிநீக்கு
  48. பிரியமுள்ள செல்வி ‘MEHRUN NIZA' அவர்களுக்கு:

   அன்புள்ள (mru) முருகு,

   வணக்கம்மா.

   வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

   HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

   VERY GREAT ACHIEVEMENT !! :)

   என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

   தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   தங்களின் இந்த அரிய பெரிய சாதனையை (07.10.2015 மட்டுமே ஆரம்பித்து 06.11.2015 க்குள்) ஒரே ஒரு மாதத்திற்குள், அவசரக்குடுக்கையான தாங்கள் முடித்துள்ளது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.

   கடந்த ஒருமாத காலமாக மிகக்கடுமையாகவே இதற்காக உழைத்துள்ளீர்கள். உண்மையிலேயே இது ஒரு உலக மஹா சாதனைதான்! :))

   தங்களின் அம்மியை விட்டு தங்கள் முதுகில் ஒரு ஷொட்டு கொடுக்கச் சொல்லுங்கோ. :)

   ஒருசில பதிவுகளுக்கு இன்னும் சற்றே விரிவான பின்னூட்டங்களாகத் தாங்கள் கொடுத்திருக்கலாம். இருப்பினும் அதனால் பரவாயில்லை.

   தங்களின் ஒருசில பின்னூட்டங்கள் மட்டும் மிக அழகாகவே என்னால் ரஸித்து விரும்பத்தக்கதாகவே இருப்பினும், தங்களின் ஸ்பீடுக்கு என்னால் அவைகளுக்கு உடனுக்குடன் பதில் அளிக்க இயலாமல் போய்விட்டது என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

   தங்களின் இந்த மாபெரும் வெற்றிக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றியை எட்டியுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   இன்றுபோல் என்றும் இன்பமுடன் ஜாலியாக வாழ்க என வாழ்த்தி மகிழ்கிறேன்.

   பிரியமுள்ள குருஜி கோபு

   பதிலளிநீக்கு
  49. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் என்.
   பெரு மதிப்புக்கும் மறியாதைக்கும் உரிய திரு குருஜி அவங்களை( மட்டுமே) சேரும். நன்றி நன்றி. ஆகாசத்துல பறக்குறேன். சந்தோசத்துல.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. mru November 6, 2015 at 1:46 PM

    வாங்கோ முருகு, வணக்கம்மா.

    //வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் ......... அதை வாங்கி தந்த பெருமை எல்லாம் என் பெருமதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு குருஜி அவங்களை (மட்டுமே) சேரும். நன்றி நன்றி.

    ஆகாசத்துல பறக்குறேன். சந்தோசத்துல.//

    அப்படியே பறந்து திருச்சிக்கு என் வீட்டுப்பக்கம் வந்துவிடுவீங்களோன்னு எனக்கு ஒரே பயமாக்கீதூஊஊஊஊ. :)

    மீண்டும் என் நல்வாழ்த்துகள். இப்போது ஒரு மெயில் அனுப்பியுள்ளேன். அதற்கு உடனடியாக பதில் அளிக்கவும்.

    பிரியத்துடன் குருஜி கோபு

    நீக்கு
  50. நம் அன்புக்குரிய சகோதரி ஜெயா [திருமதி. ஜெயந்தி ரமணி அவர்கள்] உங்கள் அனைவரையும், தான் இன்று ’தீபாவளித் திருநாளில்’ வெளியிட்டுள்ளதோர் பதிவுக்கு அன்புடனும், ஆவலுடனும், ஆசையுடனும் ... விருந்துக்கு அழைத்திருக்கிறாள்.

   அது என்ன ஸ்பெஷல் விருந்து என தயவுசெய்து போய்த்தான் பாருங்கோளேன் .......... :)

   -=-=-=-=-=-=-

   இணைப்பு:
   http://manammanamveesum.blogspot.in/2015/11/1.html

   தலைப்பு: பிறந்த வீட்டு சீதனம் ..... பகுதி-1

   -=-=-=-=-=-=-

   இது அனைவரின் பொதுவான தகவலுக்காக மட்டுமே.

   பதிலளிநீக்கு
  51. எல்லாரும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி கனியையும் பெற்று சென்றிருக்கிறார்கள். நான் இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமானதே செல்வி மெஹருன்நிஸா அவர்களின் நெகிழ்ச்சியான கடிதம் படித்ததாலதான். வெற்றி பெறுகிறேனோ இல்லையோ. அது வேறு விஷயம்.கலந்து கொள்ள ஆர்வம் தந்தது அந்த பதிவுதான். முயற்சி செய்யாம இருக்க கூடாதுன்னு ஒரு சிறு கதை மூலமா சொல்லியிருந்தாங்க இல்லியா அதான் நானும் வந்திருக்கேன்.
   .

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சரணாகதி. November 15, 2015 at 12:28 PM

    வாங்கோ, வணக்கம்.

    //எல்லாரும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி கனியையும் பெற்று சென்றிருக்கிறார்கள். நான் இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமானதே செல்வி மெஹருன்நிஸா அவர்களின் நெகிழ்ச்சியான கடிதம் படித்ததாலதான். வெற்றி பெறுகிறேனோ இல்லையோ. அது வேறு விஷயம்.கலந்து கொள்ள ஆர்வம் தந்தது அந்த பதிவுதான். முயற்சி செய்யாம இருக்க கூடாதுன்னு ஒரு சிறு கதை மூலமா சொல்லியிருந்தாங்க இல்லியா அதான் நானும் வந்திருக்கேன். //

    மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. நான் ஓர் 5 நிமிடங்கள் முன்பு இதோ http://gopu1949.blogspot.in/2015/11/blog-post_11.html?showComment=1447572363768#c8980649639862933987 இந்த என் பதிவினில் தங்களின் கேள்விக்கு விரிவான பதில் அளித்துள்ளேன். படித்துப்பார்க்கவும்.

    தங்களுக்கும், உங்களால் அடுத்த 30 நாட்களுக்குள் எப்படியும் முடித்து வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், போட்டியின் களத்தில் இறங்கவும்.

    தங்களுக்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    ஏதேனும் மேலும் உதவிகள் / ஆலோசனைகள் தேவை என்றால் தொடர்பு கொள்ளவும். My Mail ID : valambal@gmail.com

    அன்புடன் VGK

    நீக்கு
  52. வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நானும் இந்தப்போட்டியில் இருக்கேன்னு ரொம்ப சந்தோஷமா பெருமையா இருக்கு. இப்படி அருமையான வாய்ப்பு கொடுத்த கோபால் சாருக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
  53. அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
   திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

   வணக்கம் !

   வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

   HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

   100% Completion within a very short period of just 24 days from 15.11.2015 to 08.12.2015

   VERY QUICK & GREAT ACHIEVEMENT !! :)

   என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

   தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றி பெற்றுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   பிரியமுள்ள நட்புடன் + நன்றியுடன் VGK

   பதிலளிநீக்கு
  54. சகோதரி ராஜராஜேஸ்வரிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். எனது வலைப்பூ இடுகைகளுக்கு தவறாது வந்து பின்னூட்டமிட்டு உற்சாகபடுத்திவரும் வாத்யாருக்கு எனது நன்றிகள். இந்த போட்டிக்கும் என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எட்ட நின்ற வெற்றியை என்னை எட்டிட வைத்த வாத்யாருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!நன்றி!!நன்றி!!! வணக்கம். ஜெய்ஹிந்த்!!!

   பதிலளிநீக்கு
  55. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்’ வலைப்பதிவர்
   திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

   வணக்கம் !

   வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

   HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

   100% Completion within a very short period of just 17 days from 26.11.2015 to 12.12.2015

   VERY QUICK, GREAT & RECORD BREAK ACHIEVEMENT !! :)

   என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

   தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றி பெற்றுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   பிரியமுள்ள நட்புடன் + நன்றியுடன் VGK

   பதிலளிநீக்கு
  56. சிறிது நாட்களாக வலைப்பக்கம் வராமல் இருந்த என்னுள் ஏனோ திடீரென தாங்கள் அறிவித்த இந்தப் போட்டியில் பங்கேற்று பின்னூட்டமிட எண்ணம் தோன்றியது!குறுகிய காலத்திற்குள் முடிந்தவரை சிறப்பாகச் செய்ய வேண்டும் எனும் உறுதியும் ஏற்பட 20ஆம் தேதிக்குள் முடித்துவிட எண்ணினேன். கடவுளின் கருணை மற்றும் பெரியோர்களின் ஆசியினால் இத்தருணத்தில் என்னால் இதை நிறைவு செய்ய முடிந்தது! மனமார்ந்த நன்றிகள்! மீண்டும் பதிவுகளை இட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது! தங்களைப்போன்ற நல்லோர்களின் ஆசிகளால் அது ஈடேறும் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்! வாய்ப்பளித்த தங்களுக்கு மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்!

   பதிலளிநீக்கு
  57. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
   திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

   வணக்கம் !

   வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

   HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST !

   100% Completion within a very short period of just FOUR DAYS from 17.12.2015 to 20.12.2015

   VERY QUICK, GREAT & RECORD BREAK ACHIEVEMENT !! :)

   என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன.

   தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   தங்களின் இந்த அரிய பெரிய சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

   இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் வெற்றி பெற்றுள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், என்னால் அனுப்பி வைக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

   பிரியமுள்ள நட்புடன் + நன்றியுடன் VGK

   பதிலளிநீக்கு