என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 26 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-10 *****





என் பதிவுக்கு வருகை தந்து கருத்தளிப்பவர்களின் அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் மிகவும் ரஸித்துப்படித்து, அவற்றை ஓர் பொக்கிஷமாக நினைத்து மகிழ்வதுண்டு. 

ஒரு சிலர் மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்து சிரத்தையாக அளிக்கும் பின்னூட்டங்களைப் படிக்கவே மிகவும் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும், மனதுக்கு மகிழ்ச்சியாகவும், மேலும் நாம் இன்னும் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலையும், பொறுப்புக்களையும் ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுவதுண்டு.  

நான் பதிவு எழுத ஆரம்பித்த முதல் ஆறு மாதங்களில் [January to June 2011] மட்டும், வெளியிட்டிருந்த என் 97 பதிவுகளிலிருந்து சுமார் 10 பதிவுகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் வந்திருந்த பின்னூட்டங்களில் சிலவற்றை மட்டும் தங்களின் பார்வைக்கு தினமும் கொஞ்சமாக இந்தத் தொடரினில் கொடுக்க விரும்புகிறேன்.

பொதுவாகவே அந்தக்காலக்கட்டத்தில் என் பதிவுகளுக்கு ஏராளமாகவும், தாராளமாகவும் பின்னூட்டங்கள் கொடுத்துள்ள திருமதிகள்: மஞ்சுபாஷிணி, இராஜராஜேஸ்வரி, நுண்மதி, பூந்தளிர், ஆதிவெங்கட், ஸாதிகா, ஏஞ்ஜலின், அதிரா, ஆச்சி மற்றும் திருவாளர்கள்: அன்பின் சீனா ஐயா, தி. தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ், வெங்கட் நாகராஜ், ஹரணி, புலவர் இராமநுசம், திண்டுக்கல் தனபாலன் போன்ற பலரையும் விட்டுவிட்டு, குறிப்பிட்ட ஒரு சிலரின் பின்னூட்டங்களை மட்டுமே காட்டுவதாக உள்ளேன். இடநெருக்கடிக்காக மட்டுமே இவர்களை நான் இங்கு தவிர்த்துள்ளேன். அவர்கள் ஏதும் தவறாக நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

அன்று உரமிட்டவர்களில் ஒருசிலர்




இந்தக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் படும் துயரத்தை மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்! வாழ்க்கை அன்பால் மட்டுமே மதிப்பிடப்பட்டது ஒரு காலம்! இன்றைய வாழ்க்கை பெரும்பாலானவர் இல்லங்களில் சுயநலத்தாலும் பணத்தாலும் மட்டுமே மதிப்பிடப்படுகிறது!

பார்த்தீர்களா? நான் சொன்னது போல, மிக மிக சுவாரஸ்யமான, தகவல்கள் நிறைந்த பதிவு எங்களுக்கு கிடைத்திருக்கிறது!!

ருசியறியாதவர்களுக்குக்கூட பசி வரும் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளை நீங்கள் அருமையாய் விவரித்திருக்கும் பாங்கினைக் கண்டால்!
அடுப்பு வகைகள் எத்தனை வகைகள்! எரி பொருட்கள் எத்தனை வகைகள்! பாத்திர வகைகளும் சமையல் வகைகளுக்கான உபகரணங்களும்தான் எத்தனை எத்தனை!!
ஜோடுதலை என்ற பெயரை கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர பார்த்தது கிடையாது.

உங்களுக்குப் பிடித்த சமையலை, அன்போடு அன்னையும், பின்னாளில் அக்கறையுடன் மனைவியும் இந்நாளில் அருமையாய் மருமகளும் சமைத்துப்போடும்போது, பூவுலகில் வேறென்ன சொர்க்கம் வேண்டும்?

இதனால்தான் என் வீட்டிற்கு அழைத்த போது மறுத்து விட்டீர்களா?

அருமையான கற்பனை! அர்த்தம் பொதிந்த வரிகள்! வரிகளினூடே மிளிர்ந்த நகைச்சுவை! சிறு புன்னகையுடன் படித்தேன். பட்டை தீட்ட தீட்ட வைரம் மின்னுமாம்! அப்படித்தான் நாளுக்கு நாள் உங்கள் எழுத்தின் வள‌மை அதிகரிக்கிறது! குறையையே நிறையாக்கி முழுமையடைந்த கவிதை!

"கடல் அலைகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாய்ந்து வந்து எங்கள் பாதங்களை ஜில்லென முத்தமிட்டு வெண்மையான நுரைகளுடன் திரும்புகின்றன.

இன்பம் ஒருபுறமும், பயம் ஒருபுறமுமாக இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம், அலை எங்களை அடித்துச் செல்லாது என்ற எண்ணத்திலோ, ஒருவேளை அடித்துச்சென்றாலும் ஒருவரை விட்டு ஒருவர் பிரியக்கூடாது என்ற எண்ணத்திலோ"

ஆரம்பமே இயற்கை அழகும் அன்புமாக அமர்க்களமாக தொடங்குகிறது!
அதன் பின் கதை ஸ்டோர் வாழ்க்கையை நிலைக்களனாகக் கொண்டு ராஜபாட்டையில் பயணிக்கிறது!
இளம் வயது வாலிபனின் உணர்வுகள், அவ‌னைச் சுற்றி தின‌ச‌ரி சுழ‌ன்ற‌ ய‌தார்த்த‌ நிக‌ழ்வுக‌ள் என்று ஒவ்வொரு வ‌ரியும் அனுப‌வித்து எழுதியிருக்கிறீர்க‌ள்!!
ஒரு சின்ன‌ வ‌லியுட‌ன் தொட‌ரும் போட்டு விட்டீர்க‌ள்.. .. ...
அடுத்த‌ ப‌குதியில் பார்க்க‌லாம்!!

"சுடச்சுட உருக்கிய நல்ல நெய்யில் அப்போதுதான் உருண்டை பிடித்திருக்கிறார்கள் என்பது, அதன் மிதமான சூடு, நெய் மணம், வெளியே சற்றே எட்டிப்பார்க்கும் முந்திரிப்பருப்பின் மூக்கு முதலியவற்றால் என்னால் உணர முடிந்தது. "

அட்ட‌காச‌மான‌ வர்ண‌‌னை! பெண்கள்கூட இப்படி கண்டுபிடிப்பார்களா என்பது சந்தேகமே!

இள‌மையின் வசந்த கால நினைவலைகள் என்றுமே மனதுக்கு ரம்யமானவைதான்!!

அஞ்சலை சிறுகதை மனதை நெகிழ வைத்தது. நல்லதொரு சிறுகதை.ஒரு ஏழைத்தாயின் மனப்போராட்டங்களை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!!

"ஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.

இந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல்] ஜோராகக் காட்சியளித்தன."

நகைச்சுவை இழையோட ஒப்பிடுதல் அருமை!!

சுடிதார் வாங்கிய அனுபவம் அருமை! கதை அதையும்விட சிறப்பு! ' கால் குழாய், அங்கவஸ்திரம், பானுமதி பைஜாமா' போன்ற வார்த்தைப்பிரயோகங்கள் சிரிப்பை வரவழைத்தது! ‌

கண்ணெதிரே நடப்பவற்றை கதையாக தெளிவாகவும் அழகாகவும் எழுதியிருக்கும் பாங்கு மனதைத் தொடுகிறது! ஹோட்டலில் சாப்பிடும்போது தான் மூக்குத்தியைத் தொலைக்கப் போகிறீர்களா? அல்லது ஏற்கனவே மூக்குத்தியைத் தொலைத்து விட்டீர்களா?

பழைய கால மனிதர்களுக்கு எத்தனை முன் ஜாக்கிரதைத்தனமும் கவனமும் வெள்ளந்தியான மனசும் இருக்கிறது என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். ‘ கண்ணால் பார்ப்பதுவும் பொய், காதால் கேட்பதுவும் பொய், தீர விசாரிப்பதே மெய் ‘ என்ற சத்திய வாக்கு இருக்கும்போது, எப்படி நமக்கு எதுவுமே தெரியாமல் ஒருத்தரை குற்றவாளியாக்க முடியும்? நல்லவன் என்று உறுதியாய் நம்பியிருந்த ஒருவனை வெறும் அனுமானத்தால் குற்றவாளியென நினைப்பதே தாங்க முடியாமல் அந்தப் பெரியவர் தவிக்கும் அந்த இடத்தில் கதையின் மொத்த அழகும் ஒரு மெல்லிய சோகத்துடன் குவிந்திருக்கிறது! நல்லதொரு கதை எழுதியதற்கு என் இனிய வாழ்த்துக்கள்!!

தனிமை என்றுமே கொடியது தான். அதுவும் மனைவியை இழந்த கணவனுக்கும் கணவரை இழந்த மனைவிக்கும் அது இன்னும் கொடுமையான விஷயம். முதுமையெய்திய ஆண்களின் இன்றைய நிலையை மிக அழகாக அலசியிருக்கிறீர்கள்!

அருமையான பதிவு!

HATS OFF!!

முதியவர்களின் இன்றைய நிலையையும் அவர்களுக்கு எந்த அளவிற்கு காருண்யமும் அன்பும் ஆதரவும் தேவைப்படுகிறது என்பதையும் மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்!

முதியோர் இல்லங்களுக்கு வருடா வருடம் சென்று உணவும் பொருள்களும் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு முறை செல்லும்போதும் அவர்களின் பார்வையில் தெரியும் ஏக்கமும் வலியும் அப்படியே மனதைப் பிசையும். நான் வலைப்பூ தொடங்கிய புதிதிலேயே அவர்களின் வேதனையைப் பற்றி விள‌க்கமாக எழுதியிருக்கிறேன்.

அதனால்தான் நல்ல விதைகளாய் விதைக்க வேண்டுமென்பது. குழந்தைக்கு சிறு வயதிலிருந்தே அன்பையும் கருணையையும் பிறரை மதிக்கவும் சொல்லிச் சொல்லி பழக்க வேண்டும். அப்படி வளர்க்கப்படும் குழந்தைகள் நிச்சயம் பின்னாளில் பெற்றோருடைய ஊன்றுகோலுக்குப் பதிலாக தானே இருப்பார்கள்!

சிறு குழந்தையாயிருக்கையில் அதன் கண்ணீரைத் துடைத்தே பழக்கப்பட்ட பெற்றோருக்கு, அவர்களின் முதிய பிராய‌த்தில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீரே சிந்தாமல் பார்த்துக்கொள்வது எத்தனை புண்ணியம்!!

எப்போதும்போல சரளமான, மெல்லிய நகைச்சுவையுடன் கதை போகிறது!

"சட்டசபை சபாநாயகர் போல இருவருக்கும் நடுவில் நடுநிலைமை வகித்து, தன் அக்காவின் கோபத்தை மேற்கொண்டு கிளறாமல் சமாதானப்படுத்தவே முயற்ச்சிப்பார்.//"

புன்னகையை வரவழைத்த‌ உதாரணம்! ஆனால் அப்போதும் அக்கா பக்கம்தானே அவர் சாய்கிறார்? பிற‌கு நடுநிலைமை எங்கிருந்து வந்தது?

ஒரு மருமகள் இப்படி அமைந்தால் ஒவ்வொரு மாமியாருக்கும் எத்தனை சந்தோஷமாக இருக்கும்? உறவுகளை அன்பாலும் புத்திசாலித்தனத்தாலும் அரவணைத்துச் செல்லும்போது அங்கு கிடைக்கும் ஆத்மார்த்தமான நிறைவும் இனிமையும் தனி தான்! எங்களையும் அதை உணர வைத்து விட்டீர்கள்! சிறிய புள்ளி தான், ஆனால் அதை வைத்து அழகான கோலம் போட்டு விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!!



nalla katha sir!!

publish aanathukku congrats! :)


nijamaa nadanthathaa???

ippadiyum sila per irukkaarkalaa???

antha paattikku thalai vanangugiren! ippadich chila perinaal thaan, indru varai intha naattaip patri pugazh pesikkondiruppavarkalin vaarthaiyil sirithenum unmai enji irukkirathu polum...



இந்த கதைக்கு பின்னூட்டம் போடுவதற்கு கூட
ஒரு தகுதி வேண்டும் சார்.அது எனக்கில்லை
என்றே தோன்றுகிறது.

கடைசி பகுதியைப் படித்ததும்
மனம் நெகிழ்ந்து கண்களில் நீர் துளிர்த்து விட்டது
என்பதை மட்டும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்

இந்த இறுதி பகுதியை இனி எனக்கு
தோன்றும் பொழுதெல்லாம் படிப்பேன் எனவும்
கூறிக் கொள்கிறேன்

எழுதுகிறேன் என்ற பெயரில் பிதற்றிக் கொண்டிருக்கும்
எனக்கு மிகவும் வெட்கமாக கூட இருக்கிறது

பகிர்வுக்கு நன்றி

வித்தியாசமான எதிர்பாராத மனதை கலக்கிய முடிவு.
இந்த நிலையில் அது கற்பனை நாயகி என்றால் மட்டுமல்ல
நமக்கு அறிமுகமான எவரை சந்தித்தாலும் மனம் பிசைந்து விடும்தானே

அம்மாடி!!!!!!

எலி பத்தியும் எலிப்பொறி பத்தியும் இவ்வளவு
மேட்டர் இருக்கா?

சார்!நான் வேணும்னா நீங்க இருக்கற தைரியத்துல
மெட்ராஸ் யுனிவர்சிட்டில இதுக்கான பி எச் டி
படிப்பு இருக்கானு விசாரிச்சு ஜாயின் பண்ணிடவா?? :-))))

//ஒரே இடத்தில் உள்ள ஒரு பத்து பேர்களுக்கு, இந்த நாசிகாசூர்ணத்தை ஒரே நேரத்தில் போடச்சொல்லிக் கொடுத்து அவர்களும் போட்டு விடுவார்களேயானால், தீபாவளிப் பட்டாஸ் பத்தாயிரம் வாலாவைக் கொளுத்தி விட்டு அவைகள் தொடர்ந்து வெடிப்பது போல, இவர்கள் தொடர்ந்து மாற்றி மாற்றி தும்மிக்கொண்டே இருப்பார்கள். பார்க்கவும், கேட்கவும் மிகவும் தமாஷாக ஒரு மிருதங்கக் கச்சேரி போலவே இருக்கும்.//

நல்ல காமெடிதான்.நல்லா சிரிச்சேன்

இதற்கு காப்பிரைட் போட்டு விடுங்கள்.இல்லேன்னா இந்த சீனை சினிமாக்கு
யாராச்சும் சுட்டாலும் சுட்டுருவாங்க.

அதே மாதிரி விளம்பர பாணில(புகை உடலுக்கு கெடுதல்னு வருமே அப்படி)
பொடி உடலுக்கு கெடுதல்னு கீழே குட்டியா போட்டுடுங்க.நாளைக்கு இதைப்
படிச்சப்பறம்தான் நான் பழகினேன்னு யாரும் கை காமிக்க முடியாது இல்லையா!! :-)

எப்படியோ எல்லார் கண்லயும் பொடி தூவி துபாய்க்கும் பொடி
ஏற்றுமதி பண்ணிண்டு போயிட்டார் வ வ ஸ்ரீ

ஆமாம்.பையனுக்கு பொடி போடறது பிடிக்காதுனா
அவர் பையன் இந்த ப்ளாக் படிக்க மாட்டாரோ?

//“துபாய்னா, துபாய்தான்; இதுபோல என் வாழ்நாளில் எங்கேயுமே பார்த்தது கிடையாது” என்றேன் நான். ’பொடிகூட விற்கப்படாத பொடலங்காய் ஷாப்பிங் ஏரியா’ என்று என் மனதுக்குள் முணுமுணுத்தவாறே.//

இதைப் படித்து விட்டு சிரித்தேன்

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா?
எந்நாடு என்றாலும் அது இந்நாட்டுற்கு ஈடாகுமா?

மற்றவர்களைப் பற்றி வம்பு பேசுவதென்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல.

தொடர்ந்து கஷ்டங்கள் வந்தாலும் உண்மையில் பெண்கள்
அதைத் தாங்கும் மன உறுதி கொண்டவர்கள்.அதிலிருந்து மீளவும்
தெரிந்தவர்கள்.அஞ்சலையும் அப்படித்தான் என்றே எண்ணுகிறேன்.

'அன்று' க்கும் 'இன்று' க்கும் தான் எத்தனை வித்தியாசங்கள், மாற்றங்கள்.
மனித மனங்கள் அன்று வளம் பெற்றிருந்தன. பூமியும் வளம் பெற்று
தன் குழந்தைகளை ரக்ஷித்தாள்.உறவும் சுற்றமும் புடை சூழ வாழ்க்கை அமைந்தது.
இன்றோ காட்டையும் வயல்களையும் அழித்து வீடாக்கினால்
வீடு எப்படி வீடாக இருக்கும்?

//”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
சாதாரணமா, சுண்ணாம்பு வாங்கப்போற விஷயத்தையே, சூப்பரா எழுதுவீங்க..சுடிதார்னா, கேக்கணுமா?//

nothing is better than this compliments



வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும். நல்ல கதை. தேவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

அருமையான கவிதை. இந்த ஏக்கம் பல விஷயங்களில் எல்லோருக்கும் இருக்கிறது.

சிறப்பான சிறுகதை. அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.

வாவ்.... நல்ல ட்விஸ்ட். உங்கள் சிறுகதைத் தொகுப்பு பரிசு பெற்றமைக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இன்றைய வாழ்வியல் பிரச்னையை சிந்திக்கும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள் எவ்வளவுதான் பரிதாபம் ஏற்பட்டாலும் அவரிடம் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தோம் என்ற தங்கள் உணர்வும் யதார்த்தமாகவெ இருந்தது. முதுமை எல்லோருக்கும் உண்டு, உயிருடன் இருந்தால். பயமாகவே உள்ளது.

ரவிக்கை பிட் முந்தானையில் இருந்தால் நல்லதா உள்ளே ரன்னிங்கில் இருந்தால் நல்லதா என்று அழகாய் ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள் ஒரு பெண்ணாக இருந்து. :-௦௦)))



எலிக்கூடுக்கு வேலைவாய்ப்பு!! :))
எலி மாட்டிக் கொள்ள சுகாதாரமான கூண்டு!! :))

இன்னும் சிரிச்சுட்டிருக்கேன்!

எலிகள் மற்றும் எலிக்கூடுகள் பற்றி பி.எச்.டி. செய்து டாக்டர் பட்டம் வாங்குமளவு ஆராய்ச்சி செய்து எழுதியிருக்கிறீர்கள்...:))

'வேட்டுக் குழாய்' தகவலுக்கு நன்றி.
/பொடிட்டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடிட்டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ/ :-))

/அவரும் நாங்களுமாக வாக்கரிசி போடுவதுபோல ஆளுக்கு ஒரு சிட்டிகை அவர் மூக்கில் பொடியைப்போட்டும்,/ ட்ராஜிகல் காமெடி!

வழுவட்டையாகி விடும்போது எழுச்சியுடன் இருக்க உங்கள் இடுகையைப் படிக்கிறோம்!!

இந்தத் தொடரில் 'வழுவட்டை', 'எழுச்சி/பேரெழுச்சி' எத்தனை முறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்று ஏதேனும் போட்டி வைக்கும் ஐடியா இருக்கிறதா?!!
:-))

'பொடி' ஆராய்ச்சி பொடியாக இல்லாமல் பெரிசாக உள்ளதே! அடுத்த பகுதிகளைத் தவறாமல் காண ரெடி!

//அவர் நான் பல்லாண்டு காலமாக பொடி போடும் ரகசியத்தை எப்படியோ கண்டுபிடித்து வன்மையாகக் கண்டித்து விட்டார்.// 
நல்ல டாக்டராயிருக்காரே!

//பயணக்கட்டுரையை புட்டுப்புட்டு புரியும் படியாக எடுத்துரைத்து அசத்தி விட்டார், வ.வ.ஸ்ரீ. அவர்கள்.// 

கூடவே ஷாப்பிங் போனா மாதிரி ஒரு ஃபீலிங்!:-))

கதை ஆரம்பித்தவுடன் முடியற மாதிரி இருக்கு.. அவ்ளோ சுவாரஸ்யமா இருக்கு!!

//நீங்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தச்சிறுகதையின் இறுதிப்பகுதி [பகுதி 7 / 7] நாளை செவ்வாய்க்கிழமை 31.05.2011 அன்று வெளியிடப்படும் // 
எங்கள் நாடி உங்கள் கையில்...!!



போன தொடர்கதையை விட, இது இன்னும் அதிகமாய் மெருகேறி அமர்களமாக தொடங்கி இருக்கிறது. பாராட்டுக்கள், கோபு மாமா!


போன தொடர்கதையில் சிரிக்க வைத்த நீங்கள், இந்த தொடர்கதையில் சராசரி மனிதரின் மன வேதனையை எதார்த்தமாக சொல்றீங்க, கோபு மாமா.
http://gopu1949.blogspot.in/2011/04/3-3-of-6.html

ஒரு நல்ல குடும்ப கதையை வாசிக்கும் திருப்தி. பாராட்டுக்கள்!


இப்படியாக எப்போதுமே தங்களின் வெறும் வாயை மென்றுவரும் அவர்களுக்கு, இப்போது, இன்றைக்கு காரில் ஏறிச்சென்ற அஞ்சலை என்ற அவல் கிடைத்து விட்டதில், நேரம் போனது தெரியாமல், கிடைத்த அவலை வாய் ஓயாமல், நன்றாக மென்று வம்பு பேசிக்கொண்டிருந்தனர்.


......இதை மட்டும் சரியாக செய்துடுவாங்க.... எத்தனை பேரின் வாழ்க்கையை இப்படி வம்பு பேசியே கெடுத்து வைத்து இருக்கிறார்கள். :-(


சுவாரசியமாக கதை செல்கிறது. 


பால் சாப்பிட்ட திருப்தியில், உறங்கும் தன் மகன் தூக்கத்திலும் ஏதோ இன்பக்கனா கண்டது போல கன்னத்தில் குழிவிழ சிரிப்பதைக்கண்டவள், அவனைக்குனிந்து முத்தமிடுகிறாள்.


...so sweet! :-)



ChitraApril 12, 2011 at 2:41 AM

அழகாய் கதை செல்கிறது.... வாழ்த்துக்கள்! 

http://gopu1949.blogspot.in/2011/04/5-5-of-6.html


    1. இருள் அகலுமா? கோழி கூவுமா? பொழுது விடியுமா? எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.


      ......அஞ்சலையின் வேதனைகளையும் மன குழப்பங்களையும் சகஜ வாழ்க்கைக்கு திரும்ப எத்தனிக்கும் போராட்டங்களையும் அருமையாக இந்த வரிகளில் வெளிப்படுத்தி விட்டீர்கள், மாமா!
      http://gopu1949.blogspot.in/2011/04/6-6-of-6.html
    2. ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


      ...Super News! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
    3. ChitraMarch 25, 2011 at 5:27 AM
  1. தாலிக்குத் தங்கம் வேண்டாம் !
    தாளிக்க வெங்காயமும் வேண்டாம் !!
    மூக்குக்குப் பொடி வேண்டும் !
    முன்னேற வழி வேண்டும் !!


    .......கோபு மாமா, தேர்தல் நேரத்துல இப்படி எழுதி ரிலீஸ் செய்தால், copyright வாங்கி வச்சுக்கோங்க.... யாராவது இதையெல்லாம் copy அடிச்சு கோஷம் போடப் போறாங்க... ஹா,ஹா,ஹா,ஹா... அடுத்த நகைச்சுவை தொடர், எப்போ மாமா?
  1. மாமா..சூப்பர்! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
    http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html
  2. அந்த ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பெயர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியீட்டு அறிவிப்பில், என் பெயர் முதலிடம் வகிக்கிறது என்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.


    .... We are proud of you!
    http://gopu1949.blogspot.in/2011/04/6_17.html
  3. வித்தியாசத்தில் இருக்குது வெற்றி - வித்தியாசமாக - ரூம் போட்டு யோசிச்சீங்களோ? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... மென்மேலும் வெற்றி சிறக்க வாழ்த்துக்கள், மாமா!
சூப்பர் எழுத்து நடை..... நேரில் இருந்து கதை கேட்டது போல எதார்த்த நடை. sweet!

இருப்பினும் வீட்டை விட்டுக் கிளம்பி நடந்தே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வந்ததால், உடலுக்கும் உள்ளத்திற்கும் தெம்பு ஏற்பட 4 வடைகளும், 4 பஜ்ஜிகளும் மட்டும் சூடாக வாங்கி உள்ளே தள்ளினேன். உணவுக் கட்டுப்பாடு விஷயமாக டாக்டர் எச்சரித்திருந்ததால், சுவையாக இருப்பினும் அதற்கு மேல் வாங்கி சாப்பிட என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.


......ஹா,ஹா,ஹா,ஹா..... சிரிச்சு முடியல... நாலு வடை - நாலு பஜ்ஜி - இன்னும் நாலு போண்டா தான் பாக்கி....

7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடனும், 70 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுடனும் பொறுமையாகப் பேச்சுக்கொடுத்துப் பேசினால், நமக்கு நிறைய புதுப்புது விஷயங்கள் கிடைக்கும்.


...absolutely true. கதை சொல்வது மட்டும் அல்ல - நகைச்சுவையும் வாழ்க்கை குறித்த பார்வையும் அருமையாக இணைந்து வந்து இருப்பது, ரசிக்க வைக்கிறது. பாராட்டுக்கள்!

எங்கெங்கும், எப்போதும், என்றென்றும், என்னோடு பெரியவரின் கைத்தடியும் பயணம் செய்கிறது. என்னாலும் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை அளித்து வருகிறது. தினமும் அதே கைத்தடியை ஊன்றியபடி என்னால் முடிந்த வரை நடந்து போய் வருகிறேன்.

கைத்தடியை ஊன்றிச்செல்லும் போது, அந்தப் பெரியவரும் என்னுடன் பேசிக்கொண்டே வாக்கிங் வருவது போல எனக்குள் ஒரு பிரமை ஏற்படுகிறது.



......very touching story. நகைச்சுவையாக மட்டும் அல்ல, மனதில் சோக சாயல் விட்டு செல்லும் கதைகளையும் எழுத முடியும் என்று உணர்த்தி விட்டீங்க.


இந்த இரண்டாவது மருமகளுக்கு என் தாயாரின் பெயரே அமைந்துள்ளது. அவள் பொறுமையில் பூமா தேவி. என் தாயார் போன்றும், என் மனைவி போன்றும் மிகவும் ருசியாக சமைப்பதில் மிகச்சிறந்து விளங்குகிறாள். எங்களின் பசியறிந்து, ருசியறிந்து வேளாவேளைக்கு சமைத்து பரிமாறும் அவளே எங்களுக்கு இன்றைய அன்னபூரணி. ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டதும் அவளை எங்களின் வாய் பாராட்டும்!; வயிறு வாழ்த்தும்!!//

இப்படி அன்பாய் பாராட்டு கிடைக்க உங்கள் மருமகள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

நன்றாக வாழ்த்துங்கள்.

உங்கள் விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி இருக்கிறீர்கள்.

சமையல் பாத்திரங்கள் பேர் அழகாய் சொல்கிறீர்கள்.


உங்கள் சமையல் அனுபவங்கள் ரசித்து சிரிக்கும் படி இருந்தாலும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் எவ்வளவு!

என் கணவரும் சொல்வார்கள், சமைப்பதை விட பாத்திரம் கழுவுவதுமிக கடினம் என்று. 
சமையல் பாத்திரங்களை ஒழித்துப் போடுவது என்று.

உங்கள் பதிவு அருமை.
அடிக்கடி எழுதுங்கள்.

கதையும் அது உருவாக காரணமும் மிக அருமை.

கண்ணம்மா பாட்டியின் குழந்தைகள் அழுத போது நாமும் கலங்கி போகிறோம் என்பது உண்மை



காதலாவது ... கத்தரிக்காயாவது !!!

என்று சொன்னவிதத்தில் ஐயோ என்ன வில்லத்தனம் நடந்துவிட்டதோன்னு இருந்தது.

இருவரும் தம் காதலை வெளிப்படுத்திக் கொண்டனரா? கடைசியில் சேர்ந்தார்களா இல்லையா என்று இறுதிவரை 
தவிக்க வத்துவிட்டீர்கள்.:)

கதை நகர்வும் காட்சி வர்ணனைகளும் நல்ல ஒரு திரைப்படம் பார்த்த உணர்வினைத் தந்தது. பாடல்தான் இல்லை;)))

மெல்லிய தென்றல் வருடும் சுகத்தைத் தந்த நல்ல காதல்கதை. 

சுபமான சுகமான முடிவு. அருமை. வாழ்த்துக்கள்.

பெயர் காரணம் பதிவு நகைச்சுவையுடன் ஐயோ என பதைக்கவைக்கும் உணர்வும் கலந்த நல்ல கலவை.

நகைச்சுவைக்கு நடிகர் நாகேஷ் என்பதுபோல உங்களின் நகைச்சுவை கலந்த ரசனையோடு கூடிய நல்ல
எழுத்துநடை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ரசிக்க சிரிக்க வைக்கின்றது.

பெயர் வைக்க ஒவ்வோர் குடும்பங்களிலும் ஏதோ ஒரு காரணம் இருக்கும். 
உங்கள் பெயருக்குரிய காரணம் இதுவரை நான் அறிந்திராத ஒன்று.

// அந்தக் குளத்துக்கு என் மீது இன்றும் கூட எவ்வளவு பாசம் பொங்கி வந்தது தெரியுமா? நான் முதல்படியில் காலை 
வைத்ததும் அப்படியே ஒரு பாசத்தில் பத்தாம் படிவரை என்னையுமறியாமல் இழுத்துக் கொண்டது.//

இலகுவாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். ஆனால் உண்மையில் இதை வாசிக்கும்போது 
ஐயோ! என் மனம் ஒரு கணம் பதைத்துவிட்டது. சில பல சம்பவங்களால் இத்தகைய நிகழ்வுகளை என்னால் 
கற்பனை பண்ணிக்கூட பார்க்கமுடியவில்லை. அது யாருக்கு என்றாலும் யாராய் இருந்தாலும் மனதை அதிர 
வைக்கிறது. நல்லவேளை உங்களுக்கும் ஒன்றும் ஆகவில்லை. 

// ஜோஸ்யர் சொல்லுவது போலவும் எதுவும் நடப்பதில்லை. எது எது எப்போ எப்போ எப்படி எப்படி எங்கு எங்கு
நடக்கணுமோ அது அது அப்போ அப்போ அப்படி அப்படி அங்கு அங்கு நடந்தே தீரும் என்பதே நான் ஜோஸ்யம் 
பார்க்கப்போய் கடைசியில் கற்றுத் தெளிந்த விஷயம். //

இதில் எனக்கும் 100 வீதம் உங்களுடன் ஒத்த கருத்தே:))


பகிர்தலுக்கு மிக்க நன்றி!!!

சமையலறையை அக்குவேறு ஆணிவேறாக பிரிச்சு மேய்ஞ்சிருக்கீங்க:))

நீங்கள் சொன்னவற்றில் சில பல;) பாத்திரங்கள், உபகரணங்கள், காய்வகை, கீரைவகை, வத்தல் 
வடாம்வகைகள் எனக்கு தெரியவில்லை. இப்படியெல்லாம் இருக்கிறதென உங்கள் மூலம்தான் அறிகிறேன்.


சமையல் என்று மட்டும் சொல்லாமல் சமையல் கலைன்னு சொல்லியுள்ளார்களே நம் மூத்தோர் அதன் அர்த்தம்: 
எப்படிப் பக்குவமா, பதமா, ருசியா சமைக்க கற்றுக்கொள்வதுதானோ என்பதை நீங்கள் ஒவ்வொன்றையும் ரசிச்சு 
ருசிச்சு சொன்னவிதம் மூலம் புரிந்துகொண்டேன்.
எழுத்துத்துறையில் மட்டுமல்ல அனைத்துத் துறையிலும் எனக்கு அத்துபடி என்று இங்கு சமையலைப் பற்றியும் 
பொழிந்து தள்ளியுள்ளீர்கள். மஹா ரசிகன்தான் நீங்கள்.


சமையல் கட்டில் உங்கள் சமையல் அனுபவம் வாசித்து வயிறு வலிக்க சிரித்தேன். இனி நம் வீட்டில் அடை 
சுடும்போது நீங்கள் உங்கள் வயிற்றில் கொதி நெய்யினால் தைலாப்பியங்கம்:) செய்தது நினைவுக்கு வரும்;)))))))

பயன்தரும் நல்ல நல்ல குறிப்புகள். யாவுக்கும் மிக்க நன்றி!!!

வயலும், பயிரும், பாசமிகு கூட்டுக்குடும்ப வாழ்க்கையும், ஆரோக்கியமான உணவு, உழைப்பு, 
உறக்கம்........ அடடா அந்த வாழ்க்கை, அந்த சுகானுபவம் மீளக்கிட்டிடாதோ???

உங்கள் கவிதையால் மனதை அங்கலாய்க்க வைத்துவிட்டீர்கள் ஐயா.
அருமை. வாழ்த்துக்கள்!!!
மேலும் இப்படி நல்ல, உயர்ந்த உயிரோட்டமான படைப்புக்களை காண ஆவலோடு உள்ளேன் ஐயா. 
தொடர்ந்து எழுதுங்கள்.

நெகிழ்வடையச் செய்துவிட்ட உயிர்க்காவியம். சொல்ல வார்த்தைகளை தேடுகிறேன்.

நகைச்சுவை இருந்தாலும் பெரியவரும் அவரோடு இக்கதை நாயகனுக்கு வந்த தொடர்பும் 
மனதில் ஆழப்பதிந்துவிட்டது.


கதை முடிவில் அந்தப் பெரியவரின் இறுதி ஊர்வலம் என்னை உறைய வைத்துவிட்டது.

நாம் சந்திக்கும் எம்மைக்கடந்து போகும் எத்தனையோ நபர்களிடம் நாம் கற்றுக்கொள்ள 
நிறையப் பாடங்கள் உள்ளன என்னும் உயரிய கருத்தை கூறியுள்ளீர்கள்.

மிக்க நன்றி ஐயா!

ஐயா அருமை! கதையை வாசிக்க எடுத்துக் கொண்ட நேரத்தை விட 
அதன் கருத்தை கண்டுபிடிக்க எடுத்துக் கொண்ட நேரம்தான் அதிகம்;)

நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!!




அவ்வப்போது என் பதிவுகளுக்கு அருமையாகவும், திறமையாகவும், வித்யாசமாகவும், என் மனதுக்குத் திருப்தியாகவும், பின்னூட்டமிட்டு, எனக்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளவர்களில், என்றும் என் நினைவுகளில் பசுமையாக நிற்கும், சில அன்புள்ளங்களின் பெயர்களை கீழ்க்கண்ட இரு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். 

பட்டியல் எண்: 4  .... 60 GENTS
http://gopu1949.blogspot.in/2015/03/4.html

பட்டியல் எண்: 5 .... 70 LADIES
http://gopu1949.blogspot.in/2015/03/5.html 


அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாக வருகை தந்து கருத்தளித்துள்ள நட்புகள் பட்டியல்களும் இரண்டு தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளன. 

பட்டியல் எண்: 7 ....  50 LADIES
http://gopu1949.blogspot.in/2015/03/7.html

பட்டியல் எண்: 8  ....  40 GENTS
http://gopu1949.blogspot.in/2015/03/8.html


இது தங்கள் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.  





பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.



பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 8 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 9 க்கான இணைப்பு:








பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 10 
பின்னூட்ட எண்ணிக்கை : 219


TOTAL NUMBER OF COMMENTS : 219

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

ஆயிரம் நிலவே வா ..

ஓர் ஆயிரம் நிலவே வா !




 





இந்த மேற்படி ஒரு பதிவுக்கு மட்டும் இதுவரை 219 பின்னூட்டங்கள் வந்துள்ளன. ஆனால் என் மேற்படி பதிவின் அடியில் சென்று பார்த்தால் என்னைத்தவிர பிற பார்வையாளர்களுக்கு முதலில் வந்துள்ள 1 to 200 பின்னூட்டங்கள் மட்டுமே படிக்கக்கூடியதாக உள்ளன. 200க்கு மேற்பட்ட பின்னூட்டங்கள் வரும்போது, அவற்றை என்னால் மட்டும் வேறு ஒரு வழியில் சென்று காணமுடிகிறது. BLOG SYSTEM அதுபோல அமைக்கப் பட்டுள்ளது. எனவே என் பதிவினினில் கடைசியாக காட்சியளிக்கும் பின்னூட்டத்தையும், அதன் பிறகு கிடைத்துள்ள பின்னூட்டங்களையும் இங்கு தனியே காட்டிவிட நினைக்கிறேன். இதனால் இந்தப்பதிவுக்கு சற்றே தாமதமாகப் பின்னூட்டமிட்டவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும்.




COMMENT  Nos: 200 to 219

  1. Soory vwery very sorry I am late here due to some unavoidable reasons..
    Appadiyooo
    Enna valthukkukalllllllllll
    Atharuku mika mika thagithiuanavar than Rajeswari.
    When I was at USA., the date to date celebaration of festival and important days are being known to me is by the way of Rajeswaris blog.
    Now I am not able to move and sitting at one place and visiting all the places with the help of Rajeswari......
    Ward by ward i second you sir.
    I am not able to express, but agree and happy to see your wards.
    I am not yet finished all the comments. will sure come back after gone through all.....
    viji




    1. viji August 16, 2013 at 10:02 PM

      வாங்கோ விஜி மேடம். உங்களை நான் வலைபோட்டுத் தேடிக் கொண்டிருந்தேன் கடந்த நான்கு நாட்களாகத் தொடர்ச்சியாக.

      பிறகு தான் எனக்கு அந்த விஷயமே தெரிய வந்தது. எனினும் லேட்டாக வந்தாலும் லேடஸ்டாக ஊருக்குப்போய் “வரலக்ஷ்மி விரதமும் முடித்துக்கொண்டு” அம்பாளைப் பாராட்ட அழகாக வந்து சேர்ந்து விட்டீர்கள்.

      //I am not yet finished all the comments. will sure come back after gone through all..... viji//

      வாங்கோ, மீண்டும் மீண்டும் வாங்கோ. ஏதாவது அடுத்தடுத்து சொல்லிக்கொண்டே இருங்கோ. உங்கள் இராஜராஜேஸ்வரியை நீங்க பாராட்டாமல் யார் பாரட்ட முடியும்? ;)))))

      மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.

      பிரியமுள்ள கோபு

    2. ஆத்மார்த்தமான பாராட்டுரைகளுக்கு
      மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்..!

  2. நீங்கள் வலைதளத்தை பார்க்கச் சொல்லியிருந்தால் முதலிலேயே போய் பார்த்திருப்பேன். நீங்கள் கொடுத்த விருந்தில் வயிறு மந்தமாகி விட்டது. தூங்கி விட்டேன். நாளை பார்க்கிறேன் சார்.
    ஆயிரம் நிலவே வா....பல்லாயிரம் நிலவாகிட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

  3. பவித்ரா நந்தகுமார் August 18, 2013 at 8:12 AM

    வாங்கோ மேடம். மிகவும் சந்தோஷம். தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    //நீங்கள் வலைதளத்தை பார்க்கச் சொல்லியிருந்தால் முதலிலேயே போய் பார்த்திருப்பேன். நீங்கள் கொடுத்த விருந்தில் வயிறு மந்தமாகி விட்டது. தூங்கி விட்டேன். நாளை பார்க்கிறேன் சார். //

    அதனால் பரவாயில்லை. விருந்து சாப்பிட்டு தூங்கியதைக் கேட்கவே எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    மெதுவாகப்போய்ப்பாருங்கோ. அவசரமில்லை. 200க்கு மேல் பின்னூட்டங்கள் அவ்விடம் வந்து குவிந்துள்ளதாலும், அவர்கள் எங்கோ வெளியூர் பயணம் போய் இருப்பதாலும், அவற்றை தற்சமயம் வெளியிடுவதில் ஏதோ பிரச்சனை இருப்பதாக அறிகிறேன்.

    //ஆயிரம் நிலவே வா....பல்லாயிரம் நிலவாகிட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.//

    தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும், என் அழைப்பிற்கு இணங்க தங்களின் அன்பான வருகைக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

    அன்புடன் கோபு














    1. //ஆயிரம் நிலவே வா....பல்லாயிரம் நிலவாகிட உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.//


      தங்கள் வாழ்த்துகளுக்கு
      மனம் நிறைந்த இனிய நன்றிகள்...

  4. Read our girija's comments... congratsss




    1. gsanthanam1610 August 20, 2013 at 8:49 AM

      வா, சந்தானம், செளக்யமா? குழந்தைகள் இருவரும் செளக்யமா?

      //Read our girija's comments... congrats//

      ரொம்ப சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

      அன்புடன் கோபு மாமா

    2. //Read our girija's comments... congrats//

      தங்கள் இனிய அருமையான வருகைக்கும்
      வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த
      இனிய அன்பு நன்றிகள்..!

    3. அன்பின் வை.கோ

      217 மறுமொழிகள் - அத்தனையும் அருமை - அனைவரும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழி இட்டுள்ளார்கள் - அனைவருக்கும் பதில் மறுமொழி அளித்த தங்களுக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    4. cheena (சீனா) October 25, 2014 at 2:40 AM
      அன்பின் வை.கோ //

      வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா, வணக்கம் ஐயா.

      //217 மறுமொழிகள் - அத்தனையும் அருமை - அனைவரும் படித்து இரசித்து மகிழ்ந்து மறுமொழி இட்டுள்ளார்கள் - அனைவருக்கும் பதில் மறுமொழி அளித்த தங்களுக்கும் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

      தங்களின் மீண்டும் வருகை மகிழ்வளிக்கிறது ஐயா.

      இந்தத்தங்களின் 218வது மறுமொழியைக் கண்டு பிடிப்பதே எனக்கு மிகவும் கஷ்டமாகிவிட்டது ஐயா.

      பின்னூட்டங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டிவிட்டாலே, அவை பிறர் யாரும் பார்க்க முடியாதபடி ஆகிவிடுகிறது ஐயா.

      இந்தத்தங்களின் கருத்து கடைசியில் சேராமல் இங்கு ஏதோ நடுவினில் புகுந்துள்ளதாலும், தேடிக்கண்டுபிடிக்க நேரமாகி விட்டது ஐயா.

      தங்களின் அன்பான வருகை + பாராட்டுகள் + நல்வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.

      அன்புடன் VGK

  5. அதிகமான கருத்துரைகளை பிளாக்கர் ஏற்றுக்கொள்வதில்லை ..

    எனவே நிதானமாக ஏற்றுக்கொள்கிறதா என உறுதிப்படுத்திக்கொண்டு கருத்துரைகள் தரவேண்டியுள்ளது ..

    சில நாட்கள் கருத்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன் ..

    சில பதில் கருத்துரைகள் நிராகரிக்கப்படுகின்றன..
    எனவே இந்தத் தாமதங்கள்.!

















    1. இராஜராஜேஸ்வரி August 30, 2013 at 7:43 AM

      வாங்கோ அடிக்கடி வாங்கோ. வந்தனங்கள்.

      //அதிகமான கருத்துரைகளை பிளாக்கர் ஏற்றுக்கொள்வதில்லை .. //

      ஆமாம். அதுதான் நமக்குத்தெரிந்ததே. ’அடை’ப்பதிவிலிருந்து கற்ற புதுப்பாடம் இது.

      //எனவே நிதானமாக ஏற்றுக்கொள்கிறதா என உறுதிப்படுத்திக்கொண்டு கருத்துரைகள் தரவேண்டியுள்ளது ..//

      ஆஹா, அப்படியே ஆகட்டும், நிதானமாகவே அது ஏற்றுக்கொள்கிறதா என உறுதிப்படுத்திக்கொண்டே கருத்துரைகள் தாங்கோ.

      அது ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நான் ஏற்றுக்கொள்ள எப்போதுமே தயார் தான். ஏதாவது அவசரம் என்றால் மெயில் கொடுங்கோ, அதில் உடனே ஏற்றுக்கொள்ளும். சொல்ல வந்த விஷயங்கள் நமக்கு மறந்து போகாமலும் இருக்கும்.

      //சில நாட்கள் கருத்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன் ..//

      அதற்கும் ஒரு Happy Mood இருக்கணுமோ? ;)

      //சில பதில் கருத்துரைகள் நிராகரிக்கப்படுகின்றன..//

      சாய்ஸில் விட்டு விடுமோ ..... சிலர் சில கேள்விகளுக்கு பதில் தராமலேயே விட்டுவிடுவதுபோலவே ! ;(

      //எனவே இந்தத் தாமதங்கள்.!//

      தாமதம் ஆனாலும் தட்டாமல் தினமும் வந்து ஏதாவது கொஞ்சம் சொல்லிப்போனால் தான் ஆறுதலாக இருக்கும். ஹூக்க்கும்.

  6. மிடில் கிளாஸ் மாதவி


  7. ராமலக்ஷ்மி



    பார்வதி இராமச்சந்திரன்

  8. கோவை மு சரளா
  9. ராம்வி - ரமாரவி
  10. கோவை2தில்லி
  11. ஆச்சி
  12. ஷக்திப்பிரபா
  13. ருக்மணி சேஷசாயீ
  14. மஞ்சு
  15. புதுகைத்தென்றல்
  16. மணிமாறன்
  17. விஜி பார்த்திபன்
  18. கீதமஞ்சரி
  19. இளமதி
  20. மாதேவி
  21. தென்றல் சசிகலா
  22. நிலாமகள்
  23. ஜெயந்தி
  24. ப்ரியா ஆனந்தகுமார்
  25. ஷைலஜா 
  26. மேனகா
  27. அதிரா
  28. அம்முலு
  29. ஹரணி
  30. ஸாதிகா
  31. விஜி VIJI
  32. திண்டுக்கல் தனபாலன்
  33. வேடந்தாங்கல் கருண்
  34. அப்பாதுரை
  35. வியபதி
  36. இரவின் புன்னகை
  37. குட்டன்
  38. பாரதிதாஸன்
  39. கே பி ஜனா
  40. ஈ எஸ் சேஷாத்ரி
  41. கோவைக்கவி வேதா இலங்காதிலகம்
  42. ஆகிய அனைவருக்கும் விழாவினைச்சிறப்பித்து கருத்துரைகள் அளித்தமைக்கு மனம் 
  43. நிறைந்த இனிய நன்றிகள்....
  44. அன்புள்ள மாமா ஆன்மீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் 1000 வது பதிவுக்கு தாங்கள் வெளியிட்டுள்ள பிரம்மாண்டமான அறிவிப்பு பதிவாக அனைவரையும் பங்கு கொள்ள வைத்தது .அத்தனைக்கும் அவர்கள் பொருத்தமானவர்கள் அவர்களது சில பதிவுகளை சமீபகாலமாக த்தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது விரைவில் தாஙளும் 1000பதிவுகள் வெளியிட இறைவனை வேண்டுகிறேன்

















    1. Sundaresan Gangadharan November 5, 2013 at 9:45 PM

      அன்புள்ள சுந்தர், வாப்பா, வணக்கம்.

      //அன்புள்ள மாமா ஆன்மீகப்பதிவர் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் 1000 வது பதிவுக்கு தாங்கள் வெளியிட்டுள்ள பிரம்மாண்டமான அறிவிப்பு பதிவாக அனைவரையும் பங்கு கொள்ள வைத்தது.//

      ஆம் அது ஓர் மகிழ்ச்சியான தருணம். எனக்கு அதில் மிக்க சந்தோஷம், சுந்தர்.

      //அத்தனைக்கும் அவர்கள் பொருத்தமானவர்கள் //

      Yes, SHE [The Madam] is well deserved for all our appreciations.

      //அவர்களது சில பதிவுகளை சமீபகாலமாக த்தான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.//

      ஆஹா, அதுவே ஒரு பாக்யம் தான். ;)

      //விரைவில் தாஙளும் 1000 பதிவுகள் வெளியிட இறைவனை வேண்டுகிறேன்.//

      மிக்க நன்றி. அதற்கெல்லாம் தனி பிராப்தம் இருக்க வேண்டும்.

      அவர்கள் ஸ்பீடுக்கெல்லாம் என்னால் பதிவிடவே முடியாது. இருப்பினும் பார்ப்போம் ... முயற்சிப்போம்.

      அன்புடன் கோபு மாமா.

  45. நான் இப்பொழுது தான் இந்த பதிவை படிக்கிறேன். அம்மா அவர்களின் தொண்டு மகத்தானது, போற்றப்பாத் வேண்டியது.

    பெரியவர்களுக்கு எவ்வாறு கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று உங்களின் இந்த பதிவின் மூலமாகத் தெரிந்து கொண்டேன், நன்றி ஐயா.

  46. Chokkan Subramanian June 8, 2014 at 6:11 PM

    வாருங்கள் நண்பரே, வணக்கம்.

    //நான் இப்பொழுது தான் இந்த பதிவை படிக்கிறேன். அம்மா அவர்களின் தொண்டு மகத்தானது, போற்றப்பட வேண்டியது.

    பெரியவர்களுக்கு எவ்வாறு கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று உங்களின் இந்த பதிவின் மூலமாகத் தெரிந்து கொண்டேன், நன்றி ஐயா.//

    தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இன்றுடன் [08.06.2014] ஒருவார வலைச்சர ஆசிரியர் பணியினை [வித்யாசமான முறையில்] ஆற்றியதற்கு என் வாழ்த்துகள்.

    அன்புடன் VGK

  47. ஞானத்தில் சரஸ்வதி தேவி;செல்வச்செழிப்பினில் மஹாலக்ஷ்மி; ஆற்றலில் ஆதி பராசக்தி என முப்பெரும் தேவிகளின் தெய்வாம்சங்களையும் ஒருங்கே கொண்டவர்கள் தான் இந்த செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.
    ரொம்ப சரியா சொன்னீர்கள் . அவர்களின் ஒரு சில பதிவுகள்தான் படித்தேன். 1000- பதிவுகளா எவ்வளவு உழைத்திருப்பாங்க. அவங்க அனுபவிச்ச பரவசமான நிகழ்வுகளை நம்ம எல்லாரையுமே அனுபவிக்க வச்சுட்டாங்க.இதெல்லாம் ஆண்டவன் ஆசிர்வாதம் அவங்களுக்கு பரி பூரணமா கிடைச்சிருக்கு என்றுதான் சொல்லவேண்டும்.

  48. sreevadsan July 3, 2014 at 10:50 AM


    //ஞானத்தில் சரஸ்வதி தேவி;செல்வச்செழிப்பினில் மஹாலக்ஷ்மி; ஆற்றலில் ஆதி பராசக்தி என முப்பெரும் தேவிகளின் தெய்வாம்சங்களையும் ஒருங்கே கொண்டவர்கள் தான் இந்த செளபாக்யவதி இராஜராஜேஸ்வரி அவர்கள்.
    ரொம்ப சரியா சொன்னீர்கள் . அவர்களின் ஒரு சில பதிவுகள்தான் படித்தேன். 1000- பதிவுகளா எவ்வளவு உழைத்திருப்பாங்க. அவங்க அனுபவிச்ச பரவசமான நிகழ்வுகளை நம்ம எல்லாரையுமே அனுபவிக்க வச்சுட்டாங்க.இதெல்லாம் ஆண்டவன் ஆசிர்வாதம் அவங்களுக்கு பரி பூரணமா கிடைச்சிருக்கு என்றுதான் சொல்லவேண்டும்.//



  49. வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. - vgk





 

தொடரும்



என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

18 கருத்துகள்:

  1. சார்...சும்மா கலக்குறீங்க....
    படமும், பகிர்ந்த விதமும் அழகாய் இருக்கிறது.
    பின் வந்து நிதானமாய் படிக்கிறேன்..கருத்திடுகிறேன் சார்..

    பதிலளிநீக்கு
  2. பெண் பதிவர்களின் சுவாரசியமான பின்னூட்டங்கள். அருமையாக இருக்கு.

    பதிலளிநீக்கு
  3. WOW! You really have kept all these comments as a treasure. How sweet of you! Thank you very much, கோபு மாமா. பின்னூட்டங்களை மீண்டும் வாசிக்கும் போது , பதிவிட்ட நாட்களை நினைவூட்டியது. எங்களை மறக்காமல் இருந்து, வாழ்த்துக்களை தந்தமைக்கு நன்றி, கோபு மாமா.

    பதிலளிநீக்கு
  4. அன்றைய பிரபல பதிவர்களின் பின்னூட்டங்களை மீண்டும் படித்து மகிழ்ந்ததில் ஓர் நிறைவு ஏற்பட்டது. சிறப்பான தொகுப்பு! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ரசிக்க வைக்கும் தொகுப்புகள் ஐயா...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  7. தொடர் இன்னும் தொடர்கிறது...
    இருப்பினும் முன்னதாகவே...

    சிறப்பான தொகுப்பு!
    அருமையான புள்ளி விவரங்கள்!!
    சுவையான கருத்துப் பின்னூட்டங்கள்!!!
    வியக்க வைக்கும் உழைப்பு!!!!

    பதிலளிநீக்கு
  8. நேற்று உதவியர்களை இன்று மறந்துபோகும் சூழலில் பல மாதங்களுக்கு முன் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டு உரம் சேர்த்த பதிவர்களை மிகுந்த நன்றியுடன் நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் தங்கள் பெருந்தன்மை வியக்கவைக்கிறது. எத்தனை எத்தனை ரசனையான பின்னூட்டங்கள். ரசித்தேன் அனைத்தையும்.

    பதிலளிநீக்கு
  9. நான் மிகவும் மதிக்கும் பெரிய பதிவர்களின் கருத்துக்களோடு என் கருத்துக்களையும் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டங்கள் பதிவைவிட சுவாரஸ்யமாக இருக்கின்றன

    பதிலளிநீக்கு
  11. அதே பின்னூட்டங்கள் சுவாரசியமாதான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. பொக்கிஷ்மாய் மிளிரும் கருத்துரைகள் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:46 PM

      வாங்கோ, வணக்கம்.

      //பொக்கிஷ்மாய் மிளிரும் கருத்துரைகள் ரசிக்கவைத்தன.. பாராட்டுக்கள்.//

      ’ஆயிரம் நிலவுக்குச் சொந்தமாகிய தங்களுக்கு’ மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  13. உங்கள் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பார்த்தபின் அவங்களக் காணலியே, இவங்களக் காணலியேன்னு வேற எண்ணத் தோணறது (உ.ம். லட்சுமி அம்மா, ராஜி)

    பதிலளிநீக்கு
  14. பதிவும் சூப்பராதா இருந்துகிடும் கமண்டுகளும் பதிவுக்கு போட்டி போடுராப்ல சூப்பரா இருந்துகிடும் நானுகூட அல்லா கமண்டுகளயும் படிச்சிபோடுவேன்ல.

    பதிலளிநீக்கு
  15. பதிவு பின்னூடங்கள் எல்மே ரசிக்கும்படி இருக்கு.

    பதிலளிநீக்கு
  16. இதெல்லாம் எப்படிதான் கலக்ட் பண்றீங்களோ?? சுவாரசியம்!!

    பதிலளிநீக்கு