என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

செவ்வாய், 24 மார்ச், 2015

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-8



அவ்வப்போது என் பதிவுகள் பக்கம் கொஞ்சமாக வருகை தந்து கருத்தளித்துள்ள நண்பர்கள் பட்டியல். 

 SECOND CIRCLE .... GENTS ....  40 PERSONS 


திருவாளர்கள்:

YOGA S.FR அவர்கள்
MOHAMED YASAR ARAFATH அவர்கள்
KALIDOSS MURUGAIYA அவர்கள்
RATHNAVEL NATARAJAN அவர்கள்
AANANDHAM அவர்கள்
ANBALAGAN GOMATHI அவர்கள்
ROBERT [மெல்லியல்] அவர்கள்
SURY SIVA ஐயா அவர்கள்
SURESH KUMAR அவர்கள்
T N MURALIDHARAN அவர்கள்

VIYAPATHY [ஏதாவது] அவர்கள்
MANIMARAN அவர்கள்
Kmr KRISHNAN அவர்கள்
SREEVADSAN  அவர்கள்
M K MURUGANANDHAN அவர்கள்
R V SARAVANAN அவர்கள்
திருச்சி கிரிஜா மணாளன் அவர்கள்
ASHOK அவர்கள்
எல்லென் லக்ஷ்மி நாராயணன் அவர்கள்
மணிமாறன் அவர்கள்

கோபி ராமமூர்த்தி அவர்கள்
தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள்
செல்லப்பா யக்ஞசாமி அவர்கள்
வெற்றிவேல் அவர்கள்
மதுரை சொக்கன் அவர்கள்
கணேஷ் அப்பன் அவர்கள்
துரை டேனியேல் அவர்கள்
விச்சு அவர்கள்
வேல் அவர்கள்
கவியாழி கண்ணதாசன் அவர்கள்

சேக்கனா M நிஜாம் அவர்கள்
கவிஞர் கி. பாரதிதாசன் அவர்கள்
ஜீவன் சுப்பு அவர்கள்
அமுதவன் அவர்கள்
மலர்மாலன் அவர்கள்
யாதவன் நம்பி - புதுவை வேலு அவர்கள்
தனிமரம் அவர்கள்
பிரபல எழுத்தாளர் மணி மணி [மாத்தியோசி] அவர்கள்
இரவின் புன்னகை அவர்கள்
குட்டன் அவர்கள்

2011 முதல் 2014 வரை, வருடம் ஒரேயொரு பதிவு வீதம் மட்டும் RANDOM ஆக எடுக்கப்பட்டு, மேற்படி பட்டியல்,  தயாரிக்கப்பட்டுள்ளதால், இதில் மேலும் பலரின் பெயர்கள் விடுபட்டுத்தான் இருக்கும். அவர்களுக்கும் சேர்த்து பின்னூட்டம் இட்டுள்ள அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். 

For First List of 60 Gents, Please refer 

For First List of 70 Ladies, Please refer 

For Second List of 50 Ladies, Please refer 








பதிவுலகில் நான் எழுத ஆரம்பித்து [02.01.2011 முதல் 28.02.2015 வரை] 50 மாதங்கள் முடிந்து விட்டன. இதுவரை 735 பதிவுகளும் வெளியிட்டாகி விட்டன என புள்ளிவிபரங்கள் சொல்லி வருகின்றன. 

இதையெல்லாம் தொடர்ச்சியாக ஆர்வத்துடன் செய்து முடிக்க, மிகவும் ஊட்டம் அளித்தது, அவ்வப்போது வாசகர்கள் அளித்து வந்த பின்னூட்டங்கள் என்ற உற்சாக பானம்  மட்டுமே. அனைத்துப் பதிவுகளையும், அவற்றிற்கான வாசகர்களின் கருத்துக்களையும் மீண்டும் படித்துப்பார்த்து இன்புற்றேன். அவற்றை தனியாக வகை படுத்திக்கொண்டேன்.

பின்னூட்டங்கள் ஏதும் தரப்படாத பதிவுகள் என்று எதுவுமே என் தளத்தில் இல்லாததில் என் மனதுக்கு சற்றே மகிழ்ச்சி. 

என் பதிவுகள் அனைத்துமே, நான் பெற்ற குழந்தைகள் போல எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக  இருப்பினும், பிறர் அளித்துள்ள பின்னூட்டக் கருத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றை தரம் பிரித்து எடை போட்டுப் பார்த்தேன். 

எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இதுவரை வெளியிட்டுள்ள 735 பதிவுகளில் ........

10க்கும் குறைவான பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 3%
அதாவது 22 பதிவுகள் மட்டுமே.

11 முதல் 40 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 30% 
அதாவது 220 பதிவுகள்.

41 முதல் 49 வரை பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 50% 
அதாவது 367 பதிவுகள்.

50க்கும் மேல் பின்னூட்டங்கள் கிடைக்கப்பெற்றவை 17%
அதாவது 126 பதிவுகள். 

பின்னூட்ட எண்ணிக்கைகள் 49 அல்லது 49க்குக் கீழேயுள்ள அனைத்தையும் தனியாக ஒதுக்கிக்கொண்டு விட்டதில், நான் செய்ய நினைத்த வேலை சற்றே சுலபமாகியது. 

1] பின்னூட்ட எண்ணிக்கைகள் 50 முதல் 100 வரை

2] பின்னூட்ட எண்ணிக்கைகள் 101 முதல் 150 வரை

3] பின்னூட்ட எண்ணிக்கைகள் 151 முதல் 200 வரை

4] பின்னூட்ட எண்ணிக்கைகள் 201 முதல் 250 வரை

5] பின்னூட்ட எண்ணிக்கைகள் 251 க்கு மேல்

என பிரித்துக்கொண்டேன். இருப்பினும் இந்த எண்ணிக்கைகளில், பின்னூட்டமிட்டவர்களுக்கு நான் அளித்துள்ள சில மறுமொழிகளான என் பதில்களும்  சேர்ந்துள்ளன என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். 

இதுவரை தொடர்ச்சியாகப் பின்னூட்டமிட்டு ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ள அனைவருக்கும் மீண்டும் என் அன்பான இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய தேதியில், சுய மதிப்பீட்டு ஆவணமாக இவற்றை ஓர் சிறிய தொடர் பதிவாக்கி, சேமித்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.




 பட்டியல் எண்: 1 க்கான இணைப்பு:
 பட்டியல் எண்: 2 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 3 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 4 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 5 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 6 க்கான இணைப்பு:
பட்டியல் எண்: 7 க்கான இணைப்பு:





பின்னூட்ட எண்ணிக்கைகளில்
பின்னிப்பெடலெடுத்துள்ள என் பதிவுகளைப் பற்றி
இங்கு தினமும் பட்டியலிட விரும்புகிறேன்.

பட்டியல் எண்: 8 
பின்னூட்ட எண்ணிக்கைகள் 
151 முதல் 200 வரை


 


TOTAL NUMBER OF COMMENTS : 153


http://gopu1949.blogspot.in/2012/07/blog-post_06.html
விருது-9 + 
இன்றைய இனியவை நான்கு





TOTAL NUMBER OF COMMENTS : 159


http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html
என் வீட்டு ஜன்னல் கம்பி
ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
பகுதி-3




TOTAL NUMBER OF COMMENTS : 163


http://gopu1949.blogspot.in/2014/01/blog-post.html
டும் டும் .... டும் டும் .... 
டும் டும் .... டும் டும் ....
சிறுகதை விமர்சனப் போட்டி பற்றிய முதல் அறிவிப்பு 






TOTAL NUMBER OF COMMENTS : 164


http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html
என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க் கேட்டுப்பார்
பகுதி-1






TOTAL NUMBER OF COMMENTS : 168


http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html


வெண்ணிலவைத் 
தொட்டு ....
முத்தமிட ஆசை ....
மிளகாய்ப்பொடி கொஞ்சம் .... தொட்டுக்கொள்ள ஆசை !





TOTAL NUMBER OF COMMENTS : 174


http://gopu1949.blogspot.in/2012/11/sweet-sixteen.html
ஸ்வீட் சிக்ஸ்டீன் 

[SWEET SIXTEEN]








TOTAL NUMBER OF COMMENTS : 176


http://gopu1949.blogspot.in/2012/10/blog-post.html
மஞ்சூ [உண்மைக்கதை]








TOTAL NUMBER OF COMMENTS : 183


http://gopu1949.blogspot.in/2012/09/blog-post.html
லஞ்ச லாவண்யங்கள்
[நகைச்சுவை - கற்பனை]

லஞ்ச லாவண்யங்கள் !

இராமாயண காலத்திலிருந்தே துவங்கியிருக்கலாமோ?





TOTAL NUMBER OF COMMENTS : 194


http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html
My 10th AWARD FOR THE YEAR 2012 FROM Mrs. PUNITHA



 

 




 

தொடரும்



என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

29 கருத்துகள்:

  1. எங்கெங்கிருந்தோ எல்லாம் வந்து பாராட்டு மழை புரிந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam March 24, 2015 at 5:32 PM

      வாங்கோ, வணக்கம்.

      //எங்கெங்கிருந்தோ எல்லாம் வந்து பாராட்டு மழை புரிந்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி. எங்கிருந்தோவெல்லாமோ, யார் யாரெல்லாமோ வருகை தந்துவருகிறார்களே, நம்ம உள்ளூர்க்காரரான தங்களைக் காணுமே என நான் நினைத்துக் கொண்டே இருந்தேன். இந்த என் தொடரின், இதுவரை வெளியிட்டுள்ள 8 பகுதிகளில், சிலவற்றிற்கு மட்டுமாவது, இன்றைக்காவது தாங்கள் வருகை தந்துள்ளது மகிழ்ச்சியாகவே உள்ளது. மிக்க நன்றி.

      நீக்கு
    2. அடுத்தடுத்து வேலை, உறவினர் வருகைனு ரொம்பவே வேலை மும்முரம். அதோட உடம்புப் படுத்தல், மத்தியானத்தில் மின் வெட்டு. இத்தனையையும் மீறி உட்காரும் நேரம் என்னோட பதிவுகளைப் பார்க்கவும் முக்கியமான மடல்களைப் பார்ப்பதிலும் சரியாகி விடுகிறது. சாயந்திரம் ஏழு மணிக்கப்புறமா கணினியில் உட்கார முடியறதில்லை. ஆகவே தாமதம்! :)

      நீக்கு
  2. மொத்த விவரங்களையும் மொத்தமாக முதலிலேயே எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறீர்களா, அவ்வப்போது எடுத்து வெளியிடுகிறீர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்.March 24, 2015 at 6:03 PM

      வாங்கோ, வணக்கம்.

      //மொத்த விவரங்களையும் மொத்தமாக முதலிலேயே எடுத்து வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறீர்களா, அவ்வப்போது எடுத்து வெளியிடுகிறீர்களா?//

      தொழில் இரகசியத்தையே கேட்டுள்ளீர்கள். :)

      அதனால் என்ன?

      தங்களுக்கு மட்டும் இதனை இங்கு மிக இரகசியமாகச்
      சொல்லுகிறேன்.

      முதலில் மொத்த விபரங்களையும் ROUGH ஆக ஒரு
      நோட்டில் பட்டியலிட்டுக்கொள்வேன்.

      பதிவுக்கு என்ன தலைப்பு கொடுக்கலாம், அதை எப்படி எப்படிக் கொண்டு செல்லலாம், அவற்றை எத்தனைப் பகுதிகளாக வெளியிடலாம் என்பதை மனதில் அசை போட்டுக்கொண்டே வருவேன்.

      பதிவும் சற்றே சுவையாக இருக்க வேண்டும். அதே சமயம் சுருக்கமாகவும் இருக்க வேண்டும்.

      பொதுவாக நான் எழுதும் பதிவுகளுக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என எனக்குள் நானே ஒரு திட்டமும், எதிர்பார்ப்பும் எப்போதுமே வைத்துக்கொள்வது உண்டு.

      ஆனால் இந்த ஒரு தொடருக்கு மட்டும் நான் அதுபோலெல்லாம் எந்த ஒரு எதிர்பார்ப்பும் ... ஏன் பின்னூட்டங்களும் கூட எதிர்பார்க்கவே இல்லை.

      இதை முழுக்க முழுக்க ஓர் ஆவணமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளது.

      பிறரின் பின்னூட்ட எண்ணிக்கைகளின் அடிப்படையில் என்னை நானே எடை போட்டுக்கொள்ள இந்த என் தொடர் மிகவும் உதவக்கூடியதாக உள்ளது.

      மேலும் எனக்கே ஒரு FUTURE REFERENCE க்கும் இது
      உதவிடக்கூடும்.

      >>>>>

      நீக்கு
    2. VGK to SRIRAM (2)

      அதே சமயம், நிறைய பின்னூட்டங்களை சம்பாதித்துள்ள இந்த என் பதிவுகளுக்கான இணைப்பினையும் நான் ஆங்காங்கே தந்து வருவதால், இதுவரை அந்தப்பதிவினைப் படிக்காத புதிய பதிவர்கள் சிலராவது படிக்கவும் கூடும். அதுபோல ஒருசில புதிய பின்னூட்டங்கள் கடந்த 2-3 நாட்களாகக் கிடைத்து வருவதில் சற்றே மகிழ்ச்சியாக உள்ளது.

      இதில் மிகச் சிறிய வருத்தமும் எனக்கு உண்டு. அதாவது என் பதிவுகளில் மிகச்சிறந்தவைகளாக நான் நினைத்துள்ள வேறு சில பதிவுகளில் Total Number of Comments : 41 to 49 என்று இருப்பதனால் அவற்றை இந்தப்பட்டியலில் என்னால் கொண்டுவர இயலவில்லை.

      அதுபோன்ற [41-49 Comments] Category யே Majority யாகவும் அமைந்துள்ளன என்பதும் உண்மையே. அவற்றில் சிலர் அளித்துள்ள பின்னூட்டங்களும் மிக அருமையாகவே, என் மனதுக்குத் திருப்தியாகவே அமைந்துள்ளன என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

      இந்தத் தொடர் வெளியிட ROUGH WORK செய்யும் போதே, அதில் நான் சிலருக்காவது என் மறுமொழிகளை பின்னூட்டமாகக் கொடுத்து, அவற்றின் மொத்த எண்ணிக்கைகளையும் மிகச்சுலபமாக 50 என ஆக்கியிருக்க என்னால் முடியும்.

      ஆனால் அதில் எனக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை.
      அதனால் நான் அவ்வாறெல்லாம் செய்யவும் இல்லை.

      நான் இங்கு வெளியிட்டுவரும் எந்த என் பழைய இணைப்பினிலும் என்னுடைய சமீபத்திய மறுமொழிகளை [Dated 1st to 17th March 2015] எங்கும் யாராலும் காணவே முடியாது. இந்தத்தொடருக்கான முதற்கட்ட பூர்வாங்க வேலைகள் (ROUGH WORK) இந்த மார்ச் மாதம் 10ம் தேதியன்று (10.03.2015) மட்டுமே துவங்கினேன்.

      அடுத்த 4 நாட்களுக்குள் என் மனதில் அதற்கு இறுதி
      வடிவம் கொடுத்து அதை அப்படியே ஓர் படமாக என்
      மனதில் வரைந்து கொண்டு விட்டேன்.

      15th and 16th ஆகிய இரு நாட்களுக்குள் ஓரளவு ROUGH ஆக பதிவுகளை COMPOSE செய்துகொண்டேன்.

      பிறகு அன்றாடம், நாளை வெளியிடப்போகும் பதிவினை
      மட்டும் ஒருமுறைக்கு பலமுறையாகப் படித்து, படங்களை இணைத்து, ஒருசில ஜோல்னா வேலைகள் செய்து மெருகேற்றி வெளியிட தயார் நிலையில்
      வைத்துக்கொள்வேன்.

      இதுவே நான் எப்போதும் கடைபிடித்து வரும் என் தொழில் இரகசியமாகும்.

      >>>>>

      நீக்கு
    3. VGK to SRIRAM (3)

      சிறுகதை விமர்சனப்போட்டிகள் முடிந்த பிறகு, என் துபாய் பயணம் முடிந்து நான் வந்த பிறகு, நான் கொடுத்துவரும்

      (1) ’என் துபாய் பயணக்கட்டுரை’யின்
      19+1=20 பகுதிகள்

      (2) ’என் வீட்டுத்தோட்டத்தில்....’
      என்ற தலைப்பினில் எழுதியுள்ள என்னைப்பற்றிய
      வலைச்சர அறிமுகங்கள் 16+3=19 பகுதிகள்

      (3) ’சந்தித்த வேளையில்......’
      என்ற தலைப்பிலான நேரில் நான் சந்தித்துள்ள பதிவர்கள் பற்றிய 2+6=8 பகுதிகள்

      (4) ‘சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்’
      என்ற தலைப்பிலான ’ஸ்ரீரங்கத்தில் பதிவர்கள் சந்திப்பு’ பற்றிய 7 பகுதிகள்

      (5) ‘ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள்’
      என்ற தலைப்பிலான இப்போது வெளியிட்டுவரும் இந்தத்தொடர்

      ஆகிய அனைத்துமே எனக்கான ஓர் நிரந்தரமான ஆவணமாகவும், இனிய நினைவலைகளாகவும் இருக்கட்டும் என்பதற்காக மட்டுமே வெளியிட்டு வருகிறேன் என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

      >>>>>

      நீக்கு
    4. VGK to SRIRAM (4)

      சிறுகதை விமர்சனப்போட்டி அறிவிப்புக்குப்பிறகு வெளியிடப்படும் பதிவுகளுக்கான பின்னூட்ட எண்ணிக்கைகள் மிகவும் குறைந்துவிடும் என்பது நான் நன்கு எதிர்பார்த்த ஒன்றுதான்.

      அதில் ஒன்றும் எனக்கு ஆச்சர்யமோ வருத்தமோ கிடையாது. விமர்சனப்போட்டிகளில் கலந்துகொள்வோர், விமர்சனம் எழுதி அனுப்ப ஆர்வமாக இருப்பார்களே அன்றி, பின்னூட்டமெல்லாம் கொடுக்க விரும்பவே மாட்டார்கள் என்பது நான் எதிர்பார்த்தது மட்டுமே.

      இப்போது நான் வெளியிட்டு வரும் தொடரில், அதிகப்பின்னூட்டங்கள் கிடைத்துள்ள மொத்தப்பதிவுகளான 126 இல் பெரும்பாலானவை (அதாவது 113 out of 126) நான் 2011, 2012, 2013 ம் ஆண்டுகளில் [அதாவது சிறுகதை விமர்சனப்போட்டி ஆரம்பிக்கும் முன்பே] வெளியிட்ட பதிவுகளாகும்.

      மேலும் தங்களுக்கு ஏதாவது தகவல்கள் வேண்டுமா ஸ்ரீராம் ?

      ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம் !

      என்றும் அன்புடன் VGK



      நீக்கு
    5. அம்மாடி! போதும் ஸார்! இப்போது பின்னூட்டங்கள் குறைவது குறித்துச் சொல்லி உள்ளீர்கள். ஆனால் எங்களுக்கு எப்போதுமே பின்னூட்டம் குறைவுதான். கீதா மேடம் பதிவில் கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். படித்திருப்பவர்கள் எண்ணிக்கைக்கும் பின்னூட்டங்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் நிறைய! நிரைய்ய்ய்ய்ய பேர்கள் படித்து விட்டு, பின்னூட்டம் இடாமல் சென்று விடுகிறார்கள்! எங்கள் கடன் பதிவெழுதிக் கிடப்பதே என்று நாங்களும் பதிவெழுதி வருகிறோம். நண்பர்கள் கைவிடுவதில்லை!

      :)))))))))

      நீக்கு
    6. ஐயா... இதையே ஒரு பதிவாகவும் போடுங்கள்...

      நீக்கு
    7. பொதுவாகவே நான் கருத்துக்களை ரொம்ப எதிர்பார்ப்பது இல்லை எனினும், சில சமயங்களில் முக்கியமான பதிவுகளில் கூட யாரும் இல்லைனா என்னனு நினைப்பது சகஜம் தான். ஆனாலும் பின்னூட்டங்களை எதிர்பார்த்துப் பதிவிடுவது இல்லை. அது வரை நிச்சயம். எப்போதும் வரும் நண்பர்கள் வரலைனா என்னனு கேட்பது உண்டு. மற்றபடி ரொம்ப எதிர்பார்ப்பெல்லாம் வைச்சுக்கறதில்லை.

      நீக்கு
    8. ஆனால் படித்தவர்கள் எண்ணிக்கையைப் பார்த்தால் தலையைச் சுத்தும். அத்தனை பேரும் பின்னூட்டம் போட்டிருந்தால் அதுக்கு பதில் சொல்லவே தனியா ஒரு ஆளைப் போடணும். :)

      நீக்கு
  3. ஸ்ரீராம் சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருந்தது. உங்களால் மட்டும் பொறுமையாக இத்தனை புள்ளி விவரங்களை அடுக்கடுக்காக எடுத்து, கோர்வையாக, சுவாரஸ்யமாக கொண்டு செல்ள முடிகிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. என்னதான் நீங்கள் தொழில் ரகசியத்தை சொன்னாலும் இன்னும், வியப்பு மேலிடத் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. rajalakshmi paramasivamMarch 24, 2015 at 9:27 PM

      வாங்கோ, வணக்கம்.

      //ஸ்ரீராம் சாருக்கு வந்த சந்தேகம் எனக்கும் இருந்தது//

      நம் ஸ்ரீராம் அவர்கள் ஏதோ ஒரு கேள்வியைக் கேட்டு என்னைக் கொஞ்சம் மனம் திறந்து பேச வைத்துள்ளார்.

      //உங்களால் மட்டும் பொறுமையாக இத்தனை புள்ளி விவரங்களை அடுக்கடுக்காக எடுத்து, கோர்வையாக, சுவாரஸ்யமாக கொண்டு செல்ள முடிகிறது என்பது மிகவும் வியப்பாகவே இருக்கிறது. என்னதான் நீங்கள் தொழில் ரகசியத்தை சொன்னாலும் இன்னும், வியப்பு மேலிடத் தான் செய்கிறது//

      எனக்கே என் எழுத்துக்களை மீண்டும் படிக்கும் போது, நாமா இதனை இவ்வளவு அழகாகப் பொறுமையாகச் சிறப்பாக எழுதினோம் என வியப்பு ஏற்படத்தான் செய்கிறது.

      நான் எழுத நினைக்கும் எதையும் முதலில் நன்கு மனதில் வாங்கிக்கொண்டு, மனதிலேயே ஒருமுறை எழுதிக்கொண்டு விடுவேன்.

      அதன்பிறகு கணினியில் அமர்ந்ததும், என்னையறியாமல் குற்றால அருவிபோல மனதில் உள்ளவை கொட்டிக்கொண்டே இருக்கும். அவற்றை என் விரல்கள் மளமளவென்று மிகச்சுலபமாக பதிவேற்றி விடும்.

      இவ்வாறு எழுத்து அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

      என் சிறுகதைகளைத் தவிர நான் எழுதியுள்ள கீழ்க்கண்ட பதிவுகளை நான் மிகவும் நேசிக்கிறேன் / ரஸிக்கிறேன் / வியக்கிறேன். இவற்றிற்கு வாசகர்கள் கொடுத்துள்ள பின்னூட்டங்களே என்னைத் தொடர்ச்சியாக எழுத வைத்துள்ளது என்பதும் மறுக்க முடியாததோர் உண்மையாகும்.

      [1] பொக்கிஷம் - சிறப்புத் தொடர்
      http://gopu1949.blogspot.in/2013/03/1.html

      [2] மீண்டும் பள்ளிக்குப் போகலாம் - சிறிய தொடர்
      http://gopu1949.blogspot.in/2012/03/1.html

      [3] முன்னுரை என்னும் முகத்திரை
      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_21.html

      [4] ஊரைச்சொல்லவா .... பேரைச்சொல்லவா
      [திருச்சி பற்றி - சிறப்புக்கட்டுரை]
      http://gopu1949.blogspot.in/2011/07/blog-post_24.html

      [5] காலம் மாறிப்போச்சு [அனுபவம்]
      http://gopu1949.blogspot.in/2011/08/1-of-2.html

      [6] மழலைகள் உலகம் மகத்தானது - சிறப்புக் கட்டுரை
      http://gopu1949.blogspot.in/2011/11/blog-post_4556.html

      [7] காவேரிக்கரை இருக்கு .... கரைமேலே ____ இருக்கு
      http://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html

      [8] ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தொடர்
      http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_14.html

      [9] சுவானுபவா 2012 கலை நிகழ்ச்சிகள்
      http://gopu1949.blogspot.in/2012/03/svanubhava-2012-1-of-2.html

      [10] ஜான்பேட்டா .... ஸ்பெஷல் கேரக்டர்
      http://gopu1949.blogspot.in/2012/04/1-of-2.html

      [11] கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? விவாதம்
      http://gopu1949.blogspot.in/2012/04/blog-post_9165.html

      [12] ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் தொடர் நாடகம்
      http://gopu1949.blogspot.in/2012/04/1.html

      [13] அடடா என்ன அழகு..... அடையைத் தின்னு பழகு
      http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

      [14] என் வீட்டு ஜன்னல் கம்பி .. ஒவ்வொன்றாய் கேட்டுப்பார் [சிறிய தொடர்]
      http://gopu1949.blogspot.in/2013/02/blog-post.html

      [15] வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை ...
      மிளகாய்ப்பொடி கொஞ்சம் தொட்டுக்கொள்ள ஆசை
      http://gopu1949.blogspot.in/2013/03/blog-post_10.html

      [16] ஜயந்தி வரட்டும் ஜயம் தரட்டும்
      http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

      [17] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா பற்றிய மெகா தொடர்
      http://gopu1949.blogspot.in/2013/05/1.html முதல்
      http://gopu1949.blogspot.in/2014/01/108108.html வரை
      [108 பகுதிகள்]

      [18] என் பெயர் காரணம் [நகைச்சுவை]
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

      [19] உணவே வா ... உயிரே போ [சிறப்புக் கட்டுரை]
      http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

      ஆகியவைகள் என் எழுத்தினை நானே மிகவும் ரஸித்த + நேசித்த பதிவுகள் என்று சொல்லுவேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும், என்னை மேலும் கொஞ்சம் மனம் திறந்து பேச வைத்ததற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK

      நீக்கு
  4. ஒரு ஐந்து பின்னூட்டம் பெறுவதே பிரம்ம பிரயத்தனமாக உள்ளது. ஒவ்வொரு பதிவுக்கும் இத்தனை பின்னூட்டங்கள் பெறுவது, அதுவும் விரிவாக விஷேசமாக அம்சங்களை சிலாகித்து பெறுவது என்பது பெரிய விஷயம்தான். அப்படி பெற்ற பின்னூட்டங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். பின்னூட்டம் இட்டவர்களை பாராட்டி நீங்கள் இடும் இடுகைகள் பின்னூட்டமிட்டவர்களுக்கு பெரிய உற்சாகம் தரும். அருமையான முயற்சி! தொடருங்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  5. 200 பின்னுட்டங்கள் பிரம்மிப்பாக இருக்கு.. வாழ்த்துக்கள் சார். பட்டியல் இட்டுள்ள நீங்க ரசிக்கும் பதிவுகள் அனைத்துமே அருமை..

    பதிலளிநீக்கு
  6. பின்னூட்டங்கள் தொடர் பற்றிய தங்கள் விளக்கமும் அருமை சார்.

    பதிலளிநீக்கு
  7. தொழில் ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டாலும் கூட எத்தனைப் பேரால் உங்களைப் போல் இவ்வளவு கர்மசிரத்தையுடன் பின்பற்ற முடியும்? மிக அழகான தொகுப்பு... திரும்பிப் பார்க்கும்போது நாம்தானா இவற்றை எழுதினோம் என்று நமக்கே வியப்பு தோன்றுகிறதென்றால் எந்த அளவுக்கு ஈடுபாட்டுடன் எழுதியிருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். உங்கள் உழைப்புக்குத் தலைவணங்கிப் பாராட்டுகிறேன் கோபு சார்.

    பதிலளிநீக்கு
  8. மொத்தமா பத்து பின்னூட்டம் கிடைத்தாலே பேரானந்தம் கிடைத்து விடும் எனக்கு....

    பாராட்டுகள் சார். விடுபட்ட பதிவுகளையும் பொறுமையாக நேரம் கிடைக்கும் போது சென்று வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தொடர்ந்து விட்டுப்போன பதிவுகளை நேரம் கிடைக்கும்போது படித்து வருகிறேன். இந்த பதிவினில் Sunshine Blogger Award பற்றிய இணைப்பை மீண்டும் படித்தேன். நீங்கள் பெற்ற இந்த விருதினை
    யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று பகிர்ந்தளித்தீர்கள். அவ்வாறு பெற்றவர்களில் நானும் ஒருவன். மீண்டும் நினைவலைகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா, பின்னூட்ட மன்னன் என்ற பட்டம் கொடுத்து விடலாம்.

    பதிலளிநீக்கு
  11. திட்டமிட்டு எப்படில்லாம் செயல்படரீங்கன்னு தொழில் ரகசியங்களைப் படித்ததும் பிரமிபா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. மலக்கூட்டங்களாய் மணக்கும் பதிவான கருத்துரைகள் அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 8:53 PM

      //ம ல ர் க் கூ ட் ட ங் க ளா ய் மணக்கும் பதிவான கருத்துரைகள் அருமை..//

      வாங்கோ, வணக்கம். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  13. //தங்களுக்கு மட்டும் இதனை இங்கு மிக இரகசியமாகச்
    சொல்லுகிறேன்.//

    சொன்னா மட்டும் என் மரமண்டைக்கு புரியவா போறது. புரிந்தாலும் செயல் படுத்தவா போறேன்.
    முதல்ல செயல் படுத்தற அளவுக்கு என் வலைத் தளத்தில் சரக்கு இல்லையே.

    பதிலளிநீக்கு
  14. தொழில் ரகசியங்க அல்லாத்துக்கும் தெரிஞ்சு போச்சி ஆனாக்க ஆராலும் அத ஃபாலோ பண்ணிகிட ஏலாது. அதுக்கெல்லா ஒரு ஆர்வம் அரப்பணிப்பு சுறுசுறுப்பு கடுமயான ஒழைப்பு அல்ஸா தேவப்படும் இது எத்தர பேருகிட்டால இருந்துகிடும்லா

    பதிலளிநீக்கு
  15. இந்த வயதில் இவ்வளவு ஆர்வம் கடுமையான உழைப்பு இருப்பது ஆச்சரிப்பட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  16. கிராஃப்..ஸ்டெஃபி கிராஃப் மாதிரி சில்வர் ஜூபிலி தாண்டியூம் போய்கிட்டே இருக்கு..!!!

    பதிலளிநீக்கு
  17. தொழில் இரகசியத்தை விளக்கியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு