என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! நிறைவுப்பகுதி-7

பகுதி-1 க்கான இணைப்பு: 
http://gopu1949.blogspot.in/2015/02/1.html
GENERAL MESSAGE ABOUT OUR MEETING

பகுதி-2 க்கான இணைப்பு:
IMPORTANCE TO RUKMANI SESHASAYEE MADAM

பகுதி-3 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR RADHABALU

பகுதி-4 க்கான இணைப்பு:
IMPORTANCE TO ALL GROUP MEMBERS

பகுதி-5 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR RANJANI MADAM

பகுதி-6 க்கான இணைப்பு:
IMPORTANCE TO OUR GEETHA MAMI


22.02.2015 ஞாயிறு 
பதிவர் சந்திப்பு
ஸ்ரீரங்கம்,  திருச்சி.
நிறைவுப்பகுதி-7
Importance to all Participants in General
and
To our 'Aranya Nivas' in particular

கோபு + திரு. நாராயணன் +  
ஆரண்யநிவாஸ் + திரு. மஹாலிங்கம்
திருமதி. கீதா மாமி + திருமதி. ஆதி வெங்கட் +
அஷ்டாவதானி திரு. மஹாலிங்கம் + திரு. தி. தமிழ் இளங்கோ 
திருமதிகள்:
ராதாபாலு + ரஞ்ஜனி + ருக்மணி + கீதா + ஆதி 

திருமதிகள்:
ராதாபாலு + ரஞ்ஜனி + ருக்மணி + கீதா + 
ருக்மணி மாமி அவர்களின் உதவியாளர் + 
ஆதி + செல்வி: ரோஷ்ணி
சிற்றுண்டி உண்ணும்
திரு. நாராயணன் + திருமதி. ரஞ்ஜனி +
திருமதி. ராதாபாலு. 
திருமதி. ருக்மணி அவர்களின் 
அன்பான நேரடி மேற்பார்வையில் விருந்து உபசாரம்.

ஸ்வீட்ஸ் மற்றும் பழங்கள் மட்டும் 
உண்ட களைப்பில் திரு. ராமமூர்த்தி +
 சிற்றுண்டி உண்ணும்
செல்வி: ரோஷ்ணி +
திருமதி. ஆதி வெங்கட் +
திருமதி. ரஞ்ஜனி தம்பதியினர். 

சிற்றுண்டி உண்ணும் அடியேன் VGK + 
திரு. மஹாலிங்கம் அவர்கள்.



சிற்றுண்டி சாப்பிட்டு முடித்த கையோடு
சூடான சுவையான காஃபி, 
காகிதக்கோப்பைகளில்,
[காஃபி சாப்பிடும் வழக்கமே இல்லாத
திருமதி. ஆதி வெங்கட் அவர்களால்]
ஒரு டிரேயில் வைத்தபடி,
அனைவருக்கும் அழகாக அளிக்கப்பட்டது. 

என் வழக்கப்படி ஒரு அரை கப் மட்டும் 
கூடுதலாகவே கேட்டு வாங்கிச் சாப்பிட்டு மகிழ்ந்தேன்.


இவ்வாறாக பதிவர் சந்திப்பு விழா 
இனிதே நடைபெற்று முடிந்தது.




முன்னதாகவே சரியான நேரத்தில் 
வருகை தந்திருந்த 
திரு. தமிழ் இளங்கோ போன்ற 
ஒருசிலர் மட்டும் ஏதேதோ கொஞ்சம் 
பதிவுகள் சம்பந்தமான சில பொதுவான 
விஷயங்களைத் தங்களுக்குள் மட்டும்
பேசிக்கொண்டிருந்தார்கள்.




இந்த இனிய சந்திப்பு பற்றி 
விழாவினில் கலந்துகொண்ட
மற்ற பதிவர்களும் அவரவர்கள் பாணியில் 
அவரவர்களின் வலைத்தளத்தினில் 
பதிவுகள் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளனர். 

அவற்றிற்கான இணைப்புகள்:





இந்தத்தொடர் இப்போதைக்கு 
இத்துடன் மிகச்சுருக்கமாக :) 
நிறைவடைகிறது. 


ஏற்கனவே  http://gopu1949.blogspot.in/2015/02/6-of-6_18.html இந்த இணைப்பின் இறுதியில் என்னால் தெரிவிக்கப்பட்டுள்ள பட்டியலில் திருமதி. ரஞ்ஜனி அவர்களின் பெயரும் இப்போது சேர்ந்து, நான் இதுவரை சந்திக்க நேர்ந்துள்ள பதிவர்கள் + எழுத்தாளர்கள் எண்ணிக்கை: 38+1=39 என ஆகியுள்ளதில் மகிழ்ச்சியே. 


NUMBER : 39


 


முப்பெரும் விழா பற்றி

சந்திப்பின் இறுதியில் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி ஓர் அறிவிப்பு வெளியிட்டார். அதாவது வரும் மார்ச் மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் அவர்களின் ‘ஆரண்யநிவாஸ்’ தோட்டத்தில் ஓர் முப்பெரும் விழா கொண்டாட இருப்பதாகவும் அதற்கு அனைவரும் அன்புடன் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

முப்பெரும் விழா பற்றிய விபரங்கள்:



1] சாதனைகள் நிகழ்த்திக் காட்ட நினைக்கும் சுமார் 70 வயது அஷ்டாவதானியான திரு. மஹாலிங்கம் [மாலி] அவர்களின் திறமைகளை நாம் எல்லோரும் நேரில் கண்டு களிப்பது, பாராட்டுவது, கெளரவிப்பது. 




2] தன் மாமனார் + மைத்துனர்களுக்குச் சொந்தமானதும், மிகப்பிரபலமானதுமான, திருச்சி .... ஆதிகுடி ஹோட்டலின் ருசிகரமான பல்வேறு பதார்த்தங்களை ஆரண்ய நிவாஸுக்கே வரவழைத்து, வருகை தரும் அனைவருக்கும் தடபுடலாக விருந்தளித்து மகிழ்விப்பது.




  







3] ஏற்கனவே ஏராளமாகப் பூப்பெய்தியுள்ள நிலையினில் இருக்கும் ’ஆரண்ய நிவாஸ்’ தோட்டத்தின், மாமரங்களில் காய்க்க உள்ள மாவடுக்களை, வருகை தரும் ஒவ்வொருவருக்கும் ஐந்து கிலோவுக்குக்குறையாமல் அளிப்பது. :)





சிலர் ’வாய் புளிச்சுதா ..... மாங்கா புளிச்சுதா’ ன்னு ஏதாவது பயனில்லாத பேச்சினை மட்டுமே பேசுவார்கள். நம் ராமமூர்த்தி அப்படியெல்லாம் பேச மாட்டார். ’சொல்வதைச் செய்வார். செய்வதை மட்டுமே சொல்வார்’ என நம்புவோமாக ! 

சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன் மரங்களில் போதுமான அளவு காய்கள் தேறாவிட்டாலும் கூட, வெளி மார்க்கெட்டிலிருந்தாவது வாங்கி எப்படியும் அளித்து விடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 



என்ன செய்யப்போகிறார் என்று பார்க்கவாவது மீண்டும் ஒரு முறை ஆரண்ய நிவாஸ் செல்ல ஆயத்தமாகவே உள்ளேன். 


 

புத்தம் புதிய முரட்டு ரக A/C கார் சமீபத்தில் அவர் வாங்கியிருப்பதால் என்னை ஒரு அடிகூட நடக்கவிட அவர் விரும்பவே மாட்டார். போகவர எப்படியும் எனக்குப் பிரச்சனை இருக்காது என்ற நம்பிக்கையும் எனக்கு மிக அதிகமாகவே உள்ளது. 



இருப்பினும் நான் மட்டும் தனியாகவா வருவேன்? வழக்கம்போல நம் அன்புக்குரிய ராதாபாலு, அவரின் கணவர், நம் அருமை நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ ஆகியோருடன் மட்டும்தான் அந்த முரட்டு ரக A/C காரில் என் பயணம் அன்று இருக்கும். :)  

ஒருவேளை என் மேலிடம் கூட என்னுடன் வருகை தந்தாலும் ஆச்சர்யம் ஏதும் இல்லைதான். இதனால் எங்கள் இருவருக்குமாக 5+5=10Kg. வடுமாங்காய் கிடைத்தாலும் கிடைக்கலாம் அல்லவா ! ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !! :)

அந்த நாளும் வந்திடாதோ என்ற ஆவலுடன் .... 


735 



என்றும் அன்புடன் தங்கள்
 

[வை.கோபாலகிருஷ்ணன்]

39 கருத்துகள்:

  1. பதிவர்களின் சந்திப்பை சுவாரஸ்யமாகவும் விரிவாகவும் பகிர்ந்தமை சிறப்பு! முப்பெரும் விழா சிறக்கவும், தங்களின் பத்துகிலொ மாவடு ஆசை நிறைவேறவும் வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. இப்படியாகத்தானே ஒரு இனிய சந்திப்பு அன்று நிறைவாக முடிந்தது.... ! சுவாரஸ்யமாக ரஸித்தோம். :))))))

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமான சந்திப்பு.
    அழகான படங்களுடன் தங்களது விளக்கங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு சுவாரஸ்யம்! தங்களின் சந்திப்பு அதையும் மிகவும் விரிவாகவும், புகைப்படங்களுடனும், நகைச்சுவை இழையோட (உடம்பில் அணிந்தால் தான் நகையா என்ன? எழுத்தையும் நகையால் அலங்கரிக்கலாம் தானே! அதை மிகவும் அழகாகச் செய்கின்றீர்கள்!!!) தாங்கள் விவரிப்பது அலாதி சுவாரஸ்யத்தை அளிக்கின்றது. அது சரி 10 கிலோ மாவடு கிடைத்ததா இல்லையா?!!!!! ஸ்ரீரங்கத்து மாவடு ஃபேமஸ் ஆச்சே! ..

    பதிலளிநீக்கு
  5. மங்களம், சுப மங்களம்.

    ஆரண்யநிவாஸ் சந்திப்பிள்கு அடியேனுக்கு அனுமதி உண்டா? வெங்காய ஊத்தப்பம் இப்பவே சாப்பிடணும் போல இருக்கு.

    (உ.கிழங்கு போண்டா சாப்பிட்டதே போதும், வெங்காய ஊத்தப்பம் சாப்பிட்டுட்டு புதுசா என்ன பிரச்சினை கொண்டு வரப்போறீங்க - இது என் வீட்டுக்கார அம்மா)

    பதிலளிநீக்கு
  6. அழகான சந்திப்பை சுவாரஸ்யமாக சொன்ன விதம் சிறப்பு ஐயா...

    உங்களது எண்ணங்கள் நிறைவேறும் ஐயா.... வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  7. இனிதான சந்திப்புகள் தொடரட்டும்.....

    பதிலளிநீக்கு
  8. பதிவர் சந்திப்பு மிக அருமை. மாவடு படங்கள் அழகு.
    வாங்க வேண்டும் சீக்கிரம். நினைவு படுத்தி விட்டீர்கள்.
    முப்பெருவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. வாங்க ஜமாய்ச்சுடலாம்...கந்த சாமி சார் நீங்களும் தான்!
    ஆதிகுடி ஸ்பெஷல் பட்டணம் பக்கோடா உங்களுக்காகவே!

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு. நயமான முடிவுரை. மாவடு புகைப்படம் நாவில் நீர் ஊற வைக்கிறது. எப்போ அடுத்த பதிவர் சந்திப்பு?!


    பதிலளிநீக்கு
  11. பதிவர் சந்திப்பு நல்லவிதமாக முடிந்தது அறிந்து மகிழ்ச்சி,. பொறுப்பாளராக இருந்து எல்லோரையும் ஓர் இடத்தில் கூட்டி குறித்த நேரத்தில் சந்திப்பு நடத்துவது என்பது லேசு பட்ட காரியமல்ல; பொறுப்பாளராய் இருந்து சந்திப்பு ஏற்பாடு செய்பவருக்குத் தான் கூடுதல் டென்ஷன் இருக்கும். சந்திப்புப் பற்றிய விபரங்களையும் புகைப்படங்களையும் சேர்த்து உடனுக்குடன் வெளியிட்டு ஒரு வாரம் தூங்கவே இல்லாமல் கடுமையாக உழைத்திருக்கிறீர்கள். கண்டிப்பாக ஒரு வாரம் நல்ல ஓய்வு எடுத்துக் கொணடு பிறகு வாருங்கள். இல்லையேல் உங்கள் 'மேலிட'த்துக்கு நாங்கள் புகார் கொடுக்க வேண்டியிருக்கும் கோபு சார்!

    பதிலளிநீக்கு
  12. கட்டுரையானாலும் விமர்சனம் என்றாலும் உங்களுக்கு சட்டு சட்டென்று வார்த்தைகள் அருமையாய் வந்து விழுகின்றன. நடந்து முடிந்துபோன பதிவர் சந்திப்பைப் பற்றியும், நடக்கப் போகும் சந்திப்பிற்கான ஆவலாய்ச் சொன்னீர்கள்.

    படத்தில் உள்ள வடு மாங்காய் வியாபாரி இருப்பது , உங்கள் அபார்ட்மெண்ட்ஸ் அருகில் உள்ள ராமா கபே எதிரில் உள்ள அரசமரத்தடி போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  13. inimaiyaana sandhippai sirappaa solliullitteenga.... nandri..

    kaiyil veneer kotti vittathal oru viralaal type panren...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ADHI VENKAT March 4, 2015 at 2:02 PM

      Welcome to you, Madam.

      //inimaiyaana sandhippai sirappaa solliullitteenga.... nandri.. இனிமையான சந்திப்பை சிறப்பாகச் சொல்லிட்டீங்க, நன்றி//

      Thank you very much, Madam.

      //kaiyil veneer kotti vittathal oru viralaal type panren... கையில் வெந்நீர் கொட்டிவிட்டதால் ஒரு விரலில் டைப் பண்றேன்//

      I feel very very Sorry to hear this. :(

      As I told you in detail in my mail, please get appointment from the Lady Private Secretary to the Lady Skin Specialist Dr. Narmada Srinivasan at 10th Cross Thillainagar, Tiruchi-18 and get yourself cured immediately.

      Once again .... Their Contact No. 98424 13722 for your kind reference. I pray for your speedy recovery.

      யார் கண்பட்டதோ?.. திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளதே! கேட்கவே மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளதுங்க. :(

      VGK

      நீக்கு
  14. பதிவர்கள் சந்திப்பு அமர்களமாக முடிந்து இருக்கிறது. அடுத்த சந்திப்பும் இனிதே அமையட்டும். மாவடு....நீர் ஊற வைக்கிறது. 10 கிலோ...கிடைக்கட்டும்...நாங்க வந்தா கொஞ்சம் வாங்கிக்க வசதியாக இருக்குமில்ல....ஹஹஹா.....

    படங்களும், விளக்கங்களும் நேரில் கண்டது போல் இருக்கு சார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. நல்ல நிகழ்வை மிகவும் ரசிக்கும்படியாகவும், மனதில் நிற்கும்படியாகவும் பதிந்துள்ளீர்கள். நண்பர்களை ஒரே இடத்தில் காணும்போது கிடைக்கும் மன நிறைவுக்கு ஈடு எதுவுமில்லை. அதனைப் பகிர்ந்து அனைவரையும் பெருமைப்படுத்திவிட்டீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. சகோதரி ஆதி வெங்கட் அவர்களின் இரு கைகளிலும் கொதிக்கிற வெந்நீர் கொட்டி, நிறைய கொப்புளங்கள் வந்துள்ளன என்ற தகவலை உங்கள் வழியே தெரிந்து வருந்தினேன். அவர் முழு குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. இந்த என் தொடரின் அனைத்து ஏழு பகுதிகளுக்கும் அன்புடன் வருகை தந்து, அழகாகக் கருத்தளித்து மகிழ்வித்துள்ள

    திருவாளர்கள்:

    01] ஸ்ரீராம் அவர்கள்
    02] திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
    03] தி. தமிழ் இளங்கோ அவர்கள்

    மற்றும்

    திருமதிகள்:

    04] ஆதி வெங்கட் அவர்கள்
    05] கோமதி அரசு அவர்கள்

    ஆகிய ஐவருக்கும் என் மனம் நிறைந்த இனிய கூடுதல் அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன் தங்கள்
    கோபு [VGK]

    >>>>>

    பதிலளிநீக்கு
  18. இந்த என் தொடரில் உள்ள மொத்தம் ஏழு பகுதிகளில், பெரும்பாலான (அதாவது ஆறு பகுதிகளுக்கு) அன்புடன் வருகை தந்து, அழகாகக் கருத்தளித்து மகிழ்வித்துள்ள

    திருமதிகள்:

    01] ராம்வி [ரமா ரவி] அவர்கள்
    02] ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்
    03] கீதமஞ்சரி கீதா மதிவாணன் அவர்கள்

    மற்றும்

    திருவாளர்:

    04] தளிர் சுரேஷ் அவர்கள்

    ஆகிய நால்வருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன்
    கோபு [VGK]

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. இந்த என் தொடரில் உள்ள மொத்தம் ஏழு பகுதிகளில், அவ்வப்போது ஏதேனும் ஒருசில பகுதிகளுக்காவது, அல்லது குறைந்தபட்சமாக ஒரேயொரு பகுதிக்காவது அன்புடன் வருகை தந்து, அழகாகக் கருத்தளித்து மகிழ்வித்துள்ள

    திருமதிகள்:

    5 out of 7

    01] கீதா சாம்பசிவம் அவர்கள்

    4 out of 7

    02] ராதாபாலு அவர்கள்
    03] கலையரசி அவர்கள்
    04] உமையாள் காயத்ரி அவர்கள்
    05] காமாக்ஷி மாமி அவர்கள்

    3 out of 7

    06] தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள்
    07] ஜெயந்தி ரமணி அவர்கள்

    2 out of 7

    08] ஆச்சி அவர்கள்
    09] வல்லிசிம்ஹன் அவர்கள்

    1 out of 7

    10] மனோ சாமிநாதன் அவர்கள்
    11] ஷைலஜா அவர்கள்
    12] அனுராதா ப்ரேம் அவர்கள்
    13] தமிழ்முஹில் பிரகாசம் அவர்கள்
    14] துளஸி கோபால் அவர்கள்
    15] ரஞ்ஜனி நாராயணன் அவர்கள்

    திருவாளர்கள்:

    5 out of 7

    16] வெங்கட் நாகராஜ் அவர்கள்
    17] ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்
    18] E S சேஷாத்ரி அவர்கள்

    4 out of 7

    19] ரிஷபன் அவர்கள்

    3 out of 7

    20] துளஸிதரன் V தில்லையக்காது அவர்கள்

    2 out of 7

    21] ஜீவி ஐயா அவர்கள்
    22] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
    23] பரிவை சே. குமார் அவர்கள்
    24] யாழ்பாவணன் காசி ராஜலிங்கம் அவர்கள்

    1 out of 7

    25] K B ஜனா அவர்கள்
    26] முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்கள்
    27] T V கிருஷ்ணன் அவர்கள்
    28] லத்திகர் அவர்கள்
    29] ஸ்ரீவத்ஸன் அவர்கள்
    30] கில்லர்ஜி அவர்கள்

    ஆகிய அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    என்றும் அன்புடன்
    கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  20. இந்த என் இனிய சந்திப்புகள் தொடருடன், இதுவரை நான் சந்திக்க நேர்ந்துள்ள பதிவர்கள் + எழுத்தாளர்கள் + தனித்திறமைகள் வாய்ந்தோர் எண்ணிக்கை 39 என்று ஆனது போலவே, இன்றும் என் பின்னூட்டத்தொடர்பு எல்லைக்குள், 5+4+30=39 பேர்களாவது நீடித்து வருகிறார்களே என்பதை நினைக்கும் போது என் மனதுக்கு சற்றே ஆறுதலாக உள்ளது.

    முன்பெல்லாம் ஒரு காலக்கட்டத்தில், இவ்வாறு வருகை தந்து பின்னூட்டமிடுவோர் எண்ணிக்கை மும்மடங்காக [120 நபர்களுக்குக் குறையாமல்] இருந்து வந்தது. அவர்கள் ஒவ்வொருவருக்குமான என் மறுமொழிகளையும் சேர்த்து, பின்னூட்ட எண்ணிக்கைகள் மொத்தம் 250ஐத் தாண்டியதும் உண்டு. உண்மையிலேயே ‘அது ஒரு பொற்காலம்.’

    அனைவருக்கும் மீண்டும் என் நன்றிகள்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. புள்ளிக்கணக்கு (கோலம் போடும் திறமை) பள்ளிக்கு உதவாது என்பார்கள். ஆனால் உங்கள் விஷயத்தில் புள்ளி விவரங்கள் உங்கள் பதிவுலக சாதனைகளை பறை சாற்றுகின்றன. நீங்கள் முன் தொடர்ந்து செல்லுங்கள் நானும் பின் தொடர்ந்து வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  22. பதில்கள்
    1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

      அன்புடையீர்,

      வணக்கம்.

      31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளhttp://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 பிப்ரவரி வரையிலான 50 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் [1 to 735] அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து, விட்டுப்போய் உள்ள பதிவுகளுக்குக் கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் ரொக்கப்பரிசும் பெற என் அன்பான அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஐயா. :)

      என்றும் அன்புடன் VGK

      நீக்கு
  23. அழகான படங்கள் சுவாரசியமான விவரங்களுடன் பகிர்வு சூப்பர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

      வணக்கம்மா.

      31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

      இத்துடன் 2011 ஜனவரி முதல் 2015 பிப்ரவரி வரை 50 மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

      இன்னும் ஒரேயொரு மாதத்தின் 15 பதிவுகள் மட்டுமே பாக்கியுள்ளன. அதாவது மார்ச் 2015 மட்டுமே.

      மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

      போட்டியில் வெற்றியும் பரிசும் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

      பிரியமுள்ள நட்புடன் கோபு

      நீக்கு
  24. சுவாரஸ்யமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரிOctober 17, 2015 at 1:02 PM
      சுவாரஸ்யமான பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம்.

      தங்களின் அன்பான வருகைக்கும், சுவாரஸ்யமான வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  25. உங்கள் சந்திப்பு

    எங்களுக்கும் தித்திப்பு.

    திருச்சி மாவடு சொல்லணுமா? நாக்குல தண்ணி ஊர்றது.

    இப்படி புள்ளி விவரங்களை அள்ளி விடற நீங்க கண்டிப்பா போன ஜென்மத்துலயும் ஒரு கணக்கப் புள்ளையாதான் இருந்திருக்கணும்.

    பதிலளிநீக்கு
  26. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு:

    அன்புள்ள ஜெயா,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன் 2011 ஜனவரி மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை முதல் 50 மாதங்களில் உள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் இன்னும் ஒரேயொரு மாதப் பதிவுகள் மட்டுமே இந்தப்போட்டிக்குத் தாங்கள் பின்னூட்டமிட பாக்கியுள்ளது.

    மெதுவாக வருகை தந்து, அழகாக தங்கள் பாணியில், விரிவாகப் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

    பிரியமுள்ள நட்புடன் கோபு

    பதிலளிநீக்கு
  27. இந்தவாட்டி நெறயா பலவாரம் படம் போட்டீக. நல்லா பசி எடுத்துகிச்சி. ஆமா நீங்க மட்டும் ஏன் தனியா இருந்துகிட்டு சாப்டுரீங்க. யாராச்சிம கண்ணு போட்டுபிடுவாங்களோன்னு பயமா.

    பதிலளிநீக்கு
  28. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

    அன்புள்ள (mru) முருகு,

    வணக்கம்மா !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை, முதல் 50 மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் ஏதோவொரு பின்னூட்டம் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    போட்டிக்கு இன்னும் ஒரு மாத பதிவுகள் 15 மட்டுமே பாக்கியுள்ளன. மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

    பதிலளிநீக்கு
  29. படங்களுடன் பகர்வும் நல்ல சுவாரசியமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  30. படங்களுடன் பகர்வும் நல்ல சுவாரசியமா இருக்கு.

    பதிலளிநீக்கு
  31. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    735 out of 750 (98 %) within
    23 Days from 15th Nov. 2015 ! :)
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


    அன்புள்ள ’சரணாகதி’ வலைப்பதிவர்
    திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் முடிய, என்னால் முதல் 50 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  32. வலை சொந்தங்கள்...வலைவீசிப்பிடித்த சொந்தங்கள்போல...தொடர்கதையாகவே இருக்க வாழ்த்துகள். நிறைவு.

    பதிலளிநீக்கு
  33. -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
    So far your Completion Status:

    735 out of 750 (98%) that too within
    17 Days from 26th Nov. 2015.
    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

    அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
    திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

    வணக்கம் !

    31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை, என்னால் முதல் 50 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

    மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

    பிரியமுள்ள நட்புடன் VGK

    பதிலளிநீக்கு
  34. நிறைவளிக்கும்படி அமைந்த பதிவு! நிறைய பதிவர்களை தங்கள் வலைப்பக்கத்தின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது! மிக்க நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  35. சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்
    ========================================

    நேற்று 07.02.2016 ஞாயிறு மாலை 4 மணி முதல் 7 மணி வரை திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் அருகே ஓர் பதிவரின் இல்லத்தில், ஓர் சிறப்பான பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    வலையுலகில் 2004 முதல் ’துளசிதளம்’ என்ற வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுவரும் வலைப்பதிவரும், http://thulasidhalam.blogspot.in/ நியூஸிலாந்தில் வசித்துவருபவருமான திருமதி. துளசி கோபால் அவர்களும், அவர்களின் கணவர் திரு. கோபால் அவர்களும் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மகிழ்வித்தனர்.

    திருச்சி பதிவர்களான திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள், திருமதி. கீதா சாம்பசிவம் அவர்கள், திருமதி. ஆதி வெங்கட் அவர்கள், செல்வி. ரோஷ்ணி அவர்கள், திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் அவர்கள், ஆரண்யநிவாஸ் திரு. இராமமூர்த்தி அவர்கள், திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், மற்றும் அடியேன் வை.கோபாலகிருஷ்ணன், கலந்து கொண்டோம்.

    பதிவர் திருமதி. துளசி கோபால் அவர்களே, நான் இதுவரை நேரில் சந்தித்துள்ள 40வது பதிவராகும்.

    நான் ஏற்கனவே சந்தித்துள்ள 1 to 39 பதிவர்கள் பற்றிய ஓர் தொடர் பதிவு, 2015 பிப்ரவரி மாதம், நிறைய படங்களுடன் கொடுத்துள்ளேன்.

    அதற்கான முதல் பகுதிக்கான இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2015/02/1-of-6.html

    நிறைவுப்பகுதிக்கான இணைப்பு:
    http://gopu1949.blogspot.in/2015/02/7.html

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் VGK
    08.02.2016

    பதிலளிநீக்கு