என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 26 பிப்ரவரி, 2015

சொந்தம் எப்போதும் தொடர்கதை தான் ! பகுதி-5

நாங்கள் எல்லோருமே மாலை மிகச்சரியாக 4.45 மணிக்குள் கூடி காத்திருக்க திருமதி. ரஞ்ஜனி மேடமும் அவர்களின் கணவரும் சேர்ந்து சற்றே தாமதமாக [6 மணி சுமாருக்கு] வருகை தந்தார்கள்.

அவர்கள் உள்ளே நுழையும் போது எடுக்கப்பட்ட படங்கள்:

 


ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். ரஞ்ஜனி மேடம் ராதாபாலுவை அப்படியே மகிழ்ச்சியில் கட்டிப் பிடித்துக்கொண்டார்கள். நான் என் கேமராவை ரெடி செய்வதற்குள் அவர்களின் ’கட்டிப்பிடி வைத்தியம்’ முடிந்துவிட்டது. அதனால் அந்தக் காட்சியை என்னால் உடனடியாகப் புகைப்படம் எடுக்க முடியாமல் போய் விட்டது. :(


என் சிறுகதைத் தொகுப்பு நூல்
‘எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு’
என்னால் திருமதி. ரஞ்ஜனிக்கு அளிக்கப்பட்டது. 


ஒரேயொரு எண்ணிக்கை கூடுதலால்
{ அதுவும் ஓர் அரை டிக்கெட் :) }  
சந்திப்பினில் கலந்துகொண்ட பெண் பதிவர்கள்
மெஜாரிட்டியாகி விட்டனர்.

அவர்கள் ஆறு + நாங்கள் ஐந்து
ஆறையும் ஐந்தையும் சேர்த்தால்
ஆரஞ்சு ஜூஸ் தானே! 
 

இனிமையாகத்தான் இருந்தது ஜூஸ்


மிக்க மகிழ்ச்சியே !

கலந்துகொண்ட அனைத்துப் பெண் பதிவர்களுடனும்
நானும் ஆரண்யநிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களும்

 திருமதி. ரஞ்ஜனி எனக்கு அளித்த நூல்
 ’விவேகானந்தர்’ 
 திருமதி. ரஞ்ஜனி எனக்கு அளித்த மற்றொரு நூல்
 ’மலாலா - ஆயுத எழுத்து’ 


வலையுலகில் திருமதி. ரஞ்ஜனி அவர்களின் எழுத்துக்களுடன் ஒருகாலத்தில் [2011-2013] எனக்கு மிகவும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அந்தக்காலக்கட்டங்களில் இவர்களின் ஒவ்வொரு பதிவுகளுக்கும் நான் ஏராளமாகவும் தாராளமாகவும் பின்னூட்டங்கள் அளித்துள்ளேன்.  

2011ம் ஆண்டு இவர்களின் வலைத்தளத்தினில் மிக அதிகமான எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் கொடுத்திருந்தது நான் தான் என WORDPRESS புள்ளிவிபரங்கள் தெரிவித்திருந்தன. அதையும் இவர்கள் தன் பதிவினில் பெருமையுடன் வெளியிட்டிருந்தார்கள்.  

அதன் இணைப்பினை இங்கு என்னால் இப்போது காட்டமுடியவில்லை.  ஏனெனில் WORDPRESS SYSTEM அதுபோன்று மிகவும் வழுவட்டையானது. 

ஏனோ BLOGSPOT இல் இல்லாமல் WORDPRESS இல் எழுதுவோருக்கு பின்னூட்டங்கள் இட எனக்குப்பிடிப்பது இல்லை.  அதில் பின்னூட்டம் இட்டாலும் ஒழுங்காக அவை போய்ச்சேராது.

ஒருநாள் (என்னிடம் நான் சேமித்து வைத்துக் கொள்ளாமல்) விடியவிடிய  நான் இவர்களின் பதிவு ஒன்றுக்கு எழுதியனுப்பிய என் பின்னூட்டங்கள் அத்தனையும் இவர்களாலும் வெளியிடப்படாமல் எங்கோ மாயமாக மறைந்து போய் விட்டன. 

அதனால், அதன்பிறகு இவர்களின் WORDPRESS பதிவுகள் பக்கமே நான் ஆர்வத்துடன் செல்வதை அடியோடு நிறுத்திக்கொண்டு விட்டேன். எப்போதாவது அபூர்வமாகச் செல்வது உண்டு. அதேபோல அவர்களும் பிறகு என் வலைத்தளப்பக்கம் அபூர்வமாக மட்டுமே வருவது என வழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள்.

2014ம் ஆண்டு இவர்கள் தன் புத்தக வெளியீடுகளில் தீவிரமாக இருக்க நேர்ந்து விட்டதால் என் பதிவுகள் பக்கம், சுத்தமாக வரவே இல்லை.

என் நிர்பந்தத்திற்காகவே BLOGSPOT இல் ’திருவரங்கத்திலிருந்து’ என ஓர் தனிவலைத்தளப்பதிவு துவங்கினார்கள். ஏனோ அதிலும் இவர்கள் அதிகமாகப் பதிவுகள் தொடர்ந்து எழுதக்காணோம்.  

மிகவும் வழுவட்டையான WORDPRESS என்பதிலேயே மூன்று தளங்கள் வைத்துக் கொண்டுள்ளார்கள். இவர்களின் எழுத்துத் திறமைக்கு மூன்று என்ன முப்பது கூட வைத்துக்கொள்ளலாம் தான். :)

{ ’வழுவட்டை’ என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உடனே செல்ல வேண்டிய பதிவு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html  காணத்தவறாதீர்கள் ! }

மற்றபடி பதிவுலகம் தாண்டி, எங்களுக்குள் இன்றும் நல்லதொரு நட்பு உண்டு. இவர்கள் எப்போதுமே, இன்றும் என் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே உள்ளார்கள். 

இவர்கள் பெங்களூர் விஜயநகரில் உள்ள ’இந்திரப்பிரஸ்தா’ என்ற ஹோட்டலின் மாடியில் உள்ள A/C அறையில், ஏற்கனவே ஒத்துக்கொண்டுள்ளபடி, ஒரு மிகப்பெரிய TREAT எனக்குக் கொடுக்க வேண்டியுள்ளது. அது இன்னும் PENDING ஆகவே உள்ளது. ஏனோ அதனை மறந்தாற்போலவே இருக்கிறார்கள். நானும் அதனை இந்த இனிய சந்திப்பினில் நினைவூட்டி அவர்களை தர்மசங்கடப்படுத்த விரும்பவில்லை. :)  


இந்த இனிய சந்திப்பு பற்றிய மேலும் சில செய்திகள் + படங்கள் என் அடுத்த பகுதியினில் கொடுக்க உள்ளேன்.

தொடரும்


என்றும் அன்புடன் தங்கள்
[வை. கோபாலகிருஷ்ணன்]

38 கருத்துகள்:

  1. படங்களும் பகிர்வும் சூப்பர்...

    அரை டிக்கெட்டா.....:))) ரோஷ்ணியிடம் கட்டாயம் சொல்கிறேன்....:))

    பதிலளிநீக்கு
  2. அழகான பதிவு...நாமும் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் படிக்கும்போது சுவாரசியமாக உள்ளது. இதுதான் கோபு சாரின் எழுத்துத் திறமை.

    பதிலளிநீக்கு
  3. ரஞ்சனி மேடம் உங்களுக்கு ட்ரீட் கொடுக்கும்போது சொல்லுங்கோ....நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  4. ரஞ்சனியின் கணவரையும் சேர்த்தால், ஆண்கள் எண்ணிக்கையும் ஆறாகிவிடும். ஆகவே ஈக்வல், ஈக்வல் தான்! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam February 26, 2015 at 1:51 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //ரஞ்சனியின் கணவரையும் சேர்த்தால், ஆண்கள் எண்ணிக்கையும் ஆறாகிவிடும். ஆகவே ஈக்வல், ஈக்வல் தான்! :))))))//

      ரஞ்ஜனி மாமியின் கணவர் ஒரு பதிவரே அல்ல. அதனால் அவரை என்னால் எந்தக்கணக்கிலும் சேர்க்க இயலாது.

      அன்புடன் கோபு

      நீக்கு
  5. அழகிய படங்களுடன் பகிர்வு அருமை. ரஞ்சனி மேடம் கிட்ட சொல்ல வேண்டியதை, பதிவின் மூலம் சொல்லி விட்டீர்கள். எனக்கும் கூட அவர்களின் 4 பெண்கள் தளம் திறக்காமல் ரொம்பவே சண்டி செய்யும்!

    பதிலளிநீக்கு
  6. அழகான படங்கள்..
    பதிவு அருமை. பன்முக திறமைவாய்ந்தவர் அல்லவா ரோஷ்ணி?

    இவர்களின் எழுத்துத் திறமைக்கு மூன்று என்ன முப்பது கூட வைத்துக்கொள்ளலாம் தான். :)//

    உண்மை. திறமைகள் வியக்க வைக்கும். ரஞ்சினி அவர்களால் அழகான பதிவர் சந்திப்பு கிடைத்தது. அவர்களுக்கும் , உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு ட்ரீட் கிடைத்தால் எங்களுக்கும் சூடான சுவையானப் பதிவு கிடைக்கும் . எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி பிரதிபலிப்பதைப் பார்த்ததில் என்னையும் அந்த மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது. நன்றி சார்.
    வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  8. அழகான படங்களுடன் அருமையான பதிவு ஐயா...

    wordpress comment box - site url-ல் நமது (blogspot) தள முகவரியை இடாமல், நம் தளத்தின் g+(plus) முகவரியை இட்டால் தான், நம் கருத்து அவர்கள் தளத்தில் வெளியாகும்...

    பதிலளிநீக்கு
  9. ரோஷ்ணியையே அரை டிக்கெட் என்பவர் நம்மை என்ன சொல்வாரோ

    பதிலளிநீக்கு
  10. அவ அரை டிக்கட் இல்ல.. வாய் கொடுத்தா நம்மை தரை டிக்கட் ஆக்கிவிடும் புத்திசாலி

    பதிலளிநீக்கு
  11. திருமதி ரஞ்சனி நாராயணன் பதிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும் வேர்ட் பிரஸ் தளத்தில் எழுதுவதால் என்னாலும் அடிக்கடி சென்று கருத்திட முடிவதில்லை! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  12. அழகாக படங்களையும் போட்டு அலங்காரமாக கௌரவப்
    படுத்திப் பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக மகிழ்ச்சி கோபு சார்..

    பதிலளிநீக்கு
  13. சந்திப்பின் சிறப்பம்சங்களை தங்கள் எழுத்தாலும் எடுத்த படங்களாலும் அறிந்துகொண்டு ரசிக்கமுடிகிறது. அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  14. ஆறு + ஐந்தை இரசித்தேன்! பின்னர் ஆறானதில் ஆறுதல் அடைந்தேன்! நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  15. மகிழ்வான தருணங்கள்..வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. எல்லாம் இன்பமயம். நானும் WORDPRESS இல் பின்னூட்டம் இடுவது குறித்தான சிரமத்தை, திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களிடம் நான் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. அழகான படங்களும்,விவரிக்கும் அழகும். முன்னது பின்னதாய் வாசிக்கிறேன். திரும்ப ஸரியான முறையில் வரிசைப்படுத்தி வாசிக்க வேண்டும். மிகவும் நல்ல பதிவு. டேபிளில் இடம் கிடைப்பதில்லை. வேறு ஒன்றுமில்லை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  18. //திருமதி. ரஞ்ஜனி மேடமும் அவர்களின் கணவரும் சேர்ந்து சற்றே தாமதமாக [6 மணி சுமாருக்கு] வருகை தந்தார்கள்.//

    இதை இப்போது தான் கவனித்தேன். ரஞ்சனி ஆறு மணி சுமாருக்கு வந்திருந்தால் உடனே நான் கிளம்பி இருந்திருக்கணுமே. எந்த ஃபோட்டோவிலும் இருந்திருக்க முடியாது. முன்னரே நான் ஆறு மணிக்குக் கிளம்பணும்னு சொல்லி இருந்தேன். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகையில் ஆறேகால் ஆயிருந்தது. அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரஞ்சனி வந்ததால் தான் இத்தனை படங்களே எடுக்க முடிந்தது. எல்லாப் படங்களிலும் அவரும் இருக்கிறாரே! நாலரைக்கே வரவில்லை என்றாலும் ஐந்து மணிக்கே வந்திருக்கிறார். :)))) ரொம்ப தாமதமும் இல்லை, ரொம்ப சீக்கிரமும் இல்லை. வெளியூரிலிருந்து வருபவருக்குப் பல வேலைகள், பலரைச் சந்திக்க வேண்டியதுனு இருக்கும். ஆகவே இந்த தாமதம் ஏற்கக் கூடிய ஒன்றே. நான் கிளம்பினதுக்கப்புறமா ஏழரை வரை இருந்திருக்கிறாரே! இத்தனைக்கும் சொந்த மாமாவைப் பார்க்க இன்னும் போகமுடியலைனு சொல்லிட்டு இருந்தார். :)))))))

    இது வெறும் சந்திப்புத் தானே தவிர அனைவருக்கும் அட்டென்டென்ஸ் கரெக்டா இருக்கணும் என்றோ, பஞ்ச் கார்ட் போடணும் என்றோ கட்டாயம் இல்லையே! அவரவர் வசதிப்படி வரலாம், கிளம்புவதும் அவரவர் வசதிப்படி கிளம்பலாம் என்று முன்னரே மடல்களில் சொல்லியாச்சு. :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Geetha Sambasivam March 2, 2015 at 6:36 PM

      வாங்கோ, வணக்கம்.

      **திருமதி. ரஞ்ஜனி மேடமும் அவர்களின் கணவரும் சேர்ந்து சற்றே தாமதமாக [6 மணி சுமாருக்கு] வருகை தந்தார்கள்.**

      //இதை இப்போது தான் கவனித்தேன். ரஞ்சனி ஆறு மணி சுமாருக்கு வந்திருந்தால் உடனே நான் கிளம்பி இருந்திருக்கணுமே. எந்த ஃபோட்டோவிலும் இருந்திருக்க முடியாது. முன்னரே நான் ஆறு மணிக்குக் கிளம்பணும்னு சொல்லி இருந்தேன். சாப்பிட்டுவிட்டுக் கிளம்புகையில் ஆறேகால் ஆயிருந்தது. அதற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே ரஞ்சனி வந்ததால் தான் இத்தனை படங்களே எடுக்க முடிந்தது.//

      எடுக்கப்பட்ட போட்டோக்களை வைத்து ஒரேயடியாக இப்படிச்சொல்லிவிட முடியாது. ஒரு மிகச்சிறிய விழாவினில் நூற்றுக்கணக்கான போட்டோக்கள் எடுக்க 10 நிமிடமே ஜாஸ்தி தான். என் கேமராவில் மொத்தம் எடுக்கப்பட்டதோ சுமார் 75 போட்டோக்கள் மட்டுமே. :)))))

      >>>>>

      நீக்கு
    2. கோபு >>>>> கீதா மாமி [2]

      //எல்லாப் படங்களிலும் அவரும் இருக்கிறாரே! நாலரைக்கே வரவில்லை என்றாலும் ஐந்து மணிக்கே வந்திருக்கிறார். :)))) ரொம்ப தாமதமும் இல்லை, ரொம்ப சீக்கிரமும் இல்லை. வெளியூரிலிருந்து வருபவருக்குப் பல வேலைகள், பலரைச் சந்திக்க வேண்டியதுனு இருக்கும். ஆகவே இந்த தாமதம் ஏற்கக் கூடிய ஒன்றே. நான் கிளம்பினதுக்கப்புறமா ஏழரை வரை இருந்திருக்கிறாரே! இத்தனைக்கும் சொந்த மாமாவைப் பார்க்க இன்னும் போகமுடியலைனு சொல்லிட்டு இருந்தார். :)))))))//

      நாம் எல்லோரும் மிகச்சரியாக 4.30க்கே அங்கு அட்வான்ஸ் ஆகக் கூடிவிட்டதால், ஒருவேளை அவர்கள் வந்தது சற்றே தாமதம் போல எனக்குத் தோன்றியிருக்கலாம் தான். OK ... OK. சற்றே தாமதமாகவே வந்திருந்தாலும் அதனால் ஒன்றும் தவறே இல்லைதான்.

      CHIEF GUEST ஆனவர்களுக்கு சற்றே தாமதமாக வருவதுதான் அழகும்கூட !

      >>>>>

      நீக்கு
    3. கோபு >>>>> கீதா மாமி [3]

      //இது வெறும் சந்திப்புத் தானே தவிர அனைவருக்கும் அட்டென்டென்ஸ் கரெக்டா இருக்கணும் என்றோ, பஞ்ச் கார்ட் போடணும் என்றோ கட்டாயம் இல்லையே!//

      கரெக்ட் :) மிகச்சரியான வார்த்தை. எந்தவிதமான கட்டாயமும் இல்லை என்பதை நானும் 100% ஒத்துக்கொள்கிறேன்.

      நான் வேலை பார்த்த BHEL இல் அப்படித்தான். மிகச்சரியாக காலை 8.00 மணிக்குள் பஞ்ச் பண்ண வேண்டும். இருப்பினும் ஒரு மாதத்தில் சில நாட்கள் மட்டும் 8.10 வரை Grace Time அளிப்பார்கள்.

      8.11 முதல் 8.15 வரை பஞ்ச் செய்தால் கால் மணி நேர சம்பளம் கட் ஆகும்.

      8.16 முதல் 9.00 க்குள் பஞ்ச் செய்தால் ஒருமணி நேர சம்பளம் கட் ஆகும்.

      9.01க்குப் பஞ்ச் செய்தால் அரை நாள் லீவ் லெட்டர் எழுதித்தர வேண்டும்.

      தங்களின் இந்த வரிகளைப்படித்ததும் ஏனோ எனக்கு அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது.:)

      >>>>>

      நீக்கு
    4. கோபு >>>>> கீதா மாமி [4]

      //அவரவர் வசதிப்படி வரலாம், கிளம்புவதும் அவரவர் வசதிப்படி கிளம்பலாம் என்று முன்னரே மடல்களில் சொல்லியாச்சு. :))))))//

      கிளம்புவது மட்டும் அவரவர்கள் செளகர்யப்படி எனச் சொல்லியிருந்தோம். ஆனால் அனைவரும் கூடுவது மிகச்சரியாக [SHARP] 5.00 மணிக்குள் இருக்க வேண்டும் என மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொண்டிருந்தோம்.

      எல்லோருக்கும் நகல் அனுப்பப்பட்ட அந்த என் மெயிலினை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன். தயவுசெய்து மீண்டும் ஒருமுறை பாருங்கோ:

      >>>>>

      நீக்கு
    5. கோபு >>>>> கீதா மாமி [5]

      Gopalakrishnan Vai. 19 Feb (11 days ago)

      to Ranjani, Radha, தி, Rishaban, Adhi, Sridar, Geetha, Rukmani

      அன்புள்ள ரஞ்ஜனி மேடம்,

      வணக்கம்.

      தங்களின் திருச்சி விஜயம் பற்றிய செய்தி மிகவும் மகிழ்வளிக்கிறது.

      தங்களின் வருகை நல்லபடியாக அமையட்டும்.

      திருச்சி மாவட்ட பதிவர்கள் சார்பில் வருக! வருக!! வருக!!! என இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

      மாலை 4 மணி முதல் 7 மணி வரை என்பது மிகவும் நீண்ண்ண்ட நேரமாக உள்ளது. நீண்ட நேரம் நாம் சந்திப்பதிலும், பேசிக்கொண்டே இருப்பதிலும் மகிழ்ச்சிதான்.

      ஆனால் இதில் சில PRACTICAL DIFFICULTIES இருக்கக்கூடும்.

      ஒருவர் 4 மணிக்கே மிகச்சரியா வந்துவிட்டு, 5 மணிக்குள் புறப்பட வேண்டும், அவசர வேலைகள் உள்ளன என்பார்.

      மற்றொருவர் 6.30 க்கு மிகவும் மெதுவாக வருவார். அவர் இவரை சந்திக்க முடியாமல் போகும். இவர் அவரை சந்திக்க முடியாமல் போகும். அது அவ்வளவாக சுவாரஸ்யப்படாது.

      4 மணிக்கு முன்பு வெயில் சற்று அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கும்.

      எனவே வருகை தர நினைப்பவர்கள் அனைவருமே 4.45க்கு மேல் 5 மணிக்குள் கட்டாயமாக தாங்கள் சொல்லியுள்ள விலாசத்திற்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என தங்கள் சார்பில் இந்த மெயில் மூலம் நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

      மிகச்சரியாக 5 மணிக்கு நாம் அனைவருமே ஒருவரையொருவர் சந்தித்து விடலாம். பிறகு எத்தனை மணிக்குப் புறப்பட்டுப்போவது என்பது மட்டும் அவரவர் இஷ்டமாக இருக்கட்டும். அவரவர் செளகர்யப்படி இருக்கட்டும்.

      I REQUEST ALL OF YOU TO KINDLY BE PRESENT AT THE ABOVE ADDRESS IN BETWEEN 4.45 AND 5.00 PM.

      LET US ALL MEET THERE AT 5 PM SHARP.

      அன்புடன் கோபு

      >>>>>

      நீக்கு
    6. கோபு >>>>> கீதா மாமி [6]

      மேற்படி மெயிலுக்கு அவர்கள் [திருமதி. ரஞ்ஜனி மேடம் அவர்கள்] நம் எல்லோருக்கும் அனுப்பியிருந்த பதில் மெயில் இதோ:

      Ranjani Narayanan 19 Feb (11 days ago)
      to me, Radha, தி, Rishaban, Adhi, Sridar, Geetha, Rukmani

      இந்த நேர கணக்கு திருமதி ருக்மணி கொடுத்தது. நீங்கள் சொல்வதுபோல ஷார்ப் 5 மணிக்கு என்று வைத்துக் கொள்ளலாம். அவரவர் சௌகரியப்படி வீட்டிற்குக் கிளம்பலாம்.

      அன்றைக்கு கிரிகெட் மேட்ச் வேறு இருக்கிறது. அது முடிந்தவுடன் நம் சந்திப்பு தொடங்கட்டும், ஸார்!

      அன்புடன்,
      ரஞ்சனி

      >>>>>

      நீக்கு
    7. கோபு >>>>> கீதா மாமி [7]

      அதனால் என்ன ? நம் சந்திப்பு எல்லாம் நல்லபடியாகவே இனிமையாகவே நடந்து முடிந்தது. எல்லோருக்கும் மகிழ்ச்சியே, அதுபோல எனக்கும் மிகவும் மகிழ்ச்சியே.

      தங்களின் மீண்டும் வருகைக்கும் ஒருசில விளக்கங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      என்றும் அன்புடன் கோபு

      நீக்கு
  19. ஸ்வாரஸ்யமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
  20. ஆறு ஐந்து ஜூஸ் = ஆரஞ்சு ஜூஸ். வார்த்தை விளையாட்டு அசத்துகிறது.

    பதிலளிநீக்கு
  21. உங்க பதிவர்கள் சந்திப்பால எங்க எல்லாருக்குமே சுவாரசியமான பல விஷயங்கள் கிடைக்குது.

    பதிலளிநீக்கு
  22. பதிவுலகம் தாண்டி, நல்லதொரு நட்புடன் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே உள்ள திருமதி ரஞ்சனி அவர்களுடனான அருமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இராஜராஜேஸ்வரி October 19, 2015 at 3:47 PM

      வாங்கோ .... வணக்கம்.

      //பதிவுலகம் தாண்டி, நல்லதொரு நட்புடன் தொடர்பு எல்லைக்குள் மட்டுமே உள்ள திருமதி ரஞ்சனி அவர்களுடனான அருமையான சந்திப்புக்கு வாழ்த்துகள்..//

      இது உண்மைதான். இதோ இந்த என் சமீபத்தியப் பதிவுகளில்கூட அவர்களின் பின்னூட்டத்தையும் அதற்கு நான் அளித்துள்ள பதிலையும் தாங்கள் பார்க்கலாம்.

      http://gopu1949.blogspot.in/2015/06/10.html

      {http://blogintamil.blogspot.in/2015/06/10.html}

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, மேடம்.

      நீக்கு
  23. பதிவர் சந்திப்பு
    பலே சந்திப்பு.

    அட! நானும் கூடவே இருந்து பார்த்தது போல் இருக்கிறதே.

    அதுதான் உங்கள் எழுத்தின் வெற்றி கோபு அண்ணா.

    லயாக்குட்டி வந்துட்டா. ரைம்ஸ் பார்த்துண்டே தச்சி மம்மு சாப்பிட. அப்புறம் வரேன்.

    பதிலளிநீக்கு
  24. அரைடிக்கட்டு பேச ஆரம்பிச்சா நம்மள தரைடிக்கட்டு ஆக்கிபோடுவா சூப்பரு கமண்டு படங்க பகிர்வு அல்லா நல்லா இருக்குது.

    பதிலளிநீக்கு
  25. சந்திப்பது மட்டுமல்லாமல் சிறப்பாக படங்களும் போட்டு கல கலப்பாக பதிவை போடுறீங்க.

    பதிலளிநீக்கு
  26. //{ ’வழுவட்டை’ என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ள விரும்புவோர் உடனே செல்ல வேண்டிய பதிவு: http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html காணத்தவறாதீர்கள் ! }// ஹா ஹா அங்கப்போய்தானே வாத்யார கண்டு ரசிச்சேன்.

    பதிலளிநீக்கு