என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 18 பிப்ரவரி, 2015

சந்தித்த வேளையில் .... நிறைவுப்பகுதி .... 6 of 6தொடரும் பதிவர் சந்திப்பு  

பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
பகுதி-5 க்கான இணைப்பு:


 நிறைவுப் பகுதி-6 of 6 

03.08.2014

ஆரண்யநிவாஸ் தோட்டம்

36, கார்த்திகேயன் கார்டன், 
தெற்கு விபூதி ப்ரஹாரம்,
திருவானைக்கா, திருச்சி


 
ஆரண்ய நிவாஸ் தம்பதி 

  யாரோ இவர் யாரோ ?    

  
      ஆரண்ய நிவாஸ் பெற்றோர்கள்

 தன் தந்தையுடன் பதிவர் 'எல்லென்' அவர்கள்
[இவர் ஆரண்ய நிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களின் தம்பியாவார்]


 திருமதி. ஜெயந்தி சிவக்குமார் அவர்கள்.
இவர் எழுதிய கவிதைகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
[இவர் ஆரண்ய நிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்களின் தங்கையாவார்]

           
பொன்னாடையில் ’கைகள் அள்ளிய நீர்’ பதிவர் 
திரு. சுந்தர்ஜி பிரகாஷ் அவர்கள்.
அருகே நிற்பவர் பதிவர் ‘எல்லென்’ என்கிற 
திரு. லக்ஷ்மி நாராயணன் அவர்கள்.

                                              **********************                                                                                                                     
                          
             பதிவரும்  பிரப  பத்திரிகை எழுத்தாளருமான
              கிருஷ்ணா என்கிற திரு. பாஸ்கர்   [  BHEL ] அவர்கள்.       


இவரின் இயற்பெயர் திரு. N. பாஸ்கர். BHEL திருச்சியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். மிகவும் அமைதியாகவும், எளிமையாகவும் இருக்கக்கூடியவர். மிகத்திறமையான அருமையான எழுத்தாளர். ‘கிருஷ்ணா’ என்ற புனைப்பெயரில் அடிக்கடி ’கல்கி’ இதழில் வெளியாகிவரும் சிறுகதைகள் அனைத்தும் இவருடையதே.

2007ம் ஆண்டு இவர் கலந்துகொண்ட திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கக்கூட்டத்தில் நானும் அன்று கலந்து கொள்ள நேர்ந்தது. அந்தக்கூட்டத்திற்கு நம் திரு. ரிஷபன் அவர்களும் வந்திருந்தார். அன்றுதான் நான் முதன்முதலாக இவரைப்பற்றி நிறைய அறிந்துகொண்டேன். அப்போதே இவரின் சிறுகதைகள் ‘கல்கி’ இதழில் மட்டும் 400க்கும் மேல் பிரசுரம் ஆகியுள்ளன எனப் பேசிக் கொண்டார்கள்.

இவர் எழுதியிருந்த பல சிறுகதைகளை நானும் ‘கல்கி’ இதழில் படித்து மகிழ்ந்துள்ளேன். ’கீறல்’ என்ற தலைப்பில் இவர் எழுதி, கல்கியில் வெளியான சிறுகதை இன்னும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.

ஆரம்பப் பள்ளியில் படிக்கும் இரு குழந்தைகள். ஒரு ஆண் குழந்தை மற்றொரு பெண் குழந்தையின் மார்பினில் லேஸாகக் கீறி விட்டதாக புகார் எழுகிறது. இதனால் அதுவரை நண்பர்களாக இருந்து வந்த, இரு குழந்தைகளின் தாய்மார்களுக்குள்ளும் மிகப்பெரிய வாய்ச்சண்டை மூண்டுவிடுகிறது.

மறுநாள் காலை பெண் குழந்தையின் வீட்டில் நடைபெறும் ஒரு மிகச்சிறிய சம்பவத்தால், பெண் குழந்தையின் தாயாருக்கு, அந்த ஆண் குழந்தை தன் பெண்ணை அவ்வாறு கீற நேர்ந்துள்ளதன் உண்மைக் காரணம் தெரியவருகிறது.

ஆண் குழந்தையின் தாயாருடன் தான் அனாவஸ்யமாக, அவசரப்பட்டு, சண்டையிட்ட செயலை, தன் மனதுக்கும், தன் நட்புக்கும் ஏற்பட்ட மிகப்பெரிய ‘கீறல்’ ஆக உணர்ந்து வெட்கமும் வேதனையும் அடைகிறாள் அந்தப் பெண்ணின் தாய்.

இதுதான் அந்த மொத்தக்கதையும். இதை எவ்வளவு சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் அவர் எழுதியிருந்தார்! வியந்து போனேன். நெகிழ்ந்துபோய் மெயில் மூலம் அன்று அவரைப் பாராட்டி மகிழ்ந்தேன்.

மிகச்சிறியதொரு கதைக்கருவினை கையில் எடுத்துக்கொண்டு, தன் எழுத்திறமைகளால் மிகச்சிறப்பாக அதனைக் கொண்டு சென்று, பெரும்பாலான அனைத்துக்கதைகளுக்குமே பாஸிடிவ் ஆன ..... சுபமான முடிவினைத் தருவதும், அதனால் ஓர் படிப்பிணையை வாசகர்களின் எண்ணங்களில் வித்திடுவதும் இவருடைய தனிச்சிறப்பாக எனக்குத் தோன்றுகிறது. இவரின் தொடர் வெற்றிகளின் இரகசியமே இதில் தான் அடங்கியுள்ளது.

-=-=-=-=-=-=-=-=-=-
இவருக்கு 03.05.2011 அன்று நான் அனுப்பியுள்ள 
மின்னஞ்சல் கடிதம் இதோ தங்களின் பார்வைக்காக:


Dear Sir,

வணக்கம். 08.05.2011 தேதியிட்டு, நேற்று வெளிவந்த கல்கியில் வந்துள்ள “புருஷன்” கதையை இன்று 03.05.2011 விடியற்காலம் 3.30க்கு படிக்க ஆரம்பித்தேன்.

இதை எழுதிய உங்கள் கைவிரல்களுக்கு என் அன்பான முத்தங்கள்.

மிகவும் ரசித்துப்படித்தேன்.

"பொதுவாக ஒரு சிறிய மத்தாப்பூ கொளுத்துவதுபோல, மிகச்சிறிய புன்னகையை வரவழைக்கக்கூடிய கருவுடன் கூடிய கதைகள் போதும். கூடுமானவரை சுபமாக முடிக்க வேண்டும்" என்று ஒருமுறை நீங்கள் எங்களுக்கு, எழுத்தாளர் சங்க கூட்டம் ஒன்றில் சொன்னதை, நன்கு மனதில் பதிந்து வைத்துள்ளேன்.

இந்தக்கதை சுபமாக முடிந்துள்ளதா என்று கேட்டால் பொதுவாக இல்லை என்று தான் பெரும்பாலானோர் சொல்லுவார்கள். 

ஒரு இளம் வயதுப்பெண்ணின் புருஷன் உயிர்போய்விடும் நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்அதோடு தங்கள் கதை முடிந்து விடுகிறது.

இந்த முடிவு சுபமா? அல்லது சோகமா? என்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ளட்டும் என விட்டு விட்டீர்கள். சபாஷ் ! :)

விஷயம் தெரியாத ஊர் உலகத்துக்கு அது சோகம். அந்தப்பெண்ணைப் பொறுத்தவரை அது சுகமே! என்று அழகாக ஒரு சிறிய மத்தாப்பூ கொளுத்தியதுபோலவே கொண்டுபோய் முடித்துள்ளீர்களே!  மனதாரப் பாராட்டுகிறேன். YOU ARE SO GREAT ! :)   

-=-=-=-=-=-=-

SOME TOUCHING LINES IN THE STORY:

”புல்லு மேலே எறும்பு ஊர்வது போல மேயத்தானே இதாலே முடிஞ்சுது!”

”எல்லா ஆம்பளைங்களும் சுயநலவாதிங்கதான், பெத்த அப்பா உள்பட” 
என்றாள் வருத்தமாக

”வலி பொறுக்க முடியாம, விட்டேன் ஒரு உதை; 
நடுவயத்திலே உதைச்சதுலே, கீழே விழுந்துட்டாரு. 
தலையிலே அடி பட்டுடுச்சு. 
பிழைக்க மாட்டார் தானே?”  
என்றாள் பயத்துடன்.   

-=-=-=-=-=-=-

Heartiest Congratulations.   All the Best.

vgk

-=-=-=-=-=-=-=-=-=-

இத்தகைய அருமையானதொரு எழுத்தாளர், என் எழுத்துலக மானஸீக குருநாதர் திரு. ரிஷபன் அவர்கள் மூலம் எனக்கும் அறிமுகம் ஆகி நாங்கள் இருவரும் நண்பர்களானதை மிகப்பெருமையாக இன்றும் நினைத்து மகிழ்கிறேன்.                                                                                                                                
                         **************************                       

         
தன் தந்தையுடன் பதிவர்  Ms. மாதங்கி மெளலி  அவர்கள்     
    
                                     **************************
    
  

                                          
 
  பதிவரும் திருச்சியின் பிரபல கவிதாயினியுமான 
  திருமதி. தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்.

இவரின் மிகச்சிறப்பான தொகுப்பு நூல் 
‘அம்மா... உன் உலகம்...!’
பற்றி இந்த என் பதிவின் இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்

                          
                                 அருகே,  விழாவிற்கு தலைமை ஏற்க வந்த தஞ்சாவூர்க் கவிராயர் அவர்கள்.

                   **************************’ஆரண்யநிவாஸ்’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
அன்றைய விழாவினில்
பல பிரபல எழுத்தாளர்களையும் 

பதிவர்களையும் ஒரே நேரத்தில் 

ஒரே இடத்தினில் சந்திக்க முடிந்ததில்

மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

மேலும் விபரங்களுக்கு:25.01.2015

பவித்ராலயா

  

    

   

http://engalblog.blogspot.in/        

’எங்கள் ப்ளாக்’ பதிவர்கள்  

1. திரு. K.G. கெளதமன் அவர்கள்
2. திரு. K.G. சுப்ரமணியன் அவர்கள்
3. திரு. K.G. யக்ஞராமன் அவர்கள்
4. திரு. ஸ்ரீராம் அவர்கள்

அன்புடன் வருகை தந்திருந்தார்கள்.

சந்திப்பு பற்றிய மேலும் அதிக விபரங்களுக்கு:
http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.htmlதிரு. நாகராஜன் அவர்கள்
{தற்சமயம் மதுரையில்}

திரு. R. சேது நாராயணன் அவர்கள் 
{தற்சமயம் சிங்கப்பூரில்}

திரு. G. கணேஷ் அவர்கள்
{தற்சமயம் செளதியில்}

திருச்சி சந்தானம் அவர்கள்
{தற்சமயம் கும்பகோணத்தில்}

இவர்கள் நால்வரையும் நான் பலமுறை சந்தித்துள்ளேன்.
ஏனெனில் இவர்கள் அனைவரும் என் உறவினர்கள்.
அவ்வப்போது கொஞ்சம் பதிவுகளும் வெளியிடுவார்கள்.


 

29.01.2015

பவித்ராலயா
 

     


  


 

 


என் மன ஊஞ்சலில்  
http://enmanaoonjalil.blogspot.com

பதிவரும், 
மிகப்பிரபலமான 
பத்திரிகை எழுத்தாளருமான 
பேரன்புக்குரிய 
திருமதி. 
 ராதாபாலு 
அவர்களின் 
வருகை மிகவும் மகிழ்ச்சியளித்தது. 

**********************************
திருமதிராதாபாலு அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்:

 


எனது வலைத்தளத்தினில் சமீபத்தில் நடைபெற்ற 
சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ 
சிலவற்றில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்

அவ்வாறு கலந்துகொண்ட அவர்களின் விமர்சனங்கள் 
11 முறை வெவ்வேறு பரிசுகளுக்குத் தேர்வாகியுள்ளன 
என்பது குறிப்பிடத்தக்கது. 


**********

தனக்குத் தானே நீதிபதி 
என்ற போட்டிக்குள் போட்டியிலும் 
மிகச் சரியான விடை எழுதி 
பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள். **********

இவர்களின் சாதனைக்காக இவர்களுக்கு 
கீதா விருது 
அளித்து கெளரவிக்கப்பட்டது.


**********

VGK-31 to VGK-33 தொடர் வெற்றிக்காக இவர்களுக்கு
ஹாட்-ட்ரிக் 
பரிசும் அளிக்கப்பட்டது.


**********

இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டி சம்பந்தமாக 
இவர் எனக்கு எழுதியுள்ள விரிவான நேயர் கடிதம்
போட்டியின் நடுவர் உள்பட 
அனைவராலும் பாராட்டப்பட்டதாகும்


**********

சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய 
ஒட்டுமொத்தமான 
பல்வேறு அலசல்களுக்கும் 
புள்ளிவிபரங்களுக்கும்  **********************************
புலியின் வாலைத் துணிச்சலுடன் பிடித்துள்ளவர்
நாளுக்கு நாள் இளமையாகத் தோன்றிவரும் ....
நம் திருமதி. ராதாபாலு அவர்களே ! :)

மேலும் அதிக விபரங்களுக்கு
29.07.2015
பவித்ராலயா

இரண்டாண்டுகளுக்குப்பின் மீண்டும் 
எங்கள் இல்லத்திற்கு
திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களின்
திடீர் வருகை !

 

11.06.2013 அன்று மஞ்சுவின் 
முதல் சந்திப்புக்கான இணைப்பு

அன்பின் மஞ்சுவை என் இல்லத்திற்கு 
இந்தமுறை அழைத்து வந்தவர்கள்
திருமதி and திரு. ரிஷபன் ஸ்ரீனிவாஸன் தம்பதியினர் !
இந்தத்தொடர் இப்போதைக்கு 
இத்துடன் நிறைவடைகிறது.

இதுவரை சந்திக்க நேர்ந்துள்ள 
பதிவுலக + எழுத்துலக 
சொந்தங்களான

                   திருமதிகள்:
01] மனோ சாமிநாதன் அவர்கள்*
02] ருக்மணி சேஷசாயீ அவர்கள்*
03] ஆதி வெங்கட் அவர்கள்
04] மஞ்சுபாஷிணி அவர்கள்
05] தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள்*
06] மெய்யம்மை ஆச்சி அவர்கள்
07] கீதா சாம்பசிவம் அவர்கள்*
08] ஜெயந்தி ரமணி அவர்கள்
09] ஆச்சி alias பரமேஸ்வரி அவர்கள்
10] ஜெயந்தி சிவக்குமார் அவர்கள்* 
11] ராதாபாலு அவர்கள்


12] செல்வி: ரோஷ்ணி அவர்கள்
13] செல்வி: மாதங்கி மெளலி அவர்கள்*

                          திருவாளர்கள்:

14] லெக்ஷ்மி நாராயணன் (எல்லென்) அவர்கள்*
15] வெங்கட் நாகராஜ் அவர்கள்
16] அப்பாதுரை அவர்கள்
17] தி. தமிழ் இளங்கோ அவர்கள்
18] சுந்தர்ஜி பிரகாஷ் அவர்கள்*
19] கிருஷ்ணா alias பாஸ்கர் அவர்கள்*
20] வசந்தமுல்லை ரவி அவர்கள்*
21] பால கணேஷ் அவர்கள்
22] அஜீம்பாஷா அவர்கள்
23] GMB ஐயா அவர்கள்*
24] சேட்டைக்காரன் வேணுகோபால் அவர்கள்
25] அன்பின் சீனா ஐயா அவர்கள்
26] முனைவர் பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
27] தஞ்சாவூர் கவிராயர் அவர்கள்*
28] ஸ்ரீராம் அவர்கள்
29] K.G. யக்ஞராமன் அவர்கள் 
30] K.G. சுப்ரமணியன் அவர்கள்
31] K.G. கெளதமன் அவர்கள்
32] N. நாகராஜன் அவர்கள்
33] R. சேது நாராயணன் அவர்கள்
34] G. கணேஷ் அவர்கள்
35] G. சந்தானம் அவர்கள்
36] அஷ்டாவதானி மஹாலிங்கம் (மாலி) அவர்கள்
37] ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்
38] என் எழுத்துலக மானஸீக குருநாதர் 
      ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள்

[* Out of Pavithralaya = 12 Cases + at Pavithralaya 26 Cases ]


ஆகிய அனைவருக்கும் 
மீண்டும் என் அன்பான நன்றிகள். திருச்சியில் மீண்டும் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ 
எப்படியும் ஒரு 10 பதிவர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்ளப்போகும் 
குட்டியூண்டு பதிவர் மாநாடு நடைபெறப்போவதற்கான 
அறிகுறிகள் இப்போதே தோன்றிவிட்டன. 

தேதி, நேரம், இடம் மட்டும் 
இன்னும் முடிவாகாமல் உள்ளது.

ம்ம்ம்ம் ... பார்ப்போம் ! :)

சொந்தம் .....
எப்போதும் .....
தொடர்கதைதான் .....
முடிவே இல்லாதது !!!!!என்றும் அன்புடன் தங்கள்
{வை.கோபாலகிருஷ்ணன்}

84 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் சார். கனகச்சிதமாக புள்ளி விபரங்கள் வைத்து இருக்கிறீர்கள்.அன்பு அன்பு அன்பு மழைதான் போங்கோ.....!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. R.Umayal Gayathri February 18, 2015 at 2:36 AM

   வாங்கோ, வணக்கம்.

   //வாழ்த்துக்கள் சார்.//

   வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   //கனக் கச்சிதமாக புள்ளி விபரங்கள் வைத்து இருக்கிறீர்கள்.//

   அப்படியா மிக்க மகிழ்ச்சி. :)

   //அன்பு அன்பு அன்பு மழைதான்//

   தங்களின் அன்பு மழையினில் நனைந்தேன். ஜலதோஷம் பிடித்துக்கொண்டு விட்டது. ஹச் ... ஹச் ... ஹச் ... ஒரே தும்மல். [தும்மல் என்றதும் அது சம்பந்தமான ஓர் நகைச்சுவைக்கதை நினைவுக்கு வந்துவிட்டது ... தாங்கள் அதைப் படித்தீர்களோ ... இல்லையோ ... எதற்கும் இந்தாங்கோ இணைப்பு:

   http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html

   // போங்கோ.....!!!//

   நான் எங்கே போவேன் ! :) அது சரி .... நேற்றைய நெல்லிக்காய் சாதம் போல இன்று, பீன்ஸ் கறி ஏதாவது கொண்டு வந்திருக்கீங்களா ? என்னவோ போங்கோ ! :)

   அன்புடன் VGK

   நீக்கு
 2. பதிவுலகில் இவ்வளவு பதிவர்களை வேறு யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சாதனை செய்துள்ள உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழனி. கந்தசாமி February 18, 2015 at 4:29 AM

   வாங்கோ என் அன்புக்குரிய ஐயா, வணக்கம் ஐயா.

   //பதிவுலகில் இவ்வளவு பதிவர்களை வேறு யாரும் சந்தித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒரு சாதனை செய்துள்ள உங்களை மனதாரப் பாராட்டுகிறேன்.//

   அப்படியெல்லாம் சொல்ல முடியாது ஐயா. ஏனெனில் தங்களைப்போல பேரெழுச்சியுடன், ஆங்காங்கே அவ்வப்போது நடைபெற்றுவரும் பதிவர் மாநாடுகளுக்குச் செல்வோர், இதற்கும் மேல் பல பதிவர்களை ஒரே இடத்தினில் சந்தித்திருக்க வாய்ப்புகள் உண்டு.

   இருப்பினும் திருச்சியை விட்டு நகராத / நகரவும் விரும்பாத நான் இவ்வளவு பேர்களை இதுவரை சந்தித்திருப்பது எனக்கும் ஓர் ஆச்சர்யமான விஷயமே.

   தங்களின் அன்பு வருகைக்கும், அழகுக் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி, ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 3. அன்பின் திரு வை.கோ அவர்களே !

  தங்களீன் நட்பு விவரிக்க இயலாத பெருமை படைத்தது.

  பதிவர்களை - நண்பர்களை - சந்தித்து - உபசரித்து - மகிழ்வது தங்களீன் பெருந்தன்மையை பறை சாற்றுகிறது.

  அவர்ளைப் புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதும் அப்படங்களுடன் விபரங்களையும் சேர்த்து பதிவாக இடும் தங்களது செயல் பாராட்டுக்குரியது.

  நல்வாழ்த்துகள் அருமை நண்பர் திரு வை.கோ அவர்களே !

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) February 18, 2015 at 6:01 AM
   அன்பின் திரு வை.கோ அவர்களே !//

   அன்பின் திரு. சீனா ஐயா, வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா. என் பதிவுகள் பக்கம் தங்களைப் பார்த்தே பல நாட்கள் ஆச்சுது ஐயா.

   தாங்கள் அவசியம் வந்தே ஆக வேண்டிய என்னுடைய வலைச்சர அறிமுகப்பதிவுத் தொடரான ‘என் வீட்டுத்தோட்டத்தில் .... பகுதி-1 முதல் பகுதி-16 வரை + இந்த ‘சந்தித்த வேளையில் .. பகுதி-1 முதல் பகுதி-5 வரை தாங்கள் சரியாகவே வரவில்லை ஐயா. ஏதோ ஓரிரு முறை வந்துவிட்டு வழக்கம் போல பின்னூட்டமிடாமல் அவசரமாக ஏதோ எழுதிவிட்டுச் சென்று விட்டீர்கள், ஐயா. நேரம் கிடைக்கும் போது இந்த இரண்டு தொடருக்கும் அவசியம் வாருங்கள், ஐயா.

   //தங்களின் நட்பு விவரிக்க இயலாத பெருமை படைத்தது.//

   என்மீது தாங்கள் கொண்டுள்ள ஆத்மார்த்தமான நட்பினைவிடவா ? !!!!!

   //பதிவர்களை - நண்பர்களை - சந்தித்து - உபசரித்து - மகிழ்வது தங்களின் பெருந்தன்மையை பறை சாற்றுகிறது. //

   இவையெல்லாம், ஏதோ என்னால் ஆன மிகச்சிறிய மிகவும் எளிமையான வரவேற்பு மட்டுமே, ஐயா.

   //அவர்களைப் புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதும் அப்படங்களுடன் விபரங்களையும் சேர்த்து பதிவாக இடும் தங்களது செயல் பாராட்டுக்குரியது.//

   எனக்கே நாளடைவில் மறந்துவிடாமல் இருக்கவே, ஆங்காங்கு சிதறிக்கிடந்த தகவல்களை, இதுபோல ஒருங்கிணைத்து ஓர் தொடராக ஆக்கி, ஒரே இடத்தில் கொண்டு வந்து வைத்துக்கொண்டுள்ளேன், ஐயா.

   //நல்வாழ்த்துகள் அருமை நண்பர் திரு வை.கோ அவர்களே ! நட்புடன் சீனா //

   அன்பான வருகைக்கும், அழகான நல்வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

   பிரியமுள்ள VGK

   நீக்கு
 4. அன்பின் சொந்தமாகிய திரு வை.கோ அவர்களே !

  எங்களையும் சொந்தமாக்கி மகிழ்ந்தது கண்டு நெஞ்சம் மகிழ்கிறது.

  பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் வை.கோ

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) February 18, 2015 at 6:04 AM

   வாங்கோ, மீண்டும் வணக்கம்.

   //அன்பின் சொந்தமாகிய திரு வை.கோ அவர்களே !

   எங்களையும் சொந்தமாக்கி மகிழ்ந்தது கண்டு நெஞ்சம் மகிழ்கிறது.

   பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் வை.கோ

   நட்புடன் சீனா//

   ஆட்டுக்கார அலமேலு என்றொரு திரைப்படத்தில் ஓர் பாடலில் சிலவரிகள் வரும்:

   ”சுத்திச்சுத்தி வந்ததனால் சொந்தமாகிப்போனாயே .......
   சித்தம் குளிர இப்போ சேர்த்தணைக்கப் போறேண்டீ.....”

   ஏனோ இப்போது எனக்கு அந்த ஞாபகம் வந்து போனது, ஐயா. :)))))

   அன்புடன் VGK

   நீக்கு
 5. அன்பின் சொந்தமாகிய திரு வை.கோ அவர்களே !

  எங்களையும் சொந்தமாக்கி மகிழ்ந்தது கண்டு நெஞ்சம் மகிழ்கிறது.

  பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் வை.கோ

  நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா) February 18, 2015 at 6:04 AM

   மீண்டும் வணக்கம், ஐயா.

   //அன்பின் சொந்தமாகிய திரு வை.கோ அவர்களே !
   எங்களையும் சொந்தமாக்கி மகிழ்ந்தது கண்டு நெஞ்சம் மகிழ்கிறது. பாராட்டுகளுடன் நல்வாழ்த்துகள் வை.கோ
   நட்புடன் சீனா//

   நமது இனிய சந்திப்பு இந்தத்தொடரின் பகுதி-4 இல் இடம் பெற்றுள்ளது, ஐயா. அதையும் தாங்கள் பார்த்தீர்களோ .. இல்லையோ :

   இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2015/02/4-of-6.html

   என்னவோ போங்கோ ! வரவர உங்க போக்கே சரியில்லை.

   அன்புடன் VGK

   நீக்கு
 6. சந்தித்த பதிவர்களின் அணிவகுப்பு! அருமை.

  'கீறல்' என்ற வார்த்தையை வைத்து வெவ்வேறு இடங்களில் அர்த்தம் வரும்படி செய்திருக்கும் சிறுகதை பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.

  நிறைவுப் பகுதியில் நாங்களும் வந்திருப்பது மறுபடி சந்தோஷம் தருகிறது. திருமதி ராதா பாலு அவர்கள் படித்திருப்பது பொம்மைப் புலி போலத் தெரியவில்லையே... அடேங்கப்பா..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம். February 18, 2015 at 6:19 AM

   வாங்கோ ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

   //சந்தித்த பதிவர்களின் அணிவகுப்பு! அருமை.//

   மிக்க மகிழ்ச்சி. :)

   //'கீறல்' என்ற வார்த்தையை வைத்து வெவ்வேறு இடங்களில் அர்த்தம் வரும்படி செய்திருக்கும் சிறுகதை பற்றிச் சொல்லி இருக்கிறீர்கள். சிறப்பாக இருந்திருக்கும் என்று தெரிகிறது.//

   அவரின் எல்லாக்கதைகளுமே சிறப்பாகத்தான் உள்ளன.
   அடிக்கடி கல்கியில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் வெளியாகும். முடிந்தால் பாருங்கோ. [நான் இப்போது கல்கி வாங்குவதை நிறுத்திக்கொண்டு விட்டேன்.]

   முன்பெல்லாம் மிகத்தரமான சிறுகதைகள் மட்டுமே ‘கல்கி’ பத்திரிகையில் வெளியாகும் என்பது எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரிந்த விஷயம்.

   அதுபோன்ற காலக்கட்டங்களிலேயே இவரின் + நம் ரிஷபன் சாரின் கதைகள் ஏராளமாக வெளிவந்துள்ளன என்பது தான் இவர்களின் தனிச்சிறப்பாகும்.

   //நிறைவுப் பகுதியில் நாங்களும் வந்திருப்பது மறுபடி சந்தோஷம் தருகிறது.//

   எனக்கும் மன நிறைவாகவே உள்ளது. :)

   //திருமதி ராதா பாலு அவர்கள் பிடித்திருப்பது பொம்மைப் புலி போலத் தெரியவில்லையே... அடேங்கப்பா..//

   அது பொம்மை அல்ல. ஒரிஜினல் புலிதான். இதோ இந்தப் பதிவுக்கு பயப்படாமல் போய்ட்டு வாங்கோ. உங்களுக்கே அது [அவை] நிஜப்புலி [களே] எனத் தெரியவரும்.

   http://enmanaoonjalil.blogspot.com/2014/03/blog-post_22.html

   அன்புடன் VGK

   நீக்கு
  2. நன்றி ஸார். அங்கு சென்று படித்து, பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

   :))))))

   நீக்கு
  3. ஸ்ரீராம். February 18, 2015 at 8:49 PM

   வாங்கோ .. ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் !

   //நன்றி ஸார். அங்கு சென்று படித்து, பின்னூட்டமும் இட்டு விட்டேன். :)))))) //

   பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம். மிக்க நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
  4. நன்றி... எங்கள் ப்ளாக்கில் நீங்கள் கொடுத்த இன்னொரு லிங்க்கிலும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேனே.. அது வெளியாகவில்லையே...

   நீக்கு
 7. அருமையான பாடலுடன் முடித்ததும் சிறப்பு ஐயா...

  நான் தொடர வைக்கிறேன் விரைவில்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திண்டுக்கல் தனபாலன் February 18, 2015 at 8:25 AM

   வாங்கோ Mr. DD Sir. வணக்கம்.

   //அருமையான பாடலுடன் முடித்ததும் சிறப்பு ஐயா...//

   மிக்க மகிழ்ச்சி ! :)

   //நான் தொடர வைக்கிறேன் விரைவில்...//

   ஆவலுடன் காத்திருக்கிறேன். !!!!! :)

   மிக்க நன்றி.

   நீக்கு
 8. பல பதிவர்கள் உங்கள் மூலமே அறிமுகம் ஆனவர்கள். இங்கேயும் ராதா பாலு உட்பட மற்றப் பதிவர்களையும் அறிந்து கொண்டேன். மிக அருமையாகவும் அழகாகவும் சிறப்பான வர்ணனைகளோடும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனும் செய்து முடித்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam February 18, 2015 at 11:14 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பல பதிவர்கள் உங்கள் மூலமே அறிமுகம் ஆனவர்கள். இங்கேயும் ராதா பாலு உட்பட மற்றப் பதிவர்களையும் அறிந்து கொண்டேன். மிக அருமையாகவும் அழகாகவும் சிறப்பான வர்ணனைகளோடும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனும் செய்து முடித்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.//

   :))))) என் பதில் கீழே உள்ளது. :))))) - VGK

   நீக்கு
 9. பல பதிவர்கள் உங்கள் மூலமே அறிமுகம் ஆனவர்கள். இங்கேயும் ராதா பாலு உட்பட மற்றப் பதிவர்களையும் அறிந்து கொண்டேன். மிக அருமையாகவும் அழகாகவும் சிறப்பான வர்ணனைகளோடும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனும் செய்து முடித்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை. இதில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.
  இரண்டு முறை பின்னூட்டம் கொடுத்தேன். போச்சானு தெரியலை! இப்போ மறுபடி கொடுத்திருக்கேன். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Geetha Sambasivam February 18, 2015 at 11:15 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பல பதிவர்கள் உங்கள் மூலமே அறிமுகம் ஆனவர்கள்.//

   அப்படியா! மிகவும் சந்தோஷம்.

   //இங்கேயும் ராதா பாலு உட்பட மற்றப் பதிவர்களையும் அறிந்து கொண்டேன்.//

   பேரன்புக்குரிய ராதாபாலு அனைவராலும் அறியப்பட வேண்டியவர்களே !

   //மிக அருமையாகவும் அழகாகவும் சிறப்பான வர்ணனைகளோடும் ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனும் செய்து முடித்திருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகள் இல்லை.//

   அடடா ! மிக்க நன்றி. இதைத்தங்கள் வாயிலாகக் கேட்பதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது.

   //இதில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி.//

   பருப்பில்லாமல் கல்யாணமா ? தாங்கள் இல்லாமலா ? அது என் [எங்கள்] பாக்யம் அல்லவா !

   தாங்கள் இடம் பெற்றுள்ளதால் மட்டுமே, இந்தத்தொடர் பதிவின் பகுதி-4, பளிச்சென்று கம்பீரமாக உள்ளதாக்கும் :)

   //இரண்டு முறை பின்னூட்டம் கொடுத்தேன். போச்சானு தெரியலை! இப்போ மறுபடி கொடுத்திருக்கேன். :)//

   தாங்கள் முக்கியமான VIP அல்லவா. அதனால் தங்களின் இரண்டு பின்னூட்டங்களையும் பப்ளிஷ் கொடுத்து விட்டேன். இப்போ சந்தோஷம் தானே !

   அன்புடன் கோபு

   நீக்கு
 10. நிறைவுப் பகுதி நிறைவாக இருந்தது சார். ”ஆரண்யநிவாஸ்” புத்தக வெளியீட்டிற்கு ரிஷபன் சாரும், ஆர்.ஆர்.ஆர் சாரும் அழைத்தும் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழல். வந்திருந்தால் யாரையெல்லாம் சந்தித்திருப்பேனோ அவர்களையெல்லாம் உங்கள் பதிவுகள் வாயிலாக சந்தித்து விட்டேன். குறை நீங்கியது.

  மீண்டும் ராதா பாலு மேடத்தையும், எங்கள் ப்ளாக் குழுவினரையும் உங்கள் பதிவுகளில் சந்தித்தாச்சு...:) நிஜப்புலி தானா!!!! எப்படி????

  இந்த வார திருச்சி பதிவர்கள் சந்திப்புக்கும் உங்கள் பதிவின் வாயிலாக அழைப்பும் விடுத்தாச்சு. தெரிந்தவர்கள் போக வேறு யாராவது இருந்தால் கட்டாயம் உங்களுக்கு தகவல் தருவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ADHI VENKAT February 18, 2015 at 1:43 PM

   வாங்கோ .... வணக்கம்.

   //நிறைவுப் பகுதி நிறைவாக இருந்தது சார். //

   மிக்க மகிழ்ச்சி. :)

   //”ஆரண்யநிவாஸ்” புத்தக வெளியீட்டிற்கு ரிஷபன் சாரும், ஆர்.ஆர்.ஆர் சாரும் அழைத்தும் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழல். வந்திருந்தால் யாரையெல்லாம் சந்தித்திருப்பேனோ அவர்களையெல்லாம் உங்கள் பதிவுகள் வாயிலாக சந்தித்து விட்டேன். குறை நீங்கியது.//

   மிகவும் சந்தோஷம்.

   வீட்டை விட்டுப் புறப்படவே ஆயிரம் யோசனைகள் செய்யும் முழுச்சோம்பேறியான என்னை காரில் ஏற்றி முதல் ஆளாகக் [WELL IN ADVANCE] கூட்டிச் சென்று விட்டார்கள். :) திரும்பவும் இரவு கடைசி ஆளாக என்னை என் வீட்டுவரை காரில் கொண்டுவந்து விட்டு விட்டார்கள். நடுவில் ஹெவி டின்னர் வேறு. :)

   இதற்கெல்லாம் [போகவர கார் பயண ஏற்பாடுகளுக்கெல்லாம்] மிகவும் உதவிய திரு. ரிஷபன் சார் + ராமமூர்த்தி சார் இருவருக்கும் என் நன்றிகளை மீண்டும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன்.

   //மீண்டும் ராதா பாலு மேடத்தையும், எங்கள் ப்ளாக் குழுவினரையும் உங்கள் பதிவுகளில் சந்தித்தாச்சு...:) //

   ஆம் ..... அவர்கள் எல்லோரும் சமீபத்தில் என் இல்லத்திற்கு விஜயம் செய்தவர்கள் ஆச்சே !

   //நிஜப்புலி தானா!!!! எப்படி????//

   நிஜப்புலியே தான். இதோ இந்தப்பதிவினில் போய்ப் பாருங்கோ.

   http://enmanaoonjalil.blogspot.com/2014/03/blog-post_22.html

   சாதாரணமாக ஆடு மேய்ப்பதுபோல புலியையும் ராதாபாலு மேய்ப்பது தெரியும் பாருங்கோ. :)

   //இந்த வார திருச்சி பதிவர்கள் சந்திப்புக்கும் உங்கள் பதிவின் வாயிலாக அழைப்பும் விடுத்தாச்சு. //

   ஆமாம். ஏதோ நம்மால் ஆன ஒரு சிறு கைங்கர்யம் ! :)

   //தெரிந்தவர்கள் போக வேறு யாராவது இருந்தால் கட்டாயம் உங்களுக்கு தகவல் தருவார்கள்.//

   நான் சொல்லியுள்ள நம்ம ஊர் 8 + வெளியூர் 2 = ஆக மொத்தம் 10 பேர்கள் மட்டுமே. தாங்கள் ரோஷ்ணியையும் கூட்டி வந்தால் பதிவர்கள் எண்ணிக்கை 11 என்று ஆகலாம். இவர்கள் 11 பேர்களும் அன்று கூடினாலே மிகப்பெரிய விஷயம் என எனக்குத் தோன்றுகிறது.

   வேறு யாரேனும் வருவதாகச் சொன்னாலும் சந்தோஷமே. பார்ப்போம். :)

   VGK

   நீக்கு
 11. சிறப்பான சந்திப்புக்கள்.

  திருமதி ராதாபாலு நிஜப்புலியின் வாலையா பிடித்திருக்கிறார்?

  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் . அருமை.

  பதிலளிநீக்கு
 12. RAMVI February 18, 2015 at 2:45 PM

  வாங்கோ, வணக்கம்.

  //சிறப்பான சந்திப்புக்கள். //

  மகிழ்ச்சி.

  //திருமதி ராதாபாலு நிஜப்புலியின் வாலையா பிடித்திருக்கிறார்?//

  அதில் என்ன சந்தேகம்? அதன் கீழே காட்டியுள்ள 5 இணைப்புகளுக்கும் போய் அங்குள்ள படங்களையெல்லாம் முதலில் பாருங்கோ. கடைசி இணைப்புக்குச் செல்லும் போது மனதை திடப்படுத்திக்கொள்ளுங்கோ. உங்களுக்கேத் தெரியும் அது நிஜப்புலியே என்பது. சந்தேகம் எழுப்பியுள்ள அனைவருக்காகவும் இந்த என் பதில் உங்களுக்கு இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.

  //சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் . அருமை.//

  அன்பான வருகைக்கும், அருமையான ’சொந்த’க்கருத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 13. கோபு அண்ணா

  இப்பொழுதே ஆவலாக இருக்கிறது. அடுத்து நீங்கள் என்ன பதிவு போடப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள.

  //சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்//
  அதிலும் நட்புச் சொந்தம் நீண்ட, நெடிய நாவல் போல் என்றும் தொடர வேண்டும்.

  திருச்சி பதிவர் சந்திப்பு முடிந்ததும் வரப்போகும் உங்கள் பதிவுகளை இப்பொழுதே ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Jayanthi Jaya February 18, 2015 at 3:50 PM
   கோபு அண்ணா//

   வாங்கோ, ஜயா. வணக்கம்மா !

   //இப்பொழுதே ஆவலாக இருக்கிறது. அடுத்து நீங்கள் என்ன பதிவு போடப்போகிறீர்கள் என்று தெரிந்து கொள்ள. //

   இனி கொஞ்சம் நீண்ட இடைவெளி கொடுத்து, என் பதிவுகளிலிருந்து ஓய்வெடுத்து ஒதுங்கிக்கொள்ளலாம் என மனதில் நினைத்துள்ளேன், ஜெயா.

   //**சொந்தம் எப்போதும் தொடர்கதை தான்** அதிலும் நட்புச் சொந்தம் நீண்ட, நெடிய நாவல் போல் என்றும் தொடர வேண்டும்.//

   அது நமக்குள் எப்போதுமே தொடரும் ஜெ. நீண்ட இடைவெளியுடன் ஓய்வு என்று நான் சொன்னது என் புதிய பதிவுகளுக்கு மட்டுமே. உங்கள் பக்கம் நீங்க அழைக்கும்போதெல்லாம் நான் கட்டாயம் வழக்கம்போல வந்து எட்டிப்பார்த்து ஆஜர் கொடுப்பேன். கவலை வேண்டாம்.

   //திருச்சி பதிவர் சந்திப்பு முடிந்ததும் வரப்போகும் உங்கள் பதிவுகளை இப்பொழுதே ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். அன்புடன் ஜெயந்தி ரமணி//

   பார்ப்போம் ஜெயா. அது என்று, எங்கு, எப்போது, எப்படி நடக்கப்போகிறதோ ! ஒரு வெளியூர் பதிவர் திருச்சிக்கு வருகை தருகிறார். எல்லோரையும் ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும் என்கிறார். அதற்காக திட்டமிட்டு முயற்சித்து வருகிறோம். எப்படியும் ஒரு 4-5 நாட்களுக்குள் இந்த சந்திப்பு நடைபெற வாய்ப்புகள் உள்ளன. முடிந்தால் அதை மட்டும் இந்தத் தொடரின் Further தொடர்ச்சியாக வெளியிட முயற்சிக்கிறேன். அதன்பின் நீண்ட இடைவெளி/ஓய்வு கொடுத்தால் போச்சு.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 14. ”ஆரண்ய நிவாஸ்” என்றாலே, எனக்கு திருச்சி ஆதிகுடி காபி கிளப்பின் சூடான அசோகா அல்வாவும் மொறமொறப்பான பட்டணம் பக்கோடாவும்தான் ஞாபகம் வரும். காரணம் இந்த இரண்டையும் அந்த ஹோட்டலில் ரசித்து, ருசித்து சாப்பிட்டுவிட்டு அங்கேதான் இந்த நூலையும் வாங்கினேன். இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏதோ ஒரு சூழ்நிலையில் என்னால் வர இயலாமல் போய்விட்டது.

  அண்மையில் தங்கள் இல்லம் வந்து சென்ற, “எங்கள் ப்ளாக்” சகோதரர்களை மீண்டும் உங்கள வலைப்பக்கம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. திருச்சி சந்தானம் பதிவுகளை படித்து இருக்கிறேன்.

  உங்களுடனான அடுத்த பதிவர் சந்திப்பு - ஆவலாக இருக்கிறேன். தொடர்ந்து எழுதா விட்டாலும், அவ்வப்போது வலைப்பக்கம் உங்கள் முகம் காட்டுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தி.தமிழ் இளங்கோ February 18, 2015 at 9:23 PM

   வாங்கோ, வணக்கம்.

   //”ஆரண்ய நிவாஸ்” என்றாலே, எனக்கு திருச்சி ஆதிகுடி காபி கிளப்பின் சூடான அசோகா அல்வாவும் மொறமொறப்பான பட்டணம் பக்கோடாவும்தான் ஞாபகம் வரும். காரணம் இந்த இரண்டையும் அந்த ஹோட்டலில் ரசித்து, ருசித்து சாப்பிட்டுவிட்டு அங்கேதான் இந்த நூலையும் வாங்கினேன்.//

   அந்த ஹோட்டல் நடத்தும் முதலாளிகள் ஆரண்ய நிவாஸின் சொந்தக்காரர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன். அந்தக்காலத்தில் மிகவும் பிரபலமான உணவகம்தான் அது. சமீபத்தில் 10 ஆண்டுகளாக நான் அங்கு சென்றது இல்லை.

   //இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு ஏதோ ஒரு சூழ்நிலையில் என்னால் வர இயலாமல் போய்விட்டது.//

   ஆம். நான் அழைத்தேன். இருப்பினும் தங்களால் வர முடியாத சூழ்நிலையாகி விட்டது, ஞாபகம் உள்ளது.

   //அண்மையில் தங்கள் இல்லம் வந்து சென்ற, “எங்கள் ப்ளாக்” சகோதரர்களை மீண்டும் உங்கள வலைப்பக்கம் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. திருச்சி சந்தானம் பதிவுகளை படித்து இருக்கிறேன்.//

   சந்தோஷம்.

   //உங்களுடனான அடுத்த பதிவர் சந்திப்பு - ஆவலாக இருக்கிறேன்.//

   நானும் தான். :) தகவல் தெரிவிக்கிறேன். நாம் இருவரும் சேர்ந்தே செல்வோம்.

   //தொடர்ந்து எழுதா விட்டாலும், அவ்வப்போது வலைப்பக்கம் உங்கள் முகம் காட்டுங்கள். //

   நிச்சயமாக. தங்கள் பதிவுகளுக்கு அவ்வப்போது வருகை தருவேன். கவலையே வேண்டாம்.

   அன்புடன் VGK

   நீக்கு
 15. சார்.....ரொம்ப கூச்சமாக இருக்கிறது...
  வேண்டாமே...ப்ளீஸ் ...
  ராதா பாலு மேடத்தை பார்க்க வேண்டும் என்கிற என் ஆசை,அந்த புலியைப் பார்த்தவுடன் போய் விட்டது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி
   February 18, 2015 at 9:30 PM

   வாங்கோ, ஸ்வாமி, வணக்கம்.

   //சார்.....ரொம்ப கூச்சமாக இருக்கிறது... வேண்டாமே... ப்ளீஸ் ...//

   பொண்ணுக்குக் கல்யாணம் ஆகி பேரன்/பேத்தி எடுக்கப் போறேள் .... [எடுத்தாச்சோ என்னவோ?] இன்னும் என்ன ஸ்வாமி கூச்சம் ????? :)))))

   //ராதா பாலு மேடத்தை பார்க்க வேண்டும் என்கிற என் ஆசை, அந்த புலியைப் பார்த்தவுடன் போய் விட்டது!//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! நிஜப் புலியுடன் அந்தப் பெண் புலியைப்பார்த்த பிறகுதான், எனக்கு ராதாபாலுவை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையே அதிகமாகியது !

   ரொம்ப ரொம்ப நல்லவங்க ஸ்வாமி ! தங்கமோ தங்கம்.

   ராதாபாலு = ஸ்வீட், ஸ்வீட்டர் அண்ட் ஸ்வீட்டஸ்டு ஃப்ரண்ட் ..... இப்போ எனக்கு.

   விரைவில் நாம் எல்லோரும் சந்திப்போம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 16. நான் நேத்திக்குதான் சென்னைல இருந்து வந்தேன்.

  அருமையான பதிவர் சந்திப்புக்கு இப்போதைக்கு தொடரும் போட்டிருக்கேள்! எத்தனை ஞாபக சக்தி சார் உங்களுக்கு? ஆச்சரியமா இருக்கு. உங்கள் நினைவலைகளில் அத்தனையையும் கம்ப்யூட்டர் மாதிரி ஸேவ் பண்ணி வெச்சிருக்கேள் போலருக்கு! அப்பப்ப எடுத்து விடறேள் , இல்லையா?

  உங்களின் இந்தத் தொடர் மூலம் பல பதிவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். அதில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்....மிக்க நன்றிசார்!

  திருச்சில பதிவர்கள் சந்திப்பா? எங்கே...எப்போ...என்னிக்கு....!

  சார்....நான் புலி வாலைப் பிடிச்சு, விட்டுட்டு வந்து நாலு வருஷமாச்சு!!! நீங்க இன்னும் அந்த ஃ போட்டோவை விடாம போட்டுண்டிருக்கேளே!! என்னைவிட அந்தப் புலி பதிவுலகத்துல பிரபலமாயிடுத்து!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Radha Balu February 18, 2015 at 9:46 PM

   வாங்கோ ... வணக்கம் ! :)

   //நான் நேத்திக்குதான் சென்னைல இருந்து வந்தேன்.//

   வந்திருப்பீங்கன்னு நினைத்தேன். ஏதேனும் மேலும் ஒத்திப்போடாமல் சீக்கரமா வந்தாத் தேவலையேன்னும் நினைத்தேன்.

   //அருமையான பதிவர் சந்திப்புக்கு இப்போதைக்கு தொடரும் போட்டிருக்கேள்!//

   உங்களிடம் ஃபோனில் பேசச்சொன்னேன். பேசிவிட்டதாக என்னிடம் சொன்னாங்க. எதற்கும் தயாராக இருங்கோ. அநேகமாக வரும் ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து 5 அல்லது 6 மணிக்குள் சந்திப்பு முடிவதாக இருக்கலாம். பிறகு CONFIRMED ஆக எந்த இடம் எந்த நேரம் என்பது தெரிந்ததும் / தெளிவானதும் சொல்கிறேன்.

   //எத்தனை ஞாபக சக்தி சார் உங்களுக்கு? ஆச்சரியமா இருக்கு. உங்கள் நினைவலைகளில் அத்தனையையும் கம்ப்யூட்டர் மாதிரி ஸேவ் பண்ணி வெச்சிருக்கேள் போலருக்கு! அப்பப்ப எடுத்து விடறேள் , இல்லையா?//

   ஏதோ கொஞ்சம் அதிகமாகவே ஞாபக சக்தி இயற்கையாகவே எனக்கு உண்டுதான். இருந்தாலும் இப்போதெல்லாம், சமயத்தில் சிலவற்றை மறந்துபோவதும் உண்டு. ஓரளவு அவ்வப்போது சேமித்து வைத்துள்ளேன். இப்போது ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளேன். இதிலும் ஏதாவது விட்டுப்போய் இருக்குமோ என்னவோ ! :)

   //உங்களின் இந்தத் தொடர் மூலம் பல பதிவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.//

   சந்தோஷம். என்னுடைய CLOSE CIRCLE மிகவும் கம்மிதான்.

   //அதில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது என் அதிர்ஷ்டம்....மிக்க நன்றிசார்!//

   பரஸ்பரம் இருவருமே அதிர்ஷ்டசாலிகளே. இதெல்லாம் ஜன்ம ஜன்மமாக தொடரும் ஏதோ ஒரு உறவின் / நட்பின் அடையாளங்கள் மட்டுமே. அதன் வெளிப்பாடு இப்போது தான் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்பது விதியாக இருந்துள்ளது. 2014 ஜனவரிவரை நீங்கள் யார் என்றே எனக்கோ, நான் யார் என்று உங்களுக்கோ தெரியாமல் இருந்துள்ளது. இப்போ ...... சந்தோஷம் மட்டுமே ! :)

   //திருச்சில பதிவர்கள் சந்திப்பா? எங்கே...எப்போ...என்னிக்கு....!//

   எல்லாம் சொல்லுவோம். தயாராக இருங்கோ. அடுத்த 5-6 நாட்களுக்கு எங்கும் வெளியூருக்குப் போயிடாதீங்கோ. :) ப்ளீஸ்.

   //சார்....நான் புலி வாலைப் பிடிச்சு, விட்டுட்டு வந்து நாலு வருஷமாச்சு!!! நீங்க இன்னும் அந்த ஃ போட்டோவை விடாம போட்டுண்டிருக்கேளே!! //

   அது என்னவோ .. எனக்கு அந்தப்படத்தில் புலிவாலைப் பிடித்துக்கொண்டுள்ள ராதாபாலுவைத்தான் மிகவும் பிடித்துள்ளது. அதனால் நீங்க விட்டுட்டாலும் நான் அதை விடுவதாக இல்லை. அந்தப்படத்தில் நன்கு தீர்க்கமாக உள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

   //என்னைவிட அந்தப் புலி பதிவுலகத்துல பிரபலமாயிடுத்து!!!//

   :))))) அதுவும் உங்களாலும் ..... என்னாலும் ..... :)))))

   மிகவும் கொடுத்துவெச்ச அதிர்ஷ்டக்காரப் புலி அது .... நீங்க அதன் வாலைப் பிடித்ததால், மட்டுமே.

   பார்ப்பவர்களுக்குத் தான் வயிற்றில் ’புளி’ கரைத்தது போல மிகவும் ’கிலி’ ஆக உள்ளது. :)

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
 17. ஆரண்ய நிவாஸ் நெல்லிக்காய் உபயம் பற்றியும் அது மருமகளின் கைவண்ணத்தால் சூப்பர் தொக்காக உடனே மாறிய விபரம் பற்றியும் அறிந்து கொண்டேன். எங்கள் பிளாக் உறுப்பினர் பட்டியல் இன்று தான் தெரிந்தது. எழுத்தாளர் கிருஷ்ணா கல்கியில் எழுதுவது பற்றியும் அவர் எழுத்துத் திறமை பற்றியும் அறிந்து கொள்ள உதவியது இப்பதிவு. ராதாபாலு விஜயம் சமீபத்தில் வாசித்தது. விரைவில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்! சொந்தங்கள் எப்போதும் தொடர்கதையாக வாழ்த்துக்கள்! நிறைவான இச்சந்திப்பு தொடருக்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kalayarassy G February 18, 2015 at 9:47 PM

   வாங்கோ, வணக்கம்.

   //ஆரண்ய நிவாஸ் நெல்லிக்காய் உபயம் பற்றியும் அது மருமகளின் கைவண்ணத்தால் சூப்பர் தொக்காக உடனே மாறிய விபரம் பற்றியும் அறிந்து கொண்டேன். எங்கள் பிளாக் உறுப்பினர் பட்டியல் இன்று தான் தெரிந்தது.//

   இரண்டையும் ஒரே பதிவாகத்தான் முன்பு நான் வெளியிட்டிருந்தேன். http://gopu1949.blogspot.in/2015/01/blog-post_30.html இருப்பினும் ஒன்றை [தொக்கை மட்டும்] பார்த்ததாகவும், மற்றொன்றை இப்போதுதான் பார்த்ததாகவும் தாங்கள் சொல்ல தொக்காகி விட்டது. :) அதனால் பரவாயில்லை. அன்று ஏதேனும் அவசரத்தில் தொக்கை மட்டும் பார்த்து ரஸித்து ருசித்து விட்டு, வேறு ஏதேனும் அவசர வேலைகளுக்குப் போய் இருந்திருப்பீர்கள்.


   //எழுத்தாளர் கிருஷ்ணா கல்கியில் எழுதுவது பற்றியும் அவர் எழுத்துத் திறமை பற்றியும் அறிந்து கொள்ள உதவியது இப்பதிவு.//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி, மேடம்.

   //ராதாபாலு விஜயம் சமீபத்தில் வாசித்தது.//

   ஆம். அவர்கள் சமீபத்தில் தான் எங்கள் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். அதற்காக ஒரு தனிப்பதிவு சமீபத்தில் கொடுத்திருந்தேன்.

   http://gopu1949.blogspot.in/2015/02/blog-post.html

   அதையே இந்தத்தொடரிலும் இறுதியில் மீண்டும் காட்டிடும்படியாக நேர்ந்து விட்டது. .

   //விரைவில் நடக்க விருக்கும் பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்! சொந்தங்கள் எப்போதும் தொடர்கதையாக வாழ்த்துக்கள்! நிறைவான இச்சந்திப்பு தொடருக்குப் பாராட்டுக்கள்!//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும் அழகான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   என்றும் நன்றியுடன் கோபு

   நீக்கு
 18. அருமையான பகிர்வுகள்.சந்தித்த அனைவருக்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Asiya Omar February 19, 2015 at 12:53 PM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான பகிர்வுகள். சந்தித்த அனைவருக்கும் தங்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் நல்வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 19. உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் ...முக்கிய காரணம்

  என்னுடைய தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே தங்கள் சிறுகதை விமர்சன போட்டி தான் ...

  அடுத்து எனது ஊரும் திருச்சி அதனால் கொஞ்சம் SPECIAL ..

  உங்கள் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவை படிக்கும் போது சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Anuradha Prem February 19, 2015 at 5:28 PM

   வாங்கோ, வணக்கம்.

   //உங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து வாசிக்கிறேன் //

   அப்படியா ! மிக்க மகிழ்ச்சி.

   //...முக்கிய காரணம்

   என்னுடைய தமிழ் வலைத்தளம் ஆரம்பிக்க காரணமே தங்கள் சிறுகதை விமர்சன போட்டி தான் ...//

   அடடா, இதைக்கேட்கவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இருப்பினும் VGK-24 ’தாயுமானவள்’ சிறுகதைக்கு மட்டுமே, விமர்சனம் அனுப்பினீர்கள். ஆனால் அதன்பிறகு ஏனோ போட்டிகளில் தொடர்ந்து கலந்துகொள்ளாமலேயே இருந்து விட்டீர்கள். நல்லதொரு வாய்ப்பினை நழுவ விட்டு விட்டீர்களே ! சரி, பரவாயில்லை. அதெல்லாம் முடிந்துபோன விஷயங்கள்.

   //அடுத்து எனது ஊரும் திருச்சி அதனால் கொஞ்சம் SPECIAL ..//

   ஆஹா ! இதைக்கேட்க எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதுங்க.

   //உங்கள் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவை படிக்கும் போது சந்திக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது..... //

   மிகவும் சந்தோஷம். பிராப்தம் இருந்தால் நாம் சந்திப்போம்.

   சந்திப்புகள் மேலும் மேலும் தொடரத்தான் போகிறது. வரும் ஞாயிறு இங்கு மிகப்பெரியதோர் சந்திப்பு திருச்சியில் நடக்க உள்ளது. சுமார் 10 பதிவர்கள் கலந்துகொள்ள உள்ள ’குட்டியூண்டு பதிவர் மாநாடு’ போல அது இருக்கப்போகிறது.

   தாங்கள் ஒருவேளை தற்சமயம் திருச்சியில் இருப்பின் என்னைத் தொடர்பு கொள்ளவும். அந்தப்பதிவர் சந்திப்பின் நேரம் + விலாசம் தருகிறேன். அங்கேயே நாம் சந்தித்து விடலாம். மற்ற சில பிரபல பதிவர்களையும் தாங்கள் அங்கு ஒரே இடத்தில் சந்திக்கவும் ஏதுவாகும். என் மின்னஞ்சல் முகவரி ஏற்கனவே போட்டியில் ஒருமுறை கலந்துகொண்டுள்ளதால் உங்களுக்கே தெரியும். இருப்பினும் நினைவூட்டலுக்காக: valambal@gmail.com

   தங்களின் அன்பான வருகைக்கும் அருமையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள், மேடம்.

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. திருச்சி பதிவர் மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்....மேலும் உங்களின் அன்பான அழைப்புக்கு மிகவும் நன்றி .....

   நீக்கு
  3. Anuradha Prem February 20, 2015 at 10:59 AM

   வாங்கோ, மீண்டும் வணக்கம்.

   //திருச்சி பதிவர் மாநாட்டுக்கு எனது வாழ்த்துக்கள்.... மேலும் உங்களின் அன்பான அழைப்புக்கு மிகவும் நன்றி .....//

   உடனடியான பதிலுக்கும் ’குட்டியூண்டு பதிவர்கள் சந்திப்பு’க்கான தங்களின் அன்பான வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 20. பதிவர்கள் அணிவகுப்பு அருமை. ஆனால் எப்போதும் ஸ்ரீராமும் ரிஷபனும் தப்பித்து விடுகிறார்கள் உங்கள் காமிராவிடமிருந்தும் கூட :)

  பிரபலபத்ரிக்கை ஆசிரியர்கள் தங்கள் முகம் காட்ட விரும்ப மாட்டார்களாம். :)

  சரி அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் பார்த்து விடுவோம்.

  அருமையான நினைவுத் தொகுப்பு கொடுத்துள்ளீர்கள் சார். வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thenammai Lakshmanan February 19, 2015 at 11:19 PM

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவர்கள் அணிவகுப்பு அருமை.//

   மிக்க மகிழ்ச்சி, மேடம்.

   //ஆனால் எப்போதும் ஸ்ரீராமும் ரிஷபனும் தப்பித்து விடுகிறார்கள் உங்கள் காமிராவிடமிருந்தும் கூட :) //

   என் கேமராவிடமிருந்து அவர்கள் தப்பிக்கவில்லை. எல்லோரையும், [குறிப்பாகப் பெண் பதிவர்களை] சந்திக்கும்போது, அவர்களின் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது உண்டு. ஆனால் வெளியிடும் முன்பு பெண் பதிவர்களிடம் மட்டும் அவர்களின் சம்மதம் கேட்டுக்கொள்வது உண்டு. சம்மதம் அளித்தால் மட்டுமே நான் அவர்களின் புகைப்படத்தினை வெளியிடுவது உண்டு.

   ஆனால், திரு. ரிஷபன் அவர்களும், திரு. ஸ்ரீராம் அவர்களும் மட்டும் ஏதோ ஒருசில காரணங்களால் SPECIFIC ஆக வெளியிட வேண்டாம் என என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். அதனால் மட்டுமே அவர்களின் படங்களை நான் இந்தத்தொடரினில் வெளியிடவில்லை.

   //பிரபலபத்ரிக்கை ஆசிரியர்கள் தங்கள் முகம் காட்ட விரும்ப மாட்டார்களாம். :)//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! இருக்கலாம். இருக்கலாம். :)

   //சரி அடுத்த பதிவர் சந்திப்பில் நேரில் பார்த்து விடுவோம்.//

   அது தான் கரெக்ட். அப்படியே செய்யுங்கோ. :)

   //அருமையான நினைவுத் தொகுப்பு கொடுத்துள்ளீர்கள் சார். வாழ்த்துகள். :)//

   மிக்க மகிழ்ச்சி மேடம். தங்களின் அன்பான வருகைக்கும், தேனாக இனிக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
  2. //பிரபல பத்திரிகையாளர்கள்//

   ரிஷபன்ஜி பூவுடன் சேர்ந்த நாராய் என் பெயருக்கும் வாசனை!

   இரண்டு வார்த்தைகளுமே ரொம்ப ஓவர்! பிரபலம்! பத்திரிகையாளர்!!! நானில்லை!!!!!!!! :))))))

   ஆனால் இது ரிஷபன்ஜிக்குப் பொருந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை!

   நீக்கு
  3. :) ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! :) - VGK

   நீக்கு
  4. ரிஷபன்ஜி பூவுடன் சேர்ந்த நாராய் என் பெயருக்கும் வாசனை! // எல்லாம் கோபாலனின் ராஸலீலா ! ஆனால் இது ரிஷபன்ஜிக்குப் பொருந்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! // எல்லாப் புகழும் இறைவனுக்கே !

   நீக்கு
  5. ரிஷபன் February 22, 2015 at 11:21 AM

   // எல்லாம் கோபாலனின் ராஸலீலா !//

   :))))) - vgk

   நீக்கு
 21. மிகவும் நிறைவான தொகுப்பு. ஆனால் நிறைவுப்பகுதி அல்ல என்பது சிறப்பு. எத்தனை பதிவர்களை சந்தித்திருக்கிறீர்கள். நான் இதுவரை என் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பதிவர் ஒரே ஒருவரைதான் சந்தித்திருக்கிறேன்.பார்ப்போம். வாய்ப்பு அமையாமலா போய்விடும்? உங்களுடைய இந்த சிறப்பான முயற்சியும் நேர்த்தியான தொகுப்பும் அதற்கான உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியவை. சந்திப்பின் இனிமை என்றென்றும் தொடரட்டும். இனிய வாழ்த்துகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீத மஞ்சரி February 20, 2015 at 5:19 AM
   வாங்கோ, வணக்கம்.

   //மிகவும் நிறைவான தொகுப்பு.//

   இது என் மனதுக்கு மிகவும் நிறைவான தொகுப்புதான். இதிலேயே நான் சந்தித்துள்ள மேலும் யாராவது ஒருசில பதிவர்களை மறந்து விட்டுப்போய் இருப்பேனோ
   எனவும் கொஞ்சம் கவலையாகத்தான் உள்ளது. அதுபோல எதுவும் இருக்காது என்ற நம்பிக்கையும் உள்ளது.

   //ஆனால் நிறைவுப்பகுதி அல்ல என்பது சிறப்பு.//

   ஆம். இன்னும் நம் வாழ்க்கையில் எவ்வளவு பதிவுலக சொந்தங்களைத் தொடர்ந்து சந்திக்கப் பிராப்தம் இருக்குமோ .. அதனால் நிறைவுப்பகுதி அல்ல என எழுதியுள்ளேன்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>>> கீதமஞ்சரி [2]

   //எத்தனை பதிவர்களை சந்தித்திருக்கிறீர்கள்//

   இவர்களில் பலரும் அவர்களாகவே விரும்பி வந்து என்னை சந்தித்துப்போனவர்கள் மட்டுமே. நானாக யாரையும் கட்டாயப்படுத்தி அழைத்து தொந்தரவோ தர்ம
   சங்கடங்களோ கொடுப்பது இல்லை. :)

   >>>>>

   நீக்கு
  3. கோபு >>>>> கீதமஞ்சரி [3]

   //நான் இதுவரை என் குடும்ப உறுப்பினர்கள் அல்லாத பதிவர் ஒரே ஒருவரைதான் சந்தித்திருக்கிறேன்//

   அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி நபர் ! ...... அவர் யாராக இருந்தாலும் வாழ்க !!

   //பார்ப்போம். வாய்ப்பு அமையாமலா போய்விடும்?//

   இந்த நம்பிக்கையே என்றும் நல்லது. :) நமக்கு ஏதோ ஒரு உற்சாக டானிக்காக மனதுக்கு இன்பமும் தரக்கூடியது.

   >>>>>

   நீக்கு
  4. கோபு >>>>> கீதமஞ்சரி [4]

   ஒரு 4-5 மாதங்களுக்கு முன்பு ..... தமிழ்நாட்டுக்குள் உள்ள [தாங்கள் சமீபத்தில் வந்துபோன] தனியொரு
   மாநிலத்திலிருந்து ஓர் பிரபல பதிவர் தம்பதியினர் திருச்சிக்கு வேறு ஒரு வேலையாக வந்துவிட்டு, என் வீட்டிலிருந்து 20 கிலோ மீட்டர்கள் தள்ளி இருந்தபடி, ”என்னை சந்திக்க என் வீட்டுக்கு இப்போது நேராகப் புறப்பட்டு வரலாமா ?” என தொலைபேசியில் விசாரித்தார்கள்.

   தங்களை அன்று என்னால் சந்திக்க இயலாமல்
   போனது போலவே, இவர்களை அன்று என் வீட்டுக்கு அழைக்க முடியாமல் நான் வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு முக்கியமான மதச்சடங்குகளில் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தேன்.

   அன்றைய சூழ்நிலை அதுபோல ஆகிவிட்டது. பிறகு அவர்களும் என்னை சந்திக்க முடியாமலேயே அவர்கள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்கள்.

   ”வேறொரு சந்தர்ப்பத்தில் திருச்சி வருவதாக இருந்தால்,
   ஒரு நாள் முன்பே சொல்லிவிட்டு வாருங்கள் .. நிச்சயமாக நாம் சந்திப்போம்” எனச் சொல்லி சமாதானம் செய்ய வேண்டியதாக ஆகிவிட்டது.

   அவர்களும் ”சரி .. நாங்கள் மீண்டும் திருச்சிக்கு வரவேண்டிய வேலை உள்ளது, அப்போது நாம் சந்திப்போம்” என்று பாஸிடிவ் ஆக ஏற்றுக்கொண்டு புறப்பட்டுச் சென்று விட்டனர்.

   அதை நினைக்க இன்றும் எனக்கு மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. என்ன செய்வது?

   முன்கூட்டியே தகவல் கொடுத்துவிட்டு வந்தால் தானே .... சந்திக்க நினைக்கும் இருவருக்குமே நல்லதாக ஏமாற்றம் ஏதும் இல்லாமல் சந்திப்பு அமையக்கூடும்.

   >>>>>

   நீக்கு
  5. கோபு >>>>> கீதமஞ்சரி [5]

   //உங்களுடைய இந்த சிறப்பான முயற்சியும் நேர்த்தியான தொகுப்பும் அதற்கான உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியவை. சந்திப்பின் இனிமை என்றென்றும் தொடரட்டும். இனிய வாழ்த்துகள் கோபு சார்.//

   தங்களின் அன்பான தொடர் வருகைக்கும், அழகான கருத்துப்பகிர்வுகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள கோபு

   நீக்கு
  6. தங்களுடைய பொறுமையான பொறுப்பான பதில் பின்னூட்டங்களுக்கு மிக மிக நன்றி கோபு சார். நான் சந்தித்த உறவல்லாத பதிவர் ஆஸியில் சிட்னியிலேயே இருக்கிறார். அட்சயப் பாத்திரம் வலைப்பூவின் மணிமேகலாதான் அவர். பழகுவதற்கு மிகவும் இனிமையான எளிமையான தோழி அவர். மாதமொரு முறை இலக்கியச்சந்திப்பு நடத்துகிறார். அதில் கலந்துகொள்வதன் மூலம் அவருடைய நட்பைப் பெற்றேன்.

   நீக்கு
 22. //மிகவும் நிறைவான தொகுப்பு. ஆனால் நிறைவுப்பகுதி அல்ல என்பது சிறப்பு.//
  enathu karuthum athuve geetha sahothari....

  wonderful person u r sir...

  aduthu pathivu+kathaikalai thodarungal.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. thirumathi bs sridhar February 20, 2015 at 12:35 PM

   வாங்கோ ஆச்சி. வணக்கம்.

   **மிகவும் நிறைவான தொகுப்பு. ஆனால் நிறைவுப்பகுதி அல்ல என்பது சிறப்பு.** - கீதமஞ்சரி

   //enathu karuthum athuve geetha sahothari.... எனது கருத்தும் அதுவே கீதா சகோதரி//

   அப்படியா ! மிகவும் சந்தோஷம், ஆச்சி.

   //wonderful person u r sir...//

   WONDERFUL ஆகத்தான் ஏதேதோ சொல்லுறீங்கோ ஆச்சி. யாரைப்பற்றி என்றுதான் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். யோசித்து யோசித்து எனக்கு மண்டை காய்ந்துப்போகிறதே, ஆச்சி.

   //aduthu pathivu+kathaikalai thodarungal..... அடுத்த பதிவு + கதைகள் தொடருங்கள்//

   என் பதிவுகளின் ஆரம்பகாலத்தில் [2011] வருகை தந்து தொடர்ச்சியாகக் கருத்தளித்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து வந்த தங்களைப்போன்ற பலரும் இன்று காணாமல் போய் எங்கேயோ ஒளிந்துகொண்டுள்ளீர்களே, ஆச்சி.

   என்னால் எப்படித் தொடர்ந்து பதிவுகள் தர இயலும் ..... நீங்களே சொல்லுங்கோ .... ஆச்சி !

   அன்புள்ள கோபு

   நீக்கு
 23. வாழ்த்துக்கள் ஐயா...
  மிகச் சிறப்பாக சந்தித்தவர்களை எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரிவை சே.குமார் February 20, 2015 at 9:32 PM

   வாங்கோ ... வணக்கம்.

   //வாழ்த்துக்கள் ஐயா... மிகச் சிறப்பாக சந்தித்தவர்களை எல்லாம் சொல்லியிருக்கிறீர்கள்..//

   தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 24. அனைத்தும் சந்தோசமான தருணங்கள்.. வாழ்த்துக்கள். ஆர் பின்னூட்டமிட்டாலும் இடாவிட்டாலும் நீங்கள் இதை ஒரு டயறிபோல எண்ணி வைத்திருக்கலாம் புளொக்கை.

  நானும் என்னுடையதை அப்படித்தான் எப்பவும் எண்ணுவேன்ன், அதனாலேயே எடுக்கும் படங்கள் நினைவுகளைப் போட்டு வைக்கிறேன்ன்...

  ஒரு காலத்தில் என் பூட்டப்பிள்ளைக்கு உதவுமெல்லோ:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. athiraFebruary 21, 2015 at 12:05 AM

   வாங்கோ அதிரா, வணக்கம்.

   //அனைத்தும் சந்தோசமான தருணங்கள்.. வாழ்த்துக்கள். ஆர் பின்னூட்டமிட்டாலும் இடாவிட்டாலும் நீங்கள் இதை ஒரு டயறிபோல எண்ணி வைத்திருக்கலாம் புளொக்கை.//

   நான் டயரி போலத்தான் நினைத்து, என் நினைவலைகளை
   எல்லாம் திரட்டி, ஒருங்கிணைத்து, புதுப்பித்து, இந்தத்தொடரை எனக்காக மட்டுமே எழுதியுள்ளேன்.

   //நானும் என்னுடையதை அப்படித்தான் எப்பவும் எண்ணுவேன்ன், அதனாலேயே எடுக்கும் படங்கள் நினைவுகளைப் போட்டு வைக்கிறேன்ன்...//

   வெரி குட் அதிரா ! சபாஷ் அதிரா !!

   //ஒரு காலத்தில் என் பூட்டப்பிள்ளைக்கு உதவுமெல்லோ:)..//

   இதுபோன்ற அழகிய தங்களின் கொச்சைத் தமிழினைக்
   கேட்டு பல நாட்கள் ஆகி விட்டன, அதிரா.

   என் பதிவுகள் பக்கம் அதிரா வந்து ரொம்ப நாட்கள் ஆச்சு.
   இந்தத்தொடரின் பகுதி-1 முதல் பகுதி-5 வரையும்,
   படங்களை மட்டுமாவது பாருங்கோ அதிரா.

   எல்லாவற்றிற்கும் ஜாலியாக இதுபோல அதிரா பாணியில்
   கமெண்ட்ஸ் கொடுங்கோ, அதிரா.

   ஸ்வீட் சிக்ஸ்டீன், பிரித்தானியா இளவரசி, அதிரடி,
   அலம்பல், அட்டகாச, அல்டாப், அட்டூழ்ய அதிரா வாழ்க !

   ஒரே பிரஸவத்தில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்த நம் அதிரா பற்றிய மேலும் சுவாரஸ்யமான சில சிறப்புச் செய்திகளுக்கு:

   http://gopu1949.blogspot.in/2013/09/45-2-6.html

   அன்புடன் கோபு

   நீக்கு
 25. BSNL NETWORK சரியில்லாமல் கடந்த 24 மணி நேரங்களாக பல்வேறு புதிய பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்ததால், என் வலைத்தளத்தினையோ, பிறரின் வலைத்தளங்களையோ என்னால் திறந்து பார்க்க முடியவில்லை. இப்போதுதான், மீண்டும் சரியாகியுள்ளது. இது நம் அதிரா உள்பட அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் இதே பிரச்சினைதான். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென BSNL Broad Band இல் இண்டர்நெட் இணைப்பு நின்றுவிட்டது. சென்ற வெள்ளிக்கிழமை (20.02.15) மாலையில் எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் தொடங்கிய இந்த பிரச்சினை Mozilla Firefox - ஐ செயல் இழக்க செய்து விட்டது. நெட்ஒர்க் சம்பந்தப்பட்ட எந்த வேலைகளும் செய்ய இயலவில்லை. நேற்று (21.0215) மதியம்தான் சர்வீஸ் சென்டரில் சரி செய்தனர்.

   நீக்கு
 26. பதிவர்களின் அன்பு எத்தனை இயல்பாய் உங்களுக்குக் கிட்டியிருக்கிறது ! நினைக்கவே மகிழ்ச்சி.. என்றும் இந்த மழையில் நீங்கள் நனைய வேண்டுமாய் என் பிரார்த்தனை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிஷபன் February 22, 2015 at 11:24 AM

   வாங்கோ, வணக்கம்.

   //பதிவர்களின் அன்பு எத்தனை இயல்பாய் உங்களுக்குக் கிட்டியிருக்கிறது ! நினைக்கவே மகிழ்ச்சி.. என்றும் இந்த மழையில் நீங்கள் நனைய வேண்டுமாய் என் பிரார்த்தனை//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மகிழ்ச்சியான கருத்துக்களுக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   பிரியமுள்ள
   வீ...............ஜீ

   நீக்கு
 27. இனிமையான சந்திப்புகள் தொடரட்டும்....

  இன்றைக்கு நடக்கப் போகும் பதிவர் சந்திப்பிற்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட் நாகராஜ் February 22, 2015 at 3:57 PM

   வாங்கோ ... வெங்கட்ஜீ, வணக்கம்.

   //இனிமையான சந்திப்புகள் தொடரட்டும்....//

   சந்தோஷம்.

   //இன்றைக்கு நடக்கப் போகும் பதிவர் சந்திப்பிற்கும் வாழ்த்துகள்.//

   அது மிகவும் அழகாக திருஷ்டிப்படும் விதமாக மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தங்கள் துணைவியாரும், குழந்தைப்பதிவர் ரோஷ்ணியும் கலந்துகொண்டு, கலக்கி விட்டார்கள். தாங்கள் வராதது ஒன்றுமட்டுமே மிகவும் குறையாக நான் உணர்ந்தேன். மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் நான் அழைப்பு விடுத்திருந்த அனைவரும் 100% , அதுவும் குறித்த நேரத்தில் வருகை தந்து சிறப்பித்துவிட்டார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

   அன்புடன் கோபு [VGK]

   நீக்கு
 28. மதிப்பிற்குரிய ஐயா,

  தாங்கள் நேரில் சந்தித்த பதிவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களுடனான இனிய சந்திப்பு தருணங்களை அழகாக தொகுத்து, புகைப்படங்களுடன் வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் ஐயா.

  பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல ஐயா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Tamizhmuhil Prakasam February 22, 2015 at 6:55 PM

   வாங்கோ, வணக்கம்.

   //மதிப்பிற்குரிய ஐயா,

   தாங்கள் நேரில் சந்தித்த பதிவர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து, அவர்களுடனான இனிய சந்திப்பு தருணங்களை அழகாக தொகுத்து, புகைப்படங்களுடன் வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள் ஐயா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல ஐயா.//

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மகிழ்ச்சிக்கடலில் அனைவருடனும் தாங்களும் தங்களை ஆழ்த்திக்கொண்டதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் கோபு

   நீக்கு
 29. குடும்பமே பதிவர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது சார்...திரு மௌலி அவர்கள், திரு ஆரண்யநிவாஸ், திரு வெங்கட் நாகராஜ்...இப்படிப் பலர்.....எத்தனை எத்தனை திறமை படைத்தவர்கள்! இனிய சந்திப்பு சார்! மிகவும் சந்தோஷம்.....படங்கள் அருமை.

  அனைத்தையும் மிகுந்த சந்தோஷத்துடனும், அழகாக நினைவு கூர்ந்து இங்கு பகிர்ந்துள்ளீர்களே! எத்தனை உயரிய உள்ளம் சார் உங்களுக்கு.....மிக்க மிக்க நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu February 24, 2015 at 10:55 AM

   வாங்கோ, வணக்கம்.

   //குடும்பமே பதிவர்களாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது சார்...திரு மௌலி அவர்கள், திரு ஆரண்யநிவாஸ், திரு வெங்கட் நாகராஜ்...இப்படிப் பலர்.....எத்தனை எத்தனை திறமை படைத்தவர்கள்! இனிய சந்திப்பு சார்! மிகவும் சந்தோஷம்.....படங்கள் அருமை.

   அனைத்தையும் மிகுந்த சந்தோஷத்துடனும், அழகாக நினைவு கூர்ந்து இங்கு பகிர்ந்துள்ளீர்களே! எத்தனை உயரிய உள்ளம் சார் உங்களுக்கு.....மிக்க மிக்க நன்றி பகிர்வுக்கு.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான விரிவான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். இந்தப் பதிவர் சந்திப்புகள் மேலும் தொடர்ந்து கொண்டே வருவதால் ‘சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்!’ என்ற தலைப்பினில் மேலும் ஏழு பகுதிகள் வெளியிட உள்ளேன். அதில் நேற்றுவரை முதல் மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நான்கு பகுதிகள் வெளியிடப்பட உள்ளன. அவைகளும் சுவாரஸ்யமாகவே இருக்கும். முடிந்தால் வருகை தாருங்கள், ஐயா.

   அன்புடன் VGK

   நீக்கு
 30. பதில்கள்
  1. கே. பி. ஜனா... February 25, 2015 at 4:24 PM
   சுவாரசியமான சந்திப்புகள்...

   மிக்க நன்றி.

   நீக்கு
 31. எல்லா பதிவுகளையும் படித்தேன். எவ்வளவு அழகான நட்பு வட்டம். நன்றாக ஒன்றுவிடாமல் தொகுத்துக்கொடுக்க அவ்வப்போது திட்டமிட்டீர்களா. இவ்வளவு கன கச்சிதமாக செய்வது உங்களுக்கு ஆகிவந்த கலைபோலுள்ளது. ஆமாம் நீங்கள் ஏன் என் பதிவுகளுக்கு வருவதில்லை. இதைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. உங்களின்
  விட்டுப்போய் விடும் பதிவுகளைத் தேடிப்படிக்கிறேன். படங்களும்,பதிவுகளும் உங்களுடயது மிக்க அருமை. நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Kamatchi February 25, 2015 at 5:16 PM

   வாங்கோ மாமி, வணக்கம், நமஸ்காரம்.

   //எல்லா பதிவுகளையும் படித்தேன். எவ்வளவு அழகான நட்பு வட்டம். நன்றாக ஒன்றுவிடாமல் தொகுத்துக்கொடுக்க அவ்வப்போது திட்டமிட்டீர்களா. இவ்வளவு கன கச்சிதமாக செய்வது உங்களுக்கு ஆகிவந்த கலைபோலுள்ளது//

   சந்தோஷம். முதலில் நான் இதனை இவ்வாறு வெளியிடத் திட்டம் ஏதும் தீட்டவில்லை.

   என்னைத்தேடி வந்த பலரை நான் நேரில் சந்திக்கும் வாய்ப்புகள் எனக்கு அவ்வப்போது கிடைத்திருந்தன. அவற்றைப்பற்றி அவ்வப்போது ஒருசில பதிவுகளின் கீழே காட்டிக்கொண்டிருந்தேன். சிலரின் சந்திப்புகளை மட்டும் தனிப்பதிவாகவே வெளியிட்டிருந்தேன். எனக்கே இவை நாளடைவில் மறந்துபோய்விடாமல் இருக்க, அவற்றை நான் தேடித்தேடித் திரட்டி, ஒருங்கிணைத்து இதுபோல ஓர் தொடராகக் கொண்டுவந்துள்ளேன். இதுவரை நான் சந்தித்துள்ள பதிவர்கள் + எழுத்தாளர்கள் 37 எனக் கொண்டுவர முடிந்துள்ளது.

   இப்போது சமீபத்தில் திருச்சியில் ஸ்ரீரங்கத்தில் ஓர் பதிவர் சந்திப்பு நிகழ்ந்தது. அதில் மேலும் இருவரைப் புதிதாகச் சந்தித்ததாக இந்தப்பட்டியலில் சேர்க்க முடிகிறது. ஆக 37+2 = 39 ஆச்சு.

   அந்த எங்களின் இனிய சந்திப்பு நிகழ்ச்சிகள் பற்றியும் மேலும் ஏழு சிறுசிறு பகுதிகளாக நான் என் வலைத்தளத்தினில் எழுதி வெளியிட்டு வருகிறேன். இதுவரை நேற்று வரை அதன் முதல் மூன்று பகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றையும் பாருங்கோ. நன்றாகவே இருக்கும்.

   //ஆமாம் நீங்கள் ஏன் என் பதிவுகளுக்கு வருவதில்லை. இதைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை.//

   இங்கு என் பேரனுக்கு முடி இறக்குதல், பதிவர் சந்திப்புகள், அதைப்பற்றி நான் வெளியிட நினைக்கும் தொடர் பதிவுகள், பேரனுக்கு நடைபெற உள்ள [27 02 2015] ஆயுஷ்ஹோமம் என நான் இப்போது கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்.

   01.03.2015க்குப்பிறகு உங்கள் பதிவுகள் பக்கம் வந்து பார்த்து கருத்தளிக்கிறேன். அவ்வப்போது தாங்கள் பதிவு வெளியிட்டதும் அதன் இணைப்பினை [லிங்க்] மெயில் மூலம் எனக்கு அனுப்பி வைத்தால் நல்லது. நான் உடனே வருகைதர அதுதான் எனக்கு உதவும். இல்லாவிட்டால் தாங்கள் எப்போது என்ன பதிவு வெளியிட்டுள்ளீர்கள் என எனக்கு தெரியவே தெரியாமல் போய்விடும்.

   // உங்களின் விட்டுப்போய் விடும் பதிவுகளைத் தேடிப்படிக்கிறேன். படங்களும்,பதிவுகளும் உங்களுடயது மிக்க அருமை. நன்றி. அன்புடன்//

   சந்தோஷம். இப்போ நேரமிருக்கும்போது கீழ்க்கண்ட மூன்று பதிவுகளுக்கு மட்டும் வாங்கோ, மாமி.

   http://gopu1949.blogspot.in/2015/02/3.html

   http://gopu1949.blogspot.in/2015/02/2.html

   http://gopu1949.blogspot.in/2015/02/1.html

   அப்புறம் வரும் 28.02.2015வரை தினமும் வாங்கோ.

   பழசையெல்லாம் அப்புறமா நீங்க மெதுவாகப் படிச்சுக்கலாம்

   அன்புடன் கோபு

   நீக்கு
 32. இன்று 29.07.2015 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு நம் அன்புச் சகோதரி மஞ்சுபாஷிணி அவர்கள் என் இல்லத்துக்கு திடீர் வருகை புரிந்து சுமார் ஒரு மணி நேரம் ஜாலியாகப் பேசி மகிழ்வித்துச் சென்றார்கள்.

  திருமதி. and திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்களும், தம்பதி ஸமேதராய், மஞ்சுவுடன் கூடவே என் இல்லத்துக்கு இன்று எழுந்தருளியிருந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.

  அவர்கள் மூவருக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 33. இன்று 29.07.2015 என் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த திருமதி. மஞ்சுபாஷிணி அவர்களின் புகைப்படம் இந்தப்பதிவினில் இன்று புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு
 34. பதிவர்கள் தொடர் சந்திப்பு வாழ் நாளில் என்றுமே மறக்க முடியாத இனிமையான தருணங்கள்தான்

  பதிலளிநீக்கு

 35. சொந்தம் .....
  எப்போதும் .....
  தொடர்கதைதான் .....
  முடிவே இல்லாதது !!!!!

  முடிவில்லாத பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:47 AM

   சொந்தம் .....
   எப்போதும் .....
   தொடர்கதைதான் .....
   முடிவே இல்லாதது !!!!!

   முடிவில்லாத பதிவர் சந்திப்புகள் தொடரட்டும்...//

   வாங்கோ, வணக்கம்.

   தங்களின் அன்பான வருகைக்கும், எதையோ நானாகப் புரிந்துகொள்ளட்டும் என்ற வகையில் அர்த்தபுஷ்டியுடன் கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள் மேடம். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ..... சந்தோஷம் :)

   நீக்கு
 36. இடைவிடாத பதிவர் சந்திப்புகளுக்கு இப்பத்தைக்கு தொடரும்தானே போடோணும் நிறைவுன்னுபிட்டு எப்பூடி சொல்லலாம். இன்னமும் கூடி வரிசையில நெறய பேரு டிக்கட்டு புக் பண்ணி வெயிட்டிங்குல காத்திருக்காகளே

  பதிலளிநீக்கு
 37. நிறைவான நிறைவு பதிவு. எப்படித்தான் ரிப்ளை கமண்டுகளை இவ்வளவு பெரிசா போடுறீங்களோ. இன்னும் நிறைய பேரு உங்களை சந்திக்க ஆர்வமுடன் காத்துண்டுதான் இருப்பா.

  பதிலளிநீக்கு
 38. எழுத்துப்புலியின் பிடியில் நிஜப்புலியே மட்டையாகிவிட்டதா??;-))))

  பதிலளிநீக்கு
 39. இத்தகைய சந்திப்புகள் மறக்கமுடியாத பசுமையான நினைவுகளாய்ப் பதிவது மட்டுமன்றி ஒரு புத்துணர்வையும், உத்வேகத்தையும் வழங்கும் என்பதில் ஐயமில்லை!

  பதிலளிநீக்கு