About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Wednesday, February 4, 2015

அன்னபூரணியாய் வந்த ராதா ...... அள்ளித்தந்த அன்பளிப்புகள் !
மிகப்பிரபலமான பத்திரிகை எழுத்தாளரும்
பதிவருமான திருமதி. ராதாபாலு அவர்களின்
வருகை மிகவும் மகிழ்வளித்தது.  

29.01.2015 குருவாரம் .. வியாழக்கிழமை
மாலை 5.45 க்கு எங்கள் இல்லத்தில் 
வரவேற்பு அளித்தோம்.

பிரபல எழுத்தாளருக்குப் 
பொன்னாடை போர்த்தி வரவேற்றல்

 தம்பதி ஸமேதராய் எழுந்தருளியது 
எங்களுக்கு மேலும் மிக்க மகிழ்ச்சியளித்தது.

 திருமதி. ராதா அவர்களின் கணவர் 
திரு. பாலு அவர்கள் 
அரசுடைமையாக்கப்பட்ட வங்கி ஒன்றினில் 
மேலாளராகப் பணியாற்றி
ஓய்வு பெற்றவர்.

ஜாதகத்தின் அடிப்படையில் பலாபலன்கள்
சொல்வதிலும் ஆற்றல் படைத்தவர்.

இவரது ஜோதிட ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படிக்க

https://scribd.com/yenbeeyes

அவர்களுடன் நாங்களும் 

 
உருவத்தில் மட்டுமல்ல ...... உள்ளத்திலும், 
பாசத்துடன் பழகுவதிலும், 
எழுத்தாற்றலிலும் 
எப்போதும் இளமையாக + இனிமையாகத் 
தோற்றமளிப்பதிலும்

மிகவும் உயர்ந்து நிற்பவர்
திருமதி. ராதாபாலு அவர்கள்.


சமீபத்தில் காசியாத்திரை சென்று வந்து
எங்களுக்கு அள்ளித்தந்துள்ள அன்பளிப்புகள் இதோ:

 ஜொலிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி + கணேஷ்

வழவழப்பானதோர் பிள்ளையார்
கலை நுணுக்கமான ஆசனத்தில் அமர்ந்த நிலையில் 


 
அன்னபூரணி அம்பாள்            ஸ்ரீ காசி விஸ்வநாதர் 
                     
 கங்கைச்சொம்பு                               ஸ்ரீ விஷ்ணு பாதம்
 காசி அன்னபூரணி அம்பாள் 
படியளக்கும் பரமசிவனுக்கே 
அன்னமிடும் அழகிய படம் 

 
 கலை நயம் மிக்க ஊதுபத்தி ஸ்டாண்ட் + காசிக்கயிறுகள்

                           
கலைநயம் மிக்க மிக அழகானதோர் குங்குமச்சிமிழ்

 
 பார்க்கவே பரவஸம் 
அளிக்கும் அடிபாகம் :)

[அதாவது சோழி போன்ற வடிவமைப்பில் குங்குமச் சிமிழின் அடிபாகம்]ரவிக்கைத்துணிகள், மஞ்சள், குங்குமம்
கண்ணாடி, சீப்பு முதலிய மங்கலப்பொருட்கள் NEW DIARY FOR 2015


இவர்களின் சொந்தத் தோட்டத்தில் 
விளைந்த மிகவும் ருசியான கொய்யாப்பழங்கள் !

 
 ஆஹா!  நா ஊறவைக்கும் ஜாங்கிரிகளும்
கரகரப்பான காராச்சேவும்
மற்ற அனைத்துப்பொருட்களையுமே 
தூக்கிச் சாப்பிட்டு விடும் விதமாக ! :)புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் காசி விஸ்வநாதர்


புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
ஜொலிக்கும் அன்னபூரணி அம்பாள் 

 
புதிதாகக் காசிக்கயிறு கட்டிய என் கையில் 
புத்தம் புதிய கங்கைச்சொம்பு

-oOo-


 

சமீபத்தில் மேற்கொண்ட புனித யாத்திரையில்
காசியில் காட்சியளிக்கும் 
தம்பதியினர்

 

புத்தகங்களைப் படிப்பதும், அறிந்தவற்றையும், 
அனுபவங்களையும் எழுதுவதும் 
திருமதி. ராதாபாலு அவர்களுக்கு 
மிகவும் பிடித்தமான விஷயங்கள்.


கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக 

இவர்கள் எழுதிய 
கதைகள், கட்டுரைகள், ஆலய தரிசனம், 
சமையல் குறிப்புகள் ஆகியவை 
பல தமிழ் இதழ்களில் 
வெளியாகிக்கொண்டே இருக்கின்றன.   சமீபத்திய ’தீபம்’ இதழில் இவரின் பல 
ஆன்மீகக் கட்டுரைகளும் 
’தி ஹிந்து’ தமிழ் தினசரியிலும், மங்கையர் மலரிலும் 
வேறு சில ஆக்கங்களும் வெளியாகியுள்ளன.

தமிழ் இதழ்களில் வெளியான அவற்றின் தொகுப்புக்களை தன் 

வலைப்பூக்களிலும் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.  பேரெழுச்சியுடன் அடிக்கடி 
உலகில் உள்ள பல நாடுகளுக்குப்
பயணம் சென்று வருவதில் 
மிகுந்த ஆர்வமுள்ள தம்பதியினராக உள்ளனர் !
இதோ அதற்கு ஆதாரமான சில படங்கள்:

இந்தோனேஷியா - ’பாலி’யில் 

கம்போடியாவில்

ஜெர்மனிக் குளிரில்

லண்டன் பாலம் அருகே

மலேசியாவில் 


’ பாரிஸ்’  இல்
 ’ரோம்’ இல் 

சிங்கப்பூரில்  

லண்டன் வாக்ஸ் மியூசியத்தில் 
'ஸ்விஸ்' நாட்டில்

 பாங்காக் - தாய்லாந்தில்
பளிச்சென்ற தோற்றத்தில் !


கேரளாவில்

பேத்தியுடன்


 பசுமையான 
நினைவுகளில் !

 பூக்களுடன் தானும் 
ஓர் பூவாகவே !


உல்லாசமாகப் 
படகுப் பயணத்தில் 


 
செல்லமான பேத்தியுடன் !

பாட்டியின் அலங்காரங்களில் சொக்கிப்போய்
கன்னத்தில் எவ்ளோ அழகாக ஸ்டைலாகக் 
கை வைத்துக்கொண்டுள்ளது பாருங்கோ !

பேரக்குழந்தைகளுடன் 
உற்சாகமாக ஊஞ்சலில்


சஷ்டியப்த பூர்த்தி விழாவில் !
உன்னதமான இந்த உத்தம தம்பதியினருக்கு 
மூன்று பிள்ளைகளும் ஒரு பெண்ணுமாக 
மொத்தம் நான்கு வாரிசுகள். 

அனைவருக்கும் திருமணமாகி 
இவர்கள் பேரன் பேத்திகள் எடுத்தாச்சு!

ஜெர்மனி, 
சிங்கப்பூர், 
சென்னை, 
மும்பையில் 
அவர்கள்.

அடிக்கடி இங்குமங்கும் 
பயணம் செய்துகொண்டு
திருச்சியில் ஜாலியாக இவர்கள் ! :)

 

பதிவுலகில் நம் 
திருமதி. ராதாபாலு அவர்களின் 
சமீபத்திய சாதனைகள்

திருமதி. ராதாபாலு அவர்கள்.


வலைத்தளங்கள்: 


” எண்ணத்தின் வண்ணங்கள் ”


“அறுசுவைக் களஞ்சியம் ”


“ என் மன ஊஞ்சலில் “


சென்ற ஆண்டு என் வலைத்தளத்தினில் நான் நடத்திய 

‘சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ மூலம் மட்டுமே 

எனக்கு இவர்கள் அறிமுகம் ஆனார்கள்.இப்போது நாங்கள் குடும்ப நண்பர்களாகிவிட்டதில் 

எங்கள் இருவருக்குமே மிகவும் மகிழ்ச்சி.VGK-07, VGK-08, VGK-10, VGK-11, VGK-12, 

VGK-14, VGK-17, VGK-18, VGK-27, 

VGK-28 and VGK-33 

ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று

நான்கு முதல் பரிசுகள், 

நான்கு இரண்டாம் பரிசுகள், 

மூன்று மூன்றாம் பரிசுகள்

வென்றுள்ளார்கள்.
                                                                   http://gopu1949.blogspot.in/2014/08/vgk-21-to-vgk-30.html

                                                                   http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
தனக்குத்தானே நீதிபதி போட்டியிலும் 

மிகச்சரியாக விடை எழுதி 

பரிசினைப் பகிர்ந்து கொண்டார்கள்
இவருக்கு நம் போட்டிகளில்

’கீதா விருது’ 

வழங்கப்பட்டுள்ளது.
VGK-10, VGK-11 and VGK-12

தொடர் வெற்றிக்காக

ஹாட்-ட்ரிக் பரிசும் அளிக்கப்பட்டுள்ளது.திருமதி. ராதாபாலு அவர்களை 


நான் கடந்த நான்கு மாதங்களில்


மூன்று முறைகள் நேரில் 


சந்தித்திருக்கிறேன்.


முதல்முறை அவர்கள் வீட்டு


நவராத்திரி கொலுவுக்கு 


எங்களை அழைத்தபோது30.09.2014
இவர்களின் வீட்டை படுசுத்தமாகப் 

பளிச்சென்று பராமரித்து

மிக அழகாக வைத்திருந்தார்கள்.


அதைக்கண்ட என் கண்களுக்கும் மனதுக்கும் 

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.


{ அந்த  மிக ரம்யமான சூழலிலிருந்து புறப்பட்டு வரவே எனக்குத் தோன்றவில்லை .

இதனாலேயே அவர்களை என் இல்லத்திற்கு அழைக்க நான் மிகவும் தயங்கினேன். }அழகியலும் அறிந்துள்ள 


மிகவும் பொறுப்பான 


குடும்பத்தலைவி ! :)


இரண்டாம் முறை பொதுவான ஓரிடத்தில்


எதிர்பாராததோர் சந்திப்பு 


எங்களுக்குள்  நிகழ்ந்தது16.01.2015
மூன்றாம் முறை 


29.01.2015 


எங்கள் இல்லத்திற்கே


நேரில் வந்திருந்தார்கள். 
ஒவ்வொருமுறை நான் இவர்களை சந்திக்கும்போதும் 

ஒரு 10 வயது குறைந்ததுபோலக் காட்சியளிப்பதே

இவர்களின் ஸ்பெஷாலிடியாகவும்

எனக்கு ஒரே ஆச்சர்யமாகவும் 

அதே சமயம் மிகவும் சந்தோஷமாகவும் உள்ளது. :) இவ்வாறான இவர்களின் 

இளமையின் இரகசியத்தை இவர்கள்

தனிப்பதிவாக வெளியிட்டால்

நம்மில் பலருக்கும் பயன்படக்கூடும் :)


 


அன்பின் ராதாபாலு,
எங்கள் இல்லத்திற்கு 

தங்களின் அன்பான வருகைக்கும்,

மிகவும் இனிமையாக நாம் 

மனம் விட்டுப் பேசி மகிழ முடிந்ததற்கும்

எங்கள் மனம் நிறைந்த அன்பு நன்றிகள்.
இன்றுபோல என்றுமே சந்தோஷமாக 

சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருங்கோ !


என்றும் அன்புடன் தங்கள்


கோபுoooooooooooooooooooooooooooooooooooooooooooo

எங்கள்  இல்லத்திற்கு வருகை புரிந்தது பற்றிய
தன் மகிழ்ச்சியை திருமதி. ராதாபாலு அவர்கள்
தன் வலைத்தளத்தினில் பகிர்ந்து கொண்டுள்ளார்கள்


இணைப்பு இதோ:
ooooooooooooooooooooooooooooooooooooooooooooஎன்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன் 

38 comments:

 1. ராதாபாலு தம்பதியினரின் சந்திப்பு பற்றி அறிந்து எங்களுக்கும் மகிழ்ச்சியாயிருக்கிறது கோபு சார்! உங்கள் நட்பு இன்று போல் என்றும் தழைக்கட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. பதிவினை புகைப்படங்களால் குளிப்பாட்டி விட்டீர்கள் ஸார். அருமை.

  அவர்கள் தளத்தில் முன்னரே அவர்கள் உங்கள் இல்லம் வந்தது பற்றி எழுதி இருந்தார்கள். அங்கு சென்று பின்னூட்டமிட்டேன். அது கூகிள் ப்ளஸ் பின்னூட்டமாக அமைந்தது.

  நட்புகளை மதிப்பதிலும், அவர்களுடன் குழந்தை போலக் கலந்து பழகிக் குதூகலிப்பதையும் கண்டு சந்தோஷமாயிருக்கிறது.

  ReplyDelete
 3. ராதா பாலுவை நீண்ட நாட்களாகத் தெரியும் ஆனால் இதுவரை சந்தித்ததில்லை. கூடிய விரைவில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். அப்படியே உங்களையும் சந்திக்க ஆசை கோபு ஸார். வரும் தேதி நிச்சயமானவுடன் தெரிவிக்கிறேன்.

  உங்கள் வீட்டிற்கு அவர் தம்பதியாய் வந்து உங்களை சந்தித்து, பேசி மகிழ்ந்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டது எல்லாமே சந்தோஷமான நிகழ்வுகள். இங்கு நீங்கள் போட்டிருக்கும் பல புகைப்படங்கள் அவரது தளத்திலும் பார்த்திருக்கிறேன். சிரித்த முகத்துடன் எப்போதும் பளிச் என்று இருப்பதுதான் அவரது ஸ்பெஷாலிட்டி!

  ReplyDelete
 4. பதிவைப் படிக்கவே மிக்க
  சந்தோஷமாக இருக்கிறது
  இப்படி விஸ்தாரமாக எழுதுவதற்கு என
  என் வசம் எந்தத் தகுதியும் இல்லையென்றாலு கூட
  தங்களையும் பெரியவாளின் பாதச் சுவட்டையும்
  தரிசிக்கவும் ஆசி பெறவும் ஆவலாக உள்ளேன்
  என்பதை பதிவு செய்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன்

  ReplyDelete
 5. சக மனிதர்களைக் கொண்டாடுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே தான் வை.கோ சார்!

  ReplyDelete
 6. ஆகா...! இதுவல்லவோ உண்மையான சந்தோசம்...

  வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 7. ஆஹா! நா ஊறவைக்கும் ஜாங்கிரிகளும்
  கரகரப்பான காராச்சேவும்
  மற்ற அனைத்துப்பொருட்களையுமே
  தூக்கிச் சாப்பிட்டு விடும் விதமாக ! :)//

  பார்ரா, ஜாங்கிரிக்கும், காரா சேவுக்கும் கிடைத்த வாழ்வ.

  என்ன ஒரு மனிதர் ஐயா நீங்கள். படிக்கப் படிக்க பரவசமாகுதே.

  வலைபதிவர்களுக்கு ஒரு ROLE MODEL நீங்க.

  திருமதி ராதா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  நல்ல நட்புக்கு ஒரு இலக்கணமும் நீங்களே.

  வணக்கத்துடனும்,
  வாழ்த்துக்களுடனும்,
  நன்றியுடனும்

  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 8. காசியாத்திரை செய்து கங்காஸ்னானம் செய்தவர்களைப் பார்த்தாலே மிகவும்,புண்ணியமும், விசேஷமும் என்று சொல்வார்கள். மங்கலப் பொருட்களுடன், தம்பதி ஸமேதராக
  வந்து அன்பைப் பரிமாறிக்கொண்டதில் உங்களின் ஸந்தோஷத்தையும்,அவர்களின் மகிழ்ச்சியையும் பார்க்கக் கிடைத்ததில் மிக்க ஸந்தோஷம்.
  இம்மாதிரி பதிவுகளைப் படிக்கும் போதே நம் மனத்திலும் ஒரு
  அஸாத்திய நிறைவை உண்டாக்கி விடுகிறது.
  படங்களும்,விஷயங்களும் வெகு அழகு.
  நேரில் நானும் கூட இருந்தது போல ஒரு உணர்வு.
  நல்லபதிவு. நன்றி. பூக்கள் மலர்ந்தது போல இருக்கிறது. . அன்புடன்

  ReplyDelete
 9. ராதா பாலுவை உங்கள் பதிவின் மூலமே முதல்முதலில் அறிந்தேன். இவ்வளவு திறமை உள்ளவர்கள் என்பதையும் இன்று அறிந்து கொண்டேன். அருமையான பரிசுகளுடன் வந்து உங்களுடன் தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட தம்பதிகளுக்கு வாழ்த்துகள், வணக்கம். படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன.

  ReplyDelete
 10. எங்கள் வருகையைப் பற்றி மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி சார்....

  என்னைப் போய் அன்னபூரணி...அது...இதுன்னு...போங்கோ சார்....அன்னைக்கு எங்களுக்கு டி ஃ பன் போட்டு உபசாரம் செய்த மாமியும், உங்கள் மாட்டுப் பெண்ணும்தான் அன்னபூரணிகள்!

  நான் மாமிக்கும், உங்கள் மாட்டுப் பெண்ணிற்கும் தாம்பூலத்தில் வைத்துக் கொடுத்த சாதாரண, சின்ன பொருட்களைப் பற்றி எழுதி இப்படி பாராட்டி விட்டீர்களே! எனக்கு ரொம்பவே கூச்சமாக இருக்கு.

  என்னைப் போன்ற சாதாரணமானவர்களையும், சாதனை செய்தவர்கள் போல வாழ்த்திப் பாராட்டி பொன்னாடை போர்த்தி மகிழ்விக்க உங்களால் மட்டுமே முடியும். உங்களின் நட்பு கிடைத்த நான்தான் அதிர்ஷ்டசாலி.

  என் புகைப் படங்களை அங்கங்கு இணைத்து என்னைப் பற்றி அழகாக நீங்கள் எழுதியிருப்பதற்கு நன்றி...நன்றி...நன்றி...

  இந்தப் பதிவை ஃ பேஸ் புக்கில் படித்த உறவினர்களும், நண்பர்களும் நான் ஏதோ விழாவில் கலந்து கொண்டேன்...அங்கு பொன்னாடை போர்த்தியிருக்கிறார்கள் என எண்ணி என்னை விசாரிக்கிறார்கள். உங்களால் எனக்கு பெருமை!

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 11. சார் அசத்தி விட்டீர்கள்....
  படங்களும்விளக்கங்களும் பிரமாதம். நன்றி அவரைப்பற்றி தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
 12. ராதாபாலு அவர்களின் வருகையும், பரிசுகளும், அவர்களின் வித விதமான போட்டோக்களும் என்று மகிழ்வான பதிவு.
  அவர்கள் தந்த காசியிலிருந்து வாங்கி வந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் அழகு.
  நட்புகள் தொடரட்டும்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்பின் வை.கோ

   அசத்தலான பதிவு - அனைவரின் மறுமொழிகளைப் படித்து அவைகள் போலவே மறுமொழி இட நினைத்து இப்படியே எழுதி விட்டேன்.

   திருமதி இராதா பாலு அவர்களைப் பற்றியும், அவர்களது புகைப் படங்கள் பற்றியும், அவர்கள் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், காசியில் இரூந்து வாங்கி வந்த பல பொருட்கள் பற்றியும் பதிவினில் படங்கள் பற்றி எழுதியது குறித்தும் மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

   Delete
 13. அன்பின் வை.கோ

  அசத்தலான பதிவு - அனைவரின் மறுமொழிகளைப் படித்து அவைகள் போலவே மறுமொழி இட நினைத்து இப்படியே எழுதி விட்டேன்.

  திருமதி இராதா பாலு அவர்களைப் பற்றியும், அவர்களது புகைப் படங்கள் பற்றியும், அவர்கள் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், காசியில் இரூந்து வாங்கி வந்த பல பொருட்கள் பற்றியும் பதிவினில் படங்கள் பற்றி எழுதியது குறித்தும் மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 14. அன்பின் வை.கோ

  அசத்தலான பதிவு - அனைவரின் மறுமொழிகளைப் படித்து அவைகள் போலவே மறுமொழி இட நினைத்து இப்படியே எழுதி விட்டேன்.

  திருமதி இராதா பாலு அவர்களைப் பற்றியும், அவர்களது புகைப் படங்கள் பற்றியும், அவர்கள் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், காசியில் இரூந்து வாங்கி வந்த பல பொருட்கள் பற்றியும் பதிவினில் படங்கள் பற்றி எழுதியது குறித்தும் மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 15. அன்பின் வை.கோ

  அசத்தலான பதிவு - அனைவரின் மறுமொழிகளைப் படித்து அவைகள் போலவே மறுமொழி இட நினைத்து இப்படியே எழுதி விட்டேன்.

  திருமதி இராதா பாலு அவர்களைப் பற்றியும், அவர்களது புகைப் படங்கள் பற்றியும், அவர்கள் சென்று வந்த பல்வேறு இடங்கள் பற்றியும், காசியில் இரூந்து வாங்கி வந்த பல பொருட்கள் பற்றியும் பதிவினில் படங்கள் பற்றி எழுதியது குறித்தும் மிக்க மகிழ்ச்சி - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 16. ராதா பாலு அவர்களின் படைப்புக்களை இதழ்களில் படித்து இருக்கிறேன்! வலைப்பூ அறிந்தது இல்லை! தங்களின் இல்லத்திற்கு வந்ததை பகிர்ந்து கொண்டு அவரது வலைப்பூ முகவரியும் தந்து அழகிய போட்டோக்களுடன் பகிர்ந்து கொண்டமை சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 17. ராதா பாலு தம்பதியினரின் சந்திப்பு, படங்களுடன் வெகு அழகாக உள்ளன. அவர்களுக்கு என் வணக்கங்கள்.

  பதிவு பிரமாதம்.

  ReplyDelete

 18. தங்கள் இல்லம் வந்த ராதா பாலு தம்பதியரைப் பற்றிய சிறப்பு பதிவை வாசித்தேன். பாலு சாரின் வலைப்பக்கமும் அப்படியே கொஞ்சம் எட்டிப் பார்த்தேன். பொறுமையாக ஒரு நாள் உட்கார்ந்து பார்க்க வேண்டும். (தகவலுக்கு நன்றி) எல்லா படங்களையும் போட்டோ காலரியில் தனியே போட்டு பார்த்தேன். நன்றாக உள்ளன. திருமதி ராதாபாலு அவர்கள் எழுதிய பதிவினையும் படித்தேன். இங்கிருந்து அங்கே, அங்கிருந்து இங்கே இணைப்புப் பாலம் அருமை.

  ReplyDelete
 19. வாழ்த்திய அனைவருக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்...

  ReplyDelete
 20. வை.கோ சார் நான் நேற்றே இந்த பதிவை படித்துவிட்டு கருத்துரையும் இட்டேன். அது ஏன் வெளியாகவில்லை என்று தெரியவில்லை.

  ReplyDelete
 21. மிக அழகான படங்களுடன் திருமதி ராதாபாலு அவர்களின் எழுத்தைப்பற்றிய சிறப்பான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 22. ஆஹா,
  உலகம் சுற்றிய தம்பதிகள்.
  அவர்களை அறிமுகப்படுத்திய விதம்............
  அவர்களின் அருமையான பரிசுகள்.
  அதை நீங்கள் கொண்டாடிய விதம்........
  அருமை.
  அவர்களின் வலைபதிவுக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி.
  நானும் சென்று பார்கிறேன்.
  விஜி

  ReplyDelete
 23. வாசிக்க வாசிக்க வாத்சல்யமான நட்பு விழிகளை விரிவடையச் செய்கிறது. என்ன அழகாக இச்சந்திப்பினைப் பற்றி எழுதி எல்லோரையும் மகிழ்வித்திருக்கிறீர்கள். தங்களிருவரின் நட்பு என்றென்றும் தொடர இனியவாழ்த்துகள்.

  ReplyDelete
 24. அருமையான சந்திப்பாக இருந்திருக்கும் என்பது தெரிகிறது.... வாழ்த்துகள்.

  ReplyDelete
 25. கண்டும் களித்தும் உறவாடித் தம்முள் கலப்பர் கற்றோரே எனும் வரிகள் ஞாபகம் வந்தது! வழக்கம்போல் பதிவு தனி முத்திரையுடன்! நன்றி ஐயா!

  ReplyDelete
 26. திருமதி ராதா பாலு அவர்கட்கு வாழ்த்துகள்.
  அருமையான சந்திப்பு காண கிடைத்தது. நன்றி.

  ReplyDelete
 27. திருமதி ராதா பாலு அவர்களின் சாதனைகள் மலைப்பூட்டுகின்றன.

  ReplyDelete
 28. பரிசு பொருட்களின் அழகு கண்ணை ப்பறிக்கிறது. வாழ்த்துகள்.

  ReplyDelete

 29. அருமையான படங்கள்...காசியில் வாங்கிய புனிதப்பொருட்கள், மங்களப்பொருட்கள் அனைத்தும் மனம் கவர்ந்தன...

  ReplyDelete
  Replies
  1. இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:03 AM

   வாங்கோ, வணக்கம்.

   //அருமையான படங்கள்... காசியில் வாங்கிய புனிதப்பொருட்கள், மங்களப்பொருட்கள் அனைத்தும் மனம் கவர்ந்தன...//

   தங்களின் வருகையும் அருமை. காசியில் வாங்கிய புனிதப்பொருட்கள், மங்களப்பொருட்கள் அனைத்தும் போலவே, இந்தப்பதிவுக்குத் தங்களின் அன்பான வருகையும் அழகான கருத்துக்களும் எனக்கு மனம் கவர்ந்தன.

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

   Delete
 30. ஒங்க வூட்டுக்கு வந்தவங்க பத்தி அவங்க தந்த பரிசு பொருட்கள் பத்திலாம் போட்டோ புடிச்சு போட்டீக படிச்சுகிடவே நல்லா இருக்குது. எங்கட ஆளுகளுக்கு ஹஜ் போல ஒங்கட ஆளுகளுக்கு காசியோ?

  ReplyDelete
 31. பரிசுப்பொருட்களின் படங்கள் பகிர்வு நல்லா இருக்கு

  ReplyDelete
 32. நன்றி சொல்லாமல் எதையும் விட்டு வக்கிறதே இல்லை!! ஆல்வேஸ் ய ஓபன் புக். மகிழ்ந்தேன். காசி ஒரு உன்னத அனுபவம்தான்.

  ReplyDelete