அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.
இதுவரை நம் பதிவர்களில் சிலரை மட்டும் நான் திருச்சியில் உள்ள எங்களின் ’பவித்ராலயா’ என்ற இல்லத்திலோ அல்லது திருச்சியில் உள்ள மற்ற யாராவது ஒரு பதிவரின் இல்லத்திலோ அல்லது எங்கள் ஊராம் திருச்சியில் ஏதாவது ஒரு பொது இடத்தில் நடைபெற்ற விழா நிகழ்ச்சிகளிலோ, வெளியூரிலிருந்து வருகைதரும் சில பதிவர்கள் தங்கிடும் ஹோட்டலிலோ சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன.
அந்த இனிய நினைவலைகளை மீண்டும் ஒருமுறை மனதில் அசைபோட்டு, எண்ணிப்பார்த்து, ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து இங்கு ஒரே இடத்தில் சிறிய தொடராகப் பதிவுசெய்து வரலாற்று ஆவணம் போல ஆக்கி வைத்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த இனிய சந்திப்பு நிகழ்ச்சிகள், தொடர்ச்சியாக அடுத்தடுத்து, சிறிய இடைவெளிகளில் ஆறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.
இந்த இனிய சந்திப்பு நிகழ்ச்சிகள், தொடர்ச்சியாக அடுத்தடுத்து, சிறிய இடைவெளிகளில் ஆறு பகுதிகளாக வெளியிடப்பட உள்ளன.
என் இனிய நெருங்கிய நண்பர்களும், திருச்சி பதிவர்களுமான திரு. ரிஷபன் அவர்கள், ஆரண்ய நிவாஸ் திரு. ராமமூர்த்தி அவர்கள், திருச்சி திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள், திருச்சி கவிதாயினி திருமதி. தனலக்ஷ்மி பாஸ்கரன் அவர்கள் ஆகிய சிலரை மட்டும் [நான் பதிவுலகுக்கு வருவதற்கு முன்பேகூட] பலமுறை சந்தித்துப் பழக நேர்ந்துள்ளது.
இருப்பினும் மற்ற பதிவர்களை புதிதாக முதன் முறையாக நான் சந்தித்த நாட்களில், கூடவே என்னுடன் இருந்த இவர்களில் சிலரையும், நான் அன்றும் சந்தித்ததாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளேன்.
இருப்பினும் மற்ற பதிவர்களை புதிதாக முதன் முறையாக நான் சந்தித்த நாட்களில், கூடவே என்னுடன் இருந்த இவர்களில் சிலரையும், நான் அன்றும் சந்தித்ததாக ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளேன்.
20.02.2011
திருச்சி அன்னதான சமாஜம்
திருமண மண்டபம், திருச்சி-2
[முத்துச்சிதறல்]
பன்முகத்திறமைகள் வாய்ந்த
திருமதி.
மனோ சாமிநாதன்
அவர்கள்
அன்புடன் வருகை தந்தார்கள்.
அவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நான் நேரில் சந்தித்த முதல்
வெளியூர் மற்றும் வெளிநாட்டுப்பதிவர் இவரே.
நான் பதிவுலகத்திற்குள் நுழைய
மிகவும் தூண்டுகோலாக இருந்தவரும் இவரே.
என் முதல் பதிவுக்கு முதல் பின்னூட்டம்
கொடுத்து உற்சாகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.
என் மூன்றாவது மருமகளுக்கு
வளைகாப்பு + சீமந்தம் விழா
நடைபெற்ற 20.02.2011 அன்று
எங்களின் இனிய சந்திப்பு
என் வீட்டின் மிக அருகேயுள்ள
திருமண மண்டபத்தில் நிகழ்ந்தது.
இதைத்தொடர்ந்து
24.04.2011 அன்று எங்கள் பேரன்
‘அநிருத்’ பிறந்தான்.
09.03.2014 அன்று ’அநிருத்’துக்கு
தம்பியாக ’ஆதர்ஷ்’ பிறந்தாச்சு !
முதல் பதிவர் சந்திப்பினால்
கைமேல் பலனாக
அடுத்தடுத்து இரு பேரன்கள்
அநிருத் 2011 MODEL +
ஆதர்ஷ் 2014 MODEL :)
என நினைத்து மகிழ்கிறேன்.
{ அநிருத் + ஆதர்ஷ் .... இருவரும் இப்போது }
-oOo-
திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுடனான
அன்றைய பதிவர் சந்திப்பில்
என்னுடன் கலந்து கொண்டவர்கள்:
15.05.2011
http://gopu1949.blogspot.in/
சென்னை எழும்பூர் அருகேயுள்ள
கன்னிமாரா பொது நூலகத்தில்
‘நம் உரத்த சிந்தனை’
தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழால்
என் நூலுக்கு முதல் பரிசு
அளிக்கப்பட்டதோர் நிகழ்ச்சியின்
விழா மேடையில்,
வாழ்த்துரை வழங்கியவர்களுள் ஒருவரான
மூத்த எழுத்தாளர் மற்றும் பதிவர்
திருமதி. ருக்மணி சேஷசாயி அவர்கள்
வலதுபக்கம் கடைசியிலிருந்து இரண்டாவதாக நிற்பவர்
திருமதி. ருக்மணி சேஷசாயீ அவர்கள்.
15.05.2011 அன்று இவர்களுடன் எனக்கு
அதிகமாகப் பழக்கம் ஏதும் இல்லாததாலும்,
இவர் ஒரு பதிவர் என்றே எனக்குத் தெரியாமல் இருந்ததாலும்,
ஒரே மேடையில் இருவரும் நேரில் சந்தித்திருந்தும்கூட,
இவர்களிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டு
மனம் விட்டுப் பேசமுடியாமல் போய்விட்டது.
திருமதி. ருக்மணி சேஷசாயீ அவர்கள், எனது வலைத்தளத்தினில் சமீபத்தில் நடைபெற்ற ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ ஒன்றில் [VGK-16] கலந்துகொண்டுள்ளார்கள்.
அதில் கலந்துகொண்ட அவர்களின் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http:// gopu1949.blogspot.in/2014/05/ vgk-16-equal-prize-winners- list-1-of-3.html
’சிறுகதை விமர்சனப் போட்டிகள்’ பற்றிய ஒட்டுமொத்தமான
பல்வேறு அலசல்களுக்கும் புள்ளிவிபரங்களுக்கும்
12.12.2011
பவித்ராலயா
http://venkatnagaraj.blogspot.com/
திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள்
அன்புடன் வருகை தந்தார்.
அன்புடன் வருகை தந்தார்.
இவரை என் இல்லத்திற்கு அழைத்து வந்து
அன்றைய சந்திப்பில் என்னுடன் கலந்து கொண்டவர்கள்:
திரு. ரிஷபன் அவர்கள் +
12.05.2012
பவித்ராலயா
’கோவை2தில்லி’ பதிவர்
திருமதி. ஆதி வெங்கட் அவர்கள்
அன்புடன் வருகை தந்தார்கள்.
அன்புடன் வருகை தந்தார்கள்.
பதிவர் தம்பதியினரின் வருகை
மிகவும் மகிழ்ச்சியளித்தது.
நான் பதிவு எழுதத் துவங்கிய காலத்திலிருந்து இன்றுவரை,
இவர்கள் இருவருமே என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து
உற்சாகப்படுத்தியுள்ளவர்கள் என்பதை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
மிகவும் மகிழ்ச்சியளித்தது.
நான் பதிவு எழுதத் துவங்கிய காலத்திலிருந்து இன்றுவரை,
இவர்கள் இருவருமே என் பதிவுகளுக்கு அவ்வப்போது வருகை தந்து கருத்தளித்து
உற்சாகப்படுத்தியுள்ளவர்கள் என்பதை நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
இந்தப் பதிவின்
தலைப்புத் தேர்வுக்கு
உதவிய திரைப்படப்பாடல்
முத்துக்களோ கண்கள் ....
தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் ....
சிந்திக்கவே இல்லை ....
தந்துவிட்டேன் என்னை ....
படித்த பாடம் என்ன .... உன் கண்கள் .... பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை .... சூடத் துடிப்பதென்ன?
முத்துக்களே பெண்கள் .... தித்திப்பதே கன்னம் ....
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்து விட்டேன் என்னை
கன்னிப் பெண்ணை .... மெல்ல மெல்ல .... தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் .... ஓடி வந்து .... காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன .... என் எண்ணம் .... ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன .... அதையும் விரைந்து கேட்பதென்ன?
முத்துக்களோ கண்கள் .... தித்திப்பதோ கன்னம்? ....
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்துவிட்டேன் என்னை
ஆசை கொஞ்சம் .... நாணம் கொஞ்சம் .... பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து .... மடியில் விழுந்து .... ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன .... உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு .... பூஜை செய்வதென்ன?
முத்துக்களே பெண்கள் .... தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்து விட்டேன் என்னை
திரைப்படம்:
நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்:
டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்:
கவிஞர் கண்ணதாசன்
இசை:
எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு:
1967
தலைப்புத் தேர்வுக்கு
உதவிய திரைப்படப்பாடல்
முத்துக்களோ கண்கள் ....
தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் ....
சிந்திக்கவே இல்லை ....
தந்துவிட்டேன் என்னை ....
படித்த பாடம் என்ன .... உன் கண்கள் .... பார்க்கும் பார்வை என்ன?
பாலில் ஊறிய ஜாதிப் பூவை .... சூடத் துடிப்பதென்ன?
முத்துக்களே பெண்கள் .... தித்திப்பதே கன்னம் ....
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்து விட்டேன் என்னை
கன்னிப் பெண்ணை .... மெல்ல மெல்ல .... தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் .... ஓடி வந்து .... காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன .... என் எண்ணம் .... ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன .... அதையும் விரைந்து கேட்பதென்ன?
முத்துக்களோ கண்கள் .... தித்திப்பதோ கன்னம்? ....
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்துவிட்டேன் என்னை
ஆசை கொஞ்சம் .... நாணம் கொஞ்சம் .... பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து .... மடியில் விழுந்து .... ஆடக் கேட்பதென்ன?
மலர்ந்த காதல் என்ன .... உன் கைகள் மாலையாவதென்ன?
வாழை தோரண மேளத்தோடு .... பூஜை செய்வதென்ன?
முத்துக்களே பெண்கள் .... தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் .... சிந்திக்கவே இல்லை .... தந்து விட்டேன் என்னை
திரைப்படம்:
நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்:
டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
இயற்றியவர்:
கவிஞர் கண்ணதாசன்
இசை:
எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு:
1967
தொடரும்
இதன் தொடர்ச்சி பகுதி-2
10.02.2015 செவ்வாய்க்கிழமை
வெளியிடப்படும்
இதை எல்லாம் பார்க்கும் போது உங்களை சந்திக்கும் ஆவல் பெருகுகிறது..
பதிலளிநீக்குஅனைத்துப் புகைப்படங்களையும் தொகுத்து வழங்கியிருப்பதில் உங்களின் கைவண்ணம் மிளிர்கிறது.. உங்களின் உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொள்ளும் என்பதில் இம்மியும் சந்தேகம் இல்லை..
பதிலளிநீக்குகலக்குறீங்க சார்!.
பதிலளிநீக்குதொகுப்பாக ஒரே இடத்தில் இவற்றைச் சேர்த்து வைத்துக் கொள்வது நல்ல உத்திதான்.
பதிலளிநீக்குவெங்கட் நாகராஜ் வீட்டு இளைய பதிவர் ரோஷ்னி அன்று வருகை தரவில்லையா?
இனிமையான தொடர் ஐயா...
பதிலளிநீக்குஇந்தத் தொகுப்பைக் கண்டு வாசித்த போது, இதில் வலை உலகில் நேரில் காணாமல் பதிவுகள் , பின்னூட்டம் மூலம் ,திரு வெங்கட் ஜி யும், சகோதரி மனோசுவாமிநாதனும் தவிர மற்றோர் புதியவர்களே. சந்திப்பைக் காணும் போது மனம் மகிழ்கின்றது. தங்களை நாங்கள் இதுவரை சந்தித்ததில்லை. சந்திக்க வேண்டும் என்ற ஆவலும் உள்ளது. காத்திருக்கின்றோம்.
பதிலளிநீக்குபுகைப்படங்கள் மிகவும் அருமை! பேரன்கள் ரொம்ப அழகாக இருக்கின்றார்கள். தாத்தாவைப் போன்றே மிளிர வாழ்த்துக்கள்!!
இவற்றை எல்லாம் அழகு நினைவுப் பெட்டகமாக பொக்கிஷமாகப் பாதுகாத்து னினைவு கூர்ந்து மகிழ்வது சூப்பர் !! உங்கள் நல்ல மனது பளிச்....எங்களுக்கும் இந்த உற்சாகம் பற்றிக் கொள்வதில் ஐயமில்லை.
மிக்க நன்றி சார்!
திரு லக்ஷ்மிநாராயணன் அவர்களைத் தவிர மற்றவர்கள் தெரிந்தவர்களே. உங்கள் ஆர்வம் பிரமிப்பூட்டுகிறது.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவரலாற்று ஆவணம் போல ஆக்கி வைத்துக்கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.//
பதிலளிநீக்குஆஹா! மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள்.
படங்கள் எல்லாம் அருமை.
குழந்தைகள் மகிழ்ச்சியாக தாளம் தட்டி விளையாடும் படம் சூப்பர்.
உங்கள் சாதனை படங்கள் (பரிசுபெறும்) அருமை.
வாழ்த்துக்கள்.
வெரி க்ரியேட்டிவ் ......... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஉங்களைச் சந்தித்ததில் இருந்த மகிழ்ச்சி இப்போதும்.....
பதிலளிநீக்குமற்ற சந்திப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆவலுடன்......
அதென்ன மூடித் திறக்கும் கதவுகள்?.. திறந்து உள்ளே அனுப்பி உடனே தானே மூடிக்கொள்ளுமோ?..
பதிலளிநீக்குஓடி விளையாடும் குழந்தையாய் அநிருத்--- அச்சு அசலாய் தாத்தா ஜாடை தான்!
எப்போதும் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி சார்... இப்படியொரு பெட்டகமாக சேமித்து வைப்பது முதல் ஒவ்வொரு விஷயமுமே தங்களின் ஈடுபாடும், மெனக்கெடலும் என அனைத்தும் ஆச்சரியம் தான். பாராட்டுகள் சார்.
பதிலளிநீக்குஅநிருத், ஆதர்ஷின் படங்கள் அழகாக உள்ளன.
மனோம்மாவுடன் ஒருமுறை அலைபேசியில் பேசியிருக்கிறேன். எல்.லென் சாரை பார்த்ததில்லை...
ஸ்ரீராம் சார் - ரோஷ்ணி அன்று அவள் அத்தைகளுடன் எங்கோ வெளியில் சென்றுவிட்டாள்....:)
பாக்கியவான்கள் சந்தித்தவர்கள்
பதிலளிநீக்குஉங்களையல்லாது எத்தனைப்பேர்
சந்திப்பினை இத்தனைப் பொக்கிஷமாகப்
பாதுகாத்து தங்கத் தட்டில் வைத்து
சபையில் சமர்பித்துக் கௌரவம் செய்வார்கள்
அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு
உடல் நலத்தோடும் குன்றாத வளத்தோடும்
தொடர்ந்து வாழ நல்வாழ்த்துக்கள்
குறும்படம் போல ,சார் அடுத்து பதிவர் சாந்திப்புகளை தொகுத்து வழங்க தொடங்கிவிட்டார் ....மலரும் நினைவுகளாய் பார்க்க படிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது ....( ஒரே நாயகன் சார் தாம்பா !!!....)
பதிலளிநீக்குanimating door padam super sir
முகம் தெரியா சக பதிவர்களைச் சந்திக்கும் போது ஒரு அன்னியோன்யம் வருகிறது. எல்லாம் ஆவணமாக நீங்கள் வைத்திருப்பது shows you are different. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅருமையான பதிவு. இப்பதிவை படித்தவுடன் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாகிற்று.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் மிக அருமை. தங்களின் பேரக் குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.
பதிவிலுள்ள எல்லா படங்களையும் பார்த்தவுடன் “எல்லாம் ... .. இன்ப மயம்” என்று பாடத் தோன்றியது. எனது திருமணம் திருச்சி அன்னதான சமாஜம் – திருமண மண்டபத்தில்தான் நடந்தது. இங்கு நீங்கள் குறிப்பிடும் எல்லா இணைப்புகளிலும் சென்று வந்தேன். மனதிற்குள் ஒரு உற்சாகம். பல பதிவர்களின் முகங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமனம் கனிந்த நன்றிகள் சார்....
பதிலளிநீக்குஇன்னமும் ஞாபகம் இருக்கிறது....
லெக்ஷ்மி நாராயணன் அன்று தான் பெங்களூரிலிருந்து வந்தான்...
"எனக்கு யாரையும் தெரியாதே" என்று கொஞ்சம் தயங்கினார் போல பேசிய குரல் தான் வீட்டிற்கு வந்து சொன்னது..
"ஆஹா....இவர்களா முன்னே, பின்னே தெரியாதவர்கள்?
பழகினதில் தான் என்ன ஒரு அன்யோன்யம்!!"
உங்களுடன் சற்று நேரம் பேசினாலும் பல நாள் பழகியதைப் போன்ற எண்ணம் ஏற்படுவதை உணர்ந்தவள் நான்!
பதிலளிநீக்குதிறந்து மூடும் கதவைப் போல், ஒவ்வொரு பதிவர் நினைவுகளையும் தங்கள் மனதில் உள்ளனுப்பி மூடி பத்திரமாக வைத்திருக்கிறீர்கள்....சரியா?!
மறக்காத நினைவுகளின் அருமையான பதிவு...
உங்கள் வீட்டு விசே ஷங்களில் கலந்து கொண்ட சந்தோஷத்தை அளித்தன சீமந்த, தொட்டில் விழா புகைப்படங்கள்...முதல் ஆண்டுநிறைவு காணப் போகும் ஆதர்ஷிற்கு மனம் நிறைந்த ஆசீர்வாதங்கள்!
பதிலளிநீக்குஇப்போது தான் உங்கள் பதிவைப் பார்க்க நேர்ந்தது.
பதிலளிநீக்குஉங்களையும் உங்கள் இல்லத்தரசியாரையும் முதன் முதலாக சந்தித்தது நீங்கள் அழைத்திருந்த உங்கள் இல்லத்து மங்கலகரமான நிகழ்விற்கு என்பது எப்போதும் என் மனதில் மகிழ்ச்சி தரும் விஷயம்! கூடவே போனஸாக திரு. ராமமூர்த்தி, திரு.லக்ஷ்மி நாராயணன் அவர்களை சந்தித்து அளவளாவியது என்றுமே மறக்க இயலாதது. உங்களிடம் மட்டும் தான் அன்று சரியாக பேச முடியவில்லை.
இதையும் ஒரு தொகுப்பாக வெளியிட்டிருப்பது உங்கள் சுறுசுறுப்பை பறைசாற்றுகிறது! இத்தனை எழுதியதற்கும் பின்னால் என் தூண்டுகோல் பற்றியும் என் முதல் பின்னூட்டம் பற்றியும் எழுதி என்னை கெளரவித்திருப்பதற்கு மனமார்ந்த நன்றி!
சந்தோஷமான தருணங்கள் ..
பதிலளிநீக்குமுதல் முறையாக ரோஷினியின் அம்மாவை பார்க்கிறேன் ..
துறுதுறுக்கும் குட்டிச்செல்லங்கள்... ஒரு பதிவுக்குள் எவ்வளவு சுவாரசியங்களை அடக்கிவிட்டீர்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள் கோபு சார்.
பதிலளிநீக்குமகிழ்வான தருணங்களையும், இன்பமான சந்திப்புகளையும் இது போல் தொகுப்பாக வெளியிட்டு மீண்டும் மீண்டும் வாசித்து அந்தக் கணங்களுக்குச் சென்று மீள்வது அனைவருக்குமே மகிழ்ச்சி தரும் செயல் தான். குழந்தைகள் படங்கள் உட்பட அத்தனை படங்களையும் வெளியிட்டு அருமையான தலைப்பையும் கொடுத்து அசத்திவிட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி. நாங்களும் உங்கள் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறோம்!
பதிலளிநீக்குநல்ல பகிர்வு ஐயா...
பதிலளிநீக்குபடங்களும் அழகு...
தொடருங்கள்.
அழகா இருக்கிறார் ஆதி வெங்கட்
பதிலளிநீக்குமனோ அவர்கள் எழுத்து அற்புதம்
நீங்க ஒவ்வொருத்தரையும் உங்க மனசுக்குள்ள வைச்சிருக்கீங்கங்கிறது “மெல்லத் திறந்தது கதவு “ மூலமா தெரியுது.
லெக்ஷ்மி நாராயணன் தவிர மிச்ச பதிவர்கள் ஓரளவு பரிச்சயம் வலை மூலம்
திருச்சியில் இத்தனை பதிவர்களா. கட்டாயம் வந்துடுறேன். மாமி கையால் ஒரு ஃபில்டர் காஃபி சாப்பிடவாச்சும்
மருமகளுக்கும் மாமிக்கும் பேரப் புள்ளைகளுக்கும் சுத்திப் போடுங்க. :) அழகு அம்சம் :)
திருமதி மனோவை சந்தித்ததைப் படித்துக் கொண்டே வரும்போது உங்கள் மாட்டுப்பெண், அவரது சீமந்தம், தொடர்ந்து பேரன்கள் எல்லோரையும் பார்க்க முடிந்தது. சந்தோஷமாக இருக்கிறது, ஸார் நீங்கள் எல்லாவற்றையும் பத்திரமாகப் போற்றிக் காப்பாற்றி வருவதைப் பார்க்கும் போது.
பதிலளிநீக்குநீங்கள் ஸந்தித்ததைக் கூறிக்கொண்டே வரும்போது நாமும் ஸந்தித்ததாகப் பாவனை மனதில் வருகிறது. அதுவும் ஸந்தோஷமாகத்தான் இருக்கிரது. வளைகாப்பு,சீமந்தம்,ஆயுக்ஷோமம்,குட்டிகளின் சுட்டித்தனம்
பதிலளிநீக்குஎல்லாம் பார்க்கும்போது, நம்முடைய ஞாபகங்களும் கடந்தகாலங்களை நோக்கிச் சென்று வட்டமிட்டுத் திரும்புகிறது.
உங்கள் பொக்கிஷங்களுள் இந்த பொக்கிஷங்களும் சேர்ந்து
மதிப்பை அதிகப்படுத்திக்கொண்டு போகிறது.
அன்புடன்
உங்கள் உழைப்பைக் கண்டு பொறாமைப் படுகிறேன்.
பதிலளிநீக்குஅடடா!
பதிலளிநீக்குஇன்னும் கொஞ்சம் முன்பே வலை உலகிற்குள் பிரவேசித்திருக்கலாம் நான். நிறைய மிஸ் செய்து விட்டேன்.
இந்த இழையில் உங்களால் குறிப்பிடப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
உங்கள் பதிவுகள் அனைத்துமே பொக்கிஷங்கள்.
என்னைப் போன்ற கத்துக்குட்டிப் பதிவர்களுக்கு உங்கள் பதிவுகள் வைரப் பொக்கிஷம்.
நன்றியுடனும்,
வணக்கத்துடனும்,
வாழ்த்துக்களுடனும்
ஜெயந்தி ரமணி
நான் பிளாக்கை ஆரம்பித்து விட்டு எப்படி எழுதுவது என்ன செய்வது என்று திக்கு தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிந்தேன்! அப்போதுதான் அன்புச்சகோதரி தேனம்மை லட்சுமண் அவர்களின் வலைப்பதிவுகளை படித்தேன் !அதன் மூலம் திருநெல்வேலியில் உள்ள ஐயா வடிவேல் முருகன் அவர்களைப்பற்றி தெரிந்து தொலைபேசியில் அவர்களைச் சந்தித்து பேச நேரம் கேட்டேன்! அவர்களோ என் வீட்டிற்கு நேரில் வருகை தந்து கற்றுத்தந்தார்கள்!என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சி! அதன் பின் தங்களையும் ஐயா திண்டுக்கல் தனபால் அவரகளையும் ஐயா பழனி கந்தசாமி அவர்களையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்! தங்களை எல்லாம் பார்த்து வியந்து பார்க்கிறேன்!தங்களுக்கு கை வந்த கலை எனக்கு மட்டும் பராமுகமாக இருக்கிறது! நான் அதனை விடுவதாக இல்லை!அதுவும் என்னை விடுவதாக இல்லை! டக்கப் வார் நடக்கிறது! தங்களுக்கு வணக்கங்கள்!!
பதிலளிநீக்குபதிவர் சந்திப்புகள் பரவசமூட்டுகின்றன.
பதிலளிநீக்குமகிழ்ச்சி ததும்பும் பதிவர் சந்திப்புகள்..உலகத்திலேயே பெரிய விஷயம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷ படுவதுதான் அந்த கலை அங்களுக்கு நன்றாகவே தெரிஞ்சிருக்கு.
பதிலளிநீக்குமனம் நிறைந்த மங்கல விழாக்களின் அணிவகுப்புகள்...
பதிலளிநீக்குஅருமையான மலரும் நினைவுகள்....
இராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:09 AM
நீக்குவாங்கோ, வாங்கோ, வணக்கம்.
//மனம் நிறைந்த மங்கல விழாக்களின் அணிவகுப்புகள்...//
மங்கல விழாக்களின் அணிவகுப்புக்கு இரு தாமரை மலர்களால் தாங்கள் இன்று அர்சித்து மகிழ்வித்துள்ளதில்தான் என் மனம் நிறைந்துள்ளது.
//அருமையான மலரும் நினைவுகள்....//
பெருமை சேர்த்துள்ளதற்கு மிக்க நன்றீங்கோ ! :)
தித்திக்கும் தேனாக அருமையான பதிவர்களின் சந்திப்பு -மகிழ்ச்சியைப்பகிர்கிறது...
பதிலளிநீக்குஇராஜராஜேஸ்வரி October 18, 2015 at 11:22 AM
நீக்கு//தித்திக்கும் தேனாக அருமையான பதிவர்களின் சந்திப்பு -மகிழ்ச்சியைப்பகிர்கிறது...//
தித்திக்கும் தேனாக தங்களின் அன்பான இருமுறை வருகைகளுக்கும் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.
.
:)))))))))))))))
பதிலளிநீக்குமொதகா வார மூடி தொறக்குர கதவு நா உள்ளார வாரதுக்குள்ளாரவே மூடிகிச்சே. விட்டு போடுவனா தள்ளிகிட்டு வந்துபிட்டேன்லா. அல்லா பதிவர்களும் ஒங்கூட்டுக்கு வந்திருக்காக.. நீங்க ஆராவது பதிவரு வூட்டுக்கு போயினிங்களா. போட்டோ படம்லா நல்லா இருக்குது.
பதிலளிநீக்குபடங்கள் பதிவர் சந்திப்பு வர்ணனைகள் எல்லாமே சூப்பர்.
பதிலளிநீக்குபதிவர் சந்தித்த பதிவு...அருமையான துவக்கம். தொடருங்கள். பேரப்பிள்ளைகளுக்கும் வாழ்த்துகள்..
பதிலளிநீக்குகுட்டிச் சுட்டிகளுக்கு எங்கள் வாழ்த்துகள்!பதிவர் சந்திப்புப் பற்றிய பதிவு அருமை!
பதிலளிநீக்குArumai
பதிலளிநீக்கு