என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 28 ஜூன், 2014

VGK 22 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’வடிகால்’




’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு 



VGK 22 - ’ வ டி கா ல் 




 

 





மேற்படி 'சிறுகதை விமர்சனப்போட்டி'க்கு,

மிக அதிக எண்ணிக்கையில் பலரும், 

மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு, 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 



அவர்கள் அனைவருக்கும் என் 

மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள். 




நடுவர் அவர்களால் பரிசுக்குத் 

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 

விமர்சனங்கள் மொத்தம்:  




ஐந்து



 













இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் 


நம் பாராட்டுக்கள் + மனம் நிறைந்த 


இனிய  நல்வாழ்த்துகள். 






  


மற்றவர்களுக்கு: 







     



முத்தான மூன்றாம் 


பரிசினை வென்றுள்ளவர் 



திருமதி


 உஷா ஸ்ரீகுமார்  


அவர்கள்



usha-srikumar.blogspot.in

'உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்’



 

முத்தான மூன்றாம் பரிசினை வென்றுள்ள




திருமதி


 உஷா ஸ்ரீகுமார்  


அவர்களின் விமர்சனம் இதோ:




இராக்கோழியாக நீண்ட நேரம் விழித்துக்கொண்டு படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருக்கும் நம் கதாசிரியக்கதை நாயகரைக் காண அகாலத்தில் வரும் ஒரு விருந்தினர் பற்றிய கதை.

வாழ்க்கையின் கடைசி படிகளில் நின்று கொண்டிருக்கும் அந்த முதியவர் போன்ற ஒருவரை நாம் எங்காவது கட்டாயம் சந்தித்திருப்போம்...."அறுவை", "ரம்பம்", "கடி" என்று  அவருக்கு மனதுக்குள் நாமகரணம் செய்து கரித்துக்கொட்டியிருப்போம்!

இந்தக்கதாபாத்திரம்  மூலம் ஆசிரியர், நம் சமுதாயத்தில் வாழும் பல சாரார்களைக்  கண் முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்...

முதியோர்  தேவைகள் பல பல...

சிலருக்கு அவசியம் நல்ல கூரை...

சிலரின் தேவை வைத்தியம்...

சிலர் ஏங்குவது வாய்க்கு ருசியான சோற்றுக்கு ...

ஆனால் பலரும் ஏங்குவது தாங்கள்  வாய் விட்டுப்பேசுவதை  காது கொடுத்துக் கேட்க ஒரு நபரைத்தான்...

நம் கதை நாயகனோ நம்மில் பலரின் பிரதிபிம்பம்...

தான் யார்... என்ன சாப்பிட்டோம்... என்ன பேசினோம்... என்றே நினைவு வைத்துக்கொள்ள முடியாத அளவுக்கு அவசரவாழ்க்கை வாழ்பவர்...

அக்கம் பக்கத்தினர் அவருக்கு பெயரில்லாத வெறும் முகங்கள்...

ன் அவசர வாழ்கையில் மனைவி குழந்தைகள் பெயர்களை நினைவில் வைத்துக்கொள்ளவே கஷ்டப்படும் ஒரு பிஸியான ஜீவன்...

இந்த எழுத்தாளர்,  இரவு பதினோரு  மணிக்கு கதவைத்தட்டி உள்ளே வந்து,  அவர் பொறுமையை சோதித்து பொழுதை அபகரித்தாலும்,  அதை அவர் பொறுமையாக சகித்துக்கொண்டு அவர் க்ஷேம தாபங்களைக் கேட்டுக்கொண்டு இருப்பதற்கு காரணம், அந்தப் பெரியவர் இவர் எழுதிய இரண்டு புத்தகங்களைப் பார்த்துவிட்டு இவரைப் பார்க்க வந்தவர் என்பது தான்...(எழுத்தாளருக்கே உரிய குணம்!)

அந்தப்புத்தகத்தின் முன் / பின் அட்டைகளை மட்டுமே படித்தவர் என்று தெரியும் பொழுது எழுத்தாளருக்கு வரும் ஊமைக்கோபம்  ரசிக்கத்தக்கதாக இருக்கிறது...

பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்ந்து, பெற்றதில் சிலவற்றையும், மனைவியையும் பறிகொடுத்து விட்டு, மீதமுள்ள குழந்தைகளிடம் (வீட்டுக்கு சில நாட்கள்) கழிக்கும் இந்த முதியவருக்குத்  தேவை... மனதில் உள்ளதெல்லாம் பேசித்தீர்க்க ஒருவர்... அந்த வடிகாலுக்காக அவர் பழக்கம் இல்லாதவரையும் பேசப்பிடித்துக்கொள்வது  அந்த வயசுக்கே உள்ள நிதர்சன குணம்...

வாழ்க்கையில் புதிய குறிக்கோள் இல்லை, தானே நின்று நடத்த வேண்டிய கடமைகள் இல்லை, சுமந்த பாரங்களை இறக்கிவைத்தாயிற்று... வண்டிக்காக காத்துக்கொண்டிருக்கும் மீதி நாட்களில் அவருக்கு (ஆரோக்கியமாக இருக்கும் வரை) தேவை "அசை போடுதல்" வாயாரப்பேசுதல்... அதை இவரை உதாசீனப்படுத்தாமல்  கேட்க ஒரு ஆத்மா...

அது அந்த குடியிருப்புக்காவலாளியாக இருந்தால் என்ன, அங்கே குடியிருக்கும் எழுத்தாளராக இருந்தால் என்ன... காவலாளி  இவர் பேச்சை கேட்கும் சகா... கேட்பதற்கு டிப்ஸ்சாக அவர்களுக்கு டீயும், காசும் தந்து ஒரு வடிகால் தேடிக்கொள்ளுகிறார்....

இவரைப்போன்ற பல முதியவர்களை - தூக்கம் மறந்த மனிதர்களை - நாம் அனுதினமும் பார்க்கிறோம்...

இவர்களுக்குத்தேவை  நம் கதை நாயகர் நினைப்பது போல ஒத்த வயதானவைகளுடன் வாழ ஒரு முதியவர் இல்லமா?

இல்லை, தங்கள் பலபல அன்றாட அலுவல்களுடன் அவருடன் அரட்டை அடிப்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கக்கற்றுக்கொள்ளும் குடும்பமா?

வீட்டில் ஒரு சின்னக்குழந்தை இருந்தால், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நாம் அத்துடன் அவ்வப்போது அதன் வயதுக்கு இறங்கிவந்து விளையாட நேரம் ஒதுக்குகிறோமே...

இதையெல்லாம் தன் குழந்தைகளுக்கு இவரும் செய்து இருப்பாரே.... இரண்டாவது குழந்தைப்பருவத்தில் இருக்கும் இவரோடு பேச / பேசுவதை கேட்க கொஞ்சம் நேரம் ஒதுக்கினால் என்ன... இவர் என்ன இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்து விடப்போகிறார்?

அந்தக்காலத்தில், இவர்களுக்காகத்தான் கிராமங்களில் வாசலில் திண்ணை கட்டினார்களோ?

இளையவர்கள் அவரவர் வேலையே பார்த்துக்கொண்டிருந்தாலும், திண்ணையில் அமர்ந்த படி, அடுத்த வீட்டுப் பெரிசுடன் பழைய கதைகள் பேசியபடி ஆனந்தமாக இருந்தார்களே....

பல வீட்டு  "பெருசுகளின்" மனநிலையையும், இளையவர்களின் யதார்த்தப் பிரச்சனைகளையும், எளியவர்களின் (காவலாளி) நிதர்சன நிலையையும் கண் முன் சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.


//இதைப்பற்றி, இவர் இரவெல்லாம் தூங்குவது இல்லை என்பது பற்றி நீ அவர்கள் வீட்டில் சொல்லக்கூடாதோ” என்றேன்.

“சாமீ, நீங்க அதுபோல ஏதாவது செய்து காரியத்தை கெடுத்து விடாதீர்கள். ஒருவேளை அவர் பகலில் தூங்குபவரோ என்னவோ; ஆனால் அவரு ரொம்ப நல்லவரு. கையில் எப்போதும் துட்டு வைத்திருப்பவரு.  டீ, காஃபி, டிபன் எல்லாம் அப்பப்போ வாங்கித்தருகிறாரு; 

அது மட்டுமில்லை. அவர் சொல்லும் கதைகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, தலையை ஆட்டிக்கொண்டு இருந்தால் போதும். அந்த சந்தோஷத்திலேயே, நூறு இருநூறு செலவுக்கு கைமாத்தாகக் கேட்டாலும் தருகிறாரு. திரும்பிக் கேட்பதே இல்லை; 

நானே அவருக்கு இதுவரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் தரணும். ரொம்ப தாராள மனஸு அவருக்கு. நம்ம தலைவரு எம்.ஜி.ஆர். மாதிரி கொடை வள்ளல் அவரு. ஏதோ அவருக்குப் பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுது. நமக்கோ காது இருக்கு. என்ன சொல்றாரோ கேட்டுவிட்டுப் போவோமே; தலையிருக்கு, ஆட்டிவிட்டுப்போவோமே!” என்றான். //

"அட, இவரைப்போலவே ஒரு பெரியவரை எனக்குத் தெரியும்ப்பா" என்று கதை படிக்கும் ஒவ்வொருவரையும் சொல்ல வைக்கும் இந்தக்கதை,  ஆசிரியரின் கதைகளில்  ஒரு ரத்தினம் ....

இந்த முதியவரிடம் ஒரு லேப்டாப் கொடுத்து அவருக்கு, முகநூல், சமுதாய வலைத்தளங்களை அறிமுகப்படுத்தி வைத்தால்  அவர்  அவற்றை  சிறந்த வடிகாலாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.!

Regards,
Usha

 










மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 



இனிய நல்வாழ்த்துகள்.








    



   


மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.










இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !






அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 
கதையின் தலைப்பு:




 ’ தாயுமானவள் ‘ 




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 



*03. 07. 2014*




இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.






 *Third July .... the Sweetest Day ! * 





 








என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

  1. உஷா ஶ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. http://usha-srikumar.blogspot.in/2014/06/blog-post_28.html
    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்

    இந்த சிறுகதை விமர்சன வெற்றியாளர், தான் பரிசுபெற்றுள்ள மகிழ்ச்சியினைத் தனது வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.

    அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  4. முத்தான மூன்றாம் பரிசினை வென்ற
    திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு
    இனிய வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. அருமையான விமர்சனம்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. //அந்தக்காலத்தில், இவர்களுக்காகத்தான் கிராமங்களில் வாசலில் திண்ணை கட்டினார்களோ?


    இளையவர்கள் அவரவர் வேலையே பார்த்துக்கொண்டிருந்தாலும், திண்ணையில் அமர்ந்த படி, அடுத்த வீட்டுப் பெரிசுடன் பழைய கதைகள் பேசியபடி ஆனந்தமாக இருந்தார்களே....
    // அருமையான விமர்சனம் எழுதி பரிசு பெறும் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள். தொடர்ந்து பல பரிசுகள் பெறவும் இனிய வாழ்த்துக்கள்.

    விமர்சனத்தின் இறுதியில் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் கணினி அறிமுகம் எழுத்தில் ஆர்வமுள்ள முதியோர் பலருக்கும் ஒரு சிறந்த வடிகாலாக இருக்கும் என்பது மறுக்கவியலா உண்மை. ஆனால் அதில் எழும் சந்தேகங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்க அன்புக்குரியவரோ, அல்லது அக்கறை கொண்டவரோ அருகில் இல்லாவிடில் அதனால் பயனில்லை. எனினும் இது ஒரு அற்புதமான தீர்வு என்பதையும் மனச்சோர்வுற்றிருந்த என் அம்மாவை இன்று மிகவும் உற்சாகமான மனுஷியாக மாற்றிய பெருமை கணினியைச் சாரும் என்பதையும் தெரிவிப்பதில் மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. மூன்றாம் பரிசு பெற்ற திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. முத்தான மூன்றாம் பரிசை வென்ற
    திருமதி. உஷா ஸ்ரீகுமார்
    அவர்களுக்கு பாராட்டுக்கள் !

    பதிலளிநீக்கு
  11. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. திருமதி உலாஸ்ரீகமாருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  13. முத்தான மூன்றாம் பரிசினை வென்ற திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. பரிசு வென்ற திருமதிஉஷா ஸ்ரீகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  15. திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  16. // பல வீட்டு "பெருசுகளின்" மனநிலையையும், இளையவர்களின் யதார்த்தப் பிரச்சனைகளையும், எளியவர்களின் (காவலாளி) நிதர்சன நிலையையும் கண் முன் சித்தரித்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.// படித்தேன் ரசித்தேன்.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு