என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 5 ஜனவரி, 2019

64, 65, 66-வது நாயன்மார்கள் .. YOU-TUBE AUDIO BY 'GOPU'

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கைங்கர்யம்
திருச்சி ஸ்ரீ. V. ஸ்ரீகண்டன் அவர்கள் 
 சந்நியாஸம் ஏற்ற [24.02.2002] தினத்தில்
ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவா அதிஷ்டானத்தில்
ஸ்ரீ ஸதா சிவானந்த தீர்த்த ஸ்வாமிகளாக காட்சியளித்தல் 

^சந்நியாஸம் மேற்கொள்ளும் முன்பு சங்கல்பம்
காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில்^  
^குருவிடம் காவி வஸ்திரம் ஏற்றல்^
^காவி ஆடையுடன் குருவை வணங்குதல்^ 
^சிரஸ்ஸில் லிங்கப் பிரதிஷ்டையுடன் அபிஷேகம்^

^ஞான தீக்ஷை அளித்தல்^ 
  
^மந்திர உபதேசம்^

^குரு வணக்கம்^
^ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில் வழிபாடு^
 
^ஸ்ரீ பாலபெரியவா தரிஸனம்^
^ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அதிஷ்டானத்தில் பிரார்த்தனை^

 ^ஆங்கரை அதிஷ்டானத்தில் உள்ள கல்வெட்டு^
[This photo is taken on 04.01.2019 by one Mr. A.K.Balasubramanian. Thanks to my Dear AKB]

^ஆங்கரை அதிஷ்டான சிவலிங்கம்^
[This photo is taken on 04.01.2019 by one Mr. A.K.Balasubramanian. Thanks to my Dear AKB]

^ஆங்கரை அதிஷ்டானத்தில் கும்பாபிஷேகம்^


அன்புடையீர்,

அனைவருக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள்.

'EXPERIENCE WITH MAHA PERIYAVA' என்ற தலைப்பில் யூ-ட்யூப்பில் பலரையும் பேட்டி எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்டவர்களின் பேட்டிகள் வெளியாகியிருப்பதாகத் தெரிகிறது.

இதுவிஷயம், நம் அன்புக்குரிய வலைப்பதிவர் ’ஆச்சி ஆச்சி’ மூலம் அடியேன் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதுடன், அடியேனும் ஒரு பேட்டி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை என்னிடம், கடந்த ஓராண்டாக, ஆச்சி அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். 

அதேபோல பேட்டி எடுக்கும் இரு தோழர்களையும் மாற்றிமாற்றி, ஆச்சியே தொடர்புகொண்டு, அடியேனை நேரில் சென்று, பேட்டி காணவேண்டும் என  தனது நீண்ட நாள் ஆவலை அவர்களிடம், நிர்பந்தப் ப...டு...த்...தி, கேட்டுக்கொண்டிருப்பார்கள் போலிருக்குது. 



’ஆச்சி’ பற்றி மேலும் அறிய இதோ சில இணைப்புகள்:

அன்புக்குரிய ஆச்சியின் வருகை ஆச்சர்யம் அளித்தது!

அன்பு நிரம்பி வழியும் காலிக் கோப்பை [துபாய்-20]

சந்தித்த வேளையில் ..... பகுதி 5 of 6



’ஆச்சி’ போட்ட அதிரடி + அவசர உத்தரவால் அரண்டுபோன, பேட்டி காண்போர், திருச்சிக்கு வருகை தந்து என்னை நேரில் சந்தித்து, நேரடியாகப் பேட்டி காண, கால-நேர-சூழ்நிலைகள் ஒத்து வராததால், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, ஆடியோவாக பேசி பதிவு செய்து அனுப்பி வைத்துவிடுமாறு, வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டார்கள்.

அதன்படி அடியேன் 12.12.2018 புதன்கிழமை, நல்ல முஹூர்த்த நாளில், திருச்சியில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான திருவானைக்கோயில் கும்பாபிஷேகத்தன்று, திருவானைக்கோயில் சங்கர மடத்திற்கு வருகை தந்து சிறப்பித்திருந்த, ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தின் தற்போதைய பீடாதிபதி, ஸ்ரீ சங்கர விஜேயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் மூன்று கால பூஜைகளையும் திவ்ய தரிஸனம் செய்துவிட்டு, அவர்களை நமஸ்கரித்துவிட்டு, அவர்களின் திருக்கரங்களால் அனுக்கிரஹிக்கப்பட்ட பிரஸாதங்களும் கிடைக்கப்பெற்று, அவர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்துடன், மூன்று தனித்தனிப் பதிவுகளாகப் பேசி அனுப்பியுள்ள செய்தித் தொகுப்புக்களின், இரண்டாம் பாகத்தை யூ-ட்யூப்பில் 16.12.2018 அன்று வெளியிட்டுள்ளார்கள். அதற்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன்.


ஆடியோ வெளியீட்டாளர் திரு. பரத் சுப்ரமணியன் அவர்களுக்கும், அன்புக்குரிய ஆச்சி அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 நினைத்துப்பார்க்கிறேன் 

[ http://gopu1949.blogspot.com/2011/07/3.htmlஜாம்ஷெட்பூரில் 03.02.2007 அன்று நடந்த நிகழ்ச்சியொன்றில், அகில இந்திய அளவில் முதல் பரிசும், தேசிய விருதும் (National Award with Gold Medal and First Prize in an All India Level Competition) அடியேன் பெற்றபோது, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் என்னை நேரிடையாக பேட்டி கண்டு, ரேடியோவில் ஒலிபரப்பு செய்தது, மலரும் நினைவுகளாக இப்போதும் என்னை மகிழ்விக்கிறது. இந்த You-Tube Audio Recording எனது இரண்டாவது மகன் சிரஞ்ஜீவி. G. SHANKAR அவர்களால், MOBILE SMART PHONE இல் பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ]


  

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவருடன் 
மூன்று நாயன்மார்களும் (1980)

சற்றே பின்புறமாக உள்ளவர்  
(கண்ணாடி அணிந்தவர்)
பிரதோஷம் வெங்கட்ராம ஐயர்

விபூதி பட்டை பட்டையாக இட்டுள்ளவர்
ராயபுரம் ஸ்ரீ பாலு அண்ணா

மற்றொருவர் (முன்னால் வலது புறமாக) 
திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அண்ணா

  

மார்கழி மாதம், ஸ்திரவாரம் (சனிக்கிழமை), 
ஸர்வ அமாவாசை, சித்த யோகம், மூலா நக்ஷத்திரம்
ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி 
நல்ல நாளில் இதனை வெளியிடுவதில் 
பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! 




ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களைப்பற்றி 
மேலும் சில அபூர்வமான படங்களுடன் அறிய 
எனது பழைய பதிவு ஒன்றின் இணைப்பு:

”நானும் என் அம்பாளும் !” (அதிசய நிகழ்வு)


என்றும் அன்புடன் தங்கள்,
[வை. கோபாலகிருஷ்ணன்]


16 கருத்துகள்:

  1. மிக நீண்ட அழகிய பதிவு... வீடியோ புதுசோ பழசோ தெரியவில்லையே... பின்பு வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பாவி:) அதிரா January 5, 2019 at 3:23 AM

      வாங்கோ அதிரா, வணக்கம். இந்தப் பதிவுக்குத் தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      //மிக நீண்ட அழகிய பதிவு...//

      ஆஹா, அகல நீளங்களை ஆழமாக அலசி ஆராய்ந்துள்ளீர்கள்.

      //வீடியோ புதுசோ பழசோ தெரியவில்லையே...//

      https://www.youtube.com/watch?v=OLnqdfeVxm4
      **புத்தம் புதியது மட்டுமேவாக்கும்**

      //பின்பு வந்து பார்க்கிறேன்.//

      இதுபோலச் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ள என் பதிவுகளுக்கெல்லாம் நீங்க திரும்ப வந்ததே இல்லை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
    2. புத்தம் புதிய புத்தகமே
      உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

      பொதிகை வளர்ந்த செந்தமிழே
      உன்னை பாட்டில் வடிக்கும் கவிஞன் நான்

      பள்ளியறை என்னும் பள்ளியிலே
      இன்று புதிதாய் வந்த மாணவி நான்

      ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
      வீட்டு புலவன் நாயகி நான்

      பள்ளியறை என்னும் பள்ளியிலே

      அஞ்சு விரல் பட்டால் என்ன
      அஞ்சுகத்தை தொட்டால் என்ன

      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் உள்ளம் பந்தா என்ன

      தொட்ட சுகம் ஒன்றா என்ன
      துள்ளும் உள்ளம் பந்தா என்ன

      செவ்விதழை கண்ணால் என்ன
      தேனெடுத்து உண்டால் என்ன

      கொத்து மலர் செண்டா என்ன
      கொஞ்சும் மன்னன் வண்டா என்ன

      புத்தம் புதிய புத்தகமே
      உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

      ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
      வீட்டு புலவன் நாயகி நான்

      புத்தம் புதிய புத்தகமே

      கையணைக்க வந்தால் என்ன
      மெய்யணைத்து கொண்டால் என்ன

      கையணைக்க வந்தால் என்ன
      மெய்யணைத்து கொண்டால் என்ன

      முத்தமழை என்றால் என்ன
      சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

      முத்தமழை என்றால் என்ன
      சொர்க்கம் ஒன்று உண்டா என்ன

      வெட்கம் வரும் வந்தால் என்ன
      வேண்டியதை தந்தால் என்ன

      வெட்கம் வரும் வந்தால் என்ன
      வேண்டியதை தந்தால் என்ன

      இன்னும் கொஞ்சம் சொன்னால் என்ன
      இன்பம் இன்பம் என்றால் என்ன

      புத்தம் புதிய புத்தகமே
      உன்னை புரட்டி பார்க்கும் புலவன் நான்

      ஏட்டை புரட்டி பாட்டை படிக்கும்
      வீட்டு புலவன் நாயகி நான்

      புத்தம் புதிய புத்தகமே

      நீக்கு
    3. மேற்படி மிக அழகிய அர்த்தமுள்ள பாடல் இடம்பெற்றுள்ள படம்: அரச கட்டளை

      நடிப்பு: எம்.ஜி.ஆர். + ஜெயலலிதா + சரோஜாதேவி

      ஆண்டு: 1967 [எனக்கு அப்போது ஸ்வீட்-சிக்ஸ்டீன் வயது, மட்டுமே :) ]

      இசை: கே.வி. மஹாதேவன்

      பாடலாசிரியர் : ’வாலி’

      பாடியவர்கள் : டி.எம்.எஸ். + பி. சுசிலா

      நீக்கு
    4. ’அதிரா’வுக்கான எச்சரிக்கை.
      ===============================

      இந்தத் தொடரின் நிறைவுப் பகுதி (பகுதி-3) நாளைய தேதியில் (07.01.2019), இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல், வெளியாக உள்ளது. ஜாக்கிரதை!

      அன்புடன் கோபு அண்ணன்

      நீக்கு
  2. நீங்கள் அனுப்பியுள்ள இரண்டாவது மூன்றாவது வீடியோ / ஆடியோக்கள் இனிதான் கேட்க வேண்டும். படங்கள் கண்டு சிலிர்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம். January 5, 2019 at 7:11 AM

      வாங்கோ ‘ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ வணக்கம்.

      //நீங்கள் அனுப்பியுள்ள இரண்டாவது மூன்றாவது வீடியோ / ஆடியோக்கள் இனிதான் கேட்க வேண்டும்.//

      நேரம் கிடைக்கும்போது மெதுவாகக் கேளுங்கோ.

      //படங்கள் கண்டு சிலிர்த்தேன்.//

      ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போல, என்னிடம் உள்ள நூற்றுக்கணக்கான படங்களில் ஒருசிலவற்றை மட்டுமே இந்தப் பதிவினில் நான் காட்டியுள்ளேன்.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், ஸ்ரீராம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  3. படங்களுடன் செய்திகள் நன்றாக இருக்கிறது.
    காணொளியை கேட்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு January 5, 2019 at 11:45 AM

      வாங்கோ மேடம், வணக்கம்.

      //படங்களுடன் செய்திகள் நன்றாக இருக்கிறது.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, மேடம்.

      //காணொளியை கேட்கிறேன்.//

      தாங்கள் மட்டுமாவது இதனை அவசியமாகக் கேட்பீர்கள் என்ற 100% நம்பிக்கை எனக்கு உண்டு.

      தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புடன் கோபு

      நீக்கு
  4. This Post is shared in Face Book by one Mr. A.K.BALASUBRAMANIAN
    https://www.facebook.com/100004521071709/posts/1098485176978841/

    Thanks a Lot to my Dear AKB

    அன்புடன் கோபு சித்தப்பா

    பதிலளிநீக்கு
  5. //பாடலாசிரியர் : ’வாலி’ //

    வாலி இல்லை.

    பாடலாசிரியர் எம்.ஜி.ஆர். காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீவி January 6, 2019 at 5:59 PM

      வாங்கோ ஸார், நமஸ்காரங்கள்.

      ** பாடலாசிரியர் : ’வாலி’ ** - VGK

      //வாலி இல்லை. பாடலாசிரியர் எம்.ஜி.ஆர். காலத்தில் அரசவைக் கவிஞராக இருந்தவர்.// - ஜீவி

      மன்னிக்கணும் ஸார். இந்தப்பாடலை எழுதிய பாடலாசிரியர் சாக்ஷாத் ’வாலி’ அவர்கள் மட்டுமே என்பதற்கான பல்வேறு நம்பத்தகுந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

      மேலும் வாலி அவர்களே, தான் அளித்திருந்த ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பிலான பேட்டி ஒன்றில், தான் எழுதிய, இந்தப்பாடலுக்கு MGR அவர்கள் உடனடியாக நடித்துக்கொடுக்காமல், வெகு நாட்கள் MGR அவர்கள் இழுத்தடித்ததாகவும் சொல்லியிருக்கிறார்.

      இந்தப்பாடல் மட்டுமன்றி, இந்தப்படத்தில் வரும் எந்தப்பாடலுமே கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது அல்ல என்பதையும் ஓர் கூடுதலான தகவலாக இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

      அன்புடன் கோபு

      நீக்கு
    2. கவிஞர் கண்ணதாசன் அல்ல.
      புலவர் புலமைப்பித்தன் என்று என் நினைவு.

      நீக்கு
  6. இவ்வளவு நாளும் நீங்கள் பாதுகாத்து வைத்திருந்த படங்களை பகிர்ந்துள்ளிர்கள்.உங்கள் சகோதரர் போற்றுதலுக்குரியவர்.தெய்வீக மணம் வாய்ந்த குடும்பத்தினரான உங்களிடம் இது போன்ற விசியங்களை தெரிந்துகொள்ள எங்களுக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆச்சி ஸ்ரீதர் January 7, 2019 at 1:39 PM

      //இவ்வளவு நாளும் நீங்கள் பாதுகாத்து வைத்திருந்த படங்களை பகிர்ந்துள்ளீர்கள்.//

      ஆமாம். அதற்கான காலமும்-நேரமும்-கட்டாயமும் இப்போதுதான் வந்துள்ளது. பொக்கிஷமாக வைத்துள்ள ஏராளமான படங்களில் ஒருசில மட்டுமே இங்கு நான் இப்போது காட்டியுள்ளேன். இந்தத் தொடரின் பகுதி-4 என்று ஒன்று என்றாவது ஒருநாள் வெளியிடப்படலாம். அப்போது, மேலும் அபூர்வமான படங்களெல்லாம் ஒரு கண்காட்சி போல வீடியோவாகக் காட்டப்படலாம் என நினைக்கிறேன்.

      //உங்கள் சகோதரர் போற்றுதலுக்குரியவர்.//

      அதில் எந்த சந்தேகமும் எங்களுக்கு இல்லை. ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுடனேயே, அவர்களின் நிழல் போல பல்லாண்டுகள் (2-3 மாமங்கங்கள்) இருக்கும் ப்ராப்தம் அவருக்குக் கிடைத்துள்ளது. இதைவிட ஒருவருக்கு என்ன பாக்யம் வேண்டும் :)

      //தெய்வீக மணம் வாய்ந்த குடும்பத்தினரான உங்களிடம் இது போன்ற விசியங்களை தெரிந்துகொள்ள எங்களுக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது.//

      எல்லாவற்றிற்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருளும் அனுக்கிரஹமும் மட்டுமே காரணம்.

      இந்த ஆடியோ வெளியீடு, இப்போது ஆச்சியின் தூண்டுதல் மூலம் மட்டுமே நிகழ்ந்துள்ளது என்பதுதான் மிகப்பெரிய ஆச்சர்யம். அதுவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்களின் திருவிளையாடல்களில் ஒன்று என்பதை என்னால் நன்கு உணரமுடிகிறது, ஆச்சி.

      அன்புடன் கோபு

      நீக்கு
  7. https://youtu.be/fiSRFKMQ2ec

    சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல், (1965-1994) ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு நேரிடையாக கைங்கர்யம் செய்யும் பாக்யம் கிடைக்கப்பெற்ற, திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அண்ணா அவர்கள் 24.02.2002 அன்று காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் ஆலய திருக்குளத்தில் சந்நியாஸம் மேற்கொண்டபோது எடுக்கப்பட்டுள்ள சில அபூர்வப்படங்கள் நேற்று யூ-ட்யூப்பில் வெளியிடப்பட்டுள்ளன. https://youtu.be/fiSRFKMQ2ec

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு