என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

புதன், 22 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 9 ] திருமதி ஜெயந்திரமணி அவர்கள்




வலைத்தளங்கள்:

மனம் [மணம்] வீசும்

ஆன்மீக மணம் வீசும்

மணம் [மனம்] வீசும்


திருமதி 

 ஜெயந்தி ரமணி  

அவர்கள்

மனம் திறந்து பேசுகிறார்!

 [ ஆஹா, இவரின் பதிவுப்பக்கம் போனாலே 
கும்முனு ஒரு நறுமணம் வீசிடுமே !   ]





கோபு அண்ணா

இதை எழுதற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரியல. ஏன்னா உங்க சிறுகதை விமர்சனப் போட்டியில கலந்துக்கல. கலந்துண்ட ஒன்றிரண்டு விமர்சனங்களும் மொக்கையா ஆயிடுத்து. ஆனா ஒரே ஒரு தகுதி இருக்குன்னு நினைக்கறேன்..  உங்கள் சிஷ்யையாகிய ரசிகை.  அது போதும் அல்லவா?   (குருவினை மிஞ்சிய சிஷ்யையாக ஆசை தான்.  ஆனால் நிறைவேறுவது மெத்தக் கடினமப்பா).

ஒரு அன்புக்கட்டளையோட ஆரம்பிக்கிறேன்.
அது என்ன அன்புக்கட்டளை?

//சாதாரணமானவன்தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.//

முன்பே சொல்லி இருக்கிறேன்.  இந்த வரிகளை நீக்கி விடுங்கள் என்று.  அடக்கம், தன்னடக்கம் தேவை தான். இல்லைன்னு சொல்லல. ஆனா இவ்வளவு தேவை இல்லை.   உங்க இடத்துல நான் இருந்திருந்தா,  அப்படியே காலரை தூக்கி விட்டுக்கிட்டு.  ம்க்கும். அதான் ஆரம்பிச்ச இடத்திலயே நிக்கறேன்.
  

அனுமனைப் போல் (அட பலத்துக்கு மட்டும் தான், வேற ஏதாவது நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பே இல்ல)  உங்களுக்கு உங்கள் பலம் தெரியவே இல்லை. 


’உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ன்னு தொலைக்காட்சியில் போடுவாங்க.


அது போல வலை உலகத்தில் உங்களை மாதிரி சிறுகதை விமர்சனப் போட்டி நடத்தியவர்கள் யாராவது இருக்கிறார்களா? தேடினாலும் கிடைக்காதோ.     கதையை விமர்சிப்பதற்கு பரிசுகள் வேறு.  பேஷ், பேஷ். பல அருமையான விமர்சகர்களை உருவாக்கிவிட்டீர்கள், வலையுலக பிரம்மாவாகிய நீங்கள்.  இதைப் பற்றி விரிவாக எழுதும் அளவுக்கு நான் உங்கள் வலைத் தளத்தை ஆழமாகப் படிக்கவில்லை. நுனிப்புல் மேய்ந்து விட்டு எழுத எனக்கு மனமும் இல்லை.


தேன் இருக்கும் பூவைத் தேடி வரும் வண்டுகள் போல் உங்களைத் தேடி உங்கள் வீட்டிற்கே வரும் வலைப் பதிவர்கள், அவர்களின் சந்திப்பை அழகாக படம் பிடித்து பதிவு போடும் நீங்கள்.  பாராட்ட வார்த்தை இல்லை.  வியந்து நிற்கிறேன்.  ‘ஜாடிக்கு ஏற்ற மூடியாக’ வாலாம்பா மன்னி.  அந்த புன்னகை தவழும் முகத்தை மறக்கவே முடியாது.  அதுவும் உங்கள் வெற்றிக்கு ஒரு காரணமோ?


நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தினரும் பார்த்து வியந்த ஒரு மனிதர் நீங்கள். 

‘உங்களைப் பார்த்தாலும்,
பார்க்காவிட்டாலும்,
பேசினாலும்,
பேசாவிட்டாலும்,
கண்டிப்பாக
எல்லார் மனதிலும்
உங்களுக்கு ஒரு உயர்ந்த இடம் உண்டு’.


உங்கள் பெருமையை பறை சாற்றுவது நீங்கள் பெற்ற அன்பு ரசிகர் கூட்டம், விருதுகள், எல்லாவற்றையும் விட உங்கள் பதிவுகளின் பின்னே அனுமனின் வால் போல் நீண்ட, நெடும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையும்தான். 


 


ம்க்கும் உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும், எனக்கும் பெருமைகள் உண்டு என்னவென்று சொல்லட்டுமா கோபு அண்ணா?

”மூன்று பத்து ஆண்டுகளாக
அடுக்களையில் நான் இட்டு
அவித்த இட்டலிகள்,
சுட்ட வட்ட, வட்ட தோசைகள்,
சப்பாத்திகள்,
லிட்டர், லிட்டராக வைத்த
சாம்பார், ரசம், இத்யாதி, இத்யாதி..
எண்ண முடியுமா?
அளக்கத்தான் முடியுமா?”

என்ன செய்ய இதுதான் என் பெருமை.

அன்புடனும்,
வணக்கத்துடனும்,
நன்றியுடனும்,
மனமார்ந்த வாழ்த்துக்களுடனும் 

  
ஜெயந்தி ரமணி
 

 


    


அன்புள்ள ஜெயா! 
வாம்மா, வணக்கம்மா !!


செளக்யமா சந்தோஷமா இருக்கீங்களா ?

தலைதீபாவளிக்கு பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சீங்களா?
ஜாலியா கொண்டாடினீங்களா? கங்காஸ்நானம் ஆச்சா?
சந்தோஷம். உங்கள் எல்லோருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துகள்.


‘ஜெ’ யிடமிருந்தும் இப்படி ஒரு நேயர் கடிதம் 
வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.


கடந்த 40 ஆண்டுகளாக 
கெளரவமான பதவிகளில் பணியாற்றிவிட்டு
சமீபத்தில் (From BSNL) ஓய்வு பெற்றுள்ளீர்கள்.



அத்துடன் ஓர் இனிமையான குடும்பத்தலைவி.

அத்துடன் ஏற்கனவே ஓர் மருமகளுக்கு மாமியார்
இப்போது மருமகனுக்கும் மாமியார் என்ற புதிய பிரமோஷன்.

ஜெயாப் பாட்டியைப் போன்றே 
வாயாடியாக உள்ள 
பேத்தி ’லயா’க்குட்டியைக் 
கவனித்துக்கொள்ளும் 
கூடுதல் பொறுப்புக்கள் வேறு.

இவையெல்லாம் நம் வாழ்க்கையில் 
எவ்வளவு இனிய தருணங்கள் !
பெருமைக்குரிய விஷயங்கள் !!
யோசித்துப்பாருங்கோ,  ஜெயா !!!

வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே 
அழகாக அமைந்துவிடுவது இல்லை.

 -oOo-

//கலந்துண்ட ஒன்றிரண்டு விமர்சனங்களும் மொக்கையா ஆயிடுத்து.//

அப்படியெல்லாம் சொல்லாதீங்கோ ப்ளீஸ் ... ஜெயா. மொக்கையாக இருப்பதே எப்போதும் நமக்கு நல்லது. மிகக்கூர்மையாக இருந்தால் அது நம் கண்ணையோ பிறர் கண்களையோ குத்திவிடக்கூடும்.


நானும் ஒரு மொக்கைதான் ஜெயா. ‘நானும் மொக்கை .. நீயும் மொக்கை; நினைச்சுப்பார்த்தால் எல்லாம் மொக்கை’ன்னு ஜாலியாக நாம் பாட்டுப் பாடுவோமா ? :)



// (அட பலத்துக்கு மட்டும் தான், வேற ஏதாவது நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பே இல்ல) //

என் அன்புத் தங்கச்சி ஜெயா தன் அண்ணனை அனுமனைப்போல ஓர் குரங்கு என்று சொல்லவும் உரிமை உண்டே ’ஜெ’ .... சரி, அதிலிருந்து ஒரே தாவாகத்தாவி இப்போ நாம் வெளியே வருவோம். 

//அனுமனைப் போல் உங்களுக்கு உங்கள் பலம் தெரியவே இல்லை.//

ஒரு சின்ன சந்தேகம் ‘ஜெ’. 

தங்களின் இது ஓர் நேயர் கடிதமா? அல்லது ஆஞ்சநேயர் கடிதமா ?

’ஸ்ரீராமரிடம் பக்திசெலுத்திய பல நேயர்களில் மிகவும் ஆஞ்சு ஆஞ்சு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் நேயர் என்பதால் அவருக்கு ஆஞ்சநேயர் என்று பெயர் வந்தது’ என ஒரு உபன்யாசகர் சொல்லிக் கேட்டுள்ளேன்.

தீவிர ராமபக்தனாகிய ஆஞ்சநேயரைப்போலவேதான், தீவிர கோபு பக்தையான ஜெயாவையும் என்னாலும் பார்க்கமுடிகிறது.

இனி தாங்கள் வெறும் ஜெயா அல்ல. ஆஞ்ஜெயாவாக்கும். ஹூக்க்க்கும் ! :)

தங்களின் பேரன்புக்கும் குறும்புப்பேச்சுகளுக்கும் என் ஸ்பெஷல் நன்றிகள், ‘ஜெ’.



// ”மூன்று பத்து ஆண்டுகளாக அடுக்களையில் நான் இட்டு அவித்த இட்டலிகள், சுட்ட வட்ட, வட்ட தோசைகள், சப்பாத்திகள், லிட்டர், லிட்டராக வைத்த சாம்பார், ரசம், இத்யாதி, இத்யாதி.. எண்ண முடியுமா? அளக்கத்தான் முடியுமா?” என்ன செய்ய இதுதான் என் பெருமை. //

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க ‘ஜெயா? இதுதான் பெண்ணின் பெருமையே என்பேன். இந்தக்காலத்தில் எவ்வளவு பெண்களுக்கு இதெல்லாம் செய்யத்தெரியும்? சமையலுக்கும் சமைப்பதற்கும்கூட ஆள் போட்டுவிட்டு, அவர்களுக்கெல்லாம் 24 மணி நேரமும் BLOG எழுதி அலட்டிக்கொள்ள மட்டுமே தெரியுமாக்கும். :) 

சாக்ஷாத் அன்னபூரணியாக அல்லவா திகழ்ந்துள்ளீர்கள்! சபாஷ் ‘ஜெ’ 

இருப்பினும் எனக்கு ஒரு இட்லியோ, ஒரு தோசையோ, ஒரு சப்பாத்தியோ, சொட்டுத்துளி சாம்பார் ரஸமோ தாங்கள் இதுவரை தங்கள் கையால் செய்து தந்ததே இல்லையாக்கும். அது எனக்குப் பெரியதொரு மனக்குறை தான். 

ஆனால் ஒரு பெரிய முறுக்கு, ஒரு பெரிய லட்டு, நெய்யில் செய்த ஒரு சூப்பர் அதிரஸம் மட்டுமே இதுவரைக் கொடுத்துள்ளீர்கள். தங்கள் அதிரஸம் ருசியோ ருசியாக நெய் மணமாக இருந்தது. இன்னும் என் நாக்கில் அதன் ருசி அப்படியே ஒரு பக்கம் தனியாக உள்ளது. நினைத்தாலே எனக்குச் சும்மா நாக்கில் நீர் ஊறி இன்றும் இனிக்குது. 

மேலும் ஒரு 108 அதிரஸங்கள் மட்டும் [வாரம் 9 வீதம் 12 வாரங்களுக்குத் தொடர்ச்சியாகக்] கொரியரில் அனுப்புங்கோ என்று கேட்டுக்கொண்டேன். மறந்துட்டீங்கோ. இப்போது மீண்டும் நினைவூட்டிக்கொள்கிறேன். :)


இவற்றையெல்லாம் தாங்கள் செய்துகொடுத்து ருசியாகச் சாப்பிடக் கொடுத்து வைத்தவர் நம் ரமணி சார். ஆனாலும் மிகவும் பாவம் அவர். 

என்னையே அடிக்கடி மெயிலிலும், தங்கள் பதிவு எழுத்துக்களிலும், தொலைபேசியிலும் [வலைச்சரத்திலும்கூட] இந்தப்பாடு படுத்திவரும் நீங்க அவரை நேரில் என்னபாடு படுத்துவீங்களோ ! :) 

இருப்பினும் அசாத்ய பொறுமைசாலிதான் அவர். இருவரும் இன்றுபோல் என்றும் இன்பமாக வாழ்க !



// ‘ஜாடிக்கு ஏற்ற மூடியாக’ வாலாம்பா மன்னி.  அந்த புன்னகை தவழும் முகத்தை மறக்கவே முடியாது.  அதுவும் உங்கள் வெற்றிக்கு ஒரு காரணமோ? //

இருக்கலாம் ஜெயா. இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வோர் யாருக்குமேகூட என்னை அவ்வளவாகத் தெரியாது. 

ஏனெனில் தங்களின் கோபு அண்ணாவாகிய நான், இன்றும் கூட மிகச் சாதாரணமானவன் தான் (ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.) 

அதே சமயம் valambal@gmail.com என்ற தங்களின் மன்னியின் மூலம் மட்டுமே என்னைப்பலரும் இன்று அறிந்துகொண்டுள்ளனர் என்று நான் அடித்துச்சொல்வேன். :) 

அதுவே என் வெற்றிக்குக் காரணம் என்பது ஏற்கனவே பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக மன்னி பெயரில் நான் எழுதி அனுப்பிய கட்டுரை அகில இந்திய அளவில் நடந்த போட்டியில் முதல் பரிசுக்குத்தேர்வாகி ‘தங்க நெக்லஸ்’ பரிசு கிடைத்தது. அதற்கான இணைப்பு: http://gopu1949.blogspot.in/2011/07/3.html   


இன்னொன்று, நான் தங்களின் மன்னி பெயரில் எழுதி அனுப்பிய, என் வாழ்க்கையில் இரண்டாவது வெற்றிக் கதையான, ’உடம்பெல்லாம் உப்புச்சீடை’ http://gopu1949.blogspot.in/2014/02/vgk-06.html . 


ஒரு பத்தியோ, ஒரு வாக்கியமோ, ஒரு வார்த்தையோ, 

ஒரு எழுத்தோகூட எடிட் செய்யப்படாமல், அப்படியே அந்த என்

முழுக்கதையும் பக்கம் எண்: 98 முதல் பக்கம் எண் 112 வரை, தங்கள் 

மன்னியான திருமதி : வாலாம்பாள் கோபாலகிருஷ்ணன் என்ற பெயரில்,

முதன் முதலாக பிரபல மாத  இதழான  ‘மங்கையர் மலர்’ இல் அச்சிட்டு 

  MARCH  2006 இல் வெளியிடப்பட்டது.
  


மறக்க முடியாத இனிய நினைவலைகள் தான் ! :)  




பானை பிடித்தவள் பாக்கியசாலியே தான் !



என்ன ஒன்று, இந்த பரிசு பெற்ற கட்டுரையையோ, கதையையோ பற்றி 

நீங்கள் யாராவது அவளிடம் கேட்டால் அவளுக்கு ஒன்றுமே சொல்லத் 

தெரியாது. :)  ..................... அதனால் என்ன?  



எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கணும் என்பது அவசியம் 

இல்லையே ! :)



என் டேஸ்ட் தெரிந்து, தங்களைப்போலவே எவ்வளவோ ருசிருசியாக 

சமைத்துப்போட்டு அசத்தியிருக்கிறாளே ! இரவு பகல் எந்நேரமும் 

ஏதாவது தின்னக்கேட்டுப் படுத்தியிருக்கிறேனே !! அசராமல் மறுக்காமல் 

என் சுவை அறிந்து செய்து கொடுத்து மகிழ்வித்திருக்கிறாளே !!!



இன்றும் அவளை என் வயிறு வாழ்த்துகிறதே ! 



அதுவே போதும் அவளுக்கு !! 



வேறு எதற்குமே ஆசைப்படாத அப்பாவி அல்லவோ !!! 



இதில் தங்களுக்குச் சந்தேகமிருந்தால் என் ’சுடிதார் வாங்கப்போறேன்’ 

கதையில் ஓர் கதாபாத்திரமாகவே என்னவளைக் காட்டியுள்ளேன்.

http://gopu1949.blogspot.in/2014/01/vgk-03.html   படித்துப்பாருங்கோ, ஜெயா. :)







// நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தினரும் 
பார்த்து வியந்த ஒரு மனிதர் நீங்கள். 
‘உங்களைப் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும், 
பேசினாலும், பேசாவிட்டாலும், 
கண்டிப்பாக எங்கள் எல்லோர் மனதிலும் 
உங்களுக்கு ஒரு உயர்ந்த இடம் உண்டு’. //

இதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? மிகவும் சந்தோஷம் ஜெயா. மிக்க நன்றி ஜெயா. இந்த அன்பும் நட்பும் என்றுமே நமக்குள் நீடிக்கட்டும்.


தங்களின் உணர்ச்சிபூர்வமான நேயர் கடிதத்திற்கு என் நன்றிகள், ’ஜெ’.


மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். 





குடும்பத்தார் எல்லோருக்கும் 
எங்கள் ஆசிகள்.

  
திருமதி. ஜெயந்தி ரமணி
திருவாளர்: ரமணி அவர்கள்

Mrs. & Mr. Ram Srinath
[பிள்ளையும் மருமகளும்]

பேத்தி ’லயா’க்குட்டி

  

மாப்பிள்ளை சிரஞ்சீவி :
 ஆனந்த்  
அவர்களுக்கும்

செளபாக்யவதி: 
 ’சந்தியா’ 
வுக்கும்

இனிய தலை தீபாவளி 
நல்வாழ்த்துகள் !





  

பிரியமுள்ள கோபு [VGK] 
22.10.2014 

    



நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும்.





நல்லதொரு வாய்ப்பினை 

நழுவ விடாதீர்கள்








என்றும் அன்புடன் தங்கள்

வை.கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நேற்று காலை உங்கள் வீட்டிற்கு நேரில் வந்து தீபாவளி வாழ்த்து சொல்லிவிட்டு, அப்படியே சுவையான ஒரு டம்ளர் காபி சாப்பிடுவதாக இருந்தேன். மழையின் காரணமாக வர இயலவில்லை.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    மீண்டும் உங்கள் வலைப் பக்கம் வருவேன்!

    பதிலளிநீக்கு
  3. மணம் வீசும் மனம் நிறைந்த உணர்ச்சிபூர்வமான
    நேயர் கடிதம் .. பாராட்டுக்கள்..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு
  4. //”மூன்று பத்து ஆண்டுகளாக
    அடுக்களையில் நான் இட்டு
    அவித்த இட்டலிகள்,
    சுட்ட வட்ட, வட்ட தோசைகள்,
    சப்பாத்திகள்,
    லிட்டர், லிட்டராக வைத்த
    சாம்பார், ரசம், இத்யாதி, இத்யாதி..
    எண்ண முடியுமா?
    அளக்கத்தான் முடியுமா?”//

    ஆஹா! கவிதை அருமை! கவிதைக்கு பின்னணியாய் ஒரு
    தன்னிரக்கம் இழையோடுகிறது, பாருங்கள்! அது ரொம்ப இயல்பாய் எழுத்தில் தன்னிச்சையாய் தானே வந்து அமர்ந்தது தான் அற்புதம்!

    அத்தனை பத்திரிகைகளும் தாம் டாம்பீகமாக தீபாவளி மலர் போடுகிறார்கள்! இவ்வளவு நேர்த்தியான ஒரு கவிதையை எந்தப் தீபாவளி மலரிலாவது பார்க்க முடியுமா?...

    வாழ்த்துக்கள் சகோதரி! அன்பான தீபாவளி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் நேயர் கடிதம் வித்தியாசமான சுவையான முறுக்கு, இலட்டு, அதிரசம் போல் இருந்தது!!!

    தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. வித்யாசமான நேயர் கடிதமாக திருமதி ஜெயந்தி ரமணி அவர்களின் கடிதம் அமைந்துள்ளது. இரசித்தேன். நடுவரின் கருத்தும் ஆமோதிக்கும் வண்ணமே உள்ளது.தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. இயல்பாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும் லாவகத்துடனான உணர்வுபூர்வமான எழுத்தோட்டம். நேயர் கடிதம் நேசக்கடிதமாய் முகம் காட்டும் அழகு. பாராட்டுகள் ஜெயந்தி மேடம்.

    நேசக் கடிதத்தைத் தொடர்ந்து கோபு சாரின் ரகளையான ரசனையான பின்னூட்டப் பதில்கள். அனைத்தும் அசத்தல். பாராட்டுகள் கோபு சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீத மஞ்சரி October 26, 2014 at 5:31 PM

      வாங்கோ, வணக்கம்.

      //இயல்பாய் தன்னுள் இழுத்துக்கொள்ளும் லாவகத்துடனான உணர்வுபூர்வமான எழுத்தோட்டம். நேயர் கடிதம் நேசக்கடிதமாய் முகம் காட்டும் அழகு. பாராட்டுகள் ஜெயந்தி மேடம். //

      ஏதேதோ தலைதீபாவளி வேலைகளில் மிகவும் பிஸியாம். அதனால் மிகச்சுருக்கமாக ஏதோ கொஞ்சம் எழுதி அனுப்பியிருக்காங்களாம். :)))))

      [இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.]

      //நேசக் கடிதத்தைத் தொடர்ந்து கோபு சாரின் ரகளையான ரசனையான பின்னூட்டப் பதில்கள். அனைத்தும் அசத்தல். பாராட்டுகள் கோபு சார்.//

      அவங்களுக்கு என் மேல் பாசம் ஜாஸ்தி. அடிக்கடி நானும் பாசத்தில் வழுக்கி வழுக்கி விழுந்துவிடுவது உண்டு. :)))))

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், என் பின்னூட்டப் பதில்களில் உள்ள ரகளையை ரசித்துப் பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      பிரியமுள்ள கோபு

      நீக்கு
  8. கோபு அண்ணா

    கொஞ்சம் காலை காமியுங்கோ. அப்படியே சாஷ்டாங்கமா (இல்லை அது ஆண்களுக்குத்தானே சரியாக வரும்) மானசீகமா ஒரு நமஸ்காரம் பண்ணிக்கறேன்.
    அப்படியே என்னை மன்னிச்சு இந்த பின்னூட்டத்தைப் போடுங்கோ.
    ஒரு பழமொழி சொல்லுவா “ஆடி கழிஞ்சு ஐந்தாம் நாள் கோழி அடிச்சு கும்பிட்டானாம்”ன்னு. அது எனக்காகவே எற்பட்ட பழமொழி. ஆமாம் 2010ல போன அந்தமான் பயணத்தைப் பத்தி இனிமேதானே பயணக் கட்டுரையே எழுதப் போறேன். அப்பவே உங்களைப் பத்தி தெரிஞ்சிருந்தா, உங்க வலைத் தளத்துல வலம் வந்திருந்தா நானும் உங்கள மாதிரி சுடச் சுட கட்டுரைகளை கொடுத்திருப்பேன். (அப்ப நைசா ஒரு சாக்கு சொல்லி சமாளிச்சுட்டேன். ஆனா அது உண்மை தானே).
    தலை தீபாவளி முடிஞ்சு, தலை கார்த்திகை முடிஞ்சு, தலை பொங்கல் முடிஞ்சு, அடுத்த மாசம் பிப்ரவரி 21 ம் தேதி மகளுக்குத் திருமணம் ஆகி ஒரு வருடமும் முடியப் போகிறது.
    இப்பதான் இந்த கடிதத்தை பிரசுரித்ததற்கு நன்றி சொல்லறேன்.

    வருத்தத்துடனும்,
    வெட்கத்துடனும்,
    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  9. ////வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாமே
    அழகாக அமைந்துவிடுவது இல்லை.////


    உண்மைதான். ஆனால் அந்தக் கடவுளின் அருளாலும், உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் ஆசிகளாலும் இன்றுவரை எல்லாமே அழகாக அமைந்து விட்டது.

    ////எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருக்கணும் என்பது அவசியம் இல்லையே ! :) ////


    அவங்களுக்கு தெரிஞ்சது (அந்த அழகான புன்னகை) எல்லோருக்கும் தெரிவதில்லையே. THERE IS A WOMAN BEHIND EVERY SUCCESSFUL MAN. இந்த வெற்றிகரமான மனிதனின் பின் தூண்டுகோலாக (அன்பு மனைவியாக) மன்னி இருப்பதே உங்களின் பலம் அல்லவா?

    அப்படியே, என்னைப் பாராட்டிய திருமதி ராஜ ராஜேஸ்வரி, திரு ஜீவி, திரு முகம்மது நிஜாமுதீன், திரு சேஷாத்ரி, திருமதி கீத மஞ்சரி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

    தாமத பதிவிற்கும் தயவு செய்து என்னை மன்னிக்கவும்.

    அன்புடனும்,
    வணக்கத்துடனும்

    ஜெயந்தி ரமணி

    பதிலளிநீக்கு
  10. உங்களை அனுமனுக்கு இணையாகக் கூறியிருப்பது மிகவும் உண்மை.

    பதிலளிநீக்கு
  11. எப்படில்லாம் எழுதி திறமையை வெளிப்படுத்தறாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூந்தளிர் September 4, 2015 at 2:41 PM

      //எப்படியெல்லாம் எழுதி திறமையை வெளிப்படுத்தறாங்க.//

      என் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ள நம் ஜெயந்தி ஜெயாவின் எழுத்துக்கள் எப்போதுமே தனித்திறமை வாய்ந்ததாகவும், மிக அதிக உரிமை எடுத்துக்கொண்டதாகவும், வேடிக்கையாகவும், நகைச்சுவையாகவும், ரஸிக்கக்கூடியதாகவும் அதிக ஸ்வாதீனம் உடையவைகளாகவும்தான் இருக்கும்.

      தங்களின் அன்பான வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. இந்த கடிதாசிதா செம டேஸ்ட்டு இட்டளி தோச சாம்பாருல்லா சொல்லினாங்கல்ல அதா

    பதிலளிநீக்கு
  13. திருமதி ஜெயந்தி ரமணி மேடம் உங்க சிஷ்யயா அதான் இவ்வளவு ஜோராக நகைச்சுவையாக எழுதி இருக்காங்க. கடைசி பாயாவின்மூலம் அவர்களின் திறமைகளை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  14. // தங்களின் இது ஓர் நேயர் கடிதமா? அல்லது ஆஞ்சநேயர் கடிதமா ?//ஹா ஹா மிகவும் ரசித்தேன் வாத்யாரே. வாட் ய பன்ச்???

    பதிலளிநீக்கு
  15. பெரிப்பா அடுத்தடுத்த தீபாவளியே வந்துடுத்து... போட்டோக்கள் பதிவு நன்னா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. happy October 23, 2016 at 3:15 PM

      வாம்மா .... என் செல்லக் குழந்தாய். வணக்கம்.

      //பெரிப்பா அடுத்தடுத்த தீபாவளியே வந்துடுத்து... போட்டோக்கள் பதிவு நன்னா இருக்கு.//

      ஆமாம். அந்த இளம் ஜோடிக்கு, இப்போ வரப்போவது மூன்றாவது தீபாவளியாகும்.

      புது ஜோடியான அவர்கள் இருவரும், படு குஷியாக அமெரிக்காவில் இருக்கிறார்கள் ..... இப்போது ஒரு வருஷமாக :)

      இங்கு இன்று உன் அன்பு வருகைக்கு மிக்க நன்றி..... டா, தங்கம்.

      நீக்கு
  16. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு