ரவிஜி
அவர்களின் பார்வையில் ....
நேய(ர்) கடிதம்!
விமர்சனப்போட்டி ஒன்று நடப்பதாக நண்பர் ஒருவர்மூலம் கேள்விப்பட்டு முதன் முதலாக நானும் பங்குகொள்ளலாம் என்று எண்ணமிட்டு கலந்துகொண்ட முதல் போட்டி “உண்மை சற்றே வெண்மை”. அப்படித்தான் எனது தொடர்பு விஜிகே வாத்தியாருடன் தொடங்கியது! அதற்கு முழுமனதுடன் உட்கார்ந்து படித்து விமர்சனம் எழுதி அனுப்பியும் விட்டேன்! போட்டி முடிவுகளைப் பார்த்துகொண்டிருந்தபோது உங்களுக்கு பரிசு உண்டா என நண்பர் கேட்க, "முதல் முயற்சியிலேவா?" என்று நான் திருப்பிக்கேட்டேன். அதற்கு பதிலாக அவர் "standard acknowledgement வந்ததா?" எனக்கேட்டதும், “அது என்னாது” என்றபொழுதுதான் “ஒவ்வொரு விமர்சனத்திற்கும் standard acknowledgement அனுப்புவாரே?” என்றார். அப்பொழுதுதான் நான் valambal@gmail.comற்கு பதிலாக balambal@gmail.com என்ற மெயில் ஐடி-க்கு தவறுதலாக அனுப்பிவிட்டது தெரிந்தது (“எந்த கூறுகெட்ட கழுதையோ விமர்சனம் அனுப்பிவச்சிருக்கு – கஸ்மாலம்” னு என்ன மெட்ராஸ் பாஷைல திட்னாங்களோ தெரியல! அந்த balambal. அவர் என்னை மன்னிப்பாராக)
சரிதான் நைனா! ஆனது ஆச்சு அனுப்பிதான் பாப்போமென்னு அதையே திரும்ப valambal@gmail.com–ற்கு அனுப்பி உண்மையையும் சொல்லி “இது எப்படி இருக்கு? சரியா அனுப்பியிருந்தா ஒருவேளை எதாச்சும் தேறி இருக்குமா என்று கேட்டிருந்தேன்! அங்கேதான் நிகழ்ந்தது பெரும் திருப்பம்! என்னுடைய ஆர்வத்தைப் பாராட்டி, எழுத்து நடையைப் பாராட்டி எனக்கு உத்வேகமூட்டி, விடாமல் தொடர்ந்து எழுதுமாறும் நிச்சயம் வெற்றிபெறமுடியுமென்றும் எனக்கு பதில் அனுப்பிய பண்புக்கும், அதன் பின்னர் நெருக்கமாகி அவர் காட்டிவரும் அன்புக்கும் எப்படி எந்த வார்த்தைகளில் நான் நன்றி சொல்லமுடியும்? அவர்கொடுத்த ஊக்கத்தாலேயே அடுத்த கதையான ‘வந்துவிட்டார் வ.வ.ஸ்ரீ’ யில் மூன்றாம் பரிசுடன் எனது அறிமுகம் துவங்கியது! தேன்குரல் பறவைகளின் குரல்களோடு காக்காய் பிடிக்கத்தெரியாத இந்தக்காகத்தின் குரலும் விஜிகே அவர்களின் பாச-‘வலையில்’ கூடவே ஒலிக்கத்துவங்கியது!
பேசத்துவங்கும் குழந்தையின் குரலில் மெய்மறந்து பாராட்டும் அம்மாவைப்போலவே இந்த எங்களின் உறவு அமைந்தது! இதைப்போலவே பலரும் நெருக்கமான உறவுகொண்டிருந்ததை பின்னால்(ள்) மகிழ்ச்சியுடன் என்னால் உணரமுடிந்தது! இந்த அன்புக்கும், அவர் எடுத்துக்கொள்ளும் உரிமைக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
இந்தப் போட்டியில் இடையிலேயே நான் நுழைந்தபோதும் (நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணும் – என்பதுபோல கொஞ்சம் காணாமல் போனபோதும்கூட), ஒரு காலகட்டத்தில் என்னை ரொம்பவே ஈர்த்துவிட்டது! அடிக்ட் ஆனதுபோலவே தோன்றியது எனலாம்! விமர்சனம் அனுப்பியதும் முதலில் ஒரு STANDARD ACKNOWLEDGEMENT! பிறகு அனுப்பியது யாரென்று தெரியாதிருக்க ஒரு CODE NUMBER உடன் நடுவருக்கு அனுப்பி பின்னர் பரிசு அறிவித்தவுடன் ADVANCE INTIMATION TO PRIZE WINNERS அனுப்பி, இறுதியாக புகைப்படத்துடன் (அதுவும் பல ரகமாக) வாழ்த்துக்களுடனும், நன்றியுடனும் பரிசுபெற்றவரின் விமர்சனம் வெளியிடப்பட்டு பாராட்டப்படுகிறது! என்னே ஒரு உத்தி? என்ன ஒரு உலகளாவிய கெளரவம் + அங்கீகாரம்? இல்லை என்றால் ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர் – பெயர் இந்த அளவிற்கு வெளியே தெரிந்திருக்குமா? அதே போல கதை வெளியிடப்பட்டவுடன் ஒரு இ-மெயிலின் மூலமாக INTIMATION - அதுவும் இணைப்புடன். செவ்வாய் கிழமை வாக்கில் அதற்கு ஒரு நினைவூட்டல்! அனுப்பாது போய்விட்டால் ஏன் என்ற (அன்புக்)கேள்வி! இதெல்லாம் வேறு எவராலும் நிச்சயமாக செய்திருக்கமுடியுமா? பின்றீங்க வாத்யாரே!
கதை வெளியிடப்பட்டவுடன் அதற்கு வரும் பின்னூட்டங்களுக்கும், பின்னர் வெற்றிபெற்ற விமர்சனங்களுக்கான பின்னூட்டங்களுக்கும் உடனுக்குடன் பதிலளிப்பது, கூடவே உடல் நலம் குறித்த விசாரிப்பு வேறு! இவரது வலையே பாசத்துடனும் நேசத்துடனும் சேர்த்துப் பின்னியது என்றால் அது மிகையில்லை! இத்தனைக்கும் பெரும்பாலான பதிவர்களை நேரில் பார்த்ததுகூட கிடையாது! இரவு பன்னிரண்டு மணிக்கும் மேலாக பின்னூட்டம் இட்டாலும், இ-மெயில் அனுப்பினாலுங் கூட உடனுக்குடன் பதில் வந்துகொண்டே இருக்கும்! 24 x 365 SERVICE! சென்டிமென்ட் மட்டுமல்லாது சில இடங்களில் கு(சு)றும்பும் கொப்பளிக்கும்! மொத்தத்தில் நவரச வலைத்தளம்தான்! விஜிகே அவர்கள் ஒரு உல்லாசத் தேனீ! அவரது உற்சாகம், சுறுசுறுப்பு, சளைக்காத தன்மை இதெல்லாம் ஏதோ கொஞ்சம் என்னிடமும் ஒட்டிக்கொண்டது! “அப்படின்னா இதுக்கு முன்னால நீ என்ன வாழப்பழ சோம்பேறியாடா”ன்னு கேக்காதீங்க!
எந்த கதைசொல்லிக்கும் உற்சாகமளிக்கக்கூடியது எழுதிய கதைகளுக்கு வரும் விமர்சனங்கள்தான்! பாராட்டுகளும், பட்டங்களும், பதக்கங்களும் கூட பிறகுதான் இடம் பிடிக்கும்! ஆனால் ‘என் எழுத்தை விமர்சி’ என்று அழைப்புவிடுக்கும் தைரியம் எத்தனை பேருக்கு வரும்? அதற்கு போட்டி வேறு! சிறந்த விமர்சனங்களுக்கு பரிசு வேறு!! உச்சத்தைத் தொட்டவர்களால்தானெ இதெல்லாம் முடியும்!? இந்தப்பத்து மாதங்களில் இவரால் வேறு எதைப்பற்றியாவது சிந்தித்திருக்கமுடியுமா என்பதும்கூட பெரும் கேள்விக்குறியே! ‘வாத்தியார்’ என்றாலே திறமைகளைக் கண்டுபிடித்து அதை முழுமையாக வெளிக்கொணர்ந்து பரிசுகளை வாரிக்கொடுத்து, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்துபவர்தானே? “வாத்தியாரை” நம்பிக்கெட்டவர்கள் எவரேனும் உண்டா?”
போட்டிக்குள் போட்டி என்று இரண்டு போட்டிகள்! நடுவர் யார் என்று ஒன்று! ‘முகம் காட்ட மறுத்த குயிலாக’ இருந்தவர் முகம் காட்ட அவரை அனுமானிப்பவர்க்கும் ஒருபரிசு! வந்த விமர்சனங்களில் SHORT LIST ஆனதில் எது எந்தப்பரிசிற்கு என்று ஒரு போட்டி! இதன் மூலமாக போட்டி நடத்தப்படும் விதம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளச் செய்ததோடு அதற்கும் பரிசு! விஜிகே ஒன்பதாம் வள்ளல்தான் – பரிசு வாரிக்கொடுப்பதில்! வெற்றியாளர்களெல்லாம் மயில் தோகைவிரித்ததுபோல பறக்கும்போது தொகையை யார் பொருட்படுத்துவாங்க வாத்தியாரே! அதெல்லாம் ஒண்ணும் குறையே இல்லை! வெற்றியால் கிடைக்கும் கெளரவம் மிகமிகப்பெரிதல்லவா? வாக்களிப்பில் எனக்கு முதலிடம் கிடைத்து, அந்த விமர்சனத்திற்கு முதல் பரிசும் கிடைத்து, அது வாத்தியாரின் 600ம் இடுகையாகவும் அமைந்ததில் எனக்கு கிடைத்த மகிழ்ச்சி ஆஸ்கர், நோபல், புலிட்ஸர் இன்னும் என்னென்ன விருதெல்லாம் இருக்கோ அதெல்லாம் சேர்த்து வாங்கியதுபோலவே உணரச்செய்தது! யாரென்றே தெரியாத நடுவர் பாரபட்சம் காட்டியிருந்தால், எவருமே முன்பின் அறிந்திராத எனக்கு 13/19 பரிசுகள்வரை கிடைத்திருக்குமா? இதைவிட நடுவரின் பாரபட்சமற்ற தன்மைக்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?
பரிசுத்தொகையை சித்திரகுப்தன் போல கணக்கு வச்சுகிட்டு கரெக்ட்டா அக்கவுண்ட்ல போட்டுபுட்டு மெயில் அனுப்பி பணம் வந்துடுச்சான்னு அன்போட யாரு கேப்பாங்க? அதுவும் பதில் கொடுக்க மாசக்கணக்குல எடுத்துக்குற என்போன்ற சோம்பேறிங்களுக்கு நடுப்புற? இதுல எங்கேயிருந்து குத்தம் கண்டுபுடிக்கிறது? அதெல்லாம் முடியாது வாத்யாரே! மிக மிகச் சரியான முறையில் காலம்தவறாமல் ‘பொற்கிழி’ தரப்பட்டுவிடுகிறது!
எனக்கேற்பட்ட அனுபவங்கள்: முதலில் வாத்தியாரின் அளவற்ற அன்பு + நட்பு கிடைத்தது! மற்ற சில நண்பர்கள் கிடைத்தது! என்னாலும் எழுதமுடியும், போட்டிகளில் பரிசுபெறமுடியும் என்று என்னை எனக்கே கொஞ்சம் அறிமுகப்படுத்தியது! பலரின் திறமைகளை உற்சாகப் படுத்தி வெளிக்கொணர்ந்தது, நமது பதிவுகளை எவ்வாறு மற்றவர்களுக்குக்கொண்டு செல்வது, நமது தளத்தை எவ்வாறு பிரபலப்படுத்துவது என்பதை அறியத்தந்தது! ஒரு கதையை எப்படி ஊன்றிப்படிக்க வேண்டும் என்ற விஷயம் ஓரளவுக்குப் புரிந்தது! எனது எழுத்து நடையினை இன்னும் கூர்மைப் படுத்தியது - இன்னும் எத்தனை எத்தனை?
கதைகளில் வாத்தியார் இணைத்திருக்கும் படங்கள் என்னை எப்பொழுதுமே வியக்க வைத்திருக்கின்றன! மிக மிகப் பொருத்தமான வெரைட்டியான படங்கள்! அவற்றைப்பற்றி குறிப்பிட வேண்டாமென்று நடுவர் சொல்லியிருந்தார்! ஆனால் பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா கதையின் விமர்சனத்திற்கு சேஷாத்ரி பல்லை சுத்தம் செய்யும் ஒரு GIF படத்திற்கு ஒலியுடனிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று விமர்சனத்தில் குறிப்பிட்டதை பாராட்டியிருந்தார்! இது சற்றே முரணான விஷயமாக மனதில் பட்டது! ஆனால் இதெல்லாம் சிறு விஷயம்தான்! நடுவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பொதுவான விதியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!
என் அருமை வாத்தியார் விஜிகே அவர்கள் வலை உலகில் ஆயிரத்தில் ஒருவன்! அலை அடிக்கும் வலை உலகில் பயணம் செய்ய கற்றுக்கொடுத்த ஓர் உன்னத படகோட்டி! என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்கு! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றும் ‘இதயக்கனி” என்றும் ‘பாசம்’ பொங்க என்னைக் கொண்டாடிய அவர் ‘எங்கள் தங்கம்’! எல்லோரும் வளர நினைத்து செயல்படும் அவர் ‘ஊருக்கு உழைப்பவன்’ அவரின் ‘முகராசி’க்கு இந்த போட்டி மட்டுமல்லாமல் எந்த போட்டி அறிவித்தாலும் வெற்றிகரமாகவே முடியும்! நாங்கள் வளர அயராது உழைத்து ‘நினைத்ததை முடிப்பவன்’ ஆன நீங்கள் ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்தி விடைபெறும்......
என்றென்றும் அன்புடன்
பின்குறிப்பு: போட்டியை விஜிகே-50 வரை நீட்டிக்கலாம்! பரிசுபெறாத சில விமர்சனங்களை எடுத்து அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டலாம்! (எனது விமர்சனங்களையே அந்த விமர்சனத்துக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்)! இதுவரை வந்த விமர்சனங்களில் வெற்றியை தவறவிட்டதில் ஆறுதல் பரிசுக்குத் தேர்வு செய்து வெளியிடலாம்! அதில் சிலருக்கு 'ஆறுதல்' கிடைக்கும்! இதுவரை வெளிவந்த ஒட்டுமொத்த விமர்சனங்களில் ஜனரஞ்சகமானதை தெரிவித்து பாராட்டலாம்! வித்தியாசமான விமர்சனத்தை தெரிவுசெய்து பாராட்டலாம். இடையில கொஞ்சம் மூட் அவுட்ல நான் காணாம போனதால வாத்யார லேசுல விட்டுட முடியுமா? இது நமக்குள் மட்டுமே!
என்றும் அன்புடன்,
MGR
என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய
திரு. ரவிஜி அவர்களே !
தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்
தாங்கள் இங்கு மனம் திறந்து பேசியிருப்பவை யாவும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
புயல்போல புறப்பட்டு வந்தது ... தங்களின் விமர்சனம் ... முதன்முதலாக VGK-13 ’வந்து விட்டார் வ.வ.ஸ்ரீ.’ என்ற என் நகைச்சுவைக்கதைக்கு. வந்த சூட்டோடு சூடாக தொடர்ச்சியாக VGK-13 to VGK-16 ஆகிய நான்கு கதைகளுக்கான விமர்சனங்களுக்குப் பரிசு பெற்றதோடு, கையோடு ஒரு ஹாட்-ட்ரிக்கும் [நான்கு சுற்று] அடித்து அசத்தினீர்கள்.
ஆண்களுக்கான வெற்றிச் ’சூழ்நிலை’ VGK-17 இல் அடியோடு பறிக்கப்பட்டது பெண்கள் அணியினரால். சற்றே சோர்வுதான் .... தங்களுக்கு மட்டுமல்ல, ஆண்களாகிய நம் அனைவருக்குமே.
அதன்பின் ‘பரோட்டா சூரி ஜோக்’ போல மீண்டும், புதிய கணக்கினை ஆரம்பித்தீர்கள். மேலும் பல வெற்றிகளைப் பெற்று மேலும் சில ஹாட்-ட்ரிக்கையும் அடித்தீர்கள். 19 போட்டிகளில் மட்டும் கலந்துகொண்டு 13 வெற்றிகள் அடைந்தது தங்களின் மிகப்பெரிய சாதனை தான்.
இருப்பினும் VGK-33 க்குப்பிறகு வந்ததே நம் போட்டிக்கு ஓர் சோதனை. வாத்யார் கலந்துகொள்ளாததால் போட்டிகளில் ஒருவித கலகலப்பே இல்லாமல் போய் விட்டதாக பொதுமக்கள் பேசிக்கொண்டார்கள்.
எனினும் இந்தப்போட்டியின் நிறைவு விழாவினில் தங்களின் சாதனைகளையும் கெளரவிக்கத்தான் உள்ளேன் என்பதை மட்டும் தங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தாங்கள் எங்கிருந்தாலும் எந்த சூழ்நிலைகளில் இருந்தாலும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!! என வாழ்த்தி மகிழ்கிறேன்.
பின்குறிப்பு:
தாங்கள் 11th to 17th August, 2014 வலைச்சர ஆசிரியராக இருந்தபோது என்னைப்பற்றியும், என் வலைத்தளத்தினைப்பற்றியும், குறிப்பாக இந்த என் சிறுகதை விமர்சனப்போட்டிகள் பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துக்கூறி, அனைவரையும் இதில் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்ததை என்னால் என்றும் மறக்கவே இயலாது. தங்களின் அளவுகடந்த பேரன்புக்கு மீண்டும் என் நன்றிகள்.
அவற்றிற்கான இணைப்புகள் இதோ:
அவற்றிலிருந்து ஒருசில வரிகள் மட்டும் :
விமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு போட்டிய அறிவிச்சு, “என் கதைகள விமர்சனம்பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும் கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய மனசு எல்லாருக்கும் வருமா? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGK. அவரு தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு! சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு! சிந்திக்கவும் வைப்பாரு! எத சொல்ல? எத விட?
அவருதாங்கோ தனது 600ம் இடுகைய வெற்றிகரமாக இட்ட ‘நம்ம வாத்தியார்’ வை. கோபாலகிருஷ்ணன் அவுங்க! என்னோட அதிர்ஷ்டம் என்னன்னா அந்த இடுகைல எனக்கும் முதல் பரிசு கிடைச்சதுக்கான அறிவிப்பு வெளியானதுங்கறதுதான்! இதவிட வேற என்ன வேணும்? கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும்! எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு வாங்குனவங்க பட்டியல்ல!
ஏங்க என்னையே ஊக்கப்படுத்தி எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி பரிசு வாங்க முடியாது? இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க! வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு பாருங்க!
தங்களின் பின்குறிப்புக்கு என் பதில்:
THANKS FOR YOUR VALUABLE SUGGESTIONS. BUT I REGRET TO STATE THAT THEY ARE NOT PRACTICALLY POSSIBLE FOR ME, AT THIS STAGE.
MY SUGGESTIONS TO YOU:
தங்களின் பரிசு பெற்ற விமர்சனங்களை தங்களின் பதிவினில் அவ்வப்போது வெளியிட்டு சிறப்பித்திருந்தீர்கள் அல்லவா! அதே போல போட்டியில் தாங்கள் கலந்துகொண்டு ஏதோ ஒருசில காரணங்களால் பரிசுக்குத்தேர்வாகாத தங்களின் விமர்சனங்களையும் தங்கள் பதிவினில் வெளியிட்டு, மற்றவர்களின் பார்வைக்கும், கருத்துக்களுக்கும் சமர்பிக்கலாம். இதே முறையினை சிலர் இன்றும் பின்பற்றி வருகிறார்கள். இதோ அவற்றில் ஒருசில உதாரணங்கள் மட்டும்:
திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
திரு. ரமணி அவர்கள்
திரு. பெருமாள் செட்டியார் அவர்கள்
திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்
எழுத்துலகில் இது ஒரு ஆரோக்யமான வரவேற்கப்படும் செயலாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதுபோல தாங்கள் தங்களின் பரிசு பெறாத விமர்சனங்களை வெளியிடும்போது, அந்த சிறுகதைக்கான இணைப்பையும், தலைப்பையும் கொடுத்தால் படிப்பவர்களுக்கு செளகர்யமாக இருக்கக்கூடும். தாங்கள் வெளியிடப்போகும் இதுபோன்ற புதிய பதிவுகளுக்கான இணைப்பினை எனக்கும் மின்னஞ்சலில் அனுப்பி வைத்தால், சம்பந்தப்பட்ட என் கதைக்கான பதிவுகளின் பின்னூட்டப்பெட்டியிலும், அவை ஓர் விளம்பரமாக என்னால் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன் தங்கள் VGK
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
VGK-39
நினைவூட்டுகிறோம்
இந்த வார சிறுகதை
விமர்சனப் போட்டிக்கான
கதையின் தலைப்பு:
VGK-39
மாமியார்
விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:
போட்டிகளில் கலந்துகொள்ள
இன்னும் தங்களுக்கு
இரண்டே இரண்டு
வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
என்பது நினைவிருக்கட்டும் !!
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
அன்புள்ள வாத்தியார் விஜிகே அவர்களுக்கு! அனேக நமஸ்காரங்கள்! எழுதிய சிறுகதைகளுக்கு ஒரு விமர்சனப் போட்டி!... பரிசுகள்!... பாராட்டுகள்! விமர்சனப் போட்டிக்கு ஒரு நேயர் விமர்சனக் கடிதம்..! அதற்கு ஒரு தனி இடுகை...! இதைவிட சிறப்பாக ஒரு போட்டியை எவராவது நடத்தமுடியுமா என்பது சந்தேகமே! 'வலைவீசி'த் தேடினாலும் 'ஆயிரத்தில் ஒருவன்' கூட அப்படி கிடைப்பது சந்தேகமே! வாத்தியாரின் 'இதயக்கனி'யாகும் பேறு நான் பெறக்காரணம் இந்தப்போட்டிதான்! விமர்சனப் போட்டி நிறைவுபெறும்! ஆனால் முழுமன-நிறைவைத்தந்த இந்த அன்புறவு என்றென்றும் - தொடரும்......!!!
பதிலளிநீக்குமனம(நெ)கிழ்ச்சியுடன்...
என்றும் உங்கள் எம்ஜிஆர்!
அன்பு வாத்யாரே! உங்களின் suggestion முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றுதான்! இத்தன நாளா இது புத்திக்கு எட்டாம பொயிடுச்சே! அதையும் செஞ்சிடுறேன் வாத்யாரே! நன்றி!
பதிலளிநீக்குஒரு நீண்ட பிரயாணத்திற்குப் பின் நீராவி ரெயில் என்ஜின் குப்குப் என்று புகையை இழுத்து விட்டு நிற்பது போல.
பதிலளிநீக்குசகோதரர் ரவிஜியின் நீண்ட விமர்சனக் கட்டுரையை படித்ததும் உணர்ந்தேன். அதாவது ஒரே மூச்சில் படித்தேன். சலிப்பு தட்டவில்லை. அவரது இந்த கட்டுரையே தனித்துவமாக நிற்கிறது. விமர்சனக் கட்டுரையை வாலாம்பாளுக்குப் பதிலாக பாலாம்பாளுக்கு அனுப்பி வைத்தது நல்ல நகைச் சுவை.
எல்லா விமர்சகர்களும் சொல்லும் அய்யா V.G.K அவர்களின் உழைப்பு மற்றும் போட்டியின் சிறப்பினைப் பற்றிய ரவிஜியின் கருத்தில் எந்தவிதமான மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஏற்கனவே “வலையுலக வாத்தியார்” என்ற பட்டத்தினை, மின்னல் வரிகள் பாலகணேஷ் அவர்களுக்கு அவருடைய சிஷ்யப் பிள்ளைகள் கொடுத்து விட்ட படியினால் வேறு பெயரைத்தான் சொல்ல வேண்டும். அய்யா V.G.K அவர்களை வலையுலகப் பிதாமகர் என்றும் சொல்லலாம்.
வாருங்கள்! திரு. தமிழ் இளங்கோ! வணக்கம்! நான் உணர்ந்தவற்றை அப்படியே நேயர் கடிதமாகத் தந்துவிட்டேன்! தங்களின் ரசனையே அதனை சிலாகிக்கச் செய்துவிட்டது என்றால் அது மிகையில்லை! உங்கள் ரசனைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! விஜிகே அவர்கள் எனக்கு வலையுலகில் என்றுமே வாத்தியார்தான்! அவர்கிட்ட சின்சியர் ஸ்டூடன்டா இருந்தாலே நான் என்கேயோ போய்விடலாம்! ஆனா லாஸ்ட் பென்ச் ஸ்டூடன்டா இருக்கேனே! என்ன பண்றது? பாலாம்பாள்கிட்ட நான் மாட்டியிருந்தா ஒருவேளை அப்பளக்கொழவியாலயே அடி வாங்கியிருப்பேனோ என்னவோ! கருத்துக்கு மிகவும் நன்றி நண்பரே! அன்புடன் எம்ஜிஆர்
நீக்குஅருமையான கடிதம். பாராட்டுகள் ரவிஜி.
பதிலளிநீக்குமிக மிக நன்றி நண்பரே!
நீக்குஒரு கதையை எப்படி ஊன்றிப்படிக்க வேண்டும் என்ற விஷயம் ஓரளவுக்குப் புரிந்தது! எனது எழுத்து நடையினை இன்னும் கூர்மைப் படுத்தியது - இன்னும் எத்தனை எத்தனை?//
பதிலளிநீக்குநுணுக்கமாக ஆய்வு செய்து உணர்ந்து எழுதிய எழுத்துகள் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது...!
திரு. ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர் அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!
மிகவும் நன்றி சகோதரி! நான் பொதுவாகவே மேம்புல் மேயுர ரகம்தான்! இந்த விமர்சனப்போட்டிதான் என்னை ஓரளவுக்கு ஊன்றிப் படிக்கச்செய்தது! எதையும் ஊன்றிப்படித்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கிறது! "நீ ரொம்பவே லேட்டா" என்கிறது என் மனசாட்சி! இப்பவாச்சும் என்னை கொஞ்சம் திருத்திய வாத்தியாருக்கு நன்றி! உங்களின் கருத்துக்கும்தான் சகோதரி!
நீக்குஒரு கதையை எப்படி ஊன்றிப்படிக்க வேண்டும் என்ற விஷயம் ஓரளவுக்குப் புரிந்தது! எனது எழுத்து நடையினை இன்னும் கூர்மைப் படுத்தியது - இன்னும் எத்தனை எத்தனை?//
பதிலளிநீக்குநுணுக்கமாக ஆய்வு செய்து உணர்ந்து எழுதிய எழுத்துகள் பட்டை தீட்டிய வைரமாக ஜொலிக்கிறது...!
திரு. ரவிஜி @ மாயவரத்தான் எம்ஜிஆர் அவர்களுக்கு
இனிய வாழ்த்துகள்..! பாராட்டுக்கள்..!
//கதைகளில் வாத்தியார் இணைத்திருக்கும் படங்கள் என்னை எப்பொழுதுமே வியக்க வைத்திருக்கின்றன! மிக மிகப் பொருத்தமான வெரைட்டியான படங்கள்! அவற்றைப்பற்றி குறிப்பிட வேண்டாமென்று நடுவர் சொல்லியிருந்தார்! ஆனால் பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா கதையின் விமர்சனத்திற்கு சேஷாத்ரி பல்லை சுத்தம் செய்யும் ஒரு GIF படத்திற்கு ஒலியுடனிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று விமர்சனத்தில் குறிப்பிட்டதை பாராட்டியிருந்தார்! இது சற்றே முரணான விஷயமாக மனதில் பட்டது! ஆனால் இதெல்லாம் சிறு விஷயம்தான்! நடுவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பொதுவான விதியை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்!//
பதிலளிநீக்குஅன்புள்ள திரு. ரவிஜி அவர்களுக்கு,
வணக்கம்.
நடுவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்ற பொதுவான விதி ஒருபுறம் இருக்கட்டும். அதை நாம் ஏற்றுக்கொள்வோம் அல்லது ஏற்றுக்கொள்ளாமல் இருப்போம். அது நமது இஷ்டம் அல்லது அவரவர் இஷ்டம்.
ஆனால் நம் நடுவர் அவர்கள் நம்மோடு இன்று ஒன்றிவிட்ட ஒருவரே. அவரை நாம் நமக்கு அப்பாற்பட்டவராக நினைத்து ஒதுக்கி, அவருடன் நாம் ஒரு இடைவெளியை உண்டாக்கிக்கொள்ள வேண்டாம் என சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
’இது சற்றே முரணான விஷயமாக தங்கள் மனதில் பட்டது!’ என எழுதியுள்ளீர்கள்.
இதில் ஒன்றும் முரண் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எப்படிச்சொல்கிறேன் என்றால்........
http://gopu1949.blogspot.in/2014/07/blog-post_29.html
இந்த மேற்படி பதிவினில் திரு. நடுவர் அவர்கள் 29.07.2014 அன்று எழுதியுள்ள 'மனம் திறந்து' ... நடுவர் குறிப்பு என்பதை மீண்டும் படித்துப்பார்த்தால் அதில் படங்களைப்பற்றி அவர் எழுதியுள்ள இன்னொரு பாஸிடிவ் ஆன விஷயமும் உள்ளதும் நமக்குத்தெரியவரும். இதோ அந்த வரிகள்:
//ஒன்று தெளிவாக வேண்டும் நமக்கு. அந்த படங்கள் தகுந்த இடத்தில் தகுந்த படமாக அமைத்தது நமது வாசிப்புணர்வை மேம்படுத்தவே.// - நடுவர் 29.07.2014
oooooooooooooooooooo
இதே வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்திச் சொல்லியுள்ளது தான் அந்த TEETH CLEANING என்ற படத்திற்காக திரு. E.S. Seshadri அவர்கள் சொல்லியிருந்த கருத்தினைப்பாராட்டி நடுவர் அவர்கள் எழுதியிருந்த கருத்தினிலும் http://gopu1949.blogspot.in/2014/08/vgk-28-03-03-third-prize-winner.html உள்ளது. அதை இங்கே கீழே தங்களின் பார்வைக்காக அப்படியே மீண்டும் கொடுத்துள்ளேன்:
oooooooooooooooooooo
//கண்கள் படத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கையில் நமது ரசனையானது துண்டுபட்டு இன்னும் தனக்கு இசைவான போக்கில் அந்த படத்தை மேலும் ரசிக்கும். இதுவே வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துவதில் படங்களின் பங்களிப்பு.
உதாரணத்திற்கு:
**பல்லை சுத்தம் செய்யும் படத்திற்கு ஒலியும் சேர்த்திருந்தால் நிச்சயம் நாம் பயந்திருப்போம்.** - E.S.Seshadri
--- 'பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா' கதை விமரிசனப் பகுதியில் விமர்சகர் E.S. சேஷாத்ரி அவர்கள் சொன்னது http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26-02-03-second-prize-winners_26.html ஹஹ்ஹஹா சிரிப்பை வரவழைத்து இல்லையா?.. இதுவே இப்படியான ரசனையின் அடிப்படை.. - -- நடுவர் 09/08/2014
oooooooooooooooooooo
இதனால் நம் நடுவர் அவர்கள் படங்களை அடியோடு வெறுப்பவர் அல்ல, ரஸிப்பவரும் தான் என எனக்குத்தெரிகிறது. விமர்சனம் எழுதுவோர், தங்களின் விமர்சனங்களில், கதையினில் காட்டியுள்ள படங்களைப்பற்றியே அதிகமாக பிரஸ்தாபித்துக்கொண்டிருக்க வேண்டாம் எனச் சொல்லவந்ததுதான், அவரின் உண்மையான நோக்கமாகும், என்பதை நாமும் பாஸிடிவ் ஆக எடுத்துக்கொள்வோம்.
இதில் முரண் ஏதும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை என்பதை மட்டும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அன்புடன் கோபு [VGK]
வாத்யாரே! வணக்கம்! வாத்தியாரின் 'நிழலும்' பாடம் கற்றுக்கொடுக்கும் (VG-GV)! மதிப்பிற்குரிய நடுவர் அவர்களும் உங்களைப்போல ஒரு மிகவும் தேர்ந்த எழுத்தாளர்! கதாசிரியர்! இப்பொழுது நீங்கள் கேட்டுக்கொண்டபடி விமர்சனப்போட்டிக்கு நடுவர்! அவரை குறைசொல்வதாகவோ, குற்றம் சாட்டுவதாகவோ தயவுசெய்து எண்ணவேண்டாம்! உங்களின் சிறுகதைகளுக்கு உங்களின் பல்வேறுவிதமான படங்களின் தெரிவு என்னை எப்பொழுதுமே வியக்கவைத்திருக்கிறது!(நானும் அதே கூகிள்லதான் தேடுறேன் - கெடக்க்க்க மாட்டேங்குதே அந்தமாதிரி படம் எல்லாம்)! உங்களின் கதைகளிலிருந்து படங்களைப் பிரித்துப் பார்க்கவே முடியவில்லை! பத்து பக்கங்கள் விவரிக்கக்கூடிய விஷயத்தை ஒரு படம் சொல்லிவிடுமே! இரண்டையும் ஒரு சேர ரசித்தால்?! ஆஹா! பல கதைகளில் உங்களின் கதைமாந்தர்களையே புகைப்படம் எடுத்ததுபோலவே அமைந்த படங்களை என்னவென்று சொல்வது! 'என்னப் பொருத்தம் - படங்களின் இந்தப்பொருத்தம்' ? அதுவும் சில சிறுகதைகள் சித்திரக்கதைகளைப்போலவேகூட அமைந்திருந்தது! அதைத்தான் நான் குறிப்பிட விரும்பினேன்! நண்பர் சேஷாத்திரியின் விமர்சனத்திற்குக் கிடைத்ததைப்போலவே அதே கதைக்கான எனது விமர்சனத்திற்கும் (நான் படங்களைப்பற்றிக் குறிப்பிடாதபோதும்) உயர்திரு. ஜிவி அவர்கள் பரிசளித்து இருந்தார்! எனது ஆதங்கமே ரோஜாவை ரோஜா என்று சொல்லாமலும் கண்ணைக்கவர்கிறது என்றும், மணக்கிறது என்றும் சொல்லாமலும் இருக்கவேண்டியிருந்ததுதான்! அது வி'ஜி' - 'ஜி'வி என்ற இரு எழுத்து ஜி(சி)த்தர்களுக்கும் (ஜி -ஃபொர் ஜித்தன்!) புரிந்திருக்கும்! படங்களை அதிகம் ரசித்துவிட்டு கஷ்டப்பட்டு எழுதிய வாத்தியாரின் எழுத்துக்களை முழுமையாக ரசிக்காமல் விட்டுவிடக்கூடாது என்பது ஜிவி ஐயா அவர்களின் எண்ணம்! இவ்வளவு கஷ்டப்பட்டு செய்த படத்தெரிவுகளையும் சேர்த்து சிலாகிப்பது நன்றாக இருக்குமென்பது என் மனதில் பட்டது! என்ன? நண்பர் சேஷாத்திரியைப்போல இன்னும் சிலர் ரசித்துப்பாராட்டியிருக்கக்கூடிய வாய்ப்பு நடுவர் அவர்கள் சொல்லிவிட்டாரே என்பதனால் விடுபட்டுப்போய்விடுகிறதல்லவா? அதைத்தான் குறிப்பிட விரும்பினேன் வாத்யாரே! எம்ஜிஆரை உங்களுக்குத்தெரியாதா? ஜிவி அவர்கள் என்றும் நம்மில் ஒருவர்! இல்லை இல்லை நான் உங்களில் ஒருவன்! ஜிவி ஐயா அவர்களின் விமர்சனம் ... ம்ஹூம்! என்னால அப்படியெல்லாம் எழுதமுடியுமா? சந்தேகமே! அன்புடன் எம்ஜிஆர்!
நீக்குமிக அழகாகவும், அருமையாகவும் எழுதியதோடு கடைசியில் எம்.ஜி.ஆரின் படங்களை வைத்தே பாராட்டியுள்ளது மிக மிகச் சிறப்பு. வாழ்த்துகள். திரு வைகோ அவர்களின் தகுதிக்கு இவை எல்லாம் மேலும் சிறப்பை அளிக்கின்றன.
பதிலளிநீக்குநன்றி சகோதரி! படங்களில் 'வாத்தியார்' விஜிகே அவர்கள்தான் கில்லாடி! வாத்தியார் படத்தைப்போட்டு குஷிப்படுத்தியதும்கூட வாத்தியார்தான்! அவரைப்பத்தி சொல்லிகிட்டே இருக்கலாம்!
நீக்குகோபு சாரை “ வாத்தியார் “ஆக்கி விட்டார். வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஎனக்கு வலையுலக வாத்தியார் விஜிகே அவர்கள்தான் ஐயா! வருகைக்கு நன்றி!
நீக்குஇந்த வாரம் முடிந்து, அடுத்த வாரத்துடன் விமரிசனப் போட்டி முடியப் போகிறதே என எண்ணுகையில் வருத்தமாகத்தான் உள்ளது.
பதிலளிநீக்குதிரு. ரவிஜியின் சில ஆலோசனைகள் நன்றாக இருந்தன. அதற்கு
கோபு சாரின் பதில் புதிய பாதையைக் காட்டியது.
வாருங்கள் நண்பரே! பாத்து பலகாலமாச்சு! ஆலோசனை சொல்வது எப்பவுமே கொஞ்சம் ஈஸிதான்! செயல்படுத்துவது? கோபுசாரின் பதில் - எப்பவுமே புதுப்புது பாதைகளைக்காட்டியவண்ணமேதான் இருக்கும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! அன்புடன் எம்ஜிஆர்
பதிலளிநீக்குமனந்திறந்த நேயர் கடிதத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள் ரவிஜி. இந்தப் போட்டியின் மூலமே இப்படியொரு பதிவர் இருக்கிறார் என்று தங்கள் அறிமுகம் கிடைத்தது. நல்ல கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் விமர்சனங்களை எழுதி உங்களுக்கென்று தனி பாணியைக் கைக்கொண்டுவிட்டீர்கள். இந்தக் கடிதத்திலும் அது அழகாக தொணிக்கிறது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாருங்கள் சகோதரி கீதா ! எனக்கும் இந்த போட்டியின் மூலமே பல நல்ல அறிமுகங்கள் + அனுபவங்கள் கிடைத்தது! //நல்ல கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் விமர்சனங்களை எழுதி உங்களுக்கென்று தனி பாணியைக் கைக்கொண்டுவிட்டீர்கள். இந்தக் கடிதத்திலும் அது அழகாக தொணிக்கிறது. பாராட்டுகள்.// கல்லுக்குள் இருக்கும் சிலையை வெளிக்கொணர்வது சிற்பியின் திறமை! கவிஞர், காமெடியன், இசை அமைப்பாளர் என அனைவரின் திறமைகளையும் வெளிக்கொணர்வது 'வாத்தியாரின்' திறமை' எனது வாத்தியார் விஜிகே அவர்கள்தான்! அவர் விரும்பியபடியே எழுதத்துவங்கியே எனக்கென ஒரு பாணி உருவாகியது! உங்களின் பாராட்டுகள் விஜிகே வாத்தியாருக்குதான் போய்சேரும்! கருத்துக்கு மிகவும் நன்றி! அன்புடன் எம்ஜிஆர்
நீக்குஅழகான நேயர் கடிதம்.
பதிலளிநீக்குரவிஜி அவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை வைத்து அருமையாக ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழத்தியது மிக அருமை.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
//விஜிகே அவர்கள் வலை உலகில் ஆயிரத்தில் ஒருவன்! அலை அடிக்கும் வலை உலகில் பயணம் செய்ய கற்றுக்கொடுத்த ஓர் உன்னத படகோட்டி! என்னைப்போன்ற கத்துக்குட்டிகளுக்கு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்கு! ‘எங்க வீட்டுப் பிள்ளை’ என்றும் ‘இதயக்கனி” என்றும் ‘பாசம்’ பொங்க என்னைக் கொண்டாடிய அவர் ‘எங்கள் தங்கம்’! எல்லோரும் வளர நினைத்து செயல்படும் அவர் ‘ஊருக்கு உழைப்பவன்’ அவரின் ‘முகராசி’க்கு இந்த போட்டி மட்டுமல்லாமல் எந்த போட்டி அறிவித்தாலும் வெற்றிகரமாகவே முடியும்!//
பதிலளிநீக்குபாராட்டிற்கும் போற்றுதலுக்கும் உரியவர் திரு வைகோ அவர்கள்! நடுவரின் குறிப்புகளும் விமர்சனமும் அற்புதம்!
ரவிஜியின் நேயர் கடிதம் தேனாக இனிக்கிறது.
பதிலளிநீக்குரவிஜி அவர்களின் நேயர் கடிதம் ரொம்ப நல்லா இருக்கு வாத்யாரே.
பதிலளிநீக்குபூந்தளிர் September 4, 2015 at 2:20 PM
நீக்குவாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.
//ரவிஜி அவர்களின் நேயர் கடிதம் ரொம்ப நல்லா இருக்கு வாத்யாரே.//
ஆஹா, பூந்தளிருக்கும் நான் தான் வாத்யாரா ? :))))))))))
மிகவும் சந்தோஷம்மா. மிக்க நன்றிம்மா.
பிரியமுள்ள கோபு
மனம் நெகிழ்ந்து எழுதி இருக்கிறார் திரு ரவிஜி அவர்கள் இந்தக் கடிதத்தை.
பதிலளிநீக்குகடிதாசி ரொம்ப நல்லா இருக்கு. வரிக்கு வரி பாராட்டலாமுன்னா அல்லா வரிகளுமே நல்லா இருக்குதே. குறிப்பா ஒன்னுமட்டுமே சொல்லமுடிதாதுல்ல.
பதிலளிநீக்குநேயர் கடிதங்கள் எழுதி இருப்பவர்கள் எல்லாருமே இந்த விமரிசனப்போட்டியை மையமாக வைத்தே எழுதியிருக்கிறார்கள். இதன் மூலம் பலரின் எழுத்துத் திறமை வெளிப்பட்டு இருக்கிறது
பதிலளிநீக்கு;-)))))))))))))))))))))
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்கு'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html
பதிலளிநீக்குதலைப்பு: ’இன்று போல் என்றும்’
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு