வலைத்தளம்:
http://muhilneel.blogspot.com/
"muhilneel"
"muhilneel"
tamizhmuhil.blogspot.com
”முகிலின் பக்கங்கள்”
திருமதி
தமிழ்முகில் பிரகாசம்
அவர்களின் பார்வையில் !
மதிப்பிற்குரிய திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கு,
வணக்கம். வலையுலகில் புதியதாக ஓர் போட்டி. தங்களது அற்புதமான சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத ஓர் வாய்ப்பு. பொதுவாக, பலரும் தங்களது படைப்பைக் குறித்து பிறர் விமர்சனம் செய்வதை அவ்வளவாக விரும்ப மாட்டார்கள். நீங்கள், உங்களுடைய சிறுகதைகளை படித்து, அவற்றை விமர்சனம் செய்யக் கூறி, நல்ல விமர்சனங்களுக்கு பரிசுகளும் அளித்து வருகிறீர்கள். அது மட்டுமன்றி, சில கதைகளுக்கு பங்கேற்ற அனைத்து விமர்சனங்களுக்குமே போனஸ் பரிசு என்று வழங்கி அனைவரையும் மகிழ்வித்து உள்ளீர்கள்.
நான் தங்களது மூன்றாம் சிறுகதையான " சுடிதார் வாங்கப் போறேன் " சிறுகதைக்கு முதன் முதலாக எனது விமர்சனத்தை அனுப்பினேன். அந்த விமர்சனத்திற்கு எனக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது. இது குறித்து அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். அதன் பின் என்னால் இயன்றவரை தங்களது சிறுகதைகளுக்கு எனது விமர்சனங்களை அனுப்பி வந்தேன். சில சமயங்களில், கைப்பட விமர்சனங்களை எழுதி வைத்து விட்டு, அவற்றை தட்டச்சு செய்ய நேரமில்லாத காரணத்தினால், அனுப்பாமல் விட்டுப் போன விமர்சனங்களும் உண்டு.
சில சிறுகதைகளுக்கு மட்டுமே விமர்சனம் அனுப்பியிருந்தாலும், பலவற்றை புதியதாகக் கற்றுக் கொண்டுள்ளேன். முதலில், சிறுகதை விமர்சனம் என்பதே எனக்கு புதியது தான். விமர்சனக் கலை குறித்து அறிந்து கொண்டதே தங்கள் வாயிலாகத் தான். அதற்கு முதற்கண் என் மனமார்ந்த நன்றிகள்.
இரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.
ஒரு போட்டியை அறிவித்து, அதை திறம்பட தொய்வேதும் இல்லாது நடத்தி, பரிசுத் தொகையை அவ்வப்போது, வெற்றி பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து, அப்பப்பா, எவ்வளவு வேலைகள் ! இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களுக்கு எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தங்களது சிறுகதைகளுக்கு விமர்சனம் எழுத நேரமில்லாது போனாலும், வாராவாரம் வியாழன் காலை பதினோறு மணிக்கு ( அதாவது இந்திய நேரப்படி வியாழன் இரவு எட்டரை மணிக்கு ) தங்களது புதிய சிறுகதையை படிக்க தவறியதில்லை.
நல்லதோர் வாய்ப்பினை வழங்கி, புதிய விஷயங்கள் பலவற்றை அறியச் செய்து, ஊக்கமும் உற்சாகமும் வழங்கி வரும் தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி.
இப்படிக்கு,
திருமதி.பி.தமிழ் முகில்
அன்புள்ள
திருமதி. தமிழ்முகில் அவர்களே !
தங்களுக்கு முதலில் அடியேனின் வணக்கங்கள்
தாங்கள் இங்கு மனம் திறந்து
எழுதியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும்,
உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
தாங்கள் இந்தப்போட்டியின் ஆரம்பகட்டத்தில் 13 போட்டிகளில் மட்டுமே
கலந்துகொண்டீர்கள்.
அதிலும் முதன் முதலாகத் தாங்கள் கலந்துகொண்ட VGK-03 ’சுடிதார் வாங்கப்
போறேன்’ என்ற என் கதைக்கான தங்களின் விமர்சனம் நடுவர் அவர்களால்
பரிசுக்குத்தேர்வானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மேலும்
VGK-05 'காதலாவது .... கத்திரிக்காயாவது’ என்ற கதையிலும் தங்களின் விமர்சனம்
மீண்டும் பரிசுக்குத்தேர்வானதில் என் சந்தோஷம் இருமடங்காக இருந்தது.
அதன்பிறகு தங்களின் குடும்ப சூழ்நிலைகளால், தங்களின் முழுத்திறமைகளை
வெளிப்படுத்தி தொடர்ந்து போட்டியில் கலந்துகொள்ள இயலாமல் உள்ளதாகச்
சொல்லியிருந்தீர்கள். இது பெரும்பாலும் இந்தப்போட்டிகளில் கலந்துகொண்ட
எல்லோருக்குமே ஏற்பட்ட சோதனைகள் தான். அதனால் பரவாயில்லை.
எல்லோருக்குமே ஏற்பட்ட சோதனைகள் தான். அதனால் பரவாயில்லை.
//இரண்டாவதாக, எனது விமர்சனங்கள் பரிசுக்கு தேர்வாகாது போனாலும், எனது வலைப்பூவில் வெளியிட்ட போது, தங்களது மேலான கருத்துக்கள், ஊக்கமூட்டும் வார்த்தைகள் என்னை மேலும் எழுத உற்சாகமூட்டும் தூண்டுகோலாய் அமைந்தன.//
போட்டியில் கலந்துகொண்ட பின் அந்தத் தங்களின் விமர்சனம் நம் நடுவர்
அவர்களால் பரிசுக்குத் தேர்வானாலும், தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத்
தங்களின் வலைத்தளப்பதிவுகளில் வெளியிட்டு சிறப்பித்திருந்தீர்கள். இது மிகவும்
பாராட்டப்பட வேண்டியதோர், அரிய பெரியதோர் துணிச்சலான மற்றும்
எழுத்துலகுக்கான ஆரோக்யமான செயல் மட்டுமே. எல்லோரும் இதை துணிந்து
விரும்பிச்செய்ய மாட்டார்கள். தயங்குவார்கள்.
பாராட்டப்பட வேண்டியதோர், அரிய பெரியதோர் துணிச்சலான மற்றும்
எழுத்துலகுக்கான ஆரோக்யமான செயல் மட்டுமே. எல்லோரும் இதை துணிந்து
விரும்பிச்செய்ய மாட்டார்கள். தயங்குவார்கள்.
தாங்கள் செய்த இந்தச்செயல் எழுத்துலகில் ஓர் புதுமையும். வரவேற்கப்பட
வேண்டியதும், பிறரால் பின்பற்றப்பட வேண்டியதுமான ஓர் ஆரோக்யமான
முன்னுதாரணம் என்றும் சொல்வேன்.
வேண்டியதும், பிறரால் பின்பற்றப்பட வேண்டியதுமான ஓர் ஆரோக்யமான
முன்னுதாரணம் என்றும் சொல்வேன்.
தங்களைப்பார்த்து மேலும் சிலரும் இதுபோலச் செய்து சிறப்பித்திருந்தார்கள்.
இன்றுவரை இதனை சிலர் பொறுப்புடனும் ஆவலுடனும் செய்துவருவது மிகவும்
இன்றுவரை இதனை சிலர் பொறுப்புடனும் ஆவலுடனும் செய்துவருவது மிகவும்
மகிழ்ச்சியளிக்கிறது.
[உதாரணமாக ஒருசிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்:
திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள்
திரு. ரமணி அவர்கள்
திரு. பெருமாள் செட்டியார் அவர்கள்]
இருப்பினும் ’VGK-12 உண்மை சற்றே வெண்மை’ வரை இதனை மிகுந்த ஆர்வத்துடன்
செய்துவந்த தாங்கள், அதன்பிறகு தாங்கள் கலந்துகொண்ட VGK-17, VGK-18, VGK-23
மற்றும் VGK-24 ஆகிய நான்கு விமர்சனங்களை மட்டும் தங்கள் பதிவினில்
இதுவரை வெளியிடாமல் உள்ளீர்கள் என்பதையும் நினைவூட்டிக்கொள்கிறேன்.
தாங்கள் 05.05.2014 முதல் 11.05.2014 வரை வலைச்சர ஆசிரியராக
ஒருவார காலம் பொறுப்பேற்றிருந்தபோது அதில் மூன்று நாட்கள்
என்னைப்பற்றியும் என் வலைத்தளம் பற்றியும் எழுதியிருந்தீர்கள்.
மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.
தாங்கள் 05.05.2014 முதல் 11.05.2014 வரை வலைச்சர ஆசிரியராக
ஒருவார காலம் பொறுப்பேற்றிருந்தபோது அதில் மூன்று நாட்கள்
என்னைப்பற்றியும் என் வலைத்தளம் பற்றியும் எழுதியிருந்தீர்கள்.
மிக்க நன்றி, மிகவும் சந்தோஷம்.
அனைவருக்கும் முதற்கண் எனது அன்பு வணக்கங்கள். எனது பெயர் பி. தமிழ் முகில். இன்று தொடங்கி, இன்னும் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்க உள்ளேன். தங்களது மேலான அன்பினையும் ஆதரவையும் நாடுகிறேன்.
சில நாட்களுக்கு முன்பு திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது. முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
சில நாட்களுக்கு முன்பு திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க கேட்ட போது, சில காரணங்களால் இயலாமல் போனது. முதன் முறையாக வலைச்சரத்தில் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். நல்லதோர் வாய்ப்பளித்த திரு. சீனா ஐயா அவர்களுக்கும், திரு. வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
அதிலும் 09.05.2014 வெள்ளிக்கிழமையன்று
என் இந்த சிறுகதை விமர்சனப்
போட்டியினைப் பற்றி வலைச்சரத்தில்
மிகச்சிறப்பான விளம்பரமும் கொடுத்திருந்தீர்கள்.
மிகச்சிறப்பான விளம்பரமும் கொடுத்திருந்தீர்கள்.
இதோ இங்கே அதனை அப்படியே கொடுத்துள்ளேன்.
அறிவிப்பு
திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில்
நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி
நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி
அன்பின் திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா
அவர்களின் வலைத்தளத்தினில்
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:
இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு:
“ சூ ழ் நி லை ”
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
oooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooo o
தங்களின் பேரன்புக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
போட்டியில் தொடர்ந்து தங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டாலும்
என் சிறுகதைகளை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து படித்து
வந்ததாகச் சொல்வதைக்கேட்கவே, எனக்கு மிகவும் சந்தோஷமாக
உள்ளது.
//இது போதாதென்று, எனது வங்கிக் கணக்கு எண் வேறு நான் பிழையாகக் கொடுத்து விட, அதனால் தங்களது எவ்வளவு சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் என்பதை உணருகிறேன். நான் செய்த பிழைக்கு மன்னித்து விடும்படி கேட்டுக் கொள்கிறேன்.//
தங்களின் வங்கித்தகவல்களை முதலில் தவறுதலாக எழுதி அனுப்பிவிட்டீர்கள். பிறகு
அந்தப்பணம் சரியாகப்போய்ச்சேராமல் எங்களுக்கே [நல்ல வேளையாகத்] திரும்பி
வந்தது தெரிந்ததும், அமெரிக்காவில் உள்ள தங்களையும், தாங்கள்
கேட்டுக்கொண்டபடி தொலைபேசியில் கோவையில் உள்ள தங்கள் தந்தையையும்
நான் தொடர்பு கொண்டேன்.
பிறகு சரியான சேமிப்புக்கணக்கு எண்ணுடன் தகவல் அனுப்பி வைத்தீர்கள். அந்த
REVISED SB ACCOUNT க்கு நாங்கள் 29.04.2014 அன்று பணத்தை மீண்டும் அனுப்பி
வைத்தோம். பணம் கிடைத்துவிட்டதாக 11.05.2014 அன்று தாங்கள் Confirm செய்தீர்கள்.
அதன்பிறகு சமீபத்தில் 16-17/09/2014 அன்றும் [போனஸ் பரிசாக] ஒரு தொகை தங்களின்
வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுபோன்ற தவறுகள் எல்லாம் சகஜம் தான். இதற்கெல்லாம் ‘மன்னிப்பு’ என்ற பெரிய
வார்த்தைகளெல்லாம் எதற்கு?
இருப்பினும் தாங்கள் கொடுத்திருந்த தவறுதலான [உல்டா புல்டா நம்பர்களுடன்]
கணக்கு எண்ணில் வேறு ஒரு நபருக்கு அதே வங்கியில் கணக்கு இருந்து அதில்
இந்தத்தொகை வரவு வைக்கப்பட்டிருந்தால், அதனை நாம் திரும்பப்பெறுவது மஹா
மஹா கஷ்டமாகியிருக்கும். நல்லவேளையாக அதுபோலெல்லாம் ஒன்றும்
ஆகவில்லை என்பதில் நமக்கு ஓர் ஆறுதல். :)
பிரியமுள்ள கோபு [VGK]
நினைவூட்டுகிறோம்
இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான
இணைப்புகள்:
பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
கதையின் தலைப்பு:
VGK-40
மனசுக்குள் மத்தாப்பூ !
விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்
26.10.2014
ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
போட்டியில்
கலந்துகொள்ள
மறவாதீர்கள் !
இதுவே இந்தப்போட்டியில்
தாங்கள் கலந்துகொள்வதற்கான
இறுதி வாய்ப்பாகும்.
நல்லதொரு வாய்ப்பினை
நழுவ விடாதீர்கள்.
நல்லதொரு வாய்ப்பினை
நழுவ விடாதீர்கள்.
என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்
தொடரட்டும் தங்களின் சீரிய பணி ஐயா
பதிலளிநீக்குநன்றி
//கரந்தை ஜெயக்குமார் October 23, 2014 at 7:39 AM
நீக்குதொடரட்டும் தங்களின் சீரிய பணி ஐயா, நன்றி//
மிக்க நன்றி, ஐயா - VGK
திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின்
பதிலளிநீக்குசிறப்பான நேயர் கடிதத்திற்குப்பாராட்டுக்கள்.
இராஜராஜேஸ்வரி October 23, 2014 at 9:59 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் சிறப்பான நேயர் கடிதத்திற்குப்பாராட்டுக்கள்.//
தமிழ்முகில் என்ற அழகான பெயரால் மட்டுமே அது மிகவும் பிரகாசமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்குமோ! :)
தங்களின் அன்பான வருகையும் அழகான பாராட்டுக்களும் மேலும் இந்தப்பதிவின் அழகுக்கு அழகூட்டி ரஸிக்க வைப்பதாக அமைந்துள்ளது. :) மிக்க நன்றி. - VGK
எனது நேயர் கடிதத்தினை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
பதிலளிநீக்குஎனது கடிதத்தை பாராட்டிய திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
Tamizhmuhil Prakasam October 23, 2014 at 9:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//எனது நேயர் கடிதத்தினை வெளியிட்டு சிறப்பித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா. //
நானே சற்றும் எதிர்பார்க்காமல் இருந்தும், மிக அழகாக ஓர் நேயர் கடிதம் எழுதி, அதை எனக்குத்தாங்கள் அனுப்பி வைத்துள்ள தங்களின் பெருந்தன்மைக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் கோபு [ VGK ]
திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்கள்.
பதிலளிநீக்குதங்கள் பதிலும் சுவையாக இருந்தது.
அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 23, 2014 at 9:25 PM
நீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் தனது அனுபவங்களை சுவாரஸ்யமாக எழுதியிருந்தார்கள்.//
ஆமாம். அவர்கள் பெயரே ’தமிழ்முகில்’ என்றல்லவா மிக அழகாக பிரகாசமாக அமைந்துள்ளது. அவர்களின் அனுபவங்களும் சுவாரஸ்யமாகத்தானே எழுதப்பட்டிருக்கும்! வியப்பில்லைதான். மகிழ்ச்சியே.
//தங்கள் பதிலும் சுவையாக இருந்தது.//
தங்களின் அன்பான வருகையும், என் பதிலை சுவைத்ததாகச் சொல்லியிருப்பதும் எனக்கும் சுவைபடவே உள்ளன. மிக்க நன்றி ... நண்பரே.
அன்புடன் கோபு [VGK]
அருமையாக இருந்தது திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் நேயர் கடிதம். தங்களின் பதிலில் வலைச்சரத்தில் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தவர்களை மறவாமல் பாராட்டுவதும், நன்றியுரைப்பதும் அருமை வைகோ சார்!
பதிலளிநீக்குSeshadri e.s. October 23, 2014 at 10:29 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அருமையாக இருந்தது திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் நேயர் கடிதம்.//
மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.
//தங்களின் பதிலில் வலைச்சரத்தில் தங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தவர்களை மறவாமல் பாராட்டுவதும், நன்றியுரைப்பதும் அருமை வைகோ சார்!//
இவர்களைப்போலவே ஒரு 7-8 வலைச்சர ஆசிரியர்கள், தங்களின் வலைச்சரப்பகுதிகளில் இந்த நம் சிறுகதை விமர்சனப்போட்டிகளைப்பற்றி சிறப்பாக அறிவித்திருந்தார்கள்.
அதுவும் 2014ம் ஆண்டிலேயே இருமுறை வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ’கீதமஞ்சரி’ திருமதி கீதா மதிவாணன் அவர்கள் இருமுறை இதைப்பற்றி புகழ்ந்து பேசி அனைவரின் கவனத்திற்கும் இந்த நம் போட்டியினைப்பற்றிய தகவல்களைக் கொண்டு சென்றிருந்தார்கள்.
http://www.blogintamil.blogspot.in/2014/01/blog-post_22.html
http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_21.html
இதெல்லாம் இவ்வாறு இருப்பினும் [கரடியாகக் கத்தியும் :)] வலைச்சரத்தினில் இந்த விளம்பரங்களைப்பார்த்து, யாரும் புதிதாக விமர்சனம் எழுதி அனுப்பியதாக எனக்குத் தெரியவில்லை. நம் கடைக்கு எப்போதும் வருகை தந்துகொண்டு இருந்த ரெகுலர் கஸ்டமர்கள் மட்டுமே, தொடர்ந்து வந்து ஆதரவு அளித்துள்ளனர் என்பதும் மறுப்பதற்கு இல்லை.
எல்லோராலும் பொறுமையாக ஒரு கதையினை ஆழமாகப் படித்து, அகலமாகச்சிந்தித்து, அற்புதமாக விமர்சனம் எழுதி அனுப்பி வைக்க இயலாது என்பதே இதிலுள்ள உண்மை.
எனினும் இதுபோல ஓர் விளம்பரத்தை, வலைச்சரத்தில் ஒருவார ஆசிரியராகப்பணியாற்ற வாய்ப்புக் கிடைத்திருக்கும் நாம், கண்டிப்பாகப் பதிக்க வேண்டும் என்று இவர்களுக்குத் தோன்றியுள்ள நல்லதொரு எண்ணத்தையும், பெருந்தன்மையையும் என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
அதனை எடுத்துச்சொல்லிப் பாராட்டியுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
தாம் எழுதிய விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் அதனைத் தமது வலைப்பூவில் வெளியிட்டுச் சிறப்பித்தமை திரு கோபு சார் சொல்லியிருப்பது போல் எழுத்துலகில் ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணம் தான். அவருக்கு என் பாராட்டுக்கள்! அவர் எழுதியனுப்பியதையும் வலைப்பூவில் வெளியிட்டதையும் தொடர்ந்து கவனித்து இன்னும் நான்கு விமர்சனங்களை வெளியிடவில்லை என்று திரு கோபு சார் அளித்திருக்கும் தகவல் வியப்பின் எல்லைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
பதிலளிநீக்குKalayarassy GOctober 23, 2014 at 11:02 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//தாம் எழுதிய விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும் அதனைத் தமது வலைப்பூவில் வெளியிட்டுச் சிறப்பித்தமை திரு கோபு சார் சொல்லியிருப்பது போல் எழுத்துலகில் ஓர் ஆரோக்கியமான முன்னுதாரணம் தான். அவருக்கு என் பாராட்டுக்கள்! //
ஆம். பாராட்டப்பட வேண்டியவர்களே தான். இவர்களே இதற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்கள் எனவும் நாம் சொல்லலாம்.
முதன் முதலாக ....
”நான் என் வலைத்தளத்தினில் தங்களின் கதையையும், அதற்கு நான் அனுப்பியிருந்த விமர்சனக்கட்டுரையையும் வெளியிட்டுக்கொள்ளலாமா” என தயக்கத்துடன் என்னிடம் அனுமதி கேட்டிருந்தார்கள்.
“ஒவ்வொரு கதையின் விமர்சனப்போட்டிக்கான பரிசு முடிவுகள் வெளியாகும் வரை பொறுமையாக இருங்கோ. பரிசு முடிவுகள் என் வலைத்தளத்தினில் அதிகாரபூர்வமாக வெளியானபின், தாங்கள் தங்கள் வலைத்தளத்தினில் தாராளமாக தங்களின் விமர்சனத்தை வெளியிட்டுக்கொள்ளலாம். அதில் எந்தத்தவறுமே இல்லை. அதற்கான முழு உரிமையும் தங்களுக்கு உண்டு. அவ்வாறு வெளியிடும்போது, அதற்கான இணைப்பினையும் எனக்குத் தாங்கள் மெயில் மூலம் அனுப்பி வைத்தீர்களானால், என் அந்தக்கதைக்கான பின்னூட்டப்பெட்டியிலும் அதனை ஓர் விளம்பரம் போலக்கொடுத்து, மற்றவர்களின் கவனத்திற்கு அதனைக்கொண்டு செல்வேன். இது எழுத்துலகில் மிகவும் வரவேற்கத்தக்க ஆரோக்யமான வழிமுறைதான்” என்று சொல்லி ஊக்கமும் உற்சாகமும் அளித்திருந்தேன்.
அதன்பிறகு VGK-03 TO VGK-08, VGK-10 TO VGK-12 ஆகிய இவர்கள் கலந்துகொண்டிருந்த 8 கதைக்கான விமர்சனங்களை அவர்களின் வலைத்தளத்தினில் தனித்தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்திருந்தார்கள்.
அதன் பின் இவர்கள் பங்கேற்ற VGK-17, VGK-18, VGK-23 மற்றும் VGK-24 ஆகிய நான்கு விமர்சனங்களை மட்டும் ஏனோ வெளியிடாமலேயே இருந்து விட்டார்கள்.
இவற்றையெல்லாம் கூர்மையாக கவனித்துவரும் என்னால் சும்மா இருக்க முடியுமா? :)
இதுபோன்ற ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைக்கும்போதாவது சொல்ல வேண்டாமா? :)
அதனால் சொல்லிவிட்டேன். இதனைப் படித்துள்ள அவர்களும் மகிழ்ச்சியுடன், விட்டுப்போன அந்த நான்கு விமர்சனங்களையும் இப்போது தனித்தனிப்பதிவுகளாக வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள். அவற்றின் இணைப்புகளை நான் இங்கே கீழே கொடுத்துள்ளேன்.
//அவர் எழுதியனுப்பியதையும் வலைப்பூவில் வெளியிட்டதையும் தொடர்ந்து கவனித்து இன்னும் நான்கு விமர்சனங்களை வெளியிடவில்லை என்று திரு கோபு சார் அளித்திருக்கும் தகவல் வியப்பின் எல்லைக்கு நம்மை இட்டுச் செல்கிறது.//
இதையெல்லாம் நன்கு புரிந்துகொண்டு ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வியப்பின் எல்லைக்கே சென்றுள்ளதாக தாங்கள் எழுதியுள்ளதுதான், என்னையும் வியப்பின் எல்லையையும் தாண்டி இட்டுச் சென்றுவிட்டது. :)))))
மிக்க நன்றியுடன் கோபு [VGK]
'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
பதிலளிநீக்கு’VGK-17 சூழ்நிலை’
என்ற சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:
http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_23.html
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட அதனைத் தன் பதிவினில் வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
பதிலளிநீக்கு’VGK-18 ஏமாற்றாதே ... ஏமாறாதே’
இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:
http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_24.html
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
சுருக்கமாக இருந்தாலும் மிகத் தெளிவாக தீர்க்கமாக சொல்லவேண்டியவற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் திருமதி தமிழ்முகில் பிரகாசம்.
பதிலளிநீக்குவெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் ஒன்றுபோலவே அரவணைத்து ஊக்கம் தருவதில் கோபு சாரை மிஞ்ச ஆளில்லை. மனமார்ந்த நன்றி சார்.
கீத மஞ்சரி October 26, 2014 at 5:25 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//சுருக்கமாக இருந்தாலும் மிகத் தெளிவாக தீர்க்கமாக சொல்லவேண்டியவற்றை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள் திருமதி தமிழ்முகில் பிரகாசம். //
:))))) ஆம், அழகாகப் பாராட்டிச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.
//வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவரையும் ஒன்றுபோலவே அரவணைத்து ஊக்கம் தருவதில் கோபு சாரை மிஞ்ச ஆளில்லை. மனமார்ந்த நன்றி சார்.//
ஹைய்ய்ய்ய்யோ ! :)))))
எனக்கு ஊக்கமளிக்கும் தங்களின் இந்த உற்சாகக் கருத்துக்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
பிரியமுள்ள கோபு
'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
பதிலளிநீக்கு’VGK-24 தாயுமானவள்’
இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:
http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_26.html
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
'VGK's சிறுகதை விமர்சனப்போட்டி - 2014'
பதிலளிநீக்கு’VGK-23 யாதும் ஊரே யாவையும் கேளிர் !’
இந்த சிறுகதைக்கு திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே எழுதி அனுப்பியிருந்த விமர்சனம், இன்று அவர்களால், அவர்களின் பதிவினில் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கான இணைப்பு இதோ:
http://muhilneel.blogspot.com/2014/10/blog-post_28.html
இது மற்றவர்களின் தகவலுக்காக மட்டுமே.
நடைபெற்ற சிறுகதை விமர்சனப் போட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாவிட்டாலும்கூட, அதனைத் தன் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிட்டு சிறப்பித்துள்ள திருமதி தமிழ்முகில் பிரகாசம் அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன் கோபு [VGK]
ooooooooooooooooooooooooooo
கடிதத்துடன் பின்னூட்டங்களும் சிறப்பாக அமைந்துள்ளன.
பதிலளிநீக்குகடிதம் சிறப்பாக இருக்கு. பாராட்டுகள்
பதிலளிநீக்குசிறப்பான கடிதம். அதற்கேற்ற பதில்.
பதிலளிநீக்குகடதாசி பதிலு அல்லா நல்லாதா கீது நமக்கு வார கடிதாசி மத்தவங்க படிச்சிகிட காட்டிக்கிடலாமா.
பதிலளிநீக்குதிருமதி தமிழ்முகில்பிரகாசம் அவர்களின் கடிதமும் பின்னூட்ட பதில்களும் நல்லா இருக்கு.
பதிலளிநீக்குநேயர் கடிதம் அதற்கு விஜிகே அவர்களின் கருத்து இருண்டும் இதம்.
பதிலளிநீக்கு:}
பதிலளிநீக்கு'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html
பதிலளிநீக்குதலைப்பு: ’இன்று போல் என்றும்’
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு