கதையின் தலைப்பு :
VGK-40
மனசுக்குள் மத்தாப்பூ
இணைப்புகள்:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/ 2014/10/vgk-40-4-of-4.html
பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
மிக அதிக எண்ணிக்கையில்
பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு
வெகு அழகாக விமர்சனங்கள்
எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
இனிப்பான இரண்டாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம்-1
தித்திக்கும் தீபாவளித் திருநாளுக்கு முன்னால் வந்த நான்காம் பகுதி = பொருத்தமான நேரத்தில்தான் வெளியாகி இருக்கிறது! தீபாவளி என்றால் மனதில் உடனே தோன்றுவது இனிப்பு வகைகள், புத்தாடைகள், சரவெடிகள் இவை எல்லாவற்றுக்கும் முன்பாக ம(மு)கிழும் புன்னகை முகங்களை ஞாபகப்படுத்தும் ‘மத்தாப்பூ’தான். அந்த வகையில் கதையின் தலைப்பு கனப்பொருத்தம்தான்!
தீபாவளின்னா போனஸ் வேண்டாமா? அதைத்தான் விஜிகே என்ற வார்த்தைச் சிற்பி தானே செதுக்கிய அதிப்பொருத்தமான வண்ணச் சித்திரத்தைஆரம்பத்திலேயே கொடுத்துவிடுகிறாரே! ஓப்பனிங் ஷாட் என்ன என்பதனை அப்படமே - பப்படம் உடைப்பதைப்போல சொல்லிவிடுகிறது! புதிதாகத் திருமணமாகி மனைவி பிள்ளையாண்டு பிரசவத்திற்கு செல்லும் முன்பு ஒரு கணவனின் மனநிலை என்ன என்பதை சற்றேரொமான்டிக்காக, யூத் டச்சுடன் சொல்லியிருக்கும் விதம் அருமை! பிறக்கப்போவது குட்டி மனோ என்றும் குட்டி அனுதான் என்றும் ஜாலியாகப் பேசிக்கொள்ள, ஆஹா என்ன ஒரு அன்னியோன்யம் என்று நாம் சிலாகிக்கும் நேரத்தில் பிரசவ வலி வந்துவிடுகிறது! சட்டென துள்ளி எழுகிறான் மனோ! இரண்டாம் எபிசோடில் பார்த்தால் அது ஒரு இனிய கனவு! மனோ துள்ளி எழுவது தன் படுக்கையிலிருந்து!அப்படியானால் மனோ யார்? அனு யார்? நாம் சீட்டின் நுனிக்கு நகர, கதையோ ‘ராக்கெட்’ வேகத்தில் சூடு பிடிக்கிறது!
‘மனோ’தத்துவ டாக்டர் ‘மனோ’ (என்ன ஒரு பெயர் பொருத்தம்?!) மனதில் அனுராதா இடம் பிடிப்பதை படிப்படியாக சொல்லிச் சென்றிருக்கும் விதம் அதி உன்னதம்.சைக்காலஜியில் ஒரு கோட்பாடு உண்டு. “ THE LINE BIFURCATING THE NORMAL FROM THE ABNORMAL IS VERY THIN SO THAT THE NORMAL BECOMES ABNORMAL AND THE ABNORMAL BECOMES NORMAL AT TIMES” என்று. அதாவது, “ நம்மில் பைத்தியம் என்று எவருமில்லை! ஆனால் நாம் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு நேரத்தில் பைத்தியம்தான்!”என்பதுதான் அது. (டேய் பைத்தியம்! கம்னு போடா என்று சிலர் பல்லை நறநறப்பது கேட்கிறது!) நகைப்பைத்தியம், பெண்பித்தன், ஆடைப்பைத்தியம், உள்ளிட்ட பலவிதமான பைத்தியங்களைப்போல, பழக்கதின் காரணமாக சீரியல், சீட்டாட்டம் போன்ற விஷயங்களுக்கு அடிமையான சிலரைப்போல அவளும் “ஒரு கோலப் பைத்தியம்போல!”என்று ஆரம்பத்தில் எண்ணமிட்டு, பின்னர் வாக்கிங் சென்று வரும்போதெல்லாம் வரவேற்கும் அவளது கோலங்களால் கவரப்பட்டு, நின்று ரசிக்கத்துவங்க, அவை மனதிற்கு நெருக்கமான காதல்கோலங்களாகவே தொன்ற ஆரம்பிக்கின்றன! தான் வரைந்த கோலங்களை நின்று ரசித்துச்செல்பவனை நின்று சில நேரங்களில் பார்க்கிறாள் படைப்புக்கு அங்கீகாரம் கிடைத்த அனு! கனவிலே அணைப்பில் மனைவியாக இருந்தவளே நனவில் மனங்கவர்ந்தவளாக காதல் கோலம் தீட்டுபவளாக கண்ணெதிரில்! நமக்கு லேசாக இந்தக் காதல்கோலம் மணக்கோலம் காணாதா என்று ஒரு எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது! மனதால் நெருங்கிய மனோ மனங்கவர்ந்தவளை கண்ணருகே காண பைனாகுலர் வாங்கிவிடுகிறான்! அதில் அவன்காணும் காட்சிகளைஎல்லைக்குட்பட்டு இளமை ததும்ப வர்ணிக்கும் விதம் அழகு!நம் கண்முன்னே பனியில் நனைந்த ஒரு ரோஜாவில் வண்ணத்துப்பூச்சி வந்தமரும் காட்சி விரியச்செய்கிறது!கூடவே இந்த பைனாக்குலர் சமாச்சாரம் கதையில் அவசியம்தானா என்று ஒரு சிறிய கேள்வி எழுகிறது! (அதுக்கு ஏதாவது காரணம் பின்னால வச்சிருப்பாரு!) அனுவின் அம்மா சொல்லியபின்னரே தன் மனம் கவர்ந்தவள் ஒரு மெளன ரோஜா என்று அறிந்ததும் மனோவின் காதல் இன்னும் அதிகரித்துவிடுகிறது! இந்த இடத்தில் மாற்றுத்திறனாளிகளைப்பற்றிய ஒரு மிக உயர்வான விஷயத்தை ஆசிரியர் இணைத்திருப்பது பாராட்டுக்குரியது!அவர்களுக்கு எப்பொழுதும் கவனம் சிதறாது! வேலைப்பாடுடைய நுணுக்கமான விஷயங்களில் சிறந்து விளங்குவார்கள்! இன்னும் எத்தனையோ விஷயங்களில்‘காம்பன்சேட்’ செய்வார்கள்! பீத்தோவன், ஹெலன் கெல்லர், தாமஸ் ஆல்வா எடிசன், என்று இன்னும் எத்தனையோ பெரிய சாதனை மனிதர்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்! அனுவின் அம்மா மறுநாள் பெண் பார்க்கும் படலத்திற்கு துணையாக இருக்குமாறு மனோவைக் கேட்டுக்கொள்ள, வருவதாக ஒப்புக்கொள்வதாகட்டும், பின்னர் மாடிப்படிவரை சென்று வழியனுப்புவதிலாகட்டும்,ஹவுஸ் ஓனர் உறவைத்தாண்டி ஒரு கண்ணிய உறவு லேசாக மலர்ந்திருப்பதை உணரச்செய்வதாக இருக்கிறது! மனதில் ஒருவித சோகத்துடனும், பலவித எண்ணங்களுடன்உறங்கச் செல்கிறான் மனோ! இந்த இடந்தை ஊன்றிக் கவனித்தால் மட்டுமே அடுத்துவரும் பாம்பின் ‘படக்’காட்சி ஒரு சிம்பாலிக்கான கனவு என்று புரிந்துகொள்ள முடியும்!பைனாக்குலர் பாத்திரம் எதற்கு என்ற கேள்விக்கும் அதில் பதில் கிடைத்துவிடுகிறது!
பைனாகுலரில் அனு கோலம்போடுவதை 'மறுநாள்' பார்க்கும் மனோவிற்கு அன்று அவளை ரசிக்க ஏற்படும் சிறு தயக்கம், அவளது மனதுக்குகந்த கணவன் அமையவேண்டுமென பிரார்த்தனை செய்வது இவை அவள் மீதுகொண்ட உண்மைக்காதலைச் சொல்வதோடு, மனோவின் கண்ணியமான பாத்திரப்படைப்பினையும் எடுத்தியம்புவதாக இருக்கிறது! பாம்பினைப்பார்த்துப் பதறி ஓடி, தூக்கிச்சென்று காப்பாற்றுவதில் உண்மை அக்கறையும், காதலும் தெரிகிறது. பாம்பைக்கண்ட அதிர்ச்சியில் அனுவுக்கு “அம்மா” என்ற வார்த்தையைப் பேசமுடிகிறது(கனவில்தான்)! எல்லாம் சரிதான் கதைன்னா ஒரு பஞ்சாயத்து இல்லாமயா?பொண்ண கட்டிப்புடிச்சு தூக்கிய ஹீரோவ பஞ்சாயத்துலகட்டி வச்சு அடிக்க முடிவாகி, சரிதான் இனிமேல“சரவெடி”போல அடிதான்விழப்போகுதுன்னு நினைக்கிறப்ப,அலாரம் அடிச்சு எழுப்புது! இதுவும் கனவுதான்னு நமக்குப்புரியுது!
இப்படி கனவா மாறி மாறி வந்துக்கிட்டிருந்தாக்க என்னதான் சொல்லவர்ரீங்கன்னு சிலர் கேக்குறதுக்கு முன்னால, ஒரு பிளாஷ் பேக் குடுத்துடுறாரு நம்ப கதைசொல்லி. கதாநாயகனுக்கு ஒரு அதிசயத் தன்மை உண்டு. அவன் காணும் கனவுகள் பலித்துவிடுவதுதான் அது!தாய் மற்றும் தந்தை இறந்துபோவது போன்ற சோகக்கனவுகளும், நண்பன் முதல் மாணவனாக வந்த சந்தொஷக்கனவும் அடக்கம்! “THE EYES OF LAURA MARS”என்ற ஒரு ஆங்கிலப்படத்தில் கதாநாயகி காணும் கனவுகள் அப்படியே பலிக்கும்! ஆனால் அதெல்லாம் கொல கொலயா கொலை ரகம்! நம்ப கதைல வரும் கனவு டுவிஸ்ட் மேல டுவிஸ்டால்ல கொடுக்குது அதுவும் இப்படி ஒரு யதார்த்தமான சமூகக்கதையில! நம்ப கதாநாயகருக்கு கடைசியா வந்த கனவுல கருநாகம் வந்தாலும் கதாநாயகியத் தீண்டவில்லை! அனுபற்றிய கனவுகள் ரொமான்டிக்காக, யதார்த்தமான நிகழ்வுகளாகவே அமைத்துள்ளது ரசிக்கத்தக்கது!
சரி சரி கிளைமாக்ஸ் வர்ரமாதிரி தெரியுது! பாக்கலாம் வாங்க! "மனங்கவர்ந்தவளை மற்றவன் பெண்பார்க்கவர துணைக்கு தான் செல்ல நேர்ந்ததோ!ஐயகோ! இதென்ன கொடுமை?" என்றெல்லாம் புலம்பாமல் சொன்னபடியே அனு வீட்டிற்கு செல்கிறான் மனோ.ஏற்கனவே தெரிந்த பொறுக்கி ‘நாகப்பா’ மாப்பிள்ளை மாதிரிவந்து, ரெஜெக்ட்ஆகி மனோவின் வயிற்றில் பால்வார்க்கிறான்! பாம்பே பால் வார்க்கிறதை இங்கதான் பாக்கமுடியும்! மனோ உண்மையைச் சொல்லி அனுவைக்காப்பாற்ற, அப்பாடா கதை ஒரு வழியா சுப நிகழ்வைநோக்கிச் செல்வதுபோல தெரிகிறது! அணுகுண்டேவெடிக்குமோன்னு நினச்சு குழம்பிகிட்டிருந்த மனோ அதுபுஸ்வாணமானதப் பாத்து நிம்மதி அடையுறான்! கதையை படிக்கும் நமக்கோ மனதுக்குள் மத்தாப்பூ. ஆனால் மனித வடிவில் வந்த கரு’நாகப்பா’ம்புக்கு நம்ப ஹீரோ வச்சதோ சரியான ‘ஆப்பூ’.
ஆழ்மனத்தின் ஆசைகளே கனவுகளாக வெளிப்படுமென ஒரு கோட்பாடு உண்டு! எண்ணங்களுக்கு அளப்பரிய வலிமை உண்டு. தொடர்ந்து எண்ணமிடும் செயலை நம்மையறியாமல் நாம் செயல்படுத்தியே தீருவோம்! அந்தவகையில் மனோவின் கனவுகளும், எண்ணங்களும் நனவாகியது; முடிவு சுபமென்று சொல்லாமல் சொல்லியவிதம் வெகு அழகு! கோலத்தால் மனம் கவரப்பட்ட மனோவிற்கு அந்த கோலத்தின் மூலமாகவே காதலை அங்கீகரித்ததை குறிப்பால் உணர்த்தும் அனுவின் பாத்திரப்படைப்பும் அட்டகாசம்!“எப்பொழுதும் வார்த்தைகளைவிட செயல் உரத்துப் பேசும்” அல்லவா?!
பொதுவாக மத்தாப்பூவில் துவங்கி, தரைச்சக்கரம், சாட்டை, பென்சில், புஸ்வானம், சரவெடி, கலர் மத்தப்பூ என்று எல்லாவற்றையும் கொளுத்தி மகிழ்ந்தபின்னர் கடைசியாக கம்பி மத்தாப்பூவில்தான் முடிப்போம்! அதுபோலவே கோலத்தில் தொடங்கி கோலத்திலேயே சுபமாக முடிகிறது கதை! தீபாவளியின் அடையாளமான மத்தாப்பூ போல அனுவுக்கும் மனோவுக்கும் ஒளிமயமான வாழ்க்கையை வழங்கி நம் மனதிலும் மகிழ்ச்சி மத்தாப்பூவாக மலரச்செய்து, தீபாவளிப்பரிசாக நமக்கும் இந்த அருமையான, வித்யாசமான, விறுவிறுப்பான கதையை வழங்கிய வாத்தியார் விஜிகே அவர்களுக்கு தீபாவளின்னா என்ன கண்டுக்க மாட்டீங்களான்னு ‘முறுக்கி’க்கறதுக்கு முன்னால மகிழ(ழு)ம்பூ முறுக்கு குடுக்கனும்! கங்கா ஸ்னானம் பண்ண நெரமாச்சு! இது கனவா நனவான்னு ஒரு தடவ கிள்ளிப்பாத்தா, நிஜம்தான்! தீபாவளி வாழ்த்தை இளம்ஜோடிகளுக்கும் தெரிவித்தும்ம்ம்ம்ம்ம்….விடைபெறவேண்டியது தான்! இனி எல்லா தீபாவளிகளிலும் இந்த விமர்சனப்போட்டி பற்றிய உணர்வுகள் எல்லார் மனதிலும் மத்தாப்பாய் ஒளிரும்! இளம் ஜோடிகளின் வாழ்வும் இந்த வலைச் சொந்தங்களைப்போல மகிழ்வாய் என்றும் தீப ஆவளியாய் தொடர வாழ்த்துவோம்!
முத்தாய்ப்பாக ஒரு முத்தான கதையைக்கொடுத்த, பெரும் விமர்சையான விமர்சன வாய்ப்புக்களையும், பேரன்பையும் சேர்த்துக்கொடுத்த வாத்தியார் விஜிகே அவர்களுக்கு நன்றி – என்றென்றைக்குமாக!
என்றும் அன்புடன்,
உங்கள் = எம்ஜிஆர்!
(பி.கு.: வாத்யாரே! இப்போ போலவே எப்பவும் ஞாபகம் வச்சுக்குங்க - இந்த சின்னவனை)
என்றும் அன்புடன்,
MGR
மனம் நிறைந்த பாராட்டுக்கள் +
அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
இனிப்பான இரண்டாம் பரிசினை
முதல் பிரசவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மனைவியின் தற்காலிகப் பிரிவைக் கூடத் தாங்க முடியாமல், வேதனைப்படும் கணவனின் மனநிலையை மிகவும் இயல்பாயும், கிளுகிளுப்பாயும் விவரித்தது முதல் பகுதி.
பிரசவ வலி வந்து விட்டது; நார்மல் பிரசவமா, சிசேரியனா? என்ன குழந்தை? குட்டி மனோவா, அனுவா போன்ற கேள்விகளுடன் நாமும் விறுவிறுப்புடன் அடுத்த பகுதியை வாசிக்கத் துவங்கினால், அது முழுக்க முழுக்கக் கனவென்று அறிந்தபோது, சிறிது ஏமாற்றம் ஏற்பட்டது உண்மையே.
முதல் பகுதி முழுதும் கதாநாயகனின் காதல் கனவை விவரித்த காரணத்தால், கதையின் வளர்ச்சியில் இம்மியளவும் முன்னேற்றமில்லை. சிறுகதைக்கு வார்த்தை சிக்கனம் தேவை என்று ஏற்கெனவே நாம் இப்போட்டியின் மூலம் அறிந்திருக்கிறோம் அல்லவா? அவ்விதிப்படி பார்த்தால், இக்கனவுப்பகுதி முழுவதையும் நீக்கினால் கூட, மையக்கதைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பது என் தாழ்மையான கருத்து.
தமிழ்த்திரைப்படத்தில் திருமணமாகி குடும்பம் நடத்துவது போல் கதாநாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ கனவுக்காட்சி வந்தால், அது நிச்சயம் பலிக்காது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்படும் ‘பார்முலா!’ அது போல இக்கதையிலும் அனுவைத் திருமணம் செய்து குழந்தைப்பேறு வரை கனவு காணும் மனோவின் காதல், நிறைவேறாமல் நிராசையாகி விடுமோ என்ற சந்தேகம் முதலில் எழுந்தது.
ஆனால் ‘மனசுக்குள் மத்தாப்பூ,’ என்ற தலைப்பு, முடிவு நிச்சயம் சுபமாய்த் தானிருக்கும் என்பதை யூகிக்க உதவியது. இது போல முடிவை யூகிக்கக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்தால், கிளைமாக்ஸ் வரை முடிவு என்னாகுமோ என்ற விறுவிறுப்புடன் தொடர்ந்து வாசிக்கவியலும்.
நிகழ்ச்சிகள் முழுவதையும் கோர்வையாகச் சொல்லிக் கடைசியில் அது கனவென்று முடித்த கதைகள் சிலவற்றை நாம் வாசித்திருக்கிறோம். சிலகதைகளில் பாதிவரையோ, முக்கால்வாசியோ தொடர்ச்சியாக கனவு வரும்; ஆனால் இக்கதையில் இடையிடையே கனவு வருவதால், (முதல் + மூன்றாம் பகுதி) கனவு எது, நனவு எது? அனுவைப் பெண் பார்க்க வரும் நிகழ்வு, கனவிலா அல்லது நிஜத்திலா? என்ற குழப்பம் ஏற்பட்டுப் பின்னோக்கிச் சென்று, கதையைத் திரும்பவும் வாசிக்க நேர்ந்தது. வாசகருக்கு இது போன்ற குழப்பம் ஏற்படுவதைத் தவிர்த்தல் நலம்.
அனு கோலம் போடும் போது கருநாகம் வருவதும், நாயகன் அவளை அலாக்காகத் தூக்கிக் காப்பாற்றுவதும், அதிர்ச்சியால் பிறவி ஊமையான அவள் அம்மா என்று அலறுவதும், முடிவில் பஞ்சாயத்தில் எதேச்சதிகாரத் தீர்ப்பு சொல்லப்படுவதும் பற்றித் தொடர்ச்சியாக வாசித்த போது, அப்படியே தமிழ்த் திரைப்படம் பார்ப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டது. நல்லவேளையாக அது கனவென்றறிந்ததும் நிம்மதி!
இரண்டாவது கனவால் கதைக்குச் சிறிது பயனுண்டு. அனுவைப் பெண்பார்க்க வருகிறவன், கருநாகத்தைப் போன்றவன்; அவனால் அனுவிற்கு ஆபத்து காத்திருக்கிறது என்று நாயகனின் உள்ளுணர்வு அவனைக் கனவில் எச்சரிக்கிறது.
பாம்பிடமிருந்து அனுவைக் காப்பாற்றிய செயலைத் திருமணம் என்ற பெயரில் அவள் வாழ்வைச் சூறையாட வந்த பேட்டை ரவுடியான நாகப்பாவிடமிருந்து காப்பாற்றியதற்கு ஒப்பிட்டது சாலப்பொருத்தம்!
அனு அழகில் மனதைப் பறிகொடுக்கிறான் மனோ. அவள் மாற்றுத் திறனாளி என்று அறிந்த பிறகு, அவன் ஈடுபாடு இன்னும் அதிகமாகிறது என்பதிலிருந்து கதாநாயகன் வெறும் புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பவன் இல்லை என்பது புலனாகின்றது. பெண்ணைப் போகப்பொருளாக மட்டும் எண்ணாமல், அவளது அறிவுக்கும் திறமைகளுக்கும் மதிப்பு கொடுப்பவனாக இக்கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கும் ஆசிரியரை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
மனோ கனவு கண்டால் அது நிச்சயம் நடக்கும் என்பதற்கு ஆசிரியர் சில நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, அது போல் அனுவிற்கும் சிகிச்சை எடுத்தால் பேச்சு வருவதற்கான வாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கையோடு கதையை முடிக்கிறார். .
இன்றைய காலக்கட்டத்தில் பிறவியிலேயே காது கேளாமையால் ஊமையானவர்களுக்குச் சிகிச்சை எடுத்தாலும், பேச்சு வருவதற்கான சாத்தியக்கூறு மிக மிகக் குறைவு தான். ஆனால் நாளுக்கு நாள் வியக்கத்தக்க அளவில் முன்னேறி வரும் மருத்துவ அறிவியலின் பயனாக எதிர்காலத்தில் கதாசிரியரின் எண்ணமும், ஆசையும் நிறைவேறினாலும் நிறைவேறலாம்! யார் கண்டது?.
கதைக்கு நடுவில் அழகழகான கோலங்கள் கண்ணுக்கும், ஆசிரியரின் கவிதை வரிகள் கருத்துக்கும் விருந்தளிக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று:-
“மனதினில் அனுவின் அன்றாடக்கோலங்கள் அன்புக்கோலங்களாகப் பதிந்து என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத் துவங்கி விட்டன.”
பருவ வயதில் இனக்கவர்ச்சி காரணமாகவும், தோற்றத்தை அடிப்படையாக வைத்தும் இருபாலருக்கிடையே கண்டவுடன் தோன்றும் சாதாரண காதல் கதையில்லை இது. மாறாக கதாநாயகியை மாற்றுத்திறனாளி என்ற அனுதாபத்தோடு அணுகாமல், உடல் ஊனத்தைப் பெரிதாக எண்ணாமல், அவளின் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்புக்கொடுத்து, தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள நினைக்கும், உன்னத இளைஞன் ஒருவனின் காதல்கதை!
நம் சமூகத்தின் ஓர் அங்கமான மாற்றுத்திறனாளியைக் கைப்பிடிக்க நினைப்பவர்கள், “ஏதோ போனாப்போகுதுன்னு பெரிய மனசு பண்ணி ஒரு பொண்ணுக்கு வாழ்வு கொடுப்பதாக” எண்ணினார்களேயானால், அவர்கள் அனைவருமே நாகப்பனைப் போல், மனதளவில் ஊனமானவர்களே என்பதை இக்கதை கோடிட்டுக்காட்டுகிறது!
மாற்றுத் திறனாளியாக இருந்த போதும், கடுமையான உழைப்பின் மூலம் தன் அறிவையும் பன்முகத் திறமைகளையும் பெருக்கிக் கொண்டு அறிவு வளர்ச்சிக்கு உடல் ஊனம் ஒரு தடையில்லை என்பதை உலகுக்கு நிரூபிப்பவளாகக் கதாநாயகியைச் சித்தரித்திருக்கும் ஆசிரியர் மிகுந்த பாராட்டுக்குரியவர்!
நன்றியுடன்,
ஞா.கலையரசி
இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்:
திருமதி. ஞா. கலையரசி அவர்கள்.
இந்த இறுதிப் போட்டியில் பரிசு பெற்றுள்ள
மற்றவர்கள் பற்றிய விபரங்கள்
தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர
இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
இரண்டாம் பரிசினை வென்ற
பதிலளிநீக்குஇருவருக்கும்
இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
பாராட்டுக்கு மிகவும் நன்றி மேடம்!
நீக்கு//Total Pageviews
பதிலளிநீக்குSparkline 271500/
வாழ்த்துக்கள் சார்!
2-ஆம் பரிசு வென்ற
பதிலளிநீக்குதிரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும்
பாராட்டுகள்!
பாராட்டுக்கு மிகுந்த நன்றி நிஜாமுதீன்!
நீக்குஅ. முஹம்மது நிஜாமுத்தீன் October 30, 2014 at 9:26 PM
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//Total Pageviews
Sparkline 271500/
வாழ்த்துக்கள் சார்!//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி, நண்பரே. நான் அதையெல்லாம் கவனிப்பதே இல்லை.
அதுபோல G+ இல் சுமார் 25 லட்சங்களை நெருங்க இருப்பதாகக் காட்டுவதும் எனக்கு மிகவும் ஆச்சர்யமாகவே உள்ளது. சற்றும் முன் காட்டியுள்ளதை இதோ இங்கு கொடுத்துள்ளேன்.
Gopalakrishnan Vai.
Worked at BHEL
Attended NCHS
Lives in TIRUCHIRAPALLI
356 followers | 2,496,674 views
அன்புடன் VGK
271500+2496674/20000= ? -- இந்தக் கணக்கு தப்போ?
பதிலளிநீக்கு2496674-271500/20000=? - இதான் சரியோ?
பரிசினை ரவிஜி அவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்!
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்றுள்ள
பதிலளிநீக்குதிரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! G+ல் சுமார் 25 லட்சங்களை நெருங்க இருக்கும் திரு வைகோ சார் அவர்களுக்கு பாராட்டுகள்! தொடரட்டும் அவரது சாதனைப் பயணங்கள்!
உளவியல் கோட்பாடு, ஆங்கிலப்படம் என்று மேற்கோள்களைக் காட்டி வழக்கமான நகைச்சுவைத் தூவலுடன் ரசிக்கவைக்கும் விமர்சனமெழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள ரவிஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதலைப்பைக் கொண்டு முடிவை யூகித்தது அருமை. கனவையும் நிகழ்வையும் மாற்றிமாற்றிக் காண்பித்ததில் கனவெது நிஜமெது என்று குழம்பினாலும் மறுபடி வாசித்துத் தெளிந்து அழகான விமர்சனமெழுதி இரண்டாம் பரிசுக்குத் தேர்வாகியுள்ள கலையரசி அக்காவுக்கு அன்பான வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த ஈடு இணையற்ற போட்டியின் இறுதிக்கதையில் நான் எழுதிய விமர்சனத்தை இரண்டாம் பரிசுக்குத் தெரிவு செய்த நடுவர் அவர்களுக்கும், இந்த மாபெரும் வாய்ப்பை நல்கிய வாத்தியார் வைகோ அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்! ஒரு சிற்பியென என்னை செதுக்கியது இந்தப் போட்டி என்றால் அது மிகையில்லை! இரண்டு 'ஜி'களுக்கும் இந்த ரவி'ஜி' என்கிற மாயவரத்தான் எம்'ஜி'ஆரின் இதயத்தில் இடம் கொடுத்துவிட்டேன்! வாத்யாரே இந்தப்போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்டீர்கள்! இனிமேல் நீங்கள் அ-சாதாரணமானவர்தான்! மேலும் மேலும் மேலும் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கவேண்டும்! அதுவே இந்த சிறியவனின் வேண்டுதல், வேணவா எல்லாம்! இந்த இறுதி கதைவிமர்சனத்திற்குப் பரிசு பெற்ற அனைவருக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள்! வரவிருக்கும் வெற்றிவிழாக்கொண்டாட்டத்தை நினைத்தாலே - மனசெல்லாம் மத்தாப்பூ-தான்! வாத்தியாரே JUST RELAX - AND GET READY FOR A BIG ROUND OF APPLAUSE FOR THIS GREAT GREAT ACHIEVEMENT!!!!! என்றும் அன்புடன் உங்கள் எம்ஜிஆர்!
பதிலளிநீக்குவாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வாத்யார்னாலே ஹிட்தானே!!!! சீக்கிரமே கோடிகளை எட்டுங்கள் வாத்யாரே! நான் ஒ(தெ)ரு கோடியில நின்னாவது 'எட்டி'ப்பார்க்கிறேன்!
பதிலளிநீக்குவாத்யாரே!!!! இவ்வளவு ஹிட் ரேட்டா! அது சரி.....! வாத்யார்னாலே ஹிட்தானே!!!! சீக்கிரமே கோடிகளை எட்டுங்கள் வாத்யாரே! நான் ஒ(தெ)ரு கோடியில நின்னாவது 'எட்டி'ப்பார்க்கிறேன்!
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நண்பர் ரவிஜிக்கும் திருமதி கலையரசிக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு//இந்த பைனாக்குலர் சமாச்சாரம் கதையில் அவசியம்தானா என்று ஒரு சிறிய கேள்வி எழுகிறது! (//
பதிலளிநீக்குஎல்லோருக்குமே இது உறுத்தி இருப்பது கண்டு மகிழ்ச்சி.
//மனதுக்குகந்த கணவன் அமையவேண்டுமென பிரார்த்தனை செய்வது இவை அவள் மீதுகொண்ட உண்மைக்காதலைச் சொல்வதோடு, மனோவின் கண்ணியமான பாத்திரப்படைப்பினையும் எடுத்தியம்புவதாக இருக்கிறது!//
இப்படி ஒரு கோணம் இருக்கோ? என்றாலும் மனம் என்னமோ ஒப்பவில்லை!
திரு ரவிஜிக்கு இரண்டாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள்.
//சாதாரண காதல் கதையில்லை இது. மாறாக கதாநாயகியை மாற்றுத்திறனாளி என்ற அனுதாபத்தோடு அணுகாமல், உடல் ஊனத்தைப் பெரிதாக எண்ணாமல், அவளின் திறமைக்கும் அறிவுக்கும் மதிப்புக்கொடுத்து, தம் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்ள நினைக்கும், உன்னத இளைஞன் ஒருவனின் காதல்கதை! //
மாற்றுத் திறனாளி எனத் தெரிந்து காதலிக்கவில்லையே! காதலிக்க ஆரம்பித்த பின்னரே தெரிய வருகிறது. என்றாலும் பின்வாங்கவில்லை. ஆகவே பாராட்டுக்குத் தகுதி வாய்ந்தவனே.
திருமதி கலையரசிக்கு இரண்டாம் பரிசை வென்றமைக்கு வாழ்த்துகள்.
இரண்டாம் பரிசினை வென்றுள்ள
பதிலளிநீக்குதிரு. மாயவரம் எம். ஜி. ஆர். அவர்களுக்கும்
திருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.
பரிசு வென்ற திருமதி கலையரசி திரு ரவிஜிக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇரண்டாம் பரிசினை வென்றுள்ள திரு. ரவிஜி அவர்களுக்கும்
பதிலளிநீக்குதிருமதி. கலையரசி அவர்களுக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
பரிசு வென்ற திருமதி கலயரசி திரு ரவிஜி அவங்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதிருமதி கலையரசி திரு ரவிஜி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு;-)))))))))
பதிலளிநீக்கு:))
பதிலளிநீக்குமேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:
பதிலளிநீக்குமுதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html
சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html