'எண்ணங்கள்'
sivamgss.blogspot.in
sivamgss.blogspot.in
திருமதி.
கீதா சாம்பசிவம்
அவர்களின் பார்வையில்
சில பொதுவான கருத்துகள்
சில பொதுவான கருத்துகள்
இம்மாதிரி ஒரு போட்டியை அறிமுகம் செய்து மிகவும் ஆவலுடன் அனைவருக்கும் பரிசுகளை அளித்துப் பெருமைப்படும் வைகோ சாருக்கு எத்தனை நன்றி வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அவர் ஆர்வத்தைப் பாராட்டுவதா, சுறுசுறுப்பைப் பாராட்டுவதா என்று கேட்டால் பதில் சொல்வது கடினமே. உடல்நிலையைக் கூடக் கவனிக்காமல் இதிலே மிக ஆர்வமாக அவர் ஈடுபட்டுக் கொண்டு வெற்றிகரமாக முடியும் நாளையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு விமரிசனம் குறித்தும் எவ்விதமான கவலையும் கொள்ளாமல் இயல்பாக எடுத்துக்கொள்ளும் பாங்கு போற்றுதலுக்கு உரியது. இயல்பாகவே கலகலப்பான மனிதர் இந்தப் போட்டியினால் பதிவுலகில் உள்ளோர் அனைவரையும் இந்த மாபெரும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொள்ள வைத்துத் தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ வைக்கிறார். அதிலும் பரிசுக்கான பணத்தை உடனடியாகப் பட்டுவாடா செய்வது மிகச் சிறப்பான அம்சம். இதை மிகச் சரியாகக் கொஞ்சம் கூட தாமதம் நேராமல் கவனத்துடன் செய்து வருவதற்கும் பாராட்டுகள்.
மேற்படி பதிவின் பின்னூட்டப்பகுதியில்
நடுவர் கேட்டிருந்த ஒருசில கேள்விகளுக்கான பதில்கள்:
ஒவ்வொரு பரிசுகளையும் வகைப்படுத்திய நியாயம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..
ஆரம்பத்தில் திரு ரமணி சாரைத் தவிர மற்றவர்கள் எழுதியது நான் உட்பட சுமாராகவே இருந்தது. நடுவர் இருப்பதற்குள் நல்லதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது என் போன்றவர்களுக்கும் பரிசு கிடைத்ததில் இருந்து புரிந்தது. :)
உதாரணமாக உங்களுக்கு மூன்றாம் பரிசு என்றால் முதல், இரண்டு பரிசு பெற்ற கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருப்பதாக நீங்களே உணர்ந்தீர்களா?
நிச்சயமாய்! மற்றவர்களோட எழுத்துத் திறமை எனக்கு இல்லை என்பது எனக்கே தெரியும். ஆகவே இதில் கொஞ்சம் கூடச் சந்தேகமே இல்லை. பரிசு கிடைத்ததே ஆச்சரியமான ஒன்று என்பதால் மற்றவர்களின் எழுதியது நிச்சயம் சிறப்பான ஒன்றாகவே இருந்தது.
இதே மாதிரி உங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது என்றால் இரண்டாவது மூன்றாவது பரிசு பெற்றவர்களின் கட்டுரைகள் உங்களதை விட சிறப்பாக இருந்திருப்பதாக எப்போதாவது உணர்திருக்கிறீர்களா?..
ஆமாம், எனக்கு ஒரு முறை முதல் பரிசு கிடைத்தப்போ, மூன்றாம் பரிசு பெற்ற விமரிசனக் கட்டுரை என்னுடையதை விடச் சிறப்பாக இருந்தது எனக்கு ஓர் குற்ற உணர்ச்சியைத் தோற்றுவித்தது என்னமோ உண்மை. அப்புறம் எல்லோரும் சிறப்பாகச் செய்ய ஆரம்பித்ததால் எனக்கும் பரிசு கிடைக்கவில்லை. அதில் எந்த வருத்தமும் இல்லை.
பொதுவாக கோபுவின் கதைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏதாவது குறைகள் தெரிகிறதா? எங்களுக்காகச் சொல்ல வேண்டாம். கறாராகச் சொல்லுங்கள்.
உங்களுக்காக எல்லாம் சொல்லவில்லை. பொதுவாகச் சிறியதொரு கருவை வைத்துக்கொண்டு அதைச்சுற்றி நிகழ்வுகளை அமைத்துத் தக்க இடங்களில் தக்க வர்ணனைகள், படங்கள் ஆகியவற்றையும் சேர்த்து முடிவில் ஒரு எதிர்பாராத் திருப்பமும் கொடுத்துக் கதையை மனதில் நிற்கும்படி பண்ணிவிடுகிறார்.
சில தேவையற்ற வர்ணனைகளைக் குறைக்கலாம். உதாரணமாக எலிக் கதையில் ராமசுப்பு க்வார்ட்டர் அடிப்பது இப்படிச் சில கதைகளில் தேவையற்ற விஷயங்களைப் புகுத்துவது, வலிந்து புகுத்தி இருப்பது போல் எனக்குத் தோன்றும்.
கோபு சாரின் சிறுகதைக்கான உங்கள் விமர்சனக்கட்டுரை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுக்கே ஆச்சரியமாக இருந்ததா?.
ஆமாம், ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்படுவேன். ஆனால் எலிக்கதையில் மட்டும் ஏதோ ஒரு பரிசு கிடைக்கும் எனத் தோன்றியது. அதே போல் மூன்றாம் பரிசு கிடைத்திருக்கிறது.
இல்லை, நிச்சயம் தேர்வாகும் என்று நம்பிக்கை இருந்ததா?
ம்ஹூம், சொல்லப் போனால் வைகோ சார் தொடர்ந்து வலியுறுத்தவில்லை என்றால் விமரிசனமே எழுத மாட்டேன். சோம்பேறி என்பதோடு இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் ஆர்வமும் அவ்வளவாக இருந்ததில்லை. :)))))
குறிப்பிட்ட சிலரின் விமர்சனக் கட்டுரைகளே தொடர்ந்து பரிசுக்குத் தேர்வானதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கிறது! :))) ஆனால் மற்றவர்களின் கட்டுரைகள் இதைவிட சுமாராக இருப்பதால் தான் நடுவர் தேர்ந்தெடுக்கிறார் என்பதும் புரியும். அதே சமயம் பெரும்பாலோர் அனைவருமே விமரிசனத்தை மீண்டும் ஒரு சிறு கதையாகவே எழுதுகிறார்களோ என்னும் எண்ணமும் தோன்றும்.
பதிவர்களின் கதைகள் நிறைய அவர்கள் பதிவுகளில் படித்திருப்பீர்கள்.
அவ்வளவெல்லாம் படிச்சதில்லை. ஒரு சிலர் எழுதறாங்க தான்! ஆனால் அதை ஒரு வழக்கமாகக் கொள்ளவில்லை. யாரேனும் சுட்டி கொடுத்தால் போய்ப் படித்துவிட்டுப் பின்னர் மறந்துவிடுவேன்.
வித்தியாசமான நல்ல கதைகளை எழுதும் பதிவர்கள் பலர் பதிவுலகில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
ஆமாம், அருணா செல்வம் என்னும் பெண்மணியின் கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. சம்பவங்களை நன்றாகத் திகிலூட்டும்படி அமைத்துக் கதையை எழுதி இருந்தார். அவர் பத்திரிகைகளிலும் எழுதுவதாக அறிந்தேன். பத்திரிகைகள் படிக்கும் வழக்கத்தை விட்டு விட்டதால் எனக்குத் தெரியவில்லை. அவங்களோடெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு எழுதும் அளவுக்கு யாரும் இல்லைனே நினைக்கிறேன். அதோடு நம் நடுவரே எழுதுகிறாரே! ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுதுபோக மட்டும் படிக்க வேண்டியவை அல்ல.
பத்திரிகைகளில் வெளியாகும் கதைகளுக்கும், பதிவுகளில் மட்டும் வெளியாகும் கதைகளுக்கும் சிறப்பு அடிப்படையில் ஏதாவது வித்தியாசம் உங்களுக்குத் தெரிகிறதா?
பத்திரிகைகளில் அவங்க கதையை நீட்டிச் சுருக்கிக் கவர்ச்சிக்கான அம்சங்களைச் சேர்க்கச் சொல்லிப் போடுவாங்க. பத்திரிகை விற்கணுமே! ஆனால் அவரவர் சொந்த வலைப்பதிவுகளில் அவங்க இஷ்டப்படி எழுதிக்கலாம். கட்டுப்பாடு இருக்காது. தேவை இருந்தால் வெளியிட்டுக்கலாம். இல்லைனாலும் மனத் திருப்தி கிடைக்குமே! நாம் நினைத்ததை எந்தவிதமான தடங்கல்களோ, கட்டுப்பாடோ இல்லாமல் எழுதினோம் என நிறைவாக இருக்கும்.
அன்புள்ள திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களே !
வாங்கோ, வணக்கம்.
நேயர் கடிதம் எழுதி அனுப்புவோருக்கெல்லாம் பரிசு என நான் அறிவிக்காவிட்டாலும்கூட, சற்றே தாமதமேயானாலும், தாங்களும் ’நேயர் கடிதம்’ எழுதி அனுப்பியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆச்சர்யம் அளிப்பதாகவும் உள்ளது. அதற்கு முதலில் என் அன்பான நன்றிகள்.
இந்த சிறுகதை விமர்சனப் போட்டிகளில் தங்களைக்கலந்துகொள்ள வைக்க நான் பட்டபாடு _._ படாது எனச்சொல்லலாமா என நினைத்தேன். வேண்டாம் அது அவ்வளவு நாகரீகமாக இருக்காது .... அதனால் நான் பட்டபாடு எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரியும் என்று சொல்லிக்கொள்கிறேன்.
ஆரம்பத்திலிருந்தே ..... ”போட்டிகளில் கலந்து கொள்ளும் வழக்கமே இல்லை..... அதெல்லாம்.... பரிசுகளெல்லாம் எனக்கு ஒன்றும் கிடைக்கவே கிடைக்காது..... அது.... இது” என்று அலட்டிக் கொண்டீர்கள்.... அலுத்துக் கொண்டீர்கள். எதிர்மறையாகவே நினைத்தீர்கள். சொன்னீர்கள். நினைவு இருக்கலாம்.
அதற்கு நான் சொன்னேன் :
“நீங்கள் பொதுவாக நன்றாகவே எழுதுகிறீர்கள்; சோம்பல் இல்லாமல் நிறையவும், அடர்த்தியாகவும் அடைஅடையாகவும் எழுதுகிறீர்கள்; எழுதும் ஆர்வம் உங்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது; எழுத்துப்பிழைகள் அதிகம் இல்லாமல் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளும் தனித்திறமைகள் உங்களிடம் ஏராளமாக உள்ளன; சும்மா கல்லை விட்டெறிந்து பாருங்கோ, மாங்காய் கிடைத்தாலும் கிடைக்கலாம், கல் மட்டுமே திரும்பக்கிடைத்தாலும் கிடைக்கலாம்; பரிசு என்ற மாங்காய் கிடைத்தால் மட்டுமே தங்கள் பெயர் என்னால் பிறருக்கு பெருமையுடன் என் வலைத்தளத்தினில் அறிவிக்கப்படும்; கல் கிடைத்தால் அது கமுக்கமாக அமுக்கப்பட்டு விடும் - வெளியே யாருக்கும் தெரியப்போவது இல்லை”
என்றெல்லாம் எவ்வளவோ நானும் எடுத்துச் சொன்னேன். நினைவிருக்கலாம். இதெல்லாம் இப்படியாக நமக்குள் மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாக இருக்க .... இப்போது உண்மையில் நடந்துள்ளது என்ன?
அதற்கு நான் சொன்னேன் :
“நீங்கள் பொதுவாக நன்றாகவே எழுதுகிறீர்கள்; சோம்பல் இல்லாமல் நிறையவும், அடர்த்தியாகவும் அடைஅடையாகவும் எழுதுகிறீர்கள்; எழுதும் ஆர்வம் உங்களுக்கு இயற்கையாகவே அமைந்துள்ளது; எழுத்துப்பிழைகள் அதிகம் இல்லாமல் பக்கம்பக்கமாக எழுதித்தள்ளும் தனித்திறமைகள் உங்களிடம் ஏராளமாக உள்ளன; சும்மா கல்லை விட்டெறிந்து பாருங்கோ, மாங்காய் கிடைத்தாலும் கிடைக்கலாம், கல் மட்டுமே திரும்பக்கிடைத்தாலும் கிடைக்கலாம்; பரிசு என்ற மாங்காய் கிடைத்தால் மட்டுமே தங்கள் பெயர் என்னால் பிறருக்கு பெருமையுடன் என் வலைத்தளத்தினில் அறிவிக்கப்படும்; கல் கிடைத்தால் அது கமுக்கமாக அமுக்கப்பட்டு விடும் - வெளியே யாருக்கும் தெரியப்போவது இல்லை”
என்றெல்லாம் எவ்வளவோ நானும் எடுத்துச் சொன்னேன். நினைவிருக்கலாம். இதெல்லாம் இப்படியாக நமக்குள் மட்டுமே தெரிந்ததோர் இரகசியமாக இருக்க .... இப்போது உண்மையில் நடந்துள்ளது என்ன?
முதல் 37 கதைகளில் பதிமூன்று முறைகள் பரிசுக்குத்தேர்வாகி, அதில் ஒருமுறை ஹாட்-ட்ரிக்கும் அடித்து கலக்கி இருக்கிறீர்கள். அதுதவிர ’நடுவர் யார் யூகியுங்கள்’ போட்டியிலும் வெற்றியே பெற்றுள்ளீர்கள். இந்தப்போட்டியின் நிறைவு விழாவினிலும், சிறப்புச் சாதனையாளராக கெளரவிக்கப்பட்டு மேலும் சில ஸ்பெஷல் விருதுகள் [பரிசுகள்] கிடைக்கப்படவும் உள்ளீர்கள்.
தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒரு வீடே [FLAT] வாங்கி, சமீபத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.:)
ஸ்ரீரங்கம் சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸிலிருந்து எனக்குக்கிடைத்துள்ள நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் இது. அதனால் இதை மறுக்கவோ மறைக்கவோ தங்களால் முடியாதாக்கும். :)
ஸ்ரீரங்கம் சப்-ரிஜிஸ்ட்ரார் ஆபீஸிலிருந்து எனக்குக்கிடைத்துள்ள நம்பத்தகுந்த வட்டாரத் தகவல் இது. அதனால் இதை மறுக்கவோ மறைக்கவோ தங்களால் முடியாதாக்கும். :)
தாங்கள் புது இல்லத்தில் சீக்கரமாகக் கிரஹப்பிரவேசம் செய்து குடித்தனம்போய் சகல செளபாக்யங்களுடன், செளக்யமாக, சந்தோஷமாக நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன். மனம் நிறைந்த இனிய வாழ்த்துகள்.
முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் செய்துள்ள அந்தப் புத்தம்புதிய வீட்டைப்பூட்டிப் பாதுகாக்க, இரண்டு முரட்டு சைஸ் நெளதால் பூட்டு+சாவிகள் வாங்கவாவது இந்த என் பரிசுப் பணங்கள் தங்களுக்கு உபயோகப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு அதுவும் மிகவும் முக்கியம் தானே ! :))))) வாழ்த்துகள் !
பிரியமுள்ள கோபு
நினைவூட்டுகிறோம்
இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான
இணைப்புகள்:
பகுதி-1 க்கான இணைப்பு:
பகுதி-2 க்கான இணைப்பு:
பகுதி-3 க்கான இணைப்பு:
பகுதி-4 க்கான இணைப்பு:
கதையின் தலைப்பு:
VGK-40
மனசுக்குள் மத்தாப்பூ !
விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்
26.10.2014
ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம்
இரவு 8 மணிக்குள்.
போட்டியில்
கலந்துகொள்ள
மறவாதீர்கள் !
இதுவே இந்தப்போட்டியில்
தாங்கள் கலந்துகொள்வதற்கான
இறுதி வாய்ப்பாகும்.
என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்
ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுதுபோக மட்டும் படிக்க வேண்டியவை அல்ல.
பதிலளிநீக்குஅருமையாக உணர்ந்து எழுதிய அத்தனை வரிகளும்
வீமர்சனப்போட்டிக்குப்பெருமை சேர்க்கிறது..!
பாராட்டுக்கள். வாழ்த்துகள்..!
முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் செய்துள்ள அந்தப் புத்தம்புதிய வீட்டைப்பூட்டிப் பாதுகாக்க, இரண்டு முரட்டு சைஸ் நெளதால் பூட்டு+சாவிகள் வாங்கவாவது இந்த என் பரிசுப் பணங்கள் தங்களுக்கு உபயோகப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு அதுவும் மிகவும் முக்கியம் தானே ! :))))) வாழ்த்துகள் !
பதிலளிநீக்குதங்கள் நகைச்சுவையை ரசித்தேன். தீபாவளி நல்வாழ்த்துகள் !
ரிஷபன் October 21, 2014 at 1:03 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
*****முழுவீட்டுக்கும் இல்லாவிட்டாலும், தாங்கள் கிரையம் செய்துள்ள அந்தப் புத்தம்புதிய வீட்டைப்பூட்டிப் பாதுகாக்க, இரண்டு முரட்டு சைஸ் நெளதால் பூட்டு+சாவிகள் வாங்கவாவது இந்த என் பரிசுப் பணங்கள் தங்களுக்கு உபயோகப்பட்டிருக்கலாம். வீட்டுக்கு அதுவும் மிகவும் முக்கியம் தானே ! :))))) வாழ்த்துகள் !*****
//தங்கள் நகைச்சுவையை ரசித்தேன். //
தன்யனானேன்.:)
//தீபாவளி நல்வாழ்த்துகள் !//
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனம் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள், குருவே!
பேரன்புடன் தங்கள்,
வீ............................ஜீ.
சிறப்புச் சாதனையாளர் கீதாசாம்சிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநேயர் கடிதம் கச்சிதம்.
கேள்விக்கு பதில்கள் மிக அருமை.
பாராட்டுக்கள்.
நீங்கள் சொல்வது போல் பிரம்மோற்சவத்தில் அனைவரையும் கலந்து கொள்ள வைப்பதே பெரிய சாதனைதான். தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சி படுத்துவது ஒரு பெரிய விஷயம் .
சாருக்கும் வாழ்த்துக்கள்.
//ஆழமான உட்பொருளோடு கூடிய ஜீவி சாரின் கதைகள் பொழுதுபோக மட்டும் படிக்க வேண்டியவை அல்ல.//
கீதா நீங்கள் ஜீவி சார் பற்றி குறிப்பிட்டது உண்மை.
நடுவர் சாருக்கும் வாழ்த்துக்கள்.
பரிசுகள் பல வாங்கிக் குவித்திரிக்கும் திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் நேயர் கடிதம் அசத்தல் . மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குஎல்லாக் கேள்விகளுக்கும் உங்கள் மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லி விட்டீர்கள். மிகவும் ரசித்தேன் கீதா மேடம்.
அழகான முறையில் சுருக்கமாக விமரிசனம் எழுதியுள்ளார் திருமதி.கீதா சாம்பசிவம் அவர்கள்.
பதிலளிநீக்கு"2 நவ்தால் பூட்டு வாங்க உபயோகப்பட்டிருக்கும் அந்த பரிசுப் பணம்"
-என்கிற தங்கள் நகைச்சுவையை நன்றாக இரசித்தேன், கோபு சார்!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 21, 2014 at 9:21 PM
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//"2 நவ்தால் பூட்டு வாங்க உபயோகப்பட்டிருக்கும் அந்த பரிசுப் பணம்" -என்கிற தங்கள் நகைச்சுவையை நன்றாக இரசித்தேன், கோபு சார்!//
மிக்க நன்றி நண்பரே. ரூபாய் 977 க்கு இரண்டு பூட்டுகளும் 2+2=4 சாவிகளும் வாங்கலாம் தானே? [ஒருவேளை மூன்றாகவே வாங்கலாமோ?] எனக்கு இன்றைய விலைவாசியே தெரிவது இல்லை. ஏதோ குத்துமதிப்பாக எழுதியுள்ளேன். :)
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான நகைச்சுவை ரசனைக்கும் என் நன்றிகள். - VGK
//விமர்சனம் குறித்தும் எந்தவித கவலையும் கொள்ளாமல்/
பதிலளிநீக்குஅபார குணம்.
கீ.சா வோட பேட்டி அருமை.
அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்.
என் விமரிசனக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு//ஆமாம், ருணா செல்வம் என்னும் பெண்மணியின் கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது. //
அருணா செல்வம் என வந்திருக்கணும். எடிட் செய்வது வழக்கமில்லை என்பதால் தவறு நேர்ந்திருக்கிறது. அருணா செல்வம் அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். பெயர் "ருணா செல்வம்" என்று வந்துவிட்டது.
வைகோ சாரை அதைத் திருத்தும்படி வேண்டுகிறேன். நன்றி சார்.
Geetha Sambasivam October 22, 2014 at 1:37 PM
நீக்குவாங்கோ, வணக்கம். தீபாவளி கங்கா ஸ்நானம், பலகார பக்ஷணங்கள் எல்லாம் நல்லபடியாக ஆச்சா !
//என் விமரிசனக் கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி.//
இன்னும் வரக்காணோமே, ஏதேனும் என் மீது கோபமோன்னு பயந்தே பூட்டேனாக்கும் ! :)
//*ஆமாம், ருணா செல்வம் என்னும் பெண்மணியின் கதை ஒன்றைத் தற்செயலாகப் படிக்க நேர்ந்தது.*//
//அருணா செல்வம் என வந்திருக்கணும். எடிட் செய்வது வழக்கமில்லை என்பதால் தவறு நேர்ந்திருக்கிறது. அருணா செல்வம் அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். பெயர் "ருணா செல்வம்" என்று வந்துவிட்டது.
வைகோ சாரை அதைத் திருத்தும்படி வேண்டுகிறேன்.
நன்றி சார்.//
அப்படித்தான் ’அருணா’ ஒருவேளை ’ருணா’ ஆக்கப்பட்டிருப்பாங்களோன்னு நானும் யோசித்தேன்.
இப்போ அதை திருத்தி விட்டேன். தகவல் கொடுத்து Confirm செய்துள்ளதற்கு நன்றிகள்.
VGK
//அவர்கள் கதைகள் நன்றாக சம்பவங்களையும், சம்பாஷணைகளையும் அமைத்து எழுதுகிறார். //
நீக்குயாரு, கீதாம்மாவா?.. கீதாம்மாவா இப்படிச் சொல்றது?..கதைலே சம்பாசஷைன்னு ஒண்ணு
இருக்குன்னு கண்டுண்ட வரைக்கும் சந்தோஷம்!
இந்த விமரிசன போட்டி பூராவும் நீங்க அதைக் கண்டுக்காம விட்டதாத் தான் நினைக்கிறேன்!
ஹாஹா, ஜீவி சார், ஏற்கெனவே என்னோட விமரிசனக் கட்டுரைகள் எல்லாம் நீஈஈஈஈஈஈஈஈளமாக பொறுமையைச் சோதிப்பனவாக இருந்ததை அறிவேன். இதிலே சம்பாஷணைகளையும் அவற்றைக் குறித்த கருத்துக்களையும் தெரிவிக்க எங்கே இடம் வைச்சிருந்தேன்? மற்றபடி பல கதைகளிலும் இயல்பான சம்பாஷணைகளை வைகோ அளித்திருந்தார் என்பதில் சந்தேகமே இல்லை. :))))
நீக்குமேலும் அருணா செல்வம் சம்பாஷணைகளிலேயே கதையை நகர்த்துவதில் சமர்த்தராக இருக்கிறார். இது நான் கண்டு அதிசயித்த ஒன்று.
நீக்குமற்றபடி இவ்வளவு அருமையாகவும், திறமையாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தும் வைகோ சார் ஆற்றி இருக்கும் பணி போற்றுதலுக்கு உரியது. இது வரை பதிவுலகம் கண்டிராத ஒரு அதிசய அற்புதச் செயல் இந்தவிமரிசனக் கட்டுரைக்குப் பரிசளிக்கும் தொடர் பதிவுகள்.
பதிலளிநீக்குGeetha Sambasivam October 22, 2014 at 1:38 PM
நீக்கு//மற்றபடி இவ்வளவு அருமையாகவும், திறமையாகவும் அனைவருக்கும் ஊக்கம் கொடுத்தும் வைகோ சார் ஆற்றி இருக்கும் பணி போற்றுதலுக்கு உரியது. இது வரை பதிவுலகம் கண்டிராத ஒரு அதிசய அற்புதச் செயல் இந்தவிமரிசனக் கட்டுரைக்குப் பரிசளிக்கும் தொடர் பதிவுகள்.//
தங்களின் அன்பான வருகைக்கும் ஏற்புரை வழங்கி சிறப்பித்துள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
மனந்திறந்த அழகான நிறைவான கடிதம். கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் நச். மனமார்ந்த பாராட்டுகள் கீதா மேடம்.
பதிலளிநீக்குதாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒரு வீடே [FLAT] வாங்கி, சமீபத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.:)
பதிலளிநீக்குஎனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் அன்னபூர்ணாவில் ஒரு வெங்காய ரோஸ்ட் மட்டும்தான் கிடைத்தது.
நிறைவான கடிதம். பாராட்டுகள் பழனி கந்தசாமி சார் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வநதுடுத்து
பதிலளிநீக்குபூந்தளிர் September 4, 2015 at 2:39 PM
நீக்குவாங்கோ பூந்தளிர், வணக்கம்மா.
//நிறைவான கடிதம். பாராட்டுகள். பழனி கந்தசாமி சார் பின்னூட்டம் படித்ததுமே சிரிப்பு வந்துடுத்து//
எதையுமே அவர் வெளிப்படையாக பேசுவார். எழுதுவார். நானும் அதையெல்லாம் படித்துச் சிரித்து மகிழ்வது உண்டு.
FLAT + NAV-TAL பூட்டுக்களைவிட எனக்கும் கோவை அன்னபூர்ணா வெங்காய ரோஸ்டில் தான் பிரியம் அதிகமாக்கும். :)))))))))
கோயம்பத்தூர்காரர்கள் மட்டுமே இதற்கெல்லாம் மிகவும் கொடுத்துவைத்தவர்கள். :) வாழ்க !
எனக்குக் கிடைத்த பரிசுத்தொகையில் அன்னபூர்ணாவில் ஒரு வெங்காய ரோஸ்ட் மட்டும்தான் கிடைத்தது.//
பதிலளிநீக்குஅடடா! அது சூப்பரா இருக்குமே. கோயம்புத்தூர் வந்த போது அன்னபூர்ணாவில் சாப்பிட்டிருக்கேன்.
திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் கடிதமும், அதற்கு தங்கள் பதிலும் அருமை.
கடிதம் பதில் கடிதம் பதில படிச்சி ரசிச்சுபிட்டோம்
பதிலளிநீக்குதிருமதி கீதாசாம்பசிவம் மேடத்தின் மனந்திறந்த கடிதமும் தங்களின் பதிலும் சிறப்பாக இருக்கு.
பதிலளிநீக்கு//தாங்கள் இதுவரை பரிசு பெற்ற பணத்தையெல்லாம் வைத்து ஒரு வீடே [FLAT] வாங்கி, சமீபத்தில் பத்திரப்பதிவும் செய்துள்ளதாகக் கேள்விப்படுகிறேன்.:) //நான் ஃப்ளாட் ஆகிட்டேன்...புதுச்சேரு எங்க ஊருங்கோ...
பதிலளிநீக்குஅருமையான பதில்கள்! கடிதம் அருமை!
பதிலளிநீக்கு'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html
பதிலளிநீக்குதலைப்பு: ’இன்று போல் என்றும்’
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு