முக்கிய அறிவிப்பு
இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான
கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து
சென்ற வெள்ளிக்கிழமை முதல்
நாளைய திங்கட்கிழமை வரை
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது
நான்கு பகுதிகளையும்
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது.
இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான
கடைசி கதையாக இருப்பதால்
இதை நான்கு மிகச்சிறிய பகுதிகளாகப் பிரித்து
சென்ற வெள்ளிக்கிழமை முதல்
நாளைய திங்கட்கிழமை வரை
தினம் ஒரு பகுதியாக
வெளியிடப்பட்டு வருகிறது
நான்கு பகுதிகளையும்
பொறுமையாகப் படித்து
ஒரே விமர்சனமாக
எழுதி அனுப்பி வைத்தால் போதுமானது.
விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய
இறுதி நாள்: 26.10.2014
ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
ஞாயிற்றுக்கிழமை
இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.
விமர்சனம் அனுப்ப வேண்டிய
மின்னஞ்சல் முகவரி:
மின்னஞ்சல் முகவரி:
valambal@gmail.com
REFERENCE NUMBER: VGK 40
போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:
மனசுக்குள் மத்தாப்பூ
சிறுகதைத் தொடர்
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
பகுதி-1 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/
பகுதி-2 க்கான இணைப்பு:
http://gopu1949.blogspot.in/
பகுதி-3
இத்தகைய அழகிய தன் இளம் பெண் அனுவுக்கு வாய் பேசமுடியாமல் உள்ளது என்று தற்செயலாகக் கோயிலில் சந்தித்த அனுவின் தாயார் மூலம் நேற்று கேள்விப்பட்டதும் மனோவுக்கு அதிர்ச்சியாகிப் போனது.
அழகிய அந்த முழுநிலவுக்குள் இப்படியொரு களங்கமா? மனோவுக்கு மனதை நெருடியது. இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது என நினைத்துக்கொண்டான்.
இந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதிலிருந்து, அனுவின் மேல் அவனுக்கு ஏற்கனவே இருந்து வந்த ஈடுபாடு சற்றும் குறையாமல், மேலும் அதிகரிக்கவே செய்தது.
அன்று சனிக்கிழமை. இரவு மணி எட்டு இருக்கும். அனுவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.
அன்று சனிக்கிழமை. இரவு மணி எட்டு இருக்கும். அனுவைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்த மனோவுக்கு, தன் அறையின் வெளியே யாரோ அழைப்பு மணி அடிப்பது கேட்டது. ஓடிச்சென்று கதவைத் திறந்தான் மனோ. அறையின் வெளியே, வீட்டின் சொந்தக்காரரான அனுவின் அம்மா தான் நின்று கொண்டிருந்தார்கள்.
“வாங்கம்மா! என்ன இவ்வளவு தூரம், மாடிப்படிகளில் ஏறி நீங்களே வந்துட்டீங்க! ஒரு குரல் கூப்பிட்டிருந்தால் நானே வாடகைப் பணத்துடன் கீழே ஓடி வந்திருப்பேனே” என்று சொல்லி அங்கிருந்த நாற்காலியை மின் விசிறிக்குக்கீழே போட்டு, அவர்களை அமரச்சொல்லி, மின் விசிறியையும் சுழலவிட்டான், மனோ.
”தம்பி, நான் வாடகைப்பணம் வசூல் செய்ய வரவில்லை. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே, நீங்க ஆபீஸ் டூட்டிக்குப்போக வேண்டியிருக்குமா அல்லது விடுமுறையா எனக் கேட்டுட்டுப் போகலாம்னு தான் நான் வந்தேன்” என்றாள்.
“டூட்டிக்குப் போகணும்னு கட்டாயம் ஏதும் இல்லை. பொழுது போக்கா இருக்கட்டுமே என்று நானாகத்தான் ஞாயிற்றுக்கிழமைகளில் போய் வருவது என் வழக்கம். சொல்லுங்கம்மா, நான் ஏதாவது உங்களுக்கு உதவி செய்யணுமா?” மனோ மிகுந்த ஆவலுடனும், துடிப்புடனும் கேட்டான். அவனின் அன்புக்குரிய அனுவின் அம்மா அல்லவா அவர்கள்!
“ஆமாம் தம்பி, நீங்க ஒரு உதவி செய்யணும். நம்ம வீட்டுப்பொண்ணு அனுவை பொண்ணு பார்க்க பட்டணத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருகிறாங்க. எங்க வீட்டுக்காரர் போய்ச் சேர்ந்ததிலிருந்து, ஆம்பளைத்துணை இல்லாத வீடாப்போச்சு. நீங்க கொஞ்சம் அவங்க வந்து போற சமயம் மட்டும், நாளை காலை பத்து மணி சுமாருக்கு நம்ம வீட்டுக்கு வந்து கூடமாட பேச்சுத்துணையா இருந்துட்டுப்போனீங்கன்னா, எங்களுக்கும் கொஞ்சம் தைர்யமா இருக்கும்” என்றாள்.
இதைக்கேட்ட மனோவுக்கு ஒரு பக்கம் ஆச்சர்யமாகவும், மறுபக்கம் ஒருவித அதிர்ச்சியாகவும் இருந்தது.
“ரொம்ப சந்தோஷமான சமாசாரம் தான் அம்மா. மாப்பிள்ளைப் பையன் என்ன செய்கிறார்? நம் அனுவைப்பற்றி எல்லாம் விபரமாகச் சொல்லி விட்டீர்களா?” மனோ மிகுந்த அக்கறையுடன் வினவினான்.
“சென்னையில் ஏதோ பிஸினஸ் பண்ணுகிறாராம். பணம் காசுக்கு ஒண்ணும் பஞ்சமில்லையாம். கல்யாணத் தரகர் ஒருவர் மூலம் தான் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாற்றம் இதுவரை நடந்துள்ளது;
நீங்க தான் தம்பி நேரில் வந்து பேசி முழு விபரம் கேட்டு, நல்லது கெட்டது பற்றி விசாரித்துச் சொல்லணும். நல்லபடியா முடிஞ்சு, நல்ல இடமாக இருக்கணுமேன்னு ஒரே விசாரமாக இருக்கிறது” என்றாள்.
”சரிம்மா, நீங்க கவலைப்படாம போங்க. நான் நாளைக்கு காலையிலேயே சரியா பத்து மணிக்கு முன்னாடியே வந்துடறேன்” என்று சொல்லி டார்ச் அடித்து கீழே கடைசிபடி வரை கூடவே தானும் சென்று வழியனுப்பி வைத்தான், மனோ.
மனோ ஓட்டலுக்குச் சென்று வழக்கம்போல் இரவு உணவருந்தி விட்டு தன் அறைக்கு திரும்ப வந்து படுத்தும், தூக்கமே வரவில்லை. நெடுநேரம் புத்தகங்கள் படித்தும் எதுவுமே மனதில் பதியவில்லை. மனோவில் மனதில் ஏதோ இனம்புரியாததோர் சோகம் கவ்விக்கொண்டது போல உணரமுடிந்தது. பிறகு நள்ளிரவுக்கு மேல் ஒரு வழியாகத் தூங்கிப்போனான்.
அதிகாலையில் வழக்கம்போல் தன் பைனாக்குலரில் அனுவையும், அவள் போடும் கோலத்தையும் தரிஸிக்க ரெடியாகி விட்டான். இன்று அவனால் எப்போதும் போல இயல்பாக அனுவையும், அவள் போடும் கோலத்தையும் ரசிக்க முடியவில்லை.
அனுவைப் பார்க்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாட்களுக்கோ? விரைவில் கல்யாணம் ஆகிச் சென்று விடப்போகிறவள். மெளன மொழி பேசும் அவளுக்கு, அவள் மனதைப்புரிந்து கொள்ளும் கலகலப்பான கணவன் அமைந்து, அவளையும் கலகலப்பாக சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும், என மனதிற்குள் பிரார்த்தித்தான்.
தன்னை இன்று பெண் பார்க்க வருகிறார்கள் என்ற சந்தோஷத்தில், குனிந்த நிலையில் பூமித்தாயைக் குளிப்பாட்டி, மேக்-அப் செய்வது போல், அழகிய தன் கையின் பிஞ்சு விரல்களால் பொட்டு வைத்து, கோலமிட்டு, கலர் கலரான ஆடைகள் அணிவித்து, பறங்கிப்பூக்களை சூடி மகிழ்கின்றாள் அனு. தன் வீட்டுப் பக்கத்திலிருந்து, நடு ரோட்டுப்பக்கம் போய் அமர்ந்து ஆங்காங்கே [ பூமித்தாயின் உடலில் ] கோலத்தில் டச்-அப் வேறு செய்கிறாள். அவள் இவ்வாறு நடுத்தெருவில் குந்திட்டு அமர்ந்திருப்பது அவளின் வீட்டை நோக்கி.
அவள் வீட்டுக்கு நேர் எதிர்புறம் உள்ள செடி கொடிகள் மண்டிக்கிடக்கும் புதர்போன்ற பகுதியிலிருந்து சுமார் ஆறடி நீளமுள்ள கருநாகப்பாம்பு ஒன்று வேகமாக அவளின் முதுகுப்புறம் நோக்கி சரசரவென்று வந்து கொண்டிருப்பதை மனோ தன் பைனாக்குலர் மூலம் பார்த்து விட்டான்.
அவளின் முதுகுப்புறம் வந்த அந்த பாம்பு அவளைத் தீண்டாமலும், கோலத்தைத்தாண்டாமலும், சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல படம் எடுத்து ஆட ஆரம்பித்தது.
இதைப்பார்த்து விட்ட மனோவுக்கு பதட்டம் அதிகரித்து, தன் பைனாகுலரை வீசிவிட்டு, வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடோடி வருகிறான்.
அனுவின் பக்க வாட்டில் நெருங்கிய அவன், அவளை அப்படியே அலாக்காகத்தூக்கிச் சென்று, அவள் வீட்டு வாசல் பக்கம் நின்று அவளை அப்படியே திருப்பி, படமெடுக்கும் அந்தப் பாம்பைப் பார்க்கச் செய்கிறான்.
திடீரென்று ஒரு வாலிபன் தன்னைக் கட்டிப்பிடித்து தூக்கி விட்டதையும், எதிரில் தன்னை ஒரு கருநாகம் தீண்ட இருந்ததையும் பார்த்து அதிர்ச்சியடைந்த அனு, வாழ்க்கையில் முதன் முதலாக தன் வாய் திறந்து “அம்மா” என்று அலறிக் கத்திவிட்டாள்.
அவளை அது சமயம் வாய் திறந்து பேச உதவிய அந்தப் பாம்பும், தான் வந்த வேலை முடிந்து விட்டது என்பது போல தான் வந்த வழியே திரும்பிச்சென்று, எதிர்புறம் இருந்த செடி கொடிகளுடனான புதர் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டது.
டாக்டர் மனோவுக்கு அந்தக் கடிக்க வந்த பாம்பை விட, இதுவரை வாய் பேச முடியாத குறையுடன் இருந்த அனு, தன் வாய் திறந்து ”அம்மா” என்று அலறியதில் அதிர்ச்சியாகி அவனும் “ஹை..ய்..ய்..ய்..யோ” என அவளைப் பார்த்து கத்திவிட்டான்.
காலை வேளையில் இவர்கள் எழுப்பிய இந்தச் சத்தத்தில் ஊரே கூடி நின்று விட்டது.
நம்ம ஊரு வயசுப்பொண்ணு ஒருத்தியை, அதுவும் வாய் பேசமுடியாத ஒரு அப்பாவிப் பெண்ணை, எங்கிருந்தோ வந்த இவன் கட்டிப்பிடித்துத் தூக்கி விட்டான். இந்த அயோக்யனை நாம் சும்மா விடக்கூடாது. கட்டிப்போட்டு உதைக்க வேண்டும் என அந்த ஊர்ப் பஞ்சாயத்தில் முடிவு ஆனது.
’அனு’வைக் கட்டிப்பிடித்து மனோ தூக்கியதை மட்டும், அங்கே அகஸ்மாத்தாக வந்த பாக்கெட் பால் போடுபவன் ஒருவன் பார்த்துவிட்டான். அவனே இதில் மனோவுக்கு எதிரான வில்லனாகவும், கண்ணால் சம்பவத்தை நேரில் கண்ட முக்கியமான சாட்சியாகவும் ஆனதால், பஞ்சாயத்தில் இவ்வாறு ஒரு மோசமான தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது.
பஞ்சாயத்தாரின் தீர்ப்பினைக்கேட்ட மனோவுக்கு மிகவும் அவமானமாகி விட்டது. அழுகையாக வந்தது.
அதைவிட கொடுமை ..... கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.
அதைவிட கொடுமை ..... கீழ் வீட்டு, அனுவின் அம்மா, மனோவைப் பார்த்த பார்வையே, அவனை அப்படியே சுட்டெரிப்பது போல இருந்தது.
தொடரும்
ஆஹா! ஏகப்பட்ட திருப்பங்கள்! முடிச்சுகள்! மாத்தி யோசிக்கிறவங்கள பாத்திருக்கேன்! இப்படி மாத்தி மாத்தி யோசிக்கிறத உங்ககிட்டதான் வாத்யாரெ பாக்குறேன்! முடிவு சுபம்தான்னு நினைக்கிறேன்! அன்புடன் எம்ஜிஆர்.
பதிலளிநீக்குவாங்கோ, வணக்கம்.
நீக்கு//ஆஹா! ஏகப்பட்ட திருப்பங்கள்! முடிச்சுகள்! மாத்தி யோசிக்கிறவங்கள பாத்திருக்கேன்! இப்படி மாத்தி மாத்தி யோசிக்கிறத உங்ககிட்டதான் வாத்யாரெ பாக்குறேன்!//
அடடா, எனக்கு ரொம்பக்கூச்சமாக உள்ளது, ஸ்வாமீ.
//முடிவு சுபம்தான்னு நினைக்கிறேன்!//
கொட்டும் மழையிலும் கரையாமல், கலையாமல், உறுதியான உள்ளத்துடனும், அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், உள்ளம் முழுவதும் உற்சாகத்துடன், முடிவு சுபமாக இருக்க வேண்டுமே என உளமாற விரும்பி மலர்தூவி வரவேற்கும் லக்ஷக்கணக்கான [வாசகப்] பொதுமக்களின் விருப்பத்திற்கு இணங்க, கதையினில் வரும் நம் 'அனு' போல ஏதும் பேசமுடியாத நிலையில் மெளனமாக நானும் இப்போது புன்னகைக்கிறேன்.
முடிவு சுபம் தானா என்பது போகப்போக தெரிந்துவிடும். இந்தக்கதையில் அது நாளைக்கே தெரிந்து விடுமே ! :)))))
நாம் நல்லதையே நினைப்போம். நிச்சயமாக நல்லதே நடக்கும் என நம்புவோம், ஸ்வாமீ.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான வித்யாசமான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
எத்தனை திருப்பங்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
மிக்க நன்றி, ஐயா.
நீக்குஇறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது ..//
பதிலளிநீக்குநிதர்சனமான உண்மை..!
பாம்பைப் பார்க்காத பால்காரர் - சந்தேகப்பாம்புக்கு
பால்வார்த்து பூதாகாரமாக்கிவிட்டாரே.!
இராஜராஜேஸ்வரி October 19, 2014 at 9:14 AM
நீக்குவாங்கோ, வணக்கம்.
*****இறைவனின் படைப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கே அனைத்துத் திறமைகளும் அபரிமிதமாக அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அவளின் கோலப் படைப்புக்களில் காட்டப்படும் தனித்திறமையே எடுத்துக் காட்டுவதாக உள்ளது ..*****
//நிதர்சனமான உண்மை..!//
:))))) நிதர்சனமான உண்மையை நிதர்சனமான உண்மையாகச் சொல்லியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.:)))))
//பாம்பைப் பார்க்காத பால்காரர் - சந்தேகப்பாம்புக்கு
பால்வார்த்து பூதாகாரமாக்கிவிட்டாரே.!//
அதானே ! மிகவும் ஊன்றிப்படித்து விட்டு, சரியானதொரு பாயிண்டைப் பிடித்து, அதை தங்களுக்கே உரித்தான தனி பாணியில் கவிதைபோல அழகாகச் சொல்லியுள்ளது, கதை எழுதிய என் வயிற்றில் பால்வார்த்ததுபோல உள்ளது. மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள். :)))))
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - VGK
ம்ம்ம்ம்ம், முடிவுக்குக் காத்திருக்கேன். :) மனசுக்குள் மத்தாப்பு என்னும் தலைப்பு இருப்பதால் எல்லாம் சுபமே என்று புரிகிறது.:)))
பதிலளிநீக்குGeetha Sambasivam October 19, 2014 at 3:11 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//ம்ம்ம்ம்ம், முடிவுக்குக் காத்திருக்கேன். :)//
எப்படியும் இந்த இறுதிப்போட்டியிலும் பரிசினை வென்று விடுவது என்ற முடிவோடுதான் காத்திருக்கிறீர்கள் என்பது எனக்கும் புரிகிறது. :)
//மனசுக்குள் மத்தாப்பு என்னும் தலைப்பு இருப்பதால் எல்லாம் சுபமே என்று புரிகிறது.:)))//
அது சுபமோ இல்லையோ நாளைக்குத் தெரிந்துவிடும்.
அதைவிட சுபமான செய்தி ஒன்று தங்களுக்கு இதோ:
தங்களின் மிக அட்டகாசமான ‘நேயர் கடிதம்’ + அதற்கான என் சுவாரஸ்யமான பதில்களுடன் திங்கள் + செவ்வாய்க்கு இடைப்பட்ட நள்ளிரவில் வெளியிடப்பட உள்ளது. காணத் தவறாதீர்கள். தூங்கி விடாமல் விழித்திருங்கோ .. சொல்லிட்டேன். :)))))
அன்புடன் கோபு
அது சரி, விஜிகே 38 ஆம் போட்டிக்கதை முடிவுகள் வந்து விட்டனவா? எனக்குத் தான் தெரியலையோ? சில பின்னூட்டங்கள் கூடச் சரியாப் போய்ச் சேரலை போல!! வழக்கம் போல் காக்கா கொண்டு போயிருக்கும். :)
பதிலளிநீக்குGeetha Sambasivam October 19, 2014 at 5:16 PM
நீக்குவாங்கோ, மீண்டும் வருகைக்கு நன்றிகள்.
//அது சரி, விஜிகே 38 ஆம் போட்டிக்கதை முடிவுகள் வந்து விட்டனவா? எனக்குத் தான் தெரியலையோ? //
VGK-38 க்கான பரிசு முடிவுகள் வெளியிடப்படும் தேதிதான் மேலே இந்தப்பதிவினிலேயே இறுதியில் கொட்டை எழுத்துக்களில் கொடுத்துள்ளேனே !
பதிவை முழுவதுமாக உள்வாங்கிக்கொண்டு சிரத்தையாகப் படிப்பது இல்லை என்பதை இதிலும் நிரூபித்து விட்டீர்கள். சந்தோஷம் !
VGK-38 முதல் VGK-40 வரை பரிசு முடிவுகள் அடுத்தடுத்துத் தொடர்ச்சியாக வெளியிட முயற்சிக்கப்படும். அதன் ஆரம்பம் நாள்: 25/10/2014 சனிக்கிழமையாகும்.
இப்போ புரிந்ததா ?????
//சில பின்னூட்டங்கள் கூடச் சரியாப் போய்ச் சேரலை போல!! வழக்கம் போல் காக்கா கொண்டு போயிருக்கும். :)//
ஆ.... ஊ.... ன்னா காக்கா மேலே பழிபோட்டுவிட்டு தப்பித்து விடுங்கோ ..... பாவம் ..... அந்தக்காக்கா ! :)
அன்புடன் கோபு [VGK]
அசத்தலான ட்விஸ்ட்கள்! அருமையாக செல்கிறது! தொடர்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குமிக்க நன்றி.
நீக்குஅனு பேசிவிட்டாள் மகிழ்ச்சி. மனோவின் கெட்டபெயர் நீங்க அனு, மனோ குற்றவாளி இல்லை என்று சொல்வாளா?
பதிலளிநீக்குபார்ப்போம்,
பாம்புக்கு என்ன அவசரம் அனுவை பேச வைத்து விட்டு ஓடி விட்டது?
கோமதி அரசு October 19, 2014 at 8:13 PM
நீக்குவாங்கோ, வணக்கம்.
//அனு பேசிவிட்டாள் மகிழ்ச்சி. மனோவின் கெட்டபெயர் நீங்க அனு, மனோ குற்றவாளி இல்லை என்று சொல்வாளா? //
தெரியலையே ! :)
//பார்ப்போம்,//
ஆம். இதைப்பற்றி நாம் நாளைக்குப் பார்ப்போம்.
//பாம்புக்கு என்ன அவசரம் அனுவை பேச வைத்து விட்டு ஓடி விட்டது?//
அதானே! ஒருவேளை மனோ அனுவை அலாக்காகத் தூக்கிவிட்டதைப்பார்த்ததும், ஒரே குஷியாகி, ஏதோவொரு மூடில் அது தன் ஜோடியைத்தேடி ஓடி இருக்குமோ? :)))))
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
நன்றியுடன் VGK
என்னங்க சார்!!!
பதிலளிநீக்குகதையை இப்படி கொண்டு போய்ட்டீங்க?
சரிங்க, அனு வாய் பேசத் தெரியாதவள்தான்...
ஆனால், படிப்பறிவு உண்டுதானே?
அவளுக்குத் தெரிந்த உண்மை நிலவரத்தை
எழுதிக் காட்டி கலவரத்தை, சுமுகமாக்கலாமே!
நாளைவரை பொறுத்திருப்போம்!
அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 19, 2014 at 9:31 PM
பதிலளிநீக்குவாருங்கள் நண்பரே, வணக்கம்.
//என்னங்க சார்!!! கதையை இப்படி கொண்டு போய்ட்டீங்க?//
ஏன் என்னாச்சு? ஏதோ எனக்குத் தோன்றிய ரூட்டில் போய் விட்டேன் போலிருக்கு ............. ஒருவேளை Wrong Route ஆக இருக்குமோ?
//சரிங்க, அனு வாய் பேசத் தெரியாதவள்தான்... ஆனால், படிப்பறிவு உண்டுதானே?//
நிச்சயமாக படிப்பறிவு உண்டுதான் என்றுதான் நானும் நினைக்கிறேன். இந்தக்காலத்தில் பொண்ணுங்க தானே நல்லாப் படிக்குதுங்க. அதனால் இந்த அனுவும் படித்தவளாகத்தான் இருக்கணும் என நானும் உங்களைப்போலவேதான் நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.
//அவளுக்குத் தெரிந்த உண்மை நிலவரத்தை எழுதிக் காட்டி கலவரத்தை, சுமுகமாக்கலாமே!//
அதானே ! ஏன் அவள் அப்படிச்செய்யாமல் விட்டாள் ?
//நாளைவரை பொறுத்திருப்போம்!//
சரி, அப்படியே .... நாளைவரை பொறுத்திருப்போம்! இறை நாட்டம் இதில் எப்படி எனப் பார்த்திடுவோம்.
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே.
அன்புடன் VGK
இந்தக்கதைக்கு திருமதி. ராதாபாலு அவர்கள் எழுதி அனுப்பியிருந்த விமர்சனம் அவர்களின் வலைத்தளத்தினில் தனிப்பதிவாக வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு: http://enmanaoonjalil.blogspot.com/2014/11/vgk-40.html
பதிலளிநீக்குபோட்டியில் தன் விமர்சனம் பரிசுக்குத் தேர்வாகாமல் இருந்தும்கூட, அதை தன் வலைத்தளத்தினில் வெளியிட்டுச் சிறப்பித்துள்ள திருமதி. ராதாபாலு அவர்களின் பெருந்தன்மைக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
இது மற்ற அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
VGK
கதையின் முக்கியமான திருப்பம் இங்கே வருகிறது. முடிவு என்ன ஆகுமோ?
பதிலளிநீக்குமறுபடியும் நாளை வரையா?????
பதிலளிநீக்குவழக்கம் போல் சஸ்பென்ஸ்...................
பதிலளிநீக்குஒரு சின்ன கதன்னு சொல்லி போட்டு ட்விஸ்ட்டா வச்சு இளுவயா இளுக்குறீங்களீ.
பதிலளிநீக்குசற்றே பெரிய சிறுகதையோ. சுவாரசியமாக சொல்லிப்போவதால் அலுப்பு தட்டாம படித்து ரசிக்க முடிகிறத்.
பதிலளிநீக்கு;-)))))))))))))))))))))))
பதிலளிநீக்குமணவாழ்வை எதிர்நோக்கி, அனுவுக்கு மங்கல நிகழ்வு நடைபெற உள்ள நிலையிலும் இனி இந்த வாய்ப்பு தனக்கு இனி கிடைக்காதே என எண்ணி மனோ மறுபடியும் அடுத்த நாள் காலையில் பைனாகுலர் சகிதம் ஆஜராவதாகக் காண்பித்ததும் நமக்குள் ஒரு நெருடல்! பைனாகுலர் வழியாகப் பார்க்கையில் ஆறடி நீள கருநாகம் அவளுக்குப் பின்னால் படமெடுத்தாடுவதைப் பார்த்ததும் அதிர்ந்து, பைனாகுலரை எறிந்துவிட்டு, அவளைக் காப்பாற்ற விரைந்து, அவளைக் கட்டியணைத்துத் தூக்கிக் காப்பாற்றி அந்த நாகத்தைக் காண்பித்ததும் அவள் “அம்மா” என்று அலறியதைக் கேட்டு ஆச்சர்யத்தில் மகிழ்ந்து, நமக்குள்ளும் ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்திவிடுகிறான் மனோ.
பதிலளிநீக்குஅதன் பின் அதைப் பார்த்த பால்காரப் பையன் சாட்சியாகி, பஞ்சாயத்தில் வழங்கிய தீர்ப்பால் அதிர்ந்த மனோவை அலார மணிச் சத்தம் எழுப்பிவிட, அத்தனையும் கனவு என அறிந்ததும் நமக்கும் மீண்டும் இவையாவும் கனவுதானா? என்ற எண்ணம் ஏற்பட்டு எதிர்பார்ப்பு கூடிவிடுகிறது.
கதை முடிவை நோக்கி பயணிக்கத் துவங்குவதை உணர்த்தும் வண்ணம் தான் கண்ட கனவுகள் அனைத்தும் பலித்ததை மனோ நினைவுகூர்வதாக அமைத்தது புலப்படுத்திவிடுகிறது.
My Dear Mr. Seshadri Sir,
நீக்குவாங்கோ, வணக்கம்.
கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான ஆறு விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:
பதிலளிநீக்குமுதல் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-01-03-first-prize-winners.html
இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-02-03-second-prize-winners.html
மூன்றாம் பரிசுக்குத் தேர்வானவை:
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-03-03-third-prize-winners.html
சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html
http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html
http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html