About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, October 10, 2014

VGK-39 - மா மி யா ர்






இது ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்கான கதை

விமர்சனங்கள் வந்து சேர வேண்டிய 

கடைசி நாள்  : 16.10.2014

வியாழக்கிழமை


இந்திய நேரம் இரவு எட்டு மணி வரை மட்டும்.

விமர்சனம் அனுப்ப வேண்டிய 
மின்னஞ்சல் முகவரி: 

valambal@gmail.com 


REFERENCE NUMBER:  VGK 39

போட்டி பற்றிய மற்ற விபரங்களுக்கான இணைப்பு:

 



’ மாமியார் ’ 

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-






உள்ளூரில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போய் விட்டு பஸ்ஸில் திரும்பிய


வனஜா, தன் மாமியாரைக் காணாமல் வீடு முழுவதும் தேடிவிட்டு, 



தன் கணவரிடம் வினவினாள்.



”அம்மா இங்கு இல்லை. எங்கு போனார்களோ தெரியாது. 


இனி வரவே மாட்டார்கள் என்று நினைக்கிறேன்” என்று 


சொல்லிவிட்டு, வனஜாவை கடுப்புடன் முறைத்துப் பார்த்து விட்டு, 


எங்கோ வெளியே புறப்பட்டுச் சென்று விட்டார். 





பகல் பூராவும் எப்போதுமே இந்த மனுஷனுக்கு வனஜா மேல் 


ஒரே கடுப்பு வருவது சகஜம் தான்.





வாக்கப்பட்டு வந்து [வாழ்க்கைப்பட்டு வந்து] 


ஆறு மாதங்களாகத்தான் அவளும் பார்த்து வருகிறாளே!




ஆனால் ராத்திரியானால் அவரின் கடுப்பையெல்லாம் எங்கோ 


பறந்து போக வைத்து, பெட்டிப்பாம்பாக ஆக்கிவிடுவாள், 


அந்த கெட்டிக்காரி, வனஜா. 





அவர்களின் ஜாதக விசேஷம் அப்படி. 





ஜாதகப் பொருத்தம் இல்லை,  இந்த ரெண்டு ஜாதகத்தையும் 


சேர்க்க வேண்டாம் என்றார் முதலில் ஒரு ஜோஸ்யர். 





செகண்ட் ஒபீனியனுக்காக இன்னொரு 


ஜோஸ்யரிடம் போனார், வனஜாவின் தந்தை.





அந்த ஜோஸ்யர் ஜாதகங்களைப் பார்த்துவிட்டு,


பையனுக்குப் புனர்பூச நக்ஷத்திரம்; 


பெண்ணுக்கு உத்திராட நக்ஷத்திரம்;


சஷ்டாஷ்டக தோஷம் மட்டும் உள்ளது;  



அதுவும்கூட மித்ர சஷ்டாஷ்டகம் தான்; 


மற்றபடி தேவலாம்” என்றார்.






“சஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? 


அது என்ன செய்யும்? 


அதற்கு ஏதாவது பரிகாரம் உண்டா?  


என்று கேட்டார் வனஜாவின் அப்பாவும் விடாப்பிடியாக. 





வந்துள்ள நல்ல வரனை விடக்கூடாது. 


நல்ல பையன். வீட்டுக்கு ஒரே பையன். அப்பா இல்லை. 


அம்மா மட்டும் தான் இருக்கிறார்கள். 


அவர்களும் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். 


நல்ல உத்யோகம். நல்ல சம்பளம். 


சொந்த வீடும் சொத்து சுகமும் உள்ளது. 





ஜாதகப்பொருத்தம் இல்லை என்று சொல்லி, 


மற்ற எல்லாம் பொருந்திய மாப்பிள்ளையை 


நழுவவிடலாமா? என்பது பெண்ணைப் பெற்றவரின் கவலை.





”சஷ்டாஷ்டகத்திலும் இது மித்ர சஷ்டாஷ்டகம் தான். 


அதனால் பரவாயில்லை ஜோடி சேர்க்கலாம்.  


என்ன ஒன்று ... இதுபோன்ற தம்பதியினர் பகல் பூராவும் சண்டை 


போட்டுக்கொண்டே வாக்குவாதம் செய்துகொண்டே இருப்பார்கள். 


ராத்திரியானா சமாதானமாப் போய்விடுவார்கள்” என்று 


புன்சிரிப்புடன் சொல்லிக்கொண்டே, வாயில் குதப்பிக் 


கொண்டிருந்த வெற்றிலை, பாக்கு பன்னீர்ப் புகையிலையை


எட்டிப்போய்த் துப்பிவிட்டு, ஒரு சொம்பு தண்ணீரால் 


வாயையும் கழுவிக்கொண்டு வந்தவர் 


“என்ன ஸ்வாமி, நான் சொன்னது விளங்கிச்சா உமக்கு” 



என்று மீண்டும் நமட்டுச் சிரிப்பொன்றை 


வெளிக்கொணர்ந்தார், அந்த ஜோஸ்யர். 





நானும் என் சம்சாரமும் கூட இதே போலத்தானே!; 


எங்க வனஜா பிறந்தன்னிலேந்து கடந்த 22 வருஷமா, 



பகலெல்லாம் சண்டை போட்டுண்டு, 


ராத்திரியானா சமாதானம் ஆகிண்டு தானே இருக்கோம்!; 



அதனால் என்ன பரவாயில்லைன்னு எனக்குத் தோணுது; 





வேறு ஒன்றும் ஜாதகக்கோளாறு இல்லையே! 



அப்போ மித்ர சஷ்டாஷ்டகம் மட்டும் தான்; 



அதனால் பரவாயில்லை; மேற்கொண்டு ஆக வேண்டிய 


கல்யாண வேலைகளைப்பார்க்கலாம்னு சொல்றேளா?” 




என்றார் வனஜாவின் அப்பா, மிகுந்த ஆர்வத்துடன்.






அதுபோல பாஸிடிவ் ஆகச் சொன்னால் தேவலாம் 



என்று பெண்ணைப் பெற்றவரே எதிர்பார்க்கிறார் 



என்பது ஜோஸியருக்கும் மிகச்சுலபமாகப் புரிந்து விட்டது. 





“பேஷா இவங்க ரெண்டு பேரையும் ஜோடி சேர்க்கலாம் ஸ்வாமி;  



இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாத புருஷன் பெண்டாட்டி 



எங்கே இருக்கிறார்கள்?  எங்கேயாவது நூற்றுக்கு ஒத்தரோ, 



ஆயிரத்துக்கு ஒத்தரோ இருக்கலாம்; 


குடும்பம்னா சண்டை சச்சரவுகள் 



இருக்கத்தானே செய்யும்;




இப்போ நானும் என் சம்சாரமுமே மித்ரசஷ்டாஷ்டக தோஷம் 



உள்ளவா தான்;  எங்களுக்கு விளையாட்டுபோல ஆறு 



பிள்ளைங்க, ரெண்டு பொண்ணுகள். பகலெல்லாம் இங்கே தான் 



ஜோஸ்யம் பார்த்துண்டு இருப்பேன். 




வீட்டுக்குப்போனா ஒரே பிரச்சனைகள்; ராத்திரி 



படுத்துக்க மட்டும் தான் வீட்டுக்கே போவேனாக்கும்”   


என்று சொன்ன ஜோஸ்யருக்கு 




ரூபாய் 100 க்கு பதில் ரூபாய் 200 ஆகக் கொடுக்கப்பட்டது, 



வனஜாவின் அப்பாவால் ...... பாவம் அபார சம்சாரி 



என்பதாலோ என்னவோ !






இந்த ஜோஸ்யர் சொன்ன மித்ர சஷ்டாஷ்டக விஷயம் 



வனஜாவுக்கும் கல்யாணத்திற்கு



முன்பே தெரிவிக்கப்பட்டது. 





அவளுக்கு இதிலெல்லாம் அதிகமாக நம்பிக்கை ஏதும் 


கிடையாததால், இதை ஒரு பொருட்டாகவே 



அவள் எடுத்துக் கொள்ளவில்லை. 






இப்போது தான் அவ்வாறு க்ளீனாக எடுத்துச் சொன்ன 


ஜோஸ்யர் வாய்க்கு சர்க்கரை தான் போட வேண்டும் 



என்று அவ்வப்போது நினைத்துக் கொள்கிறாள்.





சில விஷயங்கள் எல்லாம் பட்டால் தானே, 



அனுபவித்துப் பார்த்தால் தானே, புரிகிறது!


   





சரி இந்த சஷ்டாஷ்டக தோஷத்தைப் பற்றிய 



ஆராய்ச்சியை இத்துடன் விட்டு விட்டு, 



தொலைந்து போன வனஜாவின் மாமியார் 


என்ன ஆனாள்ன்னு பார்ப்போமா!






நேற்று காலையில் உப்புச்சப்பில்லாத 


ஒரு விஷயத்தில் ஒருவருக்கொருவர் சற்றே சப்தம்



போட்டுப் பேசிக்கொண்டதனால் ஏற்பட்ட விளைவே இது,  


என்பது வனஜாவுக்குப் புரிந்து விட்டது.





நேற்று சாயங்காலம், ”நான் என் அம்மா வீடுவரை போய்விட்டு 



நாளைக்கு வந்து விடுகிறேன்” என்று தான் சொன்னபோதே, 



மாமியார் முகத்தில் ஒரு மகிழ்ச்சியோ, பதிலில் 



ஒரு சுரத்தோ இல்லை என்பதை எண்ணிப்பார்த்தாள்.






தன் கணவராகிய ஒரே பிள்ளையை பெற்றெடுத்தவள் 



வேறு எங்கு தான் கோபித்துக்கொண்டு போய் இருப்பார்கள்? 



என்று ஊகிக்க முடியாமல் தவியாய்த் தவித்தாள், வனஜா.







பிறகு, வனஜா தன் தாயாருக்கு போன் செய்து, 



தான் பஸ் பிடித்து செளகர்யமாக, வந்து சேர்ந்து



விட்டதைத் தெரிவித்து விட்டு, தன் மாமியார் காணாமல் போய் 


உள்ள விஷயத்தையும் கலக்கத்துடன் கூறினாள்.






”நேத்திக்கு ஞாயிற்றுக்கிழமையா இருக்கே, 



நம் கையால் தான் சமையல் செய்வோமேன்னு, 



சமையல் அறையில் புகுந்தேன். அது என்ன பெரிய ஒரு தப்பா? 



என்னை சமைக்க விடாம தடுத்துட்டாங்க, என் மாமியார். 




’நான் என்ன தீண்டத்தகாதவளா’ ன்னு ஏதேதோ 



கோபமாப் பேசிட்டேன்” என்றாள் வனஜா தன் தாயிடம்.




”வயசான காலத்திலே, ஆசை ஆசையா, உன் மாமியார் 



தன்னால முடிஞ்ச எல்லாக் காரியங்களையும் இழுத்துப்போட்டு 



செஞ்சு கொடுத்து, உனக்கு ரொம்பவும் உபகாரமாகத்தானே 



இருக்காங்க! அவங்க மனசு வருத்தப்படும்படியா ஏன் நீ 



ஏதாவது இப்படி பேசுகிறாய்?;




தலைய வாரிப்பின்னிண்டு, மூஞ்சிய பளிச்சுனு அலம்பிண்டு, 


தலை நிறையப் பூ வெச்சுண்டு, புதுசு புதுசா புடவையைக்கட்டிண்டு, 



நீ உன் புருஷனை கவனிச்சிண்டா போதும்டீ கண்ணேன்னு தானே



உன் மாமியார் அடிக்கடி சொல்றாங்க!; 




அதுக்கு நீ ’உங்களுக்கு வயசாயிடுச்சு; 



நீங்க எதுவும் செய்ய வேண்டாம்; 



நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க; 



நானே எல்லாம் பார்த்துக்கறேன்னு’ சொல்கிறாயாமே! 



பாவம், நீ இதுபோலச் சொல்லும் போதெல்லாம், 


அது அந்த அம்மாவை மனதளவில் 



பலகீனமானவங்களா ஆக்கிடுதோ என்னவோ;  



மேலும் நீ புதிசா கல்யாணம் ஆகி வந்தச் சின்னப்பொண்ணு; 



சமையல் கட்டுல அவசரத்துல ஏதாவது நீ சுட்டுக்கொண்டாலோ , 



குக்கர் முதலியவற்றைத் திறக்கும் போது உன் முகத்தில் ஆவி 



அடித்து விட்டாலோ, அப்பளம் வடகம் முதலியன பொரிக்கும் போது 



ஏதாவது சுடச்சுட எண்ணெய் தெளித்து விட்டாலோ, 


அந்த அம்மாவுக்கும், உன் கணவருக்கும் தாங்கவே முடியாதாம்; 




அன்றொரு நாள், நான் அங்கே வந்திருந்த போது, 



குழந்தை மாதிரி, கண் கலங்கிப்போய், 



என் கையைப் பிடித்துக்கொண்டு என்னிடம் 


இதெல்லாம் சொன்னாங்க! 





இவ்வளவு நல்ல மனசு உள்ள உன் மாமியாரை 



புரிந்து கொள்ளாமல் நீ ஏன் அவங்க மனசு வருத்தப்படும்



படியாக நடந்து கொள்கிறாய்?” என தன் மகளைத் 


திட்டித் தீர்த்தாள் வனஜாவின் தாய்.




”சரிம்மா, இப்போ அவங்களைக் காணோமே, 



நான் எங்கு போய் அவங்களைத் தேடுவேன்?” 


அழாக்குறையாகக் கேட்டாள், வனஜா தன் தாயிடம்.





”நேத்து சாயங்காலத்திலிருந்து உன்னைப் பார்க்காமல், 


வீடே விருச்சோன்னு இருந்ததாகச் சொல்லி, இங்கே நம் 



வீட்டுக்குப் புறப்பட்டு வந்திருக்காங்க உன் மாமியார். 



நீ இங்கிருந்து புறப்பட்ட அதே நேரம் அவங்க 



அங்கிருந்து புறப்பட்டிருக்காங்க. உன்னை நேரில் 



சந்தித்துப்பேசி சமாதானப்படுத்தி, அழைச்சிட்டுப் 


போகலாம்னு, பாவம் அவங்களே புறப்பட்டு வந்திருக்காங்க;




”நீ இங்கே இல்லாமல் புறப்பட்டு விட்டதால், 



ஒவ்வொரு விஷயமா என்னிடம் இப்போதான்



கண் கலங்கியபடிச் சொன்னாங்க”



“இன்னும் என்னென்ன சொன்னாங்க, 



என் மாமியார்” வனஜா கேட்டாள்.




சின்னஞ்சிறுசுகள், கல்யாணம் ஆன புதுசு, 



ஞாயிற்றுக்கிழமை லீவுன்னா, சினிமா, டிராமா, 



பார்க்கு, பீச், குற்றாலம், கொடைக்கானல்ன்னு 


ஜாலியாப் போய்ட்டு வந்தால் தானே, 



நானும் நீங்களும் சீக்கரமா பாட்டியாகப் 


பிரமோஷன் வாங்க முடியும்”ன்னு சொன்னாங்க; 




இதெல்லாம் புரியாம உங்க பொண்ணு, 



இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, நானே 



சமைக்கிறேன்னு எனக்குப் போட்டியா 


சமையல்கட்டுக்கு வந்தாள்னா, நான் 



அவளுக்கு எப்படி இதையெல்லாம் 



புரிய வைக்கமுடியும்” 



என்று சொல்லி வருத்தப்படறாங்க. 






இவ்வளவு நல்ல ஒரு மாமியாரை அடைய நீ போன 



ஜன்மத்துலே ஏதோ புண்ணியம் செய்திருக்கனும்னு 



நினைக்கிறேன். சம்பந்தியம்மாவுக்கு நம்ம வீட்டுலே 



விருந்து போட்டு, நானே அவங்களை அங்கே அழைச்சிட்டு 



வரேன், நீ கவலைப்படாம இரு” என்றாள் வனஜாவின் தாய்.




தங்கமான தன் மாமியாரின், நியாயமான எதிர்பார்ப்பை, 



தன் தாயின் மூலம் அறிந்துகொண்ட வனஜாவுக்கு, 



ஒரே மகிழ்ச்சி கலந்த வெட்கம் ஏற்பட்டது.  





மாமியார் வந்ததும், ”தான் ஏதாவது நேற்று 



தவறுதலாகப் பேசியிருந்தால், தயவுசெய்து



மனதில் வைத்துக்கொள்ளாமல் மன்னித்து விடுங்கள்” 


என்று சொல்லி நமஸ்கரிக்க வேண்டும் 



என்று நினைத்துக்கொண்டாள், வனஜா.










oooooOooooo








   

VGK-37 


 எங்கெங்கும் ... 


     எப்போதும் ...


  என்னோடு ... ! 



விமர்சனப்போட்டி முடிவுகள்


வழக்கம்போல் நாளை


சனி / ஞாயிறு / திங்களுக்குள்


முற்றிலுமாக வெளியிடப்படும்.



 

காணத்தவறாதீர்கள்.



 



 


என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்  

19 comments:

 1. காணக்கிடைக்காத மா மி யா ர்..!

  ReplyDelete
 2. குடும்பத்தினர் மனசுவிட்டுப் பேசிக் கொள்ளவேண்டும்; பிரச்னைகள் வராது - என்கிற கருத்தை குட்டிக் கதையில் அழகாகச் சொன்னீர்கள்!

  ReplyDelete
 3. எல்லோருமே இப்படியே ரொம்ப நல்லவங்களா இருந்துட்டாப் பிரச்னையே இல்லை! :)))) ஆனால் உலகத்தில் இருமை தான் அதிகம். இருள்-- ஒளி, பகல்--இரவு மாதிரி, நல்லவங்க--கெட்டவங்க நிறைந்ததே உலகம். நம் ஆசையை வேணா இப்படிக் கதைகளின் மூலம் தீர்த்துக்கலாமோ? :))))))

  ReplyDelete
 4. நல்ல மாமியார்.நல்ல மாட்டுப் பொண்,.சந்தோஷம் தான். கீதா சொல்லுக்கு நான் வோட் போடுகிறேன்.

  ReplyDelete
 5. அருமையான மாமியார் , புரிந்து கொண்ட மருமகள் இன்பத்துக்கு வேறு என்ன குறைச்சல். கீதா சொல்வது போல் எல்லோரும் இப்படி நல்லவராக இருந்தால் குடும்பத்தில் பிரச்சனை இருக்காது.
  நல்ல கதையை அளித்தமைக்கு நன்றி.
  நல்ல கதைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. மாமியாரும் மாட்டுப்பொண்ணும் வருத்தருக்கொருத்தவர் சளைத்தவர்களில்லை, அன்பைக் காட்டுவதில்.

  ReplyDelete
 7. ம்ம் நல்ல மாமியார் நல்ல நாட்டுப்பெண். எல்லார் வீடுகளிலும் இப்படி இருந்தா நல்லாதான் இருக்கும்

  ReplyDelete
 8. ம்ம்ம்ம். இப்படி ஒரு மாமியார் கிடைச்சா - எல்லா நாட்டுப் பெண்கள்க்கும் கொண்டாட்டமாயிடும்.

  ReplyDelete
 9. அண்டர்ஸ்டாண்டிங்கு நல்லா இருந்துகிட்டா மாமியா மருமக மட்டுமில்ல அல்லா ஒறவுகளுமே நல்லாருக்கும்

  ReplyDelete
 10. மாமியாரும் ஒரு வீட்டுக்கு மருமகளாக வந்தவர்தானே. நல்ல புரிந்து கொள்ளல் இருந்தால் எல்லாம் இன்பமயம்தான்.

  ReplyDelete
 11. மாமியார் அம்மாவாக மாறினால், மறுமகள் மகளாகவே மாறிவிடுவாள்...சுவைபட சொன்ன கதைக்கு எனது ஓட்டு. நன்றி வாத்யாரே.

  ReplyDelete
 12. இக்கதையில் மாமியாரின் மன ஓட்டத்தை மருமகள் புரிந்து கொள்ளாத நிலையைக் கருவாக அமைத்து கதை அமைத்த பாங்கு பாராட்டத்தக்கது.

  மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.

  வாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்!

  ReplyDelete
  Replies
  1. My Dear Mr. Seshadri Sir,

   வாங்கோ, வணக்கம்.

   கதையைப்பற்றிய தங்களின் சிறப்புப்பார்வையும், விரிவான + ஆதரவான + உற்சாகம் அளித்திடும் கருத்துக்களும் என் மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளன.

   //மருமகள் மீது தனக்கிருக்கும் அக்கறையை தன் சம்பந்தி அம்மாளிடம் அழகாக எடுத்துரைத்து, அவர் மூலமே அதை மகளுக்குப் புரிய வைக்கும் பாங்கு புதுமை. சம்பந்திகளுக்குள்ளும் புரிதல் இருந்ததை நமக்குப் புரிய வைத்துவிட கதாசிரியர் கையாண்ட யுத்தி இது.

   வாழ்க்கையில் சாதாரணமாக கணவன் மனைவிக்குள்ளோ, மாமியார் மருமகள் இடையேயோ ஏற்படும் பிரச்சனைகளை உளவியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அணுகி விடைதேடினால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை அழகாக விளக்கிய ஆசிரியருக்கு .......//

   மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

   தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   அன்புடன் VGK

   Delete
 13. இந்தப் போட்டிக்கான கதையினை முன்பு நான் என் வலைத்தளத்தினில், 2011-இல் வெளியிட்டிருந்தபோது அதிலுள்ள பின்னூட்ட எண்ணிக்கைகள்: 55

  அதற்கான இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2011/10/blog-post_18.html

  ReplyDelete
 14. மேற்படி என் சிறுகதைக்கான விமர்சனப்போட்டிக்கு, ஏராளமாக வந்து குவிந்திருந்த விமர்சனங்களில், உயர்திரு நடுவர் அவர்களால், பரிசுக்குத் தேர்வான விமர்சனங்களை மட்டும் படிக்க இதோ இணைப்புகள்:

  முதல் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-01-03-first-prize-winners.html

  இரண்டாம் பரிசுக்குத் தேர்வானவை:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-02-03-second-prize-winners.html

  மூன்றாம் பரிசுக்குத் தேர்வானது:
  http://gopu1949.blogspot.in/2014/10/vgk-39-03-03-third-prize-winner.html

  சிறுகதை விமர்சனப் போட்டிகளின் நிறைவினில், பரிசு பெற்ற ஒட்டுமொத்த வெற்றியாளர்கள் பற்றிய முழு விபரங்கள் அறிய, இதோ ஒருசில சுவாரஸ்யமான இணைப்புகள்:

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-31-to-vgk-40.html

  http://gopu1949.blogspot.in/2014/11/vgk-01-to-vgk-40-total-list-of-hat.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_6.html

  http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

  ReplyDelete
 15. COMMENT RECEIVED IN WHATS APP ON 23.10.2018 - 14.52 Hrs. FROM VIJI (Mrs. VIJAYALAKSHMI NARAYANAMOORTHY of North Andar Street, Tiruchi-2) is reproduced below:

  -=-=-=-=-

  இதுபோல் மாமியார் கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும்.

  -=-=-=-=-

  மிக்க நன்றி, விஜி.

  அன்புடன் கோபு

  ReplyDelete
 16. WHATS-APP COMMENTS RECEIVED FROM Mr. DURAI. MANIVANNAN SIR, 9750571234 ON 30.06.2021

  மாமியார் இப்படியும் இருக்க முடியுமா?லட்சத்தில் ஒருவர் இருப்பின் ஆச்சரியமே! ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற மாமியாராக அம்மாவாக மகளாக இருக்க வேண்டுமென எல்லாருக்கும் ஆசைதான். ஒருவேளை இப்படி இருப்பின் உலகம் போரடித்துவிடுமோ என்னவோ, பகலில் கோபதாமும் இரவில் விரகதாபமும் நாசுக்.  துரை.மணிவண்ணன்.
  -=-=-=-=-

  THANKS A LOT FOR YOUR KIND READING & ALSO FOR OFFERING THIS VERY VALUABLE COMMENTS. 
  - VGK 

  ReplyDelete