என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 4 அக்டோபர், 2014

VGK-36 / 02 / 03 - SECOND PRIZE WINNERS - ’எலி’ஸபத் டவர்ஸ்


 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :

 VGK-36   


 ’ எலிஸபத் டவர்ஸ் ‘  


 

  

இணைப்பு:




     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




 நடுவர் திரு. ஜீவி 




நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 





    



இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 1

 


எலிஸபெத் டவர் அல்லவா .. மகாராணி எலிஸபெத் கணக்காக ராஜகம்பீர நடை போட்டு புலியாக கிலி கொள்ளவைத்து எலிபெண்ட் புகுந்த வெண்கலக்கடையாக அந்த எலிசபெத்டவர்ஸ் குடியிருப்பையையே அல்லோகல்லோலப்படுத்தும் அமர்க்களமான கதைக்களம்..! 

எலிதானே என அலட்சியமாக கதைக்குள் நுழைந்தால் அது எத்தனைபேரை புலியாக கிலிகொள்ளவைத்து விரட்டியடிக்கிறது.. அப்பப்பா ..! மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியோ வீட்டை எரிப்பர் என்ற பழமொழி அந்த மூட்டைப்பூச்சியால் அல்லும் பகலும் அவதியுற்றவனுக்குத்தானே தெரியும்? எலி ஒரு குடும்பத்தையே எலிசபெத் டவரிலிருந்தும் செயலாளர் பதவியையே துச்சமாக மதித்து தூக்கிப்போட்டு விட்டு வீடு மாற எத்தனிக்கவைப்பதும்  சிரிக்கச்சிரிக்க நகைச்சுவைச் சொக்குப்பொடி தூவி  வசீகரிக்கும் எழுத்து நடையில் பட்டாசு வெடிச்சிரிப்பை கதை முழுவதும் உதிர்க்குமாறு கதை சொல்லும் விதம்   சிலாகிக்க வைக்கிறது... 

சகுனம் சிறுகதையில் பூனை குறுக்கே குறுக்கே ஓடி கவனத்தை ஈர்த்தது.. இங்கோ எட்டி எட்டிப்பார்க்கும் எலி.!. புலியை எல்லாம் கூண்டில் அடைத்து வைத்து வேடிக்கைபார்க்கும் மனிதகுலம் கொசுவை என்ன செய்யமுடிந்தது? ஹூம்.... கொசுவலைக்குள் தானே பதுங்க வேண்டியிருக்கிறது.!

வெள்ளிகிழமை ராகுகாலம் கூட பார்க்காமல் ராமசுப்புவை கிடுகிடு என நடுங்கவைத்து விளக்கமாற்றுடன் வீறுநடை போடவைப்பது என்றால் சும்மாவா. கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல்,  பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் அரைமணி கழித்து வந்து சேர்ந்தார்.. பல்லு சுளுக்கிக்கொள்ள அரை லூஸுமாதிரி  எப்பவும் போல சாதாரணமாகத்தானே சிரித்தவாறு படிக்கவேண்டிய நகைச்சுவை சொக்குப்பொடித்தூவலான கதை..!

கதையில் நகைச்சுவை அதிகமா  அல்லது கதையைப் படிக்கும் வாசகர்களின் கரவொலி அதிகமா  என தீபாவளியன்று சிறப்புப்பட்டிமன்றம் வைத்து விவாதிக்கவேண்டும் என்று பல்விளக்கும்போது ஒரு பல்நோக்குச் சிந்தனை எழலாம்..!

பூனை வளர்ப்பதும் சரிப்படவில்லை..!

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பாக பாய்ந்தேறி கட்டில் மேல் ஏறிக்கொண்ட வீரர், சமையலறைக்குச் சென்று சமைக்கப் பயந்த மனைவியுடன், மூவருமாக கட்டிப்பிடித்தபடி குதித்து  வெளியே சென்று மதிய உணவு அருந்தி வீடு திரும்புப்போது பால்ய நண்பன் பரந்தாமன் வீட்டில் பரம்பரை எலிப்பொறியும் வாங்கி,  வாக்காளரின் தேர்தல் வாக்குறுதி மாதிரி அளித்த தைரியத்தை நம்பி, எலிப்பொறிக்குள் வைக்க மசால்வடையும் வாங்கி, வடைசுட்டவரின் கைராசியை மெச்சி வடையை கூண்டுக்குள் மாட்டி,  வீட்டுக்குச்செல்ல, லிப்ட்டில் கூட வந்த பால்காரர் சொன்ன பக்குவப்படி கூண்டைக்கழுவ வேண்டி, பால்காரர கைப்படவே வடையை எடுத்துத்தரச்சொல்லிப் போட்ட திட்டம் தவிடுபொடியாகிப் போனது போல்,  வடையும் தூளாகி லிப்ட்டை சுத்தம் செய்யும் வேலையும் வேறு  சேர்ந்ததால், வடை போன சோகமும் சேர்ந்து,  அம்புஜத்தின் முகம்,  பல மாதங்களாகத் துடைக்கப்படாத பாத்ரூம் பல்பைப் போல டல்லடித்துக் கொண்டிருந்தது..

கடுப்படிக்கும் மேலதிகாரிகள் விடுப்பில் சென்ற சந்தோஷம் பரவுமாறு, மண்ணச்சநல்லூர் மைத்துனரை, கும்பிடப்போன தெய்வம குறுக்கே வந்தமாதிரி, வீட்டு வாசலில்  பார்த்ததும் இருவர் கண்களிலிருந்தும் வாஷர் பழுதான வாட்டர் டாங்கரைப் போல, நீர்ப்பெருக்கு ஏற்பட்டு தரையில் கொட்டியதைக்காண கண்கோடி வேண்டும் .. மலை ஏறினாலும் மச்சான் தயவு வேண்டுமே..!. ஆகாதவற்றை ஆண்டவனுக்கு அர்ப்பணிப்பது மாதிரி எலிபிடிக்கும் பிராஜக்ட்டை ஆகாத உறவிடம் ஒப்படைத்துவிடும் புத்திசாலித்தனம் ராமசுப்புவிடம் மிளிர்கிறது.

உறவுகளுக்குக்கொடுக்கும் விரிவான விளக்கம் ரசிக்கவைக்கிறது..

பேக்பைப்பர்கதையில் புல்லாங்குழல் வாசித்து எலிகளையும் குழந்தைகளையும் தன் பின்னே வரவழைத்தமாதிரி அருமையா நகைசுவை எலிக்கதையை எழுதி வாசகர்களை ஈர்க்கவைக்கும் அலாதியான நடையை ரசிக்கிறோம்..!

சமையலறையை அதகளப்படுத்தி எலிவேட்டையில் இறங்கும் கோவிந்தன் பஜ்ஜியும் கெட்டிச்சட்னியும் கேட்கும் விசித்திரம் வேறு .. எள்ளு எண்ணைக்குக்காய்ந்தால் எலிபுழுக்கையும் சேர்ந்து காயணுமா என்ன..!

உதவி செய்யவந்த ராமசுப்புவை எந்த நேரத்தில் எலி தலையில் விழுந்து பிறாண்டி கால்வழியாக வெளியேறிவிடும் என எச்சரித்தானே கோவிந்தன் ..! காக்கை உட்கார பனம்பழம் விழுந்தமாதிரி பேன் போட, ஒட்டடை சொத்தென்று விழுந்து, சிரப்பாட்டில் விழுந்து,  எலியின் ரத்தமாக,  அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி பரவுவது திகிலடையவைக்கிறது..

கழுவ எடுத்துச்சென்ற பலதலைமுறை கண்ட அரதப்பழசான எலிப்பொறியும், அதிரசம் மாதிரி விண்டு போக  எலிபொறி வாங்கும் சாக்கில் ராமசுப்புவும், ட்யூசன் செல்லும் சாக்கில் ராஜூவும் எஸ்கேப் ஆகிவிட,  கதைப்பொறியில் வாசகர்கள் ஆர்வத்துடன் சிக்கிக்கொண்டுவிடுகிறார்கள்.!

எலிப்பொறி வாங்குமிடத்திலும் கதாசிரியரின் ஸ்கேன் கண்களும், நுணுக்கமான மனமும்,  துல்லியமாக பலவகை எலிக்கூடுகள், எலிபொறி விற்பவனின் சம்பாஷனை என படம் பிடித்துக் காட்டுவது ஆராய்ச்சிக் கட்டுரைக்குச் சமமான தகவல்களை அளிக்கிறது..

செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல், அவலை நினைத்து உரலையிடித்த அவலம்தான்! ஏதோ ஒரு எலிப்பொறியை குத்துமதிப்பாக வாங்கி, ஏதோ யானைக்கும் பானைக்கும் சரியான கணக்காக  பலதலைமுறைகளாக எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய ராசியான ஆவி வந்த எலிக்கூடு அநியாயமாக உடைத்ததற்காக அசட்டுப்பட்டமும் வாங்கவேண்டியிருக்கும் கட்டம் பரபரப்பாக இருக்கிறது..


மசால்வடைகளும் டஜன் கணக்காக வாங்கிக்கொண்டு  மகனுடன் வீடுவந்தால் எலி எதுவும் இல்லை நாளைபார்க்கலாம் என்று செய்திகேட்டு வெடி குண்டு சோதனையில் கிடைக்கும் ஏமாற்றம் வேறு..!

பூனைப்படையான  கோவிந்தன்  உதவியுடன் எலிப்பொறியில் வடை செட் செய்து சாப்பிட்டுப்படுத்தால் தலையணை அபகரிப்பு, குறட்டை ஒலி, ஏதோ சப்தம் கேட்டு மனைவியை எழுப்பினால் என்ன நடக்கும் என்கிற பயங்கரம், - அடடா ஒரு மனிதனுக்கு சோதனை மேல் சோதனை .. போதுமடா சாமி .. வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி .. என்கிறமாதிரியான உச்சபட்ச வேதனைகள்..

அடுத்தநாள் மனைவி + பிள்ளை, கோவிந்தனுடன் கிளம்பிச்சென்றுவிட அலுவலகம் சென்று பக்கத்து சீட்டுக்காரரிடம் வாங்கிப்படித்த செய்தித்தாள் ராசிபலனில் புருடாபுண்ணியசாமி ஜோதிடர் வேறு சம்பந்தா சம்பந்தமில்லாமல் சொல்லியது எலியாக மனதைக்குடைகிறது..

வீடுதிரும்பும் வழியில் ரங்கன் கையில் எலியின் வாலைப்பிடித்து புலிவால் பிடித்த நாயராக சிறுவர்கள் புடை சூழ வீரநடை போட்ட அபூர்வ அதிசயக்காட்சியைக் கண்டு அட்வான்ஸ் கொடுத்து, அடுத்தநாள் அதே எலியுடன் தன் அப்பார்ட்மெண்ட் வரவழைத்து, வாட்ச்மென்னை கூப்பிட்டு,  குடித்தக்காரர்கள் படியில் நின்று பார்த்திருக்க,  மூன்று மாடிப்படிகளையும், ரங்கன் கையில் ஏதோ தீவிரவாதியை சுட்டுப்பிடித்த ராணுவவீரன் மாதிரி வெற்றிநடையிட, பின்னால் மூக்கைப் பிடித்தவாறே ராமசுப்பு என்கவுண்டர் தலைவராக .. குப்பைத்தொட்டியில் ல்லடக்கம் நடக்கிறது எலிக்கு..! 

செயல்படாத செயலாளர் என்னும் பெயரை துடைத்த லட்சிய நடை நடக்கிறார்..  எல்லோரும் பார்க்க சலவைத்தாள் வேறு கொடுத்து எலியை என்கவுண்டர் செய்த பெருமையும் பெற்றுக்கொண்ட பூரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தால்.. டைனிங் டேபிளில் இரண்டு சுண்டெலிகள்..!!

அவர் ஜன்னலைச்சார்த்தும் அழகே அழகு .. நீண்ட குடைப்பிடியின் வளைந்த தண்டால் கொக்கி மாட்டிவிட்டு வீட்டைப்பூட்டிவிட்டு, எலிவளையானாலும் தனி வளைபார்க்க அதுவரை கோவிந்தனை அழைத்து,  பூனைப்படையாக காவலுக்கு வைத்துக்கொள்ளவும் முடிவெடுக்கும் போது, ஆரம்ப வரிகளில் சிரிக்க ஆரம்பித்த நாம் முடிவு வரி வரை சிரித்துக்கொண்டிருப்பதை உணர்கிறோம்..


பயம், அருவருப்பு, பரிதாபம், சந்தோஷம் என்று பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரம்! பட்டாசு கொளுத்திப்போட்ட மாதிரி ஒரு பரபரப்பை ஏற்படுத்துறது ... கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று நிரூபித்த எலிக்கு  அஞ்சலிகள்..

பாம்பென்றால்தான் படையும் நடுங்குமா என்ன .. எலி என்றால் குடும்பமே நடுங்குதே..!
 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திருமதி. 


இராஜராஜேஸ்வரி 


அவர்கள்.



வலைத்தளம்: மணிராஜ் 

http://jaghamani.blogspot.com/


  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.





அந்த நாள் ... ஞாபகம் ... நெஞ்சிலே வந்ததே !


[ இது தொடர்கதையாக 2011 மார்ச்சில் என்னால் வெளியிட்ட போதுதான்,

சுண்டெலி போலச் சுற்றிச்சுற்றி வந்து சுறுசுறுப்பாக சுண்டியிழுக்கும் சுவையான

 தங்களின் அடுத்தடுத்த ஏராளமான தாராளமான பின்னூட்டங்கள்  மூலம்

நாம் முதன்முதலாக, நெருங்கிய நண்பர்களானோம் என்பதை

இப்போது நினைத்தாலும் என் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ]


அவை என்றும் மனதில் தங்கிடும் தங்கத் தருணங்கள் !








      



இனிப்பான இரண்டாம் பரிசினை 

வென்றுள்ள விமர்சனம் - 2




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல் இவ்வுலகமே கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 

எலிஸபெத் டவர்ஸ் சிறுகதை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் விகசிக்கும் எலியை மையமாகக்கொண்டு சிரிப்பை அடிப்படையாகக்கொண்டு சிலாகிக்கவைக்கிறது..

ஆரம்ப வரியில் ஆரம்பித்த எலியின் லூட்டி கடைசி வரி வரை சலிக்காமல் ஓடி சிலிக்கவைத்து சீசன் கால குற்றால அருவிமாதிரி இடைவிடாத நகைச்சுவையை ஆரம்பம் முதல் வர்ஷித்து கொட்டிமுழக்குகிறது... நகைச்சுவை சாரலில் நனையவைத்து சொல்லேருழவராக சொற்சிலம்பமாடி சிரிக்கவைப்பதில் வெற்றி பெறுகிறார் கதை ஆசிரியர்..

எலிபெண்டா குகை சிற்பம் போல எலிஸ்பெத்டவர் எலியை செதுக்கிச்செதுக்கி உயிரோட்டமாய் உலவ விடும் நேர்த்தி விலாநோக சிரிக்கவைக்கிறது.. கணபதியின் வாகனம்எலி தான் ராமசுப்புவை பாடாய்படுத்தி ஓடாய்த் தேயவைக்கிறது..

நிறைந்த ஒரு வெள்ளிகிழமை ரசமான ராகுகாலவேளையில்  விரைந்து வந்து விளக்குமாற்றுச் செங்கோலுடன், வீர நடையும் நடுங்கும் மனமுமாக எலிஸபெத் டவருக்கு வரவழைக்கிறது.. 

ஆத்துக்காரி அம்புஜத்துடனும் வீரவம்சமான புத்திரன் ராஜூவுடனும் - க்ளைமாக்ஸில் சண்டைக்காட்சியில் பதினாறடி பாயும் தெலுங்கு ஹீரோ மாதிரி  ஆலிங்கனம் செய்து கட்டிலின் மேல் ஐக்கியமாகி, உபத்திரவம் செய்யும் எலிக்கு - பத்திரமாக உத்திரவாதம் பெறும்  இந்த குடும்பம் முச்சூடுமே எலி போன்ற ஜந்துகளை அருவருக்கும் வீரப்பரம்பரையாக அமர்களமாக அறிமுகமாகிறார்கள்.. பசி வந்திட பத்தும் பறந்து போகுமே .. சமைக்கவும் முடியாமல் கட்டிலிலிருந்து வாசற்படிக்கு விராட் கோலி மாதிரி ஜம்ப் செய்து ஹோட்டலுக்குப்போய் சாப்பிடுகிறது.. 

மூஞ்சூறு மூஞ்சிகள் எல்லாம் சேர்ந்து செயல்படாத செயலாளர் என்று கண்டனத்தீர்மானத்துடன் எலிசபெத் டவரே எ(ல்)லி (ள்ளி) நகையாட - -எலெக்ஷனில் தோற்றவர் போல உலாத்தி -  கொடுமை கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப்போனால் அங்கே ரெண்டு கொடுமை டிங்குடிங்குன்னு ஆடி வெறுப்பேற்றுவது போலத்தானே -உச்சிப்பிள்ளையார் கோவிலில் பாலாபிஷேகம் பார்க்கக்காத்திருக்கும் நண்பர் பட்டாபி பிள்ளையாரின் வாகனத்தை விரட்டத் தந்த யோசனைகளில் பூனை வளர்க்கும் திட்டமும் சரிவராமல்,.. எலிப்பாஷானமும் நடைமுறைக்கு ஒத்துவராது கைவிடப்படுகிறது.

அது சரி பிள்ளையார் கோவிலில் இருந்து அவர் வாகனத்தை விரட்ட திட்டம் போட்டால் அது நடக்குமா என்ன .. ரொம்பத்தான் ஓடவிடுகிறது எலி  கிலி பிடித்து புலி வால் பிடித்த கதையாக சனிபகவானாக தொடர்கிறது ராமசுப்புவை.. சமாசாரம் தெரியாமல் அமாவாசைக்குப்போன கதையாக அல்லாடவைக்கிறது..!

எலி என்ன கவர்ச்சி நடிகை நமீதா வளர்க்கும் நாயா ?
கணினிக்குள் விளையாட துணைபுரியும் மவுஸா - மவுஸோடு உலாவர? 
அற்ப சகவாசம் பிராணசங்கடமாயிற்றே..!

பால்ய சினேகிதன் பரந்தாமன் கொடுத்த வாக்குறுதியை நம்பி எலிக்கூண்டுடன் போய் மசால் வடை வாங்கி , எலிக்கூண்டில் கைவிடும் அளவு துணிவு இல்லாமல் வடைகடைக்காரரையே தாஜா பண்ணி எலிக்கூண்டில் வடை பொருத்தி தன் குடியிருப்பு லிப்ட்டில் உடன் பயணிக்கும் பால்காரர் சொன்ன பக்குவப்படி கூண்டை சுத்தம் செய்ய பால்காரர் கைராசியையே -காரியமாகனும்னா கழுதையானாலும் கைராசி முக்கியமாயிற்றே.. ! வடை எடுக்க  - வடை உப்புமாவாக லிப்டில் உதிர அம்புஜமே துப்புரவு செய்யவேண்டிய நிலைக்கு ஆளாகி வடை போச்சே என்று ஏமாற்றமும் சேரவேபலநாள் தேய்க்காத களிம்பேறிய செம்பு சொம்பாக களையிழந்த முகத்துடன் குமுறுகிறாள்..! நோகாமல் நொங்கு திங்கமுடியுமா? நொந்து நூடில்ஸ் ஆகிறது ராமசுப்பு குடும்பம்..

ஆபத்பாந்தவனாக அம்புஜத்தின் தம்பி மண்ணச்சநல்லூர்  கோவிந்தன் - எப்பவும் இல்லாத திருநாளாக வரவேற்கும் மச்சானை வியக்கிறான்.. மனசுக்குப்பிடிக்காத மச்சானை வைத்து மலையைக்கெல்லி எலி பிடிக்க, கொக்குதலையில் வெண்ணை வைத்துப்பிடிக்கும் பரமார்த்த குருவின் சீடனாக கணக்குப்போடுகிறார் ராமசுப்பு..! 

'நமக்கு இன்னொரு அடிமை சிக்கிட்டான்னு சொல்லுங்க..!!'

முதல் தேடுதல் வேட்டை சமையலறையை அதகளமாக்கிவிட்டு சூடாக பஜ்ஜிக்கும் ஆர்டர் போடும்போது எரிச்சல்படுகிறார்.. சொத்தென்று தலையில் விழும் ஒட்டடையும், அதனால் ஆடிய நாட்டியத்தில் உடைந்த சிரப்பாட்டில் சிவப்பு திரவமும், அதிரசமாய் விண்டு போகும் பழங்கால எலிப்பொறியும் டைமிங் பிசகாத காமெடிக் காட்சிகள்..

தப்பித்து புது எலிப்பொறி வாங்கும் சாக்கில் வெளியேறி எலிப்பொறிகள் பற்றி எக்ஸ்ரே கண்களால் விவரிப்பு கதாசிரியர் அயராத தகவல் திரட்டுகளை கூகுள் போல அள்ளி வீசி நகைச்சுவையுடன் திளைக்கவைக்கிறார்..! 

உத்தேசமாக இரண்டு பொறிகள் வாங்கி உடைந்த எலிபொறிக்கு பதிலாக புதிது கொடுத்தால் பரம்பரை - தலைமுறை எலிப்பொறி போச்சே என புலம்பல் வேறு.. நவீன தெனாலிராமனாக சமாளித்து புது செருப்பு மட்டுமா காலைக்கடிக்கும்? புது பழைய எந்த எலிப்பொறியானாலும் கை, கால்,  மனது என எல்லாவற்றையும் கடிக்குமே..! டஜன்கணக்கில் வடையுடன் வீடு வந்து கோவிந்தனுக்கும் சாப்பிடக்கொடுத்து - வெடிகுண்டு சோதனையில் வெடிகுண்டு இல்லை என முடிவெடுத்தாற்போல எலி ஏதும் இல்லையாமே..

கோவிந்தன் கைப்பட  எலிப்பொறியில் வடை வைத்து- எலிப்பொறிக்குகைக்குள் கைவிடும் வேலையை   தவிர்க்கும் திறமை ராமசுப்புக்கு கைவந்துவிட்டது .. குரங்கு, குட்டியை வைத்து சூடு பார்ப்பது போல யாரையாவது தாஜாபன்ணி வடை வைக்கவும் எடுக்கவும்  என ராஜதந்திரத்தில் தேர்ந்துவிட்டார் ராமசுப்பு..! 

பாரதிராஜா படத்தில் வரும் பல்லுப்போன கிழவி போல.. கண்களுக்கு மேல் கையை ஹரிசாண்டலாக வைத்து.. கதாசிரியர் கைகாட்டிய திசையில் எலிசபெத் டவர்ஸை  உன்னிப்பாக பார்த்தால் .. அவர் விவரிக்கும் எலியை  எங்குமே காணவில்லை..! கறை தேடினாலும் கிடைக்காதது மாதிரி எலி கிடைக்கவே இல்லை..!

ஏமாற்றத்துடன் தூங்கப்போனால் கோவிந்தனின் குறட்டைச் சத்தம், தலையணி அபகரிப்பு, காலண்டர் விழும் பயங்கர சப்தம்,  மனைவியை எழுப்பினால் நடக்கப்போகும் விபரீதம், திகில் - எல்லாம் காட்சிப்பட்டு விழுந்து விழுந்து சிரிக்கவைக்கிறது..

அக்காவையும் மருமானையும் அழைத்துக்கொண்டு கோவிந்தன் மண்ணச்சந்ல்லூர் சென்றுவிட, அலுவலகத்தில் ராசிபலன் பார்த்தால் உல்ட்டா உலகநாதன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் உளறி வைத்தது வேறு மனம் கலங்க வைக்கிறது..

வீடு திரும்பும் வழியில்  - ஒரே ஒரு இடத்தில் கூட  ஜெயிக்காத கட்சித்தலைமையை  ஏதோ ஒரு வக்கில் மாட்டவைத்து நள்ளிரவில் ஜெயிலுக்கு இழுத்துக்கொண்டு போவது போல  - செத்த எலியை குப்பைத்தொட்டிக்கு அனுப்பும் ரங்கனின்  விசித்திர ஊர்வலம் - கண்டு திடீரென்று ஞானோதயம் பிறந்தது போல -     புலி வேட்டைக்குச்சென்ற எலியாக லாகவமாக  திட்டமிட்டு மறுநாள் அபார்ட்மெண்ட் வாசிகள் பார்த்திருக்க அதே எலியை ஊர்கோலமாக எடுத்துசென்று குப்பைத்தொட்டியில் அடக்கம் செய்து வாகைசூடுகிறார்..

ரிமார்க்கபிள் அக்மார்க் நகைச்சுவைக் காட்சிதான்..! அப்ளாஸ் அள்ளிக்கொள்கிறது. 

ஜீனியஸ் ராமசுப்பு இல்லை. கற்றுக் கொடுத்த கதை 

ஆசிரியர்தான் வசீகரிக்கிறார்..



ஜாஸ்மின்செண்ட் ஸ்பிரே வாசம் கொஞ்சம் தூக்கல் தான் 

எலியின் நாற்றத்தை விட..!

ம்ம்.. இன்னுமா இந்த எலிபெத்டவர்ஸ் அபார்ட்மெண்ட் ராமசுப்புவை நம்பிட்டு இருக்கு..??'

இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எலிமாதிரியே ராமசுப்பு உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கிறார் கதை ஆசிரியர்....!!'

ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்குது.. ஃபினிஷிங் சரியில்லையப்பா..!! 'ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. இப்போவே கண்ணைக்கட்டுதே..!!!

மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியா வீட்டைப்பிரிப்பர்? வேண்டாம் என்றால் ராமசுப்பு கேட்டால்தானே.. துண்டைக்காணோம் துணியைக்காணோம் என்று-  எலி எட்டுமுழம் பஞ்சகச்சம் வேஷ்டியை வரிந்து கட்டிக்கொண்டு அவரை விரட்டிவிட்டது.

'எதையும் ப்ளான் பண்ணாம பண்ணக்கூடாது.. ஓகே..? என்று ராமசுப்புவின் மனசாட்சி பேசுவது உங்களுக்கும் கேட்டுவிட்டதா?

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும். இப்போது எலி குட்டி போட்டு ராமசுப்புவையே எலிஸபெத்டவரிலிருந்து ஓடவைத்துவிட்டது. 

முதல் வீட்டு முத்துசாமி கொண்டுவந்த அடைசல்களுடன் குடியேறிய எலி - நின்றுகொண்டே, கண்களைத்திறந்து கொண்டே தூங்கும் கலை அறிந்த வாட்ச்மென்னின் திறமையால் ஆரம்பித்த வினை விஸ்வரூபம் எடுத்து கதாசிரியரின் தேர்ந்த நுட்பமான விவரிப்பினால் சிரிக்கவைக்கிறது..!

'ஊர்வசியும் இவள்தானோ... ரம்பைதானோ... ரதிதானோ... பிரம்மன் உலகை வெல்ல படைத்தானோ...??' என்று.. சிவாஜி கணேசன் சாவித்திரி போல  வீட்டில் ஓடிய இரு சுண்டெலிகள் - தேடுபவர் கண்டடைவது உறுதி என நிரூபித்துவிட்டன. 

 ஜெர்ரி கிட்டே தோத்துப் போற டாமா ஆயிட்டார் ராமசுப்பு.

பலவித என்ணங்களை விதைத்து, எலிவளையானாலும் தனிவளை பார்க்க முடிவெடுத்து,  புலிக்குப்பயந்தவர்கள் என்னைச்சூழ்ந்துகொள்ளுங்கள் என்று கோவிந்தனை அழைத்துவருவாரோ..என்னவோ --! மண்ணச்சநல்லூர் விரையும் வரை நகைச்சுவை நகைச்சுவைதான் கொடிகட்டிப்பறக்கிறது..

எலிஸபெத் டவரின் கிரீடம் எலியார் தான்..

டாம் அண்ட் ஜெர்ரி வால்ட்டிஸ்னியின் அற்புதமான படைப்பு. பெரியவர்களும் குழந்தைகளுடன் குழந்தைகளாக சிரித்து மகிழும் கார்ட்டூன் படம்..

கிராமத்து எலி நகரத்தைப்பார்க்கவந்து வாங்கிக்கட்டிக்கொண்ட எலிக்கதை..

ஓட்டைப்பானைக்குள் புகுந்து தின்று கொழுத்து பாட்டியிடம் அடிவாங்கும் எலி

Pussy cat, pussy cat, where have you been?
I've been to London to visit the Queen!
Pussy cat, pussy cat, what did you there?
I frightened a little mouse under her chair.

அனகோண்டா, ஜாஸ்  எக்ஸார்சிஸ்ட் போன்ற படங்களில் அவற்றை தப்பிக்கவிட்டு,  இரண்டாவது பாகத்துக்கு அச்சார மிடுவதைப்போல் எலியும் ஒன்றுக்கு இரண்டாக தப்பிக்க வைத்திருக்கிறார் கதை ஆசிரியர்..

 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திருநிறைச்செல்வன் 


அரவிந்த் குமார் 

அவர்கள்.


வலைத்தள முகவரி:



   




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      



மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.






நடுவர் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி

இரண்டாம் பரிசுக்கான தொகை 






இவ்விருவருக்கும் சரிசமமாகப் 

பிரித்து அளிக்கப்பட உள்ளது.




 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்பட்டு வருகின்றன.



காணத்தவறாதீர்கள் !



    



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 

கதையின் தலைப்பு:



 VGK-38 



’ மலரே .... குறிஞ்சி .... மலரே ! ’




விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


09.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.









என்றும் அன்புடன் தங்கள்

வை. கோபாலகிருஷ்ணன்




17 கருத்துகள்:

  1. இர்ண்டாம் பரிசை பகிர்ந்தளித்தது
    இரட்டிப்பு சந்தோஷம் அளித்தது.
    இனிய நன்றிகள்...!

    பதிலளிநீக்கு
  2. சகோதரி இராஜராஜசுவரி
    நண்பர் அரவிந்த் குமார்
    இருவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. திருமதி ராஜராஜேஸ்வரிக்கும்,திரு. அர்விந்த் குமாருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திரு அரவிந்த்குமாருக்கும் வாழ்த்துகள். திருக்குறளை எல்லாம் மேற்கோள் காட்டி விமரிசித்திருக்கும் அர்விந்த் குமாரின் விமரிசனமும் அருமை. திருமதி ராஜராஜேஸ்வரியின் விமரிசனமும் அருமை. :)))

    பதிலளிநீக்கு
  5. //
    கதையில் நகைச்சுவை அதிகமா அல்லது கதையைப் படிக்கும் வாசகர்களின் கரவொலி அதிகமா என தீபாவளியன்று சிறப்புப்பட்டிமன்றம் வைத்து விவாதிக்கவேண்டும் என்று பல்விளக்கும்போது ஒரு பல்நோக்குச் சிந்தனை எழலாம்..!// அருமை!
    பரிசினை வென்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. October 5, 2014 at 11:22 PM

      //கதையில் நகைச்சுவை அதிகமா அல்லது கதையைப் படிக்கும் வாசகர்களின் கரவொலி அதிகமா என தீபாவளியன்று சிறப்புப்பட்டிமன்றம் வைத்து விவாதிக்கவேண்டும் என்று பல்விளக்கும்போது ஒரு பல்நோக்குச் சிந்தனை எழலாம்..!//

      அருமை! பரிசினை வென்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு
  6. //
    ம்ம்.. இன்னுமா இந்த எலிசபெத்டவர்ஸ் அபார்ட்மெண்ட் ராமசுப்புவை நம்பிட்டு இருக்கு..??'




    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எலிமாதிரியே ராமசுப்பு உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கிறார் கதை ஆசிரியர்....!!'
    // இரசித்தேன்! அருமையாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றுள்ள திரு அரவிந்த்குமார் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!//

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. October 5, 2014 at 11:26 PM

      //ம்ம்.. இன்னுமா இந்த எலிசபெத்டவர்ஸ் அபார்ட்மெண்ட் ராமசுப்புவை நம்பிட்டு இருக்கு..??'

      இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே எலிமாதிரியே ராமசுப்பு உடம்பை ரணரணமா ஆக்கி வச்சிருக்கிறார் கதை ஆசிரியர்....!!'//

      // இரசித்தேன்! அருமையாக விமர்சனம் எழுதி பரிசுபெற்றுள்ள திரு அரவிந்த்குமார் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)))))

      நீக்கு
  7. \\கால்டாக்ஸிபோல காலதாமதம் செய்யாமல், பிட்சாவைப் போலக் குறித்த நேரத்தில் அரைமணி கழித்து வந்து சேர்ந்தார்\\
    விமர்சனம் முழுக்க உவமான உவமேயங்களுடன் மிகவும் சுவைபட எழுதியிருப்பது ரசிக்கவைக்கிறது. பரிசு பெற்றமைக்கு இனிய பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  8. திரு. அரவிந்த் குமார் அவர்களின் விமர்சனம் அருமை. என்னென்னவோ பழமொழிகளும் கதைகளுமாய் விமர்சனத்தை அழகாக சரளமாக எழுதியிருக்கிறார். ரசிக்கவைத்த விமர்சனம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொண்ட திருமதி ராஜராஜேஸ்வரிக்கும், திரு அரவிந்த்குமாருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  10. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு அரவிந்த குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  11. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திரு அரவிந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இப்படி குடும்பமே பரிசு வாங்குபவர்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் பரிசு உண்டா அண்ணா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Jayanthi Jaya October 26, 2015 at 12:05 AM

      வாங்கோ ஜெயா, வணக்கம்மா.

      //பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் அவர்களுக்கும் திரு அரவிந்த குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெயா.

      //இப்படி குடும்பமே பரிசு வாங்குபவர்களுக்கு ஏதாவது ஸ்பெஷல் பரிசு உண்டா அண்ணா?//

      ஸ்பெஷல் பரிசு தரலாம்தான். எனக்கும் அதுபோன்ற ஆசை உண்டுதான். அந்த அளவுக்கு என் எழுத்துக்களுக்கு ஆரம்பம் முதல் அவர்களின் ஏராளமான பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமும் உற்சாகமும் அளித்துள்ளார்கள். ஆனால் அந்த ஸ்பெஷல் பரிசினை எப்படி நாம் திடீரென்று கொடுக்க முடியும் என்று ‘ஜெயா’வே ஓர் நல்ல ஆலோசனை சொன்னால் கோபு அண்ணாவுக்கு வசதியாக இருக்கும். மேலும் அவர்கள் நம்மைப்போல வெளிப்படையாகப் பேசாத, ஒரு RESERVED TYPE MADAM என்பதால் எனக்கு இதுபோல ஏதேனும் அவர்களுக்கு மட்டும் விசேஷமாகச் செய்வதில் கொஞ்சம் தயக்கமும் உண்டு.

      தங்களின் அன்பான வருகைக்கும் ஸ்பெஷல் கருத்துக்களுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ ! :)

      நீக்கு
  12. பரிசு வென்ற திருமதி இராஜராஜேஸ்வரி அம்மா திரு அரவிந்தகுமாரவங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் திரு அரவிந்தகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. அம்மா புள்ளை இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு