என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 11 அக்டோபர், 2014

VGK-37 / 03 / 03 - THIRD PRIZE WINNER - ’எங்கெங்கும் எப்போதும் என்னோடு’




 

’சிறுகதை விமர்சனப்போட்டி’ முடிவுகள்


கதையின்  தலைப்பு :



 VGK-37   


 ’ எங்கெங்கும்... 


எப்போதும்... 


என்னோடு... ‘  


 


 


இணைப்பு:



     

மேற்படி ‘சிறுகதை விமர்சனப்போட்டி’க்கு 

மிக அதிக எண்ணிக்கையில் 

பலரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குகொண்டு 

வெகு அழகாக விமர்சனங்கள் 

எழுதியனுப்பி சிறப்பித்துள்ளனர். 

அவர்கள் அனைவருக்கும் 

என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.  




 நடுவர் திரு. ஜீவி  



நம் நடுவர் அவர்களால் 

பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள

விமர்சனங்கள் மொத்தம் :



ஐந்து







இந்தப் பரிசுகளை வென்றுள்ள  ஐவருக்கும் நம் பாராட்டுக்கள் + 

மனம் நிறைந்த இனிய  நல்வாழ்த்துகள். 





  


மற்றவர்களுக்கு: 





    

முத்தான மூன்றாம் பரிசினை
வென்றுள்ள விமர்சனம் 


சாதாரணமாக ஒரு நடைப்பயிற்சியை என்றும் நிலைக்கும் 

ஆவணமாக்கும்  முயற்சியில் கதை வெற்றிமுரசு கொட்டுகிறது.. 

பளீர் மின்னலாக அவரவர் ஆரோக்கியத்தையும் எடையையும் 

கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் சிரத்தை எடுத்துக்கொள்ள ஒரு 

தூண்டுகோலாக கதை அமைத்த கதாசிரியர் பாராட்டுப்பெறுகிறார்.. 


நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்துஇவ் வுலகு


நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி 

நிலையாமையை உடையது இவ்வுலகம் என்பது  உலகப்பொதுமறை..



”புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி


இன்னினியே செய்க அறவினை

நீரில் குமிழி – நீர் மேல் எழுத்து 

கண்துயில் கனவில் கண்ட காட்சி”




என்று நிலையில்லா இந்த உடலை – இந்த உலக வாழ்வை மிக அழகாக 

விவரிக்கிறார் பட்டினத்தார்.


ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரத்தைக் காசில் பணத்தில் சுழலும் 

காற்றாடியை “காதற்ற ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே”


என்றெல்லாம் படித்தறிந்திருந்தாலும்,  உடலும் உயிருமாக நடமாடி 

உள்ளம் கவர்ந்த நண்பரின் எதிர்பாராத மறைவு, கதாநாயகர் 

டைப்பயிற்சி மேற்கொள்ள பக்கபலமாகிறது என்பதை உள்ளங்கை 

நெல்லிக்கனியாக எடுத்துரைக்கிறது கதை..!



நடை நோய்களை வெல்லும் படை என்று                              தன் உயிர் 

நண்பரின் நினைவுப்பரிசாக எடுத்துக்கொண்ட அழகிய கைத்தடி 

நடைப்பயிற்சிக்கு ஊன்று கோலாகவும் ஊக்கமருந்தாகவும் மாறும் 

விந்தை புரிவது ஆச்சரியத்துடன் நோக்கவைக்கிறது.. 


நவரசங்களையும் கலந்து உணர்ச்சிக்குவியலாக, வாவில்லின் 

வண்ணக் கலவையாக சித்திரம் தீட்டியது மாதிரியான பிரவாகமான 

நடையில் எதிர்பாராத திருப்பத்துடன் கம்பீரமாக ராஜபாட்டையில் 

நடைபோடுகிறது கதை..



கதை ராஜபாட்டையில் நடைபோட்டாலும் கதை நாயகர் நடப்பது

என்னவோ குண்டும் குழியுமான தெருவில்- சைக்கிள்காரர் 

முழங்கையைப்பெயர்த்து எடுத்துச்செல்லவும், ஆட்டோக்காரர் 

காலில் பின் சக்கரத்தை ஏற்றிவிடும் அபாயமும், 

இரண்டுபேருக்கும் ஜாக்கிரதையாக இடம் கொடுத்து சற்றே 

ஓரமாக நடந்தால் தோண்டிப்போட்டிருக்கும் பள்ளத்தில் இடறிவிழும் 

சாத்தியக்கூறுகளும் நிறைந்த டிபிகல் இந்திய சாலைகளின் அவலத்தை 

காட்சியாக்கும் வல்லமை மிக்க நடை ஆசிரியரின் 

ஸ்பெஷாலிட்டி..!



நடந்தே பழக்கப்டாமல் எங்கும் எதற்கும் ஆட்டோ பயணமும், 

விஸ்தாரமான சுவையா கட்டுப்பாடில்லாத உணவுப்பழக்கமும் 

கொண்டவராதலாலும், அறுபது வயதை எட்டிபிடித்த சீனியர் சிட்டிசன் 

ஆன கதாநாயகர் தன்பரம்பரை அப்பா தாத்தா ஜீனின் பரிமாணப்படி 

சற்றேறக்குறைய நூறுகிலோவை எட்டுவதற்குப் போட்டியிடும்  

எடையைக்குறைக்க மருத்துவ ஆலோசனைப்படி டாக்டர் 

கன்சல்டிங்பீஸ், மருந்து, மாத்திரை எல்லா சடங்குகளும் ஆனபிறகு 

நாய் துரத்துவதாக எண்ணி நாற்பது நிமிடம் விடாமல் ஓட்டமும் 

நடையுமான ஜாக்கிங் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்..



முதல்நாள் அல்லவா! மிகுந்த சிரமத்துடன் கொஞ்ச தூர நடைக்கே 

ஜில் என் இரண்டு பன்னீர் சோடாக்களும், எட்டு வடைபஜ்ஜிகளும் 

சாப்பிட்டுவிட்டு ஆமை நடைநடந்து ஆமைவடை சாப்பிட, ஆற அமர 

உட்கார இடம் தேடும் சொகுசு பரிதாபப்படவைக்கிறது.!



சந்து முனையில் கிடைத்த சிறிய திண்ணையில் சிரமப்பட்டு அமர்ந்தவர் 

தன்னை வரவேற்கும்,  88 வயது முதியவர், தன் கைத்தடியின் 

உபயோகத்தை விளக்கி உற்சாகம் அளிப்பதை உணர்கிறார்.



கற்றது கைம்மண்ணளவு , கல்லாதது உலகளவு என்று பல்வேறு 

வியங்கள் ஆத்மார்த்தமான உரையாடலில் முதியவர் உணர்த்துகிறார்..


க்கும் அந்த முதியவரிடம் ஏதோ ஒரு இனம் புரியாத பாசம் 

உருவாதை உணரும் வகையில் அந்த அற்புத நட்பை படம் பிடித்துக் 

காட்டும் வல்லமை கதாசிரியருக்கே உரித்தான 

தனித்திறமை என பாராட்டுகிறோம்..


முண்டாசுக்கவியின் சாதிகள் இல்லையடி பாப்பா என்னும் பாடலை 

நினைவுக்கூர்வதும் , முண்டசுகட்டிய பிரதமரின் செயல்களை 

விவரிப்பதும், எங்கே பிராமணன் என்னும் தொலைக்காட்சித்தொடரை 

அலசுவதும் குடும்ப உறவுகளை எடுத்துச்சொல்வதும், 

தன் தொழில் பற்றி அறியத்தருவதும், தன் இல்லம் இருக்கும் 

இடத்தை அடையாளம் கூறுவதுமான வரலாறுகளை 

சுவைப்பட தனக்கே உரியபாணியில் 
கதாசிரியர்  கதை சொல்லும் நேர்த்தி வசீகரித்துவிடுகிறது..   


வழுக்கையான இளநீர் உபசாரமும் செய்யும் கதாநாயகரிடம், எப்போது 

வந்தாலும் தன்னை பார்த்துச்செல்லும்படி அன்பு வேண்டுகோள் 

வைக்கிறார் பெரியவர்..!


மழையைக்காரணம் காட்டி இரண்டு நாட்களும், 

இனி ஆங்கில முதல் தேதியிலிருந்து தவறாமல் 

வாக்கிங் செல்வோம் என இரண்டு நாட்களும் 

நடைப்பயிற்சியை தவிர்த்தவர், அடுத்து வந்த நாளில் 

நண்பரைப்பார்த்து அளவளாவும் ஆவலில் சென்று 

திண்ணையில் அமர்ந்து  நேரம் கடந்ததும் வீட்டுக்கே 

சென்று பார்க்கும் ஆவல் எழ, நண்பரே 

பேரமைதியுடன் இறுதிப்பயத்தில்  

தன் தரிசனத்தைத்  தருகிறார்..



அவரருகில் இருந்த அழகிய வேலைப்பாடுமிக்க கைத்தடியை - 

கனலேந்தி வரும் பெரியவரின் மருமகனிடம் கேட்டு வாங்கி இறுதி 

ஊர்வலத்துடன் சென்று மரியாதை செலுத்தி, ஆற்றுக்குளியலுடன் 

மயான வைராக்கியமாக நடைப்பிற்சியை நிறுத்தாமல் தொடர 

அந்த கைத்தடியே ஊன்று கோலாகும் மாயாஜாலம் தான் என்னே..!




அக்னிக்குஞ்சொன்று கண்டேன் - 
ஆங்கோர் மரப்பொந்திடை வைத்தேன் ..
வெந்து தணிந்தது காடு ..தீம் த்ரிகிட தீம் தரிகிட .. 

என்ற பாரதியின் கனலாக அசமந்தத்தனத்தையும், மசமசப்பையும் வைக்கோற்போரில் பற்றிய நெருப்பாக அந்தக்கனல் சுட்டுப்பொசுக்கிய நிதர்சனம் வாசிப்பவர் மனதிலும் பொறியை எழுப்புகிறது ..


மனதை ஈர்க்க முடியும் மொழியின் மூலம். மொழியற்ற உணர்வை, 

உணர்வெழுச்சியை அடைய செய்வதே  படைப்பாற்றலின் வெற்றி.  

எழுத்தாளரின் ஆளுமையை மையமாக வைத்தே கதை சுழலுகிறது. 

எண்ணம் உறுதியாக இருந்தால்,  தான் எண்ணியதை நிச்சயம் 

அடையமுடியும் என்கிற நேர்மறை சிந்தனையை கதை 

விதைக்கிறது .. வாழ்க்கையில் எத்தனையோ பேர்களை சந்திக்கிறோம். 

சிலரை சந்தித்த பின் பல இனிமையான நிகழ்ச்சிகள் நடைபெறும். 

வாழ்வின் போக்கையே மாற்றும் வல்லமை கொண்ட நட்பு 

போற்றற்குரியது.. 


சிலை மேல் எழுத்தாக ஒரே நாள் பார்த்துப்பழகிய ஒருவர் நடைப்பயிற்சி 
மேற்கொள்ள முரண்டு பிடித்த மனதை க்ஷணத்தில் மாற்றிய அந்தக்காட்சி ஸ்தம்பிக்கவைக்கிறது.



எங்கெங்கும் ... எப்போதும் ... என்னோடு ...

என்கிற தலைப்பும் அற்புதமாகப்பொருந்தி வசீகரிக்கிறது..


உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்களையும் நட்பு போல் 

நம்பிக்கையற்று தளர்ச்சியுற்ற மனதை தன் கைத்தடியால் 

தாங்கிப்பிடித்து யானையில் பலம் அதன் தும்பிக்கையில் 

இருப்பதைப்போல மனிதனின் பலம்  நம்பிக்கையில் இருப்பதை 

தெற்றெனக்காட்சிப்படுத்தும் கதை ..



நெரிசலான தெருவில் நடைப்பயிற்சி என்பது அவ்வளவாக 

மனதிற்கு உற்சாகம் தருவதில்லை   .. பாதுகாப்பும் அல்ல..



ஆலயங்களுக்கோ, பூங்காக்களுக்கோ  சென்று அங்கு விச்ராந்தியாக 

மாசில்லாத சுற்றுச்சூழலில் நடப்பதே ஆரோக்கியத்துக்கு உகந்தது. 

ஆலயங்களிலோ, கிரிவலமாகவோ நாமஜபம் சொல்லியபடி இயன்ற 

பிரதக்ஷனம் வருவது  உடலுக்கும் உள்ளத்திற்கும்  ஒருங்கே 

புத்துணர்ச்சி தரவல்லது.. 

நடைப்பயிற்சிக்கு நடைப்பயிற்சியுமாயிற்று. 

நாமஜபம் செய்வதால் மூச்சுப்பயிற்சியுமாயிற்று .



நம் முன்னோர்கள் அதனால்தானே தோப்புக்கரணம், 

பிரதோஷகாலத்தில் சோமசூக்தப்பிரத்ட்சிக்ஷணம் , 

சிவராத்திரிகளில் 108 சுற்று வலம் வருதல்,  

காலணிகள் அணியாமல் கருங்கற்களாலான ஆலயப்பிரகாரத்தில் 

வலம் வருதலால் அக்குப்பிரஷர் புள்ளிகள் காலில் தூண்டப்பட்டு 

ஆரோக்கியம் பெருகுதல் போன்ற எண்ணற்ற ரகசியங்களை 

ஆலயங்களில் பொதித்து வைத்திருக்கிறார்கள்..! 



உணர்ந்து "ந ட ந் தா ல் " டாக்டரிடம் நடக்கவேண்டியதில்லை.. ! 

அப்போதைக்கு இப்போதே  நாராயணா   
என்னும் நாமத்துடன் நடப்போம் .. !


 


இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளவர்: 


 திருமதி. 



இராஜராஜேஸ்வரி 


அவர்கள்.



வலைத்தளம்: மணிராஜ் 

http://jaghamani.blogspot.com/



  




மனம் நிறைந்த பாராட்டுக்கள் + 


அன்பான இனிய நல்வாழ்த்துகள்.



      


 

 

கொ க் கா ன 
கொ க் க ல் ல வோ !



  

   

மணிமணியாய் .... 
ஜ க ம ணி யா ய் .... 
சாதனை மணிகள் 
சப்த ஸ்வரங்களாக
 ஜகமெங்கும்  
 ஒலிக்குதே ! 

 திருமதி. 



இராஜராஜேஸ்வரி 

அவர்கள்
  
VGK-35 To VGK-37


  

AN ACHIEVEMENT !
RECORD BREAK !!
7th TIME HAT-TRICK WINNING !!!


 மிகச்சிறப்பானதோர் சாதனை ! 


VGK-04 to VGK-06; VGK-08 to VGK-10; VGK-12 to VGK-17; VGK-20 to VGK-24; VGK-26 to VGK-29; VGK-31 to VGK-33 and VGK-35 to VGK-37 ஆகிய 27 போட்டிகளில் இதுவரை வெற்றிபெற்றுள்ளார்கள். 


இது இந்தப்போட்டிகளில் 
இவர்கள் அடிக்கும்

ஏழாவது ஹாட்-ட்ரிக் ஆகும். 


இவர்களின் இந்த அனைத்து 

27 வெற்றிகளுமே 

ஹாட்-ட்ரிக்குடன் இணைந்தே அமைந்துள்ளது 

மிகவும் அதிசயமாகவும் 

ஆச்சர்யமாகவும் உள்ளது. 



அதனாலேயே 


 கொக்கான 
கொக்கல்லவோ ! 

என இங்கு தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. :)


கொக்குத்தலையில் வெண்ணெய் அல்ல .....

வைரக் கிரீடமே
வைக்கப்பட்டுள்ளதாக்கும் ! :)



*** *** *** *** *** *** *** *** ***



மனம் நிறைந்த பாராட்டுகள்

அன்பான இனிய நல்வாழ்த்துகள்



[ The hat-trick Prize amount will be fixed later according to their 
Further Continuous Success in VGK-38, VGK-39 and VGK-40 ]

      



மிகக்கடினமான இந்த வேலையை

சிரத்தையுடன் பரிசீலனை செய்து

நியாயமான தீர்ப்புகள் வழங்கியுள்ள 

நடுவர் அவர்களுக்கு என் நன்றிகள்.




      


 



இந்தப் போட்டியில் பரிசு பெற்றுள்ள

மற்றவர்கள்  பற்றிய விபரங்கள்  

தனித்தனிப் பதிவுகளாக பல மணி நேர 

இடைவெளிகளில் வெளியிடப்படும்.



காணத்தவறாதீர்கள் !



    



அனைவரும் தொடர்ந்து

ஒவ்வொரு வாரப்போட்டியிலும் 

உற்சாகத்துடன் பங்கு கொண்டு 

சிறப்பிக்க வேண்டுமாய் 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


oooooOooooo


நினைவூட்டுகிறோம்



இந்த வார சிறுகதை 


விமர்சனப் போட்டிக்கான 



கதையின் தலைப்பு:



 VGK-39 


  மா மி யா ர்    



விமர்சனங்கள் வந்து சேர இறுதி நாள்:



வரும் வியாழக்கிழமை 


16.10.2014  


இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.





 


போட்டிகளில் கலந்துகொள்ள
இன்னும் தங்களுக்கு 
இரண்டே இரண்டு
வாய்ப்புகள் மட்டுமே உள்ளன
என்பது நினைவிருக்கட்டும் !! 



என்றும் அன்புடன் தங்கள்
வை.கோபாலகிருஷ்ணன்

17 கருத்துகள்:

  1. சகோதரி இராஜராஜேசுவரி அவர்களுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. எமது விமர்சனத்தை பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுத்தமைக்கு
    மனம் நிறைந்த இனிய நன்றிகள்.!

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் அருமையாக இருக்கிறது அம்மா. 7 தடவையாக தாங்கள் பெறும் பரிசு மகிழ்ச்சியைத் தருகிறது. மேலும் பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.

    பரிசை வழங்கும் ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்.

    நன்றி

    பதிலளிநீக்கு
  4. ஆன்மீகப் பதிவர் என்ற அடையாளத்துக்கேற்ப நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சி போன்றவற்றுக்கு முன்னோர் குறிப்பிட்ட பல ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றி பல அறியாத தகவல்களைக் குறிப்பிட்டு அழகான விமர்சனமெழுதி பரிசு பெற்றமைக்கும் ஏழாவது ஹாட்ரிக் தொடர் பரிசு பெற்றமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் மேடம்.

    பதிலளிநீக்கு
  5. அழகிய விமரிசனம் எழுதி பரிசுப் எப்ர்ருள்ள திருமதி ராஜராஜேஸ்வரிக்கு எனது இனிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஏழாவது முறையாக ஹாட் ட்ரிக் அடிக்கும் ராஜராஜேஸ்வரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்பதோடு விமரிசனம் மிக மிகச் சிறப்பாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை முதல் பரிசுக்கே உரிய விமரிசனம். :))))

    பதிலளிநீக்கு
  7. Geetha Sambasivam October 12, 2014 at 1:11 PM

    //என்னைப் பொறுத்தவரை முதல் பரிசுக்கே உரிய விமரிசனம். :))))//

    தங்களுக்கு என்னைப்போலவே மிகப்பரந்த விஸாலமான மனஸு என்பதை ....... இதுபோன்று பிறரை மனதாரப் பாராட்டும் பின்னூட்டங்கள் வாயிலாக மட்டுமே என்னால் அறிய முடிகிறது. :)))))

    மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. ஆழமான கருத்துகளுடன் அழகான நடையில் நல்ல விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  9. ஆலயங்களுக்கோ, பூங்காக்களுக்கோ சென்று அங்கு விச்ராந்தியாக

    மாசில்லாத சுற்றுச்சூழலில் நடப்பதே ஆரோக்கியத்துக்கு உகந்தது.

    ஆலயங்களிலோ, கிரிவலமாகவோ நாமஜபம் சொல்லியபடி இயன்ற

    பிரதக்ஷனம் வருவது உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருங்கே

    புத்துணர்ச்சி தரவல்லது..//

    முன்னோர்கள் சொன்னது அதுதானே! அதற்கு தானே இப்படி பெரிய கொவில்களை அக்காலத்தில் கட்டி வைத்தார்கள்.
    ஆன்மீக எழுத்தாளர் இராஜராஜேஸ்வரி அவர்களின் அருமையான விமர்சனத்திற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. திருமதி இராஜராஜேசுவரி அவர்களைப் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் பாராட்டுகளும் வாழ்த்துகளும்

    பதிலளிநீக்கு
  12. தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து கொண்டிருக்கும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. அல்லா கத விமரிசனத்துக்கும் அல்லா பரிசும் இவுகளே அள்ளிகிட்டு போயிடறாகளே. ரொம்பவே தெறமசாலிங்கதா. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. திருமதி இராஜராஜேஸ்வரி மேடம் வாழ்த்துகள். கோவில்களின்சிறப்புகள் பற்றி அழகான விமரிசனம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  15. ஜிங்கிள் பெல்ஸ்...ஜிங்கிள் பெல்ஸ்...வெற்றிக்கு வாழ்த்துகள் சகோதரி.

    பதிலளிநீக்கு
  16. ஆழமான கருத்துகளுடன் அழகான நடையில் நல்ல விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Seshadri e.s. December 20, 2015 at 1:22 PM

      //ஆழமான கருத்துகளுடன் அழகான நடையில் நல்ல விமர்சனம்! பரிசுபெற்ற திருமதி ராஜராஜேஸ்வரி அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!//

      மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி :)

      நீக்கு