என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வெள்ளி, 24 அக்டோபர், 2014

நேயர் கடிதம் - [ 11 ] திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள்.



 

வலைத்தளம்:
நிஜாம் பக்கம்



திரு. 

 அ. முஹம்மது 
நிஜாமுத்தீன்  


அவர்களின் பார்வையில் !  



ஐயா அவர்களுக்கு... நலம்தானே?



இந்த வாரம் முடிந்து, அடுத்த வாரத்துடன் விமரிசனப் போட்டி 

முடியப் போகிறதே என எண்ணுகையில் வருத்தமாகத்தான் உள்ளது. 



எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு 

விமரிசனக் கடிதங்கள் எழுதியும்  பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள், 

கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல 

பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும். 



ஆனால், தங்கள் வலையில் தொடர்ச்சியாக 40 வாரங்கள் 

சிறுகதைகளை வெளியிட்டு, அதன் விமரிசனங்களுக்கு 


5 பரிசுகள் அளித்தது அவற்றிலிருந்து 


(அதாவது பத்திரிகைகளிலிருந்து) 

முற்றிலும் மாறுபட்டது. 





நடுவரை வாசகர்களுக்கு காட்டாதது, மற்றும் நடுவருக்கு விமரிசனம் 


எழுதியவரைக் காட்டாதது என்ற யுக்தி, புதுமைதன்மை கொண்டது.





மூன்று பரிசுகளை 5 பேர்களுக்கு அளித்து ஐவரைத் 


திருப்தி படுத்தினீர்கள். 





அதுவும் தொடர்ச்சியாக. அதற்காக, சிறப்பு நன்றிகள் தங்களுக்கு. 





நடுவர் யார் என்றும்கூட ஒரு போட்டி!!! 





இன்னும் முதல் சுற்றில் தேர்வான விமர்னங்களை வெளியிட்டு 

எந்த விமரிசனத்திற்கு எந்த பரிசு என்று ஒரு போட்டி!!! 





போட்டியில் வெற்றி பெற்றதற்கே தொடர் வெற்றிகளைக் 

குறிப்பிட்டு 'ஹாட் ட்ரிக்' என்று ஒரு பரிசு!!! 





பரிசு மழை சலிக்கவேயில்லை ஐயா! 





இன்னும் இன்னும் இன்னும் வராதா... என்று 


ஏங்க வைக்கும் தாகம் தரும் போட்டிகள்!!!






வாரம் தோறும் வெள்ளியன்று கதை வெளியீடு,




அடுத்த சனி, ஞாயிறு, திங்களில் முந்தின கதைகளின் போட்டி முடிவுகள், 




ஒவ்வொன்றிலும் அதன் தொடர்பான பதிவின் இணைப்பு,




ஒவ்வொரு பதிவிலும் நினைவூட்டல்,




மெயில் மூலம் தொடர் நினைவூட்டல்....




கடிகார நிமிடங்களும் உருண்டோடிய காலம் 10 மாதங்களை 


நெருங்கி விட்டது. 





கதைகளில் முக்கிய பகுதிகளுக்கு 


வேறொரு நிறம்...





உரையாடலுக்கும் வர்ணனைகளுக்கும் 


வேறு, வேறு நிறங்கள்...




தகுந்த இணைப்புப் படங்கள்...




முடிவு வெளியிடும்போது,




வெற்றியாளர் பெயர்,




அவரது வலைப்பூ பெயர்,




அவரது விமரிசனம்,




கைதட்டல்,





ஹாட் ட்ரிக் எனில் 

எத்தனையாவது என்ற விவரம்...





இப்படியாக ஒரு யூனிஃபார்மாக, முறைப்படுத்தி செய்வது என்று...


வியக்க, வியக்க எத்தனை விசயங்கள்???!!! 



நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன். 
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள் தாங்களும் நடுவர் அவர்களும். 



நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத 
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால், 
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை 
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன். 


இறை நாட்டமே, முதன்மையானது. 

அவ்வாறே நிகழ இறையருள் உண்டு என்று நம்புகிறேன்.

தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் 
இறைஞ்சுகிறேன்.

நன்றி!

     அன்பன்,

  

          அ. முஹம்மது நிஜாமுத்தீன்.


 


என் அருமை நண்பர் 

திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களே ! 

தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்.

தாங்கள் எழுதியனுப்பியுள்ள 
இந்த நேயர் கடிதம் எனக்கு மிகுந்த 
மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் 
தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
தங்களுக்கு என் அன்பான இனிய நன்றிகள்.

//எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்திலிருந்தே வானொலிக்கு 

விமரிசனக் கடிதங்கள் எழுதியும்  பத்திரிகைகளுக்கு விமரிசனங்கள், 

கேள்விகள், போட்டிகள் என்று கலந்து கொண்டு, அவற்றில் பல 

பரிசுகளும் பெற்றிருக்கிறேன். தங்களுக்கும் இது தெரியும். //



நன்றாகத் தெரியும். தங்கள் வலைப்பதிவினில் படித்துள்ளேன். 

அந்த அனுபவத்தில் இங்கும் அழகானதோர் நேயர் கடிதம் 

எழுதி அசத்தியுள்ளீர்கள். 



மிக்க மகிழ்ச்சியாக உள்ளது, நண்பரே !




//நானும் சுமார் 7 அல்லது 8 போட்டிகளில்தான் கலந்து கொண்டேன். 
(ஐயா... தங்களிடம் அந்த விவரங்கள் இருக்குமே, நான் குறிப்பிட்டது சரிதானா?) அதிலேயே இரு போட்டிகளில் எனக்கும் பரிசு பெறும் வாய்ப்பைத் தந்தீர்கள் 
தாங்களும் நடுவர் அவர்களும். //

VGK-01 முதல் VGK-37 வரையுள்ள 37 போட்டிகளில் 
தாங்கள் கலந்து கொண்டுள்ளது மொத்தம் 13 
போட்டிகளில் மட்டுமே. 

VGK-03 TO VGK-09; VGK-12, VGK-15, VGK-17, VGK-18,
VGK-31 and VGK-32 ஆகியவையாகும். 

VGK-06 இல் இரண்டாம் பரிசுக்கும், 
VGK-07 இல் மூன்றாம் பரிசுக்கும் 
தாங்கள் அனுப்பியிருந்த விமர்சங்கள் 
உயர்திரு நடுவர் அவர்களால் பரிசுக்குத்தேர்வாகி 
தங்களைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தன.

//நான் எனது வலைப்பூவில் பதிவுகள் தொடர்ந்து இட இயலாத 
நெருக்கடியில் உள்ளேன். அப்படி, பதிவுகளை இட ஆரம்பித்தால், 
எனது 'நிஜாம் பக்கம்' வலைப்பூவிலும் தங்கள் மேன்மை பண்புகளை 
வெளிப்படுத்துவேன் என்று உறுதி கொள்கிறேன். //

மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. 
மெதுவாகவே அவசரம் ஏதும் இல்லாமல் 
வெளியிட்டுக்கொள்ளுங்கள். இப்போது என்றால் 
அதனை பார்வையிட எனக்கும் நேர நெருக்கடியே :)

//தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, 
ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் 
இறைஞ்சுகிறேன்.//

ஆஹா, அப்படியே செய்யுங்கள் நண்பா; மிக்க நன்றி.




 

  




என்றும் அன்புடன் கோபு [VGK]

     



நினைவூட்டுகிறோம்




இந்த வார சிறுகதை விமர்சனப் போட்டிக்கான


இணைப்புகள்:



 
பகுதி-1 க்கான இணைப்பு:  
http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html


பகுதி-2 க்கான இணைப்பு:  
பகுதி-3 க்கான இணைப்பு:  
பகுதி-4 க்கான இணைப்பு:  



கதையின் தலைப்பு:



VGK-40


மனசுக்குள் மத்தாப்பூ !



விமர்சனங்கள் வந்துசேர இறுதி நாள்



26.10.2014


 ஞாயிற்றுக்கிழமை



இந்திய நேரம் 


இரவு 8 மணிக்குள்.




போட்டியில் 


கலந்துகொள்ள 


மறவாதீர்கள் !




இதுவே இந்தப்போட்டியில் 



தாங்கள் கலந்துகொள்வதற்கான


இறுதி வாய்ப்பாகும். 


நல்லதொரு வாய்ப்பினை 
நழுவ விடாதீர்கள்.




என்றும் அன்புடன் தங்கள்
வை. கோபாலகிருஷ்ணன்

19 கருத்துகள்:



  1. திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள் நேயர் கடிதம் மிக நன்றாக இருக்கிறது. இவர்கள் சொல்வது போல் சாரின் சுறு சுறுப்பும் நினைவாற்றலும் எப்போது வியக்க வைக்கும்.

    தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன்.//


    அவர்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதி அரசு October 24, 2014 at 6:55 AM

      வாங்கோ, வணக்கம்.

      //திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்கள் நேயர் கடிதம் மிக நன்றாக இருக்கிறது. இவர்கள் சொல்வது போல் சாரின் சுறு சுறுப்பும் நினைவாற்றலும் எப்போது வியக்க வைக்கும்.//

      மிகவும் சந்தோஷம், மேடம்.

      *****தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.*****

      //அவர்களுடன் சேர்ந்து நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      தங்களின் அன்பான வருகைக்கும், பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.

      அன்புள்ள கோபு [VGK]

      நீக்கு
  2. திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின்
    நிஜமான மகிழ்ச்சிகளை அளித்த அருமையான
    நேயர் கடிதப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இராஜராஜேஸ்வரி October 24, 2014 at 8:13 AM
      திரு. அ. முஹம்மது நிஜாமுத்தீன் அவர்களின்
      நிஜமான மகிழ்ச்சிகளை அளித்த அருமையான
      நேயர் கடிதப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்..//

      வாங்கோ, வணக்கம்.

      // நி ஜா முத்தீன் அவர்களின்
      நி ஜ மான மகிழ்ச்சிகளை !!!!! //

      புத்திசாலி !!!!! :)))))

      மிகவும் ரஸித்தேன். மிக்க நன்றி - VGK

      நீக்கு
  3. தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன். //

    நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரிஷபன் October 24, 2014 at 1:08 PM

      வாங்கோ, வணக்கம் ‘குருநாதரே!’

      *****தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம் இறைஞ்சுகிறேன். *****

      //நானும் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//

      ஆஹா, ஆளாளுக்கு இதுபோல ஆங்காங்கே பிரார்த்தித்துக்கொள்வதால் மட்டுமே, ஏதோ என் வண்டி இதுவரை இன்றுவரை ஓடிக்கொண்டு வருகிறது.

      இருப்பினும் ஸ்ரீரங்கத்தாரான ‘ஸ்ரீரங்க ரங்க ரங்கநாதர்’ இடமே என் எழுத்துலக மானஸீக குருநாதர் செய்யும் பிரார்த்தனை மிகவும் விசேஷமாகத்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

      பிரியமுள்ள
      வீ..............ஜீ

      நீக்கு
  4. அன்பு ஐயா...
    எனது நேயர் கடிதத்தை சிறப்பு படங்களுடன் நேர்த்தியாக வெளியிட்டுள்ளீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி!

    இன்னும் எனக்கே கணக்கு தெரியாத தகவல்களையும்
    தங்கள் பதிலில் நுட்பமாக பகிர்ந்தீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 24, 2014 at 9:54 PM

      வாருங்கள் நண்பரே ! வணக்கம்.

      //அன்பு ஐயா...
      எனது நேயர் கடிதத்தை சிறப்பு படங்களுடன் நேர்த்தியாக வெளியிட்டுள்ளீர்கள். தங்கள் அன்புக்கு நன்றி!//

      சந்தோஷம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)

      //இன்னும் எனக்கே கணக்கு தெரியாத தகவல்களையும்
      தங்கள் பதிலில் நுட்பமாக பகிர்ந்தீர்கள். நன்றி!//

      சின்ன வயதிலிருந்தே எனக்கு இந்தக் கணக்குப்பாடம் மட்டுமே மிகவும் பிடித்தமானது. அதில் மட்டும் தான் 100க்கு 100 வாங்க முடியும் என இருந்தது, நான் படிக்கும்போது.

      என்னுடைய சொந்த விஷயங்கள் எதிலும் நான் கணக்கே பார்ப்பது இல்லை.

      என் வரவு செலவெல்லாமே ’ஆத்துலே வந்துச்சு ... மணல்லே சொருகிச்சுன்னு’ தான் இருக்கும். அவை எந்தக் கணக்கு வழக்கும் இல்லாமல்தான் இருக்கின்றன.

      இது எல்லோருக்கும் பொதுவான போட்டியல்லவா ! அதில் தவறான தகவல்கள் ஏதும் இல்லாமல் நுட்பமாகத் தானே நான் செயல்பட வேண்டும்? :)

      அன்புடன் VGK

      நீக்கு
  5. அந்தக் கடிதத்தை ஆர்வத்தினால், திடீரென எழுதியதால்...
    இன்னும் சில சங்கதிகள் எழுத விடுபட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அ. முஹம்மது நிஜாமுத்தீன் October 24, 2014 at 9:56 PM

      //அந்தக் கடிதத்தை ஆர்வத்தினால், திடீரென எழுதியதால்...
      இன்னும் சில சங்கதிகள் எழுத விடுபட்டுவிட்டது.//

      அதனால் பரவாயில்லை. ஒவ்வொன்றாக யோசித்து மெதுவாக இதே பதிவினில் பின்னூட்டங்களாகக் கொடுத்துகொண்டே வாருங்கள்.

      தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

      அன்புடன் VGK

      நீக்கு
  6. பதிவுலகில் ஒவ்வொருவரையும் வியக்கவைத்தப் போட்டியல்லவா இது? திரு. நிஜாமுத்தீன் அவர்கள் குறிப்பிடுவது போல் போட்டியில் கலந்துகொண்டவர்களே விவரங்களை நினைவில் கொள்ளாத நிலையில் விரல் நுனியில் அத்தனைத் தகவல்களையும் வைத்துக்கொண்டு சரியான திட்டமிடலுடன் போட்டியைத் திறம்பட நடத்தும் தங்களுக்கு இனிய பாராட்டுகள் கோபு சார். குறைந்த போட்டிகளில் கலந்துகொண்டிருந்தாலும் நிறைவாகவே கோபு சாரின் செயல்திறனை அறிந்துவைத்திருக்கும் திரு.நிஜாமுத்தீன் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  7. புள்ளி விவரங்கள் விரல் நுனியில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  8. திரு நிஜாமுதீன் அவர்களுக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  9. தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன்.//

    ஆமாம், ஆமாம், ஆமாமுங்கோ. நானும் உம்மாச்சி கிட்ட வேண்டிக்கறேன்.

    இன்னும் உங்கள் படைப்புகள் நிறைய வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. திரு நிஜாமுத்தின் அவங்க சிறப்பான கடதாசிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. திரு நிஜாமுதீன் கடிதம் ரிப்ளை பின்னூட்டங்கள் எல்லாம் நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  12. // தங்களின் இந்த சுறுசுறுப்பு என்றும் தொடரவும் மகிழ்வான, ஆரோக்கியமான வாழ்க்கை நிலைக்கவும் இறைவனிடம்
    இறைஞ்சுகிறேன்.// நானும் உங்களுடன் சேர்ந்துகொள்கிறேன் நண்பரே!!

    பதிலளிநீக்கு
  13. 'மூன்றாம் சுழி’ வலைப்பதிவர் திரு. அப்பாதுரை அவர்களின் ’நேயர் கடிதம்’ தனிப்பதிவாக அவரின் வலைத்தளத்திலேயே எழுதி வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இணைப்பு:- http://moonramsuzhi.blogspot.com/2014/10/blog-post_31.html

    தலைப்பு: ’இன்று போல் என்றும்’

    இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு