என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 26 ஜூன், 2011

மறக்க மனம் கூடுதில்லையே.... [பகுதி 4 of 4] இறுதிப்பகுதி


முன்கதை முடிந்த இடம்:


என்னை ஜன்ம ஜன்மமாக, ஆத்மார்த்த அன்புடன் தொடர்ந்து வந்துள்ள, ஏதோவொரு மிக நெருங்கிய உறவு, என்னை விட்டு இப்போது, எங்கோ, வெகுதூரம் விலகிச்செல்வதுபோல உணர்ந்தேன்.

அதன் பிறகு இன்று வரை நான் அவளை சந்திக்கவே இல்லை.


===============================

என் கற்பனைக்காதலியான அந்த பாரதி கண்ட புதுமைப்பெண்ணின் அசல் அச்சில் இருந்த இந்தப்பெண்ணை கடற்கரையில் கண்டு சிலையாகிப்போன என்னை, என் மகன் “என்னப்பா...ஏதோ யோசனையில் இருக்கிறீர்கள்! “மீட் மிஸ்டர் கோபிநாத், மிகப்பெரிய தொழிலதிபர், அவரின் ஒரே பெண் இவள்” என்றான்.

தொழிலதிபருடன் கை குலுக்கினேன். அந்த அழகு தேவதையைக் கைகூப்பி வணங்கினேன். அந்தப்பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் என் மனைவிக்குப் பிடித்துப்போய் விட்டது. 

சம்ப்ரதாயத்திற்காகவும், மேற்கொண்டு பேசி முடிவெடுக்க நாங்கள் காரில் ஏறி பெண் வீட்டுக்குப்போனோம். ஏற்கனவே என் பையனும் அந்தப்பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்துவிட்ட விஷயம் தான்.

அந்தப்பெண்ணின் வீட்டை அடைந்த நாங்கள், அவர்களின் செல்வச்செழிப்பைக்கண்டு வியந்து போனோம். பெண்ணின் தாயாரைப்பார்க்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தைத் தெரிவித்தோம்.

சற்றே தயங்கியவாறு அழைத்துச்சென்றனர். பெண்ணின் தாயாரைப்பார்த்த நானும் என் மனைவியும் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

ஒரு தனி அறையில் சங்கிலியால் கட்டிப்போட்டிருந்தனர். தலை முழுவதும் ஆங்காங்கே புண்ணுடன் கூடிய வீக்கங்கள். சம்மர் க்ராப் அடித்த தலைபோல முடிகள் ஆங்காங்கே வெட்டப்பட்டிருந்தன. 

எங்களைக்கண்டதும் ஒரு புன்சிரிப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும். பிறகு கேவிக்கேவி அழுகை. எங்கேயோ வெறித்த ஓர் பார்வை. சற்று நேரத்தில் நைட்டியில் சுருண்டு படுத்துக்கொண்டாள். 

சிவந்த முகம் வெளிறிப்போய் இருந்தது. கைகளிலும் ஆங்காங்கே காயங்கள். ஒருசில வருடங்களாக ஏதோ ஒருவித மனோவியாதியாம். உடுத்தும் உடைகளையே உருவி விட்டெறிந்து விடுகிறாளாம்.

பணக்காரக்கணவர், எடுபிடியாக எக்கச்சக்க வேலையாட்கள், விலையுயர்ந்த கார்கள், அழகிய தோட்டங்களுடன் மிகப்பெரிய பங்களா வீடு, அழகு தேவதையாக ஒரே மகள். அனைத்து சுகங்கள் இருந்தும் அனுபவிக்கக்கொடுத்து வைக்காத ஜன்மம். என்ன கொடுமை இது. என் மனது மிகவும் நடுங்கியது.

எப்படி அழகாகவும், மிடுக்காகவும் இருந்த என் அன்றைய கற்பனைக் கதாநாயகி , அழகு தேவதை, தங்கப்பதுமை, தங்கச்சிலை, பைங்கிளி என்றெல்லாம் என்னால் வர்ணிக்கப்பட்டவள் இன்று இப்படி அலங்கோலமாக ஆகிவிட்டாளே! என நினைத்து என் மனம் கண்ணீர் வடித்தது. அங்கு நிற்கவோ அவளைத்தொடர்ந்து பார்க்கவோ என் மனம் சகிக்காமல், வேறு பக்கமாக என் பார்வையைத் திருப்பிக்கொண்டேன்.

இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். 

என் எண்ணங்களையும், உணர்வுகளையும், அந்த நாள் ஞாபகங்களையும் அங்கு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத பரிதாப நிலையில் நான்.

ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன். 

இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.

“எது எப்படியிருந்தாலும் நம் மகன் அந்தப்பெண்ணையும், அந்தப்பெண் நம் மகனையும் மனதாரக் காதலிப்பதாக வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள். பிறகு என்ன! கல்யாண ஏற்பாடுகளைச் செய்துவிடுவோம்” என்று ரகசியமாக என் மனைவியிடம் தெரிவித்தேன்.

என் மகன் என்னை நெருங்கி “அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” என்றான்.

“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.


-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o- 


[இந்தக்கதை பத்திரிகை ஆசிரியர் அவர்களால் சற்றே சுருக்கப்பட்டு 
“காதலும் கல்யாணமும்” என்ற தலைப்பில் 
10.03.2010 தேதியிட்ட தேவி வார இதழில் வெளியிடப்பட்டது.]83 கருத்துகள்:

 1. வெகு நாட்களுக்குப் பிறகு வாழ்க்கையில்
  எதிர்பாராதவிதமாக இப்படித்தான் நாம்
  நம் சம்பத்தப்பட்டவர்களை சந்திக்க நேருகிறது
  சிலர் ஜெயித்த நிலையிலும்
  சிலர் தோற்ற நிலையிலும்
  அதற்கான காரணங்கள் ஆயிரம் இருக்கலாம்
  அது தெரிந்து என்ன ஆகப் போகிறது
  இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி
  காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது
  கதையின் இறுதிப் பகுதி மனங்கனக்கச் செய்து போனாலும்
  நேர்மறையான சிந்தனையுடன் முடித்திருந்தது அருமை

  பதிலளிநீக்கு
 2. வை.கோ சார்! மிக அருமையாக இந்தக் கதையைக் கொண்டு போயிருக்கிறீர்கள். முடிவைக் கோர்த்த வரிகள் ஜீவனுடன் இருக்கின்றன. மெருகேறிக் கொண்டே வரும் உங்கள் படைப்புகள் படிக்க இதம். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.

  அதைத்தானே ஆன்றோர்களும் சான்றோர்களும் கூறினார்கள். அனுபவமும் உண்ர்த்தியது அருமை.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 4. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.//

  மூத்தோர் சொல்லும்
  முதுநெல்லிக்கனியும் முன்னே கச்க்கும்.பின்னே இனிக்கும் அல்லவா?

  பதிலளிநீக்கு
 5. தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல //

  பாசிட்டிவ் எண்ணங்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன்.

  பதிலளிநீக்கு
 6. உயிரோட்டமுள்ள கதையமைப்பும்
  காட்சி அமைப்பும் கதைக்கு மெருகூட்டுகின்றன். வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

  பதிலளிநீக்கு
 7. அருமையாய் தொடக்கி அருமையாய் முடிஞ்சு கதை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. நெஞ்சில் அறையும் அதிர்ச்சி ,அதை கடந்து சுகமான முடிவு என நிறைவு செய்துள்ள விதம் எல்லாமே அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 9. மனம் கனக்க வைத்த முடிவு. ஆனாலும்
  சுபமான முடிவு தந்த உங்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 10. பெரிய ஃபான்டில் பெரிய மனதைக் காண்பித்து விட்டீர்கள். முடிவு ஒரு திரைப்படத்தை நினைவூட்டினாலும், ஒரு பொயட்டிக் ஜஸ்டிஸ் இருக்கு!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 11. இது போன்ற ஆச்சரியங்களை வாழ்க்கை என்னும் காலயந்திரம் ரகசியமாய் பொதிந்து வைத்துள்ளது. கதை போல அல்லாமல் உண்மை சம்பவங்களின் தொகுப்பு போல உள்ளது. நன்றி VGK சார்.

  பதிலளிநீக்கு
 12. சில விஷயங்கள் மிக எதிர்பார்க்க முடியாதவை. இதுவும் அது போல் ஒன்று. சில பேர் பெண்ணுக்கும் அம்மா போல பிற்காலத்தில் நோய் வரலாம் என்று மறுத்து விடுவார்கள். இங்கு கதையின் நாயகர் அப்படிச் செய்யாமல் அவர் முன்னாள் காதல் தடுக்கிறது. எதிர்பாரா முடிவுதான். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்பது எவ்வளவு உண்மை?

  பதிலளிநீக்கு
 13. தமிழ்மணப் பட்டையைக் காணோமே...

  பதிலளிநீக்கு
 14. இறுதி பகுதி மனதை கனக்கச்செய்து
  விட்டது, நல்ல கதை.

  பதிலளிநீக்கு
 15. மனம் கனக்க வைத்தாலும் இறுதியில் கூறிய சமாதானம் ஆறுதலைத் தருகிறது.

  பதிலளிநீக்கு
 16. மிக அருமை சார்..:)

  எதிர்பாராத முடிவு. தேவியில் வந்தமைக்கு வாழத்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன். //100/100 உண்மை. ஒரு இனிய கதையை நல்ல மேன்மையான கதாபாத்திரங்களோடு சொல்லியிருக்கிறீர். நன்று. உங்கள்
  பணி மேலும் சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 18. //இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை //well said !!.அருமையாக சென்று இறுதியில் மனதை கனக்க செய்த முடிவு .(நீங்கள் அதே வீட்டில் பெண் எடுத்து பெண் பார்க்கும் வைபவத்தில் ரவா லட்டு சாப்பிட்டு மலரும் நினைவோடு முடியும் என்று நினைத்தேன் )

  பதிலளிநீக்கு
 19. //இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்.//
  எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டிய உண்மை....
  கற்பனைகாதலி நேரில் வராமல் இருந்திருக்ககூடாதா?
  மனதை கனக்க வைக்கிற முடிவு..

  பதிலளிநீக்கு
 20. வாழ்க்கை தனக்குள் நிறைய புதிர்களை ஒளித்து வைத்திருந்து அவ்வப்போது விடுவிக்கும். அவற்றை பாசிட்டிவாக எடுத்துக்கொள்ளும்போது குழப்பங்கள் தீர்ந்து விடும். நல்ல கதை. தேவியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. நெகிழ்ச்சியான சிறுகதை
  முடிவு மனசை தொட்டுவிட்டது
  ம்ம் மனித வாழ்க்கை எத்தனை விசித்திரமானது..

  பதிலளிநீக்கு
 22. ’பெண்ணின் அம்மாவிற்கு எதனால் இப்படி ஆனது என்று சொல்லாமல் விட்டது’ - இவரால்தானோ என்ற ஊகத்திற்கு இடமளிக்கிறதே.

  ஆனால் fantastically narrated கதை.
  சூப்பர்.

  பதிலளிநீக்கு
 23. மனம் ரணமாகிப் போனா கணம் அது
  தன் முன்னாள் காதலியை பார்ப்பதே கொடுமை அதுவும் இப்படி ஒரு நிலையில் பார்ப்பதென்பது மிககொடுமை ஐயா

  அதே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் வலிமையையும் அழகாக சொல்லிய விதமும் அருமை

  ஒரு காதலின் இரு பக்கங்களையும் அலசி ஆராய்ந்து அழகாய் அற்புத நதியில் எழுதிய கதை அமர்க்களம் ஐயா

  அடுத்த தொடரை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 24. கதையின் ஒவ்வொரு பகுதியிலும் கல்யாணம், காதல் என்று அழகாய்க் கொண்டு வந்து நடுவே அழகிய ஒரு தலைக் காதலியின் சோக நிலையையும், கடைசியில் கதைக்கு நல்ல ஒரு முடிவையும் தந்துட்டீங்க. கதை நன்றாக இருக்கிறது. தேவியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 25. அட்டகாசம் சார்! ;-))) ஆனா சோக எண்டிங்.... ;-(((

  பதிலளிநீக்கு
 26. வித்தியாசமான எதிர்பாராத மனதை கலக்கிய முடிவு.
  இந்த நிலையில் அது கற்பனை நாயகி என்றால் மட்டுமல்ல
  நமக்கு அறிமுகமான எவரை சந்தித்தாலும் மனம் பிசைந்து விடும்தானே

  பதிலளிநீக்கு
 27. தயவுசெய்து மன்னிக்கவும் நேற்றே குறிப்பிட மறந்து விட்டேன்
  நீங்களும் உங்க ஊர் பற்றி தொடர் பதிவு எழுத அழைக்கின்றேன் .

  பதிலளிநீக்கு
 28. இளமையும் அழகும் ஆரோக்கியமும் என்றும் நிரந்தரமல்ல என்பதை இந்த என் அனுபவத்தில் புரிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
 29. இந்த கதையில் அவர்கள் நிலைமையை மட்டும் சொல்லி
  காரணங்களை விளக்காமல் போனது அதிகம் பிடித்திருந்தது

  பதிலளிநீக்கு
 30. இந்த பகுதி மனதை கனக்க வைத்தது. இருந்தாலும் நல்ல முடிவாக இருந்தது சார். தேவியில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 31. எல்லா விதமாகவும் உங்களால் எழுதமுடியும் என்பதை எல்லா நேரங்களிலும் நிரூபித்துவிடுகிறீர்கள்.

  ஆனால் உங்களின் சௌஜன்யமான மனோநிலையில் உலகம் இல்லாதிருப்பதால் நீங்கள் அளிக்கும் முடிவு எல்லோருக்கும் ஒரு ஒத்தடம் போல அமைந்துவிடுகிறது.

  பதிலளிநீக்கு
 32. நான் எழுதிய பின்னூட்டம் என்னாயிற்று.?தான் ஆசீர்வதிக்கப்பட்ட முறையில் ஆசீர்வதிக்காமல் அவர்கள் இஷ்டப்படிபிள்ளைகளை ஆசீர்வதிக்கும் பெற்றோர் ஆசீர்வதிக்கப் பட்டவரே பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 33. கவிதை, கதை, கட்டுரை எதுவானாலும் படிக்கத் தொடங்கினால்
  முடிவுவரை விடாமல் படிக்கத் தூண்டுவதே வாழும் இலக்கியமாகும்
  தங்கள் பதிவு அத்தகைய
  ஒன்றே
  அன்புடன்
  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 34. நெகிழ வைத்த முடிவு... நல்ல எழுதமைப்புங்க... வாழ்த்துக்கள் சார் தேவி வார இதழில் வந்ததற்கு

  பதிலளிநீக்கு
 35. நல்ல பதிவு , முடிந்தால் உங்கள் பதிவை இங்கேயும் இணையுங்கள்  www.tamil10.com
  நன்றி

  பதிலளிநீக்கு
 36. ஈரோட்டுக்காரியின் சந்திப்பு வெகு சுவாரசியம்.இன்னும் அவள் கதாநாயகன் மீது அன்பாய் இருப்பது நாயகன் தூரத்தை அனுசரிப்பதும் வெகு ஜோர்.முதலிலும் முடிவிலும் ஒரே மாதிரி.

  மெட்ராஸ்காரி மீது நாயகனின் அன்பை வெளிப்படுத்துதலையும் திறமையாகக் கையாண்டிருக்கிறீர்கள். வேறு எப்படி கதை போனலும் சிக்கலே.

  கதையை அராய்ச்சி செய்யாமல் அப்படியே ரசித்துப் படியுங்கள் என்று நீங்கள் உரிமையாக கடிந்து கொள்வீர்களோ??

  ரசித்து ஆராய்கிறேன் சார்.

  ருசிகரமான பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
 37. சிறப்பாகக் கதையை முடித்திருக்கின்றீர்கள். சிறப்பு. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 38. ஃஃஃஃஃ“அவளின் அம்மாவை மட்டும் மறந்து விட்டுப்பார்த்தால், இந்த சம்பந்தம் எல்லாவிதத்திலும் ஓ.கே. தானே அப்பா” ஃஃஃஃஃ

  எதிர் பார்ப்புடன் நகர்த்தி திரும்பம் தந்திருக்கிறிர்கள் மிக்க நன்றிகள்...


  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)

  பதிலளிநீக்கு
 39. இந்தக் கதையின் இறுதிப் பகுதிக்கு அன்புடன் வருகை தந்து, பல்வேறு அரிய பெரிய கருத்துக்கள் கூறி, தொடரைப்பெரிதும் உற்சாகத்துடன் வரவேற்று பாராட்டியுள்ள, அன்பான சகோதர சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  எனது அடுத்த [100 ஆவது] பதிவு
  “மலரும் நினைவுகள்”
  03.07.2011 ஞாயிறு வெளியிடப்படும்.


  தொடர்ந்து வாருங்கள்.
  உற்சாகம் தாருங்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 40. இன்ட்லி & தமிழ்மணத்தில் எனக்கு ஆதரவாக வாக்குகள் அளித்த அனைவருக்கும் என் கூடுதல் நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள் vgk

  பதிலளிநீக்கு
 41. டச்சிங்காக முடித்து விட்டீர்கள்.
  அருமையான கதை.எதனால் மனநலம் பாதிக்கப்ப்படிருக்கும் என்ற கோணத்தில் கொஞ்சம் கற்பனை செய்திருக்கலாம் .
  அழகாக கதை புனைகிறீர்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துகளுக்கும், பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 42. தன்னை விரும்பிய ஒரு பெண்ணை, இந்நாளில், தன் மகன் காதலிக்கும் பெண்ணின் அம்மாவாக, சந்திக்கும் சூழ்நிலையை ஒரு கதையாக்கிச் சொல்லும் போக்கில் VGK – இன் எழுத்தில் இன்னொரு ஸ்ரீதர் (டைரக்டர்) தெரிகிறார்.

  சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
  முடிவே இல்லாதது
  எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
  இனிய கதை இது
  என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
  எழுதும் புதுக்கதை இது

  - பாடல்: கண்ணதாசன் (படம்: பிராப்தம்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திரு. தி.தமிழ் இளங்கோ ஐயா,
   வாருங்கள். வணக்கம்.

   //VGK – இன் எழுத்தில் இன்னொரு ஸ்ரீதர் (டைரக்டர்) தெரிகிறார்.//

   ஆஹா!
   This is too much Sir.
   However thank you, very much, Sir.

   //சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்;
   முடிவே இல்லாதது//

   இது எனக்கும் மிகவும் பிடித்த பாடலே.

   தங்களின் அன்பான வருகைக்கும், அழகான அனைத்துக் கருத்துக்களுக்கும், கதை விமர்சனத்திற்கும், என் மனமார்ந்த நன்றிகள், ஐயா.

   என்றும் அன்புடன் தங்கள்,
   vgk

   [நான் என் டேஷ்-போர்டு பக்கம் அதிகம் செல்வது இல்லை. மேலும் அதில் பல புதிய பதிவுகள் பற்றி தகவல் கிடைப்பதும் இல்லை.

   அதனால் தாங்கள் ஏதாவது புதிய பதிவுகள் வெளியிட்டு என் கருத்துக்கள் [பின்னூட்டம்] வராது போனால், எனக்கு அதன் இணைப்பை மட்டும் மெயில் மூலம் அனுப்பி வையுங்கள் ஐயா.

   என் மெயில் ID : valambal@gmail.com ] vgk

   நீக்கு
 43. கடந்து போன ஒரு தலைமுறையின் வாழ்க்கை, பழக்கங்கள்,ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வரம்புகள்,எல்லைகள் எல்லாமே , பழைய நினைவுகளை கிளறி விட்டன.

  கற்பனை பிரமாதம். முடித்த விதமும் இதமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள ‘பட்டு’வின் வருகையும், பட்டென்ற அருமையான மென்மையான மற்றும் மேன்மையான கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்தன.

   பட்டு, தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   vgk

   நீக்கு
 44. அருமையான கதை அண்ணா! எழுதியது மட்டுமல்ல அந்த கதாபாத்திரமாக நீங்களே அதில் இருந்தது போல் ஓர் உணர்வு.
  மனதை நெருடிய கதை. முடிவில் அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்ததை மறக்க மனம் கூடுதில்லையே:(
  சிறப்பான நல்ல படைப்பு. சோகத்தையும் நாம் ரசிக்கும்போது நன்றாக இருக்கு என்பது கொஞ்சம் அபத்தம்தான். மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் இளமதி,

   வாங்கம்மா, வாங்க. எப்படியிருக்கீங்க?

   நானே இதில் ஓர் கதாபாத்திரம் போன்ற உணர்வா உங்களுக்கு? மனதை நெருடிய கதையா? இதுபோல எதையாவது நடுவே அள்ளித்தெளித்து விட்டுப் போய் விடுகிறீர்கள். ;)))))

   இதனை ’சிறப்பான நல்ல படைப்பு’ என்று என் இளமதி பாராட்டியுள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

   //சோகத்தையும் நாம் ரசிக்கும்போது நன்றாக இருக்கு என்பது கொஞ்சம் அபத்தம்தான்.//

   ஆமாம் இளமதி, அதுவும் மற்றவர்களின் சோகக்கதைகளைக் கேட்டு, ஒருவர் அதை மனதுக்குள் மகிழ்ந்து ரசிப்பது மஹா மஹா அபத்தம். குரூர எண்ணம் அது.

   எந்தக்கஷ்டமும் இதுபோல தனக்கு வந்தால் எப்படியிருக்கும் என்ற முறையில் யோசித்தால் அவ்வாறான ரசனையோ மகிழ்வோ மனதில் ஒருபோதும் ஏற்படாது. அவ்வாறு மனதில் இரக்கத்துடன் நினைப்பவர்களே மிகச் சிறந்த உயர்ந்த மனிதர்கள். அவர்களாலேயே கஷ்டப்படும் பிறருக்கு கொஞ்சமாவது ஆறுதல் அளிக்க முடியும்.

   இளமதியின் அன்பான வருகைக்கும், ஆதரவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   அன்புடன்
   VGK

   நீக்கு
  2. அண்ணா! தாங்கள் எழுதிய எழுதும் எல்லாக் கதைகளிலுமே அந்தக் கதா பாத்திரமாகவே மாறி ரொம்ப அனுபவிச்சு எழுதுவதைத்தான் நான்
   // எழுதியது மட்டுமல்ல அந்த கதாபாத்திரமாக நீங்களே அதில் இருந்தது போல் ஓர் உணர்வு// என்றெழுதினேன்.
   மற்றும்படி இங்கு கருத்துக்கூறி கூடி இருக்கும் குடும்பத்துக்குள் கும்மி அடிக்கும் நோக்கமெதுவுமில்லை;)))
   உங்களின் பதில் கருத்துக்கும் மிக்கநன்றி அண்ணா!

   நீக்கு
  3. அன்பின் இளமதி,

   தாங்கள் எழுதியதில் எந்தத்தப்போ தவறோ எனக்குத் தெரியவில்லையேயம்மா ...

   சரியாகத்தான் என்னைப் பாராட்டி எழுதியுள்ளீர்கள்.

   மிகவும் சந்தோஷமாகத்தான் ஏற்றுக்கொண்டுள்ளேன்.

   மற்றவை பிறகு வழக்கம்போல் நமக்குள் .....

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 45. மனதின் உணர்வுகளை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.இந்த சிறு கதையை ஒரு சினிமா எடுத்துவிடலாம்.

  பதிலளிநீக்கு
 46. //உஷா அன்பரசு November 21, 2012 1:41 AM
  மனதின் உணர்வுகளை அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள்.இந்த சிறு கதையை ஒரு சினிமா எடுத்துவிடலாம்.//

  தங்களின் அன்பான வருகைக்கும் அழகான உற்சாகமூட்டும் கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 47. தாமதமாக இந்தப் பதிவை படிக்க நேரிட்டதால் எல்லா பகுதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்துவிட்டேன்.

  சிறிய வயதில் தொடர்கதையை படித்த நினைவு வந்தது.

  நல்லதொரு முடிவு.

  //“அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//

  'நச்' வரிகள்.

  தேவி வார இதழில் பிரசுரம் ஆனதற்குப் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 48. Ranjani Narayanan December 15, 2012 1:20 AM
  //தாமதமாக இந்தப் பதிவை படிக்க நேரிட்டதால் எல்லா பகுதிகளையும் ஒன்றன் பின் ஒன்றாகப் படித்துவிட்டேன்.

  சிறிய வயதில் தொடர்கதையை படித்த நினைவு வந்தது.

  நல்லதொரு முடிவு.//

  ரொம்பவும் சந்தோஷம் மேடம்.

  **** “அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! ................. ............................................................
  ........................................................****

  //'நச்' வரிகள்.//

  மிக்க நன்றி, மேடம்.

  //தேவி வார இதழில் பிரசுரம் ஆனதற்குப் பாராட்டுக்கள்!//

  இன்று அன்பான வருகை தந்து, வரிசையாக இந்தக்கதையின் நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்துவிட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் அழகாக பின்னூட்டக்கருத்துக்களை அளித்துச் சிறப்பித்துள்ளது என் மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  என் மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 49. அன்பின் வை.கோ - 4 பகுதிகளாக - மலரும் - 40 ஆண்டுகட்கு முன்னர் நடந்த நிகழ்வுகளீன் - நினைவுகள் - சிறு சிறு செய்திகளைக் கூட கற்பனைகள் கலந்து அழகான பதிவுகளாக்கியது நன்று - அழகிய ஆரோக்கியமான் பொருத்தமான மனைவியைத் தேர்ந்தெடுத்த பெற்றோரை நினைத்து சில வரிகள் எழுதியமையும் நன்று - இரு பெண்களையும் மறக்க இயலாமல் ( கற்ப்னையாக இருப்பினும் ) இப்பொழுதும் நினைத்து மகிழும் தங்களின் எழுத்துகள் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. cheena (சீனா)January 8, 2013 6:42 AM

   வாருங்கள் என் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே!

   //அன்பின் வை.கோ - 4 பகுதிகளாக - மலரும் - 40 ஆண்டுகட்கு முன்னர் நடந்த நிகழ்வுகளின் - நினைவுகள் - சிறு சிறு செய்திகளைக் கூட கற்பனைகள் கலந்து அழகான பதிவுகளாக்கியது நன்று //

   ”கற்பனை என்றாலும் ... கற்சிலை என்றாலும் ... கந்தனே உனை மறவேன்” என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன ... சரி கற்பனை என்றே வைத்துக்கொள்வோம். அதுவே நல்லது.

   //அழகிய ஆரோக்கியமான் பொருத்தமான மனைவியைத் தேர்ந்தெடுத்த பெற்றோரை நினைத்து சில வரிகள் எழுதியமையும் நன்று//

   இந்தத் தங்களின் மனம் திறந்த வார்த்தைகள் தான், உங்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டுது, ஐயா. நன்றி.

   //இரு பெண்களையும் மறக்க இயலாமல் ( கற்பனையாக இருப்பினும் ) இப்பொழுதும் நினைத்து மகிழும் தங்களின் எழுத்துகள் அருமை.//

   ஆங்காங்கே மிகவும் முன்னெச்சரிக்கையாக ‘கற்பனையாக இருப்பினும்’ என்ற வார்த்தைகளைப் போட்டுள்ளது, என்னாலும் பாதுகாப்பாக உணர முடிகிறது, ஐயா. நன்றி.

   //நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

   ஐயா வலைச்சரத்தில் இன்று 08.01.2013 இந்தக்கதை மட்டுமல்ல்லாமல் பலரின் பல பதிவுகள் பற்றி சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன.

   அப்படியிருந்தும் ஒவ்வொருவரின் படைப்புகளுக்கும் தாங்கள் சிரமப்பட்டு போய், ஆர்வமாக ஊன்றிப்படித்து மறுமொழி அளிப்பது என்பது எவ்வளவு ஒரு கஷ்டமான வேலை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

   தங்களின் இதுபோன்ற அன்பான வருகையும் ஆதரவான கருத்துக்களும் நிச்சயமாக வலைப்பதிவர்கள் அனைவருக்குமே ஆனந்தத்தை அளிக்கக்கூடியது.

   தங்களின் இந்தச்செயல் மிகவும் போற்றக்கூடியது. அதற்கு நான் எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது.

   எனினும் என் மனமார்ந்த நன்றியோ நன்றிகள்.

   தங்கள் மேல் தனிப்பிரியம் உள்ள உங்கள் VGK

   நீக்கு
 50. இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.//

  பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.

  “அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//

  கதாநாயகனின் நல்ல உள்ளத்தை எடுத்துக் காடுகிறது.

  மொத்தத்தில் சுவாரசியமான கதை.

  ஒரே மூச்சில் 4 பகுதிகளையும் படித்து விட்டேன்.

  தேவி வார இதழில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. JAYANTHI RAMANI January 9, 2013 2:46 AM

   *****இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன்.*****

   //பொன்னேட்டில் பொறிக்க வேண்டிய வரிகள்.//

   நன்றியோ நன்றிகள், மேடம்.

   >>>>>

   நீக்கு
  2. கோபு >>>> திருமதி ஜெயந்தி ரமணி மேடம்.

   ***** “அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.*****

   //கதாநாயகனின் நல்ல உள்ளத்தை எடுத்துக் காட்டுகிறது.//

   சந்தோஷம், மேடம்.

   //மொத்தத்தில் சுவாரசியமான கதை.//

   சுவாரஸ்யமான தங்களின் கருத்துக்கள், இந்தக்கதையினை மேலும் சுவாரஸ்யமான முறையில் மெருகூட்டியுள்ளன.

   //ஒரே மூச்சில் 4 பகுதிகளையும் படித்து விட்டேன்.//

   என் அன்புச்சகோதரி ’ஜெயா’வா கொக்கா ? ;)))))

   //தேவி வார இதழில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

   பிரியமுள்ள
   கோபு

   நீக்கு
 51. 4 பகுதிகளையும் வாசித்துவிட்டு இந்தக் கருத்து. அருமை! 3 ஆம் பகுதி கண்களில் நீர் வர வைத்துவிட்டது. உண்மையான காதல் என்றுமே மாறாது அது பசுமையானது. மனதை விட்டு நீங்காதது, கதாநாயகனையே சுற்றி வந்த பெண் நிஜமாகவே காதலித்திருக்கின்றாள். முடிவு கிட்டத்தட்ட எதிர்பார்த்தது அதாவது நாயகனின் பையன் நாயகனின் பழையகாதலியின் பெண்ணைக் காதலிப்பது என்பது. ஆனால் பழைய காதலி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது எதிர்பாராதது.

  ஆனால் மனதை என்னவோ செய்தது...நாயகனின் காதல்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thulasidharan V Thillaiakathu March 29, 2015 at 8:53 PM

   வாங்கோ, வணக்கம்.

   //4 பகுதிகளையும் வாசித்துவிட்டு இந்தக் கருத்து. அருமை!//

   மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

   //3 ஆம் பகுதி கண்களில் நீர் வர வைத்துவிட்டது. உண்மையான காதல் என்றுமே மாறாது ... அது பசுமையானது. மனதை விட்டு நீங்காதது, கதாநாயகனையே சுற்றி வந்த பெண் நிஜமாகவே காதலித்திருக்கின்றாள்.//

   ஆமாம். அவள் நிஜமாகவே ...................... ! இந்தக்கதையைப் படித்து ரசித்த பல வாசகர்களின் மனதை விட்டு நீங்காத கதாபாத்திரம் அவள்தான்.

   //முடிவு கிட்டத்தட்ட எதிர்பார்த்தது .. அதாவது நாயகனின் பையன் நாயகனின் பழையகாதலியின் பெண்ணைக் காதலிப்பது என்பது. ஆனால் பழைய காதலி மனநிலை சரியில்லாமல் இருப்பதாகக் காட்டியிருப்பது எதிர்பாராதது.//

   ரசித்து வாசித்து எழுதியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

   //ஆனால் மனதை என்னவோ செய்தது...நாயகனின் காதல்கள்!//

   என்ன செய்வது? நாம் நினைப்பதெல்லாம் அப்படியே நடந்துவிடுமா ? உலகில் இதெல்லாம் மிகவும் சகஜமே என்று ஆகிப்போய்விட்டது இன்றுள்ள சூழ்நிலைகள்.

   தங்களின் அன்பான வருகைக்கும் ஆழமான பல்வேறு கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நன்றிகள்.

   நீக்கு
 52. நம் வாழ்க்கையை நாம் நிர்ணயிப்பதில்லை. ஆண்டவன்தான் நிர்ணயிக்கிறான். அதை நாம் வெறுக்காமல் ஏற்றுக்கொண்டால் போதும். நாம் சந்தோஷமாக இருக்கலாம் என்பதை அனுபவ பூர்வமாக எடுத்துச் சொல்கிறது கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை ஆறு மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 53. அந்த கற்பனை காதலியின் நிலை பரிதாபம்தான் ஏன் சிலருக்கு மட்டும் சபிக்கப்பட்ட வாழ்க்கை அளைகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள பூந்தளிர் அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரில், மே மற்றும் ஜூன் ஆகிய ஆறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
 54. அன்புள்ள ஜெயா,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை முதல் ஆறு மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

  பிரியமுள்ள நட்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 55. ஏன் அவங்க மன நெல பாதிக்கப்பட்டாங்க. கததா ஆனா கூட படிக்கப்போ கஸ்டமா இருக்குது

  பதிலளிநீக்கு
 56. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 ஜூன் வரை, முதல் ஆறு மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  பதிலளிநீக்கு
 57. ஓ... பழைய காதலியை சம்மந்தி அம்மாவா ஆக்கிட்டாங்களா. நல்ல முடிவுதான். சொல்லிப்போன விதம் ரொம்ப நல்லா இருந்தது.

  பதிலளிநீக்கு
 58. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் முடிய, என்னால் முதல் 6 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 59. ஈ என்று எப்போதும் என்னிடம் இளித்து வந்த அந்த ஈரோட்டுக்காரியையும், மனநலம் குன்றிய நிலையில் உள்ள இந்த மதராஸ்காரியையும் மாறிமாறி நினைத்துக்கொண்டே, என் மனைவியைத் திரும்பிப்பார்த்தேன்.

  இந்த வயதிலும் அவள் மிகவும் அழகாக, லட்சணமாக, ஆரோக்கியமாக இருப்பதாகத் தோன்றியது. என் தாய் தந்தையர் பார்த்து, எனக்குப் பொருத்தமானவளாகத் தேர்ந்தெடுத்து, கட்டிவைத்து ஆசீர்வதிக்கப்பட்டவள் அல்லவா என் மனைவி என்று, என் பெற்றோர்களை நன்றியுடன் நினைத்துக்கொண்டேன். அப்பாடா என்ற ஒரு உணர்வு மிகவும் இதம்...இரு வேறு காதல்களின் இன்றைய இருவேறு நிலை...பாஸிடிவ் டச்சுடன் முடித்தது ரசிக்கத்தக்கது...

  பதிலளிநீக்கு
 60. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை, என்னால் முதல் 6 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 61. “அவளின் அம்மாவை ஏன் மறக்கணும்? அவர்களும் நன்றாக அழகாக இருந்தவர்கள் தானே ஒரு காலத்தில்! நடுவில் வந்துள்ள ஏதோ ஒரு சோதனை - கண் திருஷ்டிபோல இப்படி ஆகியுள்ளது - தகுந்த சிகிச்சை அளித்து வருவதால் கூடிய சீக்கரம் குணமாகி விடுவார்கள்” என்று அவனுக்கு சமாதானம் சொல்வதுபோல எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன்.//
  நெகிழ வைத்த முடிவு!

  பதிலளிநீக்கு
 62. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 ஜூன் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 6 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 63. உருக்கமான நிறைவு பகுதி.. நமக்கு மனதுக்கு நெருக்கமானவர்களை இதுபோல கஷ்டமான சூழ்நிலையில் பார்ப்பது மிகவும் வேதனையான விஷயம்..அந்த அம்மாவை காரணம் காட்டி பெண்ணை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய ஆறுதலான விஷயம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரத்தா, ஸபுரி... October 24, 2016 at 9:20 AM

   வாங்கோ, வணக்கம்.

   //உருக்கமான நிறைவு பகுதி.. நமக்கு மனதுக்கு நெருக்கமானவர்களை இதுபோல கஷ்டமான சூழ்நிலையில் பார்ப்பது மிகவும் வேதனையான விஷயம்.. அந்த அம்மாவை காரணம் காட்டி பெண்ணை வேண்டாம் என்று சொல்லாமல் ஏற்றுக்கொண்டது மிகப் பெரிய ஆறுதலான விஷயம்..//

   தங்களின் அன்பான வருகைக்கும், நிறைவான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   இதற்கு ஏனோ பதில் அளிக்க மறந்துள்ளேன். அதனால் மிகவும் தாமதமாகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்.

   நீக்கு
 64. Muthuswamy MN சிறு கதை அருமை. ஸ்டோரில் கிட்டத்தட்ட அநேக இளைஞர்களின் மனதை படம் எடுத்து காட்டுகிறது.👍👃✌

  - Facebook Comments from one Mr. Mohan on 26.11.2016 (He was my neighbour in that Store Life during 1965 to 1980)

  Ref: https://www.facebook.com/photo.php?fbid=10210062265747199&set=a.10203295333658126.1073741826.1653561109&type=3&comment_id=10210080820611059&reply_comment_id=10210122228686235&force_theater=true

  பதிலளிநீக்கு
 65. Mail message received today 31.03.2017 at 15.46 Hrs.
  =====================================================

  அன்பின் கோபு ஸார்,

  சில கதைகள் படிக்கும் போதே மறந்து போகும். சில கதைகள் படித்ததும் மறந்து போகும்.... சில கதைகள் மணிக்கணக்கில் மனத்துள் நிற்கும். சிலவை நாட்கள் ... வாரங்கள்.... மாதங்கள்... ஆண்டுகள்... என்று நீளும்.

  சில கதைகள் "மறக்க மனம் கூடுதில்லையே..."

  கூடவே பிரயாணம் செய்யும் மனத்துள் ஒரு ஓரத்தில்... ஒரு உண்மையை சொல்லிக் கொண்டே கற்றுத் தரும். இதோ..... மனம் மறக்காத பல கதைகளில் இதுவும் ஒன்றாகி..... என்ன சொல்வது.... எழுத்துக்கள் ஒன்றாகக் கூடி..... ஏதோ சத்திய பிரமாணம் செய்து கொண்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அருமையான சிந்தனை.... சூடான கும்பகோணம் டிகிரி காப்பி மாதிரி பிரமாதம்.....! அன்புடன்

  இப்படிக்குத் தங்கள் எழுத்துக்களின்
  பரம ரஸிகை

  பதிலளிநீக்கு
 66. இந்த மேற்படி கதைக்காக அறிவிக்கப்பட்டிருந்த ’சிறுகதை விமர்சனப்போட்டி’க்காகத் தான் 26.03.2014 அன்று அனுப்பிவைத்த விமர்சனத்தை, சரியாக 4 ஆண்டுகளும் 48 மணி நேரங்களும் கழித்து இன்று (28.03.2018) தன் வலைத்தளத்தினில் ஓர் தனிப்பதிவாக வெளியிட்டு மகிழ்ந்துள்ளார் ’எனது எண்ணங்கள்’ வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்கள்.

  அவரின் விமர்சனத்தைப்படிக்க இதோ இணைப்பு:
  http://tthamizhelango.blogspot.com/2018/03/vgk10.html

  இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு