நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !
[சிறுகதை - நிறைவுப் பகுதி 5 / 5]
By வை. கோபாலகிருஷ்ணன்
-oOo-
முன்கதை முடிந்த இடம்:
கெடிகாரத்தில் மணியைப் பார்த்தார் அரட்டையார். இரவு 8.45 ஆகி விட்டது தெரிந்தது. உடனே தனது அன்றைய ஆராய்ச்சிகளை அத்துடன் நிறுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் ஏற்கனவே இருந்தவாறு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, தானும் பாகவத உபன்யாசம் சொல்லும் இடத்திற்கு, உபன்யாசம் முடிவதற்குள் போய் ஓர் ஓரமாக அமர்ந்து விட்டார்.
===========================
அன்றுடன் ஒரு வாரம் முடிந்து பாகவத பாராயணமும் உபன்யாசமும் பூர்த்தியாகும் நாள். உபன்யாசம் செய்த பாகவதருக்கும் அவர் மனைவிக்கும் புதிய பட்டு வஸ்திரங்கள் [புத்தாடைகள்], ஒரு ஜோடி பருப்புத்தேங்காய், கூடை நிறைய பல்வேறு வகையான பழங்கள், பூமாலைகள், வித்வத் ஸம்பாவனையாக ரூபாய் பத்தாயிரத்து ஒன்று பணம் முதலியன நம் பெரியவர் அவர்களால் தனியாக ப்ரத்யேகமாக வழங்கி, பொன்னாடை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது.
பெரியவரின் பக்தி ஸ்ரத்தையையும், தாராள குணத்தையும் அந்த பாடசாலையில் உள்ளோர், முதியோர் இல்லத்தில் உள்ளோர், விழா ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்தக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் வியந்து பாராட்டினர்.
கடைசி நாளன்று பகலில் மூல பாராயணம் கேட்கவும், இரவில் பிரவசனம் [உபன்யாசம்] கேட்கவும் வந்திருந்த அனைவருக்கும் மிகவும் சிறப்பான விருந்தளிக்கவும் பெரியவரே பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். அப்பளம், வடை, ஜாங்கிரி, பால் பாயஸம் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது.
ஒரு சொம்பு நிறைய சூடான சுவையான பால் பாயஸத்தை எடுத்துக்கொண்டு பெரியவர் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்லலானார்.
அவரைத் தொடர்ந்து இரவு சாப்பாடு முடித்திருந்த வேறு சில பெரியவர்களும் முதியோர் இல்லத்துக்குப் புறப்படலாயினர். அரட்டை ராமசாமியின் கண்கள் மட்டும், பெரியவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை, அவருக்குத் தெரியாமல் உற்று நோக்கி ஃபாலோ செய்வதிலேயே குறியாயிருந்தன.
முதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்தப்பெரியவர் தன் பெட்டியைத் திறந்தார். தன் மனைவியின் அந்தப் பெரிய [லாமினேட் செய்த] புகைப்படத்தைத் தன் மடியில் ஒரு குழந்தை போல படுக்க வைத்துக்கொண்டார். அந்தப்படத்திலிருந்த அவள் வாயில் ஒவ்வொரு சொட்டாகப் பாயஸத்தை ஊற்றி, ”குடி .... குடி ...” என்று ஒருவித வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த அரட்டை ராமசாமி, இந்தக் காட்சியைக்கண்டு கண் கலங்கி, ஓர் ஓரமாக மறைவாக நின்று விட்டார். வயதான அந்தப் பெரியவரின் இந்தச்செயலை, [தன் அன்பு மனைவியை சென்ற வருடம் இழந்தவரான, அனுபவம் வாய்ந்த] ராமசாமியால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.
ஆஹா! எவ்வளவு ஒரு உத்தம தம்பதிகளாக வாழ்ந்து, நீண்ட காலம் மன ஒற்றுமையுடன், ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்புடன், பண்புடன், பாசத்துடன், நேசத்துடன் இவர்கள் இருவரும் இனிமையாக குடும்பம் நடத்தியிருக்க வேண்டும்! என நினைத்துக் கொண்டார்.
தன் மனைவிக்கு பாயஸம் ஊட்டி விட்டதாகவும், அவளும் அதை விரும்பி குடித்து விட்டதாகவும் திருப்தியடைந்த பெரியவர், மீதியிருந்த அந்த பாயஸத்தைத் தானே முழுவதும் குடித்து விட்டு, சற்று நேரம் காலை நீட்டிப் படுத்துக்கொண்டார்.
கண்களை மூடிக்கொண்டார். தன் மனைவி தன்னை அழைப்பதாக நினைத்துக்கொண்டார். பாகவத பாராயணம் கேட்டதால் பகவானிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார்.
அவர் உடல் தூக்கித்தூக்கிப் போட ஆரம்பித்தது. அரட்டை ராமசாமி அருகில் போனார். அவர் உடலைத் தொட்டுப்பார்த்தார். அது அனலாகக் கொதித்தது.
அரட்டை ராமசாமி உடனடியாக மருத்துவரை வரவழைத்தார். சோதித்துப் பார்த்த மருத்துவர் முதன் முறையாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் நல்லது என்றும் கூறிவிட்டார். அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஈ.ஸி.ஜி. எடுக்கப்பட்டது. சுலபமான சுவாஸத்திற்கு ஆக்ஸிஜன் குழாய்கள் அவரின் மூக்கினில் பொருத்தப்பட்டன.
அவருடைய மகன்களுக்கும், மகளுக்கும் அரட்டை ராமசாமியால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பெரியவர் எழுதி வைத்த உயில் அங்கிருந்த அனைவரும் கேட்கும் படியாக அரட்டை ராமசாமியால் உரக்க வாசிக்கப்பட்டது:
//சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்க இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதை கட்டுப்படுத்த மட்டுமே மருந்து, மாத்திரைகள், ஊசிகள் முதலியன தருகிறார்கள்.
சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார்.
பெரியவரின் டைரியில் இருந்த ஒருசில பகுதிகளும் அரட்டை ராமசாமி அவர்களால் படித்துக்காட்டப்பட்டது:
//என் அன்பு மனைவியின் கடைசி இறுதி நாட்கள் எண்ணப்பட்ட போது, ”இதே நிலைமை நீடித்தால் உங்கள் மனைவி இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் வாழமுடியும்" என்று டாக்டர் என்னிடம் சொல்லி விட்டுப் போனார்;
நானும் என் மனைவியும் முன்பே பேசி முடிவெடுத்திருந்தபடி, அவளுக்கு மிகவும் பிடித்தமான பால் பாயஸம், மாம்பழ ஜூஸ், தேங்காய் போளி, கப் ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் அவள் ஆசைதீர சாப்பிடவும், பருகவும், ருசிக்கவும் ரகஸியமாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்;
நான் அவளைப்போல, இதே நிலைமையில் படுத்திருந்தால், அவளும் எனக்கு இதுபோலவே தந்திருப்பாள். அதுதான் நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவு எடுத்து வைத்திருந்த விஷயம்;
அதாவது இறப்பதற்கு முன்பு நமக்கு பிரியமானவற்றை விரும்பி சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். அதில் எந்தக்குறையும் யாருக்கும் யாரும் வைக்கக்கூடாது என்பதே எங்கள் இருவரின் இரகசிய ஒப்பந்தம்;
இது விஷயத்தில் நான் எவ்வளவோ சர்வ ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் செயல்பட்டும், நான் பெற்ற பிள்ளைகளிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டேன்;
இவற்றையெல்லாம் சாப்பிடக்கொடுத்து, நானே என் மனைவியை கொன்று விட்டதாகக் கூறி, என் மீது கொலைப்பழி சுமத்தி, என்னை வீட்டிலிருந்து துரத்தி, இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டனர்;
ஆனால் என் மனைவிக்கு மிக நன்றாகத் தெரியும் நான் அவளை கொலை செய்யவில்லை என்று. மாறாக, கடைசியாக அவள் மிகவும் விரும்பிய பதார்த்தங்களைச் சாப்பிடச் செய்து, அவளை மிகவும் சந்தோஷமாக, என்னையும் இந்த உலகையும் விட்டு, மனநிறைவுடன் செல்லச்செய்தேன்;
நான் அவளை நல்லபடியாக கடைசிவரை வைத்துக் கொண்டேன்; அவள் விருப்பப்படியே கடைசியில் செய்து அவளை, நல்லபடியாகவே வழியனுப்பி வைத்து உதவினேன்;
இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் என் வாரிசுகளால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் தந்தையாகிய என்னைவிட, தாய் மேல் தான் பாசம் அதிகம்;
கருணைக்கொலை என்பார்களே, அது போலத்தான் என்னுடைய இந்தச் செயலும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இது நாங்கள் எங்களுக்குள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அன்றி வேறு எதுவும் இல்லை;
எங்கள் ஒப்பந்தப்படி அவளுடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன். அந்த ஒரு திருப்திக்காக நான் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்துத்தான், இந்த முதியோர் இல்லத்துக்கும் வந்து விட்டேன்;
”நீ முன்னாலே போனா ... நா .... பின்னாலே வாரேன்” என்ற சினிமாப் பாட்டுப்போல, அவள் இப்போது முன்னால் சென்றிருக்கிறாள்; நான் பின்னால் அவளைத் தொடரப்போகிறேன். //
அரட்டையார் பெரியவரின் டயரியைப் படித்து முடித்ததும், பெரியவர் தன் நெஞ்சைப் பிசைந்து கொண்டு துடிதுடித்தார். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்களைப் தானே தன் கைகளால் பிடுங்கி எறிந்தார். அவர் உயிர் அப்போதே பிரிந்து விட்டது.
”பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” என்று நாங்கள் அனைவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.
பெரியவரின் பிரிவினையே தாங்க இயலாத எங்களுக்கு, அவரின் பிரிவினால் மிகவும் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்ட அரட்டை ராமசாமி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக யாருடனும் எந்த அரட்டைப் பேச்சுக்களும் பேசாமல், மெளன விரதம் மேற்கொண்டிருந்தது, எங்களையெல்லாம் மிகவும் வருந்தச் செய்து விட்டது.

-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-