About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Thursday, October 27, 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 1/5]

நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 1/5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-

அந்த முதியோர் இல்லத்தின் வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. சுமார் எண்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர் ஒருவர் இறங்கி வந்தார். புதிய அட்மிஷன் போலிருக்கு என்று ஏற்கனவே அங்கு தங்கியுள்ள பெரிசுகளாகிய நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

சுமார் ஐம்பது வயதில், அவருடன் கூட வந்த நபர், கையில் பெட்டி படுக்கையுடன், அலுவலகத்திற்குள் சென்று, சம்ப்ரதாயங்களை முடித்து விட்டு, பெரியவரைப் பழி வாங்கி விட்டது போல, ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, சட்டெனக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல எத்தனிக்கிறார்.

நிச்சயமாக பெரியவரின் மகனாகத்தான் இருக்க வேண்டும். காரில் ஏறிச் செல்லப்போகும் மகனிடம் ஏதோ சொல்லப் பெரியவர் முயற்சிப்பது போலத் தோன்றியது.  தன் மகனை “ஜாக்கிரதையாகப் போயிட்டு வாப்பா” என்று சொல்லத்தான் நினைத்திருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது.


“போய்விட்டு வருகிறேன்” என்று கூட தன் தந்தையிடம் சொல்லிக்கொள்ளாத மகனிடம் என்ன பேச்சு என்ற வருத்தத்தில் அவருக்குக் குரலும் வெளிவரவில்லை என எங்களுக்குத் தோன்றியது.


பெரியவர் நல்ல உயரம். சிவந்த நிறம். நெற்றியில் விபூதிப்பட்டை, கழுத்தில் ருத்ராக்ஷக்கொட்டை, படித்தவராகவும், பழுத்த அனுபவம் கொண்டவராகவும், ஓரளவு தன் வேலையைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலைமையில் தேக ஆரோக்கியம் கொண்டவராகவும் தோன்றினார். 


வழக்கம்போல் எங்களில் ஒருவரான அரட்டை ராமசாமி [அரட்டை அரங்கத்தில் பங்கேற்கப்போய் தேர்வு ஆகாமல் திரும்பியதால் இந்தப்பெயர் பெற்றவர்] பெரியவரை கைகுலுக்கி வரவேற்றார். 


அவர் தங்க வேண்டிய பகுதியையும், சாப்பாட்டு இடம், கழிவறைகள் போன்ற மற்ற இடங்களையும் அவருக்குச் சுற்றிக் காண்பித்தார். அந்த முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மற்ற பெரியவர்களையும் அறிமுகப்படுத்தினார். பிறகு பிரார்த்தனைகள் நடைபெறும் அந்தப்பெரிய ஹாலில் உள்ள நாற்காலி ஒன்றில் அமரச்செய்தார். குடிக்க ஒரு டம்ளர் குடிநீர் கொடுத்து உபசரித்தார். 


பெரியவரைப் பற்றிய கதையைக்கேட்க அங்குள்ள அனைவரும் தங்கள் காதைத் தீட்டிக்கொண்டனர். ஒரு சிலர் தங்களின் காது மிஷினை சரிவரப் பொருத்திக் கொண்டனர். 


அரட்டை ராமசாமி பெரியவரை பேட்டி எடுக்க ஆரம்பித்தார்.


“பூர்வீகம் எந்த ஊரு?”


“தஞ்சாவூர்ப் பக்கம் அய்யம்பேட்டை”


“எவ்வளவு குழந்தைகள்?”


“இரண்டு பையன்களும் ஒரு பொண்ணும்”


“பேரன் பேத்தி எடுத்தாச்சா?”


“ஆஹா; ஆளுக்கு ஒரு பொண்ணு, ஒரு பிள்ளை; மூத்தவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆயிடுச்சு”


“உங்கள் சம்சாரம்?”


”அவள் போய்ச்சேர்ந்து இன்னியோட பதினைந்து நாள் ஆகிறது”


“மனைவி இறந்து போய் பதினைந்தே நாட்களில், உங்களைப் போய் இங்கு கொண்டு வந்து ..........” அரட்டை ராமசாமி சற்றே இழுத்தார்.


“என் சம்சாரத்தை நானே கொன்று விட்டதாக, என் மேல் ஒரு குற்றச்சாட்டு” பெரியவரின் கண்கள் கலங்கின.


“வருத்தப்படாதீங்கோ; மீதி சமாசாரங்களை நாளைக்கு சாவகாசமாகப் பேசிக்கொள்ளலாம். இப்போது சற்று ஓய்வாகப் படுத்துக்கோங்கோ” அரட்டை ராமசாமி அவரை ஆசுவாசப்படுத்தினார்.


தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.


தொடரும்

40 comments:

 1. தன் மகனை “ஜாக்கிரதையாகப் போயிட்டு வாப்பா” என்று சொல்லத்தான் நினைத்திருப்பார் என்று எங்களுக்குத் தோன்றியது./

  TRUE....

  ReplyDelete
 2. //தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.//
  Engal nilaiyum athu thaan!

  ReplyDelete
 3. நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் !/

  very nice Title..

  ReplyDelete
 4. “என் சம்சாரத்தை நானே கொன்று விட்டதாக, என் மேல் ஒரு குற்றச்சாட்டு” பெரியவரின் கண்கள் கலங்கின.
  அரட்டை ராமசாமி அவரை ஆசுவாசப்படுத்தினார்.

  so sad...

  ReplyDelete
 5. தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்./

  We also suspense..

  ReplyDelete
 6. //தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.//

  நாங்களும் தான்.

  அசத்தலான ஆரம்பம்.அடுத்த பகுதிகளை உடனடியாக படிக்க வேண்டும் என ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கு.

  ReplyDelete
 7. முதல் பாராவே அட்டகாசம். உங்களையும் ஒருவராக கதையின் உள் நுழைத்துக் கொண்டது வாகா கதையை சுவாரஸ்யத்துடன் சொல்ல கிடைத்த வாய்ப்பாகி விட்டது. அங்கங்கே உங்களுக்கு கைவந்த நகாசிட்ட 'நறுக்' கலகல. கதைக்கு மிகப் பொருத்தமான தலைப்பைத் தேர்ந்திருக்கிறீர்கள் என்றும் யூகிக்க முடிந்தது. தொடருங்கள்; தொடர்கிறோம்.

  ReplyDelete
 8. //பெரியவரைப் பழி வாங்கி விட்டது போல, ஒரு ஏளனப்பார்வை பார்த்து விட்டு, சட்டெனக் காரில் ஏறி புறப்பட்டுச் செல்ல எத்தனிக்கிறார்.//
  ஒவ்வொரு வரியும் அழ வைத்தது .
  தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

  ReplyDelete
 9. [அரட்டை அரங்கத்தில் பங்கேற்கப்போய் தேர்வு ஆகாமல் திரும்பியதால் இந்தப்பெயர் பெற்றவர்] //

  நானும் ஷேக்ஸ்பியர் அங்கிள் மற்றும் ஜீசஸ் அங்கிள் என்று இருவரை
  சந்தித்திருக்கிறேன்/முன்னவர் ஆங்கிலத்தில் உரையாடுவதாலும் பின்னவர் எப்பவும் ஜீசஸ் பற்றி பேசுவதாலும் இந்த பட்ட பெயர்களாம் .

  ReplyDelete
 10. தலைப்பும் அருமை.கதியின் கருவும் அருமை.நடையும் அருமை.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. நியூ அட்மிஷனை வரவேற்கும் ஓல்ட் வாசிகளும், கிட்டத்தட்ட ராகிங் போல ஆனால் கதை அறியும் ஆவலிலும், ஆறுதல் படுத்தும் முயற்சியிலும் ஆரம்பிப்பதும் ஜோர்.

  ReplyDelete
 12. கதைக் களம் வித்தியாசமானது
  துவங்கியுள்ள விதமும் அருமை
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம 3

  ReplyDelete
 13. நல்ல கதை. கதைக்களன் - முதியோர் இல்லம்.... ம்ம்ம்... ரொம்பவே பெருகிவிட்டன இவை...

  கதையின் மற்ற பகுதிகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 14. You bring out the characters so well that one feels it is a real story, not a fiction. In fact, we need to have more info on old age homes and how they are run. Mixed stories are told about these homes.

  ReplyDelete
 15. ////தொலைகாட்சி மெகா தொடரில், முக்கியமான சுவாரஸ்யமான கட்டத்தில் “விளம்பரம்” அல்லது ”தொடரும்” போடுவது போல, பெரியவரின் முழுக்கதையையும் அறிந்து கொள்ள முடியாத வருத்தத்தில், நாங்கள் அனைவரும் கலைந்து சென்றோம்.


  தொடரும்/////

  ஹா.ஹா.ஹா.ஹா..நீங்களும் அப்படியே தொடரும் போட்டு விட்டீர்கள்

  பல விடயங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள்...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்

  ReplyDelete
 16. எல்லாரையும் தொடர வைப்பதற்காகவே கொக்கி போட்டு நிறுத்தும் சாமர்த்தியம் இயல்பாகவே உங்களிடம் ஜாஸ்தி வை.கோ.சார்.

  இன்னும் நாலு பார்ட்ல என்ன கலக்குக் கலக்கப் போறீங்களோ புரியல சார்.

  ReplyDelete
 17. அருமையாக தொடங்கி உள்ளது, முடிவு பகுதிக்கு இன்றிலிருந்து காத்திருக்கிறேன்

  ReplyDelete
 18. வழக்கம்போல் அருமையாய்த்தான் இருக்கும் என்னும் நம்பிக்கையில் படிக்கத் துவங்கி விட்டென். தொடருவேன்.

  ReplyDelete
 19. முதல் பகுதிக்கு வந்தாச்சு... அடுத்தும் வரேன்...

  ReplyDelete
 20. தொடக்கம் ஜெட் வேகம்!

  ReplyDelete
 21. ஆரம்பம் லகான் போட்டு இழுத்து விட்டது கதைக்குள்.

  ReplyDelete
 22. அருமையான தொடக்கம் அய்யா, மீண்டும் படம் இல்லாத கதை. உங்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் வடிவம் தெரிவதால் வித்திஒயாசம் தெரியவில்லை.

  ReplyDelete
 23. முக்கியமான கட்டத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே..

  ReplyDelete
 24. நல்ல ஆரம்பம், மனசுக்குள் மத்தாப்பு போலவே இதுவும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம் தொடரட்டும் உங்கள் தொடர்கதைகள்!

  ReplyDelete
 25. ஸ்கூல், காலேஜ்ல முதல் நாள் போற புது குழந்தைகள் நிறைய ஆசைகள், ஆச்சர்யங்கள் அப்படின்னு தேக்கிண்டு போகும். உள்ள போறதுக்கு முன்னாடியே பிரஹஸ்பதிகள் நின்னுண்டு ராகிங் செய்ய ஆரம்பிக்கும். பேக்குகள் எல்லாம் முழி பிதுங்கி மாட்டிண்டு அவஸ்தைப்படும்… ஆனா முதியோர் இல்லம் என்றால் ராகிங் நடக்காது.. ஆனால் ஆவல் இருக்கும்…. யார் வந்திருக்கா நம்ம இடத்துக்கு அப்டின்னு அறிய….

  உங்க கதை படிக்க ஆரம்பிக்கும்போதே மனசை என்னவோ பண்றது கோபாலகிருஷ்ணன் சார்… புது அட்மிஷன்னதும் அங்கயே தங்கி இருப்போர் எல்லாம் வந்து யாரு புதுசா விரட்டப்பட்டு புகலிடம் தேடி வந்த குழந்தை அப்டின்னு பார்க்க வந்திருக்கும்.. முதியோரை குழந்தேள்னு சொல்றேன்னு பார்க்கிறீங்களா சார்? கதை படிக்கும்போது அப்படி தான் நினைக்கமுடிகிறது…
  ஸ்கூல், காலேஜ் அப்டின்னா புதுவரவுகளை ஆசையோடு அழைப்பது போல இங்க முதியோர் இல்லத்துல ஆதரவோடு கைநீட்டி அரவணைப்பதை அறியமுடிந்தது உங்கள் எழுத்துகளில்.....

  அங்கு இருப்போர் எல்லோரிடமும் பேச ஆரம்பித்தால் ஆளாளுக்கு ஒரு சோகக்கதை கண்டிப்பா இருக்கும்.... நெஞ்சை வெட்டும் வேதனைகளும் தீராத ரணங்களும் அதை சொல்லி ஆற்றிக்கொள்ள துடிக்கும் மனமுமாக தான் திரிந்துக்கொண்டிருப்பர்....
  வயதான காலத்தில் பெற்றோர் ரொம்ப ஆசைப்படுவது ரெண்டு விஷயங்கள்.... ஒன்று நாவுக்கு ருசியான உணவு, இரண்டு தன்னோடு தன் மகன் மகள் மருமகள் பேரன் பேத்திகள்னு உட்கார்ந்து மணிக்கணக்கா பேசமுடியலன்னாலும் அட்லீஸ்ட் தினமும் கொஞ்ச நேரம் இவங்களோடு உட்கார்ந்து பேசனும்னு ரொம்ப எதிர்ப்பார்ப்பாங்க....

  ஆனால் இந்த இயந்திர உலகில் அதுக்கெல்லாம் சமயம் இருக்கிறதா என்ன?? கணவன் மனைவி இருவருமே அரக்க பறக்க காலையில் வெந்து வேகாமல் வாயில் கொட்டிக்கொண்டு முகத்தில் அடிக்கும் பவுடர் வியர்வையில் திட்டு திட்டாக ஒட்டிக்கொண்டு பிள்ளைகளை கொண்டு ஸ்கூலில் தள்ளிவிட்டு ஓடுவார்கள்.... மாலை வந்துவிட்டாலோ டிவி, டிவி, டிவி, டிவி.... எங்கிருந்து மூத்தோரிடம் உட்கார்ந்து பேச சமயம் கிடைக்கப்போறது??

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ, திருமதி மஞ்சுபாக்ஷிணி மேடம்,

   வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும், அழகான மிக நீ...ண்...ட... கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   தாங்கள் வந்து கருத்தளித்தால் நான் என் மனம் நிறைவாக உள்ளது.

   ஆனால் சிலசமய்ங்களில் கதையைவிட தாங்கள் அளிக்கும் கருத்துரை மிகப்பெரியதாக இருப்பதுபோல வேறு சிலர் கருதக்கூடும். ஆனால் நான் அப்படி நினைப்பது இல்லை.

   நான் இது போன்ற மனம் திறந்து கூறும் கருத்துக்களை மிகவும் விரும்புபவன் + ரஸிப்பவன்.

   மேலும் நானும் உங்களைப்போலவே தான் ..... எனக்கு மிகவும் மனதுக்குப்பிடித்துப்போய் விட்டால் பக்கம் பக்கமாக பின்னூட்டம் எழுதவும் தயங்கவே மாட்டேன்.

   தொடரும்...... அன்புடன் vgk

   Delete
 26. அந்த காலத்தில் மூத்தோரை மதித்தனர்... அவர்கள் சொல்படி கேட்டு நடந்தனர்... இப்ப இருக்கும் ஜெனரேஷன் கிட்ட இதெல்லாம் எதிர்ப்பார்க்கவே முடியறதில்ல.. சுயநலமும் இதில் அடக்கம்...

  இடைச்செருகலாய் அரட்டை ராமசாமி அடைப்பெயர் காரணம் அறிந்தேன்.. சூப்பர்... இப்படி கதையில் குட்டி குட்டி விஷயங்கள் க்ரியேட்டிவாக இருக்கிறது...

  அவரைப்பற்றிய விவரம் படித்துக்கொண்டே வந்தபோது திடுக்.... ” மனைவியை கொன்றுவிட்டேனாம் “ அவர் கண்கலங்கி சொல்றார்னா அதில் இருக்கும் உண்மையைக்கூடவா பிள்ளையால புரிஞ்சுக்க முடியல?? எது தடுக்குது பிள்ளையை??

  ஹூம் இத்தனை வருடம் கழிந்தாயிற்று.... பேரன் பேத்திகள் எடுத்தாயிற்று... முதுமையில் வரும் காதலும் அன்பும் அன்னியோன்யமும் பார்த்தாலே திருஷ்டி பட்டுவிடும்... அத்தனை அழகாக இருக்கும் வயதானவர்கள் உட்கார்ந்து பேசுவதை பார்க்கும்போது....

  அம்மாவை அப்பா கொன்னுட்டார்னு பிள்ளை அப்பாவை கொண்டு வந்து முதியோர் இல்லத்துல வீசிட்டு போயிடுத்தே.. அந்த பிள்ளை ஜனிக்க இந்த அப்பா தானே காரணம்? வளர்த்து ஆளாக்கினதும் இதே அப்பா தானே?? சரி சரி நானே ஏன் தலைய பிச்சுக்கணும்... அடுத்த பாகம் படித்தால் தான் சஸ்பென்ஸ் என்னவென்று புரியும்....

  முதல் பாகத்திலேயே சஸ்பென்ஸ் வெச்சுட்டீங்க முதியவர்களின் நிலையை, அவர்கள் எண்ணக்கிடக்கை, அவர் ஆற்றாமை, அவர்களின் உணர்வுகள் எல்லாமே இந்த கதையில் அறிய முடியும்னு தோன்றது எனக்கு....

  சூப்பர் உவமை... மெகா தொடர் காட்சில தொடரும் போட்டது போல.....ரசித்தேன்...

  கதை தலைப்பு பிரமாதம்.... நான் அறிந்த வரையில் நீ முன்னால போ.....உன்னை நான் கொன்னுட்டேன்னு நம் பிள்ளை என் மனதைக்கொன்று இங்கே விட்டுட்டு போயிட்டான் திரும்பி கூட பார்க்காம.... நானும் பின்னாலேயே வந்துடறேன்.... அப்டி தானே ??

  தெளிவான கதை நீரோட்டம்.... அடுத்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....

  அன்பு நன்றிகள் வை.கோபாலகிருஷ்ணன் சார் பகிர்வுக்கு...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ வாங்கோ, திருமதி மஞ்சுபாக்ஷிணி மேடம்,

   வணக்கம். தங்களின் அன்பான மீண்டும் வருகைக்கும், அழகான மிக நீ...ண்...ட... மீண்டும் கருத்துரைக்கும்
   என் மனமார்ந்த நன்றிகள்.

   ஆஹா! எவ்வளவு அழகாக ஒவ்வொரு நிக்ழ்வுகளை ரஸித்து ருசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.

   நான் இது போன்ற மனம் திறந்து கூறும் கருத்துக்களை மிகவும் விரும்புபவன் + ரஸிப்பவன்.

   ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது. நன்றியோ நன்றிகள், மேடம்.

   தொடந்து படியுங்கோ ......

   அன்புடன் vgk

   Delete
 27. உண்மையே சார்.. அத்தனை தத்ரூபமாக இருக்கிறது தங்களின் எழுத்துகள்.....

  ReplyDelete
 28. என்ன, ஒரே டெம்ப்ளேட் கமென்ட்டா போட்டிருக்கேன்?

  ReplyDelete
 29. நல்ல விறுவிறுப்பான ஆரம்பம். தொடரட்டும் இந்த விறுவிறுப்பு.

  ReplyDelete
 30. முதியொர் இல்ல நடைமுறைகளை நேரிலேயே பார்ப்பது போல உணர்ந்து எழுதி இருக்கீங்க.

  ReplyDelete
  Replies
  1. பூந்தளிர் May 19, 2015 at 6:05 PM

   வாங்கோ, வணக்கம்.

   //முதியோர் இல்ல நடைமுறைகளை நேரிலேயே பார்ப்பது போல உணர்ந்து எழுதி இருக்கீங்க.//

   மிகவும் சந்தோஷம் + மிக்க நன்றி, சிவகாமி.

   Delete
 31. அவங்க மட்டும்தானா. நாங்களும்தான். கதை ரொம்ப சுவாரசியமா போறது. அடுத்த பகுதிக்குப் போறேன்.

  ReplyDelete
 32. முதியோர் இல்லத்துலலாம பேச்சுதொணக்கு வயசாளிங்க கெடப்பாங்கதானே. நேரா நேரத்துக்கு சோறம் கெடச்சிபோடும். வேர சிந்தனக இல்லாம இருக்கலாமுல்ல. ஆனாக்க வீட்ட சொந்த பந்தத்த பிரிஞ்சிருப்பது மனசுக்கு கஸ்டமாதா இருக்கும் .

  ReplyDelete
 33. முதியோர் இல்லத்தில் சேருபவர்களுக்குள்ள நடைமுறைகள் சேர வருவரின் மனநிலை அங்கிருப்பவர்கள் வருபவரை அன்பாய் வரவேற்பத் என்றை எல்லாமே சிறப்பாக சொல்லப்பட்டிருக்கு.

  ReplyDelete
 34. // நீ முன்னாலே போனா ......
  நா ... பின்னாலே வாரேன்//
  பழைய தமிழ் கானா பாடலுக்கு கான்ட்ராஸ்டா ஒரு தலைப்பு அதுக்கு ஏத்தாப்புல ஒரு துவக்கம்...ஆஹா...

  ReplyDelete
 35. முதியோர் இல்லம் கண்முன் நிற்க முக்கிய கட்டத்தில் தொடரும் எனப் போட்டுவிட்டீர்களே!

  ReplyDelete