என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

திங்கள், 10 அக்டோபர், 2011

பி ர மோ ஷ ன்

பிரமோஷன்

சிறுகதை

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOO-


பஞ்சாமிக்கு காது அவ்வளவாகக் கேட்காது. அதனால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தும் சென்ற ஆண்டு கிடைக்க வேண்டிய பிரமோஷன் நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டாவது கிடைக்குமா என்பது இன்று அலுவலகம் போய் வந்தால் எப்படியும் தெரிந்துவிடும்.”இந்த வருஷம் எப்படியும் கட்டாயம் கிடைத்து விடும்” என்று மேனேஜரின் மனைவி சென்ற வெள்ளிக்கிழமை, கோயிலில் பார்த்தபோது சொன்னது சற்றே ஆறுதல் அளிப்பதாக இருந்தது, பஞ்சாமியின் மனைவி அபிராமிக்கு.தன் கணவர் வரவை பால்கனியிலிருந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அபிராமி. சூடான சேமியா பாயஸம் ஏலம் முந்திரி மணத்துடன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்தது. பஞ்சாமி வழக்கத்திற்கு மாறாக மிகவும் அவசரம் அவசரமாக ஓடி வருவதிலிருந்தே அபிராமிக்கு விஷயம் புரிந்து விட்டது. மகிழ்ச்சியுடன் பாயஸத்தைக் கிளறப்போனாள்.வேகமாக உள்ளே வந்த பஞ்சாமி வழக்கம்போல் பாத் ரூமுக்குச் சென்றார். கை, கால், முகம் கழுவிவிட்டு வரட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தாள் அபிராமி. பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தவரிடம் “பிரமோஷன் ஆச்சா?” என்று கேட்டாள்.முகம் முழுவதும் சிரிப்புடன், ஒருவித பூரிப்புடன் தலையை ஆட்டினார் பஞ்சாமி.சூடான பாயஸத்தை ஆற்றியபடி நீட்டினாள், தன் அன்புக்கணவர் பஞ்சாமிக்கு. “என்ன விசேஷம்; எதற்குப் பாயஸமெல்லாம்” என்று கேட்டார், பஞ்சாமி.


“பிரமோஷன் ஆச்சா? என்று கேட்டதற்கு பலமாகத் தலையை ஆட்டினீர்களே! அதற்குத்தான் என்றாள் அபிராமி சற்று உரத்த குரலில்.

...........
.......................
.................................
............................................
............................................................
.......................................................................
......................................................................................


”இரண்டு நாட்களாகவே மலச்சிக்கலுடன் அவதிப்படுகிறேனே! மோஷன் ஆச்சா என்று கேட்டாயாக்கும் என்றல்லவா நினைத்தேன்” என்றார் மிகவும் அப்பாவியாக, இந்த முறையும் பிரமோஷன் கிடைக்காத பஞ்சாமி.
இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது. 


-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-


47 கருத்துகள்:

 1. நல்ல "பஞ்ச்". குமுதத்தில் வரும் ஒரு பக்க கதை போல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. முத‌லில் சிரித்து விட்டேன். பிற‌கு ஐயோ பாவ‌ம் என‌ அவ‌ருக்காக‌ அனுதாப‌ம் எழுந்த‌து.

  பதிலளிநீக்கு
 3. சிரிச்சு சிரிச்சு எழுத்து தப்பா தட்டிட்டேன், திருத்திப் படிக்கவும். ;))))

  பதிலளிநீக்கு
 4. நச் சுனுனு இருக்கு
  புரமோஷன் மோஷன் என்கிற வார்த்தையை
  வைத்துக்கொண்டு மிக அழகாக ஒரு கதையை
  உங்களால் மட்டும்தான் இத்தனை சிறப்பாகச் சொல்ல
  முடியும் அருமை அருமை

  பதிலளிநீக்கு
 5. பஞ்சாமியை நினைத்து பாவமாய் இருந்தது. அதிகாரிகளை நினைத்து கோவமாய் வந்தது. காதுக் குறை மெஷின் வைத்து சரி செய்து கொள்ளக் கூடியது என்று அவருக்குப் புரிய வைத்து, முடிந்தால் ஒரு மெஷின் வாங்கிக் கொடுத்துக் கூட, ப்ரமோஷன் கொடுத்திருக்க வேணாமோ...

  பதிலளிநீக்கு
 6. :-)
  பஞ்சாமி என்று பெயர் கொண்ட ஆசாமியைக் கதைகளில் படித்திருக்கிறேனே தவிர, இதுவரை நேரில் சந்தித்ததில்லை. நீங்கள் சந்தித்திருக்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 7. இனிய காலை வணக்கம் ஐயா,
  நல்லதோர் கவிதை.
  கொஞ்சம் எள்ளலும் கலந்து தந்திருக்கிறீங்க.

  லூஸ்மோசனால் பிரமோசன் கிடைக்கவில்லையா..
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  பதிலளிநீக்கு
 8. பாவம் பஞ்சாமி! அவர் அவஸ்தை அவருக்கு! :-)))

  பதிலளிநீக்கு
 9. அந்த நேரத்தில் அவருக்கு பிரமோஷனை விட இந்த பிரச்சனைத் தீர்ந்தது சந்தோஷம் அளித்திருக்கும்...

  பதிலளிநீக்கு
 10. ///இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது.//
  எங்களுக்கும் புரிந்தது.பாவம் பஞ்சாமி.

  சின்ன விஷயத்தை எடுத்து அழகான கதையாக கொடுத்துடீங்க. ரொம்ப நன்னாயிருக்கு.

  பதிலளிநீக்கு
 11. எழுதுவோர் எழுதினால்
  எதுவும் கதையாகும் என்பதற்கு
  இது ஒரு எடுத்துக்காட்டு
  வாழ்த்துக்கள் வை .கோ

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 12. நல்ல நகைசுவை கதை நீண்ட நாட்களுக்கும் அப்புறம் நல்ல கதையை படித்த திருப்தி

  பதிலளிநீக்கு
 13. நக்க நகைச்சுவையாக சொல்லி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 14. 'நச்'சென்று நகைச்சுவையாய் ஒரு சிறு கதை!

  பதிலளிநீக்கு
 15. சார் சிரித்து முடியலே சார்.ஐயோ..எப்படி எல்லாம் யோசித்து கதை எழுதுறீங்க.பிரமாதம்!பஞ்சாமி பெயரைக்கூட என்ன பொருத்தமாக தேர்ந்தெடுத்துப்போட்டு இருக்கீங்க.சூப்பர்!

  அப்புறம் முக்கியமாக ஒண்ணு.நீங்கள் கதையை டைப் செய்து ஸ்பேஸ் அதிகளவில் விடுவது மிகவும் அழகாக ரசனையாக உள்ளது.உங்கள் பிளாக்கை ஓப்பன் செய்தாலே யாரும் படித்து முடிக்காமல் க்ளோஸ் செய்ய மாட்டார்கள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. அன்பின் VGK - நல்ல நகைச்சுவை நிறைந்த கதை - நன்று - அவருக்கு காது கேட்காதென்பது தான் பத்வி உயர்விற்குத் தடையாக இருந்ததா என்ன ? ம்ம்ம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 17. பஞ்சாமி நல்ல படைப்பு நகைசுவையும் நல்ல கதையோட்டமும் இருந்தது பாராட்டுகள் .

  பதிலளிநீக்கு
 18. மேனேஜர் மனைவி சொன்னது இவருக்கு சரியாகக் காதில் விழவில்லையோ.?நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. கொஞ்சம் சிரிக்க தோனினாலும் கணவன் ரெண்டு பேரின் நிலமையும் பாவமாவும் இருக்கு.

  பதிலளிநீக்கு
 20. ஏதோ சீரியஸ் காரணம் இருக்கும் என நினைத்தேன்... கடைசியில் ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
 21. ''எழுதுவோர் எழுதினால்
  எதுவும் கதையாகும் என்பதற்கு
  இது ஒரு எடுத்துக்காட்டு''
  நிச்சயமாக

  பதிலளிநீக்கு
 22. இப்பவும் பி ர மோ ஷ ன் கிடைக்கலியே. பாவம் பஞ்சமி!

  பதிலளிநீக்கு
 23. பஞ்சாமிக்கு காது அவ்வளவாகக் கேட்காது.

  “பிரமோஷன் ஆச்சா?
  மோஷன் ஆச்சே!!

  காது காது என்றால் லேது லேதா??

  பதிலளிநீக்கு
 24. சூடான பாயஸத்தை ஆற்றியபடி நீட்டினாள், தன் அன்புக்கணவர் பஞ்சாமிக்கு.

  இன்று கதை படித்தவர்களுக்கும் அருமையான பாயசம்!

  பதிலளிநீக்கு
 25. பாவம் பஞ்சாமியும் அவர் மனைவியும்..

  பதிலளிநீக்கு
 26. பாவம் பஞ்சாமி.... சிரிச்சு முடியலைங்க :-))))))))

  பதிலளிநீக்கு
 27. விழுந்து விழுந்து சிரித்தேன் சார்.பகிர்விற்கு ரொம்ப்ப நன்றி :-))

  பதிலளிநீக்கு
 28. சூபர் காமெடி!

  பதிலளிநீக்கு
 29. இந்த என் நகைச்சுவை சிறுகதைக்கு அன்புடன் வருகை தந்து, தாங்கள் சிரித்து மகிழ்ந்ததை அரிய பெரிய கருத்துக்களால் எடுத்துக்கூறி, என்னையும் சிரிக்க வைத்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

  என்றும் சிரிப்புடனும் அன்புடனும் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 30. ;-))))))))
  பாவம் சார் பஞ்சாமி, மாமியும் தான்.

  பதிலளிநீக்கு
 31. Ms. PATTU Madam,

  தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

  [ பஞ்சாமி+மாமி இருவர் மீதும் இரக்கம் கொண்ட தங்களின் ’பட்டு’ப் போன்ற மென்மையான மனதுக்கு ஓர் சலாம்! vgk ]

  பதிலளிநீக்கு
 32. ஐயோ பாவம் பஞ்சாமி...அதைவிட பாவம் அவர் பக்கத்தில் இருக்கும் மாமி... நான் ரொம்ப சிரித்த கதை .... ஒரு வார்த்தையை வைத்தே இவ்வளவு அழகான சிரிப்பு+சிந்திக்கி வைக்கும் கதையை உங்களால் மட்டும் தான் ஐயா கொடுக்கமுடியும் .... அருமை ஐயா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், சிரித்து மகிழ்ந்து மனதார பாராட்டியுள்ளதற்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

   பஞ்சாமி மீதும் அவங்க வீட்டு மாமி மீதும் இரக்கப்பட்டு பாவம் என்று தாங்கள் பகிர்ந்துள்ளது, தங்களின் ஈரமான மனதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது, Ms. VijiParthiban, Madam.

   அன்புடன vgk

   நீக்கு
 33. காது கேக்காதவங்களுக்கு தானே அவங்க அவஸ்தை தெரியும்

  பதிலளிநீக்கு
 34. பூந்தளிர் May 19, 2015 at 10:35 AM

  //காது கேக்காதவங்களுக்கு தானே அவங்க அவஸ்தை தெரியும்//

  கரெக்டூஊஊஊஊஊ. அவங்களை விட அவர்களிடம் பேசுபவர்களுக்கு இன்னும் அவஸ்தையல்லவோ, சிவகாமி :)

  பதிலளிநீக்கு
 35. //இவருக்கு பிரமோஷன் கிடைக்காததற்கான உண்மைக் காரணம் அபிராமிக்கும் இப்போது நன்கு புரிந்து போனது. //

  பஞ்சாமி பாவமோ இல்லையோ, அபிராமி ரொம்ப பாவம். ஆனா தைரியமா ஆத்துக்காரரை திட்டலாம். நம்மால முடியாதத மத்தவங்க செஞ்சா மகிழ்ச்சி தானே.

  பதிலளிநீக்கு
 36. மின்னஞ்சல் மூலம் எனக்கு இன்று (20/21.07.2015) கிடைத்துள்ள, ஓர் ரசிகையின் பின்னூட்டம்:

  -=-=-=-=-=-=-

  பிரமோஷன் கதை..... சிரிப்பு வந்தது..... ம்ம்.. சிரித்துக் கொண்டே படுக்கப் போகிறேன். குட்டியூண்டு கதை தான் . மூர்த்தி... சிறிது தான்....

  -=-=-=-=-=-=-

  இப்படிக்கு,
  தங்கள் எழுத்துக்களின் பரம ரசிகை.

  பதிலளிநீக்கு
 37. இந்த கத தனியா படிச்சுபோட்டு அம்மிக்கு சிரிப்பாணி பொத்துகிச்சு வெளிக்கிருக்கலனா கஸ்டம்லா.

  பதிலளிநீக்கு
 38. மூர்த்தி சிறிதுதான். எபக்ட் அதிகம். பிரமோஷன் மோஷனாயிடுத்தே. காது கேட்பதில் குறைபாடுள்ளவர்களின் நிலமை பரிதாபம்தான்.

  பதிலளிநீக்கு
 39. கொஞ்சம் கெட்டிகா செப்பண்டி...அவரோட கஷ்டம் அவருக்குதான் தெரியும்...இங்கும் ஒரு அப்பிராணி பஞ்சாமியா...

  பதிலளிநீக்கு