என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

சனி, 22 அக்டோபர், 2011

மனசுக்குள் மத்தாப்பூ [பகுதி 2 of 4]மனசுக்குள் மத்தாப்பூ

சிறுகதை [ பகுதி 2 of 4 ]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-
பகுதி 1 of 4 படிக்க:  http://gopu1949.blogspot.com/2011/10/1-of-4.html


முன் கதை முடிந்த இடம்:


“ஆ ... ஆ ... அய்யோ, அம்மா! ரொம்ப பளிச்சு பளிச்சுன்னு வலிக்குதுங்க; அடிவயிற்றைச் சுருக்கு சுருக்குன்னு குத்துதுங்க; எழுந்து ஓடிப்போய் கீழ்வீட்டிலுள்ள என் அம்மாவை இங்கே அனுப்பிட்டு, நீங்க போய் டாக்ஸி பிடிச்சுட்டு வந்திடுங்க, ஆஸ்பத்தரியிலே அட்மிட் செய்துடுங்க” அனு பெரிதாக அலற ஆரம்பித்தாள். 
அனு அலறிய அலறலில், அவளை ஆலிங்கனம் செய்து கொண்டிருந்த தன் கைகளை விலக்கிக்கொண்டு விட்டான் மனோ. 


சட்டெனத் துள்ளி எழுந்தான் மனோ.

===================================


சட்டென துள்ளி எழுந்தான் மனோ, தன் படுக்கையிலிருந்து
இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்.மாடியிலிருந்து கீழ் வீட்டு வாசலை நோக்கினான். அனு வழக்கம் போல கோலம் போட அமர்ந்திருப்பதை அறிந்து கொண்டான்.  
இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு, சற்று முன்பு புடவையுடன், நிறை மாத கர்ப்பிணியாய், என் மனைவியாய், என்னுடன் எப்படி என் கைப்பிடிக்குள் சிக்கினாள். நினைக்க நினைக்க அவனுக்கு ஒரே சிரிப்பாகவும், இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது. 


சதா சர்வ காலமும் நம் மனதிலும், நினைவிலும், அன்பிலும், ஆசையிலும் இருப்பவர்கள், கனவிலும் வரக்கூடும் என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப் படுத்திக் கொண்டான்.


அனு வீட்டு மாடிப்போர்ஷனில் ரூம் எடுத்துத் தங்கியிருந்தான் மன நல மருத்துவ மனையில் பயிற்சியாளராகச் சேர்ந்துள்ள இளம் டாக்டர் மனோ.


உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. 


வெள்ளைப்பணம், கறுப்புப்பணம் என பணத்திற்காக பேயாக அலையும் மனிதர்கள், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வோர், சாமி பெயரைச் சொல்லி கோயில் பணத்தைக் கொள்ளையடிப்போர், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்போர், கஞ்சா கடத்துவோர், எதைப்பற்றியும் கவலையின்றி சதாசர்வ காலமும் குடி போதையில் மிதப்போர், பொடி, புகையிலை, வெற்றிலை பாக்கு, பீடி சிகரெட் சுருட்டுப் பிரியர்கள், காதல் போதையில் காமக்களியாட்டம் போடுவோர், காதல் தோல்வியால் மனம் உடைந்தோர்; 


கம்ப்யூட்டர், லாப்டாப், சாட்டிங், கார், பைக், செல்போன், சினிமா, டி.வி, டி.வி.சீரியல்கள், புடவைகள், நகைகள், புத்தகம், அரசியல், லாட்டரி, சூதாட்டம், சீட்டாட்டம், ஷேர்மார்க்கெட், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; 


கற்பனை உலகில் மிதப்போர், திடீரென இயற்கைச்சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளைச் சந்திப்போர், நெருங்கிய சொந்தங்களின் மரணங்களால் அன்பை இழப்போர், விபத்துகள், கொலை, கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் நஷ்டங்களால் பாதிக்கப்பட்டோர் என பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். கீழ் வீட்டுப்பெண் அனுராதாவும் அதற்கு விதிவிலக்கல்ல என்று அவனுக்குத் தோன்றியது, இங்கே அவன் புதிதாகக் குடிவந்த சமயம். அவள் ஒரு கோலப்பைத்தியம் என்று ஆரம்பத்தில் நினைத்தவன் தான், மனோ.அதிகாலையில் எழுந்து, வீட்டு வாசலைப்பெருக்கி சாணத்துடன் கூடிய நீர் தெளித்து, கோலம் போடக் குனிந்தால் என்றால், சுமார் ஒரு மணி நேரம் குத்துக்காலிட்டு, இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாகக் கோலம் போடுபவள்.   விடியற்காலம் எழுந்து வாக்கிங் போய் விட்டுத் திரும்பும் மனோவை அன்றைய தினம் அனுவால் போடப்பட்ட அழகிய புத்தம் புதிய மிகப்பெரிய கோலம் வரவேற்று, அவனை மிகவும் வியப்படையச் செய்யும்.  
நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.  ”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.கோலத்தைச் சற்று நேரம் நின்று ரசித்துப்பார்த்து விட்டு, மாடி ஏறிப்போகும் மனோவை, சில நேரங்களில் அனுவும் வீட்டுக்குள்ளிருந்து கதவிடுக்கு வழியாகவோ, ஜன்னல் இடுக்கு வழியாகவோ பார்ப்பதுண்டு.எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!மார்கழி மாதம் நெருங்கி விட்டது. பனி அதிகமாகக் கொட்டுகிறது. விடியற்காலம் வாக்கிங் போவதையே மனோ அடியோடு நிறுத்தி விட்டான். காரணம் கொட்டும் பனி மட்டுமல்ல. 
வாசலில் கோலம் போடும் அனுவை தன் அருகே அழைத்து ரசித்திட நேற்று அவன் புத்தம் புதியதாக வாங்கி வந்திருக்கும் பவர்ஃபுல் பைனாக்குலரும் தான்.தினமும் அதிகாலை மனோதத்துவ டாக்டரின் மனதிற்கும், கண்களுக்கும் விருந்தளித்தது அந்த பைனாக்குலர். பருவமங்கையான அனுவின் அழகை அணுஅணுவாக அள்ளிப்பருகி ரசிக்க முடிந்தது, அவனின் மாடி அறையின் ஜன்னலிலிருந்தபடியே. பாவாடை, சட்டை, தாவணியில், காதில் தொங்கும் ஜிமிக்கிகளுடன், காலில் கொஞ்சும் கொலுசுகளுடன், வாழைத்தண்டு போன்ற வழுவழுப்பான கைகளில் அணிந்த கண்ணாடி வளையல்களின் ஒலிகளுடன், தலை நிறைய பூவுடன், அன்ன பக்ஷியொன்று தத்தித்தத்தி தாவித்தாவி வட்டமிட்டு கோலம் வரையும் அழகைக் காணக் கண் கோடி வேண்டுமென்று தோன்றியது மனோவுக்கு. அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. அந்த மிகச்சிறிய அழகிய பட்டாம்பூச்சிக்கு அனுவை நெருங்கி முத்தமிடக் கிடைத்துள்ள வாய்ப்பு தனக்குக் கிடைக்க வில்லையே என்று, அதன் மேல் பொறாமை ஏற்பட்டது, மனோவுக்கு.  
தொடரும்

32 கருத்துகள்:

 1. உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

  ப‌ட்டிய‌ல் பிர‌மாத‌ம்!

  //இங்கும் அங்கும் தத்தித்தாவி மிகவும் அழகாக//

  என்ன‌வொரு ர‌ச‌னை! அன்ன‌ப் ப‌க்ஷியாமே!!

  பதிலளிநீக்கு
 2. // உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. //

  உண்மை...

  பதிலளிநீக்கு
 3. முதல் பாகம் முழுவதும் கனவாம்... இரண்டாம் பாகம் முழுவதும் வர்ணனைகள்... எப்போதான் கதையை ஆரம்பிப்பீங்க...

  பதிலளிநீக்கு
 4. இந்த பாவாடை சட்டை தாவணியுடன் கோலமிட, வெளியே தெருவில் அமர்ந்திருக்கும் அனு,/

  படத்தேர்வு அபாரம்!

  பதிலளிநீக்கு
 5. இதுவரை தான் கண்டதெல்லாம் வெறும் கனவு தான் என்பதை அறிந்து, சிரித்துக்கொண்டே படுக்கையை விட்டு எழுந்து பல் துலக்கி முகம் கழுவச்சென்றான்./

  இனிய கனவு.....
  கனவு நன்வாக வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 6. பலவகை விசித்திர நோயாளிகளை தினமும் பார்த்துப் பழகிவிட்ட மனோவுக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும்./

  சரியான கணிப்புதான் ...

  பதிலளிநீக்கு
 7. எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்!


  அருமையான அனுபவ வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

  சிறப்பான கதைக்கு வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 8. காதல் வர்ணனைகள்-கவர்ச்சி வர்ணனைகள்! என்னதான் இருந்தாலும் டாக்டர் செய்யறது தப்பு இல்லையோ...! :))

  பதிலளிநீக்கு
 9. //உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் // :))))

  அட போன பகுதியில் வந்ததெல்லாம் வெறும் கனவா? என்ன ஒரு ட்விஸ்ட் கதையில்...

  ம்ம்ம்ம் நடக்கட்டும்.... அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 10. நாளடைவில் மனோவின் மனதினில், அனுவின் அன்றாடக் கோலங்கள், அன்புக் கோலங்களாக பதிந்து, என்றும் அழியாத காதல் கோலங்களாக மாறத்துவங்கின.//

  போனபதிவில் கனவு.
  இந்த பதிவில் காதல்.
  எப்போது மனசுக்குள் மத்தாப்பூ?

  தீபாவளி திருநாளில் சம்மதம் தெருவிப்பாளா? அது தான் மனசுக்குள் மத்தாப்பா?

  பதிலளிநீக்கு
 11. ஆரம்பத்திலேயே அழகிய திருப்பம் கனவு வடிவில்.

  //உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

  உண்மை ஐயா.

  பதிலளிநீக்கு
 12. டாக்டர் புட்டி பால் வகையறா இல்ல தானே...

  பதிலளிநீக்கு
 13. சரியாச் சொன்னீங்க ஐயா...
  உலகில் அத்தனை உயிர்களும் ஒவ்வொரு தருணத்தில்
  மனநோயாளிகள் போலதான் செயல்படுகிறோம்.
  இந்தபாகத்தில் வர்ணனைகள் அனைத்தும் அற்புதம்.
  கனவு நனவாக்கிட வேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. கனவா.... அடுத்து தீபாவளிக்கு இனிப்பா...பட்டாசா... :))

  பதிலளிநீக்கு
 15. டாக்டரும் ஒரு விதத்தில் மன நோயாளிதானே..

  பதிலளிநீக்கு
 16. //மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.//

  கோலத்தை வைத்துப் போட்ட வார்த்தைக் கோலம் அழகாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 17. அழகிய வார்த்தைகளால் புள்ளிகள் இட்டு மிக அழகிய கோலமாய் கதையைச் சொல்லிக்கொன்டு போகிறீர்கள்! வழக்கம்போல எழுத்தும் நடையும் அருமையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 18. அட... அது கனவா
  கதை சுவாரஸ்யமாகத் தொடர்கிறது
  மனோதத்துவ டாக்டருக்கு
  கொஞ்சம் வைத்தியம் பார்க்கவேண்டி வருமோ ?
  பைனாகுலர் வாங்கிவைத்துக் கொண்டு
  ஒரு பெண்ணை அவளுக்குத் தெரியாமல்
  ரசிப்பதென்றால்...சரி தொடர்ந்து பார்ப்போம்
  த.ம 4

  பதிலளிநீக்கு
 19. விரைவில் காதல் அரும்புமா...
  தொடரட்டும் தொடருவேன்

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 20. ”மாடிக்கு ஏறிச்செல்லும் நீங்கள், என்னை அழிக்காமல், மிதிக்காமல், பாதுகாத்து, ஓரமாக என்னைப் பிரதக்ஷணமாகச் சுற்றிச்செல்லுங்கள்”, என அனுவே அன்புக்கட்டளை இடுவது போல மனோவுக்குத் தோன்றும்.

  கோலத்தை அழிக்க எனக்கும் மனசு வராது.. சுத்தி தான் போவேன்..
  என்ன அழகாய் காதல் சொல்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 21. ஐயா! இன்று கதை படிக்கவில்லை. நீங்கள் நலமா?. ஏன் வலைப்பக்கம் காணமே? பல இடுகைகள் இட்டேன்.இதுவும் நனறாகத்தானிருக்கும். மீண்டும் சந்திப்போம்.
  வேதா. இலங்காதிலகம்.
  httP://www.kovaikkvai. wordpress.com

  பதிலளிநீக்கு
 22. // உலகில் உள்ள அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் மன நோயாளிகள் தான் என்பதில் அவனுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை...... .... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியுள்ள கேஸ்களைவிட, அட்மிட் ஆகாத கேஸ்களே அதிகம் வெளியுலகில் சுற்றித் திரிவதாகத் தோன்றும். //
  மனித வாழ்வையே ஒரு அலசு அலசி சொன்னது போல் இருக்கிறது
  // எந்த ஒரு படைப்பாளிக்கும், ரசிகனின் பாராட்டு மட்டும் தானே மிகவும் மகிழ்ச்சியளிக்க முடியும்! //
  உங்கள் படைப்புகளை வாசகர்களாகிய நாங்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 23. விறுவிறுப்பான இந்த சிறுகதையின் இரண்டாம் பகுதிக்கு, அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்கள் கூறி பாராட்டி என்னை மகிழ்வித்து உற்சாகப்படுத்தியுள்ள, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அனைத்துத் தோழர்களுக்கும் மற்றும் தோழிகளுக்கும் என் மனமார்ந்த இனிய நன்றிகள்.

  என்றும் அன்புடன் தங்கள்,
  vgk

  பதிலளிநீக்கு
 24. கற்பனைகள் அழகாக விரிகின்றன. நிஜத்தில் என்ன நடக்கப்போகிறதோ என்று நெஞ்சம் படபடக்கிறது.

  பதிலளிநீக்கு
 25. மன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய வடுராரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 19, 2015 at 1:53 PM

   //மன நோயாளிகளுடன் பழகி அவரும் மனதை அலைய விடுகிறாரு//

   மன நோயாளிகளுடன் பழகினாலும் அவரும் ஓர் ஆண் அல்லவா. அவருக்கென்று ஓர் மனதும் அதில் சராசரியான ஆசாபாசங்களும், சபலங்களும் இருக்கத்தானே செய்யும்? !!!!!

   நீக்கு
 26. சிலவற்றின் மேல் அபரிமிதமான ஆசை வைத்து அல்லல் படுவோர்; //

  ஆசையே அழிவிற்குக் காரணம்.

  ஆனால் இந்தக் கதையில் எப்படியோ?
  தெரிஞ்சுக்க அடுத்த பகுதிக்கு சட்டுன்னு போயிடறேன். ஏற்கனவே ரொம்ப லேட்டு நான்.
  ஆமாம் கிட்டத்தட்ட மூணரை வருஷம் கழிச்சு தானே வந்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
 27. ஐய்யய்ய கனவு கண்டுகிட்டாங்களா கொமரு பசங்கன்னா இப்பூடில்லாதா கனவு வருமோ.

  பதிலளிநீக்கு
 28. இதுவும் கனவு கதையா. இப்பல்லாம் பாவாடை தாவணி போட் பொண்ணுகளை எங்க பாக்க முடியுது. நீங்க போட் படத்துல எவ்வளவு அழகா இருக்கு.

  பதிலளிநீக்கு
 29. ///அனுவின் இடுப்பு மடிப்புகளில் பனித்துளிகள் படர்வதையும், சிறிய பட்டாம்பூச்சியொன்று அவளின் முதுகுப்புறம் தேன் தேடி மேய்வதையும், மிகுந்த ஆர்வத்துடன் தன் பைனாக்குலரால் மிகத்துல்லியமாக ரசித்து மகிழ்ந்தான் மனோ. // சாண்டில்யன் எழுதுன சமூக நாவல் மாதிரி வர்ணனை அள்ளுதே...


  பதிலளிநீக்கு
 30. அழியாத கோலங்கள்! முந்தைய பாகம் வெறும் கனவா? அப்பவே நினைச்சேன்!

  பதிலளிநீக்கு