என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [பகுதி 3 / 5]நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - பகுதி 3 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்பக்கக் கதை முடிந்த இடம்:இமாம்பஸந்த், பங்கனப்பள்ளி, மல்கோவா, ருமேனியா என்று பலவித மாம்பழங்கள், பன்ருட்டிப் பலாப்பழம், சிறுமலை வாழைப்பழம் என்று மிகவும் ஒஸத்தியான பழங்களை அந்தந்த ஊர்களிலிருந்து வரவழைத்து மிகவும் ரஸித்து ருசித்து உண்பவள் என் மனைவி. அதெல்லாம் ஒரு காலம். எங்கள் வாழ்க்கையின் வஸந்த காலம்” என்று சொல்லி சற்றே நிறுத்தி விட்டு தண்ணீர் குடிக்க எழுந்து சென்றார், பெரியவர்.


=================================================


”ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள் என் மனைவியின் கால் விரல் கிடுக்கினில் ஒருவித அரிப்பும் புண்ணும் [சேற்றுப்புண் போல] ஏற்பட்டு ஆறாமல் இருந்த நிலையில் டாக்டரிடம் கூட்டிச்சென்ற போது, ரத்தப்பரிசோதனை செய்ததில், சர்க்கரை வியாதி உள்ளது, அதுவும் மிகவும் அதிகமாக உள்ளது என்று கேள்விப்பட்டதும், நாங்கள் மிகவும் இடிந்து போனோம்.

ஏற்கனவே எனக்கும்,  இருக்க வேண்டிய சாதாரண சர்க்கரை அளவைத்தாண்டி ஓரளவுக்கு கூடுதலாக இருப்பதாகச் சொல்லி மாத்திரைகள் சாப்பிட்டு வர ஆரம்பித்திருந்த நேரம் அது.   

அன்று முதல் எங்களுக்கு மிகவும் பிடித்தமான ஆகாரங்கள் அனைத்துக்கும் தடை விதித்துக்கொண்டோம். மருந்து, மாத்திரைகள், ஊசி, உடற்பயிற்சிகள், ஆகாரக்கட்டுப்பாடு, ஆஸ்பத்தரி வாசம், மாதம் தவறாமல் ரத்தப்பரிசோதனை என அனைத்தும் ஆரம்பித்து, இன்ப மயமான, வாய்க்கு ருசியான, எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் விட்டதாக உணர்ந்தோம்.


ஏதோ கொஞ்சமான உணவு, அடிக்கடி உணவு, அளவான உணவு, அடிக்கடி பசி, தாகம், களைப்பு, இதைச் சாப்பிடலாம், இதைச் சாப்பிடக்கூடாது என பலவித கட்டுப்பாடுகளில் கட்டுண்டு கிடக்க வேண்டியதாயிற்று. மொத்தத்தில் அதுவரை மிகவும் இனிமையாக இருந்த எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கசப்பாகத் தொடங்கி விட்டது; 


இந்த சர்க்கரை வியாதி என்பது ஒரு வியாதியே அல்ல. நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கணையத்திலிருந்து சுத்தமாகச் சுரக்காமலோ அல்லது தேவையான அளவுக்கு சுரக்காமலோ உள்ள ஒரு குறைபாடு மட்டுமே;


இந்தப் பிரச்சனை ஒருவருக்கு வருவதற்கு இன்னதான் காரணம் என்று உறுதியாக யாராலும் சொல்லவே முடியாது. இன்ன வயதில் தான் இந்த குறைபாடு வந்து தாக்கும் என்றும் சொல்ல முடியாது. பெற்றோர்களுக்கு இருந்தால் அவர்களின் வாரிசுகளுக்கும் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என்று ஜோஸ்யம் போல சொல்லுகிறார்கள். எங்களைப் பொருத்தவரை அதில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை;


எங்களுக்காவது எழுபது வயதிற்கு மேல் இது ஏற்பட்டுள்ளது. இப்போதெல்லாம் ஏழு வயதான பள்ளிக்குச்செல்லும் சிறு குழந்தைகளுக்கே காலையில் எழுந்ததும் இன்சுலின் ஊசி தினம் போட வேண்டிய சூழ்நிலைகளை நினைத்தால் மிகவும் பாவமாகவும், வருத்தமாகவும் உள்ளது;  


//இந்த சர்க்கரை நோய் வந்தால் கவலைப்பட ஒன்றுமே இல்லை. சுலபமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.  அது நம் கையில் தான் உள்ளது; 


சர்க்கரை வியாதி வந்துள்ளது என்று தெரிந்து கொண்டு விட்டால், பிறகு அது நாம் உட்காரும் ஒரு நாற்காலி போல. நாற்காலிக்கு நான்கு கால்களும் + நாம் அமரும் இடமும், மிகவும் முக்கியமானவை அல்லவா! 


இதில் மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. 


இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். அதாவது இந்த சர்க்கரை வியாதியின் நெருங்கிய சொந்தக்காரர்களான ”கண்கள் பாதிப்பு” ; ”கிட்னி பாதிப்பு” ; ”இரத்தக்கொதிப்பு” ; “மாரடைப்பு” போன்றவைகள் நம்மை சுலபமாக வந்தடைந்து பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால் சர்க்கரை நோயாளிகள், நான் சொன்ன நாற்காலியின் நான்கு கால்களிலும் அதன் அமரும் இருக்கையிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம் //  


என்றார் ஒரு கருத்தரங்கில் பங்குகொண்டு சொற்பொழிவாற்றிய ஓர் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர்;

இதெல்லாம் சொல்லுவதோ கேட்பதோ சுலபம் தான் ஆனால் அதை கடைபிடிப்பது மஹாகஷ்டம் என்பது அந்த நிபுணருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும். ஜீனி, வெல்லம், ஸ்வீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவை சாப்பிடுவதால் மட்டும் சர்க்கரை வியாதி வருவதில்லை. இவற்றையெல்லாம் சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் மட்டும் அது கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுவதும் இல்லை; 


நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசி, கோதுமை, பருப்பு, கிழங்கு வகைகளும், மா, பலா, வாழை போன்ற அனைத்து பழ வகைகளிலும் கூட சர்க்கரைச் சத்து நிரம்பித்தான் உள்ளது; 


நார் சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு சின்ன கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு ஸ்பூன் கொத்துக்கடலை சுண்டல் சாப்பிடுங்கள், முளைகட்டிய பயிறு நிறைய சாப்பிடுங்கள் என்று ஏதேதோ உணவு முறைகளைக் கடைபிடிக்கச் சொல்வார்கள்; 


ஒரு வேளைக்கான உணவாக இரண்டே இரண்டு இட்லிகளோ அல்லது ஒரே ஒரு தோசையோ அல்லது அரையே அரை அடை மட்டுமோ இதில் ஏதாவது ஒன்று மட்டுமே சாப்பிடுங்கள்; அதுவும் தொட்டுக்கொள்ள இந்த தேங்காய் சட்னி மட்டும் கூடவே கூடாது என்று ஏதேதோ ஆலோசனைகள் வழங்குவார்கள்; 


இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என்ன?  பஞ்சுபோன்ற சூடான சுவையான இட்லிகளாக இருந்து, அதுவும் தேங்காய்ச் சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாய்ப்பொடி எண்ணெயுடனும் சூப்பராக இருந்தால், தலையணிக்கு பஞ்சு அடைப்பது போல ஒரு பத்தோ அல்லது பன்னிரெண்டோ உள்ளே போனால் தான், போதும் என்று சொல்லவே தோன்றும்; கை அலம்பியவுடன் சாப்பிட்டது ஜீரணமாக உடனே சூடான சுவையான டிகிரி காஃபியைத் தேடி நம் நாக்கு அலையும்.


இது போல வக்கணையாக சாப்பிட்டுப் பழகிய எங்களைப்போய், ஒரு இட்லி அல்லது இரண்டு இட்லி அதுவும் சட்னி இல்லாமல் என்றால் என்ன கொடுமை இது பாருங்கள்! 


காரசாரமாகச் ’சட்னி’ இல்லையேல் ’பட்னி’ என்று வீர வசனம் பேசுபவர்கள் நாங்கள்; வாய்க்கு ருசியானவற்றைச் சாப்பிடக்கூடாது என்று தவிர்த்து விட்டு, பிறகு வாழ்ந்து தான் என்ன பயன்” என்றார் அழாக்குறையாக, அந்தப்பெரியவர்.  


பெரியவருக்கு மிகவும் ருசியாக தன் மனைவி கையால் செய்து சாப்பிட்ட, அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து, முட்டி மோதி கண்களில் கண்ணீர் தளும்பியது.

அரட்டை ராமசாமி அவரை அன்புடன் ஆதரவாகக் கட்டிப்பிடித்து “வருத்தப்படாதீர்கள், ஐயா; இங்குள்ள எல்லோரிடமுமே,  இது போன்ற பல பசுமை நினைவுகளுடன் கூடிய வாழ்க்கையின் ஒரு பக்கமும், மீளாத்துயருடன் கூடிய இருண்ட மறுபக்கமும் இருக்கத்தான் செய்கிறது” என்று சொல்லி அவரை சற்றே ஆசுவாசப்படுத்தி, குடிக்க குடிநீர் அருந்துமாறுச்சொல்லி, தன் பேட்டியைத் தொடரலானார்.

கதையின் முக்கியக் கட்டமான ’இவர் மனைவியை இவரே கொன்று விட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது’ என்று இவர் நேற்று சொன்ன விறுவிறுப்பான பகுதி எப்போது தொடரும் என்ற ஆவலில் அங்குள்ள பெரியவர்கள் அனைவருமே ஒருவித எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.   

“தங்களுக்கு இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் என்று சொன்னீர்களே! அவர்களில் யாரும் உங்களை அவர்களுடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லையா?” அரட்டையார் தொடர்ந்து வினவினார்.

“நான் ஆரம்ப நாட்களில், என் குழந்தைகளிடம்,  சற்று கண்டிப்பும் கறாருமாக இருந்து விட்டேன். நான் மிலிடரியில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வேலை பார்த்ததால், நல்லதொரு கட்டுப்பாட்டுடன் என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்க விரும்பி விட்டேன். என்னதான் கட்டுப்பாட்டுடன் நான் அவர்களை வளர்த்து ஆளாக்கினாலும், அப்பாவைவிட அம்மாவிடமே அவர்களுக்குப் பிரியம் அதிகம். அனைவருமே அம்மா செல்லம்; 

என் மனைவி, தன் குழந்தைகளை அதிர்ந்து ஒரு வார்த்தை பேச மாட்டாள். குழந்தைகளுக்கு எப்போதுமே பரிந்து தான் பேசுவாள். தன் பிள்ளைகள் மட்டுமின்றி தன் மருமகள்களையும் தன் சொந்த மகள்கள் போலவே பாராட்டி, சீராட்டி, அவர்களிடமும் மிகுந்த அன்பு செலுத்தி நல்ல பெயர் வாங்கிக்கொண்டவள். அதுபோலவே எங்களுக்கு வாய்த்த மாப்பிள்ளையும், “என் மாமியாரைப் போல தங்கமான மனுஷி இந்த உலகத்தில் வேறு யாரும் உண்டா!” என்று புகழ்ந்து தள்ளுபவர். 

இதுபோல அனைவரையும் அரவணைத்துச் சென்று, அன்பு செலுத்தி, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு மட்டுமே வாய்த்த கை வந்த கலை;

எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும்; 


மற்ற எல்லோரிடமும் பேரன்பு செலுத்துவது போல நடிக்கத் தெரியாது. என் பிறவி குணமும் சுபாவமும் அது போலவே உள்ளது; திடீரென்று அவற்றை என்னால் மாற்றிக்கொள்ளவா முடியும்?” இவ்வாறு தன் வாழ்க்கை அனுபவங்களை சொல்லிக்கொண்டே வந்த பெரியவர் சற்றே நிறுத்தி எழுந்து நின்றார்.  


சற்று நேரம் காலாற நடந்து விட்டு வருவதாகச் சொல்லி, அந்த முதியோர் இல்லத்தை விட்டு வெளியே புறப்பட்டுப்போய் விட்டார்.

நேற்று அந்தப்பெரியவர் சஸ்பென்ஸுடன் முடித்த இடத்திலிருந்து கதையைத் தொடராமல் வேறு ஏதேதோ விஷயங்களுக்குத் தாவியது, கேட்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தாலும், அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.


தொடரும் 


   

40 கருத்துகள்:

 1. காரசாரமாகச் ’சட்னி’ இல்லையேல் ’பட்னி’ என்று வீர வசனம் பேசுபவர்கள் நாங்கள்;/

  வசனம் அருமை..

  பதிலளிநீக்கு
 2. மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். /

  கதையல்ல. இது கதையல்ல...
  மனப்பாடம் செய்து வாழ்வில் கடைப்பிடிக்க்வேண்டிய் பாடம்..

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம் சொல்லுவதோ கேட்பதோ சுலபம் தான் ஆனால் அதை கடைபிடிப்பது மஹாகஷ்டம் என்பது அந்த நிபுணருக்கே நன்றாகத் தெரிந்திருக்கும்/

  சொல்வது அனைவருக்கும் எளிதுதானே.
  நடைமுறைச்சிக்கல்கள் ஏராளம் என்பது அனைவரும் அனுபவித்தே உனர்ந்திருப்பார்கள்..

  பதிலளிநீக்கு
 4. தமிழனின் உணவான கேழ்வரகு கூழ் களிக்கு தாவினால் சர்க்கரையை நோய் என்னும் குறைபாட்டை துரத்தி அடிக்கலாம் என்பதும் உண்மை...

  பதிலளிநீக்கு
 5. அதுவரை மிகவும் இனிமையாக இருந்த எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கசப்பாகத் தொடங்கி விட்டது; /

  இனிக்கிற வாழ்வே கசக்கும்..
  நிதர்சன நடைமுறைகளை பகிர்ந்த கதைக்குப் பாராட்டுக்கள்.
  நுணுக்கமான அவதானிப்பு ..வாழ்வை ஆழ்ந்து கவனிப்பவர்களால்தான் இத்தனை சிறப்பாக பகிரமுடியும்.

  பதிலளிநீக்கு
 6. ம்ம்ம்ம்.. சர்க்கரை வியாதி பற்றிய எத்தனை குறிப்புகள்....

  உங்கள் கதைகளின் சிறப்பே எடுத்துக்கொண்ட விஷயத்தின் பல நுணுக்கங்களை கதையில் கொண்டு வருவது....

  அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்....

  பதிலளிநீக்கு
 7. சர்க்கரை வியாதிக்கான கட்டுபாடு பற்றிய குறிப்புகள் மிக அருமையாக கொடுத்துள்ளீர்கள். முடிவுக்கு இன்னும் 2 பகுதிகள் காத்திருக்க வேண்டுமா???

  பதிலளிநீக்கு
 8. கதையும் சுவாரஸ்யமாகப் போகிறது
  இடையில் வரும் சக்கர வியாதிக்கான
  நாற்காலி விளக்கம் அருமை
  தொடர்ந்து வருகிறோம் ஆவலுடன்
  தொடர வாழ்த்துக்கள்
  த.ம3

  பதிலளிநீக்கு
 9. கதை மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நகர்கிறது..

  பதிலளிநீக்கு
 10. //நார் சத்துக்கள் நிரம்பிய காய்கறிகள் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு சின்ன கப் சாதம் மட்டும் சாப்பிடுங்கள், ஒரு ஸ்பூன் கொத்துக்கடலை சுண்டல் சாப்பிடுங்கள், முளைகட்டிய பயிறு நிறைய சாப்பிடுங்கள் //
  சர்க்கரை வியாதி பற்றிய குறிப்புகள் தேவையானவை.

  //எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும்; //
  இது நிறைய அப்பாக்களின் தவறுகள்தான். இவராவது பரவாயில்லை சில அப்பாக்கள் மனைவியிடம் தன்னை பற்றிய பெருமைகளை பிள்ளைகளிடம் பிரமோட் செய்ய சொல்வார்கள். இது இல்லத்தரசியின் அடிஷனல் வேலையாகிவிடும்.

  பதிலளிநீக்கு
 11. சுவாரஸ்யமான கதைக்கு நடுவே, சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு செய்திகள், கூடவே இட்லி, மிள‌காய்ப்பொடி, சாம்பார் என்று வழக்கம்போல் நாவூற‌ச்செய்யும் உணவுகள் பற்றிய வர்ணனை- எல்லாமே அருமை!

  பதிலளிநீக்கு
 12. சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு கதையினூடே செருகி இருப்பது உபயோகமக இருக்கும். தொடருகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அனைவரையும் அரவணைத்துச் சென்று, அன்பு செலுத்தி, அனைவரிடமும் நல்ல பெயர் வாங்குவது என்பது என் மனைவிக்கு மட்டுமே வாய்த்த கை வந்த கலை;

  அதற்கான சிரமம் எவ்வளவு தெரியுமா.. அதையும் மீறி நல்ல பெயர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் மதின் தூய்மையான அன்பின் வெளிப்பாடுதான் அதன் காரணம்.

  பதிலளிநீக்கு
 14. தாமதமாக படிக்கிறேன் மன்னிக்க,
  அருமையான மருத்துவதகவலையும் கதையில்கூறுவது சிறப்பாயிருப்பதை உணர்ந்தேன் நன்றி

  பதிலளிநீக்கு
 15. தனிப் பதிவுகளில் சொல்லாமல், கதையோடு அழகாக சர்க்கரை வியாதிக்கான குறிப்புகளையும் சொல்லியிருக்கீங்க! மாத்திரையை தேனில் குழைத்துக் கொடுப்பது போல! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.//

  எல்லோருக்கும் இந்த எண்ணம் ஏற்படுவது இயல்பு தானே?

  ஊம், அவர் மனைவி எப்படி இறந்தார்?

  பதிலளிநீக்கு
 17. அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.//

  எல்லோருக்கும் இந்த எண்ணம் ஏற்படுவது இயல்பு தானே?

  ஊம், அவர் மனைவி எப்படி இறந்தார்?

  பதிலளிநீக்கு
 18. அப்பாடி!இத்தனை நாள் நாம வரலையே, எல்லாரும் முன்னாடி போயிட்டாங்களேன்னு நினைச்சேன்.அதனால என்ன நீங்க முன்னால போனா நான் பின்னாலே வாரேன்.அடுத்த பகுதிக்கு இப்ப நானும் வெயிட்டிங் :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த என் சிறுகதைப்பகுதிக்கு அன்புடன் வருகை தந்து. பல்வேறு கருத்துக்களைக்க்கூறி, பாராட்டி, வாழ்த்தி, மகிழ்வித்து உற்சாகம் கொடுத்துள்ள அனைவருக்கும் என் அன்பான மனமார்ந்த இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் தங்கள்,
   VGK

   நீக்கு
 19. இந்த மூன்றாவது பகுதி கதையில் எல்லோருக்குமே விழிப்புணர்வைத் தரும் மிக அருமையான பகுதி அண்ணா... சர்க்கரை நோய் எல்லோருமே நமக்கு இருக்காது ஏன் நோயே எதுவுமே நமக்கு இருக்காது நோய் நமக்கு வரவும் நாம் விருப்பப்படுவதில்லை. ஆனால் அடிப்பட்டாலோ அல்லது உடல்நலம் குறைவு ஏற்பட்டாலோ தான் நாம மருத்துவரை நாடிச்செல்கிறோம். சின்ன வயிற்றுவலிக்கு என்று போனால் ஸ்கேன் எடு எக்ஸ்ரே எடு அந்த டெஸ்ட் எடு இது எடு என்று சொல்லிவிட்டு வயிற்றில் அல்சர் இருக்குன்னு ஒரு போடு போடுவாங்க... அதுபோல நார்மலா 40 வயதை தாண்டினதுமே 6 மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது வருடத்துக்கு ஒரு முறையோ ஒரு ஜெனரல் செக்கப் செய்துக்கொள்வது நல்லது.. அதை செய்யத் தவறினால் இதோ இந்த பெரியவரின் மனைவிக்கு ஏற்பட்டதைப்போல திடிர்னு ஏற்படும் அதிர்ச்சியை சமாளிக்க முடியாமல் சிரமப்படவேண்டியது தான் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்திய கருத்துச்சொல்லி செல்கிறது கதை....


  சர்க்கரை நோய் வந்துவிட்டால் என்னென்ன செய்யனும் என்னென்ன செய்யக்கூடாது என்பதை ஆஹா எவ்ளவு தத்ரூபமா ஒரு நாற்காலிக்கு நான்கு கால்களும் இருக்கையும் எத்தனை முக்கியமானது என்பதை விளக்கி ஒவ்வொரு காலும் ( மாத்திரை,மருந்து, ஊசி, உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, உணவுகட்டுப்பாடு, ஒட்டுமொத்த விழிப்புணர்வு இருக்கைக்கு சரியாகச்சொல்லி) இதில் ஏதேனும் ஒன்று சரியில்லன்னா நம்மை எப்படி கவிழ்த்துவிடும் என்ற அபாயத்தையும் சொல்லி பகவானே கிட்னி பிராப்ளம், கண் பிராப்ளம் :( இதெல்லாம் வரும்னு சொல்லி எல்லோரையும் முன்னாடியே அலர்டா இருங்கோன்னு சொல்லவைத்த அலர்ட் பதிவாக தான் இதை எடுத்துக்கொண்டேன் அண்ணா...

  என்ன ஒரு அந்நியோன்யமான தம்பதிகள்... சாப்பிடறதுல கூட எத்தனை ஒத்துமை பாருங்கோ ரெண்டு பேரும்.. இனிப்புன்னா ரெண்டு பேருமே நல்லா இஷ்டமா சாப்பிடுவதும், இட்லி கெட்டி சட்னி, சாம்பார் கொத்சு, மிளகாப்பொடியோடு சேர்த்து சாப்பிடுவதை எழுதியதை படிக்கும்போது எனக்கும் பசித்தது... இப்படி வகை வகையாக இஷ்டமா நாக்குக்கும் மனசுக்கும் வயிற்றுக்கும் வஞ்சனை இல்லாம நிறைவா சாப்பிட்டுட்டு திடிர்னு இதெல்லாம் வேண்டாம் நிறுத்துன்னு சொன்னா நம் உடலும் மனசும் சொல்ற பேச்சை கேட்குமோ??? ரெண்டு இட்லி, ஒரு தோசையா?? வாழ்க்கையே வெறுத்து போயிருக்குமே....


  ஆனா இதை எல்லாம் தாண்டின அன்பு இருக்கு பாருங்கோ அந்த அன்பு தான் இரண்டு பேரையும் இப்படி கட்டிப்போட்டிருக்கு.... இனிப்பில்லன்னா என்ன மனைவியின் இனிமையான சொல்லுக்கு ஈடாகுமா இனிப்பு??? வயிற்றுக்கு கொடுக்கவேண்டிய இனிப்பெல்லாம் செவிக்கு இனிமையான அன்பான வார்த்தைகளாலும் அரவணைத்து ஆறுதல் சொல்லும்போது கசப்பெல்லாம் இனிப்பாகவே சாப்பிடவெச்சுடுமே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என் அன்புச் சகோதரி மஞ்சு அவர்களே,

   வாருங்கள், வணக்கம்.

   தங்களின் அன்பான வருகையும், அழகான மிக நீண்ட கருத்துக்களும் என்னை மிகவும் மகிழ்வித்துள்ளன.

   இந்தக்கதையினை எவ்வளவு தூரம் தாங்கள் ஊன்றிப் படித்து, மனதில் கிரஹித்துக்கொண்டு, வரிக்கு வரி மனம் திறந்து பாராட்டியுள்ளீர்கள் என்பது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது.

   //செவிக்கு இனிமையான அன்பான வார்த்தைகளாலும் அரவணைத்து ஆறுதல் சொல்லும்போது கசப்பெல்லாம் இனிப்பாகவே சாப்பிடவெச்சுடுமே....//

   தாங்கள் இதுபோலச் சொல்வதே எனக்கு மிகவும் இனிப்பாக உள்ளது. என் மனமார்ந்த இனிய நன்றிகள், மஞ்சு. ;)))))

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 20. அட மிலிட்டரி ஆசாமியா நம்ம பெரியவர் அப்படி போடுங்கோ.. அதான் விஷயம்.... ஆனால் காலம் தான் பெரியவரை எப்படி புரட்டிப்போட்டுட்டுது :( மிலிட்டரியில் இருந்ததால் இயல்பாவே கண்டிப்பு அவர் குரலில் இருந்திருக்கு... பிள்ளைகளை கண்டிப்பது தவறில்லை.. ஆனால் அந்த கண்டிப்பு பிள்ளைகளை நல்வழி படுத்த தான் என்று அந்த குழந்தைகள் வளர்ந்தப்பின் அறிய தவறியது ஏன்? ஆனா அந்த பெரியவர் அதான் நம்ம கதையின் நாயகன் ஹீரோ அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.... எந்த ஒரு ஆணும் சொல்லத்தவறிய வார்த்தை.... “ எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும் “ இந்த வரி திரும்ப திரும்ப படித்தேன். ரசித்து படித்தேன்..

  எல்லா ஆண்களுமே இப்படி இருந்தால் எப்படி இருக்கும்?? பெண்களுக்கு நிம்மதியாக இருக்கும்... பெண்களை கௌரவப்படுத்தும் ஆணாக நம்ம ஹீரோவின் கேரக்டர சித்தரித்த விதம் மிக அருமை அண்ணா..... எத்தனை ஸ்வீட்டான வார்த்தை இது... இதை விட ஸ்வீட் என்ன வேணும்?? திண்பண்டங்களில் இருக்கும் இனிப்பை விட அதிகமாக இனிக்கச்செய்த வார்த்தைகள் இவை....

  தாயிடம் எப்பவும் பரிவு தான் பிள்ளைகளிடத்து.... தந்தையிடம் கண்டிப்பு.. இது எல்லா குடும்பத்தில் நடப்பது தான்... அதுவும் நன்மைக்கே தான்.. அதை அறிய தவறின பிள்ளைகளை என்னச்சொல்வதோ..

  எல்லோரிடமும் சமமா அன்பை செலுத்துவது என்பது கலை இல்லை.... ஒருத்தருக்கு பிடிக்காதது இன்னொருத்தருக்கு பிடிக்கும். அதை எல்லாம் பார்த்து பார்த்து நிறைவாய் செய்வதில் இருக்கும் மனத்திருப்தி தான் அவர்களின் பூரணத்துவத்தை காட்டுகிறது... அன்பை செலுத்துவது என்பது தன் ஆழ்மனதில் அன்பாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்... முழுமையான அன்பை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அதை எல்லோருக்கும் சமமாய் பகிர்வது மிக அற்புதமான விஷயம்.

  அன்பு கூட ஆத்மார்த்தமா உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நடிக்கத்தெரியாதுன்னு சொன்ன நம்ம கதையின் நாயகன் ஒரு குணக்குன்று... எத்தனை எதார்த்தமாக உண்மையை சொல்கிறார்... நடிக்க தெரியாது.. மனைவியை தவிர வேறு எவரிடமும் எதையும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதமான பிறவி... இப்படி ஒரு கணவனை அடைய மனைவியும், இப்படி ஒரு தகப்பனை அடைய பிள்ளைகளும் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?? ஆனால் அறியாமைப்போர்வை பிள்ளைகளின் கண்களை மறைத்துவிட்டது என்பது மட்டும் உணரமுடிகிறது....

  அடுத்து என்னாகும் என்று அறியத்துடிக்கிறது....

  சும்மா இருக்கிறார்களா பாருங்களேன் உடன் இருப்பவர்கள்... அவர்களுக்கு சஸ்பென்ஸ் உடையவேண்டும்.. கதை அறியவேண்டும்.. மர்மம் விலக வேண்டும்.. அட இதெல்லாம் நடந்துவிட்டால் கதை முடிந்துவிடுமே.. கதாசிரியர் எங்க அண்ணா அவ்ளோ ஈசியா சஸ்பென்ஸ் உடைச்சிருவாரா என்ன?? இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கும் கண்டிப்பா.. இந்த பகுதியில் சர்க்கரை நோய் வரும் காரணம், அதை தடுக்கும் விதம், வந்தால் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் இதெல்லாம் எங்களுக்கு கதையின் கூடவே கிடைத்த போனஸ் லட்டு.... எல்லாவற்றையும் ரசித்து ருசிக்கவும் முடிந்தது....

  என்ன அண்ணா இத்தனை அசத்தலா எழுதுறீங்க..அடக்கமா இருக்கீங்க... குடத்திலிட்ட விளக்கு தான் நீங்க....

  அன்பு வாழ்த்துகள் அண்ணா....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புச் சகோதரி மஞ்சு,

   தங்களின் மீண்டும் வருகைக்கும் மீண்டும் மிக நீ...ண்....ட பின்னூட்டம் அளித்துள்ளதற்கும் நன்றியோ நன்றிகள்.

   // நம்ம கதையின் நாயகன் ஹீரோ அவர் சொன்ன ஒரு வார்த்தை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.... எந்த ஒரு ஆணும் சொல்லத்தவறிய வார்த்தை.... “ எனக்கு என் மனைவியிடம் மட்டுமே அன்பு செலுத்தவும் அவள் அன்பைப்பெற்று அமைதியாக ஒருவித கட்டுப்பாட்டுடன் வாழவும் மட்டுமே தெரியும் “ இந்த வரி திரும்ப திரும்ப படித்தேன். ரசித்து படித்தேன்.. //

   கதையில் வரும் தங்களுக்குப் பிடித்த ஹீரோ போலவே, நானும் தங்களின் அன்பான ஊக்கமும் உற்சாகமும் தந்திடும் கருத்துக்களை, திரும்பத் திரும்ப படித்தேன். ரஸித்தேன்.

   //பெண்களை கௌரவப்படுத்தும் ஆணாக நம்ம ஹீரோவின் கேரக்டர சித்தரித்த விதம் மிக அருமை அண்ணா..... எத்தனை ஸ்வீட்டான வார்த்தை இது... இதை விட ஸ்வீட் என்ன வேணும்??//

   தித்திக்கும் வார்த்தைகளை உபயோகித்துள்ளீர்களே! ;)))))
   [Very Sweet Comments from my Very Sweet Sister Manju]

   //அன்பை செலுத்துவது என்பது தன் ஆழ்மனதில் அன்பாய் இருந்தால் மட்டுமே அது சாத்தியம்... முழுமையான அன்பை மனதில் தேக்கிவைத்துக்கொண்டு அதை எல்லோருக்கும் சமமாய் பகிர்வது மிக அற்புதமான விஷயம். //

   ஆழ்மனதில் அன்பைத் தேக்கி வைத்துக்கொண்டு என் தங்கை மஞ்சு இதைச் சொல்வதால் அது மிகச்சரியான மற்றும் அற்புதமான விஷயமாகவே உள்ளது. நன்றியோ நன்றிகள்.

   //அன்பு கூட ஆத்மார்த்தமா உள்ளத்தில் இருந்து வரவேண்டும். நடிக்கத்தெரியாதுன்னு சொன்ன நம்ம கதையின் நாயகன் ஒரு குணக்குன்று... எத்தனை எதார்த்தமாக உண்மையை சொல்கிறார்... நடிக்க தெரியாது.. //

   உங்கள் அண்ணனைப்போலவே அவரும் ஒரு நடிக்கத் தெரியாத [பிழைக்கத் தெரியாத] அப்பாவியாக இருப்பாரோ என்னவோ?

   உங்கள் பார்வையில் மட்டுமே “குணக்குன்று” என்கிறீர்கள். அவர் சார்பாக என் நன்றிகள்.

   //மனைவியை தவிர வேறு எவரிடமும் எதையும் எதிர்ப்பார்க்காத ஒரு அற்புதமான பிறவி... இப்படி ஒரு கணவனை அடைய மனைவியும், இப்படி ஒரு தகப்பனை அடைய பிள்ளைகளும் எத்தனை அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்?? //

   புரிய வேண்டியவர்களுக்குப் புரிய வேண்டுமே! உங்களுக்காவது புரிந்துள்ளதே!! மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

   //கதாசிரியர் எங்க அண்ணா அவ்ளோ ஈசியா சஸ்பென்ஸ் உடைச்சிருவாரா என்ன?? //

   அடடா! குளிரடிக்குது .... [என் தலையில் மிகப்பெரிய ஐஸ் கட்டியினை, என் தங்கை மஞ்சு வைத்து விட்டதால்]

   //இந்த பகுதியில் சர்க்கரை நோய் வரும் காரணம், அதை தடுக்கும் விதம், வந்தால் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் இதெல்லாம் எங்களுக்கு கதையின் கூடவே கிடைத்த போனஸ் லட்டு.... எல்லாவற்றையும் ரசித்து ருசிக்கவும் முடிந்தது....//

   அந்தக்கால திருப்பதி லட்டு போன்ற தங்களின் மிகப்பெரிய சைஸ் லட்டுக் கருத்துக்களுக்கு, என் நன்றிகள்.

   //என்ன அண்ணா இத்தனை அசத்தலா எழுதுறீங்க.. அடக்கமா இருக்கீங்க... குடத்திலிட்ட விளக்கு தான் நீங்க....//

   எ ன் ன வோ சொ ல் லு ங் க ள் ! ;)))))

   குன்றின் மேல் ஏற்றக்கூடிய திறமையுள்ள வாசகியாகவும் ரஸிகையாகவும் தாங்கள் ஒருவர் இருக்கும் போது எனக்கென்ன மனக்கவலை?

   பிரியமுள்ள
   VGK
   நீக்கு
 21. சர்க்கரை நோய் பற்றிய சகல விவரங்களையும் இந்த ஒரு பதிவிலேயே காண்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

   அன்புடையீர்,

   வணக்கம்.

   31.03.2015 அன்று என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இதுவரை, 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரையிலான பத்து மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள என் பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக எழுச்சியுடன் வருகை தந்து கருத்தளியுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   என்றும் அன்புடன் VGK

   நீக்கு
 22. சருக்கரை நொய் பற்றி தெளிவான விளக்கங்கள்.முதியொர் இல்லத்தில்ஒவ்வொருவரிடமும் ஃபளாஷ் பேக் இருக்கு.நிறயவே கேட்டுகிட்டுதான் இருக்கேனு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 19, 2015 at 6:19 PM

   //சர்க்கரை நோய் பற்றி தெளிவான விளக்கங்கள். //

   மிக்க நன்றீங்க. ஒருசில என் சொந்த அனுபவங்களால் இவற்றை இவ்வாறு என்னால் எழுத முடிந்துள்ளது.

   //முதியோர் இல்லத்தில் ஒவ்வொருவரிடமும் ஃபளாஷ் பேக் இருக்கு. நிறையவே கேட்டுகிட்டுதான் இருக்கேனு//

   நானும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, சில நாட்கள் இங்குள்ள ஓர் முதியோர் இல்லத்திற்கு சென்று பலரையும் பேட்டி கண்டுள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொன்றாக நிறைய கதைகள் என்னிடம் சொல்லியுள்ளார்கள். நீங்களும் கேட்டுள்ளது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறதும்மா.

   மிக்க நன்றி.

   நீக்கு
  2. பிரியமுள்ள பூந்தளிர் சிவகாமி அவர்களுக்கு,

   வணக்கம்மா.

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளhttp://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை முதல் பத்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக, இதேபோல எழுச்சியுடன் வருகை தாருங்கள் + பின்னூட்டம் இடுங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியில் வெற்றிபெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
 23. மாத்திரை மருந்து ஊசி என்பது நாற்காலியின் ஒரு கால் போல. மாதம் ஒருமுறை மருத்துவப் பரிசோதனை என்பது அதே நாற்காலியின் மற்றொரு கால் போல. உணவுக் கட்டுப்பாடு என்பது அதே நாற்காலியின் மூன்றாவது கால் போல. உடற்பயிற்சி என்பது அதன் நான்காவது கால் போல. இதைப்பற்றிய ஒட்டுமொத்த விழிப்புணர்வு என்பது நாற்காலியில் நாம் அமரும் இருக்கைக்கான இடம் போல. இதில் எந்தக்கால் சரியில்லாவிட்டாலும், உட்காரும் நம்மை நிச்சயம் கவிழ்த்து விட்டு விடும். /

  உங்கள் ஒருத்தருக்கு மட்டும்தான் இப்படி எல்லாம் தோணும்

  சர்க்கரை வியாதியை பத்தி சாதாரணமான ஒருத்தருக்குக் கூட புரியற மாதிரி சொல்லி இருக்கீங்க.

  உங்க கதையெல்லாம் கதையல்ல, நிஜம்.

  நானும் முதியோர் இல்லக் கதை ஒன்று வைத்திருக்கிறேன். இப்ப தானே எனக்கு 60 வயது முடிஞ்சுது. எழுதுவேன், எழுதுவேன், எழுதுவேன், ஆனா எப்பன்னுதான் தெரியல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புள்ள திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்கு,

   அன்புள்ள ஜெயா,

   வணக்கம்மா !

   31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

   இத்துடன் 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை முதல் பத்து மாதப்பதிவுகள் அனைத்திலும் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

   மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

   போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள், ஜெயா.

   பிரியமுள்ள நட்புடன் கோபு

   நீக்கு
 24. சர்க்கர நோய் வந்தா பயப்படவேணாம்னு சொல்லுராங்கதா.. வாய கட்டுரது லேசுபட்ட சோலி இல்லீங்களே. கட்டுபாடு இல்லாகாட்டி அவஸ்ததா.

  பதிலளிநீக்கு
 25. அன்புள்ள செல்வி: Mehrun niza அவர்களுக்கு:

  அன்புள்ள (mru) முருகு,

  வணக்கம்மா !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி முதல் 2011 அக்டோபர் வரை, முதல் பத்து மாதங்களில் என்னால் வெளியிடப்பட்டுள்ள என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் குருஜி கோபு

  பதிலளிநீக்கு
 26. ஷூகர் இருக்குனு தெரிந்ததும் மனதளவில் பாதிக்கப்படறாங்க. அதைப்பற்றி விரிவாக விஷயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி. உணவுக்கட்டுப்பாடு சில உடற்பயிற்சகள் நடைப்பயிற்சி என்று முறையாக கடைப்பிடித்தால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

  பதிலளிநீக்கு
 27. அன்புள்ள ’சரணாகதி’ திரு. ஸ்ரீவத்ஸன் அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் முடிய, என்னால் முதல் 10 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 28. முதியோர் இல்லக் காட்சி அமைப்பு அருமை...அனுபவப் பகிர்வு யதார்த்தம்...

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள ’மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.’ வலைப்பதிவர்
  திரு. ரவிஜி ரவி அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் வரை, என்னால் முதல் 10 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ள, என் அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு
 30. அனைவருக்கும் அவர் மனைவி இறந்ததில் ஏதோ ஒரு பெரிய மர்மம் இருப்பதாகவும், அது தெரியாமல் தங்கள் மண்டையே வெடித்துவிடும் போலவும் ஒருவித உணர்வு ஏற்பட்டது.///
  எங்களுக்கும்தான் ஐயா

  பதிலளிநீக்கு
 31. அன்புள்ள ’காரஞ்சன் சேஷ்’ வலைப்பதிவர்
  திரு. E.S. SESHADRI அவர்களுக்கு:

  வணக்கம் !

  31.03.2015 என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட்டுள்ள http://gopu1949.blogspot.in/2015/03/120404.html வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்துவருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  இத்துடன், 2011 ஜனவரி மாதம் முதல் 2011 அக்டோபர் மாதம் வரை என்னால் வெளியிடப்பட்டுள்ள, முதல் 10 மாத அனைத்துப் பதிவுகளிலும், தொடர்ச்சியாகத் தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் இடம்பெற்றுள்ளன. மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி.

  மேலும் தொடர்ச்சியாக வருகை தந்து, எழுச்சியுடன் பின்னூட்டங்கள் தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  போட்டியின் இறுதியில் வெற்றிபெற + பரிசு பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள்.

  பிரியமுள்ள நட்புடன் VGK

  பதிலளிநீக்கு