என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

வியாழன், 3 நவம்பர், 2011

நீ முன்னாலே போனா ..... நா ... பின்னாலே வாரேன் ! [ நிறைவுப் பகுதி 5 / 5 ]நீ முன்னாலே போனா ......
நா ... பின்னாலே வாரேன் !

[சிறுகதை - நிறைவுப் பகுதி 5 / 5]

By வை. கோபாலகிருஷ்ணன்

-oOo-


முன்கதை முடிந்த இடம்:


கெடிகாரத்தில் மணியைப் பார்த்தார் அரட்டையார்.  இரவு 8.45 ஆகி விட்டது தெரிந்தது. உடனே தனது அன்றைய ஆராய்ச்சிகளை அத்துடன் நிறுத்திக்கொண்டு, பெட்டியில் இருந்த அனைத்துப் பொருட்களையும் ஏற்கனவே இருந்தவாறு ஒழுங்காக அடுக்கி வைத்துவிட்டு, தானும் பாகவத உபன்யாசம் சொல்லும் இடத்திற்கு, உபன்யாசம் முடிவதற்குள் போய் ஓர் ஓரமாக அமர்ந்து விட்டார்.


===========================


அன்றுடன் ஒரு வாரம் முடிந்து பாகவத பாராயணமும் உபன்யாசமும் பூர்த்தியாகும் நாள்.  உபன்யாசம் செய்த பாகவதருக்கும் அவர் மனைவிக்கும் புதிய பட்டு வஸ்திரங்கள் [புத்தாடைகள்], ஒரு ஜோடி பருப்புத்தேங்காய், கூடை நிறைய பல்வேறு வகையான பழங்கள், பூமாலைகள், வித்வத் ஸம்பாவனையாக ரூபாய் பத்தாயிரத்து ஒன்று பணம் முதலியன நம் பெரியவர் அவர்களால் தனியாக ப்ரத்யேகமாக வழங்கி, பொன்னாடை அணிவித்து கெளரவம் செய்யப்பட்டது. 


பெரியவரின் பக்தி ஸ்ரத்தையையும், தாராள குணத்தையும் அந்த பாடசாலையில் உள்ளோர், முதியோர் இல்லத்தில் உள்ளோர், விழா ஏற்பாடு செய்திருந்த ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அந்தக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பொதுமக்கள் எல்லோரும் வியந்து பாராட்டினர்.  


கடைசி நாளன்று பகலில் மூல பாராயணம் கேட்கவும், இரவில் பிரவசனம் [உபன்யாசம்] கேட்கவும் வந்திருந்த அனைவருக்கும் மிகவும் சிறப்பான விருந்தளிக்கவும் பெரியவரே பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தார். அப்பளம், வடை, ஜாங்கிரி, பால் பாயஸம் என தடபுடலாக விருந்து பரிமாறப்பட்டது. 


ஒரு சொம்பு நிறைய சூடான சுவையான பால் பாயஸத்தை எடுத்துக்கொண்டு பெரியவர் முதியோர் இல்லத்திற்கு விரைந்து செல்லலானார். 


அவரைத் தொடர்ந்து இரவு சாப்பாடு முடித்திருந்த வேறு சில பெரியவர்களும் முதியோர் இல்லத்துக்குப் புறப்படலாயினர். அரட்டை ராமசாமியின் கண்கள் மட்டும், பெரியவரின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை, அவருக்குத் தெரியாமல் உற்று நோக்கி ஃபாலோ செய்வதிலேயே குறியாயிருந்தன.


முதியோர் இல்லம் வந்து சேர்ந்த அந்தப்பெரியவர் தன் பெட்டியைத் திறந்தார். தன் மனைவியின் அந்தப் பெரிய [லாமினேட் செய்த] புகைப்படத்தைத் தன் மடியில் ஒரு குழந்தை போல படுக்க வைத்துக்கொண்டார்.  அந்தப்படத்திலிருந்த அவள் வாயில் ஒவ்வொரு சொட்டாகப் பாயஸத்தை ஊற்றி, ”குடி .... குடி ...” என்று ஒருவித வாஞ்சையுடன் சொல்லிக் கொண்டிருந்தார்.   


அவரைப் பின்தொடர்ந்து வந்த அரட்டை ராமசாமி, இந்தக் காட்சியைக்கண்டு கண் கலங்கி, ஓர் ஓரமாக மறைவாக நின்று விட்டார். வயதான அந்தப் பெரியவரின் இந்தச்செயலை, [தன் அன்பு மனைவியை சென்ற வருடம் இழந்தவரான, அனுபவம் வாய்ந்த] ராமசாமியால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. 


ஆஹா! எவ்வளவு ஒரு உத்தம தம்பதிகளாக வாழ்ந்து, நீண்ட காலம் மன ஒற்றுமையுடன், ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அன்புடன், பண்புடன், பாசத்துடன், நேசத்துடன் இவர்கள் இருவரும் இனிமையாக குடும்பம் நடத்தியிருக்க வேண்டும்! என நினைத்துக் கொண்டார். 


தன் மனைவிக்கு பாயஸம் ஊட்டி விட்டதாகவும், அவளும் அதை விரும்பி குடித்து விட்டதாகவும் திருப்தியடைந்த பெரியவர், மீதியிருந்த அந்த பாயஸத்தைத் தானே முழுவதும் குடித்து விட்டு, சற்று நேரம் காலை நீட்டிப் படுத்துக்கொண்டார். 


கண்களை மூடிக்கொண்டார். தன் மனைவி தன்னை அழைப்பதாக நினைத்துக்கொண்டார். பாகவத பாராயணம் கேட்டதால் பகவானிடமிருந்து தனக்கும் அழைப்பு வந்துவிட்டதாக உணர்ந்தார்.


அவர் உடல் தூக்கித்தூக்கிப் போட ஆரம்பித்தது. அரட்டை ராமசாமி அருகில் போனார். அவர் உடலைத் தொட்டுப்பார்த்தார். அது அனலாகக் கொதித்தது.


அரட்டை ராமசாமி உடனடியாக மருத்துவரை வரவழைத்தார். சோதித்துப் பார்த்த மருத்துவர் முதன் முறையாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் நல்லது என்றும் கூறிவிட்டார். அவரை உடனே மருத்துவமனையில் சேர்த்தனர். ஈ.ஸி.ஜி. எடுக்கப்பட்டது. சுலபமான சுவாஸத்திற்கு ஆக்ஸிஜன் குழாய்கள் அவரின் மூக்கினில் பொருத்தப்பட்டன. 


அவருடைய மகன்களுக்கும், மகளுக்கும் அரட்டை ராமசாமியால் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


பெரியவர் எழுதி வைத்த உயில் அங்கிருந்த அனைவரும் கேட்கும் படியாக அரட்டை ராமசாமியால் உரக்க வாசிக்கப்பட்டது:


//சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்க இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவே இல்லை. அதை கட்டுப்படுத்த மட்டுமே மருந்து, மாத்திரைகள், ஊசிகள் முதலியன தருகிறார்கள். 


சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும். 


அதற்கான மருத்துவ ஆராய்ச்சிகளுக்காக மட்டுமே சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள என் சொத்துக்கள் முழுவதும் பயன் படுத்தப்பட வேண்டும்// என தன் உயிலில் எழுதியிருந்தார்.


பெரியவரின் டைரியில் இருந்த ஒருசில பகுதிகளும் அரட்டை ராமசாமி அவர்களால் படித்துக்காட்டப்பட்டது:


//என் அன்பு மனைவியின் கடைசி இறுதி நாட்கள் எண்ணப்பட்ட போது, ”இதே நிலைமை நீடித்தால் உங்கள் மனைவி இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே உயிருடன் வாழமுடியும்" என்று டாக்டர் என்னிடம் சொல்லி விட்டுப் போனார்; 


நானும் என் மனைவியும் முன்பே பேசி முடிவெடுத்திருந்தபடி, அவளுக்கு மிகவும் பிடித்தமான பால் பாயஸம், மாம்பழ ஜூஸ், தேங்காய் போளி, கப் ஐஸ்கிரீம் முதலியனவெல்லாம் அவள் ஆசைதீர சாப்பிடவும், பருகவும், ருசிக்கவும் ரகஸியமாக நான் ஏற்பாடு செய்திருந்தேன்;  


நான் அவளைப்போல, இதே நிலைமையில் படுத்திருந்தால், அவளும் எனக்கு இதுபோலவே தந்திருப்பாள். அதுதான் நாங்கள் எங்களுக்குள் பேசி முடிவு எடுத்து வைத்திருந்த விஷயம்; 


அதாவது இறப்பதற்கு முன்பு நமக்கு பிரியமானவற்றை விரும்பி சாப்பிட்டுவிட்டு மன மகிழ்ச்சியுடனும், மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். அதில் எந்தக்குறையும் யாருக்கும் யாரும் வைக்கக்கூடாது என்பதே எங்கள் இருவரின் இரகசிய ஒப்பந்தம்;  


இது விஷயத்தில் நான் எவ்வளவோ சர்வ ஜாக்கிரதையாகவும், உஷாராகவும் செயல்பட்டும், நான் பெற்ற பிள்ளைகளிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டு விட்டேன்; 


இவற்றையெல்லாம் சாப்பிடக்கொடுத்து, நானே என் மனைவியை கொன்று விட்டதாகக் கூறி, என் மீது கொலைப்பழி சுமத்தி, என்னை வீட்டிலிருந்து துரத்தி,  இந்த முதியோர் இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டனர்; 


ஆனால் என் மனைவிக்கு மிக நன்றாகத் தெரியும் நான் அவளை கொலை செய்யவில்லை என்று. மாறாக, கடைசியாக அவள் மிகவும் விரும்பிய பதார்த்தங்களைச் சாப்பிடச் செய்து, அவளை மிகவும் சந்தோஷமாக, என்னையும் இந்த உலகையும் விட்டு, மனநிறைவுடன் செல்லச்செய்தேன்; 


நான் அவளை நல்லபடியாக கடைசிவரை வைத்துக் கொண்டேன்;  அவள் விருப்பப்படியே கடைசியில் செய்து அவளை, நல்லபடியாகவே வழியனுப்பி வைத்து உதவினேன்;  


இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் என் வாரிசுகளால் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் அவர்களுக்குத் தங்கள் தந்தையாகிய என்னைவிட, தாய் மேல் தான் பாசம் அதிகம்;


கருணைக்கொலை என்பார்களே, அது போலத்தான் என்னுடைய இந்தச் செயலும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இது நாங்கள் எங்களுக்குள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அன்றி வேறு எதுவும் இல்லை; 


எங்கள் ஒப்பந்தப்படி அவளுடைய கடைசி ஆசையை நான் நிறைவேற்றி விட்டேன். அந்த ஒரு திருப்திக்காக நான் எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள முழுமனதுடன் சம்மதித்துத்தான், இந்த முதியோர் இல்லத்துக்கும் வந்து விட்டேன்; 


”நீ முன்னாலே போனா ...  நா .... பின்னாலே வாரேன்” என்ற சினிமாப் பாட்டுப்போல, அவள் இப்போது முன்னால் சென்றிருக்கிறாள்; நான் பின்னால் அவளைத் தொடரப்போகிறேன்.  //


அரட்டையார் பெரியவரின் டயரியைப் படித்து முடித்ததும், பெரியவர் தன் நெஞ்சைப் பிசைந்து கொண்டு துடிதுடித்தார். மூக்கில் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் குழாய்களைப் தானே தன் கைகளால் பிடுங்கி எறிந்தார். அவர் உயிர் அப்போதே பிரிந்து விட்டது.


”பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” என்று நாங்கள் அனைவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம். 


பெரியவரின் பிரிவினையே தாங்க இயலாத எங்களுக்கு, அவரின் பிரிவினால் மிகவும் பாதிக்கப்பட்டவராக மாறிவிட்ட அரட்டை ராமசாமி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேலாக யாருடனும் எந்த அரட்டைப் பேச்சுக்களும் பேசாமல், மெளன விரதம் மேற்கொண்டிருந்தது, எங்களையெல்லாம் மிகவும் வருந்தச் செய்து விட்டது.
-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-   56 கருத்துகள்:

 1. கடைசியாக ஒன்று விடாமல் எல்லாவற்றையும் கோர்த்துக் கொண்டு வந்து நன்றாக முடித்து விட்டீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. மிகவும் விரும்பிய பதார்த்தங்களைச் சாப்பிடச் செய்து, அவளை மிகவும் சந்தோஷமாக, என்னையும் இந்த உலகையும் விட்டு, மனநிறைவுடன் செல்லச்செய்தேன்; /

  விஷம் கொடுத்தும் கொல்லலாம்..

  வெல்லம் கொடுத்தும் கொல்லலாம்
  என்று சொல்வார்களே!

  பதிலளிநீக்கு
 3. கருணைக்கொலை என்பார்களே, அது போலத்தான் என்னுடைய இந்தச் செயலும் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். இதில் தப்பேதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மேலும் இது நாங்கள் எங்களுக்குள் ஏற்கனவே போட்டுக்கொண்ட ஒப்பந்தமே அன்றி வேறு எதுவும் இல்லை; /

  கருணைகொலைதான்.
  விடிருந்தால் நான்கு நாட்கள் கழித்து சென்றிருப்பார்கள்.

  பதிலளிநீக்கு
 4. பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” ./

  முத்தாய்ப்பான அருமையான முடிவுரை..

  கொடுத்தவைத்த தம்பதியர்..

  பதிலளிநீக்கு
 5. மன நிறைவுடனும் இந்த உலகை விட்டு விடைபெற வேண்டும். /

  மனநிறைவான அருமையான கதைப் பகிர்வுக்குப் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. மனதை கனக்க வைத்துவிட்டீர்கள் .அருமையான கதை .
  உங்க கதைகளை வாசிக்கும்போது அந்த இடத்தில நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு .

  பதிலளிநீக்கு
 7. கதையின் முடிவு மனதை கனக்கசெய்து விட்டது.

  பதிலளிநீக்கு
 8. மிகவும் உருக்கமான கதை. மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 9. எதிர்பாராத முடிவு. டயட் என்ற பெயரில் வாய் கட்டுவதற்கு நீங்கள் முன்னாலும் ஒரு பதிவில் (கதையில்) உடன்பாடில்லை என்று சொல்லியிருந்ததாக நினைவு. முடிவில் அரட்டையாரும் ஆழமானவராக மாறி விட்டார்.

  பதிலளிநீக்கு
 10. முழுக்க வாசித்துவிட்டு கருத்து சொல்ல நினைத்து தாமதமாகிவிட்டது.
  //பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” என்று நாங்கள் அனைவரும் எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

  /////

  முடிவு அருமை..இயல்பான அனுபவ எழுத்து படிக்கும்போதே நிறைவைத்தருகிறது.

  பதிலளிநீக்கு
 11. ஆதர்ஷத் தம்பதிகளின் மன நிலை இதுதான். இது போன்ற பிரியமிக்க மரண வாக்குறுதிகளை புரிந்து கொள்ள முடிகிறது. மிகச்சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ள கதை. இது போன்ற அன்றில் பறவைகளுக்கு இறையருள் நன்றாகவே கிட்டும்.

  சர்க்கரை வியாதிக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி....? இது பற்றிய உண்மையை பகர்ந்தால் நோக்கு வர்மத்துடன்ன் யாரையாவது அனுப்பிவிடுவார்கள் என்று பயமிருந்தாலும் உண்மையை சொல்கிறேன் சார். சில வியாதிகள் மருந்து வியாபாரிகளுக்கு கற்பக விருட்சம். முற்றிலும் குணப்படுத்தக் கூடிய மருந்துகளுக்கு அனுமதி கிட்டாது. சர்க்கரை, புற்று நோய் போன்றவை.

  வழக்கம்போல தெளிவான நீரோடைபோல கதையை அளித்ததற்கு மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 12. மிகவும் உருக்கமான கதை... என்ன சொல்லிப் பாராட்டுவது என்று தெரியவில்லை....

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. கதையை கதையாகப் படித்தால் ரசிக்கமுடியும். கதாபாத்திரங்கள் செய்தது சரியா என்று விவாததுக்குள் போகக் கூடாது. நீரோட்டமான நடையில் எழுதி ஒருங்கிணைத்துவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 14. சர்க்கரை வியாதி பற்றிய நீண்ட அலசலும், அதன் பாதிப்புகளும் மன உணர்வுகளும் அடங்கிய சிறந்த கதை! கதை நெடுக, கணவன் மனைவி இருவருக்கிடையேயுள்ள ஆழமான அன்பை வெகு அழகாக சித்தரித்திருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
 15. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
  இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
  கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
  வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 16. அருமையான கதை, அவர் அவர்களுக்கு அவர்கள் செய்வதே சரி... எது சரி எது தவறு என்பதை விவாதம் செய்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால் இங்கு பலர் யார் சரி என்று தான் வாதம் செய்வதால், முடிவு கிடைப்பதில்லை... உங்கள் கதா நாயகன், நிஜமாகவே ஒவ்வொரு பெண்ணின் கனவு நாயகன்...

  பதிலளிநீக்கு
 17. மிகவும் நெகிழ்ச்சியான முடிவு.அருமையாக கதையை நகர்த்திச்சென்று முடித்துள்ளீர்கள்.

  //பரீக்ஷீத் மஹாராஜா போலவே பாகவதம் கேட்ட ஏழாம் நாள் முடிவில் இந்தப் பெரியவரின் உயிரும் பிரிந்துள்ளது. ஏற்கனவே பூவும் பொட்டுமாகப் போய்ச்சேர்ந்து, இவரின் வருகைக்காகவே மேலுலகில் காத்துக் கொண்டிருக்கும் இவரின் அன்பு மனைவியுடன் சேர்ந்து, இவரும் பகவானின் பாத கமலங்களை அடையப்போவது நிச்சயம்” .//

  அருமையான முடிவுரை.
  அழகிய கதைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. க்ளாஸ் கோபு சார்.

  தொடர்ந்து வாசித்து வந்தேன். வழக்கம் போலவே நிறைவுப் பகுதியில் முந்தைய பகுதியில் விடுபட்ட உணர்ச்சிகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டது போல ஒரு சிக்ஸர்.

  இனிப்புடன் கசப்பையும் சொன்ன கதை.

  பதிலளிநீக்கு
 19. மிகவும் மிகவும் உருக்கமான கதை.

  படிக்கும் போது மனம் கனத்து விட்டன.

  பதிலளிநீக்கு
 20. ”நீ முன்னாலே போனா ... நா .... பின்னாலே வாரேன்” என்ற சினிமாப் பாட்டுப்போல, அவள் இப்போது முன்னால் சென்றிருக்கிறாள்; நான் பின்னால் அவளைத் தொடரப்போகிறேன். //

  நெஞ்சை நெகிழவைத்த கதை.

  மனநிறைவு இருவருக்கும். என்ன சொல்வது! அன்பான இரண்டு உள்ளங்களுக்கு தான் இது புரியும்.

  பதிலளிநீக்கு
 21. அருமையான கதை .
  உங்க கதைகளை வாசிக்கும்போது அந்த இடத்தில நாமும் இருப்பது போன்ற ஒரு உணர்வு .

  பதிலளிநீக்கு
 22. உங்கள் எழுத்தில் கட்டுண்டு அது முன்னால் போனால் நாங்கள் பின்னால் வந்தோம்.
  பெரியவர், மனைவி ஆதர்ச தம்பதிகள்தான். இம்மாதிரி தம்பதிகள் தற்போது குறைந்தும் சச்சரவுகள் அதிகரிப்பதும் இக்கதையின் மேல் கூடுதலாய் பிரியம் வருகிறது.

  பதிலளிநீக்கு
 23. கதை முடிந்ததும் என் கண்கள்
  என்னை அறியாமல் நீரைச் சிந்தின!
  காரணம் உங்களுக்கே புரியும்
  வை கோ!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 24. மிகவும் மிகவும் உருக்கமான கதை....

  பதிலளிநீக்கு
 25. I don't miss reading your blog every day. All the stories penned by you leave behind a great 'feel good' factor, reinforcing our beliefs in the goodness of humanism very essential in these days.

  பதிலளிநீக்கு
 26. கதை அழகாகச் சென்று அருமையாக முடிவடைந்துள்ளது! கதையில் மருத்துவம், ஆன்மிகம் என அனைத்தையும் கலந்துகொடுத்தது மிகவும் ரசிக்கவைத்தது!

  பதிலளிநீக்கு
 27. மனதை உருக்கும் கனமான முடிவு.

  பதிலளிநீக்கு
 28. இந்த சிறுகதைத்தொடரின் 5 பகுதிகளுக்கும் அன்புடன் வருகை தந்து அரிய பெரிய கருத்துக்கள் கூறி, என்னை உற்சாகப் படுத்தியுள்ள என் அருமை தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  மீண்டும் நாளை 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை ஒரு வாரத்திற்கு ”நட்சத்திரப்பதிவர்” என்ற முறையில் தினமும் பல பதிவுகள் தருவதாக உள்ளேன்.

  தினமும் காலை 11 மணிக்கு ஒரு புதிய வெளியீடு கொடுக்கப்படும்.

  மீண்டும் மாலை 2 மணி, 4 மணி,
  6 மணி அளவில் மீள் பதிவுகள் சில வெளியிடப்படும்.

  தொடர்ந்து வருகை தந்து ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்
  உங்கள் பிரியமுள்ள vgk

  பதிலளிநீக்கு
 29. அருமையான கதை
  மனதை கனக்கச் செய்து போகும் முடிவு
  ஆயினும் அதன் மூலமே அவர்களின் எல்லை கடந்த அன்பை
  புரிந்து கொள்ள முடிகிறது
  அரட்டை ராமசாமி என்ன படித்த என்னால் கூட
  சில மணி நேரம் பேசமுடியவில்லை
  அருமையான பதிவைத் தந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், Mr. Ramani Sir.

   நீக்கு
 30. "சர்க்கரை நோயாளிகள் எந்தவித உணவுக் கட்டுப்பாடுகளும் இல்லாமல், தங்களுக்குப் பிடித்ததை சாப்பிடவும், இந்தக் குறைபாடு வந்துவிட்டால் அதை முற்றிலும் போக்கவும் புதிய மருந்துகள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்."
  உண்மைதான்; பலருக்கும் இந்த எண்ணம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்,Mrs. Padma [சந்திர வம்சம்]Madam.

   நீக்கு
 31. அருமை. கதையா இது? உண்மையாகவே நடந்தாற் போல உள்ளதே.

  வியாதி உள்ளவர்களை விட சுத்தி இருக்கறவங்க அலட்டல் சில சமயம் ஓவராக இருக்குது.

  அன்போடு, அந்த வியாதி உள்ளவருக்கு, அவரது உடல் நிலையில் எது கேடகிறார்களோ, கொடுத்து விடுவதும் ஒரு ஆறுதல் தானே!

  பதிலளிநீக்கு
 32. Vetrimagal said...
  //அருமை. கதையா இது? உண்மையாகவே நடந்தாற் போல உள்ளதே.

  வியாதி உள்ளவர்களை விட சுத்தி இருக்கறவங்க அலட்டல் சில சமயம் ஓவராக இருக்குது.

  அன்போடு, அந்த வியாதி உள்ளவருக்கு, அவரது உடல் நிலையில் எது கேடகிறார்களோ, கொடுத்து விடுவதும் ஒரு ஆறுதல் தானே!//

  தங்களின் அன்பான [முதல்?] வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள், மேடம்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 33. வயதான காலத்தில் நோயும் குடிகொண்டு வருத்தும்போது கூட இருப்பவர்கள் பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் மேலும் மேலும் வதைக்கக்கூடாது.
  மனதை உறையவைக்கும் கதை.
  வாழ்த்துக்கள் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் இளமதி, வாருங்கள். வணக்கம் பல.

   தங்களின் அன்பான வருகைக்கும், ஆறுதலான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

   //பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல//

   இது, இதுவரை நான் கேள்விப்படாததோர் பழமொழியாக உள்ளது.

   இந்தப் பழமொழி என் தங்கை இளமதி வாயிலாக ஓர் புதுமொழியாக, புதையலாக இன்று கிடைத்துள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும். ;)

   நீக்கு
 34. ஒரு வாரம் பாகவதம் பாராயணம் செய்து முடித்தது நாங்களும் அதில் பங்கேற்று பாகவதம் கேட்ட ஒரு மனத்திருப்தி வாசித்த எங்களுக்கும் ஏற்பட்டது.. உபன்யாசம் செய்வோருக்கு (நம் முக்திக்கு வழி செய்தவராச்சே) வித்வத் ஸம்பாவனை அருமையான சொல்.... நான் இதுவரை கேட்டதில்லை. முதன்முறை இங்கே படித்து அறிகிறேன்....

  பெரியவருடைய மன பாரத்தை சோகத்தை முதல் பாகத்தில் ( குழந்தையை திடிர்னு தெரியாத இடத்தில் விட்டுட்டு போனால் திருதிருன்னு பயத்துடன் விழிக்குமே அது போல) முதியோர் இல்லத்தில் எல்லோரும் அறிந்தனர்.. இரண்டாம் பாகத்திலோ அவரின் தக்கசமயத்தில் உதவிய பாங்கு (உதவிகள் எத்தனை யார் புரிந்தாலும் தக்கசமயத்தில் செய்யும் உதவி என்பது உயிருள்ளவரை மறக்க இயலாதது) உயிர் கொடுத்த அவரின் குணத்தை அறிந்தனர்.... மூன்றாம் பாகத்தில் சர்க்கரை நோய் நம்மை தாக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும், ஒருவேளை சர்க்கரை நோய் வந்துவிட்டால் நாம் செய்யவேண்டியவை என்னென்ன உணவு பழக்கம், அதன்பின் மருத்துவம் உடற்பயிற்சி உணவு கட்டுப்பாடு இப்படி எல்லாம் நமக்கு விரிவாக தந்து விழிப்புணர்வு கருத்துகளை அறியச்செய்த அவரின் மனதை அறிந்தனர். நான்காம் பாகத்தில் மனிதனின் பிறப்பு, இறப்பு சகஜம் உலக நியதியை பொறுத்தவரை என்றாலும் பிறப்பு மனிதனுக்கு சந்தோஷத்தை தருகிறது அதுவே இறப்பு எனும்போது மனிதன் அதைக்கண்டு பயப்படுகிறான்.. அதில் இருந்து தப்பிக்க எல்லா முயற்சிகளையும் செய்கிறான். ஆனால் அப்படி செய்யாமல் ( இறப்பை முதன் முதல் உயிருடன் இருந்தபோதே அறிந்த ஒரு பிறவி பரீக்‌ஷித் மஹாராஜா கதை தனியாக கிளைக்கதையும் தந்து) முக்தி அடையும் முயற்சியாக இந்த ஸப்தாகம் பாகவதம் பாராயணம் செய்வதாலும் உபன்யாசம் கேட்பதாலும் என்ன பயன் என்பதை அறியத்தந்த அவரின் இன்னொரு நல்ல குணத்தையும் அறிந்தனர்.. இப்போது கடைசி பாகத்தில் :( தன் சொத்து முழுக்க சர்க்கரை நோய் முழுவதுமாக தீர்க்கும் ஆராய்ச்சிக்காக தன் எல்லா சொத்துகளையும் எழுதி வைத்த அவரின் தயாள குணத்தையும் மனைவியும் கணவனும் செய்துக்கொண்ட அருமையான ஒரு ஒப்பந்தம்... வா(ழும்)லிப காலத்தில் இருந்த நேசத்தை விட முதுமைப்பருவத்தில் இறுதிக்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பை முழுதாய் பகிர்ந்து தன்னை தன் இணைக்கு அர்ப்பணித்து அவருக்கு பிரியமானதை எல்லாம் செய்யவும் அவர் விருப்பம் போல் மனம் நிறைந்து ( வாழும் நாள் அது ஒரு நாளாக இருந்தாலும் சரி) வாழ்ந்து பின் மறைவது..... தத்ரூபமாக அமைந்த இந்த கதை ( கதையாக நினைக்க மனம் வரவில்லை :( அதனால் தான் என்னால் இதற்கு கருத்து எழுத முடியாமல் தடுமாறினேன்) கதையின் நாயகன் அந்த அளவுக்கு நம் மனதோடு நிலைத்து நின்றுவிட்ட இந்த நிலையில் அவரின் அன்பும், அவரின் நேர்மையான நல்ல மனமும், உதவும் தன்மையும் மனைவி மேல் கொண்டுள்ள அபரிதமான ப்ரீதியும் என் கண்முன் வாழ்வது போல காட்சி தெரிகிறது....) இறுதியில் முடிவு ஏற்கக்கூடியது தான் என்றாலும் பிரிவு நம்மை விட்டு அவர் பிரிந்த அந்த சோகம் என்னையும் தாக்கியது தான் என்னால் இந்த கதைக்கு கருத்து எழுத இயலாமல் தள்ளி வைத்தேன் அண்ணா...

  பதிலளிநீக்கு
 35. இப்ப இருக்கும் ஜெனரேஷன்ல இதுபோல ஒரு தம்பதியரை பார்க்க முடிகிறதா?? நேற்று காதலித்து இன்று மணம் முடித்து நாளை டிவோர்சுக்காக கோர்ட் படியேறும் பிள்ளைகள் இந்த கதை படித்தால் கண்டிப்பாக சிந்திக்க முற்படுவர்....

  பெரியவரின் செயலில் பெரியவர் தன் மனைவி மேல் வைத்திருந்த அபரிதமான நேசத்தை, அன்பை, காதலை அரட்டை ராமசாமியால் புரிந்துக்கொள்ள முடிந்ததற்கு காரணம் தன் அன்பு மனைவியை ஒரு வருடம் முன்பு இழந்ததால் தான் என்று இங்கே குறிப்பிட்டிருந்தது மிக அருமையான டைமிங் வரிகள்.. ஏனெனில்.... ரசிக்க தெரிந்தவரால் தான் ரசிக்கும்படி படைப்புகளை தரமுடியும்.. ஒரு கணவன் மனைவியை எந்த அளவுக்கு உச்சத்தில் தன் அன்பை கொட்டி நேசிக்கிறான் என்று கதையாசிரியரால் எழுத முடிகிறது என்றால் தான் அந்த அளவுக்கு நிஜத்தில் தன் மனைவியை நேசிப்பதால் தான் இப்படி எழுத முடிகிறது... இது கதையாக இருந்தாலும் இதில் தென்பட்ட பெரியவரின் மன உணர்வுகள் அன்பு, உதவும் குணம் தயாள மனம் மனைவி மேல் இருக்கும் பாசம் எல்லாமே ஒரு இம்மி கூட பிசகாமல் இத்தனை உருக்கமாக தரமுடிகிறது என்றால் இது கற்பனையில் கூட சாத்தியமில்லை என்று தான் சொல்வேன்... நேசிப்பவரின் கவிதை கதை வரிகளில் நேசத்தின் உச்சம் உணர்வுகள் அப்படியே தென்படும். அது இந்த பாகத்தில் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கிறது....

  அன்புடன் 25 வருடங்கள் வாழ்ந்த தன் அனுபவங்களை அப்படியே எல்லாம் இந்த கதையில் பகிர்ந்த நேசத்தை உணரமுடிகிறது ஒவ்வொரு வரியிலும்.. இதில் ஹைலைட்... மனைவி இறந்தது அறியாதவரா என்ன பெரியவர்?? ஆனாலும் அவர் மனம் அதை ஒப்புக்கொள்ளவில்லை.. தன் வரை தன் மனைவி ஜீவித்திருப்பதாகவே நினைக்கிறார். அதனால் தான் பாயாசத்தை தன் மனைவிக்கு மிகவும் விருப்பமான பாயாசத்தை மனைவியின் படத்துக்கு ( இங்கேயும் கதையாசிரியரின் புத்திசாலித்தனத்தை பாராட்டவேண்டும். படத்தில் ஊட்டினார் என்று சொல்லாமல் லேமினேட் செய்த படத்திற்கு என்று குறிப்பிடும்போது லேமினேட் செய்யப்பட்டிருக்கும் போட்டோவில் எந்தவித பாதிப்பு ஏற்படாது) ஊட்டிவிட்டு சடாரென தன்னை தன் மனைவி அழைப்பதாக சொன்னபோது (டைமிங்காக பாகவதம் சரியா முடித்த ஏழு நாள் கழித்து) அவரின் உடல் மனம் இரண்டுமே மனைவியின் அன்பினால் பிணைக்கப்பட்டிருக்க இந்த சமயத்தில் மனைவி இழந்த இந்த குழந்தையின் ஏக்கத்தை தனிமையை போக்க பிள்ளை எத்தனை அன்பு காட்டி இருந்திருக்கவேண்டும். அதை பிள்ளை செய்ய தவறிடுத்தே... அதனால் பெரியவரின் மனம் இன்னும் மனைவியின் பிரிவிலிருந்து வெளிவரவில்லை.. தானும் இந்த உலகில் தனியாக இருந்து அல்லல்படுவதையும் விரும்பவில்லை... ” நீ எல்லாம எனக்கு இந்த உலகில் தனியா வாழத்தெரியலையே என்னையும் அழைச்சிட்டு போ “ என்று அவர் மனம் சொல்லி இருந்திருக்கு.... எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு மரணம்????

  பதிலளிநீக்கு
 36. இரு மனங்கள் திருமணம் என்ற பந்தத்தில் இணைத்தாலும் இருவரும் வாழ்ந்து அனுபவித்து (வாழ்க்கையில் சந்தோஷம், கோபம், சண்டை, ஆற்றாமை, சோகம், கண்ணீர்) இப்படி எல்லாத்தையும் கடந்து வந்து முதுமையில் இருவரும் உயிருடன் இருக்கும்போது இருவரின் மனங்களும் இறைவனிடம் ஒரே மாதிரியாக தான் பிரார்த்தனை வைப்பர்... பகவானே எங்கள் இருவரையும் ஒன்னா அழைச்சுக்கோ என்பது தான்... ஒருவர் இறந்து இன்னொருவர் தனியாக இந்த உலகில் இருக்க முடியாது. இருந்தும் அவர் தன்னை நடைபிணமாக தான் உணர்வார்...அந்த வெற்றிடத்தை மகனாலும் பேரக்குழந்தைகளாலும் நிரப்பமுடியாது என்றாலும் அவர்களின் அன்பு ஒரு துளி நிரப்பலாம்... ஆனால் இருவரும் ஒன்றாய் வாழ்ந்து ஒன்றாய் மரணிப்பதை நான் வரவேற்கிறேன்.... இந்த கதையின் நாயகன் நம்மை விட்டு பிரிந்த சோகம் மனம் முழுக்க வியாபித்தது. அவர் மட்டும் அவர் மனைவியுடன் இணைந்துவிட்டார்.. அரட்டை ராமசாமியை மட்டுமல்ல... நம் எல்லோரையும் மீளாத்துயரில் நிறுத்திவிட்டு..... பர்ஃபெக்‌ஷனா கதை முடிச்சிருந்தது மிக சிறப்பு.. அரட்டை ராமசாமி அதன்பின் மூன்று நாட்கள் யாரிடமும் பேசாமல் மூன்று நாட்கள் மௌனம் காத்தது.....

  அண்ணா இந்த கதையின் எல்லா அம்சமுமே மிக அற்புதமாக இருக்கிறது... படிப்பினை இருக்கிறது... கருத்து இருக்கிறது... அன்பு நிறைந்திருக்கிறது... புதிதாய் திருமணம் செய்வோர் விட்டுக்கொடுத்து வாழவும் கணவன் மனைவியிடம் மனைவி கணவனிடம் அன்பு செலுத்துவது மட்டுமன்றி அவர்களின் தவறுகளை மன்னித்து அரவணைத்துச்செல்லும் பாங்கு குறிப்பிட்டிருக்கிறது... பிள்ளைகள் பெற்றோரை அவர்களின் முதுமை காலத்தின் தன் குழந்தைகளாக பாவித்து அன்பு காட்டவேண்டும் என்று அறிவுறுத்துகிறது....

  இத்தனை அருமையான படைப்பை கதை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.... அத்தனை தத்ரூபம்... அன்புநன்றிகள் அண்ணா பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 37. அன்புச் சகோதரி, மஞ்சு ... வாருங்கள். வணக்கம்.

  தாங்கள் அவ்வப்போது அனுப்பியுள்ள மின்னஞ்சல் மூலமும், தொலைபேசித் தொடர்புகள் மூலமும், தங்களின் மிக நல்ல விசேஷ குணங்களையும், அளவுக்கு அதிகமான பாசத்தினையும், அண்ணா + மன்னியாகிய எங்கள் இருவர் மீதும் தாங்கள் வைத்துள்ள அலாதிப் பிரியத்தினையும் மிக நன்றாகவே உணர முடிகிறது.

  அதனால் தான் இந்தப்பகுதிக்கு உங்களால் பின்னூட்டம் தர இயலவில்லை என்பதையும் நான் நன்கு அறிந்து கொண்டேன்.

  தங்களின் அன்பான வருகைக்கும், மனம் திறந்து மிக அழகாகச் சொல்லியுள்ள [ஸ்ரீமத் பாகவதம் மூல பாராயணம் + சொற்பொழிவு போன்ற மிக நீ...ண்...ட] கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பிரியமுள்ள,
  VGK

  பதிலளிநீக்கு
 38. // ரசிக்க தெரிந்தவரால் தான் ரசிக்கும்படி படைப்புகளை தரமுடியும்.. ஒரு கணவன் மனைவியை எந்த அளவுக்கு உச்சத்தில் தன் அன்பை கொட்டி நேசிக்கிறான் என்று கதையாசிரியரால் எழுத முடிகிறது என்றால் தான் அந்த அளவுக்கு நிஜத்தில் தன் மனைவியை நேசிப்பதால் தான் இப்படி எழுத முடிகிறது... இது கதையாக இருந்தாலும் இதில் தென்பட்ட பெரியவரின் மன உணர்வுகள் அன்பு, உதவும் குணம் தயாள மனம் மனைவி மேல் இருக்கும் பாசம் எல்லாமே ஒரு இம்மி கூட பிசகாமல் இத்தனை உருக்கமாக தரமுடிகிறது என்றால் இது கற்பனையில் கூட சாத்தியமில்லை என்று தான் சொல்வேன்... //

  தங்களின் புரிதலுக்கு மிக்க நன்றி, மஞ்சு

  [ஆனந்தக் கண்ணீருடன்]
  VGK

  பதிலளிநீக்கு
 39. //அன்புடன் 25 வருடங்கள் வாழ்ந்த தன் அனுபவங்களை அப்படியே எல்லாம் இந்த கதையில் பகிர்ந்த நேசத்தை உணரமுடிகிறது ஒவ்வொரு வரியிலும்.. இதில் ஹைலைட்...//

  03.07.1972 To 02.07.2012 = 40 வருடங்கள், மஞ்சு.

  [அகில இந்திய அளவில் நடந்த கட்டுரைப் போட்டியில் ”தங்க நெக்லஸ்” முதல் பரிசு பெற்றது தான் 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகு.

  http://gopu1949.blogspot.in/2011/07/3.html ]

  VGK

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தானும் இந்த உலகில் தனியாக இருந்து அல்லல்படுவதையும் விரும்பவில்லை... ”நீ இல்லாமல் எனக்கு இந்த உலகில் தனியா வாழத்தெரியலையே .... என்னையும் அழைச்சிட்டு போ“ என்று அவர் மனம் சொல்லி இருந்திருக்கு.... எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு மரணம்???? //

   ஒரு கோடி மக்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்க்கும், இந்த வாய்ப்பு.

   //அரட்டை ராமசாமியை மட்டுமல்ல... நம் எல்லோரையும் மீளாத்துயரில் நிறுத்திவிட்டு..... பர்ஃபெக்‌ஷனா கதை முடிச்சிருந்தது மிக சிறப்பு..//

   //இத்தனை அருமையான படைப்பை கதை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை.... அத்தனை தத்ரூபம்... அன்புநன்றிகள் அண்ணா பகிர்வுக்கு.//

   இதுபோன்ற மனம் நிறைந்த மிக நீண்ட பின்னூட்டத்தை நான் இதுவரை பெற்றதும் இல்லை .. இனி பெறப்போவதும் இல்லை.

   மிகவும் மகிழ்ச்சி ... சந்தோஷம் ... நன்றியோ நன்றிகள்.

   பிரியமுள்ள
   VGK

   நீக்கு
 40. பெரியவர் அவருடைய மனைவியின் ஆசைகளைத்தான் நிறைவேற்றினார் என்றால் மகன்கள் நம்பவா போகிறார்கள்?

  பதிலளிநீக்கு
 41. அய்யா, இவர் ஏன் தீடிர் என்று பரீக்ஷீத் மஹாராஜா கதை சொல்கிறார் என்று நினைத்தேன். மனம் கனக்கிறது. காதல் கதை தலைப்பு போல் இருக்கே என்றும் நினைத்தேன். ஆம் முதுமையின் உண்மைக்காதல். எத்துனைப் பெரிய அன்பு இதை இளைய தலைமுறையினரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அருமையான முடிவு. காலத்திற்கு ஏற்ற கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran May 6, 2015 at 11:21 AM

   வாங்கோ, வணக்கம்.

   //ஐயா, இவர் ஏன் தீடிர் என்று பரீக்ஷீத் மஹாராஜா கதை சொல்கிறார் என்று நினைத்தேன். மனம் கனக்கிறது.//

   ஆத்மார்த்தமாக மிகவும் ரஸித்துப்படித்துள்ளீர்கள் எனப் புரிந்துகொண்டேன். மிகவும் சந்தோஷம்.

   //காதல் கதை தலைப்பு போல் இருக்கே என்றும் நினைத்தேன்.//

   தலைப்பினைப்பார்த்து சுண்டி இழுக்கப்பட்டு வருகை தருபவர்கள் அதிகமாக உள்ளார்களே ! :) அதனால் மட்டுமே.

   //ஆம் முதுமையின் உண்மைக்காதல். எத்துனைப் பெரிய அன்பு இதை இளைய தலைமுறையினரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அருமையான முடிவு. காலத்திற்கு ஏற்ற கதை.//

   மிக்க நன்றி. மிகவும் சந்தோஷம். தொடர்ந்து வாங்கோ.

   நீக்கு
 42. ஸாப்தாகம் கேடுட நிறைவுடன் பெரியவரின உயிரும் பிரிந்ததே. நெகிழ்ச்சியான முடிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 19, 2015 at 6:40 PM

   //ஸாப்தாகம் கேட்டு நிறைவுடன் பெரியவரின் உயிரும் பிரிந்ததே. நெகிழ்ச்சியான முடிவு//

   ஆமாம் சிவகாமி. புண்யாத்மாவான அந்தப் பெரியவரின் உயிர் பாகவத ஸப்தாகம் கேட்டதும் பிரிந்தது, நெகிழ்ச்சியான முடிவுதான் எனத் தாங்களே சொல்லி முடித்துள்ளது, கதாசிரியனான எனக்கும் திருப்தியாக உள்ளது. மிக்க நன்றி.

   நீக்கு

 43. அரட்டை ராமசாமியையே மௌன விரதம் மேற்கொள்ள வைத்து விட்டாரே.

  நல்ல ஒரு மனிதரை அவர் குடும்பத்தார் புரிந்து கொள்ள வில்லையே என்று வருத்தமாக இருக்கிறது.

  உங்கள் அக்மார்க் முத்திரைக் கதை. அருமை.

  பதிலளிநீக்கு
 44. கருணைக கொலை சரியான வார்த்த தா. எப்படியும் நாலு நாளக்கு தான் உசிரோட இருக்க போராங்க அவங்க ஆசப்பட்டத கொடுக்றதுல ஒன்னும் தப்பா தெரிலயே.

  பதிலளிநீக்கு
 45. மனைவியின் இறப்பு தீர்மானிக்கப்பட்டது என்று தெரிந்ததும் அவர்கள் விருப்பப்பட்டதை சாப்பிட கொடுத்தது சரியானதுதான. அப்படி அவர் கொடுக்கலனாலும் அவர்மனைவி இறந்திருப்பாங்க. மனதில குறை இருந்திருக்கும். இப்ப மன நறைவுடன் இறைவன் அடி சேர்ந்திருப்பாங்க. அவரின் மன நிலைய வீட்டில் உள்ளவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கு. கதை கேட்ட ஏழாம் நாளேஅவரின் உயிரும் பிரிந்துவிட்டதே. உன்னதமான முடிவு.

  பதிலளிநீக்கு
 46. ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் எத்தனை ரகசியங்கள்...வெளிவந்தால் அரட்டைப் பேர்வழியும் அமைதியாக நேர்கிறது...பெரியவரின் பாத்திரம் மனதில்-நிற்கிறது...

  பதிலளிநீக்கு
 47. கதை நல்லா இருந்தது. ஆனால் கதை மாதிரித் தெரியலை. நிறைய இடத்தில் உங்கள் ஆசையைத்தான் நான் பார்த்தேன். (தவறாக எண்ண வேண்டாம். பொதுவாக கற்பனை உலகில் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணுவதைக் கதை மாந்தர்கள் மேல் திணித்துப் புனைந்த கதை).

  பிறப்பைப் பற்றி முன்னமே Notice கொடுக்கும் ஆண்டவன், இறப்பைப் பற்றி மட்டும் suspenseஆக வைத்துள்ளான். இதுவும் 6 மாதத்துக்கு முன்பே நிச்சயமாகத் தெரியும் என்றால், அது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் நீங்கள் சிந்தித்து ஒரு கதை எழுதலாம்.

  நானும் நினைத்துக்கொள்வேன். நமக்கு கடவுள் போல் ஒரு Siddhi இருந்து, அடுத்தவர்களுக்கு (மட்டும்) நடக்கப்போவதெல்லாம் தெரிந்துவிட்டால் (ஆனால் வெளியே சொல்லும் உரிமை கிடையாது) அது எவ்வளவு இக்கட்டான வரமாக இருக்கும்? (உங்களைப் போல.. தலைமைக் காஷியர்.. கோடிகளை எண்ணலாம். யார் யார் எவ்வளவு டெபாசிட் பண்ணுகிறார்கள் என்பது தெரியும். எதையும் வெளியிட முடியாது. பணத்தைச் செலவு பண்ணும் அதிகாரம், அதாவது உங்கள் தேவைக்கு, கிடையாது)

  இன்னொரு siddhi அடுத்தவர் மனதில் நினைப்பதையெல்லாம் (அல்லது அவர்கள் செய்வது எல்லாம்) நமக்குத் தெரிய நேர்ந்தால்? அதைவிடக் கொடுமை ஏதாகிலும் உண்டா? (வாங்க.. பஜ்ஜி எடுத்துக்கோங்க. மனதில்-என்ன இப்படி இக்கட்டான நேரத்தில் வந்து கழுத்தறுக்கறான்..... இப்படி).

  பசியும், முதுமையும் பிணிகள்தான். (தேவையான மெச்சூரிட்டி இல்லைனா)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'நெல்லைத் தமிழன் November 1, 2016 at 4:17 PM

   வாங்கோ, வணக்கம்.

   //கதை நல்லா இருந்தது. ஆனால் கதை மாதிரித் தெரியலை. நிறைய இடத்தில் உங்கள் ஆசையைத்தான் நான் பார்த்தேன். (தவறாக எண்ண வேண்டாம். பொதுவாக கற்பனை உலகில் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று நாம் எண்ணுவதைக் கதை மாந்தர்கள் மேல் திணித்துப் புனைந்த கதை).//

   அதே ... அதே ... என் கதைகள் பலவும் அப்படித்தான். எனக்கே உள்ள அனுபவங்கள் .... அல்லது எனக்குள்ள அபிலாஷைகள் .... நிறைவேறாத ஆசைகள் .... காதல் .... கற்பனைகள் போன்றவைகள் மட்டுமே என் பல கதைகளில் என்னால் திணிக்கப்பட்டிருக்கும். மிகச் சரியாக கண்டுபிடித்துச் சொல்லியுள்ளீர்கள்.

   தங்களின் அன்பான வருகைக்கும், உண்மையை உண்மையாக உணர்ந்து சொல்லியுள்ள கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். யூ ஆர் ஸோ க்ரேட் :)

   நீக்கு