என்னைப் பற்றி

எனது படம்
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

ஞாயிறு, 13 நவம்பர், 2011

HAPPY இன்று முதல் HAPPY !


HAPPY  இன்று முதல் HAPPY


தமிழ்மண நட்சத்திரப் பதிவரின் 
நன்றி அறிவிப்புஅன்புடையீர்,

வணக்கம்.

இந்த வாரம் 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை என்னை தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக அறிவித்து கெளரவப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னால் முடிந்த வரை தினமும் ஒரு புதிய பதிவும், மூன்று மீள் பதிவுகளுமாக ஆகமொத்தம் 27 நட்சத்திரப்பதிவுகள் இந்த வாரத்தில் கொடுக்க முடிந்தது.

இந்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் ஆரம்பித்து, தொடர்ந்து என் வலைப்பூவில் எழுதிவரும் என்னை, முதன் முதலில் தமிழ்மணத்தோடு இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்தவர் [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்கள் தான். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

அதன் பிறகு 2011 மார்ச் மாதத்தில், தாங்களாகவே முன்வந்து, எனக்கு தமிழ்மணம் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவியவர்கள் திருமதி Thirumathi bs Sridhar என்கிற திருமதி ஆச்சி அவர்களும், அவர்களுடைய நண்பர் திரு. K.R.P. செந்தில் குமார் அவர்களுமே. அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


தமிழ்மணத்தில் என் பதிவுகளை எப்படி இணைப்பது என்ற அடிப்படை கணினி அறிவு கூட இல்லாமல் பதிவுகள் எழுதி வந்த என்னை, இன்று தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராகவே தேர்ந்தெடுத்துள்ளதை நினைத்து வியந்து போனேன். உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. அதே சமயம் சற்று அச்சமாகவும் இருந்தது. 

தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவர் என்ற அழைப்பு எனக்குக் கிடைத்ததும், அதை ஏற்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நாட்கள் நான் தயங்கினேன்.

எனக்கு தமிழ்மணத்திலிருந்து வந்திருந்த அழைப்பினை, என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியுமான ஒருவருக்கு அனுப்பி வைத்து ”ஏற்கலாமா? வேண்டாமா?” என்ற என் குழப்பத்தையும் எழுதி, அவர் கருத்தினையும் கேட்டிருந்தேன்.  

இதற்கிடையில் ஏற்கனவே சமீபத்தில் நட்சத்திரப் பதிவராக ஜொலித்த நம் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரிடம் எனக்கிருந்த பல்வேறு சந்தேகங்களைக் கேட்கத்தொடங்கினேன்.அவை எல்லாவற்றிற்கும் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உற்சாகப் படுத்தியதோடு,   கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தயவுசெய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்.

இதற்கிடையில் இந்த விஷயம் வேறொருவர் மூலம், என் எழுத்துலக மானஸீக குருநாதரும், எனக்கு வலைப்பூவை உருவாக்கித் தந்தவருமான என் பேரன்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் காதுக்கு எட்டிவிடவே, அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியதுடன், அவசியம் இந்த அழைப்பை ஏற்கத்தான் வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்து விட்டார். குருநாதருக்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.

அதே நேரம் என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியும் ஆனவரிடமிருந்து எனக்கு ஓர் மின்னஞ்சலில் பதிலும் வந்து விட்டது. அதில் இருந்த மிக அற்புதமான எழுத்துக்கள், சோர்ந்து போயிருந்த என்னைத் தட்டி எழுப்பியது. தளர்ந்து போயிருந்த எனக்கு பேரெழுச்சி ஏற்படுத்தியது. எதிலும் அதிக நாட்டமில்லாமல் இருந்த எனக்கு, தன்நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தை தருவதாக இருந்தது. 


நம் குறைகளைக் கோயிலுக்குப்போய் ஸ்வாமியிடமும், அம்பாளிடமும் மனமுருகி அழுது வேண்டிக்கொண்டால், மனதுக்கு சற்றே அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் ஸ்வாமியோ, அம்பாளோ நம்முடன் ஏதும் நேரிடையாகப் பேசுவதும் இல்லை; நம் கேள்விகளுக்கும், புலம்பல்களுக்கும் பதில் அளிப்பதும் இல்லை.  


”தெய்வம் மனுஷ்ய ரூபேனா” என்பார்கள். [அதாவது தெய்வம் மனித வடிவிலும் இருந்து உதவக்கூடும் என்பது பொருள்] அதற்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம் இந்த என் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகையதொரு பாசம் மிகுந்த நட்பு அமைய நான் எந்த ஜன்மத்தில் என்ன தவம் செய்தேனோ என்று, அடிக்கடி நான் நினைத்து மகிழ்வதுண்டு.  


அவர்கள் அனுப்பிய அந்த ஆத்மார்த்தமான ஆறுதல் அளிக்கும் மின்னஞ்சலில் வந்த பதிலை, அன்று ஓர் இரவு மட்டும், ஒரு 108 தடவைகளாவது, நான் திரும்பத்திரும்ப படித்திருப்பேன்.  அதனையே அருள் வாக்காக எடுத்துக் கொண்டு, என் சம்மதக் கடிதத்தை தமிழ்மணத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன். 


ஆத்மார்த்த அன்புடனும், நட்புடனும் அன்றாடம் பழகி, என் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மனதிற்கு இதமான தீர்வுகள் சொல்லிவரும், தெய்வாம்சம் பொருந்திய அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.


மேற்படி நபரின் அருள் வாக்கு கிடைக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே, என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலுடன் 27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில்கள் பற்றிய படங்கள்+விளக்கங்கள், அகஸ்மாத்தாக நான் சற்றும் எதிர்பாராமல், எனக்கு அவரால் அனுப்பப்பட்டிருந்தன. 


நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எனக்கு, அதுவே நல்ல சகுனம் போலத் தோன்றியது. வாசகர்களில் சிலருக்காவது பயன்படக்கூடுமே என்ற எண்ணத்தில், அவற்றையும் உபயோகப்படுத்தி மொத்தம் 27 பதிவுகளாக வெளியிட்டு விடலாமே என என் உள்மனது சொல்லியது.  அதன் படியே இறையருளும் சேர்ந்து, வெற்றிகரமாக இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகள் என்னால் தர முடிந்தது.


நட்சத்திரப்பதிவர் என்று கேள்விப்பட்டதும், எனக்கு ஏராளமானவர்கள், மின்னஞ்சல் மூலமாகவும், சுட்டிகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, மிகவும் உற்சாகப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.   


குறிப்பாக பதிவுலகப் பிரபலங்களில் ஒருவரான திருமதி சித்ரா சாலமன் அவர்களைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தானும் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் தமிழ்மண நட்சத்திரப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்களின் தற்போதைய சூழ்நிலைகளால் பதிவுகள் பக்கம் அதிகமாக வரமுடிவதில்லை என்பதையும் எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் என்னிடம் அவர்களுக்குள்ள தனிப்பட்ட பிரியத்தினால், இந்த வாரம் வருகை தந்து ஒரு சில பின்னூட்டங்கள் மட்டும் அளித்துள்ளார்கள். [அன்புள்ள சித்ராவுக்கு கோபு மாமாவின் நன்றிகள். ]  


நட்சத்திரப் பதிவரான இந்த வாரத்தின் ஏழு நாட்களுக்குள் ஏழு புதிய பின்தொடர்பவர்கள் [Followers] என் வலைப்பூவில் தேன் அருந்தும் வண்டுகளாக வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


குடும்பத்திலும், அலுவலகத்திலும் மிகப்பெரிய பொறுப்புகள் வகிக்கும் என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள், தினமும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் [27 out of 27] அன்புடன் வருகை தந்து, அருமையாக பின்னூட்டங்கள் அளித்ததுடன், அவ்வப்போது தமிழ்மண Vote ஐ, மறக்காமல் கையோடு பதிவு செய்ததும், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன். 


தினமும் வருகை தந்தவர்களில் பலரும் தமிழ்மணத்தில் எனக்கு சாதகமாக [VOTE] வாக்களித்துச் சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.


இவை எல்லாவற்றையும் விட இந்த வெற்றிக்கு முழுக் காரணம், என் அன்புக்குரிய பதிவர்கள் மற்றும் வாசகர்களாகிய தாங்கள் அனைவருமே, தங்களின் பொன்னான நேரத்தை எனக்காகச் சற்றே ஒதுக்கி, அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்து என்னை உற்சாகப்படுத்தியது மட்டுமே தான் என்று நான் உறுதியாகச் சொல்வேன். 

இவ்வளவு மிகக்குறுகிய காலத்தில், நான் அதிகம் அறிவிப்பு ஏதும் செய்யாமலேயே [அதிகமான பேர்களுக்கு தகவல் ஏதும் கொடுக்காமலேயே ] இவ்வளவு நபர்கள் தொடர்ச்சியாக தினமும் வருகை தந்து ஆதரித்துள்ளது, என்னை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.      


இந்த ஒரு வாரத்தில், நேற்று வரை மட்டும் வருகை புரிந்துள்ள 


ஆண் பதிவர்களின் எண்ணிக்கை:::::::::   50   
பெண் பதிவர்களின் எண்ணிக்கை:::::::::: 29    


ஆக மொத்தம் வருகை 
புரிந்துள்ளோர் எண்ணிக்கை::::::::::::::::::: 79  


இன்று இரவு 8 மணி வரை வந்து குவிந்துள்ள 
பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை:       475

வருகை புரிந்துள்ள என் அன்புக்குரியவர்களின் பெயர் பட்டியல் இதோ:


திருமதிகள்:


01. புதுகைத்தென்றல்
02. இராஜராஜேஸ்வரி
03. மிடில் கிளாஸ் மாதவி
04. கீதா
05. லக்ஷ்மி
06. சித்ரா
07. சாகம்பரி
08. கெளசல்யா
09. ரமாரவி [RAMVI]
10. மனோ சுவாமிநாதன்
11. ராம லக்ஷ்மி
12. ஷைலஜா
13. ஏஞ்சலின்
14. ராஜி
15. கோமதி அரசு
16. அமைதிச்சாரல்
17. ஷக்திப்ப்ரபா ****
18. துளசி கோபால்
19. ஸாதிகா
20. வல்லி சிம்ஹன்
21. அப்பாவி தங்கமணி
22. மாதேவி
23. தேனம்மை லெக்ஷ்மணன்
24. நுண்மதி
25. பிரியா
26. வித்யா சுப்ரமணியம் அவர்கள்
27. thirumathi bs sridhar [ஆச்சி]
28. ஜலீலா கமல் 
29. கோவை2தில்லி

திருவாளர்கள்:


01. வெங்கட் நாகராஜ்
02. சேட்டைக்காரன்
03. பிலாஸபி பிரபாகரன்
04. ஜீவி ஐயா அவர்கள்
05. மோகன் குமார்
06. கே.எஸ்.எஸ்.ராஜ்
07. வேடந்தாங்கல்-கருன்
08. புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள்
09. கணேஷ்
10. ரமணி ஐயா அவர்கள்
11. D. சந்திரமெளலி
12. சூர்ய ஜீவா
13. சீனா ஐயா அவர்கள்
14. மகேந்திரன்
15. நம்பிக்கை பாண்டியன்
16. அப்பாதுரை
17. G M B Sir அவர்கள்
18. ரிஷபன்
19. வவ்வால்
20. விசரன்
21. தோழன் மபா தமிழன் வீதி
22. கவிதை வீதி .. செளந்தர்
23. ஸ்ரீராம்
24. பொதினியிலிருந்து ... பிரபாகரன்
25. Dr.P. Kandaswamy Ph.D., அவர்கள்
26. அமர பாரதி
27. அனந்து
28. சென்னை பித்தன்
29. ஜயராம் தினகரபாண்டியன்
30. என் ராஜபாட்டை .. ராஜா
31. A.R. ராஜகோபாலன்
32. விச்சு
33. தமிழ்வாசி - பிரகாஷ்
34. அவர்கள் உண்மைகள்
35. G சந்தானம் 1610
36. முனைவர் இரா. குணசீலன்
37. சிவகுமாரன்
38. ரத்னவேல் ஐயா அவர்கள்
39. துரை டேனியேல்
40. சுந்தர்ஜி அவர்கள்
41. யானைக்குட்டி@ஞானேந்திரன்
42. மயிலன்
43. கே.பி.ஜனா
44. அரசன்
45. மாய உலகம்
46. வஸிஷ்டன்
47. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
48. கலாநேசன்
49. ஹரணி ஐயா அவர்கள்
50. நிஜாமுதீன்
[**** புதிதாக வருகை தந்துள்ள Ms. ஷக்திபிரபா அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலும், ஊன்றிப்படித்தல் என்ற தனித்தன்மையும், மிகச்சரியாக திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் கருத்துக்களும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன. அவர்களுக்கு என்னுடைய கூடுதல் சிறப்பு நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் **** ]   


மிக அதிகமான பதிவுகளுக்கு வருகை தந்து சிறப்பித்து உதவியவர்களான திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், திரு. ரமணி சார் அவர்கள், திரு. ரிஷபன் சார் அவர்கள், திருமதி ராஜி அவர்கள், திருமதி ஏஞ்சலின் அவர்கள், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள்,  திருமதி ஷக்தி பிரபா அவர்கள், திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள், திருமதி கோமதி அரசு அவர்கள், திருமதி ரமாரவி அவர்கள் மற்றும் திருமதி ஸாதிகா அவர்கள் ஆகிய 11 பேர்களுக்கும் என் கூடுதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 


அவ்வப்போது வந்து என்னைப் பாராட்டி ஆசீர்வதித்த திரு. GMB Sir அவர்கள், திரு ஜீவா சார் அவர்கள், புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள், திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள் ஆகிய நால்வருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கூடிய என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.அனைத்து அன்புள்ளங்களுக்கும் 
என் மனமார்ந்த நன்றிகளைக் 
கூறிக்கொண்டு விடைபெறுகிறேன். 

வணக்கம். 

நம் பதிவுலக நட்பு இன்று போல் என்றும் தொடரட்டும் !என்றும் அன்புடன் தங்கள்,


வை. கோபாலகிருஷ்ணன்
உங்களுக்குப் பிடித்தமானவற்றை 
நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள்.
WELCOME
Bye Bye !

112 கருத்துகள்:

 1. உங்களது பதிவைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

  மிகவும் எதார்த்தமான நன்றி அறிவிப்புப் பதிவு.

  நட்சத்திர பதிவரென்றால், எத்தனை கடினமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். ஒரு வாரம் நாம் பித்து பிடித்தவன் போல்தான் இருக்கவேண்டும்.

  அதுவும் இந்த வயதில் உங்கள் உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

  இந்த அறியத் தருணத்தில் உங்களுக்கு 'சிறுகதைச் செம்மல்' என்ற பட்டத்தினை தமிழன் வீதி சார்பாக வழங்குகின்றேன்.

  வாழ்த்துகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. சூப்பர் கோபு சார்..எனக்கு எல்லாவற்றையும் பிடிக்கும்..தாம்பாளத்தில் தங்கள் சிறுகதை தொகுப்பு வைத்தால், அதைத் தான் முதலில் எடுப்பேனாக்கும்!அப்புறம் தான் அந்த ஸ்வீட் எல்லாம்?

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 3. இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகளை வெளியிட்டு நட்சத்திரமாக ஜொலித்து இருக்கீங்க...

  அத்தனை புகழும் உங்களுக்கே... மேலும் பல வெற்றிகள் உங்களை வந்து சேர வாழ்த்துகள்......

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .இந்த வார முழுதும் மிகவும் அருமையாக அசத்திட்டீங்க .இனிப்பு வகைகள் தந்து உபசரித்ததர்க்கும் மிக்க
  நன்றி .உங்களை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிகொள்கிறேன்

  பதிலளிநீக்கு
 5. நட்சத்திர பதிவர் என்பது எவ்வளவு கடினமான பணி என்பதும், அதனை தாங்கள் மேலும் அதிக சிரமமேற்கொண்டதும் என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. மிகவும் சிறப்பாக - மின் தடை போன்ற சிரமங்கள் வந்தாலும் - தாங்கள் மேற்கொண்ட பணியினை முடித்துவிட்டீர்கள். என்னையும் பாராட்டி குறிப்பிட்டதற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 6. அந்த இனிப்புகளுக்காகவும் மிக்க நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 7. 27 பதிவுகள் வெளியிட்டு நட்சத்திர வாரத்திற்கு மிக அழகாக பெருமை சேர்த்துவிட்டீர்கள். இந்த ஒரு வாரமாக நீங்கள் கொடுத்த சிறப்பான உழைப்பை பாராட்டுகிறேன்.

  வெளியூர் சென்றதினால் உங்களின் எல்லா பதிவுகளையும் படிக்க இயலவில்லை...ஆனால் சேர்த்து படித்துவிடவேண்டும் என்ற முடிவில் இப்போது படிக்க தொடங்கிவிட்டேன்...

  நன்றி தெரிவித்ததில் தவறாமல் எல்லோரையும் குறிப்பிட்ட விதம் மிக இயல்பாக அருமையாக இருந்தது.

  இறுதியில் உபசரிப்பு பிரமாதம்...எனக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால் எல்லாம் எடுத்துக்கொண்டேன். :))

  நன்றிகள்+வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. தமிழ்மண நட்சத்திரப் பதிவராய் ஜொலித்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
  27 நட்சத்திரங்களுக்கும் இணப்பைத் தந்து புதுமை செய்து விட்டீர்கள்.
  மீண்டும் இதே போல் இன்னொரு புதுமையான பதிவுகள் உங்களிடமிருந்து வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன்..

  பதிலளிநீக்கு
 9. உங்க கதைகளைப் போலவே நன்றிப் பதிவு கூட சுவாரஸ்யமாக இருக்கிறது. நிஜமாகவே, தற்கால சூழலில் ஜனரஞ்சகமாக "சிறுகதை எழுதுவது எப்படி" என்று நீங்கள் வகுப்பெடுக்கலாம்.

  நான் தங்கள் வலைப்பதிவின் சுட்டியை "ஜீவா-பூவனம்" அவர்களின் பதிவில் தான் கண்டேன். அதன் பின் ஜி.எம்.பி சார் அவர்களின் பதிவிலும் பார்த்தேன். அடுத்த சில தினங்களில் "நட்சத்திர பதிவராக" தாங்கள் அமர்ந்திருந்தது, மலைப்பாகவும் உங்களின் பதிவுகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஊட்டுவதாகவும் இருந்தது.

  குட்டிக் குட்டி உற்சாங்கங்களே மனிதனை இயங்கவைக்கும் சக்தி. அவ்வகையில் நல்ல சிறுகதை எழுத்தாளருக்கு நானும் ஒரு பங்குக்கு சிறு உற்சாகம் அளித்தேன் என்ற நினனப்பே எனக்கு நிறைவைத் தருகிறது.

  இந்த ஒரு வாரத்தில் உங்கள் கதைகளில் சிலவற்றை என் கணவரிடமும், ஒன்றிரண்டை என் அம்மாவிடமும் பகிர்ந்து, சிலாகித்திருக்கிறேன்.

  உங்கள் நட்சத்திர பதிவுக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த 6 கதைகள் (in that same order)

  1. ஜாங்கிரி
  2. உடம்பெல்லாம் உப்புச்சீடை
  3. பூபாலன்
  4. அப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
  5. நல்ல காலம் பிறக்குது
  6. பிரமோஷன்

  இன்னும் நிறைய எழுதுங்கள். உங்களுக்கு இந்த நட்சத்திரவாரத்திலேயே நிறைய பேர் விசிறிகள் ஆகியிருப்பார்கள்.

  "happy indru muthal happy" என்ற தலைப்பை பார்த்ததும் "அப்பாடா ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சுது, இனி ஜாலி தான்" ன்னு குஷியாகி குதிக்கிற பசங்க நினைவில் வருகிறார்கள். :))) (just for jest :D ) நட்சத்திர பதிவர் என்றால் எளிதானது அல்ல என்பதை பலர் சொல்லி உணர்கிறேன். அதை மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 10. தங்களின் இந்த பதிவு கண்டு ஆச்சர்யமடைந்தேன் சார்.எப்படியோ கடைசியில் பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களில் நானும் இடம் பெற்றுவிட்டதில் மகிழ்ச்சி.உங்கள் உழைப்பை பதிவுலகம் மறக்காது.

  வாழ்த்துக்களுடன் ஆசிகளை வேண்டுகிறேன்.நான் குலாப் ஜாமுனை எடுத்துக்கிட்டேன்.

  பதிலளிநீக்கு
 11. நட்சத்திர வாரத்தை சிறப்பித்த தங்கள் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 12. Ungal kathaikalum side-la korichukka snacks-m nalla combination!!:-))
  Vaazhthukkal!!

  பதிலளிநீக்கு
 13. திறமையும் அறிவாற்றலும் இணைந்த தங்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதே என் கருத்து.

  பதிலளிநீக்கு
 14. 27 நட்சத்திரக்காரர்களுக்கும் பயனுள்ள விதத்தில் பதிவுகளை அமைத்தது மிகச்சிறப்பு..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 15. அருமையான இனிப்புகளின் அணிவகுப்புக்கு மிக்க நன்றி ஐயா..

  பதிலளிநீக்கு
 16. அப்புறம்,

  ஒரு கப் சிப்ஸ், குலாப்ஜாமூன் (ஒன்று) , ஒரு ஸ்பூன் ஹல்வா (கேஸரியா?) ரசித்து சாப்பிட்டேன். அருமையான விருந்துக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 17. Sir!
  Pattiyalil en peyarum kandu peru makizhchi adainthen. Thodarnthu ezhuthungal.
  Enrum aatharavudan,
  ungal Sago.!

  பதிலளிநீக்கு
 18. நம்பவே முடியவில்லை. நடசத்திர வாரத்தில் அதிகப் பதிவுகள் இட்டவர் நீங்கள் ஒருவராகத் தான் இருக்க முடியும். இதில் ஏதாவது ரெகார்ட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மீள்பதிவோ புதுப்பதிவோ எதுவாக இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்து சீர்படுத்தி இணைத்து வெளியிடுவதில் உழைப்பும் நேர்மையும் அவசியம். இதற்காக செலவழிக்க வேண்டுமே என்று அங்கலாய்க்காமல் நேரத்தை ஒதுக்கிடுதல் அவசியம். உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் பொறுமைக்கும் என் வணக்கங்கள். அனைத்துக்கும் மேல், 'நட்சத்திரம்' வித்தியாசமாகச் சிந்தித்து எழுதியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். கடைசியில் கொடுத்த ஸ்வீட் காரங்களில் வகைக்கொன்றாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 19. வாழ்த்துக்கள் சார்.நட்சத்திரபதிவராக மின்னி இறுதியில் நெகிழவைக்கும் பதிவிட்டு படிப்போரை வியக்க வைத்துவிட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 20. வாழ்த்துக்கள் சார் தமிழ்மணம் முதலிடம் பிடித்ததற்கு... தமிழ்மண பட்டியலில் இரண்டாவது இடம் பிடிப்பது என்பது ரொம்பவும் சாதாரணமான விஷயம்... ஆனால் முதலிடம் பிடிப்பது அப்படியல்ல... அது ஏன் என்பது உங்களுக்கே தெரியும்...

  ஒரே வாரத்தில் 27 இடுகைகள் என்பது மிகப்பெரிய சாதனை...

  பதிலளிநீக்கு
 21. அடாடாடாடா.......... நன்றிப் பதிவிலும் புதுமையைப் புகுத்திட்டீங்க!!!!!!

  எல்லாப் பதிவுகளையும் ரசித்துப் படித்தேன். பின்னூட்டம்தான் அதிகம் தரமுடியலை:(

  சிறுகதை மழை அடிச்சுப்பேய்ஞ்சது:-)))))

  இனிய வாரமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சியே!

  பதிலளிநீக்கு
 22. நன்றி அறிவிப்பில் என் பெயரும் சேர்த்ததற்கு ஏன் நன்றிகள். வெற்றிகரமாய் முடித்ததற்கு வாழ்த்துகள். உங்களால் முடியா விட்டால் யாரால் முடிந்திருக்கும்?

  அப்பாதுரை சொல்வது போல இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். அவர் பின்னூட்டத்தையே வழிமொழிகிறேன்.

  பதிலளிநீக்கு
 23. சிறப்பான நட்சத்திர வாரம். நெகிழ்வான நன்றி அறிவிப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 24. //-தோழன் மபா, தமிழன் வீதி said...
  உங்களது பதிவைப் பார்த்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

  மிகவும் எதார்த்தமான நன்றி அறிவிப்புப் பதிவு.

  நட்சத்திர பதிவரென்றால், எத்தனை கடினமானது என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான். ஒரு வாரம் நாம் பித்து பிடித்தவன் போல்தான் இருக்கவேண்டும்.

  அதுவும் இந்த வயதில் உங்கள் உழைப்பு என்னை வியப்பில் ஆழ்த்துகிறது.

  இந்த அறியத் தருணத்தில் உங்களுக்கு 'சிறுகதைச் செம்மல்' என்ற பட்டத்தினை தமிழன் வீதி சார்பாக வழங்குகின்றேன்.

  வாழ்த்துகள் ஐயா.//

  இந்தப் பதிவுக்குத் தங்களின் முதல் வருகைக்கும், அரிய பெரிய கருத்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும், பட்டமளிப்புக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 25. பாராட்டுக்கள் சார் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கின்றோம் பக்கபலமாக தொடர்ந்து பதிவுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. // ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
  சூப்பர் கோபு சார்..எனக்கு எல்லாவற்றையும் பிடிக்கும்..தாம்பாளத்தில் தங்கள் சிறுகதை தொகுப்பு வைத்தால், அதைத் தான் முதலில் எடுப்பேனாக்கும்!அப்புறம் தான் அந்த ஸ்வீட் எல்லாம்?

  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.//

  ஆஹா! தங்களின் கூற்று என்னைக் குதூகலப்படுத்தி விட்டது, ஸ்வாமி!
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. // வெங்கட் நாகராஜ் said...
  இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகளை வெளியிட்டு நட்சத்திரமாக ஜொலித்து இருக்கீங்க...

  அத்தனை புகழும் உங்களுக்கே... மேலும் பல வெற்றிகள் உங்களை வந்து சேர வாழ்த்துகள்......//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் வெங்கட். பயம் தெளிந்து விட்டது.

  HAPPY இன்று முதல் HAPPY!
  [விடுதலை விடுதலை விடுதலை]

  பதிலளிநீக்கு
 28. //angelin said...
  என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த வார முழுதும் மிகவும் அருமையாக அசத்திட்டீங்க. இனிப்பு வகைகள் தந்து உபசரித்ததர்க்கும் மிக்க
  நன்றி.//

  மிகவும் சந்தோஷம் மேடம். எனது 16 ஆவது பதிவான “கொட்டாவி” தவிர அனைத்துப்பதிவுகளுக்கும் பின்னூட்டம் உடனுக்குடன் இட்டு உற்சாகப்படுத்தி இருந்தீர்கள்.[அது படிக்கலாம் என்று தாங்கள் நினைக்கும் போது தங்களுக்கே கொட்டாவி வந்து தூங்கி விட்டீர்களோ என்னவோ! ))))] மிக்க நன்றி.

  //உங்களை உற்சாகமூட்டி எழுத தூண்டிய அந்த நல்ல நட்பிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளை கூறிகொள்கிறேன்//

  மிகவும் சந்தோஷம். அவர்கள் மிகவும் நல்லவர்கள். எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள். உற்சாக டானிக்கை அவ்வப்போது ஊற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பவர்கள்.
  அவர்களும் வாழ்க! அவர்களுக்கும் மறக்காமல் நன்றி கூறியுள்ள தாங்களும் வாழ்க!!
  vgk

  பதிலளிநீக்கு
 29. //சாகம்பரி said...
  நட்சத்திர பதிவர் என்பது எவ்வளவு கடினமான பணி என்பதும், அதனை தாங்கள் மேலும் அதிக சிரமமேற்கொண்டதும் என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது. மிகவும் சிறப்பாக - மின் தடை போன்ற சிரமங்கள் வந்தாலும் - தாங்கள் மேற்கொண்ட பணியினை முடித்துவிட்டீர்கள். என்னையும் பாராட்டி குறிப்பிட்டதற்கு நன்றி சார்.//

  பல்வேறு பொறுப்புக்களில் உள்ள தாங்கள் தினமும் எனக்காக குறைந்தபக்ஷம் ஒரு மணி நேரத்தைச் செலவிட்டுள்ளது என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மேடம். மிகவும் சந்தோஷப்பட்டேன்.

  மேடத்தின் பொன்னான நேரத்தை நாம் வீணடிக்கிறோமோ என கொஞ்சம் சங்கடமும் பட்டேன். நன்றி vgk

  // சாகம்பரி said...
  அந்த இனிப்புகளுக்காகவும் மிக்க நன்றி சார்.//

  செலவில்லாத இனிப்புகள் தானே!
  கண்களுக்கு மட்டுமே அவை விருந்தாகும். நன்றிக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 30. // Kousalya said...
  27 பதிவுகள் வெளியிட்டு நட்சத்திர வாரத்திற்கு மிக அழகாக பெருமை சேர்த்துவிட்டீர்கள். இந்த ஒரு வாரமாக நீங்கள் கொடுத்த சிறப்பான உழைப்பை பாராட்டுகிறேன்.

  வெளியூர் சென்றதினால் உங்களின் எல்லா பதிவுகளையும் படிக்க இயலவில்லை...ஆனால் சேர்த்து படித்துவிடவேண்டும் என்ற முடிவில் இப்போது படிக்க தொடங்கிவிட்டேன்...

  நன்றி தெரிவித்ததில் தவறாமல் எல்லோரையும் குறிப்பிட்ட விதம் மிக இயல்பாக அருமையாக இருந்தது.

  இறுதியில் உபசரிப்பு பிரமாதம்...எனக்கு எல்லாம் பிடிக்கும் என்பதால் எல்லாம் எடுத்துக்கொண்டேன். :))

  நன்றிகள்+வாழ்த்துக்கள்//

  அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.

  எனக்குப்பிடித்த தெய்வம் ஸ்ரீராமரைப் பெற்ற தாயார் முதல் நாள் வந்ததோடு சரி, பிறகு காணோமே எனக் கவலைப் பட்டேன். நீங்கள் அந்தக் கெளசல்யா போல அயோத்தியிலும், நான் ஸ்ரீராமர் போல வனவாஸத்திலும் [தமிழ்மணத்திலும்] இருந்துள்ளேன் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன். நன்றி vgk

  பதிலளிநீக்கு
 31. // ரிஷபன் said...
  தமிழ்மண நட்சத்திரப் பதிவராய் ஜொலித்த தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

  27 நட்சத்திரங்களுக்கும் இணைப்பைத் தந்து புதுமை செய்து விட்டீர்கள்.
  மீண்டும் இதே போல் இன்னொரு புதுமையான பதிவுகள் உங்களிடமிருந்து வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன்..//

  என் எழுத்துலக குருநாதருக்கு வணக்கங்கள். எல்லாம் நீங்கள் தட்டி விட்டது தான். எல்லாப்புகழும் உங்களுக்கே! அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 32. // Shakthiprabha said...
  உங்க கதைகளைப் போலவே நன்றிப் பதிவு கூட சுவாரஸ்யமாக இருக்கிறது. நிஜமாகவே, தற்கால சூழலில் ஜனரஞ்சகமாக "சிறுகதை எழுதுவது எப்படி" என்று நீங்கள் வகுப்பெடுக்கலாம்.

  நான் தங்கள் வலைப்பதிவின் சுட்டியை "ஜீவா-பூவனம்" அவர்களின் பதிவில் தான் கண்டேன். அதன் பின் ஜி.எம்.பி சார் அவர்களின் பதிவிலும் பார்த்தேன். அடுத்த சில தினங்களில் "நட்சத்திர பதிவராக" தாங்கள் அமர்ந்திருந்தது, மலைப்பாகவும் உங்களின் பதிவுகளை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஊட்டுவதாகவும் இருந்தது.

  குட்டிக் குட்டி உற்சாங்கங்களே மனிதனை இயங்கவைக்கும் சக்தி. அவ்வகையில் நல்ல சிறுகதை எழுத்தாளருக்கு நானும் ஒரு பங்குக்கு சிறு உற்சாகம் அளித்தேன் என்ற நினனப்பே எனக்கு நிறைவைத் தருகிறது.

  இந்த ஒரு வாரத்தில் உங்கள் கதைகளில் சிலவற்றை என் கணவரிடமும், ஒன்றிரண்டை என் அம்மாவிடமும் பகிர்ந்து, சிலாகித்திருக்கிறேன்.

  உங்கள் நட்சத்திர பதிவுக் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த 6 கதைகள் (in that same order)

  1. ஜாங்கிரி
  2. உடம்பெல்லாம் உப்புச்சீடை
  3. பூபாலன்
  4. அப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்
  5. நல்ல காலம் பிறக்குது
  6. பிரமோஷன்

  இன்னும் நிறைய எழுதுங்கள். உங்களுக்கு இந்த நட்சத்திரவாரத்திலேயே நிறைய பேர் விசிறிகள் ஆகியிருப்பார்கள்.

  "happy indru muthal happy" என்ற தலைப்பை பார்த்ததும் "அப்பாடா ஒரு வழியா எக்ஸாம் முடிஞ்சுது, இனி ஜாலி தான்" ன்னு குஷியாகி குதிக்கிற பசங்க நினைவில் வருகிறார்கள். :))) (just for jest :D ) நட்சத்திர பதிவர் என்றால் எளிதானது அல்ல என்பதை பலர் சொல்லி உணர்கிறேன். அதை மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்!//

  தங்களின் பின்னூட்டங்களைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். குறிப்பாக “எட்டாக்கனிகள்” என்ற கதைக்கு நீங்கள் எழுதியுள்ளதை மிகவும் ரஸித்தேன்.

  பொதுவாக கதாபாத்திரங்கள் சிற்சில சமயங்களில் பேசுவதை ஒருவித நகைச்சுவையாக எழுதும் போது, சிலர் கதை ஆசிரியரே பேசுவது போல தவறாக எடுத்துக்கொள்கிறார்கள்.

  அதுபோல சில கதைகளை சுபமாக முடிக்க முடியாமல் போவதுண்டு. அதனால் உருக்கமாக சில சம்பவங்களைக் கொண்டுவர வேண்டியதாக இருக்கும். அதை பெரும்பாலானோர் விரும்புவதில்லை.

  Positive ஆக சுபமாக முடிப்பதையே பலரும் விரும்புவதால், என்னுடைய சில கதைகளை நான் வெளியிட தயங்குகிறேன்.

  தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். நன்றி. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 33. // thirumathi bs sridhar said...
  தங்களின் இந்த பதிவு கண்டு ஆச்சர்யமடைந்தேன் சார்.எப்படியோ கடைசியில் பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களில் நானும் இடம் பெற்றுவிட்டதில் மகிழ்ச்சி.உங்கள் உழைப்பை பதிவுலகம் மறக்காது.

  வாழ்த்துக்களுடன் ஆசிகளை வேண்டுகிறேன்.நான் குலாப் ஜாமுனை எடுத்துக்கிட்டேன்//

  உங்களை நான் எங்கெல்லாம் தேடுவது? போன் செய்தால் எப்போதும் switch off செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகிறது. மெயில் கொடுத்தால் பார்ப்பதில்லை.
  ஹரியானாவில் இருக்கிறீர்களா? நாகப்பட்டிணத்தில் இருக்கிறீர்களா? என்று ஒன்றுமே புரியவில்லை.

  பிறகு ஒருவழியாக சென்ற வாரம் ஏதோ ஒரே ஒரு நாள் மட்டுமே பேச முடிந்தது. அனைத்துப்பதிவுகளுக்கும்
  தமிழ்மணத்தில் வோட் அளித்து விட்டதாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி. கடைசி ஓரிரு நாட்கள் மட்டுமாவது வந்து பின்னூட்டம் கொடுத்தீர்களே, அதுவே சந்தோஷம்.

  தங்கள் குழந்தை அம்ருதாக்குட்டி எப்படி இருக்கிறாள்? அவளுக்கும் ஸ்வீட் கொடுத்தீர்களா? நீங்களே finish செய்து விட்டீர்களா?

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 34. //இராஜராஜேஸ்வரி said...
  திறமையும் அறிவாற்றலும் இணைந்த தங்களுக்கு இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பதே என் கருத்து.//

  தாங்கள் இதுபோல அவ்வப்போது ஏதாவது சொல்லிச்சொல்லியே ........)))))

  எனக்கு இப்போதெல்லாம் ராத்தூக்கம் இல்லாமல் போய் விட்டது. நன்றி.

  பதிலளிநீக்கு
 35. //middleclassmadhavi said...
  Ungal kathaikalum side-la korichukka snacks-m nalla combination!!:-))
  Vaazhthukkal!!//

  Correct.
  கவிஞர் கண்ணதாசனுக்கு சரக்கு ஏற்றிய பிறகே, பாடல்களுக்கான வரிகள் சரளமாக வந்து விழுமாம்.

  அதுபோலத்தான் எனக்கும், எப்போதும் கொரிக்க ஏதாவது பக்கத்தில் இருக்க வேண்டும். ஆனால் இப்போதெல்லாம் மிகவும் குறைத்துக்கொண்டு விட்டேன்.

  நன்றி. vgk

  பதிலளிநீக்கு
 36. //இராஜராஜேஸ்வரி said...
  நட்சத்திர வாரத்தை சிறப்பித்த தங்கள் அருமையான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

  நன்றி! நன்றி!! நன்றி!!!

  08.11.2011 நான் வெளியிட்ட நான்கு பதிவுகளுக்கு தாங்கள் வருகை தராததில் எனக்கு அழுகையே வந்து விட்டது. பிறகு அதற்கு ஏதேதோ காரணங்கள் சொன்னீர்கள். நம்புகிறேன்....... நன்றி.

  பதிலளிநீக்கு
 37. //இராஜராஜேஸ்வரி said...
  27 நட்சத்திரக்காரர்களுக்கும் பயனுள்ள விதத்தில் பதிவுகளை அமைத்தது மிகச்சிறப்பு..

  பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்..//

  ஆன்மீகத்தின் மேல் தொடர்ந்து எனக்கு ஆசை ஏற்பட வைத்ததே தங்களின் அழகழகான அன்றாடப் பதிவுகளால் மட்டுமே. நன்றி.

  பதிலளிநீக்கு
 38. //இராஜராஜேஸ்வரி said...
  அருமையான இனிப்புகளின் அணிவகுப்புக்கு மிக்க நன்றி ஐயா..//

  இது மிகவும் இனிப்பான செய்தி.
  இனிப்பு எல்லாம் உங்களுக்கே....
  காரம் மட்டுமே எனக்கு .........

  அதான் அவ்வப்போது தந்து கொண்டிருக்கிறீர்களே, ஏதாவது
  காரசாரமாக!

  பதிலளிநீக்கு
 39. // Shakthiprabha said...
  அப்புறம்,

  ஒரு கப் சிப்ஸ், குலாப்ஜாமூன் (ஒன்று) , ஒரு ஸ்பூன் ஹல்வா (கேஸரியா?) ரசித்து சாப்பிட்டேன். அருமையான விருந்துக்கு நன்றி!//

  மிகவும் சந்தோஷம்!
  மீண்டும் வருகைக்கு நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 40. // துரைடேனியல் said...
  Sir!
  Pattiyalil en peyarum kandu peru makizhchi adainthen. Thodarnthu ezhuthungal.
  Enrum aatharavudan,
  ungal Sago.!//

  தங்களின் ஆதரவுக்கு நன்றிகள்.
  தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 41. //அப்பாதுரை said...
  நம்பவே முடியவில்லை. நடசத்திர வாரத்தில் அதிகப் பதிவுகள் இட்டவர் நீங்கள் ஒருவராகத் தான் இருக்க முடியும். இதில் ஏதாவது ரெகார்ட் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.//

  அப்படியா! மிக்க மகிழ்ச்சி. தாங்களே பார்த்துச் சொல்லவும். ஏதாவது தெரிந்தால் மெயில் கொடுக்கவும்.
  என் ஈ.மெயில் விலாசம்:
  valambal@gmail.com

  // மீள்பதிவோ புதுப்பதிவோ எதுவாக இருந்தாலும், அதைத் தேர்ந்தெடுத்து சீர்படுத்தி இணைத்து வெளியிடுவதில் உழைப்பும் நேர்மையும் அவசியம். இதற்காக செலவழிக்க வேண்டுமே என்று அங்கலாய்க்காமல் நேரத்தை ஒதுக்கிடுதல் அவசியம்.//

  உண்மை தான். தாங்கள் சொல்வது சரியே.

  //உங்கள் உழைப்புக்கும் நேர்மைக்கும் பொறுமைக்கும் என் வணக்கங்கள். அனைத்துக்கும் மேல், 'நட்சத்திரம்' வித்தியாசமாகச் சிந்தித்து எழுதியதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். கடைசியில் கொடுத்த ஸ்வீட் காரங்களில் வகைக்கொன்றாக எடுத்துக் கொள்கிறேன். நன்றி.//

  ரொம்ப சந்தோஷம். மிக்க நன்றி.vgk

  பதிலளிநீக்கு
 42. // ஸாதிகா said...
  வாழ்த்துக்கள் சார்.நட்சத்திரபதிவராக மின்னி இறுதியில் நெகிழவைக்கும் பதிவிட்டு படிப்போரை வியக்க வைத்துவிட்டீர்கள்.//

  ரொம்பவும் சந்தோஷம்.
  மிக்க நன்றி.
  தாங்கள் அனைத்து 27 பதிவுகளுக்கும் வருகை தருவீர்கள் என எதிர்பார்த்தேன். பரவாயில்லை. படிக்குப்பாதியாவது வந்துள்ளீர்கள். மகிழ்ச்சி. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 43. // Philosophy Prabhakaran said...
  வாழ்த்துக்கள் சார் தமிழ்மணம் முதலிடம் பிடித்ததற்கு... தமிழ்மண பட்டியலில் இரண்டாவது இடம் பிடிப்பது என்பது ரொம்பவும் சாதாரணமான விஷயம்... ஆனால் முதலிடம் பிடிப்பது அப்படியல்ல... அது ஏன் என்பது உங்களுக்கே தெரியும்...

  ஒரே வாரத்தில் 27 இடுகைகள் என்பது மிகப்பெரிய சாதனை...//

  நன்றி சார்.

  இந்த முதலிடம் இரண்டாம் இடம் பற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

  நான் முதலிடம் பிடித்துள்ளதாக நீங்கள் எதை வைத்துச் சொல்லுகிறீர்கள்?


  தயவுசெய்து அதைப்பற்றி விரிவாக எனக்கு மெயிலில் தெரிவிக்கவும். என் மெயில் விலாசம்:

  valambal@gmail.com

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 44. // துளசி கோபால் said...
  அடாடாடாடா.......... நன்றிப் பதிவிலும் புதுமையைப் புகுத்திட்டீங்க!!!!!!

  எல்லாப் பதிவுகளையும் ரசித்துப் படித்தேன். பின்னூட்டம்தான் அதிகம் தரமுடியலை:(

  சிறுகதை மழை அடிச்சுப்பேய்ஞ்சது:-)))))

  இனிய வாரமாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சியே!//

  அப்படியா?
  ரொம்ப ரொம்ப சந்தோஷம்.
  மிக்க நன்றி. அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 45. அன்பரே!
  நட்சத்திரப் பதிவராகி
  கடந்த ஒரு வார பணியினை
  வெற்றிகரமாக முடித்துத்
  திரும்பியுள்ள தங்களுக்கு முதற்கண்
  என் வணக்கத்தையும் வாழ்த்தையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்
  என் பால் தாங்கள் கொண்டுள்ள
  அன்புக்கும் பாசத்திற்கும்
  என்றும் நன்றி உரியது!

  புலவர் சா இராமாநுசம்

  பதிலளிநீக்கு
 46. // DrPKandaswamyPhD said...
  பாராட்டுக்கள்.//

  நன்றி அறிவிப்பில் நான் தங்கள் பெயரையும் நியாயமாக Highlight செய்து கொண்டு வந்திருக்கணும்.

  ஏதோ ஒரு குறைபோல விட்டுப்போய் விட்டது. மன்னிக்கவும். குறையில்லாமல் செய்து விட்டால் பிறர் அதற்கும் பொறாமைப்படக்கூடும் என்பதால், அது போல விடு பட்டுப்போயிருக்குமோ என்னவோ.

  Anyhow Thank you very much, Sir.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 47. //Chitra said...
  Congratulations!!!!

  Thank you for the yummy treats... :-)//

  மிகவும் சந்தோஷம் சித்ரா!

  தாங்கள் ஒருசில பதிவுகளுக்காவது வருகை தந்தது எல்லோரையுமே
  உண்மையில் பிரமிக்க வைத்திருக்கும்.

  அதற்கு என் நன்றிகள்.

  அன்புடன்
  கோபு மாமா

  பதிலளிநீக்கு
 48. // ஸ்ரீராம். said...
  நன்றி அறிவிப்பில் என் பெயரும் சேர்த்ததற்கு ஏன் நன்றிகள். வெற்றிகரமாய் முடித்ததற்கு வாழ்த்துகள். உங்களால் முடியா விட்டால் யாரால் முடிந்திருக்கும்?

  அப்பாதுரை சொல்வது போல இது ஒரு சாதனையாகத்தான் இருக்கும் என்று நானும் நினைக்கிறேன். அவர் பின்னூட்டத்தையே வழிமொழிகிறேன்.//

  மிகவும் சந்தோஷம்!

  ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்!!

  vgk

  பதிலளிநீக்கு
 49. //ராமலக்ஷ்மி said...
  சிறப்பான நட்சத்திர வாரம். நெகிழ்வான நன்றி அறிவிப்பு. மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!//

  ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம், மேடம். நன்றி.

  பதிலளிநீக்கு
 50. // K.s.s.Rajh said...
  பாராட்டுக்கள் சார் தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் இருக்கின்றோம் பக்கபலமாக தொடர்ந்து பதிவுலகில் சாதிக்க வாழ்த்துக்கள்//

  ஆஹா! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்:

  தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
  என்பதை எனக்கு புரிய வைத்து விட்டீர்கள்.

  முயற்சிக்கிறேன்.

  நன்றி உங்களுக்கும் உங்களின் ஆதரவான பக்கபலத்திற்கும்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 51. //புலவர் சா இராமாநுசம் said...
  அன்பரே!
  நட்சத்திரப் பதிவராகி
  கடந்த ஒரு வார பணியினை
  வெற்றிகரமாக முடித்துத்
  திரும்பியுள்ள தங்களுக்கு முதற்கண்
  என் வணக்கத்தையும் வாழ்த்தையும்
  தெரிவித்துக் கொள்கிறேன்
  என் பால் தாங்கள் கொண்டுள்ள
  அன்புக்கும் பாசத்திற்கும்
  என்றும் நன்றி உரியது!

  புலவர் சா இராமாநுசம்//

  நமஸ்காரங்கள் ஐயா.

  தங்கள் ஆசீர்வாதங்கள்+அன்பு சேர்ந்து எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

  நன்றியுடன் vgk

  பதிலளிநீக்கு
 52. இனிய நல்வாழ்த்துக்கள்!

  அனைத்துப்பதிவுகளுமே மிக‌ச் சிறப்பாக இருந்தன! எல்லாவற்றுக்கும் மேல் உங்களின் சுறுசுறுப்பும் திட்டமிடலும் உழைப்பும் அதன் வழியே அதி விரைவாக பதிவுகள் இட்டதும் பிரமிக்க வைக்கின்றன!

  விர‌ல் வ‌லி பிர‌ச்சினையாலும் தொடர் அலைச்சல்களினாலும் உடல் நலமின்மையாலும் நான் அடிக்க‌டி வந்து பின்னூட்ட‌மிட‌ முடிய‌வில்லையே த‌விர‌, ஒவ்வொரு நாளும் த‌ங்க‌ளின் ப‌திவுக‌ளை ர‌சித்துக்கொண்டே இருந்தேன்.

  இனிப்புக‌ளின் அணிவகுப்பு பிரமாத‌ம்!

  பதிலளிநீக்கு
 53. //மனோ சாமிநாதன் said...
  இனிய நல்வாழ்த்துக்கள்!

  அனைத்துப்பதிவுகளுமே மிக‌ச் சிறப்பாக இருந்தன! எல்லாவற்றுக்கும் மேல் உங்களின் சுறுசுறுப்பும் திட்டமிடலும் உழைப்பும் அதன் வழியே அதி விரைவாக பதிவுகள் இட்டதும் பிரமிக்க வைக்கின்றன!

  விர‌ல் வ‌லி பிர‌ச்சினையாலும் தொடர் அலைச்சல்களினாலும் உடல் நலமின்மையாலும் நான் அடிக்க‌டி வந்து பின்னூட்ட‌மிட‌ முடிய‌வில்லையே த‌விர‌, ஒவ்வொரு நாளும் த‌ங்க‌ளின் ப‌திவுக‌ளை ர‌சித்துக்கொண்டே இருந்தேன்.

  இனிப்புக‌ளின் அணிவகுப்பு பிரமாத‌ம்!//

  ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம்.
  நம் ஒருவருக்கொருவர் உள்ள பிரச்சனைகள் தான் நம் இருவருக்குமே நன்றாகத் தெரியுமே. அதனால் பரவாயில்லை மேடம்.
  புரிந்து கொண்டேன். அனைத்தையும் படித்தது கேட்க மிக்க மகிழ்ச்சி.

  நன்றி, நன்றி, நன்றி.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 54. மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
  அமிதாப் பச்சன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை
  ஸ்வீட் எடு கொண்டாடு என்ற காரணத்தால்

  பதிலளிநீக்கு
 55. வாழ்த்துக்கள்.

  இந்த மகிழ்ச்சி உங்கள் சிந்தனைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
  தொடர பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 56. தமிழ்மண நட்சத்திரப் பதிவராக சிறப்பாக
  செயல்பட்டமைக்கு எனது வாழ்த்துக்கள்.இந்த ஒரு வாரமும் தங்களது பதிவுகளை இனிதே படித்து மகிழ்ந்தோம்.27 நட்சத்திரங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களுடன் தகவல்கள் அளித்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.இறுதியாக இந்த பதிவில் எனது பெயரை குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 57. // suryajeeva said...
  மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
  அமிதாப் பச்சன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை
  ஸ்வீட் எடு கொண்டாடு என்ற காரணத்தால்//

  தங்கள் ஆதரவான பதிலுக்கு மிக்க நன்றி, சார்.

  தங்களின் பின்னூட்டங்கள் மூலம் தாங்கள் ஆழ்ந்த வாசிப்பு அனுபவமுள்ளவர் என்பதையும், சமூக சிந்தனைகள் உடையவர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

  வாழ்த்துக்கள். நன்றிகள்.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 58. // இந்திரா said...
  வாழ்த்துக்கள்.

  இந்த மகிழ்ச்சி உங்கள் சிந்தனைக்கும் உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
  தொடர பாராட்டுக்கள்.//

  என் பேத்தி போன்று உங்கள் வலைப்பூப் படத்தில் தோற்றமளிப்பதால், என் பேத்தியைப் பார்க்க மட்டுமே, உங்கள் வலைப்பூவுக்கு நான் அடிக்கடி வருவதுண்டு.

  அன்புப் பேத்தியிடம் அருமைத் தாத்தாவுக்கு உரிமை உண்டு தானே?

  உரிமையுடன் சொல்கிறேன்:

  உங்களுடன் நான் “டூ - காய்”.

  [என்னுடைய நட்சத்திரப்பதிவுகள் எதற்குமே நீங்கள் வராததனால்.]

  ஆனாலும் அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 59. raji said...
  //தமிழ்மண நட்சத்திரப் பதிவராக சிறப்பாக
  செயல்பட்டமைக்கு எனது வாழ்த்துக்கள்.//

  ரொம்ப சந்தோஷம்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  //இந்த ஒரு வாரமும் தங்களது பதிவுகளை இனிதே படித்து மகிழ்ந்தோம்.//

  எவ்வளவோ குடும்பப் பொறுப்புக்களிடையே தாங்கள் தினமும் வருகை தந்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது.

  ஒரு காலக்கட்டத்தில் தாங்கள் பின்னுட்டம் எழுதாவிட்டால் என் அடுத்த பதிவையே நான் வெளியிடாமல் இருந்ததும் உண்டு.

  பிறகு தாங்கள் தான் கூறினீர்கள் அதுபோல செய்யக்கூடாது என்று.

  என் மனதுக்குப்பிடித்த சிலருடன் பழகி விட்டு, பிறகு அவர்கள் பாராமுகமாக இருந்தால் என்னால் அதை தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. அதுபோல ஓர் குழந்தை மனம் கொண்டவன் நான். மிகவும் கஷ்டப்பட்டு என்னை நானே இப்போதெல்லாம் மாற்றிக்கொண்டு வருகிறேன்.

  //27 நட்சத்திரங்களுக்குரிய வழிபாட்டுத் தலங்களுடன் தகவல்கள் அளித்து எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.//

  உண்மையிலேயே 27 ஆவது பதிவை உங்களுக்காகவே மிகவும் கஷ்டப்பட்டு [மிகப்பெரிய பதிவாகையால்] கொண்டு வந்தேன். அதற்கு தாங்கள் முன்பு, எழுதியிருந்த பின்னூட்டங்களை என்னால் மறக்க முடியாதே!

  //இறுதியாக இந்த பதிவில் எனது பெயரை குறிப்பிட்டமைக்கும் மிக்க நன்றி//

  அவ்வாறு குறிப்பிடாவிட்டால் நான் நன்றியில்லாதவன் என்றல்லவா ஆகிவிடும்.

  திருமதி சாகம்பரி அவர்களுக்குப்பிறகு மிக மிக அதிகமான பதிவுக்கு வந்தவர்கள் என்ற பெருமை உங்களுக்கும், திருமதி ஏஞ்சலினுக்கும் மட்டுமே பொருந்தும்.

  [Both of you 26 / 27]

  நன்றி, நன்றி, நன்றி.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 60. Dear Mr Gopalakrishnan
  I am happy for you to have been awarded this title by Tamizh Manam. During the last few weeks, I have been an avid reader of your writings. Your stories make nostalgic reading, and remind me of my teenage years when I used to read such "good-feel" short stories in Kalki, Kalaimagal and Vikatan. Who wouldn't like to return to our youth? The story "Udambellam Uppucheedai" touched the raw nerves of my being, and I rate it as the best. My hearty congratulations to you again.

  பதிலளிநீக்கு
 61. நட்சத்திர பதிவு எல்லாமே மிக அருமையான பதிவுகள்.
  "தமிழ் மனம் " மிகச்சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது .

  பாராட்டுக்கள் .

  படிப்பவர்களுக்கு மேன் மேலும் ஆர்வத்தை தூண்டும் உங்கள் எழுத்து நடை , பொருத்தமான படங்கள்,
  உபயோகமான குறிப்புகள் எல்லாமே பிரமாதம் .

  புதிதாய் பதிவுகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு நீங்கள் சிறந்த வழி காட்டி.

  அலுவல் காரணமாக அடிக்கடி உங்கள் வலை தளத்திற்கு வர இயலாமைக்கு வருந்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 62. D. Chandramouli said...
  Dear Mr Gopalakrishnan

  //I am happy for you to have been awarded this title by Tamizh Manam.//

  Thank you very much Sir.

  //During the last few weeks, I have been an avid reader of your writings. Your stories make nostalgic reading, and remind me of my teenage years when I used to read such "good-feel" short stories in Kalki, Kalaimagal and Vikatan. Who wouldn't like to return to our youth?//

  நல்ல சந்தோஷமான மனநிலையும், தொந்தரவு ஏதும் இல்லாத ரம்யமான சூழலும் இருந்து நான் எழுத அமரும் போது நானும், தாங்கள் சொல்வது போல ஒரு இளைஞனாகவே மாறி விடுவதுண்டு. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து, மனதில் ஒரு உற்சாகம் ஏற்பட்டு, புதுப்புது வார்த்தைகள் தோன்றி அவற்றை கோர்வையாகக் கொண்டுவந்து, கதையில் புகுந்து என்னையறியாமலேயே என் விரல்கள் கணிணியில் சுலபமாகத் தட்டி விட வழிசெய்கின்றன. எல்லாம் இறையருள் மட்டுமே காரணம்.

  // The story "Udambellam Uppucheedai" touched the raw nerves of my being, and I rate it as the best.//

  அது பலராலும் பாராட்டப்பட்ட கதை தான். அதை நான் எழுதியதின் பிண்ணனியே ஒரு மிகப்பெரிய கதை தான். அதைப்பற்றி என்னுடைய ஜனவரி பிப்ரவரி மாத ஒரிஜினல் பதிவில் [பாகம் 1 முதல் 8 வரை]
  பின்னூட்டம் கொடுத்திருந்தவர்களுக்கு கொடுத்த பதிலில் எழுதியதாக ஞாபகம். முடிந்தால் பாருங்கள்.
  February 2011 இல் வெளியான இறுதிப் பகுதியின் கடைசியில் இருக்கும் என்று நினைக்கிறேன்.

  இந்தக்கதை கன்னட மொழியில் என் நண்பர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டு, கன்னடப்பத்திரிகை மஞ்சரியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

  //My hearty congratulations to you again.//

  THANK YOU VERY MUCH, Sir.

  vgk

  பதிலளிநீக்கு
 63. மென்மேலும் உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 64. கணேஷ் said...
  //நட்சத்திர பதிவு எல்லாமே மிக அருமையான பதிவுகள்.
  "தமிழ் மனம் " மிகச்சரியான நபரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளது .

  பாராட்டுக்கள்//

  மிக்க நன்றி, கணேஷ். .

  //படிப்பவர்களுக்கு மேன் மேலும் ஆர்வத்தை தூண்டும் உங்கள் எழுத்து நடை, பொருத்தமான படங்கள்,
  உபயோகமான குறிப்புகள் எல்லாமே பிரமாதம்//

  அப்படியா! ரொம்ப சந்தோஷம், கணேஷ். .

  //புதிதாய் பதிவுகள் செய்ய ஆர்வம் உள்ளவர்களுக்கு நீங்கள் சிறந்த வழி காட்டி.//

  அதெல்லாம் ஒன்றும் இல்லை.
  நான் மிகச்சாதாரணமானவன் தான்.

  //அலுவல் காரணமாக அடிக்கடி உங்கள் வலை தளத்திற்கு வர இயலாமைக்கு வருந்துகிறேன்.//

  பரவாயில்லை கணேஷ். நம் மிகப்பெரிய ஆலமரம் போன்ற குடும்பத்தில், நீ ஒருவனாவது என் பதிவுகளை அவ்வப்போது படிப்பதும், அதைப்பற்றி மகிழ்வுடன் எப்போதாவது, பகிர்ந்து கொள்வதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.

  என் ஆத்திலேயே என் மனைவி குழந்தைகள் உள்பட நான் என்ன செய்கிறேன் என்றே ஒருவருக்கும் இதுவரை தெரியாது. ஏதோ எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டரில் அமர்ந்திருப்பதாக ஒரு சலிப்பு மட்டும் அவர்களிடம் உண்டு. என்ன செய்வது? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு டேஸ்ட்.

  உன் அம்மா என் எழுத்துக்களின் பரம ரசிகை. ஆனால் அவர்களால், கம்ப்யூட்டரில் அமர்ந்து படிப்பது கஷ்டம். இதுவரை நான் வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பு நூல்கள் + பத்திரிகைகளில் வெளியானவை எல்லாவற்றையும் படித்துப்பார்த்து, வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்கள்.

  அதுபோலவே நீயும் இருக்கிறாய்.

  சுமார் 100 பேர்களுக்கு மேல் உள்ள நம் நெருங்கிய உறவுகளில் நீயும், உன் அம்மாவும் மட்டுமாவது என்னைப் புரிந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சியே.

  நீ வெளிநாட்டில் வேலையில் இருப்பதால், உன்னால் அடிக்கடி என் பதிவுகளைப் படிப்பது கொஞ்சம் கஷ்டமே என்பது எனக்கும் புரிகிறது.

  உன் மனைவி மற்றும் குழந்தைகளைக் விசாரித்ததாக்ச் சொல்லவும். அனைவருக்கும் என் அன்பான ஆசிகள்.
  Yours affectionately,
  vgk

  பதிலளிநீக்கு
 65. // ananthu said...
  மென்மேலும் உங்கள் எழுத்து பயணம் தொடர வாழ்த்துக்கள் ...//

  ரொம்ப சந்தோஷம்.
  மிக்க நன்றி.
  vgk

  பதிலளிநீக்கு
 66. நட்சத்திர பதிவை சிறப்பாய் தந்து அதற்கு வருகை தந்த எங்களுக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்வில் பங்கு பெற செய்த உங்களுக்கு நன்றி சார்.

  நான் இப்போது என் மகள் ஊர் டெல்லிக்கு வந்து இருக்கிறேன் அதிக நேரம் இணையத்தில் இருக்க முடியவில்லை இருந்தாலும் உங்கள் பதிவுகளை முடிந்தவரை படித்து விட்டேன்.

  உங்கள் நன்றிக்கும் நன்றி.

  வாழ்த்துக்கள் சிறப்பான கதைகளுக்கு.

  பதிலளிநீக்கு
 67. உங்களைத் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.

  http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post_14.html

  பதிலளிநீக்கு
 68. இடுகைகளிலும் சரி.. நன்றியறிவிப்பிலும் சரி.. புதுமையைப் புகுத்தியிருக்கீங்க. உங்க சாதனையை அடுத்த தடவை நீங்களே நட்சத்திரமாகும்போது முறியடிச்சாத்தான் உண்டு :-)))

  பதிலளிநீக்கு
 69. கோமதி அரசு said...
  //நட்சத்திர பதிவை சிறப்பாய் தந்து அதற்கு வருகை தந்த எங்களுக்கும் இனிப்பு கொடுத்து மகிழ்வில் பங்கு பெற செய்த உங்களுக்கு நன்றி சார்.//

  மிகவும் சந்தோஷம் மேடம்.

  //நான் இப்போது என் மகள் ஊர் டெல்லிக்கு வந்து இருக்கிறேன் அதிக நேரம் இணையத்தில் இருக்க முடியவில்லை இருந்தாலும் உங்கள் பதிவுகளை முடிந்தவரை படித்து விட்டேன்.//

  கவனித்தேன். 11 பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டம் இட்டிருந்தீர்கள்.
  நடுவில் காணாமல் போய் விட்டீர்கள் என்ற போதே சந்தேகித்தேன். அதனால் பரவாயில்லை. நன்றி.

  //உங்கள் நன்றிக்கும் நன்றி.

  வாழ்த்துக்கள் சிறப்பான கதைகளுக்கு.//

  மிக்க நன்றி. பார்ப்போம். அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 70. அமைதிச்சாரல் said...
  //உங்களைத் தொடர்பதிவுக்கு அழைச்சிருக்கேன்.

  http://amaithicchaaral.blogspot.com/2011/11/blog-post_14.html//

  மிக்க நன்றி. முயற்சிக்கிறேன்.


  அமைதிச்சாரல் said...

  //இடுகைகளிலும் சரி.. நன்றியறிவிப்பிலும் சரி.. புதுமையைப் புகுத்தியிருக்கீங்க//

  உங்களிடமிருந்து இதைக் கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

  //உங்க சாதனையை அடுத்த தடவை நீங்களே நட்சத்திரமாகும்போது முறியடிச்சாத்தான் உண்டு :-)))//

  அடடா! ஏன் இப்படி?

  உங்களுக்கு என் மேல் என்ன கோபமோ? ஏதாவது சொல்லி ஒரேயடியாக என்னை பயமுறுத்துகிறீர்களே! நியாயமா?

  மிக்க நன்றி, மேடம்.
  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 71. 'க‌த்தி'யில் தொட‌ங்கி "வாள்' ஆகியிருக்கிறது த‌ளம்.
  ஏவுக‌ணையா(க்)க காத்திருக்கிற‌த்து கால‌ம்/க‌ள‌ம்.
  வாழ்த்துக்க‌ள் வைகோ சார்.

  பதிலளிநீக்கு
 72. vasan said...
  //'க‌த்தி'யில் தொட‌ங்கி "வாள்' ஆகியிருக்கிறது த‌ளம்.
  ஏவுக‌ணையா(க்)க காத்திருக்கிற‌த்து கால‌ம்/க‌ள‌ம்.
  வாழ்த்துக்க‌ள் வைகோ சார்.//

  ஆஹா! அருமையாக அழகாகச் சொலியுள்ளீர்கள்.

  சிறிய பேனா கத்தியில் ஆரம்பித்தது தான்.

  கரடியாகக் ’கத்தி’யும் யாரும் பின்னுட்டமிடாத நாட்கள் அல்லவா அவை.

  ஒருவேளை ’கத்தி’க்குப்பயந்து யாரும் வரவில்லையோ!

  தாங்கள் அல்லவா துணிந்து வந்தீர்கள், முதல் பின்னூட்டம் கொடுத்தீர்கள். மறக்க முடியாத நாள் அல்லவா அது.

  இன்று வாள் ஆக மட்டுமல்ல, ஹனுமார் வாலாகவுமல்லவா நீண்டு விட்டது.

  வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
  அன்புடன் vgk
  முதன் முதலாகப் பின்னூட்டம் இட்ட தாங்

  பதிலளிநீக்கு
 73. மனமார்ந்த வாழ்த்துக்கள்,
  பாராட்டுக்கள்.இவ்வளவு நட்ந்திருப்பது என் கண்ணில் எப்படி தட்டுப்படாமல் போனது?பகிர்வு அருமை.

  பதிலளிநீக்கு
 74. எனக்குப் பிடித்த பதிவான தங்களது 27 வது பதிவை எனக்காக கொண்டு வந்தமைக்கு மகிழ்ச்சி.என் வாழ்வில் நான் என்றும் நினைவு வைத்திருக்கும் பதிவு அது.அதனை என் பொருட்டு வெளியிட்டமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 75. ///சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன். ///

  இதுவும் ஒரு சாதனைதான் திரு.வைகோபாலகிருஷ்ணன் ஐயா . எனக்கும் ஒரு வலைதளத்தில் இருந்து ஆசிரியராக அழைப்பு வந்து நான் என்னால் இயலாது என்று மறுத்துவிட்டேன் ஆனால் நீங்கள் இந்த வயதிலும் சாதித்து இருக்கிறீரகள் ஐயா . நீங்கள் தமிழ்மணத்தில் ஒரு வாரம்தான் ஸ்டார். ஆனால் எங்கள் மனதில் எப்பொழுதும் நீங்களும் ஒரு நீங்காத ஸ்டார். எல்லோர் கண்களுக்கும் பெரியவாரக உள்ள நீங்கள் என் கண்களுக்கும் மட்டும் 'குறும்புகார இளைஞராகவே" தெரிகிறீர்கள் இப்படி நான் கூப்பிடுவது உங்கள் மனதை காயப்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.

  என்றும் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்த என் வயது இடம் கொடுக்காதால் வாழ்த்தாமல் நீங்கள் நலமுடன் இருக்க எல்லா கடவுளிடமும் நான் உங்களுக்காக பிரார்த்திகின்றேன்.

  பதிலளிநீக்கு
 76. பின்னூட்டங்களிலும் அருமையான சாதனை..

  "HAPPY இன்று முதல் HAPPY !"

  பதிலளிநீக்கு
 77. தங்களின் கடினமான உழைப்புக்கு கிடைத்த பலன் ஐயா... பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in

  பதிலளிநீக்கு
 78. பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி சார்.

  உங்கள் எழுத்துகளால் எங்களை மகிழ்விக்கிறீர்கள். அது தொடரட்டும்.

  நான் கேசரியும், குலாப்ஜாமுனும் எடுத்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 79. asiya omar said...
  //மனமார்ந்த வாழ்த்துக்கள்,
  பாராட்டுக்கள்.இவ்வளவு நட்ந்திருப்பது என் கண்ணில் எப்படி தட்டுப்படாமல் போனது?பகிர்வு அருமை.//

  வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி.

  தாங்கள் வருகை தராமல் இருந்தது எனக்கும் ஒரு குறையாகத்தான் இருந்தது. சரியான முறையில் என்னாலும் எல்லோருக்கும் தகவல் அளிக்க இயலவில்லை. பலரின் மின்னஞ்சல் முகவரியும் என்னிடம் இல்லை. நேரமின்மையால், தினசரி சொன்னபடி பதிவுகள் தர வேண்டிய வேலைகளிலேயே மூழ்கி விட்டேன்.

  நீங்கள் மட்டுமல்ல, திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

  சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்களுக்கு வருகை தர முடியாதபடி,வேறு ஏதாவது சூழ்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 80. raji said...
  //எனக்குப் பிடித்த பதிவான தங்களது 27 வது பதிவை எனக்காக கொண்டு வந்தமைக்கு மகிழ்ச்சி.என் வாழ்வில் நான் என்றும் நினைவு வைத்திருக்கும் பதிவு அது.அதனை என் பொருட்டு வெளியிட்டமைக்கு நன்றி//

  மீண்டும் வந்து மீண்டும் கருத்துக்கூறியதற்கு மிக்க நன்றி.

  என் மீது அளவுகடந்த பிரியமும் பாசமும் வைத்து, உங்களுக்கான பல பெயர்கள், பெயர் காரணங்கள், பிறந்த நாள், மாதம், நக்ஷத்திரம், என் மாப்பிள்ளை, என் பேத்தியின் அறிவுத்திறன் முதலியன பற்றியெல்லாம் மகிழ்சியுடன் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளும் என் அன்பு மகளின் விருப்பமறிந்து செயல்பட வேண்டியது என் கடமையுமல்லவா!

  தங்களின் இந்தப் பின்னூட்டமும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. ரொம்ப சந்தோஷம்.

  Yours affectionately,
  vgk

  பதிலளிநீக்கு
 81. Avargal Unmaigal said...
  ///சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன். ///

  /இதுவும் ஒரு சாதனைதான் திரு.வைகோபாலகிருஷ்ணன் ஐயா./

  அப்படியா! அதுவும் சரிதான். ரொம்ப சந்தோஷம்.

  //எனக்கும் ஒரு வலைதளத்தில் இருந்து ஆசிரியராக அழைப்பு வந்து நான் என்னால் இயலாது என்று மறுத்துவிட்டேன் ஆனால் நீங்கள் இந்த வயதிலும் சாதித்து இருக்கிறீரகள் ஐயா .//

  இனி எந்த வாய்ப்புக்கள் வந்தாலும் நழுவ விடாதீர்கள். நீங்கள் இளைஞர். உங்களால் நிச்சயமாக எதையும் சாதிக்க முடியும். வாழ்த்துக்கள்.


  //நீங்கள் தமிழ்மணத்தில் ஒரு வாரம்தான் ஸ்டார். ஆனால் எங்கள் மனதில் எப்பொழுதும் நீங்களும் ஒரு நீங்காத ஸ்டார்.//

  ஆஹா! ஐஸோ ஐஸ் கிலோக்கணக்கில் வைத்து,
  எப்போதும் புழுக்கம் தாங்காமல் ஏ.ஸி. அறையிலேயே இருக்கும் என்னை, மின்தடையான இந்த நேரத்திலும் மன்ம் குளிரச்செய்து விட்டீர்களே!
  நன்றி.


  //எல்லோர் கண்களுக்கும் பெரியவாரக உள்ள நீங்கள் என் கண்களுக்கும் மட்டும் 'குறும்புகார இளைஞராகவே" தெரிகிறீர்கள் இப்படி நான் கூப்பிடுவது உங்கள் மனதை காயப்படுத்தினால் என்னை மன்னிக்கவும்.//

  உங்கள் கண்கள் தான் இந்த உலகிலேயே மிகச்சிறந்த கண்கள். ஏனென்றால் அவை உண்மையை உணர்ந்த கண்கள்.

  நான் எப்போதுமே மனதளவில் ஒரு 20-25 வயது இளைஞனே! அதுவும் குறும்புக்கார இளைஞனே. ஒப்புக்கொள்கிறேன்.

  எழுத்தில் எழுதி அது என்றும் மறையாத பதிவு ஆகி விடுவதால், என் குறும்புகளில் 99% நான் வெளிப்படுத்த முடியாமல் போய் விடுகிறது. 1% மட்டுமே ஆங்காங்கே தந்து வருகிறேன்.

  என்னுடன் மிக நெருக்கமான (விரல் விட்டு எண்ணக்கூடிய) ஒரு சில நண்பர்களுக்கே நான் எவ்வளவு ஜாலியானவன் என்பது தெரியும்.

  தாங்க்ள் சொல்லியுள்ளது என்னை எந்த விதத்திலும் காயப்படுத்தவே இல்லை. எவ்வாறு இப்படித் துல்லியமாகச் சொல்லியிருக்கிறீர்கள் என்று ஆச்சர்யப்படவே வைத்தது.

  //என்றும் நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்த என் வயது இடம் கொடுக்காதால் வாழ்த்தாமல் நீங்கள் நலமுடன் இருக்க எல்லா கடவுளிடமும் நான் உங்களுக்காக பிரார்த்திகின்றேன்.//

  தாங்களும் எனக்காக உண்மையாகப் பிரார்த்தனை செய்யுங்கள். உடல் நலமும், மனதில் உற்சாகமும், மன நிம்மதியும் மட்டுமே எனக்கு வேண்டும். மீதியெல்லாம் எனக்கு அந்தக்கடவுள் அளவுக்கு அதிகமாகவே வாரி வழங்கியுள்ளார்.

  அன்புடன்
  vgk

  பதிலளிநீக்கு
 82. இராஜராஜேஸ்வரி said...
  //பின்னூட்டங்களிலும் அருமையான சாதனை..//

  இவ்வாறு சொல்பவரே, என்னை ஆட்கொண்டு, இப்போதெல்லாம் என்னை ஆட்டிப்படைத்துவரும் ஒரு மிகச்சிறந்த சாதனையாளர் தானே. அவர்கள் முன்பு நான் எம்மாத்திரம்? ஏதோ சொல்வதை கேட்டுக் கொள்கிறேன். அது தான் என்னால் முடிந்தது.

  இப்படிக்கு மிகச்சாதாரணமானவன்.

  "HAPPY இன்று முதல் HAPPY !"

  ”ஊட்டிவரை உறவு” என்ற சிவாஜி+K.R விஜயா நடித்த அந்தக்காலப் படத்தில் அனைத்துப்பாடல்களும் அருமையாக இருக்கும். அதில் இதுவும் ஒரு பாட்டு. அதையே தலைப்பாக வைத்து விட்டேன், அதுவும் கோபதாபமில்லாம்ல் அனைவரும் இன்று முதலாவது என்னுடன் HAPPY யாக இருக்கணுமே என்று நினைத்து.

  மீண்டும் வந்து பின்னூட்டம் கொடுத்ததற்கு I am very HAPPY too. vgk

  பதிலளிநீக்கு
 83. தமிழ்த்தோட்டம் said...
  //தங்களின் கடினமான உழைப்புக்கு கிடைத்த பலன் ஐயா... பாராட்டுக்கள்

  தமிழ்த்தோட்டம்
  www.tamilthottam.in//

  தமிழ்த்தோட்டமே நேரில் வந்து பாராட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

  தோட்ட நிழலில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுகிறது என் மனமும்.

  மிக்க நன்றி, நண்பரே. vgk

  பதிலளிநீக்கு
 84. கோவை2தில்லி said...
  //பின்னூட்டமிட்ட பெண் பதிவர்களில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி சார்.//

  ஒரே முறை வந்தவர்களையும் விட்டுவிடாமல் இணைத்து விட்டேன்.

  நான் மிகவும் எதிர்பார்த்திருந்த வாடிக்கை வருகையாளர்களில் நீங்களும், நம் ஆச்சி மேடமும் தான் இவ்வாறு செய்துவிட்டீர்கள்.

  இருவரும் வராததன் காரணம், முன்கூட்டியே தெரிவித்து விட்டதாலும், அதுவும் மிகவும் நியாயமானதாகவே இருந்ததாலும், நான் கஷ்டப்பட்டு ஜீரணித்துக்கொண்டு விட்டேன்.

  //உங்கள் எழுத்துகளால் எங்களை மகிழ்விக்கிறீர்கள். அது தொடரட்டும்.//

  மகிழ்ச்சி, முயற்சிக்கிறேன்.

  //நான் கேசரியும், குலாப்ஜாமுனும் எடுத்துக் கொண்டேன்.//

  ரொம்ப சந்தோஷம். ரோஷிணிக்குக் கொடுத்தீர்களா, இல்லையா?

  நீங்கள் தான் சூப்பராகச் செய்வீர்களே! படத்தில் உள்ள அனைத்தையும் தாங்களே செய்து குழந்தைக்குக் கொடுத்து விடுங்கள்.

  அன்புடன் vgk

  பதிலளிநீக்கு
 85. தங்கள் உழைப்பும் ஆர்வமும் வியக்க வைக்கிறது.
  வாழ்த்து சொல்லும் அளவுக்கு வயதோ அனுபவமோ இல்லை.
  வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 86. தமிழ்மணம் , நட்சத்திரப் பதிவு இவையெல்லாம் எனக்கு சம்பந்தமில்லா வார்த்தைகள்.
  போதிய நேரம் இல்லாததாலும், சொந்தமாய் இணைய இணைப்பு இல்லாததினாலும் அடிக்கடி தங்கள் வலைப்பக்கம் வரமுடிவதில்லை .
  மன்னித்தருள வேண்டும் .

  பதிலளிநீக்கு
 87. சிவகுமாரன் said...
  //தங்கள் உழைப்பும் ஆர்வமும் வியக்க வைக்கிறது.
  வாழ்த்து சொல்லும் அளவுக்கு வயதோ அனுபவமோ இல்லை.
  வணங்குகிறேன்.//

  அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிகவும் சந்தோஷம். ஆசீர்வதிக்கிறேன். vgk

  பதிலளிநீக்கு
 88. சிவகுமாரன் said...
  //தமிழ்மணம், நட்சத்திரப் பதிவு இவையெல்லாம் எனக்கு சம்பந்தமில்லா வார்த்தைகள்.//

  எனக்கும் இன்றும் கூட அதுபோலவே சம்பந்தம் இல்லாதவைகள் தான்.

  ஏதோ அவர்களாகவே தேர்ந்தெடுத்து, என்னைக் கொஞ்சம் சம்பந்தப்படுத்தி விட்டனர்.

  பிறர் லிங்க் கொடுத்து பார்க்கச்சொல்லி சொன்னால் தான் அதன் சிறப்பு எனக்குக் கொஞ்சமாகத் தெரிய வருகிறது.

  //போதிய நேரம் இல்லாததாலும், சொந்தமாய் இணைய இணைப்பு இல்லாததினாலும் அடிக்கடி தங்கள் வலைப்பக்கம் வரமுடிவதில்லை .
  மன்னித்தருள வேண்டும்.//

  அதே நிலைமையில் தான் நானும்.
  நேரம் இன்மை, உடல் நலமின்மை, சொந்த இணைப்பு இருந்தும், அவை செயல் படாமல் போகும் நிலைமை
  [அடிக்கடி மின் தடை, செர்வர் பிரச்சனைகள், மாறி வரும் குடும்ப சூழ்நிலைகள் போன்றவை] முதலியவற்றால் என்னாலும் அதிகமானவர்களின் பதிவுகளுக்குச் செல்ல முடிவதில்லை. அதனால் தான் உங்கள் பக்கமும் வர முடியாமல் போய் விட்டது.

  நன்றி, நன்றி, நன்றி. vgk

  பதிலளிநீக்கு
 89. கோபு சார் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணம்தான். எளிய நடையில் சிறுகதைகளை நகைச்சுவையுடன் பெரும்பாலானோரை நல்லவர்களாகவே சித்தரித்து எழுதும் உங்கள் பாங்கு ஏராளமானவர்களை உங்கள் விசிரிகளாக்கியது ஆச்சரியமில்லை. கொடுக்கப்பட்ட பணியை திறம்பட முடித்த திருப்தி உங்கள் பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 90. G.M Balasubramaniam said...
  //கோபு சார் உங்களிடம் எனக்குப் பிடித்த விஷயமே எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் உங்கள் குணம்தான்.//

  மிக்க நன்றி, சார். ஏதோ நம்மால் முடிந்தது. நம்மால் வேறு என்ன பெரியாதகச் செய்து விட முடியும்?
  எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில் தானே நமக்கும் இன்பம் ஏற்படுகிறது. அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படக்கூடும். பரஸ்பர சந்தோஷங்களே, நம் பதிவுலக நட்புக்கு என்றும் பலமான பாலமாக அமையும், என்ற நல்லெண்ணம் எனக்கு எப்போதுமே உண்டு.

  //எளிய நடையில் சிறுகதைகளை நகைச்சுவையுடன் பெரும்பாலானோரை நல்லவர்களாகவே சித்தரித்து எழுதும் உங்கள் பாங்கு ஏராளமானவர்களை உங்கள் விசிறிகளாக்கியது ஆச்சரியமில்லை.//

  ஆமாம் சார். தாங்கள் சொல்வது சரியே. எனக்கும் இதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியே.

  விசிறிகள் மட்டும் இல்லாவிட்டால் புழுங்கிச் செத்துவிடுவோம் எனத் தோன்றுகிறது, அதுவும் இந்த அடிக்கடி மின் தடைகள் ஏற்பட்டுவரும் காலக்கட்டத்தில்.

  //கொடுக்கப்பட்ட பணியை திறம்பட முடித்த திருப்தி உங்கள் பதிவில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.//

  எல்லாம் தங்களைப்போன்ற என் நலம் விரும்பிகளின் ஆசிகளும், கடவுள் கிருபையும் தான்.

  நன்றி, நன்றி, நன்றி.
  நமஸ்காரங்களுடன் vgk

  பதிலளிநீக்கு
 91. //திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

  சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்களுக்கு வருகை தர முடியாதபடி,வேறு ஏதாவது சூழ்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை. //

  மன்னிக்கனும் வி.ஜி.கே. எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. நான் என் வலைப்புவுக்கே வந்து பல நாட்கள் கழித்து உள் நுழைந்தேன். உங்கள் கருத்துரையில் இருந்த பின்னூட்டத்தைப் பார்த்து என்ன செய்தி உள்ளதோ பார்க்கலாம் என்று ஆவலாக ஓடி வந்தால் (தாமதமாகத்தான்) இங்கே ஒரு கோலாகலத் திருவிழாவே நடந்தேறியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று தங்களுக்கே தெரியும். வருத்தம் எனக்கே அதிகம். தங்களின் இன்ப நாட்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் பாராட்டவும் இயலாத அபாக்கியவதி வருத்தத்துடன்....

  இனிவரும் திருநாளை எதிர்நோக்கி.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்....

  November 18, 2011 1:40 AM

  பதிலளிநீக்கு
 92. ஆதிரா said...
  ////திருமதிகள்: மஞ்சுபாஷிணி, சந்திரகெளரி, விடிவெள்ளி, ஆதிராமுல்லை மற்றும் என்னிடம் மிகவும் பிரியம் வைத்துள்ள என் அன்புக்குரிய இமா அவர்கள் போன்றவர்களும் வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது.

  சிலருக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலும் இருந்திருக்கலாம். தெரிந்தவர்களுக்கு வருகை தர முடியாதபடி,வேறு ஏதாவது சூழ்நிலை சரியில்லாமலும் இருந்திருக்கலாம். அதனால் பரவாயில்லை. ////


  //மன்னிக்கனும் வி.ஜி.கே. எனக்குத் தெரியவில்லை என்பதே உண்மை. நான் என் வலைப்புவுக்கே வந்து பல நாட்கள் கழித்து உள் நுழைந்தேன். உங்கள் கருத்துரையில் இருந்த பின்னூட்டத்தைப் பார்த்து என்ன செய்தி உள்ளதோ பார்க்கலாம் என்று ஆவலாக ஓடி வந்தால் (தாமதமாகத்தான்) இங்கே ஒரு கோலாகலத் திருவிழாவே நடந்தேறியுள்ளது. விழாவில் கலந்துகொள்ள முடியாதவர்கள் மன நிலை எப்படி இருக்கும் என்று தங்களுக்கே தெரியும். வருத்தம் எனக்கே அதிகம். தங்களின் இன்ப நாட்களில் பங்கெடுத்துக் கொள்ளவும் பாராட்டவும் இயலாத அபாக்கியவதி வருத்தத்துடன்....

  இனிவரும் திருநாளை எதிர்நோக்கி.. வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்....//

  That is alright, Madam.
  No problem at all.
  Thanks for your kind explanation. I understood all your feelings. Thank you very much.

  vgk

  பதிலளிநீக்கு
 93. பாருங்கள் சில விடயங்கள் கால ஓட்டத்தில் எம்மை அறியாமலே போய்விடுகின்றன. அதற்கு மன்னிப்பைக் கூறிக்கொள்ளுகின்றேன். நட்சத்திரப் பதிவு என்பது இவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளுகின்றேன். உங்கள் வலையின் வரலாறு பற்றி அழகாக எடுத்து காட்டி இருக்கின்றீர்கள். பண்டங்கள் பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுகின்றது . பதிவுலகில் சிறந்து பவனி வர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 94. சந்திரகௌரி said...
  //பாருங்கள் சில விடயங்கள் கால ஓட்டத்தில் எம்மை அறியாமலே போய்விடுகின்றன. அதற்கு மன்னிப்பைக் கூறிக்கொள்ளுகின்றேன். நட்சத்திரப் பதிவு என்பது இவ்வளவு கடினமானது என்பதை இப்போதுதான் புரிந்துகொள்ளுகின்றேன். உங்கள் வலையின் வரலாறு பற்றி அழகாக எடுத்து காட்டி இருக்கின்றீர்கள். பண்டங்கள் பார்க்கும் போதே நாவில் சுவை ஊறுகின்றது . பதிவுலகில் சிறந்து பவனி வர வாழ்த்துகள்//

  தாமதமாக வருகை தந்தாலும், தங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கும், தங்களின் நெகிழ்வான உணர்வுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். vgk

  பதிலளிநீக்கு
 95. ஸார்.. நேரம் இல்லாததால் இணைய பக்கம் வரமுடியவில்லை. அதனால் தமிழ்மணம், நட்சத்திர பதிவர் இந்த விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் ஸீவிட் எடுத்துக்கிட்டு உங்க சந்தோஷத்தை நானும் கொண்டாடுகிறேன். சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.. உடம்பெல்லாம் உப்புச்சீடை சிறுகதையை முன்பே படித்து வியந்திருக்கிறேன். நன்றி!

  பதிலளிநீக்கு
 96. உஷா அன்பரசு
  September 13, 2013 at 2:39 AM

  வாங்கோ, வணக்கம்.

  //ஸார்.. நேரம் இல்லாததால் இணைய பக்கம் வரமுடியவில்லை. அதனால் தமிழ்மணம், நட்சத்திர பதிவர் இந்த விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் ஸீவிட் எடுத்துக்கிட்டு உங்க சந்தோஷத்தை நானும் கொண்டாடுகிறேன். சிறுகதைகளை சிறப்பாக எழுதுகிறீர்கள் தொடருங்கள்.. உடம்பெல்லாம் உப்புச்சீடை சிறுகதையை முன்பே படித்து வியந்திருக்கிறேன். நன்றி!//

  ;)))))

  பரவாயில்லை. நான் 2011 ஜனவரியில் தான் பதிவு எழுதவே ஆரம்பித்தேன்.

  அந்த வருடமே 200 பதிவுகள் வரை தந்துள்ளேன். பெரும்பாலும் சிறுகதைகள் / நகைச்சுவைச் சிறுகதைகள் தான்.

  எனக்கு முதல் 3 மாதங்கள் ஆதரவு அளித்தவர்கள் மிகச்சிலர் மட்டுமே. அதன் பிறகு தான் குறிப்பாக ஒருசிலர் எனக்கு தொடர்ச்சி உற்சாகம் அளித்தார்கள்.

  அப்போதெல்லாம் எனக்கு Followers அதிகம் இல்லை. இப்போது போல ஏராளமான பின்னூடங்களும் அப்போது வந்தது இல்லை.

  அந்த எல்லாக்கதைகளையும், 2014 இல் மீள் பதிவாக வெளியிட உள்ளேன்.

  இப்போது 300க்கும் மேல் Followers உள்ளனர். நூற்றுக்கணக்கில் பின்னூட்டங்களும் வருகின்றன.

  அவர்கள் எல்லோரும் என்னுடைய எல்லாக்கதைகளையும் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மீள் பதிவாக வெளியிட நினைத்துள்ளேன்.

  அவ்வப்போது புதிய கதைகளையும் வெளியிடுவேன்.

  உங்களுடன் எனக்குப்பழக்கம் சென்ற ஆண்டு 2012 டிஸம்பர் முதல் தானே !

  அதனால் பரவாயில்லை, மேடம். பார்ப்போம்.

  அன்புடன் கோபு

  பதிலளிநீக்கு
 97. அன்புடையீர், வணக்கம்! வலைப்பூ இடுகையாளர்களில் நீங்கள் என்றுமே பலருக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்தான்! உங்களை வாழ்த்தி வணங்கி இனிப்புகளை அள்ளிக்கொள்ளும் கத்துக்குட்டி பதிவாளன்...ரவிஜி...
  உங்களின் இடுகைகளையும் உள் சென்று (சு)வாசிக்கிறேன்! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. RAVIJI RAVI May 19, 2014 at 12:30 PM

   //அன்புடையீர், வணக்கம்! வலைப்பூ இடுகையாளர்களில் நீங்கள் என்றுமே பலருக்கு வழிகாட்டும் ஒரு துருவ நட்சத்திரம்தான்! உங்களை வாழ்த்தி வணங்கி இனிப்புகளை அள்ளிக்கொள்ளும் கத்துக்குட்டி பதிவாளன்...ரவிஜி...//

   வாருங்கள், நண்பரே, வணக்கம். தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

   //உங்களின் இடுகைகளையும் உள் சென்று (சு)வாசிக்கிறேன்! நன்றி ஐயா!//

   ஆஹா, மிக்க மகிழ்ச்சி. சந்தோஷம். நன்றி.

   அன்புடன் VGK

   நீக்கு
 98. பின்னூட்டங்களைப் படித்து ஒரே பிரமிப்பில் இருக்கேன் எனக்கு எழுத விஷயமே வைக்காமல் எல்லாரும் எழுதிட்டாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பூந்தளிர் May 20, 2015 at 6:49 PM

   //பின்னூட்டங்களைப் படித்து ஒரே பிரமிப்பில் இருக்கேன் எனக்கு எழுத விஷயமே வைக்காமல் எல்லாரும் எழுதிட்டாங்க.//

   அச்சச்சோ ! இப்படி ஏதாவது குட்டியூண்டா எழுதிட்டு தப்பித்தால் எப்படி? யார் என்ன எழுதியிருந்தாலும், என் பூந்தளிர் ஏதாவது புதுசா எழுதினால்தானே எனக்கும் ஓர் பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்! :)

   என்னவோ போங்கோ. நீங்க முந்தி மாதிரியே இல்லை. சுத்தமா மாறிப்போய்ட்டீங்கோ. வாழ்க !

   நீக்கு
 99. சாதனைகளைக் கூட சர்வசாதாரணமாக செய்யும் தாங்கள் தங்களை சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்வது சரிதான். தங்களுடைய பல சாதனைகளை அறிவேன். ஆனால் இந்த வலைச்சர சாதனையை இப்போதுதான் அறிகிறேன். வாழ்த்துகள் கோபு சார்.

  பதிலளிநீக்கு
 100. இந்தப் பதிவைப் படித்தபின் தோன்றியது:

  நான் இன்னும் வளர வேண்டும்.
  உங்க அளவுக்கு இல்லாவிட்டாலும் ஏதோ கொஞ்சமாவது வளரணும்.

  இந்த தமிழ் மணம் இதெல்லாம் எனக்கு இன்னும் ஒன்றும் புரியவில்லை.

  உங்கள் சாதனைகளைக் கண்டு மலைத்து நிற்கிறேன், மயங்கி நிற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 101. இன்னானமோ சாதனலாம் பண்ணி போட்டிங்க. சரியா வெளங்கிக்க ஏலல. உங்க நட்பு வட்டத்துக்குள்ளார. நானுமிருக்கேன்ல அந்த சந்தோசமே போதும்ல.

  பதிலளிநீக்கு
 102. எனக்கும் இந்த தமிழ் மணம் நட்சத்திர பதிவர் இது பத்திலாம் எதுவுமே தெரஞ்சுக்க முடியல. இந்த திரட்டிகள் எதுமே என்பக்கம் இணைக்க தெரியலை. ஃபாலோவர் கெட்ஜட் கூட இணைக்க தெரியை. எனக்கு இதெல்லாம் பத்தி ஏதும் தெரியாதுன்னு சும்மா போயிடக்கூடாதே. வாழ்த்துகள் சார்.

  பதிலளிநீக்கு
 103. வாத்தியார்...சூப்பர் ஸ்டார்தான்..இங்கும் எங்கும்...என்றும்...

  பதிலளிநீக்கு
 104. முதலில் வாழ்த்துக்கள் ஐயா,

  என்ன எழுதுவது, ஆச்சிரியமாக இருக்கு எனக்கு தங்கள் எழுத்துப் பணி குறித்து,,,,

  இவ்வளவு இனிப்பா,,,, எல்லாமே பிடிக்குமே,,ம்ம்

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mageswari balachandran December 11, 2015 at 1:05 PM

   வாங்கோ மேடம், வணக்கம்.

   //முதலில் வாழ்த்துக்கள் ஐயா, என்ன எழுதுவது, ஆச்சிரியமாக இருக்கு எனக்கு தங்கள் எழுத்துப் பணி குறித்து,,,, இவ்வளவு இனிப்பா,,,, எல்லாமே பிடிக்குமே,,ம்ம் .... வாழ்த்துக்கள்.//

   தங்களின் அன்பான வருகைக்கும், கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம் - VGK

   நீக்கு
 105. இனிப்புமயம்! அறிவுப் பசியுடன் வயிற்றுப் பசியைத் தூண்டுவதிலும் பெரிய ஆள் சார் நீங்கள்!

  பதிலளிநீக்கு
 106. 07.11.2011 to 13.11.2011 - TAMILMANAM TOP-20 LIST

  Ref: http://veeduthirumbal.blogspot.com/2011/11/top-20.html

  *******************************************
  பதிவின் பெயர் : VAI. GOPALAKRISHNAN
  வை.கோபாலகிருஷ்ணன்
  இடம் : 1

  **FIRST RANK - முதலிடம்**

  *******************************************

  பதிவின் பெயர் : சிபி பக்கங்கள்
  சி.பி.செந்தில்குமார்
  இடம் : 2

  பதிவின் பெயர் : வேடந்தாங்கல்
  sakthi.blogspot.com
  இடம் : 3

  பதிவின் பெயர் : நான் பேச நினைப்பதெல்லாம்
  சென்னை பித்தன்
  இடம் : 4

  பதிவின் பெயர் : கவிதை வீதி...
  சௌந்தரபாண்டியன்
  இடம் : 5

  பதிவின் பெயர் : anbu ulagam
  M.R
  இடம் : 6

  பதிவின் பெயர் : வந்தேமாதரம்
  சசிகுமார்
  இடம் : 7

  பதிவின் பெயர் : வீடு திரும்பல்
  Mohan Kumar
  இடம் : 8

  பதிவின் பெயர் : counsel for any
  shanmugavel
  இடம் : 9

  பதிவின் பெயர் : கோகுல் மனதில்
  gokul
  இடம் : 10

  *******************************************

  This is just for information & records only.

  பதிலளிநீக்கு