About Me

My photo
சாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.

Friday, November 11, 2011

தங்கமே தங்கம் !










தங்கமே தங்கம் !

[ சிறுகதை ]

By வை. கோபாலகிருஷ்ணன்



தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில்,  ரோட்டு ஓரமாக செருப்புத் தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம்.  ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப் பணம் சேர்ந்து விட்டால் போதும்.  யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து  எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டான்.

தங்கம் விலை நாளுக்குநாள் ஏறி வருவதோடு மட்டுமின்றி, இவன் தொழிலுக்குப் போட்டியாக ரோட்டின் எதிர்புறம் ஒரு கிழவர் தொழில் தொடங்கியதிலிருந்து அவனின் அன்றாட வருமானமும் குறைய ஆரம்பித்தது.

கிழவருக்கு அன்று பெய்த மழையிலும், குளிரிலும், கபம் கட்டி, இருமல் ஜாஸ்தியாகி, கடுமையான ஜுரமும் கண்டது.  இறந்து போன தன் தந்தை போலத் தோன்றும் கிழவர் மேல் இரக்கம் கொண்டு, அவரை அரசாங்க ஆஸ்பத்தரிக்கு அழைத்துப்போய், மருந்து வாங்கிக்கொடுத்து, அவரது குடிசையில் கொண்டு போய் விட்டான், சங்கலியாண்டி.  

நன்றி கூறிய கிழவரும்,  “தம்பி உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா” என்று கேட்டார்.

”என் மனைவியாக வரப் போகிறவளுக்குப் போட ஒரு அரைப் பவுன் தங்கமும், ஒரு புதுச் சேலையும் வாங்க பணம் சேர வேண்டும்.  அதற்காகத் தான் காத்திருக்கிறேன்” என்றான்.

”உனக்கு அந்தக் கவலையே வேண்டாம், நான் தருகிறேன்” என்றார் கிழவர்.

அதே சமயம், சத்துணவுக் கூடத்தில் ஆயா வேலை பார்க்கும் கிழவரின் மகள் தன் குடிசைவீட்டுக்குத் திரும்பினாள்.  அவள் சங்கிலியாண்டியை நோக்க, சங்கிலியாண்டியும் அவளை நோக்கினான்.  கண்கள் கலந்தன.  இருவரும் தங்கள் வயதுக்கேற்ற காந்த சக்தியை உணர்ந்தனர்.

இவர்களின் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்த அந்தக் கிழவர், இருவரையும் கை கோர்த்து விட்டு வாழ்த்தினார். 

“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான்.  ஐம்பது  கிலோ தங்கம்.  சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.

இதைக்கேட்ட தங்கமும், சங்கிலியாண்டியும் சேர்ந்து வெட்கத்துடன் சிரித்தனர்.  தங்கம் போல ஜொலித்தனர். 

அதே நேரம் ” ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே எனக்காக ” என்ற சினிமாப் படப்பாடல் எங்கோ பக்கத்துக் குடிசையின் டி..வி. யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.








-o-o-o-o-o-o-o-o-o-
முற்றும்
-o-o-o-o-o-o-o-o-o-





19. "மூலம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் 
சென்று வழிபட வேண்டிய கோயில்:

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் 
[புஷ்பகுஜாம்பாள் அம்மன்] 

இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் 
இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 
45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற 
ஊரில்  உள்ளது. 


(பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.
பேரம்பாக்கம் செல்லும் வழியில் 
மப்பேடு உள்ளது.)




19/27

28 comments:

  1. சிறுகதையை எளிதில் புரிந்து கொள்ளும்படி நச் என்று சொல்லுவதில் நீங்கள் வல்லவராக இருகின்றீர்கள் வி ஜி கே சார்.வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. கதையின் தலைப்பு மட்டும் அல்ல
    கதையின் கருவும் கூட
    தங்கமே தங்கம்
    த.ம 2

    ReplyDelete
  3. சிறு கருவையும் கதையாகப் படைத்து விடும் திறமை பிரமிப்பையே தருகிறது

    ReplyDelete
  4. ஃபிஃப்டி கேஜி ..... தாஜ்மஹால் .... எனக்கே எனக்காக ” என்ற சினிமாப் படப்பாடல் எங்கோ பக்கத்துக் குடிசையின் டி..வி. யில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

    தங்கமான சிறுகதைக்குப் பாராட்டுக்க்ள். வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. 19. "மூலம்" நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய கோயில்:
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் [புஷ்பகுஜாம்பாள் அம்மன்] /

    பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. எங்கள் தங்கத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. தங்கமே தங்கம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. நன்று. மனசை இலகுவாக்கும் குட்டிக் கதைகளை அழகாக சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  9. கதை தங்கமாய் ஜொலிஜொலித்தது

    ReplyDelete
  10. Helo sir,

    Ur Postings are good. Please come online at bharathi.radhika@gmail.com

    Radhika

    ReplyDelete
  11. நல்ல கதை. பகிர்விற்கு நன்றி சார்.

    ReplyDelete
  12. அரைப் பவுன் தங்கம் கேட்டவனுக்கு ஐம்பது பவுன் தங்கம் கிடைத்தால் கசக்கவா போகிறது?

    ReplyDelete
    Replies
    1. கொடுகுகணும் என்கிற மனசு இருக்கே அதுதான் தங்கத்தை விட உயர்ந்தது

      Delete
    2. பூந்தளிர் May 20, 2015 at 11:37 AM

      //கொடுக்கணும் என்கிற மனசு இருக்கே; அதுதான் தங்கத்தை விட உயர்ந்தது//

      சிவகாமிக்கும் தங்கமான மனசுதான் என்பதை நான் அறிவேன். :) மிக்க நன்றீங்கோ.

      Delete
  13. நல்லா சேத்து வெச்சீங்கப்பா ஒரு ஜோடியை. சூப்பர் கதை.

    மூலா நட்சத்திரம் - லயாக்குட்டி மூலம்தான். தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  14. தன கடைக்கு எதிரிலேயே தங்கத்தை வைத்துக்கொண்டு அரை பவுன் தங்கத்தை சேர்க்க சிந்திக்கின்றான்... எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி பண்ணினான்.. நல்லது நினைத்தாலும் செய்தாலும் நல்லதே நடக்கும் சார்.. குட்டி கதையில நல்ல கருத்து.

    ReplyDelete
  15. தங்கமான கொமரு நல்லாருய்யா.

    ReplyDelete
    Replies
    1. mru September 15, 2015 at 11:03 AM

      //தங்கமான கொமரு ..... //

      அது என்ன கொமரு ?????

      //நல்லாருய்யா.//

      மிக்க நன்றிம்மா. :)

      Delete
  16. அரைப்பவுன் தங்கத்தை மனைவிக்காக வாங்க நினைத்தவனுக்கு 50- கே. ஜி. தாஜ்மஹாலே கிடைத்து விட்டதே.

    ReplyDelete
  17. //“அரைப் பவுன் தங்கம் சேர்க்க அல்லல் படுகிறாயே; இந்த என் மகள் பெயரும் “தங்கம்” தான். ஐம்பது கிலோ தங்கம். சுத்தத்தங்கம்” என்றார் கிழவர்.// 50 carat தங்கமே பெண்ணுருவில் கிடைக்கும்போது கசக்குமா என்ன???

    ReplyDelete
  18. ஓ....... இதுதான் 50-கேஜி. தாஜ்மஹாலா..... சூப்பர் ஷார்ட்& ஸ்வீட் ஸ்டோரி.. நல்லா இருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. ப்ராப்தம் April 22, 2016 at 8:12 PM

      வாங்கோ சாரூஊஊஊ, வணக்கம்.

      //ஓ....... இதுதான் 50-கேஜி. தாஜ்மஹாலா..... சூப்பர் ஷார்ட் & ஸ்வீட் ஸ்டோரி.. நல்லா இருக்கு.....//

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. கதைகளில் எப்படி எப்படியோ மிகச்சுலபமாக கல்யாணங்களை முடித்துவிட முடிகிறது, என்னால்.

      தங்களின் அன்பான வருகைக்கு மிக்க நன்றி, சாரூஊஊஊ. - VGK

      Delete
  19. COMMENT FROM Mr.G.MURALI OF HEB-TIRUCHI THRO' WHATSAPP ON 01.10.2018

    -=-=-=-=-

    🤓பருத்தி புடவையாய்க் காய்க்க, அவன் தங்கச்சங்கிலியாண்டி ஆனான்.✍😃

    -=-=-=-=-

    சந்தோஷம் ....... மிக்க நன்றி, முரளி

    அன்புடன் கோபு மாமா

    ReplyDelete