வணக்கம்.
இந்த வாரம் 07.11.2011 திங்கள் முதல் 13.11.2011 ஞாயிறு வரை என்னை தமிழ்மணம் நட்சத்திரப்பதிவராக அறிவித்து கெளரவப்படுத்தியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்மண நிர்வாகிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னால் முடிந்த வரை தினமும் ஒரு புதிய பதிவும், மூன்று மீள் பதிவுகளுமாக ஆகமொத்தம் 27 நட்சத்திரப்பதிவுகள் இந்த வாரத்தில் கொடுக்க முடிந்தது.
இந்த ஆண்டு (2011) ஜனவரி மாதம் ஆரம்பித்து, தொடர்ந்து என் வலைப்பூவில் எழுதிவரும் என்னை, முதன் முதலில் தமிழ்மணத்தோடு இணைப்பு ஏற்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்தவர் [கற்றலும் கேட்டலும்] திருமதி ராஜி அவர்கள் தான். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
அதன் பிறகு 2011 மார்ச் மாதத்தில், தாங்களாகவே முன்வந்து, எனக்கு தமிழ்மணம் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்து உதவியவர்கள் திருமதி Thirumathi bs Sridhar என்கிற திருமதி ஆச்சி அவர்களும், அவர்களுடைய நண்பர் திரு. K.R.P. செந்தில் குமார் அவர்களுமே. அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்மணத்தில் என் பதிவுகளை எப்படி இணைப்பது என்ற அடிப்படை கணினி அறிவு கூட இல்லாமல் பதிவுகள் எழுதி வந்த என்னை, இன்று தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவராகவே தேர்ந்தெடுத்துள்ளதை நினைத்து வியந்து போனேன். உண்மையிலேயே மிகவும் ஆச்சர்யமாகவே இருந்தது. அதே சமயம் சற்று அச்சமாகவும் இருந்தது.
தமிழ்மணத்தின் நட்சத்திரப்பதிவர் என்ற அழைப்பு எனக்குக் கிடைத்ததும், அதை ஏற்கலாமா வேண்டாமா என்று ஓரிரு நாட்கள் நான் தயங்கினேன்.
எனக்கு தமிழ்மணத்திலிருந்து வந்திருந்த அழைப்பினை, என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியுமான ஒருவருக்கு அனுப்பி வைத்து ”ஏற்கலாமா? வேண்டாமா?” என்ற என் குழப்பத்தையும் எழுதி, அவர் கருத்தினையும் கேட்டிருந்தேன்.
இதற்கிடையில் ஏற்கனவே சமீபத்தில் நட்சத்திரப் பதிவராக ஜொலித்த நம் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவரிடம் எனக்கிருந்த பல்வேறு சந்தேகங்களைக் கேட்கத்தொடங்கினேன்.அவை எல்லாவற்றிற்கும் மிகவும் பொறுமையாக பதில் அளித்து உற்சாகப் படுத்தியதோடு, கிடைத்துள்ள இந்த வாய்ப்பை நழுவ விடாமல் தயவுசெய்து பயன் படுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு என் நன்றிகள்.
இதற்கிடையில் இந்த விஷயம் வேறொருவர் மூலம், என் எழுத்துலக மானஸீக குருநாதரும், எனக்கு வலைப்பூவை உருவாக்கித் தந்தவருமான என் பேரன்புக்கும், மரியாதைக்கும் உரிய திரு. ரிஷபன் ஸ்ரீநிவாஸன் அவர்கள் காதுக்கு எட்டிவிடவே, அவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டியதுடன், அவசியம் இந்த அழைப்பை ஏற்கத்தான் வேண்டும் என்று உத்தரவே பிறப்பித்து விட்டார். குருநாதருக்கு என் நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
அதே நேரம் என் சமீபகால ஆத்மார்த்த நட்புக்குரியவரும், அருமையான ஆலோசகரும், என் நலம் விரும்பியும் ஆனவரிடமிருந்து எனக்கு ஓர் மின்னஞ்சலில் பதிலும் வந்து விட்டது. அதில் இருந்த மிக அற்புதமான எழுத்துக்கள், சோர்ந்து போயிருந்த என்னைத் தட்டி எழுப்பியது. தளர்ந்து போயிருந்த எனக்கு பேரெழுச்சி ஏற்படுத்தியது. எதிலும் அதிக நாட்டமில்லாமல் இருந்த எனக்கு, தன்நம்பிக்கையை ஊட்டி உற்சாகத்தை தருவதாக இருந்தது.
நம் குறைகளைக் கோயிலுக்குப்போய் ஸ்வாமியிடமும், அம்பாளிடமும் மனமுருகி அழுது வேண்டிக்கொண்டால், மனதுக்கு சற்றே அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும். ஆனால் ஸ்வாமியோ, அம்பாளோ நம்முடன் ஏதும் நேரிடையாகப் பேசுவதும் இல்லை; நம் கேள்விகளுக்கும், புலம்பல்களுக்கும் பதில் அளிப்பதும் இல்லை.
”தெய்வம் மனுஷ்ய ரூபேனா” என்பார்கள். [அதாவது தெய்வம் மனித வடிவிலும் இருந்து உதவக்கூடும் என்பது பொருள்] அதற்கு ஓர் மிகச்சிறந்த உதாரணம் இந்த என் நட்பு என்று சொன்னால் அது மிகையாகாது. இத்தகையதொரு பாசம் மிகுந்த நட்பு அமைய நான் எந்த ஜன்மத்தில் என்ன தவம் செய்தேனோ என்று, அடிக்கடி நான் நினைத்து மகிழ்வதுண்டு.
அவர்கள் அனுப்பிய அந்த ஆத்மார்த்தமான ஆறுதல் அளிக்கும் மின்னஞ்சலில் வந்த பதிலை, அன்று ஓர் இரவு மட்டும், ஒரு 108 தடவைகளாவது, நான் திரும்பத்திரும்ப படித்திருப்பேன். அதனையே அருள் வாக்காக எடுத்துக் கொண்டு, என் சம்மதக் கடிதத்தை தமிழ்மணத்துக்கு உடனடியாக அனுப்பி வைத்தேன்.
ஆத்மார்த்த அன்புடனும், நட்புடனும் அன்றாடம் பழகி, என் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மனதிற்கு இதமான தீர்வுகள் சொல்லிவரும், தெய்வாம்சம் பொருந்திய அவர்களுக்கும், என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
மேற்படி நபரின் அருள் வாக்கு கிடைக்கப்பட்ட ஓரிரு நிமிடங்களிலேயே, என்னுடன் பணி புரிந்த நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அந்த மின்னஞ்சலுடன் 27 நட்சத்திரக்காரர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில்கள் பற்றிய படங்கள்+விளக்கங்கள், அகஸ்மாத்தாக நான் சற்றும் எதிர்பாராமல், எனக்கு அவரால் அனுப்பப்பட்டிருந்தன.
நட்சத்திரப்பதிவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த எனக்கு, அதுவே நல்ல சகுனம் போலத் தோன்றியது. வாசகர்களில் சிலருக்காவது பயன்படக்கூடுமே என்ற எண்ணத்தில், அவற்றையும் உபயோகப்படுத்தி மொத்தம் 27 பதிவுகளாக வெளியிட்டு விடலாமே என என் உள்மனது சொல்லியது. அதன் படியே இறையருளும் சேர்ந்து, வெற்றிகரமாக இந்த ஒரு வாரத்தில் 27 பதிவுகள் என்னால் தர முடிந்தது.
நட்சத்திரப்பதிவர் என்று கேள்விப்பட்டதும், எனக்கு ஏராளமானவர்கள், மின்னஞ்சல் மூலமாகவும், சுட்டிகள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும், வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, மிகவும் உற்சாகப்படுத்தினர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
குறிப்பாக பதிவுலகப் பிரபலங்களில் ஒருவரான திருமதி சித்ரா சாலமன் அவர்களைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டியதோடு மட்டுமல்லாமல், தானும் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் தமிழ்மண நட்சத்திரப்பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் சொல்லி மகிழ்ந்தார்கள். அவர்களின் தற்போதைய சூழ்நிலைகளால் பதிவுகள் பக்கம் அதிகமாக வரமுடிவதில்லை என்பதையும் எடுத்துச் சொன்னார்கள். இருப்பினும் என்னிடம் அவர்களுக்குள்ள தனிப்பட்ட பிரியத்தினால், இந்த வாரம் வருகை தந்து ஒரு சில பின்னூட்டங்கள் மட்டும் அளித்துள்ளார்கள். [அன்புள்ள சித்ராவுக்கு கோபு மாமாவின் நன்றிகள். ]

நட்சத்திரப் பதிவரான இந்த வாரத்தின் ஏழு நாட்களுக்குள் ஏழு புதிய பின்தொடர்பவர்கள் [Followers] என் வலைப்பூவில் தேன் அருந்தும் வண்டுகளாக வந்து சேர்ந்துள்ளனர். அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
குடும்பத்திலும், அலுவலகத்திலும் மிகப்பெரிய பொறுப்புகள் வகிக்கும் என் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய திருமதி சாகம்பரி [மகிழம்பூச்சரம்] அவர்கள், தினமும் என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் [27 out of 27] அன்புடன் வருகை தந்து, அருமையாக பின்னூட்டங்கள் அளித்ததுடன், அவ்வப்போது தமிழ்மண Vote ஐ, மறக்காமல் கையோடு பதிவு செய்ததும், என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைக் கூறிக்கொள்கிறேன்.
தினமும் வருகை தந்தவர்களில் பலரும் தமிழ்மணத்தில் எனக்கு சாதகமாக [VOTE] வாக்களித்துச் சிறப்பித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இவை எல்லாவற்றையும் விட இந்த வெற்றிக்கு முழுக் காரணம், என் அன்புக்குரிய பதிவர்கள் மற்றும் வாசகர்களாகிய தாங்கள் அனைவருமே, தங்களின் பொன்னான நேரத்தை எனக்காகச் சற்றே ஒதுக்கி, அவ்வப்போது வருகை தந்து பின்னூட்டங்கள் அளித்து என்னை உற்சாகப்படுத்தியது மட்டுமே தான் என்று நான் உறுதியாகச் சொல்வேன்.
இவ்வளவு மிகக்குறுகிய காலத்தில், நான் அதிகம் அறிவிப்பு ஏதும் செய்யாமலேயே [அதிகமான பேர்களுக்கு தகவல் ஏதும் கொடுக்காமலேயே ] இவ்வளவு நபர்கள் தொடர்ச்சியாக தினமும் வருகை தந்து ஆதரித்துள்ளது, என்னை மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
இந்த ஒரு வாரத்தில், நேற்று வரை மட்டும் வருகை புரிந்துள்ள
ஆண் பதிவர்களின் எண்ணிக்கை::::::::: 50
பெண் பதிவர்களின் எண்ணிக்கை:::::::::: 29
ஆக மொத்தம் வருகை
புரிந்துள்ளோர் எண்ணிக்கை::::::::::::::::::: 79
இன்று இரவு 8 மணி வரை வந்து குவிந்துள்ள
பின்னூட்டங்களின் மொத்த எண்ணிக்கை: 475

வருகை புரிந்துள்ள என் அன்புக்குரியவர்களின் பெயர் பட்டியல் இதோ:
திருமதிகள்:
01. புதுகைத்தென்றல்
திருமதிகள்:
01. புதுகைத்தென்றல்
02. இராஜராஜேஸ்வரி
03. மிடில் கிளாஸ் மாதவி
03. மிடில் கிளாஸ் மாதவி
04. கீதா
05. லக்ஷ்மி
06. சித்ரா
07. சாகம்பரி
08. கெளசல்யா
09. ரமாரவி [RAMVI]
10. மனோ சுவாமிநாதன்
11. ராம லக்ஷ்மி
12. ஷைலஜா
13. ஏஞ்சலின்
14. ராஜி
15. கோமதி அரசு
16. அமைதிச்சாரல்
17. ஷக்திப்ப்ரபா ****
18. துளசி கோபால்
19. ஸாதிகா
20. வல்லி சிம்ஹன்
21. அப்பாவி தங்கமணி
22. மாதேவி
23. தேனம்மை லெக்ஷ்மணன்
24. நுண்மதி
25. பிரியா
26. வித்யா சுப்ரமணியம் அவர்கள்
27. thirumathi bs sridhar [ஆச்சி]
28. ஜலீலா கமல்
29. கோவை2தில்லி
05. லக்ஷ்மி
06. சித்ரா
07. சாகம்பரி
08. கெளசல்யா
09. ரமாரவி [RAMVI]
10. மனோ சுவாமிநாதன்
11. ராம லக்ஷ்மி
12. ஷைலஜா
13. ஏஞ்சலின்
14. ராஜி
15. கோமதி அரசு
16. அமைதிச்சாரல்
17. ஷக்திப்ப்ரபா ****
18. துளசி கோபால்
19. ஸாதிகா
20. வல்லி சிம்ஹன்
21. அப்பாவி தங்கமணி
22. மாதேவி
23. தேனம்மை லெக்ஷ்மணன்
24. நுண்மதி
25. பிரியா
26. வித்யா சுப்ரமணியம் அவர்கள்
27. thirumathi bs sridhar [ஆச்சி]
28. ஜலீலா கமல்
29. கோவை2தில்லி
திருவாளர்கள்:
01. வெங்கட் நாகராஜ்
02. சேட்டைக்காரன்
03. பிலாஸபி பிரபாகரன்
04. ஜீவி ஐயா அவர்கள்
05. மோகன் குமார்
06. கே.எஸ்.எஸ்.ராஜ்
07. வேடந்தாங்கல்-கருன்
08. புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள்
09. கணேஷ்
10. ரமணி ஐயா அவர்கள்
11. D. சந்திரமெளலி
12. சூர்ய ஜீவா
13. சீனா ஐயா அவர்கள்
14. மகேந்திரன்
15. நம்பிக்கை பாண்டியன்
16. அப்பாதுரை
17. G M B Sir அவர்கள்
18. ரிஷபன்
19. வவ்வால்
20. விசரன்
21. தோழன் மபா தமிழன் வீதி
22. கவிதை வீதி .. செளந்தர்
23. ஸ்ரீராம்
24. பொதினியிலிருந்து ... பிரபாகரன்
25. Dr.P. Kandaswamy Ph.D., அவர்கள்
26. அமர பாரதி
27. அனந்து
28. சென்னை பித்தன்
29. ஜயராம் தினகரபாண்டியன்
30. என் ராஜபாட்டை .. ராஜா
31. A.R. ராஜகோபாலன்
32. விச்சு
33. தமிழ்வாசி - பிரகாஷ்
34. அவர்கள் உண்மைகள்
35. G சந்தானம் 1610
36. முனைவர் இரா. குணசீலன்
37. சிவகுமாரன்
38. ரத்னவேல் ஐயா அவர்கள்
39. துரை டேனியேல்
40. சுந்தர்ஜி அவர்கள்
41. யானைக்குட்டி@ஞானேந்திரன்
42. மயிலன்
43. கே.பி.ஜனா
44. அரசன்
45. மாய உலகம்
46. வஸிஷ்டன்
47. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
48. கலாநேசன்
01. வெங்கட் நாகராஜ்
02. சேட்டைக்காரன்
03. பிலாஸபி பிரபாகரன்
04. ஜீவி ஐயா அவர்கள்
05. மோகன் குமார்
06. கே.எஸ்.எஸ்.ராஜ்
07. வேடந்தாங்கல்-கருன்
08. புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள்
09. கணேஷ்
10. ரமணி ஐயா அவர்கள்
11. D. சந்திரமெளலி
12. சூர்ய ஜீவா
13. சீனா ஐயா அவர்கள்
14. மகேந்திரன்
15. நம்பிக்கை பாண்டியன்
16. அப்பாதுரை
17. G M B Sir அவர்கள்
18. ரிஷபன்
19. வவ்வால்
20. விசரன்
21. தோழன் மபா தமிழன் வீதி
22. கவிதை வீதி .. செளந்தர்
23. ஸ்ரீராம்
24. பொதினியிலிருந்து ... பிரபாகரன்
25. Dr.P. Kandaswamy Ph.D., அவர்கள்
26. அமர பாரதி
27. அனந்து
28. சென்னை பித்தன்
29. ஜயராம் தினகரபாண்டியன்
30. என் ராஜபாட்டை .. ராஜா
31. A.R. ராஜகோபாலன்
32. விச்சு
33. தமிழ்வாசி - பிரகாஷ்
34. அவர்கள் உண்மைகள்
35. G சந்தானம் 1610
36. முனைவர் இரா. குணசீலன்
37. சிவகுமாரன்
38. ரத்னவேல் ஐயா அவர்கள்
39. துரை டேனியேல்
40. சுந்தர்ஜி அவர்கள்
41. யானைக்குட்டி@ஞானேந்திரன்
42. மயிலன்
43. கே.பி.ஜனா
44. அரசன்
45. மாய உலகம்
46. வஸிஷ்டன்
47. ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி
48. கலாநேசன்
49. ஹரணி ஐயா அவர்கள்
50. நிஜாமுதீன்
[**** புதிதாக வருகை தந்துள்ள Ms. ஷக்திபிரபா அவர்களின் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் கூடிய வாசித்தலும், ஊன்றிப்படித்தல் என்ற தனித்தன்மையும், மிகச்சரியாக திறனாய்வு செய்து வெளிப்படுத்தும் கருத்துக்களும் என்னை மிகவும் கவர்வதாக உள்ளன. அவர்களுக்கு என்னுடைய கூடுதல் சிறப்பு நன்றிகளையும், பாராட்டுக்களையும் இங்கு பதிவு செய்து கொள்கிறேன் **** ]
மிக அதிகமான பதிவுகளுக்கு வருகை தந்து சிறப்பித்து உதவியவர்களான திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள், திரு. ரமணி சார் அவர்கள், திரு. ரிஷபன் சார் அவர்கள், திருமதி ராஜி அவர்கள், திருமதி ஏஞ்சலின் அவர்கள், திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள், திருமதி ஷக்தி பிரபா அவர்கள், திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள், திருமதி கோமதி அரசு அவர்கள், திருமதி ரமாரவி அவர்கள் மற்றும் திருமதி ஸாதிகா அவர்கள் ஆகிய 11 பேர்களுக்கும் என் கூடுதல் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவ்வப்போது வந்து என்னைப் பாராட்டி ஆசீர்வதித்த திரு. GMB Sir அவர்கள், திரு ஜீவா சார் அவர்கள், புலவர் சா. இராமநுசம் ஐயா அவர்கள், திருமதி லக்ஷ்மி அம்மா அவர்கள் ஆகிய நால்வருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் கூடிய என் நமஸ்காரங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அனைத்து அன்புள்ளங்களுக்கும்
என் மனமார்ந்த நன்றிகளைக்
கூறிக்கொண்டு விடைபெறுகிறேன்.
வணக்கம்.
நம் பதிவுலக நட்பு இன்று போல் என்றும் தொடரட்டும் !
என்றும் அன்புடன் தங்கள்,
வை. கோபாலகிருஷ்ணன்